id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
683166
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87
பிளாகுசிடே
பிளாகுசிடே (Plagusiidae) என்பது நண்டுகளின் குடும்பமாகும். இது முன்பு கிராப்சிடே குடும்பத்தின் துணைக்குடும்பமாக கருதப்பட்டது, ஆனால் இதன் பின்னர் ஒரு குடும்பமாக இருப்பதற்குப் போதுமான தனித்துவமாகக் கருதப்படுகிறது. குடும்பம் பிளாகுசிடேயில் பெர்க்னான் மற்றும் பிளாகுசியா பேரினங்களை உள்ளடக்கிய பிளாகுசினே என்ற துணைக்குடும்பம் அடங்கும். இது லிட்டோபிலிக், இடை அலை மற்றும் துணை அலைப் பகுதியில் வாழும் நண்டுகளின் பரவலான குழுவாகும். இவை இவற்றின் வேகம் மற்றும் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை. ஆறு பேரினங்கள் இக்குடும்பத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன. தடவுசியா கினோட், 2007 யூச்சிரோக்ராப்சசு எச். மில்னே-எட்வார்ட்சு, 1853 குயினூசியா சூபார்ட் & குவெசுடா, 2010 மியர்சியோகிராப்சசு துர்க்கே, 1978 பெர்க்னான் ஜிசுடெல், 1848 பிளாகுசியா லேட்ரெய்ல், 1804 மேற்கோள்கள் நண்டுகள் கணுக்காலி குடும்பங்கள்
683167
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பிளாடைட்டு
பிளாடைட்டு (Blödite) என்பது Na2Mg(SO4)2·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய சோடியம் மக்னீசியம் சல்பேட்டு கனிமமாக இது கருதப்படுகிறது. கனிமமானது மஞ்சள் நிறத்தில் தெளிவாக உள்ளது. பெரும்பாலும் மாசுகள் சேர்வதால் கருமையாகிறது. ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகங்களாக உருவாகிறது. பன்னாட்டு கனிமவியம் சங்கம் பிளாடைட்டு கனிமத்தை Blö என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. பிளாடைட்டு முதன்முதலில் 1821 ஆம் ஆண்டில் ஆத்திரிய நாட்டின் குமுந்தன் மாவட்டத்தில் பேடு இசுசில் நகரத்தில் இருந்த உப்பு படிவுகளில் கண்டறியப்பட்டது. செருமன் நாட்டின் கனிமவியலாளரும் வேதியியலாளருமான கார்ல் ஆகசுட் பிளாட்டு (1773-1820) நினைவாக கனிமத்திற்கு பிளாடைட்டு எனப் பெயரிடப்பட்டது. உலகளவில் கிரேட் உப்பு ஏரி, உட்டா போன்ற ஆவியாதல் வண்டல் சூழல்களில் காணப்படுகிறது. மேற்கோள்கள் சோடியம் கனிமங்கள் மக்னீசியக் கனிமங்கள் சல்பேட்டுக் கனிமங்கள் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
683175
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சௌகோனைட்டு
சௌகோனைட்டு (Sauconite) என்பது Na0.3Zn3(SiAl)4O10(OH)2·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இசுமெக்டைட்டு களிமண் குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு பைலோசிலிக்கேட்டு கனிமமாக இது கருதப்படுகிறது. மென்மையான மண் போன்ற நீலம் கலந்த வெள்ளை முதல் சிவப்பு-பழுப்பு நிற ஒற்றைச்சரிவச்சுப் படிகங்களாக உருவாகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் மதிப்பு 1 முதல் 2 ஆகவும் மற்றும் ஒப்படர்த்தி அளவு 2.45 ஆகவும் உள்ளது.ஒளியியல் ரீதியாக இது ஓர் ஈரச்சு படிகமாகும். சௌகோனைட்டு கனிமத்தின் ஒளிவிலகல் மதிப்பு nα = 1.550 – 1.580, nβ = 1.590 – 1.620 மற்றும் nγ = 1.590 – 1.620. ஆகும். இது துத்தநாகம் மற்றும் தாமிரப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலங்களில் உள்ள பாறைக் குழிகள், இணைப்புகளில் காணப்படுகிறது. எமிமார்பைட்டு, சுமித்சோனைட்டு, கிரிசோகோலா, கரோணாடைட்டு மற்றும் பல்வேறு இரும்பு ஆக்சைடுகளுடன் இணைந்து காணப்படுகிறது. பன்னாட்டு கனிமவியம் சங்கம் சௌகோனைட்டு கனிமத்தை Sau என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. கிழக்கு பென்சில்வேனியாவின் இலேகி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சௌக்கோன் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டதால் கனிமத்திற்கு சௌகோனைட்டு எனப் பெயரிடப்பட்டது. இங்குதான் முதலில் 1875 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கோள்கள் சோடியம் கனிமங்கள் அலுமினியம் கனிமங்கள் கனிமங்கள் துத்தநாகக் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் இசுமெக்டைட்டு குழு
683184
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
சயனோ அசிட்டிலீன்
சயனோ அசிட்டிலீன் (Cyanoacetylene) என்பது C3HN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இது ஓர் எளிமையான சயனோபாலியின் சேர்மம் ஆகும். அலைமாலை ஆய்வு முறைகளால் விண்மீன் மேகங்களில் சயனோ அசிட்டிலீன் இருப்பது அறியப்படுகிறது. ஏல்-பாப் வால்வெள்ளி என்ற வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியிலும், சனியின் சந்திரனான டைட்டனின் வளிமண்டலத்திலும் சயனோ அசிட்டிலீன் காணப்படுகிறது. சில சமயங்களில் டைட்டனில் இது விரிந்த மூடுபனி போன்ற மேகங்களை உருவாக்குகிறது. மில்லர்-உரே பரிசோதனையில் தோன்றும் மூலக்கூறுகளில் சயனோ அசிட்டிலீன் சேர்மமும் ஒன்றாகும். : H-C#C-H + H-C#N -> H-C#C-C#N + H2 இதையும் காண்க ஐதரசன் சயனைடு, H−C≡N மேற்கோள்கள் ஆல்க்கைன் வழிப்பொருட்கள் இணை நைட்ரைல்கள்
683187
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D18%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம்
எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம் அல்லது எஸ்எஸ்18 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: SS18 LRT Station; மலாய்: Stesen LRT SS18; சீனம்: SS18站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, SS18 சுற்றுப்புறங்களை இணைக்கிறது; மற்றும் இந்த நிலையம் சுபாங் ஜெயா ஜெங்கா சாலையில் அமைந்துள்ளது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. SS18 பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், எஸ்எஸ்15 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சுபாங் ஜெயா SS18, சுபாங் ஜெயா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் சுபாங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் SS18 LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683190
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சோப்டா சட்டமன்ற தொகுதி
சோப்டா சட்டமன்றத் தொகுதி (Chopda Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி ஜல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் இது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜகதீஷ்சந்திர வால்வி தலைமையில் உள்ளது. மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் மகாராட்டிர அரசியல்
683192
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87
புரோகேரிடிடே
புரோகேரிடிடே (Procarididea) என்பது பதினொரு சிற்றினங்களை மட்டுமே உள்ளடக்கிய பத்துக்காலிகளின் ஒரு மீப்பெரும் வரிசை ஆகும். இவற்றில் ஆறு சிற்றினங்கள் புரோகாரிசு மற்றும் வெடெரிகாரிசு பேரினத்தில் உள்ளன. இவை இரண்டும் புரோகேரிடே எனும் குடும்பத்தினை உருவாக்குகின்றன. மீதமுள்ள ஐந்து சிற்றினங்கள் புதைபடிவங்களிலிருந்து மட்டுமே அறியப்படுகின்றன. மேலும் இவை உடோரா பேரினத்தைச் சேர்ந்தவை. இவை இன்னும் எந்தக் குடும்பத்திற்கும் ஒதுக்கப்படவில்லை. கீழேயுள்ள கிளை வரைபடம் பத்துக்காலிகளில் உள்ள பிற உறவினர்களுடனான புரோகாரிடிடேவின் இன உறவுகளைக் காட்டுகிறது. இது வோல்ப் மற்றும் பலரின் (2019) பகுப்பாய்வின் அடிப்படையில் அமைகின்றது. மேற்கோள்கள் கணுக்காலிகள்
683193
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
நிகால் கலப்பத்தி
ஆராச்சிகே நிஹால் கலப்பத்தி (Nihal Galappaththi), இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் அம்பாந்தோட்டை மாவட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் 2015 முதல் 2020 வரை மற்றும் 1994 முதல் 2010 வரை அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மேற்கோள்கள் 1954 பிறப்புகள் இலங்கை அரசியல்வாதிகள் சிங்கள அரசியல்வாதிகள் இலங்கை பௌத்தர்கள் இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழும் நபர்கள்
683199
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
கிள்ளான் லாமா சாலை
கிள்ளான் லாமா சாலை (ஆங்கிலம்: Old Klang Road; அல்லது Federal Route 2); மலாய்: Jalan Klang Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரம், சிலாங்கூர் மாநிலம்; ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை ஆகும். கோலாலம்பூரின் மிகப் பழமையான சாலை என்றும்; முதல் பெரிய சாலை என்றும் அறியப்படுகிறது. இந்தச் சாலை, மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை கட்டப் படுவதற்கு முன்பாகவே, 1956 - 1959-ஆம் ஆண்டுகளில் மலாயா அரசாங்கத்தால் கட்டப்பட்டது. மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை 1965-ஆம் ஆண்டில்தான் கட்டப்பட்டது. சுங்கைவே-பெட்டாலிங் ஜெயா 1959 சனவரி 14 அன்று, அப்போதைய மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் சார்டன் ஜூபிர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சாலை, கோலாலம்பூர், சுங்கைவே மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய நகரங்கள் வழியாகச் செல்கிறது. கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) 14 சனவரி 1959 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. பத்து தீகா லாமா சாலை பெர்சியாரான் சிலாங்கூர் (Persiaran Selangor), சுங்கை ரசாவ் சாலை (Jalan Sungai Rasau); பத்து தீகா லாமா சாலை (Jalan Batu Tiga Lama) அறியப்படும் தற்போதைய கிள்ளான் லாமா சாலை அமைப்பிற்கு மாற்றாக கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, கிள்ளான் லாமா சாலை என்பது சிலாங்கூர் மாநிலச் சாலை (Selangor State Road B14) என தரமிறக்கப்பட்டது. கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (Malaysia Federal Highway) என்பது மலேசியா, கோலாலம்பூர்; சிலாங்கூர் மாநிலப் பகுதிகளில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை ஆகும். கோலாலம்பூர், செபுத்தே பகுதியில் தொடங்கும் இந்த நெடுஞ்சாலை 45 கிமீ (28 மைல்) நீளம் கொண்டது; கோலாலம்பூர்; பெட்டாலிங் ஜெயா; சா ஆலாம்; கிள்ளான், கிள்ளான் துறைமுகம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. கிள்ளான் பள்ளத்தாக்கின் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் இதுவே முதல்நிலை வகிக்கிறது. இந்தச் சாலை, மலேசிய கூட்டரசு சாலை (Malaysia Federal Route 2) அல்லது மலேசிய கூட்டரசு 2 என குறியிடப்பட்டுள்ளது. காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிலாங்கூர் மாநிலத்தின் சாலைகள் கோலாலம்பூர் சாலைகள்
683201
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
ராவேர் சட்டமன்றத் தொகுதி
ராவேர் சட்டமன்றத் தொகுதி (Raver Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்ட மன்றத் தொகதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி ஜல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. . ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல், சோப்தா, முக்தைநகர் மற்றும் ஜாம்னர் மற்றும் அருகிலுள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காப்பூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ராவர் மக்களவைத் தொகுதி ஒன்றாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராவெர் 1951 மற்றும் 1957 தேர்தல்களின் போது பம்பாய் மாநிலம் பகுதியாக இருந்தது. தேர்தல் முடிவுகள் 2019 மேலும் காண்க ராவேர் மக்களவைத் தொகுதி மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல்மகாராட்டிர அரசியல் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683203
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
காலியம் மோனோபுளோரைடு
காலியம் மோனோபுளோரைடு (Gallium monofluoride) என்பது GaF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வாயுநிலையில் மட்டுமே இக்கனிமத்தை அறியமுடியும். அலுமினியம் புளோரைடு அல்லது கால்சியம் புளோரைடு ஆகியவற்றுடன் காலியத்தை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் இதை உருவாக்கலாம். ஆராய்ச்சி 2011 ஆம் ஆண்டில், பிரேசிலிய மற்றும் செருமன் ஆராய்ச்சியாளர்களின் குழு கிராஃபைட் உலையில் உருவாக்கப்பட்ட புளோரோகாலியத்தின் மூலக்கூறு உறிஞ்சுதலைப் பயன்படுத்தி 5.2 பிகோகிராம் புளோரின் தனிமம் மட்டுமே கண்டறியக்கூடிய சிறிய பகுதி என்பதை தீர்மானித்தனர். இதன் அயனியாக்க ஆற்றல் 10.64 எலக்ட்ரான் வோல்ட்டு ஆகும். மேற்கோள்கள் காலியம் சேர்மங்கள் புளோரைடுகள் கனிம வேதியியல்
683206
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%2C%20%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
பகலமுகி கோயில், பாங்கந்தி, இமாச்சல பிரதேசம்
பகளாமுகி கோயில், இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலம் காங்கிரா மாவட்டத்தில் அமைதியான பகுதியான பாங்கந்தியில் அமைந்துள்ளது. தச மகாவித்யாக்கள் என்று அழைக்கப்படும், பத்து தெய்வங்களில் ஒருவரான பகளாமுகி தேவிக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பகாளமுகி பெரும்பாலும் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையது மற்றும் எதிரிகளை தோற்கடிக்கும், தடைகளை நீக்கி வெற்றியைக் கொண்டுவரும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. அவள் பீதாம்பரம் என்றும் அழைக்கப்படுகிறாள் மற்றும் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து சித்தரிக்கப்படுகிறாள், மூன்று கண்களுடன் தன் பக்தர்களுக்கு இறுதி அறிவை வழங்கும் திறனைக் குறிக்கிறது. வரலாறு இந்துக்களின் முக்கிய கொண்டாட்டமான நவராத்திரி பண்டிகையின் போது பாங்கந்தியில் உள்ள பகளாமுகி கோயில் மிகவும் பிரபலமானது. இது இந்தியாவில் உள்ள பகளாமுகி அர்ப்பணிக்கப்பட்ட மூன்று முக்கிய கோவில்களில் ஒன்றாகும், மற்ற இரண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ததியா மாவட்டம் மற்றும் அகர் மால்வா மாவட்டத்தின் நல்கேடாவில் உள்ளது. கட்டிடக்கலை இந்த கோவிலில் ஒரு ஹவன் குண்ட், ஒரு புனிதமான நெருப்பு குழி உள்ளது, அங்கு பகவான் ராமர் தனது காலத்தில் ஒரு ஹவனை (சடங்கு தீ பிரசாதம்) செய்ததாக நம்பப்படுகிறது. இது கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்தை சேர்க்கிறது, ஏனெனில் மா பகலமுகி இந்த சடங்கு மூலம் ராமருக்கு தெய்வீக ஆசீர்வாதத்தையும் சக்திவாய்ந்த பிரம்மாஸ்திரத்தையும் வழங்கினார் என்று கூறப்படுகிறது. ஹவன் குண்ட், அரக்க அரசன் ராவணனை ராமர் வென்றதில் கோயிலின் ஆழமான தொடர்பை நினைவூட்டுகிறது, இது தெய்வீக தலையீடு மற்றும் வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாப்பைக் குறிக்கிறது. புராண முக்கியத்துவம் மா பகலமுகி கோயில் பாங்கந்தி ராமர் மற்றும் ராவணனுக்கு எதிரான அவரது போருடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ஹனுமானால் வழிநடத்தப்பட்ட ராமர், ராவணனை தோற்கடிக்கும் வலிமையைப் பெற மா பகலமுகியிடம் பிரார்த்தனை செய்ததாக நம்பப்படுகிறது. பதிலுக்கு, தேவி அவருக்கு பிரம்மாஸ்திரத்தை ஆசீர்வதித்தார், இது போரில் வெற்றிபெற அவருக்கு உதவியது. கடினமான காலங்களில் பக்தர்கள் வலிமையையும் பாதுகாப்பையும் பெறும் இடமாக இது கோயிலைக் காட்டுகிறது. இந்து புராணங்களில் இருந்து பிரபலமான ஹீரோக்களான பாண்டவர்களுடன் இந்த கோவில் இணைக்கப்பட்டுள்ளது. அகியத்வாஸ் (வனவாசம்) காலத்தில், பாண்டவர்கள் ஒரே இரவில் கோயிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது. பீமனும் அர்ஜுனனும் இங்கு மா பகலமுகியை வணங்கி, வலிமை மற்றும் வெற்றிக்காக அவளது ஆசிகளை வேண்டினர். பாண்டவர்களுடனான தொடர்பு கோவிலை மேலும் சிறப்பும் புனிதமும் ஆக்குகிறது. குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் மா பகலாமுகி கோயில் பாங்கந்தி என்பது தேவியின் ஆசீர்வாதத்தை நாடுகின்ற பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் உட்பட பலருக்கு பிரபலமான யாத்திரை தளமாகும். அவர்கள் வலிமை, பாதுகாப்பு மற்றும் வெற்றிக்காக பூஜை மற்றும் ஹவன் (தீ சடங்குகள்) போன்ற சடங்குகளை செய்ய கோயிலுக்கு வருகிறார்கள். அனைத்து தரப்பு மக்களும் தெய்வீக ஆதரவைப் பெற்று சவால்களை சமாளிக்கும் இடமாக இக்கோயில் கருதப்படுகிறது. சாராம்சத்தில், காங்க்ராவின் பாங்கந்தியில் உள்ள மா பகலமுகி கோயில், தெய்வத்தின் பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற மக்கள் வரும் ஒரு புனிதமான இடமாகும். தனிப்பட்ட வளர்ச்சிக்காகவோ, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பிற்காகவோ அல்லது வாழ்க்கையில் வெற்றியைத் தேடுவதற்காகவோ, இந்த ஆலயம் வருகை தரும் அனைவருக்கும் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்புகள் அம்மன் கோயில்கள் Coordinates on Wikidata
683207
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
கே. சி. மானவேதான் ராஜா
கே.சி. மானவேதான் ராஜா (K. C. Manavedan Raja) இந்திய நாட்டினைச் சார்ந்த உயர் குடியாட்சி அலுவலரும் ஒரு நிர்வாகியும் ஆவார். மேன்மைமிகு கிழக்கே கோவிலகம் மானவேதான் ராஜா, சேரியனுசன் ராஜா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். 1855 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டு வரை கோழிக்கோட்டில் சமோரின் என்ற பெயரிலேயே வாழ்ந்தார். மானவேதான் ராஜா 1855 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சாமோரின் என்ற அரச குடும்பத்தில் கோட்டக்கல் கிளையில் பிறந்தார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, குடும்பத்தில் இருந்து முதல் நபராக மாகாண சிவில் சேவை பணியில் நுழைந்தார். 1880 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று சிவில் சேவையில் நியமிக்கப்பட்டார். 1882 ஆம் ஆண்டில் உதவி ஆட்சியராகவும், 1895 ஆம் ஆண்டுக்குள் துணை ஆட்சியராகவும் உயர்ந்தார். மாவட்ட ஆட்சியராகவும் பின்னர் நீதிபதியாகவும் பணியாற்றினார். 1932 ஆம் ஆண்டில், இவர் கோழிக்கோட்டின் சாமூத்திரி அல்லது சமோரின் ஆனார். சமோரின் என்ற முறை சமோரின் என்ற வகையில், மானவேதான் ராஜா தன்னை ஒரு திறமையான நிர்வாகி மற்றும் தொலைநோக்கு பார்வையுடையவர் என்பதை நிரூபித்தார். 1934 ஆம் ஆண்டில் இவரது ஆட்சிக் காலத்தில்தான் புகழ்பெற்ற குருவாயூர் சத்தியாகிரகம் நடந்தது. குருவாயூர் கோயிலை அனைத்து சாதியினருக்கும் திறந்து விட வேண்டும் என்று காந்தியவாதி கே. கேளப்பன் தலைமையில் மக்கள் பிரச்சாரம் செய்தனர். இந்த இயக்கத்திற்கு ஆதரவாக மகாத்மா காந்தியே கேரளாவுக்கு வந்து, குருவாயூர் கோயிலின் தலைமை நிர்வாகியாக இருந்த சமோரின் மானவேதான் ராஜாவை சந்தித்தார். இந்தப் பேச்சுக்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், பெரும் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க முடியாது என்று சமோரின் காந்தியிடம் கூறியதாக ஊகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சத்தியாகிரகத்தை நிறுத்துமாறு கேளப்பனுக்கு காந்தி அறிவுறுத்தினார். கோவிலகத்தில் குழந்தைகளின் கல்விக்காக கோட்டக்கலில் ராஜா உயர்நிலைப் பள்ளியை மானவேதான் ராஜா தொடங்கினார். தற்போது இப்பள்ளி கோழிக்கோட்டில் சமோரின் குருவாயூரப்பன் கல்லூரியாக செயல்படுகிறது. இக்கல்லூரியை கணிசமாக மேம்படுத்தி விரிவுபடுத்தினார். ராஜாவின் குழந்தைகள் நன்கு படித்தவர்கள் ஆவர். இவரது மூத்த மகன் மாவட்ட ஆட்சியர் ஆனார். இவரது நான்காவது மகன் மு. க. வெல்லோடி இந்திய சிவில் சேவையில் பணியில் சேர்ந்தார். பின்னர் அய்தராபாத் மாநிலத்தின் முதல் முதலமைச்சரானார். இங்கிலாந்துக்கான இந்தியாவின் முதல் உயர்ந்த வெல்லோடி ஆவார். பின்னர் இவர் அமைச்சரவை செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். 1937 ஆம் ஆண்டில் மானவேதான் ராஜா மறைந்தார். மேற்கோள்கள் 1937 இறப்புகள் 1855 பிறப்புகள் மலையாள நபர்கள் இந்திய அரசு அதிகாரிகள்
683210
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
தாபி சாணக்கியா
தாபி சாணக்கியா (Tapi Chanakya, 1925-1973) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். இவர் பிரபல தெலுங்கு எழுத்தாளரான தாபி தர்ம ராவ் நாயுடுவின் மகனாவார். இவர் இந்திய இராணுவத்தில் வானொலி தந்தியாளராக பணியாற்றினார். திரைப்படவியல் பல்லெட்டூரி பில்லா (தெலுங்கு) (1950) - உதவி இயக்குநர் ஏன்டா மனவலே (1954) ரோஜுலு மராயி (தெலுங்கு) (1955) - இயக்குநரும் திரைத் தழுவலும் பெடரிகலு (1957) எட்டுகு பாய் எட்டுகு (1958) பாக்ய தேவதா (1959) ஜல்சராயுடு (1960) கும்குமரேகா (1960) புதியா பதை (1960) கலசிவுண்டே கலடு சுகம் (1961) கான்ஸ்டபிள் கூத்துரு (1963) ராமுடு பீமுடு (தெலுங்கு) (1964) வரசத்வம் (1964) சி. ஐ. டி. (1965) எங்க வீட்டுப் பெண் (1965) எங்க வீட்டுப் பிள்ளை (1965) அடகு ஜடலு (1966) நான் ஆணையிட்டால் (1966) ராம் அவுர் ஷ்யாம் (இந்தி) (1967) ஒளி விளக்கு (1968) புதிய பூமி (1968) மாதவி (1969) விதி விலாசம் (1970) பங்காரு தல்லி (1971) பிக்ரே மோதி (இந்தி) (1971) மன் மந்திர் (இந்தி) (1971) பந்திபோட்டு பயன்கார (1972) ஜான்வர் அவுர் இன்சான் (இந்தி) (1972) மனவத (இந்தி) (1972) சுபா-ஓ-ஷாம் (இந்தி & பாரசீகம்) (1972) கங்கா மங்கா (தெலுங்கு) (1973) வாணி ராணி (1974) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தித் திரைப்பட இயக்குநர்கள் 1973 இறப்புகள் 1925 பிறப்புகள் தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்
683214
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அரபு கிறிஸ்தவர்கள்
அரபு கிறிஸ்தவர்கள், அரபு மொழி பேசும் அரேபியர்கள் ஆவர்.இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் ராசிதீன் கலீபாக்கள் ஆட்சிக்கு (இசுலாமின் எழுச்சி) முன்னர், கிறித்தவத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவார். 2012ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக கிழக்கு நடுநிலப் பகுதிகளான லெவண்ட், எகிப்து மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் அரபு கிறித்தவர்களின் மக்கள் தொகை 10 முதல் 15 மில்லியனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.பெரும்பான்மையான அரபு கிறித்தவர்கள் அரபு மொழி மற்றும் அரபு பண்பாட்டை பின்பற்றுகின்றனர். ஏழாம் நூற்றாண்டு முன்னர் அரபு உலகின் துவக்க கால அரபு இராச்சியங்கள் மற்றும் அரபு இன மக்களான நபாத்தியர்கள், லக்மிதுகள், சாலிகிதுக்கள், தனுக்கிதுக்கள் கசானித்துகள் கிறித்துவத்தைப் பின்பற்றினார்கள். நவீன உலகின் அரபு கிறித்தவர்கள் நக்டா (அரபு விழிப்புணர்வு) இயக்கத்தின் மூலம், அரபு இலக்கியம், அரசியல், வணிகம்,அரபு தத்துவம்,இசை, நாடகம் மற்றும் திரைத்துறை,மருத்துவம்,மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பெரும்பங்காற்றி வருகின்றனர்.மேலும் தற்கால அரபு கிறித்தவர்கள் நன்கு படித்தவர்களாகவும், செழிப்புடனும், அரசியல் நாகரீகம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். மத்தியக் கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்த அரபுக் கிறித்தவர்கள் பிரேசில், அர்ஜென்டீனா, வெனிசுலா, கொலம்பியா மற்றும் அமெரிக்காவில் செறிந்து காணப்படுகின்றனர். மத்திய கிழக்கில் வாழும் அரபு கிறித்தவர்களில் பெரும்பான்மையாக அரபு மொழி பேசுகின்றனர். இருப்பினும் அசிரிய மக்கள், ஆர்மினீயர்கள், எகிப்தின் கோப்துக்கள், லெபனான் மரோ னைட்டு கிறிஸ்தவர்கள் போன்றவர்கள் தங்களின் அரபு அடையாளத்தை கைவிட்டு வாழ்கின்றனர். இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் மத்தியக் கிழக்கில் சாசானியப் பேரரசு மற்றும் பைசாந்தியப் பேரரசுகள் அரபுகளிடம் வீழ்ச்சியடைந்தபின், அரபு கிறித்தவர்கள், அரபு முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். இசுலாமிய படைத்தலைவர்கள் நடு ஆசியா, ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றி மக்களை இசுலாமியர்களாக மாற்றப்பட்டனர் அல்லது ஜிசியா வரி செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர்.இசுலாமியப் பொற்காலத்தின் போது, அரபுக் கிறித்தவர்கள் இசுலாமிய நாகரீகத்திற்கு பலதுறைகளில், குறிப்பாக அறிவியல் துறையில் அதிக பங்களிப்பு செய்தனர். 1850 அலெப்பே படுகொலைகள் தற்கால சிரியாவின் வடமேற்கே உள்ள அலெப்போ நகரத்தில் வாழ்ந்த அரபு கிறிஸ்தவர்களை, அரபு முஸ்லீம்கள் 1850ஆம் ஆண்டில் ஒரு கலவரத்தில் படுகொலை செய்தனர். இத்தாக்குதலில் சிரியாக் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஏழாம் பீட்டர் ஜார்வே தாக்குதல்களில் படுகாயமடைந்து ஒரு வருடம் கழித்து இறந்தார். 20 முதல் 70 பேர் வரை கலவரத்தால் இறந்தனர் மற்றும் 5,000 பேர் குண்டுவெடிப்பின் விளைவாக இறந்தனர். 1860 ஆம் ஆண்டில் லெபனான் மலை மற்றும் டமாஸ்கசில் அரபு முஸ்லீம்கள், துருஸ் மற்றும் அரபு கிறித்தவர்களிடையே நடைபெற்ற தாக்குதல்களில் பல அரபு கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். முதலில் இத்தாக்குதல்கள் லெபனான் மரோனைட்டு கிறித்தவர்கள் மற்றும் துருஸ் மக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் ஆகும்.இத்தாக்குதல்களில் 20,000 அரபு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல கிராமங்கள் மற்றும் தேவாலயங்கள் அழிக்கப்பட்டது. இதனையும் காண்க கசானித்து இராச்சியம் மேற்கோள்கள் உசாத்துணை Seth J. Frantzman, The Strength and the Weakness: The Arab Christians in Mandatory Palestine and the 1948 War, unpublished M.A thesis at The Hebrew University of Jerusalem. Itamar Katz and Ruth Kark, 'The Greek Orthodox Patriarchate of Jerusalem and its congregation: dissent over real estate' in The International Journal of Middle East Studies, Vol. 37, 2005. வெளி இணைப்புகள் Arabic Christians community Arabic Christians magazine Sample of Melkite Chant in Arabic, English, and Greek Christian Minorities in the Islamic World: No Arab Spring for Christians கிறித்தவர்கள் அராபிய மக்கள்
683215
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
குரங்கு பெடல்
குரங்கு பெடல் (Kurangu Pedal) என்பது 2024 இல் கமலா கண்ணன் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்நாடகத் திரைப்படத்தில் சந்தோசு வேல்முருகன், வி. ஆர். இராகவன், எம். ஞானசேகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்சு சார்பில் சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சஞ்சய் ஜெயகுமார், சுமீ பாஸ்கரன் ஆகியோர் தயாரித்தனர். நடிகர்கள் வரவேற்பு தி டைம்சு ஆஃப் இந்தியா வின் லோகேசு பாலச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு 5 இற்கு 3 என்று மதிப்பிட்டு, "குரங்கு பெடல் உண்மையில் அதன் நுணுக்கமான கதாபாத்திர சித்தரிப்புகளும், ஈர்க்கக்கூடிய எழுத்துடன் ஒரு ஏக்கம் நிறைந்த பயணத்தையும், வழங்க வழிவகுக்கிறது" என்று கூறினார். இந்து தமிழ் திசையின் திரைப்பட விமர்சகர் ஒருவர், "இரண்டாம் பாதியில் சில குறைபாடுகள் இருந்தாலும், அதை மறந்து இரசிக்கலாம். இவ்வளவு எளிமையான, அழகான படத்தை உருவாக்கியதில் நடிகர் சிவகார்த்திகேயன் பெருமைப்படலாம்" என்று குறிப்பிட்டதோடு, படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் என்ற மதிப்பீட்டை வழங்கினார். தி இந்து கோபிநாத் இராஜேந்திரன், இப்படம் "குழந்தைப் பருவ ஆசைகள் குறித்த சமநிலையற்ற திரைப்படம். ஆனால் மனதைத் தூண்டும் கதை" என்று கூறினார். சினிமா விகடன் விமர்சகர் ஒருவர் கலவையான விமர்சனங்களை அளித்தார். ஓடிடி பிளேயின் அனுசா சுந்தர் படத்திற்கு ஐந்தில் இரண்டரை நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு, "குரங்கு பெடல்'' பெரிய உணர்ச்சிகளை காட்டாத ஒரு படம்". என்று கூறினார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் குரங்கு பெடல் 2024 தமிழ்த் திரைப்படங்கள் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
683218
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஹக்கா நடனம்
ஹக்கா (Haka) (மாவோரி மொழி : , ; ) என்பது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மாவோரி இனக்குழுவின் கலாச்சார நடனம் ஆகும். பாரம்பரியமாக மவோரி மக்கள் தங்கள் பழங்குடியின பெருமை, வலிமை மற்றும் ஒற்றுமையைக் காட்ட ஹக்காவை நிகழ்த்துகின்றனர். மாவோரி இனக்குழுவின் முக்கிய நிகழ்வு மற்றும் சடங்குகளில் இந்த நடனம் ஆடப்படும். நிகழ்த்துக்கலை வடிவத்தைச் சேர்ந்த ஹக்கா நடனம் பெரும்பாலும் ஒரு இனக்குழுவால் நிகழ்த்தப்படுகிறது. துடிப்பான அசைவுகள் மற்றும் தாளத்துடன் கால்களை தரையில் அடித்தும் ஆக்ரோசமாக கத்தியும் இந்த நடனம் ஆடப்படுகிறது. மவோரி கலாச்சாரத்தில் பல்வேறு சமூக செயல்பாடுகளுக்காக ஹக்கா நடனம் பாரம்பரியமாக ஆண்களும் பெண்களும் நிகழ்த்தி வருகின்றனர். சிறப்பு விருந்தினர்களை வரவேற்கவும், சிறந்த சாதனைகளை கொண்டாடவும், இறுதிச் சடங்குகளிலும் இந்நடனம் நிகழ்த்தப்படுகின்றது. நியூசிலாந்து நாட்டு பள்ளிகளில் கபா ஹக்கா என்ற பெயரில் மாணவர் நடனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவோரி இனக்குழுவின் முக்கிய கலை நிகழ்ச்சி 'தே மாடாட்டினி ' என்ற பெயரில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. நியூசிலாந்து நாட்டு விளையாட்டுக் குழுக்கள் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது போட்டி தொடங்கும் முன் எதிரணியினருக்கு சவால் விடும் வகையில் ஹக்கா நடனத்தை ஆடுகின்றனர். இதன் மூலம் இந்த நடன வடிவம் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியம் 1888-89 நியூசிலாந்து நாட்டு கால்பந்து அணி சுற்றுப்பயணத்தின் போது தொடங்கியது. மேலும் 1905 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் “ஆல் பிளாக்ஸ்“ என்று அறியப்படும் ரக்பி அணியால் இந்நடனம் விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண் போர்வீரர்களின் பாரம்பரிய போர் தயாரிப்புகளுக்காக ஹக்கா தொடர்புடையது என்றாலும், ஹக்கா பொதுவாக போர் நடன வகை என்ற கருத்தும், மவோரி அல்லாதவர்களால் ஹக்காவின் தெளிவற்ற நடன அசைவுளும் மவோரி கலை அறிஞர்களால் தவறாகக் கருதப்படுகின்றன. சொற்பிறப்பியல் ஹகாவை நிகழ்த்தும் நபர்களின் குழு கபா ஹக்கா ( கபா என்றால் குழு அல்லது அணி, மேலும் தரவரிசை அல்லது வரிசை எனவும் பொருள் கொள்ளப்படும்) என குறிப்பிடப்படுகிறது. மவோரி வார்த்தையான ஹக்கா மற்ற பாலினேசிய மொழிகளுடனும் தொடர்புள்ளது. வரலாறு மற்றும் நடைமுறை கண்ணோட்டம் ஹக்கா என்பது மாவோரி கலாச்சாரத்தில் பல சடங்கு சம்பிரதாய நோக்கங்களை உள்ளடக்கிய உள்நாட்டு நடன வடிவமாகும். நாதன் மேத்யூ விளக்குவது போல், "இந்நடனம் கோசமிட்டு கத்திக்கொண்டு பாடலுடன் தோரணையாக ஆடுவது ஹக்காவின் முக்கிய பண்புகளில் ஒன்று. உடலின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி ஆக்ரோசமான ஒலியுடன் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன." மாவோரி பாரம்பரியத்தில் ஹக்காவின் தோற்றம் மவோரி பாரம்பரியத்தின் படி, ஹக்கா ஒரு படைப்புக் கதையிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. சூரியக் கடவுளான தமா-நுய்-தே-ராவுக்கு கோடைக்காலப் பணிப்பெண்ணான, ஹினே-ரௌமதி மற்றும் குளிர்காலப் பணிப்பெணான, ஹினே-டகுருவா ஆகிய இரண்டு மனைவிகள் இருந்ததாகவும் கோடை கால பணிப்பெண்னான ஹைன்-ரௌமதியின் வருகையால் இந்த ஹக்கா நடனம் உருவானதாகவும் கூறப்படுகிறது. கோடை நாட்களில் காற்றில் அலை அலையான தோற்றத்தில் வெளிப்படும் கானல் நீரினை ஹினே-ரௌமதி மற்றும் தாமா-நுய்-தே-ரா ஆகியோரின் மகன் தானே-ரோரின் ஹக்கா என்றும் நம்பப்படுகிறது. ஹைலேண்ட் என்பவரின் கருத்துப்படி, " ஹக்கா என்பது ஒரு இயற்கை நிகழ்வு வெப்பமான கோடை நாட்களில், தரையில் இருந்து வெளிப்படும் காற்றின் 'பளபளக்கும்' வளிமண்டல தோற்றமான கானல் நீராக இது உருவகப்படுத்தப்படுகிறது". வகைகள் மற்றும் செயல்பாடுகள் ஹக்கா பல்வேறு சடங்கு நோக்கங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இந்த செயல்பாடுகளில் விருந்தினர்களை வரவேற்பது (), மற்றும் இறந்தவரை வழியணுப்பும் சடங்கு (), ஆலோசனை அல்லது அறிவுறுத்தல்களை வழங்குதல் (), சுய மரியாதையை மீட்டெடுத்தல் (), எதிராளிகளை மிரட்டுதல் ( - போர் நடனம்), மற்றும் சமூக மற்றும் அரசியல் செய்திகளை பரப்புவதற்கும் () இந்நடனம் பல தருணங்களில் நிகழ்த்தப்படுகிறது. பெருபெரு என்பது ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஒரு போர் ஹக்கா நடனம் ஆகும். அதே நேரத்தில் ஹக்கா தபராஹி ஆயுதங்கள் இல்லாமல் நிகழ்த்தப்படுகிறது இது மிகவும் பொதுவான சடங்கு வடிவமாகும். டூட்டு நாகராஹு (பெருபெருவைப் போலவே ஆனால் பக்கவாட்டில் குதிப்பது) வாகடு வேவே (குதிப்பது போன்றது) மனாவா வெரா (எந்த மேடை செயல்களும் இல்லாத பொதுவாக மரணச் சடங்குடன் தொடர்புடையது) மற்றும் கயோரோரா (வெறுப்பு அல்லது ஆக்ரோச ஹக்கா) போன்ற பிற நடன வகைகளும் நிகழ்த்தப்படுகின்றன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகள் ஆரம்பகாலங்களில் நியூசிலாந்திற்கு பயணித்த ஐரோப்பியர்கள் ஹக்கா நடனமாடுபவர்களை "தீவிரமானவர்கள்" மற்றும் "கடுமையானவர்கள்" என்று விவரித்தனர். பின்னர் 1769 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தனது முதல் பயணத்தின் போது ஜேம்ஸ் குக்குடன் சென்ற ஜோசப் பேங்க்ஸ் இதனைப் பதிவு செய்தார். மேற்கோள்கள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் நடன வகைகள் நடனம்
683222
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
பந்தாய் புதிய விரைவுச்சாலை
பந்தாய் புதிய விரைவுச்சாலை (ஆங்கிலம்: New Pantai Expressway; அல்லது NPE; மலாய்: Lebuhraya Baru Pantai) என்பது தீபகற்ப மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு விரைவுச்சாலை ஆகும். 19.6-கிலோமீட்டர் (12.2-மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை, சிலாங்கூரின் தென்மேற்குப் பகுதியில், சுபாங் ஜெயாவிற்கு அருகில் உள்ள மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலைக்கு இணையாகச் செல்கிறது. அதே வேளையில், வட கிழக்கில் பங்சார் பகுதியில் தொடங்குகிறது. இந்த விரைவுச்சாலை, சுபாங் உத்தாமா சாலை (ஆங்கிலம்: Jalan Subang Utama; மலாய்: Persiaran Tujuan–PJS), கிள்ளான் லாமா சாலை (Jalan Klang Lama); பந்தாய் டாலாம் சாலை (Jalan Pantai Dalam) எனவும் முன்பு அறியப்பட்டது. பொது இந்தச் சாலை 2000 - 2004-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. கட்டுமானப் பணியின் போது, ​​2,000 குடியேற்றவாசிகளைத் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்காக 980 குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகள்; அவர்களின் பழைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே கட்டப்பட்டுத் தரப்பட்டன. இந்த விரைவுச்சாலை 30 ஏப்ரல் 2004 அன்று திறக்கப்பட்டது. சனவரி - நவம்பர் 2007-க்கு இடைப்பட்ட காலத்தில் சன்வே பிரமிட் வாகன நிறுத்த தளத்திற்கு ஒரு சிறப்புச் சரிவுப் பாதை கட்டப்பட்டது. இது டிசம்பர் 2007-இல் திறக்கப்பட்டது. சர்ச்சைகள் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் குடியிருப்புப் பகுதியில் வசித்த 50 குடியிருப்பாளர்கள், பந்தாய் புதிய விரைவுச்சாலையின் கம்போங் டத்தோ அருண் சுங்கச் சாவடியில் அமைதிப் பேரணியை நடத்தினர். அந்தச் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சுங்கவரி ஒரு சுமையாக இருப்பதால் சுங்கவரியை நிறுத்தம் செய்யக் கோரி பேரணியை நடத்தினர். அந்தப் பகுதியில் வாழ்ந்த குடியிருப்பாளர்கள், மாதத்திற்கு சராசரியாக RM 500 ரிங்கிட், கம்போங் டத்தோ அருண் சுங்கச்சாவடிக்கு மட்டும் செலவிட வேண்டியிருப்பதாகக் கண்டனம் தெரிவித்தனர். அரசு நடவடிக்கை டத்தோ அருண் சுங்கச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அவர்களின் வீடுகள் அமைந்திருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு முறையும் RM 1 ரிங்கிட் 60 சென் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். கோலாலம்பூருக்குச் செல்வதற்கு மாற்று வழி இல்லாததால், அங்குள்ள மக்கள் அடிக்கடி பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திதிற்கு உள்ளானார்கள். குடியிருப்பாளர்களின் புகார்களைத் தொடர்ந்து, 13 பிப்ரவரி 2009 அன்று, கோலாலம்பூருக்குச் செல்லும் PJS 2 சுங்கச்சாவடியில் கட்டண முறை நிறுத்தப்பட்டது. இது அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் செய்யப்பட்டது மேலும் காண்க கிள்ளான் லாமா சாலை டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் www.ijm.com www.npe.com.my சிலாங்கூர் மாநிலத்தின் சாலைகள் கோலாலம்பூர் சாலைகள்
683224
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
சைரீசு மதுகரராவ் சொளத்ரி
சைரீசு மதுகரராவ் சொளத்ரி (Shirish Madhukarrao Chaudhari)(பிறப்பு 23 மே 1959) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 முதல் மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினரான இவர், ராவேர் சட்டமன்றத் தொகுதிக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 15,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் 1959 பிறப்புகள் வாழும் நபர்கள் மகாராட்டிரத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
683225
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
யாமினி ஜாதவ்
யாமினி யசுவந்த் ஜாதவ் (Yamini Jadhav) இந்தியாவில் மகாராட்டிராவின் மும்பையினைச் சேர்ந்த சிவசேனா அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மகாராட்டிர மாநிலம் பைகுல்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்பொழுது ஜாதவ் 2024 மக்களவைத் தேர்தலில் மும்பை தெற்கு மக்களவைத் தொகுதி சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். வகித்தப் பதவிகள் 2012: பிரிகன்மும்பை மாநகராட்சியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 2019: மகாராட்டிரா சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Shivsena முகப்புப்பக்கம் 2020-09-01 at the Wayback Machine வாழும் நபர்கள் சிவ சேனா அரசியல்வாதிகள்
683228
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
சயார்சைடு
சயார்சைடு (Cyaarside) என்பது As≡C− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும். சியார்சைடு என்ற பெயராலும் இந்த அயனி அறியப்படுகிறது. இந்த எதிர்மின் அயனியில் ஆர்சனிக்கு மற்றும் கார்பனுக்கு இடையில் ஓர் முப்பிணைப்பு இடம்பெற்றிருக்கும். சயனைடு மற்றும் சயபைடு சேர்மங்களின் ஆர்சனைடு ஒப்புமையாக இச்சேர்மம் கருதப்படுகிறது. தயாரிப்பு சயனேட்டு மற்றும் பாசுபோயெத்திலோனேட்டு சேர்மங்களின் ஆர்சனிக்கு ஒப்புமையை ஆர்சாயெத்தினோலேட்டு எதிர்மின் அயனியின் C−O பிணைப்பை பிளப்பதன் மூலம் ஆக்டினைடு சயார்சைடு அணைவுச் சேர்மத்தைத் தயாரிக்கலாம். [] என்ற யுரேனியம் அணைவுச் சேர்மம் 2,2,2- கிரிப்டாண்டு ஈந்தணைவி முன்னிலையில் ஒரு மோலார் சமான [ உடன் வினைபுரிந்து சயார்சைடு ஈந்தணைவியைக் கொண்ட ஈரணு ஆக்சோ பால யுரேனியம் ஒருங்கிணைவுச் சேர்மம் உருவாகிறது. மேற்கோள்கள் ஆர்சனிக்கு சேர்மங்கள் எதிர்மின் அயனிகள்
683231
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
கூச்சாய் லாமா சாலை
கூச்சாய் லாமா சாலை அல்லது கூச்சாய் லாமா நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Kuchai Lama Road; மலாய்: Jalan Kuchai Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள முக்கிய சாலை ஆகும். கோலாலம்பூரின் பழமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாக அறியப்படுகிறது. இருப்பினும், அண்மைய காலங்களில் இந்தச் சாலை மறுசீரமைக்கப்பட்டு ஒரு விரைவுச்சாலைத் தரத்திற்கு நிலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சாலை, கோலாலம்பூர் மாநகராட்சி (Dewan Bandaraya Kuala Lumpur) (DBKL) எனும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தால் பராமரிக்கப்படுகிறது. பொது ஆகஸ்டு 2004-இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு, சனவரி 2008-இல் நிறைவடைந்தது. புதிய சாலைப் பரிமாற்ற இணைப்புகள் 28 பிப்ரவரி 2008 அன்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டன. 2010-களில், பந்தாய் புதிய விரைவுச்சாலை மற்றும் சுங்கை பீசி விரைவுச்சாலை ஆகிய விரைவுச்சாலைகளை இணைக்கும் வகையில், ஐஜேஎம் நிறுவனம் (IJM Corporation), சிறப்புச் சரிவுப் பாதைகளை உருவாக்கியது. பந்தாய் புதிய விரைவுச்சாலை பந்தாய் புதிய விரைவுச்சாலை ( New Pantai Expressway) என்பது தீபகற்ப மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு விரைவுச்சாலை ஆகும். 19.6-கிலோமீட்டர் (12.2-மைல்) நீளம் கொண்டது. சிலாங்கூரின் தென்மேற்குப் பகுதியில், சுபாங் ஜெயாவிற்கு அருகில் உள்ள மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலைக்கு இணையாகச் செல்கிறது. அதே வேளையில், வட கிழக்கில் பங்சார் பகுதியில் தொடங்குகிறது. 30 ஏப்ரல் 2004-இல் திறக்கப்பட்ட இந்த விரைவுச்சாலை, சுபாங் உத்தாமா சாலை, கிள்ளான் லாமா சாலை, பந்தாய் டாலாம் சாலை என முன்பு அறியப்பட்டது. காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிலாங்கூர் மாநிலத்தின் சாலைகள் கோலாலம்பூர் சாலைகள்
683233
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
சண்முகநாதன் சிறீபவானந்தராஜா
மருத்துவர் சிறீபவானந்தராஜா சண்முகநாதன் (Dr. Sribhavanandaraja Shanmuganathan, 18 சூலை 1960) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மருத்துவ நிர்வாகியும் ஆவார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் 1960 பிறப்புகள் வாழும் நபர்கள் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழ் மருத்துவர்கள்
683234
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ஆர்னெசைட்டு
ஆர்னெசைட்டு (Hörnesite) என்பது Mg3(AsO4)2·8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மக்னீசியத்தைக் கொண்டிருக்கும் ஆர்சனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. விவியனைட்டு கனிமக் குழுவில் இது உறுப்பினராக உள்ளது. மேலும் இக்கனிமம் அன்னாபெர்கைட்டு அல்லது எரித்ரைட்டில் முடிவடையும் மக்னீசியத்திற்குப் பதிலாக நிக்கல் அல்லது கோபால்ட்டு தனிமத்தைக் கொண்ட கனிமத் தொடரின் மெக்னீசியம் முனைப்புள்ளியை உருவாக்குகிறது. மேற்கோள்கள் ஆர்சனேட்டு கனிமங்கள் மக்னீசியக் கனிமங்கள் கனிமங்கள் விவியனைட்டு குழு
683236
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE.%20%E0%AE%B0%E0%AE%BE.%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
மா. ரா. அரசு
மா. ரா. அரசு (Maa. Raa. Arasu, 1949 - 6. செப்டம்பர். 2020) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர், பேராசிரியர் ஆய்வளர், இதழியலாளர், பேச்சாளர் ஆவார். இவர் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனாரின் மகனாவார். 2024 நவம்பரில் இவரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கி, பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது. கல்வி சிறுவயதிலிருந்து தன் தந்தையாரால் தமிழ் இலக்கியங்களும், வரலாறும் அரசுக்கு அறிமுகமாயின. அதில் ஆர்வமும் உண்டானது. 1975 ஆண்டு தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். வ. உ. சிதம்பரம்பிள்ளை குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். தொழில் பச்சையப்பன் அறக்கட்டளை காஞ்சிபுரத்தில் நடத்திய கல்லூரியில் திருத்துநர் பணியில் இணைந்தார். அரசுக்கு தன் அண்ணன் இளங்கோவன் வழியாக இதழியல் அறிமுகம் பெற்றார். அவரின் இதழியல் ஆய்வுகளுக்கு உதவியாக இருந்தார். இதனால் இதழியலில் ஆர்வம் கொண்டார். 1981 ஆம் ஆண்டு பணி மாறுதல் காரணமாக அரசு தஞ்சாவூருக்குச் சென்றார். பின்னர் 1983 இல் தஞ்சாவூரிலும் சென்னையிலும் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் என்ற அமைப்பை நிறுவி இதழியல் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அதன் மூலம் இதழியலாளர்கள் குறித்த சொற்பொழிவுகளும் கருத்தரங்குகளும் நடத்தபட்டன. இவாறு பனோறு கருத்தரங்குகளை நடத்தினார். அந்த கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூல்களாக வெளியிட்டார். மேற்கோள்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் 2020 இறப்புகள் ஆய்வாளர்கள் 1949 பிறப்புகள்
683238
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
நெழிலோவைட்டு
நெழிலோவைட்டு (Nezhilovite) என்பது PbZn2(Mn4+Ti4+)2Fe8O19 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிளம்பைட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் பெர்மனெக்கு மற்றும் பலர் நெழிலோவைட்டைக் கண்டுபிடித்தனர். P63/mmc என்ற இடக்குழுவில் a = 5.849 Å, c = 22.809 Å Z=2 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் அறுகோணப் படிகத் திட்டத்தில் கருப்பு நிறப் படிகங்களாக நெழிலோவைட்டு கனிமம் படிகமாகிறது. ஒளியியல் ரீதியாக திசை மாறுபாட்டுப் பண்பு கொண்டதாகவும், பாரா காந்தப் பண்பும், இருபிரதிபலிப்பும் கொண்ட பண்புகளைக் கொண்டுள்ளது. மாசிடோனாவின் பெலகோனியப் பகுதியில் காணப்படும் ஒருவகை உருமாறிய பாறைகளில் இக்கனிமம் காணப்படுகிறது. மேற்கோள்கள் ஈயக் கனிமங்கள் துத்தநாகக் கனிமங்கள் மாங்கனீசு கனிமங்கள் தைட்டானியம் கனிமங்கள் இரும்புக் கனிமங்கள் கனிமங்கள்
683240
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கசானித்து இராச்சியம்
கசானித்துகள் (Ghassanids), தெற்கு அரேபியாவில் வாழ்ந்த அரேபிய இனக்குழுவினர் ஆவார். கசானித்துகள், கிபி 3ஆம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியில் குடியேறி, பைசாந்தியப் பேரரசின் கீழ் சிற்றரசை நிறுவினர். எலனியக் காலத்தில் கசானித்துகள் உள்ளுர் சால்டிய கிறித்தவர்களுடன் கலந்து கிறித்தவ சமயத்தைப் பின்பற்றினர். ரோம-பாரசீகப் போர்களில் கசானித்துகள், பைசாந்தியர்களுக்கு ஆதரவாக, சாசானியப் பேரரசை எதிர்த்துப் போரிட்டனர். ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்த கசானித்துகள், 638ஆம் ஆண்டில் ராசிதீன் கலீபாக்களால் வீழ்த்தப்பட்டனர். இதனால் கசானித்துகளில் சில குழுவினர் இசுலாமிய சமயத்தில் சேர்ந்தனர். பெரும்பாலான கசானித்துகள் மெல்கைட்டு மற்றும் சிரியாக் கிறிஸ்தவர்களைப் பின்பற்றினர். இம்மக்கள் தற்கால சிரியா, ஜோர்டான், இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் லெபனான் நாடுகளில் வாழ்கின்றனர். இதனையும் காண்க அரபு கிறிஸ்தவர்கள் மேற்கோள்கள் உசாத்துணை Millar, Fergus: "Rome's 'Arab' Allies in Late Antiquity". In: Henning Börm - Josef Wiesehöfer (eds.), Commutatio et Contentio. Studies in the Late Roman, Sasanian, and Early Islamic Near East. Wellem Verlag, Düsseldorf 2010, pp. 159–186. அராபிய மக்கள் கிறித்தவர்கள்
683241
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
புசாவல் சட்டமன்றத் தொகுதி
புசாவல் சட்டமன்றத் தொகுதி (Bhusawal Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி ஜல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புசாவல், ராவேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இந்த மாவட்டத்தில் சோப்தா, ராவர், ஜாம்னர் மற்றும் முக்தைநகர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், அருகிலுள்ள புல்டாணா மாவட்டத்தில், மல்காப்பூர் என்ற சட்டமன்றத் தொகுதியும் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2019 மேற்கோள்கள் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர அரசியல் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683243
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
இரேனியம் மூவாக்சைடு புளோரைடு
இரேனியம் மூவாக்சைடு புளோரைடு (Rhenium trioxide fluoride) என்பது ReO3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தூய்மையற்ற மாதிரிகள் நிறத்தில் தோன்றினாலும், இக்கனிமம் வெள்ளையாகக் காணப்படுகிறது. பதங்கமாகும் பண்பும் காந்தவியல் பண்பும் கொண்டு திண்மநிலையில் உள்ளது. இரேனியத்தின் சில ஆக்சிபுளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று இரேனியம் ஈராக்சைடு முப்புளோரைடு ReO2F3 மற்றொரு முக்கியமான சேர்மமாகும். இச்சேர்மத்திற்கான பயன்பாடுகள் இல்லை என்றாலும் இது ஒரு மூவாக்சைடு புளோரைடு சேர்மத்திற்கு ஓர் அரிய உதாரணமாகும். மேலும் இது ஒரு சில கல்வி ஆராய்ச்சி ஆர்வத்தை கொண்டுள்ளது. தயாரிப்பு இரேனியம் மூவாக்சைடு சேர்மத்தை புளோரினேற்றம் செய்து இரேனியம் மூவாக்சைடு புளோரைடு தயாரிக்கப்படுகிறது.: 2 ReO3 + F2 → 2ReO3F இலூயிசு காரங்களுடன் (L) இச்சேர்மம் ReO3FL2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கூட்டுசேர் பொருட்களை உருவாக்குகிறது. எ.கா., L = டை எத்தில் ஈதர் மற்றும் அசிட்டோநைட்ரைல் போன்றவையாகும். கட்டமைப்பும் தொடர்புடைய சேர்மங்களும் எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகளின்படி, இச்சேர்மம் இரண்டு புளோரைடு மற்றும் இரண்டு ஆக்சைடு பால ஈந்தணைவிகளால் இணைக்கப்பட்ட எண்முக மறு மையங்களைக் கொண்ட ஒரு திருகுசுழல் சங்கிலி அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. ReO3F சேர்மத்திற்கு மாறாக, TcO3F மற்றும் MnO3F ஆகிய சேர்மங்கள் எளிமையான கட்டமைப்புகளுடன் படிகமாகின்றன. மாங்கனீசு சேர்மம் ஒரு நான்முகி ஒருமமாக படிகமாகிறது. தெக்கினீசியம் சேர்மமான TcO3F புளோரைடு பாலங்களுடன் இருமங்களாகப் படிகமாகிறது. இரேனியம் மூவாக்சைடு புளோரைடின் கட்டமைப்போடு முரண்படுவது இரேனியம் மூவாக்சைடு குளோரைடு ஆகும். இது ஒரு ஒருமமாகும். மேற்கோள்கள் இரேனியம் சேர்மங்கள் புளோரைடுகள் தாண்டல் உலோக ஆக்சைடுகள்
683244
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நான்கு வங்காளக் கோயில்கள்
நான்கு வங்காளக் கோயில்கள் (Char Bangla Temples), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள பாரா கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில்கள் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் இந்நான்கு கோயிகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இக்கோயில்கள் நத்தோரின் இராணி பவானியால் கிபி 18ஆம் நூற்றாண்டில நிறுவப்பட்டது. நான்கு கோயில்களின் படக்காட்சிகள் கோயில்கள் சிற்பக்கலை மேற்கோள்கள் மேற்கு வங்காள இந்துக் கோயில்கள்
683257
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம்
திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம் (Tiruparankundram railway station, நிலைய குறியீடு: TDN) என்பது தென்னக இரயில்வே மண்டலத்தின் மதுரை இரயில்வே கோட்டத்தில் உள்ள NSG-5 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் 1876 சனவரி முதல் நாளன்று துவக்கபட்டது. செயல்திறனும் வருவாயும் 2022-23 நிதியாண்டில், நிலையத்தின் ஆண்டு வருவாய் என்றும் தினசரி வருவாய் என்று இருந்தது. அதே நிதியாண்டில், ஒரு ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 227,855 ஆகவும், தினசரி பயணிகளின் எண்ணிக்கையானது 624 ஆகவும் இருந்தது. அதேவேளை, நாளொன்றுக்கு வந்து சென்றவர்கள் எண்ணிக்கை 738 ஆக பதிவாகியுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மதுரையிலுள்ள தொடருந்து நிலையங்கள் மதுரை தொடருந்து கோட்டம்
683258
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
யசுவந்த் ஜாதவ்
யசுவந்த் ஜாதவ் (Yashwant Jadhav) என்பவர் இந்திய அரசியல்வாதியும், மகாராட்டிராவில் மும்பையினைச் சேர்ந்த சிவசேனா தலைவரும் ஆவார். இவர் பெருநகர மும்பை மாநகராட்சி சபையின் தலைவராக உள்ளார்.மாநகராட்சியில் நிலைக்குழு, சந்தை மற்றும் தோட்டக் குழு, குடிமைப் பணிகள் குழு போன்ற பல குழுக்களில் பணியாற்றியுள்ளார். பதவிகள் வகித்தவர் 1997: பெருநகர மும்பை மாநகராட்சியில் உறுப்பினர் 2007: பெருநகர மும்பை மாநகராட்சியில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார் 2008: சந்தை மற்றும் தோட்டக் குழுவின் தலைவர் 2011 முற்பகுதி, துணைத் தலைவர், சிவசேனா 2017: பெருநகர மும்பை மாநகராட்சியில் உறுப்பினர் 2017: பெருநகர மும்பை மாநகராட்சியில் சபைத் தலைவர் 2018: பெருநகர மும்பை மாநகராட்சியில் நிலைக்குழுத் தலைவர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிவசேனா அதிகாரப்பூர்வ இணையதளம் 14 August 2015 at the Wayback Machine சிவ சேனா அரசியல்வாதிகள் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் வாழும் நபர்கள்
683259
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
மவுச்சரைட்டு
மவுச்சரைட்டு (Maucherite) என்பது Ni11As8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொதுவாக செம்பு, இரும்பு, கோபால்ட்டு, ஆண்டிமனி மற்றும் கந்தகம் ஆகியவை அசுத்தங்களாக இதனுடன் கலந்துள்ளன. சாம்பல் முதல் சிவப்பு வெள்ளி வெள்ளை நிறங்களில் காணப்படும் நிக்கல் ஆர்சனைடு கனிமமாக இது கருதப்படுகிறது. நாற்கோண படிக அமைப்பில் படிகமாகும் இக்கனிமம் மற்ற நிக்கல் ஆர்சனைடு மற்றும் சல்பைடு தாதுக்களுடன் நீர் வெப்ப இழைப் பகுதிகளில் தோன்றுகிறது. 5 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் 7.83 என்ற ஒப்படர்த்தி அளவும் கொண்டு உலோகத்தன்மையுடன் ஒளிபுகா படிகமாக பண்புகளை வெளிப்படுத்துகிறது. இதன் அலகு செல் சமச்சீர் குழு P41212 அல்லது P43212 ஆகும். 1913 ஆம் ஆண்டில் செருமனியின் ஈசுலெபனில் மௌச்சரைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. செருமன் கனிம சேகரிப்பாளரான வில்லெம் மௌச்சரின் (1879-1930) நினைவாக பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் மவுச்சரைட்டு கனிமத்தை Muc என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் Mindat localities நிக்கல் கனிமங்கள் ஆர்சனைடு கனிமங்கள் கனிமங்கள் நாற்கோணவமைப்புக் கனிமங்கள்
683262
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இராமெல்சுபெர்கைட்டு
இராமெல்சுபெர்கைட்டு (Rammelsbergite) என்பது NiAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நிக்கல் ஆர்சனைடு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. உலோக வெள்ளி நிறம் முதல் வெள்ளை, சிவப்பு நிறங்களில் நேர்ச்சாய்சதுரப் பட்டக படிகங்களாக உருவாகிறது. மேலும் பொதுவாக மிகப்பெரிய திரட்சிகளாக இருக்கும். 5.5 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் 7.1 என்ற ஒப்படர்த்தி அளவும் கொண்டுள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இராமெல்சுபெர்கைட்டு கனிமத்தை Rmb என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. முதன்முதலில் 1854 ஆம் ஆண்டில் செருமனியின் சாக்சோனியில் உள்ள சினீபெர்க் மாவட்டத்தில் இராமெல்சுபெர்கைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. செருமன் வேதியியலாளர் மற்றும் கனிமவியலாளர், கார்ல் பிரடெரிக் ஆகசுட்டு இராமெல்சுபெர்கு (1813-1899) என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. நடுத்தர வெப்பநிலை இழை பகுதிகளில் சுகூட்டெருடைட்டு, சாப்லோரைட்டு, லோலிங்கைட்டு, நிக்கோலைட்டு, தாயக பிசுமத், தாயக வெள்ளி, அல்கோடோனைட்டு, தோமைகைட்டு மற்றும் யுரேனைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்த ஒரு நீர் வெப்ப கனிமமாகத் தோன்றுகிறது. மேற்கோள்கள் Mineral Galleries நிக்கல் கனிமங்கள் ஆர்சனைடு கனிமங்கள் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
683265
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88
ஒட்டகப் படை
ஒட்டகப்படை (Camel cavalry) என்பது ஒட்டகங்களை போக்குவரத்து வழிமுறையாகப் பயன்படுத்தும் படைத்துறைக்கான பொதுவான பெயர். சில நேரங்களில் போர்வீரர்கள் ஒட்டகத்தின் முதுகில் இருந்து ஈட்டிகள், வில்–அம்பு அல்லது துப்பாக்கிகள் மூலம் சண்டையிட்டனர். ஒட்டகப் படை மத்திய கிழக்கில் வரலாறு முழுவதும் பாலைவனப் போரில் ஒரு பொதுவான அங்கமாக இருந்தது. வழக்கமான குதிரைப் படையின் குதிரைகளை விட வறண்ட சூழலில் வேலை செய்வதற்கும் உயிர்வாழ்வதற்கும் இவை மிகவும் பொருத்தமானவையாக இருந்தன. எரோடோட்டசின் கூற்றுப்படி ஒட்டகத்தின் வாசனை பிடிக்காமல் குதிரைகள் மிரண்டு ஓடும் என்பதால் திம்ப்ரா போரில் அகாமனிசியர்கள் பெர்சியர்களின் குதிரைப்படைக்கு எதிராக ஒட்டகங்களை பயன்படுத்தினர். ஆரம்பகால வரலாறு அரபு மன்னர் கிண்டிபு என்பவரால் ஒட்டகம் முதலில் இராணுவத்திற்குப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. கிமு 853 இல் கார்கார் போரில் 1,000 ஒட்டகங்களை ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. கிமு 547இல் சைரசு மற்றும் லிடியாவின் கிரீசசு ஆகியோருக்கு இடையே நடந்த திம்ப்ரா போரில் இவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செனபோனின் கூற்றுப்படி, சைரசின் படை எண்ணிக்கையில் ஒட்டகப் படை குதிரைப்படைகளைவிட அதிகமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாக குதிரைப்படையாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஒட்டகங்களின் வாசனையும் தோற்றமும் லிடியாவின் குதிரைப்படையை பீதியடையச் செய்ததிலும், போரை சைரசுக்கு சாதகமாக மாற்றியதிலும் முக்கியமானதாக இருந்தது என்று கூறப்பட்டது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் போது பாரசீக மன்னர் முதலாம் செர்கஸ் தனது பெரும் இராணுவத்தில் ஏராளமான அரபு கூலிப்படையினரை -அம்புகளுடன் ஒட்டகங்களில் ஏற்றப்பட்டனர். லிபிய தேரோட்டிகளின் ஒரு பெரிய படை உட்பட அரபு ஒட்டகப் படை இருபதாயிரம் என்ற எண்ணிக்கை வரை இருந்ததாக எரோடோட்டசு குறிப்பிடுகிறார். அரேபியா மற்றும் சிரியாவின் நாடோடி பழங்குடியினரிடமிருந்து பணியமர்த்தப்பட்ட, பாரசீக இராணுவ சேவையில் சேர்ந்த கூலிப்படையினர் ஒட்டகத்தின் மீது ஏறி சண்டையிடும் வில்லாளர்களாக மாறினர். சில சமயங்களில் ஒரு ஒட்டகத்திற்கு இருவர் சவாரி செய்தனர்.. எரோடியனின் கூற்றுப்படி, பார்த்திய மன்னர் நான்காம் ஆர்டபானஸ் ஈட்டிகளுடன் கூடிய கவச வீரர்களைக் கொண்ட ஒட்டப் பிரிவைப் பயன்படுத்தினார். உரோமானியப் பேரரசு 2ஆம் நூற்றாண்டில் அரேபிய எல்லையில் ஒட்டகச் சவாரி செய்பவர்களைப் பயன்படுத்தியது. இவற்றில் முதலாவது, பல்மைராவிலிருந்து பேரரசர் திராயானின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். உரோமானியப் பேரரசின் பிற்பகுதியில் அரபு ஒட்டகத் துருப்புக்கள் பாதுகாப்பிற்காகவும், பாலைவனக் காவல் மற்றும் சாரணப் பணிகளுக்காகவும் பணியமர்த்தப்பட்டன. பாரசீக பாணியில் நீண்ட வாள்கள், வில்கள் மற்றும் கத்திகள் ஆகியவை சாதாரண ஆயுதங்களில் அடங்கும். அறபுத் தீபகற்பத்தில் இசுலாசுத்திற்கு முந்தைய நாகரிகங்களால் ஒட்டகம் ஒரு சுமைதூக்கியாகப் பயன்படுத்தப்பட்டது. முகம்மது நபி மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் ஆரம்பப் படையெடுப்புகளில் ஒட்டகங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, அரேபியர்கள் தங்கள் சாசானிய மற்றும் பைசாந்திய எதிரிகளை முறியடிக்க ஒட்டகப் படையைப் பயன்படுத்தினர். சீன பௌத்த யாத்ரீகர் சுவான்சாங்கின் கூற்றுப்படி கோக் துருக்கியர்கள் ஒட்டகப் படையைப் பயன்படுத்தினர். நவீன யுகம் எகிப்து மற்றும் சிரியாவில் தனது பிரெஞ்சு படையெடுப்பிற்காக நெப்போலியன் ஒரு ஒட்டகப் படையை பயன்படுத்தினார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும், ஒட்டகத் துருப்புக்கள் பிரிட்டன், பிரெஞ்சு, ஜெர்மன், எசுப்பானியா மற்றும் இத்தாலிய காலனித்துவப் படைகளில் பாலைவனக் காவல் மற்றும் ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய பிரிவுகளின் வழியில் வந்தவர்கள் இன்றும் நவீன மொராக்கோ, எகிப்திய படைகள் மற்றும் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக உள்ளனர். 1898 ஆம் ஆண்டு ஓம்துர்மன் போரில் பிரிட்டிஷ் ஆதரவு எகிப்திய ஒட்டகப் படை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. முதலாம் உலகப் போருக்கு முன்னும் பின்னும் உதுமானிய இராணுவம் ஒட்டகப் படைகளை அதன் ஏமன் மற்றும் ஹெஜாஸ் படைகளின் ஒரு பகுதியாக பராமரித்தது. இத்தாலியர்கள் தங்கள் இத்தாலிய சோமாலியாவில் துபாத் ஒட்டக துருப்புக்களைப் பயன்படுத்தினர். எசுப்பானிய மொராக்கோ காலனித்துவ அதிகாரிகள், பாதுகாக்கப்பட்ட மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளூரில் சேர்த்த ஒட்டகப் படைகளை, முக்கியமாக 1930 முதல் 1956 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரில் எல்லை ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தினர். ஜோர்டானிய பாலைவன ரோந்துப் படை இன்றும் ஒட்டகங்களைப் பயன்படுத்துகிறது. 1900 ஆம் ஆண்டில் பாக்சர் கிளர்ச்சியின் போது சீனா, சோமாலிலாந்து போரின் போது 1902 முதல் 1904 வரை சோமாலிலாந்திலும், 1915 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின் மத்திய கிழக்கிலும் எகிப்திலும் போராடிய பிகானேர் ஒட்டகப் படை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவை பிகானேர் இராச்சியம் பராமரித்தது. அங்கு அவர்கள் சூயஸ் கால்வாய் மீதான போரின் போது துருக்கியப் படைகளை ஒட்டகப் படைகளைக் கொண்டு அதை அழித்தனர். அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த ஜெய்சல்மேர் சமஸ்தானத்தின் துணைப் பாதுகாப்புப் படைகளும் 1948 இல் ஒட்டகத்தில் ஏற்றப்பட்ட பாதுகாப்பு படைப்பிரிவை நிறுவின. இவை 1947-1948 இன் இந்திய-பாகிஸ்தான் போரின் போது போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. 1951 ஆம் ஆண்டு உள்ளூர் இராஜஸ்தானி படைகள் இந்திய இராணுவத்தின் காலாட்படை படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டபோது இரண்டு ஒட்டகப் பிரிவுகளும் இந்திய இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டன. மேலும் இந்த படைப்பிரிவில் அதன் 13 வது பட்டாலியனாக இணைக்கப்பட்டன. 1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் படைகள் பிக்கானேர் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் போர் நிறுத்தத்திற்கு முன்னும் பின்னும் பேச்சுவார்த்தை நடத்த பயன்படுத்தப்பட வேண்டிய பகுதிகளுக்குள் ஊடுருவி அதைக் கைப்பற்றுவதைத் தடுத்த படைகளால் அவை போக்குவரத்து மற்றும் சண்டை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்டன. பல இந்திய இராணுவ ஒட்டகங்களும் 1965 போருக்குப் பின்னர் எல்லை பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டன.1967 ஆம் ஆண்டில், ஒரு ஒட்டகப் பீரங்கி படைப்பிரிவு, உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில், 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரில் ஒட்டகங்கள் மீண்டும் தரைப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் ப்டை வீரர்களால் பயன்படுத்தப்பட்டன. இறுதியாக 1975இல் இந்திய ராணுவம் ஒட்டகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியது. இராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள தார்ப் பாலைவனத்தின் தொலைதூரப் பகுதிகளில் ரோந்து செல்வதற்கு எல்லை பாதுகாப்பு படையில் ஒட்டகங்கள் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டகங்கள் 5 முதல் 6 வயதுக்கு இடையில் வாங்கப்பட்டு ஜோத்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் எல்லைப்புற தலைமையகத்தில் உள்ள ஒட்டகப் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இவைகள் 15-16 ஆண்டுகள் பணியாற்றுகிறன. 21 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றன. எல்லைப் பாதுகாப்புப் படை பயன்படுத்தும் ஒட்டகங்கள் மூன்று வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. 1976 முதல் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் ஆண்டுதோறும் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டகக் குழு பங்கேற்கிறது. 1986 முதல் 1989 வரை அதன் தலைமை இயக்குநராக இருந்த கே. எஸ். ரத்தோர் ஒட்டக இசைக்குழுவின் திறன்களை மேம்படுத்தினார். ஒட்டகக் குழுவில் இரண்டு குழுக்கள் உள்ளன. ஒன்று எல்லைக் காவலர்களால் சவாரி செய்யப்படும் ஒட்டகங்கள், மற்றொன்று எல்லை பாதுகாப்பு படை ஒட்டகக் குழு, இதில் ஒட்டகங்கள் நடந்து செல்லும் இசைக்கலைஞர்களுடன் நடந்து செல்கின்றன. ஒட்டகக் குழுவின் அணிவகுப்பின் போது இந்த இரண்டு கூறுகளும் ஒன்றாக செயல்படுகின்றன. இந்தக் குழுவில் பொதுவாக 90 ஒட்டகங்கள் உள்ளன . மேற்கோள்கள் இராணுவ விலங்குகள் படைத்துறை
683269
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
ஆய்லர் வரைபடம்
ஆய்லர் வரைபடம் (Euler diagram) என்பது கணங்களையும் அவற்றின் உறவுகளையும் குறிக்கும் ஒரு வரைபட வழிமுறையாகும். குறிப்பாக, இது சிக்கலான படிநிலைகளையும், ஒன்றுடனொன்று மேற்கவிந்த வரையறைகளை விளக்குவதற்கு பயன்படுகிறது. இவ்வரைபடங்களும் கணங்களின் மற்றொரு வரைபட நுட்பமான வென் வரைபடங்கள் போன்றவையே. வெவ்வேறு கணங்களுக்கு இடையிலான அனைத்து சாத்தியமான உறவுகளையும் காட்டும் வென் வரைபடங்களைப் போலல்லாமல், ஆய்லர் வரைபடங்கள் பொருத்தமான உறவுகளை மட்டுமே காட்டுகின்றன. முதன்முதலில் சுவிட்சார்லாந்து நாட்டுக் கணிதவியலாளர் லியோனார்டு ஆய்லர் (1707-1783) என்பவரால் "ஆய்லேரிய வட்டங்கள்" பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில், வென் வரைபடங்களும் ஆய்லர் வரைபடங்களும் 1960 களின் புதிய கணித இயக்கத்தின் ஒரு பகுதியாக கணக் கோட்பாட்டில் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் இவ் வரைபடங்கள் வாசிப்பு, நிறுவனங்கள் மற்றும் வணிகத்துறை போன்ற பிற பாடத்திட்டத் துறைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்லர் வரைபடங்கள் இரு பரிமாண தளத்தில் எளிமையான மூடிய வடிவங்களைக் கொண்டுள்ளன; ஒவ்வொன்றும் ஒரு கணம் அல்லது ஒரு வகையைச் சித்தரிக்கிறது. இந்த வடிவங்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று மேற்கவின்றன என்பதைக் கொண்டு கணங்களுக்கு இடையிலான உறவுகளைக் காட்டுகின்றன. ஒவ்வொரு வளைவும் தளத்தை இரண்டு பகுதிகளாக அல்லது "மண்டலங்களாக"ப் பிரிக்கிறது; வளைவின் உட்புறம், கணத்தின் உறுப்புகளைக் குறிக்கிறது; வெளிப்புறம், அக் கணத்திலமையாத உறுப்புகளையும் குறிக்கிறது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத வளைவுகள் பொதுவான கூறுகள் இல்லாத சேர்ப்பிலாக் கணங்களைக் குறிக்கின்றன. ஒன்றுடன் ஒன்று மேற்கவிந்திருக்கும் இரண்டு வளைவுகள், பொதுவான உறுப்புகளைக் கொண்டுள்ள வெட்டும் கணங்களைக் குறிக்கின்றன. இரண்டு வளைவுகளுக்கும் பொதுவான பகுதியானது அவை குறிக்கும் இரு கணங்களுக்கும் பொதுவான உறுப்புகளைக் கொண்ட கணத்தைக் குறிக்கும். ஒரு வளைவுக்குள் முழுவதுமாக உள்ளமைந்த மற்றொரு வளைவானது முந்தைய வளைவு குறிக்கும் கணத்தின் உட்கணத்தைக் குறிக்கிறது. வென் வரைபடங்கள், ஆய்லர் வரைபடங்களின் கட்டுப்படுத்தப்பட்ட வடிவமாக அமைகின்றன. ஒரு வென் வரைபடம் அதன் n வளைவுகளுக்கு இடையே சாத்தியமான அனைத்து 2n அனைத்து மேற்கவிந்த மண்டலங்களையும் கொண்டிருக்க வேண்டும்; இம் மண்டலங்கள், அந்த வென் வரைபடத்திலுள்ள உறுப்பு கணங்களின் சேர்க்கை/விலக்கலின் அனைத்து சேர்க்கைகளையும் குறிக்கின்றன. ஆய்லர் படங்களிலிலிருந்து மாறுபட்டு, வென் படங்களில் கணங்களின் பகுதிகளாக அமையாத இடங்கள் கருப்பு வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன; உறுப்புக்களாக அமைந்திருக்கும் பண்பானது மேற்கவிதல் மூலமாகவும், வண்ணங்கள் மூலமாகவும் காட்டப்படுகின்றன. ஆய்லர்/வென் வரைபடங்களுக்கு இடையிலான தொடர்பு வென் வரைபடங்கள், ஆய்லர் வரைபடங்களின் கட்டுப்படுத்தப்பட்ட வடிவமாக அமைகின்றன. ஒரு வென் வரைபடம் அதன் n வளைவுகளுக்கு இடையே சாத்தியமான அனைத்து 2n அனைத்து மேற்கவிந்த மண்டலங்களையும் கொண்டிருக்க வேண்டும்; இம் மண்டலங்கள், அந்த வென் வரைபடத்திலுள்ள உறுப்பு கணங்களின் சேர்க்கை/விலக்கலின் அனைத்து சேர்க்கைகளையும் குறிக்கின்றன. ஆய்லர் படங்களிலிலிருந்து மாறுபட்டு, வென் படங்களில் கணங்களின் பகுதிகளாக அமையாத இடங்கள் கருப்பு வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன; உறுப்புக்களாக அமைந்திருக்கும் பண்பானது மேற்கவிதல் மூலமாகவும், வண்ணங்கள் மூலமாகவும் காட்டப்படுகின்றன. எடுத்துக்கொள்ளப்படும் கணங்களின் எண்ணிக்கை மூன்றைத் தாண்டினால், வென் வரைபடங்கள் ஆய்லர் வரைபடங்களைவிடச் சிக்கலானவையாகி விடுகின்றன. இரு வரைபடங்களுக்குமான வேறுபாட்டை விளக்கும் எடுத்துக்காட்டு: எடுத்துக்கொள்ளப்படும் கணங்கள்: இம்மூன்று கணங்களுக்கான ஆய்லர், வென் வரைபடங்கள்: மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Euler Diagrams. Brighton, UK (2004).What are Euler Diagrams? வரைபடங்கள் கணக் கோட்பாடு
683270
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D
நோனாகோசேன்
நோனாகோசேன் (Nonacosane) என்பது C29H60 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். நேர்ச்சங்கிலி ஐதரோகார்பன் சேர்மமான இதன் அமைப்பு வாய்ப்பாடு CH3(CH2)27CH3 என்று எழுதப்படுகிறது. நோனாகோசேன் சேர்மத்திற்கு 1,590,507,121 கட்டமைப்பு மாற்றியன்கள் உள்ளன. நோனாகோசேன் சேர்மம் இயற்கையாகவே தோன்றுகிறது. ஓர்கியா லுகோசுடிக்மா எனப்படும் அந்துப்பூச்சி இன்த்தின் இனக்கவர்ச்சி இயக்கு நீரின் ஓர் அங்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பெண் அனோபிலிசு சுடீபன்சி கொசு உட்பட பல பூச்சிகளின் இரசாயன தகவல் பரிமாற்றத்தில் இச்சேர்மம் ஒரு பங்கு வகிக்கிறது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. பல அத்தியாவசிய எண்ணெய்களில் நோனாகோசேன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை செயற்கையாகவும் தயாரிக்க முடியும். மேற்கோள்கள் ஆல்கேன்கள் பூச்சி பெரமோன்கள்
683277
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
கூச்சாய் லாமா
கூச்சாய் லாமா (மலாய்; ஆங்கிலம்: Kuchai Lama) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் உள்ள ஒரு புற நகரப் பகுதியாகும். கிள்ளான் லாமா சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதி, கோலாலம்பூரில் உருவாகப்பட்ட குடியிருப்பு வாழ்விடங்களில் மிகப் பழைமையானவற்றுள் ஒன்றாக அறியப்படுகிறது. தற்போது இங்கு வெளிநாட்டவர்கள் மிக அதிக அளவில் வசிக்கிகின்றனர். சட்டப்பூர்வ ஆவணங்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்; அல்லது ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்கள் இங்கு அதிகமானோர் வாழ்கின்றனர். அதன் காரணமாக இந்த இடம் வெளிநாட்டினரின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பொது இந்தப் புறநகர் கோலாலம்பூர் மாநகர மையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் இந்தப் புறநகர், தாமான் தேசா, பந்தாய் டாலாம், தாமான் ஓயூஜி மற்றும் சாலாக் செலாத்தான் ஆகிய பகுதிகளுக்கு அருகிலும் உள்ளது. அஜினோமோத்தோவின் மலேசிய ஆலை இங்கு அமைந்துள்ளது. கூச்சாய் லாமா, கோலாலம்பூர் நகர மையத்திற்கும் பெட்டாலிங் ஜெயாவிற்கும் இடையே செழிப்பான வணிக நடவடிக்கைகளைக் கொண்டுள்ள புறநகர்ப் பகுதியாக விளங்குகிறது. இந்த இடம் பள்ளிகள், வங்கிகள், உணவகங்கள் போன்ற முழுமையான வசதிகளைக் கொண்டுள்ளது. மற்றும் பல உணவகங்களும் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் இங்கு சீன மக்கள் பெரும்பான்மையானவர்களாக வசித்தாலும்; வெளிநாட்டவர்களின் நடமாட்டம் மிகுதியாகவே உள்ளது. வளர்ச்சியடைந்த போக்குவரத்தின் காரணமாக, 1980-ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் குடியேறுவதற்கு பொதுமக்கள் விரும்புகின்றனர். முதல் உயர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட பிறகு, மற்ற உயர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களும் கட்டப்பட்டன. இப்பகுதியில் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கூச்சாய் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 1,400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. சாலைகள் கூச்சாய் லாமா புறநகர்ப்பகுதி, கோலாலம்பூர் நகர மையம், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, சா ஆலாம் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் 8 விரைவுச் சாலைகளைக் கொண்டுள்ளது. இஸ்மார்ட் சுரங்கப்பாதை மலேசிய கூட்டரசு சாலை 2</p> பந்தாய் புதிய விரைவுச்சாலை கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை பெஸ்ராயா விரைவுச்சாலை கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை மாஜு விரைவுச்சாலை சா ஆலாம் விரைவுச்சாலை (Shah Alam Expressway) (KESAS) விரைவுத் தொடருந்து சேவைகள் கூச்சாய் லாமாவிற்கு ​​கிளானா ஜெயா வழித்தடத்தின் தொடருந்து சேவைகள் உள்ளன. தவிர புத்ராஜெயா வழித்தடத்தின் சேவையும் உள்ளது. இந்த வழித்தடத்தில் கூச்சாய் எம்ஆர்டி நிலையம் உள்ளது. இந்த நிலையம் 2023-ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் தொடங்கியது. காட்சியகம் மேற்கோள்கள் மேலும் காண்க தித்திவங்சா கம்போங் கெரிஞ்சி லெம்பா பந்தாய் செத்தியாவங்சா பங்சார் பார்க் பந்தாய் டாலாம் மலேசிய நகரங்கள்‎ கோலாலம்பூர் கூட்டாட்சி நகரங்கள்
683282
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
இந்தியாவில் கூலிப்படையினர்
இந்தியாவில் கூலிப்படையினர் (Mercenaries in India) என்பவர்கள் போராளிகளாகவும் முதன்மையாக விவசாயிகளாகவும் இருந்தனர். நடுக்காலத்தில் இந்தியாவில் உள்ள உள்ளூர் ஆட்சியாளர்களுக்காக போராட இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இவர்கள் பணியமர்த்தப் பட்டனர். இந்த கூலி வேலை சில சமூகங்களுக்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாக மாறியது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில், பல நாடுகளிலிருந்து வந்த பல கூலிப்படையினர் இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றனர். சில கூலிப்படையினர் சுதந்திரமான ஆட்சியாளர்களாகவும் உருவெடுத்தனர். புர்பியாக்கள் நடுக்காலத்தில், பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த புர்பியா கூலிப்படையினர் மேற்கு மற்றும் வட இந்தியாவின் இராச்சியங்களில் ஒரு பொதுவான அம்சமாக இருந்தனர். பின்னர் அவர்கள் மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கிளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்தியாவில் ஆப்பிரிக்க கூலிப்படையினர் சித்தியர்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் ஜான்சி கடற்கரை பகுதியில் வாழ்ந்த பாண்டு மக்களில் ஒரு குழுவினராவர். 15ம் நூற்றாண்டின் இறுதியில் இம்மக்களை தக்காணச் சுல்தான்கள் அடிமை வணிகத்தில் வாங்கி, தங்கள் இராணுவப் படைகளிலும், கட்டுமானத்திலும் ஈடுபடுத்தினர். பின்னர், சில சித்திகள் அடிமைத்தனத்திலிருந்து தப்பித்து வனப்பகுதிகளில் சமூகங்களை நிறுவினர். கிபி 1676 சித்தியர்கள் ஜாஞ்சிரா இராச்சியத்தை நிறுவி, ராய்கட் மாவட்டம் அருகே அரபிக் கடலில் உள்ள தீவில் தலைநகராக ஜாஞ்சிராக் கோட்டையை நிறுவினர். இம்மக்கள் முகலாயப் பேரரசின் இராணுவத்திலும் பணிபுரிந்தனர். பல முன்னாள் அடிமைகள் இராணுவத்திலும் நிர்வாகத்திலும் உயர் பதவிகளுக்கு உயர்ந்தனர். அவர்களில் மிக முக்கியமானவர் மாலிக் அம்பர் ஆவார். இந்தியாவில் முகலாயர்கள் எழுச்சியடைவதற்கு முன்பு தில்லி சுல்தானகம் காலத்தில், ஜமால்-உத்-தின் யாகுத் ஒரு முக்கிய சித்தி அடிமையாக இருந்து பிரபுவாக மாறியவர். அவர் ரசியா சுல்தானாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இந்தியாவில் ஐரோப்பிய கூலிப்படையினர் ஆயிரக்கணக்கான ஐரோப்பியக் கூலிப்படையினர் இந்தியா முழுவதும் உள்ள ஆட்சியாளர்களின் அரசவையில் பணிபுரிந்தனர். இவர்கள் பெரும்பாலும் அந்தந்த சமூகங்களின் விளிம்புகளில் இருந்து வந்தனர். 1365இல் தொடங்கிய பாமினி சுல்தானகத்திற்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையிலான முதல் போரின் போது, இரு தரப்பினரும் பீரங்கித் துருப்புகளை இறக்குமதி செய்து அதில் துருக்கிய மற்றும் ஐரோப்பிய கூலிப்படையினரை பயன்படுத்தினர். ஐரோப்பிய கூலிப்படையினர் 300 ஆண்டுகள் இந்திய ஆட்சியாளர்களின் அரசவைகளில் பணியாற்றினர். இது 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகேய இந்தியாவில் தொடங்கி, 17 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வரை இருந்தது. 1498 ஆம் ஆண்டில் போர்த்துக்கேய ஆய்வாளர் வாஸ்கோ ட காமா தனது முதல் வரலாற்று பயணத்தின் போது, மலபார் கடற்கரையில் பல்வேறு அரசர்களின் சேவையில் இத்தாலிய கூலிப்படையினர் இருப்பதை கவனித்தார். அவரது சொந்தக் குழுவினரில் இருவர் அதிக ஊதியத்திற்காக இத்தாலியர்களுடன் இணைந்து மலபார் அரச சேவையில் சேர்ந்தனர். போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் யாவோ டி பாரோசு, 1565 ஆம் ஆண்டில் பல்வேறு இந்திய இளவரசர்களின் படைகளில் குறைந்தது 2,000 போர்த்துக்கேயர்கள் சண்டையிட்டதாக கூறினார். இந்த கூலிப்படையினரில் உள்நாட்டு கோவா கிறிஸ்துவர்கள் மற்றும் பம்பாய் கிழக்கு இந்திய கிறிஸ்துவ வீரர்கள் மற்றும் மாலுமிகள் அடங்குவர். மராட்டிய ஆட்சியாளர் சிவாஜி பல போர்த்துக்கேயர்களையும் நூற்றுக்கணக்கான கோவா மற்றும் பம்பாய் கிழக்கு இந்தியர்களையும் தனது கடற்படையில் பணியமர்த்தியிருந்தார். அவர்கள் கோவாவில் உள்ள காலனித்துவ அதிகாரிகளால் பாலைவனத்திற்குச் செல்ல வற்புறுத்தப்பட்டனர். அவர்கள் பொதுவாக முகலாயர்கள் மற்றும் மராத்தியர்களால் பீரங்கி நிபுணர்களாக பயிற்சி அளிக்கப்பட்டனர். முகலாயப் பேரரசர் ஷாஜகானின் ஆட்சியின் போது, பல ஐரோப்பியர்கள் முகலாய இராணுவத்தில் பணியாற்றியதால், தில்லிக்கு வெளியே பரிங்கிபுரா (வெளிநாட்டினரின் நகரம்) என்ற பெயரில் ஒரு தனித்துவமான புறநகர் கட்டப்பட்டது. இங்கு வாழ்ந்தவர்களில் போர்த்துகேய, பிரெஞ்சு மற்றும் ஆங்கில கூலிப்படையினர் அடங்குவர். அவர்களில் பலர் இசுலாம் மதத்திற்கு மாறியிருந்தனர். இந்த கூலிப்படையினர் பராஷிஷ் கான் என்ற பிரெஞ்சுக்காரரின் தலைமையின் கீழ் ஒரு சிறப்பு படைப்பிரிவாக ஒருங்கிணைக்கப்பட்டனர். இரண்டாம் ஷா ஆலம் தனது ஆட்சியின்போது ஜெர்மன் கூலிப்படை வீரரான வால்டர் ரெய்ன்ஹார்ட் சோம்ப்ரே என்பவருக்கு தில்லிக்கு வடக்கே உள்ள தோவாப் பகுதியில் ஒரு பெரிய தோட்டத்தை வழங்கினார். பேகம் சம்ரு என்றும் அழைக்கப்படும் தனது மனைவி பர்சானா ஜெப் அன்-நிசாவுடன் சோம்ப்ரே தோட்டத்தில் குடியேறினார். மேலும் சர்தானா என்ற கிராமத்தை தனது தலைநகராக மாற்றினார். சோம்ப்ரே இறந்த பிறகு அவரது மனைவி பதவியேற்றார். சர்தானாவின் ஆட்சியாளரான பேகம் சம்ரு, இந்தியாவில் ஒரே கத்தோலிக்க ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த கூலிப்படையினரில் உருது கவிஞர் பாரசுவின் தந்தையான ஜெர்மன் யூத கூலிப்படை வீரரான ஜான்-ஆகஸ்டஸ் கோட்லீப் கோஹனும் ஒருவர். மத்திய மற்றும் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை கட்டுப்படுத்தும் பல கூலிப்படையினர் தக்காண சுல்தானகங்களின் படைகளில் பணிபுரிந்தனர். பல பிரிட்டிஷ் கலகக்காரர்கள் 17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் மற்றும் தக்காண சுல்தானகங்களின் சேவையில் இருந்து விலகினர். கலகக்காரர்களில் பெரும்பாலோர் பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானகங்களின் சேவையில் ஈடுபட்டனர். 1857 ஆம் ஆண்டின் இந்திய கிளர்ச்சியின் போது, இசுலாம் மதத்திற்கு மாறிய அப்துல்லா பேக் என்ற ஆங்கிலேயர் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக பழைய தில்லிப் பகுதிகளில் மிகவும் தீவிரமான கிளர்ச்சியாளர்களில் ஒருவராக இருந்தார். முன்னாள் சிப்பாயான பேக் மே 11 அன்று கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு கிளர்ச்சிப் படைகளுக்கு ஒரு தலைவராகவும் ஆலோசகராகவும் ஆனார். மேற்கோள்கள் நூல் குறிப்புகள் . . . . கூலிப்படைகள்
683288
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
இராம் பரிக்சன் ராய்
இராம் பரிக்சன் ராய் (Ram Parikshan Roy) (1920–1997) இந்தியத் தாவரவியல் பேராசிரியர் ஆவார். மரபணுத் தொகையியல், உயிரணு மரபியல், தாவர இனப்பெருக்கம், திசு வளர்ப்பு மற்றும் உயிரணு வகைப்பாட்டியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர் ஆவார். தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி இராய் 1920 ஆம் ஆண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கங்காபூரில் பிறந்தார். 1947 ஆம் ஆண்டில் பாட்னா அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.: 1953-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொழில் வாழ்க்கை இராய் தனது 37 வயதில் பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் தாவரவியல் தலைவராகவும் ஆனார். பின்னர் இவர் பாட்னாவில் உள்ள உயிரணு மரபியல் பிரிவில் சிறப்பு உதவி பல்கலைக்கழக மானியக்குழு மையத்தின் அறிவியல் பிரிவின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் பணியாற்றினார். 1982 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தில் தகைசால் விஞ்ஞானி ஆனார். ஆய்வு மற்றும் வெளியீடுகள் இராய் பாட்னாவில் உள்ள உள்ளூர் விலங்கினங்களைப் பற்றி ஒரு கணக்கெடுப்பை நடத்தினார், மேலும் 1948 ஆம் ஆண்டில் பாட்னாவின் மரங்கள் என்ற தலைப்பில் ஒரு தனி வரைவு நூலை வெளியிட்டார். பாட்னா பல்கலைக்கழகத்தில் ஐம்பதுகளில் தாவரங்களின் உயிரணு மரபியல் குறித்த செயலில் உள்ள பள்ளியை நிறுவினார். மேலும் 1960 களின் முற்பகுதியில் இந்திய வெள்ளரிகளின் உயிரணு மரபியல் குறித்த முக்கியமான மற்றும் இலட்சியத் திட்டத்தை தொடங்கினார். பரிசுகள் மற்றும் அங்கீகாரங்கள் இராய் 1973 இல் பீர்பால் சஹானி தங்கப் பதக்கத்தையும் 1975 -ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு புத்தாய்வு மாணவர் நிலையையும் வென்றார். இந்தியாவின் தேசிய அறிவியல் அகாதெமி, இந்திய தாவரவியல் சங்கம், இந்திய மரபியல் சங்கம் மற்றும் தாவர இனப்பெருக்க சங்கம் (லண்டன்) ஆகியவற்றின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராக ஆனார். ராய் உயிரணுவியலாளர்கள் மற்றும் மரபியல் நிபுணர்களின் சங்கத்தின் நிறுவநர் செயலாளராக இருந்தார். மேற்கோள்கள் இந்திய அறிவியலாளர்கள் 1920 பிறப்புகள் 1997 இறப்புகள்
683289
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
உலக அமைதி கோபுரம், சங்கரன்கோவில்
உலக அமைதி கோபுரம், இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரீருப்பு சிற்றூரில் அமைந்துள்ளது. புத்த விகாரம் மற்றும் தாது கோபுரத்துடன் கூடிய இந்த உலக அமைதி கோபுரம், சங்கரன்கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே தென்னிந்தியாவில் 100 அடி உயரத்தில் அமைந்த பெரிய உலக அமைதிக் கோபுரம் ஆகும். இந்த உலக அமைதி கோபுரம் 150 அடி விட்டமும், 100 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது.வீரிருப்பு புத்த விகாரைக்கு அருகிலேயே புத்தர் கோயில் கட்டப்பட்டுள்ளது.கோபுரத்தில் 4 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் காலையும், மாலையும் 4.30 முதல் 6.30 மணி வரை வழிபாடு நடைபெறுகிறது வரலாறு வீரீருப்பு கிராமத்தைச் சேர்ந்த காந்தியவாதி எம். முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர், உலக அமைதி கோபுரம் கட்டுவதற்கு 2000ஆம் ஆண்டில் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் அமைந்த இந்த உலக அமைதி கோபுரத்தடியில் கௌதம புத்தரின்]அஸ்தியின் சிறுபகுதியை வைத்து, கட்டிடப்பணி 2020ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உலக அமைதி கோபுரத்தின் காணொளி Nipponzan Myohoji: Peace Pagoda Inauguration in South India பௌத்த கட்டிடங்கள் தென்காசி மாவட்டம்
683291
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்
கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் (Godhra Junction railway station (நிலையகக் குறியீடு: GDA), இந்தியாவின் குஜராத் மாநிலம், பஞ்சமகால் மாவட்டம், கோத்ரா நகரத்தில் உள்ளது. இது 3 நடைமேடைகள் கொண்டது. வரலாறு 27 பிப்ரவரி 2022 அன்று அதிகாலையில் கோத்ரா தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி விரைவு வண்டியின் பயணிகள் பெட்டி ஒன்றில் சமூக விரோதிகள், தீவைத்து எரித்ததில் அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த 59 இந்து சமய பக்தர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய தொடருந்துகள் புதுதில்லி-அகமதாபாத்-மும்பை -விரைவு வண்டிகள் வாரணாசி-அகமதாபாத் - சபர்மதி விரைவு வண்டி கீழ்கண்ட மெமு ரயில்கள் கோத்ரா தொடருந்து நிலையத்திலிருந்து செல்கிறது. 69123/24 கோத்ரா – ஆனந்த் 69121/22 கோத்ரா – வடோதரா 69145/46 கோத்ரா – ஆனந்த் 69125/26 கோத்ரா – ஆனந்த் 69147/48 கோத்ரா – ஆனந்த் இதனையும் காண்க சபர்மதி விரைவு வண்டி தி சபர்மதி ரிப்போர்ட் (திரைப்படம்) மேற்கோள்கள் குசராத்திலுள்ள தொடருந்து நிலையங்கள் பஞ்சமகால் மாவட்டம்
683295
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D
சரோஜா சாவித்திரி போல்ராஜ்
சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj, பிறப்பு: 2 சூலை 1977) இலங்கை அரசியல்வாதியும் அமச்சரும் ஆவார். 2024 நவம்பரில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக மாத்தறை தொகுதியில் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரானார். இவர் 2024 நவம்பரில் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மாத்தறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாண முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் 1977 பிறப்புகள் வாழும் நபர்கள் இலங்கை அமைச்சர்கள் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கைப் பெண் அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்
683300
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%207%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
யூஎஸ்ஜே 7 நிலையம்
யூஎஸ்ஜே 7 நிலையம் (ஆங்கிலம்: USJ 7 Station; மலாய்: Stesen USJ 7; சீனம்: USJ 7 站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT); மற்றும் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடத்தின் (BRT Sunway Line) (BRT) விரைவுப் பேருந்து போக்குவரத்து; ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ 7 பகுதியில் அமைந்துள்ளது. அமைவு இந்த நிலையத்திற்கு கிழக்கே அமைந்துள்ள யூஎஸ்ஜே 7 குடியிருப்புப் பகுதியின் (USJ 7 Neighbourhood) பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. 2 சூன் 2015-இல், சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் இந்த நிலையத்திற்கு சேவை செய்யத் தொடங்கியபோது இந்த நிலையமும் திறக்கப்பட்டது. பின்னர், நிலையத்தின் கிளானா ஜெயா வழித்தடத்தில் இலகுரக விரைவுப் போக்குவரத்து 30 சூன் 2016-இல் திறக்கப்பட்டது. இந்த நிலையம் விரைவுப் பேருந்து; மற்றும் [[இலகு தொடருந்து|இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களுக்கான பரிமாற்ற நிலையமாக செயல்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் அல்லது பிஆர்டி சன்வே வழித்தடம் (ஆங்கிலம்: BRT Sunway Line (BRT) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் பேருந்து வழித்தடம் ஆகும். இந்த வழித்தடம் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. உலகின் முதல் முழு மின்சார விரைவுப் பேருந்துச் சேவை என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த வழித்தடம் ரேபிட் கேஎல் பேருந்து நிறுவனத்தால் இயக்கப்படுகிறது; மற்றும் பண்டார் சன்வே மற்றும் சுபாங் ஜெயாவில் மக்கள் அதிக அடர்த்தியான பகுதிகளுக்குச் சேவை செய்வதற்காக 2015-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் USJ7 LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683303
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
எர்லிச்மேனைட்டு
எர்லிச்மேனைட்டு (Erlichmanite) என்பது OsS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓசுமியம் சல்பைடு கனிமமாகக் கருதப்படும் இது இயற்கையிலேயே தோன்றுகிறது. உலோகப் பளபளப்புடன் சாம்பல் நிறத்தில் 5 என்ற மோவின் கடினத்தன்மை மதிப்பும், 9 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் கொண்டு இக்கனிமம் படிகமாகிறது. வண்டல் செயல்முறைகளின் போது குறிப்பிட்ட மூலப் பாறையிலிருந்து ஈர்ப்பு விசையால் பிரிக்கப்பட்ட உயர் உலோக தாதுக்களின் படிகத் திரட்சியில் காணப்படுகிறது. ஜோசப் எர்லிச்மேன், நாசா அமெசு ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரான் நுண்ணுயிர் ஆய்வாளரான இயோசப் எர்லிச்மேன் நினைவாகக் கனிமத்திற்கு எர்லிச்மேனைட்டு எனப் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் எர்லிச்மேனைட்டு கனிமத்தை Erl என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் சல்பைடு கனிமங்கள்
683306
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
கணங்களின் இயற்கணிதம்
கணிதத்தில், கணங்களின் இயற்கணிதம் (the algebra of sets) என்பது கணங்கள், கணங்களின் சேர்ப்பு, வெட்டு, நிரப்பிகாணல் ஆகிய கணக்-கோட்பாட்டுச் செயல்கள், கணங்களின் சமத்தன்மைக்கும், உள்ளடக்கலுக்குமான உறவுகள் ஆகியவற்றுக்கான பண்புகளையும் விதிகளையும் வரையறுப்பதோடு, இந்த கணச் செயல்களும் உறவுகளும் கொண்ட கணக்கீடுகளுக்கான முறையான வழிமுறைகளையும் அளிக்கிறது. கணங்களின் இயற்கணிதத்தின் அடிப்படைப் பண்புகள் கணங்களுக்கான சேர்ப்பு (), வெட்டு () ஆகிய இரு ஈருறுப்புச் செயலிகளும் பல முற்றொருமைகளை நிறைவு செய்கின்றன. அவற்றுள் பல, நிலையான பெயர்களையும் பெற்றுள்ளன. பரிமாற்றுத்தன்மை: சேர்ப்புப் பண்பு: பங்கீட்டுப் பண்பு: எண்கணிதத்தின் கூட்டல், பெருக்கல் செயலிகளுக்கு ஒத்தவையாக கணங்களின் சேர்ப்பு, வெட்டு ஆகிய இரு செயல்களையும் கொள்ளலாம். எண்கணித கூட்டல், பெருக்கலைப் போலவே இவையும் பரிமாற்று விதியையும், சேர்ப்பு விதியையும் நிறைவு செய்கின்றன. மேலும் வெட்டுச் செயலானது சேர்ப்புச் செயலின் மீது பங்கீட்டு விதியை நிறைவு செய்யும். எண்கணிதத்தில் போலல்லாது, இங்கு சேர்ப்புச் செயலும் வெட்டின் மீது பங்கீட்டு விதியை நிறைவு செய்யும். வெற்றுக் கணம் , அனைத்து கணம் இவை இரண்டும் நிரப்பி செயலுடன் இணைந்து மேலும் இரு பண்புகள் அமைகின்றன. ( என்பது கணம் இன் நிரப்பு கணத்தின் குறியீடு. இது எனவும் குறிக்கப்படுகிறது). வெற்றுக் கணத்தில் உறுப்புகளே கிடையாது; அனைத்து கணத்தில், குறிப்பிட்ட சூழலுக்கேற்றபடி சாத்தியமான அனைத்து உறுப்புகளும் அடங்கும். முற்றொருமை: நிரப்பி: எண்கணிதத்தில், கூட்டல் முற்றொருமை உறுப்பாக 0 உம், பெருக்கல் முற்றொருமை உறுப்பாக 1 உம் இருப்பதுபோல, வெற்றுக்கணமான , சேர்ப்புச் செயலுக்கான முற்றொருமை உறுப்பாகவும், அனைத்து கணமான , வெட்டுச் செயலிக்கான முற்றொருமை உறுப்பாகவும் உள்ளன. மேலே தரப்பட்ட ஐந்து விதிகளும் அடிப்படையானவை. பிற விதிகளை இவற்றைலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இருமைக் கோட்பாடு மேலே தரப்பட்டுள்ள முற்றொருமைகள் ஒவ்வொன்றையும் ஒரே சோடி விதியில் அமைந்த ஒரு விதியாகக் கொள்ளலாம். ஏனெனில் அவை ஒவ்வொன்றிலும் இரண்டையும் பரிமாற்றக் கிடைக்கும் விதிகளும் உண்மையானவையாக இருக்கும். இதேபோல , இரண்டையும் பரிமாற்றுவதால் பெறப்படும் விதிகளும் உண்மையானவையாக இருக்கும். கணங்களின் இயற்கணிதத்தில் இப்பண்பு மிகவும் வலுவானதொரு பண்பாகவுள்ளது. இப்பண்பு கணங்களின் இருமைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி, கணங்களுக்கான ஏதேனுமொரு முற்றொருமையில் சேர்ப்பு (), வெட்டு () ஆகிய இரு குறியீடுகளையும் பரிமாற்றம் அல்லது அனைத்து கணம், வெற்றுகணம் குறியீடுகளைப் ( , ) பரிமாற்றம் செய்வதன் மூலம் அந்த முற்றொருமையின் இருமையைப் பெறலாம். தனக்குத்தானே இருமையாக இருக்கும் முற்றொருமையானது தன்-இருமை எனப்படுகிறது. சேர்ப்பு/வெட்டுச் செயலிகளுக்கான கூடுதல் விதிகள் அனைத்து கணம் இன் இரு உட்கணங்கள் , எனில் கீழுள்ள முற்றொருமைகள் உண்மையாகும்: தன்னடுக்கு விதிகள்: ஆதிக்க விதிகள்: உறிஞ்சுமை விதிகள்: தன்னடுக்கு விதிக்கான நிறுவல்: மேலுள்ள நிறுவலின் இருமை நிறுவலானது, சேர்ப்புச் செயலியின் தன்னடுக்கு விதியின் இருமை விதியின் நிறுவலாக, அதாவது வெட்டுச் செயலிக்கான தன்னடுக்கு விதியின் நிறுவலாக அமைவதைப் பின்வரும் நிறுவலின் மூலம் காணலம்: நிறுவல்: இரு கணங்களின் வெட்டு கணத்தை வேறுபாட்டுக் கணத்தின் மூலமாகவும் எழுதலாம்: நிரப்பிகளுக்கான கூடுதல் விதிகள் கீழுள்ளவை நிரப்பிகளைக் கொண்டுள்ள ஐந்து முக்கிய விதிகளாகும்: அனைத்து கணம் இன் இரு உட்கணங்கள் , எனில்: த மோர்கனின் விதி: இரட்டை நிரப்பி அல்லது சுருள்வு விதி: அனைத்து கணம், வெற்றுக் கணத்துக்கான நிரப்பி விதிகள்: இருமுறை நிரப்பி காணலின் விளைவு, தன்-இருமையாக அமையும். அடுத்து தரப்பட்டுள்ள விதியும் தன்-இருமையானது. மேலும் இவை நிரப்பி விதிகளை நிறைவு செய்வது நிரப்பிகள் மட்டுமே என்பதையும் வலியுறுத்துகின்றது. அனைத்து கணம் இன் இரு உட்கணங்கள் , எனில்: நிரப்பிகளின் தனித்துவம்: , எனில், உள்ளடங்கலுக்கான இயற்கணிதம் கண உள்ளடங்கல், அதாவது ஒரு கணமானது மற்றொரு கணத்தின் உட்கணமாக இருக்கும் ஈருறுப்பு உறவானது, பகுதி வரிசையாக இருக்கும் என்பதை காட்டுகிறது: , , என்பன மூன்று கணங்கள் எனில் பின்வரும் கூற்றுகள் உண்மையாக இருக்கும்: எதிர்வு உறவு: எதிர்சமச்சீர் உறவு: and if and only if கடப்பு உறவு: If and , then , and ஆகியவை கணத்தின் உட்கணங்கள் எனில் பின்வரும் கூற்றுகள் உண்மையானவை: If and , then If and , then என்பது சேர்ப்பு, வெட்டு, நிரப்பி ஆகியவற்றைக் கொண்ட பல்வேறு கூற்றுகளுக்குச் சமானமானதாகும் என்பதைக் கீழ்வருவன காட்டுகின்றன: , இரு கணங்கள் எனில் கீழுள்ளவை சமானக் கூற்றுகளாகும்: சார் நிரப்பிகளின் இயற்கணிதம் சார் நிரப்பிகள் வேறுபாட்டுக் கணங்கள் தொடர்பான முற்றொருமைகள்: அனைத்து கணம் ; அதன் உட்கணங்கள் , and எனில்: மேற்கோள்கள் Stoll, Robert R.; Set Theory and Logic, Mineola, N.Y.: Dover Publications (1979) . "The Algebra of Sets", pp 16—23. Courant, Richard, Herbert Robbins, Ian Stewart, What is mathematics?: An Elementary Approach to Ideas and Methods, Oxford University Press US, 1996. . "SUPPLEMENT TO CHAPTER II THE ALGEBRA OF SETS". வெளியிணைப்புகள் Operations on Sets at ProvenMath கணச் செயல்கள் கணக் கோட்பாட்டு அடிப்படை கருத்துருக்கள்
683309
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE
பி. எஸ். கீர்த்தனா
பி.எஸ்.கீர்த்தனா (P. S. Keerthana) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இயக்குநர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். கீர்த்தனா திரைப்பட தயாரிப்பாளர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர். தனிப்பட்ட வாழ்க்கை கீர்த்தனா 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 இல் இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் பிறந்தார். தமிழ் திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா தம்பதியருக்கு பிறந்தார். தொழில் கீர்த்தனா, 2002 இல் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். செக்கச் சிவந்த வானம் மற்றும் காற்று வெளியிடை திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒத்த செருப்பு அளவு 7 மற்றும் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். திரைப்படங்கள் மேற்கோள்கள் தமிழ் நடிகைகள் இந்திய நடிகைகள்
683315
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
சபர்மதி விரைவு வண்டி
19167 / 19168 அகமதாபாத்-வாரணாசி எக்ஸ்பிரஸ் (Ahmedabad-Varanasi Sabarmati Express), மேற்கு இந்தியாவின் அகமதாபாத் நகரத்தையும், வட இந்தியாவின் வாரணாசி நகரத்தையும், ஜான்சி வழியாக இணைக்கும் விரைவுத் தொடர் வண்டி ஆகும். இது 1592 கிலோ மீட்டர் பயணத் தொலைவை, சராசரியாக 44 கிலோ மீட்டர் வேகத்தில், 34 மணி 35 நிமிட நேரத்தில் கடக்கிறது. இது அகலப் பாதையில், மின்சாரத்தில் ஓடும் தொடர் வண்டியாகும்.இவ்வண்டி வாரத்தின் நான்கு நாட்களான திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் அகமதாபாத்திலிருந்து புறப்படுகிறது. இது 50 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. பயண அட்டவணை வண்டி எண் 19167 அகமதாபாத் தொடருந்து நிலையத்திலிருந்து (ADI) திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் இரவு 11.10 மணி அளவில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண் 19168 வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து (BCY)செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.15 மணி அளவில் புறப்படுகிறது. வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்கள் அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம் மணிநகர் நாடியாத் ஆனந்த் வடோதரா கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் தாகோத் ரத்லம் உஜ்ஜைன் ருதியாய் சந்திப்பு குணா சந்திப்பு அசோக்நகர் தொடருந்து நிலையம் பினா-எட்டாவா ஜான்சி கான்பூர் லக்னோ பைசாபாத் அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம் கோசைன்கஞ்ச் அக்பர்பூர் மாலிப்பூர் ஷாகஞ்ச் ஜவுன்பூர் வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையம் பெட்டிகள் விவரம் சபர்மதி எக்ஸ்பிரஸ் 21 பெட்டிகள் கொண்டது. 1 அடுக்கு குளிர்சாதனப் பெட்டி 1 2 அடுக்கு குளிர்சானப் பெட்டி 1 3 அடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 6 தூங்கும் வசதி பெட்டிகள் 8 முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் 4 என்சினுக்கு பின்னாள் முன்பதிவு இல்லாத இருக்கையுடன் கூடிய பார்சல் / ஜெனரேட்டர் பெட்டி 1 வரலாறு 27 பிப்ரவரி 2002 அன்று காலையில் வாரணாசியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடருந்து கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, சமூக விரோதிகள் ஒரு பெட்டியில் நெருப்பு வைத்த காரணத்தால், பயணிகளில் 55 பேர் தீக்காயத்தால் கொல்லப்பட்டனர். இதனால் குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதனையும் காண்க கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் கோத்ரா தொடருந்து எரிப்பு தி சபர்மதி ரிப்போர்ட் (திரைப்படம்) மேற்கோள்கள் இந்திய விரைவுவண்டிகள் அகமதாபாத் வாரணாசி
683317
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தைப்பான் எல்ஆர்டி நிலையம்
தைப்பான் எல்ஆர்டி நிலையம் அல்லது தைப்பான் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taipan LRT Station; மலாய்: Stesen LRT Taipan; சீனம்: 大班) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ6 சுற்றுப்புறங்களை இணைக்கிறது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. USJ6 பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், எஸ்எஸ்15 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சுபாங் ஜெயா SS12 - SS19; PJS7 / PJS9 / PJS11 சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், பண்டார் சன்வே (Bandar Sunway) நகர்ப் பகுதியைச் சேர்ந்த SS12 முதல் SS19 வரையிலான குடியிருப்புப் பகுதிகள்; PJS7 / PJS9 / PJS11 குடியிருப்புப் பகுதிகள்; ஆகியவற்றை இந்த மாநகரப் பகுதி கொண்டுள்ளது. யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ Subang Jaya) அல்லது யூஇபி சுபாங் ஜெயா (UEP Subang Jaya) என்பது சுபாங் ஜெயா மாநகராட்சியின் கீழ் உள்ள நகர்ப்பகுதியாகும். யுனைடெட் புராஜெக்ட்ஸ் எஸ்டேட்ஸ் - சுபாங் ஜெயா (United Projects Estates Bhd. Subang Jaya) என்பதன் சுருக்கமே யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ) ஆகும். கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683318
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%87
மோகினி டே
மோகினி டே (Mohini Dey) இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தாழ்கேளொலி இசைக் கலைஞர் ஆவார். 1996 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வங்காளதேசத்தைச் சேர்ந்த கான் பங்களா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விண்டு ஆஃப் சேஞ்சு மற்றும் கோக் சுடுடியோ இந்தியா ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் ஒரு பகுதியாக இருந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்காகவும் இவர் இசையமைக்கிறார். ஆரம்ப கால வாழ்க்கை மோகினி டே மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவர் பிறந்தபோது, ​​தந்தை ஓர் அமர்வு இசைக்கலைஞராக பணிபுரிந்ததால், குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கையைச் சந்திக்கவே சிரமப்பட்டனர். இவரது இசைத் திறமையை மூன்று வயதிற்கு முன்பே கவனித்த தந்தை அத்திறமையை வளர்க்கத் தொடங்கினார். ஒன்பது அல்லது பத்து வயதில் மோகினி டே தனது முதல் தாழ்கேளோலி கிதாரைப் பெற்றார். 11 வயதிலிருந்தே மோகினி டே ஒரு திறமைசாலியாகத் திகழ்ந்தார். இவரது திறமையை இவரது தந்தையின் நண்பர் ரஞ்சித் பரோடு கவனித்தார். அவர் தனது இசைக்குழுவின் சுற்றுப்பயணங்களுக்கு மோகினியை அழைத்துச் சென்றார். இந்திய திரைப்பட இசையமைப்பாளான லூயிசு பேங்கு இவருக்கு வழிகாட்டியாக இருந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வாழும் நபர்கள் 1996 பிறப்புகள் இந்திய இசைக் கலைஞர்கள்
683319
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%28%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%29%20%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%28I%29
புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I)
புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I)(Bromo(tetrahydrothiophene)gold(I)) என்பது C4H8AuBrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இது தங்கத்தின் ஒருங்கிணைப்பு சேர்மமாகும். பொதுவாக பயன்படுத்தப்படும் குளோரோ (டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I) சேர்மத்துடன் இது தொடர்பு கொண்டுள்ளது. இதேபோல், டெட்ரா ஐதரோதயோபீன் ஈந்தணைவி நிலையற்றதாகும். மற்ற வலுவான ஈந்தணைவிகளுடன் உடனடியாக பதிலீடு செய்யப்பட்டு நேரியல் தங்க புரோமைடு அணைவுச் சேர்மத்தை வழங்குகிறது. டெட்ராபுரோமோ ஆரிக் அமிலத்துடன் டெட்ரா ஐதரோதயோபீனைச் சேர்த்து வினைபுரியச் செய்து புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்) தங்கம்(I) தயாரிக்கப்படுகிறது. இவ்வினைக்குத் தேவையான டெட்ராபுரோமோ ஆரிக் அமிலமானது டெட்ராகுளோரோ ஆரிக் அமிலத்துடன் ஐதரோபுரோமிக் அமிலத்தை வினைபுரியச் செய்து தயாரித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கோள்கள் புரோமோ அணைவுச் சேர்மங்கள் தங்கம்(I) சேர்மங்கள் தங்கம்-ஆலசன் சேர்மங்கள் தயோலேன்கள் தங்கம்-கந்தகம் சேர்மங்கள்
683334
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
வாவாசான் எல்ஆர்டி நிலையம்
வாவாசான் எல்ஆர்டி நிலையம் அல்லது வாவாசான் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Wawasan LRT Station; மலாய்: Stesen LRT Wawasan; சீனம்: 轻轨站见解) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ 13, USJ 14, USJ 19 சுற்றுப்புறங்களை இணைக்கிறது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. சுபாங் ஜெயா விவேகப் பள்ளியின் வளாகத்திற்கு அருகில் (Kompleks Sekolah Wawasan Subang Jaya) இந்த நிலையம் அமைந்து இருப்பதால், வாவாசான் எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சுபாங் ஜெயா யூஎஸ்ஜே 13, யூஎஸ்ஜே 14, யூஎஸ்ஜே 19 சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், பண்டார் சன்வே (Bandar Sunway) நகர்ப் பகுதியைச் சேர்ந்த யூஎஸ்ஜே 13, யூஎஸ்ஜே 14, யூஎஸ்ஜே 19 குடியிருப்புப் பகுதிகளை இந்த மாநகரப் பகுதி கொண்டுள்ளது. யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ Subang Jaya) அல்லது யூஇபி சுபாங் ஜெயா (UEP Subang Jaya) என்பது சுபாங் ஜெயா மாநகராட்சியின் கீழ் உள்ள நகர்ப்பகுதியாகும். யுனைடெட் புராஜெக்ட்ஸ் எஸ்டேட்ஸ் - சுபாங் ஜெயா (United Projects Estates Bhd. Subang Jaya) என்பதன் சுருக்கமே யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ) ஆகும். கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் #யூஎஸ்ஜே சுபாங் ஜெயா கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Wawasan LRT Station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683338
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மதுரையிலுள்ள தொடருந்து நிலையங்கள்
மதுரை தென் தமிழ்நாட்டின் நுழைவாயிலாகவும், மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. மேலும் இது மதுரை தொடருந்து கோட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது. இது இந்தியாவின் தென்னக தொடருந்து மண்டலத்தின் மிகப்பெரிய தொடருந்து கோட்டமாகும். இந்த நகரத்தில் பல தொடருந்து நிலையங்கள் உள்ளன, அவற்றில் மதுரை சந்திப்பு என்பது மிக முக்கியமானதாகும். மதுரை தொடருந்து நிலையங்களின் பட்டியல் மேலும் காண்க மேற்கோள்கள் மதுரை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள் மதுரையிலுள்ள தொடருந்து நிலையங்கள்
683341
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
புரோமின் பெர்குளோரேட்டு
புரோமின் பெர்குளோரேட்டு (Bromine perchlorate) என்பது BrOClO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அதிர்ச்சி மற்றும் ஒளி-உணர்திறன் கொண்ட சிவப்பு நிற திரவமாகும். -20 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும். தயாரிப்பு -20 °செல்சியசு வெப்பநிலையில் சீசியம் பெர்குளோரேட்டும் புரோமின் புளோரோசல்பேட்டும் சேர்ந்து வினையில் ஈடுபட்டால் புரோமின் பெர்குளோரேட்டு உருவாகும்.: CsClO4 + BrSO3F → BrOClO3 + CsSO3F மாற்றாக -45 °செல்சியசு வெப்பநிலையில் குளோரின் பெர்குளோரேட்டும் புரோமினும் சேர்ந்து வினை புரிந்தாலும் இது உருவாகும். வினைகள் புரோமின் பெர்குளோரேட்டு ஐதரசன் புரோமைடுடன் வினைபுரிந்து புரோமீனை மீண்டும் உருவாக்குகிறது.: BrOClO3 + HBr → Br2 + HClO4 இந்த சேர்மம் சீசியம் பெர்குளோரேட்டுடன் வினைபுரிந்து, Cs[Br(ClO4)2] சேர்மத்தையும் ம் பல்வேறு புளோரோகார்பன் ஆலைடுகளையும் உற்பத்தி செய்து, புளோரோ ஆல்க்கைல் பெர்குளோரேட்டுகளை உருவாக்குகிறது. மேற்கோள்கள் புரோமின்(I) சேர்மங்கள் பெர்குளோரேட்டுகள்
683345
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%2021%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
யூஎஸ்ஜே 21 எல்ஆர்டி நிலையம்
யூஎஸ்ஜே 21 எல்ஆர்டி நிலையம் அல்லது யூஎஸ்ஜே 21 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: USJ 21 LRT Station; மலாய்: Stesen LRT USJ 21; சீனம்: USJ 21 轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, யூஎஸ்ஜே 17, யூஎஸ்ஜே 18, யூஎஸ்ஜே 21 சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் மெயின் பேலஸ் வணிக வளாகத்திற்கு (Main Place Mall) அருகில் அமைந்துள்ளது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது. இந்த நிலையம் சுபாங் ஜெயா, யூஎஸ்ஜே 21 அருகில் (USJ 21) அமைந்து இருப்பதால், யூஎஸ்ஜே 21 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சுபாங் ஜெயா யூஎஸ்ஜே 21 சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், பண்டார் சன்வே (Bandar Sunway) நகர்ப் பகுதியைச் சேர்ந்த யூஎஸ்ஜே 13, யூஎஸ்ஜே 14, யூஎஸ்ஜே 17, யூஎஸ்ஜே 18, யூஎஸ்ஜே 19, யூஎஸ்ஜே 21 குடியிருப்புப் பகுதிகளை இந்த மாநகரப் பகுதி கொண்டுள்ளது. யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ Subang Jaya) அல்லது யூஇபி சுபாங் ஜெயா (UEP Subang Jaya) என்பது சுபாங் ஜெயா மாநகராட்சியின் கீழ் உள்ள நகர்ப்பகுதியாகும். யுனைடெட் புராஜெக்ட்ஸ் எஸ்டேட்ஸ் - சுபாங் ஜெயா (United Projects Estates Bhd. Subang Jaya) என்பதன் சுருக்கமே யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ) ஆகும். கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் #யூஎஸ்ஜே சுபாங் ஜெயா கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் USJ21 LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683346
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28Y%29
தாமசுகிளார்கைட்டு-(Y)
தாமசுகிளார்கைட்டு-(Y) (Thomasclarkite-(Y)) என்பது (Na, Ce)(Y, REE)(HCO3)(OH)3·4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய கனிமமான இது 1997 ஆம் ஆண்டு வரை யுகே-93 என அறியப்பட்டது. மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமசு எச். கிளார்க்கின் (1893-1996) நினைவாக இக்கனிமம் மறுபெயரிடப்பட்டது. கனடா நாட்டின் மாண்ட்-செயிண்ட்-இலேர் நகரத்தில் கிடைத்த பல அருமண் கனிமங்களில் இதுவும் ஒன்றாகும். கார பெக்மாடைட்டு பாறைகளின் இடையில் மட்டுமே இக்கனிமம் கிடைக்கிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் தாமசுகிளார்கைட்டு-(Y) கனிமத்தை Tcl-Y என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் கார்பனேட்டு கனிமங்கள் இலந்தனைடு கனிமங்கள் இட்ரியம் கனிமங்கள் சோடியம் கனிமங்கள் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
683349
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம்
ஆலாம் மேகா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆலாம் மேகா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Alam Megah LRT Station; மலாய்: Stesen LRT Alam Megah; சீனம்: 壮丽的自然风光) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சா ஆலாம், தாமான் பூங்கா நெகாரா, செக்சன் 27, ஆலாம் மேகா; போன்ற சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் மெயின் பேலஸ் வணிக வளாகத்திற்கு (Main Place Mall) அருகில் அமைந்துள்ளது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது. ஆலாம் மேகா நிலையம் சா ஆலாம், செக்சன் 27, ஆலாம் மேகா பகுதியில் (Alam Megah) அமைந்து இருப்பதால், ஆலாம் மேகா எனும் பெயர் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சா ஆலாம் மாநகராட்சி சா ஆலாம் மாநகராட்சி (Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த ஆனையம் 7 ​​திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் #யூஎஸ்ஜே சுபாங் ஜெயா கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Alam Megah LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683351
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு
இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு (Scandium perrhenate) என்பது Sc(ReO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இதன் வெப்ப நிலைப்புத்தன்மை தொடர்புடைய இட்ரியம் மற்றும் இலந்தனம் பெர்யிரேனேட்டு சேர்மங்களை விட குறைவாக உள்ளது. தயாரிப்பு மற்றும் பண்புகள் இசுக்காண்டியம்(III) ஆக்சைடுடன் பெர்யிரேனிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டுச் சேர்மத்தை தயாரிக்க இயலும். கரைசலில் இருந்து இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு முந்நீரேற்று வீழ்படிவாகிறது. இது 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் மூலக்கூற்றை இழந்து Sc(ReO4)3·H2O என்ற சேர்மம் உருவாகிறது. நீரற்ற வடிவத்தை 140 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் உருவாகும். இசுக்காண்டியம் ஆக்சைடும் இரேனியம்(VII) ஆக்சைடும் 550 °செல்சியசு வெப்பநிலையில் உருவாகின்றன. P1 இடக்குழுவில் a=7.333, b=7.985, c=20.825 Å; α=93.35, β=92.20, γ=97.42° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் முச்சரிவச்சுப் படிகத் திட்டத்தில் இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு படிகமாகிறது. நீரிலுள்ள அமோனியம் பெர்யிரேனேட்டுடன் இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு சேர்ந்து படிகமாகும் போது NH4Sc(ReO4)4·4H2O. உருவாகிறது. மேற்கோள்கள் இசுக்காண்டியம் சேர்மங்கள் பெர்யிரேனேட்டுகள்
683364
https://ta.wikipedia.org/wiki/2024%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88
2024 மகளிர் ஆசிய வெற்றியாளர் கோப்பை
2024 மகளிர் ஆசிய வெற்றியாளர் கோப்பை (2024 Women's Asian Champions Trophy) என்பது ஆசிய வளை கோல் பந்தாட்ட கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் சிறந்த ஆறு அணிகள் போட்டியிடும் பன்னாட்டு வளை கோல் பந்தாட்டப் போட்டியாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரில், 2024 ஆம் ஆண்டில் நடப்பு வெற்றியாளர் அணியாக இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி திகழ்கிறது. இந்தியாவின் பீகார் மாநிலம் ராச்கீர் நகரத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீன அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற தொடர்களில் இந்திய மற்றும் தென் கொரிய அணிகள் தலா மூன்று முறையும். சப்பான் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா இந்த போட்டியை நடத்தியது. மேற்கோள்கள் 2024 நிகழ்வுகள் விளையாட்டுப் போட்டிகள் 2024 இல் விளையாட்டுகள்
683365
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி
இந்திய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி (India women's national field hockey team) சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். இந்த அணி 2002 காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது. அதேபோல் 2004 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பை மற்றும் 2016, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. மேற்கோள்கள் இந்தியாவில் விளையாட்டு விளையாட்டுகளில் இந்திய தேசிய அணிகள்
683367
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சல்கான் நகர் சட்டப்பேரவைத் தொகுதி
சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதி (Jalgaon City Assembly constituency) என்பது மேற்கு இந்திய மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில்ஒன்றாகும்.சல்கான் நகர் தொகுதியானது, சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்கள் 164,987, பெண்கள் 143,775 மொத்தம் 308,762 ஆகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2019 2019 இல், சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதியின் மொத்தம் வாக்களர்களின் எண்ணிக்கை 401328 ஆகும். மொத்த செல்லுபடியான வாக்குகள் 182127. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுரேஷ் தாமு போலே 113310 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் அபிசேக் சாந்தாராம் பாட்டீல் மொத்தம் 48,464 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார். மேலும் காண்க சல்கான் மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் ஜள்காவ் மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683369
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D
விசாகா ராவத்
விசாகா ராவத் மும்பையைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சிவசேனா கட்சியினைச் சேர்ந்தவர். ராவத் பெருநகர மும்பை மாநகராட்சி முன்னாள் மாநகரத் தந்தையாக இருந்தார். 1999 முதல் 2004 வரை மகாராட்டிரா சட்டப்பேரவையில் தாதர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். வகித்தப் பதவிகள் 1997: பெருநகர மும்பை மாநகராட்சி உறுப்பினர் 1997: பெருநகர மும்பை மாநகராட்சி உறுப்பினர் 1999: மகாராட்டிரா சட்டப்பேரவை உறுப்பினர் 2010 துணைத் தலைவர், சிவ சேனா 2017: பெருநகர மும்பை மாநகராட்சி உறுப்பினர் 2017: குடிமைப் பணிகள் குழுவின் தலைவர், பெருநகர மும்பை மாநகராட்சி 2018: பெருநகர மும்பை மாநகராட்சி அவைத்தலைவர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிவசேனா முகப்புப்பக்கம் பிரண்முன்பாய் மகாகர்பாலிகா சிவ சேனா அரசியல்வாதிகள் வாழும் நபர்கள்
683373
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம்
சுபாங் ஆலாம் எல்ஆர்டி நிலையம் அல்லது சுபாங் ஆலாம் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Subang Alam LRT Station; மலாய்: Stesen LRT Alam Megah; சீனம்: 梳邦阿南) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சா ஆலாம், சுபாங் ஆலாம், அரோமா துரோப்பிக்கா (Aroma Tropika) ஆகிய சுற்றுப் புறங்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் ஆலாம் மேகா தேசியப் பள்ளி 2-க்கு (Sekolah Kebangsaan Alam Megah 2) அருகில் அமைந்துள்ளது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடிக்கிறது. சுபாங் ஆலாம் நிலையம் சா ஆலாம், சுபாங் ஆலாம் பகுதியில் (Subang Alam) அமைந்து இருப்பதால், சுபாங் ஆலாம் எனும் பெயர் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சா ஆலாம் மாநகராட்சி சா ஆலாம் மாநகராட்சி (Shah Alam City Council) (SACC); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் சா ஆலாம் மாநகரம்; பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதி; கிள்ளான் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஆகிய நகர்ப் பகுதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த ஆனையம் 7 ​​திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் குறிப்பு: இந்தப் பேருந்துச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் #யூஎஸ்ஜே சுபாங் ஜெயா கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Subang Alam LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683375
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%28%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%29
இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) Indian Congress (Socialist) என்பது 1978 முதல் 1986 வரை இந்தியா இருந்த ஒரு அரசியல் கட்சியாகும். இந்திய தேசிய காங்கிரசில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (உர்சு) என்று அழைக்கப்பட்டது, இதற்கு டி. தேவராசு உர்சு தலைமை தாங்கினார். 1977 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1978 இல் தனது தாய்க் கட்சியிலிருந்து பிரிந்தது இந்திய தேசிய காங்கிரசு (உர்சு). இந்திய தேசிய காங்கிரசில் இருந்து, கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மற்றும் முதலமைச்சர்கள் ஏ. கே. ஆண்டனி, சரத் பவார், தேவ் காந்த் பாருவா, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, சரத் சந்திர சின்ஹா, கே. பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் முகமது யூனுஸ் சலீம் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரசு (உர்சு) கட்சிக்கு சென்றனர். 1981 அக்டோபரில் சரத் பவார் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றபோது, கட்சியின் பெயர் இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) என்று மாற்றப்பட்டது. மேலும் காண்க இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த கட்சிகள் மேற்கோள்கள் 1978இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
683376
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
புரோப்பேனமைடு
புரோப்பேனமைடு (Propanamide) என்பது C3H7NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். CH3CH2C=O(NH2). என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. புரோப்பேனாயிக்கு அமிலத்தினுடைய அமைடு சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இந்த கரிமச் சேர்மம் ஓர் ஒற்றைப்-பதிலீடு செய்யப்பட்ட அமைடு ஆகும். அமைடு குழுவின் கரிமச் சேர்மங்கள் பல்வேறு கரிம செயல்முறைகளில் வினைபுரிந்து பிற பயனுள்ள சேர்மங்களை உருவாக்குகின்றன. தயாரிப்பு யூரியா மற்றும் புரோப்பேனாயிக்கு அமிலம் ஆகியவற்றுக்கு இடையே நிகழும் ஒடுக்க வினையின் மூலம் புரோப்பேனமைடு சேர்மத்தைத் தயாரிக்கலாம்: (NH2)2CO + 2CH3CH2COOH -> CH3CH2CO(NH2) + H2O + CO2 அல்லது அமோனியம் புரோப்பியோனேட்டை நீர் நீக்க வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். (NH4)CH3CH2COO -> CH3CH2CONH2 + H2O வினைகள் புரோப்பேனமைடு ஓர் அமைடாக இருப்பதால் எத்திலமீன் வாயுவை உருவாக்கப் பயன்படும் ஆஃப்மேன் மறுசீரமைப்பு வினையில் இது பங்கேற்க முடியும். மேற்கோள்கள் புரோப்பியோனமைடுகள் கரிமச் சேர்மங்கள்
683377
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சாலிமர் தொடருந்து நிலையம்
சாலிமர் தொடருந்து நிலையம் (Shalimar railway station (SHM), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா பெருநகரப் பகுதியான ஹவுராவுக்கு அருகில் உள்ள சிப்பூர் எனுமிடத்தில் உள்ளது. இது ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ளது. மேலும் இது கொல்கத்தா மெட்ரோவின் ஐந்து பெரிய நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மற்றவைகள் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம், சியால்தா தொடருந்து நிலையம், கொல்கத்தா தொடருந்து நிலையம், சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம் ஆகும். இதனையும் காண்க கொல்கத்தா மெட்ரோ கொல்கத்தா தொடருந்து நிலையம் ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம் சியால்தா தொடருந்து நிலையம் சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம் சாலிமர் சென்னை வாராந்திர அதிவிரைவு வண்டி மேற்கோள்கள் கொல்கத்தாவிலுள்ள தொடருந்து நிலையங்கள்
683380
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கொல்கத்தா தொடருந்து நிலையம்
கொல்கத்தா தொடருந்து நிலையம் (Kolkata railway station (KOAA), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான வடக்கு கொல்கத்தாவில் 2006ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொடருந்து நிலையம் ஆகும்.இந்நிலையம் 6 நடைமேடைகள் கொண்டது. 2006ஆம் ஆண்டிற்கு முன்னர் இவ்விடத்தில் சித்பூர் தொடருந்து நிலையம் இருந்தது. கொல்கத்தாவின் 5 பெரிய தொடருந்து நிலையங்களில் இதுவம் ஒன்றாகும். இந்நிலையம் கொல்கத்தா மெட்ரோ நிலையங்களின் தலைமையகமாக உள்ளது. இந்நிலையத்திலிருந்து நாள்தோறும் 25 தொடருந்துகளும்.6 இலட்சம் பயணிகளும் பயணிக்கின்றனர். படக்காட்சிகள் இதனையும் காண்க கொல்கத்தா மெட்ரோ ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம் சியால்தா தொடருந்து நிலையம் சாந்த்ராகாச்சி தொடருந்து நிலையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் website கொல்கத்தா கொல்கத்தாவிலுள்ள தொடருந்து நிலையங்கள்
683382
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
இராமலிங்கம் சந்திரசேகர்
இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar, பிறப்பு: 22 சனவரி 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் அமைச்சரும் ஆவார். தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினரான இவர், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2001 முதல் 2010 வரையும் இருந்துள்ளார். பின்னர் 2024 நவம்பர் முதல் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக உள்ளார். இவர் அனுர குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் 2024 நவம்பர் 18 முதல் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் இலங்கை அமைச்சர்கள் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் 1963 பிறப்புகள் இலங்கை இந்துக்கள் இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்
683385
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
புரோமோ அனிலின்
புரோமோ அனிலின் (Bromoaniline) என்பது C6H6BrN என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்திற்கு மூன்று மாற்றியன்கள் உள்ளன. அரோமாட்டிக்கு வளையத்தில் புரோமின் அணுவானது ஆர்த்தோ, மெட்டா, பாரா என மூன்று நிலைகளிலும் மாறி மாறி இணைந்திருப்பதால் இம்மாற்றியங்கள் தோன்றுகின்றன. அவை: 2-புரோமோ அனிலின் (o-புரோமோ அனிலின்) 3-புரோமோ அனிலின் (m-புரோமோ அனிலின்) 4-புரோமோ அனிலின் (p-புரோமோ அனிலின்) மேற்கோள்கள் அனிலின்கள் புரோமோபென்சீன் வழிப்பெறுதிகள் கரிமச் சேர்மங்கள்
683396
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம்
புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் அல்லது புத்ரா அயிட்ஸ் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Putra Heights LRT Station; மலாய்: Stesen LRT Putra Heights; சீனம்: 布特拉高原站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், சிலாங்கூர், சா ஆலாம், சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ், பெர்சியாரான் புத்ரா இண்டா அருகில் அமைந்துள்ளது. அமைவு பிரசரானாவின் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையத்திற்குப் பிறகு, இந்த நிலையத்தில் தான் கிளானா ஜெயா வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய இரு வழித்தடங்களும் இணைகின்றன. பிரசரானாவின் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 25 நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் சூன் 2016-இல், திறக்கப்பட்டது. சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருப்பதால், புத்ரா அயிட்ஸ் எனும் பெயர் இந்த நிலையத்திற்கும் சூட்டப்பட்டது. தனித்தனி வழித்தடங்கள்= கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 2 பக்க மேடைகள் மற்றும் 1 தீவு மேடையுடன் நான்கு மேடைகளைக் கொண்டுள்ளது. இரண்டு வழித்தடங்களிலும் உருவாக்கப்பட்ட வெவ்வேறு தொடருந்து அமைப்பின் காரணமாக, அவை ஒரே வழித்தடத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அதற்குப் பதிலாக அவற்றுக்கான தனித்தனி வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன. புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம், சிறப்பான ஓர் உள்கட்டமைப்பைக் கொண்ட நிலையமாக அறியப்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் காட்சியகம் புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்: மேலும் காண்க குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்; இதே போன்ற பரிமாற்றத் தளத்தைக் கொண்டது கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் #யூஎஸ்ஜே சுபாங் ஜெயா கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Putra Heights LRT Station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683398
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
குராமைட்டு
குராமைட்டு (Kuramite) என்பது Cu3SnS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சிடாணைட்டு குழு கனிமமாகக் கருதப்படும் இது சல்பைட்டு வகை கனிமமாகும். உசுபெக்கிசுதானில் உள்ள சட்கல்-குராமின்சுகி மலைகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள கோச்புலாக்கு Au-Ag-Te படிவுகளில் குராமைட்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தோற்றம் குராமைட்டு கனிமம் தங்க-சல்பைடு-குவார்ட்சு இழைகளில் கோல்டுபீல்டைட்டு கனிமத்துடன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உசுபெக்கித்தானில் உள்ள கோச்புலாக்கு படிவுகளில் இது காணப்படுகிறது. நுண்ணிய படிகங்களாகவும் குராமைட்டு தோன்றுகிறது. ஆர்க்டிக் பெருங்கடல், அர்கெந்தினா, சிலி, காங்கோ, கிரீசு, அங்கேரி, சப்பான், ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குராமைட்டு கண்டறியப்பட்டுள்ளது. இயற்பியல் பண்புகள் மோவின் அளவு கோலில் குராமைட்டின் கடினத்தன்மை 5 ஆகும். மேலும் இதன் அடர்த்தி 4.56 ஆகும். உலோகப் பளபளப்பும் உலோகக் கோடுகளுடன் கூடிய ஒளிபுகா எஃகு சாம்பல் நிறமாகவும் குராமைட்டு காணப்படுகிறது. வேதிப் பண்புகள் குராமைட்டின் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu3SnS4 என்பதாகும். இரும்பு, துத்தநாகம் மற்றும் இண்டியம் தனிமங்கள் இதனுடன் இருக்கும் அசுத்தங்களாகும். எக்சுகதிர் படிகவியல் ஆய்வு குராமைட்டின் எக்சு-கதிர் ஆய்வு தூள் முறையைப் பயன்படுத்தி ஆராயப்பட்டது. உருசியாவின் அறிவியல் அகாடமியின் கனிமவியல் ஆய்வகத்தில், வசோவா என்பவரால் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. குராமைட்டு கனிமம் சிடானைட்டு -கெசுட்டரைட்டு குழுவுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது. a=5.445±0.005 Å, c=10.75±0.02 Å, c/a=1.972 என்ற அலகு செல் அளவுருக்களும் கண்டறியப்பட்டன. மேற்கோள்கள் செப்புக் கனிமங்கள் வெள்ளீயக் கனிமங்கள் சல்பைடு கனிமங்கள்
683406
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
இசுட்ரோன்சியம் புளோரைடு
இசுட்ரோன்சியம் புளோரைடு (Strontium fluoride) என்பது SrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இசுட்ரோன்சியம்(II) புளோரைடு , இசுட்ரோன்சியம் இருபுளோரைடு, இசுட்ரோன்சியம் டைபுளோரைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இசுட்ரோன்சியத்தின் புளோரைடு உப்பான இது நொறுங்கக் கூடியதாகவும் வெண்மையான படிகத் திண்மமாகவும் காணப்படுகிறது. இயற்கையில் இசுட்ரோன்சியோபுளோரைட்டு கனிமம் போன்ற தோற்றத்தில் இக்கனிமம் காணப்படுகிறது. தயாரிப்பு ஐதரோபுளோரிக் அமிலத்துடன் இசுட்ரோன்சியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து இசுட்ரோன்சியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது. கட்டமைப்பு இசுட்ரோன்சியம் புளோரைடு புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. வாயு நிலையில் SrF2 என்ற இம்மூலக்கூறு நேரியல் அல்லாத அமைப்புடன் F−Sr−F கோணம் தோராயமாக 120° அளவைக் கொண்டுள்ளது. இணைதிறன் கூடு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கைக்கு கோட்பாட்டிற்கு இது விதிவிலக்காகும். ஏனெனில் இக்கொள்கை ஒரு நேரியல் கட்டமைப்பைக் கணிக்கும். இணைதிறன் கூட்டுக்கு கீழே உள்ள கூட்டில் உள்ள d ஆர்பிட்டால்களின் பங்களிப்புகள் பொறுப்பு என்று முன்மொழிவதற்கு தொடக்க நிலை கணக்கீடுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மற்றொரு முன்மொழிவு என்னவென்றால், இசுட்ரோன்சியம் அணுவின் எலக்ட்ரான் மையத்தின் முனைப்புத்திறன் Sr−F பிணைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் தோராயமான மின்னழுத்த விநியோகத்தை உருவாக்குகிறது. பண்புகள் இசுட்ரோன்சியம் புளோரைடு கிட்டத்தட்ட நீரில் கரையாது. 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் கரைதிறன் சமநிலை அளவு (Ksp) தோராயமாக 2.0x10−10 ஆகும். கண்கள் மற்றும் தோலில் இசுட்ரோன்சியம் புளோரைடு எரிச்சலூட்டும். உள்ளிழுக்கும் போது அல்லது உட்கொள்ளும்போது தீங்கு விளைவிக்கும். CaF2 மற்றும் BaF2 சேர்மங்கள் போன்றே, SrF2 உயர்ந்த வெப்பநிலையில் மீ அயன கடத்துத்திறனைக் காட்டுகிறது. இசுட்ரோன்சியம் புளோரைடு வெற்றிட புற ஊதா (150 nm) முதல் அகச்சிவப்பு (11 μm) வரையிலான அலைநீளங்களில் ஒளி புகும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் ஒளியியல் பண்புகள் கால்சியம் புளோரைடு மற்றும் பேரியம் புளோரைடு ஆகியற்றுக்கு இடைநிலையில் உள்ளன. பயன்கள் இசுட்ரோன்சியம் புளோரைடு ஒரு சிறிய அளவிலான சிறப்புப் பயன்பாடுகளுக்கு ஒளியியல் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வில்லைகள் மீது ஒளியியல் பூச்சு போன்ற பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்க ஐசோடோப் வெப்பமின் உற்பத்தி இயந்திரங்களில் கதிரியக்க ஐசோடோப்பு கடத்தியாக இசுட்ரோன்சியம் -90 பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் புளோரைடுகள் இசுட்ரோன்சியம் சேர்மங்கள் ஒளியியல் பொருட்கள் புளோரைட்டு படிகக் கட்டமைப்பு கார மண் உலோக ஆலைடுகள்
683407
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மக்கபேயர்கள்
மக்கபேயர்கள் (Maccabees), எலனியக் காலத்தில், யூதேயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை செலூகிக்கியப் பேரரசிடமிருந்து கிளர்ச்சிகள் மூலம் கைப்பற்றி மக்கபேய அரசை நிறுவிய யூத போர் வீரர்கள் ஆவார். . இந்த மக்கபேய யூதர்கள் மக்கபேய அரசை கிமு 140 முதல் கிமு 37 முடிய ஆட்சி செய்தனர். வரலாறு மேற்காசியாவை ஆட்சி செய்த பண்டைய கிரேக்க செலூகிக்கியப் பேரரசர் அந்தியோகஸ் IV எபிபேன்ஸ் (கிமு 175- 164) ஆட்சிக் காலத்தில், எருசலேத்தில் யூத மத குரு ஜேசன் இருந்தார். யூதேயாவின் ஆளுநர் மூன்றாம் ஒனியசை பதவியிலிருந்து நீக்கி, மெனலாஸ் என்ற யூதரை நியமித்தார் பேரரசர் அந்தியோகஸ். இதனால் மெனெலாஸ் ஓனியாசை படுகொலை செய்ததுடன், மெனலாசின் சகோதரர் லிசிமாச்சஸ் சாலமன் கோவிலிலின் புனித பாத்திரங்களை திருடினார். ஓனியாசின் கொலைக்காக மெனலாஸ் கைது செய்யப்பட்டார் மற்றும் பேரரசர் அந்தியோகஸ் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் அவர் சிக்கலில் இருந்து வெளியேற கையூட்டு கொடுத்தார். யூத மத குரு ஜேசன் மெனலாஸை ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு மீண்டும் பிரதான ஆசாரியரானார். கிமு 168ஆம் ஆண்டில் செலுக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோகஸ் (ஆட்சிக் காலம் கிமு 223–187) சாலமோனின் கோயிலைக் கொள்ளையடித்ததுடன், எருசலேமைத் தாக்கி, பெண்களையும் குழந்தைகளையும் சிறைப்பிடித்தார். இதனால் யூதேயா பகுதியில் மக்கபேய யூதர்கள், கிரேக்க செலூகிக்கியப் பேரரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து, யூதேயாவில் மக்கபேய அரசை நிறுவினர். மேற்கோள்கள் மேலும் படிக்க Bickerman, Elias J. 1979. The God of the Maccabees: Studies on the Meaning and Origin of the Maccabean Revolt. Leiden, The Netherlands: Brill. Cohen, Shaye J. D. 1987. From the Maccabees to the Mishnah. Philadelphia: Westminster. Grabbe, Lester L. 2010. An Introduction to Second Temple Judaism: History and Religion of the Jews in the Time of Nehemiah, the Maccabees, Hillel, and Jesus. London: T & T Clark. Harrington, Daniel J. 1988. The Maccabean Revolt: Anatomy of a Biblical Revolution. Wilmington, Delaware: Michael Glazier. Johnson, Sara Raup. 2004. Historical Fictions and Hellenistic Jewish Identity: Third Maccabees In Its Cultural Context. Berkeley: University of California Press. வெளி இணைப்புகள் Jewish Encyclopedia: Maccabees, The யூதர்கள்
683410
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம்
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் அல்லது செந்தூல் தீமோர் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Sentul Timur LRT Station; மலாய்: Stesen LRT Sentul Timur; சீனம்: 冼都东) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், கோலாலம்பூர், செந்தூல் நகர்ப்புறத்தில் அமைந்துள்ளது. நடுத்தர மற்றும் குறைந்த விலை மனைத்திட்டங்களால் சூழப்பட்டுள்ள இந்த நிலையத்திற்கு அருகில் பங்சாபுரி மெலூர் (Pangsapuri Melur) எனும் பிரபலமான அடுக்குமாடி மனை வளாகம் உள்ளது. பொது செந்தூல் என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது செந்தூல் பாராட் (Sentul Barat) மற்றும் செந்தூல் தீமோர் (Sentul Timur) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. செந்தூல் சாலை மற்றும் ஈப்போ சாலை ஆகியவை இப்பகுதிகளுக்குச் சேவை செய்யும் இரண்டு முக்கிய சாலைகள் ஆகும். இந்தச் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம், ஒரு பரிமாற்ற நிலையமாக நியமிக்கப்படாவிட்டாலும், இதே செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திலிருந்து பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடத்தில் உள்ள செந்தூல் கொமுட்டர் நிலையம் வரை பயணிகள் நடந்தே செல்லலாம். நடந்து செல்ல ஏறக்குறைய 15 - 20 நிமிடங்கள் பிடிக்கும். வரலாறு இந்த நிலையம் அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்கள் மூலமாக்ச் சேவை செய்யப்படுகிறது. முன்னாள் இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, 1998-இல் இந்த நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையம் செந்தூல் தீமோர் நகரையும்; மற்றும் சுற்றியுள்ள பகுதிகளையும் இணைக்கும் இலக்கைக் கொண்டது. செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. ஒப்பந்தம் டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 25 நிலையங்களைக் கொண்ட அசல் அமைப்பு (27.4 கிமீ - 17.0 மைல்) நீளம் கொண்டது. இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. முதல் கட்டம் (12.4 கிமீ - 7.7 மைல்); 14 நிலையங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டம் (15 கிமீ - 9.3 மைல்); 11 நிலையங்களைக் கொண்டது. இரண்டு கட்டங்களும் முறையே டிசம்பர் 1996 மற்றும் சூலை 1998-இல் திறக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலைய தள அமைப்பு காட்சியகம் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்: மேலும் காண்க செந்தூல் செந்தூல் கொமுட்டர் நிலையம் கம்போங் காசிப்பிள்ளை கம்போங் பத்து நிலையம் பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
683416
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%20%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2
அசோக ரன்வல
அசோக ரன்வல (Ashoka Ranwala) இலங்கை அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 2024 நவம்பர் 21 இல் நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார், ஆனாலும் 22 நாட்களில் பதவியில் இருந்து விலகினார். இவர் இளவயதிலேயே மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். அரசியலில் தொழிற்சங்கப் பணிகள் ரன்வல இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் சப்புகசுகந்தை சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றினார். 1989 இல் 1987-89 ஜேவிபி புரட்சியின் போது, யப்பான் சென்று 1994 இல் நாடு திரும்பினார். மக்கள் விடுதலை முன்னணியின் பொது ஊழியர் சங்கத்தில் இணைந்து, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2023 மார்ச்சில் கட்டாய ஓய்விற்கு செல்லுவதற்கு முன்னர் இவர் இலங்கை பெட்ரோலியப் பொது ஊழியர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். உள்ளாட்சி மாகாணசபை அரசுகள் 2000 முதல் 2004 வரை ரன்வல பியகமை பிரதேச சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 முதல் 2009 வரையும், பின்னர் 2014 முதல் 2019 வரையும் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தார். மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது, ​​சபுகஸ்கந்தை காவல்துறைக் குற்றப் பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2018 சனவரியில் இவர் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். கல்வித்தகைமை குறித்த சர்ச்சையும் பதவி விலகலும் அசோக ரன்வல தனது தொடக்கக் கல்வியை யட்டியான தொடக்கப் பாடசாலையிலும், ஹெனிகம மத்திய கல்லூரியிலும் கற்றார். 2024 திசம்பரில், இலங்கை தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் கூறியபடி அவருக்குப் உயர்கல்விப் பட்டம் இருப்பதை நிரூபிக்குமாறு ரன்வலவுக்கு சவால் விடுத்தார். தேசப்பிரிய, சபாநாயகர் தனது கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால், ஆளும் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ரன்வல ஒரு பொது அறிக்கையில் தனது உயர்கல்வித் தகுதிகளில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், சப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் அடங்கும் என்று கூறி விமர்சனத்தை நிராகரித்தார். இலங்கை நாடாளுமன்ற அதிகாரபூர்வ இணையத்தளம் "கலாநிதி" பட்டத்தை நீக்கியுள்ளதாக நியூசுவயர் ​​செய்தி வெளியிட்டது. இணையத்தளத்தின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளின் அடிப்படையில், 24 மணி நேரத்திற்குள் திருத்தம் நிகழ்ந்ததாக சுயாதீன ஆய்வாளர் கலாநிதி சஞ்சனா ஹட்டொடுவா உறுதிப்படுத்தினார். ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்ட போது, ​​அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிச, "அதிகாரபூர்வ பதிவுகளை சரிபார்க்கப்பட்ட சான்றிதழ்களுடன் சீரமைப்பதற்கான ஒரு நிர்வாகத் தீர்மானமே தலைப்பை நீக்கியதாக" குறிப்பிட்டார். இருப்பினும், கலாநிதிப் பட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை. இந்த சர்ச்சை பல எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளால் கோரப்படும் கல்வி, கௌரவப் பட்டங்கள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்தனர். முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாகத் தெரிவித்தது. ரன்வலவின் கல்வித் தகுதிகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், 22 நாட்களே பதவி வகித்த நிலையில், 2024 திசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் வாழும் நபர்கள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசியல்வாதிகள் கம்பகா மாவட்ட நபர்கள் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள் சிங்கள அரசியல்வாதிகள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் இலங்கை தொழிற்சங்கவாதிகள்
683419
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
செவந்த் சானல் கம்யூனிகேசன்ஸ்
செவந்த் சேனல் கம்யூனிகேசன்ஸ் (Seventh Channel Communications) என்பது 1985 இல் துவக்கப்பட்ட ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது 1990களில் பல தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியது. இது மணிக்கம் நாராயணனின் தலைமையில் உள்ளது. வரலாறு செவந்த் சேனல் கம்யூனிகேசன்ஸ் 1985 ஆம் ஆண்டில் மாணிக்கம் நாராயணனால் நிறுவப்பட்டது. ஒளிப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவக்கிய பிறகு, மணிக்கம் தூர்தர்சனுக்காக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் துவங்கினார். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 1990களில் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கான முதன்மை தயாரிப்பு நிறுவனமாக மாறியது. நிறுவனம் அதன் செயல்பாட்டின் உச்சத்தினல் இருந்தபோது சிவகுமார், ரோஜா , எஸ். பி. பாலசுப்பிரமணியம் உட்பட பல திரைப்பட நடிகர்களை தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்ற வைத்தது. இந்த நிறுவனம் உணவக வணிகம், நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல், பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள், தமிழ்நாடு திரைப்பட விழா ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் நடித்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு (2006) படத்தை ரோஜா கம்பைன்ஸ் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கத் துவக்கி நின்றுபோன படத்தின் தயாரிப்பை செவந்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் ஏற்றது. அறிமுக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி புதுமுகங்கள் சஞ்சய், ஏக்தா கோஸ்லா, லிஸ்னா, பூஜா ஆகியோர் நடித்த முன்தினம் பார்த்தேனே (2010), பார்த்திபன் மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்த வித்தகன் (2011) ஆகிய படங்களைத் தயாரித்தது. 2010 களின் முற்பகுதியில், செவந்த் சேனல் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து மகாபாரதம் (2013) தொடரை தமிழில் மொழிமாற்றம் செய்தது. திரைப்படவியல் திரைப்படத் தயாரிப்பாளராக தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக எத்தனை மனிதர்கள் ஸ்ரீரங்கத்து தேவதைகள் கனவுகள் இலவசம் அலை ஓசை வாழ்க்கை மறக்கமுடியவில்லை பெண்மணம் மறுபடியும் அவள் உறவுகள் ஒரு தொடர்கதை மறுபக்கம் மதுமிதா பாண்டியன் பரிசு நதி எங்கே போகிறது மேற்கோள்கள் சென்னையில் உள்ள திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்
683423
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
பிளியோசிமேட்டா
பிளியோசிமேட்டா (Pleocyemata) என்பது 1963ஆம் ஆண்டில் மார்ட்டின் பர்கன்ரோட் என்பவரால் உருவாக்கப்பட்ட பத்துக்காலிகள் ஓட்டுமீன்களின் துணை வரிசை ஆகும். பர்க்கன்ரோடின் வகைப்பாடு முந்தைய துணை வரிசைகளான நெட்டான்சியா மற்றும் ரெப்டான்சியா ஒற்றை மரபு வழிக் குழுக்களாக டென்ட்ரோபிரான்சியாட்டா (இறால்) மற்றும் பிளியோசைமேட்டாவினைக் கொண்டது. பிளியோசிமேட்டாவில் ரெப்டாண்டியாவின் அனைத்துச் சிற்றினங்களும் அடங்கும் (நண்டு, சிங்கி இறால், கிரேபிஷ் மற்றும் பிறவற்றை உள்ளடக்கியது). இதனுடன் இசுடெனோபோடைடியா (இதில் "குத்துச்சண்டை இறால்" அல்லது "முடிதிருத்தும்-துருவ இறால்" என்று அழைக்கப்படும்) மற்றும் உண்மையான இறால்களைக் கொண்ட கரிடியா ஆகியவை உள்ளன. உடற்கூறியல் பிளியோசிமேட்டாவின் அனைத்துச் சிற்றினங்களும் பல சிறப்பம்சங்களால் ஒன்றிணைக்கப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது- கருவுற்ற முட்டைகள் பெண்ணால் அடைகாக்கப்படுவதாகும். மேலும் சூயியா எனும் இளம் உயிர்கள் பொறிப்பதற்குத் தயாராக இருக்கும் வரை இவற்றின் வயிற்றின் அடிப்பகுதிகளில் நீந்துக் கால்களுக்கிடையே ஒட்டிக்கொண்டே இருக்கும். இந்தப் பண்பு இக்குழுவிற்கு இப்பெயரைக் கொடுக்கிறது. டென்ட்ரோபிராங்கியாட்டாவில் காணப்படும் அனைத்து உயிரிக் கிளைகளுக்கும் மாறாக பிளியோசிமேட்டாவில் ஓர் ஏடானா செவுள் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. வகைப்பாட்டியல் கீழேயுள்ள கிளை வரைபடம், வூல்ப் மற்றும் பலரின் (2019) பகுப்பாய்விலிருந்து, பெரிய வரிசையில் டென்ட்ரோபிராங்கியாட்டாவினப் பல சகோதரக் குழுக்களாகக் காட்டுகிறது. பிளியோசிமேட்டா பின்வரும் மீப்பெரும் வரிசைகளைக் கொண்டுள்ளது. இசுடெனோபோடைடியா (இசுடெனோபோடைடியா இறால்) கரிடியா (கரிடியா இறால்) புரோகேரிடிடே அசெலாட்டா (முள், காலணி, எரிச்சல் சிங்கி இறால்) பாலிசெலிடா (கடலடிவாழ் ஓட்டுடலி) கிளைபீடியா (கிளைபியோய்டு சிங்கி இறால்) அசுடாசிடியா (நண்டு, பவளப்பாறை, நண்டு, கிரேபிஷ்) அக்சிடியா (மண் சிங்கி இறால், பேய் இறால்) ஜெபிடியா (சேற்றுச் சிங்கி இறால், சேற்று நண்டு) அனோமுரா (துறவி நண்டு, சிங்கி இறால்) பிராக்கியூரா (நண்டு) மிகப் பழமையான புதைபடிவப் பேரினமாக டெவோனியக் காலத்தினைச் சார்ந்த பாலியோபாலேமன் உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கணுக்காலி துணைவரிசை
683426
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81
அகாந்தினோபசு
அகாந்தினோபசு கிப்போசசு (Acanthinopus gibbosus) என்பது அழிந்துபோன இறால் சிற்றினமாகும். இது இது அகாந்தினோபசு பேரினத்தில் வைக்கப்படுகிறது. இது வடக்கு இத்தாலியில் உள்ள சோர்சினோ சுண்ணாம்புக் கல்லின் நோரியன் (மேல் ட்ரையாசிக்) வண்டல்களில் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கோள்கள் கணுக்காலி பேரினங்கள்
683427
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE
அடியோயிடா
அடியோயிடா (Atyoida) என்பது அட்டியிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் இறால்களின் ஒரு பேரினம் ஆகும். இந்தப் பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பசிபிக் தீவுக் குழுவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும். இதன் மாதிரி இனம், அடியோடா பிசுல்காட்டா, ஹவாய் நாட்டில் காணப்படுகிறது. இதனை 1840இல் ஜான் விட் ராண்டால் விவரித்தார். சிற்றினங்கள் தற்போது ஐந்து சிற்றினங்கள் அடியோயிடா பேரினத்தின் கீழ் உள்ளன. அடியோயிடா பிசுல்காட்டா ராண்டால், 1840 அடியோயிடா சேசி டி மசன்கோர்ட், மார்க்வெட் & கீத், 2024 அடியோயிடா பிலிப்சு (நியூபோர்ட், 1847) அடியோயிடாசெரட்டா (இசுபென்சு பேட், 1888) அடியோயிடா தாகிதென்சிசு இசுடிம்ப்சன், 1860 மேற்கோள்கள் கணுக்காலி பேரினங்கள் அகணிய உயிரிகள்
683428
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
தெல்குலோசியா
தெல்குலோசியா (Delclosia) என்பது பத்துக்காலிகள் வரிசையில் அழிந்துபோன இறால் பேரினமாகும். இதில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. இவை: தெல்குலோசியா மார்டினெல்லி ரபாடா, 1993 தெல்குலோசியா ரோசெல்லி (வயா, 1971) மேற்கோள்கள் கணுக்காலிகள் கணுக்காலி பேரினங்கள் இறால்
683429
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
திலசைட்டு
திலசைட்டு (Tilasite) என்பது CaMg(AsO4)F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனேட்டு கனிம ரத்தினக்கல்லாக இது அரியப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் காணப்படும் திலசைட்டு கனிமம் மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 5 என்ற கடினத்தன்மை மதிப்பைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் சுவீடனுக்கான சுரங்க இயக்குநராகவும், வாசுட்மேன்லாந்தின் பிராந்திய ஆளுநராகவும் இருந்த டேனியல் திலசின் நினைவாக கனிமத்திற்கு திலசைட்டு எனப் பெயரிடப்பட்டது. 1895 ஆம் ஆண்டில் சுவீடியப் புவியியலாளர் எச்சால்மர் சுச்சோக்ரென் இப்பெயரைச் சூட்டினார். திலசைட்டு முதன்முதலில் சுவீடனின் வர்ம்லாந்து மாகாணத்தில் லாங்பன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் பிளாத்து மற்றும் பலர். அரிசோனாவின் பிசுபீ அருகே வகைப்படுத்தப்பட்ட மாதிரிகளை கண்டறிந்தனர். 1994 ஆம் ஆண்டில், வடக்கு மாசிடோனியாவின் நெச்சிலோவோவிற்கு அருகில் பெர்மனெக்கு என்பவர் திலாசைட்டைக் கண்டுபிடித்தார். பன்னாட்டு கனிமவியல் சங்கம் திலசைட்டு கனிமத்தை Til என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் புளோரின் கனிமங்கள் ஆர்சனிக் கனிமங்கள் கனிமங்கள் மக்னீசியக் கனிமங்கள் ஆலைடு கனிமங்கள்
683430
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE
இராமநாதன் அர்ச்சுனா
மரு. இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna, பிறப்பு: 28 சூன் 1986) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். இவர் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 17இல் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார். பணி அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். 2024 சூலையில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தியதற்காக இவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். இதன் மூலம் அர்ச்சுனா ஒரு பிரபலமான நபராக அடையாளப்படுத்தப்பட்டார். அரசியலில் 2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். இச் சுயேட்சைக் குழு 27,855 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தைக் கைப்பற்றியது. அக்குழுவின் முதன்மை வேட்பாளரான அர்ச்சுனா 20,487 விருப்பு வாக்குகள் பெற்று முதலாவதாக வந்து நாடாளுமன்றம் சென்றார். மேற்கோள்கள் 1986 பிறப்புகள் வாழும் நபர்கள் யாழ்ப்பாணத்து நபர்கள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மருத்துவர்கள்
683432
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பெரைட்டு
பெரைட்டு (Perite) என்பது PbBiO2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 1960 ஆம் ஆண்டில் சுவீடனின் லாங்பானுக்கு வெளியே கனிமத்தை கண்டுபிடித்த சுவீடனின் புவியியல் ஆய்வின் சுவீடிய பொருளாதார புவியியலாளர் பெர் அடோல்ஃப் கெய்ச்சர் நினைவாக கனிமத்திற்கு பெரைட்டு எனப் பெயர் வழங்கப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெரைட்டு கனிமத்தை Pe என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. பண்புகள் பெரைடு கனிமம் Cmcm {C2/m 2/c 21/m} என்ற இடக்குழுவில் நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகமாகிறது. ஒளியியல் பண்புகளின் அடிப்படையில், பெரைட்டு திசை மாறுபாட்டுப் பண்பை கொண்டுள்ளது. அதாவது இக்கனிமத்தின் திசையைப் பொறுத்து ஒளியின் வேகம் மாறுபடும். நிறமற்றதாக காணப்படும் இக்கனிமம் பலவீனமான பல் நிறத் தோற்றங்களை அளிக்கிறது. மேற்கு ஐக்கிய அமெரிக்கா, தெற்கு ஆத்திரேலியா போன்ற இடங்களிலும் ஐரோப்பா முழுவதும் பெரைட்டு பரவியுள்ளது. படிகவியல் பெரைட்டு கனிமம் நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பைச் சேர்ந்ததாகும். மேலும் 2/மீ 2/மீ 2/மீ படிக வகுப்பின் பண்புகளைக் கொண்டுள்ளது. பெரைட்டில் மூன்று கண்ணாடி தளங்களும் மூன்று இரு மடங்கு சுழற்சி அச்சுகளும் உள்ளன. மேற்கோள்கள் பிசுமத் கனிமங்கள் கனிமங்கள் ஆலைடு கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள் ஈயக் கனிமங்கள்
683434
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
பகுதி வரிசையுள்ள கணம்
கணிதத்தில், பகுதி வரிசையுள்ள கணம் (Partially ordered set) என்பது, அதன் சில சோடி உறுப்புகளில், அவற்றிலுள்ள இரு உறுப்புகளும் ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்கனவாய் கொண்ட கணத்தைக் குறிக்கும். அதாவது பகுதி வரிசை கணத்தின் உறுப்புகளின் சில சோடிகளில், இரண்டில் எந்த உறுப்பு முந்தையதாகவும் எந்த உறுப்பு அடுத்ததாகவும் அமையும் என ஒப்பிட்டு, அதன்படி வரிசைப்படுத்த முடியும். "பகுதி" என்பது, அக் கணத்தில் எல்லாச் சோடிகளும் இவ்வாறாக ஒப்பிடத்தக்கனவாக இருக்கவேண்டியதில்லை என்பதை, குறிக்கிறது; அதாவது ஒப்பிட்டுக் கூறமுடியாத உறுப்புகளைக் கொண்ட சோடிகளும் அக்கணத்தில் இருக்கலாம்.. பகுதி வரிசையின் பொதுமைப்படுத்தலாக, முழு வரிசை அமைகிறது. முழு வரிசையுள்ள கணங்களில் அனைத்து சோடி உறுப்புகளும் ஒப்பிடத்தக்கவையாக இருக்கும். பகுதி வரிசை என்பது, எதிர்வு உறவு, எதிர்சமச்சீர் உறவு, கடப்பு உறவு ஆகிய மூன்று பண்புகளையுமுடையதொரு சீரான ஈருறுப்பு உறவாகும். பகுதி வரிசை கணம் என்பது, ஒரு கணம் , அக்கணத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதிவரிசை இரண்டும் கொண்ட ஒரு வரிசைச் சோடியாகும். அதாவது, பகுதி வரிசை கணம் எனில்: பகுதி வரிசையானது தெளிவானதாக அமையும் சூழலில், கணம் மட்டுமே பகுதிவரிசை கணமாக அழைக்கப்படுவதுமுண்டு. பகுதி வரிசை உறவுகள் பகுதி வரிசை என்ற பெயர் வழக்கமாக, எதிர்வு உறவு பகுதி வரிசை உறவுகளையே குறிக்கும். இக்கட்டுரையில் எதிர்வு உறவு பகுதி வரிசை உறவுகள், "கண்டிப்பற்ற" பகுதி வரிசை எனக் குறிப்பிடப்படுகின்றன. எனினும் சில நூலாசிரியர்கள் "கண்டிப்பான பகுதி வரிசை எனப்படும் எதிர்வற்ற பகுதி வரிசை உறவுகளையும் இதே பெயரால் குறிப்பிடுகின்றனர்.கண்டிப்பான பகுதி வரிசைகளையும் கண்டிப்பற்ற பகுதி வரிசைகளையும் Strict and non-strict partial orders can be put into a இருவழிக் கோப்பால் தொடர்பு படுத்தலாம். எனவே ஒவ்வொரு கண்டிப்பான பகுதி வரிசைக்கும் ஒரு தனித்த கண்டிப்பற்ற பகுதி வரிசை இருக்கும்; இதன் மறுதலையும் உண்மையாக இருக்கும். பகுதி வரிசைகள் ஒரு "வலுவிலா," எதிர்வு, அல்லது கண்டிப்பற்ற பகுதி வரிசையானது, பொதுவாக பகுதி வரிசை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது, எதிர்வு உறவு, எதிர்சமச்சீர் உறவு, கடப்பு உறவு ஆகிய மூன்று பண்புகளையுமுடையதொரு சீரான ஈருறுப்பு உறவாகும். அதாவது, கணம் இல் அமைந்த '≤' என்ற சீரான ஈருறுப்பு உறவு, பகுதி வரிசையாக இருந்தால் பின்வரும் முடிவுகளை நிறைவு செய்யும்: எதிர்வு உறவு: , அ.து ஒவ்வொரு உறுப்பும் தனக்குத்தானே தொடர்புடையது எதிர்சமச்சீர் உறவு: எனில், , அ.து. எந்த இரு வேறுபட்ட உறுப்புகளும் ஒன்றுக்கொன்று முந்தைய உறுப்பாக இராது. கடப்பு உறவு: எனில், . கண்டிப்பான பகுதி வரிசைகள் எதிர்வற்ற, வலுவான, அல்லது கண்டிப்பான பகுதி வரிசை (எதிர்வற்ற பகுதி வரிசை)யானது,கடப்பு உறவு, எதிர்வற்ற உறவு, சமச்சீரற்ற உறவு ஆகிய மூன்று பண்புகளையும் கொண்டதொரு சீரான ஈருறுப்பு உறவாகும். கணம் இல் அமைந்த '<' என்ற சீரான ஈருறுப்பு உறவு, எதிர்வற்ற பகுதி வரிசையாக இருந்தால் பின்வரும் முடிவுகளை நிறைவு செய்யும்: கடப்பு உறவு: if எனில், . எதிர்வற்ற உறவு: , அ.து ஒவ்வொரு உறுப்பும் தனக்குத்தானே தொடர்புடையதல்ல. சமச்சீரற்ற உறவு: எனில், ஆக இருக்காது. எதிர்வற்றதாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" ஒரு கடப்பு உறவானது சமச்சீரற்றதாகும். எனவே, மேலுள்ள வரையறையில் எதிர்வற்றமை அல்லது சமச்சீரின்மை ஆகிய இரண்டில் ஏதேனுமொன்று (இரண்டுமல்ல) விடுபட்டாலும் கூட வரையறை பொருத்தமானதாக இருக்கும். கண்டிப்பான, கண்டிப்பற்ற பகுதி வரிசை உறவுகளுக்கு இடையேயான தொடர்பு கணம் இன் மீது வரையறுக்கப்பட்டக் கண்டிப்பான பகுதி வரிசைகளும், கண்டிப்பற்ற பகுதி வரிசைகளும் நெருங்கிய தொடர்புடையவை. கணம் இன் மீது வரையறுக்கப்பட்ட என்ற கண்டிப்பற்ற பகுதிவரிசையிருந்து என்றமையும் உறவுகளையெல்லால் நீக்கிவிடுவதன் மூலமாகக், கண்டிப்பான பகுதிவரிசையைப் பெறலாம். அதாவது கண்டிப்பான பகுதிவரிசையானது கீழ்வரும் கணமாகும்: இதில், என்பது இன் முற்றொருமை உறவையும்; என்பது கண வேறுப்பாட்டையும் குறிக்கின்றன. மறுதலையாக, கணம் இன் மீது வரையறுக்கப்பட்ட என்ற கண்டிப்பற்ற பகுதிவரிசையோடு என்றமையும் உறவுகளையெல்லால் இணைப்பதன் மூலம் கண்டிப்பற்ற பகுதிவரிசையைப் பெறலாம். அதாவது கண்டிப்பற்ற பகுதிவரிசையானது கீழ்வரும் கணமாகும்: எனவே, என்பது கண்டிப்பற்ற பகுதிவரிசையெனில், அதற்குரிய கண்டிப்பான பகுதிவரிசை யானது கீழ்வரும் எதிர்வு உறவு ஆகும்: மறுதலையாக, என்ற கண்டிப்பான பகுதிவரிசைக்குரிய கண்டிப்பற்ற பகுதிவரிசை கீழ்வரும் எதிர்வு அடைப்பு உறவு ஆகும்: இரும வரிசைகள் என்ற பகுதிவரிசை உறவின் இரும வரிசை (அல்லது எதிர் வரிசை) என்பது இன் மறுதலை உறவாக ஐ எடுத்துக்கொண்டு வரையறுக்கப்படுகிறது. அதாவது, உண்மையாக "இருந்தால், இருந்தால் மட்டுமே", என்பதும் உண்மையாக இருக்கும். கண்டிப்பற்ற பகுதிவரிசையின் இரும வரிசையும் ஒரு கண்டிப்பற்ற பகுதிவரிசையாகவே இருக்கும். அதேபோல் கண்டிப்பான பகுதிவரிசையின் இரும வரிசையும் ஒரு கண்டிப்பான பகுதிவரிசையாகும். எடுத்துக்காட்டுகள் வழக்கமான விடச்-சிறியது-அல்லது-சமம் (≤,) என்ற உறவினால் வரிசைப்படுத்தப்பட்ட மெய்யெண்களின் கணம் (), பகுதிவரிசை கணமாகும். மெய்யெண்களின் கணம் இல், வழக்கமான விடச் சிறியது (<) என்ற உறவு கண்டிப்பான பகுதி வரிசையாகும். அதேபோல, விடப் பெரியது (>) என்ற உறவும் இன் மீது கண்டிப்பான பகுதி வரிசையாகும். எடுத்துக்கொள்ளப்படும் கணத்தின் எல்லா உட்களங்களும் கொண்ட கணம், உள்ளடங்கள் செயலால் வரிசைப்படுத்தப் படுகிறது (படம்: 1). இயல் எண்களின் கணம், வகுபடுதல் உறவால் வரிசைப்படுத்தப் படுகிறது (படம்:  3,  4) சான்றுகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ; each of which shows an example for a partial order OEIS el=A001035 Number of partially ordered sets ("posets") with n labeled elements (or labeled acyclic transitive digraphs) OEIS el=A000112 Number of partially ordered sets ("posets") with n unlabeled elements. இரும உறவுகள் வரிசை கோட்பாடு
683435
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கதிரேலைட்டு
கதிரேலைட்டு (Kadyrelite) என்பது Hg4(Br,Cl)2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 1987 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. பிரகாசமானது முதல் மங்கலான ஆரஞ்சு வரையிலான நிறத்தில் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2½ -3 என்ற கடினத்தன்மையைக் கொண்டுள்ளது. உருசியாவின் கதிரேல் பகுதியில் கண்டறியப்பட்ட காரணத்தால் கதிரேலைட்டு எனப் பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Webmineral.com - Kadyrelite Mindat.org - Kadyrelite Handbook of Mineralogy - Kadyrelite பாதரசக் கனிமங்கள் ஆலைடு கனிமங்கள் ஆக்சைடு கனிமங்கள் கனசதுரக் கனிமங்கள்
683437
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கர்னால் கோட்டம்
கர்னால் கோட்டம் (Karnal division) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் உள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். கர்னால், பானிபட் மற்றும் கைதல் மாவட்டங்கள் இக்கோட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2 பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரியானா அமைச்சரவையால் கர்னால் கோட்டம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் காண்க அரியானா மாவட்டப் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Karnal range police Karnal website அரியானாவின் புவியியல் கர்னால் மாவட்டம் அரியானாவின் கோட்டங்கள்
683441
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பரிதாபாது கோட்டம்
பரிதாபாது கோட்டம் (Faridabad division) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் உள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். பல்வல், பரிதாபாது மற்றும் நூக்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் இக்கோட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2 பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரியானா அமைச்சரவையால் கர்னால் கோட்டம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் காண்க அரியானா மாவட்டப் பட்டியல் கர்னால் கோட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Faridabad police range Faridabad website அரியானாவின் கோட்டங்கள் பரிதாபாது மாவட்டம் அரியானாவின் புவியியல்
683445
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
தாக்கம் கட்சி
தாக்கம் கட்சி தாக்கம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தமிழ்நாட்டில் செயல்படும் ஒர் அரசியல் கட்சி ஆகும். தாக்கம் கட்சியின் உறுப்பினர்கள் தாக்கம் கட்சியை துவங்குவதற்கு முன்பு 12 ஆண்டுகளாக சமூக சேவை அமைப்பாக இயற்கை, தமிழ், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சிக்காக சமூக பணியாற்றி இருக்கிறார்கள். தாக்கம் கட்சியின் கொடி பச்சை வண்ணக் கொடியில் நான்கு முனைகளில் வெள்ளை நிறத்தில் மீன்,புலி,வில் மற்றும் காளை மாடு உடனும் கொடியின் மையத்தில் இளஞ்சிவப்பு நிற வட்டத்தில் வெள்ளை நிற மரத்துடனும் தாக்கம் கட்சியின் கொடி காட்சியளிக்கிறது. தாக்கம் கட்சியின் நிர்வாகிகள் தலைவர் : P.சேகர் செயலாளர் : S.வெங்கடேசன் பொருளாளர் :  B. ஆனந்த் துணை தலைவர் : அ.செல்வகுமார் துணை பொதுச்செயலாளர் : ஆ.சக்திவேல், சு.காமேஷ்குமார், ஜெயஸ்ரீ துணை பொருளாளர் : திரு.L.தினேஷ்குமார் செய்தி தொடர்பாளர் : I முகம்மத் யாசின் தேர்தல்கள் 2024 இந்திய மக்களவை பொதுத் தேர்தலில் வடசென்னை,மத்திய சென்னை,தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர்,ஆரணி கன்னியாகுமரி என 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான விக்கிரவாண்டி தொகுதி என் இடைத்தேர்தலிலும் தாக்கம் கட்சி தீப்பெட்டி சின்னத்தில் போட்டிட்டு கணிசமான வாக்குகளை பெற்றனர். கொள்கைகள். கொடி மாட்டோம் செடி நடுவோம். சுவரொட்டி ஒட்ட மாட்டோம் சுத்தம் செய்வோம். பதாகை வைக்க மாட்டோம் பண்பாய் நடந்து கொள்வோம். கட்சியின் வரவு செலவு கணக்கு வெளிப்படை தன்மையுடன் இருக்கும். ஆகியவைகளை தாக்கம் கட்சிக் கொள்கையாக கொண்டுள்ளது. உறுப்பினர்கள். தாக்கம் கட்சியில் 45 பொதுக்குழு உறுப்பினர்களும்30 செயர்க்குழு உறுப்பினர்களும் உள்ளனர். தாக்கம் கட்சி தனது உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அளவை வரையறைக்குள் வைத்துள்ளது. இணையதளம் www.thakkam.com
683447
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தாதர் சட்டமன்றத் தொகுதி
தாதர் சட்டமன்றத் தொகுதி (Dadar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. தாதர் தொகுதி 2004 தேர்தலுக்குப் பின்னர் 2008இல் மாகிம் சட்டமன்றத் தொகுதியுடன் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 1995 சட்டப்பேரவைத் தேர்தல் பிரகலாத் கேசவ் அத்ரே (சுயேச்சை 22,469 வாக்குகள்) திரிம்பக் ராமச்சந்திர நரவானே (இதேகா) 21,843 வாக்குகள் 1962 சட்டப்பேரவைத் தேர்தல் சராரயு ஜி. தாகூர் (இதேகா) 18,134 வாக்குகள் சுதிர் ஜோசி (சுயேச்சை/சிவசேனா) -14,872 வாக்குகள் 1985 சட்டப்பேரவைத் தேர்தல் மனோகர் கஜானன் ஜோசி (சிவசேனா) 58,901 வாக்குகள் சராயு கோவிந்த் தாகூர் (இதேகா) -20,482 வாக்குகள் மேற்கோள்கள் மும்பை மாவட்டம்
683448
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE
நியோகரிடினா
நியோகரிடினா என்பது அட்டியிடே இறால் ஒரு பேரினமாகும். இது மார்ச் 2023 நிலவரப்படி 26 சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் சீனா, கொரியா, சப்பான், தைவான் உட்படக் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளன. பல அட்டியிடே இறால்களைப் போலவே, இவை நன்னீர் வாழ்விடங்களில் வாழ்கின்றன. இப்பேரினத்தின் கீழ் 26 சிற்றினங்கள் உள்ளன. இவை: நியோகரிடினா அன்குயென்சிசு லியாங், ஜு & சியோங், 1984 நியோகரிடினா பனாமா (லியாங், 2004) நியோகரிடினா ப்ரெவிடாக்டைலா (லியாங், சென் & டபிள்யூ.-எக்ஸ். லி, 2005) நியோகரிடினா கர்விப்ரனசு (லியாங், 1979) நியோகரிடினா டேவிடி (போவியர், 1904) (முன்னர், நியோகரிடினா ஹெட்டிரோபோடா (குளோட்சு & கார்கே, 2013)) நியோகரிடினா யூசுபினோசா (கெய், 1996) நியோகரிடினா போன்டிகுலாட்டா (ஷிஹ், கேய், & சியு, 2019) நியோகரிடினா புகியென்சிசு (லியாங் & யான், 1977) நியோகரிடினா கிராசிலிபோடா (லியாங், 2004) 'நியோகரிடினா கோப்பெண்டோபோடா (சென், 1948)நியோகரிடினா ஹோமோசுபினா நியோகரிடினா இரியோமோடென்சிசு (நருசு, சோகிதா & கேய், 2006)நியோகரிடினா இசிகாகியென்சிசு (புஜினோ & சோகிதா, 1975)நியோகரிடினா கெட்டகாலன் (ஷிஹ் & கெய், 2007)நியோகரிடினா கியூன்பை (எச். எசு. கிம், 1976)நியோகரிடினா லின்ஃனென்சிசு (கெய், 1996)நியோகரிடினா லாங்கிபோடா (கெய், 1995)[நியோகரிடினா பல்மேட்டா=என். cf ஜாங்ஜியாஜியென்சிசு (சென், 1948)நியோகரிடினா சாசேம் (சிகிக்& கேய், 2007)நியோகரிடினா இசுபினோசா (லியாங், 1964)நியோகரிடினா சியாபுன்னென்சிசு (ஜெங், 2002)நியோகரிடினா யூலுயென்சிசு (சென், சென்& குவோ, 2018)நியோகரிடினா ஜாங்ஜியாஜியென்சிசு (கெய், 1996)நியோகரிடினா சோஉசுகென்சிசு'' (கெய், 1996) மேற்கோள்கள் கணுக்காலி பேரினங்கள் இறால்
683450
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE
நியோகரிடினா பமானா
நியோகரிடினா பமானா (Neocaridina bamana) என்பது சீனா குவாங்சி பிராந்தியத்தில் காணப்படும் ஒரு நன்னீர் இறால் ஆகும். இந்த இனம் குறித்த அதிக தகவல்கள் பெறப்படவில்லை. மேற்கோள்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள் இறால்
683455
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
செந்தூல் எல்ஆர்டி நிலையம்
செந்தூல் எல்ஆர்டி நிலையம் அல்லது செந்தூல் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Sentul LRT Station; மலாய்: Stesen LRT Sentul; சீனம்: 冼都站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், கோலாலம்பூர், செந்தூல் நகர்ப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு அருகில் மெதடிஸ்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (Methodist Boys Secondary School Sentul); வெஸ்லி மெதடிஸ்ட் பள்ளி (Wesley Methodist School); மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையம், நடுத்தர மற்றும் குறைந்த விலை மனைத்திட்டங்களால் சூழப்பட்டுள்ளது. பொது செந்தூல் எனும் அதே பெயரைப் பகிர்ந்து கொண்டாலும், செந்தூல் எல்ஆர்டி நிலையமானது செந்தூல் கொமுட்டர் நிலையத்துடன் இணையவில்லை. இரண்டு நிலையங்களும் ஏறக்குறைய 800 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன. இருப்பினும் இரண்டு நிலையங்களும் தனித்தனியாக இயங்குகின்றன. செந்தூல் கொமுட்டர் நிலையம்தான் செந்தூலில் கட்டப்பட்ட முதல் தொடருந்து போக்குவரத்து நிலையமாகும். செந்தூல் எல்ஆர்டி நிலையம் பின்னர் கட்டப்பட்டது. இந்த நிலையம் நகர்ப்புற மக்களுக்குச் சேவை செய்கிறது. செந்தூல் கொமுட்டர் நிலையம் செந்தூல் புறநகர் மக்களின் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது. பண்டார் பாரு செந்தூல் எனவே குழப்பத்தைத் தவிர்க்க, அதிகாரப்பூர்வ தொடருந்து போக்குவரத்து வரைபடத்தில் எல்ஆர்டி நிலையத்திற்கு, செந்தூல் எனும் பெயர் பண்டார் பாரு செந்தூல் என இணைக்கப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) இறுதிக் கட்ட மேம்பாட்டின் ஒரு பகுதியாக 1998-இல் இந்த நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. செந்தூல் செந்தூல் என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது செந்தூல் பாராட் (Sentul Barat) மற்றும் செந்தூல் தீமோர் (Sentul Timur) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. செந்தூல் சாலை மற்றும் ஈப்போ சாலை ஆகியவை இப்பகுதிகளுக்குச் சேவை செய்யும் இரண்டு முக்கிய சாலைகள் ஆகும். இந்தச் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம், ஒரு பரிமாற்ற நிலையமாக நியமிக்கப்படாவிட்டாலும், இதே செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திலிருந்து பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடத்தில் உள்ள செந்தூல் கொமுட்டர் நிலையம் வரை பயணிகள் நடந்தே செல்லலாம். நடந்து செல்ல ஏறக்குறைய 15 - 20 நிமிடங்கள் பிடிக்கும். மேலும் காண்க செந்தூல் கம்போங் காசிப்பிள்ளை செந்தூல் கொமுட்டர் நிலையம் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் செந்தூல் எல்ஆர்டி நிலைய தள அமைப்பு காட்சியகம் செந்தூல் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்: மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள்
683456
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தாராவி சட்டமன்றத் தொகுதி
தாராவி சட்டமன்றத் தொகுதி (Dharavi Assembly constituency) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிராச் சட்டமன்ற பத்துத் தொகுதிகளில் ஒன்றாகும். கண்ணோட்டம் தாராவி (178) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 268,779 ஆகும். இதில் ஆண்கள் 152,013, பெண்கள் 116,766 ஆவர். வாக்காளர்களில் 113,732 சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன், மும்பை நகர மாவட்டத்தைச் சேர்ந்த சியோன் கோலிவாடா, வடாலா, மாகிம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செம்பூர் மற்றும் அனுசக்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடங்கும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 2019 2014 2009 2004 மேற்கோள்கள் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683462
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%28%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
தோட்டி (பழங்குடி மக்கள்)
தோட்டி பழங்குடி மக்கள்,(Thoti), இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் வாழும் பூர்வ குடிகள் ஆவர்.கோண்டி மொழி பேசும் இம்மக்கள் கோண்டு பழங்குடி இனத்தின் உட்பிரிவினர் ஆவார். இம்மக்கள் தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்டம், ஐதராபாத் மாவட்டம், கரீம்நகர் மாவட்டம், மகபூப்நகர் மாவட்டம், மேடக் மாவட்டம், நல்கொண்டா மாவட்டம், நிசாமாபாத் மாவட்டம் மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்தாலும்; அதிலாபாத் மாவட்டத்தின் 42 கிராமங்களில் அதிகமாக வாழ்கின்றனர். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மக்களின் தொகை 2231 ஆகும். தெலங்காணாவின் அதிலாபாத் மாவட்டத்தில் வசிக்கும் தோட்டி பழங்குடியினர் பாரம்பரியமாக பச்சை குத்துக்கொள்வதும், அதையே ஒரு தொழிலாக செய்யும் வழக்கம் உள்ளது. மேற்கோள்கள் உசாத்துணை Schedule Tribes of Telenga இந்தியப் பழங்குடிகள்
683464
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D
வர்சா கெய்க்வாட்
வர்சா ஏக்நாத் கெய்க்வாட் (Varsha Gaikwad)(பிறப்பு 3 பிப்ரவரி 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் மும்பை பிராந்தியக் காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். முன்னதாக, இவர் மகாராட்டிர சட்டமன்றத்தில் நான்கு முறை உறுப்பினராக இருந்தார். மும்பையில் உள்ள தாராவி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2004 முதல் 2024 வரை காங்கிரசு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் (2004-2024). இவர் 30 திசம்பர் 2019 முதல் 29 சூன் 2022 வரை மகாராட்டிராவின் அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றினார். கெய்க்வாட் 2024 மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆனார். இவர் பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை தோற்கடித்தார். 18வது மக்களவையில் உள்ள மூன்று புத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். வகித்தப் பதவிகள் 2004-2009: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (முதல் முறை) 2009-2014: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (2வது முறை) 2009-2010: மாநில மருத்துவ கல்வி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, சுற்றுலா, சிறப்பு உதவி அமைச்சர் 2010-2014: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சரவை அமைச்சர், மகாராட்டிரா அரசு 2014-2019: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (3வது பதவிக்காலம்) 2019-2024: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (4வது பதவிக்காலம்) பள்ளிக் கல்வித் துறைக்கான அமைச்சரவை அமைச்சர், மகாராட்டிர அரசு மகாராட்டிரா அரசு 2024-தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை தனிப்பட்ட வாழ்க்கை வர்சா கெய்க்வாட்டின் தந்தை ஏக்நாத் கெய்க்வாட், இவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் அம்பேத்காரிய புத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பையில் உள்ள சித்தார்த் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி விரிவுரையாளராக இருந்தார். மேற்கோள்கள் 1975 பிறப்புகள் 18ஆவது மக்களவை உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் இந்தியப் பௌத்தர்கள் வாழும் நபர்கள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
683465
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE
அருண் ஹேமச்சந்திரா
அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra, 19 சூலை 1991) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அருண் ஹேமச்சந்திரா 2024 நவம்பர் 21 இல், அனுர குமார திசாநாயக்கவின் அரசில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இவர் உள்ளார். மேலதிகமாக இவர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராகவும் 2024 நவம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டார். திருகோணமலையில் பிறந்த அருண் ஹேமச்சந்திரா திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, கண்டி திரித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் 1991 பிறப்புகள் வாழும் நபர்கள் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்ட நபர்கள்
683467
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
உத்ராபதி விசுவராயர்
உத்ராபதி விசுவராயர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். வாழ்க்கைக் குறிப்பு இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்த அம்மாபேட்டை கிராமத்தில் கள்ளர் மரபில் 07-09-1909 இல் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 இல் உப்புச் சத்தியாகிரகம் இயக்கத்தில் சேர்ந்தார், அதே ஆண்டு வெளிநாட்டு துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் மற்றும் 1941 இல் தனிநபர் சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்றார். இதில் கைது செய்யப்பட்டு ஆங்கிலேய அரசால் தண்டனை விதிக்கப்பட்டு 1933, 1941 மற்றும் 1942 இல் சிறைவாசம் அனுபவித்தார். நான்கு ஆண்டுகள் திருச்சிராப்பள்ளி, பெல்லாரி சிறைகளில் வைக்கப்பட்டார். 24 ஆண்டுகள் பாபநாசம் தாலுகா காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தார். 09-2-1956 இல் இறந்தார். மேற்கோள்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
683471
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
நிக்கல் மோனோசிலிசைடு
நிக்கல் மோனோசிலிசைடு (Nickel monosilicide) என்பது NiSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். நிக்கலும் சிலிக்கானும் சேர்ந்து இந்த உலோகங்களிடை சேர்மம் உருவாகிறது. மற்ற நிக்கல் சிலிசைடுகளைப் போலவே, நுண் மின்னணுவியல் பகுதியில் NiSi சேர்மமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இச்சேர்மம் 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. தயாரிப்பு நிக்கல் மோனோசிலிசைடை சிலிக்கான் மீது ஒரு நிக்கல் அடுக்கை படிய தொடர்ந்து காய்ச்சிக் குளிரவைத்தல் மூலம் தயாரிக்கலாம். 4 நானோமீட்டர் அளவுக்கு மேல் தடிமன் கொண்ட Ni படிவுகளின் நிகழ்வுகளில் இயல்பான கட்ட மாற்றம் Ni2Si சேர்மத்திற்கு 250 °செல்சியசு வெப்பநிலையிலும் தொடர்ந்து NiSi சேர்மத்திற்கு 350 °செல்சியசு வெப்பநிலையிலும் மற்றும் NiSi2 சேர்மத்திற்கு தோராயமாக 800 °செல்சியசு வெப்பநிலையிலும் நிலைமாற்றம் கொடுக்கப்படுகிறது. ஆரம்ப Ni தடிமன் 4 நானோமீட்டருக்கும் கீழே உள்ள படிவுகளுக்கு நேர்ச்சாய்சதுர Ni2Si சேர்மத்திலிருந்து நிக்கல் மோனோசிலிசைடு கட்டத்தைத் தவிர்த்து படிக வளர்ச்சி நிலைக்கு (NiSi2−x) நேரடி மாற்றம் காணப்படுகிறது. பயன்கள் பல பண்புகள் நிக்கல் மோனோசிலிசைடு சேர்மத்தை நுண் மின்னணுவியல் பகுதியில் ஒரு முக்கியமான உள்ளூர் தொடர்புப் பொருளாக ஆக்குகின்றன. அவற்றுள் குறைக்கப்பட்ட வெப்ப அளவான 13-14 μΩ·செ.மீ குறைந்த எதிர்ப்பாற்றல் மற்றும் மாற்று சேர்மங்களுடன் ஒப்பிடும்போது சிலிக்கான் நுகர்வு குறைக்கப்படுகிறது. மேற்கோள்கள் சிலிக்கான் சேர்மங்கள் நிக்கல் சேர்மங்கள் கனிம வேதியியல் சேர்மங்கள்
683472
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%28%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%29%20-%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) - சரத் சந்திர சின்கா
இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) சரத் சந்திர சின்கா (Indian Congress (Socialist) – Sarat Chandra Sinha) என்பது 1984 முதல் 1999 வரை இந்தியாவில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. இந்தக் கட்சி இந்தியக் காங்கிரசில் (சமதர்மம்) பிளவு ஏற்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக அசாமின் முன்னாள் முதலமைச்சர் (1971-78) சரத் சந்திர சின்கா செயல்பட்டார். இந்தப் பிரிவு 1999இல் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியுடன் (என். சி. பி) இணைந்தது. மேலும் காண்க இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த கட்சிகள் மேற்கோள்கள் 1984இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
683477
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
அமல்னேர் சட்டமன்றத் தொகுதி
அமல்னேர் சட்டமன்றத் தொகுதி (Amalner Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இது சல்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும், மேலும் இந்த மாவட்டத்தில், சல்கான் நகரம், சல்கான் கிராமப்புறம், எரண்டோல், சாலிசுகான் மற்றும் பச்சோரா ஆகிய தொகுதிகளும் உள்ளடங்கும். தேர்தல் முடிவுகள் 2019 மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல்மகாராட்டிர அரசியல் ஜள்காவ் மாவட்டம்