id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
682546
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
சிறினிசா செயசீலன்
சிறினிசா செயசீலன் (ஆங்கிலம் : Srinisha Jayaseelan) இவர் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 2009 - 2010 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் சூனியர் 2 என்னும் உண்மைநிலை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு இளையராஜா அவர்களின் இசையமைப்பில் உருவான அம்மா கணக்கு என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார், மேலும் சூப்பர் சிங்கர் வாகையர்களில் வாகையாளர் என்னும் உண்மைநிலை நிகழ்ச்சிலேயும் பங்கேற்றார். வாழ்க்கைச் சுருக்கம் சிறினிசா செயசீலன் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் ஆம் ஆண்டு திரு செல்வராச் செயசீலன் மற்றும் சுசாதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் சென்னையில் அமைந்துள்ள டி.எஸ்.டி ராசா பெண்கள் பதின்மநிலை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் எத்திராச் மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தொழில் வாழ்க்கை சிறீனிசா 2009 முதல் 2010 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் இரண்டு என்றழைக்கப்படும் உண்மைநிலை நிகழ்ச்சியின் தமிழ் இசைப் போட்டியில் பங்கேற்றார். இதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய சிறீனிசா அரையிறுதிப் போட்டியில் வெளியேற்றப்பட்டவர். மேலும் விசய் தொலைக்காட்சியின் மற்ற இசைப் போட்டிகளான சூப்பர் சிங்கர் டி20யில் சூப்பர் சிங்கர் சாப்பியன் ஆஃப் சாப்பியன்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான அவன் இவன் என்னும் திரைப்படத்தில், ஒரு மலையோரம் எனத் தொடங்கும் பாடல் மற்றும் இசைஞானி இளையராஜா இசை அமைத்த அம்மா கணக்கு திரைப்படத்தில் மேத்சு ஃடப் எனத் தொடங்கும் பாடல்கள் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகினார். மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் விளம்பர இடைவேளி என்ற பாடலையும் பாடியுள்ளார். தொலைக்காட்சி மேற்கோள்கள் வெளியிணைப்புகள் சென்னைப் பாடகர்கள்விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிப் பாடகர்கள் சென்னை இசைக்கலைஞர்கள் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் தமிழ்நாட்டுப் பாடகர்கள் தமிழ்நாட்டுப் பெண் இசைக்கலைஞர்கள் தெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் இந்தியப் பாடகிகள் 1999 பிறப்புகள் வாழும் நபர்கள்
682548
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
கோலாலம்பூர் மோனோரெயில்
கோலாலம்பூர் மோனோரெயில் அல்லது கோலாலம்பூர் ஒற்றைத் தண்டூர்தி (ஆங்கிலம்: KL Monorail Line; மலாய்: Monorel KL; சீனம்: 吉隆坡單軌列車) என்பது மலேசியா கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்திச் சேவை ஆகும். இதுவே மலேசியாவின் ஒரே ஒற்றைத் தண்டூர்திச் செயல்பாட்டு அமைப்பு முறை என அறியப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு முறைமை, முழுத் தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக கோலாலம்பூர் மோனோரெயில் இயக்கப்படுகிறது. பொது கோலாலம்பூர் மோனோரெயில் அமைப்பு, மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. பன்னாட்டுப் போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு எனும் குறியீடு வெளிர் பச்சை நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இடர்பாடுகள் பரபரப்பான நெரிசல் வேளைகளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கோலாலம்பூர் மாநகர் மையப் பகுதிகளுக்குள் கொண்டு செல்வதிலும்; மற்றும் வெளியேற்றுவதிலும் இடர்பாடுகள் ஏற்படுவதாக அறியப்படுகிறது. முறையான உள்கட்டமைப்புத் திட்டமிடல் இல்லாததாலும்; போதுமான அளவிற்கு தண்டூர்தி வண்டிகள் இல்லாததாலும்; அந்த இடர்பாடுகள் ஏற்படுவதாகவும் அறியப்படுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து மலேசிய அமைச்சரவையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு சீரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது. கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் கீழ் உள்ள இயக்கங்களில் இந்த கோலாலம்பூர் மோனோரெயில் மிகவும் திருப்தியற்ற தொடருந்துப் பாதையாகக் குறிப்பிடப்படுகிறது. வரலாறு இந்த நகர்ப்புற மோனோரயில் வழித்தடம் 31 ஆகஸ்டு 2003 அன்று திறக்கப்பட்டது. 8.6 கிமீ (5.3 மைல்) நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 11 நிலையங்கள் உள்ளன; மேலும் இரண்டு உயரமான மேம்பாலத் தடங்களில் இயங்குகின்றன. இந்த வழித்தடம் தெற்கில் உள்ள கோலாலம்பூர் சென்ட்ரல் போக்குவரத்து மையத்தையும்; வடக்கில் உள்ள தித்திவங்சா நிலையத்தையும்; கோலாலம்பூர் தங்க முக்கோணத்தையும் ஒன்றாக இணைக்கின்றது. கோலாலம்பூர் தங்க முக்கோணம் (KL Golden Triangle) என்று அறியப்படும் கோலாலம்பூர் மாநகர் மையப்பகுதி; புக்கிட் பிந்தாங், இம்பி சாலை, புக்கிட் பிந்தாங் சாலை, சுல்தான் இசுமாயில் சாலை, ராஜா சூலான் சாலை ஆகிய வணிகப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மோனோரெயில் திட்டம் சூன் 1989-இல் நடந்த மலேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசிய அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. அதன் பிறகு சனவரி 1990-இல் கோலாலம்பூர் மாநகராட்சியால் மோனோரெயில் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது. அதன் அப்போதைய கட்டுமானச் செலவு RM 143 ரிங்கிட் மில்லியனாக மதிப்பிடப்பட்டது. இந்த வழித்தட அமைப்பு கோலாலம்பூரின் பரபரப்பான வணிக மையத்தின் வழியாக, 20 நிமிட சுழற்சியில், ஒரு நாளைக்கு 34,000 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டது: முதலில், 16 நிலையங்களை உள்ளடக்கிய 7.7 கிமீ (4.8 மைல்) நீளம் கொண்ட முதல் கட்டம்; அடுத்த இரண்டாவது கட்டத்தில், 6.5 கிமீ (4.0 மைல்) சுற்றுப் பாதை சேர்க்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. 1997 ஆசிய நிதி நெருக்கடி சூன் 1990-இல் கட்டுமானப் பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொடக்கப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்த அறிவிப்புகளில், கட்டுமானச் செலவு மிக அதிகமாக இருப்பதாக கோலாலம்பூர் மாநகராட்சி மேயர் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தொடக்கப் பணிகள் மே 1991 வரையில் ஒத்திவைக்கப்பட்டன. சப்பானிய இத்தாச்சி (Hitachi, Ltd) நிறுவனத்தின் மூலம் கட்டுமானம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் 1997 ஆசிய நிதி நெருக்கடியினால் திசம்பர் 1997-இல் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. சூலை 1998-இல் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. உள்ளூர் நிறுவனமான எம் திடான்ஸ் ஓல்டிங்ஸ் (MTrans Holdings) எனும் நிறுவனம் பொறுப்பேற்றது. இறுதியில் இந்த வழித்தடம் RM 1.18 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2003-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. பிரசரானா மலேசியா கோலாலம்பூர் மோனோரெயில் திட்டத்தை நடத்த கேஎல் மோனோரெயில் நிறுவனம் (KL Monorail System Sdn Bhd) (KLMS) முதலில் பொறுப்பேற்றது. மலேசிய அரசாங்கம் அந்த நிறுவனத்திற்கு 40 ஆண்டுகாலச் சலுகையை வழங்கியது. எனினும், நிதி நெருக்கடியினால் அந்த நிறுவனத்தால் கோலாலம்பூர் மோனோரெயில் திட்டத்தை முறையாக நடத்த இயலவிவில்லை. பற்பல நிதி நெருக்கடிகள்; மற்றும் கடன் கொடுத்த வங்கிகளின் நெருக்குதல்கள் போன்றவற்றினால் கேஎல் மோனோரெயில் நிறுவனம் செயல்பட முடியாமல் தவித்தது. இந்தக் கட்டத்தில் மலேசிய அரசாங்கம் தலையிட்டது. அதன் பின்னர் கோலாலம்பூர் மோனோரெயில் இயக்கத்தைச் செயல்படுத்த அரசு சார்ந்த நிறுவனமான பிரசரானா மலேசியா நிறுவனம் பொறுப்பேற்றது. கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள் பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து கேஎல்ஐஏ போக்குவரத்து கோலாலம்பூர் மோனோரெயில் காஜாங் வழித்தடம் கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் சா ஆலாம் வழித்தடம் புத்ராஜெயா வழித்தடம் எம்ஆர்டி சுற்று வழித்தடம் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்கள் கோலாலம்பூர் மோனோரெயில் (KL Monorail Line) வழித்தடத்தில் 11 நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களின் விவரங்கள்: பயணிகள் 29 சூலை 2009 அன்று, மோனோரெயில் 100 மில்லியன் பயணிகளை எட்டியதாக அறியப்படுகிறது. காட்சியகம் மேற்கோள்கள் மேலும் காண்க கோலாலம்பூர் சென்ட்ரல் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து கிளானா ஜெயா வழித்தடம் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அம்பாங் வழித்தடம் செரி பெட்டாலிங் வழித்தடம் வழித்தட வரைபடங்கள் Route search - Interactive transport guide of Kuala Lumpur public transport system Train Journey Planner & Fare Calculator from thepricechat.com Route Map from stesensentral.com வெளி இணைப்புகள் Construction - Monorail extension to Old Klang Road/Sunway Overweight Kuala Lumpur Monorail - a Photo Essay at the Monorail Society Land Public Transport Commission Prasarana Malaysia MyRapid Klang Valley Mass Rapid Transit Project TransitMy App Store மலேசியாவில் போக்குவரத்து விரைவுத் தொடருந்து இணைப்பு மலேசியத் தொடருந்து நிலையங்கள் மலேசியாவில் தொடருந்து போக்குவரத்து‎
682549
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
துருவ் ரெய்னா
துருவ் ரெய்னா (Dhruv Raina) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தத்துவஞானியும் மற்றும் அறிவியல் வரலாற்றாசிரியரரும் ஆவார். காலனித்துவ இந்தியாவில் அறிவியலை வளர்ப்பது, நாடுகடந்த அறிவியலின் வலையமைப்புகள் மற்றும் அறிவியலின் வரலாற்று வரலாறுகள் ஆகியவற்றில் இவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானவர். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி ஆய்வுகளுக்கான ஜாகிர் உசேன் மையத்தில் அறிவியல் கல்வி வரலாற்றின் பேராசிரியராக (2003-2023) இருந்தார். அதற்கு முன்பு, 1991 முதல் 2002 வரை புது தில்லியில் உள்ள தேசிய அறிவியல், தொழில்நுட்பம், மேம்பாடு கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தார். ஜெர்மனியின் இந்திய தத்துவம் மற்றும் அறிவுசார் வரலாற்றிற்கான முதல் தலைவராக இருந்தார் (2010-11). இவர் தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வரலாறு மற்றும் தத்துவத்திற்கான சர்வதேச ஒன்றியத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தர்க்கம், முறை மற்றும் தத்துவப் பிரிவின் மன்றத்தில் உள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Profile on JNU Website Profile, South Asia Institute, University of Heidelberg Google scholar 'Seminar Magazine Special Issue on State of Science: a symposium on the relationship between science, knowledge and democracy (edited by Dhruv Raina) "Betwixt Jesuit and Enlightenment HIstoriography: Jean-Sylvain Baily's History of Indian Astronomy" "A Study in the Social-epistemology of "Science and Society" Education at Indian Universities and Technical Institutes" Institutions and the Global Transfer of Knowledge: A Discussion "How to Go to Heaven or How the Heavens Go?" "The Making of a Classic: The Contemporary Significance of P.C. Ray’s Historical Approach" "The Naturalization of Modern Science in South Asia: A Historical Overview of the Processes of Domestication and Globalization" Articles in Down to Earth Magazine .in/citations?user=9jVr03wAAAAJ&hl=en வாழும் நபர்கள் அறிவியல் வரலாற்றாளர்கள்
682551
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
தபன் ராய்சௌத்ரி
தபன் ராய்சௌத்ரி (Tapan Raychaudhuri ; 8 மே 1926 - 26 நவம்பர் 2014) பிரித்தானிய இந்திய வரலாறு, இந்தியப் பொருளாதார வரலாறு மற்றும் வங்காள வரலாறு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வரலாற்றாளர் ஆவார். தொழில் வாழ்க்கை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இசுலாமிய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிரிட்டனில் இருந்து திரும்பிய பிறகு, இந்திய தேசிய ஆவணக்காப்பகதின் துணை இயக்குநரானார். ஒரு வாசகராகவும் பின்னர் வரலாற்றின் பேராசிரியராகவும், தில்லி பொருளாதாரப் பள்ளியின் இயக்குநராகவும், பேராசிரியராகவும் தில்லி பல்கலைக்கழகஹ்தின் வரலாற்றுத் துறையின் தலைவராகவும் இருந்தார். 1973 முதல் 1992 வரை நவீன தெற்காசிய வரலாற்றில் ஒரு வாசகராகவும், பின்னர் இந்திய வரலாறு மற்றும் நாகரிகத்தின் ஹோமினெம் பேராசிரியராகவும், 1992 முதல் 1993 வரை ஆக்சுபோர்டில் உள்ள செயின்ட் ஆண்டனி கல்லூரியின் உறுப்பினராகவும் இருந்தார். தான் ஓய்வு பெற்ற பிறகு ஆக்சுபோர்டில் உள்ள செயின்ட் ஆண்டனி கல்லூரியில் சகாவாக இருந்தார். 2009 ஆம் ஆண்டில்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுக்கு இன்ஃபோசிஸ் பரிசு வழங்கும் நடுவர் குழுவிலும் பணியாற்றினார். 2011 இல் இந்தியாவில் தேசிய ஆராய்ச்சி பேராசிரியராக ஆனார் இறப்பு பக்கவாதத்தால் சிலகாலம் பாதிக்கப்பட்டிருந்த தபன் ராய்சௌத்ரி, ஆக்சுபோர்டில் உள்ள தனது வீட்டில் 26 நவம்பர் 2014 அன்று இறந்தார். மேற்கோள்கள் 2014 இறப்புகள் 1926 பிறப்புகள் வரலாற்றாளர்கள்
682554
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
ஹேம சந்திர ராய்சவுத்ரி
ஹேம சந்திர ராய்சௌத்ரி (Hem Chandra Raychaudhuri) (8 ஏப்ரல் 1892 - 4 மே 1957 ) ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். இவர், பண்டைய இந்தியா பற்றிய ஆய்வுகளுக்காக அறியப்பட்டவர். தொழில் வாழ்க்கை இவர், கொல்கத்தாவின் பங்கபாசி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். வங்காள கல்விச் சேவையில் சேர்ந்த உடனேயே, கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைக்கழகதில் (1914–16) பணியமர்த்தப்பட்டார். 1916 இல் இவர் சிட்டகொங் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். 1917 ஆம் ஆண்டில் அசுதோசு முகர்சி இவருக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையில் விரிவுரையாளராக பணியாற்ற ஒரு வாய்ப்பை வழங்கினார். 1921 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். 1928இல் இவர் தாக்கா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் வாசகராக பணியாற்றினார். 1936 ஆம் ஆண்டில் டி. ஆர். பண்டார்கருக்குப் பிறகு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் கார்மைக்கேல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1952 இல் ஓய்வு பெற்றார். மேற்கோள்கள் மேலும் வாசிக்க Panda, Harihar (2007). Prof. H.C. Raychaudhuri: as a Historian, New Delhi:Northern Book Centre, 1892 பிறப்புகள் 1957 இறப்புகள் வங்காள மக்கள் வரலாற்றாசிரியர்கள்
682556
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D
சையது இர்பான் அபீப்
சையத் இர்பான் அபீப் ( Syed Irfan Habib ; பிறப்பு 1953) ஒரு இந்திய அறிவியல் வரலாற்றாசிரியரும் பொது அறிவுஜீவியும் ஆவார். தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் அபுல் கலாம் ஆசாத் இருக்கையின் தலைவராக இருந்தார். 1990 களில் புது தில்லியின் தேசிய அறிவியல், தொழில்நுட்பம், மேம்பாடு கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய துருவ் ரெய்னாவுடன் சேர்ந்து இவரது அறிவார்ந்த ஒத்துழைப்பு தொடர்ச்சியான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வெளியீட்டில் உச்சக்கட்டத்தை அடைந்தது. காலனித்துவ இந்தியாவில் நவீன அறிவியலின் கலாச்சார மறுவரையறையில். இவர்கள் ஜோசப் நீதம் (அறிவியல் வரலாற்றின் இருப்பிடம், 1999), யுனெஸ்கோவின் மனிதகுல வரலாற்றின் 7வது தொகுதிக்கான “இருபதாம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அறிவியல்” என்ற பகுதி மற்றும் சமூகம் பற்றிய ஒரு வாசகரின் தொகுப்பையும் ஒன்றாக வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் அறிவியல் வரலாறு ( காலனித்துவ இந்தியாவில் அறிவியல் சமூக வரலாறு, 2007). ஒரு ஆசிரியராக, அவரது படைப்புகள் பெரும்பாலும் நேர்மறையான விமர்சன வரவேற்பிற்கு உட்பட்டுள்ளன. கல்வி நவீன இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இர்பான், 1920 களின் சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் சித்தாந்தம் மற்றும் திட்டம் குறித்து முனைவர் பட்டம் பெற்றார். தொழில் வாழ்க்கை சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் இணைக் கல்லூரியான புலந்த்சர், டிஏவி கல்லூரியில் நான்கு ஆண்டுகள் கற்பித்தார். பின்னர் தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் 2009-2016 போது புது தில்லியில் உள்ள தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தின் அபுல் கலாம் ஆசாத் இருக்கையை வகித்தார். மேற்கோள்கள் அறிவியல் வரலாற்றாளர்கள் வாழும் நபர்கள் 1953 பிறப்புகள்
682559
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
மூச்சு பாலம்
மூச்சு பாலம் (Breathing bridge) என்பது பெரு நாட்டில் உள்ள அமேசானாசு பிராந்தியத்தில் உள்ள ஆலமரங்களில் வான்வழி வேர்களிலிருந்து அமைக்கப்பட்ட உயிருள்ள வேர் பாலம் ஆகும். நுகக் மகு பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாக இந்த மரங்களின் வேர்களைக் கொண்டு, ஈரமான பருவத்தில் தன்னிச்சையாகத் தோன்றும் நீரோடைகளைக் கடந்து இத்தகைய வேர்ப்பாலங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் முதலில் ஆற்றின் கரையில் மரங்களை வளர்க்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வேர்கள் போதுமானதாக இருக்கும்போது இவர்கள் வேர்களை இணைத்துப் பாலங்களை அமைக்கத் தொடங்குகிறார்கள். இத்தகைய பாலங்கள் நீண்டகாலத் திட்டமாக ஒருவரின் வாழ்நாளில் முடிக்க முடியாது உள்ளது. எனவே இத்தகைய செயல் தலைமுறை தலைமுறையாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பாலங்களில் சில 100 அடி (30 மீட்டர்) நீளமும் 500 ஆண்டுகளுக்கு மேம்பட்டதாகவும் உள்ளன. பல தலைமுறைகளாக வாழக்கூடிய வளரும் நிலையான இந்தக் கட்டமைப்பு இயற்கைக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இயற்கையைச் சமாளித்து மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே நன்மை பயக்கும் உலகளாவிய சுற்றுச்சூழல் எடுத்துக்காட்டாக உள்ளன. மேலும் காண்க உம்சியாங் இரண்டடுக்கு வேர் பாலம் மேற்கோள்கள்
682562
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
உம்சியாங் இரண்டடுக்கு வேர் பாலம்
உம்சியாங் இரண்டடுக்கு வேர் பாலம் (Umshiang Double-Decker Root Bridge) என்பது இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உயிருள்ள வேர் பாலமாகும். சிரபுஞ்சியிலிருந்து 45 கிலோமீட்டர் (28 மைல்) பயணம் செய்தோ அல்லது 6500 படிகளை மலையேற்றம் மூலம் கடந்தும் இப்பாலத்தினை அடையலாம். இப்பாலத்தின் அருகில் ஓர் அருவி உள்ளது . சுற்றுலா காரணமாக, வேர் பாலத்தின் ஆரோக்கியம் சீரழிந்துள்ளது. மேகாலயா தனது 70வது குடியரசு தின விழாவில் வேர் பாலத்தை வழங்கியது. கான்சி மற்றும் ஜெய்டியா மக்கள், இரண்டாம் நிலை மரங்களின் வேர்களைப் பயன்படுத்திப் பாலங்களைக் கட்டும் கைவினையை உலகிற்குத் தெரிவிக்க சிரபுஞ்சியில் உள்ள நோங்ரியட்டில் பாலத்தின் மாதிரி போன்று இப்பாலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உயிருள்ள பாலங்கள் ஒரு சிறப்பு வகை இரப்பர் மரத்திலிருந்து வளர்க்கப்படுகின்றன. வேர்கள் வளரும்போது, பாலத்தின் வலிமை அதிகரிக்கிறது. வேர் பாலங்கள் மேகாலயாவின் தாஜ்மகால் என்று மதிக்கப்படுகின்றன. இவை வளரவும் செயல்படவும் சுமார் 25 ஆண்டுகள் ஆகும். ஆனால் 50 பேரின் எடையைத் தாங்கி 500 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட முடியும். மேற்கோள்கள் இந்தியப் பாலங்கள்
682563
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
மேற்கு வங்காளத்தின் மிக நீளமான பாலங்களின் பட்டியல்
மேற்கு வங்காளத்தின் மிக நீளமான பாலங்களின் பட்டியல் (List of longest bridges in West Bengal) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள சாலை பாலங்கள், தொடருந்து பாலங்கள், தொடருந்து மற்றும் சாலை பாலங்கள் மற்றும் தடுப்பணை பாலங்கள் அடங்கும். மேம்பாலங்கள் இது மேற்கு வங்காளத்தின் 500 மீட்டர் (1,640 ) நீளமுள்ள மேம்பாலங்கள், சாலை மேல் பாலங்கள், சாலையின் அடியில் கட்டப்பட்ட பாலங்களின் பட்டியல் ஆகும். மேற்கோள்கள் மேற்கு வங்காளம் மேற்கு வங்காளப் பாலங்கள்
682579
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம்
ஒற்றப்பாலம் தொடருந்து நிலையம் (Ottapalam railway station, நிலைய குறியீடு: OTP) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG–3 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் என்ற ஊரில் உள்ளது. வரலாறு ஒற்றப்பாலம் நிலையம் 1904 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இப்பகுதியின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை, ஓற்றப்பாலத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க மக்களைச் சித்தரிக்கும் பல சுவரோவியங்களுடன் இந்த நிலையம் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாற்றம் கண்டது. சுவரோவியங்களை தேவா கிரியேசன்சின் ஓவியர்களான அம்பிலி தெக்கெடத், டி. எஸ். சானு ஆகியோர் உருவாக்கினர். நிலையத்தின் சுவரோவியங்களில் சி. சங்கரன் நாயர், வி. பி. மேனன், கே. ஆர். நாராயணன், செம்பை வைத்தியநாத பாகவதர், மணி மாதவ சாக்கியர், பி. குஞ்ஞிராமன் நாயர், குஞ்சன் நம்பியார் ஆகியோர் இடம்பெற்றுள்ளர். மேலும் வரிக்காசேரி மனா, பழைய ஒற்றப்பாலம் நீதிமன்ற கட்டடம், சின்னகத்தூர் பூரன் போன்ற உள்ளூரின் முதன்மையான திருவிழாக்கள் போன்றவற்றை சித்தரிக்கும் சுவரோவியங்கும,், கதகளி மற்றும் ஓட்டன் துள்ளல் போன்ற கலை வடிவங்களின் சித்தரிப்புகளும் இடம்பெற்றன. மேலும் 1921 ஆம் ஆண்டு ஒற்றப்பாலத்தில் நடைபெற்ற கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முதல் மாநாட்டை சித்தரிக்கும் சுவரோவியமும் உள்ளது. மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்
682581
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி
வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி (Bardhaman–Durgapur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலும் பர்தமான் மாவட்டத்தில் பரவியுள்ளது. வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தில் உள்ளன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலும் உள்ளன. எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக, பர்த்வான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதி மற்றும் துர்காபூர் மக்களவைத் தொகுதி ஆகியவை 2009 முதல் நீக்கப்பட்டு புதிய தொகுதிகளாக கிழக்கு வர்த்தமான் மக்களவைத் தொகுதி மற்றும் வர்த்தமான் துர்க்காப்பூர் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டன. கண்ணோட்டம் வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி ஒரு புதிய மக்களவைத் தொகுதியாகும். இதில் வர்த்தமான் மற்றும் துர்காபூர் நகரங்களும் இடைநிலை கிராமங்கள் இரண்டும் அடங்கும். இந்த மக்களவை தொகுதியில் 15.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 72 சதவீதம் பேர் கிராமப்புற வாக்காளர்களும் 7.61 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். சட்டமன்றத் தொகுதிகள் வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண். 39) பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முந்தைய ஆண்டுகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துர்காபூர் மக்களவைத் தொகுதி, வர்த்தமான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதியினைப் பார்க்கவும். தேர்தல் முடிவுகள் 2024 மேலும் காண்க மக்களவை தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
682583
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF
சியாம் சரண் நேகி
சியாம் சரண் நேகி (Shyam Saran Negi ; 1 ஜூலை 1917 - 5 நவம்பர் 2022) இமாச்சலப் பிரதேசத்தின்கல்பாவில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். இவர் இந்தியாவின் 1951 பொதுத் தேர்தலில் முதல் வாக்களித்தார். இத்தேர்தல் 1947 இல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்த பின்னர் நடந்த நாட்டின் முதல் தேர்தலாகும். தேர்தலுக்கான பெரும்பாலான வாக்குப்பதிவு பிப்ரவரி 1952 இல் நடந்தாலும், இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வானிலை மோசமாக இருக்கும் என்ற காரணத்தால் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் நடைபெற்றது. நேகி வாக்குச் சாவடிக் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் ஷோந்தோங் வாக்குச் சாவடியில் தனது முதல் வாக்கை அளித்ததையும், பூர்வானி - ரிப்பா - மொராங் - நெசோங் ஆகிய இடங்களில் நீண்ட தூரம் மலையேற வேண்டியிருந்தது என்பதையும் இதற்காக 10 நாட்கள் ஆனதையும் தெளிவாக நினைவு கூர்ந்தார். நேகி 25 அக்டோபர் 1951 அன்று இந்தியாவின் முதல் வாக்கை வாக்களித்தார். 1951 முதல் தான் இறக்கும் வரை ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நேகி வாக்களித்தார். மேலும் இவர் இந்தியாவின் மிகப் பழமையான வாக்காளர் மற்றும் முதல் வாக்காளர் என்றும் நம்பப்படுகிறது. சியாம் சரண் நேகி சனம் ரே என்ற இந்திப் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். இறப்பு நேகி தனது 105 வது வயதில், நவம்பர் 5,2022 அன்று, 34 வது முறையாக வாக்களித்த மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தார். இவரது மரணச் செய்தியைத் தொடர்ந்து, கல்பாவில் முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டார். கௌரவங்கள் 2010 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தேர்தல் ஆணையத்தின் வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நேகியை கௌரவிப்பதற்காக இவரது கிராமத்திற்குச் சென்றார். 2014 ஆம் ஆண்டில், கூகுள் இந்தியா ஒரு பொது சேவை அறிவிப்பை வெளியிட்டது. அதில் நேகி சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் பங்கேற்றது பற்றி கூறினார். மேலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு நினைவூட்டினார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் #PledgeToVote with Mr. Shyam Negi, at YouTube Shyam saran negi : some insites 2022 இறப்புகள் 1917 பிறப்புகள் இந்தியத் தேர்தல்கள்
682585
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அன்பின் பணியாளர்கள்
அன்பின் பணியாளர்கள் சபை (The Servants of Charity) என்பது ஆண்களுக்கான திருத்தந்தை அனுமதி பெற்ற கத்தோலிக்க மதகுரு சபை ஆகும். இந்த மதகுரு சபையின் உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் 'குவனெல்லியானி' (அல்லது குவனெல்லியன்ஸ்) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சபையில் தங்கள் உறுப்பினர்களைக் குறிக்க தங்கள் பெயர்களுக்குப் பிறகு சுருக்கமாக எஸ். சி. என்ற எழுத்துக்களை சேர்க்கின்றனர்.
682587
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
தலைவாசல்
தலைவாசல் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 190.58 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சேலம் மாவட்டத்தில் தலைவாசல் ஊர் அமைந்துள்ளது. மக்கள்தொகை பரம்பல் 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தலைவாசல் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,063 பேர் ஆகும்.‌ இதில் 1,497 பேர் ஆண்கள் மற்றும் 1,566 பேர் பெண்கள் ஆவர். சமயம் இந்துக் கோயில்கள் வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில், அய்யனார் கோயில் மற்றும் மும்முடி அய்யனார் கோயில் என்ற கிராமக் கோயில்கள் ஆகிய மூன்று கோயில்கள், தலைவாசல் பகுதியில் அமையப் பெற்றுள்ள முக்கிய கோயில்களாகும். மேற்கோள்கள் சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
682591
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம்
கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் அல்லது கேஎல்சிசி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: KLCC LRT Station; மலாய்: Stesen KLCC; சீனம்: 城中城站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த எல்ஆர்டி நிலையம், அம்பாங் சாலையின் அவென்யூ கே (Avenue K) என்ற வணிக வளாகத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை சூரியா கேஎல்சிசி (Suria KLCC) எனும் வணிக வளாகத்துடன் ஒரு பாதசாரி சுரங்கப்பாதை இணைக்கிறது; மற்றும் பெட்ரோனாஸ் கோபுரங்கள், மெக்சிஸ் கோபுரம் (Maxis Tower), கோலாலம்பூர் மாநாட்டு மையம் (Kuala Lumpur Convention Centre) ஆகியவற்றை உள்ளடக்கிய கோலாலம்பூர் மாநகர மையம் வளர்ச்சிப் பகுதிகளையும் இணைக்கிறது. பொது கோலாலம்பூர் மாநகர மையத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மேலும் மாநகரின் பல அடையாளங்களுக்கு மிக அருகிலும் உள்ளது. இது இலகுத் தொடருந்து அமைப்பில் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் நிரம்பி வழிவது வழக்கம். இந்த எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் மற்றும் ஒரு நிலையம் உள்ளது. அந்த நிலையம் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் என்று அழைக்கப்படுகிறது. அமைவு சனவரி 2012-இல், புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெட்ரோனாஸ் கோபுரங்களையும் கோலாலம்பூர் பெவிலியன் வணிக வளாகத்தையும் (Pavilion Kuala Lumpur) இணைக்கும் ஒரு பாதசாரி நடைபாதை சேர்க்கப்பட்டது. அந்தப் பாதசாரி நடைபாதை, ராஜா சூலான் மோனோரெயில் நிலையம், புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் மற்றும் புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கிறது. கோலாலம்பூர் மாநகர மையம் கோலாலம்பூர் மாநகர மையத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு நிலத்தடி நிலையமாகும்: தரை நிலை, தொடருந்து பயன்பாட்டு நிலை மற்றும் மேடை நிலை. கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைக்காக இந்த நிலையத்தில் ஒருதீவு நடைமேடையும் உள்ளது. அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது. காட்சியகம் மேலும் காண்க பெட்ரோனாஸ் கோபுரங்கள் கோலாலம்பூர் மாநகர மையம் கிளானா ஜெயா வழித்தடம் மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Kuala Lumpur MRT & LRT Integrations மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682596
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
போனிக்கோகுரோயிட்டு
போனிக்கோகுரோயிட்டு (Phoenicochroite) என்பது Pb2OCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மெலனோகுரோயிட்டு என்ற பெயராலும் அறியப்படும் இக்கனிமம் ஈய குரோமேட்டு கனிமமாகக் கருதப்படுகிறது. ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் படிகங்களாக உருவாகிறது. முதன்முதலில் 1839 ஆம் ஆண்டில் உருசிய நாட்டின் யூரல் மலைத்தொடரில் உள்ள பெரியோசோவ்சுகோய் சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. அடர் சிவப்பு மற்றும் நிறம் என்ற பொருள் கொண்ட கிரேக்க சொற்களிலிருந்து இதன் நிறத்தைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் போனிக்கோகுரோயிட்டு கனிமத்தை Phc என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் கனிமங்கள் ஈயக் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் குரோமேட்டு கனிமங்கள்
682601
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%28%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%29
பத்தினி (பக்கவழி நெறிப்படுத்தல்)
பத்தினி (Paththini) என்பது இலங்கையின் காவல் தெய்வமாகும். பத்தினி என்று கீழ்கண்டவற்றைக் குறிக்கலாம்: பத்தினி (1997 திரைப்படம்), 1997 தமிழ்த் திரைப்படம் பத்தினி (2016 திரைப்படம்), 2016 சிங்களத் திரைப்படம் இதையும் காண்க பத்தினிப் பெண், 1993 தமிழ்த் திரைப்படம்
682604
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D
அன்னா பென்
அன்னா பென் (Anna Ben) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஓர் நடிகையாவார். திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம்பலத்தின் மகளான இவர், 2019 ஆம் ஆண்டில் கும்பளங்கி நைட்ஸ் மூலம் அறிமுகமானார். ஹெலன் (2019) மற்றும் கப்பேலா (2020) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் இரண்டு கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றார். அதற்குப் பிறகு தெலுங்கில் வெளியான கல்கி 2898 கி. பி. (2024) என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்தில் ஒரு துணை வேடத்தில் நடித்துள்ளார். இவரது ஹெலன் திரப்படம் அன்பிற்கினியாள் எனும் பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும் ஒடிய மொழியிலும் இந்தியிலும் எடுக்கப்பட்டது. இளமை வாழ்க்கை அன்னா, திரைக்கதை ஆசிரியர் பென்னி பி. நாயரம்பலம் மற்றும் புல்ஜாவின் மகள் ஆவார். வடுத்தலா சின்மயா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், கொச்சியின் செயின்ட் தெரசா கல்லூரியில் ஆடை வடிவமைப்பில் பட்டம் பெற்றர். தொழில் வாழ்க்கை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற கும்பளங்கி நைட்ஸ் மூலம் 2019 ஆம் ஆண்டில் திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் பெண் குழந்தை கதாநாயகியாக நடித்தார். பின்னர், ஹெலன் மற்றும் கப்பேலா போன்ற படங்களில் நடித்தார், இது பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இயக்குநர் சத்யன் அந்திக்காடு ஹெலன் படத்தில் இவரது கதாபாத்திரத்தைப் பாராட்டினார், மேலும் மலையாள மனோரமாவின் இணைய இதழ், "அன்னா பென் கப்பேலாவை ஒரு மகிழ்ச்சியான பயணமாக ஆக்குகிறார்." என்று எழுதியது. அன்னா இசைக் காணொளிகளிலும் தோன்றியுள்ளார். மேற்கோள்கள் External links இந்தியத் திரைப்பட நடிகைகள் மலையாளத் திரைப்பட நடிகைகள் கேரள நடிகைகள் வாழும் நபர்கள்
682610
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
மெக்சிஸ் கோபுரம்
{{Infobox building | mapframe-zoom = 16 | name = மெக்சிஸ் கோபுரம் | image = Maxis Tower, Kuala Lumpur.jpg | image_size = 250px | alternate_names = Ampang Tower | location = அம்பாங் சாலை, | coordinates = | start_date = 1994 | completion_date = 1996 | building_type = | roof = | floor_count = 49 | elevator_count = 9 | cost = | floor_area = | architect = ரோச்-திங்கெலு | structural_engineer = தோர்ன்டன் தோமசெட்டி | services_engineer = எஸ்எம் பொறியாளர்கள் | main_contractor = | developer = | owner = | management = | references =</ref><ref> மெக்சிஸ் கோபுரம் அல்லது அம்பாங் கோபுரம் (மலாய்; Menara Maxis; ஆங்கிலம்: Maxis Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் 212 மீ (696 அடி அடி) உயரத்தில் உள்ள 49-அடுக்கு உயர வானளாவிய கட்டிடமாகும். இந்தக் கோபுரம் மெக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் (Maxis Communications); மற்றும் தஞ்சோங் குழும நிறுவனங்கள் (Tanjong Plc Group of Companies) ஆகியவற்றின் தலைமையகமாகச் செயல்படுகிறது. பொது கோலாலம்பூர் மாநகர மையத் திட்டத்தின் 1-ஆம் கட்டத்தின் கீழ் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் (KLCC Properties) நிறுவனத்தின் மூலம் மெக்சிஸ் கோபுரம் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் இம்பியான் கிலாசிக் (Impian Klasik Sdn Bhd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் தஞ்சோங் குழும நிறுவனங்கள் 67% பங்குகளையும் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் 33% பங்குகளையும் வைத்துள்ளன. அமைவு மெக்சிஸ் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையத்தின் வடமேற்கு பகுதியில் பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. மெக்சிஸ் கோபுரம், அலுமினியம் மற்றும் கண்ணாடி உறை முகப்பைக் கொண்டுள்ளது. மேலும் காண்க எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் கோலாலம்பூர் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையம் மெர்டேக்கா 118 அங்காசாபுரி கோத்தா தாருல் எசான் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Maxis Website கோலாலம்பூர் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கோபுரங்கள்
682614
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28Ce%29
குக்கரெங்கோயிட்டு-(Ce)
குக்கரெங்கோயிட்டு-(Ce) (Kukharenkoite-(Ce)) என்பது Ba2CeF(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பேரியம் சீரியம் புளோரைடு கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தின் மாண்ட்டு-செயிண்ட்டு-இலேர் நகரத்திலும் உருசியாவின் கோலா தீபகற்பத்தில் உள்ள கிபினி மலைத் தொடரிலும் கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து இக்கனிமம் அடையாளம் காணப்பட்டது. உருசிய கனிமவியலாளர் அலெக்சாண்டர் ஏ. குக்கரெங்கோவின் (1914-1993) நினைவாகக் கனிமத்திற்கு குக்கரெங்கோயிட்டு-(Ce) என்று பெயரிடப்பட்டது. இதேபோன்ற சீனாவில் கிடைக்கும் சீரியம் தனிமத்தைக் கொண்டிருக்கும் கனிமமான சோங்குவாசெரைட்டு கனிமம் குக்கரெங்கோயிட்டு-(Ce) அல்லது உவாங்கோயிட்டு-(Ce) என்று கருதப்படுகிறது.. பன்னாட்டு கனிமவியல் சங்கம் குக்கரெங்கோயிட்டு கனிமத்தை Kkk-Ce என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் பேரியம் கனிமங்கள் இலந்தனைடு கனிமங்கள் புளோரின் கனிமங்கள் கார்பனேட்டு கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் கனிமங்கள்
682620
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF
சூரியா கேஎல்சிசி
சூரியா கேஎல்சிசி (மலாய்: Suria KLCC; ஆங்கிலம்: Suria KLCC; சீனம்:陽光廣場) என்பது மலேசியா, கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள 6-அடுக்கு வணிக வளாகமாகும். சூரியா கேஎல்சிசி, கோலாலம்பூரில் மிகவும் புகழ்பெற்ற வணிகத் தளமாக அறியப்படுகிறது. இந்தத் தளம், 300-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட முதன்மையான பல்கடை அங்காடி இடமாக விளங்குகிறது. இந்த வணிக வளாகம் கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ளது. பொது மே 1998-இல் திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம், கோலாலம்பூர் நகர மையத்தின் ஒரு பகுதியாக, பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களின் அடிவாரத்தில் கட்டப்பட்டது. சூரியா கேஎல்சிசி வளாகத்தில் இருந்து, கேஎல்சிசி பூங்கா மற்றும் பெட்ரோனாஸ் குழுவிசை மண்டபம் ஆகிய இரு வளாகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் சூரியா கேஎல்சிசி வளாகமும் உருவாக்கப்பட்டு உள்ளது. வரலாறு "சூரியா" என்பது சமசுகிருதச் சொல்லான "சூரியா" என்பதில் இருந்து பெறப்பட்ட மலாய் மொழிச் சொல்லாகும்; அதாவது "சூரிய ஒளி" என்று பொருள்படும். சூரியா கேஎல்சிசி வணிக வளாகத்தின் தரை மாடி பிறை வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூன்று தரைநிலை வாயில்களும்; அம்பாங் சாலை, பி. ராம்லீ சாலை மற்றும் பெர்சியாரான் பெட்ரோனாஸ் (Persiaran Petronas) ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. சூரியா கேஎல்சிசியின் தரைநிலை வாயில்களில் (Ground-level Exits) இருந்து பெட்ரோனாஸ் குழுவிசை மண்டபம் (Petronas Philharmonic Hall) மற்றும் பெட்ரோனாஸ் குழுவிசை மண்டபத்தின் நீரூற்றுப் பகுதிக்கும் (Lake Symphony) நேரடியாக அணுகலாம். நிர்வாகம் சூரியா கேஎல்சிசி என்பது சூரியா கேஎல்சிசி நிறுவனத்தின் (Suria KLCC Sdn. Bhd) கீழ் உள்ள மிகப்பெரிய சொத்துரிமை ஆகும். சூரியா கேஎல்சிசி நிறுவனத்தின் கீழ் அலமண்டா புத்ராஜெயா (Alamanda Putrajaya); மெஸ்ரா மால் திராங்கானு (Mesra Mall Terengganu) ஆகிய பிற சொத்துரிமைகளும் உள்ளன. சூரியா கேஎல்சிசி காட்சியகம் சூரியா கேஎல்சிசியில் நடைபெற்ற சில பெருநாள் நிகழ்ச்சிகளின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் காண்க மெக்சிஸ் கோபுரம் எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் கோலாலம்பூர் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையம் மெர்டேக்கா 118 பெட்ரோனாஸ் கோபுரங்கள் கோலாலம்பூர் மாநாட்டு மையம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Maxis Website கோலாலம்பூர் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள்
682623
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
கேஎல்சிசி பூங்கா
கேஎல்சிசி பூங்கா (மலாய்: KLCC Park; ஆங்கிலம்: Taman KLCC; சீனம்:吉隆坡城中城公園) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ள பொதுப் பூங்கா ஆகும். பெட்ரோனாஸ் கோபுரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பசுமையை வழங்கும் வகையில் கேஎல்சிசி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையுடன் மனிதனின் படைப்புகளை ஒருங்கிணைத்து வெப்பமண்டலப் பசுமையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பூங்கா உருவாக்கப் பட்டதாகவும் அறியப்படுகிறது. பொது இந்தப் பூங்காவை வடிவமைத்தவர் பிரேசிலிய கட்டிடக் கலைஞர் ராபர்டோ பர்லே மார்க்ஸ் (Roberto Burle Marx). அவரால் மேற்கொள்ளப்பட்ட கடைசி வடிவமைப்பு என்றும் அறியப்படுகிறது. பூங்கா வடிவமைக்கப்பட்டபோது, ​​'இயற்கையின் முக்கியத்துவத்தை மேலும் அறிய வேண்டிய உணர்திறன் மனுக்குலத்திற்கு வேண்டும்' என்பதே அதன் முதன்மை நோக்கமாக இருந்தது. பசுமைப் பகுதிகள் மரங்கள், புதர்கள், கற்கள், நீர்க் கூறுகள் போன்ற இயற்கைக் கூறுகளின் பல சேர்க்கைகளை இந்தப் பூங்கா கொண்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் நிலப்பரப்பின் கூறுகள், அந்தப் பூங்காவிற்கு வான்வெளித் தோற்றத்தை வழங்குவது போன்ற நிலைப்பாட்டில் உருவாக்கப்பட்டன. இந்தப் பூங்காவில் ஓர் அழகான ஏரி உள்ளது; மற்றும் நகரத்தின் சலசலப்பிலிருந்து சற்றே விலகிச் செல்வதற்கு இந்தப் பூங்காவில் ஏராளமான பசுமைப் பகுதிகளும் உள்ளன; குழந்தைகளுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையட்டுத் தளங்களும் உள்ளன. கேஎல்சிசி பூங்கா காட்சியகம் மேலும் காண்க மெக்சிஸ் கோபுரம் எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் கோலாலம்பூர் கோபுரம் சூரியா கேஎல்சிசி மெர்டேக்கா 118 பெட்ரோனாஸ் கோபுரங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கோலாலம்பூர் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள்
682624
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87-04%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%28%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%29
இ-04 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை)
மத்திய அதிவேக நெடுஞ்சாலை என்பது இலங்கையின் தலைநகர் கொழும்புடன் குருணாகலையும் கண்டியையும் இணைக்கும் வகையில் தற்போது அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் அதிவேக நெடுஞ்சாலை ஆகும். இது ஏ-1 கொழும்பு - கண்டி நெடுஞ்சாலைக்கும் ஏ-1 அம்பேபுச - திருகோணமலை நெடுஞ்சாலைக்கும் பதிலான விரைவுச்சாலையாக அமையும். இது இ-02 கொழும்பு புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தை இடமாறலில் ஆரம்பித்து கம்பகா மாவட்டம், குருணாகல் மாவட்டம், மாத்தளை மாவட்டம் ஆகியவற்றை ஊடறுத்து ஏ-9 கண்டி - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையில் தம்புள்ளையில் இணையும். மேற்கோள்கள் இலங்கையின் நெடுஞ்சாலைகள்
682625
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
கெட்டோ
கெட்டோ (ghetto) என்பது ஒரு சிறுபான்மைக் குழுவின் உறுப்பினர்கள் குவிந்துள்ள நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியாகும். அரசியல், சமூக, சட்ட, மத, சுற்றுச்சூழல் அல்லது பொருளாதார அழுத்தத்தின் விளைவாக. கெட்டோக்கள் பெரும்பாலும் நகரத்தின் மற்ற பகுதிகளை விட மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகைய பகுதிகள் உலகம் முழுவதும் காணப்படுகிறது. யூத எதிர்ப்புக் கொள்கைவின் காரணமாக, 1516 ஆம் ஆண்டில்,, இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில், யூதர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்படாததால், வெனிசின் கெட்டோ பகுதிகளில் வாழ்ந்தனர். கெட்டோ எனும் சொல் அது முதல் பயன்பாட்டிற்கு வந்தது.யூத எதிர்ப்புக் கொள்கை காரண்மாக, நாஜி ஜெர்மனியர்கள் ஐரோப்பிய யூதர்களை கொல்லும் நோக்கத்துடன் 1,000க்கும் மேற்பட்ட நாஜி கெட்டோக்கள் மூலம் யூத மக்களைக் கட்டுப்படுத்த நிறுவப்பட்டது. உருமேனியா மற்றும் சிலோவாக்கியா போன்ற சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், உரோமானி மக்கள் அதிகம் வசிக்கும் நகரத்தின் சுற்றுப்புறங்களைக் குறிக்க கெட்டோ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. தற்காலத் தமிழ்நாட்டின் நகர்புறங்களில் சேரி என்ற சொல், பொதுவாக வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ஏழை மக்கள் அல்லது யூதர்கள் வாழும் பகுதிக்கு கெட்டோ என்ற சொல் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சொற்பிறப்பியல் கெட்டோ என்ற சொல் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தின் ஒதுக்குப்புறப் பகுதிகளைக் குறிக்க 1516ஆம் ஆண்டிலிருந்து உருவானது. பயன்படுத்தப்பட்டது. 1899 வாக்கில், பிற சிறுபான்மை குழுக்களின் நெரிசலான நகர்ப்புற பகுதிகளுக்கும் இந்த சொல் நீட்டிக்கப்பட்டது. இச்சொல்லின் சொற்பிறப்பியல் நிச்சயமற்றது, ஏனெனில் வெனிஸ் மொழிச் சொல்லின் தோற்றம் பற்றி சொற்பிறப்பியல் வல்லுநர்களிடையே எந்த உடன்பாடும் இல்லை. இந்த சொல்லின் ஒரு கோட்பாடு வெனிஸ் நகரத்தின் எல்லைக்கோட்டை குறிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு கோட்பாடுகளின்படி கெட்டோ எனும் சொல் வருகிறது: எபிரேயம் மொழியில் கெட்டோ என்ற சொல்லிற்கு விடை பெறுதல் அல்லது 'விவாகரத்து ஆவணம்', அல்லது 'பிரிவினைப் பத்திரம்' என்று பொருள். மற்றொரு சாத்தியம், பண்டைய எகிப்திலிருந்து யூதர்கள் நாடுகடத்தப்பட்டதன் நினைவாக கெட்டோ எனும் சொல் தோன்றிருக்கலாம் யூத கெட்டோக்கள் ஐரோப்பா கணடத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் பாரம்பரியமாக யூதர்கள் வசிக்கும் நகரத்தின் பகுதியைக் குறிக்க கெட்டோ எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.. மதம், மொழி மற்றும் இனம் குறித்த தேதியிட்ட பார்வைகளின் அடிப்படையில் யூதர்களுக்கு எதிரான பெரும்பான்மை பாகுபாடு காரணமாக கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூத கெட்டோக்கள் இருந்தன: யூதர்கள் வெளியாட்களாகக் கருதப்பட்டனர். இதன் விளைவாக, பல ஐரோப்பிய நகரங்களில் யூதர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டனர்.மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக, கெட்டோக்கள் (ரோம் நகரத்தைப் போல) குறுகிய தெருக்களையும், உயரமான, நெரிசலான வீடுகளையும் கொண்டிருந்தன. நாஜி ஜெர்மனியின் கெட்டோக்கள் இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள் மற்றும் ரோமானி மக்களை வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைப்பதற்காக நாஜிக்கள் புதிய கெட்டோக்களை கிழக்கு ஐரோப்பாவின் பல நகரங்களில் வதை முகாமின் வடிவமாக நிறுவினர். இதனையும் காண்க யூத எதிர்ப்புக் கொள்கை நாஜி ஜெர்மனி அவுஷ்விட்ஸ் வதை முகாம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நகர்ப்புறப் பகுதிகள் யூத வரலாறு
682633
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF
அனங்கனடி
அனங்கனடி (Ananganadi) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். அனங்கனடியின் தெற்கே உள்ள ஒற்றப்பாலம் மற்றும் வடக்கே உள்ள செர்புளச்சேரி ஆகிய நகரங்களிலிருந்து சம தொலைவில் 10 கி.மீ தொலைவில் அனங்கனடி அமைந்துள்ளது. வாணியங்குளம் கிராமம் தென்மேற்கே தோராயமாக 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் அனங்கன் மலைகளின் கீழ் அமைந்துள்ளதால், அனங்கனடி என்ற பெயர் பெற்றது. அனங்கன்மலா என்று பிரபலமாக அறியப்படும் அனங்கன் மலைகள், 2500 ஏக்கர் பரப்பளவில் பாறைகள் நிறைந்த பசுமையான காடுகளுடன், பல்வேறு வனவிலங்குகளுடன் உள்ளது. இது வடக்கு-தெற்கே சுமார் 20 கி.மீ நீளம் வரை நீண்டுள்ளது. மேலும் அதன் மிக உயர்ந்த இடமானது சுமார் 1200 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. அனங்கன் மலைப்பகுதியில் கேரள வனத்துறையால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் உள்ளது. சேரம்பேட்டை பகவதி கோயில், பட்டர்கோணம் சிவன் கோயில் ஆகியவை அனங்கனடி கிராமத்தில் உள்ள இரண்டு மிகப் பழமையான கோவில்களாகும். 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அனங்கனடி உயர்நிலைப்பள்ளி கிராமத்தின் பழமையான மற்றும் ஒரே உயர்நிலைப் பள்ளியாகும். அனங்கனடி அதே பேரிலான கிராம ஊராட்சியைக் கொண்டுள்ளது. இது ஒற்றப்பாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. பத்தம்குளத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்கள்வைகைப்பாடு 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அனங்கனடியின் மக்கள் தொகை 22,078 ஆகும். இதில் 10,242 பேர் ஆண்கள், 11,836 பேர் பெண்கள். அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் (2011) கிராமத்தின் மக்கள் தொகை 24,445 உள்ளதாக காட்டுகின்றன, இந்த பதிவின்படி கிராமத்தில் உள்ள ஆண்கள் 11,386 பேர், பெண்கள் 13,059 பேர்களாவர். மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் Coordinates on Wikidata
682634
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88%201
உருமி தடுப்பணை 1
உருமி தடுப்பணை 1 (Urumi 1 Weir) என்பது இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தின் கூடரஞ்சி கிராமத்தில் பொயிலிங்கலபுழாவின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சிறிய நீர் திசைதிருப்பல் அணையாகும். சிறிய நீர்மின் திட்டத்தில் மின் உற்பத்திக்காகக் கட்டப்பட்டது இந்த தடுப்பணை. சாலியார் ஆற்றின் துணை ஆறான பொயிலிங்கலபுழாவின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆழமான பகுதியிலிருந்து அணையின் உயரம் 5.6 மீட்டரும் அணையின் நீளம் 47 மீட்டரும் ஆகும். அணைக்கு அருகிலுள்ள உருமி நீர்வீழ்ச்சி நீர்மின் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இப்பகுதி மாறியுள்ளது. விவரக்குறிப்புகள் அமைவிடம்: 11 0 22 '51.85 "வ 76 0 3'41" கி அணையின் வகை: பைஞ்சுதை, ஈர்ப்பு ஊராட்சி : கூடரஞ்சி வகைப்பாடு: தடுப்பணை அதிகபட்ச நீர் மட்டம்: 212.1 மீ மாவட்டம்: கோழிக்கோடு முழு நீர்த்தேக்க நிலை: 212.1 மீ ஆற்றுப் படுகை: சாலியார் அணையில் செயல்பாடு: நீர் திசைதிருப்பல் ஆறு: பொயிலிங்ல்புழா ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 5. 6 மீ அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு: பொயிலிங்ல்புழா நீளம் :47. 0 மீ நீர் வெளியேறும் வட்டம்: தாமரச்சேரி சுழல்காற்று: மேல்நிலைப் பிரிவு முகடு நிலை: 212.1 மீ திட்டத்தின் நோக்கம்: நீர் மின்சாரம் திட்டத்தின் நிறுவப்பட்ட திறன்: 3 × 1.25 (3.75 மெகாவாட்) மேற்கோள்கள்
682636
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87.%20%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81
இ. பி. பௌலோசு
இ. பி. பௌலோசு (E. P. Poulose) (2 அக்டோபர் 1909 - 17 நவம்பர் 1983) ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1957 முதல் 1965 வரை கேரள சட்டமன்றத்தில் இராமமங்கலம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான பௌலோசு 1960 முதல் 1964 வரை கேரள் அரசின் உணவு மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்தார். சுயசரிதை இ. பி. பௌலோசு 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த ராமமங்கலம் கிராமத்தில் பிறந்தார். 1933 இல், சட்டப் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஒரு சிரிய கிறிஸ்தவரான இவர் 1935 இல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர், இந்திய சுதந்திர இயக்கத்தில் உறுப்பினரானார். இந்த இணைப்பின் காரணமாக, இவர் 1946 இல் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். 1948 இல், திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் 1957 தேர்தலில், புதிதாக நிறுவப்பட்ட கேரள சட்டப்பேரவைக்கு இராமமங்கலம் தொகுதியின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் பரமேசுவரன் நாயரை எதிர்த்து போட்டியிட்டார். நாயரைவிட 20,086 வாக்குகள் அதிகம் பெற்று பௌலோசு வெற்றி பெற்றார்.பின்னர், 1960இல் நடந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், 32,448 வாக்குகள் பெற்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் பி. வி. ஆபிரகாமை வெற்றி பெற்றார். 1960 பிப்ரவரி 22 அன்று கேரளாவின் முதலமைச்சரான பட்டம் தாணு பிள்ளையின் தலைமையிலான அரசாங்கத்தில் உணவு மற்றும் வேளாண் அமைச்சராக பௌலோசு நியமிக்கப்பட்டார். 1962இல் பிள்ளை தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், பிள்ளையின் வாரிசான ஆர். சங்கரின் அரசாங்கத்திலும் இவர் தக்கவைக்கப்பட்டார். பௌலோசு 1964 செப்டம்பர் 10 வரை அமைச்சராக பணியாற்றினார். அடுத்த ஆண்டு, 1965 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், மூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். 18,929 வாக்குகளைப் பெற்று கேரள காங்கிரஸ் வேட்பாளர் ஏ. டி. பத்ரோசை தோற்கடித்தார். பத்ரோசுக்கு 14659 வாக்குகள் கிடைத்தது. கிறுத்துவ ஆதரவு சட்டமன்றத்தில் இருந்த காலத்தில், பௌலோசு கிறிஸ்தவ மரபுகளுக்கு ஆதரவாக இருந்தார். 1957 ஆம் ஆண்டில், கேரள கல்விச் சட்டத்திற்கு எதிராக இவரும் மற்றும் பிற கிறிஸ்தவ சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர் தனியார் கிறிஸ்தவ பள்ளிகளில் ஒழுங்குமுறைகளை நிறுவும் இந்த மசோதாவை கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அடுத்த ஆண்டு, 1916 திருவிதாங்கூர் கிறிஸ்தவ வாரிசுச் சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை பௌலோசு எதிர்த்தார். இது கிறிஸ்தவ வரதட்சணை முறை குறித்த ஒரு சட்டமாகும். இதில் வரதட்சணை பெற்ற கிறிஸ்தவ பெண்கள் தங்கள் குடும்பத்தின் சொத்துகளுக்கு பரம்பரைக்கான அனைத்து உரிமைகோரல்களையும் இழக்க நேரிடும். இறப்பு பௌலோசு 1983 நவம்பர் 17 அன்று இறந்தார். மேற்கோள்கள் நூல் ஆதாரங்கள் எர்ணாகுளம் மாவட்ட நபர்கள் கேரளாவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் 20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள் 1983 இறப்புகள் 1909 பிறப்புகள்
682637
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கேலூசைட்டு
கேலூசைட்டு (Gaylussite) என்பது Na2Ca(CO3)2·5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது நீரேறிய சோடியம் கால்சியம் கார்பனேட்டு வகை கனிமமாகும். கனிமத்தின் வழியாக ஒளி ஊடுருவும். பளபளப்பான வெள்ளை நிறத்தில் இருந்து சாம்பல், மஞ்சள் நிறத்தில் ஒற்றைச்சரிவச்சுப் பட்டகப் படிகங்களாக கேலூசைட்டு தோன்றுகிறது. நிலைப்புத்தன்மை அற்ற கனிமமான இது வறண்ட காற்றில் நீரிழக்கிறது. தண்ணீரில் சிதைவடைகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் கேலூசைட்டு கனிமத்தை Gyl என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. கண்டுபிடிப்பு ஏரிகளைச் சேர்ந்த கார நீர்க்கட்டிகளில் இருந்து ஆவியாகி கேலூசைட்டு தோன்றுகிறது. அரிதாக காரவகைப் பாறைகளின் நரம்புகளில் தோன்றுகிறது. முதன்முதலில் 1826 ஆம் ஆண்டில் வெனிசுலாவின் மெரிடா மாநிலம், லாகுனிலாசு நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. பிரெஞ்சு வேதியியலாளர் இயோசப் லூயிசு கே-லூசாக்கு (1778-1850) நினைவாக கேலூசைட்டு என்று பெயரிடப்பட்டது. கேலூசைட்டு கனிமம் சமீபத்தில் (2014) இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தின் லோனார் ஏரியில் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. பிலிசுடோசின் சகாப்தத்தின் போது விண்கல் தாக்கத்தால் லோனார் ஏரி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பூமியில் பாசால்டிக் பாறையால் அறியப்படும் நான்கு அதிவேக விண்கல் தாக்க பள்ளங்களில் ஒன்றாகும். மேற்கோள்கள் சோடியம் கனிமங்கள் கால்சியம் கனிமங்கள் கார்பனேட்டு கனிமங்கள் ஒளிரும் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் கனிமங்கள்
682639
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்
கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் (மலாய்: Aquaria KLCC; ஆங்கிலம்: Aquaria KLCC; சீனம்: 吉隆坡城中城水族館) என்பது மலேசியா, கோலாலம்பூர், கேஎல்சிசி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகம் ஆகும். இந்தக் காட்சியகத்தில் 90 மீட்டர் திறந்தவெளி சுரங்க நடைபாதை (Transparent Tunnel Walkway) உள்ளது. அந்தச் சுரங்க நடைபாதை, பெருங்கடலில் வாழும் மணல் புலி சுறா மீன்கள் (Sand Tiger sharks), பெரும் திருக்கைகள் (Giant Stingrays), கடல் ஆமைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான சுறாக்களை, நேருக்கு நேர் பார்வையாளர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது. பொது கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தின் கட்டுமானம் 2003-இல் தொடங்கியது. ஆகஸ்டு 2005-இல் திறக்கப்பட்டது. 60,000 சதுர அடி (5,600 மீ2) பரப்பளவு கொண்ட இந்தக் காட்சியகம், 90-மீட்டர் (300 அடி) நீருக்கடியிலான சுரங்கப்பாதையையும் கொண்டுள்ளது. கடலை நோக்கும் நீரின் பயணம் இந்தக் காட்சியகத்தில் 250 வெவ்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்கள்; மற்றும் உலகம் முழுவதும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட நீர் நிலவாழ் உயிரினங்களும் உள்ளன. மீன் மற்றும் ஆமை பாதுகாப்பு பற்றிய தகவல் மையங்களும் உள்ளன. இந்தக் காட்சியகத்தின் அமைப்புக் கூறு, நிலத்திலிருந்து கடலை நோக்கிய நீரின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது. மூடுபனி நிறைந்த மலைப்பகுதிகளில் அந்தப் பயணம் தொடங்குகிறது. ஆறுகள் வழியாக, மழைக்காடுகள், சதுப்புநிலங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும் நீரின் பயணம், ஆழமான நீலக் கடலுக்குள் படர்ந்து இருக்கும் பவளப்பாறைகள் வரை சென்று முடிவடைகிறது. கடல்வாழ் உயிரினங்கள் உயிரினங்கள் வாழும் இடங்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. சுறா மீன்கள் - பெருங்கடல் பிரிவு நன்னீர் மீன்கள் - அடர்ந்த காடுகள் பிரிவு பிரன்கா மீன்கள் (Piranhas) - பரிணாம மண்டலப் பிரிவு நீர்நாய்கள் - ஆறுகள் பிரிவு இழுதுமீன் (Jellyfish); கடல் குதிரைகள் - கடல் நீர்வாழ் உயிரினப் பிரிவு நீராளி பெரிய கணவாய் (Giant Octopus) - விசித்திரமான உயிரினப் பிரிவு கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் மேலும் காண்க சூரியா கேஎல்சிசி கோலாலம்பூர் மாநகர மையம் கேஎல்சிசி பூங்கா கோலாலம்பூர் மாநாட்டு மையம் பெட்ரோனாஸ் கோபுரங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Aquaria KLCC Aquaria KLCC on TripAdvisor கோலாலம்பூர் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் மலேசிய அருங்காட்சியகங்கள் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள்
682642
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88
சேடல்மந்து அரண்மனை
சேடல்மந்து அரண்மனை (Satelmond Palace) என்பது திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமான அரண்மனைகளில் ஒன்று. இது இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பூஜாப்புரம் பகுதியில் உள்ளது. முதலில் “விஜய விலாசம்” என்று அழைக்கப்பட்டது இது பின்னர் சேடல்மந்து அரண்மனை என்று அறியப்பட்டது. சேது லட்சுமி பாயி ஆட்சியின் போது அரண்மனை அவரது அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. During the late 1970s, it was gifted 1970 களின் பிற்பகுதியில், திருவனந்தபுரம், சிறீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அரச குடும்பத்தால் இது பரிசாக வழங்கப்பட்டது[1], அது அங்கு தனது உயிரியல் மருத்துவ தொழில்நுட்ப பிரிவைத் தொடங்கியது. இராணியின் உருவப்படம் இன்றும் பிரதான கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள நடைபாதையில் தொங்குகிறது.ராணியின் உருவப்படம் இன்றும் கூடத்தில் தொங்குகிறது கட்டுமானம் இரண்டு மாடி கொண்டகளைக் கொண்ட அரண்மனையின் நுழைவாயிலில் பெரிய தூண்கள், சிக்கலான சிற்பங்கள், கம்பீரமான சிங்கங்களின் சிலைகள், விரிவான வடிவங்களைக் கொண்ட மாடிகள், வட்டமான மர படிக்கட்டுகள் மற்றும் வளைந்த சுடுமண் ஓடுகளுடன் சாய்ந்த கூரைகள் ஆகியவை உள்ளது. இதனையும் காண்க திருவிதாங்கூர் அரச குடும்பம் மன்னர் அரசு பூஜாப்புரம் மேற்கோள்கள் திருவனந்தபுரத்திலுள்ள அரண்மனைகள்
682645
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
யுரேனியம் சிர்க்கோனியம் ஐதரைடு
யுரேனியம் சிர்க்கோனியம் ஐதரைடு (Uranium zirconium hydride) என்பது UZrH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம்|சேர்மமாகும்.]] யுரேனியம் ஐதரைடும் சிர்க்கோனியம்(II) ஐதரைடும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பயிற்சி, ஆராய்ச்சி, ஐசோடோப்புகள், பொது அணுவியல் ஆராய்ச்சி அணு உலைகளில் யுரேனியம் சிர்க்கோனியம் ஐதரைடு பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஆற்றல் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் இதை பெருமளவில் தயாரிக்கிறது. UZrH எரிபொருளானது பல்கலைக்கழகங்களில் உள்ள பெரும்பாலான ஆராய்ச்சி உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. உலையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​வினைத்திறன் வேகமாக குறைகிறது. பெரிய, உடனடி வினைத்திறன் எரிபொருள் வெப்பநிலை குணகத்தை இவ்வினை கொண்டுள்ளது. பிரான்சு நாட்டின் ரோமன்சு-சுர்-இசேரில் உள்ள பிராங்கோ-பெல்ச்சு டி ஃபேப்ரிகேசன் டு கம்பசுடிபிள் என்ற நிறுவனம் மட்டுமே இந்த எரிபொருளின் ஒரே உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Technical Foundations of TRIGA: Thermalization In Zirconium Hydride கனிம வேதியியல் சேர்மங்கள் அணு எரிபொருள்கள் அணுக்கருப் பொருட்கள் யுரேனியம்
682648
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
வாண்டையார்
வாண்டையார்‌ (Vandayar) என்னும்‌ பட்டம்‌ வண்டையர்‌ என்னும்‌ பெயரின்‌ திரிபாகக் கொள்ளப்படுகிறது. வாண்டையார்‌ என்னும்‌ பட்டம்‌ கள்ளர்‌ இனத்தவரின்‌ பட்டப்‌ பெயர்களுள்‌ ஒன்று என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி விளக்கம்தருகிறது. சோழர் காலத்தில் வாளுடையவர்கள் என்பவர்கள், பிற்காலத்தில் மருவி வாண்டையார்கள் என அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. கருணாகரத் தொண்டைமான் வண்டையர்‌ கோன்‌ என அழைக்கப்பட்டமையும்‌, வல்லம்‌ என்னும்‌ தென்னார்க்காட்டுப்‌ பகுதியை ஆண்டவன்‌ வல்லவரையன்‌ வண்டையத்‌ தேவன்‌ எனப்பட்டதும்‌ காணலாம்‌. கலிங்கத்துப்‌ பரணியின்‌ பாடல்களில்‌ வண்டைமன்‌ தொண்டைமான்‌, வண்டைநகர்‌ அரசன்‌, வண்டையர்க்கு அரசு, வண்டை வேந்தன்‌. வண்டையர்‌ அரசன்‌, வண்டையர்‌ கோன்‌” என்றெல்லாம்‌ கருணாகரத்‌ தொண்டைமான்‌ சிறப்பித்து அழைக்‌ கப்படுகிறான்‌. வாண்டையார், தெத்து வாண்டையார், பருதி வாண்டையார், நெடுவாண்டையார், வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் என்று மருவி கள்ளர்‌ இனத்தவரின்‌ பட்டப்‌ பெயர்களாக உள்ளன. கல்வெட்டுகளில் வாண்டையார் 1453 ஆண்டு அறந்தாங்கி தொண்டைமான் அழகிய மணவாளப்பெருமாள்‌ தொண்டைமானார் ஆட்சியில் பழங்கரை புராதனபுரீசுவரர்‌ கோயில்‌ வடபுற கல்வெட்டில் வாண்டையார்கள் குறிக்கப்படுகிறார்கள். 17 ஆம் நூற்றாண்டு சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூர்‌ வட்டம்‌, ஆறகளூர் வெளிப்பாளையத்தில்‌ உள்ள நவகண்ட சிற்பம்‌ அருகே வயலில்‌ இருக்கும்‌ பலகைக்கலில், மாரிமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார்‌ என்பவர்‌ ஆறகமூரில்‌ உள்ள திருக்காமீசுரமுடைய தம்பினாருக்கு குமாரபாளையம்‌ என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். தஞ்சாவூர்' தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் கிழக்குத்‌ திருச்சுற்று தரையில்‌ உள்ள கல்வெட்டில் மாரியப்ப வாண்டையார்‌ மகன்‌ குப்பமுத்து என்பவன்‌ யாசகம்‌ பெற்று, மக்கள்‌ இட்ட அந்த உபயம்‌ கொண்ரு பெரிய பிரகாரத்தின்‌ தளவரிசை வகையறா போட்டதை அறியலாம்‌. வாண்டையார் பெயரில் உள்ள இடங்கள் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் வாண்டயார் இருப்பு. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பேரையூர் ஊராட்சியில் உள்ள சிற்றூர் வாண்டையார் குடிகாடு. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், கரும்பிரான்கோட்டை ஊராட்சியில் உள்ள சிற்றூர் வாண்டையார் குடியிருப்பு . புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வடுகப்பட்டி ஊராட்சியில் உள்ள சிற்றூர் வாண்டையான்பட்டி. புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில், கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் உள்ள சிற்றூர் வாண்டாம்பட்டி. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ஆற்றங்கரை ஊராட்சியில் உள்ள சிற்றூர் வாண்டாம்பட்டி. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், உள்ள சிற்றூர் வாண்டான்விடுதி. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாணக்கன்காடு ஊராட்சியில் உள்ள சிற்றூர் வாண்டான்விடுதி. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், உள்ள சிற்றூர் வாண்டாக்கோட்டை. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில், பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள வாண்டையார் தெரு, இதனையும் காண்க கி. துளசியா வாண்டையார் அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி வி. அப்பசாமி வாண்டையார் கி. அய்யாறு வாண்டையார் து. கிருஷ்ணசாமி வாண்டையார் பிரேம்குமார் வாண்டையார் மேற்கோள்கள் தமிழரில் சாதிகள் சாதிகள் கள்ளர் முக்குலத்தோர்
682651
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கோலாலம்பூர் மாநாட்டு மையம்
கோலாலம்பூர் மாநாட்டு மையம் அல்லது கேஎல்சிசி மாநாட்டு மையம் (மலாய்; Pusat Konvensyen Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Convention Centre; KL Convention Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும். கேஎல்சிசி ஓல்டிங்ஸ் நிறுவனம் (KLCC Holdings); மற்றும் ஏஎஸ்எம் குளோபல் (ASM Global) ஆகிய நிறுவனங்களின் கூட்டு அமைப்பான கோன்வெக்ஸ் மலேசியா நிறுவனத்தின் (Convex Malaysia Sdn Bhd) மூலமாக இந்த மாநாட்டு மையம் நிர்வாகிக்கப்படுகிறது. பொது இந்த மாநாட்டு மையம், 2015-ஆம் ஆண்டுக்கான மாநாட்டு மையங்களின் பன்னாட்டுக் கழகத்தின் (International Association of Convention Centres) (AIPC) புத்தாக்க விருதைப் பெற்றுள்ளது. அத்துடன், கோவிட்-19 தொற்றுநோய் பேரிடரின் போது, ​​இந்த மையம் பொதுமக்களுக்கான ஒரு தடுப்பூசி மையமாகவும் பயன்படுத்தப்பட்டது. நவீன கட்டிடக்கலை; மற்றும் பின்நவீனத்துவ கட்டிடக்கலை கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம்; கோலாலம்பூர் நகர மையத்தின் முதனமையான மையத்திலும் அமைந்துள்ளது. சூன் 2005-இல் திறக்கப்பட்ட பின்னர், 31 மார்ச் 2017 வரை, இந்த மையம் 12,276 நிகழ்வுகளை நடத்தியுள்ளது. 20.9 மில்லியனுக்கும் அதிகமான பிரதிநிதிகள்; மற்றும் பார்வையாளர்களைக் கோலாலம்பூருக்கு கொண்டு வந்துள்ளது. அந்தப் பிரதிநிதிகள்; மற்றும் பார்வையாளர்களில் 7 விழுக்காட்டினர், பன்னாட்டு - ஆசியப் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அமைவு ஐந்து அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த மாநாட்டுக் கண்காட்சி மையத்தில் பல்வேறு சிறிய பெரிய கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதற்கான போதிய அளவிலான தளவாடங்களும் உள்ளன. மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் 6 பெரிய அளவிலான கண்காட்சி அரங்குகள் உள்ளன. அவை 9,710மீ² பரப்பளவைக் கொண்டவை; மேலும் அவை சிறிய பெரிய கண்காட்சிகளை நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படுகின்றன. முதன்மை அரங்கம் ஆறாவது கண்காட்சி அரங்கம், மாநாட்டு மையத்திற்கு வெளியில் அமைந்துள்ளது. இந்த அரங்கம் 2,600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது; மற்றும் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முதன்மை நுழைவாயிலுக்கு மேலே அமைந்துள்ள அந்த முதன்மை அரங்கம், பெரிய அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், கண்காட்சிகள்; மற்றும் பெரிய அளவிலான நிறுவனக் கூட்டங்கள் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கருத்தரங்கு அரங்கம் முதனமை அரங்கம் 3 மாடிகள் உயரம் கொண்டது; மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய வசதியைப் பெற்றுள்ளது. எனினும், கருத்தரங்கு அரங்கம் ஒரே மாடியில் மூன்று அடுக்குகள் கொண்டது; இந்த அரங்கில் 470 பேர் அமரலாம்; மற்றும் சிறிய கச்சேரிகள், நடுத்தர அளவிலான விரிவுரைக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தலாம். பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான மூன்று பெரிய மாநாட்டு அறைகளும் (மாநாட்டு அரங்குகள்) உள்ளன; மொத்தம் 1,800 பேர் அமரலாம்; மேலும் 20 இருக்கைகள் கொண்ட சில சிறிய மாநாட்டு அறைகளும் உள்ளன. காட்சியகம் மேலும் காண்க சூரியா கேஎல்சிசி கோலாலம்பூர் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையம் மெக்சிஸ் கோபுரம் கேஎல்சிசி பூங்கா கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Joint Owner (Convex as operator): KLCC Holdings Sdn Bhd Joint Owner (Convex as operator): ASM Global (APAC) கோலாலம்பூர் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்
682652
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF
பெரிய திருவடி
பெரிய திருவடி , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடனைப் பெரிய திருவடி என்றும், அனுமனை சிறிய திருவடி என்றும் அழைப்பர். திருமாலின் வாகனமான கருடனுக்கு ஸ்ரீ வைணவ மரபில் வழங்கும் சிறப்புப் பெயர் ஆகும்....திருமாலின் வாகனமாக என்றும் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்துக்கொண்டிருப்பதால் திருமாலின் அடி(யார்) என்று புகழப்பட்டு, திருமாலை சுமந்து செல்லும் பெரும் பாக்கியத்தைப் பெற்றதால் 'திரு' என்ற சிறப்புச் சொல்லையும் சேர்த்து திருவடி (திரு+அடி) எனப்பட்டார் .]கருடன் திருமாலுக்கு செய்துவரும் சிறப்பான தொண்டின் காரணமாக அவர் கருடாழ்வார் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். இதனையும் காண்க சிறிய திருவடி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சிறிய திருவடி மற்றும் பெரிய திருவடி விளக்கக் காணொளி வைணவ சமயம்
682653
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF
சிறிய திருவடி
சிறிய திருவடி, இறைவன் திருமாலின் இராமாவதாரத்தில், இராமனின் அடியாரான அனுமனுக்கு ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வழங்கும் சிறப்புப் பெயர் ஆகும்....இராமனிடத்தில் அளவற்ற பக்தி கொண்டவராய், தேவைப்படும் போதெல்லாம் அவரைச் சுமந்தும், இணை பிரியாமல் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்ததால் திருமாலின் அடி(யார்) என்று புகழப்பட்டு, இராமனுக்குத் தொண்டு செய்து அவரை சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றதால் 'திரு' என்ற சிறப்புச் சொல்லையும் சேர்த்து திருவடி (திரு + அடி) எனப்பட்டார்.. இதனையும் காண்க பெரிய திருவடி ஸ்ரீவைஷ்ணவம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிறிய திருவடி மற்றும் பெரிய திருவடி விளக்க காணொளி] வைணவ சமயம்
682661
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
மிகை உயர ஆராய்ச்சி ஆய்வகம்
மிகை உயர ஆராய்ச்சி ஆய்வகம் (High Altitude Research Laboratory) இந்தியாவின் காசுமீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க்கு நகரத்தில் அமைந்துள்ளது.. வரலாறு 1954 ஆம் ஆண்டு அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் மற்றும் சம்மு மற்றும் காசுமீர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து அயனி மண்டல ஆய்வுகள், அண்டக் கதிர் வானியற்பியல், வானொலி வானியல், புவி காந்தவியல் மற்றும் வளிமண்டல நியூட்ரான் கண்காணிப்பு ஆகிய துறைகளில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது. முறையாக ஆய்வகம் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில், மிகை உயர ஆராய்ச்சி ஆய்வகம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஓர் அங்கமாக மாறியது. பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் வானியற்பியல் அறிவியல் பிரிவு மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது. 1974 ஆம் ஆண்டில், அணு இயற்பியல் மற்றும் கதிர்வீச்சு இயற்பியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் மிகை உயர ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு உதவ, சிறீநகரில் அணு ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டது. ஆராய்ச்சியும் மேம்பாடும் 1977 முதல், குல்மார்க்கு கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிற்கும் பழைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே உள்ள காந்த கண்காணிப்பு சங்கிலியில் உள்ள இடைவெளியை நிரப்ப அயனி மண்டல சதுர மின்னோட்ட அமைப்பின் மையத்திற்கு அருகில் உள்ள புவி காந்தப்புலத்தை ஆய்வு செய்வதற்காக குல்மார்க்கு வானாய்வகம் நிறுவப்பட்டது. மேற்கோள்கள் அணுவாற்றல் ஆராய்ச்சி மையங்கள்
682673
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF
ஷீலா பாலாஜி
ஷீலா பாலாஜி (Sheela Balaji) சுவாமி தயானந்த சரஸ்வதியால், கிராமப்புற மக்களுக்கான கல்வி, கலை, மருத்துவநல தொண்டுகளுக்காக, 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இயக்கமான தொண்டுக்கான அகில இந்திய இயக்கம் என்ற அரசு சாரா, இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாரி சக்தி விருது பெற்ற இவர் தி. வே. சுந்தரம் ஐயங்காரின் பேத்தியாவார். வாழ்க்கை தொண்டுக்கான அகில இந்திய இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவராக]] இருக்கிறார். இந்த மையம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி கிராமத்தில் ஒரு பெரிய பள்ளியை நடத்தி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் 100 விடுதிகளையும் கொண்டுள்ளது. சீலா பாலாஜி சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளையின் பொறுப்பாளராகவும் உள்ளார். 2011 ஆம் ஆண்டில், சுவாமி தயானந்த சரஸ்வதி: பங்களிப்புகள் மற்றும் எழுத்துக்கள் என்ற இவரது புத்தகம் வெளியிடப்பட்டது. ஷீலா பாரம்பரிய உள்நாட்டு அரிசி வகைகளை பயிரிடத் தொடங்கினார். 2013 ஆம் ஆண்டில், மஞ்சக்குடியில் தானியங்களைக் கொண்டாட ஒரு திருவிழாவை ஏற்பாடு செய்தார். இது பழைய அரிசி வகைகளை மீண்டும் கண்டுபிடிக்க வழிவகுத்தது. 2018 ஆம் ஆண்டில், இவருக்கு நாரி சக்தி புரஸ்கார் வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் வழங்கினார். இவ்விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார். இந்த ஆண்டு சுமார் 40 நபர்கள் அல்லது அமைப்புகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் விருதுடன் ரூ 100,000 பரிசையும் பெற்றனர். மேற்கோள்கள் நாரி சக்தி விருது பெற்றவர்கள் வாழும் நபர்கள்
682674
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பன்னாட்டு இயற்பியல் நிறுவனம்
பன்னாட்டு இயற்பியல் நிறுவனம் (International Institute of Physics) பிரேசில் நாட்டின் இரியோ கிராண்டே டோ நோர்தே மாநிலத்தில் உள்ள கூட்டமைப்பு பல்கலைக்கழகத்தின் ஓர் ஆராய்ச்சி அலகாகும். இது பிரேசிலின் நத்தால் நகரத்தில் அமைந்துள்ளது. வலிமையான பன்னாட்டு கண்ணோட்டத்துடன், கோட்பாட்டு இயற்பியலின் எல்லைப் பகுதிகளில் இந்நிறுவனம் நிரந்தரமாக கவனம் செலுத்துகிறது. வழக்கமான பயிற்சிப் பட்டறைகள், பள்ளிகள், மாநாடுகள் மற்றும் பொது விரிவுரைகளை இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது. பன்னாட்டு இயற்பியல் நிறுவனத்தின் கிளைகள் திறப்புகளுக்கான விண்ணப்பதாரர்கள் திறந்த போட்டி ஆட்சியின் கீழ் பன்னாட்டு நிபுணர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இயற்பியல் அமைப்புகள் கல்வித் துறைகள் பிரேசிலியப் பொருளியல் ஆய்வு நிறுவனங்கள் நாடுகள் வாரியாக அறிவியலும் தொழினுட்பமும்
682679
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் (மலாய்; Dewan Filharmonik Petronas; ஆங்கிலம்: Petronas Philharmonic Hall) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) கட்டப்பட்ட மலேசியாவின் முதல் கச்சேரி அரங்கம் ஆகும். இந்த அரங்கம் மலேசிய பில்லார்மோனிக் இசைக்குழுவிற்கு (Malaysian Philharmonic Orchestra) சொந்தமான அரங்கமாகும். நியூயார்க் பில்லார்மோனிக் (New York Philharmonic), பிலடெல்பியா ஆர்கெஸ்ட்ரா (Philadelphia Orchestra), பிபிசி சிம்பொனி (BBC Symphony) மற்றும் வியன்னா சிம்பொனி (Vienna Symphony) போன்ற உலகின் பல முன்னணி இசைக் குழுக்கள் இந்த அரங்கத்தில் கச்சேரிகளை நடத்தியுள்ளன. பொது 19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாரம்பரிய இசை அரங்குகளின் வடிவமைப்பு அடிப்படையில் பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் சீசர் பெல்லி (Cesar Pelli) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அரங்கம் 920 இருக்கைகளைக் கொண்டுள்ளது; மற்றும் அரங்க இருக்கைகள், சதுக்க இருக்கைகள், கூட்டாண்மை அறைத் தொகுதிகள் (Corporate Suites) மற்றும் அரச அறைகள் என பல்வேறான இருக்கை வசதிகள் உள்ளன. மேடையின் தளம் நெகிழ்வுத் தன்மைக்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடைத்தளம் ஏறக்குறைய 297 மீ2 பரப்பளவைக் கொண்டது; மேலும் 369 மீ2 வரை அகலப் படுத்தலாம். 45 இசைக்கலைஞர்களுக்கு இடமளிக்கும் வகையில் மேடைத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாறு பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களின் அடிப்படைத் தளத்தின் ஒரு பகுதியாக 1 சனவரி 1995 அன்று பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கத்தின் கட்டுமானம் தொடங்கியது. ஓர் ஆண்டு கழித்து, 1996-ஆம் ஆண்டு அதே தேதியில் கட்டுமானம் நிறைவடைந்தது; மேலும் 1997-ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்றன. மலேசிய குழுவிசைக் குழுவின் (Malaysian Philharmonic Orchestra) புரவலர் துன் டாக்டர். சித்தி அஸ்மா முகமட் அலி; மற்றும் அவரின் கணவர் மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆகியோரால் 17 ஆகஸ்டு 1998 அன்று பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் முறைப்படி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. காட்சியகம் மேலும் காண்க கோலாலம்பூர் மாநாட்டு மையம் சூரியா கேஎல்சிசி மெக்சிஸ் கோபுரம் கேஎல்சிசி பூங்கா கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website Malaysian Philharmonic Orchestra official website Petronas Philharmonic Hall project description கோலாலம்பூர் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்
682681
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%201%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
மீனார் 1 அணை
மீனார் 1 அணை (Meenar-1 Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சீதத்தோடு கிராமத்தில் மீனாறூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பைஞ்சுனை, ஈர்ப்பு அணை ஆகும். இது சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்ட நீர் திசைதிருப்பல் அணை ஆகும். சபரிகிரி நீர்மின் திட்டம் (340 மெகாவாட்) கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணை சபைகிரி பெருக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் குள்ளாறு-கவி நீர்த்தேக்கத்திலிருந்தும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்தும் தண்ணீரைப் பெறுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் ஒரு சுரங்கப்பாதை வழியாக மீனாறு 2 நீர்த்தேக்கம் நோக்கித் திருப்பி விடப்படுகிறது. பம்பைக்குச் செல்லும் ஆறுகள் மூலம் இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகைப்பள்ளி வழியாகப் பாய்கிறது. விவரக்குறிப்புகள் ஆற்றுப் படுகை: பம்பை அணையிலிருந்து நீர் செல்லும் ஆறு: பம்பை திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம் வகைப்பாடு: நடுத்தர உயர அணை அதிகபட்ச நீர் மட்டம்: 1077.2 மீ முழு நீர்த்தேக்க நிலை: 1076.0 மீ நீர் சேமிப்பு: 0.03 Mm3 உயர் மட்டம்: 1076.0 மீ ஆற்று நீர் வெளியேற்றம்: பம்பை மேற்கோள்கள் Coordinates on Wikidata
682685
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
எக்சோன் மோபில் கோபுரம்
எக்சோன் மோபில் கோபுரம் (மலாய்; Menara ExxonMobil; ஆங்கிலம்: ExxonMobil Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். முன்பு மெனாரா எஸ்ஸோ (Menara Esso) என்று அழைக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் தற்போது மலேசிய எக்சோன் மோபில் (ExxonMobil Malaysia) நிறுவனத்தின் தலைமையகமாக உள்ளது. பொது இந்த எக்சோன் மோபில் கோபுரம்தான், கோலாலம்பூர் மாநகர மையத்தில் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டிடமாகும். இந்தக் கோபுரத்தை கட்டிய பிறகுதான், கேஎல்சிசி பூங்கா, சூரியா கேஎல்சிசி, மெக்சிஸ் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்பட்டன. 30-அடுக்கு மாடிகளைக் கொண்ட எக்சோன் மோபில் கோபுரம், செவ்வக வடிவத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் உயரம் 126 மீ (413 அடி). அமைவு எக்சோன் மோபில் கோபுரத்தின் சுற்றுப்புறங்கள் மென்மையான இயற்கைத் தன்மையைப் பிரதிபலிகின்றன. இங்கிருந்து கேஎல்சிசி பூங்காவிற்குச் செல்லும் நடைபாதையின் இரு மருங்கிலும் அழகிய மரங்கள் வரிசை வரிசையாக நடப்பட்டு உள்ளன. காட்சியகம் மேலும் காண்க பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் கோலாலம்பூர் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையம் மெர்டேக்கா 118 மே பேங்க் கோபுரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Maxis Website கோலாலம்பூர் கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கோபுரங்கள்
682693
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கத்தல் மக்களவைத் தொகுதி
கத்தல் மக்களவைத் தொகுதி (Ghatal Lok Sabha constituency) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் 543 தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தல் பகுதியினை அடிப்படையாகக் கொண்டது. கத்தல் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஒரு தொகுதி கிழக்கு மிட்னாபூரிலும் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, பன்சுகுரா மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, புதிதாகக் கத்தல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. 1951 முதல் 1977 வரை கத்தல் தொகுதி செயல்பாட்டிலிருந்தது. சட்டமன்றத் தொகுதிகள் கத்தல் மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 32) பின்வரும் சட்டமன்றப் தொகுதிகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1977-2009 காலகட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பான்சுகுரா மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும். தேர்தல் முடிவுகள் 18வது மக்களவை தேர்தல்-2024 பொதுத் தேர்தல் மேலும் காண்க மக்களவை தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் லோக்சபா தேர்தல் 2019 முடிவுகள் மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
682694
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம்
பாலக்காடு சந்திப்பு (முன்னர் ஒலவக்கோடு சந்திப்பு) (நிலைய குறியீடு: PGT) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-2 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின், பாலக்காட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது கேரளத்தில் உள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மேலும் இது மாவட்டத்தின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாகும். தூய்மை இந்தியா இயக்கம் நடத்திய கணக்கெடுப்பு ஆய்வின்படி, பாலக்காடு சந்திப்பு கேரள மாநிலத்தின் தூய்மையான தொடருந்து நிலையம் ஆகும். பாலக்காடு சந்திப்பு கேரளத்தின் பாலக்காடு நகரின் முக்கிய தொடருந்து நிலையமாகவும், பாலக்காடு நகரத்தில் உள்ள நகர தொடருந்து நிலையத்துக்கு அடுத்து இரண்டாம் நிலை தொடருந்து நிலையமாகவும் செயல்படுகிறது. அமைவிடம் இந்த நிலையமானது பாலக்காடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ளது. பாலக்காடு நகரின் புறநகர் பகுதியான ஒலவக்கோடு, பாலக்காட்டை கோழிக்கோடுடன் இணைக்கும் 966 எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தின் முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். பாதைகள் பாலக்காடு சந்திப்பானது ஜோலார்பேட்டை-ஷோறனூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. மேலும் பாலக்காடு–மதுரை பாதையின் ஒரு நிறுத்தமாகவும் உள்ளது. இந்த நகரத்திற்கு சேவை செய்யும் மற்றொரு நிலையமாக பாலக்காடு நகர தொடருந்து நிலையம் உள்ளது. உள்கட்டமைப்பு இந்த நிலையமானது ஐந்து நடைமேடைகளைக் கொண்டுள்ளது. 1, 2, 3 ஆகிய நடைமேடைகள் பாலக்காடு நகரம், ஷொர்ணூர், திருச்சூர் நோக்கி செல்லும் தொடருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 4, 5 நடைமேடைகள் முதன்மையாக சென்னை நோக்கி செல்லும் தொடருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மெமு கொட்டகை மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் மெமு மெமு கொட்டகை புறநகர் தொடருந்துகளைப் பராமரிப்பதற்காக உள்ளது. மேலும் இது மாநிலத்தின் முதல் மெமு கொட்டகை ஆகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாலக்காடு தொடருந்து கோட்டம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்
682695
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிரென்னரைட்டு
கிரென்னரைட்டு (Krennerite) என்பது AuTe2 to Au3AgTe8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நேர்ச்சாய்சதுரத் திண்மமாக காணப்படும் இக்கனிமம் ஒரு தங்க தெலூரைடு கனிமமாகும். இதன் கட்டமைப்பில் மாறுபட்ட அளவு வெள்ளியும் கொண்டிருக்கும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு AuTe2 ஆகும். ஆனால் தங்கத்துடன் 24% வரை வெள்ளி கலந்திருக்கும் மாதிரி கனிமம் கண்டறியப்பட்டது ([Au0.77Ag0.24]Te2). வேதியியல் ரீதியாக ஒத்த தங்கம்-வெள்ளி தெலூரைடுகளான கேலவெரைட்டு மற்றும் சில்வணைட்டு ஆகிய இரண்டும் ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் உள்ளன, அதேசமயம் கிரென்னரைட்டு நேர்ச்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் உள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிரென்னரைட்டு கனிமத்தை Knn என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. கிரென்னரைட்டு கனிமத்தின் நிறம் வெள்ளி-வெள்ளை முதல் பித்தளை-மஞ்சள் வரை மாறுபடும். இது 8.62 என்ற ஒப்படர்த்தி அளவும் 2.5 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் கொண்டுள்ளது. உயர் வெப்பநிலையிலான நீர் வெப்ப சூழல்களில் தோன்றுகிறது. கிரென்னரைட்டு கனிமம் 1878 ஆம் ஆண்டில் உருமேனியாவின் சாகரம்ப்பு கிராமத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கேரிய கனிமவியலாளர் இயோசப் கிரென்னரால் (1839-1920) முதன் முதலில் விவரிக்கப்பட்டது. மேற்கோள்கள் G. Tunnell and K. J. Murata, American Mineralogist 35, 359–384 (1950). Structure of Krennerite retrieved 6-26-05 Euromineral retrieved 6-26-05 வெள்ளி கனிமங்கள் தங்கத்தின் கனிமங்கள் தெலூரைடு கனிமங்கள் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
682696
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%202%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
மீனாறு 2 அணை
மீனாறு 2 அணை (Meenar-2 Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சீதத்தோடு கிராமத்தில் பம்பை ஆற்றின் துணை ஆறான மீனாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பைஞ்சுதை, ஈர்ப்பு வகை அணையாகும். இந்த அணை சபைகிரி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டுள்ளது. சபரிகிரி நீர்மின் திட்டம் (340 மெகாவாட்) கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் மீனாறு 1 நீர்த்தேக்கத்திலிருந்தும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்தும் தண்ணீரைப் பெறுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் நீர் திறந்த நிலைக் கால்வாய் வழியாகப் பம்பை அணைக்குத் திருப்பி விடப்படுகிறது. இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகைப்பள்ளி ஆகிய வட்டங்கள் வழியாக நீர் திறக்கப்படுகிறது. விவரக்குறிப்புகள் ஊராட்சி: சீதத்தோடு வகைப்பாடு: நடுத்தர உயரம் ஆற்றுப் படுகை: பம்பை அணையிலிருந்து நீர் விடுவிக்கப்படும் ஆறு: பம்பை திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம் அதிகபட்ச நீர் மட்டம்: 1043.5 மீ முழு நீர்த்தேக்க நிலை: 1041.5 மீ நீர் சேமிப்பு: 0.06 Mm3 உயர் மட்ட மட்டம்: 1041.5 மீ நீர் வெளியேற்றம்: 1, வட்ட வகை, 60 செமீ விட்டம் மேற்கோள்கள் Coordinates on Wikidata
682697
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இலெக்ராண்டைட்டு
இலெக்ராண்டைட்டு (Legrandite) என்பது Zn2(AsO4)(OH)·(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். துத்தநாக ஆர்சனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெக்ராண்டைட்டு கனிமத்தை Leg என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. ஆர்சனிக்கு கலந்துள்ள துத்தநாகப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலத்தில் இது ஓர் அசாதாரணமான இரண்டாம் நிலை கனிமமாகும். கிராணைட்டு வகை பெக்மாடைட்டு பாறைகளில் அரிதாகவே காணப்படுகிறது. அடமைட்டு, பாராடமைட்டு, கோட்டிகைட்டு, சிகோரோடைட்டு, இசுமித்சோனைட்டு, லைட்டீட்டு, ரெனைரைட்டு, பார்மகோசிடெரைட்டு, ஆரிசல்சைட்டு, சிடெரைட்டு, கோதைட்டு பைரைட்டு ஆகிய கனிமங்களுடன் கலந்து காணப்படுகிறது. நமீபியாவின் திசுமேபு நகரம், மெக்சிகோவின் துராங்கோ மாநிலத்தில் உள்ள ஒச்சூவேலா சுரங்கம், அமெரிக்காவின் நியூ செர்சி மாநில சுடெர்லிங்கு இல் சுரங்கம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. முதன்முதலில் 1934 ஆம் ஆண்டில் மெக்சிகோவின் நியூவோ லியோன் மாநிலத்திலுள்ள புளோர் டி பெனா சுரங்கத்தில் இலெக்ராண்டைட்டு கண்டறியப்பட்டது. இலூயிஸ் சி.ஏ. இலெக்ராண்ட்டு ஒரு பெல்ச்சிய நாட்டு சுரங்கப் பொறியாளர் ஆவார். இவர் நினைவாக கனிமத்திற்கு இலெக்ராண்டைட்டு எனப் பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் துத்தநாகக் கனிமங்கள் ஆர்சனேட்டு கனிமங்கள் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
682698
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
வெள்ளத்தூவல் அணை
வெள்ளத்தூவல் அணை (Vellathooval Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் வட்டத்தில் உள்ள வெள்ளத்தூவல் கிராமத்தில் முத்திரப்புழா ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு நீர் திசைதிருப்பல் அணை. ஆழமான பகுதியிலிருந்து அணையின் உயரம் 16 மீட்டரும் நீளம் 75 மீட்டரும் ஆகும். செங்குளம் மின் நிலையத்திலிருந்தும் முத்திரப்புழா ஆற்றிலிருந்தும் வெள்ளத்தூவல் அணைக்கு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணையிலிருந்து நீர் ஒரு கால்வாய் அமைப்பு மூலம் பன்னியாறு அருகே உள்ள மின் நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது. நீரோட்டம் நீர் மின்சாரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பிறகு, மீண்டும் ஆற்றில் விடப்படுகிறது. இந்த அணை கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். விவரக்குறிப்புகள் அட்சரேகை: 10 0 0′39" வ தீர்க்கரேகை: 77 0 01′58" கி ஊராட்சி: வெள்ளத்தூவல் கிராமம்: வெள்ளத்தூவல் மாவட்டம்: இடுக்கி ஆற்றுப் படுகை: முத்திரப்புழா ஆறு: முத்திரப்புழா அணையிலிருந்து ஆற்றுக்கு விடுவிப்பு: முத்திரப்புழா நிறைவு ஆண்டு: 2016 திட்டத்தின் பெயர்: வெள்ளத்தூவல் நீர்மின் திட்டம் அணை வகை: பைஞ்சுதை, ஈர்ப்பு வகைப்பாடு: தடுப்பணை அதிகபட்ச நீர் மட்டம்: 474.80 மீ முழு நீர்த்தேக்க நிலை: 472.0 மீ நீர்த்தேக்கம்: 0.069 Mm3 ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 16 மீ நீளம்: 75 மீ நீர்க்கசிவுப் பாதை: தடுப்பில்லாத உயர் நிலை: 472.00 மீ நீர் வெளியேற்றம்: 1, வட்ட வகை, 1 மீ. விட்டம் மேற்கோள்கள் கேரளத்தில் சுற்றுலாத் துறை இடுக்கி மாவட்ட அணைகள்
682699
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
வெள்ளத்தூவல்
வெள்ளத்தூவல் (Vellathuval) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வெள்ளத்தூவலில் 7217 ஆண்களும் 7292 பெண்களும் உட்பட 14,509 பேர் வசித்தனர். 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை 14845ஆக இருந்தது. பள்ளி வெள்ளத்தூவல் உயர்நிலைப்பள்ளி வழிபாட்டுத் தலங்கள் வெள்ளத்தூவல் அருள்மிகு அன்னபூர்ணா தேவி கோவில் வெள்ளத்தூவல் நகர ஜும்மா மசூதி புனித ஜார்ஜ் போரன் தேவாலயம் புனித ஜூட் சேப்பல் புனித அல்போன்சா தேவாலயம் சரோன் தேவாலயம் (பெந்தேகோஸ்தே தேவாலயம்) இந்திய பெந்தேகோஸ்தே தேவாலயம் பெத்தேல் மார்தோமா தேவாலயம் நூருல் ஹுதா ஜும்மா மசூதி செல்லியாம்பரா சிறிகிருஷ்ண சுவாமி கோவில் அய்யப்பன் கோவில் வெள்ளத்தூவல் அலுவலகங்கள் செங்குளம் நீர்மின் திட்டம் பன்னியாறு நீர்மின் திட்டம் வெள்ளத்தூவல் அஞ்சல் அலுவலகம் கூட்டுறவு வங்கி எஸ்பிஐ வெள்ளத்தூவல் வெள்ளத்தூவல் காவல் நிலையம் வெள்ளத்தூவல் ஊராட்சி மன்ற அலுவலகம் கிரிசி பவன் வெள்ளத்தூவல் அரசு மருத்துவமனை வெள்ளத்தூவல் வெள்ளத்தூவல் சிறு நீர்மின் திட்டம் மேற்கோள்கள்
682709
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம்
கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம் அல்லது கம்போங் பாரு இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Kampung Baru LRT Station; மலாய்: Stesen Kampung Baru; சீனம்: 甘榜峇鲁) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. இரண்டாவது கட்டமைப்பில் செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் சேர்க்கப்படவில்லை. பொது கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தில் தற்போது உள்ள ஐந்து நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். கம்போங் பாருவின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ள கம்போங் பாரு நிலையம்; அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை (Ampang–Kuala Lumpur Elevated Highway) மற்றும் கிள்ளான் ஆறுக்கு அருகில் அமைந்துள்ளது. அமைவு கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் போலவே இந்த நிலையமும் கோலாலம்பூர் மாநகர மையத்தில் கிள்ளான் ஆறுக்கு குறுக்கே அமைந்துள்ளது; மற்றும் கம்போங் பாரு குடியிருப்பாளர்களை கோலாலம்பூர் மாநகர மையத்துடன் இணைக்கும் புகழ்பெற்ற சலோமா பாலத்திலிருந்து 130 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையம் கம்போங் பாரு பகுதிக்கு சேவை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. நிலத்தடி நடைபாதைகள் கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற நிலத்தடி நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான கட்டுமானமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன. அனைத்து நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. நிலையத்தின் இரண்டு எதிர்த் திசைகளுக்கும் ஒரே ஒரு தீவு மேடை உள்ளது. இந்த நிலையத்தில், தெரு மட்டத்திலிருந்து இரண்டு அணுகல் வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மற்றொன்றை விட பெரியது; மற்றும் முதன்மை நுழைவாயிலாகவும் செயல்படுகிறது. காட்சியகம் மேலும் காண்க கோலாலம்பூர் மாநகர மையம் கிளானா ஜெயா வழித்தடம் மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682710
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சிங்களைட்டு
சிங்களைட்டு (Sinhalite) என்பது MgAl(BO4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். போரேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் இலங்கையில் (சிலோன்) 1952 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையின் சமசுகிருதப் பெயரான சிங்களம் என்ற பெயரிலிருந்து சிங்களைட்டு என்ற பெயர் இக்கனிமத்தின் பெயராக வைக்கப்பட்டது. மடகாசுகர், தான்சானியா மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளிலும் இரத்தினக் கல் தரமான சிங்களைட்டு கனிமத்தைக் காணலாம். சிங்களைட்டு மிகவும் பொதுவாகக் காணப்படும் நிறம் வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறமாகும். சாம்பல்-நீலம் அல்லது வெளிறிய முதல் அடர் பழுப்பு வரையிலான நிறத்திலும் இது காணப்படுகிறது. வெளிர் இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு இளஞ்சிவப்பு படிகங்கள் தான்சானியாவில் காணப்படுகின்றன. பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிங்களைட்டு கனிமத்தை Shl என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் அலுமினியம் கனிமங்கள் மக்னீசியக் கனிமங்கள் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
682712
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
வசில்செவர்கிணைட்டு
வசில்செவர்கிணைட்டு (Vasilseverginite) என்பது Cu9O4(AsO4)2(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மிகவும் ஓர் அரிய ஆர்சனேட்டு- சல்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இதன் கட்டமைப்பு ஒரு புதிய வகையாகும். தோல்பாச்சிக்கு எரிமலை, ஆக்சைடு அயனிகள் கொண்ட உப்பாக இருப்பது என பல கனிமங்களின் பொதுவான அம்சத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது ஆர்சனேட்டு மற்றும் சல்பேட்டு ஆகிய இரண்டும் உள்ள முதல் தோல்பாச்சிக்கு தாமிரம் ஆக்சி உப்பாகும். வசில்செவர்கிணைட்டு ஒற்றைச்சரிவச்சு அமைப்புடன் P21/n என்ற இடக்குழுவில் படிகமாகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் வசில்செவர்கிணைட்டு கனிமத்தை Vas என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் ஆர்சனேட்டு கனிமங்கள் சல்பேட்டுகள் தாமிரம்(II) கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் கனிமங்கள்
682720
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பொய்த்தோற்ற உறுப்பு
பொய்த்தோற்ற உறுப்பு, மாய உறுப்பு அல்லது பூத உறுப்பு (phantom limb) என்பது உடலில் துண்டிக்கப்பட்ட அல்லது விடுபட்ட உறுப்பு இன்னும் இணைந்து உள்ளது போன்ற உணர்வு ஆகும். இது பொரும்பாலும் சிகிச்சைக்கு இசைந்து கொடுக்காத ஒரு நாட்பட்ட நிலையாகும். தனது துண்டுபட்ட தொடையின் அசைவுகளின் போது அங்குள்ள உணர்ச்சி இழைகளின் வெட்டுபட்ட முனைகள் தூண்டப்படுகையில் இல்லாத உறுப்பிலிருந்து உணர்வு எழுவது போல் நோயாளி உணர்வார். சில நேரங்களில் இல்லாத இந்த உறுப்பில் வலியைக் கூட நோயாளி உணரலாம். உறுப்புகளை இழந்த நபர்களில் தோராயமாக 80%–100% பேர் துண்டிக்கப்பட்ட உறுப்புகளில் வலி உணர்வுகளை அனுபவிக்கின்றனர். இருப்பினும் இவர்களில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே வலிமிகுந்த பொய்த்தோற்ற உறுப்பு உணர்வை (பொய்த்தோற்ற வலி) அனுபவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் உறுப்புகள் நீக்கப்பட்ட நபர்களில் பொதுவாகக் காணப்படும் இந்த உணர்வுகள் பெரும்பாலும் சிகிச்சையின்றி இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் தானாகவே சரியாகிவிடும். பொய்த்தோற்ற உறுப்பு வலி (phantom limb pain [PLP]) குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்துமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அறிகுறிகள் உடலுறுப்பு நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் (80–100%) பொய்த்தோற்ற உறுப்பு உணர்வினை அனுபவிக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு இது ஒரு வலியற்ற உணர்வாகவே இருக்கும். இந்நபர்கள் இப்பூத உறுப்பினை தங்கள் உடலின் ஒரு பகுதியாகவே உணர்வர். பூத உறுப்பினை உணரும் நபர்கள் சில சமயங்களில் சைகை செய்வது, அரிப்பு, இழுப்பு, அல்லது பொருட்களை எடுக்க முயற்சிப்பது போன்ற உணர்வுகளை அடைவதுண்டு. தங்களது விடுபட்டுப் போன உறுப்பு பெரும்பாலும் குறுகியதாக உள்ளது போலும் சிதைந்தும் வலிமிகுந்த நிலையில் இருப்பது போலும் அவர்கள் உணரவர். சமயத்தில் மன அழுத்தம், பதற்றம், வானிலை மாற்றங்கள் போன்றவற்றால் அவ்வலியானது மோசமாக உணரப்படும். தீவிர வானிலை காரணமாக — குறிப்பாக உறைபனி வெப்பநிலைக்குக் கீழே — இவ்வுணர்வு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பூத உறுப்பு வலி பொதுவாக இடைப்பட்டதாக இருப்பதென்றாலும் சில சமயங்களில் தொடர்ந்து உணரப்படும். காலப்போக்கில் இவற்றின் தீவிரம் பொதுவாகக் குறைந்து விடும். பூத உறுப்புகளின் மீதான அடக்கப்பட்ட நினைவுகள் நீக்கப்பட்ட பிறகும் அவ்வுறுப்புகளின் மீதான உணர்வுகளுக்கான காரணமாக அமைகின்றன. குறிப்பாக, நோயாளிகள் தங்களது விரல் நகங்கள் தங்கள் உள்ளங்கையில் புதைவது போன்ற உணர்வினை தங்களது பூத உறுப்புகளில் வலியாக உணர்வதாக பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன. நீக்கப்பட்ட உறுப்பின் காரணமாக நரம்பு மண்டலத்தின் இயக்க நரம்பணு வெளியீடு பெருக்கப்படும் காரணத்தால் நோயாளி அந்நரம்பணுத் தகவல்களின் மேலோட்டத்தை வலியைப் போல் உணர்கின்றனர். நீக்கப்பட்ட உறுப்பு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் கையை மடக்குவதற்கான நரம்பியல் இயக்கக் கட்டளைகளும் நகங்களை உள்ளங்கையை அழுத்தும் உணர்வு நரம்பணுத் தகவல்களும் உறுப்பு நீக்கப்பட்ட பின்னர் அடக்கப்பட்ட நினைவுகளாக மாறிவிடுகின்றன. மூளையில் முந்தைய நரம்பியல் இணைப்புகள் காரணமாக இந்த நினைவுகள் அழியாமல் இருந்து விடுகின்றன. தரவுகள் மேலும் படிக்க Hanyu-Deutmeyer AA, Cascella M, Varacallo M. Phantom Limb Pain. 2023 Aug 4. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2024 Jan–. PMID: 28846343. வெளி இணைப்புகள் Phantom limb syndrome: A review M.E.J. ANESTH 19 (2), 2007 நரம்பியல் நோய்கள் நரம்பியல் குறைபாடுகள் நரம்பியல் சீர்குலைவுகள் நரம்பியல் கோளாறுகள்
682725
https://ta.wikipedia.org/wiki/3%2C3%2C5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
3,3,5-மும்மெத்தில்வளையயெக்சனால்
3,3,5-மும்மெத்தில்வளையயெக்சனால் (3,3,5-Trimethylcyclohexanol) C9H18O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் இரத்தநாள விரிவாக்கியான சைக்கிளேண்டிலேட்டு மருந்து, ஓமோசலேட்டு எனப்படும் 3,3,5-மும்மெத்தில்வளையயெக்சைல் 2-ஐதராக்சிபென்சோயேட்டு , நரம்பு முகவரான 3,3,5-மும்மெத்தில்வளையயெக்சைல் 3-பிரிடைல்பாசுபோனேட்டு ஆகியனவற்றைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும். ஐசோபோரோன் என்ற α,β-நிறைவுறாத கார்பனைல் சேர்மத்தை ஐதரசனேற்றம் செய்து 3,3,5-மும்மெத்தில்வளையயெக்சனாலைத் தயாரிக்கலாம். இச்சேர்மம் புதினாவின் சுவை மணத்தைக் கொண்டுள்ளது. மேற்கோள்கள் ஆல்ககால்கள் வளையயெக்சனால்கள்
682728
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
சவுதி அரேபியாவில் ஆல்ககால்
சவூதி அரேபியாவில் ஆல்ககால் (Alcohol in Saudi Arabia) மிகவும் திட்டமிடப்பட்டும் ஒழுங்குமுறைபடுத்தப்பட்டும் கட்டுப்படுத்தப்படுகிறது. வரலாறு. 1952 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த இராச்சியத்தில் மது விற்பனை சட்டப்பூர்வமாக இருந்தது. இருப்பினும், 1952 ஆம் ஆண்டு முதல் மன்னர் இபின் சவுத் அவர்களால் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், ரியாத்தின் புறநகர்ப் பகுதியில் ஒரு மது கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது இந்த கட்டுப்பாடு மாற்றப்பட்டது. எதையும் வாங்குவதற்கு அரசுப்பிரதிநிதிகள் அடையாளத்தை வழங்க வேண்டிய முசுலீம் அல்லாத அரசுப்பிரதிநிதிகளுக்கு மட்டுமே இந்த கடை அணுகக்கூடியதாக இருக்கும். கறுப்புச் சந்தை மற்றும் சட்டவிரோத ஆல்ககால் இறக்குமதியை எதிர்த்துப் போராட இந்த முடிவு எடுக்கப்பட்டது. . சட்டம். சவுதி அரேபிய இராச்சியத்தில் மது அருந்தும் சாதாரண மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள், மேலும் வெளிநாட்டினரும் நாடு கடத்தப்படுவார்கள். மேற்கோள்கள் நாடு வாரியாக ஆல்ககால்
682731
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81
கம்போங் பாரு
கம்போங் பாரு (ஆங்கிலம்: Kampung Baru; மலாய்: Kampong Bharu; சீனம்: 甘榜峇鲁) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையப் பகுதிக்கு அருகில் அமைந்துள ஒரு பறநகர்ப் பகுதியாகும். இந்தப் பறநகர்ப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் ஆவார்கள். கம்போங் பாரு என்பது ஒரு மலாய் மொழிச் சொல் ஆகும்; புதிய கிராமம் என பொருள்படும். பொது 1899-ஆம் ஆண்டில் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் அலாதீன் சுலைமான் சா (Sultan Alaeddin Suleiman Shah) அவர்களின் அரசுரிமையின் கீழ் கம்போங் பாரு எனும் கிராமம் மலாய்க்காரர்களுக்கானவேளாண் குடியேற்றமாக (Malay Agricultural Settlement) உருவாக்கப்பட்டது. கிராமம் உருவாக்கப்பட்டது குறித்து 1950-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, கம்போங் பாருவின் வளர்ச்சி என்பது; நவீன நகர வாழ்க்கைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அந்த வகையில் அதுவே மலாய்க் கலாச்சாரத்தின் அரசியல் அடையாளமாகவும் மாறியது. விடுதலை ஆதரவு இயக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வளர்ந்த விடுதலை ஆதரவு இயக்கத்தின் போது மலாய் அரசியலில் இந்தக் கம்போங் பாரு பகுதி ஒரு சிறப்பு இடத்தை வகித்தது. கம்போங் பாருவில் சுல்தான் சுலைமான் மன்றம் உள்ளது. அந்த மன்றத்தில்தான் பிரித்தானிய காலனித்துவ எதிர்ப்பு அரசியல் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன. பிரித்தானிய காலனித்துவ எதிர்ப்பு அரசியல் கூட்டங்களின் வழியாக, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு எனும் அம்னோ மலேசியாவின் அரசியல் கட்சியும் உருவானது காட்சியகம் மேலும் காண்க கோலாலம்பூர் மாநகர மையம் தித்திவாங்சா புக்கிட் பிந்தாங் வங்சா மாஜு செத்தியா வங்சா அம்பாங் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசிய நகரங்கள் கோலாலம்பூர் மலேசியாவின் பெருநகரப் பகுதிகள்
682734
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பேராற்றல் நாடுகள்
அறிமுகம் பேராற்றல் நாடுகள் (Superpower Nations) என்பது ஆற்றல், அரசியல், பொருளாதாரம், இராணுவ சக்தி ஆகிய துறைகளில் மற்ற நாடுகளை விட மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் நாடுகளை குறிக்கின்ற ஒரு பெயராகும். 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகியவை முதன்முதலில் பேராற்றல் நாடுகளாக உருவாகின. இதே போல் சில நாடுகள் எதிர்காலத்தில் பெரும் சக்தியாக உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. முக்கிய பண்புகள் உலக அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கம்: இந்த நாடுகள் பல சர்வதேச அமைப்புகளை வழிநடத்துகின்றன, மற்றும் உலகின் முக்கியமான பொருளாதார சுழற்சிகளை கட்டுப்படுத்துகின்றன. இராணுவ சக்தி: அதிகப்படியான இராணுவ நிதி, ஆயுதங்கள், அணு ஆயுதங்களின் ஆதிக்கம் மற்றும் உலகின் பல பகுதிகளில் தலையீடுகள். செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை: அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகுந்த முதலீடு மற்றும் வளர்ச்சியுள்ள கல்வித்துறை. பேராற்றல் நாடுகளின் வரலாற்று வளர்ச்சி 1. பழைய பேராற்றல் நாடுகள் பிரிட்டன்: 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் ஒரு பேராற்றல் நாடாக இருந்தது, குறிப்பாக தொழில்துறை புரட்சிக்கு பின் அதன் ஆற்றலால் உலகின் பெரும்பாலான பகுதிகளை கொலோனியாக ஆட்சி செய்தது. பிரான்ஸ், ஜெர்மனி: இவை இரண்டுமே பல்வேறு காலகட்டங்களில் யூரோப்பில் ஆதிக்கம் செலுத்தின. குறிப்பாக ஜெர்மனி, இரண்டாம் உலகப் போரின் போது ஒரு மிகப்பெரும் இராணுவ சக்தியாக திகழ்ந்தது. 2. அதிநவீன பேராற்றல் நாடுகள் அமெரிக்கா: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா உலகின் பெரிய பொருளாதார மற்றும் இராணுவ சக்தியாக மாறியது. அதன் கணிசமான இராணுவ படை, ஜி.டி.பி (GDP), மற்றும் உலகளாவிய தன்மையான உறவுகள் இதற்குக் காரணம். சோவியத் யூனியன்: 1945ல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியன் ஒரு பேராற்றல் நாடாக உருவாகியது. 1991ல் அதன் வீழ்ச்சிவரை, உலக இராணுவ மற்றும் அரசியல் துறையில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. 3. எதிர்கால பேராற்றல் நாடுகள் சீனா: 21ஆம் நூற்றாண்டில் சீனா பொருளாதார வளர்ச்சியிலும் தொழில்நுட்ப மேம்பாட்டிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அதற்கான சான்றுகள் அதன் பொருளாதார வளர்ச்சி, இராணுவ ஆற்றல், மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் உள்ள முதலீடுகள் ஆகும். இந்தியா: வளர்ந்துவரும் பொருளாதாரமும், மக்களின் செழிப்பு, கல்வித்துறையின் மேம்பாடு மற்றும் அதில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆகியவற்றால் இந்தியா எதிர்காலத்தில் ஒரு பேராற்றல் நாடாக உருவாகும் என கணக்கிடப்படுகிறது. வளர்ச்சி படிகள் உள்நாட்டுப் பொருளாதார மேம்பாடு: உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி. கல்வி மற்றும் ஆராய்ச்சி: முக்கியமான கல்வித் துறை மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி. சர்வதேச ஒத்துழைவு: பிற நாடுகளுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள்.
682736
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம்
டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம் அல்லது டாங் வாங்கி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Dang Wangi LRT Station; மலாய்: Stesen LRT Dang Wangi; சீனம்: 金马律) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் 12 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் கட்டப்பட்டது. இரண்டாவது கட்டமைப்பில் செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் சேர்க்கப்படவில்லை. பொது கம்போங் பாரு எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தில் தற்போது உள்ள ஐந்து நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். நிலையத்தின் அணுகல் நுழைவாயில், மத்திய கோலாலம்பூரின் வடகிழக்கு முனையில் அம்பாங் சாலையில் அமைந்துள்ளது. புக்கிட் நானாஸ் நேரடியாக அம்பாங் சாலையின் குறுக்கே உள்ளது; மற்றும் கிள்ளான் ஆறு நிலையத்திற்குப் பின்னால் உள்ளது. டாங் வாங்கி சாலை நிலையத்தின் பெயரான டாங் வாங்கி என்பது டாங் வாங்கி சாலையில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலையம் மத்திய கோலாலம்பூரின் வடகிழக்கு பகுதிகளுக்குச் சேவை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற நிலத்தடி நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான கட்டுமானமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன. தீவு மேடை அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. நிலையத்தின் இரண்டு எதிர்த் திசைகளுக்கும் ஒரே ஒரு தீவு மட்டுமே மேடை உள்ளது. இந்த நிலையத்தில், தெருநிலை மட்டத்திலிருந்து ஒரே ஓர் அணுகல் வாயில் மட்டுமே உள்ளது. அதுவே முதன்மை நுழைவாயிலாகவும் செயல்படுகிறது. காட்சியகம் மேலும் காண்க கோலாலம்பூர் மாநகர மையம் கிளானா ஜெயா வழித்தடம் மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682739
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு
பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு (Ferro-ferri-hornblende) ☐Ca2(Fe2+4Fe3+)(Si7Al)O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு கனிமம் அத்தியாவசிய காலியிடத்தைக் கொண்டுள்ளது (☐). இது இத்தாலியின் பியத்மாந்து மண்டலத்தில் உள்ள டொரினோ நகரத்தின் கேனவேசு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்ரோ-பெர்ரி-ஆர்ன்பிளெண்டு கனிமத்தை Ffhbl என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் கால்சியம் கனிமங்கள் அலுமினியம் கனிமங்கள் கனிமங்கள் இரும்பு(II,III) கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
682741
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இலியுகிணைட்டு
இலியுகிணைட்டு (Ilyukhinite) என்பது (H3O,Na)14Ca6Mn2Zr3Si26O72(OH)2·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இயூடியலைட்டு குழு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. கொடுக்கப்பட்ட மூலக்கூற்று வாய்ப்பாடு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வளைய சிலிக்கேட்டு குழுக்களின் இருப்பை இது காட்டாது. இலியுகிணைட்டு என்பது அக்குவாலைட்டு கனிமத்திற்குப் பிறகு ஐதரோனியம் அயனி இனங்களை வரையறுக்கும் இரண்டாவது குழு பிரதிநிதியாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலியுகிணைட்டு கனிமத்தை Ily என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் மேலும் வாசிக்க Johnsen, O., Ferraris, G., Gault, R.A., Grice, D.G., Kampf, A.R., and Pekov, I.V., 2003. The nomenclature of eudialyte-group minerals. The Canadian Mineralogist 41, 785–794 கால்சியம் கனிமங்கள் மாங்கனீசு(II) கனிமங்கள் கனிமங்கள் சிர்க்கோனியம் கனிமங்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் முக்கோணவமைப்புக் கனிமங்கள்
682742
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
வாயிரகைட்டு
வாயிரகைட்டு (Wairakite) என்பது Ca8(Al16Si32O96)•16H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அனல்சிம் கட்டமைப்பிலான சியோலைட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் கால்சியம் அயனியைக் கொண்டிருக்கிறது. 1955 ஆம் ஆண்டில் செக்கோசுலோவாக்கிய கனிமவியலாளர் ஆல்ஃபிரட் சுடெய்னரால் நியூசிலாந்தின் வட தீவில் உள்ள வாயிரகையில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கனிமம் கண்டுபிடித்த இடத்தின் நினைவாக வாயிரகைட்டு எனப்பெயரிடப்பட்டது. முதல் கண்டுபிடிப்புகள் நீர்வெப்ப மாறுபாட்டால் ஆன சிலிக்கா மிகு இரையோலைட்டு இழைமுடிச்சுகள், இக்னிம்பிரைட்டுகள் மற்றும் எரிமலை பாறைகள் ஆகும். கனிமம் பின்னர் உருமாற்ற பாறைகள் மற்றும் புவிவெப்ப பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1970 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் வாயிரகைட்டு கனிமத்தை Wrk என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் கனிமங்கள் சியோலைட்டுகள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
682747
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இலா காந்தி
இலா காந்தி (Ela Gandhi) (பிறப்பு: ஜூலை 1, 1940), தென்னாப்பிரிக்காவின் அமைதி ஆர்வலரும் மற்றும் முன்னாள் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1994 முதல் 2004 வரை தென்னாப்பிரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அங்கு இவர் குவாசுலு-நதால் மாகாணத்திலுள்ள இனாண்டாவின் பீனிக்ஸ் குடியிருப்புப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார். இவர் நீதிக் குழுவின் மாற்று உறுப்பினராக இருந்தார். மேலும், நீதித்துறை மற்றும் சட்ட அமைப்புகள் பற்றிய குழு 5 இல் பணியாற்றினார். இவர் மகாத்மா காந்தியின் பேத்தி ஆவார். இளமை வாழ்க்கை இலா காந்தி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்தார். இவரது தந்தை மணிலால் காந்தி “இந்தியன் ஒபினியன்” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். இது இவரது தாத்தா காந்தி இனாண்டாவின் புறநகரில் இடம் ஒன்றை வாங்கி பீனிக்ஸ் குடியிருப்பை உருவாக்கினார். அங்குதான் இவர் வளர்ந்தார். முன்னாள் நதால் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றார். பின்னர் தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவங்களுடன் சமூக அறிவியலில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு, 15 ஆண்டுகள் வெருளம் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச் சங்கத்திலும், ஐந்து ஆண்டுகள் டர்பன் இந்திய குழந்தைகள் மற்றும் குடும்பநலச் சங்கத்திலும் சமூக சேவகராக பணியாற்றினார். திருமணம் இலா மேவா ராம்கோபின் என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். 1993 ஆம் ஆண்டில் இவர்களது ஒரு மகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்களின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் மோசடி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு 2021 இல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தொழில் வாழ்க்கை இலா காந்தி, அதன் தொடக்கத்திலிருந்து 1991 வரை நதால் மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினராக பணியாற்றினார். இவரது அரசியல் தொடர்புகளில் இவர் துணைத் தலைவராக பணியாற்றிய நதால் இந்திய காங்கிரசு, ஐக்கிய ஜனநாயக முன்னணி, டெஸ்காம் கிரைசிஸ் வலையமைப்பு மற்றும் இனாண்டா ஆதரவுக் குழு ஆகியவை அடங்கும். இனவொதுக்கலின் போது, இலா காந்தி 1975 இல் அரசியல் செயல்பாட்டில் இருந்து தடை செய்யப்பட்டார் . மொத்தம் ஒன்பது ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1990 பிப்ரவரி 11 அன்று போல்ஸ்மூர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு நெல்சன் மண்டேலாவைச் சந்தித்த ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1994 தேர்தலுக்கு முன்பு, இவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பணியாற்றிய பிறகு, இலா காந்தி குடும்ப வன்முறைக்கு எதிரான 24 மணி நேர திட்டத்தை உருவாக்கி, காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவினார். மத விவகாரக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். மாதாந்திர செய்தித்தாளை மேற்பார்வையிட்டார். மகாத்மா காந்தி உப்பு அணிவகுப்புக் குழு மற்றும் மகாத்மா காந்தி மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவராகவும் உள்ளார். விருதுகளும் அங்கீகாரங்களும் 2002 ஆம் ஆண்டில், காந்தி கிறிஸ்துவின் சமூக சர்வதேச அமைதி விருதைப் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது. 2014 ஆம் ஆண்டில், உம்கொன்ரோ வெய் சிசுவே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். வாசிங்டன், டி. சியிலுள்ள இந்திய மாணவர் மையத்தின் தூதரகம், 2020 ஆம் ஆண்டின் வகுப்பில் 15,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்களுடன் ஒரு மெய்நிகர் பட்டமளிப்பு விழாவின் போது பேச இலா காந்தியை அழைத்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Interview of Ela Gandhi September 25, 2001 History of South Africa biography காந்தியவாதிகள் மகாத்மா காந்தி குடும்பம் வாழும் நபர்கள் 1940 பிறப்புகள்
682749
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE
இராகினி உபாத்யாயா
இராகினி உபாத்யாயா கிரேலா (Ragini Upadhyaya Grela) (பிறப்பு 9 நவம்பர் 1959), இராகினி உபாத்யாயா என்று பிரபலமாக அறியப்படும் இவர் நேபாளத்தைச் சேர்ந்த ஓவியரும், பாடலாசிரியரும் மற்றும் பரோபகாரரும் ஆவார். இவர் நேபாள நுண்கலை அகாதாமியின் இரண்டாவது வேந்தராகப் பணியாற்றினார். இராகினி தனது அடிமன வெளிப்பாட்டியம் மற்றும் பண்பியல் ஓவியங்களில் பாரம்பரிய தொன்மம், குறியீட்டுவாதம் மற்றும் நவீனத்துவத்தின் இணைவுக்காக அறியப்படுகிறார். இவரது ஓவியர் பெரும்பாலும் சமூக வர்ணனை மற்றும் பெண்ணிய அல்லது தாய்வழி கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. சால்வதோர் தாலீ, வின்சென்ட் வான் கோ மற்றும் ஜார்ஜ் சேகல் ஆகியோரின் தாக்கம் இவரது ஓவியங்களில் அடங்கும். இராகினி மகளிர் கலைஞர்கள் குழுவின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். இவரது ஓவியங்கள் உலக வங்கி அருங்காட்சியகம், பிராட்போர்டு அருங்காட்சியகம் (ஐக்கிய இராச்சியம்) புகுயோகா ஆசிய கலை அருங்காட்சியம் (யப்பான்), தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் செயலகம் (நேபாளம்) மற்றும் திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிபி கொய்ராலா அறக்கட்டளை மற்றும் பார்பரா அமைதி அறக்கட்டளையின் செயற்குழுக்களில் உறுப்பினராக உள்ளார். மேலும் சிவதா அன்பு அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வித் திட்டத்தின் மூலம் சமூகப் பணியில் ஈடுபட்ட ஒரு அமைப்பாகும். இந்த அறக்கட்டளை மூளைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. தொழில் வாழ்க்கை 1979 ஆம் ஆண்டில், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மற்றும் பால் கிருஷ்ணா சாமா ஆகியோர் இராகினியின் இலாப நோக்கற்ற ஓவியங்களின் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு இவரது பணிக்கு கணிசமான கவனத்தை ஈர்த்தது. மேலும் நேபாளத்தில் முற்போக்கான வட்டங்களில் இவர் நன்கு அறியப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் மன்னர் பிரேந்திராவின் பிறந்தநாளில் ராணி ஐஸ்வர்யா ஷா இவரது கண்காட்சியை திறந்து வைத்தபோது இராகினி மேலும் முக்கியத்துவம் பெற்றார். இது இங்கிலாந்தில் படிக்க உதவித்தொகை பெற வழிவகுத்தது. நேபாளத்தில் நவீன நுண்கலை அருங்காட்சியகத்தை நிறுவும் நோக்கத்தில்,  நேபாளத்தின் பிரதம மந்திரி சுசில் கொய்ராலாவால் நேபாள நுண்கலை அகாதாமியின் முதல் பெண் தலைவராக 2014 இல் நியமிக்கப்பட்டார். தனது தந்தையின் உதவியுடன், இராகினி நுண்கலை துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 65 க்கும் மேற்பட்ட தனி கண்காட்சிகளை நடத்தியுள்ளார். தொண்டுப் பணிகள் இராகினி சிவதா அன்பு அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். மறைந்த மகள் சிவதா உபாத்யாய் கிரேலாவின் நினைவாக இது 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவரது மகள் பிப்ரவரி 2016 இல் மூளையுறை அழற்சி நோயால் இறந்தார். இந்த அறக்கட்டளை மூளையுறை அழற்சி நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நேபாளத்தில் பின்தங்கிய சிறுமிகளின் கல்வியை உதவித்தொகை மூலம் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Ragini Art & Life (official website) Ragini Upadhyay – A leading modern Nepali Artist (retrospective book) பெண்ணியவாதிகள் வாழும் நபர்கள் 1959 பிறப்புகள் இந்தியக் கலைஞர்கள்
682752
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%28%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%29
சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்)
சிறப்பு நடவடிக்கைகள் குழு (Special Operations Group (SOG) இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் செயல்படும் காவல்துறையின் தந்திரோபாய பிரிவு ஆகும்.இக்காவல் பிரிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.இக்குழுவில் 2300+ காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் காவல்துறையிலிருந்து திறன்மிகு காவலர்களை தேர்வு செய்து சிறப்பு நடவடிக்கை குழுவில் சேர்க்கப்படுகின்றனர். இதனையும் காண்க பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு) பயங்கரவாத எதிர்ப்புப் படை (மேற்கு வங்காளம்) போர்ஸ் ஒன் (மகாராட்டிரம்) மேற்கோள்கள் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் ஜம்மு காஷ்மீர் அரசு இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள்
682757
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் அல்லது மஸ்ஜித் ஜமெயிக் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Masjid Jamek LRT Station; மலாய்: Stesen LRT Masjid Jamek; சீனம்: 占美清真寺站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடம்; அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய மூன்று வழித்தடங்களில் அமைந்துள்ள நிலத்தடி; மற்றும் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் இரண்டு நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்; மற்றொன்று புத்ரா அயிட்ட்ஸ் நிலையம் ஆகும். கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள ஜாமிஃ பள்ளிவாசலின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்ப்ட்டது. பொது இந்த நிலையம் தற்போது ஓர் இடைமாற்று நிலையம் என்று அழைக்கப்பட்டாலும், 28 நவம்பர் 2011 வரை, செயல்பாட்டு அடிப்படையில் இரண்டு மஸ்ஜித் ஜமெயிக் நிலையங்கள் இருந்தன. ஒரு நிலையம், ஓர் உயத்தப்பட்ட மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் ஆகும். இந்த நிலையம் அம்பாங் வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்களுக்குச் சேவை செய்தது. பயணச் சீட்டு முகைமைகள் மற்றும் ஒரு நிலத்தடி நிலையமான மஸ்ஜித் ஜமெயிக் நிலையம்; கிளானா ஜெயா வழித்தடத்திற்குச் சேவை செய்கிறது. ஒவ்வொன்றும் ஒருங்கிணைக்கப்படாத தனித்தனியான பயணச் சீட்டு முகைமைகளைக் கொண்டிருந்தன. ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு பயணிகள் மாற விரும்பினால், அவர்கள் ஒரு வழித்தட அமைப்பிலிருந்து வெளியேறி, மற்ற அமைப்பில் நுழைவதற்கு முன், ஒரு புதிய பயணச் சீட்டை வாங்க வேண்டிய நிலை இருந்தது. தனித்தனி கட்டிடங்கள் 2006-ஆம் ஆண்டுக்கு முன், கிள்ளான் ஆற்றின் மேல் பிளாசா வணிக வளாகம் கட்டப்பட்டது. அப்போது, ​​அம்பாங் வழித்தடம் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்களுக்கு என தனி ஒரு மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் இருந்தது. அதே போல கிளானா ஜெயா வழித்தடத்திற்கும் தனி ஒரு மஸ்ஜித் ஜமெயிக் நிலையம் இருந்தது. அந்த இரு நிலையங்களும் தனித்தனிக் கட்டிடங்களாக இயங்கின. துன் பேராக் சாலை அந்தக் கட்டத்தில் இரண்டு நிலையங்களுக்கும் இடையில் குறைந்த அளவிலான பாதசாரி நடைபாதைகள் இருந்தன. இதன் விளைவாகப் பயணிகள் வெயில் மழைக்கு உட்பட வேண்டியிருந்தது. அத்துட்ன் ஒரு வழித்தடத்தில் இருந்து அடுத்த வழித்தடத்திற்கு மாற வேண்டும் என்றால் அதிலேயும் சிரமங்கள் இருந்தன. வாகன நெரிசல் நிறைந்த துன் பேராக் சாலையைச் சிரமப்பட்டுக் கடக்க வேண்டியிருந்தது. 28 நவம்பர் 2011 அன்று, இரண்டு அமைப்புகளையும் பிரிக்கும் கட்டண வாயில்கள் அகற்றப்பட்டன. அந்த வகையில் இரு நிலையங்களாக இருந்த மஸ்ஜித் ஜமெயிக் நிலையம்; தனி ஒரு நிலையமாக மாற்றம் கண்டது. செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. காட்சியகம் மேலும் காண்க கோலாலம்பூர் மாநகர மையம் கிளானா ஜெயா வழித்தடம் மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682758
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
ஆண்டிமனி ஐந்தாக்சைடு
ஆண்டிமனி ஐந்தாக்சைடு (Antimony pentoxide) என்பது Sb2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆண்டிமனியும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தில் ஆண்டிமனி +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. ஆண்டிமனி பெண்டாக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. கட்டமைப்பு ஆண்டிமனி பெண்டாக்சைடு நையோபியம் பெண்டாக்சைடு சேர்மத்தின் அதே கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உரூட்டைல் கனிமத்தின் கட்டமைப்பிலிருந்து வழிப்பெறுதியாக இதன் அமைப்பு பெறப்படுகிறது. ஆண்டிமனி சிதைந்த எண்கோண அமைப்பில் ஆறு ஆக்சிசன் அணுக்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. SbO6 எண்முகத்தோடு மூலை மற்றும் விளிம்பை பகிர்ந்து கொள்கிறது. தயாரிப்பு ஆண்டிமனி பெண்டாகுளோரைடை நீராற்பகுப்பு செய்வதன் மூலம் நீரேற்றப்பட்ட ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது பொட்டாசியம் அறு ஐதராக்சோ ஆண்டிமோனேட்டு(V) சேர்மத்தை அமிலமயமாக்கல் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. நைட்ரிக் அமிலத்துடன் ஆண்டிமனி மூவாக்சைடை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது. பயன்கள் ஆண்டிமனி பெண்டாக்சைடு, ஏபிசு எனப்படும் அக்ரைலோநைட்ரைல் பியூட்டாடையீன் சுடைரீன் பலபடி மற்றும் பிற நெகிழிகளில் தீத்தடுப்பானாகவும், தைட்டானியம் டை ஆக்சைடு தயாரிப்பில் திரளாக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் கண்ணாடி, சாயம் மற்றும் பசைகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது. Na+ உள்ளிட்ட அமிலக் கரைசலில் உள்ள பல நேர்மின் அயனிகளுக்கு அயனிப் பரிமாற்ற பிசினாகவும் (குறிப்பாக அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தக்கவைப்புகளுக்கு) பலபடியாக்கலுக்கும் ஆக்சிசனேற்ற வினையூக்கியாகவும் ஆண்டிமனி ஐந்தாக்சைடு பயன்படுத்தப்படுகிறது. பண்புகள் நீரேற்றப்பட்ட ஆக்சைடு நைட்ரிக் அமிலத்தில் கரையாது. ஆனால் செறிவூட்டப்பட்ட பொட்டாசம் ஐதராக்சைடு கரைசலில் கரைந்து பொட்டாசியம் அறு ஐதராக்சோ ஆண்டிமோனேட்டு(V) அல்லது KSb(OH)6 சேர்மத்தைக் கொடுக்கிறது. வினைகள் 700 °செல்சியசு (1,290 °பாரங்கீட்டு) வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது, ​​மஞ்சள் நீரேற்றப்பட்ட பெண்டாக்சைடு சேர்மமானது Sb6O13 என்ற வாய்ப்பாடு கொண்ட நீரற்ற வெள்ளை நிறத் திண்மப் பொருளாக மாறுகிறது. ஆண்டிமனி(III) மற்றும் ஆண்டிமனி(V) இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளும் இங்கு உள்ளன. 900 °செல்சியசு (1,650 °F) வெப்பநிலைக்கு சூடாக்கும்போது α மற்றும் β வடிவங்களில் Sb2O4 என்ற வாய்ப்பாடு கொண்ட வெள்ளை நிற கரையாத தூளை உருவாக்குகிறது. β வடிவம் எண்முக இடைவெளிகளிலும் பிரமிடு SbIIIO4 அலகுகளிலும் ஆண்டிமனி(V) அயனியைக் கொண்டுள்ளது. இந்த சேர்மங்களில், ஆண்டிமனி(V) அணு ஆறு ஐதராக்சி குழுக்களுடன் எண்முகமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. ஐதரசன் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் ஆண்டிமனி பெண்டாக்சைடை ஆண்டிமனி உலோகமாகக் குறைக்க முடியும். மேற்கோள்கள் ஆக்சைடுகள் ஆண்டிமனி(V) சேர்மங்கள்
682759
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%28%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%29
பயங்கரவாத எதிர்ப்புப் படை (மேற்கு வங்காளம்)
தீவிரவாத எதிர்ப்புப் படை (Counter Insurgency Force (CIF West Bengal), இந்தியாவின் மேற்கு வங்காள காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும். இதன் தலைமையிடம் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கரியா பகுதியில் உள்ளது. இப்பிரிவு 2010ஆம் ஆண்டில், காவல்துறையில் சிறப்பாக செயல்படும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை தேர்வு செய்து நிறுவப்பட்டது. இப்படையில் 1,000 பேர் உள்ளனர். துர்காபூர் மற்றும் சல்போனியில் இப்படையினர்க்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்படைப்பிரிவுக்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமை வகிப்பார். இப்படை நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிகளை ஒடுக்க செயல்படுகிறது. இதனையும் காண்க நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்) பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு) போர்ஸ் ஒன் (மகாராட்டிரம்) மேற்கோள்கள் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள் மேற்கு வங்காள அரசு
682769
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE
தீரஜ் பொம்மதேவரா
தீரஜ் பொம்மதேவரா (Dhiraj Bommadevara, பிறப்பு 4 செப்டம்பர் 2001) என்பவர் ஒரு இந்தியர் வில்வித்தை வீரர் ஆவார். இவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தார். தீரஜ் உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், உலக இளையோர் வாகையர் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார். தனிப்பட்ட வாழ்க்கை ஆந்திராவின், விசயவாடாவைச் சேர்ந்தவர் தீரஜ். இவரது தந்தை பொம்மதேவர சரவண் குமார் இந்திய வில்வித்தை சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார். விஜயவாடாவில் உள்ள எஸ்ஆர்ஆர் மற்றும் சிவிஆர் அரசு பட்டயக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். 2006ஆம் ஆண்டு விஜயவாடாவில் உள்ள வோல்கா வில்வித்தை அகாதமியில் வில்வித்தையை பயிறிசி பெறத் தொடங்கினார். புனேவில் உள்ள இராணுவ விளையாட்டு கல்வி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்று, 2021ல் ஹவால்தார் பதவிபெற்று இராணுவத்தில் இணைந்தார். இவர் ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட்டின் ஆதரவைப் பெற்றுள்ளார். தொழில் 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவின் சார்பில் போட்டியிட தீராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அட்டானு தாசு, துஷார் ஷெல்கேவுடன் இணைந்து இந்திய ஆடவர் வில்வித்தை அணியில் பங்கேற்று 2022 ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர்கள் கொரியா குடியரசிடம் இறுதிப் போட்டியில் தோற்றனர். 2021 ஆம் ஆண்டில், குவாத்தமாலாவின், குவாத்தமாலா நகர் மற்றும் பிரான்சின் பாரிரிசில் நடந்த உலகக் கோப்பைகளில் ஆண்கள் தனிநபர் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக 2022 ஜனவரியில், ஐதராபாத்தில் நடந்த தரவரிசைப் போட்டியில் அவர் தோற்கடித்தார் தோக்கியோ ஒலிம்பியன் தருண்தீப் இராயை தோற்கடித்தார். பின்னர் 2023 இல், ஜெர்மனியின் பெர்லினில் நடந்த உலக வாகையர் போட்டிகளில் ஆடவர் அணியிலும், கலப்பு குழு நிகழ்வைத் தவிர தனிப்பட்ட போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் விளையாடினார். அதே ஆண்டில், துருக்கியின் ஆந்தாலியாவில் நடந்த உலகக் கோப்பையில் ஆண்கள் அணி மற்றும் ஆடவர் தனிநபர் போட்டிகளிலும், பாரிஸ், பிரான்ஸ், சீனாவின் சாங்காய் ஆகிய இடங்களில் நடந்த உலகக் கோப்பைகளில் ஆண்கள் தனிநபர் மற்றும் கலப்பு அணிப் போட்டிகளிலும் கலந்துகொண்டார். 2023 இல் நடந்த அடுத்த நிகழ்வில், கொலம்பியாவின் மெதெயில் நடந்த உலகக் கோப்பை ஸ்டேஜ் 3 இல் ஆண்கள் அணி மற்றும் ஆண்கள் தனிநபர் போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2023 செப்டம்பரில், ஹெர்மோசிலோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொண்டார். 2024 கோடைக்கால ஒலிம்பிக் 2024 கோடை ஒலிம்பிக் போட்டியில் திராஜ் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். தரவரிசைச் சுற்றில், திராஜ் 4வது இடத்தைப் பிடித்தார் (681 மதிப்பெண்களுடன்), இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வில் வீரர் அடைந்த சிறந்த தரவரிசைகளில் ஒன்றாகும். இருப்பினும், ஆண்களுக்கான தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்றில் இவர் 5-6(5+) என்ற கணக்கில் கனடாவின் எரிக் பீட்டர்ஸிடம் தோற்றார். இதனையடுத்து ஆண்கள் அணியில் பிரவின் ஜாதவ் மற்றும் தருண்தீப் இராய் ஆகியோருடன் திராஜ் காலிறுதிக்கு முன்னேறினார். எனினும் அந்த அணி 2-6 என்ற கோல் கணக்கில் துருக்கி துருக்கி அணியிடம் தோல்வியடைந்தது. கலப்பு அணி வில்வித்தையில் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் சார்பில் முதன் முதலில் ஒலிம்பிக் பதக்கப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் அங்கிதா பகத்துடன் புதிய வரலாற்றை தீராஜ் படைத்தார். ஆனால் அமெரிக்க அணியிடம் 2-6 என்ற கணக்கில் தோற்றார் . மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Dhiraj Bommadevara at the 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வாழும் நபர்கள் 2001 பிறப்புகள் இந்திய வில்வித்தை வீரர்கள்
682771
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
டிசிப்ரோசியம்(III) சல்பைடு
டிசிப்ரோசியம்(III) சல்பைடு (Dysprosium(III) sulfide) என்பது Dy2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். டிசிப்ரோசியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகும். தயாரிப்பு மந்தவாயுச் சூழல் அல்லது வெற்றிடத்தில் தூய்மையான டிசிப்ரோசியம் மற்றும் கந்தகத்தை சேர்த்து சூடுபடுத்தினால் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்: 2Dy + 3S -> Dy2S3 ஐதரசன் சல்பைடு மற்றும் டிசிப்ரோசியம் ஆக்சைடு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்: Dy2O3 + 3H2S -> Dy2S3 + 3H2O இயற்பியல் பண்புகள் டிசிப்ரோசியம்(III) சல்பைடு மஞ்சள்-ஆரஞ்சு-பழுப்பு நிற படிகங்களை உருவாக்குகிறது: கனசதுர மற்றும் ஒற்றைச்சரிவச்சு அமைப்புகள் உருவாகின்றன. பழுப்பு-சிவப்பு, கருப்பு அல்லது பச்சை நிறத்தில் படிகங்களை உருவாக்குகிறது என்பதற்கான சான்றுகளும் உள்ளன. வறண்ட காற்றில் படிகங்கள் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. ஆனால் ஈரப்பதமான காற்றில் அவை மெதுவாக நீராற்பகுப்பு செய்யப்படுகின்றன. இந்த சேர்மம் நீர் மற்றும் அமிலங்களில் மிதமாக கரைகிறது. வேதிப் பண்புகள் டிசிப்ரோசியம்(III) சல்பைடு காற்றில் நன்றாகச் சூடுபடுத்தினால் ஆக்சிசனேற்றம் அடைகிறது: Dy2S3 + 3O2 → Dy2O2S + 2SO2 மேற்கோள்கள் டிசிப்ரோசியம் சேர்மங்கள் சல்பைடுகள் பாறை உப்பு படிகக் கட்டமைப்பு
682772
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
பம்பை அணை
பம்பா அணை (Pamba Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சீதத்தோடு ஊராட்சி ரன்னி வனப் பகுதியில் பம்பை ஆற்றின் மீது கட்டப்பட்ட ஓர் ஈர்ப்பு அணை ஆகும். இது 1967ஆம் ஆண்டில் சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. சபரிகிரி நீர்மின் திட்டம் கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். பம்பை அணையின் நீர்த்தேக்கம் அருகிலுள்ள காக்கி அணையுடன் 3.21 கி. மீ. (1.99 மைல்) நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அணை 281 மீ (922 ) நீளமும், 57.2 மீ (188 ) உயரமும் கொண்டது. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 981.45 மீ உயரத்தில் பெரியார் தேசியப் பூங்கா ஒட்டிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. பம்பை மற்றும் காக்கி அணைகளில் சேமிக்கப்படும் நீர் குழாய்கள் மூலம் சபரிகிரி மின் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணை 1967 முதல் செயல்பட்டு வருகிறது. வரலாறு காக்கி அணை நீர்த்தேக்கத்தினைப் பம்பை ஆற்று நீர்த்தேக்கம் இரண்டினையும் ஒரு சுரங்கப்பாதை மூலம் இணைத்து, நீர்த்தேக்கத்தை உருவாக்குவதன் மூலம் நீர்த்தேக்கத்தினை உருவாக்குவதே இத்திட்டத் திட்டமாக இருந்தது. ஆரம்பப் பணிகளும் முன்னெடுப்பும் 1958இல் மேற்கொள்ளப்பட்டு, 1960இல் பணிகள் தொடங்கப்பட்டன. 1961இல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1960ஆம் ஆண்டு கால அட்டவணையின்படி அணை 1964ஆம் ஆண்டு கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் 1967இல் முழுமையாக முடிவடைந்தது. பம்பை அணையின் கட்டுமானத்தில் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அருகிலுள்ள பகுதிகளில் இயற்கை மணல் கிடைக்கவில்லை. எனவே, மின் நிலையத்தைத் தவிரப் பிற பயன்பாட்டிற்கு, கற்களை நொறுக்கிப் பெறப்பட்ட மணல் பயன்படுத்தப்பட்டது. அணைக்கு சீமைக்காரை தமிழ்நாட்டில் உள்ள துளுக்கப்பட்டியிலிருந்து பெறப்பட்டது. அணை அம்சங்கள் அணையின் வகை: கொத்து-ஈர்ப்பு வகைப்பாடு: உயரமான அணை அதிகபட்ச நீர் மட்டம்: 986.33 மீட்டர்கள் முழு நீர்த்தேக்க நிலை: 986.33 மீட்டர்கள் ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 57.00 மீட்டர்கள் நீளம்: 281.48 மீட்டர்கள் நீர்க்கசிவுப் பாதை: 6, வட்டப் பாதை, ஒவ்வொன்றும் 7 x 4.8 மீட்டர் அளவு உயர மட்டம்: 981.46 மீட்டர்கள் அணை நீர் வெளியேற்றம்: எண் 1, வெற்று உந்து அடைப்பிதழ், 1.8 மீட்டர் விட்டம் திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் உற்பத்தி திட்டத்தின் நோக்கம்: நீர்மின் உற்பத்தி நிறைவுற்ற ஆண்டு: 1967 நீர்த்தேக்கம் இந்த நீர்த்தேக்கம் பம்பை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாம்பை அணையால் உருவாகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் காக்கி நீர்த்தேக்கம் வரை நிலத்தடி 3.21 கி.மீ. சுரங்கப்பாதை வழியாகப் பாய்கிறது. நீர்ப் பரப்பு பகுதி/நீர்ப்பிடிப்புப் பகுதி 90.88 சதுர கி.மீ. ஆகும். சராசரி மழைப்பொழிவு 4572 மில்லி மீட்டர். முழு நீர்த்தேக்க நிலை 3236 அடி. சபரிகிரி நீர்மின் திட்டம் சபரிகிரி நீர்மின் திட்டம் கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது இந்தோ அமெரிக்கக் கூட்டுத் திட்டமாகும். 1966ஆம் ஆண்டில் 300 மெகாவாட் திறனுடன் தொடங்கப்பட்டது. 2005 முதல் 2009 வரை, திறன் 340 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. இந்த மின் நிலையம் 1966-67ஆம் ஆண்டில் ஆறு மின்னாக்கிகளுடன் செங்குத்து தண்டு பெல்டன் விசையாழியைப் பிரதான இயக்கியாகக் கொண்டு தொடங்கப்பட்டது. மின் உற்பத்திக்குப் பிறகு, மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீர் மூழியார் நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுகிறது பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா நீர்ப்பாசனத் திட்டம் சபரிகிரி நீர்மின் திட்டத்தின் கடைமடை நீரை நீர்ப்பாசன நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுலா இது பம்பை ஆற்றைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். படகுச் சவாரி மற்றும் சபரிமலை போன்ற சில சுற்றுச்சூழல் சுற்றுலா இடங்கள் இப்பகுதியில் உள்ளன. வெளி இணைப்புகள் சபரிகிரி தொலைத் திரைப்படம் திட்டம் மேற்கோள்கள் Coordinates on Wikidata
682773
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81
சுதா வர்க்கீசு
சகோதரி சுதா என்றும் அழைக்கப்படும் சுதா வர்கீசு (Sudha Varghese) இந்தியாவைச் சேர்ந்த ஓர் முன்னாள் மத சகோதரியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இவர் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலித்த்துகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர். தற்போது இவர் பட்னா மாவட்டத்திலுள்ள ஜம்சவுத் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சில நேரங்களில் தீதி (மூத்த சகோதரி) என்றும் அழைக்கப்படுகிறாள். பீகாரில் உள்ள தலித் பெண்கள் மற்றும் பெண்களுக்கு கல்வி, எழுத்தறிவு, தொழில் பயிற்சி, சுகாதாரம், வாதிடுதல் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வழங்கும் லாப நோக்கற்ற அமைப்பான நாரி குஞ்சன் ("பெண்களின் குரல்" ) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். நாரி குஞ்சன் 50 வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 1500 பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். சுதா வர்கீசு, தீண்டாமைக் கருத்துக்கு எதிராகப் போராடியவரும் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான அம்பேத்கர் உத்வேகம் பெற்றதாகக் கூறினார். இளமை வாழ்க்கை சுதா வர்கீசு 1949 செப்டம்பர் 5 அன்று கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தார். 1965 ஆம் ஆண்டில், நோட்ரே டேம் டி நாமூரின் சகோதரிகளுடன் ஏழைகளுக்காக பணியாற்ற பீகாருக்குச் சென்றார். அங்கு சில ஆண்டுகள் பயிற்சி பெற்ற இவர், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளைக் கற்றுக்கொண்டார். துறவற மடம் நடத்திய ஒரு பள்ளியி பணியாற்றினார். பின்னர் அதிலிருந்து வெளியேறினார். பிகாரின் முசாகர் இன மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 1986 ஆம் ஆண்டில் அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு செங்கல் குடிசைக்கு குடியேறினார். சுதா வர்கீசு 21 ஆண்டுகள் அப்பகுதியிலேயே வசித்து வந்தார். அங்கு இவர் பள்ளிகளையும் ஒரு வீட்டையும் கட்டினார். வன்கலவி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை கையாள 1989 ஆம் ஆண்டில் பெங்களூரில் சட்டப் பட்டம் பெற்றார். 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்திலும் இவர் இருந்தார். தனது வீட்டில், இவர் இளம்வயது சிறுமிகளின் குழுவைக் கூட்டி அவர்களுக்கு வாசிப்பு, எழுத்து, தையல் மற்றும் பூத்தையல் ஆகியவற்றைக் கற்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறுமிகளுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் பண மேலாண்மை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி கற்பிக்க ஐந்து மையங்களைத் திறந்தார். இது முசாகர் சிறுமிகளுக்கான நாரி குஞ்சன் வசதிகளில் முதன்மையானது. இந்த மையங்கள் செவிலியம் மற்றும் ஆரம்ப மருத்துவ உதவி மற்றும் பொருளாதார ரீதியாக மதிப்புமிக்க பிற திறன்களையும் கற்பிக்கின்றன. தனது பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் சமூகத்திடமிருந்து நிதியைப் பெற்றிருந்தார். இப்பணிகளை மேலும் 50 மையங்களுக்கு விரிவாக்கம் செய்ய ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சில ஆயிரம் டாலர்கள் மானியமாக அளித்தது. விருது 2006: இவரது சிறப்பான பங்களிப்புகள் மற்றும் சாதனைகளைப் பாராட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டில், காந்திய விழுமியங்களை நிலைநிறுத்தும் சமூக சேவையை வழங்கியதற்காக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது. . மேற்கோள்கள் குறிப்புகள் இந்தியப் புரவலர்கள் பத்மசிறீ விருது பெற்ற சமூகப்பணியாளர்கள் வாழும் நபர்கள் கோட்டயம் மாவட்ட நபர்கள் 1949 பிறப்புகள்
682775
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D
அபய் மற்றும் ராணி பாங்
அபய் பாங் மற்றும் ராணி பாங் (Abhay and Rani Bang) ஆகிய இருவரும் இந்தியாவிலுன் மகாராட்டிராவிலுள்ள கட்சிரோலி மாவட்டத்தில் பணிபுரியும் ஆர்வலர்கள் மற்றும் சமூக சுகாதார ஆய்வாளர்கள் ஆவர். 2018இல் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது, 2018 பணிகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் செயல்படுத்தப்படும் குழந்தை இறப்பு வீதங்களை கணிசமாகக் குறைத்த ஒரு திட்டத்தை இவர்கள் ஒன்றாகக் கண்காணித்தனர். அபய் மற்றும் ராணி ஆகிய இருவரும் கிராமப்புற சுகாதார சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சமூக ஆரோக்கியத்திற்கான கல்வி, செயல் மற்றும் ஆராய்ச்சிக்கான இலாப நோக்கற்ற சங்கத்தை நிறுவினர். இவர்கள் மகாராட்டிரா பூசண் விருதை வென்றுள்ளனர். மேலும் இலக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். மும்பையில் உள்ள எஸ். என். டி. டி மகளிர் பல்கலைக்கழகமும் ராணி பேங்கிற்கு கௌரவ விருது வழங்கியுள்ளது. உலகின் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி மற்றும் மருத்துவ இதழ்களில் ஒன்றான தி லான்செட் இவர்களை "கிராமப்புற இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பின் முன்னோடிகள்" என்று விவரித்தது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் சர்வதேச சுகாதாரத் துறையின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதை இவர்கள் பெற்றுள்ளனர். இவர்களின் தொழில் வாழ்க்கையின் போது, சமூக அடிப்படையிலான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் ஒரு மறுமலர்ச்சியை வளர்க்க உதவியுள்ளனர். 2016 ஆம் ஆண்டில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இவர்களுக்கு புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதை வழங்கியது. குழந்தை இறப்பு விகிதத்தில் குறைப்பு மே 2017 இல், மகாராட்டிரா மாநிலத்தில் குழந்தை இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க பம்பாய் உயர் நீதிமன்றம் அபய் பாங்கை அழைத்தது. இவர் அளித்த பரிந்துரைகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மாநில அரசுக்கு அதன் கொள்கை முடிவுகளில் பரிந்துரைகளை இணைத்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் SEARCH website NIRMAN website Bio data on the website of planning commission, a government website Dr. Abhay Bang: Research with the People , a 2010 article by Abhay Bang in Forbes India Meeting the Mahatma, an essay by Abhay Bang My Magical School, another essay by Abhay Bang Sevagram to Shodgram, a speech by Abhay Bang A Postcard from Dr Abhay Bang: Vidarbha, Marathwada deserve your maximum attention, CM Fadnavis, a 2016 open letter from Abhay Bang to the Chief Minister of Maharashtra பத்மசிறீ விருது பெற்ற மருத்துவத்துறையினர் மகாராட்டிரப் பெண் அறிவியலாளர்கள் வாழும் நபர்கள்
682776
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
வோல்போர்தைட்டு
வோல்போர்தைட்டு (Volborthite) என்பது Cu3V2O7(OH)2·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தில் தாமிரமும் வனேடியமும் கலந்துள்ளன. முதலில் 1838 ஆம் ஆண்டில் உருசியாவின் யூரல் மலைத்தொடரில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் கினாபைட்டு என்று என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் உருசிய தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் வான் வோல்போர்த் (1800-1876) நினைவாக வோல்போர்தைட்டு என மாற்றப்பட்டது. தாங்கெய்ட்டு கனிமம் இதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனிமமாக உள்ளது. கால்சியோவோல்போர்தைட்டு (CaCuVO4(OH)) என்ற பெயராலும் தாங்கெய்ட்டு கனிமம் அறியப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் வோல்போர்தைட்டு கனிமத்தை Vbo என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. தோற்றம் உருசியாவின் பேர்ம்சுகயா மாகாணத்தில் உள்ள நகரத்தின் சோஃப்ரோனோவ்சுகி சுரங்கத்தில் வோல்போர்தைட்டு கனிமம் முதன்முதலில் 1837 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வனேடியம் உலோகத்தைக் கொண்டுள்ள நீர்வெப்ப மாறுபாட்டு தாமிர தாதுக்களில் ஓர் அசாதாரண ஆக்சிஜனேற்ற கனிமமாக இது தோன்றுகிறது. புரோசாண்டைட்டு, மாலகைட்டு, அடகாமைட்டு, டேன்செயிட்டு, கிரிசோகோலா, பாரைட்டு மற்றும் இயிப்சம் ஆகிய கனிமங்களுடன் கலந்து காணப்படுகிறது. மேற்கோள்கள் தாமிரம்(II) கனிமங்கள் வனேடேட்டு கனிமங்கள் பாசுப்பேட்டு கனிமங்கள் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
682778
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D
தைப்பக்
தைப்பக் (Dybbuk) என்பது யூத புராணங்களில் தோன்றும் இறந்த நபரின் ஆன்மாவாக நம்பப்படும் தீங்கிழைக்கும் ஆவியாகும். இது தனது இலக்கை அடைந்தவுடன், சில சமயங்களில் பேயோட்டுதல் மூலமாக அந்த உடலை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது. வரலாறு தைபக்கைப் பற்றிய பல கதைகள் முதலில் 16 ஆம் நூற்றாண்டின் பல எழுத்துக்களில் தோன்றுகிறது. இருப்பினும், யூத எழுத்தாளர் எஸ். அன்சுகி 1920 இல் வெளியிட்ட தி தைப்பக் என்ற நாடகம் இலக்கிய வட்டங்களில் இக்கருத்து பிரபலபமானது. இதைப் பற்றிய முந்தைய கணக்குகள் ( ஜொசிஃபஸால் வழங்கப்பட்டவை போன்றவை) பேய்களை விட பேய் பிடித்தவையாகவே அதிகம் இருந்தது. இந்தக் கணக்குகள் மக்கள் மத்தியில் மரபுவழியை ஒரு தடுப்பு நடவடிக்கையாக ஆதரித்தன. 1937 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் வாசின்ஸ்கியின் திரைப்படமான ‘தி தைப்பக் ’இத்திய மொழி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அது இத்திய திரைப்படத் தயாரிப்பின் உன்னதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பாரம்பரியமாக, தைப்பக்குகள் ஆண் ஆவிகளாக இருந்தன. யூத மத குரு ஹையிம் விட்டலின் கூற்றுப்படி, பெண்களுக்கு மறு பிறவி இல்லாததால் அவர்கள் தைப்பக்குகளாக மாற முடியாது. சில சமயங்களில் இந்த ஆவிகள் பெண்களை அவர்களது திருமணத்திற்கு முன்பு பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது..பொதுவாக பாலியல் பாணியில் பெண்களின் யோனி வழியாக நுழைவதன் மூலம், இது ஆன்-ஸ்கையின் நாடகத்தில் காணப்படுகிறது. உளவியல் இலக்கியத்தில், தைப்பக் ஒரு வெறித்தனமான நோய் அறிகுறி என்று விவரிக்கப்பட்டுள்ளது. இதனையும் காண்க கபலா மேற்கோள்கள் மேலும் வாசிக்க வெளி இணைப்புகள் "The Dybbuk" by Ansky Jewish Heritage Online Magazine "Dybbuk – Spiritual Possession and Jewish Folklore" by Jeff Belanger, Ghostvillage.com "Dybbuk", பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Dibbuk short film teaser யூத கலாச்சாரம் தொன்மங்கள்
682784
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
கால்சியம் பெராக்சைடு
கால்சியம் பெராக்சைடு (Calcium peroxide) என்பது CaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் ஈராக்சைடு, கால்சியம் டையாக்சைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. கால்சியத்தின் Ca2+. பெராக்சைடு (O22−) உப்பாக இது கருதப்படுகிறது. வணிக மாதிரிகள் மஞ்சள் நிறமாக இருக்கலாம், ஆனால் தூய சேர்மம் வெண்மையானது. கால்சியம் பெராக்சைடு தண்ணீரில் கிட்டத்தட்ட கரையாது. கட்டமைப்பு ஒரு திடப்பொருளாக, கால்சியம் பெராக்சைடு சிதைவுக்கு எதிராக ஒப்பீட்டளவில் நிலையானது. தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது நீராற்பகுப்பு அடைந்து ஆக்சிசனை வெளியிடுகிறது. அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் ஐதரசன் பெராக்சைடை உருவாக்குகிறது. தயாரிப்பு கால்சியம் பெராக்சைடு கால்சியம் உப்புகளுடன் ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் கால்சியம் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது. Ca(OH)2 + H2O2 → CaO2 + 2 H2O கால்சியம் ஐதராக்சைடுடன் நீர்த்த ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கால்சியம் பெராக்சைடின் எண்ணீரேற்று வீழ்படிவாகிறது. சூடுபடுத்தினால் இது நீர்நீக்கத்திற்கு உட்படுகிறது. பயன்கள் விலைமதிப்பற்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பதை மேம்படுத்த இது முக்கியமாக ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இரண்டாவது முக்கிய பயன்பாட்டில், இது ஐ எண் ஐ930 என்ற குறியீட்டுடன் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மாவு வெளுக்கும் முகவராகவும் மேம்படுத்தும் முகவராகவும் கால்சியம் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்தில் நெல் விதைகளை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய கால்சியம் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும், மீன் வளர்ப்பில் நீரை ஆக்சிசனேற்றம் செய்யவும் கிருமிநீக்கம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு துறையில் இது மண் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு மக்னீசியம் பெராக்சைடுக்கு ஒத்த முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலியத்தால் மாசுபடுத்தப்பட்ட மண் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்தப்பட்ட தளத்தில் உயிரியல் திருத்தம் மூலம் மீட்டெடுக்கவும் இது பயன்படுகிறது. சில பல் மருந்துகளின் உட்கூறாகவும் இது உள்ளது. மேற்கோள்கள் கால்சியம் சேர்மங்கள் பெராக்சைடுகள் ஆக்சிசனேற்றிகள் தொற்றுநீக்கிகள் உணவுச் சேர்பொருட்கள்
682786
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்
பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம் அல்லது பிளாசா ராக்யாட் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Plaza Rakyat LRT Station; மலாய்: Stesen LRT Plaza Rakyat; சீனம்: 人民广场站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் அமைந்துள்ள நிலத்தடி; மற்றும் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன. இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். பொது இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த பிளாசா ராக்யாட் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது. கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள பிளாசா ராக்யாட் வணிகப் பேரங்காடியின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்ப்ட்டது. பழைய சுல்தான் சாலை (Sultan Street) தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது. அருகிலுள்ள புடு சென்ட்ரல் (Pudu Sentral) பேருந்து நிலையத்தையும், பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்தையும் இணைக்க 150 மீட்டர் நீளமுள்ள பாதசாரி பாலமும் நடைபாதையும் அமைக்கப்பட்டன. அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும். பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன. காட்சியகம் மேலும் காண்க கோலாலம்பூர் மாநகர மையம் [அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்]] மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682789
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வெண்வயிற்று சாரைப்பாம்பு
வெண்வயிற்று சாரைப்பாம்பு (white-bellied rat snake) அல்லது பழுப்பு எலி பாம்பு என்று அழைக்கப்படும் தையாசு பசுகா (Ptyas fusca) என்பது கொளுப்பிரிட் பாம்பு குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினமாகும். இது இந்தோனேசியா, புரூணை, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூரில் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது. வெண்வயிறு சாரைப்பாம்பு காடுகளின் வாழ்விடங்களை விரும்புகிறது. இவை தவளை, பல்லி, மீன்களை வேட்டையாடுவதாக அறியப்படுகிறது. இது அமைதியாக இருப்பதாகவும், தொந்தரவு செய்யும் போது கழுத்தை நிமித்தி காண்பதாக அறியப்படுகிறது. இச்செயல் ஓர் அச்சுறுத்தும் செயலாகும். முதிர்வடைந்த பாம்பின் மேற்பரப்பு பழுப்பு நிறத்திலிருந்து செங்கல்-சிவப்பு நிறத்திலிருக்கும். வயிற்றுப்புறச் செதில்கள் வெள்ளை முதல் வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும். பின்புற உடல் மற்றும் வால் இருபுறமும் அடர்த்தியான கருநிறக் கோடுகள் இப்பாம்பின் சிறப்பியல்பு அம்சமாகும். இளம் பாம்புகள் பெரும்பாலும் பச்சை நிறத்திலிருக்கும். இதன் கருமணி வட்டமாகவும் பெரியதாகவும் உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் படம் ஹாக் பிங் கியூக்-சிலாங்கூர், மலேசியா பால் எடுத்த படம்-மாலியாவ் வடிநிலம், சபா, மலேசியா ஊர்வன சாரைப்பாம்புகள்
682790
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
மச்சனி சோமப்பா
மச்சனி சோமப்பா (Machani Somappa) இந்திய நாட்டினைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். கல்வியாளர், சமூக சேவகர் மற்றும் மச்சனி சோமப்பா குழும நிறுவனங்களின் நிறுவனர் என்றும் இவர் அறியப்படுகிறார். சென்னை மாகாணத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிகனூரில் 1904 ஆம் ஆண்டில் பிறந்தார். 1934 ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது தனது பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்காக ஒரு நிவாரண மையத்தைத் திறந்து, நெசவாளர்களுக்கான கூட்டுறவு சங்கமான யெம்மிகனார் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை (ஒய். டபிள்யூ. சி. எசு) 1938 ஆம் ஆண்டு நிறுவினார்.   இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மசானி குழுமத்தை நிறுவினார். 1940 ஆம் ஆண்டு முதல் வணிகக் குழு உற்பத்தி, பொறியியல், போக்குவரத்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, கிராமப்புற வணிக செயல்முறை மற்றும் சில்லறை வணிகத்தில் இவ்வமைப்பு செயல்பட்டது. 1960 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற செர்மன் வசந்த உற்பத்தியாளர்களுக்கான அமைப்பினை சிடம்ப் + சூலேவுடன் கூட்டு முயற்சியாக இணைந்து சோமப்பா நிறுவினார். 1978 ஆம் ஆண்டில் கல்வித் துறையில் இவர் மச்சனி சோமப்பா ஆங்கில மொழிக்கல்வியில் உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவரை பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. இவ்விருது இவர் செய்த பங்களிப்புகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதாகும். இந்த விருதைப் பெற்ற முதல் நபர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். மேற்கோள்கள் கர்நூல் மாவட்ட நபர்கள் 1904 பிறப்புகள் பொது அலுவல்களுக்காகப் பத்மசிறீ விருதுபெற்றவர்கள் இந்தியத் தொழிலதிபர்கள் இந்தியக் கல்வியாளர்கள் ஆந்திரப் பிரதேசம் நாடுகள் வாரியாகத் தொழிலதிபர்கள் பொதுவகப்பகுப்பு விக்கித்தரவு தடப்பகுப்புகள் இந்தியப் பொருளாதாரம் இந்தியாவில் மாநிலவாரியாக பொருளாதாரம் ஆந்திரப் பிரதேசத்தில் கல்வி இந்தியாவில் கல்வி இந்தியச் செயற்பாட்டாளர்கள் தொழில் வாரியாக இந்தியர்கள் மாநிலம் அல்லது ஒன்றியப் பகுதி வாரியாக இந்தியர்கள் இந்திய அறிஞர்கள் இந்திய சமூக அறிவியலாளர்கள் இந்திய சமூகசேவகர்கள் தொழில் வரியாக மாநிலம் அல்லது ஒன்றிய பகுதி வாரியாக இந்தியர்கள் தொழில் மற்றும் நாடு வாரியாக மக்கள் ஆந்திரப் பிரதேச நபர்கள்
682792
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சாவகத்தின் கலாச்சாரம்
சாவகத்தின்  கலாச்சாரம் (Javanese culture) இந்தோனேசியாவின் நடுச் சாவகம், யோக்யகர்த்தா மற்றும் கிழக்கு சாவகம் மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. பல்வேறு இடப்பெயர்வுகள் காரணமாக, சுரிநாம் (15% மக்கள் சாவக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்), பரந்த இந்தோனேசிய தீவுக்கூட்டம், கேப் மலாய், மலேசியா, போன்ற உலகின் பிற பகுதிகளிலும் இதைக் காணலாம். சிங்கப்பூர், நெதர்லாந்து மற்றும் பிற நாடுகள். புலம்பெயர்ந்தோர் வயாங் குளிட், கேம்லின் இசை, பாரம்பரிய நடனங்கள் போன்ற சாவக கலாச்சாரங்களின் பல்வேறு அம்சங்களைக் கொண்டு வருகிறார்கள். மேற்கு நோக்கி சாவகர்களின் இடம்பெயர்வு கடலோர சாவானியக் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இது மேற்கு சாவகம் மற்றும் பண்டெனிலுள்ள உள்நாட்டு சுண்டானிய கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. மிகப்பெரிய இனக்குழுவாக இருப்பதால், சாவானியக் கலாச்சாரம் மற்றும் மக்கள் இந்தோனேசிய அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர், இந்த செயல்முறை சில நேரங்களில் சாவகமயமாக்கல் என்று விவரிக்கப்படுகிறது. இலக்கியம் இந்தோனேசியாவில் சாவக இலக்கிய பாரம்பரியம் பழமையான இலக்கிய பாரம்பரியங்களில் ஒன்று. இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் பழைய சாவக மொழியில் 9 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியிலிருந்த மாதரம் இராச்சியம் மற்றும் கேதிரி இராச்சியக் காலத்தில் நடந்தன. கேதிரியின் ஆட்சிக் காலத்தில் சமரதனா என்ற நூலும் இயற்றப்பட்டது. மேலும் இது தாய்லாந்து மற்றும் கம்போடியா வரை பரவிய பிற்கால பாஞ்சி கதைகளுக்கு முன்னோடியாக மாறியது. பிற இலக்கியப் படைப்புகளில் கென் அரோக் மற்றும் கென் டெடெஸ் ஆகியவை அடங்கும். இது பரராட்டன் என்ற வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இது சிங்காசரி இராச்சியத்தின் (1222-1292) நிறுவனர் கென் அரோக் பற்றிய கதையாகும். . மயாபாகித்து பேரரசின் ஆட்சியின் போது பல குறிப்பிடத்தக்க படைப்புகள் உருவாக்கப்பட்டன. நாகரக்ரேதகமா என்ற ஓலைச்சுவடி மயாபாகித்து பேரரசின் உச்சத்தை விவரிக்கிறது. மயாபாகித்து ஆட்சியின் போது எம்பு தந்துலரால் எழுதப்பட்ட காகாவின் சுதசோமா தண்டு பகலரன் தீவின் புராண தோற்றம் மற்றும் அதன் எரிமலை இயல்பு பற்றி விவரிக்கிறது. மேலும், காகாவின் இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கு இடையேயான மதச் சகிப்புத் தன்மையைப் பற்றியும் கூறுகிறது. மயாபாகித்து பேரரசு வரலாற்று ரீதியாக, சாவானியர்கள் இந்து மதம், பௌத்தம் மற்றும் கெபத்தினன் ஆகியவற்றின் ஒத்திசைவான வடிவத்தைப் பின்பற்றுகிறார்கள். 15 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, இசுலாமும் கிறிஸ்தவமும் சாவகத்திற்கு வந்து மெதுவாக பரவியது. உள் மற்றும் வெளிப்புற மோதல்கள் காரணமாக, மயாபாகித்து இராச்சியம் 16 ஆம் நூற்றாண்டில் சரிந்தது. புதிய இசுலாமிய மன்னர்களின் கீழ் இசுலாம் விரைவாக பரவியது. கிறிஸ்தவத்தின் பரவலானது காலனித்துவ சக்திகளால் கண்காணிக்கப்பட்டது. சமூக அமைப்பு 1960களில் அமெரிக்க மானுடவியலாளர் கிளிஃபோர்ட் கீர்ட்ஸ், சாவானிய சமூகத்தை சாந்த்ரி, அபங்கன் மற்றும் பிரியாய் என்ற மூன்று வகைகளாகப் பிரித்தார். அவரைப் பொறுத்தவரை, சாந்த்ரி ஒரு மரபுவழி விளக்கமான இசுலாத்தைப் பின்பற்றினார்கள். அபங்கன் என்பது இந்து மற்றும் ஆன்மீக கூறுகளை கலக்கும் இசுலாத்தின் ஒத்திசைவான வடிவமாகும். பிரியாயி பிரபுக்களாக இருந்தார் சுல்தான்கள் யோககர்த்தா சுல்தானகம் மற்றும் சுரகர்த்தா சுனானேட் ஆகியவற்றின் அரச அரண்மனைகளான கெரட்டான்கள் சாவானிய கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்வுகளின் மையமாக இருந்தன. தற்போது அவர்கள் ஆளும் மன்னர்கள் அல்ல என்றாலும், அவர்கள் இன்னும் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். குடும்ப அமைப்பு கலாச்சார ரீதியாக, சாவானிய மக்கள் இருதரப்பு உறவினர் முறையை ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களிடையே ஆண் மற்றும் பெண் சந்ததியினருக்கு சமமான முக்கியத்துவம் உள்ளது.[1][2] எனவே, இந்தியா அல்லது சீனாவில் தந்தைவழி கலாச்சாரங்கள் போன்ற ஆண் வாரிசுகளைக் கொண்டிருப்பதில் முன்னுரிமை இல்லை. சாவானியர்களுக்கு ஒரு குடும்பப்பெயர் இருப்பது வழக்கம் அல்ல. பெண்கள் அதிக அளவு சுயாட்சியைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் சாவானிய கலாச்சாரத்தில் மதிக்கப்படுகிறார்கள். ஒரு பாரம்பரிய திருமணத்தில், மணமகனின் குடும்பமே தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்புகளில் இருந்து மணமகளைத் தேர்ந்தெடுக்கிறது. திருமணத்திற்கு முன்பு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் குடும்பத்திற்கு ஒரு தொகையை வரதட்சணையாக வழங்குவார்கள். அதன்பிறகு, திருமணத்திற்கு தேவையான பணம் அனைத்துக்கும் மணமகளின் குடும்பமே பொறுப்பை ஏற்கிறது. மணமகனின் குடும்பத்தினர் நிதி ரீதியாக உதவலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. பாரம்பரியமாக, விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் கணவர் இரண்டாவது மனைவியை ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது. இளம் சாவானியர்கள் பொதுவாக இந்த பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதில்லை. இன்று பெரும்பாலான சாவானிய பெண்கள் கணவனின் துரோகத்தை எதிர்த்து விவாகரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். விவாகரத்து சாவகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மொழி சாவகம் ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இந்தோனேசியாவின் பிற மொழிகளுடன் நெருக்கமாக தொடர்புடையது. ஆனால் வேறுபட்டது. குறிப்பாக இலக்கிய சாவானிய மொழியில் காணப்படும் கிட்டத்தட்ட எங்கும் நிறைந்த சமசுகிருத கணக்குகளின் எண்ணிக்கைக்கு இது குறிப்பிடத்தக்கது. சாவகத்தில் இந்து மற்றும் பௌத்த தாக்கங்களின் நீண்ட வரலாறே இதற்குக் காரணம். சாவகத்தில் பெரும்பாலான சாவானியர்கள் இருமொழி பேசுபவர்களாக இருக்கின்றனர். இந்தோனேசிய மொழி மற்றும் சாவகம்ஆகியவற்றில் சரளமாக பேசக்கூடியவர்கள். சுமார் 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு பொது வாக்கெடுப்பில், சுமார் 12% சாவகத்தினர் இந்தோனேசிய மொழியைப் பயன்படுத்தினர். சுமார் 18% பேர் சாவகம் மற்றும் இந்தோனேசிய மொழி ஆகிய இரண்டையும் பயன்படுத்தினர், மீதமுள்ளவர்கள் சாவக மொழியை பிரத்தியேகமாக பயன்படுத்தினர். சாவக மொழி பொதுவாக ஹனாசரகா அல்லது கரக்கன் என்று அழைக்கப்படும் பிராமி எழுத்து முறையிலிருந்து வந்த எழுத்துக்களுடன் எழுதப்பட்டது. இந்தோனேசியா சுதந்திரம் அடைந்த பிறகு அது லத்தீன் எழுத்துக்களின் ஒரு வடிவமாக மாற்றப்பட்டது. இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக சாவகம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சாவானியர்கள் பெரும்பான்மையாக உள்ள பிராந்தியங்களில் இது 'பிராந்திய மொழி' என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த மொழியை ஒரு 'இன மொழியாகவும்' பார்க்க முடியும். ஏனெனில் இது சாவக இன அடையாளத்தின் வரையறுக்கும் பண்புகளில் ஒன்றாகும். தொழில்கள் இந்தோனேசியாவில், அனைத்து தொழில்களிலும், குறிப்பாக அரசாங்கத்திலும் இராணுவத்திலும் சாவானியர்களைக் காணலாம். விவசாயம் பாரம்பரியமாக, பெரும்பாலான சாவானியர்கள் விவசாயிகள். சாவகத்தில் உள்ள வளமான எரிமலை மண் காரணமாக இது குறிப்பாக பொதுவானதாக இருக்கிறது. நெல் மிக முக்கியமான விவசாயப் பொருள் ஆகும். 1997 ஆம் ஆண்டில், இந்தோனேசிய பயிர் உற்பத்தியில் சாவகம் 55% உற்பத்தி செய்ததாக மதிப்பிடப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் சிறு அளவிலான நெல் வயல்களில் வேலை செய்கிறார்கள். சுமார் 42% விவசாயிகள் 0.50 ஹெக்டேருக்கு குறைவான நெல் வயல்களை பயிரிடுகின்றனர்.[1] மழைக்காலம் குறைவாக இருக்கும் இடத்தில் மண் குறைந்த வளம் கொண்ட பிராந்தியத்தில், மரவள்ளி போன்ற பிற முக்கிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இசை கேம்லான் இசைக் குழுக்கள் சாவகம் மற்றும் பாலி இரண்டிலும் காணப்படுகின்றன. இந்த கலைவடிவங்கள் அனைத்தும் சாவானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்குள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. உணவு முறைகள் தீவின் பிரதான உணவான அரிசியில் சாவானிய உணவு மற்றும் கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சாவானியர்களில் ஒருவர் இன்னும் அரிசி சாப்பிடவில்லை என்றால், உணவு உண்ணக்கூடாது என்று கருதப்படுகிறது. சாவானியர்களை ரொட்டி உண்ணும் வெளிநாட்டவர்களுடனும் (ஐரோப்பியர்கள்) மற்ற தீவில் வசிப்பவர்களுடனும் கிழங்கை உண்ணும் (உதாரணமாக மொலுக்கன்கள்) அடையாளப் படுத்தலாம். அரிசி வளர்ச்சி மற்றும் செழுமையின் சின்னமாகவும் உள்ளது. அதே நேரத்தில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் கிழங்கு வறுமையுடன் தொடர்புடையது. சாவானிய உணவுகள் பிராந்தியங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. கிழக்கு சாவானிய உணவுகள் அதிக உப்பு மற்றும் சூடான உணவுகளை விரும்புகின்றன நடு சாவகத்தினர் இனிப்பு உணவுகளை விரும்புகிறார்கள். மேற்கோள்கள் இந்தோனேசியப் பண்பாடு
682793
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE
சுதர்சன் குமார் பிர்லா
சுதர்சன் குமார் பிர்லா (Sudarshan Kumar Birla) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபராவார். எச். கே. பிர்லா (பிறப்பு 1934) என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1934 ஆம் ஆண்டில் இந்தியாவின் தொழில்துறையும் சமூக வரலாறும் இணைந்த பிர்லா குடும்பத்தில் இவர் பிறந்தார். ஒரு தொழிலதிபராகவும் பிர்லா குடும்பத்தின் மூத்த உறுப்பினராகவும் இவர் கருதப்படுகிறார். திக்சாம் விஜய் வூல் தொழிற்சாலை , மைசூர் சிமென்ட்டு, பிர்லா ஈசுடர்ன், நபின் தொழிற்சாலை , எக்சுப்ரோ இந்தியா போன்ற பல நிறுவனங்களைக் கொண்டிருந்த எசு. கே. பிர்லா குழுமத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார். இலட்சுமி நிவாசு பிர்லாவின் மகனும், ஜி. டி. பிர்லாவின் மூத்த பேரனும் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எசு. கே. பிர்லா குழுமத்தில் கட்டுப்பாட்டு பங்குகளை அவர் தொடர்ந்து வைத்திருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் குழுமத்தின் பொறுப்பை தனது மகன் சித்தார்த் பிர்லாவிடம் வழங்கினார். 1990 ஆம் ஆண்டு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1934 பிறப்புகள் இந்தியத் தொழிலதிபர்கள்
682794
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE
இலட்சுமி நிவாசு பிர்லா
இலட்சுமி நிவாசு பிர்லா (Lakshmi Niwas Birla) இந்தியாவின் பிர்லா குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராகவும், புகழ்பெற்ற தொழிலதிபர், பரோபகாரர், எழுத்தாளர் மற்றும் கலை நிபுணராகவும் பன்முகங்களுடன் அறியப்படுகிறார். கன்சியாம் தாசு பிர்லா மற்றும் அவரது முதல் மனைவி துர்காதேவியின் மூத்த மகன் இலட்சுமி நிவாசு பிர்லா ஆவார். பின்னர் இவரை இயூகல் கிசோர் பிர்லா தத்தெடுத்தார். இவர் சுசிலா தேவியை மணந்தார், 1934 ஆம் ஆண்டில் நடந்த திருமணத்திற்குப் பின்னர் சுதர்சன் குமார் பிர்லா என்ற ஒரு மகனைப் பெற்றார். 1951 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை தலைவராகவும், 1967 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் இவர் பணியாற்றினார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பல புத்தகங்களை எழுதினார். புகழ்பெற்ற கலை நிபுணராகவும் இருந்தார். இந்து கோயில்களைக் கட்டுவதற்காக பணத்தை நன்கொடையாக வழங்கினார். டர்பனில் உள்ள இந்து கோயிலின் சிலைகள் இவரது நன்கொடைகளிலிருந்து வாங்கப்பட்டன. 1941 ஆம் ஆண்டில் இந்தி உயர்நிலைப் பள்ளி என்றும் அழைக்கப்படும் பிர்லா உயர்நிலைப்பள்ளியை நிறுவினார். மேற்கோள்கள் இந்தியப் புரவலர்கள் இந்தி எழுத்தாளர்கள் 1994 இறப்புகள் 1909 பிறப்புகள் இந்தியத் தொழிலதிபர்கள் நாடுகள் வாரியாகத் தொழிலதிபர்கள் இந்தியாவின் முக்கிய குடும்பங்கள்
682795
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
துளசி கப்பார்டு
துளசி கப்பார்டு (Tulsi Gabbard) (பிறப்பு: ஏப்ரல் 12, 1981), ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும் ஆவார். இவர்1999 முதல் 2022 முடிய ஜனயாகக் கட்சியிலும்; பின்னர் 2024 முதல் குடியரசு கட்சியிலும் பணி செய்துள்ளார். துளசி கப்பார்டு ஹவாய் மாநிலத்தின் சார்பாக ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவையில் 2002 முதல் 2004 முடிய மற்றும் சனவரி 3, 2013 முதல் சனவரி 3, 2021 வரை பதவி வகித்தவர். துளசி கப்பார்டு 2011 முதல் 2012 வரை ஹொனலுலு நகர் மன்ற உறுப்பினராகவும்; 2013 முதல் 2016 முடிய ஹவாய் மாநில ஜனநாயகக்கட்சியின் தேசியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.ஐக்கிய் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட டோனால்ட் டிரம்ப் அமைச்சரவையில், துளசி கப்பார்டு, அமெரிக்க தேசியப் புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்படுவார் என்று ஊகிக்கப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tulsi Gabbard on the issues – TulsiGabbard.org Tulsi Gabbard அமெரிக்கப் பெண்கள் 1981 பிறப்புகள் வாழும் நபர்கள் அமெரிக்க அரசியல்வாதிகள் அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள் பெண் அரசியல்வாதிகள்
682796
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29
போர்ஸ் ஒன் (மகாராட்டிரம்)
போர்ஸ் ஒன் (Force One) (மராத்தி: बळ एक) தேசிய பாதுகாப்புப் படை போன்று மகாராட்டிரம் மாநிலத்தில், குறிப்பாக மும்பை மாநகரத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு சிறப்புக் காவல் பிரிவாகும். 2008 மும்பையில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, 26 நவம்பர் 2010 அன்று போர்ஸ் ஒன் தீவிரவாத எதிர்ப்புப் படை தொடங்க காரணமாயிற்று. போர்ஸ் ஒன் படைப்பிரிவுக்கு, மகாராட்டிரா காவல் துறையில் பணியாற்றும் 28 முதல் 35 வயது வரை உள்ள, விவேகமும்; துடிப்பும் நிறைந்த 300 இளம் அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்டு போர்ஸ் ஒன் படை நிறுவப்பட்டுள்ளது. இதன் தலைமையிடம் மும்பையில் உள்ளது..போர்ஸ் ஒன் படையின் தலைவராக மகாராட்டிரா காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் இகாப செயல்படுவார். இப்படையினருக்கு தீவிரவாதிகளை எதிர் கொள்ளத்தக்க வகையில் சிறப்புத் துப்பாக்கிகள், மார்புக் கவசங்கள், இருட்டில் பார்க்கும் கண் கண்னாடிகள், விரைவு வாகனங்கள் மற்றும் கையெறி குண்டுகள் பயிற்சிகள் வெடி குண்டுகளை கையாளவும், தொலைதொடர்பு வசதிகளை தற்காலிகமாக துண்டிக்கவும் இப்படையினருக்கு புனேவில் பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும் இப்படைகள் இந்திய இராணுவத்துடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்கிறது. இதனையும் காண்க சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்) பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு) பயங்கரவாத எதிர்ப்புப் படை (மேற்கு வங்காளம்) மேற்கோள்கள் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள் மும்பை
682799
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
கோ. வித்யராசு
கோ. வித்யராசு (G. Vidyaraj) என்பவர் ஓய்வு பெற்ற இரத்தின சேகரிப்பாளர் ஆவார். ராஜரத்னா ரூபி மற்றும் நீலாஞ்சலி ரூபி உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினங்களை இவர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அம்பி விசயநகர் அரச ஆட்சியாளர்களின் நேரடி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவ்விடத்திலிருந்து தான் மாணிக்கங்கள் மற்றும் இரத்தினங்கள் கண்டறியப்பட்டதாக கூறுகிறார். மேற்கோள்கள் இந்திய சேகரிப்பாளர்கள் வாழும் நபர்கள்
682802
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE
ஆசம் சா
சாகேப்சாதா மிர் இமாயத் அலி கான் சித்திக் ஆசம் சா (Sahebzada Mir Himayat Ali Khan Siddiqi Azam Jah) (22 பிப்ரவரி 1907 - 9 அக்டோபர் 1970) ஐதராபாத் இராச்சியத்தின் கடைசி நிசாம் ஓசுமான் அலி கான் மற்றும் அவரது மனைவி ஆசம் உன்னிசா பேகம் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். வாழ்க்கை 1936 ஆம் ஆண்டில், இவருக்கு பேரரின் இளவரசர் என்ற பட்ட்டம் வழங்கப்பட்டது. ஐதராபாத் இராச்சியத்தின் வடக்கில் இருந்த மாகாணம் ஆகும். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு நிரந்தரமாக குத்தகைக்கு விடப்பட்டு அவர்களால் நிர்வகிக்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் ஆசம் சா, ஓசுமான் இல்லத்தின் உறுப்பினரும் (முன்னர் உதுமானியப் பேரரசு), கடைசி உதுமானிய கலீபாவான இவர், உதுமானிய கலீபகத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல்மசித்தின் ஒரே மகளான துருசேவர் சுல்தானை 1932 நவம்பர் 12 அன்று நீஸ் நகரில் மணந்தார். திருமணத்திற்கு பல்வேறு இந்திய இளவரசர்ளும் வந்திருந்தனர். இரண்டு மகன்களைப் பெற்ற பிறகு 1954 ஆம் ஆண்டில் தம்பதியினர் மணமுறிவு பெற்றனர். இவர் ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் அருகேயுள்ள பெல்லா விஸ்டா என்ற 10 ஏக்கர் (40,000 சதுர மீட்டர்) பரப்பளவில் உள்ள அரண்மனையில் வசித்து வந்தார். தொண்டுப் பணிகள் இலண்டன் மத்திய மசூதி என்று இப்போது அழைக்கப்படும் நிசாமியா பள்ளிவாசலுக்கு ஆசப் சா நன்கொடை அளித்தார். ஜூன் 4,1937 வெள்ளிக்கிழமை அடிக்கல் சூட்டப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Time magazine feature The Hindu: "When marriage brought continents closer" இந்தியாவின் நவாப்கள் 1970 இறப்புகள் 1907 பிறப்புகள் Webarchive template wayback links ஐதராபாத் இராச்சியம் ஐதராபாத் இராச்சிய நபர்கள்
682803
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
புடு சென்ட்ரல்
புடு சென்ட்ரல் அல்லது புடுராயா (ஆங்கிலம்; மலாய்: Pudu Sentral; என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையம், புடு, புடு சாலையில் உள்ள பேருந்து நிலையம் ஆகும். கோலாலம்பூரின் பழமையான பேருந்து நிலையங்களில் புடு சென்ட்ரல் நிலையமும் ஒரு நிலையம் என அறியப்படுகிறது. முன்பு இந்த நிலையம், புடுராயா முனையம் (ஆங்கிலம்: Puduraya Terminal; மலாய்: Hentian Puduraya) என அழைக்கப்பட்டது. 1976-இல் திறக்கப்பட்ட இந்த நிலையத்திற்கு, தற்போது நீண்ட தூரப் பேருந்துகள் வந்து செல்வதில்லை. அதற்கு மாறாக அவை பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் (Bandar Tasik Selatan Integrated Transport Terminal) எனும் பல்வகை போக்குவரத்து முனையத்திற்குச் செல்கின்றன. வரலாறு புடு சென்ட்ரல் (புடுராயா) 1976-இல் செயல்படத் தொடங்கியது. 2006-ஆம் ஆண்டில், ஏறக்குறைய RM 3 ரிங்கிட் மில்லியன் (அமெரிக்க டாலர் $ 817,000) செலவில் புதுப்பிக்கப்பட்டது. மே 2009-இல் பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் திறக்கப் பட்டதன் மூலம், புடு சென்ட்ரல் நிலையம், கோலாலம்பூர் நகரப் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்களுக்கு மட்டுமே சேவை செய்கிறது. இன்றைய காலக் கட்டத்தில், மேற்கு மலேசியாவின் தொலைதூர நகரங்களுக்குச் செல்லும் விரைவுப் பேருந்துகள் புடுராயாவிற்கு வருவது இல்லை. சனவரி 1, 2011 அன்று பண்டார் தாசேக் செலாத்தான் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் (ITT BTS) திறக்கப்பட்ட பிறகு, புடுராயா பேருந்து நிலையத்திற்கு அருகே போக்குவரத்து நெரிசல்கள் குறைந்தன. கோலாலம்பூர் நகர்ப்புற மாற்ற மையம் முன்பு காலத்தில், புடு சென்ட்ரலைப் பயன்படுத்தி வந்த கோலாலம்பூரின் பெரும்பாலான நீண்ட தூரப் பேருந்துகளுக்கு, பண்டார் தாசேக் செலாத்தான் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் சேவைகளை வழங்கி வருகிறது. RM 52.7 மில்லியன் ரிங்கிட் செலவில் பாரிய சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 16 ஏப்ரல் 2011 அன்று புடுராயா மீண்டும் திறக்கப்பட்டது. 27 ஆகஸ்டு 2011 அன்று, புடுராயா பேருந்து முனையம் அதன் நவீனத் தோற்றத்திற்கு ஏற்ப புடு சென்ட்ரல் என மறுபெயரிடப்பட்டது. அதன் பின்னர், 23 செப்டம்பர் 2012 அன்று, இந்த நிலையம், கோலாலம்பூரின் நகர்ப்புற மாற்ற மையமாக (Urban Transformation Centre) மாற்றம் கண்டது. பல்வகை போக்குவரத்து முனையம் 9-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம், தீபகற்ப மலேசியாவில் தெற்கு நோக்கிச் செல்லும் விரைவுப் பேருந்து; தொடருந்துகளுக்கான போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோலாலம்பூர் சென்ட்ரல்; புடு சென்ட்ரல் ஆகிய நிலையங்களுக்குச் சென்ற பேருந்துகள் 2011-ஆம் ஆண்டில் இருந்து பண்டார் தாசேக் செலாத்தான் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. RM 570 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பல்வகை போக்குவரத்து முனையம், 1 சனவரி 2011 முதல் இயங்குகிறது. பண்டார் தாசேக் செலாத்தான் முனையம், ஒரே ஓர் ஒருங்கிணைந்த மையமாக இல்லாமல், மூன்று வெவ்வேறு நிலையங்களாக அருகருகே அமைக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து புடு சென்ட்ரல் பேருந்து முனையத்தை பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்; மெர்டேகா எம்ஆர்டி நிலையம் ஆகிய நிலயங்களில் இருந்து அணுகலாம். காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official Pudu Sentral website மலேசிய நகரங்கள் கோலாலம்பூர் கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள் மலேசியாவில் பேருந்து போக்குவரத்து
682804
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93.%20%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
ஓ. பி. நய்யார்
ஓம்கார் பிரசாத் நய்யார் (Omkar Prasad Nayyar) (16 ஜனவரி 1926 - 28 ஜனவரி 2007) ஒரு இந்தியத் திரைப்படத்துறையைச் சேர்ந்த இசையமைப்பாளரும், பாடகர்-பாடலாசிரியரும், இசைத் தயாரிப்பாளரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இந்தித் திரையுலகின் மெல்லிசை இசை அமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். நயா தௌர் படத்திற்காக 1958 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். நய்யார் பாடகிகளான கீதா தத், ஆஷா போஸ்லே, முகமது ரபி ஆகியோருடன் அதிகம் பணியாற்றினார். இருப்பினும் பாலிவுட்டின் முன்னணி பெண் பாடகி லதா மங்கேஷ்கருடன் ஒருபோதும் பணியாற்றவில்லை. பிரபல பாடகராக மாறுவதற்கு முன்பே கிஷோர் குமாரை அங்கீகரித்திருந்தார். பாப் ரே பாப் (1955), ராகினி (1958) போன்ற திரைப்படங்களில் கிஷோர் குமாரின் வெற்றிப் படங்களில் அடங்கும். ஆனால் இந்த உறவு நிலைக்கவில்லை. நய்யாருக்கு, இந்துத்தானி இசையிலுள்ள பிலு இராகம் மிகவும் பிடித்த ராகம் ஆகும். இது கருநாடக இசையின் காபி இராகத்திற்கு சமமானது. இது இறுதியில் இவரது பெரும்பாலான பாடல்களுக்கு ஆதாரமாக இருந்தது. இறப்பு நய்யார் மாரடைப்பால் 2007 ஜனவரி 28 அன்று இறந்தார். நய்யாரின் மறைவைத் தொடர்ந்து லதா மங்கேஷ்கர், ஷர்மிளா தாகூர், மும்தாஜ், மகேசு பட், முகமது சாகுர் கயாம், சக்தி சமந்தா, சோனு நிகம், ரவீந்திர ஜெயின், அனு மாலிக், பி. ஆர். சோப்ரா மற்றும் சம்மி கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய அஞ்சல் துறையால் 2013 மே 3 அன்று ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இவரது பேத்தி நிகரிகா ரைசாடாவும் ஒரு நடிகை ஆவார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் List of Hindi songs composed by Nayyar Offical website of OP Nayyar Memorial Trust பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் 2007 இறப்புகள் 1926 பிறப்புகள் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
682806
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
சைலேந்திர குமார் சிங்
சைலேந்திர குமார் சிங் (Shilendra Kumar Singh) சுருக்கமாக எஸ். கே. சிங் (24 ஜனவரி 1932 - 1 டிசம்பர் 2009) ஓர் இந்திய இராஜதந்திரி ஆவார். இவர் டிசம்பர் 2004 முதல் செப்டம்பர் 2007 வரை அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகவும், செப்டம்பர் 2007 முதல் இராசத்தானின் ஆளுநராகவும் டிசம்பர் 2009 வரை பணியாற்றினார். இவர், தான் பதவியில் இருக்கும்போதே இறந்தார். சிங் 1989 முதல் 1990 வரை இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக சேருவதற்கு முன்பு, இவர் தில்லியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனமான சிந்தனைக் குழுவின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் 19 ஆகஸ்ட் 2007 அன்று இராசத்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 4 செப்டம்பர் 2007 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக தனது பதவியை விட்டு விலகி, செப்டம்பர் 6 அன்று ராஜஸ்தானின் ஆளுநராகப் பதவியேற்றார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி சிங் முந்தைய ஐக்கிய மாகாணங்களின் ஜமீந்தாரின் மகனும், ஆல்வாரின் முன்னாள் திவானும் ஆவார். பள்ளி மற்றும் கல்லூரி முழுவதும் முதலிடம் பெற்ற இவர், ஆக்ரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஆக்ராவின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவராக இருந்தார். அங்கு இவர் வரலாறு, சமசுகிருதம் மற்றும் இந்தி ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பயின்று வரலாற்றில் முதுகலைப் பட்டமும், சட்டப்பட்டமும் பெற்றார். அதன்பிறகு கேம்பிரிச்சு திரித்துவக் கல்லூரியில் பாரசீக மற்றும் சர்வதேச சட்டத்தைப் படித்தார். சொந்த வாழ்க்கை சிங், மஞ்சு என்பவரை மணந்தார். இவரது இளைய மகன் கனிஷ்கா சிங் இராகுல் காந்தியின் அரசியல் உதவியாளராக உள்ளார். இவரது மூத்த மகன் சசாங்க் சிங் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். தற்போது மும்பையில் முதலீட்டு வங்கியாளராக பணிபுரிகிறார். தொழில் வாழ்க்கை ஆளுநரின் பதவிக்காலம் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்தபோது, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் இறையாண்மை உட்பட்ட பகுதி என்று சிங் உரத்த குரல் கொடுப்பவராக இருந்தார். அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யத் தேவையான உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் போராடினார். மேலும், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்க மாநிலத்தில் ஒரு விமான நிலையத்தை கட்டுவதன் மூலமும், தொடருந்து பாதையை அமைப்பதன் மூலமும், சாலை அமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் இவர் கடுமையாக உழைத்தார். தூதராக தொழில் வாழ்க்கை 1989 பிப்ரவரியில் சிங் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் தனிப்பட்ட தர-I தூதர் பதவியை வகித்தார், இது இந்திய வெளியுறவு சேவையில் மிக உயர்ந்த பதவியாகும். வெளியுறவுச் செயலாளராக சேருவதற்கு முன்பு, இவர் 1985 முதல் 1989 வரை பாக்கிஸ்தானுக்கான இந்தியாவின் தூதராக மிக நீண்ட காலம் பணியாற்றினார். 1982 முதல் 1985 வரை ஆஸ்திரியாவின் தூதராகவும், 1979 முதல் 1982 வரை கூடுதல் வெளியுறவு செயலாளராகவும், 1977 முதல் 1979 வரை ஆப்கானித்தானுக்கான தூதராகவும், 1974 முதல் 1977 வரை ஜோர்தான், லெபனான் மற்றும் சைப்பிரசுக்கு ஒரே நேரத்தில் தூதராகவும் பணியாற்றினார். 1969 முதல் 1974 வரை இந்திய அரசின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்தார். 1968-69 இல் வர்த்தக அமைச்சகத்தில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநராக பணியாற்றினார். சிங் 1954 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1956 முதல் 1959 வரை ஈரானில் மூன்றாவது செயலாளராக இருந்த இவர், அதே நேரத்தில் பாரசீக மொழியைப் படிக்க தெகுரான் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1959 முதல் 1962 வரை தில்லியில் உள்ள வெளியுறவு அலுவலகத்தின் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1962 முதல் 1968 வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் உறுப்பினராக இருந்தார். 77 பேர் கொண்ட குழுவின் தலைவராகவும், வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆளுநர்கள் குழுவில் இந்தியாவின் ஆளுநராகவும் பணியாற்றினார். ஐ. நா பொதுச் சபை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திற்கான 19 இந்திய பிரதிநிதிகள் குழுக்களில் சிங் உறுப்பினராக இருந்துள்ளார். காமன்வெல்த் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, தென்னாப்பிரிக்கா, கென்யா, அல்ஜீரியா, லெசோதோ, மலாவி மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் பொதுத் தேர்தல்கள் மற்றும் இலங்கை அதிபர் தேர்தல்களை சிங் கண்காணித்துள்ளார். சிங் தனது தலைமுறை இந்திய இராஜதந்திரிகளில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். சிங் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் வரலாறு கற்பித்துள்ளார். தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியராகவும், கல்விக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். சிங் சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அடிக்கடி எழுதி வ்ந்தார். இறப்பு சிறுது காலம் நோய்வாய்பட்டிருந்த சிங், தனது 77வது வயதில் 2009 டிசம்பர் 1 அன்று தில்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Profile on Rajasthan Government website Profile on Modern History Project Contact Information Profile on UPIASI website அருணாச்சலப் பிரதேச ஆளுநர்கள் 2009 இறப்புகள் 1932 பிறப்புகள்
682814
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%2017-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையின் 17-வது நாடாளுமன்றம்
இலங்கையின் 17-வது நாடாளுமன்றம் (17th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றம் என்பது 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2024 நவம்பர் 21 இல் இடம்பெறும். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும். தேர்தல் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 61.65% வாக்குகளைப் பெற்று 159 ஆசனங்களுடன் பெருவெற்றி பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி 17.66% வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாகத் தொடர்கிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், புதிய சனநாயக முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றன. கடந்த தேர்தலில் 145 ஆசனங்களைப் பெற்ற இலங்கை பொதுசன முன்னணி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றது. முடிவுகள் மாவட்டம் மேற்கோள்கள் இலங்கை நாடாளுமன்றம்
682815
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இந்திய வான் புலனாய்வு இயக்குநரகம்
வான் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Air Intelligence), இந்திய வான்படையின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இது இந்திய வான்படை செம்மையாக செயல்படுவதற்கு, சரியான நேரத்தில், தந்திரோபாய, செயல்பாட்டுத் தேவைகளுக்கு மற்றும் ஒத்திசைக்கப்பட்ட உளவுத் தகவல்களை வழங்குகிறது. வரலாறு இரண்டாம் உலகப் போரின் போது வான்படை புலனாய்வு இயக்குநரகம் 1942ல் இந்திய வான்படையின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவை ஆக்கிரமித்த ஜப்பானுக்கு எதிராக இந்த வான்படை புலனாய்வு அமைப்பு திறம்பட செயல்பட்ட்டது. இப்புலானாய்வு அமைப்பு மிக்-25 மற்றும் செபிகேட் ஜாகுவார் போன்ற உளவு விமானங்கள் மூலம் பெறப்படும் புகைப்படங்கள் மூலம் புலனாய்வு பணிகளை மேற்கொள்கிறது. 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரின் போது, சோவியத் ஒன்றியம் வழங்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் எல்லைப்பகுதிகளில் சீனத் துருப்புகளின் நடமாட்டத்தை கண்டறிய முடிந்தது. இந்திய விண்வெளித் திட்டங்களால் இந்திய வான்படைக்கு சொந்தமாக உளவு செயற்கைக் கோள்கள், விண்ணில் செலுத்தப்பட்டு, வான் புலனாய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 1999 கார்கில் போரின் போது, வான் புலனாய்வு இயக்குநரகம் சிறப்பாக செயல்பட்டு, எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை எளிதில் அடையாளம் காணப்பட்டு, இந்திய வான்படைகள் அவைக்களை தாக்கி அழிக்க முடிந்தது. இதனையும் காண்க வான்பரப்பு ஆய்வு மையம் இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் பட்டியல் மேற்கோள்கள் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்திய வான்படை
682818
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இரெட்டிணைட்டு
இரெட்டிணைட்டு (Retinite) என்பது ஒரு பிசின் பொருளாகும். குறிப்பாக பழுப்பு நிலக்கரி படுகைகளில் பொன் நிறத்தில் இருக்கும் அம்பரைப்போல தோற்றம் அளிக்கும். ஆனால் சிறிதளவு சக்சினிக்கு அமிலம் கொண்டோ இல்லாமலோ இருக்கும். இது ஒரு பொதுப் பெயராக வசதியாக இருக்கலாம். ஏனெனில் எந்த இரண்டு தனித்தனி தோற்றமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் பெயர்களின் காலவரையற்ற பெருக்கம் காரணமாக அவற்றில் எதுவுமே சரியாக குறிப்பிடப்படவுமில்லை. அது விரும்பப்படவும் வேண்டியதில்லை. இரெட்டிணைட்டில் சக்சினிக்கு அமிலம் இருக்காது. ஆறு முதல் 15 சதவீத ஆக்சிசன் இருக்கும். மேற்கோள்கள் கனிமங்கள் பிசின்கள்
682821
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு
பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு (Punjab Police SWAT Team) இந்தியாவின் பஞ்சாப் மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும்.பஞ்சாப் மாநில காவல்துறையிலிருந்து, இப்படைக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வரலாறு பஞ்சாப் காவல்துறையின் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களை (Special Weapons and Tactics (SWAT) கையாளும், இச்சிறப்புக் காவல்படைப் பிரிவு 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்காவல் படைப் பிரிவு பொதுவாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது.. இப்படைப்பிரிவினர் தேசிய பாதுகாப்புப் படையினர் போன்று பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி பெற்றவர்கள் இதன் அனைத்து வீரர்களும் 28 வயதிற்குட்பட்டவர்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்துப் போராடுவதே இவர்களின் முக்கியப் பணியாகும்.. இப்படையினர் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் சாதனங்கள் குண்டு துளைக்காத கவச வாகனங்கள் குண்டு துளைக்காத மார்பு மற்றும் தலைக்கவசங்கள் சிறுரக வானோலிக் கருவிகள் பாதுகாப்பான ஆடைகள் கலவரக் கட்டுப்பாடு தலைக்கவசங்கள் நச்சி வாயு முகமூடிகள் அதிர்ச்சி தாங்கும் கேடயங்கள் கதிர் வீச்சு ஆயுதங்கள் நச்சு வாயு பீச்சிடும் ஆயுதங்கள் மிளகாய்ப் பொடி வீச்சும் ஆயுதங்கள் ஆயுதங்கள் கைத்துப்பாக்கிகள் இயந்திரத் துப்பாக்கிகள் தாக்குதல் துப்பாக்கிகள் இருட்டிலும் பார்க்கும் கண் கண்ணாடிகள் முக்கிய நடவடிக்கைகள் 27 சூலை 2015 அன்று குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தீனா நகர் காவல் நிலையத்தை சூறையாடிய, இராணுவச் சீருடையில் வந்த, பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவின் மூன்று தீவிரவாதிகளை இப்படையினர் சுட்டுக் கொன்றனர். இதனையும் காண்க சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்) பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு) பயங்கரவாத எதிர்ப்புப் படை (மேற்கு வங்காளம்) போர்ஸ் ஒன் (மகாராட்டிரம்) மேற்கோள்கள் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் இந்திய பஞ்சாப் அரசு இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள்
682827
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D
பஜன் கவுர்
பஜன் கவுர் (Bhajan Kaur, பிறப்பு 26 ஆகத்து 2005) என்பவர் அரியானாவைச் சேர்ந்த இந்திய வில்வித்தை வீராங்கனை ஆவார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வில்வித்தை அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோருடன் இணைந்து, இந்திய மகளிர் வில்வித்தை அணிக்கு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். வெண்கலப் பதக்கத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் இந்திய முத்தரப்பு 6-2 என்ற கோல் கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தியது. 16 சூன் 2024 அன்று, துருக்கியின் அணதோலியாவில் நடந்த ஒலிம்பிக் இறுதி தகுதிச் சுற்றில் தங்கம் வென்றார். 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். துவக்ககால வாழ்க்கை கவுர் அரியானா மாநிலம், சிர்சா மாவட்டம், எலெனாபாதைச் சேர்ந்தவர். எலனாபாத்தில் உள்ள நாச்சிகேதன் பொதுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் என்ற அரசு சாரா அமைப்பினால் ஆதரிக்கப்படுகிறார். இவரது தந்தை பகவான் சிங் ஒரு விவசாயி, இவருக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர். 2024 கோடை ஒலிம்பிக் 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த கோடைகால ஒலிம்பிக் 2024 கோடை ஒலிம்பிக்கில் கவுர் தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர் பெண்களுக்கான தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்றுக்கு முன்னேறினார். இருப்பினும், ஷூட்-ஆஃப் போட்டியில் அவர் 5-6 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் டயானந்தா சொய்ருனிசாவிடம் தோற்றார். மகளிர் அணியில் அங்கிதா பகத், தீபிகா குமாரியுடன் கவுர் காலிறுதிக்கு முன்னேறினார். எனினும், அந்த அணி 0-6 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது தோற்றது. மேற்கோள்கள் வாழும் நபர்கள் 2005 பிறப்புகள் இந்திய வில்வித்தை வீரர்கள்
682828
https://ta.wikipedia.org/wiki/1%2C2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D
1,2-புரோப்பேன்யிருதயோல்
1,2-புரோப்பேன்யிருதயோல் (1,2-Propanedithiol) என்பது C3H8S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். HSCH2CH(SH)CH3 என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் இச்சேர்மம் 1,2-டைமெர்காப்டோபுரோப்பேன் என்றும் 1,2-புரோப்பேன் டைதயோல் என்றும் அழைக்கப்படுகிறது. தயோல் சேர்மமான இது நிறமற்றதாகவும் தீவிர மணம் கொண்டும் ஒரு நீர்மமாகக் காணப்படுகிறது. நாற்தொகுதி மையம் கொண்ட ஓர் எளிய இருதயோல் சேர்மத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டுமாகும். 1,2-ஈத்தேன் டைதயோல், 2,3-இருமெர்காப்டோ-1-புரோப்பேன்சல்போனிக் அமிலம், புரோப்பேன்-1,3-டைதயோல் ஆகியவை 1,2-புரோப்பேன்யிருதயோலுடன் தொடர்பு கொண்ட சேர்மங்களாகும். எப்பிசல்பைடுடன் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 1,2-புரோப்பேன்யிருதயோல் உருவாகிறது. இதன் ஒளிவிலகல் குறியீட்டு எண் = 1.531-1.541 ஆகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தயோல்கள் கரிமச் சேர்மங்கள்
682830
https://ta.wikipedia.org/wiki/3-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%90%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம்
3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம் (3-Hydroxyisobutyric acid) என்பது C4H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். 3-ஐதராக்சி-2-மெத்தில்புரோப்பனாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. வாலின் என்ற ஆல்பா அமினோ அமிலத்தின் வளர்சிதைமாற்றத்தில் இது ஓர் இடைநிலைச் சேர்மமாகும். நாற்தொகுதி மையச் சேர்மமான இதற்கு இராண்டு ஆடியெதிர் உருக்கள் உள்ளன. அவை டி-3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம், எல்-3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம் என்பனவாகும். மேலும் காண்க 2-ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம் மேற்கோள்கள் பீட்டா ஐதராக்சி அமிலங்கள் கரிமச் சேர்மங்கள்
682831
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மென்செதில் மலைச் சாரைப் பாம்பு
மென்செதில் மலைச் சாரைப் பாம்பு (smooth-scaled mountain rat snake) என்று அழைக்கப்படும் தையாசு லூசோனென்சிசு (Ptyas luzonensis), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த சாரைப்பாம்பு சிற்றினமாகும். இந்தப் பாம்பு மலைப்பாங்கான பகுதியில் வாழ்கிறது. ஆனால் இவை வேட்டையாடவும் தண்ணீர் குடிக்கவும் நீரோடைகளுக்கும் ஆறுகளுக்கும் செல்கின்றன. இவற்றின் விருப்பமான அல்லது பொதுவான இரையாகத் தவளைகள் உள்ளன. ஆனால் இவை கொறித்துண்ணிகள், வெளவால்கள், பல்லிகளையும் உண்ணுகின்றன. இந்த வகைப் பாம்பு 6 முதல் 8 அடி நீளம் வரை வளரக்கூடியது. சொற்பிறப்பியல் லூசோனென்சிசு என்ற குறிப்பிட்ட பெயர், இதன் கண்டுபிடிப்பு இடமான லூசோனைக் குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது. புவியியல் வரம்பு தையாசு லூசோனென்சிசு பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். அங்கு இது நீக்ரோசு, லூசோன், பனாய், பொலில்லோ தீவுகளில் காணப்படுகிறது. மேற்கோள்கள் மேலும் வாசிக்க Günther, 1873 : Notes on some reptiles and batrachians obtained by Dr. Adolf Bernhard Meyer in Celebes and the Philippine Islands. Proceedings of the Zoological Society of London, vol. 1873, p.165-17 (Full text). பிலிப்பீனிய உயிரினங்கள் ஊர்வன சாரைப்பாம்புகள்
682833
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சீன சாரைப்பாம்பு
சீன சாரைப்பாம்பு (Chinese rat snake) அல்லது இந்தோ-சீன சாரைப்பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் தையாசு கோரோசு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு கொளுப்பிரிடே குடும்ப பாம்பு சிற்றினமாகும். விளக்கம் இந்தப் பாம்பின் மூக்கு நீளமானது, கண்கள் மிகவும் பெரியவை. முன் பகுதியிலிருந்து நெற்றிப்பகுதியினைக் காணலாம், மூக்கு இடைவெளி சிறியது, இரண்டு அல்லது மூன்று லோரியல் குழிகளுடையது. முதுகுப்புறமுள்ள செதில்கள் மென்மையானவை, முன்பகுதியில் தளர்வாக இணைக்கப்பட்டிருக்கும், 15 வரிசைகளில் நடுப்பகுதியில் காணப்படும், வயிற்றுப்பகுதியில் 160 முதல் 177 வரையிலும், குதப்பகுதியில் பிரிக்கப்பட்டும், வாலடியில் 122 முதல் 145 வரை காணப்படும். உடலின் பின்புறத்திலும் வால் பகுதியிலும் உள்ள செதில்கள் மேற்பகுதியில் பழுப்பு அல்லது ஆலிவ் நிறத்திலும் பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலும் கருப்பு நிற விளிம்புடன் காணப்படும். கீழ் பரப்பு மஞ்சள் நிறத்திலானது. இளம் பாம்புகளில் வட்டமான வெள்ளை புள்ளிகள் அல்லது குறுகிய மஞ்சள் குறுக்கு கோடுகள் காணப்படும். உடல் நீளம் தலையிலிருந்து 1080 மி.மீ. வாலின் நீளம் 700 மி.மீ. பரவல் நேபாளம், மியான்மர், கம்போடியா, சீனா (ஜெஜியாங், ஜியாங்சி, புஜியான், குவாங்டாங், ஹைனான், குவாங்சி, ஹுனான், யுன்னான், ஆங்காங், தைவான், இந்தியா (அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் (நாம்டாபா-சாங்லாங் மாவட்டம், செசா, சிம்பு, இட்டாநகர்-பாபும் பரே மாவட்டம்) திரிபுரா, வங்களாதேசம், இந்தோனேசியா (சுமாத்திரா, போர்னியோ, சாவகம், பாலி, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், மேற்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் தீவு). மேற்கோள்புகள் மேலும் வாசிக்க அஹ்சன், எம். ஃபரித் மற்றும் ஷைலா பர்வீன். 2001. பங்களாதேஷில் இருந்து Ptyas Korros (Colubridae) முதல் பதிவு. ஆசியப் பெர்பட்டாலஜிக்கல் ஆராய்ச்சி 9: 23-24. ஜான், ஜி., மற்றும் எஃப். சோர்டெல்லி. 1867. Iconography Générale des Ophideens: விங்-குவாட்ரியம் லிவ்ரெய்சன். பில்லியர். பாரிஸ். குறியீடு + தட்டுகள் I-VI. (கோரிஃபோடான் கோரோஸ், தட்டு IV. படம் 2. லேசல், ஜே. டி. 1998. உருவவியல் மற்றும் பாம்பு இனமான Ptyas இன் நிலை. Herpetological Review 29 (3:134). ஷ்லெகல், எச். 1837. சர்ப்பங்களின் உடலியல் பற்றிக் குறிப்பிடுங்கள். கட்சி பொது xxviii + 251 pp. + கட்சி விளக்கம் 606 + xvi pp. ஆம்ஸ்டர்டாம். வெளி இணைப்புகள் Ptyas korrosஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம் தாய்லாந்தில் உள்ள பியாஸ் கோரோஸ் இந்திய ஊர்வன சாரைப்பாம்புகள்
682834
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம்
கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் அல்லது கெரிஞ்சி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Kerinchi LRT Station; மலாய்: Stesen LRT Kerinchi; சீனம்: 轻轨科林芝站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவின் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. பொது கோலாலம்பூர், பங்சார், பந்தாய் பாரு சாலைக்கு அருகிலுள்ள பிளாசா பந்தாய் (Plaza Pantai) எனும் வணிக வளாகத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம் செரி தாஸ்மேஸ் தனியார்ப் பள்ளி, பங்சார் தேசியப் பள்ளி, பந்தாய் காவல் நிலையம், செரி முத்து மாரியம்மன் கோயில், விசுமா யுஓஏ பந்தாய், டெலிகாம் கோபுரம், அர்-ரகா கம்போங் கெரிஞ்சி பள்ளிவாசல், தெற்கு பங்சார் மற்றும் மலேசிய வானொலி தொலைக்காட்சி (ஆர்டிஎம்) அங்காசாபுரி வளாகத்திற்கும் அருகில் உள்ளது. . கம்போங் கெரிஞ்சி நிலையத்தின் பெயரான கெரிஞ்சி என்பது கம்போங் கெரிஞ்சி எனும் கிராமப் பகுதியில் இருந்து பெறப்பட்டது. கம்போங் கெரிஞ்சி, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரப் பகுதியாகும். இந்தப் புறநகரம், லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. பங்சார் பெருநகரப் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்தப் புறநகர்ப் பகுதி, டெலிகாம் கோபுரம் (Menara Telekom) மற்றும் மிட் வேலி மெகாமாலுக்கு (Mid Valley Megamall) அருகில் அமைந்துள்ளது; அருகிலுள்ள மற்ற குறிப்பிடத்தக்க அடையாளங்கள் அங்காசாபுரி கட்டிடம் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் ஆகும். செரி அங்காசா விசுதா அங்கசா (Vista Angkasa) அடுக்குமாடி குடியிருப்புகள், கம்போங் கெரிஞ்சி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் செரி அங்காசா (Sri Angkasa) அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை அருகாமையில் இருக்கும் குடியிருப்புத் திட்டங்களாகும். இந்த நிலையம் செரி அங்காசா, பங்சார், கம்போங் கெரிஞ்சி பகுதிகளுக்குச் சேவை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. அமைப்பு கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான கட்டுமானமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. கம்போங் கெரிஞ்சி குடியிருப்புப் பகுதிகள்; கிளானா ஜெயா வழித்தடத்தின் கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் (Kerinchi LRT Station); யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் (Universiti LRT Station); ஆகியவற்றுடன் பாதசாரி பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் காட்சியகம் மேலும் காண்க பங்சார் கம்போங் கெரிஞ்சி கிளானா ஜெயா வழித்தடம் கோத்தா டாமன்சாரா மலேசிய தொடருந்து போக்குவரத்து மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682835
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
சித்தரஞ்சன் கல்லூரி
சித்தரஞ்சன் கல்லூரி (Chittaranjan College) என்பது 1967இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும். மத்திய கொல்கத்தாவில் உள்ள கல்லூரி தெரு பகுதியில் உள்ள ஓர் இளங்கலை கல்லூரி ஆகும். இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. துறைகள் கலை மற்றும் வணிகம் வங்க மொழி ஆங்கிலம் இந்தி உருது கல்வியியல் வரலாறு அரசியல் அறிவியல் தத்துவவியல் வணிகவியல் அங்கீகாரம் சித்தரஞ்சன் கல்லூரி புது தில்லியிலுள்ள, பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் காண்க கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல் இந்தியாவில் கல்வி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சித்தரஞ்சன் கல்லூரி Coordinates on Wikidata கொல்கத்தாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்
682836
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
யுகவாரலைட்டு
யுகவாரலைட்டு (Yugawaralite) என்பது CaAl2Si6O16 · 4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது சியோலைட்டு குழுவின் தெளிவான இளஞ்சிவப்பு நிற கனிமமாகும். சப்பான் நாட்டின் யுகவாரா நகரத்திற்கு அருகிலுள்ள சில வெந்நீரூற்று நீர்வீழ்ச்சிக்கு அருகில் சகுராய் மற்றும் அயாசி (1952) ஆகியோரால் இக்கனிமம் முதலில் விவரிக்கப்பட்டது. பெயர்க்காரணம் யுகவாரா நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் கனிமத்திற்கு யுகவாரலைட்டு எனப் பெயரிடப்பட்டது. அமைவிடம் யுகவாரலைட்டு கனிமம் சப்பான் போன்ற புவிவெப்பம் செயலில் உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. சப்பானில் யுகவாரலைட்டு கனிமம் ஒன்சூ தீவிலுள்ள யுகவாரலைட்டு நகரத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் இது சிறிய அளவில் காணப்படுகிறது. வாசிங்டன், அலாசுகா, அமெரிக்காவின் மஞ்சக்கல் தேசிய பூங்கா, பிரிட்டிசு கொலம்பியா, ஐசுலாந்து, சார்தீனியா மற்றும் இரீயூனியன் தீவு ஆகியவை இது கண்டுபிடிக்கப்பட்ட பிற இடங்களாகும். அலாசுகா அலாசுகாவில், அலாசுகாவின் பேர்பேங்க்சு நகரத்திற்கு கிழக்கே 40 மைல் (64 கிமீ) தொலைவில் யுகவாரலைட்டு கனிமம் காணப்படுகிறது. இந்த தளத்தில், யுகவாரலைட்டு 8 மில்லிமீட்டர்கள் (0.31 அங்குலம்) நீளம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. சப்பான் யுகவாரா நகரத்தில் புடோ நீர்வீழ்ச்சியில் நியோச்சீன் அடுக்கில் இப்படிகங்கள் காணப்படுகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சியோலைட்டுகள் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
682838
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87
முகுந்த் துபே
பேராசிரியர் முகுந்த் துபே (Muchkund Dubey) ஓர் முன்னாள் இந்தியத் தூதரும் , முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலரும் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் நிர்வாகத் தலைவரும் ஆவார். தொழில் இவர் சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும், பட்னா, ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் துறையின் பேராசிரியராகவும் மற்றும் வெளிநாட்டு சேவை நிறுவனத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் உள்ளார். உலகப் பொருளாதாரம், சர்வதேச நாணயம் மற்றும் வர்த்தக அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு, தெற்காசிய ஒத்துழைப்பு மற்றும் பன்னாட்டு உறவுகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களை இவர் ஆய்வு செய்து வருகிறார். படைப்புகள் மேற்கோள்கள் இந்திய அரசியல் எழுத்தாளர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பீகார் அரசியல்வாதிகள் 2024 இறப்புகள் 1933 பிறப்புகள்