id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
683482
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
சிந்து சமவெளி பாலைவனம்
சிந்து சமவெளி பாலைவனம், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணாத்தின் வடமேற்கில், சிந்து ஆறு மற்றும் செனாப் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலும் மனிதர்கள் வாழாத, புதர்ச் செடிகள் நிறைந்தது. இப்பாலைவனம் 19,501 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் கோடைக்கால வெப்ப நிலை ) ஆகவும்; குளிர்காலத்தில் பனி உறைந்து காணப்படும். இதன் கோடைக்கால சராசரி ஆண்டு மழைப்பொழிவு ஆக உள்ளது. தார் பாலைவனம் போன்று புதர் காடுகள் கொண்ட இப்பாலைவனத்தில் ஓநாய், வரிக் கழுதைப்புலி, கறகால் பூனை, இந்தியச் சிறுத்தை, காட்டுச் செம்மறி ஆடு, கொறிணிகள் மற்றும் செங்கழுத்து வல்லூறு உள்ளிட்ட 190 வகையான பறவையினங்கள் காணப்படுகிறது. படக்காட்சிகள் மேற்கோள்கள் பாக்கித்தானின் புவியியல் ஆசிய பாலைவனங்கள்
683483
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Solapur South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்தத் தொகுதி சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புவியியல் பரப்பு இந்தத் தொகுதியில் சோலாப்பூர் வடக்கு வட்டத்தில் உள்ள திர்கே, செல்கா வருவாய் வட்டங்கள், சோலாப்பூர் மாநகராட்சி பகுதி எண் 7 முதல் 14 மற்றும் 40-43 மற்றும் சோலாப்பூர் தெற்கு வட்டத்தின் காட்ஜி, மாண்ட்ரூப் மற்றும் வின்சூர் வருவாய் வட்டங்கள் அடங்கும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 2019 2014 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683486
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81
வித்தியாசாகர் சேது
வித்தியாசாகர் சேது அல்லது ஊக்ளி ஆற்றின் இரண்டாவது பாலம், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில், கொல்கத்தா மற்றும் ஹவுரா நகரங்களை ஊக்லி ஆற்றின் மீது கட்டப்பட்ட இப்பாலத்தின் வழியாக இணைக்கிறது. இப்பாலம் நீளம் மற்றும் அகலம் கொண்டது. இதில் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கல்வியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவாக, 1992ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பாலம் எஃகு வடக்கம்பிகளால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் கட்டுவதற்கான செலவு ரூபாய் 388 கோடி ஆகும். இதனை ஊக்லி ஆறு திட்ட ஆணையரால் வடிவமைக்கப்பட்டது.இப்பாலத்தில் வாகனங்கள் செல்ல இடது பக்கம் மூன்று வரிசையும், வலது பக்கம் மூன்று வரிசைகளும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 12ன் ஒரு பகுதியாக இப்பாலம் உள்ளது. இதனையும் காண்க மேற்கு வங்காளத்தின் மிக நீளமான பாலங்களின் பட்டியல் மேற்கோள்கள் உசாத்துணை கொல்கத்தா மேற்கு வங்காளப் பாலங்கள்
683488
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
கோவிந்து மாளவியா
பண்டிட் கோவிந்த மாளவியா(14 செப்டம்பர் 1902–27 பிப்ரவரி 1961), இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய விடுதலை இயக்க வீரரும், கல்வியாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவரது தந்தை மதன் மோகன் மாளவியா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவரும், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் ஆவார். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 6 டிசம்பர் 1948 முதல் 21 நவம்பர்1951 வரை பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1961 வரை இருந்தவர். மேற்கோள்கள் 1ஆவது மக்களவை உறுப்பினர்கள் 2ஆவது மக்களவை உறுப்பினர்கள் 1902 பிறப்புகள் 1961 இறப்புகள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
683489
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
கிரிதர் மாளவியா
கிரிதர் மாளவியா (14 நவம்பர் 1936 – 18 நவம்பர் 2024) அலகாபாத் உயர் நீதிமன்ற நீதியரசரும், பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் செயல்பட்டவர்.இவர் இந்திய விடுதலை இயக்க வீரர் மதன் மோகன் மாளவியாவின் பேரனும்; கோவிந்த் மாளவியாவின் மகனும் ஆவார். இவரது மகன் மனோஜ் மாளவியா இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். கங்கை ஆறு தூய்மை இயக்கத்தின் தலைவராக கிரிதர் மாளவியா இருந்தார் இவர் கங்கை மகாசபையின் தலைவராக பணியாற்றியவர். மேற்கோள்கள் 1936 பிறப்புகள் 2014 இறப்புகள் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரப் பிரதேச நபர்கள்
683500
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மதுரை தொடருந்து கோட்டம்
மதுரை தொடருந்து கோட்டம் (Madurai railway division) என்பது இந்தியாவின் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் ஒரு தொடருந்து கோட்டமாகும். இந்தக் கோட்டம் அதிகாரப்பூர்வமாக 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 1,356 கிமீ (843 மைல்) நீளத்துக்கு மேல் பரவியுள்ளது, இது தென்னக இரயில்வேயின் மிகப்பெரிய தொடருந்து கோட்டமாகும். திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம் உருவாவதற்கு முன்பு, இது நாட்டிலேயே மிகப்பெரிய தொடருந்து கோட்டங்களில் ஒன்றாக இருந்தது. தற்போது இது தமிழ்நாட்டின் பன்னிரண்டு மாவட்டங்களையும், கேரளத்தின் ஒரு மாவட்டத்தையும் உள்ளடக்கியது. இதன் தலைமையகம் மதுரையில் உள்ளது. இந்க் கோட்டத்தில் முக்கிய வருவாய் ஈட்டும் சந்திப்புகளாக மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய சந்திப்புகள் உள்ளது. இந்த நிலையங்களில் பயணிகள் மிகுதியாக வந்து செல்கின்றனர். வரலாறு தோற்றம் இப் பகுதியில் முதல் தொடருந்து பாதை 1857 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அது மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளி வழியாக திண்டுக்கல்லை இணைக்கும் வகையில் உருவாக்கப்படிருந்தது. அடுத்த ஆண்டு, மதுரையில் இருந்து துறைமுக நகரான தூத்துக்குடிக்கு தொடருந்து பாதை போடும்பணி நிறைவடைந்தது. அதே ஆண்டில், மணியாச்சியிலிருந்து திருநெல்வேலிவரை பிரிந்து செல்லும் மற்றொரு பாதை திறக்கப்பட்டது. மற்ற தற்போதைய பாதைகளில் பெரும்பாலானவை இருபதாம் நூற்றாண்டில் முடிக்கப்பட்டவை. அவை பின்வருமாறு: 1902 இல் மதுரை-மண்டபம் வழித்தடம் 1902ல் திருநெல்வேலி-கல்லிடைக்குறிச்சி வழித்தடம் 1902 இல் மானாமதுரை-சிவகங்கை வழித்தடம் 1903-ல் கல்லிடைக்குறிச்சி-செங்கோட்டை வழித்தடம் 1904 இல் கொல்லம்-புனலூர் வழித்தடம் 1904 இல் புனலூர்-செங்கோட்டை வழித்தடம் 1906ல் பாம்பன்-ராமேஸ்வரம் பாதை 1908 இல் பாம்பன்-தனுஷ்கோடி வழித்தடம் 1914 இல் மண்டபம்-பாம்பன் வழித்தடம் 1927ல் விருதுநகர்-தென்காசி வழித்தடம் 1928-ல் திண்டுக்கல்-பொள்ளாச்சி வழித்தடம் 1929ல் திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை வழித்தடம் 1930 இல் புதுக்கோட்டை-சிவகங்கை வழித்தடம் 1963 இல் விருதுநகர்-அருப்புக்கோட்டை வழித்தடம் 1964 இல் அருப்புக்கோட்டை-மானாமதுரை வழித்தடம் துவக்கம் திருநெல்வேலியையும் உள்ளடக்கிய கோட்டத்தின் தலைமையகத்தை மதுரையில் அமைக்க அரசு முடிவு செய்தது. எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடம், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-திருநெல்வேலி-மதுரை வழித்தடம், கொல்லம்-செங்கோட்டை-திருநெல்வேலி வழித்தடம், ராமேஸ்வரம்-மானாமதுரை - மதுரை வழித்தடம், மானாமதுரை-காரைக்குடி-திருச்சி வழித்தடம், மதுரை-திண்டுக்கல்-பொள்ளாச்சி வழித்தடம், காரைக்குடி-திருத்துறைப்பூண்டி-திருவாரூர் வழித்தடம், மதுரை-போடிநாயக்கனூர் வழித்தடம் ஆகியவற்றை உள்ளடக்கிய மதுரை ரயில்வே கோட்டம் 1956 இல் உருவாக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து வழித்தடங்களும் அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டில், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தை உருவாக்க இந்தக் கோட்டம் மறு சீரமைக்கப்பட்டது. மதுரை கோட்டத்தின் மீட்டர் கேஜ் பாதைகள் தக்கவைக்கப்பட்ட நிலையில், மதுரை கோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அனைத்து அகலப் பாதை வழித்தடங்களும் திருவனந்தபுரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டன. இதனால், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-கன்னியாகுமரி அகலப்பாதை வழித்தடம் மற்றும் கட்டுமானத்தில் இருந்த திருநெல்வேலி-நாகர்கோவில் அகலப்பாதை வழித்தடம் ஆகியவை திருவனந்தபுரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டன. இதனால் மதுரைக் கோட்டத்தின் அதிகார வரம்பு 1356 கி.மீ. என குறைந்தது. அப்போது, ​​திருநெல்வேலி-மதுரை வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றும் போது, ​​கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மீண்டும் மதுரை கோட்டத்திற்கு மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டது. திருநெல்வேலி-மதுரை வழித்தடம் 8-4-1981 அன்று அகலப் பாதையாக மாற்றப்பட்டது. நிர்வாகமும் அதிகார வரம்பும் இந்தக் கோட்டமானது தமிழ்நாடு, கேரளம் என இரு மாநிலங்களில் பரவியுள்ளது. தமிழ்நாட்டில் இது கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களுக்கு சேவை செய்கிறது:. கேரளத்தில், இந்தக் கோட்டமானது கொல்லம் மாவட்டம் கிளிகொல்லூர் தொடருந்து நிலையம் வரை தன் எல்லையைக் கொண்டுள்ளது. நிலையங்களின் வகைப்பாடு இந்த பட்டியலில் மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் உள்ள நிலையங்கள் மற்றும் அவற்றின் நிலைய வகைப்பாடு ஆகியவை அடங்கும். நாட்டரசன்கோட்டை, கருப்பட்டி, நெடுகுளம், மானாமதுரை கிழக்கு, குளத்தூர், தொண்டைமாநல்லூர் மற்றும் சில தொடருந்து நிலையங்கள் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டிற்கான மதுரை கோட்டத்தில் உள்ள நிலையங்கள் மற்றும் அதன் எம். எஸ். ஜி வகைகளின் பட்டியல். செயல்திறனும் வருவாயும் இந்தக் கோட்டம் 2013 ஆம் நிதியாண்டில் அதன் செயல்திறன் வருவாய் பிரிவுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்த செயல்திறன் - சிறந்த பிரிவு - விருதை வென்றது. 2013-14 ஆம் ஆண்டிற்கான மொத்த தொடக்க வருவாய் ரூ 576.29 கோடியாக உள்ளது, இது 2012-13 ஆம் ஆண்டின் வருவாயான ரூ 523.68 கோடியை ஒப்பிடிம்போது ஒட்டுமொத்த வருவாயில் 10% வளர்ச்சி என தெரிகிறது. திட்டங்கள் மற்றும் மேம்பாடு இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் பின்வரும் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் சந்திப்பு, தென்காசி, கோவில்பட்டி, இராசபாளையம், சிறீவில்லிப்புத்தூர், இராமேசுவரம், திருச்செந்தூர், பழனி, இராமநாதபுரம், சோழவந்தான், புதுக்கோட்டை, மணப்பாறை, பரமக்குடி, காரைக்குடி, அம்பாசமுத்திரம், போன்ற தொடருந்து நிலையங்கள் தமிழ்நாட்டிலிருந்தும், புனலூர் கேரளாவிலிருந்தும் புதுப்பிக்கும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செயல்பாடுகளும் சேவைகளும் வழக்கமான தொடருந்துகள் சிறப்பு தொடருந்துகள் நிலையங்கள் மேலும் காண்க திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம் திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம் தென்னக இரயில்வே மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Madurai railway division இந்திய இரயில்வேயின் கோட்டங்கள் தமிழகத்தில் தொடருந்து போக்குவரத்து தென்னக இரயில்வே மதுரையில் போக்குவரத்து மதுரை தொடருந்து கோட்டம்
683501
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28IV%29%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
ருத்தேனியம்(IV) புளோரைடு
ருத்தேனியம்(IV) புளோரைடு (Ruthenium(IV) fluoride) என்பது RuF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ருத்தேனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு ருத்தேனியம்(IV) புளோரைடு சேர்மம் முதன்முதலில் 1963 ஆம் ஆண்டில் ஆலோவே மற்றும் பீகாக்கு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. அயோடின் பெண்டாபுளோரைடை கரைப்பானாகப் பயன்படுத்தி, அயோடினுடன் ருத்தேனியம் பெண்டாபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் மஞ்சள் நிறத்தில் திண்மமாக இது உருவானது. 10RuF5 + I2 -> 10RuF4 + 2IF5 இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் ருத்தேனியம்(IV) புளோரைடு தூய்மையற்றது என்று அடுத்தடுத்த ஆய்வுகள் சுட்டிக்காட்டின. நீரற்ற ஐதரோபுளோரிக் அமிலத்தில் KRuF6 சேர்மத்துடன் ஆர்சனிக் ஐம்புளோரைடைச் சேர்த்து 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் 1992 ஆம் ஆண்டில் முதன்முறையாக நீர் மற்றும் ஆக்சிசனை கண்டிப்பாக விலக்கி தூய, இளஞ்சிவப்பு நிறத்தில் ருத்தேனியம்(IV) புளோரைடு தனிமைப்படுத்தப்பட்டது. இந்த தொகுப்பு இலூயிசு அமிலம் AsF சேர்மத்தின் மிகவும் வலுவான புளோரைடு அயனியை ஏற்றுக்கொள்ளும் திறன்களைப் பயன்படுத்துகிறது. K2RuF6 + 2AsF5 → RuF4 + 2KAsF6 இயற்பியல் பண்புகள் திண்ம நிலையில் உள்ள RuF4 ஒரு பல்லுருவ சேர்மமாகும். இது RuF6 எண்முகத்தைக் கொண்ட நெளி அடுக்குகளின் முப்பரிமாண அமைப்பு பகிரப்பட்ட புளோரின் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளது. இதன் படிக அமைப்பு வனேடியம் டெட்ராபுளோரைடைப் போன்றதாகும். P21/n என்ற இடக்குழுவில் a = 560.7 பைக்கோமீட்டர் , b = 494.6 பைக்கோமீட்டர், மற்றும் c =514.3 பைக்கோமீட்டர், β = 121.27° என்ற அலகுசெல் அளவுருக்களுடன் ஒற்றைச் சரிவச்சுப் படிக அமைப்பில் ருத்தேனியம்(IV) புளோரைடு படிகமாகிறது. ருத்தேனியம்(IV) புளோரைடு மிகவும் வினைத்திறன் கொண்ட சேர்மமாகும். ஈரப்பதத்துடன் தொடர்பு கொண்டவுடன் உடனடியாக கருமையாகிறது. மேலும், தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து ருத்தேனியம் டை ஆக்சைடைக் கொடுக்கிறது. கண்ணாடி கொள்கலன்களில் ருத்தேனியம்(IV) புளோரைடை சேமிக்க முடியும். இருப்பினும், மாதிரியை 280 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கினால் தாக்கப்படும். மேற்கோள்கள் புளோரைடுகள் ருத்தேனியம்(IV) சேர்மங்கள்
683504
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
செனான் புளோரைடு நைட்ரேட்டு
செனான் புளோரைடு நைட்ரேட்டு (Xenon fluoride nitrate) என்பது FXeONO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். புளோரோசெனோனியம் நைட்ரேட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. தயாரிப்பு செனான் புளோரைடு நைட்ரேட்டு கீழ்கண்ட வினையின் வழியாக உருவாகிறது: [FXeOXeFXeF][AsF6] + 2NO2F → FXeONO2 + NO2AsF6. செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மத்தின் சுத்திகரிப்பு பின்னர் சல்பியூரைல் குளோரைடு புளோரைடு கரைசலில் கரைப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது நைட்ரோனியம் ஆர்சனிக் அறுபுளோரைடை திடப்பொருளாக விட்டுச் செல்கிறது. செனான் இருபுளோரைடை 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் டைநைட்ரசன் டெட்ராக்சைடில் கரைத்தும் செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மத்தைத் தயாரிக்கலாம். XeF2 + NO+ + NO3− → FXeONO2 + NOF இம்முறையில் குறைந்த அளவு விளைபொருளே உருவாகும். திரவத்தில் அதிக நைட்ரேட்டு அயனி இல்லாததாலும் செனான் புளோரைடு நைட்ரேட்டு சிதைவதாலும் இந்த தயாரிப்பு முறை திறனற்றது.: செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மத்தை தயாரிக்கப் பயன்படும் மற்றொரு முறை: XeF2 + HNO3 → FXeONO2 + HF பண்புகள் செனான் புளோரைடு நைட்ரேட்டு வெண்மை நிறப் படிகமாகும். P21/c என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சுப் படிகமாக உருவாகிறது. அலகு செல் மொத்தம் 386.6 Å3 கன அளவு கொண்ட நான்கு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. a = 4.6663 Å, b = 8.799 Å c = 9.415 Å என்ற அலகு செல் பரிமாணங்களுடன் செங்குத்தாக இல்லாத கோணம் β = 90.325° என்ற அளவுடன் மூலக்கூறு எடை 212.3 ஆகவும் படிக அடர்த்தி 3.648 ஆகவும் இதன் கட்டமைப்பு உள்ளது. இந்த அளவுகள் -173 பாகை செல்சியசு வெப்பநிலையில் எடுக்கப்பட்ட அளவுகளாகும். கட்டமைப்பிலுள்ள Xe–F பிணைப்பின் நீளம் 1.992, Xe–O பிணைப்பின் நீளம் 2.126 Å, O–NO2 பிணைப்பின் நீளம் 1.36 Å, N–Oசிசு பிணைப்பின் நீளம் 1.199Å, N–Oமறுபக்கம் பிணைப்பின் நீளம் 1.224 Å ஆகவும் காணப்படுகின்றன. F–Xe–O பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 177.6°, Xe-O-N பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 114.7° , (Xe)O–N–Oசிசு பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 114.5°, (Xe)O–N–O மறுபக்கம் பிணைப்புகளிடையே பிணைப்புக் கோணம் 118.4, Oசிசு–N–Oமறுபக்கம் பிணைப்புகளின் கோணம் 127.1° ஆகவும் உள்ளன. செனான் அணுவில் உள்ள பிணைப்பு நீளம் மற்றும் கோணங்கள் FXeOSO2F மற்றும் FXeOTeF5 சேர்மங்களில் உள்ளதைப் போலவே இருக்கும். இது முனைவுற்ற ஆக்சிசன் பிணைப்பைக் குறிக்கிறது. Xe-O-N கோணமானது ஆலசன் நைட்ரேட்டுகளைக் காட்டிலும் பெரியதாகும். இது Xe-O பிணைப்பிற்கான குறைந்த பிணைப்பு அடர்த்தியைக் குறிக்கிறது. N-O ஒருபக்க பிணைப்பு நீளம் N-Oமறுபக்க பிணைப்பு நீளத்தை விட அதிகமாக உள்ளது. இது மற்ற ஆலசன் நைட்ரேட்டுகளுக்கு எதிரானதாகும். செனான் புளோரைடு நைட்ரேட்டு குறிப்பாக நிலைப்புத்தன்மையுடன் இல்லை. மெதுவாக -78 °செல்சியசு வெப்பநிலையில் இது உடைந்து XeF2·N2O4 சேர்மத்தை அளிக்கிறது. இது பல நாட்கள் கால அளவில் நடக்கும். 0 பாகை செல்சியசு வெப்பநிலையில், செனான் புளோரைடு நைட்ரேட்டு சேர்மமானது XeF2 ஆகச் சிதைகிறது. இதன் அரை ஆயுள் காலம் ஏழு மணிநேரமாகும். மேற்கோள்கள் செனான்(II) சேர்மங்கள் நைட்ரேட்டுகள் புளோரைடுகள்
683521
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
அலபாமா குகை இறால்
அலபாமா குகை இறால் (பாலிமோனியசு அலாபாமே) என்பது அட்டியிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இறால் சிற்றினமாகும். இது அலபாமா மாநிலத்தில் உள்ள குகைகளில் மட்டுமே காணப்படுகிறது. காப்பு நிலை பேலிமோனிசு அலாபாமே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் அருகிய இனமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 7,1988 முதல், அமெரிக்காவில் அழிந்து வரும் இனங்கள் சட்டத்தின் கீழ் ஒரு ஆபத்தான இனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. பரவல் அலபாமா குகை இறால் அலபாமாவில் ஐந்து குகைகளில் மட்டுமே காணப்படுவதாக அறியப்படுகிறது. இவை அனைத்தும் அலபாமாவின் மாடிசன் கவுண்டி உள்ளன. செல்டா குகை என்பது இச்சிற்றித்தின் வகை இருப்பிடமாகும். ஆனால் சாத்தியமான மக்கள்தொகை பாப்காட் குகை மற்றும் கெரிங் குகை, குளோவர் குகை மற்றும் பிரேசுல்டன் குகை ஆகியவற்றை உள்ளடக்கிய வளாகத்தில் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சூழலியல் பே. அலபாமே வண்டல் அடிப்பகுதிகளைக் கொண்ட குகைக் குளங்களில் காணப்படுகிறது. அலபாமா குகை இறால்களின் வேட்டையாடுபவர்களில் தெற்கு குகை மீன் டைப்லிச்ச்திசு சப்டெரேனியசு, டென்னசி குகை சாலமண்டர் கைரினோபிலசு பலேயுகசு, பல்வேறு க்ரேபிசு இனங்கள், தவளை, ரக்கூன் ஆகியவை அடங்கும். வகைப்பாட்டியல் அலபாமா குகை இறால்களின் நெருங்கிய உறவினராக கென்டக்கி குகை இறால், பேலிமோனிசு காந்தேரி உள்ளது. இது கென்டக்கியின் மம்மத் குகை தேசிய பூங்காவில் வாழ்கிறது. இரண்டு சிற்றினங்களையும் அளவுகளின் அடிப்படையில் வேறுபடுத்தி அறியலாம். ப்பே. அலபாமே பே. காந்தேரி விடப் பெரியது. பே. அலபாமே நீளமான தலைக்கூர் நீட்டியினைக் கொண்டது. இதில் அதிக எண்ணிக்கையிலான முட்கள் காணப்படும். மேற்கோள்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்
683523
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
சேந்தங்குடி ஜமீன்
'சேந்தங்குடி ஜமீன்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதி தானாண்மை நாடு அல்லது தானவ நாடு என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது வணங்காமுடி வழுவாட்டிதேவர் என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது. சேந்தங்குடி, நகரம், கீரமங்கலம், குலமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பதினெட்டுப்பட்டி கிராமங்களை உள்ளடக்கியது சேந்தங்குடி ஜமீனாகும். வரலாறு 1879 ஆம் ஆண்டு, விஜயரகுநாத அருணாசல வணங்காமுடி வழுவாட்டிதேவர் கீழ் 9 கிராமங்கள் இருந்தன (8631 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 2046 ரூபாய் 10 அணா 2 பைசா ஆகும். தஞ்சைக் ஈசநாட்டு கள்ளர் பிரிவைச் சேர்ந்த வழுவாட்டித் தேவர், சேர்வை போன்ற பட்டப்பெயர்களை உடைய நிலக்கிழார்கள் வாழும்படியான பதினெட்டுக் கிராமங்களை உள்ளடக்கிய தானாண்மை நாடு பகுதியில் மொய் விருந்து விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுவது தனி சிறப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், "ஆலங்குடி " பகுதி அம்புக்கோவில் (முற்கால அழும்பில்) ஊரில் உள்ள கல்வெட்டில் தானவனாட்டு பற்றி குறிப்பிடப்படுகின்றது. அந்த கல்வெட்டு வரிகளாக 'சோபகிருது வருஷூ இராச இராசவள நாட்டுப்‌ பன்றி சூழ்‌ நாட்டு அழிம்பிநாயினார்‌ யிராசேந்திர சோளீசுரமுடைய நாயனாற்குத்‌தானவ னாட்டு நெடுவாசல்‌ சீமைக்குக்‌ கறுத்தாவான பாண்டிய பெருமாளான மாவுலி வாணாதிராயர் மக்களில்‌ திருமேனியழகியரான குலசேகரக்‌ காலிங்கராயரும்‌ பழைய வனப்பெருமாளான சீவலக்காலிங்கிராயரும்‌ செந்தாமரைகண்ணரும்‌ இம்மூவருமோம்‌ வீரராசேந்திர சோளீசுரமுடை ய நாயனாற்குத்‌ திருனாமத்துக்காணி ஆக விட்ட நிலம்‌வதுக்‌ கண்டியூர்‌ வயல்‌ கீழைவயலில்‌ செட்டியள்‌ ஒண்டி உறை" என்று உள்ளது. தற்போதைய சேந்தங்குடி ஜமீன்தார் ராஜேந்தி சேதுபதி வணங்காமுடி வழுவாட்டிதேவர் ஆவார். மேற்கோள்கள் குறுநில மன்னர்கள் பாளையங்கள்
683532
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
எரண்டோல் சட்டமன்றத் தொகுதி
எரண்டோல் சட்டமன்றத் தொகுதி (Erandol Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இது சல்கான் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். மேலும் சங்கான் மாவட்டத்தில், சல்கான் நகரம், சல்கான் கிராமப்புறம், அமல்னர், சாலிசுகான், பச்சோரா ஆகிய தொகுதிகளும் உள்ளது. தேர்தல் முடிவுகள் 2019 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683537
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தித்திவங்சா நிலையம்
தித்திவங்சா நிலையம் அல்லது தித்திவங்சா விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Titiwangsa Station; மலாய்: Stesen Titiwangsa; சீனம்: 蒂蒂旺沙站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், செரி பெட்டாலிங் வழித்தடம், கோலாலம்பூர் மோனோரெயில், புத்ராஜெயா வழித்தடம் ஆகிய 4 வழித்தடங்கள் சேவை செய்கின்றன. அந்த நான்கு தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பை இந்த நிலையம் அனுமதிக்கிறது. பொது தித்திவங்சா துணை மாவட்டத்தின் துன் ரசாக் சாலையில் (Jalan Tun Razak); கோம்பாக் ஆற்றின் மருங்கில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மற்றும் இந்த நிலையத்திற்கு அருகில் தித்திவாங்சா சென்ட்ரல் என்று அழைக்கப்படும் தித்திவாங்சா பேருந்து நிலையமும் உள்ளது. இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட வழித்தட அமைப்பின், இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1998-இல், இந்த நிலையம் முதன்முதலில் திறக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில், தித்திவங்சா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இந்த நிலையத்தை இணைப்பதே முதன்மை நோக்கமாக இருந்தது. துன் ரசாக் நிலையம் இஸ்டார் வழித்தட அமைப்பின் 2-ஆம் கட்டத்தின் கீழ், கோலாலம்பூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்குச் சேவை செய்ய 11 நிலையங்களைக் கொண்ட 15 கி.மீ. தொடருந்து பாதை அமைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் தித்திவங்சா நிலையத்திற்கு துன் ரசாக் நிலையம் என்று பெயரிடப்பட்டது. இலகு விரைவுப் போக்குவரத்து தித்திவாங்சா எல்ஆர்டி நிலையம் என்பது அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் எனும் இரு வழித்தடங்களின் வழியாக தெற்கே அம்பாங் எல்ஆர்டி நிலையம், புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கும்; வடக்கே செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் நோக்கிச் செல்லும் தொடருந்துகளுக்கான ஓர் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையமாகச் சேவை செய்கிறது. முன்னாள் இஸ்டார் வழித்தடத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக, 1998-இல் திறக்கப்பட்ட இந்த நிலையம், தித்திவாங்சா நகர்ப் பகுதிகள்; மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள்; ஆகியவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைப்பதை முதனமை நோக்கமாகக் கொண்டுள்ளது. வசதிகள் இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து நிலையங்களையும் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன. பேருந்து சேவை தித்திவங்சா நிலையத்திற்கு வடக்கே கோம்பாக் ஆற்றுப் பகுதியில், பெக்கெலிலிங் பேருந்து நிலையம் (Pekeliling Bus Station) என்று அழைக்கப்படும் ஒரு பேருந்து மையம் உள்ளது; பேருந்து மையத்தைச் சுற்றிலும் பயணிகளுக்கு நிழல் தரும் கூடங்களும் உள்ளன. இந்த நிலையம் பல உள்ளூர்ப் பேருந்து சேவைகளை வழங்குகிறது. முதன்மையாக, ரேபிட் பேருந்து மற்றும் கோ கேஎல் நகர பேருந்துகள் சேவையில் உள்ளன. மேற்கு பகாங்கில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து நகரங்களுக்கு இடையிலான பேருந்துச் சேவைகள் உள்ளன. பகாங் மாநிலத்தின் கெந்திங் மலை (ஏரோபஸ்), பெந்தோங் (மாரா லைனர், சென்ட்ரல் பகாங், பகாங் லின் சியோங் பேருந்துகள்), ரவுப், கோலா லிப்பிஸ், கேமரன் மலை, ஜெராண்டுட், தெமர்லோ, திரியாங் நகரங்களுக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன. காட்சியகம் தித்திவங்சா நிலையக் காட்சிப் படங்கள்: நிலையச் சுற்றுப்புறம் கோலாலம்பூர் மருத்துவமனை தித்திவங்சா ஏரி மேலும் காண்க கோலாலம்பூர் மோனோரெயில் புத்ராஜெயா வழித்தடம் செந்தூல் கொமுட்டர் நிலையம் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் எம்ஆர்டி சுற்று வழித்தடம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
683541
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் (இந்தியா)
பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் களங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் (இந்தியா), 1958இன் கீழ்தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வரையறை செய்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழ்காணும் சின்னங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக வகைப்படுத்தியுள்ளது:. அவைகள் பின்வருமாறு: பண்டைய நினைவுச்சின்னங்களில் சிதிலங்கள் பண்டைய நினைவுச்சின்னங்களின் தொல்லியல் களம் நினைவுச்சின்னத்தைப் பாதுகாப்பதற்காக வேலிகள் அல்லது பாதுகாப்பு உறை கட்டமைப்புகள் உள்ள நிலம் நினைவுச்சின்னத்தை மக்கள் சுதந்திரமாக அணுகக்கூடிய நிலம் நினைவுச்சின்னங்களின் அட்டவணை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வகைப்படுத்தியுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களின் பட்டியல்: இதனையும் காண்க உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா இந்தியாவில் உள்ள குகைகள் இந்தியக் குடைவரைக் கோயில்கள் இந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்கள் இந்திய அருங்காட்சியகங்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் PIB இந்தியாவின் நினைவுச்சின்னங்கள் இந்தியப் பட்டியல்கள்
683546
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சாலீசுகாவ் சட்டமன்றத் தொகுதி
சாலீசுகாவ் சட்டமன்றத் தொகுதி (Chalisgaon Assembly constituency ) என்பது மேற்கு இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.சல்கான் நகரம், சல்கான் கிராமப்புறம், எரண்டோல், அமல்னேர், பச்சோரா மற்றும் சாலீசுகாவ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சல்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டனவாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683547
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையம்
புத்ரா பன்னாட்டு வணிக மைய எல்ஆர்டி நிலையம் அல்லது புத்ரா பன்னாட்டு வணிக மைய இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: PWTC LRT Station; மலாய்: Stesen LRT PWTC; சீனம்: 布特拉世界贸易中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களுக்கான ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் பி.டபிள்யூ.டி.சி நிலையம் (PWTC Station) என பரவலாக அறியப்படுகிறது. புத்ரா பன்னாட்டு வணிக மையம் (Putra World Trade Center) எனும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமே பி.டபிள்யூ.டி.சி (PWTC) ஆகும். புத்ரா பன்னாட்டு வணிக மையம் என்பது தற்போது கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் (World Trade Centre Kuala Lumpur) என அறியப்படுகிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் என்பது மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையமாகும். பொது இந்த நிலையம் கோலாலம்பூரின் தங்க முக்கோணப் பகுதியில் (Golden Triangle) அமைந்துள்ளது; மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் (Kuala Lumpur International Airport) (KLIA) இருந்து 45 நிமிடப் பயணத் தொலைவில் உள்ளது. அத்துடன், இந்த நிலையத்திற்கு அருகில் ஒரு வணிகப் பேரங்காடி, உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் 3 - 5 நட்சத்திரத் தங்கும் விடுதிகள் உள்ளன. அவை நடந்து செல்லும் தொலைவில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையத்திலிருந்து ஏறக்குறைய 400 மீட்டர் நடைப்பயணத்தில், பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்; மற்றும் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்கள் உள்ளன. அங்கு புத்ரா கொமுட்டர் நிலையம் உள்ளது. சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையம் புத்ரா பன்னாட்டு வணிக மைய எல்ஆர்டி நிலையம் 1998-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) அமைப்பின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக, கோலாலம்பூரில் உள்ள சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து செரி பெட்டாலிங் வரையில் 12 கிமீ நீட்டிப்பு செய்யப்பட்டது. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் மற்றும் இந்த நிலையம், சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் முதல் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் வரையிலான 3 கிமீ நீட்டிப்பையும் கொண்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ், கோலாலம்பூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு சேவை செய்ய 11 நிலையங்களைக் கொண்ட 15 கி.மீ. வழித்தடம் உருவாக்கப்பட்டது. மேலும் காண்க பிரசரானா மலேசியா புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கின் போக்குவரத்து அமைப்பு காட்சியகம் புத்ரா பன்னாட்டு வணிக மைய நிலையக் காட்சிப் படங்கள்: மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
683549
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87
வினோத் தாவ்டே
வினோத் தாவ்டே மகாராட்டிரம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மகாராட்டிரா சட்ட மேலவை உறுப்பினரும் ராக ஆவார். இவர் பள்ளிக் கல்வி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் மராத்தி மொழி மற்றும் கலாச்சார அமைச்சராக உள்ளார். இவர் 2011–2019 காலகட்டத்தில், போரிவலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official profile on Bharatiya Janata Party - Maharashtra website மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1963 பிறப்புகள் மராத்தியர்கள்
683551
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பீகாரின் ஜமீந்தார்கள்
பீகாரின் ஜமீந்தார்கள் (Zamindars of Bihar) முகலாய ஆட்சியின் போதும் பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போதும் பீகாரில் தன்னாட்சி மற்றும் அரை தன்னாட்சி ஆட்சியாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருந்தனர். இவர்கள் 1947இல் இந்தியச் சுதந்திரம் வரை நீடித்த நிலப்பிரபுத்துவத்தை உருவாக்கினர். பீகாரில் இவர்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் எவ்வளவு நிலத்தை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து இவர்களை சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஜமீந்தார்களாகப் பிரிக்கலாம். பீகாருக்குள், இவர்கள் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஜமீந்தாரரும் தங்கள் சொந்த நிலையான இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள். அவை பொதுவாக தங்கள் சொந்த குலத்தவர்களால் ஆனவை. இந்த ஜமீந்தார்களில் பெரும்பாலோர் பொதுவாக இராஜபுத்திரர்கள், பூமிகார்கள், பிராமணர்கள், காயஸ்தர்கள் அல்லது முஸ்லிம்கள் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முற்போக்கு சாதி ஜமீந்தார்கள் பீகார் மாநிலத்தின் அரசியலில் பங்கேற்றனர். மேலும் சுதந்திரம் பெற்ற முதல் சில தசாப்தங்களில் அரசியலில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருந்தனர். இருப்பினும், 1970 முதல், அவர்கள் இந்த இருப்பை இழக்கத் தொடங்கினர், ஏ. என். சின்ஹா சமூக அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டி. எம். திவாகரின் கூற்றுப்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளின் கூற்றுக்கு மத்தியில் இவர்கள் 2020 ஆம் ஆண்டில் “அமைதியான பார்வையாளர்களாக” மாற்றப்பட்டனர். 1950களில் பீகாரின் நிலச் சீர்திருத்த இயக்கம் அதிகளவு நிலம் வைத்திருந்த நில உரிமையாளர்களின் நில உடைமைகளை கலைக்க வழிவகுத்தது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, நல்ல நிலைமையிலிருந்த பல விவசாய சமூகங்கள் ஜமீந்தார்களின் உதவியுடன் தங்கள் நிலங்களை அதிகரிக்கத் தொடங்கினர். இருப்பினும், இந்தச் சீர்திருத்தங்களின் பலன்கள் பீகாரின் சமூகத்தின் மிகக் குறைந்த அடுக்குகளான பட்டியல் சாதியினருக்குப் பரவவில்லை, சீர்திருத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தின் பல புதிய நிலப்பிரபுக்கள் பீகாரின் கோரி, குர்மி மற்றும் யாதவ சாதி போன்ற குழுக்களிடமிருந்து வெளிப்பட்டனர். முகலாயர்களுடனான உறவுகள் பீகாரில் முகலாய ஆட்சி கொந்தளிப்பாகவே இருந்தது. ஏனெனில் பிராந்தியத்தின் பல ஜமீந்தார்கள் ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்க்க தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் அரசு ஊழியரான ஜான் பீம்ஸ், முகலாயர்கள் ஆட்சி செய்த பீகாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மாநிலத்தையோ அல்லது அதன் அண்டை நாடுகளையோ கொள்ளையடிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த அனைவரும் தங்களுக்கு திருப்தியைத் தரும் வரை கொள்ளையடித்தனர்”. ஜமீந்தார்கள் மாநிலத்திற்கு பணம் கொடுக்க மறுத்து, அண்டை ஜமீந்தார்களைத் தாக்க படைகளைச் சேகரிப்பது இந்த காலகட்டத்தில் பீகாரில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. வங்காளம் மற்றும் முர்சிதாபாத்தின் நவாப்கள் பீகாரின் பெயரளவிலான ஆளுநர்களாக ஆகும் காலம் வரை அதிகாரத்தின் மீதான இந்த அணுகுமுறை தொடர்ந்தது. பீகாரில் அதிக அளவு வருவாய் மற்றும் வரியை வழங்கும் திறன் இருந்தபோதிலும், 1748 வரை நவாப்களால் பீகார் தலைவர்களிடமிருந்து எந்தப் பணத்தையும் வசூலிக்க முடியவில்லை என்று பதிவுகள் காட்டுகின்றன. மேலும், பெறப்பட்ட தொகை கூட மிகவும் குறைவாகவே இருந்தது. ஆங்கிலேயர்களுடனான உறவுகள் முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதியின் மீது ஆதிக்கம் செலுத்தியது. காலனித்துவ சக்தியின் வருவாய் அமைப்பு “அதன் கொள்கையில் எளிமையாகவும், அதன் செயல்பாட்டில் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும்” என்று விரும்பியது. ஆனால் ஜமீந்தாரி அமைப்பு மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆரம்பகால பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட, திவானி (1765) மானியத்திலிருந்து நிரந்தர குடியேற்றம் (1793) வரை அதை மாற்ற விரும்பவில்லை. ராஜ் தர்பங்கா, அத்வா , தெகாரி ராஜ், கயை ஆகிய இடங்களிலுள்ள உள்ள தேவ் குடும்பங்கள் மற்றும் சகாபாத் ஆகிய இடத்திர்லிருந்த தும்ராவ் குடும்பங்கள் ஆகியவை பீகாரின் முக்கிய ஜமீந்தார்களில் செழிப்பை அனுபவித்தன. ஜமீந்தாரி பகுதிகளில் சமூக நிலை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிரந்தர குடியேற்றச் சட்டம் பீகாரில் நில உடைமை முறைகளை கணிசமாக மாற்றவில்லை. இதனால் இராஜபுத்திரர்கள் மற்றும் பூமிகார்கள் முக்கிய ஜமீந்தார்களாக இருந்தனர். இது அவர்களின் சில அதிகாரங்களைக் குறைத்தது. ஆனால் விவசாயிகளின் வழக்கமான குடியுரிமை உரிமைகளையும் பறித்தது.. பிரித்தானிய ஆட்சி, நிலம் மற்றும் வரி வசூல் தொடர்பான உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இராஜபுத்திரர்கள் தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர உதவியது. நிலமற்ற தொழிலாளர்களை ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் கட்டாய உழைப்பு, அதிக வாடகை, குறைந்த ஊதியம், சமூக கட்டுப்பாடுகள், வெளியேற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு வடிவங்களை எடுத்தன. ராஜ்புத் மற்றும் பூமிகார் நில உரிமையாளர்களால் கீழ் சாதியைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது சாகாபாத் மாவட்டத்தில் பொதுவானதாக இருந்தது. திரிவேணி சங்கம் மற்றும் கிசான் சபைகள் போன்ற நடுத்தர விவசாய சாதிகளின் வளர்ந்து வரும் அமைப்புகள் சுரண்டல் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டன. நக்சலைட்டு அச்சுறுத்தலும் ஒரு சோதனையாக செயல்பட்டது. ஜமீந்தார்களின் அரசியல் இருப்பு ஒழிப்பும் வீழ்ச்சியும் 1947இல் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, பீகாரில் ஜமீந்தாரி முறை ஒழிக்க குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரிய அளவிலான ஆதரவு இருந்தது. இது தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைமையில் ஒழிப்புக்கு ஆதரவாக ஒரு பெரிய அளவிலான இயக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒழிப்பு நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த பூமிகார் ஜமீந்தார்கள் நிலைமை தங்களுக்கு சாதகமாக இருக்கத் திட்டமிட்டனர். இருப்பினும், ராஜ்புத்-காயஸ்தர் ஜமீந்தார்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில், பீகார் ஜமீந்தாரிகள் ஒழிப்பு சட்டம் 1949 இல் நிறைவேற்றப்பட்டது. ஜமீந்தாரி முறையை ஒழித்ததன் மூலம் சமூக நிலப்பரப்பில் ஆழமான தாக்கம் ஏற்பட்டது. நீண்ட காலமாக அதிகாரத்தையும் சலுகையையும் கொண்டிருந்த பல உயர் சாதி ஜமீந்தார்கள் தங்கள் நிலத்தையும் செல்வாக்கையும் இழந்தனர். இதற்கிடையில், வரலாற்று ரீதியாக குறிப்பிடத்தக்க உள்ளூர் செல்வாக்கைப் பயன்படுத்திய காயஸ்த ஜமீந்தார்களின் சந்ததியினர், உள்ளூர் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் புதிய அரசியல் நிலப்பரப்புக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டனர். இந்த மாற்றம் அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பராமரிக்கவும், தங்கள் சமூகங்களின் விதியை வடிவமைக்கவும், அடிமட்ட தலைமை மற்றும் சமூக மாற்றத்தின் புதிய சகாப்தத்தை வளர்க்கவும் அனுமதித்தது. பிற்காலத்தில், பீகாரில் ஜமீந்தாரி ஒழிக்கப்பட்டு, யாதவர், குர்மி, கொய்ரி மற்றும் பூமிகார் போன்ற சாதிகள் மத்திய பீகாரில் வளர்ந்து வரும் முதலாளித்துவ விவசாய முறையின் முதன்மையான இயக்கங்களாக மாறியது. புதிய அரை நிலப்பிரபுத்துவ சமூக ஒழுங்கு இந்த சாதி குழுக்களுக்கு எதிர்பாராத நன்மைகளைக் கொண்டு வந்தது. இதில் கண்ணியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் பற்றிய கேள்வி முன்னுக்கு வந்தது. பசுமைப் புரட்சி இந்த சமூகங்களுக்கு மேலும் பயனளித்தது. எனவே, பிற்காலத்தில், முதன்மையாக உயர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் குழுவிலிருந்து பல நிலப்பிரபுக்களும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் ஜமீந்தார்களாக உருவெடுத்தனர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, பல முற்போக்கு சாதி ஜமீந்தார்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினர், மேலும் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றனர். இந்த நிலப்பிரபுத்துவ உயரடுக்குகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தின் முதல் சில தசாப்தங்களில் மாநிலத்தின் அரசியலில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் 1970 களில் இந்த குறிப்பிடத்தக்க நிலையை இழக்கத் தொடங்கினர். நிதிஷ் குமாரின் முதல் பதவிக்காலத்தில், அவர்கள் மாநில அரசியலில் மீண்டும் நுழைந்தனர். ஆனால் அடுத்த பதவிக்காலத்தில் அவர்கள் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டனர். 2020 ஆம் ஆண்டில் “அமைதியான பார்வையாளர்களாக” மாற்றப்பட்டனர். குறிப்பிடத்தக்க ஜமீந்தாரி தோட்டங்கள் தும்ரான் இராச்சியம் ராஜ் தர்பங்கா இதனையும் காண்க சாகிர் மேற்கோள்கள் பீகார் வரலாறு இந்திய வரலாறு
683552
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87
பங்கஜா முண்டே
பங்கஜா முண்டே, மகாராட்டிரம் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளவர். இவரது தந்தை கோபிநாத் முண்டே, நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர். தற்போது இவர் மகாராட்டிரா சட்ட மேலளவை உறுப்பினராக உள்ளார். மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலளராக உள்ளார். இவர் தேவேந்திர பட்நவீஸ் அமைச்சரவையில் பல துறைகளுக்கு அமைச்சராக பணிபுரிந்துள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official Website வாழும் நபர்கள் 1979 பிறப்புகள் மராத்தியர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
683555
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம்
கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் அல்லது புத்ரா பன்னாட்டு வணிக மையம் (மலாய்; Pusat Dagangan Dunia Kuala Lumpur அல்லது Pusat Dagangan Dunia Putra; ஆங்கிலம்: World Trade Centre Kuala Lumpur; அல்லது Putra World Trade Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (PWTC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும். இந்த வணிக மையம் 235,000 சதுர அடி கண்காட்சி அரங்கத்துடன் 1.7 மில்லியன் சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ளது.. பொது இந்த வணிக மையம், மலேசியாவின் வரலாற்று மாநாட்டு மையமாகக் கருதப்படுகிறது. மேலும், பன்னாட்டு அளவிலான மாநாடுகள், இசைக் கச்சேரிகள், உள்ளூர்த் திருமணங்கள், பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிற்சிகள், கூட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒரு விருப்பமான இடமாகவும் தேர்வு செய்யப்படுகிறது. இந்த வணிக மையத்தின் கட்டுமானம் 1981-இல் தொடங்கப்பட்டு 1984-இல் நிறைவடைந்தது; அதிகாரப் பூர்வமாக 26 செப்டம்பர் 1985 அன்று திறக்கப்பட்டது. மலேசியாவின் தலையாய அரசியல் கட்சிகளில் ஒன்றான அம்னோவின் (UMNO) பொதுக் கூட்டங்கள், இந்த மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அமைவு கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம், கோலாலம்பூர் நகரின் வடமேற்கு மூலையில் உள்ள புத்ரா சாலையில் (Jalan Putra) அமைந்துள்ளது. பத்து ஆறு மற்றும் கோம்பாக் ஆறு ஆகிய ஆறுகளின் சங்கமம் மாநாட்டு மையத்திற்குப் பின்னால் உள்ளது. கோலாலம்பூர் செரி பசிபிக் தங்கும் விடுதி, சன்வே புத்ரா தங்கும் விடுதி, கோலாலம்பூர் டைனஸ்டி தங்கும் விடுதி மற்றும் கோலாலம்பூர் செரட்டன் இம்பீரியல் தங்கும் விடுதி போன்ற பல தங்கும் விடுதிகளுக்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. போக்குவரத்து அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்களில் உள்ள , புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையத்திற்கு இந்த வணிக மையத்தின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்; தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ள புத்ரா கொமுட்டர் நிலையம்; ஒரு பாதசாரி மேம்பாலம் வழியாக இந்த வணிக மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காட்சியகம் புத்ரா பன்னாட்டு வணிக மையத்தின் காட்சிப் படங்கள்: மேலும் காண்க மலாக்கா பன்னாட்டு வணிக மையம் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் கோலாலம்பூர் மாநாட்டு மையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் WTCKL Official Website PutraWorldTradeCentre.com PWTC Events Blog கோலாலம்பூர் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்
683558
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
சுதிர் முங்கதிவார்
சுதிர் முங்கதிவார், மகாராட்டிரம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், மகாராட்டிர சட்டமன்றம் மற்றும் சட்ட மேலளவை உறுப்பினராக பணியாற்றி வருபவர். இவர் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அமைச்சரவையில் மீன் வளத் துறை அமைச்சராக உள்ளார். முன்னர் இவர் தேவேந்திர பட்நவீஸ் தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை மற்றும் நிதி & திட்டமிடல் துறைகளின் அமைச்சராக இருந்தவர். மேலும் முன்னாள் முதலமைச்சர்களான மனோகர் ஜோஷி மற்றும் நாராயண் ரானே ஆகியோரின் அமைச்சரவையில் சுற்றுலா, நுகர்வோர் நலன் & பாதுகாப்பு துறைகளின் அமைச்சராக இருந்தார். விதர்பா பகுதியைச் சேர்ந்த இவர் 1995–1999 முதல் 2014–2019 முடிய காலகட்டத்தில் பல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் சந்திரபூர் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கோள்கள் Sudhir Mungantiwar new Maharashtra BJP chief Sudhir Mungantiwar inaugurates BJP's renovated office in Pune Will strive to strengthen party: Sudhir Mungantiwar We did well in council polls: Sudhir Mungantiwar Bagwe should resign, says Sudhir Mungantiwar Official BJP Maharashtra Website Vidarbha leader Mungantiwar is state BJP chief 1962 பிறப்புகள் [[Category:வாழும் நபர்கள் மராத்தியர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
683565
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D
ராசீவ் தாதா தேசமுக்
ராசீவ் தாதா தேசமுக் ஓர் இந்திய அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் ஆவார். அனில்தாதா தேசமுக்கின் மகனும் ஆவார். அக்டோபர் 2009 இல் நடைபெற்ற, மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் 12வது சட்டமன்றத் தேர்தலில், சாலீசுகாவ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினரானவர். மேற்கோள்கள் வாழும் நபர்கள்
683574
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81
பாலிமோனியசு
பாலிமோனியசு (Palaemonias) எனும் பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது இறால் ஆகும். இவை அருகி வரும், அல்பினிச, குகை வாழ் இறால் ஆகும். அலபாமா குகை இறால்-பாலிமோனியசு அலபாமே சுமாலி, 1961 கென்டகி குகை இறால்-பாலிமோனியசு காந்தேரி கே, 1901 மேற்கோள்கள்
683576
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
மதுரையில் போக்குவரத்து
இந்தியாவின் தென் தமிழகத்தில் உள்ள மதுரை, நன்கு வளர்ந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. மதுரையின் போக்குவரத்து முறைகளில் சாலை, தொடருந்து, வானூர்தி ஆகியவை அடங்கும். மதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து சிக்கல்கள் அதிகரித்து வருவதால், நகர போக்குவரத்திலும், புறநகர் பகுதிகளிலும் ஏற்படும் போக்குவரத்து சிக்கல்களைக் குறைக்க பெருந்திட்டங்கள் உருவாக்கபட்டுள்ளன. [உதாரணம் தேவை] சாலை மதுரை தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேலும் தென் மாவட்டங்களை தமிழ்நாட்டின் வட மாவட்டங்களுடன் இணைக்கிறது. மேலும் இது தமிழ்நாட்டின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. நகரத்தில் புழங்கும் மக்கள் தொகை மிகவும் அதிகமாகும். தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு பெரும்பாலான மக்கள் மருத்துவம், கல்வி, சந்தைப்படுத்தல், சரக்கு, கொள்முதல் செய்ய, சுற்றுலா அல்லது அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக வருகை தருகின்றனர். தமிழ்நாட்டின் முக்கியமான போக்குவரத்து வட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆட்டோ ரிக்சாக்கள் எனப்படும் தானிகள் 30,126 என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட மூச்சக்கர வாகனங்கள் உள்ளன. அவை வணிக ரீதியாக நகரத்திற்குள் வாடகைக்கு கிடைக்கின்றன. பொது போக்குவரத்துக்காக அரசால் இயக்கப்படும் நகர பேருந்துகள் மட்டுமல்லாமல், உள்ளூர் போக்குவரத்துக்கு வசதியாக பதிவு செய்யப்பட்ட 236 தனியார் சிற்றுந்துகளும் உள்ளன. மதுரை பின்வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைகிறது; மதுரை நகரம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலைகளான மா.நெ-32, மா.நெ-33, மா.நெ-72 ஆகியவை, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை நகரத்துடன் இணைக்கின்றன. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வலையமைப்பின் ஏழு வட்டங்களில் மதுரையும் ஒன்று. மேலும் இந்த நகரம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (மதுரை) தலைமையகமாக உள்ளது. இந்தப் போக்குவரத்துக் கழகமானது மதுரை திண்டுக்கல், தேனி, விருதுநகர், ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்தை வழங்குகிறது. நகர பேருந்து சேவை சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகரம் சிறந்த நகரப் பேருந்து வசதியைக் கொண்டுள்ளது. தநாஅபோக (மதுரை) மூலம் இயக்கப்படும் மதுரை நகரப் பேருந்துகளால் நகரின் முக்கியப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அசோக் லேலேண்ட், டாடா மார்கோபோலோ போன்ற பெரும்பாலான பேருந்துகளில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. நகர பேருந்துகள் பகல் நேரத்தில் கிடைக்கின்றன. ஆனால் சில முக்கியமான பகுதிகளில் இரவு பகல் என நாள் முழுவதும் நகர பேருந்து சேவைகள் உள்ளன. மதுரை மாநகரில் பொது போக்குவரத்தில் மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் பேருந்துகள் விரைவாக செல்வதுடன், பயண நேரத்தை குறைக்கின்றன. மதுரை மாநகரில் முக்கிய நகர பேருந்து நிலையங்கள் பின்வருமாறு; பெரியார் பேருந்து நிலையம் மதுரை மத்தி அண்ணா நகர் பேருந்து நிலையம் மதுரை கிழக்கு அனுப்பானடி பேருந்து நிலையம் மதுரை கிழக்கு கே. புதூர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு பழங்காநத்தம் பேருந்து நிலையம் மதுரை தெற்கு திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் மதுரை தெற்கு திருநகர் பேருந்து நிலையம் மதுரை தெற்கு திருமங்கலம் பேருந்து நிலையம் மதுரை புறநகர் மேலூர் பேருந்து நிலையம் மதுரை வடகிழக்கு பூங்கா நகர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு வாடிப்பட்டி பேருந்து நிலையம் மதுரை மேற்கு ம. கா. ரோடு பேருந்து நிலையம் மதுரை வடக்கு ஆனையூர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு வண்டியூர் பேருந்து நிலையம் மதுரை தெற்கு பேரையூர் பேருந்து நிலையம் மதுரை புறநகர் டி. கல்லுபட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர் உசிலம்பட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர் ஏழுமலை பேருந்து நிலையம் மதுரை புறநகர் திருப்பாலை பேருந்து நிலையம் மதுரை வடக்கு அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மதுரை புறநகர் பாலமேடு பேருந்து நிலையம் மதுரை புறநகர் அழகர் கோவில் பேருந்து நிலையம் மதுரை வடக்கு சோழவந்தான் பேருந்து நிலையம் மதுரை புறநகர் கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர் எம். ஜி. ஆர் பேருந்து நிலையம்(மாட்டுத்தாவணி) மதுரை வடக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மதுரை வடக்கு எல்லிஸ் நகர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு மதுரை சர்வதேச விமான நிலைய பேருந்து நிலையம் மதுரை தெற்கு புறநகர் பேருந்து சேவை வெளியூர்களுக்குச் செல்ல மதுரையில் இரண்டு முக்கியமான பேருந்து நிலையங்கள் உள்ளன; எம். ஜி. ஆர் பேருந்து நிலையம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் எம். ஜி. ஆர் பேருந்து நிலையம் எம். ஜி. ஆர் பபேருந்து நிலையம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை நகரில் உள்ள ஐஎஸ்ஓ 9001: 2000 சான்றளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் ரூ100 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பிறகு, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் வட மாவட்டங்களான சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கும்பகோணம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு அதிகமான புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மதுரையின் மற்றொரு முக்கியமான பேருந்து நிலையமாக இது உள்ளது. இங்கு இயக்கப்படும் பேருந்துகளில் சில கோவை மண்டலம் மற்றும் சேலம் மண்டலத்தைச் சேர்ந்தவை ஆகும். இங்கிருந்து திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகமண்டலம், பழனி, சேலம், ஒட்டன்சத்திரம், கரூர், தருமபுரி, ஒசூர், கொடைக்கானல் பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கபடுகின்றன. அரபாளையம் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகளை கையாள 10 தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன இந்தப் பேருந்து நிலையம் நகரத்தின் உள்ளே அமைந்திருப்பதாலும், அதன் அளவாலும், பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் எப்போதும் நெரிசலாகத் தெரிகிறது. எனவே அடுத்து எய்ம்ஸ் அருகே ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் நகரின் போக்குவரத்தை குறைக்க நகரத்திற்கு வெளியே மாற்றப்படும். தொடருந்து மதுரை சந்திப்பு ரயில் நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய ரயில்வே சந்திப்புகளில் ஒன்றாகும். மேலும் மதுரை தொடருந்து கோட்டத்தின் தலைமாயகமாக மதுரை உள்ளது. இது இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தென்னக இரயில்வேயில் வருவாய் அடிப்படையில் மதுரை கோட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தென்னக இரயில்வேயின் ஏ1 தரநிலையங்களில் ஒன்றாகும் (ரூ. 50 கோடி வருமானம் ஈட்டும் தொடருந்து நிலையங்கள் ஏ1 தரம் பெறும்). மதுரையில் இரண்டு முனையங்கள் உள்ளன.: மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (பயணிகள் கையாளுதல்) கூடல்நகர் தொடருந்து நிலையம் (சரக்குகளைக் கையாளுதல்) மதுரை சந்திப்பு தென் தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான தொடருந்து சந்திப்பாகும். மேலும் இது தென்னக இரயில்வேயின் தனி கோட்டமாக உள்ளது. இது சென்னை கோட்டத்திற்கு அடுத்தபடியாக தென்னக இரயில்வேயில் இரண்டாவது பெரிய வருவாய் கோட்டமாகும். சென்னை, மும்பை, புது தில்லி,செய்ப்பூர்,பெங்களூர், ஐதராபாத், திருவனந்தபுரம், மைசூர், கோயம்புத்தூர், கொல்லம், கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, இராமேசுவரம், சண்டிகர், அகமதாபாது, விசயவாடா, கொல்கத்தா, நாக்பூர், போபால். போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மதுரையிலிருந்து நேரடி தொடருந்துகள் உள்ளன. மாநில அரசு 2011 ஆம் ஆண்டு ஒற்றைத் தண்டூர்தி திட்டத்தை அறிவித்தது. மதுரை மோனோரயில் திட்ட நிலையில் உள்ளது. மதுரை சந்திப்பில் ரயில் பாதைகள் மதுரை புறநகர் தொடருந்து நிலையங்கள் வானூர்தி மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: IXM, ICAO: VOMD) என்பது தமிழ்நாட்டின் மதுரைக்கு சேவை செய்யும் வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையமானது மதுரை தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12  கி. மீ (7.5 mi) தொலைவில் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வானூர்தி நிலையம் தமிழ்நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. மேலும் இலங்கையின் கொழும்புக்கு சர்வதேச விமானப் போக்குவரத்தை 20 செப்டம்பர் 2012 அன்று தொடங்கியது. இப்போது, இது துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சேவைகளை வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய வானூர்தி நிறுவனங்கள் இந்த நிலையத்தில் தங்கள் வானூர்திகளை இயக்குகின்றன. இந்த வானூர்தி நிலையம் 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் வரை 520,000 பயணிகளைக் கையாண்டது. முனையங்கள் இந்த விமான நிலையமானது அருகிலுள்ள அடுத்தடுத்து இரண்டு முனையங்களைக் கொண்டுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த முனையமானது சர்வதேச மற்றும் உள்நாட்டு போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையத்தை சரக்கு வளாகமாக மாற்ற இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் முனையம் பெருநகரங்களில் இல்லாத 35 வானூர்தி நிலையங்களை நவீனமயமாக்குவதன் ஒரு பகுதியாக, இவாஆ பழைய முனையத்திற்கு அருகில் ஒரு அதிநவீன புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தை உருவாக்கியது. ₹1.29 பில்லியன் (US$15 மில்லியன்) செலவில் புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையக் கட்டடம் 12 செப்டம்பர் 2010 அன்று திறக்கப்பட்டது. பெரிய ஜெட் விமானங்களுக்கு வந்திறங்க ஏதுவாக ஓடுபாதைகளை 12,500 அடி (3,800 மீ) நீளத்திற்கு விரிவுபடுத்துவதற்காக மொத்தம் 610 ஏக்கர் (250 ஹெக்டேர்) நிலத்தை கையகப்படுத்தப்படுகிறது. பரப்பளவைக் கொண்ட இந்த முனையம், வருகை மற்றும் புறப்படுகையில் ஒவ்வொன்றிலும் 250 பயணிகளைக் கையாள முடியும். விமான நிலைய வாகன தரிப்பிடப் பகுதியில் 375 மகிழுந்துகளையும் 10 பேருந்துகளையும் நிறுத்தும் திறன் உள்ளது. புதிய முனையத்தின் சில அம்சங்கள் பின்வருமாறு: 16 உள் நுழைவு கவுண்டர்கள் 12 குடிவரவு கவுண்டர்கள் 1 பாதுகாப்பு கவுண்டர் 5 சுங்க கவுண்டர்கள் 3 கன்வேயர் பெல்ட்கள் ( ஒவ்வொன்றும்) சாமான்களுக்கான 2 எக்ஸ்ரே ஸ்கேனர்கள் 105 சிஐஎஸ்எஃப் பலம் மொத்த விமான நிறுத்துமிடங்கள் = 7 1 B767-400 1 A310-300 3 B737-800W/A320-200 2 ஏடிஆர் 72-500. புதிய முனையத்தில் இரண்டு ஓய்வறைகள் இருக்கும், இந்திய வானூர்தி ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு விஐபி லவுஞ்ச் மற்றும் மதுரை டிஎன்சிசி-யால் நிர்வகிக்கப்படும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் (CIP) ஓய்வறை ஆகியவை ஆகும். சரக்கு முனையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வளர்ந்து வரும் சரக்கு திறனைக் கருத்தில் கொண்டு, பழைய முனையத்தை முழு அளவிலான சரக்கு வளாகமாக மாற்ற இந்திய வானூர்தி ஆணையம் முடிவு செய்துள்ளது.. மதுரை சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாள்வது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் 28 மே 2013 தேதியிட்ட சுங்க அறிவிப்புகளை வெளியிட்டது. சேவையாற்றும் விமான நிறுவனங்கள் மேலும் காண்க மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் மதுரை சந்திப்பு சென்னையில் போக்குவரத்து இந்தியாவில் போக்குவரத்து மாட்டுத்தாவணி மேற்கோள்கள் மதுரையில் போக்குவரத்து தமிழ்நாட்டில் நகரங்கள் வாரியாக போக்குவரத்து
683577
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%281964%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
ரிஷ்யசிங்கர் (1964 திரைப்படம்)
ரிஷ்யசிங்கர் 1964 இல் முக்காமலா இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கே. பாலாஜி, ராஜசுலோசனா ஆகியோர் நடித்திருந்தனர். கதைச்சுருக்கம் இக்கதை இந்திய முனிவர் ரிஷியசிரிங்கா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. நடிகர்கள் பின்வரும் பட்டியல் திரைக்களஞ்சியம் பகுதி 2 புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.   நடிகர்கள் கே. பாலாஜி கும்மடி பட்டு ஐயர் எல்.நாராயண இராவ் சித்தூர் வி. நாகையா டி. வி. சேதுராமன் வி. கே. ஸ்ரீனிவாசன் செருகளத்தூர் சாமா பி. எஸ். வெங்கடாசலம் பாப்ஜி நடிகைகள் ராஜசுலோசனா கிரிஜா கே. மாலதி சுகுமாரி இலதா கே. எஸ். அங்கமுத்து குசலகுமாரி இலலிதா இராவ் தயாரிப்பு இப்படம் முதன்முதலில் தெலுங்கில் ருஷ்யஸ்ருங்கா என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு 1961 இல் வெளியிடப்பட்டது. முக்காமலா இயக்கிய இப்படத்தை இராவணன் பிரதர்சு என்ற பெயரில் பி. எஸ். சேசாச்சலம் தயாரித்தார். கீதா பிக்சர்சு நிறுவனம் வித்தியாசமான நடிகர்களுடன் தமிழில் கதையை திரையிட்டு 1964இல் வெளியிட்டது. முக்காமலா தமிழ்ப் படத்தையும் இயக்கினார். தஞ்சை என். ராமையா தாஸ், எம். எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் உரையாடல்களை எழுதியுள்ளனர். ஆதி எ. இராணி, மல்லி எம். இராணி ஆகியோர் ஒளிப்பதிவைப் பொறுப்பேற்றனர். படத்தொகுப்பை எ. சஞ்சீவி மேற்கொண்டார். கலை இயக்கம் டி. வி. எஸ். சர்மா, எம். சோமநாத் ஆகியோரால் செய்யப்பட்டது. பசுமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி நடன அமைப்பை மேற்கொண்டார். ஆர். என். நாகராஜா ராவ் புகைப்படம் எடுக்கும் பணியை மேற்கொண்டார். விஜயா, வாகினி, நெப்டியூன் சுடுடியோக்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் விஜயா ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. பாடல்கள் பாபநாசம் சிவன், தஞ்சை என். ராமையா தாஸ், எம். எஸ். சுப்பிரமணியம் ஆகியோரால் பாடல் வரிகள் எழுதப்பட்டது. டி. வி. ராஜு இசையமைத்துள்ளார். மேற்கோள்கள் 1964 தமிழ்த் திரைப்படங்கள் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் சித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்கள் செருகளத்தூர் சாமா நடித்த திரைப்படங்கள்
683580
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பாசுபரோகுளோரிடைட்டு
பாசுபரோகுளோரிடைட்டுகள் (Phosphorochloridites) என்பவை (RO)2PCl என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களைக் குறிக்கும். வாய்ப்பாட்டிலுள்ள R என்பது பதிலீடு செய்யப்படும் கரிம பதிலியைக் குறிக்கும். வழக்கமான பாசுபைட்டுகள் (P(OR)3) போல இவை பிரமிடு எனப்படும் பட்டைக்கூம்புரு வடிவத்தில் உள்ளன. வழக்கம் போல நிறமற்றவையாகவும் நீராற்பகுப்புக்கு உணர்திறன் கொண்டவையாகவும் உள்ளன. ஆக்சிசனேற்றம் மூலமாக இவை தொடர்புடைய பாசுபரோகுளோரிடேட்டுகளைக் ((RO)2P(O)Cl) கொடுக்கின்றன. தயாரிப்பு பாசுபரசு முக்குளோரைடு சேர்மத்தை பகுதியளவு ஆல்ககால் பகுப்புக்கு உட்படுத்தினால் பாசுபரோகுளோரிடைட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வினை படிப்படியாக நிகழ்கிறது: PCl3 + ROH → HCl + (RO)PCl2 (பாசுபோகுளோரிடைட்டு) (RO)PCl2 + ROH → HCl + (RO)2PCl (பாசுபோடைகுளோரிடைட்டு) (RO)2PCl + ROH → HCl + (RO)3P (பாசுபைட்டு) இந்த வினைகள் பைநாப்தால் மற்றும் 2,2'-பைபீனால் போன்ற அரோமாட்டிக் டையால்களால் எளிதில் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாசுபரோகுளோரிடைட்டுகள் டைபாசுபைட்டு ஈந்தணைவிகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மங்களாகும். Rh(acac)(CO)2 போன்ற ரோடியம் முன்னோடிகளுடன் இணைந்து இந்த டைபாசுபைட்டு ஈந்தணைவிகள் ஆல்க்கீன்களின் ஐதரோபார்மைலேற்றத்திற்குத் தேவையான தொழில்துறை ரீதியாகப் பயன்படுத்தப்படும் வினையூக்கிகளை வழங்குகின்றன. மேற்கோள்கள் கரிம பாசுபைட்டுகள் வேதி வினைக்குழுக்கள் குளோரைடுகள் பாசுபரசு(III) சேர்மங்கள்
683583
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சியான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதி
சியான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதி (Sion Koliwada Assembly constituency) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிர சட்டமன்றத்தின் பத்துத் தொகுதிகளில் ஒன்றாகும். கண்ணோட்டம் சியான் கோலிவாடா (சட்டமன்றத் தொகுதி எண் 179) மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 290,338 ஆக இருந்தது (ஆண்கள் 1,67,923, பெண்கள் 1,22,514) மற்றும் 78,913 சிறுபான்மை வாக்காளர்கள் ஆவர். இது மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இந்த மக்களவைத் தொகுதியுடன் மும்பை நகர மாவட்டத்தைச் சேர்ந்த தாராவி, வடாலா மற்றும் மஹிம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செம்பூர் மற்றும் அணுசக்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடங்கும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683584
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28VII%29%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
தெக்கினீசியம்(VII) சல்பைடு
தெக்கினீசியம்(VII) சல்பைடு (Technetium(VII) sulfide) என்பது Tc2S7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தயாரிப்பு பெர்தெக்கினிடேட்டு கரைசல்கள் வழியாக ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தினால் தெக்கினீசியம்(VII) சல்பைடு உருவாகும்: 2KTcO4 + 7H2S + 2HCl → Tc2S7↓ + 2KCl + 8H2O 2NH4TcO4 + 7H2S + 2HCl → Tc2S7↓ + 2NH4Cl + 8H2O வேதிப் பண்புகள் 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் தெக்கினீசியம்(VII) சல்பைடு ஐதரசன் வாயுவுடன் வினையில் ஈடுபடுவதால் தெக்கினீசியம் உலோகம் கிடைக்கிறது. Tc2S7 + 7H2 -> 2Tc + 7H2S மேற்கோள்கள் தெக்கினீசியச் சேர்மங்கள் சல்பைடுகள்
683592
https://ta.wikipedia.org/wiki/15-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
பதினைந்தாவது மகாராட்டிர சட்டமன்றம் (15th Maharashtra Assembly) என்பது 2024 நவம்பர் மாதம் மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அமைக்கப்பட்ட மகாராட்டிர சட்டமன்றம் ஆகும். 15வது சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் முடிவுகள் 23 நவம்பர் 2024 அன்று அறிவிக்கப்பட்டன. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றம்
683593
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வங்காள ஜமீந்தார்கள்
வங்காள ஜமீந்தார்கள் (Zamindars of Bengal) இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காள மாகாணத்தில் (இப்போது வங்காளதேசத்திற்கும் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்திற்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது) ஜமீந்தார்களாக இருந்தனர். அவர்கள் ஒரு பண்டைய நில உரிமை முறையில் அப்பகுதியில் ஆட்சி செய்தனர். வங்காள மாகாணத்தில் இவர்கள் தோட்டங்களை நிர்வகித்து வந்தனர். பருத்தி, சணல், கருநீலம், நெல், கோதுமை, தேயிலை, மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்தனர். பிரிட்டிஷ் நிலப்பிரபுக்களைப் போலவே, இவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன- இவர்களின் தோட்டப் பொருளாதாரம் பல அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை தென் அமெரிக்காவிலுள்ள வரலாற்று தோட்ட வளாகங்களுடன் ஒப்பிடலாம். ஜமீந்தார்களின் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்களால் இந்த நிலம் பயிரிடப்பட்டது. வாடகையின் பெரும்பகுதி ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு வரிகளாக செலுத்தப்பட்டது. முகலாய மற்றும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஏகாதிபத்திய நிர்வாகத்திற்கு ஜமீந்தார்கள் முக்கிய வருவாய் வசூலிப்பவர்களாக இருந்தனர். ஜமீந்தாரி முறை 1951இல் ஒழிக்கப்பட்டது. வங்காளத்தின் ஜமீந்தார்கள் பொதுவாக குறைவான சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர். மேலும் மற்றும் பீகாரின் ஜமீந்தார்களை விட குறைவான சுயாட்சியையேக் கொண்டிருந்தனர். ஆனாலும் இவர்கள் தங்கள் சொந்த நிலையான படைகளை பராமரிக்க முடிந்தது. நிரந்தரத் தீர்வு மூலம் பிரித்தானிய காலனித்துவத்திற்கு முந்தைய ஜமீந்தாரி முறையை நிலைநிறுத்தினர். குத்தகைதாரர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதன் மூலம் வங்காளத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஜமீந்தார்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஜமீந்தாரி அமைப்பு ஐரோப்பிய அடிமை முறைமையைப் பிரதிபலித்தது. வங்காள ஜமீந்தார்கள் பெரும்பாலும் ‘மகாராஜா’, ‘நவாப்’ மற்றும் கான் பகதூர் போன்ற பட்டங்களுடன் அங்கீகரிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் ஒருபோதும் சமஸ்தானங்களை ஆட்சி செய்யவில்லை. பிரித்தானிய இந்தியாவில் வங்காளமே அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க மாகாணமாக இருந்ததால், பிரித்தானிய இந்தியாவின் அரசியல் ரீதியாக மிகவும் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுக்களாக வங்காள ஜமீந்தார்கள் இருந்தனர். வரலாறு. 14 நூற்றாண்டில் வங்காளத்தை ஆண்ட இந்து ராஜா கணேசன் இலியாசு சாகி வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி வங்காளத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றி தனது மகனை அரியணையில் அமர்த்தியிருந்தார். அமெரிக்க வரலாற்றாசிரியர் இரிச்சர்ட் ஈடன் தான் எழுதிய தி ரைஸ் ஆஃப் இஸ்லாம் அண்ட் தி பெங்கால் ஃபிரான்டியர் என்ற நூலில், கான் சகான் அலி பேகார்காட்டின் ஆரம்பகால ஜமீந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். 1870 ஆரம்பத்தில் கான் சகான் அலி இப்பகுதியில் குடியேறினார், "அந்த நேரத்தில் கழிவுகளாகவும் , காடுகளாகவும் இருந்த சுந்தரவனக்காடுகளில் உள்ள நிலங்களை மீட்டெடுத்தார். அவர் கௌர் மன்னரிடமிருந்து இந்த நிலங்களின் சாகிர் அதிகாரத்தைப் பெற்றிருக்கலாம்.. 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில், கிழக்கு வங்காளத்தின் பதி பிராந்தியத்தில் பன்னிரண்டு ஜமீந்தார் குடும்பங்களின் கூட்டமைப்பு இருந்தது. அவர்களில் பன்னிரண்டு முஸ்லிம் மற்றும் இந்து ஜமீந்தார் குடும்பங்களும் அடங்குவர். இவர்கள் பரோ-புயான் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், சோனார்கானின் ஜமீந்தாருமான ஈசா கானின் தலைமையில் இருந்தனர். முகலாய படையெடுப்புகளால் சுல்தானகம் சிதைந்தபோது, இந்த பன்னிரண்டு குடும்பங்கள் கிழக்கு வங்காளத்தின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டன. இவர்கள் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை முகலாய விரிவாக்கத்தை எதிர்த்தனர். 1582 ஆம் ஆண்டின் பேரரசர் அக்பர் தனது நில ஒழுங்குமுறை முறையை வங்காளத்தில் செயல்படுத்த முடியவில்லை. மாறாக, முகலாயர்கள் விவசாய நிலங்கள், மதம் மற்றும் நிர்வாகத்தை விரிவுபடுத்த ஜமீந்தார்களை நம்பியிருந்தனர். வரி வசூலிக்கும் பொறுப்பு ஜமீந்தார்களுக்கு இருந்தது. ஜமீந்தார்கள் காவல், நீதித்துறை மற்றும் நிர்வாக செயல்பாடுகளையும் கொண்டிருந்தனர். வங்காளத்தில் முகலாய அரசாங்கத்துடன் ஜமீந்தார்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இவர்கள் சாகிர்தார்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் கீழ், 1793-இல் வங்காள ஆளுநர் காரன்வாலிஸ் தயாரித்த சட்டத்தொகுப்பின்படி நிரந்தரத் தீர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. காலனித்துவ அரசாங்கத்தின் சார்பாக வரி வசூலிக்கும் பொறுப்பு ஜமீந்தார்களுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜமீந்தாரி அமைப்பு மேலும் வலுவடைந்தது. 1950 ஆம் ஆண்டில், கிழக்கு வங்காள சட்டமன்றம் 1950 ஆம் ஆண்டின் கிழக்கு வங்காள மாநில கையகப்படுத்தல் மற்றும் குத்தகைதாரர் சட்டத்தை இயற்றியது. இது நில சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக ஜமீந்தாரி முறையை ரத்து செய்தது. இறுதியாக மேற்கு வங்காளத்தில், 1951 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட கூட்டாட்சி சட்டங்களின் கீழ் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. அரசியல் வங்காள ஜமீந்தார்கள் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் அகில இந்திய முசுலிம் லீக் ஆகிய இரண்டின் உருவாக்கம் மற்றும் அதன் தலைமைத்துவத்தில் ஈடுபட்டிருந்தனர். பல ஜமீந்தார் குடும்பங்கள் முன்னணி அரசியல்வாதிகளையும் வங்காள சட்டமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கின. வங்காள மாகாண முஸ்லிம் லீக் மற்றும் அனைத்து வங்காள குத்தகைதாரர்கள் சங்கத்தின் எழுச்சிக்கு வங்காள இந்து ஜமீந்தார்கள் மீதான எதிர்ப்பு ஒரு முக்கிய காரணியாக இருந்தது. குத்தகைதாரர்களுக்கான கடன் நிவாரணம் பிரதமர் ஏ. கே. பசுலுல் ஹக் அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் ஹக்கின் முதல் அமைச்சரவையில் சிறிசு சந்திர நந்தி, சர் கவாஜா நசிமுத்தீன், நவாப் கவாஜா அபீபுல்லா மற்றும் நவாப் முஷாரஃப் உசேன் உள்ளிட்ட பல வங்காள ஜமீந்தார்கள் இருந்தனர். வங்காளத்தின் ஜமீந்தார்கள் கலைகளின் சிறந்த புரவலர்களாக இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பல நூலகங்கள் ஜமீந்தார்களால் நிறுவப்பட்டன. வங்காள நூலகச் சங்கம் 1925 இல் உருவாக்கப்பட்டது. ஜமீந்தார்கள் வரேந்திரா ஆராய்ச்சி அருங்காட்சியகம் மற்றும் டாக்கா அருங்காட்சியகங்கள் போன்ற அருங்காட்சியகங்களை நிறுவினர் (இது பின்னர் வங்காளதேச தேசிய அருங்காட்சியகமாக மாறியது). இவர்கள் அகன்சுல்லா பொறியியல் பள்ளி போன்ற பல கல்வி நிறுவனங்களையும் நிறுவினர். தாகூர் குடும்பம் இந்து மக்களிடையே வங்காள மறுமலர்ச்சியின் முன்னோடிகளாக மாறியது. மீர் மொசாரப் உசைன், பேகம் ரோக்கியா மற்றும் மைக்கேல் மதுசூதன் தத் போன்ற எழுத்தாளர்கள் ஜமீந்தார் தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். ஜமீந்தார்கள் இந்தோ சரசனிக் பாணியில் தங்கள் மாளிகைகளைக் கட்டிக் கொண்டனர். செல்வம் ஆங்கிலேயர்களின் கீழ், ஜமீந்தார்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தனர்.<ref>{{Cite web|url=https://www.outlookindia.com/newsscroll/amp/raj-darbhanga--home-of-indias-wealthiest-zamindars-column/1660682|title=Raj Darbhanga - home of Indias wealthiest Zamindars (Column)|website=Outlook India|access-date=8 October 2021}}</ref> நதியா இராச்சியத்தின் பிராமணக் குடும்பம் போன்ற சில குடும்பங்கள் வங்காளத்தின் மிகவும் செல்வாக்குமிக்க ஜமீந்தார்களில் ஒருவராக இருந்தனர். இராஜ்சாகி தோட்டத்தின் இந்து பிராமண ஜமீந்தார்கள் 13,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய பிரதேசங்களை தங்களின் கீழ் வைத்திருந்தனர். வர்தமான் இராச்சியக் குடும்பம் 13,000 சதுர கிமீ பரப்பளவு நிலங்களைக் கொண்டிருந்தது. பாவல் இராச்சிய தோட்டத்தின் பிராமண ஜமீந்தார்கள் 1500 சதுர கிலோமீட்டர் நிலங்களைக் கொண்டிருந்தனர். முஸ்லிம் சௌத்ரி மொய்சுதீன் பிஷ்வாஷ் குடும்பத் தின் தோட்டம் கிட்டத்தட்ட 4000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்தது .1934 ஆம் ஆண்டில், முஸ்ஸ்லீம் டாக்கா நவாப் குடும்பம் வங்காளம் மற்றும் அசாமின் பல்வேறு மாவட்டங்களிலும், கல்கத்தா மற்றும் ஷில்லாங் நகரங்களிலும் கிட்டத்தட்ட 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு தோட்டத்தை கொண்டிருந்தது.  அவர்கள் ஆண்டுதோறும் 120,000 பவுண்டுகள் வாடகை சம்பாதித்தனர். அதன் செல்வம், சமூக அந்தஸ்து மற்றும் பிரிட்டிஷ் அரசுடனான நெருங்கிய உறவு ஆகியவற்றால், டாக்கா நவாப்பின் குடும்பம் வங்காளத்தில் மிகவும் சக்திவாய்ந்த முஸ்லிம் குடும்பமாக இருந்தது. டாக்கா நவாப் குடும்பமும் ஒரு பெரிய வைரத்தை வைத்திருந்தது. அது இப்போது சோனாலி வங்கியின் பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகிறது. மேலும் காண்க மன்னர் அரசு பீகாரின் ஜமீந்தார்கள் நூலியல் மேற்கோள்கள் மேலும் வாசிக்க The Bengal Zamindars at Indian Economic and Social History Review'' வெளி இணைப்புகள் Wikisource: Text of Allahabad Treaty Zamindari in Bengal by Henry Soszynski பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்திய வரலாறு மேற்கு வங்காளத்தின் வரலாறு
683595
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
பாண்டலோய்டியா
பாண்டலோய்டியா (Pandaloidea) என்பது இறால் வகையினைச் சேர்ந்த ஒரு மீப்பெருங் குடும்பமாகும். இதில் பெரிய குடும்பம் பாண்டலிடே (சுமார் 200 சிற்றினங்கள்) மற்றும் மிகச் சிறிய குடும்பம் குளோரோடோசில்லிடே (ஏழு சிற்றினங்கள்) அடங்கும். மேற்கோள்கள் இறால்
683597
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
நிமடோகார்சினாய்டியா
நிமடோகார்சினாய்டியா (Nematocarcinoidea) என்பது இறாலின் மீப்பெருங் குடும்பம் ஆகும். இது நான்கு குடும்பங்களை உள்ளடக்கியது. இவை: யூகோனடோடிடே, நெமடோகார்சினேடே, ரைன்கோசினிடே மற்றும் சிபோகாரிடிடே. இவை குறைந்தபட்சம் முதல் மூன்று இணை நடக்குங்கால்களில் வார் போன்ற எபிபாட்களின் இருப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கணுக்காலி குடும்பங்கள் இறால்
683598
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D
தாதா லேக்ராஜ்
தாதா லேக்ராஜ் என்று அழைக்கப்படும் லேக்ராஜ் குப்சந்த் கிர்பலானி (Lekhraj Khubchand Kirpalani), 15 திசம்பர் 1876 - 18 சனவரி 1969) பிரம்மா குமாரிகளை நிறுவிய ஒரு இந்திய ஆன்மீக குரு ஆவார். தொடக்க கால வாழ்க்கை லேக்ராஜ் கூப்சந்த் கிருபலானி 1876 டிசம்பர் 15 ஆம் தேதி ஹைதராபாத் சிந்து மாகாணத்தில், வல்லபாச்சாரியார் கிருபளானி குடும்பத்தில் தாதா லேக்ராஜ் பிறந்தார். இவரது தந்தை ஓர் ஆசிரியராவார். மேலும் இவர் தரை விரிப்புகளை விற்பனை செய்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். படிப்படியாக வைர வியாபாரத்தில் நுழைந்து, நன்கு அறியப்பட்ட நகைக்கடைக்காரராகவும், இவரது சமூகத்தில் மரியாதைக்குரியவாகவும் விளங்கினார். தனது ஐம்பதாவது வயதில் மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஐதராபாத் சென்று ஆன்மிகத்தில் ஈடுபட்டார். ஆன்மீக வாழ்க்கை ஓம் மண்டலி 1936 இல், லேக்ராஜ் ஓம் மண்டலி என்ற ஆன்மீக அமைப்பை நிறுவினார். பிரம்ம குமாரிகள் 1937-களில் பிரம்ம குமாரிகள் இயக்கம் தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது பிரித்தானிய இந்தியாவில் தொடக்கப்பட்ட ஓர் ஆன்மீக இயக்கமாகும். பின்னாளில் இவரை பிரம்ம பாபா என அழைத்தனர் இந்த அமைப்பு இராஜ யோக தியானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் (சீவாத்மா) பற்றி போதிக்கின்றது. இது அனைத்து ஆத்மாக்களும் உயர்வான நிலையையும் நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்துகின்றது. மேற்கோள்கள் ஆன்மிகம்
683600
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்
வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் (Bangladesh National Museum) என்பது வங்காளதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, இனவியல் மற்றும் அலங்கார கலைத் துறை, வரலாறு மற்றும் பாரம்பரிய கலைத் துறை, இயற்கை வரலாற்றுத் துறை மற்றும் சமகால மற்றும் உலக நாகரிகத் துறை போன்ற பல துறைகளில் காலவரிசைப்படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வளமான பாதுகாப்பு ஆய்வகமும் உள்ளது. நளினி காந்தா பட்டசாலி 1914-1947 காலத்தில் அருங்காட்சியகத்தின் முதல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். வரலாறு வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் முதலில் 20 மார்ச் 1913 அன்று டாக்கா அருங்காட்சியகம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. 7 ஆகஸ்ட் 1913 அன்று வங்காள ஆளுநரான கார்மைக்கேல் பிரபுவால் முறையாக திறந்து வைக்கப்பட்டது. ஜூலை 1915 இல் இது டாக்காவின் நைப் நசீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இது 1983 நவம்பர் 17 அன்று வங்காளதேச தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இது டாக்காவின் சாபாக் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது 1978 முதல் "வங்காளதேசத்தில் இசுலாமிய கலை, அட்டவணை"எனும் பெயரில் தொடங்கி பல வெளியீடுகளைக் கொண்டுள்ளது. இந்த தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட ஒவ்வொரு நாளும் சராசரியாக 2000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள். வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். பெரியவர்களுக்கு 40 ரூபாயும், சிறார்களுக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டவர்களுக்கு 500 மற்றும் சார்க் நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறாது. இருப்பினும், மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு அனுமதி இலவசம் புகைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தேசிய அருங்காட்சியகங்கள் Coordinates on Wikidata வங்காளதேச வரலாறு
683601
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
சித்தேசுவர், இரத்னேசுவர் கோவில்
சித்தேசுவர், இரத்னேசுவர் கோவில் (Siddheshwar & Ratneshwar Temple) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் லாத்தூர் நகரத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தாம்ரத்வாஜ் மன்னரால் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியின் போது இங்கு கண்காட்சி நடைபெறுகிறது. மேற்கோள்கள் மகாராட்டிர இந்துக் கோயில்கள் Coordinates on Wikidata
683605
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D
பாயிபந்த்
பாயிபந்த் (Bhaiband) அல்லது சகோதரத்துவம் என்பது பாக்கித்தானின் சிந்துவில், வாழும் லோகானா சிந்தி சாதியினர். ஆகும். இவர்கள் வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு சிந்து பிராந்தியம் பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது 711 முதல் 1843 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படும் வரை பல்வேறு முஸ்லிம் வம்சங்களால் ஆளப்பட்டது. அந்த காலகட்டத்தில், இந்துக்கள் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருந்தனர். இருப்பினும் துல்லியமான புள்ளிவிவரங்கள் 1947க்குப் பிறகு தொடர்ந்து கிடைக்கவில்லை. இவர்களில், பெரும்பாலானவர்கள் லோகனா சாதியைச் சேர்ந்தவர்கள் என்று பரவலாக இருந்தனர். ஒருசிலர் பாட்டியாக்கள் அல்லது பிராமணர்களாகவும் இருந்தனர். மேற்கோள்கள் சாதிகள்
683606
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%28%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29
வெளிப்பாடு (ஆன்மிகம்)
தீர்க்கதரிசனம் (vision) என்பது ஒரு கனவு, மயக்கம், மதப் பரவசத்தில் காணப்படும் நிலையாகும், குறிப்பாக மீயியற்கை அல்லது இரகசிய வெளிப்பாட்டைக் குறிக்கிறது. பொதுவாக கனவுகளை விட தரிசனங்கள் அதிகத் தெளிவைக் கொண்டுள்ளன, ஆனால் பாரம்பரியமாகக் குறைவான உளவியல் அர்த்தங்களைக் கொண்டுள்ளன. தீர்க்கதரிசனங்கள் ஆன்மீக மரபுகளிலிருந்து வெளிப்படும் என்று அறியப்படுகிறது, மேலும் அவை மனித இயல்பு, யதார்த்தத்திற்கு ஒரு கண்ணோட்டத்தை வழங்க முடியும். வருவதுரைத்தல் பெரும்பாலும் தீர்க்கதரிசனங்களுடன் தொடர்புடையது. ஈவ்லின் அண்டர்ஹில் மூன்று வகையான தரிசனங்களை வேறுபடுத்தி வகைப்படுத்துகிறார். அறிவுசார் தரிசனங்கள்-கத்தோலிக்க அகராதி இவற்றை இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிவு என்று வரையறுக்கிறது, இதில் மனம் விவேகமான பதிப்புகளின் உதவியின்றி வெளிப்படுத்தப்பட்ட சில உண்மைகளைப் பற்றிய அசாதாரணமான புரிதலைப் பெறுகிறது. மாயவாதிகள், அவற்றை ஆழமான தோற்றத்தை ஏற்படுத்தும் உள்ளுணர்வுகளாக விவரிக்கிறார்கள். கற்பனை-அவிலாவின் தெரேசா இன் தி இன்டீரியர் காஸில், தீர்க்கதரிசனம் என்பது என்பது பார்ப்பது அல்லது கேட்பது போன்ற புலன்களால் எதுவும் பார்க்கவோ கேட்கவோ இயலாது, ஆனால் அதே கருத்து புலன்களால் பெறப்பட்டால், கற்பனையின் மீது உருவாகும் அதே எண்ணம் பெறப்படுகிறது. ஊன் உடல் தொடர்பானது- உடலின் கண்களுக்கு புலப்படாத மீயியற்கை வெளிப்பாடு மேற்கோள்கள் தீர்க்கதரிசனம் (ஆன்மிகம்)
683609
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
பழையபேட்டை
பழையபேட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 74.61 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருநெல்வேலியில் தென்காசி சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. கல்வி கல்லூரி இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி என்ற அரசினர் கலைக்கல்லூரி ஒன்று பழையபேட்டையில் அமைந்துள்ளது. மேற்கோள்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
683619
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF
அம்சியா பதாவி
அம்சியா பதாவி (Amshya Padavi) மகாராட்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராக உள்ளார். அம்சியா 2014,2019ஆம் ஆண்டுகளில் அக்கல்குவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் 2024 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 2,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வகித்த பதவிகள் 2014: நந்தூர்பார் மாவட்டத்தின் சிவசேனா பிரமுகர் 2022: மகாராட்டிரா சட்ட மேலவை உறுப்பினர் 2024 மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் மேற்கோள்கள் வாழும் நபர்கள் சிவ சேனா அரசியல்வாதிகள்
683620
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF
இராஜேஷ் பதாவி
இராஜேஷ் உதேசிங் பதாவி (Rajesh Udesingh Padvi) ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக சகாதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1969 பிறப்புகள்
683622
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
முரசொலி செல்வம்
முரசொலி செல்வம் என்று பரவலாக அறியப்படும்  சண்முகசுந்தரம் பன்னீர்செல்வம் (24 ஏப்ரல் 1940 - 10 அக்டோபர் 2024), தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் இதழாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் . முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக , திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நாளேடான முரசொலியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார் . அவரது தாய்வழியில் கருணாநிதி குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார். தொடக்க வாழ்க்கை இன்றைய தமிழ்நாட்டின் திருவாரூர் நகரில் 24 ஏப்ரல் 1940 அன்று பிறந்தார் செல்வம். அவரது தாயார் சண்முக சுந்தரதம்மாளின் தம்பியான "கலைஞர்" மு. கருணாநிதி ( கருணாநிதி குடும்பம் மற்றும் திமுக-வின் பின்னாள் தலைவர்) ஐந்து முறை தமிழ்நாட்டு முதலமைச்சராக (1969- 2011 காலகட்டத்தில்) பணியாற்றியவர். அவர்தான் செல்வத்துக்கு முதலில் பன்னீர்செல்வம் என்று பெயர்சூட்டினார் (முன்னதாக‌ 1 மார்ச் அன்று வானூர்தி விபத்தில் உயிரிழந்த நீதிக்கட்சி தலைவர் அ. தா. பன்னீர்செல்வம் நினைவாக). செல்வம் பின்னர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்தார். செல்வத்தின் அண்ணன் முரசொலி மாறன், பின்னாளில் (1989-2002)  வி. பி. சிங் , அ.தொ.தேவ கெளடா , ஐ.கே.குஜரால் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய நான்கு இந்தியத் தலைமை அமைச்சர்களின்  கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். செல்வம், தன் இளமையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) தொடர்புகொண்டிருந்தார். 1965-67 இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் போது மாணவர் தலைவராக உருப்பெற்றார். முரசொலியில் பணி பொறுப்பேற்றல் மாறனுடன் இணைந்து முரசொலியில் தன் ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார் செல்வம். 1989 இல் மாறன், வி. பி. சிங்-கின் கீழ் அமைச்சராகப் பதவியேற்ற பின், செல்வம் முரசொலி தலைமை ஆசிரியர் ஆனார். 22 மே 1991 அன்று (முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மறுநாளே) முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டுத் தீவைக்கப்பட்டது. அதற்குச் சொந்தமான வண்டிகள், ஆவணங்கள், அச்சுத் தாள்கள், அச்சகம் அனைத்தும் எரிந்துபோயின. எனினும் மறுநாள்  'Murasoli Will Take It' (முரசொலி இதைத் தாங்கிக்கொள்ளும்) என்ற தலைப்புடன் நாளிதழ் வெளியானது. நாளடைவில் முரசொலி செல்வம் என்று அழைக்கப்பட்ட செல்வம்,  திமுகவின் செல்வாக்கை உயர்த்துவதில் பெரும் பங்காற்றினார். 1991-92 சிறப்புரிமை மீறல் சர்ச்சை 9  செப்டம்பர் 1991 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அப்போதைய ஒரே திமுக உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதி,  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடர்பாக  உரை நிகழ்த்தினார் . அவரது உரையின் ஒரு பகுதியை அன்றைய பேரவைத் தலைவர்  சேடபட்டி இரா.முத்தையா அன்று நண்பகலில் அவைக் குறிப்புகளிலிருந்து நீக்கினார் . இந்த நீக்கம் முரசொலியின் சென்னை பதிப்பில் எதிரொலித்தாலும் , வெளியூர்ப் பதிப்புகளில் (பிற்பகல் 2 மணிக்குள் அச்சிடப்பட்டதால்) நீக்கப்பட்ட பகுதி இருந்தது. மேலும்,  இக் காலகட்டத்தில் செல்வம் எழுதிய ஒரு கட்டுரை, அன்றைய முதலமைச்சர்  ஜெ. ஜெயலலிதா-வின் சில செயல்களை (குறிப்பாக அவர் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் தங்கியிருந்தபோது நடந்த நிகழ்வுகளின் வரிசையை எடுத்துக்காட்டி) விமர்சித்தது. இதனால் செல்வத்துக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு வலுத்தது. இறுதியில், அவருக்கு எதிராக ஜெயலலிதாவால் நேரடி சிறப்புரிமைப் முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது. பேரவையின் சிறப்புரிமைக் குழு, உசாவலுக்குப் பின், செல்வத்திடம் விளக்கம் கேட்டு ஆணை அனுப்பியது. அவர் விளக்கம் அளித்த போதிலும், குழுவின் முன் நேர்வரும்படி ஆணையிடப்பட்டது. அவர், அக் குழுவின் முன் நேர்வந்தாலும்  மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். இதனால் 11 மே 1992 அன்று கைது செய்யப்பட்டு முத்தையா முன்னிலையில் நிறுத்தப்பட்டார். பேரவையின் அடுத்த  கூட்டத் தொடரில் அவர் நேர்வந்து அதன் கண்டனத்தைப் பெறவேண்டும் என்று ஆணையிடப்பட்டது.  அதன்படி, செப்டம்பர் 21  அன்று பேரவைக்கு வரும்படி அவருக்கு ஆணை அனுப்பப்பட்டது. அந்த நாளில், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கறுப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்தார் செல்வம். அங்கு நிறுவப்பட்ட கூண்டில் அவர் நிறுத்தப்பட்டார். இதனை எதிர்த்த இபொக, இபொக (மா), மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் . இதைத் தொடர்ந்து, கண்டனத் தீர்மானம் படிக்கப்பட்டபின் செல்வம் அனுப்பிவிடப்பட்டார். இந்த நிகழ்வு, சட்டப்பேரவையில் நிறுத்தப்பட்டுக் கண்டிக்கப்பட்ட முதல் நாளிதழ் ஆசிரியர் என்ற சிறப்பை செல்வத்துக்குப் பெற்றுத்தந்தது. புகழ் முரசொலி சில நினைவுகள் என்ற தன் நினைவுக் குறிப்பில் அவர், அந் நாளிதழுடனான தன் நேரடி நினைவுகளையும், அரசியல் தடைகளைக் கடப்பதில் அதன் பெரும் பங்கையும் விளக்கியுள்ளார். தி.மு.க., தலைமைக்கு நெருக்கமாக இருந்தும், அரசியல் பதவிகளை நாடாததவர், அமைதியான பண்புக்குப் பெயர்பெற்றவர் என அவருக்கு அறிமுகமானோர் தெரிவித்தனர். "சிலந்தி " என்ற புனைப்பெயரில் முரசொலியில் தனது பணியைத் தொடர்ந்தார் செல்வம். 8 ஆகஸ்ட் 2024 அன்று முரசொலி-யில் வெளியான அவரது இறுதி கட்டுரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி-யின் மத அரசியலை விமர்சித்தது. திரைப்படப் பணி தயாரிப்பாளராக மறைவும் இரங்கல் உரைகளும் தன் இறுதிக்காலத்தில் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் வாழ்ந்த செல்வம், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவந்தார். 9 அக்டோபர் 2024 அன்று முரசொலியின் முதல் பக்கப் பத்தியை தொகுத்துக்கொண்டிருந்தார் (அதைக்குறித்து உரையாடவும் அதற்கான கருத்தோவியத்தை இறுதிசெய்யவும்  செல்வம் அழைத்ததாக ஒரு உடன் ஊழியர் பின்னர் தெரிவித்தார்). மறுநாள் (அக்டோபர் 10), செல்வம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்தார். அப்போது அவருக்கு 84 அகவை நிரம்பியிருந்தது. திமுக தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் இரங்கல் உரையில்   “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்” என்றார். திமுகவின் வளர்ச்சிக்கான  செல்வத்தின் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையில் கட்சியின் கொடி 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அக்கட்சி அறிவித்தது. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னோடிகள், மக்கள் சார்பாளர்கள், மற்றும்  சத்யராஜ் உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்தனர். இ.தே. காங்கிரசு (தமிழ்நாடு பிரிவு) , மதிமுக , விசிக, இபொக, இபொக(மா), மநீம உள்ளிட்ட கட்சிகள், மற்றும் திராவிடர் கழகம் (திக), திராவிடர் விடுதலைக் கழகம் (திவிக.) உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். செல்வத்தின் இறுதி நிகழ்வு  அக்டோபர் 11  அன்று சென்னை மாநகரின் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. அவரது உருவப்படம், திமுக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 21 அன்று திறக்கப்பட்டது. அவ் விழாவில் பேசிய ஸ்டாலின், முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் திராவிட இயக்கப் படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று  அறிவித்தார். உசாத்துணைகள் 1940 பிறப்புகள் 2024 இறப்புகள் தமிழகப் பத்திரிகையாளர்கள் இதழாசிரியர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள் இந்திய அரசியல் எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர்கள் அரசியல் எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் திராவிட இயக்கம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
683624
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D
சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக்
சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக் (Shirishkumar Surupsing Naik) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நாயக் நவாபூர் சட்டமன்றத் தொகுதியின் 14வது மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
683626
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
அம்பத்தூர் ஐயப்பன் கோயில்
அம்பத்தூர் ஐயப்பன் கோயில் என்றும் அம்பத்தூர் சபரிமலை என்றும் அழைக்கப்படும் கோயிலானது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அம்பத்தூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் ஐயப்பன் கோயில் ஆகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 35.45 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அம்பத்தூரின் சூரப்பட்டு (சண்முகபுரம்) பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. தத்துவங்கள் நாம் இறைநிலையை அடைய நம் வாழ்வில் உணரவேண்டிய யோகநிலைகளைக் குறிக்கும் வகையில், ஐயப்பன் கோயில்களில் 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் தத்துவங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: பிறப்பு நிலையற்றது; சாங்கிய யோகம்; கர்ம யோகம்; ஞான யோகம்; சன்னியாசி யோகம்; தியான யோகம்; ஞான விஞ்ஞான யோகம்; அட்சர பிரம்ம யோகம்; இராஜவித்யா இராஜகுஹ்ய யோகம்; விபூதி யோகம்; விஸ்வரூப தரிசன யோகம்; பக்தி யோகம்; சேஷத்ர விபாக யோகம்; குணத்ரய விபாக யோகம்; புருஷோத்தம யோகம்; தைஐவாசுரஸம்பத் விபாக யோகம்; ச்ராத்தாதரய விபாக யோகம்; மோட்ச சன்னியாச யோகம். அவ்வாறே, இக்கோயிலிலும் 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பு ஏற்படுத்தி, அம்பத்தூர் சபரிமலை என்று அழைக்கின்றனர். மேற்கோள்கள் சென்னை மாவட்டத்திலுள்ள ஐயப்பன் கோயில்கள்
683637
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல் (ஆங்கிலம்: List of roads in Kuala Lumpur; மலாய்: Senarai jalan raya di Kuala Lumpur) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள சாலைகளின் பட்டியல் ஆகும். கோலாலம்பூர் மாநகரம்; புதிதாக உருவாகப்பட்ட நவீனமய விரைவுச் சாலைகள்; நெடுஞ்சாலைகள்; சுற்றுவட்டச் சாலைகள்; 200 ஆண்டுகளுக்கும் முந்தைய பழைய சாலைகள்; பழைய தெருக்கள், போன்ற பல்வகையான வழித்தடங்களைக் கொண்டுள்ளது. கோலாலம்பூர் மாநகரம்; மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்களின் சாலைப் பெயர்கள், பிரித்தானிய மலாயா ஆட்சிக் காலத்தின் போது பெயரிடப்பட்டவை ஆகும். அவை பெரும்பாலும் ஆங்கில மொழியில் பெயரிடப்பட்டன. பொது பிரித்தானியப் பிரமுகர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள், மலாயா அரசப் பரம்பரையினர், மாநில மாவட்டங்கள், வட்டாரங்கள், உள்ளூர் மக்கள், உள்ளூர் அடையாளங்கள் அல்லது உள்ளூர்ப் புவியியல் அடையாளங்கள் ஆகியவற்றின் பெயரால் கோலாலம்பூர் சாலைகளின் பழைய பெயர்கள் பெயரிடப்பட்டு இருந்தன. வரலாறு 1957-இல் மலாயா விடுதலை அடைந்து 1963-இல் மலேசியா உருவானது. 1967-இல் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, பழைய சந்தைச் சதுக்கம் (Old Market Square) என்பது 'மேடான் பசார் பெசார்' என்றும் போச் அவென்யூ (Foch Avenue) என்பது 'போச் சாலை' என்றும் எளிய நடைமுறையில் மொழிபெயர்க்கப்பட்டன. காலனித்துவ நடைமுறை 1981-ஆம் ஆண்டில், மலேசியாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் முகமது, காலனித்துவ நடைமுறையை நீக்கம் செய்ய வேண்டும் எனும் கொள்கைப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக, பெரும்பாலான தெருக்களின் பெயர்கள் ஒட்டுமொத்தமாக மறுபெயரிடப்பட்டன. முன்னர் ஆங்கிலத் தனமையைக் கொண்டிருந்த தெருக்களின் பெயர்கள்; உள்ளூர் மலாய்ப் பிரமுகர்கள், மலாய்ப் பண்பாடு மற்றும் மலாயா/மலேசியாவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளை நினைவுகூரும் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. 2007-இன் பிற்பகுதியில் கோலாலம்பூர் மாநகராட்சி மேலும் பல சீரமைப்புகளைக் கோன்டு வந்தது. அந்த வகையில், பழைய தெருப் பெயர்களை மறுப்பெயரிடும் கொள்கைப்பாடு, இன்றுவரை தொடர்கிறது. சர்ச்சைகள் மலாயா விடுதலைக்கு முந்தைய தெருக்களின் பெயர்களில் மாற்றங்கள் செய்வதைப் பொதுமக்கள் பொதுவாக ஏற்றுக் கொண்டாலும், தொடர்ச்சியான மறுபெயரிடுதல் கொள்கை, உள்ளூர்ச் சமூகங்களின் தாக்கத்தை ஈர்த்தது. கோலாலம்பூர் தெருக்களின் வரலாறு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் காலக் கட்டத்தில், தொடர்ச்சியான பெயர் மாற்றங்கள் அவர்களிடையே வெறுப்பையும் மனநிறைவின்மையையும் ஏற்படுத்தியதாகவும் அறியப்படுகிறது. முன்புள்ள பெயர்கள் சுருக்கமாக இருந்தன. அவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. புதிதாக வைக்கப்படும் பெயர்கள் நீண்ட பெயர்களாக இருப்பதாலும்; சுற்றி வளைக்கப்பட்ட பெயர்களாக இருப்பதாலும்; அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள சிரமங்கள் ஏற்படுவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக, சாலையைப் பயன்படுத்துபவர்கள், அஞ்சல் பயனர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் போன்றவர்கள் தங்களின் மனக்குறைகளைத் தெரிவித்தனர். பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்புகளும் தோன்றின. இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பெயர் மாற்றங்கள் தொடர்ந்தன. இன்று வரையிலும் தொடர்கின்றன. மலேசிய சாலை வகை நெடுஞ்சாலை - Highway -Lebuhraya சுற்றுவட்டம் - Circular - Pekeliling சுற்று - Circus - Bulatan முனை - Close - Pinggir/Pinggiran (e.g. Ridley Close/Pinggir Ridley) வளைவு - Crescent - Lengkok (e.g. Bellamy Crescent/Lengkok Bellamy) பகுதி - Drive – Persiaran (e.g. Hampshire Drive/Persiaran Hampshire) மனைப் பூங்கா - Gardens – Taman (e.g. Maxwell Garden/Taman Maxwell) சிறு தொகுதி - Grove - Gerbang (e.g. Lower Ampang Grove/Gerbang Ampang Hilir) குன்று - Hill - Langgak (e.g. Tunku Hill/Langgak Tunku) வழிச் சாலை - Lane – Lorong (e.g. Horse Lane/Lorong Kuda) மலை - Mount - Puncak இடம் - Place - Laman (e.g. Seputeh Place/Laman Seputeh) உயர்விடம் - Rise - Changkat (e.g. Bukit Bintang Rise/Changkat Bukit Bintang) சாலை - Road – Jalan (e.g. Perak Road/Jalan Perak) சுற்றுச் சாலை - Ring Road - Lingkaran (e.g. Lingkaran Syed Putra) சதுக்கம் - Square – Medan (e.g. Old Market Square/Medan Pasar Lama) தெரு -Street – Lebuh (e.g. Menjalara Street/Lebuh Menjalara) நடைபாதை - Walk - Pintas பழைய சாலைகள் முக்கிய சாலைகள் குறிப்பிடத்தக்க சாலைகள் மேலும் காண்க துவாங்கு அப்துல் ரகுமான் மவுண்ட்பேட்டன் பிரபு அப்துல் ரசாக் உசேன் வீ. தி. சம்பந்தன் டான் சியூ சின் யாப் ஆ லோய் காட்சியகம் கோலாலம்பூர் சாலைகளின் காட்சிப் படங்கள்: மேலும் காண்க துன் சம்பந்தன் சாலை அம்பாங் சாலை கிள்ளான் லாமா சாலை பங்சார் சாலை புக்கிட் பிந்தாங் சாலை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Larry Lam's Guide Note: Old Names of Roads in KL Kuala Lumpur road map, circa 1960 Mariana Isa & Maganjeet Kaur (2015), Kuala Lumpur Street Names, Marshall Cavendish: Singapore. கோலாலம்பூர் சாலைகள் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள்
683641
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
தெக்கினீசியம்(III) குளோரைடு
தெக்கினீசியம்(III) குளோரைடு (Technetium(III) chloride) என்பது TcCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தெக்கினீசியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு தெக்கினீசியம்(III) குளோரைடு சேர்மத்தின் டெக்னீசியம் இரண்டு வகைகள் அறியப்படுகின்றன. α-வடிவ தெக்கினீசியம்(III) குளோரைடு 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் டைதெக்கினீசியம்(III) டெட்ரா அசிட்டேட்டு டைகுளோரைடுடன் ஐதரசன் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கருப்பு நிறத் திடப்பொருளாக உருவாகிறது. C3v சமச்சீருடன் முக்கோண அமைப்பும் Tc3Cl9 அலகுகளும் கொண்ட ஈரெண்முகக் கட்டமைப்பில் α-வடிவ தெக்கினீசியம்(III) குளோரைடு காணப்படுகிறது. ஒவ்வொரு Tc அணுவும் அருகிலுள்ள இரண்டு Tc அணுக்களுடனும் ஐந்து குளோரைடு ஈந்தணைவிகளுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. Tc-Tc பிணைப்பு நீளம் 2.44 ஆங்சுட்ராங்கு அலகுகளாகும். Tc-Tc பிணைப்பு தூரங்கள் இரட்டைப் பிணைப்பு Tc அணுக்களைக் குறிக்கின்றன. Tc3Cl9 இரேனியம் ஒப்புமையான டிரையிரேனியம் நோனாகுளோரைடுடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. β-தெக்கினீசியம்(III) குளோரைடு சேர்மமானது TcCl3 தெக்கினீசியம் உலோகத்திற்கும் குளோரின் வாயுவிற்கும் இடையிலான வினையால் பெறப்படுகிறது. இதன் கட்டமைப்பு MoCl3 மற்றும் ReCl3 போன்ற விளிம்பு-பகிர்வு எண்கோணங்களின் எல்லையற்ற அடுக்குகளைக் கொண்டுள்ளது. பிணைப்பு இடைவெளிகள் உலோக-உலோக பிணைப்பைக் குறிக்கின்றன. α-TcCl3 சேர்மத்தை விட குறைவான நிலைப்புத் தன்மை கொண்ட β-தெக்கினீசியம்(III) குளோரைடு மெதுவாக α- வகைக்கு மாறுகிறது.. மேற்கோள்கள் தெக்கினீசியச் சேர்மங்கள் குளோரைடுகள்
683642
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
பாட் கோச் தாலர்
பாட் கோச் தாலர் (Pat Koch Thaler) (ஏப்ரல் 11,1932-நவம்பர் 16,2024) ஒரு அமெரிக்க கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் ஆவார். மேரிமவுண்ட் மன்ஹாட்டன் கல்லூரி மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கல்வியில் தொடர்ச்சியான தலைமைப் பாத்திரங்களை வகித்தார், மேலும், உழைக்கும் தம்பதிகளின் இயக்கவியலை உரையாற்றும் ஒரு புத்தகத்தை இணைந்து எழுதினார். தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி பவுலின் கோச் ஏப்ரல் 11,1932 அன்று நியூஜெர்சியின் நெவார்க்கில் பிறந்தார். அவரது தந்தை லூயிஸ் கோச் ஆஸ்திரியா-அங்கேரி இருந்து குடியேறிய ஒரு யூதர் ஆவார், இவர் ஒரு ஃபுரியராக பணியாற்றினார், இவரது தாயார் ஜாய்ஸ் சில்ப் அவர்களின் வீட்டை நிர்வகித்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். ஹாரோல்ட், ஒரு கம்பளி வடிவமைப்பாளர். பின்னர் நியூயார்க் நகரத்தின் மேயராக ஆனார். இவரது குடும்பம் புரூக்ளினுக்கு குடிபெயர்ந்தது, அங்கு இவர் எராஸ்மஸ் ஹால் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தனது பதின்பருவ வயதுகளில், இவர் தனது பெயரை பவுலினில் இருந்து பாட் என்று மாற்றினார். 1953 ஆம் ஆண்டில் புரூக்ளின் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1972 ஆம் ஆண்டில் பேங்க் ஸ்ட்ரீட் கல்லூரி மற்றும் சாரா லாரன்ஸ் கல்லூரி பள்ளி வழிகாட்டுதலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொழில் வாழ்க்கை தாலர் ஒரு இளையோர் உயர்நிலைப் பள்ளி வழிகாட்டி ஆலோசகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1978 வாக்கில், இவர் மேரி மவுண்ட் மன்ஹாட்டன் கல்லூரியில் தொடர்ச்சியான கல்வியின் இயக்குநராக இருந்தார், வயது வந்தோருக்கான கல்வி வாய்ப்புகளை எளிதாக்குவதில் கவனம் செலுத்தினார். பின்னர், இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் தொடர் கல்விப் பள்ளியில் கலை, அறிவியல் மற்றும் வாழ்வியல் புலங்களில் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டில், இவர் ஹிலாரி ரைக்லெவிக்சுடன் இணைந்து பணிபுரியும் தம்பதிகள் என்ற புத்தகத்தை எழுதினார், இது கிட்டத்தட்ட 200 தம்பதிகளுடனான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. தொழில்முறை மற்றும் உள்நாட்டு வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் உள்ள சவால்களைப் பற்றி விவரித்தது. தாலர் அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்காகத் தீவிரமாகப் பங்கேற்றார். இவர் வியட்நாம் போரை எதிர்த்தார், 1968 ஆம் ஆண்டில், இவரும் இவரது கணவரும் போரின் போது ராக்கெட் வெடிப்பில் காயமடைந்த 12 வயது தெற்கு வியட்நாமிய சிறுவனுக்கு தங்கள் வீட்டைத் திறந்து நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தனர். கருக்கலைப்பு உரிமைகள் மற்றும் முற்போக்கான ஜனநாயக அரசியலையும் இவர் ஆதரித்தார். இவரது சகோதரர் எட் கோக்கின் அரசியல் பிரச்சாரங்களின் போது, தாலர் "சகோதரி கோச்" பொத்தானை அணிவது உட்பட அவரது முயற்சிகளை ஆதரித்தார். இருப்பினும், தனது சகோதரருடனான உறவிலிருந்து தனித்தனியாக தனது சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். 2004 ஆம் ஆண்டில், தாலரும் இவரது சகோதரர் எட் கோக்கும் குழந்தைகளுக்கான புத்தகத்தை எழுதினர், எடி, ஹரோல்ட்ஸ் லிட்டில் பிரதர் இது கோக்கின் குழந்தைப் பருவத்தின் கதையைச் சொல்கிறது, இவர் தனது மூத்த சகோதரர் ஹரோல்டின் தளக்காட்டுப் பந்தின் திறமைகளைப் பின்பற்றத் தவறியபோது, அதற்கு பதிலாக அவர் ஏற்கனவே என்ன கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வதற்கு முன்பு கதைகளைச் சொல்லி பொதுவில் பேசுவது. தனிப்பட்ட வாழ்க்கை இவர் 1956 ஆம் ஆண்டில் சிபிஎஸ் நியூஸின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆல்வின் தாலரை மணந்தார். இவர்களுக்கு சாமுவேல், ஜான் மற்றும் ஜாரெட் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இவர் 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். உடல்நலக்குறைவு மற்றும் இறப்பு தாலர் 22 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடினார், நோய் இறுதியில் அறுவைசிகிச்சை செய்ய முடியாத காலத்திற்கு முன்பு கதிர்வீச்சு, வேதிச்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சைகளை அனுபவித்தார். இவரது பிற்காலங்களில், இவர் நியூ ஜெர்சியில் உள்ள பாம்ப்டன் பிளைன்ஸில் ஒரு ஓய்வூதிய சமூகத்தில் வசித்து வந்தார், மேலும் இவர் இறப்பதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு மருத்துவமனை பராமரிப்பில் நுழைந்தார். தாலர் நவம்பர் 16,2024 அன்று தனது 92 வயதில் இறந்தார், நீண்டகால துன்பத்தைத் தவிர்ப்பதற்காக நியூ ஜெர்சியின் மருத்துவ உதவியைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார். மேற்கோள்கள் 2024 இறப்புகள் 1932 பிறப்புகள்
683646
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பசோரா சட்டமன்றத் தொகுதி
பசோரா சட்டமன்றத் தொகுதி (Pachora Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்காவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 2019 2019 மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில், பச்சோரா தொகுதியில் சிவசேனா கட்சியின் வேட்பாளர் கிசோர் பாட்டீல் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683648
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
வி. ரவிச்சந்திரன்
விசுவநாதன் ரவிச்சந்திரன் ( வேணு ரவிச்சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகத்தர் ஆவார். இவர் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனரும், உரிமையாளரும் ஆவார். இவரது நிறுவனம் முன்பு ஆஸ்கார் பிலிம்ஸ் என்று அழைக்கப்பட்டது. ரவிச்சந்திரன் தனது திரைப்படத் தயாரிப்பு வாழ்கையை 1998 ஆம் ஆண்டில் காதலுக்கு மரியாதை படத்தின் இணை தயாரிப்பாளராக ஆனதில் இருந்து தொடங்கினார். இவர் பல பெரிய அளவிலான தமிழ் மொழித் திரைப்படங்களைத் தயாரித்தார். மேலும் தென்னிந்தியா முழுவதும் பல ஆங்கிலப் படங்களை விநியோகிக்கித்தார். துவக்ககால வாழ்க்கை இவர் வேலூரில் பிறந்தார். ஊரிசு கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இவரது சகோதரர்கள் சிறிய தயாரிப்பு நிறுவனங்களான செலிபிரிட்டி பிக்சர்ஸ், விஸ்வாஸ் பிக்சர்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். வேலூரில் ஒரு முன்னணி விநியோகத்தரின் மகன் என்பதால் இவர் தன் 16 வயதிலிருந்தே படங்களை விநியோகிக்கத் தொடங்கினார். தொழில் திரைப்பட தயாரிப்பாளராக தடம் பதிப்பதற்கு முன்பு, ரவிச்சந்திரன் 1970 களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் திரைப்படத்துறையில் ஒரு முன்னணி திரைப்பட விநியோகத்தராக இருந்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஜாக்கி சான் படங்களை விநியோகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். ரவிச்சந்திரன் சங்கிலி முருகனுடன் இணைந்து தயாரித்த ஃபாசிலின் காதல் நடகத் திரைப்படமான காதலுக்கு மரியாதை (1997) மூலம் திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகமானார். படத்தின் மலையாள பதிப்பை முதலில் தயாரிக்க ஃபாசில் இவருக்கு வாய்ப்பளித்தாலும், ரவிச்சந்திரன் தனது முதல் தயாரிப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பதால் அதை மறுத்துவிட்டார். இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக மாறியது. அதே நேரத்தில் இவரது இரண்டாவது தயாரிப்பாக, விக்ரமனின் குடும்ப நாடகப் படமான வானத்தைப் போல (2000), வணிகரீதியாக வெற்றியைப் பெற்றது. இவரது மூன்றாவது மற்றும் நான்காவது படங்களான, எழிலின் குடும்ப நாடகப்படமான பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் சசியின் காதல் திரைப்படமான ரோஜாக்கூட்டம் (2002) ஆகியவை, மிகவும் இலாபகரமான படங்களாக இருந்தன. 2012 ஆம் ஆண்டில், ரவிச்சந்திரன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் விக்ரம் நடித்த காதல் பரபரப்பூட்டும் படமான ஐ (2015) படத்தின் வேலைகளைத் தொடங்கினார். எல்லா காலத்திலும் மிகவும் பொருட் செலவில் எடுக்கபட்ட தமிழ் படங்களில் ஒன்றாக ஐ படத்தை எடுக்கும் முயற்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு அதை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இசை வெளியீட்டு வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு ஆர்னோல்டு சுவார்செனேகர் தலைமை விருந்தினராக அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு சில காலத்தில் ஐ வெளியாகி, லாபகரமான படமாக மாறியது. ஊடகங்களில் ரவிச்சந்திரன் தன்னை ஒளிப்படங்கள் எடுப்பதைத் தவிர்கிறார். தனது படங்களின் விளம்பர நிகழ்வுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க விரும்புகிறார். Behindwoods.com, உடனான ஒரு நேர்காணலில் தனது திருமணத்தில் ஒளிப்படக் கலைஞர்கள் யாரும் இருக்கவில்லை என்றும், குடும்ப ஒளிப்படங்களில், தன் மனைவி மட்டுமே தன குழந்தைகளுடன் தோன்றுவார் என்றும் தெரிவித்தார். திரைப்படவியல் தயாரிப்பு விநியோகம் மேற்கோள்கள் வாழும் நபர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்
683649
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D
அண்ணா பான்சோட்
அண்ணா தாது பான்சோட் (Anna Dadu Bansode) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 அக்டோபர் 24 முதல் பிம்பிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முன்னதாக இவர் 2009இல் பிம்பிரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு-சமாஜ்வாதி கட்சியின் சுலேகா சிலாவந்த் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அண்ணா பன்சோட் தேர்தல் முடிவு வாழும் நபர்கள் 1978 பிறப்புகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
683650
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பிம்ப்ரி சட்டமன்றத் தொகுதி
பிம்ப்ரி சட்டமன்றத் தொகுதி (Pimpri Assembly constituency) என்பது இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ள மகாராட்டிரச் சட்டமன்றத்தின் இருபத்தி ஒரு தொகுதிகளில் ஒன்றாகும். இது புனே மாவட்டத்தைச் சேர்ந்த சிஞ்ச்வாட் மற்றும் மாவல் மற்றும் ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ஜத், உரன் மற்றும் பன்வேல் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் மாவள் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் பிரதிநிதியாகத் தேசியவாத காங்கிரசு கட்சியின் அண்ணா பான்சோட் உள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683653
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சாம்னேர் சட்டமன்றத் தொகுதி
சாம்னர் சட்டமன்றத் தொகுதி (Jamner Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாம்னேர் , ராவேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683654
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
பொப்பிலிப் போர்
பொப்பிலிப் போர் (Battle of Bobbili) 1757 ஜனவரி 24 அன்று பொப்பிலிக் கோட்டை மீதான தாக்குதலைப் பற்றியது. ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர (இன்றைய விசயநகர மாவட்டம்) சமஸ்தானத்தில் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது. பொப்பிலியின் இராணுவத்திற்கும் பிரெஞ்சு மற்றும் விஜயநகரத்தின் கூட்டுப் படைக்கும் இடையே இப்போர் நடைபெற்றது. இப்போரின் முடிவில் பொப்பிலியின் தளபதி தந்திர பாப்பராயுடு தனது கடுமையான எதிர்ப்பு மற்றும் இறுதி பழிவாங்கல் ஆகியவற்றிற்காக “பொப்பிலி புலி” என்ற பெயரைப் பெற்றார். பின்னணி பொப்பிலி கோட்டை விசாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 140 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பொப்பிலியின் ஜமீந்தாராக இருந்த கோபாலகிருஷ்ண ரங்கராவ் மற்றும் விஜயநகரத்தின் மன்னன் பூசபதி பெத்த விஜயராம ராஜு ஆகியோருக்கிடையே கடுமையான பகை இருந்தது. இரு இராச்சியங்களின் எல்லையில் உள்ள ஓடைகளில் உள்ள தண்ணீரை பொப்பிலி மக்கள் பலவந்தமாக எடுத்து வந்தனர். பெத்த விஜயராம ராஜு, பிரெஞ்சுத் தளபதி மார்க்விஸ் தெ புஸ்ஸியுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஸ்ரீகாகுளம், ஏலூரு மற்றும் ராஜமன்றி ஆகிய பகுதிகளை சாகிராக ஆண்டுக்கு ரூ.2, 00,000 தொகைக்கு குத்தகைக்கு பெற்றார். இது பொப்பிலி அரசுக்கு கடும் கோபத்தை விளைவித்தது. விஜயராம ராஜு தனது எதிரியான பொப்பிலி ராஜாவை தோற்கடிக்க உதவுமாறு புஸ்ஸியிடம் கேட்டுக்கொண்டார். புஸ்ஸி தனது படை மற்றும் பூசபதி விஜயராம கஜபதி ராஜுவின் படையுடன் பொப்பிலி கோட்டையை நோக்கி அணிவகுத்துச் சென்றார். 23 ஜனவரி 1757 இல் பொப்பிலி போர் நடைபெற்றது. போரில் பொப்பிலிப் படை தோற்றது. கோட்டை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. எண்ணற்ற பொப்பிலி வீரர்கள் உயிரிழந்தனர். போரில் புஸ்ஸி செய்த உதவிக்கு நன்றியாக மன்னர் விஜயநகர பூசபதி பெத்த விஜயராமராஜு யானம் பகுதியை வழங்கினார். யானமில் தெ புஸ்ஸி என்ற பெயரில் ஒரு தெரு இன்றும் உள்ளது. மேற்கோள்கள் ஆந்திரப் பிரதேச வரலாறு
683655
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பொட்டாசியம் மாலேட்டு
பொட்டாசியம் மாலேட்டு (Potassium malate) என்பது K2(C2H4O(COO)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். மேலிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. உணவுச் சேர்ப்பொருளாக ஐரோப்பிய எண் ஐ351 என்ற எண்ணால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. அமிலத்தன்மை சீராக்கி அல்லது அமிலமாக்கியாக பொட்டாசியம் மாலேட்டு பயன்படுத்தப்படுகிறது. அடைக்கப்பட்ட காய்கறிகள், வடிசாறுகள், சுவைகூட்டுகள், பழ பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். ஓர் ஆக்சிசனேற்ற மற்றும் உணவு சுவையூட்டும் முகவராகவும் இது செயல்படுகிறது. ஒரு தாவரத்தின் வேர்களில் இருந்து தாவரத்தின் இலைகளுக்கு நைட்ரேட்டு உப்பைக் கொண்டு செல்வதில் இது ஒரு முக்கியமான சேர்மமாகும். பொட்டாசியம் மாலேட்டு உப்பு என்பது இலைகளிலிருந்து வேருக்கு கடத்தப்படும் ஓர் உப்பாகும். மேற்கோள்கள் பொட்டாசியம் சேர்மங்கள் உணவுச் சேர்பொருட்கள் கரிமச் சேர்மங்கள் மேலேட்டுகள்
683657
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
தாண்டலம்(III) குளோரைடு
தாண்டலம்(III) குளோரைடு (Tantalum(III) chloride) என்பது TaCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தாண்டலம் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. விகிதவியலுக்கு ஒவ்வா விகிதங்களில் குளோரின் இச்சேர்மத்தில் TaCl2.9 முதல் TaCl3.1 சேர்ந்துள்ளது. [Ta6Cl18]4− மற்றும் [Ta6Cl14](H2O)4 ஆகியவை Ta(III) குளோரைடு கொண்ட எதி மின்னயனி மற்றும் நடுநிலை கொத்து சேர்மங்களாகும். தயாரிப்பு தாண்டலம்(V) குளோரைடை தாண்டலம் உலோகத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் குறைத்தல் வினை நிகழ்ந்து தாண்டலம்(III) குளோரைடு உருவாகிறது. தாண்டலம்(III) குளோரைடை 305 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி, ஆவியை 600° செல்சியசு வெப்பநிலையிலுள்ள தாண்டலம் தகட்டின் மீது செலுத்தி 365 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் தாண்டலம்(III) குளோரைடு உருவாகும். ஒடுக்கப் பகுதி மிக அதிக வெப்பநிலையில் வைக்கப்பட்டால், அதற்குப் பதிலாக TaCl2.5 படிகமாகும். TaCl4 சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலமும், ஆவியாகும் TaCl5 சேர்மத்தை அகற்றுவதன் மூலமும் தாண்டலம்(III) குளோரைடு சேர்மத்தைத் தயாரிக்கலாம். TaCl3 ஐ விட்டுவிட்டு TaCl5 சேற்மத்தை ஆவியாக்கினால் TaCl3 சேர்மம் கிடைக்கும். எத்திலீன் முன்னிலையில் 1,4-இருசிலில்-வளையயெக்சாடையீனுடன் TaCl5 சேர்மத்தின் தொலுயீன் கரைசலைச் சேர்த்து "உப்பு இல்லாத குறைப்பு" வினைக்கு உட்படுத்தினால் TaCl3 சேர்மத்தின் அணைவுச் சேர்மம் உருவாகிறது: TaCl5 + C6H6(SiMe3)2 -> TaCl3 + C6H6 + 2 Me3SiCl பண்புகள் 500 °செல்சியசு வெப்பநிலைக்கு TaCl3 விகிதச்சமமற்றை விகிதத்தில் சிதைந்து TaCl5 சேற்மத்தைக் கொடுக்கிறது. தாண்டலம்(III) குளோரைடு அறை வெப்பநிலை நீரில் கரையாது. நீர்த்த அமிலத்திலும் கரையாது. ஆனால் கொதிக்கும் நீரில் கரையும். நீல-பச்சை நிறக் கரைசல் உருவாகும். ஒருங்கிணைவுச் சேர்மங்கள் ஓர் ஒருமம் அல்லது இருமமாக சில ஈந்தணைவிகளுடன் சேர்ந்து தாண்டலம்(III) குளோரைடு ஒருங்கிணைவுச் சேர்மங்களை உருவாக்கும். Ta(=C-CMe3)(PMe3)2Cl3, [TaCl3(P(CH2C6H5)3THF]2μ-N2 மற்றும் [TaCl3THF2]2μ-N2 (இருநைட்ரசன் ஒருங்கிணைவுச் சேர்மங்கள்) ஆகியவை சில ஒருங்கிணைவுச் சேர்மங்களாகும். ஓர் இருமமாக ஒருங்கிணைவுச் சேர்மங்களில் Ta2Cl6(SC4H8)3 (SC4H8=டெட்ரா ஐதரோ தையோபீன்) ஆகும். Ta2Cl6(SMe2)3, Ta2Cl6(தயேன்)3 மற்றும் Ta2Cl6(தயோலேன்)3 ஆகியவை இரண்டு தாண்டலம் அணுக்களுக்கும், பாலம் அமைத்துள்ள இரண்டு குளோரைடுகள் மற்றும் பாலம் அமைத்துள்ள ஈந்தணைவி ஆகியவற்றிற்கும் இடையே இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ளன. மேற்கோள்கள் தாண்டலம் சேர்மங்கள் குளோரைடுகள் விகிதவியலுக்கு ஒவ்வா சேர்மங்கள்
683660
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
முக்தாயி நகர் சட்டமன்றத் தொகுதி
முக்தாயி நகர் சட்டமன்றத் தொகுதி (Muktainagar assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சல்கான் மாவட்டத்தின் பதினொரு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். சந்திரகாந்த் நிம்பா பாட்டீல் இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இது சோப்தா, ராவேர், புசாவல், சாம்னேர் மற்றும் மல்காப்பூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் ராவேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவைகளாகும். தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் மகாராட்டிரம் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683669
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%202024
உலக சதுரங்க வாகை 2024
உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024), அதிகாரபூர்வமாக கூகுள் முன்வைக்கும் உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024 presented by Google), என்பது உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க நடப்பு உலக சதுரங்க வாகையாளர் திங் லிரேனுக்கும், அறைகூவல் வீரர் குகேசிற்கும் இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் சிங்கப்பூரில் 2024 நவம்பர் 25 முதல் திசம்பர் 13 வரை இடம்பெற்றது. 14 ஆட்டங்களில், தேவைப்படின் சமன்முறிகளுடன், வாகையாளர் தீர்மானிக்கப்படுவதாக தொடர் அமைந்திருந்தது. 2021 உலக சதுரங்க வாகையாளர் மாக்னசு கார்ல்சன் தனது பட்டத்தைக் காக்க மறுத்ததால், திங் லிரென் 2023 உலக வாகைப் போட்டியில் இயான் நிப்போம்னிசியைத் தோற்கடித்து வென்றார். உலக வாகையாளருக்காக திங்குக்கு எதிராக விளையாடும் உரிமையை வெல்வதற்காக ஏப்ரல் 2024 இல் நடைபெற்ற எட்டு வீரர்கள் கொண்ட வேட்பாளர் போட்டியில் குகேசு வெற்றி பெற்றார். 2024 வாகைப் போட்டி தொடங்குவதற்கு முன், குகேசு பிடே தரவரிசையில் 2783 எலோ மதிப்பீட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், திங் 2728 எலோ மதிப்பீட்டில் 23-வது இடத்தைப் பிடித்தார். 14 ஆட்டங்களில் திங் இரண்டு ஆட்டங்களைலும், குகேசு மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். 14-ஆவது இறுதி ஆட்டத்தில் திங் இழைத்த பெருந்தவறினால், திங் ஆட்டத்தைக் கைவிட, குகேசு தனது வெற்றியை எளிதாக்கினார். இந்த வெற்றியின் மூலம் குகேசு உலகின் இளைய உலக வாகையாளரானார். அறைகூவல் வீரரைத் தேர்ந்தெடுக்கும் சுற்று திங் லிரெனுடன் விளையாடும் அறைகூவல் போட்டியாளராக குகேஷ் தொம்மராஜு, கனடா, தொராண்டோவில் 2024 ஆம் ஆண்டுக்கான தகுதிகாண் சுற்றில் வென்றதன் மூலம் தகுதி பெற்றார். எட்டு வீரர்கள் இச்சுற்றில் போட்டியிட்டனர். இது 2024 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 22 வரை நடைபெற்றது. <onlyinclude> அட்டவணை ஆட்டங்கள் அனைத்தும் உள்ளூர் நேரம் 17:00 (சிங்கப்பூர் நேரம்) மணிக்கு (14:30 இந்திய நேரம், 09:00 ஒசநே தொடங்கின. தொடக்க விழாவில் நடத்தப்பட்ட குலுக்கலை அடுத்து, குகேசு முதல் ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடத் தீர்மானிக்கப்பட்டது. ஆட்டம் 14 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தால், நிறைவு விழா முன்நோக்கி நகர்த்தப்படலாம். முடிவுகள் மரபார்ந்த ஆட்டங்கள் ஆட்டம் 1: குகேசு–திங், 0–1 2024 நவம்பர் 25 இல் சுற்றின் முதல் ஆட்டத்தில் டிங் 42-நகர்த்தல்கள் மூலம் வெற்றி பெற்றார். திங் போர்த்திறன் கொண்ட பிரெஞ்சு தற்காப்பு ஆட்டத்தை விளையாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார், இது உயர் மட்டத்தில் ஒரு அசாதாரண தொடக்கமாகும், ஆனால் இதனை அவர் கடைசியாக உலக சதுரங்க வாகை 2023, 7வது ஆட்டத்தில் இயான் நிப்போம்னிசிக்கு எதிராக விளையாடினார். ஆட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், திங், "நிச்சயமாக நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்-நான் நீண்ட காலமாக ஒரு மரபார்ந்த ஆட்டத்தைக்கூட வெல்லவில்லை, என்னால் அதைச் செய்ய முடிந்தது!" என்று கூறினார். மறுபுறம் குகேஷ், "இது ஒரு தந்திரோபாயக் கவனக்குறைவு. இது ஒரு நீண்ட போட்டி, மேலும் எனது எதிராளியின் திறமை பற்றி, நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களிடையே ஒரு நீண்ட சுற்றுப் போட்டி உள்ளது, எனவே இது இப்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது!" என்று கூறினார். ஆட்டம் 2: திங்–குகேசு, ½–½ 2024 நவம்பர் 26 இல் நடைபெற்ற தொடரின் இரண்டாவது ஆட்டம், 23 நகர்வுகளில் சமநிலையில் நிறைவடைந்தது. திங் மரபார்ந்த Giuoco Pianissimo ஆட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, 1.e4 ஐத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் வர்ணனையாளர் டேவிட் ஹோவெல். "கடந்த சில மாதங்கள் வரை திங் அரசரின் சிப்பாய்த் திறப்புகளை அரிதாகவே பயன்படுத்தினார்!" திங் குகேசுக்கு சிக்கலான ஆட்டத்தை வழங்கினார். 10.dxc4, 10...Bb4!?. ஒரு சமநிலையான நிலையில், திங்குக்கு 20.h4 உடன் விளையாட ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தது. திங் அதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் நகர்த்தல்களைத் தேர்ந்தெடுத்தார், இதன் விளைவாக சமநிலை ஏற்பட்டது. ஆட்டம் 3: குகேசு–திங், 1–0 2024 நவம்பர் 27 இல் 37-நகர்வுகளாக நடைபெற்ற மூன்றாம் ஆட்டத்தில் குகேசு வெற்றி பெற்றார். ஆட்டம் 4: திங்–குகேசு, ½–½ 2024 நவம்பர் 29 இல் நடைபெற்ற சுற்றின் நான்காவது ஆட்டம், 42 நகர்வுகளில் வெற்றி-தோல்வியின்றி முடிவுற்றது. திங் 1.Nf3 இல் தொடங்கி ஒரு வழக்கத்திற்கு மாறான அமைப்பில் விளையாடினார், இது இராணியின் இந்தியப் பாதுகாப்பைப் போன்றது, இந்தத் தொடக்கம் குகேசை ஆச்சரியப்படுத்தியது, ஆனால் குறிப்பாக அவர் சண்டையிடவில்லை. ஆட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், திங் "பாதுகாப்பாக விளையாட" விரும்புவதாகவும், ஆனால் அவர் 11.b4 உடன் சில இக்கட்டுகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். குகேசின் 13...நெ5!? நகர்வு மூலம் திங்கை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார், ஏனெனில் குதிரையை f4 மூலம் எளிதாக வெளியேற்ற முடிந்திருக்கும், "[f4] நீண்ட காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு நகர்வு போல் தெரிகிறது". குகேசின் 15...b6 16.Ba6 நகர்வுடன் வெற்றி பெற திங்கின் கடைசி வாய்ப்பாகும், ஆனால் அவர் 16.Nf3 விளையாடிய பிறகு, ஆட்டம் சமனை நோக்கி நகர்ந்தது. முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தாலும், குகேசு தொடர்ந்து விளையாடினார். இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, இருவரும் மீண்டும் மூன்று முறை சமநிலையை அடைந்தனர். ஆட்டம் 5: குகேசு–திங், ½–½ 2024 நவம்பர் 30 இல் நடைபெற்ற சுற்றின் ஐந்தாவது ஆட்டம் 40 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இச்சுற்றில் இரண்டாவது முறையாக, திங் ஒரு பிரெஞ்சுத் தற்காப்பு ஆட்டத்தை விளையாடினார். இருப்பினும், இந்த நேரத்தில், குகேசு d5 இல் சிப்பாய்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பதிலளித்தார், ராணிகளையும் ஒரு சோடி கோட்டைகளையும் விரைவாகப் பரிமாறிக் கொண்டார். திங்கின் 15...Nh5 நகர்விற்குப் பிறகு, குகேசை 17.g4 ஐ விளையாடத் தூண்டியது. ஒரு முற்றுகையை வழங்கிய பிறகு, கிராண்ட்மாசுடர் ஜூடிட் போல்கர் இது மிகவும் ஆபத்தானது என்று நம்பினார். ஆயினும்கூட, குகேசு விரைவாக 23.dxe5 ஐ விளையாடும் வரை, ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்றதாகத் தோன்றியது. மேலும் 29...Bc6 இற்குப் பிறகு சமநிலைக்கு ஒப்புக்கொண்டனர். ஆட்டம் 6: திங்–குகேசு, ½–½ 2024 திசம்பர் 1 இல் நடைபெற்ற சுற்றின் ஆறாவது ஆட்டம் 46 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. ஆட்டம் 7: குகேசு–திங், ½–½ 2024 திசம்பர் 3 இல் நடைபெற்ற சுற்றின் ஏழாவது ஆட்டம் 72 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இருவரும் பரபரப்பாக விளையாடினர். ஒரு நியோ-குரூன்ஃபெல்டு தற்காப்பில் இருந்து, குகேசு புதிய நகர்வு 7. Re1 ஐ விளையாடினார், இது இந்தத் தற்காப்புக் கோட்பாட்டிற்கு முற்றிலும் புதிய நகர்வை அறிமுகப்படுத்தியது. திங் 9...c5?! நகர்வில் மோசமாகப் பதிலளித்தார், குகேசு வலுவான நிலையில், குறிப்பிடத்தக்க நேர நன்மையையும் கொண்டிருந்தார். கடுமையான அழுத்தத்தின் கீழ், திங் Qa6-xa2 மூலம் இராணி தடூகத்திற்குச் சென்றார். இந்த நகர்வை கிராண்டுமாசுடர் அனிஷ் கிரி "ஒரு வீரரின் விரக்தி" என மதிப்பிட்டார். திங் தான் தோற்கிறார் என்பதை அறிந்திருந்தாலும், தோற்கும் முன் குறைந்தபட்சம் சிலவற்றைப் பெற விரும்புகிறார், எனக் குறிப்பிட்டார். குகேசு தெளிவாக வெற்றி நிலையில் இருந்தாலும், திங்கின் சுறுசுறுப்பான ராணி மூலம் பிரச்சனைகளை ஏற்படுத்தினார், 30. Qf4?! நகர்விற்குப் பிறகு, திங்கால் விளையாட்டை மோசமான-ஆனால்-தாக்கக்கூடிய இறுதி ஆட்டத்திற்கு வழிநடத்த முடிந்தது. வலுவான தற்காப்பு நகர்வுக்கு பிறகு 34...என்ஜி6! திங் அந்த இடத்தைக் காப்பாற்றுவார் என்று தோன்றியது, ஆனால் திங் 40...Ke5? நகர்வை விளையாடி, மீண்டும் குகேசுக்கு வெற்றி நிலையைக் கொடுத்தார், ஆனாலும் வெற்றி பெற கடினமாக இருந்தது. குகேசின் 45. h4?! நகர்வு துல்லியமற்றதாக இருந்தது, 46...f4 ஐத் தொடர்ந்து, திங் அந்த இடத்தை சமன் செய்திருந்தார். குகேசுக்கு மேலும் நடைமுறை வெற்றி வாய்ப்புகள் இருந்த போதிலும், திங் வெற்றிகரமாக அவற்றை சமன் செய்தார். பல வர்ணனையாளர்கள் இந்த விளையாட்டைப் பாராட்டினர், பலர் போட்டியின் சிறந்த ஆட்டம் என்று அழைத்தனர். ஆட்டம் 8: திங்–குகேசு, ½–½ 2024 திசம்பர் 4 இல் நடைபெற்ற சுற்றின் எட்டாவது ஆட்டம் 51 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. ஆட்டம் 9: குகேசு–திங், ½–½ 2024 திசம்பர் 5 இல் நடைபெற்ற சுற்றின் ஒன்பதாவது ஆட்டம் 54 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. ஆட்டம் 3 ஐப் போலவே, குகேசு 1.d4 நகர்வுடன் ஆட்டத்தைத் தொடங்கினார். திங்கும் ஆட்டம் 3 ஐப் போல 1...Nf6 என நகர்த்தினார். அதன் பின்னர், குகேசு மிகவும் பிரபலமான 2.c4 ஐ விளையாடினார். 2...e6, 3.g3 நகர்வுகளின் பின்னர் ஆட்டம் காட்டலான் திறப்பு நோக்கி நகர்ந்தது. திங் 3...Bb4+, 4...Be7 உடன் போகோ - இந்தியத் தற்காப்பு போன்ற ஒரு நகர்வைத் தேர்ந்தெடுத்தார், 7...c6, 8...Nbd7 நகர்வுகளுடன் மூடிய கேட்டலான் கட்டமைப்பைப் பயன்படுத்தினார். குகேசு 20.Qb5 வரை ஒரு சிறிய பயன்தரு நிலையைப் பேணினார். இது திங்கை சமன் செய்யவும், காய்களை பரிமாற்றம் செய்யவும் அனுமதித்தது. ஆட்டம் 10: திங்–குகேசு, ½–½ 2024 திசம்பர் 7 இல் நடைபெற்ற சுற்றின் பத்தாவது ஆட்டம் 36 நகர்வுகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. ஆட்டம் 11: குகேசு–திங், 1–0 2024 திசம்பர் 8 இல் நடைபெற்ற 11-ஆவது ஆட்டம், 29-ஆவது நகர்வில், குகேசின் வெற்றியுடன் நிறைவுற்றது. குகேசு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்துக் குழப்பிக் கொண்டார், ஆனால் திங் தனது வாய்ப்புகளைக் குறைத்து மதிப்பிட்டு, அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார். மிகவும் சிக்கலான ஆட்டத்தில் இரு வீரர்களும் பல தவறுகளைச் செய்தனர். திங் தனது குதிரையை 28...Qc8?? உடன் தவறுதலாக நகர்த்திய போது, ​​அந்த நிலை இன்னும் சிக்கலானதாக வந்து ஆட்டத்தைத் திடீரென முடித்தது. ஆட்டம் 12: திங்–குகேசு, 1–0 2024 திசம்பர் 9 இல் நடைபெற்ற 12-ஆவது ஆட்டம், 39-ஆவது நகர்வில், திங்கின் வெற்றியுடன் நிறைவுற்றது. அவரது சிறந்த விளையாட்டுகளில் ஒன்றில், திங் தனது எதிரியை "உருட்ட" (ஹிகாரு நகமுரா) கணினி போன்ற துல்லியத்துடன் விளையாடினார். 14-ஆம் நகர்வில், திங் ஒரு சிறிய பயன்தரு நிலையைக்கொண்டிருந்தார். குகேசு சில தயக்கமான நகர்வுகளை செய்தார். – இதனால் திங்கின் நிலைமை மேலோங்கியது. ஆட்டம் 13: குகேசு–திங், ½–½ 2024 திசம்பர் 11 இல் நடைபெற்ற 13-ஆவது ஆட்டம் 69 நகர்வுகளின் பின்னர் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. குகேசு திங்கை 7.a3, 8.Be3 நகவுகளின் தொடக்கத்திலேயே வியப்பிலாழ்த்தி, திங்கை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். 17.Qf3 நகர்வுடன் குகேசு d4-சிப்பாயை வழங்கினார், ஆனால் திங் தனது எதிராளியை நம்பி 17...Qe8 நகர்த்தினார். பலவீனமான d6-, c7-சதுரங்களில் ஊடுருவி, 22.Bf4! நகர்வின் மூலம் குகேசு தனது மேநிலையை வளர்த்துக் கொண்டார், ஆனால் 25.Bxe7?! நகர்வு அவசரமாக இருந்தது. இந்த நடவடிக்கை சாதகமான நிலையை ஏற்படுத்தினாலும், 25.Re1 நகர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இன்னும் 10 நகர்வுகளுக்கு 8 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோதிலும், திங் விளையாட்டை சமன் செய்ய 31...Rf8, 32...Rc7 ஆகிய ஒரே நகர்வுகளை விளையாட வேண்டி இருந்தது ஆட்டம் 14: திங்–குகேசு, 0–1 திசம்பர் 14 இல் நடைபெற்ற 14-ஆவது ஆட்டத்தில் 58 நகர்வுகளில் குகேசு வெற்றிபெற்றார். இந்தக் கடைசி ஆட்டத்தில் நுழையும் போது இருவரது புள்ளிகளும் 6½–6½ என சமநிலையில் இருந்ததால், எந்த ஒரு வீரருக்கும் வெற்றி என்பது போட்டியை வெல்வதை அர்த்தப்படுத்தியிருக்கும்; ஒரு சமநிலையானது அடுத்த நாளில் விளையாடப்படும் சமன்-முறி ஆட்டங்களின் தொடருக்கு வழிவகுத்திருக்கும். திங் ஒரு ஆச்சரியமான பெருந்தவறை செய்வதற்கு முன், ஒரு நிலையான இறுதியை நோக்கி மந்தமான சமநிலையில் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது, அந்த நேரத்தில் திங் ஒரு கோட்டை பரிமாற்றத்தை (55.Rf2??) வழங்கினார், அந்த நேரத்தில் அவரது அமைச்சர் ஒரு மூலையில் சதுக்கத்தில் சிக்கிக்கொண்டார், குகேசைக் கட்டாயமாகக் கலைக்க அனுமதித்தார். இறுதியில் (2 சிப்பாய்கள் எதிராக 1 சிப்பாய்) குகேசு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் குகேசு இளைய மறுக்க-முடியாத உலக சதுரங்க வாகையாளர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக 2002 உலக சதுரங்க வாகையை வென்ற உருசுலான் பனோமரியோவ் (உக்ரைன்) மட்டுமே, உலக சதுரங்க வாகை பிரிக்கப்பட்டபோது நடத்தப்பட்ட knock-out பாணிப் போட்டி, இளைய உலக வாகையாளராக இருந்தார். குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website 2024 2024 இல் விளையாட்டுகள் சிங்கப்பூரில் விளையாட்டு
683673
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்
சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் அல்லது சுல்தான் இசுமாயில் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Sultan Ismail LRT Station; மலாய்: Stesen LRT Sultan Ismail; சீனம்: 苏丹依斯迈) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இலகுரக விரைவுப் போக்குவரத்து, செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் வரை நீட்டிக்கப் படுவதற்கு முன்பு இந்த நிலையம், அம்பாங்-சுல்தான் இஸ்மாயில் வழித்தடத்தின் (Ampang-Sultan Ismail Route) முடிவிடமாக இருந்தது. பொது இந்த சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்; பத்து சாலை ஆண்கள் தேசியப் பள்ளிக்கும் (Sekolah Kebangsaan Lelaki Jalan Batu), சுங் குவாக் தொடக்கப் பள்ளிக்கும் (Chung Kwok Primary School) இடையில் உள்ளது. இந்த நிலையத்திற்கு வடக்கே அமைந்துள்ள சுல்தான் இசுமாயில் சாலையின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. மலேசியாவின் முன்னணி பன்னாட்டு நிறுவனமான சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இந்த நிலையத்திற்கு எதிரே உள்ளது. கட்டுமானம் இந்த சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம், 1996-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி, அம்பாங் நிலையத்திற்கும் இந்த நிலையத்திற்கும் இடையே 14 நிலையங்கள் வழியாகச் சென்ற இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) வழித்தடத்தின் (தற்போது அம்பாங் வழித்தடம்) முதல் பிரிவின் தொடக்கத்துடன் இந்த நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[ பின்னர், செரி பெட்டாலிங் வழித்தடம் 11 சூலை 1998 அன்று, ஒரு புதிய சேவை தொடங்கப்பட்டது. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திற்கும், செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கும் இடையே இஸ்டார் எல்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாவது பிரிவின் தொடக்கத்துடன் அந்தப் புதியச் சேவை தொடங்கியது. பாதசாரி மேம்பாலம் கூடுதலாக, இந்த நிலையத்தை மேடான் துவாங்கு நிலையத்துடன் இணைக்கும் ஒரு பாதசாரி மேம்பாலம் உள்ளது. மேடான் துவாங்கு நிலையத்தில் கோலாலம்பூர் மோனோரெயில் சேவை உள்ளது. செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. காட்சியகம் சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்: மேலும் காண்க கோலாலம்பூர் மோனோரெயில் கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் எம்ஆர்டி சுற்று வழித்தடம் மலேசியாவில் தொடருந்து மின்மயமாக்கல் கிள்ளான் பள்ளத்தாக்கின் போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
683678
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
தாண்டலம் தெலூரைடு
தாண்டலம் தெலூரைடு (Tantalum telluride) என்பது (TaTe2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தாண்டலமும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தாண்டலம் மிகுதியாக உள்ள தெலூரைடாகவும் இது உருவாகிறது. இந்நிகழ்வில் தோரயமான மூலக்கூற்று வாய்ப்பாடு Ta1.6Te ஆகும். அசாதாரணமானது இது பன்னிரண்டுமுக சால்கோசெனைடு பகுதிப்படிகங்களை உருவாக்கும். சாதாரண படிகங்கள் இத்தகைய படிகங்களை உருவாக்க இயலாது. ஏனெனில் இவை தனிமவரிசை அட்டவணையின் படிக அமைப்பிலிருந்து பெறப்படுவதில்லை. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Chemical properties on WebElements Tantalum Telluride Quasicrystals at ETH Microscopy தெலூரைடுகள் கனிம வேதியியல் சேர்மங்கள் தாண்டலம் சேர்மங்கள்
683682
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
பண்டாராயா எல்ஆர்டி நிலையம் அல்லது பண்டாராயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Bandaraya LRT Station; மலாய்: Stesen LRT Bandaraya; சீனம்: 市政局站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். பண்டாராயா எல்ஆர்டி நிலையம், 1996-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி, அம்பாங் நிலையத்திற்கும் இந்த நிலையத்திற்கும் இடையே 13 நிலையங்கள் வழியாகச் சென்ற இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) வழித்தடத்தின் (தற்போது அம்பாங் வழித்தடம்) முதல் பிரிவின் தொடக்கத்துடன் இந்த நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[ பின்னர், செரி பெட்டாலிங் வழித்தடம் 11 சூலை 1998 அன்று, ஒரு புதிய சேவை தொடங்கப்பட்டது. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திற்கும், செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கும் இடையே இஸ்டார் எல்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாவது பிரிவின் தொடக்கத்துடன் அந்தப் புதியச் சேவை தொடங்கியது. அமைவு இந்த பண்டாராயா நிலையம் கோம்பாக் ஆற்றின் கிழக்குக் கரையிலும், ராஜா லாவுட் சாலைக்கு அருகிலும் உள்ளது. பண்டாராயா நிலையம் கோம்பாக் ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள கடைசி இலகு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் பல வணிக வளாகங்கள்; தற்போதைய கோலாலம்பூர் மாநகராட்சி கட்டிடம், பேங்க் நெகாரா (Bank Negara) தலைமையகம்; மற்றும் லிட்டில் இந்தியா வளாகத்திற்கும் (Little India Precinct) அருகாமையில் உள்ளது. பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் இந்த நிலையம் பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையத்திலிருந்து 140 மீ தொலைவில் உள்ளது. இரண்டு நிலையங்களும் ஒரு மேம்பால நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கட்டணம் அல்லது பயணச் சீட்டு அடிப்படையில் இரண்டு நிலையங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு வழங்கப்படவில்லை. ராஜா லாவுட் சாலை (Jalan Raja Laut), டாங் வாங்கி சாலை (Jalan Dang Wangi), மற்றும் துவாங்கு அப்துல் ரகுமான் சாலைகளின் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்ட அடுக்கு நிலையமாகும். இந்த நிலையத்தில் அம்பாங் வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரு தடங்களுக்கும் சேவை செய்யஇரண்டு பக்க தளங்கள் உள்ளன. செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. காட்சியகம் மேலும் காண்க கோலாலம்பூர் மாநகராட்சி மலேசிய நடுவண் வங்கி பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் மலேசியாவில் தொடருந்து மின்மயமாக்கல் கிள்ளான் பள்ளத்தாக்கின் போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
683683
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
சூரிய ஆற்றல் நிறுவனம், இந்தியா
இந்தியச் சூரிய ஆற்றல் நிறுவனம், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சூரிய ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. 2024 நிதி ஆண்டில் இந்தியச் சூரிய ஆற்றல் நிறுவனம் ரூபாய் 13,035 கோடி விற்றுமுதல் செய்து, ரூபாய் 436 கோடி இலாபம் ஈட்டியதால், ஆகஸ்டு 2024ல் இந்நிறுவனம் 23வது நவரத்தின நிறுவனமாக இந்திய அரசு அறிவித்தது. பின்னணி 2011ல் இலாப நோக்கமற்ற முறையில் நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் நிறுவனம், 2015ஆம் ஆண்டில் இந்திய நிறுவனச் சட்டம்த்தின் பிரிவு 3ன் கீழ் லாப நோக்கமுடைய நிறுவனமாக மாற்றப்பட்டதுடன், இதன் பெயரை இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் என மாற்றப்பட்டது. இந்நிறுவனம் தனது சொந்த சூரிய ஆற்றல் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல். சூரிய ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கருவிகளை தயாரித்தல் இதனையும் காண்க இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் மேற்கோள்கள் இந்திய அரசுத்துறை நிறுவனங்கள் நவரத்னா நிறுவனங்கள்
683686
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
பாலிவுட் கங்காமா
பாலிவுட் கங்காமா (ஆங்கில மொழியில் :Bollywood Hungama) என்பது ஓர் இந்தித் திரைப்பட பொழுதுபோக்கு இணையத்தளம் ஆகும். இது, முன்பு இந்தியா எஃப் எம் (Indiafm.com) என அறியப்பட்டது. பின்னர் இது பாலிவுட் கங்காமா என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இத்தளமானது கங்காமா எண்மஊடகம் கேளிக்கை என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த இணையதளம் இந்தியத் திரைப்படத்துறை தொடர்பான செய்திகளை வழங்குகிறது, குறிப்பாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழித் திரைப்பட விமர்சனங்கள் மற்றும் திரைப்பட நுழைவுச் சீட்டு விற்பனையின் அறிக்கைகளை வெளியிடுகின்றது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மகிந்திரா குழுமங்கள் மும்பையைத் தளமாக கொண்ட நிறுவனங்கள் இந்தித் திரைப்படத்துறை இந்தியாவின் கூட்டு நிறுவனங்கள்
683690
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF
சோபனா காமினேனி
சோபனா காமினேனி (Shobana Kamineni) இந்தியாவைச் சேர்ந்த வணிக நிர்வாகியும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவரும் ஆவார். சோபனா, அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான பிரதாப் சி. ரெட்டிடியின் மகள் ஆவார். இவருக்கு பிரீத்தா ரெட்டி, சங்கீதா ரெட்டி மற்றும் சுனிதா ரெட்டி என மூன்று சகோதரிகள் உள்ளனர். சகோதரிகள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனையில் நிர்வாகிகளாக பணிபுரிகின்றனர். சோபனா ஒரு தொழிலதிபரும் வனவிலங்கு பாதுகாப்பாளருமான அனில் காமினேனி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு உபாசனா மற்றும் அனுஷ்பாலா என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர். உபாசனா திரைப்பட நடிகர் ராம் சரணை மணந்தார். அனுஷ்பாலா 2021 டிசம்பரில் தொழில்முறை கார் பந்தய வீரரான அர்மான் இப்ராஹிம் என்பவரை மணந்தார். தொழில் வாழ்க்கை சோபனா இளம் வயதிலிருந்தே அப்பல்லோ குழுமத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2017 முதல் 2018 வரை இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றினார். இந்த பதவியை வகித்த முதல் பெண்மணி இவர்தான். சுகாதாரம் மற்றும் மருந்துகளில் இவர் செய்த பணியை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்காவின் பிரையன்ட் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அப்பல்லோ பார்மசி எனும் மாபெரும் சில்லரை வணிக மருந்துக்கடைகளின் தார்மீக நிறுவனத் தலைவராவார். இந்தியாவின் ஒவ்வொரு அஞ்சல் எண்ணிற்கும் ஒரு பார்மசி என்ற இலக்கை நோக்கி புதிய அப்பல்லோ மருந்துக்கடைகள் அதிகரித்து வருகின்றன. மேற்கோள்கள் வாழும் நபர்கள் இந்தியப் பெண்கள் இந்தியப் பெண் தொழிலதிபர்கள் தெலுங்கு மக்கள்
683691
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
என் எச் பி சி நிறுவனம்
என் எச் பி சி நிறுவனம் (முன்னர் இதன் பெயர் தேசிய புனல் மின்னாற்றல் நிறுவனம்--National Hydroelectric Power Corporation), இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் நீர் மின் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறது. தற்போது இந்நிறுவனம் சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தில் இந்திய அரசின் 70.95% ஆகும். 2024ல் இந்நிறுவனம் நவரத்தின நிறுவனமாக இந்திய அரசு அறிவித்தது. 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனம் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேரில் காற்றாலைகள் மூலம் 50 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைத் துவக்கியது. இந்நிறுவனத்தின் ஆளுகையில் 24 நீர் மின்நிலையங்களும், 9 திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் நீர் மின் நிலையங்கள் மூலம் 1230 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. நவரத்தினா அங்கீகாரம் இந்நிறுவனம் தொடர்ந்து இலாபம் ஈட்டி வருவதால், ஆகஸ்டு 2024ல் இந்திய அரசு நவரத்தினம் நிறுவனம் என்ற தகுதியை வழங்கியது. இதனையும் காண்க பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் என் எச் பி சி நிறுவனத்தின் இணையதளம் இந்திய அரசுத்துறை நிறுவனங்கள் நவரத்னா நிறுவனங்கள்
683693
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
சங்கீதா ரெட்டி
சங்கீதா ரெட்டி (Sangita Reddy) இந்தியாவைச் சேர்ந்த வணிக நிர்வாகியும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநரும் ஆவார். தொழில் சங்கீதா ரெட்டி அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநராகவும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கான (2012-2017) சுகாதாரத்திற்கான வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினராக, இந்திய அரசின் திட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 முதல் 2016 வரை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மாநில அமைப்பின் பல துறைசார் மற்றும் தொழில்துறை முயற்சிகளுக்கு இவர் வெற்றிகரமாக தலைமை தாங்கினார். இதற்கு முன்பு புதுதில்லியின் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் சுகாதார பராமரிப்பின் தலைவராகவும், ராக்பெல்லர் பணிக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அங்கு இவர் தனியார் சுகாதார மேம்பாட்டுக்கு பொறுப்பாக இருந்தார். மேலும் இவர் பல அமைப்புகளின் குழு உறுப்பினராகவும் உள்ளார். விருதுகள் இந்திய மருத்துவச் சங்கத்தின் மெடிகோ விருது, 2019 குடும்பம் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான பிரதாப் சி. ரெட்டியின் மகள் ஆவார். இவர் கே. விஸ்வேஸ்வர ரெட்டி என்பவரை மணந்தார். இவர்களுக்கு அனிந்தித் ரெட்டி உட்பட மூன்று மகன்கள் உள்ளனர். மேற்கோள்கள் வாழும் நபர்கள் இந்தியப் பெண்கள் இந்தியப் பெண் தொழிலதிபர்கள் தெலுங்கு மக்கள்
683694
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
தெலூரோபிசுமத்தைட்டு
தெலூரோபிசுமத்தைட்டு (Tellurobismuthite) என்பது Bi2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தெலூர்பிசுமத்து என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. தெலூரைடு வகை கனிமமான இது முக்கோண அமைப்பில் படிகமாகிறது. (0001) திசையில் இயற்கையான பிளவு தளங்கள் உள்ளன, ஏனெனில் அந்த தளங்களில் படிகம் திறம்பட அடுக்குகளாக உள்ளது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1.5 - 2 என்ற கடினத்தன்மையும் 7.815 என்ற ஒப்படர்த்தியும் தெலூரோபிசுமத்தைட்டு கனிமம் பெற்றுள்ளது. மந்தமான சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. புதிய பிளவு தளங்களில் ஒரு சிறந்த பளபளப்பை இக்கனிமம் வெளிப்படுத்துகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் தெலூரோபிசுமத்தைட்டு கனிமத்தை Tbi என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. கண்டுபிடிப்பு முதன்முதலில் 1815 ஆம் ஆண்டில் தெலூரோபிசுமத்தைட்டு கண்டறியப்பட்டது. நார்வே நாட்டின் டெலிமார்க்கு மாகாணத்தில் உள்ள தோக்கு ஏரி, நியூ மெக்சிகோவின் சில்வியா மாவட்டம் இதால்கோ மாகாணம் லிட்டில் மில்ட்ரெட்டு சுரங்கம், சியார்ச்சியாவின் இலம்ப்கின் மாகாணம் தாலோநேகாவின் போலி பீல்டு சுரங்கம் ஆகிய பகுதிகளீல் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்த கந்தக நீர்வெப்ப தங்க-குவார்ட்சு விளிம்புகளில் தெலூரோபிசுமத்தைட்டு தோன்றுகிறது. தாயகத் தங்கம், தாயக பிசுமத்து, தங்க டெல்லூரைடுகள், டெட்ராடைமைட்டு, அல்டைட்டு, சால்கோபைரைட்டு மற்றும் பைரோடைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்து இது காணப்படுகிறது. மேற்கோள்கள் D. M Chizhikov and V. P. Shchastlivyi, 1966, Tellurium and Tellurides, Nauka Publishing, Moscow பிசுமத் கனிமங்கள் தெலூரைடு கனிமங்கள் முக்கோணவமைப்புக் கனிமங்கள் கனிமங்கள்
683697
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
சாமி அய்யா பசும்படியார்
சாமி அய்யா பசும்படியார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். வாழ்க்கைக் குறிப்பு தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு அம்மாப்பேட்டை பகுதி உடையார்கோயில் கிராமத்தில் இல் 20-12-1904 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் சாமி அய்யா பசும்படியார் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1930 இல் உப்பு சத்தியாகிரகம், 1932 இல் வரி இல்லா இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 3 வருடம் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மரணமடைந்தார். மேற்கோள்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
683698
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
பிரதாப் சி. ரெட்டி
பிரதாப் சந்திர ரெட்டி (Prathap Chandra Reddy) (பிறப்பு; பிப்ரவரி 5,1933) ஓர் இந்திய தொழில்முனைவோரும் மற்றும் இதய நிபுணரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனைகளின் சங்கிலியான அப்போலோ மருத்துவமனைகளை நிறுவினார். இந்தியா டுடே தனது 2017 ஆம் ஆண்டின் இந்தியாவின் 50 மிக சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலில் இவருக்கு 48 வது இடத்தை அளித்தது. போர்ப்ஸ் பத்திரிக்கையின் 2024இன் இந்தியாவின் 100 பணக்கார தொழிலதிபர்களின் பட்டியலின் படி, பிரதாப் ரெட்டி 3.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 94 வது இடத்தில் உள்ளார். கல்வி மருத்துவர் ரெட்டி சென்னையிலுள்ள இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இதய மருத்துவராகப் பயிற்சி பெற்றார். பாஸ்டனிலுள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உயர்மருத்துவப் படிப்பை முடித்து, அமெரிக்காவின் மிசோரி மாநில இதய மருத்துவமனையில் பல ஆராய்ச்சி திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அங்கு இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார். சொந்த வாழ்க்கை ரெட்டி தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரீத்தா ரெட்டி, சங்கீதா ரெட்டி, சோபனா மற்றும் சுனிதா என நான்கு மகள்கள் பிறந்தனர். இவரது மகள்கள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைகளில் இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர். விருதுகளும் அங்கீகாரமும் 1991:பத்ம பூசண் விருது. 2010: பத்ம விபூசண். 2018: அப்பல்லோ மருத்துவமனைகளால் அரிமா மனிதாபிமான விருது 2022: இந்திய மருத்துவச் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் https://www.apollohospitals.com/corporate/apollo-management/chairman-profile 20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் சித்தூர் மாவட்ட நபர்கள் தெலுங்கு மக்கள் வாழும் நபர்கள் இந்திய கோடீசுவரர்கள் 1933 பிறப்புகள்
683700
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
கந்தசாமி சோழங்கதேவர்
கந்தசாமி சோழங்கதேவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். வாழ்க்கைக் குறிப்பு இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டத்தில் உள்ள விண்ணணூர்பட்டி கிராமத்தில் 12-9-1912 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்கான அழைப்பு விடுத்த போது, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 1930 இல் அலிபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டார்.1965 ஆம் ஆண்டு இறந்தார். மேற்கோள்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
683706
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
பிரசியோடைமியம் ஈரயோடைடு
பிரசியோடைமியம் ஈரயோடைடு (Praseodymium diiodide) என்பது PrI2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பிரசியோடைமியம் டையையோடைடு என்றும் அழைக்கப்படும் இது ஓர் அயனச் சேர்மமாகும். இதன் அயனி வாய்ப்பாடு Pr3+(I−)2e− ஆகும். எனவே இது ஓர் உண்மையான பிரசியோடைமியம்(II) சேர்மம் அல்ல என்று கருதப்படுகிறது. தயாரிப்பு பிரசியோடைமியம்(III) அயோடைடுடன் பிரசியோடைமியம் உலோகத்தைச் சேர்த்து வளிமண்டல வாயுச் சூழலில் 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம் ஈரயோடைடு உருவாகும்: Pr + 2 PrI3 → 3 PrI2 பாதரசம்(II) அயோடைடுடன் பிரசியோடைமியம் வினைபுரிவதன் மூலமும் பிரசியோடைமியம் ஈரயோடைடு சேர்மத்தைப் பெறலாம். இவ்வினையில் பிரசியோடைமியம் பாதரசத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது:: Pr + HgI2 → PrI2 + Hg பிரசியோடைமியம் ஈரயோடைடு முதன் முதலில் 1961 ஆம் ஆண்டு இயான் டி கார்பெட்டு என்பவரால் கண்டறியப்பட்டது. பண்புகள் பிரசியோடைமியம் ஈரயோடைடு தண்ணீரில் கரையும். உலோகப் பளபளப்புடன் கூடிய ஒளிபுகா பண்பு கொண்டு வெண்கல நிறத்தில் திண்மமாக இது காணப்படுகிறது. பளபளப்பும் மிக அதிக கடத்துத்திறனும் {PrIII,2I-,e-} என்ற முறைப்படுத்தல் மூலம் விளக்க இயலும். ஓர் உலோக மையத்திற்கு ஒரு எலக்ட்ரான் என ஒரு கடத்துகை பட்டையில் உள்ளடங்கா பிணைப்பாக மாற்றப்படுகிறது. பிரசியோடைமியம் ஈரயோடைடு நீருறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளது. தண்ணீருடன் வினைபுரியும்போது பின் வரும் வினை நிகழ்ந்து ஐதரசன் வாயு வெளியேறுகிறது. 2 PrI2 + 2 H2O → 2 PrOI + H2↑ + 2 HI பிரசியோடைமியம் ஈரயோடைடு ஐந்து படிக அமைப்புகளைக் கொண்டுள்ளது. MoSi2 அமைப்பு, அறுகோண MoS2 அமைப்பு, முக்கோண MoS2 அமைப்பு, காட்மியம் குளோரைடு அமைப்பு மற்றும் சிபைனல் அமைப்பு என்பன அந்த ஐந்து கட்டமைப்புகளாகும். காட்மியம் குளோரைடு அமைப்புடன் கூடிய பிரசியோடைமியம் ஈரயோடைடு முக்கோண படிக அமைப்புக்கு சொந்தமானதாகும். R3m (எண். 166) என்ற இடக்குழுவில் a = 426.5 பைக்கோமீட்டர் மற்றும் c = 2247,1 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இது படிகமாகிறது. சிபைனல் அமைப்பு பிரசியோடைமியம் ஈரயோடைடு கனசதுரப் படிக அமைப்பில் F3 (எண். 216) என்ற இடக்குழுவில் a= 1239.9 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருவுடன் இது படிகமாகிறது. மேற்கோள்கள் பிரசியோடைமியம் சேர்மங்கள் அயோடைடுகள் இலந்தனைடு ஆலைடுகள்
683708
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
தந்திரா பாப்பராயுடு
தந்திரா பாப்பநாயுடு (Tandra Paparayudu) பொப்பிலி அரசாங்கத்தின் படைத் தளபதியாவார். இவர், பொப்பிலிப் போரின் போது பூசபதி முதலாம் பூபதி விஜயராம ராஜுவைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். இது இன்றைய ஆந்திராவின் விஜயநகர மாவட்டமான விஜயநகர சமஸ்தானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். வெங்கடகிரி மகாராஜா 1652 ஆம் ஆண்டிலிருந்து பொப்பிலியின் வரலாற்றைக் காணலாம். நிசாமின் கீழ் சிறீகாகுளத்தின் நவாபின் பௌஜ்தார் சேர் முகம்மது கான் விசயநகர மாவட்டத்திற்கு வந்தபோது. அவருடன் வெங்கடகிரியின் அரசரின் 15 வது வாரிசான வெலமா சமூகத்தைச் சேர்ந்தவரும், பொப்பிலி அரசரின் மூதாதையருமான பெத்தராயடு மற்றும் போட்டியாளர்களாக இருந்த விஜயநகர குடும்பத்தின் மூதாதையரான பூசபதி மாதவ வர்மா ஆகியோர் அவருடன் வந்தனர். ஒரு பதிப்பில் நவாப், பெத்தராயடு வழங்கிய மகத்தான சேவைகளில் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு நில உடைமைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. பெத்தராயடு பின்னர் ஒரு கோட்டையைக் கட்டி அதற்கு “பொப்பிலி” என்று பெயரிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதாவது “அரச புலி” என்று பொருள்படும். நவாபின் நற்பண்புக்கான பாராட்டுக்கான அடையாளமாக, “சேர்” (‘சேர்’ என்றால் இந்தி மொழியில் “புலி” எனப்பொருள்). மற்றொரு பதிப்பில், இராயுடுவின் மகன் இலிங்கப்பா பொப்பிலியை தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்து, ஒரு கோட்டையைக் கட்டி, அங்கு ஒரு நகரத்தை நிறுவி, அதற்கு “பெத்த-புலி” என்று பெயரிட்டார் (தெலுங்கு மொழியில் “பெரிய-புலி” என்று பொருள்); இந்த பெயர் இறுதியில் “பெபூலி” என்று மாற்றப்பட்டது, இறுதியாக “பொப்பிலி” ஆனது. இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்ட சேர் கானின் மகனை இலிங்கப்பா மீட்டதை பாராட்டும் விதமாக, சேர் கான் இலிங்கப்பாவுக்கு 12 கிராமங்களை பரிசளித்து அவருக்கு “இரங்காராவ் ”என்ற பட்டத்தை வழங்கினார். இலிங்கப்பாவுக்குப் பிறகு அவரது வளர்ப்பு மகன் வெங்கல் இரங்காராவ், அவரது மகன் இரங்கபதி, அவரது மகன் இராயதப்பா ஆகியோர் பதவிக்கு வந்தனர். இராயதப்பாவின் வளர்ப்பு மகன் கோபாலகிருஷ்ணன் தனது தந்தையிடமிருந்து ஆட்சியை எடுத்துக் கொண்டார். பழைய கோட்டையைக் கட்டும் நேரத்தில் ஒரு முஸ்லிம் துறவி பொப்பிலி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அரச சகோதரர்களை அவர்கள் கோட்டையைக் கட்டத் தேர்ந்தெடுத்த இடம் துரதிர்ஷ்டவசமானது என எச்சரித்ததாகவும், ஆனால் அவர்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததாகவும் தெரிகிறது. பின்னணி 1753இல் கோபாலகிருஷ்ண ராயுடுவின் ஆட்சியின் போது, வடக்கு சர்க்கார் பகுதிகள் ஐதராபாத் நிசாமால் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டனர். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் நிறுவனத்தின் ஆளுநர் மார்க்விஸ் தெ புஸ்ஸி ஸ்ரீகாகுளம் மற்றும் ராஜமன்றி ஆகிய சர்க்கார்களை பூசபதி மன்னர் முதலாம் பூசபதி விஜயராம கஜபதி ராஜுவிற்கு குத்தகைக்கு விட ஒப்புக்கொண்டார். புஸ்ஸிக்கும் நிசாமுக்கும் இடையிலான பிளவினால் புஸ்ஸியின் அதிகாரம் அதிகாரம் பலவீனமடைய வழிவகுத்தது. விஜயராம ராஜு தனது படைகளை புஸ்ஸியின் வசம் வைத்து, அவரது மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த உதவினார். மேலும் தனது எதிரியான பொப்பிலி மன்னரை தோற்கடிக்க உதவும்படி புஸ்ஸியிடம் கேட்டுக்கொண்டார். போர் 1757 ஜனவரி 24 அன்று புஸ்ஸி மற்றும் பூசபதியின் கூட்டுப் படைகள் பொப்பிலி கோட்டையை நோக்கி அணிவகுத்துச் சென்றார். கோபாலகிருஷ்ண ராயுடுவின் இராணுவம் இவர்களின் படைகளுக்கு போட்டியாக இருக்கவில்லை. இப்போரில் கோபாலகிருஷ்ண ராயுடுவின் இரானுவத்தில் தந்திரா பாப்பராயுடு படைத் தளபதியாக இருந்து இறுதி வரை தைரியமாக போராடினர். அதிக எண்ணிகையிலான புஸ்ஸியின் படைகளுக்கு எதிராக நீண்ட நேரம் தந்திரா பாப்பராயுடுவால் போராட முடியவில்லை. கோட்டைக்குள் இருந்த வெங்கடகிருஷ்ண ரங்கராவின் மனைவியும் தந்திரா பாப்பராயுடுவின் சகோதரியுமான ராணி மல்லம்மா தேவி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை அறிந்த தந்திரா பாப்பராயுடு பூசபதி விஜயராம கஜபதி ராஜுவை கொல்வதாக சபதம் செய்தார். போருக்குப் பின்னர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த பூசபதி விஜயராம கஜபதி ராஜு வின் கூடாரத்தின் பின்புறம் வழியாக நுழைந்த தந்திரா பாப்பராயுடு, தேவுலப்பள்ளி பெத்தண்ணா மற்றும் புத்தராஜு வெங்கையா ஆகிய னூஅவரும் சேர்ந்து பூசபதி விஜயராம கஜபதி ராஜுவை கொன்றனர். பூசபதியின் வீரர்களிடமிருந்து தங்களை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். மேற்கோள்கள் 1757 இறப்புகள் தெலுங்கு மக்கள் ஆந்திரப் பிரதேச வரலாறு
683709
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஆங் துவா நிலையம்
ஆங் துவா நிலையம் அல்லது பிபிசிசி - ஆங் துவா நிலையம் (ஆங்கிலம்: BBCC-Hang Tuah Station; மலாய்: Stesen BBCC-Hang Tuah; சீனம்: 漢都亞站) என்பது மலேசியா, கோலாலம்பூர், புடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும். பிபிசிசி (BBCC) எனும் சுருக்கம், புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) என்பதைக் குறிப்பதாகும். பொதுவாக இந்த நிலையம் ஆங் துவா நிலையம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், செரி பெட்டாலிங் வழித்தடம், கோலாலம்பூர் மோனோரெயில், ஆகிய 3 வழித்தடங்கள் சேவை செய்கின்றன. 2012 மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து ஆங் துவா நிலையத்தைப் பயன்படுத்தும் மூன்று தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பு முறைமை பயன்பாட்டில் உள்ளது. அமைவு புக்கிட் பிந்தாங் நகர மையத்திற்கு வலதுபுறம் அமைந்துள்ள இந்த நிலையம், மெதடிஸ்ட் ஆண்கள் பள்ளி, விக்டோரியா கல்விக்கழகம், புக்கிட் அமான் மலேசிய காவல் துறையின் தலைமையகம் (Royal Malaysia Police Headquarters) மற்றும் கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (Stadium Negara Kuala Lumpur) ஆகியவற்றின் அருகிலும் அமைந்துள்ளது. ஆங் துவா எல்ஆர்டி நிலையம் 1996-இல் உருவாக்கப்பட்டது. இதுவே கோலாலம்பூர் நகரில் திறக்கப்பட்ட முதல் 13 இஸ்டார் விரைவு போக்குவரத்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நிலையத்தின் மேல்தளம், பயணச்சீட்டுகள் வழங்கும் முகவர் பகுதியுடன் இணைக்கப்பட்ட இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. மேல்தளத்தின் வழியாக ஆங் துவா சாலைக்குச் செல்லலாம். வசதிகள் இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களில் உள்ள நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன. ஆங் துவா நிலையத்தில் உள்ள இரண்டு நிலையங்களும் (எல்ஆர்டி நிலையம்; மோனோரெயில்) தனித்தனியாக இயங்குகின்றன. அவற்றுள் ஆங் துவா மோனோரயில் நிலையம் என்பது கோலாலம்பூர் மோனோரெயில் சேவைகளுக்கான அணுகலை வழங்கும் தனி ஒருதொடருந்து நிலையமாகும்; 31 ஆகத்து 2003 அன்று திறக்கப்பட்டது. மற்ற எல்லா மோனோரயில் நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையில் கட்டப்பட்டுள்ளது. ஆங் துவா சாலைக்கு மேலே உள்ளது. கோலாலம்பூர் தங்க முக்கோணத்திற்குச் சேவை செய்யும் நான்கு கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்களில் ஆங் துவா மோனோரெயில் நிலையமும் ஒன்றாகும். ஆங் துவா நிலைய தள அமைப்பு காட்சியகம் ஆங் துவா நிலையக் காட்சிப் படங்கள்: நிலையச் சுற்றுப்புறம் புக்கிட் அமான் கோலாலம்பூர் நெகாரா அரங்கம் மெர்டேக்கா அரங்கம் மேலும் காண்க கோலாலம்பூர் மோனோரெயில் பண்டாராயா எல்ஆர்டி நிலையம் சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் எம்ஆர்டி சுற்று வழித்தடம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
683711
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88
தீட்டா ரப்பை
தீட்டா ரப்பை (Theetta Rappai) இந்திய நாட்டின் சமையல் போட்டிகளில் ஏராளமான உணவை உண்பவர் ஆவார். 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று பிறந்தார். காலை உணவுக்கு 75 இட்லி, மதிய உணவுக்கு அரிசி மற்றும் கறிகளும், இரவு உணவிற்கு 60 சப்பாத்திகளும் சாப்பிடுபவர் ஆவார். ஒரே நேரத்தில் 250 இட்லிகளையும், ஒன்றரை கிலோ புட்டு மற்றும் அல்வா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில், 75 இட்லி, 2.50 கிலோ அப்பம் மற்றும் பாயசம் ஆகியவற்றை உட்கொண்டதாக கூறப்படுகிறது. கேரளாவிலும் அதற்கு வெளியேயும் பல உணவு போட்டிகளில் வென்றுள்ளார். லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது ஆரம்பகால வாழ்க்கை மறைந்த குரியப்பன் மற்றும் மறைந்த தண்டம்மா ஆகியோரின் ஏழு குழந்தைகளில் மூத்தவராக 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று திருச்சூர் நகரில் பிறந்தார். அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு வழங்கும் திருச்சூர் உணவகத்திற்கு சவால் விடுத்த பிறகு புகழ் பெற்றார். மூன்று வாளி அரிசி, ஒரு வாளி மீன் குழம்பு மற்றும் 10 கிலோ சமைத்த இறைச்சியை மெருகூட்டினார். அப்போட்டியின் முடிவில், இன்னும் பசியாக இருப்பதாக நகைச்சுவையாகக் கூறினார். இறுதியாக, உணவக ஊழியர்கள் காவல்துறையை அழைக்க வேண்டியிருந்தது. இவரது பசியின்மைக்கு மூளை ஐப்போதலாமசு செயலிழப்பு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். இதன் பொருள் என்னவென்றால், சாப்பிடுவதை நிறுத்துவதற்கான உணர்வு இவருக்கு கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு சூலை மாதத்தில், ரப்பைக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட்டதால் இவரது பெரும் பசியைக் குறைக்க வேண்டியிருந்தது. இந்த பிரச்சினைகள் காரணமாக, அதிக அளவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சாதாரண உணவை நம்பியிருந்தார். தீட்டா ரப்பை திருச்சூர் நகரில் உள்ள சூபிலி மிசன் மருத்துவமனையில் காலை 4.30 மணிக்கு (ஐ.எசு. டி) 2006 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 09 ஆம் தேதியன்று, தனது 67 வயதில் இறந்தார். இவர் தனிநபர் ஆவார். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் உணவு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இறந்தபோது இவர் எடை 120 கிலோ ஆகும். இவரது குடும்பத்தினர் இவருக்காக ஒரு சிறப்பு சவப்பெட்டியைக் கட்ட வேண்டியிருந்தது.  திருச்சூரில் உள்ள லூர்ட்சு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இறக்கும் போது, இவரது தாயார் மற்றும் உடன்பிறப்புகளுடன் இருந்தார். 2006 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 09 ஆம் தேதியன்று இறந்தார். திரைப்படம் இயக்குநர் வினு ராமகிருட்டிணன் தீட்டா ரப்பையின் கதையை 2018 ஆம் ஆண்டில் "தீட்டா ரப்பை" என்ற பெயரில் மலையாள திரைப்படமாக படமாக்கினார். இந்த படத்தில் கலாபவன் மணி சகோதரர் ஆர். எல். வி. ராமகிருட்டிணன் தீட்டா ரப்பை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மேற்கோள்கள் 2006 இறப்புகள் 1939 பிறப்புகள்
683713
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
ராகுல் குல்லார்
ராகுல் குல்லார் (Rahul Khullar) இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். 1975 ஆம் ஆண்டு குழுவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆனார். மேலும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் ஆவார். இவர் 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் தேதியன்று பிறந்தார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தில்லியில் உள்ள செயின்ட் ச்டீபன் கல்லூரியில் 1969 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் இளங்கலை பட்டதாரி குழுவில் இருந்த குல்லார், பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராசீவ் குமார் ஆகியோரின் சமகாலத்தவராக இருந்தார். தில்லி பொருளாதாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1975 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த பிறகு பாசுடன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொழில் வாழ்க்கை அமைச்சரவையின் நியமனக் குழுவால் டிராய் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு வர்த்தக அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார். இவருக்கு மூன்று ஆண்டு பதவிக்காலம் இருந்தது. புதிய ஏலம் மற்றும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கு தொடர்பான பல்வேறு உரிமைகோரல்களைத் தீர்ப்பதே இவரது முதல் வணிக உத்தரவுகளில் ஒன்றாகும். முன்னாள் வருமான வரி ஆணையராகவும் இருந்தார். சமீப ஆண்டுகளில், இந்தியாவின் புதுதில்லியில் உள்ள வசந்த் பள்ளத்தாக்கு பள்ளியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தை கற்பித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கை இந்திய ஆட்சிப்பணி குழு மற்றும் நிதி ஆயோக் முன்னாள் தலைவரான சிந்துஸ்ரீ குல்லரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இறப்பு நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டதால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று காலமானார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் முழுமையான பயோடேட்டா இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் 2021 இறப்புகள் 1952 பிறப்புகள்
683714
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
ரோசுபெர்ன்சு
அன்டோனியோ ரொசாரியோ பெர்னாண்டசு (Antonio Rosario Fernandes) ஆசிரியர், நாடக இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இந்திய நாடக தொழில் ரீதியாக ரோசுபெர்ன்சு என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று பிறந்தார். கொங்கனி திரைப்படங்கள் மற்றும் தியாட்டர் தயாரிப்புகளில் தனது பணிக்காக பிரபலமாக அறியப்படுகிறார். பல நூற்றாண்டுகளின் மன்னர் என்ற பெயரின் கீழ் பிரபலமாக இருக்கிறார். 1972 ஆம் ஆண்டில் ரோசுபெர்ன்சு தனது முதல் டயாட்டர் தயாரிப்பான பொலிடனை (தியாகம்) எழுதினார். அப்போது ஒரு பள்ளி விழாவில் மாணவராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் நிலவரப்படி, பெர்னாண்டசின் தியாட்டர் தாபோட் (சிலாப்) 230 நிகழ்ச்சிகளுடன் தயாரிப்பு இவரது சிறந்த தயாரிப்பாகும். மேற்கோள்கள் 1954 பிறப்புகள் வாழும் நபர்கள்
683717
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இந்தியாவில் இரும்பு மற்றும் எஃகுத் தொழில்
இந்தியாவில் இரும்பு மற்றும் எஃகு (உருக்குத) தொழிலானது, உலகில் முதல் இடம் வகிக்கிறது. 2018ஆம் ஆண்டில் உலக இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் இந்தியா 106.5 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்து, ஜப்பானை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.ஜிண்டால் மற்றும் பூசண் போன்ற பெரும்பாலான இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனங்கள் 1970 மற்றும் 1980களில் நிறுவப்பட்டது. 1991- மற்றும் 1992ஆம் ஆண்டுகளில் இந்திய இரும்பு மற்றும் எஃகு தொழில்கள் நிறுவதற்கு இருந்த பல கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்திய எஃகு சங்கத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் மார்ச் 2023 முடிய 154 மில்லியன் டன் எஃகு மற்றும் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. இரும்பு & எஃகு தொழிற்சாலைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த எஃகு மற்றும் இரும்பில் பாதி அளவு சிறு மற்றும் ஒருங்கிணைந்த இரும்பு & எஃகுத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவில் 30 ஒருங்கிணைந்த எஃகு தொழிற்சாலைகள் உள்ளது. அவைகள் பின்வருமாறு: தேசிய எஃகு கொள்கை 2005ஆம் ஆண்டின் தேசிய எஃகுக் கொள்கையின்படி, இந்தியாவில் உலகத் தரத்தில் நவீன மற்றும் திறமையான எஃகுத் தொழிலைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நீண்ட கால இலக்கைக் கொண்டுள்ளது. செலவு, தரம் மற்றும் தயாரிப்பு கலவையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் உலகளாவிய அளவுகோல்களின் அடிப்படையில் உலகளாவிய போட்டித்தன்மையை அடைவதில் கவனத்தில் கொள்ளப்படும். 2004-05ஆம் ஆண்டில் எஃகு உற்பதி 38 மெட்ரிக் டன்களில் இருந்து 2019-20 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 100 மில்லியன் மெட்ரிக் டன் எஃகு உற்பத்தியை அடைவதை இந்தக் கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது. இது 2004 முதல் 2005 வரை ஆண்டுக்கு 7.3% ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது. உலகில் எஃகு நுகர்வு, 2004ல் சுமார் 1000 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். ஆண்டுக்கு 3.0% வளர்ச்சியடைந்து 2015ல் 1,395 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பதினைந்து ஆண்டுகளில் எஃகு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 2% ஆக இருந்தது. . உலக எஃகு தேவையில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. உள்நாட்டில், கடந்த பதினைந்து ஆண்டுகளில் எஃகு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 7.0% ஆக இருந்தது. எஃகு விலைகள் 16 சனவரி 1992 அன்று எஃக்கின் விலையைக் கட்டுப்படுத்தும் பணியை இந்திய அரசு கைவிட்டது. தொழில்நுட்பம் வலுவூட்டப்பட்ட எஃகின் தெர்மோ மெக்கானிக்கல் முறைப்படி, இந்திய டிஎம்டி எஃகு கம்பித் தொழில்துறை நவீனமயப்படுத்தப்பட்டது.இந்தியத் தர நிர்ணய அமைவனம் 1979ஆம் ஆண்டில் டி எம் டி எஃகு கம்பிகள் தரம் Fe 415 மற்றும் தரம் Fe 500 சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனால் டிஎம்டி எஃகு கம்பிகள் இந்திய கட்டுமானத் துறையை உயர்த்தியுள்ளது. இந்தியத் தர நிர்ணய அமைவனம் 2008 இல் Fe 600 தர tMT எஃகு கம்பிகள் 1786:2008க்கு இணங்க அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம்,1700 உலோகத்தை அறிமுகப்படுத்தியது. , இந்த எஃகு ஒரு நிக்கல் தாங்கி மைக்ரோ உலோக எஃகு ஆகும். இது பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் கூட அதிக வலிமை மற்றும் சிறந்த கடினத்தன்மையால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த எஃகு Cr, உயர் ரக Ni, Cu மற்றும் Mo ஆகிய தனிமங்களைப் பெற்றுள்ளது. இந்த தனிமங்கள் இருப்பதால் பூஜ்ஜியம் -50'C இல் நல்ல கடினத்தன்மையுடன் அதிக வலிமையை அளிக்கிறது. இந்தியாவில் பல எஃகு கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளது. எதிர்காலத் திட்டங்கள் 20230ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில்ஆண்டுக்கு 60 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் 12 புதிய எஃகு ஆலைகளை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள அல்லது கட்டுமானத்தில் இருக்கும் எஃகு ஆலைகள் பின்வருமாறு: இதனையும் காண்க எஃகு இந்திய உருக்கு ஆணையம் மேற்கோள்கள் உசாத்துணை National Steel Policy, 2012 Arnold, David (2004), The New Cambridge History of India: Science, Technology and Medicine in Colonial India, Cambridge University Press, . Balasubramaniam, R. (2002), Delhi Iron Pillar: New Insights, Indian Institute of Advanced Studies, . Bouri, Nisha. "Global Titans: Early Corporate Development in India's Steel Industry and the Legacy of British Imperialism" (PhD dissertation, Harvard University; ProQuest Dissertations Publishing,  2022. 28966826). CHAUDHURI, SAMIR. "THE GROWTH AND PROSPECTS OF THE IRON AND STEEL INDUSTRY IN THE ECONOMIC DEVELOPMENT OF INDIA" (PhD. Diss. American University, 1965; ProQuest Dissertations Publishing,  1965. 1300732). Gommans, Jos J. L. (2002), Mughal Warfare: Indian Frontiers and Highroads to Empire, 1500-1700, Routledge, Rakesh Tewari, 2003, The origins of iron-working in India: new evidence from the Central Ganga Plain and the Eastern Vindhyas Srinivasan, S. & Ranganathan, S., Wootz Steel: An Advanced Material of the Ancient World, Indian Institute of Science. வெளி இணைப்புகள் என் எச் பி சி நிறுவனத்தின் இணையதளம் இந்தியாவில் தொழிற்துறைகள் மும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள் இந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் நவரத்னா நிறுவனங்கள் இந்திய அரசுத்துறை நிறுவனங்கள்
683723
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
நேரு நகர் சட்டமன்றத் தொகுதி
நேரு நகர் சட்டமன்றத் தொகுதி (Nehrunagar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா சட்டப்பேரவையில் உள்ள தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் தொகுதி மறுவடிவமாக்கப்பட்டப் பின்னர் இது செயலிழக்கப்பட்டது. குர்லா நகருக்கு அடுத்ததாக மும்பையின் புறநகர்ப் பகுதியாக நேரு நகர் உள்ளது. 1980 முதல் 1985 வரை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாபாசாகேப் போசுலே, சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஓராண்டு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 1980 சட்டப்பேரவைத் தேர்தல் லியாகத் உசைன் இபரத் உசைன்; வாக்குகள் (ஜெ.என்.பி.) 26,590 சையத் சுகைல் அசராப் (முஸ்லிம் லீக்) -11,960 வாக்குகள் 2004 சட்டப்பேரவைத் தேர்தல் பாபாசாகேப் அனந்த்ராவ் போசுலே (காங்கிரசு-இதேகா. சி.-21,276 வாக்குகள் ஏக்நாத் ராமச்சந்திர கோபர்டே (ஜெ.என்.பி.-ஜேபி) 18,165 வாக்குகள் 1978 சட்டப்பேரவைத் தேர்தல் நவாப் மாலிக் (தேவாகா) 67,115 வாக்குகள் சூர்யகாந்த் மகாதிக் (எசு.எச்.எசு) 36,854 வாக்குகள் மேலும் காண்க மகாராட்டிரா சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683724
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Kalyan East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது. புவியியல் பரப்பு கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கல்யாண் டோம்பிவாலி மாநகராட்சிப் பகுதி எண் 13 முதல் 30 வரையிலான கல்யாண் தாலுகா, வருவாய் வட்டமான கும்பர்லி, உல்லாஸ்நகர் வட்டத்தின் சில பகுதிகள், பகுதி எண் 23 முதல் 26,43 மற்றும் உல்லாஸ்நகர் மாநகராட்சி 52 முதல் 55 வரையிலான பகுதிகள் அடங்கும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் பட்டியல் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683725
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
ஆண்டர்சன் முதலை பல்லி
ஆண்டர்சன் முதலை பல்லி (Anderson's crocodile newt), ஆண்டர்சன் பல்லி, இரியுக்யூக்கி முள் பல்லி, அல்லது சப்பானிய மரு பல்லி (எக்கினோட்ரிடன் ஆண்டர்சோனி) என்பது சப்பானின் இரியூக்கியூ தீவுகளில் காணப்படும் சலமாண்டர் குடும்பத்தில் உள்ள ஒரு சாலமண்டர் சிற்றினமாகும். மேலும், முன்பு, வடக்கு தைவானில் உள்ள குவான்யின் மலையில் காணப்பட்ட ஆண்டர்சன் முதலைப் பல்லி இப்போது அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது. விளக்கம் எச்சினோட்ரிட்டன் ஆண்டர்சோனி தடிமனான, தட்டையான சாலமண்டர். இதன் தலை அகலமாகவும் முக்கோண வடிவத்திலும் உள்ளது. 12-15 வெளிப்படையான குமிழி போன்ற பக்கவாட்டு சுரப்பிகள் உள்ளன. இதனுடைய உடல் நிறம் ஒரே மாதிரியாக அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்திலிருக்கும். வாலடிப்பகுதி, கால் பாதம், பொதுப் புழைப் பகுதி மஞ்சள்-ஆரஞ்சு நிறத்திலிருக்கும். இது அதிகபட்சமாக மிமீ வளரக்கூடியது. வாழ்விடமும் பாதுகாப்பும் ஆண்டர்சன் முதலை பல்லியின் இயற்கையான வாழிடமாகப் பரந்த இலைகள் கொண்ட பசுமையான காடுகள், இரண்டாம் நிலை காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் உள்ளன. இது கரும்பு வயல்களிலும் அதற்கு அருகிலும் காணப்படுகிறது. இது குளங்கள் மற்றும் தற்காலிகக் குளங்கள் போன்ற நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. பிற நேரங்களில் வயது வந்த சாலமண்டர்கள் இலைக் குப்பைகளிலும், பாறை பிளவுகளிலும், பாறைகள் மற்றும் மரக்கட்டைகளின் கீழும் வாழ்கின்றன. எச்சினோட்ரிட்டன் ஆண்டர்சோனி அசாதாரணமானது. மேலும் இது வாழிட இழப்பு மற்றும் சட்டவிரோதச் செல்லப்பிராணி வர்த்தகத்திற்கான சேகரிப்பு ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகிறது. மேலும் காண்க ஆண்டர்சன் சாலமண்டர் (அம்பிஸ்டோமா ஆண்டர்சனி) மேற்கோள்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம் பல்லிகள்
683726
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE
சலமாண்டிரா
சலமாண்டிரா (Salamandra) என்பது மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்படும் ஆறு சிற்றினங்களை உள்ளடக்கிய சாலமண்டர்களின் பேரினமாகும். சிற்றினங்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Salamandra at Fauna Europaea Salamandra at Animal Diversity Web Salamandra at the National Center for Biotechnology Information நீர்நில வாழ்வனப் பேரினங்கள்
683727
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
விக்ரோலி சட்டமன்றத் தொகுதி
விக்ரோலி சட்டமன்றத் தொகுதி (Vikhroli Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கண்ணோட்டம் விக்ரோலி சட்டமன்றத் தொகுதி, மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள முலுண்ட், காட்கோபர் மேற்கு, காட்காபர் கிழக்கு, மான்கூர்ட் சிவாஜி நகர் மற்றும் பண்டுப் மேற்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் சபா தொகுதிகளுடன் மும்பை வடகிழக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக விக்ரோலி உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683731
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
பூசபதி
பூசபதி (Pusapati) அல்லது பூசாபதி என்பது வடக்கு ஆந்திரப் பகுதியிலிருந்த விஜயநகர தோட்டங்களை ஆட்சி செய்த குலமாகும். வரலாறு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஷ்ணா ஆற்றுப் பள்ளத்தாக்கிற்குள் ஒரு இராஜ்புத்திரர் கூட்டத்தை வழிநடத்திய மாதவவர்மாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை பூசபதி குலம் கூறுகிறது. குழுவின் உறுப்பினர்கள் பின்னர் கோல்கொண்டா அரசவையில் முக்கிய பதவிகளை வகித்தனர். பூசபதியின் தலைவர் சீதாராம் சந்திர ராஜு ஜெய்ப்பூர் தோட்டத்தின் இரகுநாத் கிருஷ்ணா தேவிடம் இருந்து குமிலி மற்றும் குண்ட்ரேடு கிராமங்களை பெற்றார். முதலாம் இராமச்சந்திர தேவ் என்பவரால் ஜெய்ப்பூர் தோட்டத்தின் நிர்வாக அமைச்சராக நியமிக்கப்பட்ட விஜயராம ராஜு, 1710 ஆம் ஆண்டில் தனது தந்தைக்குப் பிறகு குலத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1712 இல் இரண்டாம் விசுவேம்பர் தேவ் என்பவரின் கீழிருந்த தோட்டத்தின் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்து பொன்னூருவிலிருந்த தலைநகரை விஜயநகரத்திற்கு மாற்றினார். விஜயராம ராஜு அண்டை நில உரிமையாளர்களாக இருந்த ஜமீந்தார்களையும் ஜெய்ப்பூர் தோட்டத்திலிருந்து சுதந்திரம் பெறத் தூண்டினார். 1757 ஆம் ஆண்டில், விஜயரம ராஜு பிரெஞ்சு ஆளுநர் ாம ராஜு பிரெஞ்சு ஆளுநர் மார்க்விஸ் தெ புஸ்ஸியுடனான ஒரு கூட்டணியை உருவாக்கினார். இக்கூட்டணி பொப்பிலியைக்கைப்பற்றியது. விஜயராம ராஜுவைத் தொடர்ந்து, பூசபதி குலத்தை ஆனந்த ராஜு வழிநடத்தினார். அடுத்ததாக இரண்டாம் விஜயராம ராஜு பதவிக்கு வந்தார். இவர் பெரும்பாலும் தனது ஒன்றுவிட்ட சகோதரர் சீதாராம ராஜுவால் கட்டுப்படுத்தப்பட்டார். 1761இல் சீதாராம ராஜு பர்லகேமுண்டியைத் தாக்கி அதன் படைகளையும் அவர்களின் மராட்டிய கூட்டாளிகளையும் தோற்கடித்து விஜயநகரப் பகுதியில் நிலப்பரப்பை மேலும் சேர்த்தார். 1768 ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகரித்து வரும் ஈடுபாட்டைக் குறிக்கும் வகையில், காசிபுரம், நந்தபூர், மட்கோல் போன்றவற்றை வைத்திருக்கவும், பயிரிட உரிமையையும் இரண்டாம் விஜயராம ராஜு கோரினார். இதன் விளைவாக அதிருப்தி அடைந்த நில உரிமையாளர்கள் விஜயநகரத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்ட்டனர். இரண்டாம் விஜியாராம் ராஜு தேவையான வருவாய் வசூல் கொடுப்பனவுகளைச் செய்ய முடியாததால், அவர் மாவட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். ஆனால் உத்தரவுகளை மீறியதன் விளைவாக கர்னல் பிரெண்டர்காஸ்ட் தலைமையிலான கிழக்கிந்திய நிறுவனம் சென்னை மாகாணப் படைகளுக்கு எதிராக பத்மநாபம் எனுமிடத்தில் போர் நடத்தியது. போரில் இரண்டாம் விஜயாராம ராஜு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பத்மநாபம் போரைத் தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த நாராயண பாபு ராஜுவால் மலை நில உரிமையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் கிளர்ச்சிகளை அடக்க முடியவில்லை. இது இறுதியில் விஜயநகர தோட்டத்தின் பரப்பளவை மேலும் குறைக்க வழிவகுத்தது. அடுத்தடுத்த தலைவர்களான விஜயராம் கஜபதி ராஜு மற்றும் ஆனந்த ராஜு ஆகியோர் தங்களை திறமையான தலைவர்களாக நிரூபித்தனர். மேலும் விஜயநகர தோட்டத்திற்கு செழுமைக் காலத்தைக் கொண்டு வந்தனர். நந்தாப்பூர் போருக்குப் பிறகு பூசபதிகள் கஜபதி என்ற பட்டத்தைப் பெற்றனர். பூசபதி ஆட்சியாளர்கள் சீதாராம ராஜு பூசபதி அமல கஜபதி ராஜு (நிறுவனர்) பூசபதி ராச்சி கஜபதி ராஜு பூசபதி தம கஜபதி ராஜு முதலாம் விஜியராம ராஜு (ஆட்சி 1710-1757) ஆனந்த ராஜு இரண்டாம் விஜயராம ராஜு நாராயண பாபு ராஜு மூன்றாம் விஜயராம ராஜு (விஜயராம கஜபதி ராஜு, 1848-1878 வரை ஆட்சி செய்தார்) ஆனந்த கஜபதி ராஜு (ஆட்சி 1879-1897) ராஜா பூசபதி விஜயராம கஜபதி ராஜு அலக் நாராயண கஜபதி ராஜு பூசபதி விஜயராம கஜபதி ராஜு (அலக் நாராயண கஜபதி ராஜுவின் மூத்த மகன், 1945-1995 ஆட்சி செய்தார்) பூசபதி ஆனந்த கஜபதி ராஜு (விஜயராம கஜபதி ராஜுவின் மூத்த மகன், 1995-2016 வரை ஆட்சி செய்தார்) பூசபதி அசோக் கஜபதி ராஜு (விஜயராம கஜபதி ராஜுவின் இரண்டாவது மகன்) குறிப்பிடத்தக்க நபர்கள் பி. எஸ். குமாரசாமி ராஜா-சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் (1949-1952) மற்றும் ஒடிசாவின் ஆளுநர் (1954-1956) பூசபதி விஜய ஆனந்த கஜபதி ராஜு முன்னாள் இந்தியத் துடுப்பாட்டக்காரர், அரசியல்வாதி, 1958 இல் பத்ம பூசண் விருது வென்றவர். பூசபதி லட்சுமி நரசிம்ம ராஜு, அரசியல்வாதி மற்றும் கூட்டுறவு மத்திய வங்கி மற்றும் வட ஆந்திராவில் உள்ள பல கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் நிறுவனர். ஒரு சுதந்திர போராட்ட வீரர், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய அரசியலமைப்பில் கையெழுத்திட்டவர். பூசபதி லட்சுமி நரசிம்ம ராஜு -ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர், பல கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் தலைவர். மேற்கோள்கள் குறிப்புகள் ஆந்திரப் பண்பாடு இந்தியப் பேரரசுகள் இந்திய அரச மரபுகள் தெலுங்கு மன்னர்கள்
683732
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
இசுக்காண்டோசீன்
இசுக்காண்டோசீன் (Scandocene) என்பது Sc(C5H5)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். கரிம இசுக்காண்டியம் சேர்மமான இது வைக்கோல் நிறத்தில் படிகமாகக் காணப்படுகிறது. டெட்ரா ஐதரோபியூரானில் உள்ள சோடியம் வளையபெண்டாடையீனைடையும் நீரற்ற இசுக்காண்டியம்(III) குளோரைடையும் ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இசுக்காண்டோசீன் சேர்மத்தை தயாரிக்கலாம். இசுக்காண்டியம்(III) புளோரைடும் மக்னசோசீனும் மூலப்பொருளாக வினைபுரிந்தால், இசுக்காண்டியம்(III) புளோரைடும் இசுக்காண்டோசீனும் கலந்த கலவை உருவாகிறது. இது தண்ணீருடன் சேர்க்கப்பட்டால் சிதைவு வினை நிகழ்ந்து வளையபெண்டாடையீனும் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடும் உருவாகின்றன.. மேற்கோள்கள் மெட்டலோசீன்கள் கரிம இசுக்காண்டியம் சேர்மங்கள்
683735
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
ரோஜா கம்பைன்ஸ்
ரோஜா கம்பைன்ஸ் (Roja Combines) என்பது காஜா மைதீன் தலைமையிலான ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1990-களில் தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. ஆனால் தமிழ் திரைப்படங்கள் எண்ணியல் (டிஜிட்டல்) திரைப்பட தயாரிப்பிற்கு மாறியதைத் தொடர்ந்து நிறுவனம் போராட்டத்தைச் சந்தித்தது. வரலாறு ரோஜா காம்பெயின்ஸ் 1990-களில் காஜா மைதீன், வி. ஞானவேல், ஜெயப்பிரகாசு என மூன்று தனித்தனி தயாரிப்பாளர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. 2000-களின் முற்பகுதியில், ஞானவேலும் ஜெயப்பிரகாசும் ஜிஜே கம்பைன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினர். இளமைப் பருவத்தைக் கருப்பொருளாகக் கொண்ட துள்ளுவதோ இளமை (2002) திரைப்படத்தின் ஆச்சரியமான வெற்றியைத் தொடர்ந்து, ரோஜா காம்பெயின்ஸ் 2002 அக்டோபரில் தனுஷ், செரின் ஆகியோரை முன்னணி நடிகர்களாகக் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டது. பூபதி பாண்டியனின் என்னை மட்டும் காதல் பண்ணு என்ற தலைப்பில் ஒரு படம் அதன் பிறகு தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் தனுஷ் மற்ற படங்களில் பரபரப்பாக இயங்கிவந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியில், தனுஷ் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமாருடன் தேவதையைக் கண்டேன் (2005) என்ற பெயரில் படம் மீண்டும் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், ரோஜா கம்பைன்ஸ் தமிழ் மெகா ஸ்டார் நைட் 2003 என்ற பெயரில் நேரடி கலை நிகழ்ச்சியை ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரித்தது. அஜித் குமார் நடிப்பில் இந்த நிறுவனம் தயாரித்த ஜனா (2004) மிகப்பெரிய தோல்வியானது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு எட்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 2005 ஆம் ஆண்டில், காஜா மைதீன் திவால்நிலையை அடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். மேலும் கமல்ஹாசன் நடித்த கௌதம் வாசுதேவ் மேனனின் வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத் தயாரிப்பில் இருந்து நிறுவனம் வெளியேறியது. பின்னர் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்டது. 2010 ஆம் ஆண்டில், சசிகுமாரின் ஈசன் படத்தில் நடிக்க காஜா மைதீன் அணுகப்பட்டார். ஆனால் இறுதியில் அவர் இடம்பெறவில்லை. 2010-களின் நடுப்பகுதியில், தமிழ்த் திரையுலகில் தயாரிப்பு செலவுகள் அதிகரித்தவண்ணம் இருந்ததால் நிறுவனம் பெரும்பாலும் செயலற்ற நிலையில் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை காஜா மைதீன் சுந்தர காண்டம் (1992) படத்தில் நடித்த நடிகை சிந்துஜாவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, சிந்துஜா இசுலாத்திற்கு மாறி, தனது பெயரை கே. ஆயிஷா என்று மாற்றிக்கொண்டார். ரோஜா காம்பெயின்சின் பல படங்களில் இணைத் தயாரிப்பாளராக ஆனார். 2005 யூலையில், காஜா மைதீன் தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றார். தயாரித்த படங்களின் தோல்விகள், பெரும் பொருட் செலவில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட நட்சத்திரக் கலைவிழாக்கள் போன்றவற்றால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. அவர் உயிர் பிழைத்தார், என்றாலும் திவாலானார், பெரிய படங்களில் முதலீடு செய்வதை நிறுத்தினார். திரைப்படவியல் மேற்கோள்கள் சென்னையில் உள்ள திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்
683736
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
வெய்சைட்டு
வெய்சைட்டு (Weissite) என்பது Cu2−xTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தாமிர தெலூரைடு சேர்மமான இது ஒரு தெலூரைடு வகை கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. அறுகோணப் படிக வடிவத்தில் வெய்சைட்டு கனிமம் காணப்படுகிறது. வெய்சைட்டு கனிமத்தின் ஒப்படர்த்தி 6 என்றும் மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் கடினத்தன்மை 3 என்றும் அளவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொலராடோ, அரிசோனா மற்றும் நியூ மெக்சிகோவில் உள்ள குன்னிசன் மாகாணம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேற்கு ஆத்திரேலியாவின் கல்கூர்லி நகரத்திலும் சுவீடன் நாட்டின் டலர்னா மற்றும் வார்ம்லாண்டு பகுதிகளிலும் இக்கனிமம் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் வெய்சைட்டு கனிமத்தை Wst என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. பைரைட்டு, தெலூரியம், சில்வானைட்டு, பெட்சைட்டு, இரிக்கார்டைட்டு, கந்தகம், தங்கம், கலவெரைட்டு மற்றும் கிரென்னரைட்டு ஆகியவற்றுடன் தொடர்புடைய நீர்வெப்ப படிவுகளில் வெய்சைட்டு கனிமம் சேர்ந்து தோன்றுகிறது. முதன்முதலில் 1927 ஆம் ஆண்டில் கொலராடோவின் குன்னிசன் மாகாணம் வல்கன் மாவட்டத்தில் உள்ள குட்டோப் சுரங்கத்தில் வெய்சைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கத்தின் உரிமையாளர் லூயிசு வெயிசு நினைவாகக் கனிமத்திற்கு வெய்சைட்டு எனப் பெயரிடப்பட்டது. இதையும் காண்க இரிக்கார்டைட்டு மேற்கோள்கள் செப்புக் கனிமங்கள் தெலூரைடு கனிமங்கள் கனிமங்கள் அறுகோணவமைப்புக் கனிமங்கள்
683740
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
புக்கிட் பிந்தாங் நகர மையம்
புக்கிட் பிந்தாங் நகர மையம் அல்லது பிபிசிசி (மலாய்: Pusat Bandar Bukit Bintang; ஆங்கிலம்: Bukit Bintang City Centre; (BBCC) சீனம்: 武吉免登城中城) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், புடு சிறைச்சாலையின் முன்னாள் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கலப்பு-பயன்பாட்டுப் பகுதி ஆகும். 19.4 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட இந்த வளர்ச்சிப் பகுதி, புக்கிட் பிந்தாங்கின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது. பிபிசிசி (BBCC) எனும் சுருக்கம், புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) என்பதைக் குறிப்பதாகும். 20 சூன் 2017-இல், புக்கிட் பிந்தாங் நகர மையம் மற்றும் லாலாபோர்ட் மிட்சுயி வணிகப் பூங்கா கட்டுமானத்திற்கான (Mitsui Shopping Park LaLaport Bukit Bintang City Centre) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர் 2018 மார்ச் மாதம், RM 8.7 பில்லியன் ரிங்கிட் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடக்கப்பட்டன. வரலாறு புக்கிட் பிந்தாங் நகர மையம் அமைக்கப்பட்டுள்ள தளம், முன்பு புடு சிறைச்சாலையின் (Pudu Prison) ஒரு பகுதியாக இருந்தது. புடு சிறைச்சாலை 1890-களில் 10 எக்டர் பரப்பளவில் கட்டப்பட்டது. புடு சிறைச்சாலை 115 வருடம் பழைமை வாய்ந்தது. மலேசியாவின் சுற்றுலா தளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது. இரண்டாவது உலகப் போரின் போது புடு சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான போர்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டனர். மலாயாவில் இருந்த ஐரோப்பியர்கள் பலர் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளும் செய்யப்பட்டனர். 1996-இல் 101 ஆண்டுகள் பயன்பாட்டிற்குப் பின்னர், புடு சிறைச்சாலையை மூடுவதாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது. புடு சிறைச்சாலை புடு சிறைச்சாலையில் இருந்த கைதிகள் அனைவரும் சுங்கை பூலோ, காஜாங் சிறைச்சாலைகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். 1996-ஆம் ஆண்டில் புடு சிறைச்சாலை பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது; மற்றும் ஆசியாவிலேயே, பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்பட்ட முதல் சிறைச்சாலை எனும் பெயரையும் பெற்றது. பின்னர் அந்தச் சிறைச்சாலை 6 மாத காலத்திற்குத் தற்காலிகச் சிறை அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது. 2010-ஆம் ஆண்டு சிறைச்சாலையின் சுவர்களை இடிக்கும் பணி தொடங்கியது. இந்தச் சிறைச்சாலை, ஒரு காலத்தில் உலகின் மிக நீளமான சுவரோவியத்தையும் கொன்டிருந்தது. 2012-ஆம் ஆண்டில் முக்கியச் சிறை வளாகம் முழுமையாக இடிக்கப்பட்டது. வரலாற்று முத்திரை இன்றும், அந்தச் சிறைச்சாலையின் பிரதான வாயில்கள் மட்டுமே இடிக்கப்படாமல் இன்னும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பிரதான வாயில்களுக்கு மீண்டும் வர்ணம் பூசப்பட்டு, அதன் அசல் வடிவம், ஒரு வரலாற்று முத்திரையாகத் தக்கவைக்கப்பட்டு பாதுகாக்கப் படுகிறது. கோலாலம்பூரின் பரபரப்பான வணிக வளாகத்தின் தங்க முக்கோணப் பகுதியில் அமைந்துள்ள புக்கிட் பிந்தாங் நகர மையத்தின் கட்டுமான வரைபடம், கோலாலம்பூர் மாநகராட்சியிடம் (DBKL) வழங்கப்பட்டது. பிபிசிசி மேம்பாட்டு நிறுவனம் (BBCC Development Sdn Bhd) எனும் உள்ளூர் கூட்டு நிறுவனத்திடம் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த நிறுவனமே மேம்பாட்டாளராகவும் அறிவிக்கப்பட்டது. பிபிசிசி மேம்பாட்டு கூட்டு நிறுவனத்தின் 66% பங்குரிமை, ஆர்என்எச் (RnH Berhad) நிறுவனத்திற்கு உரியது; 33% பங்குரிமை மலேசிய புறநகர் மேம்பாட்டுக் கழகம் எனும் உடா (Urban Development Authority) (UDA) நிறுவனத்திற்கு உரியது. கட்டி முடிக்கப்பட்டவை பிபிசிசி போக்குவரத்து முனையம் - ( ஆங் துவா நிலையம்) பிபிசிசி கேளிக்கை மையம் - (Zepp KL, GSC Cineplex, Malaysia Grand Bazaar) பல சுவையுணவு தெரு - Gourmet Street லைப்ஸ்டைல் பேரங்காடி - Lifestyle Mall (Mitsui Shopping Park LaLaport BBCC)</ref> 55-அடுக்கு மற்றும் 35-அடுக்கு, 215.1 மீ; - 155மீ குடியிருப்புகள் (Residential Suites; Lucentia Residences) - 2022 48-அடுக்கு & 245.5 மீ; அலுவலகக் கோபுரம் (The Stride Strata Office) - 2022 44-அடுக்கு மற்றும் 185 மீ; ஜப்பானிய தங்கறைத் தொகுதிகள் (Mitsui Serviced Suites) - 20242024 கட்டுமானத்தில் 31-அடுக்கு மாடி; (108 மீ உயரம்) 5 குடியிருப்புகள் (SWNK Houze) - 2025 50-அடுக்கு மாடி; & (259.5 மீ உயரம்) 3 குடியிருப்புகள் (குடியிருப்புத் தொகுதி) - 2026 தங்கும் விடுதி, (123 மீ உயரம்) (தங்கும் விடுதி, (இல்டன் தங்கும் விடுதி) - 2025 அலுவலகக் கோபுரம்; (192 மீ உயரம்) (ஓர் அலுவலகத் தொகுதி) - 2026 80-அடுக்கு மாடி கோபுரம்; (430.2 மீ உயரம்) (பிபிசிசி சிக்னேச்சர் கோபுரம்) - 2025/26 மேலும் காண்க புடு சிறைச்சாலை புக்கிட் பிந்தாங் சுங்கை பூலோ ஆங் துவா நிலையம் கோலாலம்பூர் மாநகராட்சி காட்சியகம் புக்கிட் பிந்தாங் நகர மையத்தின் காட்சிப் படங்கள்: மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website of BBCC EcoWorld Malaysia website LaLaport BUKIT BINTANG CITY CENTRE mall website Malaysia Grand Bazaar official website Malaysia Grand Bazaar's webpage on UDA Malls Zepp Hall Network Zepp Kuala Lumpur's Facebook Page Golden Screen Cinemas (GSC) கோலாலம்பூர் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள்
683741
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
தெலூரைடு கனிமம்
தெலூரைடு கனிமம் (Telluride mineral) என்பது தெலூரைடு அயனியை முக்கிய அங்கமாகக் கொண்ட ஒரு கனிமமாகும். தெலூரைடுகள் சல்பைடுகளைப் போலவே இருக்கின்றன. இவை இயேம்சு டுவைட்டு தானா மற்றும் காரல் இயூகோ சுட்ரன்சு கனிம வகைப்பாடு அமைப்புகளில் அவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகள் அல்டைட்டு கலவெரைட்டு கொலராடோயிட்டு எம்பிரெசைட்டு எசைட்டு கோசுடோவைட்டு கிரென்னரைட்டு மெலோனைட்டு மெரன்சுகைட்டு பெட்சைட்டு இரிக்கார்டைட்டு சுடூயட்சைட்டு சில்வனைட்டு தெலூரோபிசுமத்தைட்டு தெமாகமைட்டு தெட்ராடைமைட்டு வல்கேனைட்டு மேற்கோள்கள் கனிமங்கள் தெலூரைடு கனிமங்கள்
683742
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மல்காபூர் சட்டமன்றத் தொகுதி
மல்காபூர் சட்டமன்றத் தொகுதி (Malkapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். புல்டாணா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். தேர்தல் முடிவுகள் 2024 மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் மேற்கோள்கள்
683745
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
இரத்னா சிங்
இரத்னா சிங் (Ratna Singh பிறப்பு 29 ஏப்ரல் 1959) ஓர் இந்திய அரசியல்வாதியும், மேனாள் அமைச்சர் தினேஷ் சிங்கின் மகள் ஆவார். 1996, 1999, 2009 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரதாப்கர் தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 அக்டோபரில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அரசியல் வாழ்க்கை இவர் 1999 இல் பிரதாப்கர் தொகுதியில் வெற்றி பெற்றார், ஆனால் 2004 தேர்தலில் அக்சய் பிரதாப் சிங் என்ற கோபால்ஜியிடம் தோல்வியடைந்தார். இரத்னா சிங் 2009 இந்திய பொதுத் தேர்தலில் பிரதாப்கர் தொகுதியில் வெற்றி பெற்றார். சமாஜ்வாடி கட்சிப் போட்டியாளரான பேராசிரியர் சிவகாந்த் ஓஜாவை 30,000 வாக்குகளில் தோற்கடித்தார். அக்சய் பிரதாப் சிங் மூன்றாவது இடத்தையும், சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட பிரபல குற்றவியல்-அரசியல்வாதி அதீக் அகமது நான்காவது இடத்தையும் பிடித்தனர். சொந்த வாழ்க்கை இவர் மேனாள் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் சிங்கின் இளைய மகள் ஆவார். இவர் ராஜஸ்தானின் பிரதாப்கரைச் சேர்ந்த ஜெய்சிங் சிசோடியாவை மணந்தார். இந்த இணையருக்கு புவன்யு சிங் என்ற மகனும், தனுஸ்ரீ குமாரி என்ற மகளும் உள்ளனர். மேற்கோள்கள் வெளியிணைப்புகள் Lok Sabha Profile Govt. of India website Biographical Sketch:Member of Parliament at Parliament of India website. இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் 13வது மக்களவை உறுப்பினர்கள் 15வது மக்களவை உறுப்பினர்கள் 11வது மக்களவை உறுப்பினர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1959 பிறப்புகள்
683746
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சேரலைட்டு
சேரலைட்டு (Cheralite) என்பது CaTh(PO4)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது நீரற்ற பாசுபேட்டு வகை கனிமமாகும். அட்டோனைட்டு, மோனசைட்டு ஆகிய கனிமங்களுடன் சம உருவமைப்பை கொண்டுள்ளது. இது அமைப்பில் உள்ள முழுமையான நேர்மின் அயனி மாற்றீட்டின் விளைபொருளாக இக்கனிமம் கருதப்படுகிறது. 2 LREE3+ ↔ Ca2+ + Th4+. இது முன்னதாக இக்கனிமம் பிரபாண்டைட்டு என்ற பெயரில் அறியப்பட்டது. இயற்பண்புகள்: மேற்கோள்கள் தோரியம் கனிமங்கள் பாசுப்பேட்டு கனிமங்கள்
683748
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28Y%29
ஏசுகைனைட்டு-(Y)
ஏசுகைனைட்டு-(Y) (Aeschynite-(Y)) என்பது Y,Ca,Fe,Th)(Ti,Nb)2(O,OH)6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். எசுகைனைட்டு-(Y), ஈசுகைனைட்டு-(Yt), புலோம்சுட்ராண்டைன், பிரியரைட்டு என்ற பெயர்களாலும் இக்கனிமம் அறியப்படுகிறது. இற்றியம், கல்சியம், இரும்பு, தோரியம், தைட்டானியம், நையோபியம், ஆக்சிசன் ஐதரசன் ஆகிய அருமண் கனிமங்களுக்கான கனிமமாக இது கருதப்படுகிறது. கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து ஏசுகைனைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 5 முதல் 6 ஆகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஏசுகைனைட்டு-(Y) கனிமத்தை Aes-Y என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் Mindat.org Webmineral.org இலந்தனைடு கனிமங்கள் இட்ரியம் கனிமங்கள் கால்சியம் கனிமங்கள் இரும்புக் கனிமங்கள் தோரியம் கனிமங்கள் தைட்டானியம் கனிமங்கள் நையோபியம் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள் கனிமங்கள் ஆக்சைடு கனிமங்கள்
683751
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B
மோனெரோ
மோனெரோ (Monero) (எண்ணிம நாணயக் குறியீடு: XMR) என்பது ஒரு ஓப்பன் சோர்ஸ், தனியுரிமை மற்றும் பிணைக்கிரிப்டோகரன்சி ஆகும். இது 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. மோனெரோ பரிமாற்றங்களின் விவரங்களை மறைத்து, பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது. இதன் முக்கிய நோக்கம் தனியுரிமையை உறுதி செய்யும் விதத்தில் பண பரிமாற்றங்களை எளிதாக மற்றும் பாதுகாப்பாக நடக்கும் வழிகளை உருவாக்குவது. மோனெரோ மீது முக்கியமான விமர்சனங்கள் அதன் தனியுரிமை அம்சங்களின் பயன்படுத்துதலுக்கு மையமாக இருக்கின்றன. இந்த அம்சங்கள் மோனெரோவை சட்டவிரோத செயல்பாடுகளில், குறிப்பாக டார்க் வெபில் மற்றும் போதைப்பொருள், பணம் கழுவல் போன்ற குற்றச்செயல்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் கருவியாக மாற்றுகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையத்தளம் எண்ணிம நாணயம் திறந்த மூல மென்பொருள் நாணய முறை மின் வணிகம் எண்ணிம நாணயம்
683752
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D
ஆங்கில வினைச்சொல்
வினைச்சொற்கள் ஆங்கில மொழியில் சொற்களின் வகைகளின் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகும். மொழியில் உள்ள மற்ற வகை சொற்களைப் போலவே, ஆங்கில வினைச்சொற்களும் பெரிதும் சொல் வடிவ மாற்றம் பெறவில்லை. காலம் , பாங்கு, மனநிலை, செய்வினை வாக்கியம், செயப்பாட்டுவினை வாக்கியம் ஆகியவற்றின் பெரும்பாலான சேர்க்கைகள் துணை வினைச்சொற்களின் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வினைச்சொற்கள் பல அல்லது பெரும்பாலான அனைத்து ஒழுங்கற்ற வினைச் சொற்களும் பழைய ஆங்கிலத்திலிருந்து வந்தவை என்றாலும், பல சொற்கள் லத்தீன் அல்லது பிரெஞ்சு மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. பெயர்ச்சொற்கள் அல்லது பெயரடைச் சொற்கள் வினைச்சொற்களாக மாறலாம் . இவ்வாறு "தனி (separate)" மற்றும் "நேரடி (direct)" போன்ற பெயரடைகள் 16ஆம் நூற்றாண்டில் வினைச்சொற்களாக மாறியது. சில நேரங்களில் , வினைச்சொல்லாக இல்லாத இலத்தீன் சொற்களை "-ate" என்பதனைச் சேர்ப்பதன் மூலமாக வினைச்சொற்களாக மாற்றப்பட்டது (உதாரணம் "capacitate") "isoler" எனும் பிரஞ்சு வார்த்தை "isolate" என்று மாற்றப்பட்டது. உருமாற்றப்பட்ட வடிவங்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் Sequence of Tenses at the Online Writing Lab at Purdue University Modals and auxiliary verbs in English The English Verb Tense System: A dynamic presentation using the Cuisenaire Rods English verbs - Verb Forms ஆங்கில வார்த்தைகள் ஆங்கில வினைச்சொற்கள்
683761
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%BE
ரிக்‌ஷா
ரிக்‌ஷா வண்டி, துவக்க காலத்தில் மக்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகும்.. இரு சக்கரங்கள் கொண்ட இந்த வண்டியில் மனிதனை வைத்து மனிதனால் இழுத்துச் செல்லப்பட்டது. . ரிக்‌ஷா எனும் என்ற சொல் 1887இல் பயன்பாட்டுக்கு வந்தது. காலப்போக்கில் மூன்று சக்கர ரிக்‌ஷா வண்டிகள் மற்றும் இயந்திரத்தால் இயங்கும் ஆட்டோ ரிக்‌ஷா வண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டது.. 19 ஆம் நூற்றாண்டில், ஆட்டோ-ரிக்‌ஷாக்கள் ஆசிய நாடுகளில் சாதாரண மக்களின் முக்கிய போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கான முக்கிய வழிமுறையாக மாறியது. மகிழுந்து, பேருந்து மற்றும் தொடருந்துகளின் வருகையால் ரிக்‌ஷா வண்டிகள் தனது முக்கியத்துவத்தை இழந்தது. 21ஆம் நூற்றாண்டில் கூட, சில நகரங்களில் குறைந்த பயணச் செலவு காரணமாக ஆட்டோ-ரிக்‌ஷாக்கள் வாடகை மகிழுந்துகளுக்கு மாற்றாகப் பயன்படுகிறது. சொற்பிறப்பியல் ரிக்‌ஷா எனும் சொல் ஜப்பானிய மொழிச் சொல்லான ஜின்ரிக்கிஷாவிலிருந்து பெறப்பட்டது ( 人力車, 人 ஜின் = மனித, 力 ரிக்கி = சக்தி அல்லது சக்தி, 車 ஷ = வாகனம்), அதாவது மனித உடலால் இயங்கும் வாகனம். வரலாறு தோற்றம் கை ரிக்‌ஷாக்கள் முதன்முதலில் ஜப்பானில் 1869 இல் தயாரிக்கப்பட்டது. விளக்கம் கை ரிக்‌ஷாக்கள் இரண்டு பெரிய சக்கரங்களில் இயங்கும் ஒரு மரக் கூண்டைக் கொண்டிருந்தது. 1880 இல் கட்டப்பட்டதாக நம்பப்படும் ஜப்பானிய ரிக்சா, ஆஸ்திரேலியாவில் உள்ள பவர்ஹவுஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதற்கு கதவுகள் இல்லை, இரண்டு சக்கரங்கள், நாற்காலி போன்ற கூண்டு கொண்ட இந்த ரிக்‌ஷாவில் ஒரு நபரை அமர்த்தி ஒரு மனிதன் இழுக்கும் அளவுக்கு இலகுவாக இருந்தது. ஆசியாவில் மலிவான மற்றும் பிரபலமான போக்குவரத்து வடிவமாக மாறியது கை ரிக்‌ஷா. பெரிய ஆசிய நகரங்களுக்கு குடிபெயர்ந்த விவசாயிகள் பலர் கை ரிக்‌ஷா இழுப்பவர்களாக வேலை செய்தனர். 20 ஆம் நூற்றாண்டு 1880ஆம் ஆண்டுகளில் கை ரிக்‌ஷாக்களுக்குப் பதில் மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அறிமுகமானது. இது 1929ல் சிங்கப்பூரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1950 ஆண்டுகளில் , தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் முச்சக்கர சைக்கிள் ரிக்‌ஷாக்கள் பிரபலமடைந்தன. 1980களின் இறுதியில் உலகம் முழுவதும் 4 மில்லியன் சைக்கிள் ரிக்சாக்கள் இருந்ததாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன ஆசியா இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சைக்கிள் ரிக்‌ஷாக்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்தது. 1930களில் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ரயில்களின் ஆக்கிரமிப்பு காரணமாக ஜப்பானில் ரிக்‌ஷாக்களின் புகழ் குறையத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எரிபொருள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட வாகனங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது ரிக்‌ஷாக்கள் மீண்டும் புழக்கத்தில் வந்தது. ரிக்‌ஷாக்களின் வகைகள் கை-ரிக்‌ஷா -- ஒருவரால் இழுக்கப்படும் இரு சக்கர ரிக்‌ஷா (இதன் பெரும்பாலன பாகங்கள் அனைத்தும் மரத்தால் ஆனது). சைக்கிள்-ரிக்‌ஷா -- முச்சக்கர சைக்கிளில் இணைக்கப்பட்ட ரிக்‌ஷா (இதன் பெரும்பாலான பாகங்கள் இரும்பு & எஃக்கால் ஆனது) ஆட்டோ ரிக்சா -- பெட்ரோ அல்லது எரிவாயுவால் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட மூன்று சக்கர வண்டி மின்கல-ரிக்‌ஷா-- பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி தமிழ்நாட்டில் கை ரிக்‌ஷா ஒழிப்பு தமிழ்நாட்டில் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மனிதால் இழுக்கப்படும் கை-ரிக்‌ஷாக்களை ஒழித்து, மூன்று சக்கரங்கள் கொண்ட சைக்கிள் ரிக்சாக்களை அறிமுகப்படுத்த, ரூபாய் 22 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். படக்காட்சிகள் இதனையும் காண்க ஆட்டோ ரிக்சா மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் Histoire du Pousse-pousse : https://www.patrimoine.asso.fr/879-2/ மனித-வலுப் போக்குவரத்து ஊர்திகள் சாலைப் போக்குவரத்து
683762
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
நியோடிமியம் மோனோசல்பைடு
நியோடிமியம் மோனோசல்பைடு (Neodymium monosulfide) என்பது NdS என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு தூய்மையான நிலையிலுள்ள நியோடிமியம் மற்றும் கந்தகத்தை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்து நியோடிமியம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது. Nd + S → NdS இயற்பியல் பண்புகள் Fm3m என்ற இடக்குழுவில் a = 0.5691 நானோமீட்டர் Z = 4. என்ற அலகுசெல் அளவுருக்களில் நியோடிமியம் மோனோசல்பைடு கனசதுர அமைப்பில் படிகங்களை உருவாக்குகிறது. மேற்கோள்கள் நியோடிமியம் சேர்மங்கள் சல்பைடுகள்
683766
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%202024%E2%80%9325
இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2024–25
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2024 நவம்பர் முதல் 2024 சனவரி வரை ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடுகிறது. தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக விளையாடப்படுகின்றன. 1992 இற்குப் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே ஐந்து தேர்வுப் போட்டிகள் நடைபெறும் முதலாவது தேர்வுத் தொடராகும். முந்தைய 2023 தொடரில் இந்தியா ஆத்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைத் தக்க வைத்திருந்தது.. விளையாடும் இடங்க்ள் கிரிக்கெட் ஆத்திரேலியா தமது கோடை-காலத் துடுப்பாட்டக் கால நிரலை 2024 மார்ச்சில் அறிவித்தது. தேர்வுத் தொடர் ஆத்திரேலியாவின் முதன்மை ஐந்து நகரங்களின் துடுப்பாட்டத் திடல்களில் நடைபெறுகிறது. 1991/92 இற்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதலாவது ஐந்து-ஆட்டத் தொடர் இதுவாகும். அணிகள் பார்டர்-கவாசுகர் பதக்கம் 1-ஆவது தேர்வு 2-ஆவது தேர்வு 3-ஆவது தேர்வு 4-ஆவது தேர்வு 5-ஆவது தேர்வு குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Series home at ESPNcricinfo 2024இல் துடுப்பாட்டம் ஆத்திரேலியாவில் துடுப்பாட்டம் இந்தியாவில் துடுப்பாட்டம் பன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்
683774
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
துரைராஜா சோணாடுகொண்டார்
துரைராஜா சோணாடுகொண்டார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். வாழ்க்கைக் குறிப்பு இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள பூதலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் இல் 1910 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் எஸ். மருதையா சோணாடுகொண்டார் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் இவர் எழுத்தறிவு பெற்றவர், 1936 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் 188, எல்பிசி பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 9 மாதம் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேற்கோள்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
683779
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE
பாபினா
பாபினா (Babina) என்பது தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இராணிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளைகளின் பேரினமாகும். முன்பு, பாபினா, இராணாவின் துணைப் பேரினமாகக் கருதப்பட்டது. சிற்றினங்கள் பின்வரும் சிற்றினங்கள் பாபினா பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாபினா கோல்சுடி (பொளஞ்சர், 1892) -கோல்சுடி தவளை பாபினா சுபாசுபெரா (பார்பர், 1908) -ஓட்டன் தவளை மேற்கோள்கள் நீர்நில வாழ்வனப் பேரினங்கள் தவளைகள்
683781
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28Ce%29
தான்காயிட்டு-(Ce)
தான்காயிட்டு-(Ce) (Tancaite-(Ce)) என்பது FeCe(MoO4)3•3H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மிகவும் அரியதோர் மாலிப்டேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இது இத்தாலியின் சார்தீனியா தீவில் உள்ள புண்டா டி சூ சீனார்கியு நகரப் பகுதியில் தான்காயிட்டு கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தான்காயிட்டு-(Ce) இன் சிவப்பு படிகங்கள் மாற்றியமைக்கப்பட்ட கனசதுரங்களை ஒத்திருக்கின்றன. ஆனால் கனிமமானது முக்கோண வடிவத்துடன் R-3 என்ற இடக்குழுவில் படிகமாயுள்ளது. தான்காயிட்டு-(Ce) கிடைக்கும் பகுதியானது தோரியம் மாலிப்டேட்டுகளான இச்னுசைட்டு மற்றும் நூராகைட்டு உள்ளிட்ட பிற மாலிப்டேட்டு கனிமங்கள் கண்டறியப்பட்ட இடமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் தான்காயிட்டு கனிமத்தை Tca-Ceஎன்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் மாலிப்டேட்டு கனிமங்கள் சீரியம் கனிமங்கள் இரும்புக் கனிமங்கள் கனிமங்கள் முக்கோணவமைப்புக் கனிமங்கள்
683782
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE
கோபைலா
கோபைலா (Cophyla) என்பது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் கூர்வாய்த் தவளைபேரினம் ஆகும். சிற்றினங்கள் பின்வரும் சிற்றினங்கள் கோபைலா பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கோபைலா ஆல்டிகோலா (குய்பே, 1974) கோபைலா ஆண்டோ (செர்சு, கோக்லர், வென்சசு, மற்றும் குளோ, 2019) கோபைலா பார்போரி (நோபல், 1940) கோபைலா பெராரா வென்சசு, ஆண்ட்ரூன், மற்றும் குளோ, 2005 கோபைலா கோவானீ (பௌலெங்கர், 1882) கோபைலா போர்டுனா ர ரகோடாரிசன், செர்சு, பிளெட்சு, ரசாபிண்ட்ரைப், குளோ, அண்ட் வென்சசு, 2019 கோபைலா கிராண்டிசு (பௌலஞ்சர், 1889) கோபைலா கரேனே (ரோசா, குரோட்டினி, நோயல், ரபீபிசோவா, ராக்சுவொர்த்தி, மற்றும் ஆண்ட்ரூன், 2014) கோபைலா லேடசு (ரகோடாரிசன், செர்சு, கோக்லர், ராட்சோவினா, காலிட்செக், மெக்சன், வென்சசு & குளோ, 2020) கோபைலா மகாரிபியோ ரகோடாரிசன், கிரோட்டினி, முல்லர், ரோடல், குளோ மற்றும் வென்சசு, 2015 கோபைலா மவோமாவொ (ஆண்ட்ரோன், பெனோலியோ, மற்றும் வால்வோர்டு, 2003) கோபைலா மில்லோட்டி (குய்பே, 1950) கோபைலா நோரோமலாலே ரகோடாரிசன், கிரோட்டினி, முல்லர், ரோடல், குளோ மற்றும் வென்சசு, 2015 கோபைலா அக்கல்டன்சு (குளோ மற்றும் வென்சசு, 1992) கோபிலா ஒல்கே (ரகோடாரிசன், குளோ, வியட்சு, ராமினோசோவா, மற்றும் வென்சசு, 2012) கோபைலா லோடாக்டிலா போய்ட்கர், 1880 கோபைலா போலிகாரிசு (பௌலெங்கர், 1888) கோபைலா புயல்லாரம் ரகோடாரிசன், கிரோட்டினி, முல்லர், ரோடல், குளோ மற்றும் வென்சசு, 2015 கோபைலா ரவா (குளோ, கோக்லெர், மற்றும் வென்சசு, 2012) கோபைலா டெட்ரா (ஆண்ட்ரோன், பெனோலியோ, மற்றும் வால்வோர்டு, 2003) கோபைலா சாராடானென்சிசு குய்பே, 1974 கோபைலா டுயூபெரிபெரா (மெதுயென், 1920) மேற்கோள்கள் நீர்நில வாழ்வனப் பேரினங்கள் Articles using diversity taxobox தவளைகள்
683783
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28La%29
டைர்னசைட்டு-(La)
டைர்னசைட்டு-(La) (Dyrnaesite-(La)) என்பது Na8Ce4+(La,REE)2(PO4)6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மிகவும் அரியதொரு பாசுப்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மற்றொரு அரிய பாசுப்பேட்டுக் கனிமமான விட்டுசைட்டு-(Ce) உடன் டைர்னசைட்டு-(La) கனிமம் தொடர்பு கொண்டுள்ளது. இது தெற்கு கிரீன்லாந்தின் ஒரு வகை கார சைனைட்டுப் பாறையான உலுச்சாவ்ரைட்டிலிருந்து தோன்றுகிறது. டைர்னசைட்டு-(La) அத்தியாவசிய நான்கிணைய சீரியம் கொண்ட சில அறியப்பட்ட தாதுக்களில் ஒன்றாகும். செரியாணைட்டு-(Ce) கனிமமும் சுடெண்டிடைட்டும் வேறுசில சீரியம் கொண்ட கனிமங்களாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் டைர்னசைட்டு-(La) கனிமத்தை Dyr-Laஎன்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் பாசுப்பேட்டு கனிமங்கள் சீரியம் கனிமங்கள் கனிமங்கள் இலந்தனைடு கனிமங்கள் சோடியம் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
683784
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88.%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95
ஈ. எம். பஸ்நாயக
ஈ. எம். பஸ்நாயக ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஆவார். கண்டி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ஆவார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள் 1973 பிறப்புகள்