id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
684061
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D
சினேகா பண்டிட்
சினேகா துபே பண்டிட் (Sneha Pandit) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிராவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 நவம்பர் முதல் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக வசாய் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் காண்க மகாராட்டிராவின் முதலமைச்சர்களின் பட்டியல் மகாராச்டிரா சட்டப்பேரவை மேற்கோள்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
684063
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87
மனோஜ் கோர்படே
மனோஜ் பீம்ராவ் கோர்படே (Manoj Ghorpade) என்பவர் மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 நவம்பர் முதல் மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இவர் கராட் வடக்கு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் காண்க மகாராட்டிராவின் முதலமைச்சர்களின் பட்டியல் மகாராட்டிர சட்டப்பேரவை மேற்கோள்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
684065
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87
கிசான் வான்கடே
கிசான் மரோட்டி வான்கடே (Kisan Wankhede) மகாராட்டிராவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 முதல் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான வான்கடே, உமர்கேட் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் காண்க மகாராட்டிராவின் முதலமைச்சர்களின் பட்டியல் மகாராட்டிர சட்டப்பேரவை மேற்கோள்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
684067
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95
துசாரி ஜயசிங்க
துசாரி ஜயசிங்க ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். ஒரு வழக்கறிஞரான இவர், தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள் 1971 பிறப்புகள்
684068
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
லித்தானி ஆறு
லித்தானி ஆறு, லெபனான் நாட்டில் பாயும் ஆறுகளி ஒன்றாகும். லெபனான் நாட்டின் கிழக்கில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் உருவாகும் லித்தானி ஆறு, தெற்காக பாய்ந்து, டயர் நகரத்தை கடந்த பின் மத்தியத்தரைக் கடலில் கலக்கிறது. லித்தானி ஆறு 140 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆற்றின் சராசரி நீர் வெளியேற்றம் 920 மில்லியன் கன மீட்டர் ஆகும்.லித்தானி ஆற்று நீரால் தெற்கு லெபனான் மக்களின் குடிநீர், வேளாண்மை மற்றும் புனல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. லித்தானி ஆற்றில் கொட்டப்படும் வேதியியல் கழிவுகளால் நீரின் தரம் மற்றும் ஆற்றின் ஆரோக்கியம் மிகவும் கெட்டுள்ளது. மேற்கோள்கள் பொது மேற்கோள்கள் Ramadan, H. H., Beighley, R. E. and Ramamurthy, A. S. (2013). "Temperature and precipitation trends in Lebanon's largest river: the Litani Basin”, American Society of Civil Engineers, Journal of Water Resources Planning and Management, 139 (1), pp. 86–95. Ramadan, H.H., Ramamurthy, A.S., and Beighley, R.E (2012). "Inter-annual temperature and precipitation variations over the Litani Basin in response to atmospheric circulation patterns”, Theoretical and Applied Climatology, Volume 108, Numbers 3-4 (2012), pp. 563–577. Ramadan, H.H., Beighley R.E. and Ramamurthy A.S. (2012). "Modeling Streamflow Trends for a Watershed with Limited Data: A case on the Litani Basin, Lebanon” Hydrological Sciences Journal, 57 (8), pp. 1516–1529. Ramadan, H.H., Ramamurthy A.S. and Beighley R.E. (2013). "Sensitivity of the Litani Basin’s runoff in Lebanon to climate change.” International Journal of Environment and Pollution (in press). Bregman, Ahron (2002). Israel's Wars: A History Since 1947. London: Routledge. Raad, Daoud, 2004. "Localized irrigation in Qasmieh-Ras-el-Aïn: a technique to be encouraged" pdf file Amery, H. A. 1993. "The Litani River of Lebanon", Geographical Review 83 (3) pp229–237. Where the western Litani empties into the Mediterranean, on Wikimapia Old Feud Over Lebanese River Takes New Turn Assaf, Hamed and Saadeh, Mark. "Development of an Integrated Decision Support System for Water Quality Control in the Upper Litani Basin, Lebanon", Proceedings of the iEMSs Third Biennial Meeting, "Summit on Environmental Modelling and Software". International Environmental Modelling and Software Society, Burlington, USA, July 2006. வெளி இணைப்புகள் Lebanese minister: Litani river pollution a "national catastrophe" Archived லெபனானின் புவியியல்
684071
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சகாயா எல்ஆர்டி நிலையம்
சகாயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cahaya LRT Station; மலாய்: Stesen LRT Cahaya; சீனம்: 丽阳站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தாமான் சகாயா (Taman Cahaya) எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் சகாயா சாலை, இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது. பொது அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன. இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி, இந்த சகாயா எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த 13 நிலையங்களில் இந்த சகாயா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையம் அண்டை நிலையமான செம்பாக்கா நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செம்பாக்கா நிலையம் இந்த நிலையத்திற்கு முந்தைய நிலையம் செம்பாக்கா எல்ஆர்டி நிலையம்; அந்த செம்பாக்கா எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் இந்த செம்பாக்கா நிலையம் கொண்டுள்ளது. செம்பாக்கா நிலையத்திற்கு அருகில் தாமான் சகாயா (Taman Cahaya), தாமான் சகாயா இண்டா (Taman Cahaya Indah), தாமான் நிர்வாணா (Taman Nirvana), கம்போங் பாரு அம்பாங் (Kampung Baru Ampang) ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. அம்பாங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. காட்சியகம் செம்பாக்கா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2007) மேலும் காண்க மலூரி நிலையம் மிகார்ஜா எல்ஆர்டி நிலையம் செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் பண்டாராயா எல்ஆர்டி நிலையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Cahaya LRT Station - mrt.com.my மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
684073
https://ta.wikipedia.org/wiki/2024%20%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
2024 இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்த உடன்படிக்கை
26 நவம்பர் 2024ல் அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகள் மத்தியஸ்தர்களாக இருந்து,.இஸ்ரேல்-லெபனான் இடையே 27 நவம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும். 8 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேலியப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே தெற்கு லெபனான் பகுதிகளில் போர் ஏற்பட்டது. 1 அக்டோபர் 2024 அன்று இஸ்ரேலியப் படைகள், லெபனானின் தெற்கு எல்லையை கடந்து தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது தாக்குதல்கள் தொடுத்தது. இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின்படி,இஸ்ரேல் தனது படைகளை தெற்கு லெபனாலிருந்து வெளியேற வேண்டும், மற்றும் ஹிஸ்புல்லா படையினர் லித்தானி ஆற்றின் வடக்கு பக்கமாக பின்வாங்க வேண்டும்.மேலும் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் லெபனான் அரசுத் துருப்புகளும் மற்றும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் குழு, போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும். ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டவைகள் ஹிஸ்புல்லாவோ அல்லது லெபனானில் உள்ள வேறு எந்த ஆயுத இயக்கமோ இஸ்ரேலுக்கு எதிராக எந்த தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது. தரை, வான் மற்றும் கடல் உட்பட லெபனானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் எந்த தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளாது. இஸ்ரேலும் லெபனானும் ஐ. நா. பாதுகாப்பு மன்றத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. லெபனான் ஆயுதப் படைகள்,இராணுவம் மற்றும் உள் பாதுகாப்புப் படைகள் மட்டுமே தெற்கு லெபனானில் செயல்பட அங்கீகரிக்கப்பட்ட ஆயுதக் குழுக்களாக இருக்கும். லெபனானில் ஆயுதங்களின் விற்பனை, விநியோகம் மற்றும் உற்பத்தி லெபனான் அரசாங்கத்தின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். ஆயுதங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத அமைப்புகளும், உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ நிலைகளும் அகற்றப்படும். அங்கீகரிக்கப்படாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும். போர் நிறுத்தததை மேற்பார்வை செய்யும் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் இருப்பர். 60 நாட்களுக்குள் இஸ்ரேல் தனது படைகளை படிப்படியாக இஸ்ரேலிய எல்லைக்குள் திரும்பப் பெறும். இந்த காலகட்டத்தில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் லித்தானி ஆற்றின் வடக்கே பின்வாங்குவார்கள். அதே நேரத்தில் லெபனான் எல்லையில் லெபனான் நாட்டின் இராணுவம் மற்றும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைகள் மட்டும் இருப்பர்.. ஹிஸ்புல்லா அல்லது லெபனானில் உள்ள மற்றொரு அமைப்பு ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் லெபனானைத் தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு. மேற்கோள்கள் இசுரேலின் ஒப்பந்தங்கள் லெபனானின் ஒப்பந்தங்கள் பன்னாட்டு ஒப்பந்தங்கள்
684085
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur West Assembly constituency) இந்தியாவின் மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கண்ணோட்டம் நாக்பூர் மேற்கு (எண் 56) சட்டமன்றத் தொகுதியானது, நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 12 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூரில் உள்ள பணக்கார தொகுதிகளில் ஒன்றாகும். குடிமைப் பகுதி, பைராம்ஜி நகரம், ஜாபர் நகர் போன்ற நாக்பூரின் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் வசிக்கும் பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கும். 2019ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் விகாசு தாக்கரே பாஜக சுதாகர் தேஷ்முக்கை எதிர்த்து வெற்றி பெறும் வரை இந்த தொகுதியில் பாஜகவின் வலுவான பிடி இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 2019 2014 2009 2004 1957 ஏ. பி. பரதன் (சுயேச்சை 26,616 வாக்குகள்) சம்பர்கர் பஞ்சபராவ் உக்கம் (எசிஎப்: 25,878 வாக்குகள்) போர்கர் அனுசயாபாய் (இந்திய தேசிய காங்கிரசு) 24,073 வாக்குகள் கவாண்டே வாமன்ராவ் கோவிந்திராவ் (இந்திய தேசிய காங்கிரசு) 24,012 வாக்குகள் ஆவாரி மஞ்சர்ஷா ருஸ்ராம்ஜி (பிஎசுபி) -11,822 வாக்குகள் 1962 சுசிலாபாய் பல்ராஜ் (இந்திய தேசிய காங்கிரசு): 12,859 வாக்குகள் ஏ. பி. பரதன் (இந்தியப் பொதுவுடமைக் கட்சி) 12,701 வாக்குகள் கோவிந்த் கோபால் பம்புல்கர் (சுயேச்சை) -11,059 வாக்குகள் சுமத்திதாய் சுக்லிகர் (ஜனசங்கம்) -6,385 வாக்குகள் 1967 சுசிலாபாய் பல்ராஜ் (இந்திய தேசிய காங்கிரசு): 25,694 வாக்குகள் சுமதி பி. சுக்லிகர் (பிஜேஎஸ்) -16,793 வாக்குகள் 1972 சுசிலாபாய் பல்ராஜ் (இந்திய தேசிய காங்கிரசு): 25,410 வாக்குகள் சுமதி பாலகிருஷ்ணா சுக்லிகர் (பிஜேஎசு) -20,896 வாக்குகள் 1978 முலக் பாவுராவ் கோவிந்திராவ் (இந்திய தேசிய காங்கிரசு-இ. 45,625 வாக்குகள் சுமதிபாய் சுக்லிகர் (ஜனதா கட்சி) 33,531 வாக்குகள் சுசுலா பல்ராஜ் (காங்கிரசு-சோசலிஸ்ட்): 5,072 வாக்குகள் (மூன்றாவது இடம்) மேலும் காண்க மகாராட்டிர சட்டமன்றம் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
684086
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF
செர்புலச்சேரி
செர்புலச்சேரி (Cherpulassery) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். புகழ்பெற்ற அய்யப்பன்காவு கோவில் அமைந்துள்ளதால் செர்புலச்சேரி மலபாரின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது . புத்தனாலக்கால் பகவதி கோயிலும் அதனுடன் தொடர்புடைய காலவேலையும் பூரம் திருவிழாவும் இப்பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த நகரம் மாவட்டத் திலைநகரான பாலக்காட்டிலிருந்து சுமார் 43 கி. மீ (27 மை) தொலைவில் மாநில நெடுஞ்சாலை 53 இல் அமைந்துள்ளது. வரலாறு செர்புலச்சேரி (புலச்சேரியின் கிழக்குப் பக்கம்) என்பது சேரர் கங்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சமஸ்தானங்களில் ஒன்றான நெடுங்கநாட்டின் தலைவரான நெடுங்கேதிர்ப்பட்டின், இருப்பிடமாக இருந்தது. மக்கள்வகைப்பாடு 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செர்புலச்சேரியின் மக்கள் தொகை 41,267 ஆகும். இதில் 19,808 பேர் ஆண்களும், 21,459 பேர் பெண்களுமாவர். போக்குவரத்து செர்ப்புலச்சேரியானது ஒற்றப்பாலம், பட்டாம்பி, ஷொர்ணூர், பெரிந்தல்மண்ணை ஆகிய நகரங்களுடன் பேருந்துகளால் நன்கு இணைக்கபட்டுள்ளது. இவை அனைத்தும் இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளன. மண்ணார்க்காடு, பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையம் ஷொறணூர் சந்திப்பு தொடருந்து நிலையமாகும். மற்ற நிலையங்களில் ஒற்றப்பாலம், பட்டாம்பி ஆகியவை அடங்கும் ; இவை அனைத்தும் செர்புலச்சேரியிலிருந்து சம தொலைவில் உள்ளன. அரசியல் செர்புலச்சேரி ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் பாலக்காடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் கீழ் வருகிறது கல்லூரிகள் செர்புலச்சேரி மகளிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஐடியல் கல்லூரி மலபார் பலதொழில்நுட்பக் கல்லூரி கேரள மருத்துவக் கல்லூரி எம். இ. எஸ் கல்லூரி, செர்புலாசேரி குறிப்பிடத்தக்க நபர்கள் அப்புன்னி தாரகன் : கதகளி அனியற (திரைக்குப் பின்னுள்ள) கலைஞர் கலாமண்டலம் குட்டன் ஆசன் மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் Coordinates on Wikidata
684087
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87
விகாசு தாக்ரே
விகாசு பாண்டுரங் தாக்கரே (Vikas Thakre) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 14-ஆவது மகாராட்டிரா சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தாக்கரே இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். இவர் நாக்பூர் மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2020 டிசம்பர் முதல் நாக்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். தாக்கரே 2024 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியினை எதிர்த்துப் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். வாழும் நபர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் 1966 பிறப்புகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள்
684088
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
உத்தமராவ் ஜாங்கர்
உத்தமராவ் சிவ்தாசு ஜாங்கர் (Uttamrao Jankar)(பிறப்பு 1966) என்பவர் இந்தியாவின் மகாராட்டிராவினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டியல் சாதி சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மால்சிராசு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஜாங்கர் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு கட்சியை (சரத்சந்திர பவார்) பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார். இளமை ஜாங்கர் மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மால்சிராசைச் சேர்ந்தவர். இவர் ஜாங்கர் சிவதாசு சங்கரின் மகன் ஆவார். கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்த மாலேவாடி அக்லுஜ் சங்கரராவ் மோகித் பாட்டீல் கல்லூரியில் 1988ஆம் ஆண்டில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார். அரசியல் 2024 மகாராட்டிரச் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு கட்சியின் (சப) சார்பில் மால்சிராசு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஜாங்கர் வெற்றி பெற்றார். இவர் 121,713 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் இராம் வித்தல் சத்புதேவை 13,147 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1966 பிறப்புகள்
684094
https://ta.wikipedia.org/wiki/3-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
3-ஆக்சோபெண்டனாயிக் அமிலம்
3-ஆக்சோபெண்டனாயிக் அமிலம் (3-Oxopentanoic acid) என்பது C5H8O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீட்டா-கீட்டோபெண்டனோயேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 5-கார்பன்கள் உள்ள கீட்டோன் சேர்மமாக இச்சேர்மம் கருதப்படுகிறது. கல்லீரலில் உள்ள ஒற்றைப்படை கார்பன் கொழுப்பு அமிலங்களிலிருந்து தயாரிக்கப்பட்டு விரைவாக மூளைக்குள் நுழைகிறது. 4-கார்பன் கீட்டோன் சேர்மங்களுக்கு மாறாக, பீட்டா-கீட்டோபெண்டனோயேட்டு ஓர் அனாப்லெரோடிக்கு எனப்படும் நிறைவாக்கியாகும். அதாவது இது முக்கார்பாக்சிலிக்கு அமிலச் சுழற்சியில் இடைநிலைகளின் தொகுப்பை மீண்டும் நிரப்பும். முக்கிளிசரைடு டிரையெப்டனோயின் சேர்மம் பீட்டா-கீட்டோபெண்டனோயேட்டு உற்பத்தி செய்ய மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பீட்டா-கீட்டோ அமிலங்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள்
684099
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE
மீன் நாடா
ஒரு 75 அடி (23 மீ) எஃகு மீன் நாடா நைலான் (மேல்) மற்றும் எஃகு (கீழ்) மீன் நாடாக்களின் ஒப்பீடு மீன் நாடா (Fish tape) ஓர் இழுவை கம்பி, இழுவை நாடா, அல்லது ஒரு எலக்ட்ரீஷியன் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மின்சார வல்லுநர்களால் சுவர்கள் மற்றும் மின் வழித்தடங்கள் வழியாக புதிய மின்கம்பிகளை இழுக்க அல்லது வழிநடத்த பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது ஒரு வசந்த எஃகினாலான குறுகிய பட்டையாக தயாரிக்கப்படுகிறது, கவனமாக கையாளுவதன் மூலம், நாடாவானது சுவர் துவாரங்கள் அல்லது பல நாடுகளில் காப்புக்குழல்கள் போன்ற வரையறுக்கப்பட்ட இடங்கள் வழியாக வழிநடத்த முடியும். வழிகாட்டி சரத்தின் குறிக்கோளானது வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் கைவிடப்பட்ட ஒரு பகுதியை நோக்கி தள்ளுவதும் அதை இழுத்துச் செல்வதும் ஆகும், எனவே தொலைபேசி கம்பி, நெட்வொர்க் கேபிள்கள் அல்லது ஸ்பீக்கர் கம்பி போன்ற பல்வேறு வகையான கம்பியினைப்புகளை இழுக்க வழிகாட்டி சரத்தைப் பயன்படுத்தலாம். வடிவமைப்பு மீன் நாடாக்கள் பொதுவாக பிளாஸ்டிக் சுருளில் சுருட்டப்பட்டு சேமிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, அவை இயற்கையான வளைவைக் கொண்டுள்ளன, மேலும் இந்த வளைவே அவற்றை வழிநடத்த அனுமதிக்கிறது. சுருளைக் கையாளுவதன் மூலம், நாடா முனையை சற்று இயக்க முடியும். நாடா கடினமாக இருப்பதால் அது சுட்டிக்காட்டும் திசையில் தள்ளப்படலாம். இந்த வழியில் வெற்று சுவர் குழி வழியாக எளிதாக வழிநடத்த முடியும். வெப்பக் காப்பு, தீ நிறுத்தங்கள், குழாய்கள், HVAC குழாய்கள் மற்றும் பிற தடைகள் மீன் நாடாவைப் பயன்படுத்துவதை மிகவும் சவாலானதாக ஆக்குகின்றன. எஃகு, கண்ணாடியிழை மற்றும் நைலான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலிருந்து "நாடா" தயாரிக்கப்படலாம். பொதுவாக நாடாவின் ஒரு முனையானது கொக்கி அல்லது வளையமாக சிறப்பு முடிவைக் கொண்டுள்ளது, இதன் மூலம் இது ஒர் சிறப்பு ஃபாஸ்டனர் சாதனமாக, பயனர் நாடாவை இழுக்கும் முன் வழிகாட்டி சரத்துடன் இணைக்க அனுமதிக்கிறது. காப்புரிமை கண்டுபிடிப்பு 1947 இல் நிறுவப்பட்ட எலக்ட்ரிக்கல் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளரான, கொலராடோ மாநிலத்திலுள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸின் நகரில் வசித்த கீத் லெரோய் வில்சன், மீன் நாடா ஸ்னாகர்-ஐ கண்டுபிடித்தார். வில்சன் அசல் காப்புரிமையை 29 மார்ச் 1960 அன்று தாக்கல் செய்தார் மற்றும் 22 மே 1962 அன்று அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தால் காப்புரிமை #3,035,817 வழங்கப்பட்டது. குறிப்புகள் எந்திரவேலைக் கைக்கருவிகள்
684100
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2047%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 47 (தே. நெ. 47)(National Highway 47 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இது குசராத்தின் பாமன்போரில் தொடங்கி மகாராட்டிராவின் நாக்பூரில் முடிவடைகிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலை சுமார் (625 மைல்) நீளம் கொண்டது. 2010ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு, தே. நெ-47, 8ஏ, 59, 59ஏ மற்றும் 69 எனப் பல்வேறு எண்களைக் கொண்டிருந்தது. வழித்தடம் தே. நெ. 47 இந்தியாவின் மூன்று மாநிலங்களான குசராத்து, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் வழியாகச் செல்கிறது. குசராத்து பாமன்போர், லீம்புடி, அகமதாபாதூ, கோத்ரா, தகோத்-மத்தியப் பிரதேச எல்லை மத்தியப் பிரதேசம் குசராத்து எல்லை-இந்தூர், பேதுல்-மகாராட்டிர எல்லை மகாராட்டிரம் மத்தியப் பிரதேச எல்லை-சவ்னர், நாக்பூர் தேசிய நெடுஞ்சாலை 47-ல் உள்ள சுங்கச்சாவடிகள் பாமன்போர் சுங்கச் சாவடி பகோடா (எம்ஓஆர்டிஎச்) சுங்கச் சாவடி பித்தாய் சுங்கச்சாவடி வாவ்டி குர்த் சுங்கச்சாவடி பட்வாடா சுங்கச்சாவடி தத்திகாவ் சுங்கச்சாவடி மேத்வாடா சுங்கச்சாவடி பேதுல் சுங்கச்சாவடி கம்பாரா சுங்கச்சாவடி பதன்சோகி சுங்கச்சாவடி சந்திப்புகள் பாமன்போர் அருகே முனையம் லிம்ப்டி அருகே சர்கேஜ் அருகே அகமதாபாத் அருகே அகமதாபாத் அருகே லிம்கேடா அருகே தஹோத் அருகே ஜபுவாவுக்கு அருகில் தார் அருகே இந்தூர் அருகே இந்தூர் அருகே கேரி அருகே தே. நெ. 347பி பேதுல் அருகே தே. நெ. 548சி பேதுல் அருகே முல்தாய் அருகே தே. நெ. 347அ முல்தாய் அருகே சானியர் அருகே சானியர் அருகே தே. நெ. 547 சாவோனர் அருகே தேகாகான் அருகே நாக்பூர் அருகே நாக்பூர் அருகே முனையம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 47 Route map இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684102
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
பாமன்போர்
பாமன்போர் (Bamanbore) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். புவியியல் இது 22°25′0′′N 71°1′0′′E/22.41667 °N 71.01667 °E ஆழ்கூற்றில் அமைந்துள்ளது. அமைவிடம் தேசிய நெடுஞ்சாலை 8பி பாமன்போரில் முடிவடைகிறது. பாமன்போர் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ராஜ்கோட் வானூர்தி நிலையம் ஆகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாமன்போர் பற்றி பாமன்போரின் செயற்கைக்கோள் வரைபடம் Coordinates on Wikidata சுரேந்திரநகர் மாவட்டம்
684103
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அம்பாங் எல்ஆர்டி நிலையம்
அம்பாங் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Ampang LRT Station; மலாய்: Stesen LRT Ampang; சீனம்: 安邦站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள தரைநிலை இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அம்பாங் (Taman Cahaya) நகரத்தின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அம்பாங் சாலையின் வழியில் உள்ள இந்த நிலையம், கோலாலம்பூரின் கிழக்கு எல்லையின் வெளிப்புறத்தில் உள்ளது. பொது பயணச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் (Ticketing Machines) மற்றும் சிஐஎம்பி வங்கியின் தன்னியக்க வங்கி இயந்திரம் (CIMB Bank ATM), பல்பொருள் விற்பனைக் கடை போன்றவை இந்த நிலையத்தில் உள்ளன. அம்பாங் பேருந்து நிலையம், வாடகைச் சீருந்து நிற்குமிடம், ஊர்தி நிறுத்தம் ஆகிய தரிப்பிடங்களை இந்த நிலையத்துடன் இணைக்கும் சாய்வுதளங்கள் 2012-ஆம் ஆண்டில் கட்டப்பட்டன. கோம்பாக் எல்ஆர்டி நிலையத்தில் உள்ளதைப் போன்ற பல மாடி கார் நிறுத்துமிடம் 2014-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஊர்தி தரிப்பிடத்தில் பணம் செலுத்துவதற்கு தொட்டு செல் மின்னணுக் கட்டண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு நாளைக்கு MYR 4 ரிங்கிட் என்ற ஒரு நிலையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரலாறு அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன. இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி, இந்த அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த 13 நிலையங்களில் இந்த அம்பாங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையம் அண்டை நிலையமான சகாயா நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அம்பாங் சாலை அம்பாங் அல்லது அம்பாங் இலீர் (Ampang; Ampang Hilir) என்பது கோலாலம்பூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநகர்ப்பகுதி ஆகும். தித்திவாங்சா மக்களவை தொகுதியின் கீழ் ஒரு பகுதியாக உள்ளது. அம்பாங் சாலை மற்றும் அம்பாங் இலீர் ஆகியவற்றில் அம்பாங் எனும் பெயர் இருப்பதை அதன் அடையாளமாகக் காணலாம். அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களின் தோற்றம்; கோலாலம்பூரின் துரித வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அம்பாங் எனும் பெயர் மலாய் மொழியில் ’அணை’ என்று பொருள்படும். அம்பாங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் அம்பாங் வழித்தடம் அமைக்கப்பட்டது. காட்சியகம் அம்பாங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022) மேலும் காண்க அம்பாங் அம்பாங் ஜெயா அம்பாங் சாலை அம்பாங் மருத்துவமனை அம்பாங் தமிழ்ப்பள்ளி அம்பாங் மக்களவைத் தொகுதி அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் அம்பாங் வழித்தடம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Ampang LRT Station - mrt.com.my மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
684106
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2053%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 53 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 53, (National Highway 53 (India)-பழைய எண் தே. நெ. 6 சூரத்-கொல்கத்தா, தே. நெ. 200 பிலாசுபூர்-சண்டிகோல் & தே. நெ. 5அ சண்டிகோல்-பாரதீப் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தே. நெ. 53, குசராத்தில் உள்ள ஹாஜிரா மற்றும் ஒடிசாவில் உள்ள பரதீப் துறைமுகத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 53 இந்தியாவின் குசராத்து, மகாராட்டிரா, சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்தச் சாலை இந்தியாவில் ஆசிய நெடுஞ்சாலை 46 வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது கொல்கத்தாவிலிருந்து சூரத் வரை 1975 கி.மீ. (1227 மைல்) தூரத்திற்கு மேல் ஓடுவதாக அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது சூரத்-கொல்கத்தா நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமராவதி மற்றும் அகோலா இடையே 75 கிலோமீட்டர் (கி. மீ.) நீளமுள்ள மிக நீண்ட நெடுஞ்சாலையை 105 மணி 33 நிமிடங்களில் வடிவமைத்தற்காகக் கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளது. புதிதாக கட்டப்பட்ட சாலை தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு பகுதியாகும். வழித்தடம் முதன்மை தேசிய நெடுஞ்சாலை 53 இந்தியாவின் நான்கு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. குசராத்து ஹஜீரா, சூரத், வியாரா, சோங்கத், உச்சால்-மகாராட்டிரா எல்லை. மகாராட்டிராம் குசராத்து எல்லை நவாபூர் நந்துபார் துலே, ஜல்கான் பூசாவல், மல்காப்பூர், காம்கான், அகோலா, முர்திசாபூர், அமராவதி, கரஞ்சா (வர்தா பண்டாரா, திரோரா, கோந்தியா, தியோரி) சத்தீசுகர் மகாராட்டிரா எல்லை-ராஜ்நந்த்கான், துர்க், பிலாய், ராய்ப்பூர், ஆரங், கோராரி, பித்தோரா, சராய்பாலி-ஒடிசா எல்லை. ஒடிசா சத்தீசுகர் எல்லை-பர்கட், சம்பல்பூர், திலீபானி, தியோகர், பார்கோட், பல்லஹாரா, சமல் தடுப்பணை, கோடிபங்கா, தால்செர், காமாக்யாநகர், புவன், சுகிந்தா, துப்ரி, சண்டிகோல், அரிதாசுபூர், சிலிபூர், பூட்டமண்டாய், பாரதீப் துறைமுகம். ஆசிய நெடுஞ்சாலைகள் மகாராட்டிராவின் துலேவிலிருந்து ஒடிசாவின் பல்லகாரா வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 53 ஆசிய நெடுஞ்சாலை 46 இன் ஒரு பகுதியாகும். சந்திப்புகளின் பட்டியல் குசராத்து கசிரா துறைமுகத்தில் முனைய புள்ளி. சூரத் அருகே பால்சனா அருகே வ்யாரா அருகே சோங்கத் அருகே மகாராட்டிரம் விசர்வாடி அருகே என். எச். 752ஜி செவாலி அருகே என். எச். 753பி குசும்பே அருகே துலே அருகே துலே அருகே ஜல்கான் அருகே ஜல்கான் அருகே முக்தைநகர் அருகே மல்காப்பூர் அருகே நந்துரா அருகே காம்கான் அருகே காம்கான் அருகே காம்கான் அருகே பாலப்பூர் அருகே அகோலா அருகே அகோலா அருகே முர்திசாபூர் அருகே ஹிவ்ரா புத்ருக் அருகே நண்ட்கான் பெத் அருகே தலகான் அருகே கோண்ட்கேரி அருகே நாக்பூர் அருகே நாக்பூர் அருகே நாக்பூர் அருகே நாக்பூர் அருகே கும்தலா அருகே பாந்தாரா அருகே சாக்கோலி அருகே கோமராவுக்கு அருகில் தியோரி அருகே சத்தீசுகர் ராய்ப்பூர் அருகே கோராய் மகாசமுந்த் அருகே சராய்பாலி அருகே தேசிய நெடுஞ்சாலை ஒடிசா சோஹேலா அருகே} பர்கர் அருகே சம்பல்பூர் அருகே பல்லஹாரா அருகே பிரவாசுனி அருகே சரபால் அருகே தேசிய நெடுஞ்சாலை தேவகர் அருகே துபுரி அருகே சண்டிகோல் அருகே பாரதீப் துறைமுகத்தில் முனையம் ஊசலாட்ட பாதைகளுடன் வரைபடம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 53 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684110
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D
அஞ்சு சோசப்
அஞ்சு ஜோசப் (Anju Joseph) என்பவர் ஓர் இந்திய பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாள திரைத்துறையை சார்ந்தவர் ஆவார். 2011 இல் மலையாளத் திரைப்படமான டாக்டர் லவ் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் அஞ்சு சோசப் காஞ்சிரப்பள்ளியில் உள்ள செயின்ட் சோசப் பப்ளிக் பள்ளியிலும், செயின்ட் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார் மேலும் எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கொச்சி மகாராசா கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அஞ்சு, ஏசியாநெட் ஐடியா ஸ்டார் சிங்கர் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் கந்தர்வ சங்கீதம் நிகழ்ச்சியின் மூன்றாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ரியாலிட்டி ஷோ இயக்குனராக இருந்த அனூப் ஜானை அஞ்சு திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிரிந்தனர். அவர் இப்போது ஆதித்யா பரமேசுவரனை மணந்துள்ளார். மேற்கோள்கள் மலையாளத் திரைப்பட நடிகைகள் வாழும் நபர்கள்
684111
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
மகாராட்டிர சட்ட மேலவை உறுப்பினர்களின் பட்டியல்
மகாராட்டிரச் சட்ட மேலவை உறுப்பினர்களின் பட்டியல் (List of members of the Maharashtra Legislative Council) என்பது மகாராட்டிரா சட்ட மேலவையின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். ஆறு ஆண்டு காலத்திற்கு மேலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களில் 30 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உள்ளாட்சி மன்றத் தொகுதியிலிருந்து 22 உறுப்பினர்களும் பட்டதாரிகள் தொகுதியிலிருந்து 7 உறுப்பினர்களும் ஆசிரியர் தொகுதியிலிருந்து 7 நபர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மகாராட்டிராவின் ஆளுநர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை நியமித்தார். மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர்கள் கடைசி பெயரால் அகரவரிசை பட்டியல் பட்டியல் முழுமையடையவில்லை. (*) மகாராட்டிர மாநிலத்திலிருந்து தற்போதைய உறுப்பினர்களைக் குறிக்கிறது. சமஉ-சட்டமன்ற உறுப்பினர்கள் (மகாராட்டிரா மாநிலம்) உஅ-உள்ளூர் அதிகாரிகள் ப-பட்டதாரிகள் ஆ-ஆசிரியர்கள் நி-மகாராட்டிரா மாநில ஆளுநரால் நியமனம மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மஹாராஷ்டிரா சட்டமன்றம்
684113
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பாலாபூர் சட்டமன்ற தொகுதி
பாலாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Balapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும். இது அகோலா மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும். தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் அகோலா மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
684115
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2
சமிந்திராணி கிரியெல்ல
சமிந்திராணி கிரியெல்ல ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் ஆவார். ஒரு வழக்கறிஞரான சமிந்திராணி, அவரது தந்தையின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள் 1976 பிறப்புகள்
684121
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி
அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Akola West Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியானது அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த மாவட்டத்தில் உள்ள அகோட், அகோலா கிழக்கு, பாலாப்பூர் மற்றும் முர்திசாபூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், அருகிலுள்ள வாசிம் மாவட்டத்தில் உள்ள ரிசோட் தொகுதியும் உள்ளன. தேர்தல் முடிவுகள் 2024 மேலும் காண்க அகோலா மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் அகோலா மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
684122
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மகா யுதி
மகா யுதி (Maha Yuti) (மொழிபெயர்ப்பு:பெரும் கூட்டணி) சுருக்கமாக: MY), 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது மகாராட்டிரம் மாநிலத்தில் மகா யுதி (பெரும் கூட்டணி) நிறுவப்பட்டது.தற்போது இக்கூட்டணியில் பெரிய அரசியல் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாலாசாகேபஞ்சி சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) உடன் சிறிய மாநிலக் கட்சிகளான இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே), தேசியச் சமூக கட்சிகளும் உள்ளது. 2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் மகா யுதி 235 தொகுதிகளில் வென்றது. மகா யுதி ஆதரவுடன் 2 சுயேச்சை வேட்பாளர்களும் வென்றுள்ளனர். நடப்பு மகா யுதி சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு: மகாராட்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை & மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது தேர்தல் செயல்திறன் 2024 மக்களவைத் தேர்தல், மகாராட்டிரம் 2024 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் இந்திய அரசியல் கூட்டணிகள்
684128
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
செராஸ் எல்ஆர்டி நிலையம்
செராஸ் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cheras LRT Station; மலாய்: Stesen LRT Cheras; சீனம்: 蕉赖轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும். கோலாலம்பூர் மாநகரத்தின் அருகிலுள்ள செராஸ் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் இந்த நிலையம் செரி மாஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டது. இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சான் சோவ் லின் நிலையம் தொடங்கி செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் வரையில் 7 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செராஸ் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. அமைவு செராஸ் என்று இந்த நிலையத்தின் பெயர் இருந்தபோதிலும், இந்த செராஸ் எல்ஆர்டி நிலையம், கோலாலம்பூர், செராஸ் நகரத்திற்குள் அமைந்திருக்கவில்லை. மாறாக, இந்த நிலையம் வடக்கு சுங்கை பீசி பகுதிக்கும், தாமான் ஈக்கான் இமாஸ் - சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு இடையில், செராஸ் நகரத்தின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சாலாக் செலாத்தான் கோலாலம்பூர் பகுதியின் அம்பாங் மற்றும் சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு இடையில், தற்போது செயலிழந்த நிலையில் உள்ள மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways); மற்றும் மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu) எனும் இரு நிறுவனங்களின் தொடருந்து பாதைகளை மீண்டும் பயன்படுத்தி செராஸ் எல்ஆர்டி நிலையம் கட்டப்பட்டது. செரி பெட்டாலிங் வழித்தடத்தின் புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் இதுவே கடைசி நிலையமாகவும் உள்ளது வரலாறு அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி என அழைக்கப்பட்டன. இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும். பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன. காட்சியகம் அம்பாங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2007) மேலும் காண்க செராஸ் செராஸ் மக்களவைத் தொகுதி செராஸ் தமிழ்ப்பள்ளி உலு லங்காட் மாவட்டம் பண்டார் துன் உசேன் ஓன் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
684129
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF
மோஜ்தபா காமெனி
மோஜ்தபா காமெனி (Mojtaba Khamenei பிறப்பு: 8 செப்டம்பர் 1969) நடப்பு ஈரானின் அதியுயர் தலைவரான அலி காமெனியின் மகனும், சியா இசுலாமிய அறிஞரும் ஆவார். இவர் பன்னிருவர் இசுலாமியப் பிரிவைச் சேர்ந்த இசுலாமிய மத குருவுமாவார். 1987-1988-களில் ஈரான்-ஈராக் போரின் போது இவர் ஓர் இராணுவப் பிரிவிற்குக் கட்டளை அதிகாரியாகப் போரிட்டுள்ளார். 2009 ஈரானிய அதிபர் தேர்தலின் போது ஏற்பட்ட எதிர்ப்பலைகளால் நிறுவப்பட்ட இசுலாமிய பச்சை இயக்கத்தில் மோஜ்தபா காமெனி பங்காற்றியவர் ஆவார். 30 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ள நடப்பு ஈரானின் அதியுயர் தலைவரான அலி காமெனிக்குப் பின்னர் மோஜ்தபா காமெனி, ஈரானிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளவராகக் கருதப்படுகிறார். மேற்கோள்கள் 1969 பிறப்புகள் வாழும் நபர்கள் ஈரானிய அரசியல்வாதிகள்
684133
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி
அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Akola East Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும். அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல்
684134
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20166%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 166 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 166 (தே. நெ. 166)(National Highway 166 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மகாராட்டிராவின் இரத்னகிரியிலிருந்து கோலாப்பூர், சாங்கிலி, மீரஜ் வழியாக சோலாப்பூர் வரை செல்கிறது. இது கொங்கன் பிராந்தியத்தை மகாராட்டிராவின் தென்மேற்கு பிராந்தியத்துடன் இணைக்கும் முக்கிய இணைப்பாகும். முழு நெடுஞ்சாலையும் இருபுறமும் நடைபாதை கொண்ட இறுக்கமான நடைபாதையால் கட்டப்பட்டுள்ளது. வழித்தடம் இரத்னகிரி-கோலாப்பூர்-சாங்கிலி-மீரஜ்-சோலாப்பூர் சந்திப்புகள் இரத்தினகிரி அருகே மா. நெ. 4 முனையம் ஹாத்கம்பாவிலிருந்து பாலி வரை கான்குரன்சி கோலாப்பூர் அருகே மிராஜ்-சாங்லி அருகே மிராஜ்-சாங்லி அருகே போர்காவ்-ஷீர்தோன் அருகே தேசிய நெடுஞ்சாலை நாகாஜ் அருகே தே. நெ. 166இ சங்கோலா அருகே மங்கள்வேதா அருகே சோலாப்பூர் அருகே மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 166 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684136
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20165%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 165 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 165 (National Highway 165 (India))(தே. நெ. 165) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பாமர்ரு பகுதியில் தொடங்கி திகமர்ரு (பாலகொல்லு) சாலையில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் ஆகும். மேலும் காண்க ஆந்திரப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684137
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20163%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 163 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 163 (முன்னர் தே. நெ. 202)(National Highway 166 (India)) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது தெலங்காணாவில் உள்ள கோடங்களை (ராவுலப்பள்ளி) மற்றும் சத்தீசுகரில் உள்ள போபால்பட்னம் சாலையை ஐதராபாத்து, உப்பல், காட்கேசர், புவனகிரி, ஜாங்காவ்ன், காசிப்பேட்டை, ஹனாம்கோண்டா, வாரங்கல் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இணைக்கிறது. இது தே. நெ. 163 என மறுபெயரிடப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலை 163யின் ஆரம்ப இடத்தினை கோடங்களிருந்து (கருநாடகம் எல்லை) தொடங்கி ஐதராபாத்து வரை நீட்டிக்க ஒரு திட்டம் இருந்தது. வழித்தடம் தெலங்காணா மற்றும் சத்தீசுகர் மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் பல நகரங்கள் தேசிய நெடுஞ்சாலை 163 மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 163 மொத்தம் (295 மைல்) நீளத்தைக் கொண்டுள்ளது. மாநிலங்களில் பாதை நீளம்ஃ தெலுங்கானா 438 கி. மீ. (272 மைல்) சத்தீசுகர் 36 கி.மீ. (22 மைல்) இணைப்பு மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684138
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%29
எதிர்காலம் (இலக்கணம்)
இலக்கணத்தில், எதிர்காலம் (future tense) என்பது தற்போது வரை நடைபெறாத, ஆனால் எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வினைச்சொல் வடிவமாகும். புகழினி நாளை கடிதம் எழுதுவாள் என்பதில் எழுதுவாள் என்பது இனிமேல் நடைபெறுவதைக் குறிக்கும் வினைச்சொல் வடிவமாகும். ஆங்கிலத்தில் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு இலக்கண மற்றும் சொற்பொருள் வழிமுறைகள் இருந்தாலும், சொல் வடிவ மாற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. இதில் will, shall ஆகிய துணை வினைச்சொற்களும் அடங்கும். வெளிப்பாடுகள் செயலைச் செய்பவர், தான் நடைபெறும் என எதிர்பார்க்கும் அல்லது தான் எதிர்காலத்தில் செய்ய நினைக்கும் செயல்களைக் கூறுவதற்கு இத்தகைய காலத்தினைப் பயன்படுத்துவர். எதிர்கால வெளிப்பாடு என்பது யதார்த்தமா அல்லது யதார்த்தமற்றதா என்பது ஒரு மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிக் கருத்தைச் சார்ந்தது அல்ல, மாறாக நிகழ்வு உண்மையில் நடைபெறும் என்ற செயலைச் செய்பவரின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தது. இந்தோ-ஆரிய மொழிகள் தமிழ் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் 4 எதிர்கால காலங்கள் ஆங்கில இலக்கண குறிப்பு மற்றும் பயிற்சிகள் காலங்கள் (இலக்கணம்) எதிர்காலவியல்
684141
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2070%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 70 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 70, (National Highway 70 (India)) பொதுவாக தே. நெ. 70 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். தே. நெ-70 இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது. இது பாரத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாகும். வழித்தடம் முனாபாவோ அருகே தே. நே. 25, சுந்த்ரா, மியாஜ்லர், தனனா, அசுதார், கோட்டாரு, லோங்கேவாலா, டானோட் அருகே தே. நே. 68. The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 October 2018.</cite></ref> சந்திப்புகள் முனாபாவோ அருகே முனையம் தனோட் அருகே முனையம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 70 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684143
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மூர்த்திசாபூர் சட்டமன்றத் தொகுதி
மூர்த்திசாபூர் சட்டமன்றத் தொகுதி (Murtizapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பட்டியல் சாதி வேட்பாளருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகும். அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல்
684147
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88
மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை
மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (ஆங்கிலம்: Federated Malay States Railways (FMSR); மலாய்: Keretapi Negeri-Negeri Melayu Bersekutu) என்பது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய மலாயா எனும் இன்றைய தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூர் பகுதிகளில், செயல்பாட்டில் இருந்த ஓர் ஒருங்கிணைந்த தொடருந்து சேவையாகும். மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1896-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் (Federated Malay States) பெயரால் அந்தத் தொடருந்துச் சேவைக்கும் பெயரிடப்பட்டது. மலாயாவின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாகச் செயல்பட்ட பல்வேறு தொடருந்து நிறுவனங்களை; மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பொது மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை உருவாகும் வரை, மலாயாவின் தொடருந்து அமைப்புகள் தனித் தனியாகச் செயல்பட்டன; மற்றும் அவை, வணிகரீதியாகச் செயல்பட்டன. பெரும்பாலும் அவை தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் மையம் கொண்டு இருந்தன. அன்றைய நிலையில், எந்த ஒரு தொடருந்து அமைப்பும் மாநிலங்களுக்கு இடையிலான சேவைகளில் ஈடுபடவில்லை. மேலும் அவை தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் செயல்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மலாயாவில் குறைந்தது ஆறு தனித்தனி தொடருந்து நிறுவனங்கள் இருந்தன. சேவைகள் பேராக் - பேராக் அரசு தொடருந்து (Perak Government Railway): முதன்மையாக மாநிலத்திற்குள் ஈயச் சுரங்கங்களுக்குச் சேவை செய்யப் பணிக்கப்பட்டது; இரண்டு தனித்தனி வழித்தடங்களாக இயங்கியது; பாரிட் புந்தார் மற்றும் போர்ட் வெல்ட் இடையிலான தைப்பிங் வழித்தடம்; மற்றும் எங்கோர், தெலுகான்சன் இடையிலான மற்றொரு வழித்தடம் ஜொகூர் - மூவார் அரசு தொடருந்து (Muar State Railway): ஜொகூர், மூவார் மாவட்டத்தில் வேளாண் பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான தொடருந்து அமைப்பு சிலாங்கூர் - சிலாங்கூர் அரசு தொடருந்து (Selangor Government Railway): கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. 1900-இல் கிள்ளான் துறைமுகம் (Port Swettenham) வரை நீட்டிக்கப்பட்டது; அடுத்து கோலாலம்பூர், புடு, அம்பாங் வரையிலான வழித்தடம்; ஈயச் சுரங்கங்களை இணைக்கும் வழித்தடங்கள் நெகிரி செம்பிலான் - சுங்கை ஊஜோங் தொடருந்து (Sungei Ujong Railway): சிரம்பான் - போர்டிக்சன் இடையிலான வழித்தடம் சிங்கப்பூர் - சிங்கப்பூர் அரசு தொடருந்து (Singapore Government Railway) பினாங்கு - பிறை (Province Wellesley) - புக்கிட் மெர்தாஜாம் வழித்தடம் (Prai-Bukit Mertajam Line) காட்சியகம் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவையின் காட்சிப் படங்கள் (1910) மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து மலாயா தொடருந்து நிறுவனம் பிரசரானா மலேசியா எம்ஆர்டி நிறுவனம் விரைவுத் தொடருந்து இணைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியாவில் தொடருந்து போக்குவரத்து
684148
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
ரிசோட் சட்டமன்றத் தொகுதி
ரிசோட் சட்டமன்றத் தொகுதி (Risod Assembly constituency) இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது 2008 இல் உருவாக்கப்பட்டதாகும். இது வாசிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல்
684149
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2069%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 69 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 69 (தே. நெ. 69)(National Highway 69 (India)) (முன்பு தேசிய நெடுஞ்சாலை 206 (ஹொன்னாவராவிலிருந்து பனவாரா பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை 234 (ஹுலியாரில் இருந்து முல்பகல் பிரிவு)) இந்தியாவில் 732 கி. மீ. (455 மைல்) நீளமுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையாகும். இது கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. மேற்கு முனையம் ஹொன்னாவரா அருகே தே. நெ. 66 சந்திப்பில் உள்ளது. சிராவுக்கு அருகே தே. நெ. 48 ஐ இணைக்கிறது. சிக்கபல்லாபூர் அருகே தே. நெ. 44ஐ இணைக்கிறது. இதன் பழைய எண். தே. நெ. 234. வழித்தடம் தே. நெ. 69 ஹொன்னாவரில் தொடங்கி சாகரா, சீமக்கா, தரிகேரே, கடூர், பனவாரா, ஹுலியார், புக்கப்பட்டினம், சிரா, மதுகிரி, கோட்டடின்னே, கவுரிபித்தனூர், மஞ்சனஅள்ளி, சிக்கபள்ளாப்பூர், சிட்லகட்டா, சிந்தாமணி, ஸ்ரீநிவாசபுரா, முல்பகல், நங்காலி ஆகிய கர்நாடக மாநிலப் பகுதிகள் வழியாகச் சென்று ஆந்திரப் பிரதேசத்தில் பலமனேர், சித்தூர், பள்ளிபட்டு, புத்தூர் வழியாகச் சென்று ரேணிகுண்டாவில் முடிவடைகிறது. மாநிலங்களில் பாதை நீளம் ஆந்திரப் பிரதேசம்-162 கிமீ (101 மைல்) கர்நாடகா-570 கிமீ (350 மைல்) மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா) தேசிய நெடுஞ்சாலை 169 (இந்தியா) தேசிய நெடுஞ்சாலை 48 (இந்தியா) தேசிய நெடுஞ்சாலை 40 (இந்தியா) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கருநாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684151
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
பொதுக்குரல்
பொதுக்குரல் அல்லது காமன் வாய்சு (Common Voice) என்பது பேச்சுணரி மென்பொருளுக்கான கட்டற்றத் தரவுத்தளத்தை உருவாக்க மொசில்லா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட கூட்டு வழித்திட்டமாகும். ஒலிவாங்கி மூலம் மாதிரி சொற்றொடர்களைப் பதிவுசெய்து மற்ற பயனர்களின் பதிவுகளை மதிப்பாய்வு செய்யும் தன்னார்வலர்களால் இத்திட்டம் ஆதரிக்கப்படுகிறது. படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் பொது உரிமைப் பரப்பு (CC0) உரிமத்தின் கீழ் கிடைக்கும் குரல் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட சொற்றொடர்கள் சேகரிக்கப்படுகின்றன. மென்பொருள் மேம்பாட்டாளர்கள் குரல்-க்கு-உரை பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் அல்லது செலவுகள் எதுவும் இல்லாமல் தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த உரிமம் உறுதி செய்கிறது. மேற்கோள்கள்
684152
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2054%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 54 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 54 (தே. நெ. 54)(National Highway 54 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, இராசத்தானில் உள்ள நெடுஞ்சாலை ஆகும். இது பதான்கோட் அருகே தொடங்கி இராசத்தானில் கெஞ்சியா அனுமன்கர் மாவட்டத்தில், தே. நெ. 62க்கு அருகில் முடிவடைகிறது. மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 54 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684153
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
சங்கரராமேஸ்வரர் கோயில்
சங்கரராமேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரத்தின் மையப் பகுதியான சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் பெயர் சங்கரராமேஸ்வரர்; அம்பிகை பெயர் பாகம்பிரியாள். நான்கு ஏக்கர் பரப்பில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயில் 500 ஆண்டுகள் பழைமையானது.இந்து அறநிலையத் துறையின் மேற்பார்வையில் செயல்படும் இக்கோயிலில் நாள்தோறும் 5 வேளை பூஜைகள் நடைபெறுகிறது. நடை திறந்திருக்கும் நேரம் காலை 6.00 – 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிக்கு பள்ளியறை புஜையுடன் நடை சாத்தப்படும் திருவிழாக்கள் சித்திரைத் திருவிழாவின் போது தேரோட்டம் தைப்பூசம் அன்று தெப்பத் திருவிழா மாசியில் மகா சிவராத்திரி ஐப்பசியில் திருக்கல்யாணம் கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்துதல் மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி பங்குனி மாதம் மாங்கனித் திருவிழா மேற்கோள்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
684154
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
வாசிம் சட்டமன்றத் தொகுதி
வாசிம் சட்டமன்றத் தொகுதி (Washim Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதியில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வாசிம் மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்ராகும் . இது பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது யவத்மால்-வாசிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் வாசிம் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
684155
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D
காஸ் படேல்
காசியப் காஸ் படேல் (பிறப்பு:25 பிப்ரவரி 1980)இந்திய வம்சாவளி அமெரிக்கரான காசியப் காஸ் படேல், அமெரிக்கா நாட்டின் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவரை FBI அமைப்பின் இயக்குநராக டோனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைத்துள்ளார். முன்னதாக காஸ் படேல் டோனால்ட் டிரம்ப்பின் முதல் ஆட்சியின் போது, அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் குழுவின் அதிகாரியாகவும், தேசியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநரின் ஆலோசகராகவும் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இளமை & கல்வி 1970களில் அமெரிக்காவில் குடியேறிய ஒரு குஜராத்திக் குடும்பத்தில் 1980ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் பிறந்த காஸ் படேலின் தந்தை அமெரிக்க விமான நிறுவனத்தில் பணியாற்றியவர். படேல் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் சட்டம் பயின்றார். பின் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சர்வதேச சட்டத்தில் பட்டம் பெற்றார். தொழில் காஷ் படேல் அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் மூத்த இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லரின் தலைமை அதிகாரியாக காஷ் படேல் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநரின் முதன்மை துணை அதிகாரியாகவும் காஷ் படேல் இருந்துள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் சேருவதற்கு முன்பு, புலனாய்வுக்கான நிரந்தர தேர்வுக் குழுவின் மூத்த ஆலோசகராக காஷ் படேல் பணியாற்றினார். மேலும் காஸ் படேல் உளவுத்துறை அமைப்பு மற்றும் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான முக்கியமான திட்டங்களையும் மேற்பார்வையிட்டுள்ளார். புலனாய்வுக்கான நிரந்தர தேர்வுக் குழுவில் பணியாற்றுவதற்கு முன்பு, காஷ் படேல் அமெரிக்க நீதித்துறையில் பயங்கரவாதம் குறித்த வழக்குகளைக் கையாளும் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். 44 வயதான காஷ் படேல், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனால்ட் டிரம்ப்பின் மிகவும் விசுவாசமான நபர்களுள் ஒருவர். காஷ் படேலை எஃப்பிஐ-யின் இயக்குநராக நியமிக்க டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1980 பிறப்புகள் அமெரிக்க அரசியல்வாதிகள் இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்க இந்துக்கள் அமெரிக்க அரசியல்வாதிகள்
684161
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
காரஞ்சா சட்டமன்றத் தொகுதி
காரஞ்சா சட்டமன்றத் தொகுதி (Karanja Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது வாசிம் மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். யவத்மால்-வாசிம் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும். தேர்தல் முடிவுகள் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் வாசிம் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
684167
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தாமன்காவ் இரயில்வே சட்டமன்றத் தொகுதி
தமன்காவ் ரயில்வே சட்டமன்றத் தொகுதி (Dhamangaon Railway Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும்.தமன்காவ் ரயில்வே, வர்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் அமராவதி மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
684173
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Salak Selatan LRT Station; மலாய்: Stesen LRT Salak Selatan; சீனம்: 南萨拉克) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் தாழ்ந்தமாடி அமைப்பைக் கொண்ட ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சாலாக் செலாத்தான் நகரின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் சுங்கை பீசி சாலை, இந்த நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் எம்ஆர்டி சுற்று வழித்தடத்துடன் எதிர்காலப் பரிமாற்றமாக நிலையமாக இந்த நிலையம் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. பொது அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன. இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சான் சோவ் லின் நிலையம் தொடங்கி செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் வரையில் 7 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த சாலாக் செலாத்தான் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. சாலாக் செலாத்தான் கோலாலம்பூர் பகுதியின் அம்பாங் மற்றும் சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு இடையில், தற்போது செயலிழந்த நிலையில் உள்ள மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways); மற்றும் மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu) எனும் இரு நிறுவனங்களின் தொடருந்து வழித்தடங்களை மீண்டும் பயன்படுத்திய பின்னர் இந்த சாலாக் செலாத்தான் இலகு தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. அம்பாங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் அம்பாங் வழித்தடம் உருவாக்கப்பட்டது. பேருந்து சேவைகள் காட்சியகம் சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2007) மேலும் காண்க சகாயா எல்ஆர்டி நிலையம் அம்பாங் எல்ஆர்டி நிலையம் செராஸ் எல்ஆர்டி நிலையம் செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் பண்டாராயா எல்ஆர்டி நிலையம் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Klang Valley MRT Line Integrations மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
684174
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
செத்தல்லூர்
செத்தல்லூர் (Chethallur) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்த கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 5,000 ஆகும். முறியங்கண்ணி பாலம் கட்டப்பட்டதன் மூலம் இந்த கிராமம் ஊடக கவனத்தைப் பெற்றது. இதனால் கோழிக்கோடு மற்றும் பாலக்காடு இடையே வாகனப் பயணத் தூரமானது சுமார் 10 கிமீ அல்லது 6.21 மைல்கள் குறைந்தது. கோயில்களும் திருவிழாக்களும் பனம்குருசிகாவு பகவதி கோயில் செத்தல்லூரில் அமைந்துள்ளது. பனம்குருச்சிக்காவு பூரம் என்பது செத்தல்லூரில் நடக்கும் திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும், பூரத்தின் இறுதி நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட யானைகள் "எழுந்நல்லிப்பில்" பங்கேற்கின்றன. பூரம் திருவிழா மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது இந்த ஊரிலிருந்து (100 கிமீ அல்லது 62.1 மைல்) தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் அங்காடிப்புரத்தில் (20 கிமீ அல்லது 12.4 மைல்) உள்ளது. நாராநாத் பிராந்தன் (நரநாமிகளின் பைத்தியக்காரன் என்றும் அழைக்கப்படுகிறார்) என்ற நாட்டுப்புறக் கதாப்பாத்திரம், செத்தல்லூரில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவன் சிறுவனாக வளர்ந்தவுடன், ஒரு விசித்திரமான பொழுதுபோக்கை மேற்கொண்டான்-பெரிய கற்பாறைகளை தனது வீட்டிற்கு அருகிலுள்ள மலையிலிருந்து உருட்டினான் எனப்படுகிறது. மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் Coordinates on Wikidata
684175
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2055%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 55 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 55 (National Highway 55 (India))(முன்னர் தே. நெ. 42) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூரை கட்டக்கினை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். சம்பல்பூரில் உள்ள மானேசுவரில் உள்ள தே. நெ. 53இல் தொடங்கி, கட்டக் மங்குலி சதுக்கத்தில் தே. நெ 16இல் முடிவடைகிறது. இது கட்டக்-சம்பல்பூர் நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, தே. நெ-55யின் பாதை பழைய தேசிய நெடுஞ்சாலை 42இன் ஒரு பகுதியாக இருந்தது. இந்த தேசிய நெடுஞ்சாலை 263 கி.மீ (163 மைல்) நீளம் கொண்டது. வழித்தடம் தே. நெ. 55 சம்பல்பூர், ரெட்ஹாகோல், போயிண்டா, படகெரா, அனுகோள், தேன்கனல் ஆகியவற்றை இணைக்கிறது. இந்நெடுஞ்சாலை ஒடிசா மாநிலத்தில் கட்டக்கில் முடிவடைகிறது. சந்திப்புகள் சம்பல்பூர் அருகே முனையம் ரெட்ஹாகோல் அருகே தேசிய நெடுஞ்சாலை 153பி படகெரா அருகே பனார்பால் அருகே குந்துனி அருகே கட்டாக் அருகே மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 55 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684179
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2056%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 56 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 56 (National Highway 56 (India)) பொதுவாக தே. நெ. 56 என்று குறிப்பிடப்படுகிறது. இது இராசத்தானின் சித்தோர்கார் நகரத்தை குசராத்தின் வாப்பி நகரத்துடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை குசராத்து, மத்தியப் பிரதேசம் மற்றும் இராசத்தான் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் நீளம் 310 கிலோ மீட்டர் ஆகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 56 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684181
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2057%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 57 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 57 (National Highway 57 (India))(தே. நெ. 57), முன்பு தே. நெ. 224 என எண்ணிடப்பட்ட, ஒடிசா மாநிலத்தில் பலாங்கீர் மற்றும் கோர்டா ஆகியவற்றை இணைக்கும் இந்தியாவின் முதன்மை தேசிய நெடுஞ்சாலை ஆகும். வழித்தடம் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலங்கீர், சோனேபூர், பௌடா, தஷாபல்லா, நயாகர் மற்றும் கோர்த்தா ஆகிய இடங்களை தே. நெ. 57 இணைக்கிறது. சந்திப்புகள் பாலங்கிர் அருகே முனையம் சுபர்ணபூர் அருகே (சோனேபூர்) 153பி பௌடா அருகே (பௌத்) புருனகடக் அருகே மாதாபூர் அருகே கோர்டா அருகே முனையம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 57 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684183
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பட்னேரா சட்டமன்றத் தொகுதி
பட்னேரா சட்டமன்றத் தொகுதி (Badnera Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். பட்னேரா, அமராவதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல்
684184
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE
மாவலா
மாவலா (Mavala) என்பது இன்றைய இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே நகரின் மேற்கே அமைந்துள்ள மலைப்பாங்கான மாவல் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களுக்கு பயன்படுத்தப்படும் பெயர். 17 ஆம் நூற்றாண்டின் மராத்திய தலைவர் சிவாஜி முதலில் தனது அதிகாரத் தளத்தை மாவலில் நிறுவினார். அது பின்னர் மராத்திய இராச்சியமாக வளர்ந்தது. அவரது கெரில்லா படைகள் மற்றும் தாக்குதல் குழுக்களில் பெரிதும் சேர்க்கப்பட்ட இந்தப் மலைப்பாங்கான வசிப்பவர்கள் குன்பி சாதிகளை உள்ளடக்கிய மாவலே என்று அழைக்கப்பட்டனர். வரலாறு மாவலாவின் வீரர்கள் காலாட்படை மற்றும் மலைப் போரில் சிறந்து விளங்கினர். சிவாஜியின் சக்தியின் முதுகெலும்பாக காலாட்படை கருதப்பட்டது. சிவாஜியின் வாழ்க்கையை விவரிக்கும் சபாசாத் பக்கரின் கூற்றுப்படி, சிவாஜிக்கு சொந்தமான மாவலே காலாட்படையில் 100,000 ஆண்கள் இருந்தனர் எனத் தெரிகிறது. மாவலேவின் வடக்கு பிராந்தியத்தில் வசிப்பவர்களில் சிலர் கோலிகள் என அழைக்கப்பட்டனர். தெற்கில் முக்கியமாக மராத்தியர்கள் வசித்து வந்தனர். இப்பகுதி பவன் மாவல் (52 பள்ளத்தாக்குகள் அல்லது கோராக்கள்) என்றும் அழைக்கப்பட்டது. ஒவ்வொரு கோராவும் மராத்திய நாயக்கர்கள் அல்லது தேஷ்முக்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஒவ்வொரு மாவல் பிரபுவும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க நோக்கத்திற்காக சொந்தமாக படைகளை நிர்வகித்து வந்தனர். கூடுதலாக, தேவைப்படும் நேரங்களில் தங்களது ஆட்சியாளர்களும் படை திரட்டி தந்தனர். இதற்காக இவர்கள் பரிசுகளையும் புதிய பிரதேசங்களின் மானியங்களையும் வெகுமதியாக பெறுவார்கள். மேற்கோள்கள் மகாராட்டிர வரலாறு
684188
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
பாதரசம் தெலூரைடு
பாதரசம் தெலூரைடு (Mercury telluride) என்பது HgTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் தெலூரியம் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. இச்சேர்மம் குறைக்கடத்திப் பொருட்களின் II-VI குழுவுடன் தொடர்புடைய ஓர் அரை உலோகமாகக் கருதப்படுகிறது. மெர்க்குரிக் தெலூரைடு, மெர்க்குரி(II) தெலூரைடு, பாதரச(II) தெலூரைடு என்ற வேறு பெயர்களாலும் பாதரச தெலூரைடு அடையாளப்படுத்தப்படுகிறது. HgTe இயற்கையில் கொலராடோயிட்டு என்ற கனிம வடிவமாக தோன்றுகிறது. பண்புகள் வேறுவிதமாகக் கூறப்படாவிட்டால் அனைத்து பண்புகளும் நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இருக்கும். அணிக்கோவை அளவுரு கனசதுர படிக வடிவத்தில் சுமார் 0.646 நானோமீட்டர் ஆகும். பரும குணகம் சுமார் 42.1 கிகா பாசுக்கல், வெப்ப விரிவாக்க குணகம் சுமார் 5.2×10−6/கெல்வின், நிலையான மின்கடத்தா மாறிலி 20.8, மாறும் மின்கடத்தா மாறிலி மதிப்பு 15.1, வெப்ப கடத்துத்திறன் குறைவாக 2.7 வாட்டு·மீ2/(மீ·கெல்வின்) என்ற இயற்பியல் பண்புகளைக் கொண்டுள்ளது. HgTe பிணைப்புகள் பலவீனமானவை என்பதால் குறைந்த கடினத்தன்மை மதிப்பு 2.7×107 கிலோ/மீ2. அளவில் உள்ளது. மாசிடல் என்-வகை மாசு உடைய சேர்மத்தை போரான், அலுமினியம், காலியம் அல்லது இண்டியம் போன்ற தனிமங்களைக் கொண்டு அடையலாம். அயோடினும் இரும்பும் கூட என்-வகை கலப்பு சேர்மத்தை உருவாக்கும். பாதரசக் காலியிடங்கள் காரணமாக HgTe இயற்கையாகவே பி-வகை மாசுச் சேர்மமாகும். பி-வகை மாசு சேர்மத்தை துத்தநாகம், தாமிரம், வெள்ளி அல்லது தங்கத்தை அறிமுகப்படுத்துவதன் மூலமும் அடையலாம். இடத்தியல் மின்காப்பி பாதரசம் தெலூரைடு 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இடத்தியல் மின்காப்பியாகும். இடத்தியல் மின்காப்பிகள் மொத்தமாக மின்சாரத்தை ஆதரிக்க முடியாது, ஆனால் மேற்பரப்பில் வரையறுக்கப்பட்ட மின்னணு நிலைகள் மின்சுமை கடத்திகளாகச் செயல்படும்.. வேதியியல் HgTe பிணைப்புகள் பலவீனமாக உள்ளன. இவற்றின் உருவாதல் என்தால்பி −32கிலோயூல்/மோல் ஆகும். இது தொடர்புடைய சேர்மமான காட்மியம் தெலூரைடுக்கான மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளது. ஐதரோபுரோமிக் அமிலம் போன்ற அமிலங்களால் HgTe எளிதில் அரிக்கும். வளர்ச்சி பாதரசம் மற்றும் தெலூரியம் அதிக பாதரச நீராவி அழுத்தத்தின் முன்னிலையில் அதிக அளவிலான வளர்ச்சி ஏற்படுகிறது. HgTe சேர்மத்தை புறவளர்ச்சியாகவும் வளர்க்கலாம். உலோகக்கரிம ஆவி-கட்டப் புறவளர்ச்சி முறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். பாதரச தெலூரைடின் நானோ துகள்கள் காட்மியம் தெலூரைடு நானோதட்டணுக்களிலிருந்து நேர்மின் அயனிப் பரிமாற்றம் மூலம் பெறலாம். மேலும் காண்க பாதரச செலீனைடு மேற்கோள்கள் பாதரச(II) சேர்மங்கள் தெலூரைடுகள்
684190
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2059%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 59 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 59 (National Highway 59 (India))(தே. நெ. 59) என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள கரியார் மற்றும் பிரம்மபூரை இணைக்கும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, தே. நெ-59 பாதை பழைய தேசிய நெடுஞ்சாலை 217இன் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நெடுஞ்சாலை ஒடிசா மாநிலத்தின் மா. நெ. 42 உடன் பாங்கமுண்டா அருகே இணைக்கப்பட்டுள்ளது. வழித்தடம் ஒடிசா மாநிலத்தில் உள்ள கரியார், திட்லாகர், லங்காகர், பாலிகூர்கா, சுராதா, அசிகா, கிஞ்சிலிக்கட் மற்றும் பிரம்மபூர் ஆகிய இடங்களை தே. நெ. 59 இணைக்கிறது. சந்திப்புகள் கரியார் அருகே முனையம் பெல்காவ் அருகே அசிகா அருகே அசிகா அருகே பிரம்மபூர் அருகே முனையம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 59 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684192
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2061%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 61 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 61 (தே. நெ. 61)(National Highway 61 (India)) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் பிவண்டியினைத் தெலங்காணாவின் நிர்மலுடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலையின் பாதை தெலங்காணா மாநிலத்தில் நிர்மல் முதல் ஜக்தியல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை-61 மகாராட்டிர மற்றும் தெலங்காணா மாநிலங்கள் வழியாக 758 கி. மீ. தூரத்தை உள்ளடக்கியது. வழித்தடம் மகாராட்டிரம் பிவண்டி-கல்யாண்-முர்பாத்-கட்கர்-ஆலே-பெலே-அகமதுநகர்-பதார்தி-யேலி-கார்வாண்டி-கெவ்ராய்-பச்சேகான்-மஜால்கான்-பத்ரி-பர்பானி-பஸ்மத்-அர்த்தாபூர்-போகர்-தெலங்காணா எல்லை தெலங்காணா மகாராட்டிர எல்லை-பைன்சா-நிர்மல்-கானாப்பூர்-மல்லபுரம்-ரைகல்-ஜக்தியல். சந்திப்புகள் பிவண்டி அருகே முனையம் தேசிய நெடுஞ்சாலை 60, ஆலே பாட்டா (புனே மாவட்டம்) பெல்கே (புனே மாவட்டம்) நிர்மல் ஜக்டியல் அருகே முனையம் பாசுமத் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 61 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684193
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்
பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Tun Razak LRT Station; மலாய்: Stesen LRT Bandar Tun Razak; சீனம்: 敦拉萨镇) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும். கோலாலம்பூர் மாநகரத்தின் அருகிலுள்ள பண்டார் துன் ரசாக் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் இந்த நிலையம் மூலியா நிலையம் (Mulia Station) என்று அழைக்கப்பட்டது. இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சான் சோவ் லின் நிலையம் தொடங்கி செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் வரையில் 7 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செராஸ் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. பண்டார் துன் ரசாக் பண்டார் துன் ரசாக் (Bandar Tun Razak) என்பது கோலாலம்பூர் மாநகரத்தில், அமைந்து உள்ள புறநகரம். உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அத்துடன் தனித்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகவும் இயங்குகிறது. மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக்கில், கோலாலம்பூர் காற்பந்து விளையாட்டரங்கம் (Kuala Lumpur Football Stadium); ஈருருளி சுற்றரங்கம்; துவாங்கு முகிரிஸ் மருத்துவமனை (Hospital Universiti Kebangsaan Malaysia); கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தின் கிளை அலுவலகம் போன்ற வசதிகள் உள்ளன. வரலாறு அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி என அழைக்கப்பட்டன. இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும். பிரசரானா மலேசியா பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன. எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும். எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது. காட்சியகம் பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் மேலும் காண்க பண்டார் துன் ரசாக் துவாங்கு முகிரிஸ் மருத்துவமனை பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி துன் ரசாக் நெடுஞ்சாலை துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் பண்டார் தாசேக் செலாத்தான் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
684194
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகள் (இந்தியா)
அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகள் இந்தியாவில் மருத்துவ தேவைக்காக அரசு அபின் மற்றும் மார்ஃபீன் போன்ற வலி நீக்கி மருந்துகளை தொழிற்சாலைகள் (GOAF) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த கண்காணிப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் கீழ் இயங்குகிறது. இந்த துறையின் கீழ் காசீப்பூர் நகரம் (உ பி) மற்றும் நீமச் (ம பி) நகரங்களில் அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகள் இயங்குகிறது. தயாரிப்புகள் நிறுவனத்தின் மேற்படி இரண்டு தொழிற்சாலைகள் கசகசா செடிகளிலிருந்து அபின் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரப்போலிகள் எனும் ஆல்கலாய்டுகளில் உள்ள கோடீன் பாஸ்பேட்ஸ், மார்பின் உப்புகள், டியோனைன், மார்பின் ஹைட்ரோகுளோரைடு, தீபைன் போன்ற வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்து, மருத்துவப் பயன்பாட்டிற்கு அபின் மற்றும் உற்பத்தி செய்கிறது. தொழிற்சாலைக்கான கசகசா சாகுபடி தொழிற்சாலைகளுக்கு தேவையான இடுபொருட்களான கசகசா செடிகளை இந்தியாவில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து உரிமம் பெற்ற கசகசா செடி சாகுபடியாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. முழு விளைபொருளும் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. அங்கு கசகசாவை பதப்படுத்தி, அபின் மற்றும் மார்ஃபீன் போன்ற வலி நீக்கி மருந்துகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முன்னணி வகிக்கிறது. . 2017ஆம் ஆண்டில், இந்திய அரசு நாட்டில் கசகசா பயிரிடுதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது. 2 எக்டேர் நிலத்தில் கசகசாவை பயிரிடவும், செறிவூட்டப்பட்ட கசகசா ஸ்ட்ரா (CPS) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரத்தைப் பிரித்தெடுக்க வரையறுக்கப்பட்ட தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.). அபின் & அல்கலாய்டு தொழிற்சாலைகள் அரசு அபின் மற்றும் அல்கலாய்டு தொழிற்சாலை, காசீப்பூர், உத்தரப் பிரதேசம் அரசு அபின் மற்றும் அல்கலாய்டு தொழிற்சாலை, நீமச், மத்தியப் பிரதேசம் மேற்கோள்கள் இந்திய அரசுத்துறை நிறுவனங்கள்
684197
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81
கந்தசாமி பிரபு
கந்தசாமி பிரபு (Kanthasamy Prabu, பிறப்பு: 7 மார்ச் 1985) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு கந்தசாமி பிரபு மட்டக்களப்பு மகாசனக் கல்லூரி, மட்டக்களப்பு மெதடிசுத மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தேசிய கணக்கியல் உயர் டிப்புளோமா பட்டம் பெற்றவர். கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிக் கணக்காளராகப் பணியாற்றியவர். அரசியலில் இவர் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்படுகிறார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்படவில்லை. 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு 14,856 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் சார்பாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு வேட்பாளர் இவர் ஆவார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1985 பிறப்புகள் மட்டக்களப்பு மாவட்ட நபர்கள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள்
684201
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2062%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 62 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 62 (National Highway 62 (India))(தே. நெ. 62) என்பது இந்தியாவில் பஞ்சாபில் உள்ள அபோகர் நகரை இராசத்தானில் உள்ள பிந்த்வாராவுடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 62, இராசத்தானிலிருந்து 7 மாவட்டங்கள் மற்றும் 6 மாவட்ட தலைமையகங்களைக் கடந்து செல்லும் மிக நீளமான நெடுஞ்சாலையாகும். மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684202
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2063%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 63 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 63 (தே. நெ. 63)(National Highway 63 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும். இதன் மொத்த நீளம் 961 கிமீ (597 மைல்) ஆகும். இது மகாராட்டிரம், தெலங்காணா, சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. வழித்தடம் இந்த நெடுஞ்சாலை பார்சியிலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ள குசுலாம்பில் தொடங்கி, மகாராட்டிரா குசுலாம்ப் பார்சி, இராம்லிங்கா, யெத்சி, லாத்தூர், ரெனாப்பூர், அசுடமோத், நாலேகாவ் உத்கிர், டெக்லூர், சிரோஞ்சா, கோபேலா மற்றும் பத்தகூடம் தெலங்காணா-போதன், நிசாமாபாத், ஆர்மூர், மெட்பள்ளி, கொரட்லா, ஜக்டியல், லக்செட்டிபேட்டை, தர்மபுரி, மஞ்செரியல் மற்றும் சென்னூர் சத்தீசுகர், போபால்பட்னம், மேட்டட், பிஜப்பூர், நிமெட், பைரம்கர், வரதுனார், கிடாம், பாக்முண்டி மற்றும் ஜெகதல்பூர் ஒடிசா: கோட்பாத் மற்றும் போரிகும்மா வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 52ஐ யேத்சியில் கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 548பி-ஐ லாத்தூர், ரெனாப்பூரில் கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலை அசுடமோத்தில் தேசிய நெடுஞ்சாலை 361ஐக் கடக்கிறது. இந்த நெடுஞ்சாலை உத்கிரில் தேசிய நெடுஞ்சாலை 50ஐக் கடக்கிறது. இந்த நெடுஞ்சாலை ஆர்மூரில் தேசிய நெடுஞ்சாலை 44ஐக் கடக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 163 போபால்பட்டணத்தில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 563 இந்த நெடுஞ்சாலையை ஜக்தியாலில் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 363 மஞ்சேரியலில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 30 ஜக்தல்பூரில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை 26 இந்த நெடுஞ்சாலையை போரிகும்மாவில் இணைக்கிறது. இது விஜயநகரத்தில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை தெலங்காணா மாநிலத்தின் பெடாபள்ளி மாவட்டம் மற்றும் மஞ்சேரியல் மாவட்டத்தின் எல்லையில் கோதாவரி ஆற்றினையும், மகாராட்டிரா மற்றும் தெலங்காணா எல்லையில் பிரணஹிதா ஆற்றினையும் மற்றும் மகாராட்டிரா, சத்தீசுகர் எல்லையில் இந்திராவதி ஆற்றையும் கடக்கிறது. மகாராட்டிரா மற்றும் தெலங்காணா மாநில எல்லையில் சிரோஞ்சா அருகே பிரணஹிதா ஆற்றின் குறுக்காகவும் மகாராட்டிரா மற்றும் சத்தீசுகர் மாநிலத்தில் போபால்பட்னம் அருகே இந்திராவதி ஆற்றின் குறுக்காகவும் பாலங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. எதிர்காலத்தில் இந்த நெடுஞ்சாலை விசாகப்பட்டினம், கட்டாக் மற்றும் புவனேசுவரம் வழியாக மும்பையை இணைக்கும். படம் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684204
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2064%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 64 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 64 (தே. நெ. 64)(National Highway 64 (India)) என்பது இந்தியாவின் குசராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள மாலியாவையும், குசராத்தில் உள்ள கசிரா துறைமுகத்தையும் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 27 சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது. மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684206
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
சபாசாத் பக்கர்
ஸ்ரீ-சிவன்-பிரபுச்சே-சரித்திரம் (Shri-Shiva-Prabhuche-Charitra) என்பது மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜியைப் பற்றி மராத்தி மொழியில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு ஆகும். இது 1697 ஆம் ஆண்டில் சிவாஜியின் மகன் இராஜாராமின் செஞ்சிக் கோட்டை அரசவையில் பணிபுரிந்த கிருஷ்ணாஜி அனந்த் சபாசாத் என்பவரால் எழுதப்பட்டது. சிவாஜியின் வாழ்க்கையில் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்த உரை விவரிக்கிறது. இதில் சிவாஜி அப்சல் கானைக் கொன்றது, முகலாய அரசவைக்கு அவர் வருகை தந்து தப்பிச் சென்றது, அவரது முடிசூட்டு விழா மற்றும் வெங்கோஜியுடனான சந்திப்பு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. நூல ஆசிரியர் சிவாஜியின் சமகாலத்தவர் என்பதால், இது மன்னரின் வாழ்க்கையைப் பற்றிய மிகவும் நம்பகமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் மராட்டியப் பேரரசு
684207
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2073%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 73 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 73 (தே. நெ. 73)(National Highway 73 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலமான கருநாடகாவில் செல்கிறது. இது கடல் துறைமுக நகரமான மங்களூரில் தொடங்கி துமகுருவில் முடிவடைகிறது. தேசிய நெடுஞ்சாலை என்று பெயரிடப்பட்டாலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சார்மாடி மலைப் பகுதியில் இந்த சாலை குறுகியது. மேலும் இச்சாலை நிலச்சரிவுகள், மரங்கள் விழும் அபாயத்திற்கு உட்பட்டது. இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் 48, 234 மற்றும் 206இன் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் மார்ச் 5, 2010 அன்று வர்த்தமானி அறிவிப்பால் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களைச் சீரமைத்ததைத் தொடர்ந்து இது தேசிய நெடுஞ்சாலை 73ஆக மாற்றப்பட்டது. வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை 73 (தே. நெ-73) மங்களூரு, பந்த்வால் பெள்தங்கடி, உஜிரே, சார்மாடி, கோட்டிகேஹரா, முடிகேர், பேலூர், ஹளேபீடு, ஜவகல், பனவாரா, அராசிகெரே, திப்தூர், கிப்பனவர, நிட்டூர், குப்பி மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் வழியே நிடூரை இணைக்கிறது. சந்திப்புகள் மங்களூரு அருகே முனையம். பன்ட்வால் அருகே முடிகேரே அருகே பெலூர் அருகே பானவாரா அருகே கிப்பனஹள்ளி அருகே துமகுரு அருகே முனையம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் கர்நாடகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் காட் சாலைகள் மேற்கோள்கள் கருநாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684208
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
பௌசகேபஞ்சி பக்கர்
பௌசகேபஞ்சி பக்கர் (Bhausahebanchi Bakhar) என்பது 1761இல் மராட்டியப் பேரரசிற்கும் துரானிப் பேரரசின் அகமது ஷா துரானிக்கும்இடையே நடந்த மூன்றாம் பானிபட் போரைப் விவரிக்கும் நூலாகும். இது மராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் ஆசிரியரைப் பற்றிய தகவல் அறியப்படவில்லை. ஆனால் ஒரு சில வரலாற்றாசிரியர்கள் கிருஷ்ணாஜி சாம்ராவ் என்ற ஒருவரை எழுத்தாளராக அடையாளம் கண்கின்றனர். நூலிலுள்ள குறிப்புகளைக் கொண்டு சாம்ராவ் போரை நேரில் கண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கே. என். சானேயின் கூற்றுப்படி, கதையில் உள்ள சில கதாபாத்திரங்கள் குறித்த கோணமும் சாதகமான கருத்துக்களும் சாம்ராவ் சிந்தியா அதிகாரியாக இருப்பதைக் குறிக்கிறது. மேற்கோள்கள் மராட்டியப் பேரரசு பானிபட் போர்கள்
684212
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
குன்பி
குன்பி (Kunbi) என்பது மேற்கு இந்தியாவில் பாரம்பரிய விவசாயிகளின் பல சாதிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல். விதர்பாவின் தோனோஜே, கடோல், மசாரம், இந்த்ரே, ஜாதவ், ஜாரே, கைரே, லேவா (லேவா பாட்டீல்), லோனாரே மற்றும் திரோல் சமூகங்களும் இதில் அடங்கும். இந்த சமூகங்கள் பெரும்பாலும் மகாராட்டிர மாநிலத்தில் காணப்படுகின்றன. ஆனால் மத்தியப் பிரதேசம், குசராத்து (இப்போது பட்டிதர் என ஆழைக்கப்படுகின்றனர்) கருநாடகம், கேரளம் மற்றும் கோவா என்று அழைக்கப்படுகின்றன) போன்ற மாநிலங்களிலும் உள்ளனர். குன்பிகள் மகாராட்டிராவில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.} பின்னணி சிவாஜியின் கீழ் மராட்டியப் பேரரசின் படைகளில் பணியாற்றிய பெரும்பாலான மாவலாக்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மராட்டியப் பேரரசின் சிந்தியா மற்றும் கெய்க்வாட் வம்சாவளியினர் முதலில் குன்பி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பதினான்காம் நூற்றாண்டிலும் பின்னர் பல்வேறு ஆட்சியாளர்களின் படைகளில் இராணுவ வீரர்களாக வேலை செய்த பல குன்பிகள் சமசுகிருதமயமாக்கலுக்கு உட்பட்டு தங்களை மராத்தியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். காலனித்துவத்தின் விளைவுகளால் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மராத்தியர்களுக்கும் குன்பிகளுக்கும் இடையிலான எல்லை தெளிவற்றதாகிவிட்டது. மேலும் இரு குழுக்களும் மராத்தா-குன்பி என்ற ஒரு தொகுதியை உருவாக்கின. கைர்லாஞ்சி படுகொலைகளின் போது குன்பி மற்றும் தலித் சமூகங்களுக்கு இடையே சாதி அடிப்படையில் பதட்டங்கள் காணப்பட்டன. மேலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிற சாதிகளுக்கிடையேயான பிரச்சினைகளில், அரசியல்வாதிகள், பெரும்பாலும் சம்பல் குன்பி-மராட்டிய சாதி பகுதியில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து தேர்தலுக்கு போட்டியிட அனுமதிக்கும் வகையில் சாதி சான்றிதழ்களை மோசடி செய்வதும் இதில் அடங்கும். ஏப்ரல் 2005 இல், இந்திய உச்ச நீதிமன்றம் மராத்தியர்கள் குன்பிகளின் துணை சாதி அல்ல என்று தீர்ப்பளித்தது. சமூகம் மகாராட்டிராவின் குன்பி சமூகம் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் குர்மி மக்களுடன் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. இருவரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இரு சமூகங்களும் விவசாயத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. மராத்தியில் “குன்பி” என்றால் “விவசாயி” என்று பொருள். 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவர்களை ஒத்ததாக அங்கீகரித்தது. மேலும், மகாராட்டிராவின் ‘குர்மி’ சாதி/சமூகம் மகாராட்டிராவின் குன்பிகளைப் போன்றது என்றும் சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கியுள்ளது என்றும் தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தியாவில் சாதிகள் CS1 maint: multiple names: authors list
684215
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
குடும்பி
குடும்பி (Kudumbi) குனுபிகள், குரும்பி அல்லது குன்பி என்றும் குறிப்பிடப்படும் இவர்கள் பாரம்பரியமாக இந்தியாவின் கேரளாவில் வசிக்கும் கொங்கணி பேசும் விவசாய சமூகமாகும். இவை தமிழ்நாட்டின் குடும்பன்/குடும்பியர் (தேவேந்திரகுல வேளாளர்) இனத்தின் ஒரு கிளை ஆகும். வரலாறு கோவா மரபு கோவாவின் வரலாற்றாசிரியர் அனந்த் ராமகிருஷ்ண தூமே, குன்பி சாதி பண்டைய முண்டாரி பழங்குடியினரின் நவீன சந்ததியினர் என விவரிக்கிறார். அமேலும் அவர் கொங்கணி மொழியில் முண்டாரி தோற்றம் கொண்ட பல சொற்களையும் குறிப்பிடுகிறார். பண்டைய பழங்குடியினரால் வணங்கப்படும் தெய்வங்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், விவசாய முறைகள் போன்றவற்றையும் விரிவாக விளக்குகிறார். இந்து மதத்தை ஒடுக்க முயன்ற கோவா சமயக் குற்றவிசாரணையின் போது குடும்பிகள் போர்த்துகேயர்களால் சமயக் குற்ற விசாரணை நடத்தி கடுமையாக தண்டிக்கப்பட்டனர். சிலர் மரண தண்டனைக்கும் ஆளானர்கள் இவர்கள் கோவாவிலிருந்து குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தங்கள் மத மற்றும் கலாச்சார அடையாளத்தை பாதுகாக்க விரும்பிய குடும்பிகள், கவுட சாரஸ்வத் பிராமணர், தெய்வத்ன பிராமணர் மற்றும் வைசிய வாணிகளுடன் சேர்ந்து, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து முதன்மையாக கடல் பயணங்கள் மூலம் குடிபெயர்ந்தனர்.   கோவாவிலிருந்து தப்பியோடிய சில குழுக்கள் கருநாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான தெற்கு கன்னட மாவட்டம், வடகன்னட மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டம் போன்ற இடங்களில் குடியேறினர். ஒருசில குழுக்கள் கேரளாவிலும் பயணித்தன.   சமூகவியலாளர் ஒய். ஆர். ராவ் (2003) கருநாடகாவின் ஒரு பகுதியில் வசித்து வந்த கோவாவைச் சேர்ந்த குடும்பிகளிடையே களப்பணிகளை மேற்கொண்டார். அவர்களின் உணவுப் பழக்கம், தடைகள், மொழி, பொருளாதாரம், அரசியல் அமைப்பு, உறவு மற்றும் திருமணம் தொடர்பான பல்வேறு நடத்தைகளை அவர் ஆய்வு செய்தார். இந்து மதமாற்றம், சமசுகிருதமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவை நடத்தை மாற்றங்களை பாதிக்கக்கூடிய மூன்று காரணிகளாக அவர் அடையாளம் காட்டுகிறார். தற்போதைய நிலை கேரளாவில் பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய நபரும் முன்னாள் அமைச்சருமான கே. ஆர். கௌரி அம்மா தனது சுயசரிதையில் குடும்ப சமூகத்தின் பின்தங்கிய தன்மையை விவரித்துள்ளார் கொச்சியைச் சுற்றியுள்ள தீவுகளில் உள்ள முக்கிய விவசாயத் தொழிலாளர்கள் புலயர் மற்றும் குடும்பி சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இடப்பெயர் ஆய்வாளர் வி. வி. கே. வாலத் கூறுகிறார். போர்த்துக்கேய காலத்தில் புலயர் மற்றும் முக்குவார் சாதிகளைச் சேர்ந்த பலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய போதிலும், குடும்பிகள் தங்கள் பாரம்பரிய மத நம்பிக்கைகளைத் தக்க வைத்துக் கொண்டனர் என்று அவர் மேலும் கூறுகிறார். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்குள் இந்த சமூகம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பி கோயில்கள் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பல தேவி கோயில்களில் குடும்பிகளால் கொண்டாடப்படுகிறது. மேற்கோள்கள் நூல் ஆதாரங்கள் The Kurmis-Kunbis of India by Pratap Singh Velip Kankar. Published by Pritam Publishers PajiFord, Margoa, Goa Year −2006. 1956 An Introduction to the Study of Indian History (Popular Book Depot, Bombay) – D.D. Kosambi. Kudumbikalude Charithravum-Samskaravum – written by Dr. Vini M. Published by Sahithya Pravarthaka Cooperative Society, Kottayam, Kerala இந்திய இனக்குழுக்கள் மலையாள நபர்கள் கேரள சமூகக் குழுக்கள் கோவாவின் வரலாறு
684216
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF
வைசிய வாணி
வைசிய வாணி (Vaishya Vani) என்பது இந்து சமயத்தின் வர்ணம் ஒன்றான வைசியர்களின் துணை சாதி ஆகும். குசராத்து மாநிலம் மற்றும் தாமன் & தியூ பிரதேசத்தில், இவர்கள் ‘வைணவ வாணிக்’ என்றும் அழைக்கப்படுகின்றன. தெற்கு கன்னட மாவட்டத்தின் கார்வார் மற்றும் வடக்கு கன்னட மாவட்டத்தின் அன்கோலா போன்ற பகுதிகளில் இவர்கள் ‘கன்னட வைசியர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் கன்னடம் என்பது பகுதியைக் குறிக்கிறது. கன்னட மொழி அல்ல. ஏனெனில் இவர்களின் தாய்மொழி கொங்கணி. குசராத்து, கருநாடகம் மற்றும் மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் தங்களுக்குள் கொங்கணியைப் பேசிக் கொள்கின்றனர். வரலாறு கோவாவின் கதம்பர்களின் காலத்தில், இவர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பனாஜிகர்கள் (வணிகர்கள்) என்று அழைக்கப்பட்டனர். சவோய் வெரெம், நார்வே, காண்டேபர், கவாலே, பந்தோரா மற்றும் தாலிகிராம் ஆகிய இடங்களிலிருந்து கிபி 1358 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்புத் தகடுகளில் பனாஜிகர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இப்போது இவர்கள் ‘வைசிய வாணி’, ‘இலிங்காயத் வாணி’, ‘இந்து வாணி’ அல்லது ‘வாணி’ போன்ற பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றனர். சமூக நிலை மகாராட்டிராவில் 2008 ஆம் ஆண்டில் வைசிய வாணிகளுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. பின்னர் அது 2011 இல் நீக்கப்பட்டது. தற்போது, துணை சாதியைச் சேர்ந்த சில பிரிவுகள் வரலாற்றுக் கருத்துக்களின் அடிப்படையில் அந்தத் தகுதியைப் பெறலாம். இருப்பினும், மகாராட்டிர மாநிலத்தின் மத்திய பட்டியலில் இந்த துணை சாதி பட்டியலிடப்படவில்லை. இதனையும் காண்க வைசியர் செட்டியார் மேற்கோள்கள் இந்தியாவில் சாதிகள் கொங்கணி மொழி
684219
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கோவாவின் கதம்பர்கள்
கோவாவின் கதம்பர்கள் (Kadambas of Goa) இந்திய துணைக் கண்டத்தில் ஒரு வம்சமாக இருந்தனர். இவர்கள் மராத்தியர்களின் கதம் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிபி 10ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை கோவாவை ஆட்சி செய்தார்கள். இவர்கள் சிலகாரர்களின் பகுதிகளைக் கைப்பற்றி முதலில் சந்தோரிலிருந்து ஆட்சி செய்தனர். பின்னர் கோபக்கபட்டனத்தை தங்கள் தலைநகராக மாற்றினர். தோற்றம் கருநாடகாவின் சிமோகாவில் கண்டுபிடிக்கப்பட்ட தலகுந்தா கல்வெட்டின் படி, கதம்பர் வம்சத்தின் மயூரசர்மாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது. தனி வம்சத்தை நிறுவுதல் மேலைச் சாளுக்கியர்களின் நிலப்பிரபுவான, கதம்ப சாஸ்ததேவன் கோவாவின் மகாமண்டலேசுவரராக சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலப்பன் என்பவரால் நியமிக்கப்பட்டார். சவாய் வரே கல்வெட்டின் படி, கதம்பர்கள் சாளுக்கியர்களின் கூட்டாளிகளாக இருந்தனர் எனத் தெரிகிறகிறது. இவர்கள் இராட்டிரகூடர்களை தோற்கடிக்க சாளுக்கியர்களுகு உதவினர். சாஸ்ததேவன் பின்னர் சந்திரபூர் நகரத்தை சிலகாரர்களிடமிருந்து கைப்பற்றி கிபி 960 இல் கோவாவில் கதம்ப வம்சத்தை நிறுவினார். கோபக்கபட்டனம் சாஸ்ததேவன், கோவா, கோபகப்பட்டனம் துறைமுகம் மற்றும் கபர்திகாட்விப்பா ஆகியவற்றைக் கைப்பற்றி, தெற்கு கொங்கணின் பெரும்பகுதியை தனது இராச்சியத்துடன் இணைத்து, கோபகப்பட்டினத்தை தனது துணை தலைநகரமாக மாற்றினார். அடுத்த மன்னர் முதலாம் ஜெயகேசி கோவா இராச்சியத்தை மேலும் விரிவுபடுத்தினார். துவயாஷ்ராயா என்ற சமண நூல் இவனது தலைநகரத்தின் விரிவாக்கம் பற்றியும், கோபக்கப்பட்டினம் துறைமுகம், சான்சிபார், வங்காளம்,குசராத்து மற்றும் இலங்கை ஆகியவற்றுடன் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தது என்றும் குறிப்பிடுகிறது. கோபாகப்பட்டனம் ஒரு வணிக நகரமாக இருந்தது. மேலும், இது பழைய கோவாவுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக மையமாக இருந்தது. 1320களில் இது கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் இந்த நகரைத் தாக்கி கொள்ளையடித்தான். இதனால் கதம்பர்கள் சந்தோருக்குத் தப்பித்தனர். ஆனால் முகமது பின் துக்ளக் சந்தோரை வென்றபோது கோபக்கபட்டனத்திற்குத் திரும்பினர். நிர்வாகம் கதம்பர்களின் ஆட்சியின் போது, ‘கோபுரி’ என்கிற கோவா பெயரும் புகழும் உச்சத்தை எட்டியது. கோவாவின் மதம், கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் கலைகள் செழித்து வளர்ந்தன. மேலும் வம்சம் பல சிவன் கோயில்களைக் கட்டியது. இவர்கள் ‘கொங்கனாதிபதி’, ‘சப்தகோடீச லட்பா வரவீர’, ‘கோபக்கபுரா வரதீஷ்வா’, ‘கொங்கன்மகாச்சாரவர்த்தி’ மற்றும் ‘பஞ்சமகாசப்தா’ போன்ற பட்டங்களை வைத்துக்கொண்டனர். இவர்கள் சௌராட்டிர அரச குடும்பத்திலும் உள்ளூர் தலைவர்களின் குடும்பத்திலும் கூட திருமணம் செய்து கொண்டனர். மன்னர்கள் பண்டைய வேத சமயத்தை ஆதரித்தனர். அசுவமேத யாகம் போன்ற வேள்விகளைசெய்தனர். இவர்கள் இந்து சமயத்தை பிரபலப்படுத்தினர். மேலும், சமணத்தையும் ஆதரித்தனர். கதர்பர்கள் சமசுகிருதம் மற்றும் கன்னடத்தில் நிர்வாகம் செய்தனர். இவர்கள் கன்னட மொழியை கோவாவுக்கு அறிமுகப்படுத்தினர். அங்கு அது உள்ளூர் மொழியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நாகரி, கதம்பம், அலேகன்னடம் மற்றும் கோய்கன்னடி எழுத்துக்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. திரிபுவனமல்லன் என்ற அரசன் கோபக்காவில் ‘பிரம்மபுரி’ என்ற நகரத்தை நிறுவினார் என்பது மற்றொரு கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. வேதம், சோதிடம், மெய்யியல், மருத்துவம் மற்றும் பிற பாடங்கள் பிரம்மபுரியில் பிராமணர்களால் கற்பிக்கப்பட்டது. இவ்வகையானக் கல்விக்கூடங்கள் கோவா, சவோய் வெரெம், கௌலி மௌலா போன்ற பிற இடங்களிலும் காணப்பட்டன. கதம்பர்கள், கிபி 1345 வரை 400 ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவை ஆட்சி செய்தார். அரசின் சின்னம் கோவா அரசுக்குச் சொந்தமான பேருந்து சேவை கதம்ப வம்சத்தின் பெயரால் ‘கதம்ப போக்குவரத்துக் கழகம்’ என்று அழைக்கப்படுகிறது. கதம்பர்களின் அரச சின்னமான சிங்க உருவம் பேருந்துகளில் ஒரு சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1980 ஆம் ஆண்டில் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இச்சின்னம் பயன்படுத்தப்படுகிறது. 2005 மே 31 அன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணப் முகர்ஜி கார்வாரில் ‘ஐஎன்எஸ் கதம்பா’ என்ற கடற்படைத் தளத்தைத் தொடங்கி வைத்தார். இதனையும் காண்க கோவாவின் வரலாறு கதம்பர் வம்சம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Coins of the Kadambas of Goa இந்திய அரச மரபுகள் கோவாவின் வரலாறு
684222
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20135%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 135 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 135 (National Highway 135 (India)) இந்தியா ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 35-இன் ஒரு கிளைச் சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 135-ன் (NH135) மொத்த நீளம் 130 கி. மீ. (81 மைல்). இந்த நெடுஞ்சாலை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. பாதை. தே. நெ. 135 உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரில் தொடங்கி மத்தியப் பிரதேசத்தின் மங்கவானில் முடிவடைகிறது. சந்திப்புகள் மிர்சாபூரில் தே. நெ. 35 உடன் சந்திப்பு மங்கவானில் தே. நெ. 30 உடன் சந்திப்பு மேலும் காண்க நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684224
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20134%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 134 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 134, (National Highway 134 (India)) பொதுவாக தே. நெ. 134 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்தத் தேசிய நெடுஞ்சாலை 34இன் துணைச் சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை-134 உத்தரகண்ட் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது. வழித்தடம் தாராசு-குத்னூர்-யமுனோத்ரி சந்திப்புகள் தாராசு அருகே முனையம் சில்கியாரா பெண்ட்-பார்கோட் சுரங்கப்பாதை உத்தரகண்ட் மாநிலத்தில் சில்கியாரா பெண்ட்-பார்கோட் சுரங்கப்பாதை அமைப்பதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பிப்ரவரி 2018இல் ஒப்புதல் அளித்தது. இந்தச் சுரங்கப்பாதை 4.531 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரு வழித்தடமாகும். இரு திசைகள் மற்றும் அணுகுமுறைகள் உட்பட அவசரக்காலப் பாதைகளுடன் இச்சாலை இருக்கும். இத்திட்டத்தின் மொத்தத் திட்டச் செலவு ரூ. 1383.78 கோடி ஆகும். இதில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு ரூ. 1119 கோடி செலவாகும். இந்தச் சுரங்கப்பாதை தாரசுவிலிருந்து யமுனோத்ரி வரையிலான பயணத் தூரத்தைச் சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 மைல்) குறைக்கும் மற்றும் பயண நேரத்தைச் சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும். மேலும் அனைத்து வானிலை நிலவும் நேரத்திலும் பயணம் செல்ல ஏற்றதாக அமையும். நவம்பர் 12, 2023 அன்று, கட்டுமானத்திலிருந்தபோது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து. இதில் 41 சுரங்கப்பாதை தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, 16 நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 28 அன்று வெற்றிகரமாக மீட்புப்பணிகள் முடிவடைந்தன. மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 134 சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைகளின் எண் அமைப்புகளை சீரமைத்தல்சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684225
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20133%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 133 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 133, (National Highway 133 (India)) பொதுவாக தே. நெ. 133 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 33இன் ஒரு துணைச் சாலையாகும். தே. நெ. 133 இந்தியாவின் சார்க்கண்டு மற்றும் பீகார் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை 134 கிமீ (83 மைல்) நீளம் கொண்டது. இந்த நெடுஞ்சாலை சார்க்கண்டில் உள்ள கோட்டாவில் தொடங்கி பீகாரில் உள்ள பிர்பெய்டியில் முடிவடைகிறது. சந்திப்புகள் பிர்பெய்டி அருகே முனையம் கோட்டா அருகே தே. நெ. 333ஏ. சோபா மோர் அருகே முனையம் படங்கள் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 133 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684227
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20131%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 131 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 131 (National Highway 131 (India)) என்பது முன்னர் தேசிய நெடுஞ்சாலை 106 என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் செல்லும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது சுபால் மாவட்டத்தில் தொடங்கி, பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பீபூரில் முடிவடைகிறது. இது மாதேபுரா மாவட்டத்தின் முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இது பிர்பூரில் தொடங்கி, சிம்ராகி வழியாகச் சென்று, தேசிய நெடுஞ்சாலை 57, சிங்கேஷ்வர், மாதேபுரா சந்திப்பைத் தேசிய நெடுஞ்சாலை 231 (முன்பு அறியப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 107) ரேஷ்னா, குவால்பாரா, உடாகிசுன்கஞ்ச் ஆகியவற்றுடன் இணைக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை 31 ஐ இணைக்கிறது. வழித்தடம் பிபூர், புரைனி, உடாகிஷங்கஞ்ச், ரேஷ்னா மாதேபுரா, சிங்கேசுவர் சதான், பிப்ரா, சிம்ராஹி பஜார், பீம்நகர், பீர்பூர்பிர்பூர் சந்திப்பு பிபூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31 முனையம் மாதேபுரா அருகே சிம்ராஹி பஜார் அருகே பிர்பூரில் முடிவு செய்யுங்கள் மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை 31 (இந்தியா) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684228
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20130%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 130 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 130 (National Highway 130 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அம்பிகாப்பூர்-கட்கோரா-பிலாசுபூர்-ராய்ப்பூரை இணைக்கிறது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த வழித்தடத்தைப் போக்குவரத்து வசதியாக மேம்படுத்துகிறது. என். எச். ஏ. ஐ. யின் மேம்பாட்டு முன்மொழிவு அம்பிகாபூர்-கட்கோரா (2-வழி) கட்கோரா-பிலாஸ்பூர் (4-வழி) பிலாசுபூர்-சிம்கா (4-வழி) சிம்கா-ராய்ப்பூர் (6-வழி) அம்பிகாபூர் => லகான்பூர் => மகேஷ்பூர் => உதய்பூர் => கட்கோரா (கோர்பா மாவட்டம்) சந்திப்புகள் சிம்கா அருகே பிலாஸ்பூர் அருகே பிலாசுப்பூர் அருகே காட்கோரா அருகே என். எச். 149பி அம்பிகாபூர் அருகே மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684233
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
தொடர் நிகழ்காலம்
தொடர் நிகழ்காலம் (present continuous) என்பது நவீன ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வினை வடிவமாகும், இது நிகழ்காலத்தில் தொடர்ச்சியாக நடந்துகொண்டேயிருக்கும் செயல்களைக் குறிப்பதாகும். நாம் பேசும் சமயத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் செயல்களையோ சிறிது காலம் மட்டுமே நீடிக்கும் செயல்களையோ சிறிதுகாலம் மட்டும் நீடிக்கும் அடிக்கடி நடக்கும் செயல்களையோ படிப்படியாக மாற்றமடையும் நிகழ்வுகளைக் குறிக்க இந்தக் காலம் பயன்படுகிறது. இது பேசப்படும் ஆங்கிலத்தில் சுமார் 5% வினைச்சொற்களைக் கொண்டுள்ளது. உருவாக்கம் தொடர் நிகழ்காலமானது பரவலாக வினைச் சொற்களின் அடிப்படை வடிவத்துடன் -ing எனும் பின்னொட்டினைச் சேர்ப்பதன் மூலம் உருவாகிறது எடுத்துக்காட்டாக, வினைச்சொல்லுக்கு -ing எனும் பின்னொட்டு சேர்ப்பதன் மூலமும், தற்போதைய நிகழ்கால வினைச் சொற்களுடன் be வினை வடிவங்களான (am, are, is, was, were) ஐ அதற்கு முன்னால் சேர்ப்பதன் மூலமும் வினைச்சொல் தொடர் நிகழ்காலத்தினைப் பயன்படுத்த இயலும். நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன்.(I am working.) நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்(You are working). . அவள் வேலை செய்து கொண்டிருக்கிறாள் (She is working). நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம் (We are working). அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (They are working). பயன்பாடுகள் பெரும்பான்மையாக நாம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் நிகழும் செயல்களைக் குறிப்பிட தொடர் நிகழ்காலம் பயன்படுகிறது. அந்தப் பையன் சிரித்துக் கொண்டிருக்கிறான். நிகழ்காலமானது பழக்கவழக்கங்கள், மாறாத சூழ்நிலைகள், பொதுவான உண்மைகள் மற்றும் நிலையான ஏற்பாடுகள் ஆகியவற்றின்போது பயனபடுகிறது. ஆனால் தொடர் நிகழ்காலமானது, நாம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் நிகழாமல் இருந்தாலும் ஒரு தற்காலிகச் செயல்பாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. They are working in Dubai (அவர்கள் துபாயில் வேலை பார்க்கிறார்கள்) I am writing a book (நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்). I am living in Scotland until the end of the year. (நான் இந்த ஆண்டு இறுதி வரை ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறேன்) மேற்கானும் எடுத்துக்காட்டுகள் மூலம் நிலையான செயல்பாடுகள் நிகழ்காலத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. ஏனெனில் மேற்கானும் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் தற்காலிகமான செயல்களே. மேலும் காண்க நிகழ்காலம் கடந்தகாலம் எதிர்காலம் (இலக்கணம்) மேற்கோள்கள் ஆங்கில இலக்கணம் காலங்கள் (இலக்கணம்)
684235
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சுங்கை பீசி நிலையம்
சுங்கை பீசி நிலையம் (ஆங்கிலம்: Sungai Besi Station; மலாய்: Stesen Sungai Besi; சீனம்: 新街場) என்பது மலேசியா, கோலாலம்பூர், சுங்கை பீசி பகுதியில் அமைந்துள்ள எல்ஆர்டி, எம்ஆர்டி மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு செரி பெட்டாலிங் வழித்தடம் (LRT Sri Petaling Line), புத்ராஜெயா வழித்தடம் (MRT Putrajaya Line) ஆகிய 2 வழித்தடங்கள் சேவை செய்கின்றன. சுங்கை பீசி நிலையத்தைப் பயன்படுத்தும் இரண்டு தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பு முறைமை பயன்பாட்டில் உள்ளது. அமைவு சுங்கை பீசி விரைவுச் சாலை மற்றும் சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS Highway) ஆகிய இரு விரைவுச்சாலைகள், சுங்கை பீசி வட்டாரத்தில் மிகவும் பரபரப்பான சாலைகளாகும். அவற்றின் சந்திப்புகளில் தான் இந்த நிலையமும் அமைந்துள்ளது. சுங்கை பீசி நகரின் சுங்கை பீசி சாலையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. பாங்சபுரி பெர்மாய் குடியிருப்புகள், பிபிஆர் ராயா பெர்மாய் குடியிருப்புகளில் இருந்து இணைப்புப் பாலம் வழியாக இந்த நிலையத்தை அணுகலாம். வசதிகள் இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களில் உள்ள நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன. புத்ராஜெயா வழித்தடம் புத்ராஜெயா வழித்தடம் அல்லது புத்ராஜெயா கொமுட்டர் வழித்தடம் என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும். இந்த வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது. குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரை நீண்டு செல்லும் இந்த வழித்தடமானது; செரி டாமன்சாரா, கெப்போங், பத்து, ஈப்போ சாலை, செந்தூல், கம்போங் பாரு, துன் ரசாக் சாலை, கோலாலம்பூர் கோபுரம், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், கூச்சாய் லாமா, செரி கெம்பாங்கான் மற்றும் சைபர்ஜெயா போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகள் வழியாகச் செல்கிறது. குவாசா டாமன்சாரா குவாசா டாமன்சாரா மற்றும் கம்போங் பத்து ஆகிய புறநகர்ப் பகுதிகளின் இடையிலான பாதையின் முதல் கட்டச் செயல்பாடுகள் 16 சூன் 2022-இல் தொடங்கின. 2023 மார்ச் 16-ஆம் தேதி நிலத்தடி சுரங்கப்பாதை உட்பட மீதமுள்ள பாதையை உள்ளடக்கிய 2-ஆம் கட்டம் திறக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில், புத்ராஜெயா வழித்தடத்தின் எண் 12 என மஞ்சள் நிறத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) சொந்தமானது. காட்சியகம் சுங்கை பீசி நிலையக் காட்சிப் படங்கள் (2023): மேலும் காண்க சுங்கை பீசி சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம் மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் புக்கிட் சாலில் நெடுஞ்சாலை பண்டார் தாசேக் செலாத்தான் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Sungai Besi LRT Station - mrt.com.my மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
684237
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2027%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 27 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 27 (தே. நெ. 27)(National Highway 27 (India)) இந்தியாவின் கிழக்கு-மேற்கு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது குசராத்தின் போர்பந்தரில் தொடங்கி அசாமின் சில்சாரில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலை குசராத்து, இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை-27 சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை (தே. நெ. 44 க்கு அடுத்தபடியாக) ஆகும். வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை 27 இந்தியாவின் ஏழு மாநிலங்களைக் கடந்து கிழக்கு-மேற்கு திசையில் செல்கிறது. குசராத்து போர்பந்தர், குட்டியானா, உப்லேட்டா, தோராஜி, ஜெட்பூர், கோண்டல், ராஜ்கோட், பாமன்போர், மோர்வி, சமகியாலி, ராதன்பூர், தாரா, தீசா, பாலன்பூர் இராசத்தான் அபு ரோடு, பிந்த்வாரா, உதய்பூர், மங்கள்வார், சித்தௌர்கர், கோட்டா, பாரன்பரண். மத்தியப் பிரதேசம் சிவபுரி, கரேரா உத்தரப்பிரதேசம் ஜான்சி, ஒராய் கான்பூர், உன்னாவ், லக்னோ, பாராபங்கி, அயோத்தி, பஸ்தி, கலிலாபாத், கோரக்பூர், குஷிநகர் பீகார் கோபால்கஞ்ச், மோதிஹரி, சாகியா, முசாபர்பூர், தர்பங்கா, ஜான்ஜர்பூர், சுபால், போர்ப்சுகஞ்ச், அராரியா, பூர்ணியா மற்றும் கிஷன்கஞ்ச். மேற்கு வங்காளம் தல்கோலா, இஸ்லாம்பூர், பாக்தோக்ரா, சிலிகுரி, ஜல்பைகுரி, மைனாகுரி, துப்குரி, ஃபலாகாட்டா, கூச்ச்பெஹார், சோனாப்பூர், அலிபுர்துவார், காமக்யகுரி அசாம் பொங்கைகான், பிஜ்னி, ஹவ்லி, பட்டாச்சர்குச்சி, நல்பாரி, ரங்கியா, குவஹாத்தி, நாகான், ஹோஜாய், லங்கா, லும்டிங், ஹாஃப்லாங், சில்சார் சந்திப்புகளின் பட்டியல் குசராத்து போர்பந்தர் அருகே முனையம் தோராஜி அருகே ஜெத்புற் அருகே ஜெட்பூர் அருகே பாமன்போர் அருகே 41 சமாகியாலி அருகே இராதன்பூர் அருகே தீசா அருகே இராசத்தான் சுவரூப்கஞ்ச் அருகே பிந்த்வாரா குறுக்கிணைப்பு உதய்பூர் அருகே உதய்பூர் அருகே பதேவர் அருகே (162 விரிவாக்கம்) சித்தோர்கார் அருகே குறுக்கே சித்தோர்கார் அருகே குறுக்கே லாட்புரா அருகே கோட்டா அருகே பரன் அருகே குறுக்கே மத்தியப் பிரதேசம் சிவபுரி அருகே உத்தரப் பிரதேசம் ஜான்சி அருகே சிர்கான் அருகே போக்னிபூர் அருகே பாரா கிராமத்திற்கு அருகே குறுக்கே கான்பூர் அருகே உன்னாவ் அருகே லக்னோவில் பாராபங்கி அருகே அயோத்தி அருகே அயோத்தி அருகே அயோத்தி அருகே அயோத்தி அருகே அயோத்தி அருகே அயோத்தி அருகே பசுதி அருகே கோரக்பூர் அருகே கோரக்பூர் அருகே குசிநகர் அருகே பீகார் கோபால்கஞ்ச் அருகே பரௌலி அருகே முகமதுபூர் அருகே பிப்ரா கோத்தி அருகே மெஷி அருகே முசாபர்பூர் அருகே முசாபர்பூர் அருகே மெஷி அருகே தர்பங்கா அருகே ஜான்ஜர்பூர் அருகே நராகியா அருகே பாப்தியாகி அருகே சிம்ராகி அருகே போர்ப்சுகஞ்ச் அருகே அராரியா அருகே பூர்ணியா அருகே பூர்ணா அருகே மேற்கு வங்காளம் தல்கோலா அருகே கோஷ்புகூர் அருகே பாக்டோக்ரா அருகே சிலிகுரி அருகே மைனகுரி அருகே துப்குரி அருகே பலாகாட்டா அருகே சால்சபாரி அருகே அசாம் ஸ்ரீராம்பூர் அருகே கருபாசா அருகே சியாம்தாய் அருகே பிஜ்னி அருகே ஹவ்லி அருகே பாத்சாலா அருகே பாராமா ரங்கியா பைஹாட்டா அருகே ஜலுக்பாரி அருகே குவகாத்தி அருகே ஜோராபட் அருகே நாகோலா அருகே நெல்லிக்கு அருகில் நகோன் அருகே தபகா அருகே லும்டிங் அருகே ஜதிங்கா அருகே, ஹாபலாங் சில்சார் அருகே முனையம் சுங்கச்சாவடிகள் சுங்கச்சாவடிகளின் பட்டியல் (மாநில வாரியாக சில்சாரில் இருந்து போர்பந்தர் வரை (கிழக்கு முதல் மேற்கு வரை) அசாம் மிகிரதி ஹாவ்கான் ரஹா. நஸ்ரகாட் மதன்பூர் பிஜ்னி (தஹலாபரா) பட்கான் ஸ்ரீராம்பூர் மேற்கு வங்காளம் மேற்கு மடாதி சுர்ஜாபூர் காமக்யகுரி (குவபாரி) பீகார் பார்ஸோனி (புர்னியா) அராரியா கோசி மஹாசேது ராஜே மைதி உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் உத்வாரியா மலேரா குஜராத் ஊடாடும் வரைபடம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 27 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684238
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87
தீப்தி வாசலகே
தீப்தி வாசலகே (Deepthi Wasalage) ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஆவார். வேதியியல் ஆசிரியரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தளை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னணி பேராதனை பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பல பாடசாலைகளில் உயர்தர வகுப்பு வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள் 1968 பிறப்புகள்
684241
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2026%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 26 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 26 (முன்னர் தேசிய நெடுஞ்சாலை 43)(National Highway 26 (India)) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது ஒடிசா மாநிலத்தின் பர்கர் நகரை இணைக்கிறது. இது ஒடிசா வழியாக ஆந்திராவின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள இராஜபுலோவா வரை செல்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை 5 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 6ஐ இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 26 கிழக்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்கிறது. வழித்தடம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 90.33 கி.மீ. ஆகும். முனையம் வடக்கு முனையமான போரிகும்மா, தேசிய நெடுஞ்சாலை 26 முதல் பர்கர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 63 வரை ஜெகதல்பூர் நோக்கிச் செல்லும் 2 நெடுஞ்சாலைகளின் சந்திப்பாகும். தெற்கு முனையில், இராஜபுலோவா, கொல்கத்தா சென்னை இடையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 16இல் உள்ளது. மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கோள்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684244
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF
ஹன்சக விஜேமுனி
ஹன்சகா விஜேமுனி ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மருத்துவரான இவர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் கண்டி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆவார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள் 1971 பிறப்புகள்
684245
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.
பாலிசேனா கல் சவப்பெட்டி.
பாலிசேனா கல் சவப்பெட்டி, கிமு 520-500 காலப் பகுதியைச் சேர்ந்த பண்டைய கிரேக்க இளவரசியான பாலிசேனாவின் பளிங்குக் கல் சவப்பெட்டி ஆகும்.தற்கால துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கனக்கலே மாகாணத்தின் கிரானிகஸ் நதி பள்ளத்தாக்கில் இச்செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்ட இந்த பளிங்குக் கல் சவப்பெட்டியை, அகழாய்வின் போது 1994ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.. இது பண்டைய தசிலஸ் நகரத்திற்கும், திராய் நகரத்திற்கு இடைப்பகுதியில் இக்கல் சவப்பெட்டி கண்டறியப்பட்டது. இந்த பளிங்குக் கல் சவப்பெட்டியின் முப்புறங்களில் மரணத்தின் இறுதிச் சடங்கை செய்வதற்கான செதுக்கு வேலை சிற்பங்கள் கொண்டுள்ளது. மேலும் கல் சவப்பெட்டியின் பின்புறத்தில் திராய் மன்னர் பிரையமின் மகள் இளவரசி பாலிசேனாவின் சிற்பம் என்று கருதப்படுகிறது.மன்னர் அக்கீலியசின் கல்லறைக்கு முன்னால் அவரது மகன் நியோப்டோலெமோஸ் இந்த கல் சவப்பெட்டிக்கான இறுதிச் சடங்ககை செய்தான் என்று கருதப்படுகிறது. கல் சவப்பெட்டியின் காட்சிகள் பளிங்குக் கல் சவப்பெட்டி மீது இளவரசி பாலிசேனா செய்த தியாகத்தை எடுத்துக்காட்டும் சிற்பக் காட்சிகள் இதனையும் காண்க கல் சவப்பெட்டி மேற்கோள்கள் மேலும் படிக்க Assur Corfù, Nicolas (2016). "Der Polyxena-Sarkophag von Çanakkale – archaisch oder archaistisch?" In: Numismatica e Antichità Classiche, vol. 45, pp. 43–66. Geppert, Karin (2006). "Überlegungen zum Polyxena-Sarkophag im Museum Çanakkale". In: Kreutz, Natascha; Schweizer, Beat (ed.), Tekmeria. Archäologische Zeugnisse in ihrer kulturhistorischen und politischen Dimension. Münster: Scriptorium, pp. 89–106. Reinsberg, Carola (2001). "Der Polyxena-Sarkophag in Çanakkale". In: Olba, vol. 10, pp. 71–99. Reinsberg, Carola (2022). "Der spätarchaische Polyxenasarkophag". In: Antike Plastik, vol. 32. Wiesbaden: Reichert. Sevinç, Nurten (1996). "A New Sarcophagus of Polyxena from the Salvage Excavations at Gümüşçay". In: Studia Troica, vol. 6, pp. 251–264. தொல்பொருட்கள் பண்டைய கிரேக்கப் பண்பாடு
684246
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
இருபீனைல் பாதரசம்
இருபீனைல் பாதரசம் (Diphenylmercury) என்பது C12H10Hg என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப் பாதரச சேர்மமான இது வெள்ளை நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. இச்சேர்மம் குறிப்பாக நிலைப்புத் தன்மை கொண்டுள்ள காரணத்தால் கரிம உலோகச் சேர்மமாக வரலாற்று ஆர்வத்தை கொண்டுள்ளது. ஆனால் இதன் அதிக நச்சுத்தன்மையின் காரணமாக சில பயன்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. டைபீனைல்மெர்க்குரி என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. தயாரிப்பு வணிக ரீதியாக கிடைக்கும், இந்த சேர்மத்தை பல வழிகளில் தயாரிக்கலாம். பீனைல்பாதரச அசிடேட்டை சோடியம் சுடானேட்டுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இருபீனைல் பாதரசத்தை தயாரிக்கலாம். பாதரச ஆலைடுகளுடன் பீனைல் மக்னீசியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் இது உருவாகும். புரோமோபென்சீன் சேர்மத்துடன் சோடியம் இரசக்கலவையைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் இருபீனைல் பாதரசம் உருவாகும். பாதுகாப்பு இருபீனைல் பாதரசம் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ள ஒரு வேதிப் பொருளாகும். மேற்கோள்கள் பீனைல் சேர்மங்கள் கரிமபாதரச சேர்மங்கள்
684247
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
சிக்கந்தர் கா முக்கத்தர்
சிக்கந்தர் கா முக்கத்தர் (Sikandar Ka Muqaddar) என்பது நீரஜ் பாண்டே இயக்கிய 2024 இந்திய இந்தி மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ஒரு பெரும் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முனையும் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இதில் ஜிம்மி ஷெர்கில், அவினாஷ் திவாரி, தமன்னா பாட்டியா, ராஜீவ் மேத்தா மற்றும் திவ்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஃப்ரைடே ஸ்டோரிடெல்லர்ஸ் பதாகையின் கீழ் சீதல் பாட்டியா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இது நவம்பர் 29,2024 அன்று நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது. கதைச்சுருக்கம் மும்பையில் உள்ள நகைக் கண்காட்சியில் ₹1 கோடி மதிப்புள்ள வைரக் கொள்ளை நடக்கிறது. இக்கொள்ளையில் மங்கேஷ் தேசாய், காமினி சிங் மற்றும் சிக்கந்தர் சர்மா ஆகியோர் முக்கிய சந்தேகத்திற்குரிய நபர்களாக உள்ளனர். காவல் ஆய்வாளர் ஜஸ்விந்தர் சிங், சர்மாவே குற்றவாளி என்று உறுதியாக நம்பி, விசாரணையை நடத்திச் செல்கிறார், ஆனால், அவரால் அதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட போதிலும், சிக்கந்தரின் வாழ்க்கை சீரழிவிற்குள்ளாகிறது. சிக்கந்தர் தனது வேலையை இழக்கிறார், சமூகத்தின் புறக்கணிப்பை எதிர்கொள்கிறார், மேலும், தனது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் போராடுகிறார். இந்த சவால்களுக்கு மத்தியில், அவர் காமினி என்ற கணவரின்றிக் குழந்தையை வளர்த்து வாழ்ந்து வரும் பெண்ணை மணக்கிறார். தொடக்கத்தில் இருந்தே சிக்கந்தரும் ஜஸ்விந்தர் சிங்கும் முட்டிக் கொள்ள தன்னை அடித்து விசாரிக்கும் ஜஸ்விந்தர் தன்னிடம் ஒரு நாள் மன்னிப்புக் கேட்டே தீர வேண்டும். தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் இது நடந்தே தீரும் என்று அவரிடம் சூளுரைக்கிறார். இவர்களுக்கிடையிலான மோதல் எப்படி முடிவுக்கு வந்தது? தொடர்புடைய குற்றத்தில் உண்மையான குற்றவாளி யார்? என்பது தான் கதை. கதையின் முடிச்சு அவிழ்க்கப்படும்போது, திருடப்பட்ட வைரங்களை பிரியாவின் உதவியுடன் பல ஆண்டுகளாக ஒரு போன்சாய் பானையில் மறைத்து வைத்திருந்த சிக்கந்தர் உண்மையில் கொள்ளையில் ஈடுபட்டார் என்பது தெளிவாகிறது. காமினி உட்பட அனைவரிடமிருந்தும் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வைரங்களை மீட்டெடுக்க நீண்ட விளையாட்டு விளையாடினார் என்பதைப் படத்தின் இறுதிக்காட்சி வெளிப்படுத்துகிறது. ஒரு பதட்டமான மோதலில், ஜஸ்விந்தர் இறுதியாக சிக்கந்தரைப் பிடிக்கிறார், சிக்கந்தர் வைரங்களை மீட்டெடுத்து ஜஸ்விந்தரை முறியடிக்க முடிந்தாலும், அவர் இறுதியில் கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். இக்கதையின் முடிவு சிலிர்ப்பூட்டும் திடீர் நிகழ்ச்சிகள் அடங்கிய புதுமையான ஒன்றாகவே உள்ளது. இது கதாநாயகர்களின் எதிர்காலம் குறித்தும் மற்றும் நீதி உண்மையிலேயே வழங்கப்பட்டதா? என்பது பற்றியும் கேள்விகளை விட்டுச்செல்கிறது. நடிகர்கள்   இறுதியான நிலையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்: தயாரிப்பு பிப்ரவரி 2024 இல், நெட்ஃபிளிக்ஸ் நீரஜ் பாண்டே மற்றொரு கூட்டுழைப்பை அறிவித்ததுடன் ஒரு நகர்படச் சுவரொட்டி மூலம் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. அக்டோபர் 2024 இல் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட “திரைக்குப் பின்னால்“ என்ற தலைப்பிட்ட காணொலியில் நட்சத்திர நடிகர்கள் வெளிப்பட்டனர். வரவேற்பு ஃபர்ஸ்ட்போஸ்டின் லச்மி தேப் ராய் படத்திற்கு ஐந்தில் மூன்றரை நட்சத்திரங்களை வழங்கி, "ஜிம்மி ஷெர்கில், தமன்னா பாட்டியா, அவினாஷ் திவாரி நடித்த கொள்ளைச் சம்பவம் குறித்த பரபரப்பூட்டும் படத்தின் கதைக்கரு தனித்துவமானது என்றும் ஒவ்வொரு நடிகரைச் சுற்றியுள்ள கதைக்களம் மற்றும் அற்புதமான நடிப்பு காரணமாக படம் ஒளிர்கிறது" என்றும் கூறியிருந்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சுப்ரா குப்தா இந்தப் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்களை வழங்கியிருந்தார். இவர், "நீரஜ் பாண்டேவின் நெட்ஃபிளிக்ஸ் படம் பாலிவுட்டில் ஒரு அரிய வகைப்படம் என்றும், நீங்கள் அடுத்தாக நிகழ இருப்பதை ஊகித்தறிய முடியாத திருப்பங்களுடன் உள்ள ஒரு சோதனை முயற்சி" என்றும் கூறியுள்ளார். பிலிம்பேர் நிறுவனத்தின் தேவேஷ் ஷர்மா இந்தப் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கி இத்திரைப்படத்தை “பல திருப்பங்கள் நிறைந்த பரபரப்பூட்டும் திரைப்படம்” என்று விவரித்தார். சில தளர்வான முனைகள், சீரற்ற வேகம் மற்றும் மிகத் தாமதமான இறுதிக்காட்சி இருந்தபோதிலும், ஜிம்மி ஷெர்கில் மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோரின் தனித்துவமான நடிப்பின் காரணமாக இத்திரைப்படம் மெதுவான நகரும் பரபரப்பூட்டும் திரைப்படம் என்று குறிப்பிட்டார். நீரஜ் பாண்டே உளவியல் சார்ந்த பரபரப்பூட்டும் நிகழ்வுகளுடன், இது இவ்வகை திரைப்படங்களின் ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைகிறது. மேற்கோள்கள் நெற்ஃபிளிக்சு அசல் நிகழ்ச்சிகள் 2024 திரைப்படங்கள் இந்திய இந்தித் திரைப்படங்கள்
684259
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2025%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 25 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 25 (தே. நெ. 25)(National Highway 25 (India)) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள பார்மரை பியாவுடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது சமீபத்தில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வழித்தடம் முனாபாவோ, ராம்சர், பார்மர், கவாஸ், பேட்டு, மாதசர், துத்வா, பாகுண்டி, கேர், தில்வாரா, பலோத்ரா, பச்பத்ரா, கல்யாண்பூர், ஜோத்பூர், கபர்டா, பிலாரா, ஜெய்தாரன், பார், பியவர் என்எச்25 சந்திப்புகள் முனாபாவோ அருகே முனையம் கக்ரியா அருகே சந்திப்பு. பார்மர் அருகே சந்திப்பு பலோத்ரா அருகே சந்திப்பு. பியாவர் அருகே முனையம். மேலும் காண்க நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 25 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684260
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
இல்லம்
இல்லம் (Illam, ) மனை என்பது தமிழில் வீட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுச் சொல்லாகும். ஆனால் இல்லம் அல்லது மன, என்பது மலையாளத்தில் நம்பூதிரி பிராமணர் வீட்டை குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது. தென்னிந்தியாவின், கேரளத்தில் சாதிகள் அடிப்படையில் வீடுகளை வகைப்படுத்தவும் அடையாளப்படுத்தப்படுவதன் ஒரு பகுதியாக இ்வாறு குறிப்பிடப்படுகிறது. அந்தப் பாரம்பரியத்தின்படி நம்பூதிரி பிராமண குடும்பங்களின் பாரம்பரிய இல்லமான தராவாடைக் குறிக்க இல்லம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தின் மிக உயர்ந்த சாதியாக விளங்கிய நம்பூதிரிகள், தங்கள் பரம்பரையை பிரம்மாலயம் என்று குறிப்பிடுகின்றனர். சமசுகிருத மொழியில் " கட்டிடக்கலை " என்று பொருள்படும் வாஸ்து சாஸ்த்திரத்தின், அடிப்படையில் அவர்களின் இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது மிகக் குறைவான இல்லங்களே தொடர்ந்து வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. பெரும்பாலானவை அருங்காட்சியகங்கள், ஆயுர்வேத சுகாதாரப் பராமரிப்பு மையங்கள், தங்கும் விடுதிகள் போன்றவையாக மாற்றப்பட்டுள்ளன. கட்டமைப்பு நம்பூதிரி இல்லத்தின் பாரம்பரிய அமைப்பானது நடுமுட்டம் ('நாடு' என்றால் நடு மற்றும் 'முட்டம்' என்றால் பூமி/தரை என்று பொருள்படும்) என்று அழைக்கப்படும் ஒரு திறந்தவெளி முற்றத்தைக் கொண்டதாக இருக்கும். இந்த இல்லங்கள் நாலுகெட்டு (முற்றத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு அறைகளால் சூழ்ப்பட்டது), எட்டுகெட்டு (மற்றொரு நாலுகெட்டோடு சேர்ந்த இல்லம்), பதினாலுகெட்டு (ஒரு முற்றத்தைச் சுற்றி நான்கு அடுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டது) போன்ற பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டவையாகும். பிரபலமான எடுத்துக்காட்டுகள் கேரளத்தில் நன்கு அறியப்பட்ட சில இல்லங்களில் சூர்யகலாடி மன (கோட்டயம்), வரிக்கசேரி மனை (பாலக்காடு), பூதேரி இல்லம் (ஃபெரோக்), எட்டிசேரி மன (கண்ணூர்), தேசமங்கலம் மன (தேசமங்கலம்), நென்மினி இல்லம் (குருவாயூர்), புன்னோர்கொட்டு அல்லது ஸ்வர்ணத்து மன (பழந்தோட்டம்), ஓலப்பமன்ன இல்லம் (வெள்ளிநெஞ்சி) மற்றும் பூமுல்லி மனா (பாலக்காடு) போன்றவை அடங்கும். மேலும் வாசிக்க பொதுவான ஒரு இல்லம் சில நம்பூதிரி இல்லங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Poonthanam Illam at Perinthalmanna, Malappuram | Kerala Tourism இந்தியக் கட்டிடக்கலை கேரளப் பண்பாடு வீடு
684261
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2019%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 19 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 19 (தே. நெ. 19)(National Highway 19 (India)) என்பது இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முன்பு தில்லி-கொல்கத்தா சாலை என்று குறிப்பிடப்பட்டது. இது இந்தியாவின் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலைகளின் மறு எண்களின் பின், தில்லி-ஆக்ரா பாதை இப்போது தேசிய நெடுஞ்சாலை 44 ஆகவும், ஆக்ரா-கொல்கத்தா பாதை தேசிய நெடுஞ்சாலை 19ஆகவும் உள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் தலைநெடுஞ்சாலையின் பெரும்பகுதியாகும். இது சப்பானிலிருந்து துருக்கி செல்லும் ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் ஆ. நெ. 1-இன் ஒரு பகுதியாகும். 2010ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அனைத்துத் தேசிய நெடுஞ்சாலைகளும் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு இது தே. நெ. 2 என்று அழைக்கப்பட்டது. நீளம் தேசிய நெடுஞ்சாலை 19, 1,1,000 கிமீ நீளத்தைக் கொண்டுள்ளது. இச்சாலை உத்தரப் பிரதேசம், பீகார், சார்க்கண்டு, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் நெடுஞ்சாலையின் நீளம் பின்வருமாறு உத்தரப்பிரதேசம் 655 கி.மீ. பீகார் 206 கி. மீ. (128 மைல்) ஜார்க்கண்ட் 199.8 கி.மீ. மேற்கு வங்காளம் 208.7 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தால் தங்க நாற்கர சாலையின் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை 19 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தால் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியாக பாரா மற்றும் கான்பூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை 19-இன் சுமார் கிமீ (22 மைல்) நீளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை 19 ஆக்ராவை கொல்கத்தாவுடன் இணைக்கிறது. இது இந்தியாவின் நான்கு மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், சார்க்கண்டு மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றைக் கடந்து செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை 19 ஆக்ராவில் தொடங்கி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர், அலகாபாத், வாரணாசி, மோகனியா, சசாராம், தெக்ரி ஆன் சோன், அவுரங்காபாத், டோபி (கயா), சார்க்கண்டு மாநிலத்தில் பர்கி (அசாரிபாக்), கோபிந்த்பூர் (கிரிடிஹ்பாத்), அசன்சோல், துர்காபூர் ஆகிய இடங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-44 உடன் இதன் சந்திப்பில் தொடங்கி மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா அருகே தேசிய நெடுஞ்சாலை 16 உடன் முடிவடைகிறது. சுங்கச்சாவடிகள் ஆக்ராவிலிருந்து கொல்கத்தா வரையிலான சுங்கச்சாவடிகள் பின்வருமாறு: உத்தரப்பிரதேசம் டன்ட்லா, குராவ் செம்ரா அட்டிகாபாத், அனந்த்ராம், பரஜோத், பதௌரி, கட்டோகன், பிரயாக்ராஜ் புறவழிச்சாலை (கோக்ராஜ் லாலாநகர், டாஃபி, வாரணாசி) பீகார் மோகனியா, சசாராம், சௌகலா ஜார்க்கண்ட் ரசோயா தாம்னா, கங்க்ரி, பெலியட் மேற்கு வங்காளம் துர்காபூர், பால்சித் மற்றும் டாங்குனி தேசிய நெடுஞ்சாலை 19இல்/அதற்கு அப்பால் உள்ள முக்கிய நகரங்கள் உத்தரப்பிரதேசம் மதுரா ஆக்ரா பிரோசாபாத் இத்தாவா பாபர்பூர் அஜித்மால் ஔரையா அக்பர்பூர் கான்பூர் பதேபூர் பிரயாக்ராஜ் பதோகி மிர்சாபூர் வாரணாசி முகலாயர் சந்தௌலி பீகார் மோகனியா குட்ரா சசராம் டெஹ்ரி ஆன் சோன் அவுரங்காபாத் செர்காட்டி சார்க்கண்டு பாரி. பர்கதா பாகோதர் இஸ்ரேல் கோவிந்த்பூர் தன்பாத் மேற்கு வங்காளம் அசன்சோல் துர்காபூர் பர்த்வான் டாங்குனி சந்திப்புகள் உத்தரப்பிரதேசம் ஆக்ராவுக்கு அருகில் உள்ள முனையம் கத்போரி கிராமம் அருகே ஆக்ரா லக்னோ அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைத்தல் தேசிய நெடுஞ்சாலை இடாவா அருகே இடாவா அருகே சிக்கந்தரா அருகே அக்பர்பூர் அருகே , கான்பூர் தேஹத் கான்பூர் அருகே பதேபூர் அருகே முரத்கஞ்ச் அருகே என். எச். 731ஏ அலகாபாத் அருகே சோராவ்ன் அருகே பிரயாக்ராஜ் அருகே என். எச். 319டி ஆரா அருகே வாரணாசி அருகே சந்தௌலி அருகே சையத் ராஜா அருகே பீகார் மோகனியா அருகே மோகனியா அருகே தெக்ரி அருகே அவுரங்காபாத் அருகே தோபி அருகே சார்க்கண்டு பர்கி அருகே பாகோதர் அருகே தும்ரி அருகே கோவிந்த்பூர் அருகே கோவிந்த்பூர் அருகே மேற்கு வங்காளம் குல்டி அருகே ராணிகஞ்ச் அருகே பர்தமான் அருகே பர்தமான் அருகே கொல்கத்தா அருகே உள்ள முனையம் மேலும் காண்க கிராண்ட் டிரங்க் சாலை தில்லி முதல் கொல்கத்தா சாலை நிலை (NH19 வழியாக) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 19 Route map இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684263
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
காசாங்காடு
காசாங்காடு (Kasangadu) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். முசுகுந்தநாடு என்ற வேளாளர் இனக்குழுக்களை உருவாக்கும் 32 கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். இது வடக்கே மூத்தாக்குருச்சி, கிழக்கே வட்டக்குடி மற்றும் ரெகுநாதபுரம், தெற்கே மன்னங்காடு, தென்மேற்கே வேந்தக்கோட்டை, மேற்கே நாட்டுச்சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 242.34 ஹெக்டேர் ஆகும். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஆத்திரேலியா, அமெரிக்கா, போலந்து போன்ற வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். வரலாறு காசாங்காடு கிராமம் இந்தியாவின் நவீனக் கிராமத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நிர்வாகம் முதல் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இதில் அடங்கும்.(Tamil: Kasangadu History) ஏரி இது காசங்காடு நிலத்தின் ஒரு பகுதிக்குப் பாசனத்திற்காகத் தண்ணீரை வழங்குகிறது. இந்தக் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி இதுவாகும். இந்த ஏரிக்கு நீர் கல்லணையிலிருந்து காவிரி ஆற்றிலிருந்து வருகிறது. இது பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள மூன்றாவது பெரிய ஏரியாகும். பொருளாதாரம் காசாங்காடு கிராம மக்கள் அனைவரின் முக்கிய வருமான ஆதாரமாக நெல் சாகுபடி உள்ளது. முனீசுவரர் கோயில் விவசாயம்/கிராமத்திற்குத் திருட்டு/பேரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க விவசாய நிலங்கள்/கிராமத்தின் எல்லைப் பாதுகாப்புக்காக முனீசுவரர் தெய்வம் முக்கியமாகப் பிரார்த்திக்கப்படுகிறது. இணைப்புகள் கசங்காடு குழுக்கள் முசுகுண்டன் திருமண கிராம உணவு வகைகள் கசங்காடு கல்வி மேற்கோள்கள் கசாங்கு ராம் ஆங்கிலத்தில் கசங்காடு கிராமம் கசங்டு பள்ளிகளின் பட்டியலை வெளியிடும் வலைத்தளம் பஞ்சாயத்து ராஜ், இந்திய அரசு கிராமங்கள் கசங்காடு பற்றிய தகவல்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் Coordinates on Wikidata
684264
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2020%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 20 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 20 (தே. நெ. 20)(National Highway 20 (India)) என்பது இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை பீகாரில் உள்ள பக்தியார்பூரில் தொடங்கி ஒடிசாவில் உள்ள சதபாயாவில் முடிவடைகிறது. வழித்தடம் பீகார்-பக்தியார்பூர்-பீகார் செரீப், நவாடா, ராஜௌலி சார்க்கண்டு-கோடர்மா, பர்ஹி, பத்மா, ஹசாரிபாக், சார்ஹி, குஜு, ராம்கர், ஓர்மஞ்சி, இர்பா, மெஸ்ரா, ராஞ்சி, குந்த்டி, முர்ஹு, சக்ரதார்பூர், சைபாசா, ஜெயிந்த்கர் ஒடிசா-பார்சோரா, கெந்துஜர்கர், பனிகோய்லி, குவாகியா, ஜாஜ்பூர், அராடி, சந்தபாலி, ராஜ் கனிகா மற்றும் சதபாயாவில் முடிவடைகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 20 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684265
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2028%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 28 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 28 (என். எச். 28)(National Highway 28 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது. இது இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு முக்கிய இணைப்பை வழங்குகிறது. வழித்தடம் இந்தியா-நேபாள எல்லையில் கக்ராவா, சித்தார்த் நகர், பன்சி, ருதௌலி, பஸ்தி, தண்டா, அத்ரௌலியா, ஆசம்கர், கட்கர், லால்கஞ்ச், லாம்கி, வாரணாசி. மாவட்டங்கள் சித்தார்த்நகர், பஸ்தி, அம்பேத்கர் நகர், ஆசம்கர், வாரணாசி. சந்திப்புகள் சித்தார்த்நகர் அருகே பசுதி அருகே நையோரி அருகே வாரணாசி அருகே முனையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஓபன்ஸ்ட்ரீட்மேப்பில் என். எச். 28 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684267
https://ta.wikipedia.org/wiki/4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
4-குளோரோபாதரசபென்சாயிக் அமிலம்
4-குளோரோபாதரசபென்சாயிக் அமிலம் (4-Chloromercuribenzoic acid) என்பது C7H5ClHgO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமபாதரச சேர்மமான இது பாரா-குளோரோபாதரசபென்சோயிக் அமிலம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. குறிப்பாக மூலக்கூறு உயிரியல் பயன்பாடுகளில் புரதங்களின் செயல்பாட்டைத் தடுக்கும் வேதிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 4-குளோரோபாதரசபென்சோயிக் அமிலம் புரதங்களில் உள்ள தயோல் குழுக்களுடன் வினைபுரிகிறது. எனவே இது தயோல் வினைத்திறனைச் சார்ந்து இருக்கும் நொதிகளின் தடுப்பானாகக் கருதப்படுகிறது. இதில் சிசுடைன் புரோட்டியேசுகளான பாபைன் மற்றும் அசிடைல்கொலினெசுடெரேசு ஆகியவையும் அடங்கும். தயோல்களுடனான இந்த வினைத்திறன் காரணமாக, புரதங்களில் உள்ள தயோல் குழுக்களின் தரம்பார்த்தல் அளவீட்டிலும் 4-குளோரோபாதரசபென்சோயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பென்சாயிக் அமிலங்கள் கரிமபாதரச சேர்மங்கள்
684272
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
கே. பி. நாராயண பிசரோடி
கொடிக்குன்னு பிசராத்து நாராயண பிசரோடி (Kodikkunnu Pisharathu Naryan Pisharodi) (ஆகஸ்ட் 23,1909-மார்ச் 21,2004) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சமசுகிருத அறிஞரும், ஆசிரியரும் எழுத்தாளரும் ஆவார். வாழ்க்கை இவர் ஆகஸ்ட் 23,1909 அன்று பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி அருகில் உள்ள கொடிக்குன்னுவில் புதிசேரி பசுபதி நம்பூதிரி மற்றும் நாராயணி பிசராசியார் ஆகியோருக்கு பிறந்தார். பட்டாம்பியைச் சேர்ந்த புன்னச்சேரி நம்பி நீலகண்ட சர்மா மற்றும் ஆற்றூர் கிருஷ்ண பிசரோடி ஆகியோரிடமிருந்து சமசுகிருதத்தைக் கற்றுக்கொண்டார். 1932 இல் பட்டாம்பி சமசுகிருதக் கல்லூரியில் சாகித்யசிரோமணி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மலையாளம் மற்றும் சமசுகிருதம் கற்பித்தார். பின்னர், திருச்சூரில் உள்ள ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியில் பணியில் சேர்ந்த இவர் ஓய்வு பெற்ற பிறகு, பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித்தொகையின் கீழ் ஆராய்ச்சி மேற்கொண்டார். "சாகித்ய நிபுணன்" "பண்டித திலகம்" மற்றும் "சாகித்ய ரத்தினம்" என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு கேரள அரசின் உயரிய இலக்கிய விருதான "எழுத்தச்சன் புரஸ்காரம்" பிசரோடிக்கு வழங்கப்பட்டது. இறப்பு பிசரோடி தனது 94வது வயதில் 21 மார்ச் 2004 அன்று திருச்சூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் -Road to be named after Pisharody 1909 பிறப்புகள் 2004 இறப்புகள் மலையாள எழுத்தாளர்கள் கேரள எழுத்தாளர்கள்
684273
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
புன்னச்சேரி நம்பி நீலகண்ட சர்மா
புன்னாசேரி நம்பி நீலகண்ட சர்மா (Punnasseri Nambi Neelakanta Sharma) பிரித்தானிய இந்தியாவில் பிறந்த ஒரு சமசுகிருத அறிஞரும், ஆசிரியரும் ஆவார். இவர் 1858 ஜூன் 17 அன்று பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பியில் நாராயணன் நம்பி மற்றும் அச்சுதத் நங்கய்யா அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூசத் குடும்பத்தில் பிறந்தார். சமசுகிருதத்தை வழக்கமான முறையில் கற்றுக் கொண்டார். 1888 ஆம் ஆண்டில் சர்மா சமசுகிருதம் கற்பித்தலுக்கான ‘சரசுவதோதயோதினி’ என்ற மையத்தை பட்டாம்பியில் தொடங்கினார். பின்னர் அது ‘ஸ்ரீ நீலகண்ட அரசு சமசுகிருதக் கல்லூரி’ ஆனது. ‘விஞ்ஞானசிந்தாமணி’ அச்சகத்தையும் ஒரு மருத்துவமனையையும் நிறுவினார். திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மாநிலங்களின் மகாராஜாக்களிடமிருந்து பல்வேறு பட்டங்களையும் கௌரவங்களையும் பெற்ற சர்மா, பல கல்வி அமைப்புகளுக்குத் தலைமை தாங்கினார். இறப்பு நீலகண்ட சர்மா 1934 செப்டம்பர் 14 அன்று இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாலக்காடு மாவட்ட நபர்கள் 1858 பிறப்புகள் 1934 இறப்புகள் மலையாள எழுத்தாளர்கள் கேரள எழுத்தாளர்கள் மலையாள நபர்கள்
684274
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
ஆற்றூர் கிருஷ்ண பிசரோடி
ஆற்றூர் கிருஷ்ண பிசரோடி (Attoor Krishna Pisharody) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சமசுகிருத அறிஞரும், ஆசிரியரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் செப்டம்பர் 29,1875 அன்று திருச்சூர் மாவட்டத்தில் வடக்காஞ்சேரியில் நாராயணன் நம்பூதிரி மற்றும் பாப்பிக்குட்டி பிசராசியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். கொடுங்கல்லூர் கோதவர்மா பட்டன் தம்புரானிடம் இருந்து பாரம்பரிய முறையில் சமசுகிருதத்தை கற்றுக்கொண்டார். 1911 முதல் 1929 வரை திருவனந்தபுரம், மகாராஜா கல்லூரியில் (இன்றைய பல்கலைக்கழகக் கல்லூரி) கற்பித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகள் திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு சமசுகிருத ஆசிரியராக பணியாற்றினார். இவர் இரசிகா ரத்னம் மற்றும் மங்களோதயம் ஆகிய இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். மேலும், ஒரு வீணைக் கலைஞராகவும், இசைக்கலைஞராகவும் இருந்தார். கிருஷ்ண பிசரோடி ஜூன் 5,1964 அன்று இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் legendS இந்திய இசையியலாளர்கள் திருச்சூர் மாவட்ட நபர்கள் மலையாள எழுத்தாளர்கள் கேரள எழுத்தாளர்கள் 1964 இறப்புகள் 1875 பிறப்புகள்
684275
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2029%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 29 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 29 (தே. நெ. 29)(National Highway 29 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலை 36, 39 மற்றும் 150இன் ஒரு பகுதியாக இருந்தது. மார்ச் 5, 2010 அன்று வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களைச் சீரமைத்ததால், இது தேசிய நெடுஞ்சாலை 29 என மறுபெயரிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 29 இந்திய மாநிலங்களான அசாம், நாகாலாந்து வழியாக மணிப்பூர் எல்லையில் முடிவடைகிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலை 338.5 கி.மீ. நீளம் கொண்டது. வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை 29 அசாமில் உள்ள தபகா (சுதர்கான்) மஞ்சாவை நாகாலாந்தில் உள்ள திமாபூர், சுமுகெடிமா, கோகிமா, சிசாமியுடன் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஜெசாமியில் முடிவடைகிறது. அசாம் தபகா-டோக்மோகா-பகுலியா-மஞ்ஜா-அமலாகி நாகாலாந்து திமாபூர்-சுமௌகெடிமா-கோஹிமா-சிசாமி மணிப்பூர் ஜெசாமி சந்திப்புகள் அசாம் தபகா அருகே முனையம் மனோஜ் அருகே நாகாலாந்து திமாப்பூர் அருகே திமாப்பூர் அருகே கோகிமா அருகே மணிப்பூர் ஜெசுசாமி அருகே மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 29 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684277
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
விசயராகவப் பெருமாள் கோவில்
விசயராகவப் பெருமாள் கோவில் (Vijayaraghava Perumal temple) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும். இது காஞ்சிபுரத்திற்கு மேற்கே 7 மைல் தொலைவிலும், சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோயில், கிபி 6-9 ஆம் நூற்றாண்டுகளில் பெருமாளைக் குறித்து ஆழ்வார்களால் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விஷ்ணுவை ‘விசயராகவப் பெருமாள்’ என்றும் அவரது மனைவி இலட்சுமி ‘மரகதவல்லி தாயார்’ என்றும் போற்றப்படுகிறார். இந்தக் கோயில் பழங்காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் பாண்டியர்களாலும், பின்னர், சோழர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்களின் வெவ்வேறு காலங்களில் பிற்கால பங்களிப்புகளுடன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தக் கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோவிலில் ஐந்து அடுக்கு நுழைவாயில் கோபுரம் கருங்கல்லால் நிறுவப்பட்டுள்ளது இந்த வளாகத்தில் அனைத்து கோயில்களும் உள்ளன. கோயிலின் மேற்கே குளம் ஒன்று அமைந்துள்ளது. தெப்பத் திருவிழா (மாசி) பிரம்மோற்சவம் (தை) ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களாகும். கட்டிடக்கலை இந்தக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கோவிலில் உள்ள கல் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது விசயராகவ சுவாமிக்கு (மூலவர்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மார்கதவல்லி தாயாருக்கு ஒரு தனிக் கோயிலும், இராமானுசருக்கு ஒரு சன்னிதியும் உள்ளன. மைய சன்னதியில் நான்கு கைகளால் அலங்கரிக்கப்பட்ட விசயராகவனின் சிலை உள்ளது. இங்கு சடாயுவிற்கு இறுதி சடங்குகளைச் செய்யும் சிலையும் இங்கு காணலாம். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய சிலைகள் பூமியை பர்த்தபடி இருக்கும் சிலையும் உண்டு. முகத்தில் துக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த சிலை உருவானது என்று நம்பப்படுகிறது பொதுவாக பெருமாள் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவி இந்த கோவிலில் அவரது இடதுபுறத்தில் அமைந்திருக்கிறார். அநேகமாக சடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தின் காரணமாக இவ்வாறு இருக்கலாம். விசிட்டாத்துவைதத் தத்துவத்தின் போதகர் இராமானுசர் தனது ஆரம்பக் கல்வியை இந்த கோவிலில் பெற்றார். புராணம் இராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் போது சீதையைத் தனியே விட்டு விட்டு வேட்டைக்குப் போகும் போது சீதைக்குத் துணையாக இருந்தவன் சடாயு. இராவணன் சீதையைச் சிறைப்பிடித்துச் செல்லும்போது அவனுடன் சண்டையிட்டு காயமடைகிறான். இராமன் வேட்டையில் இருந்து திரும்பி வரும்போது அவனிடம் நடந்த நிகழ்வை எடுத்துக் கூறிவிட்டு இறந்து விடுகிறான். இங்கிருக்கும் விசயராகவப் பெருமாள் இந்த இடத்தில் சடாயுவின் இறுதி சடங்குகளை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. சடாயு விழுந்த குளம் ‘சடாயு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சடாயு, புல் இனத்தைச் (கழுகு குடும்பத்தின் ஒரு தனி குடும்பம்) சேர்ந்தவர். அவர் இறந்தவுடன் ஒரு குழியில் புதைக்கப்பட்டார். எனவே இந்தத் தளம் திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இதே புராணக்கதை புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயிலுடன் தொடர்புடையது. மேற்கோள்கள் வெளிஇணைப்புகள் இராமர் கோயில்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள் 108 திவ்ய தேசங்கள் Coordinates on Wikidata
684279
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2033%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 33 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 33 (National Highway 33 (India))(தே. நெ. 33) முன்பு தே. நெ. 80 என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அர்வாலிலிருந்து பராக்கா வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை பீகாரை மேற்கு வங்காளத்துடன் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை பீகாரின் முக்கிய நகரங்களான முங்கர் மற்றும் பாகல்பூர் போன்ற நகரங்களைத் தலைநகர் பட்னாவுடன் இணைக்கிறது. வழித்தடம் பீகார் ஆர்வால் ஜகானாபாத் பிகார் செரீப் பார்பிகா மோகாமா லக்கிசராய் முங்கர் பரியார்பூர் சுல்தான்கஞ்ச் பாகல்பூர் கஹால்கான் பிர்பெய்டி சார்க்கண்டு சாகிப்கஞ்ச் ராஜ்மகால் பர்கார்வா மேற்கு வங்காளம் பராக்கா சந்திப்பு அர்வாலில்முனையம் ஜகானாபாத் அருகே பிகார் செரீப் அருகே பார்பிகா அருகே மோகாமா அருகே முங்கர் பரியார்பூர் அருகே பாகல்பூர் அருகே பிர்பெய்டி அருகே பராக்காவில் முனையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 33 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684282
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
மூளை அழுகல்
மூளை அழுகல் (Brain rot) அல்லது மூளைச் சிதைவு என்பது இணையக் கலாச்சாரத்தில், குறைந்த தரம் அல்லது மதிப்புடையதாகக் கருதப்படும் எந்தவொரு இணைய உள்ளடக்கத்தையும் அல்லது அதனால் ஏற்படும் எதிர்மறையான உளவியல் மற்றும் அறிவாற்றல் விளைவுகளையும் குறிக்கிறது. குறிப்பாகக் குறுகிய வடிவப் பொழுதுபோக்கு இதுவாகும். இந்தச் சொல் எண்ணிம ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறிக்கிறது. இது அறிவாற்றல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இந்தச் சொல் தலைமுறை ஆல்பா மற்றும் தலைமுறை இசட் ஆகியவற்றின் இணையக் கலாச்சாரங்களுக்குள் உருவானது. ஆனால் பின்னர் பிரதானச் சொல்லாக மாறியுள்ளது. இந்தச் சொல் 2024ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு வேர்ட் ஆஃப் தி இயர் என்று பெயரிடப்பட்டது. இது டெமூர் மற்றும் ரொமாண்டசி போன்ற பிற சொற்களை முறியடித்தது. இதன் நவீனப் பயன்பாடு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது. "ஒரு நபரின் மன அல்லது அறிவுசார் நிலை மோசமடைகிறது, குறிப்பாக இணையவழி செய்திகளை அதிகமாக நுகர்வதன் விளைவாக (இப்போது குறிப்பாக இணைய உள்ளடக்கம்) அற்பமான அல்லது சவாலற்றதாகக் கருதப்படுகிறது". தோற்றமும் பயன்பாடும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பக கூற்றுப்படி, இந்த வார்த்தையின் முதல் பதிவு 1854ஆம் ஆண்டு கென்றி டேவிட் தூரோ எழுதிய வால்டன் புத்தகத்தில் உள்ளதிலிருந்து வருகிறது. தோரோ அறிவார்ந்த தரங்களின் சரிவு என்று தாம் கண்டதை விமர்சித்தார். சிக்கலான கருத்துக்கள் குறைவாகவே மதிக்கப்பட்டன. மேலும் இதை 1840களில் ஐரோப்பாவில் "உருளைக்கிழங்கு அழுகல்" உடன் ஒப்பிட்டார். இணைய அமைப்புகளில், இது 2004ஆம் ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டது. 2007ஆம் ஆண்டில், டேட்டிங் கேம் நிகழ்ச்சிகள், காணொளி விளையாட்டு மற்றும் "இணைய ஹேங்அவுட்" ஆகியவற்றை விவரிக்க டுவிட்டர் பயனர்களால் "மூளை அழுகல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சொற்றொடரின் பயன்பாடு 2010களில் இணையத்தில் அதிகரித்தது. 2023ஆம் ஆண்டில் இது வேகமாகப் பிரபலமடைந்தது. இது இணைய நகைச்சுவை ஆனது. 2024ஆம் ஆண்டில், இது தலைமுறை ஆல்பாவின் எண்ணிமப் பழக்கங்களின் பின்னணியில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. விமர்சகர்களால், இந்தத் தலைமுறை "இணையக் கலாச்சாரத்தில் அதிகமாக மூழ்கியுள்ளது" என்று வெளிப்படுத்துகிறது. இது பொதுவாக இணையக் குறிப்புகளைப் பிரத்தியேகமாகக் கொண்ட ஒரு தனிநபரின் சொற்களஞ்சியத்துடன் தொடர்புடையது. 2023 முதல் 2024 வரை, இந்தச் சொல் ஒரு மில்லியன் சொற்களில் அதிர்வெண்ணில் 230% அதிகரித்துள்ளது. இந்தச் சொல் பெரும்பாலும் ஆல்பா தலைமுறையினரிடையே பிரபலமான பேச்சு மற்றும் போக்குகளுடன் தொடர்புடையது. அதாவது "ஸ்கிபிடி" (யூடியூப் குறும்படத் தொடரான ஸ்கிபிடி கழிப்பறை "ரிஜ்" (கரிஷ் "கியாட்" என்பதற்கான சுருக்கம் (பிட்டம்) "பேனம் வரி" (உணவைத் திருடுதல் மற்றும் "சிக்மா" (ஒரு தலைவர் அல்லது ஆல்பா ஆண் என்று குறிப்பிடுகிறது). ஸ்கிபிடி கழிப்பறை போன்ற சில இணைய உள்ளடக்கங்கள் பொதுவாக "முளை அழுகல்" என்று பெயரிடப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில், மில்லினியல் ஆத்திரேலிய செனட்டர் பாத்திமா பேமன் ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் தலைமுறை ஆல்பா பேச்சு வழக்கினைப் பயன்படுத்தி ஒரு குறுகிய உரையை நிகழ்த்தியதன் மூலம் தலைப்புச் செய்திகளை வெளியிட்டார். தலைமுறைகள் இசட் மற்றும் ஆல்பா ஆகியவற்றைக் குறிப்பிட்டு, "நமது சமூகத்தின் மறக்கப்பட்ட ஒரு பிரிவை" உரையாற்றுவதாக அவர் தமது உரையை அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் "தனது அறிக்கையின் எஞ்சிய பகுதியை அவர்கள் அறிந்த மொழியைப் பயன்படுத்தி வழங்குவார்" என்று கூறினார். பேச்சு வார்த்தைகளைப் பயன்படுத்தி, பேமேன் சமூக ஊடகங்களில் 14 வயதிற்குப்பட்டவர்களைத் தடை செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சித்தார். மேலும் "உங்களில் சிலர் இன்னும் வாக்களிக்க முடியாவிட்டாலும், நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அது ஆத்திரேலியாவில் அதிகப் பிரகாசத்துடன் கூடிய அரசாங்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்". ஸ்கிபிடி! மேற்கோள்கள் மூளை நோய்கள்
684283
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20702%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 702அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 702அ, (National Highway 702A (India)) பொதுவாக தே. நெ. 702அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முதன்மை தேசிய நெடுஞ்சாலை 2இன் ஒரு துணைச்சாலை ஆகும். வழித்தடம் மோகோக்சுங் அருகே தே. நெ. 2, ஜுன்ஹேபோட்டோ, சதாகா, ருங்குசு, பெக், ஜெசாமி அருகில் தே. நெ. 29 சந்திப்புகள் மோகோக்சுங் அருகே தே. நெ. 2 உடன் முனையம். உருங்குசு நாசா சந்திப்பு ஜெசாம் அருகே தே. நெ. 29 உடன் முனையம். மேலும் காண்க தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அறிவிப்பு-இந்திய அரசு மோகோக்சுங் மாவட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684284
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29
மதன் மோகன் (இசையமைப்பாளர்)
மதன் மோகன் கோலி (Madan Mohan Kohli) (25 ஜூன் 1924–14 ஜூலை 1975), மதன் மோகன் என்று நன்கு அறியப்பட்ட இவர், 1950கள், 1960கள் மற்றும் 1970களில் இந்திய இசை அமைப்பாளராக இருந்தார். இந்தித் திரையுலகில் மெல்லிசை மற்றும் திறமையான இசையமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்திப் படங்களுக்கு இவர் இசையமைத்த கசல்களுக்காக இவர் குறிப்பாக நினைவுகூரப்படுகிறார். பாடகர்களான லதா மங்கேஷ்கர், முகமது ரபி மற்றும் தௌலத் மஹ்மூத் ஆகியோருடன் சேர்ந்து பல சிறந்த படைப்புகளை வெளியிட்டுள்ளார். இளமை வாழ்க்கை மதன் மோகன், ஜூன் 25,1924 அன்று ஈராக்கின் பகுதாதில் பிறந்தார். அங்கு இவரது தந்தை ராவ் பகதூர் சுனிலால் கோலி ஈராக்கிய காவல் படைகளில் கணக்காளராக பணிபுரிந்தார். மதன் மோகனின் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகள் மத்திய கிழக்கில் கழிந்தன. 1932 க்குப் பிறகு, இவரது குடும்பம் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் மாவட்டத்திலுள்ள சக்வால் என்ற தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இவரது தந்தை வணிக வாய்ப்புகளைத் தேடி மும்பை சென்றார். இலாகூரில் உள்ள உள்ளூர் பள்ளியில் பயின்றார். இலாகூரில் தங்கியிருந்தபோது, ஒரு குறுகிய காலத்திற்கு கர்தார் சிங் என்பவரிடமிருந்து பாரம்பரிய இசையின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார். இருப்பினும் இசையில் முறையான பயிற்சியைப் பெறவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு, இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. மும்பையில், தனது 11 வயதில், அனைத்திந்திய வானொலியில் ஒளிபரப்பப்படும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் ம்தன் மோகன் பாடத் தொடங்கினார். 17 வயதில், தேராதூனிலுள்ள கர்னல் பிரவுன் கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயின்றார். அங்கு தனது பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டுகளை முடித்தார். தொழில் வாழ்க்கை ஆரம்பகால தொழில் 1943ஆம் ஆண்டு இராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட்டாக சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பின்னர் இராணுவத்திலிருந்து விலகி தனது இசை ஆர்வத்தைத் தொடர மும்பை திரும்பினார். 1946 ஆம் ஆண்டில், இலக்னோ அனைத்திந்திய வானொலியின் திட்ட உதவியாளராக சேர்ந்தார். அங்கு உஸ்தாத் பயாசு கான், உஸ்தாத் அலி அக்பர் கான், பேகம் அக்தர் மற்றும் தலத் மஹ்மூத் போன்ற பல்வேறு கலைஞர்களுடன் தொடர்பு கொண்டார். இந்த நாட்களில் அனைத்திந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் இவர் இசையமைப்பார். 1947 ஆம் ஆண்டில், தில்லியின் அனைத்திந்திய வானொலிக்கு சிறிது காலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மதன் மோகனுக்கு 1947 ஆம் ஆண்டில் பெக்சாத் லக்னாவி எழுதிய இரண்டு கசல்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, 1948 ஆம் ஆண்டில் தீவான் ஷாரர் எழுதிய இரண்டு தனி கசல்களைப் பதிவு செய்தார். 1948 ஆம் ஆண்டில், இசையமைப்பாளர் குலாம் ஐதரின் (ஷாஹீத் படத்திற்கான இசையமைப்பாளர்) கீழ் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடும் முதல் வாய்ப்பு கிடைத்தது, இருப்பினும் இந்த பாடல்கள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை அல்லது படத்தில் பயன்படுத்தப்படவில்லை. 1946 மற்றும் 1948 க்கு இடையில், தோ பாய் படத்திற்காக இசையமைப்பாளர்களான எஸ். டி. பர்மனுக்கு உதவியாளராக இருந்தார். இசை வாழ்க்கை 1950 ஆம் ஆண்டில் முகமது ரபியுடன் சேர்ந்து ஆங்கேன் படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். பின்னர், அதா படத்தின் மூலம் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பணியாற்றினார். ஷராபி படத்திற்காக இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் தேவ் ஆனந்துக்காக படமாக்கப்பட்டவை. மேலும் முகமது ரபியின் மிகவும் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும். மதன் தனது திரைப்படங்களுக்காக பாடலாசிரியர்களான ராஜா மெஹ்தி அலி கான், கைபி ஆசுமி மற்றும் ராஜீந்தர் கிரிஷன், ஸாஹிர் லுதியான்வி மற்றும் மச்ரூக் சுல்தான்புரி ஆகியோரை பாடல்களை எழுத வைத்தார். ஐம்பதுகளின் பிற்பகுதி, அறுபதுகளின் முற்பகுதி மற்றும் எழுபதுகளின் முற்பகுதியில் மதன் மோகனின் இசை வாழ்க்கை புகழ் பெற்றதாக இருந்தது. அன்பாத், அதாலத், அன்பத், துல்ஹான் ஏக் ராத் கி, மேரா சயா, தஸ்தக், ஹன்ஸ்டே சக்ம், ஹீர் ராஞ்சா, சல்பாஸ், மகாராஜா மற்றும் மவுசம் போன்ற பல படங்கள் இதில் அடங்கும். 1970 ஆம் ஆண்டில், மேற்கத்திய இசையின் மாறிவரும் காலங்களில், ராஜீந்தர் சிங் பேடியின் இயக்கத்தில் தஸ்தக் திரைப்படத்தில் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையினை வழங்கினார். இப்படத்திற்காக சிறந்த இசை இயக்கத்திற்கான 1971 ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருதினையும் வென்றார். லதா மங்கேஷ்கர் பாடிய படத்தின் பாடல்கள் இன்றும் அவரது மிகச்சிறந்த பாடல்களாக கருதப்படுகின்றன.வோ கௌன் தி'' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான 1964 பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இறுதியில் புதுமுகம் இலட்சுமிகாந்த்-பியாரேலால் ஆகிய இரட்டை இசையமைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இறப்பு மதனின் தொடர்ச்சியான போராட்டங்கள் அவரது தொழில் வாழ்க்கையை பாதித்தன. மேலும் அதிகமாக குடிக்கத் தொடங்கினார். கல்லீரல் ஈரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ஜூலை 14,1975 அன்று இறந்தார். மேற்கோள்கள் நூல் ஆதாரப்பட்டியல் வெளி இணைப்புகள் madanmohan.in, website on Madan Mohan, created and maintained by his sons Eternal composition called Madan Mohan, tribute piece on Madan Mohan இந்தியாவில் மது தொடர்பான இறப்புகள் 1975 இறப்புகள் 1924 பிறப்புகள் இந்திய இசை அமைப்பாளர்கள்
684285
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE
எஸ். சித்தலிங்கையா
எஸ். சித்தலிங்கையா (S. Siddalingaiah) (15 டிசம்பர் 1936 - 12 மார்ச் 2015) ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக கன்னடப் படங்களில் பணியாற்றினார். இவர் தனது தனித்துவமான திரைப்படத் தயாரிப்பு பாணிக்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் இவரை சமூகக் கருப்பொருள்கள் மற்றும் கிராமப்புற விஷயங்களில் தேர்ச்சி பெற்றவராக தொழில்துறை அறிந்திருந்தது. கன்னட திரையுலகில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற இயக்குநர்களில் இவரும் ஒருவர். 1964 ஆம் ஆண்டு மேயர் முத்தண்ணா (1969) படத்தின் மூலம் இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 30 ஆண்டுகால வாழ்க்கையில், இவர் 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். இவரது மிகவும் பிரபலமான பல திரைப்படங்களில் ராஜ்குமார் நடித்திருந்தார். இவர்கள் 7 படங்களில் இணைந்து பணியாற்றினர். பங்காரடா மனுஷ்யா, பூதய்யனா மக அய்யு, நியாயவே தேவரு, பிலிகிரிய பனதல்லி, தூரத பேட்ட மற்றும் பூலோகதல்லி யமராஜா ஆகியவை இவரது மிகவும் பிரபலமான படைப்புகள். 1993 ஆம் ஆண்டில், இயக்குனராக கன்னடத் திரையுலகில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக புட்டண்ணா கனகல் விருது வழங்கப்பட்டது. இளமை வாழ்க்கை சித்தலிங்கைய்யா நவஜோதி ஸ்டுடியோ எனும் திரைப்பட அரங்கத்தில் பணியாளராகச் சேர்ந்தார். இயக்குநர் சங்கர் சிங்கிடம் உதவியாளராக பணியாற்றிய பின்னர், பி. விட்டலாச்சார்யாவின் உதவியாளராகவும் பணியாற்றினார். சித்தலிங்கையாவின் மூத்த மகன் முரளி தமிழ்த் திரைப்படங்களில் நடிகராக இருந்தார். இவரது பேரன் அதர்வாவும் தமிழில் நடிகராக இருக்கிறார். இறப்பு சித்தலிங்கையா 14 மார்ச் 2015 அன்று பெங்களூரில் இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கன்னடத் திரைப்பட இயக்குநர்கள் 2015 இறப்புகள் 1936 பிறப்புகள்
684287
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
எல். சங்கர்
சங்கர் லட்சுமிநாராயணா (Shankar Lakshminarayana) (பிறப்பு 26 ஏப்ரல் 1950), எல். சங்கர் என்றும் அழைக்கப்படும் இவர், வயலின் கலைஞரும், பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இளமை வாழ்க்கை இந்தியாவின் சென்னையில் பிறந்த சங்கர், இலங்கையில் வளர்ந்தார். அங்கு வயலின் கலைஞரும் பாடகருமான இவரது தந்தை வை. லட்சுமிநாராயணா யாழ்ப்பாண இசைக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். தந்தையிடம் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்ட இவர், தனது ஏழு வயதில் இலங்கைக் கோயிலில் முதன்முதலில் பொதுவெளியில் பாடினார். 1969 ஆம் ஆண்டில், சங்கர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றார். அங்கு வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் இன இசைவியல் படித்தார். தொழில் வாழ்க்கை பல ஆண்டுகளாக பல்வேறு இந்திய பாடகர்களுடன் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய பிறகு, சங்கர் தனது சகோதரர்களான எல். வைத்தியநாதன் மற்றும் எல். சுப்பிரமணியம் ஆகியோருடன் இணைந்து இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் பயின்றபோது, ஆர்னெட் கோல்மேன், ஜிம்மி கேரிசன் மற்றும் ஜான் மெக்லாலின் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்களை சந்தித்தார். பின்னர், ஜான் மெக்லாலினுடன் இணைந்து சேர்ந்து சக்தி என்ற இசைக் குழுவை 1975 ஆம் ஆண்டில் நிறுவினார். இவர்கள் சக்தி (1975), எ ஹேண்ட்புல் ஆஃப் பியூட்டி (1976) மற்றும் நேச்சுரல் எலிமென்ட்ஸ் (1977) என மூன்று இசைத் தொகுப்புகளை வெளியிட்டனர் . இசைக்குழு கலைக்கப்பட்ட பிறகு, சங்கர் சிறிது காலத்திற்கு பிராங்க் சப்பாவிடம் வயலின் கலைஞராக இருந்தார், பின்னர் தி எபிடெமிக்ஸ் என்ற குழுவை நிறுவி, ஒரு இசைக்குழுத் தலைவராக பல இசைத் தொகுப்புகளை வெளியிட்டார். பீட்டர் கேப்ரியலுடன் இணைந்து, தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்ட் (1989) திரைப்படத்திற்கான ஒலிப்பதிவின் ஒரு பகுதியை எழுதினார். இதற்காக இவர் கிராமி விருதைப் பெற்றார். அடுத்த ஆண்டுகளில், சங்கர் கேப்ரியலின் பல தொகுப்புகளில் பணியாற்றினார். 1996 முதல், வயலின் கலைஞர் ஜிஞ்சர் சங்கருடன் (எல். சுப்பிரமணியத்தின் மகள்) சங்கர் & ஜிஞ்சர் இரட்டையர்களாக பணியாற்றி வருகிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website Article from DownBeat magazine (1978) தமிழிசைக் கலைஞர்கள் வாழும் நபர்கள் இந்திய வயலின் கலைஞர்கள் கருநாடக இசை வயலின் கலைஞர்கள் 1950 பிறப்புகள்
684290
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
சோபா மோகன்
சோபா மோகன் (Shobha Mohan) மலையாளத் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார். வாழ்க்கை வரலாறு சோபா மோகன், கேரளாவின் கொல்லத்திலுள்ள கொட்டாரக்கரையில் நடிகர் கொட்டாரக்கரை ஸ்ரீதரன் நாயர் மற்றும் விஜயலட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் மலையாள நடிகர் சாய்குமாரின் மூத்த சகோதரி ஆவார். 1982 ஆம் ஆண்டில் முகேஷுக்கு இணையாக பலூன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் மலையாள நாடகக் கலைஞர் கே. மோகன்குமாரை நவம்பர் 5,1984 அன்று மணந்தார். நடிகர்கள் வினு மோகன் மற்றும் அனு மோகன் ஆகியோர் இவர்களது மகன்கள் ஆவர். நடிகை வித்யா மோகன் இவரது மருமகள் ஆவார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ்த் திரைப்பட நடிகைகள் 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் இந்திய தொலைக்காட்சி நடிகைகள் வாழும் நபர்கள் இந்தியத் திரைப்பட நடிகைகள் மலையாளத் திரைப்பட நடிகைகள்
684292
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20702%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 702 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 702, பொதுவாக தே. நெ. 702 (National Highway 702 (India)) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 2இன் ஒரு துணைச் சாலை ஆகும். வழித்தடம் சான்டோங்கியா, லாங்லெங், லோஞ்சிங், மோன், லாபா, டிஸிட், சோனாரி, சபேகாட்டி. சந்திப்புகள் சான்டோங்கியா அருகே முனையம் லாங்லெங் சாபேகதி அருகே மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 702 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
684293
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20701%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய நெடுஞ்சாலை 701 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 701, (National Highway 701 (India)) பொதுவாக தே. நெ. 701 என குறிப்பிடப்படும், இந்த சாலை இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 1இன் துணை சாலையாகும். தெ. நெ. 701 இந்தியாவின் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தின் வழியாக செல்கிறது. வழித்தடம் பாரமுல்லா-ரபியாபாத்-குப்வாரா-தங்தார். முக்கிய குறுக்குச் சாலை பாராமுலாவுக்கு அருகில் உள்ள முனையம் மேலும் காண்க இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 701 இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்