id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
681966
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
தணிகைச்செல்வன்
தணிகைச்செல்வன் (பிப்ரவரி 28, 1935 - அக்டோபர் 29, 2024) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞராவார். எழுபதாண்டுகளாகக் கவிதைகள் எழுதியும் பல பொதுவுடைமை மேடைகளில் கவிதை வாசித்தும் வந்துள்ளார். வாழ்க்கைக் குறிப்பு இவர் மதராஸ் மாகாணத்தின், செங்கல்பட்டு மாவட்டததில் பாலாற்றங்கரையின் அருகே உள்ளஉறைக்​காட்டுப்​பேட்​டை​யில் 1935 பிப்ரவரி 28 ஆம் நாள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். மருத்துவத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். வயது மூப்பின் காரணமாக 90 ஆவது வயதில் 2024 அக்டோபர் 29 ஆம் நாள் காலமானார். இலக்கியப் பணி செம்​மலர், குடியரசு, முரசொலி, நந்தன், தமிழர் கண்ணோட்டம், தாய்​மண், சிந்​தனை​யாளன், தினமணிக் ​க​திர், தென்​மொழி, கவிதாசரண் போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார். கவிதை நூல்கள் இவர் எழுதி வெளியிட்ட கவிதை நூல்கள். தணிகைச்செல்வன் கவிதைகள் (1975) சமூக சேவகி சேரிக்கு வந்தாள்(1978) பூபாலம் (1981) ஒரு துண்டு இந்தியாவும் நானும் (1983) சிவப்பதிகாரம் (1986) உலக்கையிலும் பூ பூக்கும் (1991) சகாராவின் தாகம் (1997) தணிகைச்செல்வன் கவிதைகள் தொகுப்பு நூல்கள்(2001) கட்டுரை நூல்கள் இவர் எழுதி வெளியிட்ட கட்டுரை நூல்கள். இலக்கும் இலக்கியமும் (2003) தத்துவ தலைமை (2015) ஆட்சி மாற்றமும் அடிப்படை மாற்றமும் ஒரு மார்க்சிய அரிச்சுவடி (2023) கிழக்கு முதல் கிழக்கு வரை கவிதைகளில் அவன் மானிடன் பொதுவுடைமைப் பணி மருத்​துவத் துறைப் பணியிலிருந்து பொதுவுடைமைச் சிந்தனை ஈர்ப்பால் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1958 இல் தன்னை இணைத்துக் கொண்டார். சீனப் போரின் போது இரண்டுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். ஈழப் பிரச்சினையில் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிபிஎம் கட்சியிலிருந்தும் தமுஎசவிலிருந்தும் விலகினார். மேற்கோள்கள் 2024 இறப்புகள் 1935 பிறப்புகள் தமிழ்ப் பொதுவுடமைவாதிகள் தமிழகக் கவிஞர்கள்
681967
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சமணச் சமூகம்
சமணச் சமூகம் என்பது சமணச் சமயத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும். இவர்களை ஜெயினர்கள் என்றும் அழைப்பர். இவர்கள் பண்டைய சமணச் சிரமண மரபைப் பின்பற்றுபவர்கள். இச்சமூகத்தவர்களின் வழிகாட்டிகள் தீர்த்தங்கரர்கள் ஆவார். இவர்களின் இரண்டு பிரிவிரினர்களில் ஒருவர் சுவேதாம்பரர், மற்றொரு பிரிவினர் திகம்பரர் ஆவார். தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் சமணச் சமூத்தவர்களை தமிழ்ச் சமணர்கள் என்று அழைப்பர். சமணச் சமூகம் இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் வாழ்கிறார்கள். சமணச் சமூகத்தினர், சமணச் சமயக் கொள்கைக்கு இணங்க சமண சமூகத்தவர்கள் வேளாண்மைத் தொழிலில் மட்டும் ஈடுபடுவதில்லை. மேலும் இச்சமூகத்தினர் மாமிச உணவு உண்பதில்லை. பலர் சூரியன் மறைந்து, இருள் நேரத்தில் உணவு உண்பதில்லை. சங்கம் ஜெயின் சமூகத்தில் நால்வகைப் பிரிவினர் உள்ளனர். அவர்களை முனி (ஆண் துறவிகள்), அர்க்கியா அல்லது சாத்வி எனும் பெண் துறவிகள், சிரமணர்கள் (சமணத்தைப் பின்பற்றும் ஆண்கள்) மற்றும் சிராவிகா(சமணத்தைப் பின்பற்றும் பெண்கள்) ஆவார்.இந்த வகையினரைச் சங்கம் என்று அழைப்பர். மக்கள் தொகை & செல்வ நிலை இந்தியாவில் உள்ள சமயங்களில் அதிகம் எழுத்தறிவு கொண்டவர்களில் சமணர்களே ஆவார். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சமண சமூகத்தவர்களின் எழுத்தறிவு 94.1% ஆகும். அதே நேரத்தில் இந்திய சராசரி எழுத்தறிவு 65.38% ஆகும். சமணச் சமூகப் பெண்களின் எழுத்தறிவு 90.6.%: அதே நேரத்தில் தேசிய அளவில் பெண்களின் சராசரி எழுத்தறிவு 54.16%. ஆகும். 2018ஆம் ஆணடின் தேசியக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மற்ற சமய சமூகத்திரை விட, ஜெயின் சமூகத்தவர்களில் 70% செல்வத்தின் உச்சத்தில் வாழ்கின்றனர். சமணச் சமூக பிரிவுகள் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சமணர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சமணர்களில் 100 வகையான சமூகப் பெயர்களில் வாழ்கின்றனர். எடுத்துக்காட்டு: தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் தமிழ்ச் சமணர்கள் வாழ்கிறார்கள். சமணச் சமூகத்தவர்களை வரலாற்று மற்றும் தற்கால வாழ்விடங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து பிரிவாக பிரிக்கப்படுகின்றனர். மத்திய இந்தியா புந்தேல்கண்ட் பிரதேச ஜெயின் மத்தியப் பிரதேச ஜெயின் மேற்கு இந்தியா இராஜஸ்தான் ஜெயின் (மார்வாடி ஜெயின்) குஜராத்தி ஜெயின் மராத்தி ஜெயின் மும்பை ஜெயின் வட இந்தியா தில்லி ஜெயின் உத்தரப் பிரதேச ஜெயின் தென்னிந்தியா கர்நாடக ஜெயின் வட கர்நாடகா ஜெயின் கேரளா ஜெயின் தமிழ் சமணர்கள் கிழக்கு இந்தியா வங்காள ஜெயின் நாகாலாந்து ஜெயின் புலம் பெயர்ந்த ஜெயின்கள் ஐரோப்பாவில் புலர்பெயர்ந்த ஜெயின்கள் கனடாவில் புலம்பெயர்ந்த ஜெயின்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்த ஜெயின்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் புலம்பெயர்ந்த ஜெயின்கள். (1960களின் துவக்கத்தில் ஜெயின் மக்கள் தொகை 45,000 ஆகும். இவர்களில் பெரும்பாலோர் ஜாம்நகரைச் சேர்ந்த குஜராத்தி மொழி பேசும் ஹலாரி விசா ஓஸ்வால் ஜெயின் சமூகத்தினர் ஆவார். மக்கள் தொகை பரம்பல் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் ஜெயின் சமூகத்தவர்களின் மக்கள் தொகை 0.54%. (4,451,75) ஆகும். அதில் ஆண்கள் 2,278,097 மற்றும் பெண்கள் 2,173,656) அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜெயின் மக்கள் தொகை 150,000 முதல் 200,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமண சமயத்திற்கு மாறியுள்ளதால், அங்கு ஜெயின் சமூகம் வளர்கிறது. புகழ்பெற்ற ஜெயின் சமூகத்தவர்கள் சமண அறிஞர்கள் வீரசந்த் காந்தி மேற்கோள்கள் அடிக்குறிப்புகள் ஆதாரங்கள் Facets of Jainology : Selected Research Papers on Jain Society, Religion and Culture/Vilas Adinath Sangave. Mumbai, Popular Prakashan, 2001 வெளி இணைப்புகள் Hukonchu.com - resource for Jain literature and religious information "Jainism in America" by Yashwant K. Malaiya Jain Jagruti Centre, Toronto Jain Temple at Palitana, Gujarat - Vidhya Vihaar சமணம் சைனம்
681968
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
எர்பியம்(III) தெலூரைடு
எர்பியம்(III) தெலூரைடு (Erbium(III) telluride) என்பது Er2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியத்தின் தெலூரைடு உப்புகளில் இதுவும் ஒன்றாகும். Fddd என்ற இடக்குழுவில் 0.77(5) எலக்ட்ரான் வோல்ட்டு என்ற ஆற்றல் இடைவெளியுடன் Sc2S3 என்ற கட்டமைப்பில் இது படிகமாகிறது. குறைக்கடத்திப் பண்புகளைப் பெற்றுள்ளது. எர்பியம் மற்றும் தெலூரியம் தனிமங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்து எர்பியம்(III) தெலூரைடு சேர்மத்தை தயாரிக்கலாம். அல்லது எர்பியம்(III) குளோரைடு சேர்மத்தை வேதியியல் ஆவி கடத்தல் வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். மேற்கோள்கள் மேலும் வாசிக்க எர்பியம் சேர்மங்கள் தெலூரைடுகள்
681969
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88
தங்காயில் புடவை
தங்காயில் புடவை (Tangail saree) என்பது வங்காளதேசத்தில் பாரம்பரியமாக கைத்தறியாக நெய்யப்படும் புடவை வகையாகும். இது அந்நாட்டின் தங்காயில் மாவட்டத்தில் தோன்றியது. மேற்கு வங்காளத்தின் கிழக்கு வர்த்தமான் மற்றும் நதியா மாவட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட வகையான புடவை உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஜம்தானி புடவையின் எளிமைப்படுத்தப்பட்ட புடவையாகும். வரலாறு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், வங்காளத்தில் உள்ள தங்காயில் மாவட்டத்தில் கைத்தறி செழித்திருந்தது. வங்காளதேசத்தில் இவ்வகை புடவைகள் பாரம்பரிய மஸ்லின் துணி நெசவாளர்களின் சந்ததியினரால் உருவாக்கப்படுகிறாது. டாக்கா மாவட்டத்தின் தம்ராய் மற்றும் சௌஹட்டா ஆகியவை வங்காளதேசத்தின் தங்காயில் புடவை நெசவாளர்களின் அசல் வசிப்பிடங்களாக இருந்தன. பின்னர் அவர்கள் தங்காயிலில் குடியேறினர். ஆரம்பத்தில் அவர்கள் வடிவமைப்புகள் ஏதுமில்லாமல் துணிகளை உருவாக்கினர். ஒரு காலத்தில், நதியா மாவட்டத்தில் பருத்தி நெசவு ஒரு மிக முக்கியமான தொழிலாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், சாந்திப்பூர் ஒரு பெரிய மற்றும் வளமான நெசவுத் தொழிலின் மையமாக இருந்தது. கிபி 1898இல், இந்த மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் ஒரு சில நெசவாளர்கள் இருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து துணி அறிமுகப்படுத்தப்பட்டதால் சாந்திபூரில் நெசவுத் தொழில் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. இந்தத் தொழிலில் இலாபமில்லாததால் நெசவாளர்கள் பிற தொழில்களுக்கு மாறினர். இதன் விளைவாக இந்தத் தொழிலில் நெசவாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், 1940 ஆம் ஆண்டில் வங்காளத் தொழில்துறை துறையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சாந்திபூரில் உள்ள மொத்தம் 27,000 பேரில் 10,000 பேர் நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெசவாளரின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பிரித்தானிய வங்காளத்தில் உற்பத்தி செய்யப்படும் தங்காயில் புடவைகளை நெசவு செய்வதில் ஈடுபட்டனர். வெளியிலிருந்து நெசவாளர்களோ அல்லது தொழிலாளர்களோ யாரும் பணியமர்த்தப்படவில்லை. இது நெசவு நுட்பத்தை நெசவாளரின் குடும்பத்திற்கு வெளியே செல்ல அனுமதிக்காத நடைமுறையாக இருந்தது. பசக் குடும்பங்கள் தங்காயிலின் அசல் நெசவு குடும்பங்களாக இருந்தனர். இந்த நெசவாளர்கள் முக்கியமாக இந்து "பசக்" சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1947இல் நாடு பிரிந்த பிறகு, இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பெரும்பாலான பாரம்பரிய நெசவாளர்கள், பசக் நெசவாளர்களின் சமூகத்தினர் உட்பட, கிழக்கு பாக்கித்தானிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு குடிபெயர்ந்தனர். 1965இல் இடம்பெயர்வு தீவிரமடைந்து, 1971இல் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் மற்றும் வங்காளதேச விடுதலைப் போரின் போது உச்சத்தை அடைந்தது. வகுப்புவாத வன்முறை குறித்த அச்சம், மூலப்பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு, அரசாங்கத்திடமிருந்து கடன்கள் கிடைக்காமை, பொருட்களின் போக்குவரத்தில் நெருக்கடி, வணிகப் பாதுகாப்பு இல்லாததால் இந்து நெசவாளர்கள் படிப்படியாக வங்காளதேசத்திலிர்நுது இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது, தங்காயிலில் உள்ள "பசக்" சமூகத்தின் நெசவாளர்களுடன் இணைந்து முஸ்லிம் நெசவாளர்களும் இந்த புடவையை நெசவு செய்கிறார்கள். மேற்கு வங்காளப் புடவை பாரம்பரியமாக, நதியா சாந்திப்பூர் மற்றும் கிழக்கு வர்த்தமான் மாவட்டங்களின் கல்னா நகரம் ஆகியவை கையால் நெய்த துணிகளுக்கான பிரபலமான மையங்களாகும். எனவே பசக் நெசவாளர்கள் இந்த இடங்களிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியேறினர். இருப்பினும், பசக் சமூகத்தினர் தங்கள் நெசவு நுட்பத்தை பல சிரமத்துக்குடியேயும் பராமரித்தனர். பெரும்பாலான நெசவாளர்கள் கிழக்கு பாக்கித்தானிலிருந்து (இப்போதைய வங்காளதேசம்) தங்களுடன் கொண்டு வரப்பட்ட தறிகளின் உதவியுடன் இந்திய அரசு மேற்கு வங்காள அரசு வழங்கிய தறிகளின் உதவியுடன் அகதி முகாம்களிலும் கூட புடவைகளை நெசவு செய்தனர். முக்கியத்துவம் மேற்கு வங்காளத்தின் தங்காயில் புடவைக்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனையும் காண்க தாந்த் புடவை ஜம்தானி புடவை சாந்திப்பூரி புடவை மேற்கோள்கள் புடவைகள் மேற்கு வங்கத்தின் பண்பாடு வங்காளதேசப் பண்பாடு
681973
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
கோத்தாந்தி ரங்க ராவ்
கோத்தாந்தி ரங்க ராவ் (Goddanti Ranga Rao) (தெலுங்கு:గొద్దంటి రంగారావు) பாரத் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளின் இயக்குநராக பணியாற்றிய இந்தியர் ஆவார்.1994 ஆம் ஆண்டில், 238 வது வெண்கல ஓநாய் விருது ரங்கா ராவுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது உலக சாரணர் இயக்கத்தின் உலக அமைப்பின் ஒரே சிறப்புமிக்க விருதாகும். இது உலக சாரணிய குழுவால் உலக வழிகாட்டிகளுக்கு விதிவிலக்கான சேவைகளுக்காக வழங்கப்பட்டது. மேற்கோள்கள் இந்தியாவில் சாரணியம் ஆண்டுகள் வாரியாக பிறப்புகள் மறைக்கப்பட்ட பகுப்புகள் சாரண விருதுகள்
681974
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பீட்டர் மண் பாம்பு
பீட்டர் மண் பாம்பு, பீட்டர் கேடய வால் மற்றும் கேடய வால் மண் பாம்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் யூரோபெல்டிசு பீட்டர்சி, ஐரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த நச்சற்றப் பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவில் காணப்படுகிறது. சொற்பிறப்பியல் பீட்டர் மண் பாம்பின் சிற்றினப் பெயரான பீட்டர்சி, செருமன் ஊர்வனவியல் அறிஞர் வில்கெல்ம் பீட்டர் (1815-1883) நினைவாக இடப்பட்டுள்ளது. புவியியல் வரம்பு யூ. பீட்டர்சி தென்னிந்தியாவில் ஆனைமலை மலைகளில், 4000 முதல் 5000 அடி உயரத்தில் காணப்படுகிறது. வாழ்விடம் யூ. பீட்டர்சியின் விருப்பமான இயற்கை வாழிடம் காடு ஆகும் . விளக்கம் யூ. பீட்டர்சி முதுகுபுறம் சீரான பழுப்பு அல்லது மஞ்சள் புள்ளிகளுடன் பழுப்பு நிறத்திலிருக்கும். வயிற்றுபுறத்தில் ஒழுங்கற்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் உள்ளன. இதனுடைய உடல் மொத்த நீளம் (வால் உட்பட செமீ (7 + 1⁄2 அங்குலம்) 19 செ.மீ. ஆகும். மென்மையான முதுகுப்பகுதியில் 17 வரிசைகளில் நடுப்பகுதியில், தலைக்குப் பின்னால் 19 வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. வயிற்றுப் பகுதியில் 151 180 செதிலகளும் வாலடியில் 6 முதல் 11 செதில்கள் காணப்படும். முன் முனை கூர்மையாக காணப்படும். நாசி செதில் தலையின் கவசப் பகுதியின் நீளத்தை விட சற்று குறைவாக உள்ளது. கண்கள் சிறியன. வால் வட்டமாகவோ அல்லது சற்று பக்கவாட்டாக தட்டையாகக் காணப்படும். வால் இறுதியில் காணப்படும் முனைய முதுகெலும்பு செதில்கள் தனித்தனியாக பலவரிகளுடன் காணப்படும். இறுதியில் காணப்படும் உடல் மேல் செதில் குறுக்கு முகட்டுடன் மழுங்கி காணப்படும். நடத்தை யூ. பீட்டர்சி நிலத்திலும் மண்ணில் புதைந்தும் வாழக்கூடிய பாம்பு ஆகும். இனப்பெருக்கம் யூ. பீட்டர்சி உள்பொரி முட்டையிடும் பாம்பாகும். மேற்கோள்கள் மேலும் வாசிக்க Beddome, R.H. (1878). "Descriptions of new Uropeltidae from Southern India, with Remarks on some previously-described Species". Proceedings of the Zoological Society of London 1878 (1): 154–155. (Silybura petersi, new species, p. 154). Beddome, R.H. (1886). "An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon". Annals and Magazine of Natural History, Fifth Series 17: 3–33. (Silybura Petersi, p. 22). George Albert Boulenger. (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Silybura petersii, p. 261). Sharma, R.C. (2003). Handbook: Indian Snakes. Kolkata: Zoological Survey of India. 292 pp. . Malcolm Arthur Smith (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Uropeltis petersi, new compination, p. 84). வெளி இணைப்புகள் Uropeltis petersiஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 13 டிசம்பர் 2007. மேற்குத் தொடர்ச்சி மலையின் அக இட விலங்குகள் இந்திய ஊர்வன
681976
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88
சாந்திப்பூரி புடவை
சாந்திப்பூரி புடவை (Shantipuri sari) என்பது மேற்கு வங்காளத்தில் பாரம்பரியமாக கைத்தறியாக நெய்யப்படும் புடவை வகையாகும். இது மேற்கு வங்காளத்தின் சாந்திப்பூர் நகரம் மற்றும் நதியா மாவட்டத்தின் சுற்றியுள்ள பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. சாந்திப்பூரி கைத்தறி புடவை (அல்லது துணிகள்) வடிவமைப்புகளின் புதுமை, கூடுதல் இழை கொண்ட கை நூற்பு முறை, வெவ்வேறு வண்ண வடிவங்கள் மற்றும் துணியின் மெல்லிய நுணுக்கம் ஆகியவற்றிற்கு பிரபலமானது. சிறந்த சாந்திப்பூரி புடவை உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது. சாந்திப்பூரி புடவை 2009 ஆம் ஆண்டில் புவியியல் சார்ந்த குறியீட்டைப் பெற்றது. சாந்திப்பூரி புடவையின் சிறப்பு என்னவென்றால், இது குடி பன்ஜ் என்று அழைக்கப்படும் எளிய பாரம்பரிய மடிப்பு வடிவத்தில் சந்தைப்படுத்தப்படுகிறது. பெயர்காரணம் ஜவுளி நெசவு 15 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இருந்து சாந்திப்பூரில் தொடங்கியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, துணி நெசவு சாந்திப்பூரைச் சுற்றி பரவியது. இங்கு நெய்யப்பட்ட துணிகளில் புடவைகளும் ஒன்றாகும். பின்னர் சாந்திப்பூரில் தயாரிக்கப்பட்ட புடவைகள் சாந்திப்பூரி புடவை என்று அழைக்கப்பட்டன. "சாந்திப்பூரி" என்ற சொல் துணிகளின் மையமான சாந்திப்பூரிலிருந்து பெறப்பட்டது. வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வங்காளத்தில் உள்ள கௌடாவின் ராஜா கணேசனின் ஆட்சியின் போது நெசவாளர்கள் முதலில் சாந்திப்பூரில் குடியேறினர். சாந்திப்பூர் புடவையின் பழமையான தேதி கிபி 1409 வரை செல்கிறது. பதிவுகளின்படி, முதல் புடவைகள் கிபி 1409 இல் கௌட மன்னர் கணேச தானு சதந்தேப்பின் ஆட்சியின் போது சாந்திப்பூரில் நெய்யப்பட்டன. சாந்திப்பூரின் நெசவு பாரம்பரியம் அத்வைதி ஆச்சார்யாவின் (1460-1558) வாழ்க்கை வரலாற்று கையெழுத்துப் பிரதியில் அத்வைத் மங்கல் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நதியாவின் மன்னன் உருத்ர ராயன் ஆட்சிக் காலத்திலும், முகலாய ஆட்சி காலத்திலுமே சாந்திப்பூரில் கைத்தறி நெசவு ஒரு பாரம்பரிய தொழிலாக இருந்தது. நதியாவின் மன்னன் உருத்திர ராயனின் ஆட்சியின் போது, நெசவாளர்களின் பணி பெரும் பாராட்டையும் புகழும் பெற்றது. அந்த நேரத்தில் அரேபியா, கிரேக்கம், துருக்கி, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு புடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதன்பிறகு, இந்தத் தொழில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தயாரிப்புகளில் முக்கியமாக புடவைகள் மற்றும் வேட்டிகள் இருந்தன. ஆனால் சாந்திப்பூர் புடவை தயாரிப்பதில் சிறந்து விளங்கின. சாந்திப்பூரில் உள்ள நெசவாளர்களும் புடவைகளும் மிகவும் பிரபலமாக இருந்தனர். மேலும், அவர்கள் வங்காள நாட்டுப்புற இலக்கியத்திலும் இடம் பெற்றனர். ஆரம்ப கட்டங்களில், சாந்திப்பூரில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் கைத்தறி பருத்தி நூலை உள்ளடக்கி இருந்தது. கிபி 1824 இன் பிற்பகுதியில் நூற்பாலைகளால் நெய்யப்பட்டது. சாந்திப்பூரைச் சேர்ந்த நெசவாளரான பிரேன் குமார் பாசக்கு, தனது பணிக்காக 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதைப் பெற்றார். இதனையும் காண்க தங்காயில் புடவை ஜம்தானி புடவை தாந்த் புடவை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Santipuri Saree — West Bengal Handloom மேற்கு வங்கத்தின் பண்பாடு புடவைகள் வங்காளதேசப் பண்பாடு
681982
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81
கேதார் நாத் சாகு
கேதார் நாத் சாகு (Kedar Nath Sahoo) இந்திய நாட்டினைச் சார்ந்த பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் சாவ் நடனத்தின் செரைகெல்லா பாரம்பரியத்தின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். .இவர் சார்க்கண்டு மாநில அரசாங்கத்தின் அரசு சாவ் நடன மையத்தின் (சாவ் நிருத்யா கலா கேந்திரா) நிறுவனர் மற்றும் இயக்குநராக பணியாற்றினார். அந்நிறுவனத்தில் 1974 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில், குமார் பிசய் பிரதாப் சிங் தியோ தலைமையிலான குழுவுடன் இணைந்து நடித்தார். ஆனால் பின்னர் கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல இடங்களில் தனது சொந்த நடனக் குழுவை வழிநடத்தினார். இவரது மாணவர்களில் சரோன் லோவன், கோபால் பிரசாத் துபே மற்றும் சசாதர் ஆச்சார்யா போன்ற பல குறிப்பிடத்தக்க நடனக் கலைஞர்கள் அடங்குவர். 1981 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற இவர், கலைகளுக்கு செய்த பங்களிப்புகளுக்காக 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், உடல்நிலை மோசமடைந்து தனது 88 ஆவது வயதில் கன்சாரி டோலாவில் உள்ள தனது வீட்டில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று இறந்தார். இவருக்குத் திருமணமாகி ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். மேலும் காண்க சாவ் நடனம் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் வாசிக்க பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் 2008 இறப்புகள் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் ஆண்டுகள் வாரியாக பிறப்புகள் இந்தியாவில் நடனம் மறைக்கப்பட்ட பகுப்புகள் மாநிலம் வாரியாக இந்திய நடனக் கலைஞர்கள் கலைத் தொழில்களில் இந்தியர்கள் சராய்கேலா கர்சாவான் மாவட்டம்
681984
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பத்ரவா சட்டமன்றத் தொகுதி
பத்ரவா சட்டமன்றத் தொகுதி (Bhaderwah Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பத்ரவா, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் தலீப் சிங் 42128 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மேற்கோள்கள் தோடா மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
681985
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
நாக்சி காந்தா
நாக்சி காந்தா (Nakshi kantha) என்ற பூப்பின்னல் கைவினைக் கலை, வங்காளத்தில் பரவியிருந்த பல நூற்றாண்டுகள் பழமையான கலை பாரம்பரியமாகும். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுரா , ஒடிசா மற்றும் அசாம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. பழைய புடவைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, கையால் தைத்து மெல்லிய மெத்தை துண்டை உருவாக்குகிறார்கள். இது பொதுவாக படுக்கை மெத்தைகளுக்கு மேலே அல்லது மெத்தைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. நாக்சி காந்தா வங்காளதேசம் முழுவதும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மைமன்சிங், ஜமால்பூர், போக்ரா, ராஜசாகி, பரித்பூர், ஜெஸ்ஸோர் மற்றும் சிட்டகொங் போன்ற பகுதிகள் இந்த கைவினைப்பொருளுக்கு மிகவும் பிரபலமானவை. பூப்பின்னலால் செய்யப்பட்ட வண்ணமயமான வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளின் விளைவாக "நாக்சி காந்தா" என்ற பெயர் உருவானது, இது பெங்காலி வார்த்தையான "நாக்சா" என்பதிலிருந்து பெறப்பட்டது. இது கலை வடிவங்களைக் குறிக்கிறது. ஆரம்பகால கந்தாக்கள் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை பின்னணியைக் கொண்டிருந்தன. பின்னர் மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் பிற வண்ணங்களும் சேர்க்கப்பட்டன. காந்தா தையல் என்று அழைக்கப்படும் ஓடும் தையல் இதில் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாக, குடும்பத்தின் பயன்பாட்டிற்காக காந்தா தயாரிக்கப்பட்டது. இன்று, நாக்சி காந்தா புத்துயிர் பெற்ற பிறகு, அவை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மேற்கோள்கள் ஆதாரங்கள் வெளி இணைப்புகள் Registered GI tag details The Beautiful Art of Nakshi Kantha independennt-bangladesh.com-naksi-kantha Gurusaday Museum, India Bangladesh National Museum Kantha Embroidery of West Bengal இந்தியாவில் நெசவுத் தொழில் இந்தியப் பூப்பின்னல் மேற்கு வங்கத்தின் பண்பாடு வங்காளப் பண்பாடு வங்காளதேசத்தில் கலைகள்
681988
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
தெரிதுருரசு
தெரிதுருரசு (Teretrurus) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் நச்சற்ற கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். தற்போது எட்டுச் சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிற்றினங்கள் தெரிதுருரசு அகும்பென்சு சிரியாக், கணேஷ், மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024ஆகும்பே தெரிதுருரசு அல்பிவென்டர் சிரியாக், கணேசு, மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024 பேப்பரா வனவிலங்கு சரணாலயம் தெரிதுருரசு கெவ்சுடோனி (பெடோம், 1876)-மேற்குத் தொடர்ச்சி மலை, தெரிதுருரசு பெரியரென்சிசு சிரியாக், கணேசு மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024 -பெரியார் தேசியப் பூங்கா தெரிதுருரசு ரோடோகாசுடர் வால், 1921-பழனி மலை வளைப்பாம்பு, செவ்வயிற்று கேடய வால் பாம்பு-மேற்குத் தொடர்ச்சி மலை, பழனி மலை தெரிதுருரசு சாங்கினியசு (பெடோம், 1867) -ஊதா சிவப்பு பூமி பாம்பு-தென்னிந்தியாவில் மணிமுத்தாறு மலைகள் மற்றும் நியமக்காடு தெரிதுருரசு சிருவானியென்சிசு சிரியாக், கணேசு, மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024சிறுவாணி மலைகள் தெரிதுருரசு திரவான்கோரிகசு (பெடோம், 1886)-திருவிதாங்கூர் மண் பாம்பு, செங்கோட்டை இடைவெளிக்குத் தெற்கே தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் மேற்கோள்கள் Teretrurusஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 9 டிசம்பர் 2018. பாம்புகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அக இட விலங்குகள்
681989
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஜெலாதெக் எல்ஆர்டி நிலையம்
ஜெலாதெக் எல்ஆர்டி நிலையம் அல்லது ஜெலாதெக் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Jelatek LRT Station; மலாய்: Stesen LRT Jelatek; சீனம்: 遮拉迪) என்பது மலேசியா, கோலாலம்பூர், செத்தியா வங்சா பகுதியில் கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. இந்த நிலையம் சூன் 1, 1999 அன்று திறக்கப்பட்டது; மற்றும் அருகில் உள்ள ஜெலாதெக் குடியிருப்பின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் ஜெலாதெக் சாலையின் மேற்குப் பகுதியில் கம்போங் டத்தோ கிராமாட் மற்றும் கிழக்குப் பகுதியில் தாமான் கிராமாட் ஆகிய வீடுமனைத் திட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. பொது மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. அமைவு இந்த நிலையம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நிலையமாகும். தொடருந்துகள் வழியாக ஏறி இறங்கும் இடம் தரையிலிருந்து மேலே உள்ளது. இந்த நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைகளுக்கான மையத் தளமும் உள்ளது. ஓர் உயரமான நிலைய அமைப்பைக் கொண்ட ஜெலாதெக் நிலையம் இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளது; அதாவது இரண்டு அடுக்குத் தளங்களைக் கொண்டது. கீழ் அடுக்கில், சாலை மட்டத்தில் பயணிகளின் அணுகல் தளம் உள்ளது; மற்றும் மேல் உயர் அடுக்கு நிலைகளில் கடப்புச் சீட்டு, சிற்றுண்ண்டிச் சாலைகள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமை தூக்கிகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது. பேருந்து சேவைகள் மேலும் காண்க கிளானா ஜெயா வழித்தடம் மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
681990
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
மனவீயம் சாலை
மனவீயம் சாலை (Manaveeyam Veedhi) என்பது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாலையாகும். நேப்பியர் அருங்காட்சியகம்-வெள்ளையம்பலம் சாலையில் உள்ள வயலார் ராமவர்மாவின் சிலையிலிருந்து ஆல்தாரா சந்திப்பில் உள்ள ஜி. தேவராஜன் மற்றும் பு. பாஸ்கரன் சிலைகள் வரை 180 மீ நீளமுள்ள இந்த சாலை, சாலையோரம் காட்சிப்படுத்தப்பட்ட ஏராளமான கலைப் படைப்புகளுக்கும், ஏராளமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது. தெரு நாடக நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலை விழாக்கள் இந்த சாலையில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. மனவீயம் சாலையில் கலாசார நிகழ்வுகள் நடத்தப்பட்ட வரலாற்றை 1995 ஆம் ஆண்டிலேயே காணலாம். இந்த இடத்தில் தெரு நாடகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. 2001ல் அப்போதைய சட்டப்பேரவை சபாநாயகர் எம். விஜயகுமார், கலாசார நிகழ்ச்சிகளுக்கான மையமாக இந்த சாலையை திறந்து வைத்தார். 2011 ஆம் ஆண்டில், தனது ‘மனவீயம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு இந்த சாலையில் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் நாடக நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தியது. ஜி.சங்கர பிள்ளையின் பல நாடகங்களின் நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன. பின்னாளில், கேரளாவைச் சேர்ந்த ஓ. என். வி. குறுப்பு, அடூர் கோபாலகிருஷ்ணன், சுகதகுமாரி உட்பட பலர் இந்த சாலையில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ஓவியக் கலைஞர் நம்பூதிரி உட்பட கேரளாவைச் சேர்ந்த பல பிரபல கலைஞர்களும் சாலையோர சுவர்களில் கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். மறைந்த எழுத்தாளர் கமலா சுரய்யாவின் நினைவாக கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த சாலையில் கவிஞரும் ஆர்வலருமான சுகதகுமாரி அவர்களால் மாவிலங்கம் மரம் நடப்பட்டது. கலை முயற்சிகளைத் தொடரவும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்கள் கவலைகள் மற்றும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கவும் பெண்கள் குழுக்கள் அடிக்கடி இந்த இடத்தில் கூடிவருகின்றன. இந்த இடம் மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்பதால் அவர்கள் கவலைப்பட்டனர் சாலைப்பணிகள் சீர்மிகு சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டுமான பணிக்காக சாலை தோண்டப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் The Cultural Corridor Article on Manaveeyam Veedhi from The Hindu, 2015. திருவனந்தபுரத்தின் பண்பாடு
681991
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
பிளாட்டிபிளிக்டுரசு
பிளாட்டிபிளிக்டுரசு (Platyplectrurus) என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் நச்சு அல்லாத கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். இவை பொதுவாக முள்வால் பாம்புகள் என்று அழைக்கப்படுகின்றன. தற்போது, இரண்டு சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புவியியல் வரம்பு தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இச்சிற்றினங்கள் காணப்படுகிறது உயரமான (1200 மீ) மலைப்பாங்கான சோலா காடுகள், பாறைகளுக்கு அடியில், விழுந்த மரக்கட்டைகள் மற்றும் குப்பைகளின் குவியல்களில் இவை காணப்படுகின்றன. சிற்றினங்கள் ) நியமிக்கப்பட்ட துணையினங்களை சேர்க்கவில்லை Tமாதிரியினங்கள் வகை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Platyplectrurusஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 1 செப்டம்பர் 2007. மேற்குத் தொடர்ச்சி மலையின் அக இட விலங்குகள் பாம்புகள்
681997
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
எர்பியம்(III) அசிட்டேட்டு
எர்பியம்(III) அசிட்டேட்டு (Erbium(III) acetate) என்பது Er(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியத்தின் அசிட்டேட்டு உப்பாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் சில ஒளியியல் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.. இயற்பியல் பண்புகள் எர்பியம்(III) அசிடேட்டின் நான்குநீரேற்று 90 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து தேவைப்படும் நீரிலியைக் கொடுக்கிறது: Er(CH3COO)3·4H2O → Er(CH3COO)3 + 4 H2O தொடர்ந்து 310 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தினால் கீட்டீன் உருவாகும். Er(CH3COO)3 → Er(OH)(CH3COO)2 + CH2=C=O 350 ° செல்சியசு வெப்பநிலையில் Er(OH)(CH3COO)2 அசிட்டிக் அமிலத்தை இழந்து ErOCH3COO சேர்மத்தையும் 390 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O2CO3 என்ற சேர்மத்தையும் இறுதியாக 590 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O3]] சேர்மத்தையும் கொடுக்கிறது. மேற்கோள்கள் அசிட்டேட்டுகள் எர்பியம் சேர்மங்கள்
682000
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
ரத்னசாமி காளிங்கராயர்
ரத்னசாமி காளிங்கராயர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். வாழ்க்கைக் குறிப்பு இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள செம்மங்குடி வட்டத்தில் அமைந்த புளிச்சகாடி கிராமத்தில் 1897 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை எஸ். கோவிந்தசாமி காளிங்கராயர் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டம் 1928 இல் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். மார்ச்சு 12, 1930 இல் உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மகாத்மா காந்தி தண்டியில் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் போன்று, தமிழ்நாட்டின் வேதாரண்யக் கடலில் உப்பு அள்ளும் போராட்டமாக 13 ஏப்ரல் 1930 அன்று வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது. இதில் இவர் உப்பு சத்தியாகிரகம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார். 1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1948 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் போராட்டத்தில் பங்கேற்றார். ஆங்கிலேய அரசால் நீதிமன்ற சிறைவாசம் 2 மாதங்கள் 18 நாட்கள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மற்றும் அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு இறந்தார். மேற்கோள்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
682002
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
மெலனோபிடியம்
{{taxobox | color = yellow | name = மெலனோபிடியம் | image = IridescentShieldtail.jpg | image_caption = மெ. பிலிநேடம்| domain =மெய்க்கருவுயிரி | regnum = விலங்கு | phylum = முதுகுநாணி | subphylum = முதுகெலும்பி | classis = ஊர்வன | ordo = இசுகோமேட்டா | subordo = பாம்பு | familia = யூரோபெல்டிடே | genus = மெலனோபிடியம் | genus_authority = குந்தர், 1864 }} பொதுவான பெயர் கருப்பு கேடய வால் பாம்புகள்மெலனோபிடியம்'' என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் நச்சற்ற கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் தங்கள் கன்னக் கவசங்களில் ஒரு மனப் பள்ளத்தைக் கொண்டிருப்பதன் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. தற்போது, புதிதாக விவரிக்கப்பட்ட ஒரு சிற்றினம் உட்பட நான்கு சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. விளக்கம் மெலனோபிடியப் பேரினச் சிற்றினங்கள் மிகவும் மென்மையான. இவை பளபளப்பான மிகவும் ஒளிரும் தன்மை கொண்ட தோலினைக் கொண்டுள்ளன. இப்பாம்புகள் வளைத் தோண்டும் போது இச்செதில்கள் உதிருவதாகக் கூறப்படுகிறது. இவை பொதுவாக வளைகளில் வாழும் இரவு நேர, மழை நேரங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படும் பாம்புகள் ஆகும். புவியியல் வரம்பு இந்தியாவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மலைகளிலிருந்து, நாட்டின் தெற்கு முனையில், மகாராட்டிராவின் அம்போலி மலைகள் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது. சிற்றினங்கள் T) மாதிரி இனங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாம்புகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அக இட விலங்குகள்
682013
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE
கியான் பிரகாசு உபாத்யாயா
கியான் பிரகாசு உபாத்யாயா (Gyan Prakash Upadhyaya) இந்திய நிர்வாக சேவை அலுவலர் ஆவார். கி.பி. உபாத்யாயா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று பிறந்தார். சிக்கிம் மாநில அரசாங்கத்தில் தற்போதைய அமைச்சரவை செயலாளராக உள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎசு அதிகாரி ஆவார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி கியான் பிரகாசு உபாத்யாயா இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் பிறந்தார். இவர் தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டமும், ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் இளங்கலை பட்டமும் பெற்றார். கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த இவர் தற்பொழுது சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கோள்கள் உத்தரப் பிரதேச நபர்கள் வாழும் நபர்கள் 1964 பிறப்புகள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இந்திய அரசியல்வாதிகள் இந்தியர்கள்
682044
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
பிரடெரிக் பொல்லன்
பிரடெரிக் பொல்லன் (Frederick Pollen) இந்தியாவின் மீரட் பகுதியில் இருந்த புலந்தசகர் மாவட்டத்தில் பிரித்தானிய மாவட்ட ஆட்சியராக இருந்தார். 1847 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். டப்ளின் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த இவர், 1867 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமைப் பணி தேர்வை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 13 ஆவது இடத்தைப் பிடித்தார். 1869 ஆம் ஆண்டில் இவர் மீரட் உதவி நீதிபதியாகவும், ஆட்சியராகவும் இருந்தார். எமிலி சார்லோட்டு என்பவரை மணந்து கொண்டார். புலந்தசகரின் பழைய [[மாவட்ட விவரச்சுவடி|மாவட்ட செய்தி இதழில் பெரும்பாலும் இவரது பணிகள் குறித்த செய்திகளாகவே இருந்துள்ளன. இராசா லட்சுமன் சிங் பற்றிய செய்திகளும் இவ்விதழில் இடம்பெற்றிருந்தன. பொல்லன் 1876 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதியன்று தனது 29 வயதில் புலந்தசகரில் இறந்தார். மேற்கோள்கள் 1876 இறப்புகள் 1847 பிறப்புகள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இந்தியர்கள்
682045
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29
சிரஞ்சீவி (இந்து தொன்மவியல்)
சிரஞ்சீவி (Chiranjivi (, ), இந்து சமய நூல்களின்படி, பூமியில் பிறந்தவர்களில், நடப்பு கலி யுகம் முடியும் வரை, சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள். சொற்பிறப்பியல் மற்றும் வேதச் சூழல் சமசுகிருத மொழியில் சிரஞ்சீவி என்பதை சிரம் அல்லது நிரந்தரம் மற்றும் சீவனைக் குறிக்கிறது. இதுவே சாகா வரம் பெற்றவர் என்ற பொருளில் அமரத்துவம் அடைந்தவர் என்பதைக் குறிக்கிறது. இறுதி மன்வந்தர காலத்தின் போது, சாகா வரம் வேண்டி, ஹயக்கீரிவன் எனும் அசுரன், பிரம்மாவிடமிருந்த வேதங்களை விழுங்கி கடலடியில் மறைத்து வைத்தார்.. பின்னர் பகவான் விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து, ஹயக்கீரிவனை கொன்று, அசுரனிடம் இருந்த வேதங்களை விடுவித்தார். சிரஞ்சீவிகளின் பட்டியல் இதிகாச, புராணங்களின்படி இறவா வரம் பெற்ற 7 சிரஞ்சீவிகளைக் குறித்துள்ளது.சில வேத அறிஞர்கள் சிரஞ்சீவிகள் எண்மர் எனகூறுகின்றனர். சில புராணங்கள் கூடுதலாக கீழ்கண்டவர்களை சிரஞ்சீவிகளாக கூறுகிறது. மேற்கோள்கள் சிரஞ்சீவிகள்
682047
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
பாதரச ஆக்சிசயனைடு
பாதரச ஆக்சிசயனைடு (Mercury oxycyanide) என்பது C2Hg2N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப் பாதரச வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. பாதரச ஆக்சிசயனைடு சேர்மம் வெடிக்கும் தன்மையும் அதிக நச்சுத்தன்மையும் கொண்டுள்ளது. வெளிப்பட்ட பிறகு பாதரசம் மற்றும் சயனைடு ஆகிய இரண்டின் நச்சுத்தன்மை அறிகுறிகளையும் இது உருவாக்குகிறது. மேற்கோள்கள் நைட்ரைல்கள் கரிமபாதரச சேர்மங்கள்
682055
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
மனுகா கோயில்
மனுகா கோயில் (Manuha Temple, பருமிய மொழி: မနူဟာဘုရား) gifjld மோன் மன்னர் மானுகாவால் (பாகனுக்கு அருகில்) கி.பி. 1067 இல் கட்டப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் ஆகும். மன்னர் மனுகாவின் கல்வெட்டுகளின்படி. இது இரண்டு மாடிகளைக் கொண்ட செவ்வக கட்டடம் ஆகும். இந்த கட்டடத்தில் அமர்ந்த நிலையிலான புத்தர்களின் மூன்று உருவங்களும், தன் இறுதி காலத்தில் படுத்த நிலையிலான ஒரு புத்தர் உருவமும் உள்ளது. மனுகா கோயில் பாகனில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். காட்சியகம் மேற்கோள்கள் Coordinates on Wikidata மியான்மாரில் உள்ள பௌத்தக் கோயில்கள்
682056
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
காந்தி மக்களவைத் தொகுதி
காந்தி மக்களவைத் தொகுதி (முன்பு கான்டாய் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது) இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் கான்டாயை மையமாகக் கொண்டுள்ளது. இதன் நாடாளுமன்றத் தொகுதி எண் 31. கந்தி மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இத்தொகுதியில் 89.7% பேர் இந்துக்கள், முசுலிம்கள், சீக்கியர்கள் மற்றும் பிறர் 11.3% ஆவர். சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான காந்தி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர், கான்டாய் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பகபன்பூர் (சட்டமன்றத் தொகுதி எண். 208) கஜூரி (ப.இ.) (சட்டமன்றத் தொகுதி எண் 209) கான்டாய் வடக்கு (சட்டமன்றத் தொகுதி எண் 210) கான்டை தெற்கு (சட்டமன்ற தொகுதி எண். 211) இராம்நகர் (சட்டமன்ற தொகுதி எண் 212) எக்ரா (சட்டமன்ற தொகுதி எண் 213) மற்றும் முக்பெரியா (சட்டமன்ற தொகுதி எண் 214). நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தல் மேற்கோள்கள் மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
682059
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சான்போர்ணைட்டு
சான்போர்ணைட்டு (Sanbornite) என்பது Ba(Si2O5) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பேரியம் பைல்லோசிலிக்கேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றது முதல் வெண்மை நிறம் கொண்டதாகக் காணப்படுகிறது. நேர்ச்சாய்சதுரப் படிகமான இதன் கடினத்தன்மை மதிப்பு மோவின் அளவுகோலில் 5 ஆக மதிப்பிடப்படுகிறது. ஒப்படர்த்தி அளவு 3.74 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 1932 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் மாரிபோசா மாகாணத்தின் இங்கிளைன் பகுதியில் சான்போர்ணைட்டு கண்டறியப்பட்டது. 1862 முதல் 1936 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த கனிமவியலாளர் பிராங் பி சான்போர்ன் நினைவாக கனிமத்திற்கு சான்போர்ணைட்டு எனப் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் சான்போர்ணைட்டு கனிமத்தை Sabnஎன்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் Mindat w/ locations Webmineral w/ images Mineral galleries பேரியம் கனிமங்கள் பைல்லோ சிலிக்கேட்டுகள் கனிமங்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
682061
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மெலனோபிடியம் பைலினட்டம்
மெலனோபிடியம் பைலினட்டம் (Melanophidium bilineatum) என்பது பொதுவாக இரு-வரிசை கருப்பு கேடய வால் பாம்பு அல்லது ஒளிரும் கேடய வால் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி ஆகும். இந்தச் சிற்றினம் மூன்று மாதிரிகளிலிருந்து மட்டுமே அறியப்பட்டது. மேலும் காடுகளில் இது குறித்து மிகக் குறைந்த தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. புவியியல் வரம்பு மெ. பைலினட்டம் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கேரளா வயநாடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களில் காணப்படுகிறது. வயநாட்டில் உள்ள பெரியார் சிகரத்தின் உச்சியில் சுமார் 5,000 அடி உயரத்தில் ரிச்சர்ட் என்றி பெடோம் பெற்ற மாதிரிகளிலிருந்தும், திரியோட் சிகரத்தில் (மனடோடிக்கு மேற்கே) இதேபோன்ற உயரத்திலும் இந்தச் சிற்றினம் விவரிக்கப்பட்டது. விளக்கம் கண்ணின் விட்டம் கண் கவசத்தின் நீளத்தில் நான்கில் ஒரு பங்காகவும், வயிற்றுப்பகுதி சற்று அகலமாகவும், அருகிலுள்ள செதில்களை விட இரண்டு மடங்கு அகலமாகவும் இருக்கும். வயிற்றுப்பகுதியில் 188 முதல் 200 செதில்களும் வால்பகுதியில் 15 முதல் 17 செதில்கள் காணப்படும். வாலானது மெலனோபைடியம் பங்டேட்டத்தின் இளம் பாம்பினைப் போன்று நீளமானது. ஒளிரும் கருப்பு நிறத்தினை மேலும் கீழும் கொண்ட, மஞ்சள் செதில்களை இரண்டு வரிசையில் கொண்டு, தொடர்ச்சியான சிறிய கருப்பு புள்ளிகளைக் கொண்டோ இல்லாமலோ காணப்படும். மேற்கோள்கள் மேலும் வாசிக்க Malcolm Arthur Smith. 1943. The Fauna of British India, Ceylon and Burma, including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III. - Serpentes. Taylor and Francis. London. 583 pp. Richard Henry Beddome. 1870. Descriptions of new Reptiles from the Madras Presidency. Madras Monthly J. Med. Sci. 2: 169–176. [Reprint: J. Soc. Bibliogr. Nat. Sci., London, 1 (10): 327–334, 1940.] Richard Henry Beddome. 1886. An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon. Ann. Mag. Nat. Hist. (5) 17: 3-33. வெளி இணைப்புகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அக இட விலங்குகள் பாம்புகள்
682063
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
மெலனோபிடியம் வயனாடென்சி
இந்தியக் கருப்பு மண் பாம்பு (Indian black earth snake) என்று பொதுவாக அழைக்கப்படும் மெலனோபிடியம் வயனாடென்சி (Melanophidium wynaudense) யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. புவியியல் வரம்பு மெ. வயனாடென்சி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது. வகை மாதிரி: "வயநாடு சேரம்பாடி" விளக்கம் பெடோம் (1864:180) மெ. வயனாடென்சி சிற்றினத்தினைப் பின்வருமாறு விவரித்தார். "உடலைச் சுற்றி 15 செதில்களும், கழுத்தைச் சுற்றி 16 அல்லது 17 செதில்களும், நாசிகளுக்கு இடையில் முகட்டுச் செதில்களும் காணப்படுகின்றன. கண்கள் சிறியவை. வாலடிச் செதில்கள் 22 ஆகும். வால் தட்டையாகத் தனித்த குறுகிய ஓட்டுடன் காணப்படும். நீல கலந்த கருப்பு நிறத்தில், வயிற்றில் பரந்த வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும். இவற்றின் வால் சீரான நீல நிறத்தில் காணப்படும். மேற்கோள்கள் மேலும் வாசிக்க Beddome RH (1863). "Descriptions of New Species of the Family Uropeltidæ from Southern India, with Notes on other little-known Species". Proc. Zool. Soc. London 1863: 225-229 + Plates XXV-XXVII. Beddome RH (1863). "Further Notes upon the Snakes of the Madras Presidency; with some Descriptions of New Species". Madras Quart. J. Med. Sci. 6: 41-48. (Plectrurus wynaudensis, new species). [Reprint: (1940). J. Soc. Bibliogr. Nat. Sci., London 1 (10): 306-314.] Beddome RH (1864). "Descriptions of New Species of the Family Uropeltidæ from Southern India, with Notes on other little-known Species". Ann. Mag. Nat. Hist., Third Series 13: 177-180. Beddome RH (1886). "An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon". Ann. Mag. Nat. Hist., Fifth Series 17: 3-33. Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. ("Melanophidium wynadense [sic]", p. 272). Günther ACLG (1864). The Reptiles of British India. London: The Ray Society. (Taylor and Francis, printers). xxvii + 452 pp. + Plates I-XXVI. ("Melanophidium wynandense [sic]", p. 194 + Plate XVII, figures I & I'). Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Melanophidium wynaudense, p. 67). வெளி இணைப்புகள் இந்திய ஊர்வன மேற்குத் தொடர்ச்சி மலையின் அக இட விலங்குகள்
682065
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம்
டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் அல்லது டத்தோ கெராமாட் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Dato' Keramat LRT Station; மலாய்: Stesen Dato' Keramat; சீனம்: 拿督克拉末) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையத்திற்கு, ஜாலான் டத்தோ கெராமாட் என்ற சாலையின் பெயரில் இருந்து பெயரிடப்பட்டது. மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. பொது கம்போங் டத்தோ கெராமட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேவை செய்வது இந்த நிலையத்தின் நோக்கமாகும். கம்போங் டத்தோ கெராமட், தித்திவாங்சா மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு பெரிய மண்டலமாகும். பொதுவாக மலேசியாவில் கிராமம் என்பதை கம்போங் (Kampung) என்று அழைப்பது வழக்கமாகும். அந்த வகையில் கெராமாட் கிராமம் என்பது கம்போங் டத்தோ கெராமாட் (Kampung Datuk Keramat) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையத்தின் தெற்கே அம்பாங்-கோலாலம்பூர் உயர்மட்ட விரைவுச்சாலை (Ampang–Kuala Lumpur Elevated Highway - AKLEH); மற்றும் கிள்ளான் ஆறு ஆகியவை உள்ளன. அமைவு இந்த நிலையம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நிலையமாகும். தொடருந்துகள் வழியாக ஏறி இறங்கும் இடம் தரையிலிருந்து மேலே உள்ளது. இந்த நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைகளுக்கான மையத் தளமும் உள்ளது. ஓர் உயரமான நிலைய அமைப்பைக் கொண்ட டத்தோ கெராமாட் நிலையம் இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளது; அதாவது இரண்டு அடுக்குத் தளங்களைக் கொண்டது. கீழ் அடுக்கில், சாலை மட்டத்தில் பயணிகளின் அணுகல் தளம் உள்ளது; மற்றும் மேல் உயர் அடுக்கு நிலைகளில் கடப்புச் சீட்டு, சிற்றுண்ண்டிச் சாலைகள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது. பேருந்து சேவைகள் மேலும் காண்க கிளானா ஜெயா வழித்தடம் மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682067
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பெர்ரியிட்டு
பெர்ரியிட்டு (Perryite) என்பது (Ni,Fe)8(Si,P)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். நிக்கல் சிலிசைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. சிலிக்கான் நிறைந்த விண்கற்களில் பெர்ரியிட்டு கனிமம் காணப்படுகிறது. இந்த வகை கனிமம் வாசிங்டனில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் உள்ள ஆர்சு கிரீக்கு பகுதியில் 1963 ஆம் ஆண்டில் பிரடரிக்சன் மற்றும் விக்மேன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. அமெரிக்க விண்கல் சேகரிப்பாளர் சுடூவர்ட்டு ஆப்மேன் பெர்ரியின் நினைவாக கனிமத்திற்கு பெர்ரியிட்டு எனப் பெயரிடப்பட்டது. பெர்ரியிட்டு கனிமமானது பொதுவாக திரொலைட்டு கனிமம் எனப்படும் இரும்பு சல்பைடுடன் கலந்து காணப்படுகிறது. இது உலோக என்சுடாடைட்டு காண்ட்ரைட்டு விண்கற்களின் ஒரு சிறிய அங்கமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்ரியிட்டு கனிமத்தை PRY என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் விண்வீழ்கல் கனிமங்கள் நிக்கல் கனிமங்கள்
682068
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பிரெய்ட்டு
பிரெய்ட்டு (Breyite) என்பது Ca3.01(2)Si2.98(2)O9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். இது ஓர் உயரழுத்த கால்சியம் சிலிக்கேட்டு கனிமமாகும். வைரத்துடன் சேர்ந்து இக்கனிமம் காணப்படுகிறது. ஆழமான பூமியில் தோற்றம் கொண்ட வைரங்களுக்கு பெரோபெரிகிலேசுக்குப் பிறகு இது இரண்டாவது மிக அதிகமான சேர்ந்திருக்கும் கனிமமாகும். இது தோன்றுமிடம் தாயக வைரத்தின் மிக ஆழமான தோற்றத்தையும் குறிக்கும்.. இந்த கனிமத்திற்கு செருமானிய நாட்டின் கனிமவியலாளர், பாறையியலாளர் மற்றும் புவி வேதியியலாளர் என அறியப்பட்ட கெர்கார்ட்டு பி. பிரேயின் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் பிரெய்ட்டு கனிமத்தை Byi என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் கால்சியம் கனிமங்கள் வைரம் கனிமங்கள்
682070
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மெலனோபிடியம் பங்டேட்டம்
மெலனோபிடியம் பங்டேட்டம் என்பது பொதுவாக பெடோம் கருப்பு கேடய வால் பாம்பு அல்லது பெடோம் கரு மண் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு கேடய வால் பாம்பு ஆகும். புவியியல் வரம்பு பெடோம் கருப்பு கேடய வால் பாம்பு வடக்கில் இராதாநகரி வனவிலங்கு சரணாலயத்திற்கும் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் (தமிழ்நாடு) இடையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது. விளக்கம் மூக்குத்தண்டு வட்டமானது, அலகுருமுளை சிறியது. கண் மிகவும் சிறியது. உடலின் விட்டம் மொத்த நீளத்தில் 42 முதல் 48 மடங்கு ஆகும். உடலின் நடுவில் 15 செதில்களும், தலைக்குப் பின்னால் 17 செதில்களும் காணப்படும். 184 முதல் 198 செதில்கள் வயிற்றுப்புறத்தில் அகன்றதாக உள்ளன. 15 முதல் 18 வாலடிச் செதில்கள் உள்ளன. கருப்பு நிறத்தில் ஒளிரும் வயிற்றுச் செதில்கள் இரண்டு வரிசையில் பரந்த வெள்ளை விளிம்புடன் காணப்படும். வட்டார மாதிரி: திருவிதாங்கூர், முட்டி-குளி வயல், ஆசாம்பூ மலைத்தொடரில் ஒரு சிறிய பள்ளத்தாக்கு (4,500 அடி உயரம்) மேற்கோள்கள் மேலும் வாசிக்க Richard Henry Beddom. 1871. Descriptions of new reptiles from the Madras Presidency. Madras Monthly J. Med. Sci., 4: 401-404 [Reprint: J. Soc. Bibliogr. Nat. Sci., London, 1 (10): 324–326, 1940.] Mason, George E. 1888. Description of a new earth-snake of the genus Silybura from the Bombay Presidency with remarks on little known Uropeltidae. Ann. Mag. Nat. Hist. (6) 22: 184–186.   மேற்குத் தொடர்ச்சி மலையின் அக இட விலங்குகள் இந்திய ஊர்வன
682072
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சீதோசெரைட்டு
சீதோசெரைட்டு (Seidozerite) என்பது Na4MnZr2Ti(Si2O7)2O2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். இது ஒரு சோரோசிலிக்கேட்டு வகை கனிமமாகும். தைட்டானியம் இருசிலிக்கேட்டு எனப்படும் சீதோசெரைட்டு சிறப்புக்குழுவாக இது கருதப்படுகிறது. செமனோவ், கசகோவா, சிமோனோவு ஆகியோரால் 1958 ஆம் ஆண்டில் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. உருசியாவின் மூர்மன்சுக் மாகாணம், கோலா தீபகற்பத்தின் உலோசோசெரோ மாசிவ் மலைத்தொடரில் சீடோசெரோ ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் சீதோசெரைட்டு கனிமத்தை Sdz என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் கனிமங்கள் சோரோசிலிக்கேட்டுகள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
682074
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
விஜயபால் சிங்
விஜய்பால் சிங் (Vijaipal Singh)(பிறப்பு 17 சனவரி 1945) இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் அரித்துவார் மாவட்டத்தில் உள்ள நர்சான் கலானில் பிறந்தவர் ஆவார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக விவசாய அறிவியலாளர் ஆவார். மேலும் அரிசி மரபியல் மற்றும் இனப்பெருக்க அறிவியலில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். மிகவும் பிரபலமான பாசுமதி அரிசி வகையான பூசா பாசுமதி 1121-ஐ உருவாக்குவதில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் வேளாண் தாவரவியலில் முதுநிலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்ற இவர், 1968ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை சிங் வெளியிட்டுள்ளார். நாட்டுக்கு இவர் செய்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், 2012ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. விருதுகளும் கௌரவங்களும் வி. பி. சிங், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும அரி ஓம் ஆசிரம அறக்கட்டளை விருது (1974-75), ஜவகர்லால் நேரு விருது (1977), பி. பி. பால் நினைவு விருது (2005), பயிர் மேம்பாட்டில் இவேஆகு விருது (2007), இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் மூன்றாம் ராவ் பகதூர் பி விசுவநாத் விருது (2006-07), பத்மசிறீ (2012), சிறீ. ஓ. பி. பாசின் நினைவு விருது (2012), அரிசி ஆராய்ச்சி தொழிலாளர்கள் சங்கம் (மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம், கட்டாக்) விருது (2019), பாசுமதி ரத்தன் விருது (2019) விருதுகளையும் பெற்றுள்ளார். மேற்கோள்கள் ஆதாரங்கள் வெளி இணைப்புகள் பத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள் வாழும் நபர்கள் 1945 பிறப்புகள்
682076
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
சாஸ்த்ரா சி. என். ஆர் ராவ் விருது
சாஸ்த்ரா சி. என். ஆர் ராவ் விருது (SASTRA-CNR Rao Award) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலைசமுத்திரம் நகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால், வேதியியல் மற்றும் பொருள் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு விருதாகும். இந்த விருது 2013ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதல் விருது திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் சுரேசு தாசிற்கும் புனே தேசிய வேதியியல் ஆய்வகத்தின் இயக்குநர் சவுரவ் பாலுக்கும் கூட்டாக வழங்கப்பட்டது. இந்திய உருபா 5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. விருது பெற்றவர்கள் மேலும் காண்க சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு மேற்கோள்கள் இந்திய அறிவியல், பயனறிவியல்சார் பரிசுகள் அறிவியல் விருதுகள்
682079
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
ஓமி பாபா பதக்கமும் பரிசும்
ஓமி பாபா பதக்கமும் பரிசும் (Homi Bhabha Medal and Prize) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்திய விருதாகும் இது தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியல் பன்னாட்டு ஒன்றியம் மற்றும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக வழங்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் ஓமி ஜே. பாபா நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது பெறுவோருக்குச் சான்றிதழும், பதக்கமும், 250,000 இந்திய ரூபாய் விருதும் மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்திலும் ஊட்டியில் உள்ள அண்டக் கதிர் ஆய்வகத்தில் பொது சொற்பொழிவாற்ற ஆதரவும் வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா வருடாந்திரப் பன்னாட்டு அண்டக் கதிர் மாநாட்டின் போது நடைபெறுகிறது. "உயர் ஆற்றல் அண்டக் கதிர் இயற்பியல் மற்றும் வானியற்பியல் துறையில் நீண்ட கல்வி வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி பணியில் உள்ள விஞ்ஞானி" இந்த விருதைப் பெறுவார். முதல் விருது 2011இல் சர் அர்னால்ட் வொல்பெண்டேலுக்கு வழங்கப்பட்டது. இயற்பியலாளர் ஓமி ஜே. பாபாவின் நினைவாகப் பெயரிடப்பட்ட பல்வேறு விருதுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஓமி பாபா பதக்கம் (ஐந்து வெவ்வேறு பிரிவுகளில்) இந்திய அரசின் அணுசக்தித் துறையின் அணு எரிபொருள் வளாகத்தால் வழங்கப்படுகிறது. விருது பெற்றோர் மேலும் காண்க சா பரிசு ஆர்யபட்டா விருது ஓம் பிரகாசு பாசின் விருது மேற்கோள்கள் இந்திய அறிவியல், பயனறிவியல்சார் பரிசுகள் இயற்பியல் விருதுகள்
682080
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE
தாதா வைத்யா
தாதா வைத்யா (Dada Vaidya) இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஆயுர்வேத மருத்துவர் ஆவார். இராமச்சந்திர பாண்டுரங்க வைத்யா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1859ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கோவாவின் போண்டா நகரத்திற்கு அருகிலுள்ள கேரி கிராமத்தை தளமாகக் கொண்டு இவர் ஆயுர்வேத பயிற்சியாளராக இயங்கினார். கோவாவில் உள்ள பல்வேறு தாவரங்களிலிருந்து மருந்துகளை எடுத்து நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வழங்கி வந்தார். போர்த்துகீசிய அரசாங்கம் சட்டப்படி அலோபதி மருந்துகளை ஆதரித்தாலும், அலோபதி மருந்துகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு குணமடையும் நம்பிக்கையை இழந்த போர்த்துக்கீசியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இவர் சிகிச்சையளித்தார். இதனால் போர்த்துகீக்கிய அதிகாரிகளின் ஆதரவும் வைத்யாவுக்கு இருந்தது. போண்டா நகரின் மத்திய சதுக்கத்தில் போர்த்துகீசிய அரசாங்கம் இவருக்கு தங்கள் நன்றியைக் காட்ட தாதா வைத்யாவின் சிலையை அமைத்தது. சமூகப் பணிகள் 1911ஆம் ஆண்டில், வைத்யா சீதாராம் கெர்கரும் விநாயக் சர்சோதிசியும் இணைந்து கோவா வித்யாபிரசாரக் மண்டல் மற்றும் அதன் முதல் நிறுவனமான ஏ. ஜே. டி அல்மெய்டா உயர்நிலைப் பள்ளியை மத்திய கோவாவின் போண்டா தாலுகாவில் நிறுவினார். இறப்பு 1947ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ஆம் தேதியன்று தாதா வைத்யா காலமானார். மேலும் வாசிக்க தாதா வைத்யாவின் மரபு, மூதாதையர் இல்லம் அதிக கவனத்தை ஈர்க்கிறது தாதா வைத்யாவின் வாழ்க்கை குறித்த சுருக்கமான வீடியோ மேற்கோள்கள் 1947 இறப்புகள் 1859 பிறப்புகள் இந்தியர்கள் கோவா நபர்கள்
682082
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
டோடா மேற்கு சட்டமன்றத் தொகுதி
டோடா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Doda West Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். டோடா மேற்கு, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சம்மு காசுமீரில் (யூனியன் பிரதேசம்) எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பிறகு இந்த தொகுதி 2022 இல் உருவாக்கப்பட்டது. மே 2022 இல், புதிய சட்டமன்றத் தொகுதிகளின் இறுதிப் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் 33964 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் காண்க தோடா மாவட்டம் தோடா சட்டமன்றத் தொகுதி சம்மு காசுமீர் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் தோடா மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682085
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பனிகல் சட்டமன்றத் தொகுதி
பனிகல் சட்டமன்றத் தொகுதி (Banihal Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பனிகல், உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாசத் சகீன் 33128 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மேற்கோள்கள் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682086
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
குலாப்கட் சட்டமன்றத் தொகுதி
குலாப்கட் சட்டமன்றத் தொகுதி (Gulabgarh Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் குர்சித் அகமது 30591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் காண்க கிசுத்வார் மாவட்டம் சம்மு காசுமீர் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் கிஷ்துவார் மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682087
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81
பேட்சலர் பரிசு
பேட்சலர் பரிசு (Batchelor Prize) என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கோட்பாடும் பயன்பாட்டு இயக்கவியலும் ஒன்றியத்தால் திரவ இயக்கவியலில் சிறந்த ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் விருதாகும். இந்த விருதின் பரிசுத் தொகையான 25, 000 டாலர் ப்ளூயிட் மெக்கானிக்சு ஆய்விதழ் நிதியுதவியுடன் இந்த ஒன்றியத்தின் பன்னாட்டு மாநாட்டின் போது வழங்கப்படுகிறது. இப்பரிசிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி பொதுவாக விருதுக்கு முந்தைய பத்து ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்டிருக்கும். இதனால் படைப்பின் தற்போதைய ஆர்வத்தை உறுதிப்படுத்துகிறது. ஆத்திரேலியப் பயன்பாட்டுக் கணிதவியலாளரும் திரவ இயக்கவியலாளருமான ஜார்ஜ் பேட்சலரை கவுரவிக்கும் வகையில் இந்த விருது பெயரிடப்பட்டுள்ளது. பரிசு பெற்றோர் ஆதாரம்: ஐயுடிஎம் மேலும் காண்க இயற்பியல் வரலாற்றுக்கான ஆபிரகாம் பாயிசு பரிசு மேக்ஸ் பிளாங்க் பதக்கம் லிராய் அப்கர் விருது மேற்கோள்கள் இயற்பியல் விருதுகள்
682088
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
ரியாசி சட்டமன்றத் தொகுதி
ரியாசி சட்டமன்றத் தொகுதி (Reasi Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2014 2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அசய் நந்தா 21,932 வாக்குகள் பெற்று ரியாசி தொகுதியில் வெற்றி பெற்றார். 2024 2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் குல்தீப் ராசு துபே 39647 வாக்குகள் பெற்று ரியாசி தொகுதியில் வெற்றிபெற்றார். மேலும் காண்க ரியாசி மாவட்டம் மேற்கோள்கள் ரியாசி மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682089
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
இடைவெளிகளின் கடவுள்
"இடைவெளிகளின் கடவுள்" என்பது 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு இறையியல் கருத்தாகும். இது அறிவியல் புரிதலில் உள்ள இடைவெளிகள் கடவுளின் இருப்பை சுட்டிக்காட்டுவதாக கருதப்படுகிறது. மத நம்பிக்கை கொண்டவர்கள், இயற்கை நிகழ்வுகளை விளக்குவதில் அறிவியல் தோல்வியுறும் பகுதிகளை தெய்வீக படைப்பாளரின் இருப்பை நிறுவும் வாய்ப்புகளாக சுட்டிக்காட்டுவதை கவனித்ததில் இருந்து இக்கருத்து தோன்றியது. இந்த சொற்றொடர் இத்தகைய போக்குக்கு பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த இறையியல் பார்வை, அறிவியல் அறிவால் விடப்பட்ட இடைவெளிகளை கடவுள் நிரப்புகிறார் என்றும், இந்த இடைவெளிகள் தெய்வீக தலையீடு அல்லது செல்வாக்கின் தருணங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் கூறுகிறது. இந்தக் கருத்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களையும் விவாதங்களையும் சந்தித்துள்ளது. கடவுள் இருப்பதைக் காட்டுவதற்கு மனித புரிதல் மற்றும் அறியாமை ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை நம்பியிருப்பதாகத் தோன்றுவதால் இந்த முன்னோக்கு சிக்கலானது என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். அறிவியல் அறிவு தொடர்ந்து முன்னேறும்போது, இந்த இடைவெளிகள் சுருங்குகின்றன. இது கடவுளின் இருப்புக்கான வாதத்தை பலவீனப்படுத்துகிறது. விமர்சகர்கள், இத்தகைய அணுகுமுறை நமது புரிதலின் விளக்கப்படாத பகுதிகளில் மட்டுமே கடவுள் செயல்படுவதாக கூறுவதன் மூலம், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்தில் தெய்வீக ஈடுபாட்டிற்கு குறைந்த இடத்தையே விட்டுவைத்து, மத நம்பிக்கைகளை பலவீனப்படுத்தக்கூடும் என வாதிடுகின்றனர். "" என்ற முன்னோக்கு தர்க்கரீதியான தவறுகளுடன் தொடர்புடையதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. "இடைவெளிகளின் கடவுள்" என்ற முன்னோக்கும் உறுதிப்படுத்தல் சார்பின் ஒரு வடிவமாகும், ஏனெனில் இது தெளிவற்ற ஆதாரங்களை விளக்குவதை உள்ளடக்கியது (அல்லது ஒருவரின் தற்போதைய அணுகுமுறைகளை ஆதரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை). இந்த வகையான பகுத்தறிவு இயல்பாகவே குறைபாடுள்ளதாகக் கருதப்படுகிறது, மேலும் மத நம்பிக்கை வலுவான அடித்தளத்தை வழங்காது. இந்த சூழலில், சில இறையியலாளர்களும் விஞ்ஞானிகளும் மத நம்பிக்கைகளை சரிபார்க்க விஞ்ஞான புரிதலில் உள்ள இடைவெளிகளை நம்புவதை விட, இயற்கையான செயல்முறைகளுக்குள் கடவுளின் செயல்களின் சான்றுகளை பார்ப்பது மிகவும் திருப்திகரமான அணுகுமுறையாகும் என்று முன்மொழிந்துள்ளனர். "இடைவெளிகளின் கடவுள்" என்ற பார்வை தர்க்க குறைபாடுகளுடன் தொடர்புடையதாக இருப்பதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த "இடைவெளிகளின் கடவுள்" என்ற பார்வை, உறுதிப்படுத்தல் சார்பு வடிவமாகவும் உள்ளது. ஏனெனில் இது தெளிவற்ற ஆதாரங்களை (அல்லது ஆதாரமே இல்லாததை) ஒருவரின் ஏற்கனவே உள்ள மனப்பான்மைகளை ஆதரிப்பதாக விளக்குவதை உள்ளடக்கியது. இந்த வகையான சிந்தனை இயல்பாகவே குறைபாடு உடையதாகவும், மத நம்பிக்கைக்கு வலுவான அடித்தளத்தை வழங்காததாகவும் கருதப்படுகிறது. இந்த சூழலில், சில இறையியலாளர்களும் விஞ்ஞானிகளும், மத நம்பிக்கைகளை உறுதிப்படுத்த அறிவியல் புரிதலில் உள்ள இடைவெளிகளை நம்பியிருப்பதற்கு பதிலாக, இயற்கை செயல்முறைகளுக்குள்ளேயே கடவுளின் செயல்களின் சான்றுகளை காண்பதே மிகவும் திருப்திகரமான அணுகுமுறையாக இருக்கும் என முன்மொழிந்துள்ளனர். பொதுவான பயன்பாடு "இடைவெளிகளின் கடவுள்" என்ற சொற்றொடர் சில நேரங்களில் இயற்கை நிகழ்வுகளுக்கான அறிவியல் விளக்கங்கள் மேலும் விரிவாக்கப்படும்போது, அந்த நிகழ்வுகளுக்கான மத விளக்கங்கள் படிப்படியாக பின்வாங்குவதை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் இறையியல் இறைமறுப்பு
682090
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சிலாவிகைட்டு
சிலாவிகைட்டு (Slavíkite) என்பது (H3O+)3Mg6Fe15(SO4)21(OH)1898H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். நீரேற்ற கார மக்னீசியம் பெர்ரிக் சல்பேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. சிலாவிகைட்டு கனிமம் போகிமியாவிலிருந்து கிடைக்கும் களிமண் பாறைகள் மற்றும் உருமாறிய கற்பலகைகளில் கிடைக்கும் பைரைட்டு கனிமத்தின் ஆக்சிசனேற்ற விளைபொருளாகும். 1924 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரை அறிவியல் பீடத்தின் தலைவராகவும் 1937 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத் துணை முதல்வராகவும் பிராகா நகரின் சார்லசு பல்கலைக்கழகத்தில் இருந்த பிரான்டிசெக் சிலாவிக்கு நினைவாக கனிமத்திற்கு 1926 ஆம் ஆண்டில் சிலாவிகைட்டு என்று பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிலாவிகைட்டு கனிமத்தை Sví என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் இரும்பு(III) கனிமங்கள் கனிமங்கள் மக்னீசியக் கனிமங்கள் சல்பேட்டுக் கனிமங்கள்
682099
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
கல்கி புராணம்
கல்கி புராணம் (Kalki Purana(), வைணவ இந்து நூல்களில் ஒன்றாகும். வங்காளத்தில் 15 மற்றும் 17ஆம் நூற்றான்டில் சமஸ்கிருத மொழி கையெழுத்து ஏட்டில் எழுதப்பட்ட இப்புராணம் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கியின் பெருமையக் கூறுகிறது. இப்புராணத்தின் சமஸ்கிருத கையெழுத்து ஏடுகள், தற்கால வஙகாளதேசத்தின் தலைநகரமான டாக்காவில் கண்டெடுக்கப்பட்டது. அமைப்பு கல்கி புராணம், மகாபுராணங்களான பதிணென் புராணங்களில் கீழ் வருவதில்லை. கல்கி புராணத்தை உபபுராணம் அல்லது இரண்டாம் புராணமாக கணக்கிடப்படுகிறது. தற்போதுள்ள இதன் உரை பல பதிப்புகளில் உள்ளது. அதன் கட்டமைப்பு மற்றும் விவரங்களில் வேறுபடுகின்றன. சிலர் உரையை பகுதிகளாகப் பிரிக்கவில்லை மற்றும் சுமார் 35 அத்தியாயங்களாகப் பிரித்துள்ளனர்.. ஒரு கையெழுத்துப் பிரதியானது முறையே 7 மற்றும் 21 அத்தியாயங்களைக் கொண்ட மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. உள்ளடக்கம் கலி யுகம் கல்கி புராணத்தின் துவக்கத்தில். பிரம்மாவால் படைக்கப்பட்ட கலி புருசனின் பரம்பரையை விளக்குகிறது. துவாபர யுகம் முடிவில் மற்றும் கலி யுகத்தின் தொடக்கத்தில் கலி மற்றும் அவரது அரக்க குடும்பத்தினர், மனித வடிவலில், பூவுகில் தோன்றி முனிவர்களுக்கும், மக்களுக்கும் எண்ணற்ற துன்பங்கள் செய்வார்கள்.கலியுகத்தின் போது நால்வகை வர்ணங்கள் மற்றும் ஆசிரம தர்மங்கள் சிதைந்து, வேள்விகள் செய்வதை விடுத்து தெய்வ வழிபாடு மனிதனால் கைவிடப்படும்.. கலி யுகத்தின் போது, கலி அரக்கன் மற்றும் கலியின் குடும்பத்தினரை அழிக்க பகவான் விஷ்ணு கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]] எடுத்து வெள்ளைக் குதிரை மீதர்ந்து, கையில் வாளேந்தி பூவுலகில் தோன்றுவார். கல்கி பகவான் கலி மற்றும் அவனைச் சார்ந்தவர்களைக் கொன்று கற்றவர்களையும், மக்களையும் காப்பார். பூவுலகில் கல்கி அவதாரம் கலி யுகத்தின் பூவலகில் மனிதர்கள் படும் கொடுமைகளைக் கண்டு தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட, பிரம்மா தேவர்களுடன், விஷ்ணுவை சந்தித்து, கல்கி அவதாரம் எடுத்து, பூவுலகின் கலி புருசனால், மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை விலக்க கோரினார். பகவான் விஷ்ணுவும், தான் பூவலகில் விஷ்ணுயாசஸ்-சுமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து கல்கி அவதாரம் எடுத்து, கலி யுகத்தின் முடிவில் கலி புருஷனை கொன்று, மக்களின் துயர் தீர்ப்பதாக வாக்களித்தார். இளம் வயதிலேயே, கல்கிக்கு தர்மம், கர்மா, அர்த்தம் மற்றும் ஞானம் கற்பிக்கப்படுகிறது. புனித நூல்கள் கற்பிக்கப்படுகிறது. பரசுராமரின் (விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்) பராமரிப்பில் இராணுவப் பயிற்சியை மேற்கொள்கிறார்.. கல்கி சிவனை வழிபடுகிறார், அவர் பக்தியால் மகிழ்ந்து சிவபெருமான் கல்கிக்கு தேவதத்தா எனும் தெய்வீக வெள்ளை குதிரையை வழங்குகிறார். ஒரு சக்திவாய்ந்த வாள், அணிகலன்கள் மற்ற தேவர்கள், தேவர்கள், துறவிகள் மற்றும் நீதியுள்ள அரசர்களால் வழங்கப்படுகின்றன. கல்கி பின்னர் இளவரசி பத்மாவதியை (இலக்குமியின் அவதாரம்) மணந்து மன்னன் விருகத்ரதன் மற்றும் சிம்ஹாலாவின் இளவரசி கௌமுதி (சிங்கத்தின் தீவு) மற்றும் ராஜா சசித்வஜா மற்றும் ராணி சுஷாந்தா ஆகியோரின் மகளான இளவரசி ரமாவை மணக்கிறார். கல்கி பல போர்களில் சண்டையிடுகிறார், அவதாரத்தின் தளபதிகளால் அழிக்கப்பட்ட கலி புருஷன் மற்றும் அவரது முழு குடும்பத்தினரை அழித்து கலி புருஷனின் கொட்டத்தை அடக்கி, தீமையை முடிவுக்கு கொண்டு வருகையில், இதற்கிடையில், இரட்டை அசுரர்களான கோகா மற்றும் விகோகா ஆகிய அசுரரின் மிகவும் சக்திவாய்ந்த தளபதிகளை ஒரே நேரத்தில் போரிட்டு கொன்றார். கல்கி பின்னர் சம்பாலாவுக்கு ஆட்சி செய்யத் திரும்புகிறார், நல்லவர்களுக்காக ஒரு புதிய யுகத்தைத் துவக்கி, பூமியை தனது தளபதிகளிடையே பிரிக்கிறார். சுமதி மற்றும் விஷ்ணுயாஷா, அவரது பெற்றோர், அவர்கள் வசிக்கும் பத்ரிகாஷ்ரமத்தின் புனித இடத்திற்குச் செல்வார்கள். கல்கி தனது தர்மம் (கடமை) முடிந்ததால் பூமியை விட்டு வைகுண்டத்திற்குச் செல்கிறார். இதனையும் காண்க கலி புருசன் கல்கி அவதாரம் மேற்கோள்கள் ஊசாத்துணை Himanshu Aneria, Kalki Purana, Fusion Books (1969) உப புராணங்கள் வைணவ இலக்கியங்கள்
682103
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%28%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%29
நம்பூதிரி (ஓவியர்)
கருவட்டு மனை வாசுதேவன் நம்பூதிரி (Karuvattu Mana Vasudevan Namboothiri) (13 செப்டம்பர் 1925-7 ஜூலை 2023) ஓவியர் நம்பூதிரி அல்லது வெறுமனே நம்பூதிரி என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய ஓவியரும் மற்றும் சிற்பியும் ஆவார். இவர் தனது வரி கலை மற்றும் செம்பு நிவாரணப் பணிகளுக்கு பெயர் பெற்றவர். தகழி சிவசங்கர பிள்ளை, கேசவதேவ், எம். டி. வாசுதேவன் நாயர், உரூப், எஸ். கே. பொற்றேக்காட்டு, எடச்சேரி கோவிந்தன் நாயர் மற்றும் வி. கே. என் போன்ற பல மலையாள எழுத்தாளர்களை ஓவியமாக வரைந்த இவர், இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய ஓவியர்களில் ஒருவராகவும் இருந்தார். கேரள லலிதகலா அகாதமியின் தலைவராகவும் இருந்தார். 2003 ஆம் ஆண்டில் அகாதமி இவருக்கு ராஜா ரவி வர்மா விருதை வழங்கியது. மேலும், சிறந்த கலை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றவர். இளமை நம்பூதிரி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள பொன்னானி அருகேயுள்ள கருவட்டு மனையில் பரமேசுவரன் நம்பூதிரி மற்றும் ஸ்ரீதேவி அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார். தனது குழந்தை பருவத்தில், தனது வீட்டிற்கு அருகிலுள்ள சுகபுரம் கோவிலில் உள்ள சிற்பங்களால் ஈர்க்கப்பட்டார். “இவற்றைப் பார்த்த பிறகு சிற்பங்களை வரைந்து வடிவமைக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது” என்று நம்பூதிரி ஒரு நேர்காணலில் கூறினார். கலைக் கல்வியைத் தொடர, வரிக்கசேரி மனையைச் சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி என்பவரின் நிதியுதவியுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு, சென்னை அரசு நுண்கலை கல்லூரியில் சேர்ந்தார். மேலும், இவருக்கு நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் முதல்வருமான டி. பி. ராய் சௌத்தரி மற்றும் எஸ். தனபால் ஆகியோரின் கீழ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில்தான் நம்பூதிரி இளம் கலைஞரின் மீது செல்வாக்கு செலுத்தும் கே. சி. எஸ். பணிக்கரைத் தொடர்பு கொண்டார். தொழில் வாழ்க்கை நம்பூதிரி 1954 ஆம் ஆண்டில் அரசு நுண்கலை கல்லூரியிலிருந்து நுண்கலை மற்றும் பயன்பாட்டுக் கலைகளில் இரண்டு சான்றிதழ் பட்டங்களைப் பெற்றார். மேலும் கே. சி. எஸ். பணிக்கரின் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் தங்கி ஒரு வருடத்தில் ஆறு ஆண்டு படிப்பை முடித்தார், 1960 ஆம் ஆண்டில் மாத்ருபூமி செய்தித்தாளில் பணியாளர் கலைஞராக சேர கேரளா திரும்பினார். 1982 வரை மாத்ருபூமியில் பணியாற்ரிய இவர், மலையாளத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஓவியம் வரைந்தார். மாத்ருபூமியில், ‘நானியம்மையும் லோகாவும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது ஒரு பிரபலமான கார்ட்டூன் தொடராக மாறியது. 1982 ஆம் ஆண்டில், கலாகெளமுதி என்ற செய்தி இதழில் சேர்ந்தார். பின்னர், தி நியூ இந்தியன் எக்சுபிரசின் சமகாலிகா மலையாள வாரிகா என்ற வாராந்திர செய்தி இதழில் சேர்ந்தார். சொந்த வாழ்க்கை நம்பூதிரி, மிருணாளினி என்பவரை மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு பரமேசுவரன் மற்றும் வாசுதேவன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். மலப்புறம் மாவட்டத்திலுள்ள நடுவட்டத்தில் இவரது குடும்பம் வசித்து வந்தது. இறப்பு நம்பூதிரி தனது 97வது வயதில் ஜூலை 7,2023 அன்று இறந்தார். நம்பூதிரி இரண்டு முறை கேரள லலித் கலா அகாதமியின் தலைவராகப் பணியாற்றியவர், இவருடைய பதவிக்காலத்தில்தான் அகாதமி திருச்சூரில் ஒரு சொந்தமான கட்டிடம் கட்டப்பட்டு மாற்றப்பட்டது. கௌரவங்கள் திரைப்பட இயக்குநரும் கார்ட்டூனிஸ்டு கலைஞருமான அரவிந்தன் நம்பூதிரி-யின் நண்பராக இருந்தார். அரவிந்தன் தனது முதல் படமான உத்தராயணம்-ஐ உருவாக்கியபோது, நம்பூதிரியை படத்தின் கலை இயக்குனராக பணியாற்ற அழைத்தார். இந்த படம் 1974 ஆம் ஆண்டில் நம்பூதிரிக்கு சிறந்த கலை இயக்குனருக்கான விருது உட்பட ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுத் தந்தது. கேரள லலிதகலா அகாடமி 2003 ஆம் ஆண்டில் நம்பூதிரிக்கு ரவி வர்மா விருதை வழங்கியது. மேலும் 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதைப் பெற்ற மூன்றாவது நபராக இவர் ஆனார். கேரள மாநில குழந்தைகள் இலக்கிய நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் குட்டிகலூடே ராமாயணத்தில் (குழந்தைகளுக்கான இராமாயணம்) இவரது பணிக்காக சிறந்த ஓவியத்துக்கான பால சாகித்ய விருதை வழங்கியது. புகைப்படங்கள் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் K. M. Vasudevan Namboodiri at Penguin India மலப்புறம் மாவட்ட நபர்கள் மலையாள நபர்கள் கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள் 2023 இறப்புகள் 1925 பிறப்புகள்
682104
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
தானியங்கி தொடருந்து
தானியங்கி தொடருந்து இயக்கம் அல்லது தானியங்கி தொடருந்து (ஆங்கிலம்: Automatic Train Operation அல்லது Automatic Train) (ATO) என்பது மனித உள்ளீடு இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி தொடருந்து அமைப்பைக் கொண்ட ஒரு தொடருந்து இயக்கம் ஆகும். இந்த வகைத் தொடருந்துகளை இயக்கவும் அல்லது கண்காணிக்கவும் மனித உள்ளீடுகள் தேவை இல்லை. அவை மின்னியல் முறைமையில் தன்னியக்கமாகவே செயல்படுகின்றன. இந்த வகை தானியங்கி தொடருந்துகள் திட்டமிடப்பட்டபடி நிறுத்துவது; வேகத்தைக் கட்டுப்படுத்துவது; கதவுகளைத் திறப்பது அல்லது மூடுவது போன்ற செயல்பாடுகளை, மனித வழிக்காட்டல்கள் இல்லாமலேயே நிறைவேற்றுகின்றன. பொது தானியக்கத்தின் அளவு தானியக்கத் தரத்தால் குறிக்கப்படுகிறது (ஆங்கிலம்: Grade of Automation) (GoA). மேலும், தானியக்கத்தின் தரங்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டு, தரம் 1-இல் இருந்து தரம் 5 வரை என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தத் தானியக்கத் தரத்தில் தரம் 4 (GoA4) வரையிலான தொடருந்துகளில், ஊழியர்கள் எவரும் இல்லாமல் அவை தாமாகவே செயல்படுத்திக் கொள்கின்றன. தரம் 1-இல் இருந்து தரம் 5 வரையிலான குறைந்த தர தானியக்கத்திற்கான செயல்பாடுகளில், அவசரநிலை இடர்பாடுகளைக் கண்காணிக்க ஓர் ஓட்டுநர் இருப்பது வழக்கம். மேலும் காண்க தானுந்து நகரும் தானியங்கி தனித்தியங்கும் வாகனம் தன்னியக்க வங்கி இயந்திரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tests of train obstacle detection system, project Robotrain. தானியங்கியல் தானுந்துகள் தானுந்து தொழில்நுட்பம் 20-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
682105
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
உதம்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
உதம்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Udhampur West Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காஙமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொதியானது உதம்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் பவன் குமார் குப்தா 47164 வாக்குகள் பெற்று உதம்பூர் மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்றார். மேற்கோள்கள் உதம்பூர் மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682108
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF
குலாப் ராம்சந்தனி
குலாப் ராம்சந்தனி (Gulab Ramchandani) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை தேராதூன் நகரத்திலுள்ள டூன் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இந்திய கல்வி முறையில் பல குறிப்பிடத்தக்க கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு. ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி இராம்சந்தனி பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை இராணுவத்தில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். 1937 ஆம் ஆண்டில், இவர் டூன் பள்ளியிலும் பின்னர் லக்னோ பல்கலைக்கழகத்திலும் படிக்கச் சென்றார், அங்கு தாவரவியலில் இவர் இளங்கலை பட்டம் பெற்றார். தொழில் மும்பையிலுள்ள புளூ சுடார் நிறுவனத்தில் பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி 33 ஆண்டுகள் அங்கு பணியில் இருந்தார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார் . 1979 ஆம் ஆண்டில், டூன் பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்தார், இந்த பதவியில் நியமிக்கப்பட்ட முதல் முன்னாள் மாணவர் என்ற சிறப்புக்கு உரியவர் ஆனார். ஆரம்பத்தில், தனது பெருநிறுவனப் பின்னணி காரணமாக ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டார். பின்னர், பள்ளி நிர்வாகம் மற்றும் நிதிகளை அவர் மறுசீரமைத்தது பள்ளிக்கு நிதி நிலைப்புத் தன்மையைக் கொண்டு வந்தது. ஆர்க்கிட் கல்வி அமைப்பின் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். வெல்காம் ஆண்கள் பள்ளி, சன்சுகார் பன்னாட்டுப் பள்ளி, அசாம் பள்ளத்தாக்கு பள்ளி மற்றும் செலா குய் பன்னாட்டுப் பள்ளி ஆகியவற்றின் நிர்வாக அமைப்புகளிலும் இருந்தார். 1988 ஆம் ஆண்டில் டூன் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ராம்சந்தனி இந்தியா முழுவதும் சுமார் 25 பள்ளிகளை நிறுவினார். மரணம். நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் காரணமாக ராம்சந்தனி 13 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு 13 ஆம் தேதியன்று இறந்தார். மேற்கோள்கள் 2017 இறப்புகள் 1935 பிறப்புகள் இந்தியர்கள் கல்வியாளர்கள் தேராதூன் மாவட்டம்
682109
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பாங்குரா மக்களவைத் தொகுதி
பாங்குரா மக்களவைத் தொகுதி, இந்தியாவிலுள்ள 543 மக்களவை நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள பாங்குரா மக்களவைத் தொகுதியின் எண் 36 ஆல்கும். இத்தொகுதியின் கீழ் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகள் பாங்குரா மாவட்டத்திலும், ஒரு சட்டமன்றத் தொகுதி புருலியா மாவட்டத்திலும் உள்ளன. சட்டமன்றப் பிரிவுகள் மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான எண் பாங்குரா பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர், பாங்குரா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பாரா (சட்டப்பேரவைத் தொகுதி எண் 240) ரகுநாத்பூர் (சட்டப்பேரவைத் தொகுதி எண் 241) காசிப்பூர் (சட்டப்பேரவைத் தொகுதி எண் 242) ஹூரா (சட்டப்பேரவைத் தொகுதி எண் 243) சத்னா (சட்டப்பேரவைத் தொகுதி எண் 248) பாங்குரா (சட்டப்பேரவைத் தொகுதி எண் 251) மற்றும் ஒண்டா (சட்டப்பேரவியலின் தொகுதி எண். 252) நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 மேலும் காண்க மக்களவை தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாங்குரா லோக்சபா தொகுதி தேர்தல் 2019 முடிவுகள் மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
682110
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சினானி சட்டமன்ற தொகுதி
சினானி சட்டமன்றத் தொகுதி (Chenani Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சினானி, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் பல்வந்த் சிங் மங்கோடியா 47990 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் காண்க உதம்பூர் மாவட்டம் மேற்கோள்கள் உதம்பூர் மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682112
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
வெள்ளத்தோடு அணை
வெள்ளத்தோடு அணை (Veluthodu Dam) என்பது இந்தியாவில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரன்னி வட்டத்தின் சீதத்தோடு பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது வெள்ளத்தோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பைஞ்சுதை-ஈர்ப்பு அணை ஆகும். இது பம்பா ஆற்றின் துணை ஆறான காக்கட் ஆற்றின் துணை ஆறாகும். இந்த அணை முதன்மையாக மின்சாரத்திற்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலாம் நீரானது மூழியார் நீர்த்தேக்கத்திலிருந்து காக்காடு மின் நிலையத்திற்கு நீரைக் கடத்திச் செல்லும் அமைப்புக்கு நீரைத் திருப்பி விடப்பயன்படுகிறது. இந்த மின் நிலையம் சபரிகிரி மின் நிலையத்திலிருந்து வரும் கடைமடைத் தண்ணீரையும், மூழியாறு மற்றும் வெள்ளத்தோடு ஆறுகளிலிருந்து பயன்படுத்துகிறது. மின் உற்பத்திக்குப் பிறகு, காக்கட் மின் நிலையத்திலிருந்து தண்ணீர் காக்கட் ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது. இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகைப்பள்ளி ஆகிய வட்டங்கள் வழியாக நீர் திறக்கப்படுகிறது. இது கேரள மாநில மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்படு. விவரக்குறிப்புகள் அட்சரேகை: 9 0 18 '10 "வ தீர்க்கரேகை: 77 0 02′30 "கி கிராமம்: சீதத்தோடு ஊராட்சி: சீதத்தோடு மாவட்டம்: பத்தனம்திட்டா ஆற்றுப் படுகை: பம்பா ஆறு: வெள்ளத்தோடு ஆறு அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு: காக்காடு ஆறு திட்டத்தின் பெயர்: காக்கட் நீர் மின் திட்டம் நிறைவுற்ற ஆண்டு: 1990 அணையின் வகை: பைஞ்சுதை-ஈர்ப்பு வகைப்பாடு: (நடுத்தர உயரம்) அதிகபட்ச நீர் மட்டம்: உயர்த்தப்பட்ட மட்டம் 195.00 மீ முழு நீர்த்தேக்க நிலை: உயர்த்தப்பட்ட மட்டம் 192.00 மீ முழு நீர்த்தேக்க நிலை: 0.7 Mm3 இல் சேமிப்பு ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 20.50 மீ நீளம்: 107.00 மீ கசிவுப்பாதை: கதவில்லா-மேல்நிலைப் பிரிவு முகட்டு மட்டம் உயர்த்தப்பட்ட மட்டம்: 192.00 மீ ஆற்றின் வெளியேற்று: 1 எண் 1 1.8 x 2.7 மீ திட்டத்தின் நோக்கம்: நீர்மின் சக்தி நீர்த்தேக்கக் கொள்ளளவு: 0.8 பில்லியன் கேலன்/ (0.6 மில்லியன் கன மீட்டர்) நீர்த்தேக்கம் வெள்ளத்தோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வேள்ளத்தோடு அணையால் இந்த நீர்த்தேக்கம் உருவாகிறது. நீர் பரப்பு பகுதி: 0.0635 சதுர கி. மீ. முழு நீர்த்தேக்க நிலை: 192 மீ குறைந்தபட்ச இழுவை நிலை: 186 மீ முழு நீர்த்தேக்க நிலை: 0.607 MCM இல் பயனுள்ள சேமிப்பு முழு நீர்த்தேக்க நிலை: 0.187 MU இல் ஆற்றல் சமமான காக்காடு நீர்மின் திட்டம் காக்காடு நீர்மின் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 25 மெகாவாட் திறன் கொண்ட 2 விசையாழிகளைப் பயன்படுத்தி 50 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்கிறது. வருடாந்திர உற்பத்தி 262 மெகாவாட் திறன் ஆகும். இந்த இயந்திரம் 1999 செப்டம்பர் 16 அன்று இயக்கத்தினைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கத்தை மூழியார் அணை உருவாக்குகிறது. இரண்டாவது நீர்த்தேக்கம் வெள்ளத்தோடு அணையில் அமைந்துள்ளது. மின் உற்பத்திக்குப் பிறகு, காக்காடு மின் நிலையத்திலிருந்து தண்ணீர் காக்காடு ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது. மேற்கோள்கள் கேரள அணைகள்
682118
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
காசுமோகுளோர்
காசுமோகுளோர் (Kosmochlor) என்பது NaCr3+Si2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். குரோமியம் சோடியம் கிளினோபைராக்சீன் வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. விண்கற்களில் தோன்றியதற்காக செருமனியின் காசுமிசு என்ற சொல்லிலிருந்து , இதன் பச்சை நிறத்திற்காக கிரேக்க சொல்லான குளோர் என்ற பெயரிலிருந்தும் காசுமோகுளோர் என்ற பெயர் வந்தது. முதன்முதலில் மெக்சிகோ நாட்டின் இயிக்குபில்கோ நகராட்சியில் 1897 ஆம் ஆண்டு தோலுகா விண்கல்லில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது. சில இயேடிடைட்டு எனப்படும் உருமாறிய பாறைகளின் முக்கிய அங்கமாகவும் சில இரும்பு விண்கற்களின் துணைக் கனிமமாகவும் காசுமோகுளோர் தோன்றுகிறது. கிளிஃப்டோனைட்டு (கிராஃபைட்), குரோமியன் டயோப்சைட்டு, தோலுகாவில் உள்ள திரொலைட்டு; தௌப்ரீலைட்டு, கிரினோவைட்டு, உரோயிட்டெரைட்டு, இரிச்டெரைட்டு, குரோமைட்டு மற்றும் இயேடைட்டு, குளோரைட்டு (பர்மா) ஆகிய தனிமங்களுடன் சேர்ந்து காசுமோகுளோர் காணப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் காசுமோகுளோர் கனிமத்தை Kos என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் கனிமங்கள்
682122
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
கலி புருசன்
கலி புருசன் (Kali (, IAST: ,கலி யுகத்தில் துன்பம், தீங்கு, திடுக்கிடுதல், குழப்பம் மொத்தமாக அதர்மத்திற்கு காரணமானவர். கலியுக முடிவில் பகவான் விஷ்ணு பத்தாவதாக கல்கி அவதாரம் எடுத்து நாய் உருவில் திரியும் கலி புருசனுடன் போரிட்டு கொல்வார். கலி புருசன் குறித்து கல்கி புராணம், பாகவத புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணங்களிலும் மற்றும் மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது. மகாபாரதம் மகாபாரத வன பருவம் அத்தியாயம் 53 முதல் 78 முடிய நளன்-தமயந்தி தம்பதியரின் வாழ்க்கையை கலி புருசன் சீரழித்த கதையைக் கூறுகிறது. விதர்ப்ப நாட்டு அரச குமாரியான தமயந்தியின் சுயம்வரத்தில், நிசாத நாட்டு மன்னர் நளன் மற்றும் கந்தர்வர்களில் ஒருவருரான கலி புருசனுடன், இந்திராதி தேவர்களும் நளன் உருவத்தில் கலந்து கொள்கின்றனர். தேவர்களின் கண்கள் இமைக்காமல், கழுத்து மாலைகள் தேனீக்கள் மொய்க்காமல இருந்தமையைக் கண்ட தமயந்தி, கண்களை இமைக்கும் நளனுக்கு மாலையிட்டு திருமணம் செய்து கொள்கிறாள். இதனால் பொறாமை கொண்ட இந்திரன் கலி புருசனை நளன் மற்றும் அவனின் நிசாத நாட்டின் மீது ஏவி பெருந்துயரங்களில் ஆழ்த்துகிறார். நளன் தனது உடன்பிறப்புடன் சூதாட்டத்தில் நாட்டைஇழந்ந்து, காட்டிற்கு மனைவி மக்களுடன் செல்கிறான். காட்டிலேயே மனைவி மக்களை விட்டுவிட்டு செல்கிறான். இறுதியில் தனது மாமனார் விதர்ப்ப நாட்டு அரசனின் சமையல் கூடத்தில் பணிபுரிகிறார். இறுதியில் கலி புருசன், நளனை விட்டு அகன்ற பின் நளன் தமயந்தியை அடைகிறான். ஆதி பருவம் 40ல் கலி யுகம் தொடங்குவதற்கு முன், குரு நாட்டின் பேரரசர் பரிட்சித்து வேட்டையாடச் சென்ற போது, கலி புருசன் இடைமறித்து, அவனது நாட்டில் செல்ல அனுமதி கேட்கிறார். மன்னர் பரிட்சித்தும், சூதாட்டம் நடைபெறுமிடங்கள், மதுக்கூடங்கள், விபசாரம் செய்யுமிடங்கள், தங்கம் புழங்கும் இடங்களில் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கிறார். உடனே கலி புருசன் பரிட்சித்து மன்னரின் தங்க மணி மகுடத்தில் புகுந்து, பரிட்சித்துவின் மனதை கெடுக்கிறார். தாகமாக இருந்த பரிட்சித்து, அங்கிருந்த குடிலின் முன் தியானத்தில் அமர்ந்திருந்த சமீகரை குடிப்பதற்கு நீர் கேட்டான். சமீகர் தியானத்தில் இருந்தமையால் ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தார். இதனால் கோபமடைந்த பரிட்சித்து முனிவரின் கழத்தில் இறந்த பாம்பை போட்டு விட்டு அரண்மனை திரும்பினார்.சமீகரின் கழுத்தில் இறந்த பாம்பைக் கண்ட அவரது மகனும், முனிவருமான சிருங்கி, இச்செயலை செய்தவன் ஏழு நாட்களில் பாம்பு கொத்தி மடிவான் என சாபமிட்டார். இச்சாபச் செய்தி அறிந்த மன்னர் பரிட்சித்து, தனது மகனை ஜனமேஜயனை அரியணையில் அமர்த்தி விட்டு, சுகரிடம் பாகவத புராணம் கேட்டார்.. ஏழாவது நாளின் பாம்பரசனான தட்சகன் பரிட்சித்து மன்னரை கடித்து கொன்றார். புராணங்களில் கலி புருசன் கல்கி புராணம் கலி யுகத்தில் கலி புருசனின் தாக்கம் எவ்வாறாக இருக்கும் என்பது குறித்து கல்கி புராணத்தில் கீழ் கண்டவாறு கூறப்பட்டு உள்ளது. கலியுகத்தில் கலி புருசன் அனைத்து மக்களின் மனதையும் தீய எண்ணங்களைக் கொண்டவர்களாக மாற்றி விடுவார். கலியுக மக்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதையும், சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். தத்தமது தலைமுடியை அழகுபடுத்திக்க கொள்வதிலும், சிறந்த ஆடைகளை அணிந்து கொள்வதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும் அதிக நேரத்தை வீணடித்துக் கொள்வார்கள். கலியுகத்தில், செல்வந்தர்கள் அதிகமாக மதிக்கப்படுவார்கள். வட்டிக்குக் கடன் கொடுத்து செழுமையாக வாழ்பவர்கள் சமூகத்தின் தூண்கள் என பாராட்டப்படுபவர்களாக இருப்பார்கள். ஆன்மீகவாதிகள் பொருளாசை மற்றும் பிற ஆசைகளில் ஈடுபடுவார்கள் என்பதினால், முதியோர்களையும் ஆன்மீகத் தலைவர்களையும் சற்றும் அச்சம் இன்றி மக்கள் இழிவுபடுத்திப் பேசுவார்கள். கலியுகத்தில் உலக நிலைமை எப்படி இருக்கும் என்றால் நாட்டை ஆள்பவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிவார்கள். தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும். குடும்பங்கள் மீது வாழ முடியாத அளவிலான வரிச் சுமைகள் இருக்கும். தெய்வ நம்பிக்கைகள் குறைந்து கொண்டே போகும். இறை வழிபாடு தவறான முறையில் நடைபெறும். ஆலயங்கள் சூறையாடப்படும், மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது, கற்பு சூறையாடப்படும். பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும், ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் அதிக அளவில் இருக்கும், சூது, வாது, பொய்மை, மற்றும் பொறாமை போன்றவை ஓங்கும். அரசே மக்களை துன்புறுத்துவார்கள், மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வர். பூமியானது அக்கிரமமான நிலை அமையக் காரணமாக இருப்பவனே கலி புருசன் என்கின்றார்கள். தேவலோகத்தில் இருக்கும் கலி புருசனும் தெய்வீக சக்தி போன்ற தீய சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ள ஒரு கணம்தான்.. அவரை படைத்ததும் பிரபஞ்சத்தை உருவாக்கிய அதே பிரம்மா தான். கல்கி புராணத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட கலி புருசனின் பரம்பரையை விளக்குகிறது. துவாபர யுகம் முடிவில் மற்றும் கலி யுகத்தின் தொடக்கத்தில் கலி புருசன் மற்றும் அவரது அரக்க குடும்பத்தினர், பூமியில் மனித வடிவலில் தோன்றி முனிவர்களுக்கும், மக்களுக்கும் எண்ணற்ற துன்பங்கள் செய்வார்கள்.கலியுகத்தின் போது நால்வகை வர்ணங்கள் மற்றும் ஆசிரம தர்மங்கள் சிதைந்து, வேள்விகள் செய்வதை விடுத்து தெய்வ வழிபாடு மனிதனால் கைவிடப்படும்.. கலி யுகத்தின் போது, கலி அரக்கன் மற்றும் கலியின் குடும்பத்தினரை அழிக்க பகவான் விஷ்ணு கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]] எடுத்து வெள்ளைக் குதிரை மீதர்ந்து, கையில் வாளேந்தி பூவுலகில் தோன்றுவார். கல்கி பகவான் கலி மற்றும் அவனைச் சார்ந்தவர்களைக் கொன்று கற்றவர்களையும், மக்களையும் காப்பார். பாகவத புராணம் பாகவத புராணத்தில், பகவான் கிருஷ்ணர் பூவுலகை விட்டு வைகுண்டம் சென்றவுடன், பூவுலகில் கலி புருசனின் ஆட்சி துவங்கியது எனக்கூறுகிறது. மன்னர் பரிட்சித்து மனதில் கலி புருசன் புகுந்து, முனிவர் சமீகர் கழுத்தில் இறந்த பாம்பை போட்டதால், சமீகரின் மகன் சிருங்கிக்கு ஏற்பட்ட கடுங்கோபத்தால், இக்கொடிய செய்தவன் ஏழு நாட்களில் பாம்பு கடித்து இறப்பான் எனச் சாபமிட்டார். கலி புருசனின் இறப்பு கல்கி புராணத்தின்படி, கல்கி பகவானுக்கும், கலி புருசனுக்கும் இடையே நடக்கும் போரில், வீழ்த்தப்பட்ட கலி புருசன் கழுதை வடிவம் கொண்டு தனது அரண்மனை நோக்கி ஓடுகிறார். கல்கி பகவான் கலி புருசனை தேடிக் கொல்கிறார். இதனையும் காண்க கல்கி அவதாரம் கல்கி புராணம் குறிப்புகள் வெளி இணைப்புகள் Places of Kali – Podcast of Kali's tale from the Bhagavata Purana. કલિયુગનાં ચાર આશ્રયસ્થાન (Kaliyuga's mainstay) – The tale of Kali and Parikshit in Gujarati. Srimad Bhagavatam: Cant 1 – See chapters 16 and 17. A very large detailed painting of King Parikshit about to kill Kali. இந்து தொன்மவியல் மாந்தர் மகாபாரதக் கதை மாந்தர்கள்
682125
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
மெலோபோரசு
மெலோபோரசு ("தேன் கொண்டு செல்லும்") என்பது பார்மிசினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்புகளின் ஒரு பேரினம் ஆகும். இந்த பேரினம் ஆத்திரேலியாவில் காணப்படுகிறது. இங்கு இதன் இனங்கள் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் பொதுவானவை. சிற்றினங்கள் மெலோபோரசு ஏனியோவைரன்சு (லோவ்ன், 1865) மெலோபோரசு ஆண்டர்செனி அகோசுதி, 1998 மெலோபோரசு பகோட்டி லுபாக், 1883 மெலோபோரசு பைரோய் போரெல், 1907 மெலோபோரசு புரூனியசு மெக்ரேவி, 1949 மெலோபோரசு கான்சுடான்சு சாண்ட்சி, 1928 மெலோபோரசு கரதசு போரெல், 1902 மெலோபோரசு பீல்டி போரெல், 1910 மெலோபோரசு புல்விகிர்டசு கிளார்க், 1941 மெலோபோரசு கிர்சூட்டசு போரெல், 1902 மெலோபோரசு இன்சுலாரிசு வீலர், 1934 மெலோபோரசு இரிடெசென்சு (எமரி, 1887) மெலோபோரசு லேடிசெப்சு வீலர், 1915 மெலோபோரசு லூடியசு போரெல், 1902 மெலோபோரசு மஜெரி அகோசுடி, 1998 மெலோபோரசு மரியசு போரெல், 1910 மெலோபோரசு முஜ்பெர்ஜி போரெல், 1915 மெலோபோரசு ஓம்னிபேரன்சு போரெல், 1915 மெலோபோரசு பிலிப்சு சாண்ட்சி, 1919 மெலோபோரசு போட்டேரி மெக்ரேவி, 1947 மெலோபோரசு சிபியோ போரெல், 1915 மெலோபோரசு டர்னெரி போரெல், 1910 மெலோபோரசு வீலெரி போரெல், 1910 மேலும் காண்க தேன்குட எறும்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Articles using diversity taxobox கணுக்காலி பேரினங்கள் எறும்புகள்
682126
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28Y%29
பெரிட்டைட்டு-(Y)
பெரிட்டைட்டு-(Y) (Perettiite-(Y)) என்பது Y2Mn4FeSi2B8O24. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். ஒருங்கிணைவு சிலிக்கேட்டு போரேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு சுவிசட்சலாந்து நாட்டு மணிக்கல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் அடால்ஃப் பெரிட்டி என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மியான்மரின் மொகோக்கில் இருந்த ஒரு பினாக்கைட்டு படிகத்தில் உள்ளடங்கி இருந்தது கண்டறியப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெரிட்டைட்டு கனிமத்தை அங்கீகரித்து Ptt-Y என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தியது. மேற்கோள்கள் சிலிக்கேட்டு கனிமங்கள் போரேட்டு கனிமங்கள் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள் மாங்கனீசு கனிமங்கள் இட்ரியம் கனிமங்கள் போரோசிலிக்கேட்டுகள்
682130
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
சமீகர்
சமீகர் குரு நாட்டின் எல்லையில் உள்ள காட்டில் தனது மகன் சிருங்கியுடன் தவ வாழ்க்கை வாழ்பவர். ஒரு நாள் குரு நாட்டின் மன்னரும், அருச்சனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரிட்சித்து மன்னர் காட்டில் மான் வேட்டையாடி களைத்துப் போய், தாகம் கொண்டிருந்தார். அவ்வமயம் கலி யுகம் தோன்றியதால், கலி புருசன் பரிட்சித்தின் மனதில் புகுந்தார். காட்டில் குடில் அமைத்து தியானத்தில் இருந்த சமீகர் எனும் முனிவரைக் கண்டு, தாகத்திற்கு நீர் கேட்டான் பரிட்சித்து. ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்த சமீகருக்கு, மன்னர் பரிட்சித்து கூறியது காதில் விழவில்லை. எனவே ஆத்திரம் கொண்ட பரிட்சித்து இறந்த பாம்பை சமீகர் முனிவரின் கழுத்தில் இட்டுச் சென்றான்.. இதனை அறிந்த சமீகரின் மகன் சிருங்கி முனிவர், சமீகரின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டுச் சென்றவன், இன்று முதல் ஏழாவது நாளில் நாகர்களின் தலைவன் தட்சகன் எனும் பாம்பு தீண்டி மாள்வான் எனச்சாபமிட்டார். இச்செய்தியை தியானத்திலிருந்து மீண்ட சமீகர், தனது மகன் சிருங்கி இட்ட சாபம் குறித்து, மன்னர் பரிட்சித்துவிடம் தெரிவித்தார். உடனே பரிட்சித்து தனது மகன் ஜனமேஜயனை அரச பட்டம் சூட்டி, அரியணையில் அமர வைத்தார். பின்னர் காட்டிற்குச் சென்று, சுகப் பிரம்மத்தை அணுகி, பாகவத புராணம் கேட்டான். முனிவர் சமீகரின் மகன் சிருங்கியின் சாபத்தின்படி, ஏழாவது நாளில் நாகர்களின் தலைவர் தட்சகன், பரிட்சித்தை தீண்டினான். இதனால் மரணமடைந்த பரிட்சித்து மன்னர் வைகுந்தம் அடைந்தார். மேற்கோள்கள் மகாபாரதக் கதை மாந்தர்கள்
682132
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
பிரனய் சகாய்
பிரனய் சகாய் (Pranay Sahay) 1975 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த இந்திய காவல்துறை அதிகாரியாவார். இந்தியாவின் மிகப்பெரிய துணை இராணுவப் படையான மத்திய சேமக் காவல் படையின் தலைமை இயக்குநராக இருந்தார். மத்திய சேமக் காவல் படை பதவிக்கு முன் ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் காவல்துறை இயக்குநராக பதவியில் இருந்தார். இவருடைய தற்போதைய முக்கிய இலக்கு நிரல் இந்தியாவில் பரவி வரும் மாவோயிசம் மற்றும் பயங்கரவாதத்தை சமாளிப்பதாக இருந்தது. பிரனய் சகாய் 2013 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது காவல் துறையின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். மேற்கோள்கள் 1952 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்தியர்கள் இந்திய காவல் அதிகாரிகள்
682133
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF
இராமச்சந்திரன் மோகேரி
இராமச்சந்திரன் மோகேரி (Ramachandran Mokeri) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாடக நடிகராவார். 1947 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். கேரளாவில் புரட்சிகர சமூக நாடக நடைமுறையில் இராமச்சந்திரன் மோகேரி குறிப்பாக கவனம் செலுத்தினார். தென்னிந்தியாவின் வட கேரளாவைச் சேர்ந்த இவர் நாடக ஆர்வலர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர் மற்றும் அறிஞர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நாடகம் மற்றும் நுண்கலை பள்ளியில் மோகேரி இயக்குநராக பணியாற்றினார். திருச்சூர் நகரின் புறநகர்ப் பகுதியான அரணட்டுக்கரையில் அமைந்துள்ள பள்ளியில், பல்கலைக்கழகத்தின் இந்தத் துறை நாடகம் மற்றும் நாடகத்தில் முறையான கல்வியையும் பயிற்சியையும் வழங்குகிறது. இந்தப் பள்ளி தேசிய நாடகப் பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளது . சிந்த ரவி போன்ற மலையாளத் திரைப்பட இயக்குநர்களுடன் இவர் இணைந்து பணியாற்றினார். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் காலமானார். மேற்கோள்கள் மலையாள நபர்கள் 2022 இறப்புகள் 1940கள் பிறப்புகள் நாடக நடிகர்கள்
682141
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி
பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி (Bishnupur Lok Sabha constituency) இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூரில் அமைந்துள்ளது. பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதியின் சட்டமன்ற தொகுதிகளில் ஆறு பாங்குரா மாவட்டத்திலும், ஒரு சட்டமன்றத் தொகுதி புர்பா பர்தமான் மாவட்டத்திலும் உள்ளது. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான பிஷ்ணுபூர் பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, விஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தல்தாங்க்ரா (சட்டமன்றத் தொகுதி எண் 244) ராய்ப்பூர் (சட்டமன்றத் தொகுதி எண் 245) ராணிபந்த் (சட்டமன்றத் தொகுதி எண் 246) இந்த்பூர் (சட்டமன்ற தொகுதி எண் 247) விஷ்ணுபூர் (சட்டமன்ற தொகுதி எண் 253) கோதுல்பூர் (சட்டமன்ற தொகுதி எண் 254) மற்றும் இந்தாசு (சட்டமன்ற தொகுதி எண் 255). நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தல் பொதுத் தேர்தல் 2019 பொதுத் தேர்தல் 2014 }} பொதுத் தேர்தல் 2009 }} பொதுத் தேர்தல் 2004 }} பொதுத் தேர்தல்கள் 1962-2004 பெரும்பாலான போட்டிகள் பலமுனை கொண்டவையாக இருந்தன. இருப்பினும், வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் மட்டுமே கீழே குறிப்பிடப்பட்டுள்ளனர். 1951 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில், அப்போது பிஷ்ணுபூர் பகுதியையும் உள்ளடக்கிய பாங்குரா மக்களவைத் தொகுதி இரண்டு இடங்கள் இருந்தன; அதில் ஒன்று பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டது]] மேலும் காண்க மக்களவை தொகுதிகளின் பட்டியல் வெளி இணைப்புகள் 2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் மேற்கோள்கள் மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
682144
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
அனத்தோடு அணை
அனத்தோடு அணை (Anathode Dam) என்பது இந்தியாவின் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சீதத்தோடு கிராமத்தின் சீதத்தோடு ஊராட்சியில் அமைந்துள்ள கொத்து ஈர்ப்பு வகையின் பக்கவாட்டு அணையாகும். இந்த அணை பம்பை ஆற்றின் துணை ஆறான அனத்தோடு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. அனத்தோடு என்பது பம்பை ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்பு கக்கி அணை கீழ்நிலையில் கக்கி ஆற்றுடன் சேரும் ஒரு நீரோடையாகும். இந்த அணை கக்கியுடன் ஒரு பொதுவான நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. நீர்த்தேக்க வளாகத்திற்கான நீர் கசிவுப்பாதை ஆனதோடு பக்கவாட்டு அணையின் பக்கத்தில் அமைந்துள்ளது. இரண்டு அணைகளால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் இயற்கை பள்ளத்தாக்கு வழியாக இணைக்கப்பட்டுள்ளன. கக்கி மற்றும் அனத்தோடு அணைகள் சாலை வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. ரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகைப்பள்ளி ஆகிய வட்டங்கள் இந்த அணையின் நீரைப் பயன்படுத்துகின்றன. விவரக்குறிப்புகள் அட்சரேகை: 9 0 20'30 "வடக்கு தீர்க்கரேகை: 77 0 09'00 " ஊராட்சி: சீதத்தோடு அணையின் வகை: கொத்து-ஈர்ப்பு கிராமம்: சீதத்தோடு மாவட்டம்: பத்தனம்திட்டா ஆற்றுப் படுகை-பம்பை ஆறு: கக்கி-அனத்தோடு (பம்பா ஆற்றின் துணை ஆறு) அணையிலிருந்து வெளியேறும் நீரைப்பெறும் ஆறு: பம்பை நிறைவுற்ற ஆண்டு: 1967 வகைப்பாடு: அதிகபட்ச உயரம் அதிகபட்ச நீர் மட்டம்: 982.16 மீ முழு நீர்த்தேக்க நிலை: 981.46 மீ FRL: 454.14 Mm3 இல் சேமிப்பு ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 51.81 மீ நீளம்: 376.12 மீ கசிவுப்பாதை: 4 எண் சுற்றுவட்டப் பாதை, ஒவ்வொன்றும் 12.8 x 6.1மீ அளவு உச்சி மட்டம்: EL 975.36 மீ மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சபரிகிரி தொலைத் திரைப்படம் திட்டம் கேரள அணைகள்
682149
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பானி சட்டமன்றத் தொகுதி
பானி சட்டமன்றத் தொகுதி (Bani Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பானி, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2014 2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், பானி தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சீவன் லால் வெற்றி பெற்றார். 2024 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ராமேசுவர் சிங், பானி தொகுதியில் 18672 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் காண்க கிஷ்த்வார் மேற்கோள்கள் கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682151
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D
பியூட்டைரோ நைட்ரைல்
பியூட்டைரோ நைட்ரைல் (Butyronitrile) என்பது C3H7CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டேன் நைட்ரைல், புரோப்பைல் சயனைடு என்ற பெயர்களாலும் இந்த நைட்ரைல் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இந்த திரவமானது பெரும்பாலான முனைவு கரிம கரைப்பான்களுடன் கலக்கக்கூடியதாகும். பயன்கள் முக்கியமாக கோழி மருத்துவத்திற்குப் பயன்படும் மருந்தான ஆம்ப்ரோலியம் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. குறை இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் பயன்படும் எடிபெல்மைன் என்ற மருந்து தயாரிப்பிலும் பியூட்டைரோ நைட்ரைல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு 1-பியூட்டனாலை அமோனியாக்சிசனேற்றம் செய்து பியூட்டைரோ நைட்ரைல் தயாரிக்கப்படுகிறது. C3H7CH2OH + NH3 + O2 → C3H7CN + 3 H2O விண்வெளியில் சாகிட்டாரியசு பி2 மேகத்தில் உள்ள பெரிய மூலக்கூறு எய்மட்டில் மற்ற சிக்கலான கரிம மூலக்கூறுகளுடன் பியூட்டைரோ நைட்ரைல் கண்டறியப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் NIST Chemistry WebBook page for C4H7N CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards ஆல்க்கேன்நைட்ரைல்கள்
682166
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஏ.வி.எம் மரபுரிமை அருங்காட்சியகம்
ஏ. வி. எம். பாரம்பரிய அருங்காட்சியகம் (AVM Heritage Museum) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஏவிஎம் படப்பிட்டிப்பு அரங்க வளாகத்தில் அமைந்துள்ள ஓர் அங்காட்சியகம் ஆகும். ஏ. வி. எம். பாரம்பரிய அருங்காட்சியகம் 2023ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இது ஏ. வி. எம். நிறுவனத்தின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பரைசாற்றும்விதமாக உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் ஏ. வி. எம். நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் பயன்படுத்தபட்ட எல்லா கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பராசக்தி திரைப்படம் வெளியாகி 50ஆம் ஆண்டை நினைவுகூறும் விதமாக இப்படத்தில் ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் காட்சியில் அவர் சக்சஸ் என்ற வசனத்தைக் கூறிய இடத்தில் 2002-இல் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கபட்டது. அந்த நினைவுச் சின்னம் பெயர்க்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல சகலகலா வல்லவன் (1982) படத்தில் இளமை இதோ இதோ பாடலில் கமல்ஹாசன் பயன்படுத்திய 1980 ஆண்டைய ராயல் என்ஃபீல்ட் புல்லட் வண்டி, பாயும் புலி (1983) படத்தின் சண்டைக் காட்சியில் இரசினிகாந்து பயன்படுத்திய நீளமான, உயரம் குறைந்த சுசுகி இருசக்கர ஊர்தி, திருப்பதி (2006), பிரியமான தோழி (2003), அயன் (2009) போன்ற படங்களில் பயன்படுத்தபட்ட இருசக்கர வாகனங்கள், அக்கால லூனா, 1970களில் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்ட கைரிக்சா, சிவாஜி (2007) படத்தில் வாஜி வாஜி பாடலில் இரசினிகாந்து பயன்படுத்திய பல்லக்கு, இரசினி சிலை, எஜமான் (1993) படத்தில் ஆலப்போல் வேலப்போல் பாடலில் மீனா பயன்படுத்திய பல்லக்கு போன்றவையும் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் பேரன் எம். எஸ். குகன் மகிழுந்துகளை சேகரிக்கும் நாட்டமுள்ளவர். இவர் சேகரித்த பழமையான, புதுமையான மகிழுந்துகளும் இங்கு காட்சிப்படுத்தபட்டுள்ளன. 1950களில் தொடங்கி ஏ. வி. எம். படப்பிடிப்புத் தளத்தில் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் உரிய விளக்கக் குறிப்புகளுடன் காட்சிப்படுத்தபட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே பார்க்க அனுமதி உண்டு. மேற்கோள்கள் சென்னையிலுள்ள அருங்காட்சியகங்கள் திரைப்பட அருங்காட்சியகங்கள்
682167
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பிலாவர் சட்டமன்றத் தொகுதி
பிலாவர் சட்டமன்றத் தொகுதி (Billawar Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பிலாவர், உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் முடிவுகள் 2014 2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், பிலாவர் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் நிர்மல் சிங் 43,447 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் மனோகர் லால் சர்மா 25,472 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சம்மு காசுமீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரோமி கசூரியா 3,084 வாக்குகள் பெற்றார். 2024 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சதீசு குமார் சர்மா, பிலாவர் தொகுதியில் 44629 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2002 2008 2014 2024 மேற்கோள்கள் கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682174
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D
சக்சினோநைட்ரைல்
சக்சினோநைட்ரைல் (Succinonitrile) என்பது C2H4(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டேன் இருநைட்ரைல், பியூட்டேன் டைநைட்ரைல் என்ற பெயர்களாலும் இந்த நைட்ரைல் சேர்மம் அழைக்கப்படுகிறது. சக்சினோநைட்ரைல் நிறமற்ற மெழுகு போன்ற திடப்பொருளாகும், இது 58 °செல்சியசு வெப்பநிலையில் உருகும். அக்ரைலோநைட்ரைலுடன் ஐதரசன் சயனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரோசயனேற்றம் நிகழ்ந்து சக்சினோநைட்ரைல் உருவாகும்.: CH2=CHCN + HCN → NCCH2CH2CN சக்சினோநைட்ரைலை ஐதரசனேற்றம் செய்தால் புட்ரெசின் எனப்படும் 1,4-ஈரமினோபியூட்டேன் கிடைக்கும். மேலும் காண்க மலோனோநைட்ரைல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் WebBook page for C4H4N2 CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards ஆல்க்கேன்நைட்ரைல்கள்
682176
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி
கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி (Ganderbal Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கந்தர்பால் சிறிநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2024 2014 மேலும் காண்க கந்தர்பால் மேற்கோள்கள் காந்தர்பல் மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682182
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
ஆனையிறங்கல் அணை
ஆனையிறங்கல் அணை (Anayirangal Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூணாரிலிருந்து 22 கிமீ (14 மைல்) தொலைவில் உள்ள சின்னக்கனல் மற்றும் சாந்தன்பரா ஊராட்சியில் ஓடும் பன்னியார் ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு மண் அணை ஆகும். இந்த அணையின் ஒருபுறம் காடுகளாலும் மறுபுறம் டாட்டா தேயிலைத் தோட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த அணை மூணாறு-குமிளி சாலை அருகில் அமைந்துள்ளது. அணையிலிருந்து பாயும் நீர் பன்னியார் ஆற்றின் மூலம் குத்துங்கல் மற்றும் பொன்முடி அணைகளை அடைகிறது. குத்துங்கல் மற்றும் பன்னியாறு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பீளிராமிலிருந்து பாயும் சிறிய நீரோடைகளும் தமிழ்நாடு எல்லையில் உள்ள மலைகளிலிருந்து பாயும் மழைநீர் இந்த அணையில் சேமித்து வைக்கப்படுகிறது. அணையின் உயரம் 34.14 மீட்டர்கள். அணையின் நீளம் 326.13 மீட்டர்கள். வழக்கமாகச் சூன் மற்றும் சூலை மாதங்களில் பருவமழை காரணமாக நீர்த்தேக்கம் நிரம்பும். இந்த திட்டம் பெரியாற்றின் துணை வடிநிலமான முத்திரப்புழா வடிநிலத்தில் அமைந்துள்ளது. ஆனையிறங்கலில் அணை கட்டுவதன் மூலம் இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது. கேரள மாநில மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளரான ஈ. யு. பிலிபோசு கட்டுமானத்திற்குத் தலைமை தாங்கினார். இந்த அணையில் கட்டப்படாத கசிவு வழி அமைப்பு உள்ளது. நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டுள்ள நீர் ஒரு வெளியேறும் வழியாக ஆற்றின் கீழ்நிலைக்கு வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் குத்துங்கலில் உள்ள ஒரு மேல்நிலை தடுப்பணை மூலம் குத்துங்கல் மின் நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது. மின் உற்பத்திக்குப் பிறகு, கீழ்நிலையில் உள்ள பொன்முடி நீர்த்தேக்கத்திற்கு நீர் விடுவிக்கப்படுகிறது. இந்த நீர் பின்னர் முத்திரப்புழாவின் இடது கரையில் அமைந்துள்ள பன்னியார் மின் நிலையத்திற்கு திரும்பி, மீண்டும் முத்திரப்புழா ஆற்றுக்குள் விடுவிக்கப்பட்டு, கீழ்நிலையில் உள்ள கள்ளார்குட்டி நீர்த்தேக்கத்தினைச் சென்றடைகிறது. இங்கிருந்து, நீர் உடும்பன்சோலை, தேவிகுளம், கோதமங்கலம், மூவாற்றுபுழா, குன்னத்துநாடு, ஆலுவா, கொடுங்கல்லூர், பறவூர் ஆகிய வட்டங்கள் வழியாகப் பாய்கிறது. விவரக்குறிப்புகள் அணையின் வகை: மண் அணை வகைப்பாடு: அதிக பட்ச உயரம் ஊராட்சி: சாந்தன்பரா கிராமம்: பூப்பாரா, சின்னகனல், ராஜகுமாரி மாவட்டம்: இடுக்கி ஆறு: பன்னியார் ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 34.14 மீ நீளம்: 326.13மீ முழு நீர்த்தேக்க நிலை: 1207.02 மீ சேமிப்பு: 50.68 Mm3இல் சேமிப்பு நீர்த்தேக்கம் பன்னியாறு ஆற்றில் நீரை அடைத்து வைப்பதன் மூலம் நீர்த்தேக்கம் உருவாகிறது. பன்னியாறு திட்டத்தின் ஒரு பகுதியாக பொன்முடி அணையால் உருவாக்கப்பட்ட இரண்டாவது நீர்த்தேக்கமும் உள்ளது. முழு நீர்த்தேக்க நிலை = 1207.01 மீ குறைந்தபட்ச இழுவை நிலை = 1188.1 மீ திறன் சேமிப்பு= 49.87 MCM இல் பயனுள்ள சேமிப்பு தேக்கப் அளவு= 65.62 MU இல் உற்பத்தி திறன் மின் உற்பத்தி முத்திரப்புழாவின் இடது கரையில் உள்ள கொன்னத்தடி கிராம ஊராட்சியின் வெள்ளத்தூவல் கிராமத்தில் உள்ள பன்னியாறு மின் நிலையம், தலா 15 மெகாவாட் திறன் கொண்ட 2 விசையாழிகளைப் பயன்படுத்தி 30 மெகாவாட்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வருடாந்திர உற்பத்தி 158 மெகா அலகு ஆகும். 2003ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் 30 மெகாவாட்டிலிருந்து 32 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. மேற்கோள்கள் இடுக்கி மாவட்ட அணைகள் Coordinates on Wikidata
682184
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E2%80%93%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம் - செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line மலாய்: Laluan LRT Ampang - Laluan LRT Sri Petaling) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும். பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன. பொது எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும். எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தின் கிழக்கு முனையமான அம்பாங் நிலையத்தின் பெயரில் அம்பாங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது. எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது. ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு இந்த வழித்தடங்கள் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். இந்த வழித்தடங்களில் 36 நிலையங்கள் உள்ளன. 45.1 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. வரலாறு அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து ஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது. இலகு தொடருந்து ஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது. ஒப்பந்தம் டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் ஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 25 நிலையங்களைக் கொண்ட அசல் அமைப்பு (27.4 கிமீ - 17.0 மைல்) நீளம் கொண்டது. இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. முதல் கட்டம் (12.4 கிமீ - 7.7 மைல்); 14 நிலையங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டம் (15 கிமீ - 9.3 மைல்); 11 நிலையங்களைக் கொண்டது. இரண்டு கட்டங்களும் முறையே டிசம்பர் 1996 மற்றும் சூலை 1998-இல் திறக்கப்பட்டன. கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள் பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அம்பாங் வழித்தடம் செரி பெட்டாலிங் வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து கேஎல்ஐஏ போக்குவரத்து கோலாலம்பூர் மோனோரெயில் காஜாங் வழித்தடம் கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் சா ஆலாம் வழித்தடம் புத்ராஜெயா வழித்தடம் எம்ஆர்டி சுற்று வழித்தடம் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் அம்பாங் வழித்தட நிலையங்கள் AG - Ampang; SP - Sri Petaling; MR - Monorail; PY - Putrajaya செரி பெட்டாலிங் வழித்தடம் AG - Ampang; KA - Kajang Ampang; KA - Kajang Ampang; KJ - Kelana Jaya; SP - Sri Petaling; MR - Monorail; PY - Putrajaya காட்சியகம் செரி பெட்டாலிங் வழித்தடத்தின் காட்சிப் படங்கள் மேற்கோள்கள் மேலும் காண்க காஜாங் வழித்தடம் புத்ராஜெயா வழித்தடம் எம்ஆர்டி சுற்று வழித்தடம் கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க் பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் வெளி இணைப்புகள் மலேசியாவில் போக்குவரத்து மலேசியத் தொடருந்து நிலையங்கள் மலேசியாவில் தொடருந்து போக்குவரத்து‎ அம்பாங் - செரி பெட்டாலிங் வழித்தடம்
682185
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D
குளூட்டரோநைட்ரைல்
குளூட்டரோநைட்ரைல் (Glutaronitrile) என்பது C3H6(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பெண்டேன் டைநைட்ரைல் என்ற பெயராலும் இந்த நைட்ரைல் சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் −29.6 °செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் WebBook page for glutaronitrile ஆல்க்கேன்நைட்ரைல்கள்
682190
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
மாதவா வானாய்வகம்
மாதவா வானாய்வகம் (Madhava Observatory) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு வானாய்வகமாகும். 2005 ஆம் ஆண்டில் இந்திய வானியற்பியல் நிறுவனத்துடன் இணைந்து கோழிக்கோடு பல்கலைக்கழகத்தால் இந்த வானாய்வகம் அமைக்கப்பட்டது. இது இந்திய பல்கலைக்கழக அளவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஆய்வகமாகும். ) அரைக்கோள குவிமாடத்தில் ஒரு பிளவு திறப்பு, ஒரு சக்கர அமைப்பு மற்றும் 14 அங்குல மீடு நிறுவன தொலைநோக்கி ஆகியவை இக்கருவியில் இடம்பெற்றுள்ளன. ஆய்வகம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களால் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆய்வகத்தில் 18 அங்குல பிரதிபலிப்பு தொலைநோக்கி உள்ளது, இது தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான பிரத்யேக கணினி வசதியாகும். மத்திய காலத்தின் மிகச்சிறந்த கணிதவியலாளர்-வானியலாளர்களில் ஒருவராகவும், கேரள வானியல் மற்றும் கணிதப் பள்ளி நிறுவனராகவும் கருதப்படும் சங்கமகிராமாவின் மாதவா (கி. பி. 1340-கி. பி 1425) பெயரால் இந்த ஆய்வகம் பெயரிடப்பட்டுள்ளது. மேற்கோள்கள் இந்தியாவில் உள்ள வானாய்வகங்கள்
682191
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
அலி முகமது தார்
அலி முகமது தார் (Ali Mohammad Dar) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் துனிவாரி கிராமத்தில் பிறந்தவர். தார் அக்டோபர் 2024-இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சடூரா சட்டமன்றத் தொகுதியில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் 1977ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் காண்க 2024 சம்மு-காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தல் சம்மு காசுமீர் சட்டப்பேரவை மேற்கோள்கள் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029 வாழும் நபர்கள்
682193
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
ராஜா ரவி வர்மா புரஸ்காரம்
ராஜா ரவி வர்மா புரஸ்காரம் (Raja Ravi Varma Puraskaram) என்பது நுண்கலைகளுக்காக நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பான கேரள லலிதகலா அகாதமியால் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு நபருக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதாகும். இந்த விருது உலகப்புகழ் பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சிறந்த கேரள ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை கௌரவிப்பதற்காக கேரள அரசு 2001 ஆம் ஆண்டில் இந்த விருதை நிறுவியது. இந்தியக் கலைஞர் கே. ஜி. சுப்ரமணியன் இவ்விருது பெற்ற முதல் கலைஞராவார். விருது பெற்றவர்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website பரிசுகளும் விருதுகளும்
682194
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE
சமகாலிகா மலையாள வாரிகா
சமகாலிகா மலையாள வாரிகா (Samakalika Malayalam Vaarika) என்பது மலையாள மொழி செய்தி வலைத்தளம் ஆகும். தி நியூ இந்தியன் எக்சுபிரசு நாளிதழ் இதனை வெளியிடுகிறது. வாராந்திர செய்தித்தாளாக வெளிவரும் இது, கேரளாவின் கலாச்சார மற்றும் அரசியல் துறையில் ஒரு முன்னணி குரலாகும். வரலாறு. 1997 மே மாதம் வார இதழ் தொடங்கப்பட்டபோது மூத்த பத்திரிகையாளர் எஸ். ஜெயச்சந்திரன் நாயர் இதன் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் 2012 வரை அந்த பதவியில் தொடர்ந்தார். தற்போது, அதன் ஆசிரியர் சாஜி ஜேம்ஸ் தலைமையிலான குழுவால் இது வழிநடத்தப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் மலையாள இதழியலில் புகழ்பெற்ற டி. ஜே. எஸ் ஜார்ஜ் ஆசிரியர் குழுவில் ஆலோசகராக உள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய இதழ்கள்
682198
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF
மணிலால் திவேதி
மணிலால் நபுபாய் திவேதி (Manilal Nabhubhai Dwivedi) (செப்டம்பர் 26,1858-அக்டோபர் 1,1898) ஓர் [[குஜராத்தி] மொழி எழுத்தாளரும், தத்துவஞானியும் மற்றும் பிரித்தானிய இந்தியாவைச் சேர்ந்த சமூக சிந்தனையாளரும் ஆவார். பொதுவாக இலக்கிய வட்டாரங்களில் மணிலால் என்று குறிப்பிடப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் குஜராத்தி இலக்கியத்தில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த இவர், சமூக சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் ஈடுபட்ட பல குஜராத்தி எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களில் ஒருவராக இருந்தார், பெண்களின் நிலை, குழந்தைத் திருமணம் மற்றும் விதவைகள் மறுமணம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார். இவர் கிழக்கத்திய நாகரிகத்தை உயர்ந்த மதிப்பில் வைத்திருந்தார், மேலும் மேற்கத்திய நாகரிகத்தின் செல்வாக்கை எதிர்த்தார். இது அவரை குறைவான பழமைவாத கண்ணோட்டமுள்ள பிற சமூக சீர்திருத்தவாதிகளுடன் மோதல்களுக்குள் ஈர்த்தது. இவர் தன்னை ஒரு "மத அடிப்படையில் சீர்திருத்தவாதி" என்று கருதினார். மணிலால் 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் பம்பாய் மாநாட்டிற்கு நாடியாத் நாடியாத்திலிருந்து ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1890 ஆம் ஆண்டில் கேதா மாவட்ட காங்கிரசு கட்சிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1891 முதல் 1893 வரை நாதியாத் நகராட்சிப் பள்ளிக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இறப்பு மஞ்சள் காமாலை மற்றும் நுரையீரல் அழற்சியால் பதிக்கப்படிருந்த இவர் அக்டோபர் 1,1898 அன்று இறந்தார். தத்துவமும் சமூக சீர்திருத்தமும் மணிலால் அத்வைதத்தைப் பின்பற்றுபவராக இருந்தார். சுயமும் கடவுளும் எந்த வகையிலும் வேறுபட்டவை அல்ல என்று நம்பினார், மேலும் பகவத் கீதை அத்வைதத்தின் தத்துவ முன்னோடியாக இருப்பதை விட இந்த கண்ணோட்டத்தை கற்பிக்கிறது என்று வாதிட்டார்.[மேல்-ஆல்பா 5]. அடிக்குறிப்பு மேற்கோள்கள் ஆதாரங்கள் வெளி இணைப்புகள் Works by Manilal Dwivedi at Gandhi Heritage Portal இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்கள் 1898 இறப்புகள் 1858 பிறப்புகள்
682200
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இலண்டன் முருகன் கோயில்
இலண்டன் முருகன் கோயில் என்பது ஐக்கிய இராச்சியத்தில், இலண்டன் பெருநகர்ப் பகுதியின் பிரௌனிங் சாலையில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் முருகன் ஆவார். வள்ளி மற்றும் தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7 மீ. உயரத்தில் () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பிரௌனிங் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. விபரங்கள் 1975ஆம் ஆண்டு இலண்டனில் ஒரு தொண்டு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, 1984ஆம் வருடம் சிறிய அளவிலான கோயிலாக உருப்பெற்று, 2005ஆம் ஆண்டு 50 அடி உயரமுள்ள இராஜ கோபுரத்துடன் கும்பாபிசேகம் நடைபெற்று, கிழக்கு இலண்டனில் பிரௌனிங் சாலையில் தற்போதைய இடத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறது இக்கோயில். திருவிழாக்கள் கந்த சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை விளக்கீடு, வைகாசி விசாகம் மற்றும் பங்குனி உத்தரம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும். இதர தெய்வங்கள் வெங்கடேசுவரர், மகாலட்சுமி, புவனேசுவரர், நடராசர், புவனேசுவரி, செய துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆனந்த விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்முகர், ஐயப்பன், குருவாயூரப்பன், ஆஞ்சநேயர், அகத்தியர், அருணகிரிநாதர், சூரியன் , சந்திரன், நவக்கிரகங்கள், பைரவர், இடும்பன் மற்றும் பாபா பாலக் நாத் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இலண்டனில் உள்ள இந்துக் கோயில்கள் இலண்டன் இலண்டனில் உள்ள கட்டிடங்கள்
682208
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
ஆலிவர் ஹார்டி
ஆலிவர் நார்வெல் ஹார்டி (Oliver Norvell Hardy) (பிறப்பு நார்வெல் ஹார்டி ; ஜனவரி 18, 1892 - ஆகஸ்ட் 7, 1957) ஒரு அமெரிக்க நகைச்சுவை நடிகரும் மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களான லாரல் மற்றும் ஹார்டி என்பவரில் ஒருவரும் ஆவார். மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்கள் இவர்கள் செய்யும் நகைச்சுவை சேட்டைகளினால் வெகுவாக பிரபலமானார்கள். ஒல்லியான தேகமுடைய பிரித்தானிய ஆங்கிலேயராக இசுடான் லாரலும் (1890-1965) குண்டான உருவமுள்ள அமெரிக்கராக ஆலிவர் ஹார்டியும்(1892-1957) கதாபத்திரங்களில் சித்தரிக்கப்பட்டனர். ஊமைத் திரைப்படங்களின் காலம் தொடங்கி 1926 முதல் 1957 வரை இவரது தொழில் வாழ்க்கை நீடித்தது. இவர்களிருவரும் 1920களின் கடைசிகளில் இருந்து 1940களின் மத்தியப்பகுதி வரை சேட்டை நகைச்சுவையில் (slapstick comey) முடிசூட மன்னர்களாக திகழ்ந்தனர். லாரல் எப்பொழுதும் குழந்தை தனமாக செயல்களால் குழப்பம் ஏற்படுத்தும் நபராகவும், அதிக பந்தா உடைய ஹார்டியின் தோழமை கதாபாத்திரத்திமாக நடித்தார். இருவரும் சேர்ந்து நூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளனர். ஆரம்ப காலங்களில் 1930களில் முழுநீளத்திரைப்படங்கள் தயாரிக்கபடுவதற்கு முன்பு வரை குறும்படங்களில் மட்டுமே நடித்தனர். சன்ஸ் ஆஃப் தி டிசெர்ட் (1933), தி மியூசிக் பாக்ஸ் (1932), பேப்ஸ் இன் டாய்லேன்ட் (1934), மற்றும் வே அவுட் வெஸ்ட் (1937) ஆகியன மிகப்பிரமாண்டமான வெற்றியை ஈட்டின. ஹார்டியின் "Well, here's another nice mess you've gotten me into!" என்கிற வாக்கியம் இன்றும் பிரபலமாக உள்ளது. மேற்கோள்கள் நூற்பட்டியல் Marriot, A.J. Laurel & Hardy: The British Tours. Hitchen, Herts, UK: AJ Marriot, 1993. . McCabe, John, Babe: The Life of Oliver Hardy. London: Robson Books Ltd., 2004. . வெளி இணைப்புகள் Free viewing of Bouncing Baby (1916), made available for public use by the State Archives of Florida Oliver Hardy's obituaries in the Los Angeles Times and Los Angeles Mirror-News அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள் அமெரிக்க ஆண் நகைச்சுவையாளர்கள் ஆங்கில அமெரிக்கர்கள் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் 1957 இறப்புகள் 1892 பிறப்புகள்
682233
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
இசுடான் லாரல்
இசுடான் லாரல் ( Stan Laurel ; பிறப்பு ஆர்தர் இசுடான்லி ஜெபர்சன் ; 16 ஜூன் 1890 - 23 பிப்ரவரி 1965) ஒரு ஆங்கில நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும் மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார். அமெரிக்க நகைச்சுவை நடிகரும் மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களான லாரல் மற்றும் ஹார்டி என்பவரில் ஒருவராக இருந்தார். மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்கள் இவர்கள் செய்யும் நகைச்சுவை சேட்டைகளினால் வெகுவாக பிரபலமானார்கள். ஒல்லியான தேகமுடைய பிரித்தானிய ஆங்கிலேயராக இசுடேன் லாரலும் (1890-1965) குண்டான உருவமுள்ள அமெரிக்கராக ஆலிவர் ஹார்டியும்(1892-1957) கதாபத்திரங்களில் சித்தரிக்கப்பட்டனர். மேற்கோள்கள் நூற்பட்டியல் Bergen, Ronald. The Life and Times of Laurel and Hardy. New York: Smithmark, 1992. . Bowers, Judith. Stan Laurel and Other Stars of the Panopticon: The Story of the Britannia Music Hall. Edinburgh: Birlinn Ltd, 2007. . Guiles, Fred Lawrence. Stan: The Life of Stan Laurel. New York: Stein and Day, 1980. Levy, Joe, ed. Rolling Stone's 500 Greatest Albums of All Time. New York: Wenner Books, 2005. . Louvish, Simon. Stan and Ollie: The Roots of Comedy. London: Faber & Faber, 2001. . Marriot, A. J. Laurel & Hardy: The British Tours. Hitchen, Herts, UK: AJ Marriot, 1993. . McCabe, John. Babe: The Life of Oliver Hardy. London: Robson Books Ltd., 2004. . McCabe, John. Comedy World of Stan Laurel. London: Robson Books, 2005, First edition 1975. . McCabe, John. Mr. Laurel & Mr. Hardy: An Affectionate Biography. London: Robson Books, 2004, First edition 1961, . Okuda, Ted, and James L. Neibaur. Stan Without Ollie: The Stan Laurel Solo Films. Jefferson, NC: McFarland and Co., 2012 Jenny Owen-Pawson, Bill Mouland. Laurel Before Hardy. Kendal: Westmorland Gazette, 1984. . Stone, Rob. Laurel or Hardy: The Solo Films of Stan Laurel and Oliver Hardy. Temecula, California: Split Reel Books, 1996 வெளி இணைப்புகள் "The Making of Stan Laurel: Echoes of a British Boyhood"—Article at Brenton Film by Danny Lawrence, Stan Laurel's biographer The Stan Laurel Correspondence Archive Project அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள் அமெரிக்க ஆண் நகைச்சுவையாளர்கள் ஆங்கில அமெரிக்கர்கள் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள் 1965 இறப்புகள் 1890 பிறப்புகள்
682245
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
ஜம்கண்டி மாநிலம்
ஜம்கண்டி மாநிலம் (Jamkhandi State) பிரித்தானிய இந்தியாவில் மராட்டியப் பேரரசின் கீழிருந்த சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது 1811 இல் நிறுவப்பட்டது. மேலும், இதன் தலைநகரம் ஜமகண்டியில் இருந்தது. இது பம்பாய் மாகாணத்தின் தக்காண முகமையின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டது. மேலும் இது தெற்கு மராட்டிய நாட்டின் முன்னாள் மாநிலங்களில் ஒன்றாகும். இந்த சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதி இன்றைய கருநாடகாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தியாவின் ஐந்தாவது குடியரசு துணைத்தலைவராக 1974 முதல் 1979 வரை பதவியிலிருந்த பசப்பா தனப்பா ஜாட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர். வரலாறு ஜம்கண்டி மாநிலம் 1811 ஆம் ஆண்டில் கோபால்ராவ் பட்வர்த்தன் என்பவரால் நிறுவப்பட்டது. ஜம்புகேசுவர் கோயிலின் பெயரிலிருந்து இம்மாநிலத்திற்கு இப்பெயர் பெறப்பட்டது. நாவல் (ஜம்புல்) காடுகளுக்குள் இருந்ததால் இக்கோயிலுக்கு இப்பெயர் வந்திருக்கலாம். இன்று, கோயில் வளாகத்தில் இருந்து ஒரு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. அண்டை நாடான தார்வாட் மாவட்டத்திலுள்ள குந்தோல் நகரம், 19 பிப்ரவரி 1948 அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் வரை ஜம்கண்டி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆட்சியாளர்கள் இந்த மாநிலத்தின் ஆட்சியாளர்கள் 'ராஜா' என்ற பட்டத்தை பெற்றிருந்தனர். ஜம்கண்டியின் மன்னர்கள் பட்வர்தன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இதனையும் காண்க மராட்டிய மராட்டியப் பேரரசு மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Jamkhandi State जमखंडी संस्थान தார்வாடு மாவட்டம் கர்நாடக வரலாறு இந்தியாவின் மன்னராட்சிகள்
682246
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
துருசேவர் சுல்தான்
அத்தீசு அய்ரியே அய்சே துருசேவர் சுல்தான் (Hatice Hayriye Ayşe Dürrüşehvar Sultan) (26 ஜனவரி 1914 - 7 பிப்ரவரி 2006) ஒரு உதுமானிய இளவரசியாவார். திருமணத்திற்குப் பிறகு துருசேவர் துர்தானா பேகம் சாகிபா, பேரர் இளவரசி எனப் பெயர் பெற்றார். இவர், உதுமானிய கலீபகத்தின் கடைசி கலீபா இரண்டாம் அப்துல்மசித்தின் ஒரே மகளாவார். ஆரம்ப கால வாழ்க்கை துர்சேவர் சுல்தான் 26 ஜனவரி 1914 அன்று இசுதான்புல்லின் ஒரு பகுதியாக இருந்த உசுகுதர் என்னுமிடத்தில் அப்துல்மசித் மற்றும் மெஹிஸ்டி ஹனாம் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். அப்போது உதுமானிய கலீபகம் கலிபா அதன் கடைசி கட்டத்திலிருந்தது. இவரது தந்தையின் முதல் மனைவியின் மூலம் பிறந்த செக்தே இமெர் பாரூக் என்ற ஒரு சகோதரன் இருந்தார். மார்ச் 1924 இல் ஏகாதிபத்திய குடும்பம் நாடுகடத்தப்பட்டபோது, துருசேவர் மற்றும் இவரது குடும்பத்தினர் பிரான்சின் நீஸ் நகரில் குடியேறினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆட்சியாளருடன் நட்புறவு கொண்ட பிரிட்டிஷ் செம்பிறை சங்கம், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் இவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தது. சௌகத் அலி மற்றும் அவரது சகோதரர் முகம்மது அலி ஜவகர் ஆகியோரின் வேண்டுகோளின்படி ஐதராபாத் நிசாமான ஓசுமான் அலி கான் கலீபகத்துக்கு மூன்னூறு பவுண்டுகள் வாழ்நாள் மாத ஓய்வூதியத்தையும், குடும்பத்தில் உள்ள பல நபர்களுக்கு கொடுப்பனவுகளையும் அனுப்ப முடிவு செய்தார். திருமணம் நவம்பர் 12,1931 அன்று, பதினேழு வயதில், துருசேவர் ஐதராபாத்தின் நிசாம் ஓசுமான் அலி கானின் கடைசி மகன் ஆசம் சா என்பவரை மணந்தார். திருமணத்திற்கு பல்வேறு இந்திய இளவரசர்ளும் வந்திருந்தனர். நீஸில் நடந்த கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, இளவரசியும் அவரது கணவரும் 1931 டிசம்பர் 12 ஐதராபாத்துக்கு கப்பலில் திரும்பினர். 1931இல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் மாநாட்டில் கலந்து கொண்டு கப்பலில் திரும்பிய காந்தி, இவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது பொது வாழ்க்கை மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நன்கு படித்த பெண்மணியான இவர் பிரெஞ்சு, துருக்கி, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் சரளமாக இருந்தார். இவர் ஒரு ஓவியராகவும் கவிஞராகவும் இருந்தார் . இவர் தனது பெயரில் சிறுமிகளுக்காக ஐதராபாத்தில் உசுமானியா பொது மருத்துவமனை என்ற பெயரில் கல்லூரியை நிறுவினார். நவம்பர் 4,1936 அன்று, ஐதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தின் முதல் முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1939 ஆம் ஆண்டில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற அஜ்மல் கான் திபியா கல்லூரி மருத்துவமனையையும் இவர் திறந்து வைத்தார். தனது உறவினர் நிலோபருடன் சேர்ந்து, துருசேவர் பெண்கள் கல்வி மற்றும் பெண்களின் உரிமைகளை ஆதரித்தார். நிசாம் தனது மருமகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. டென்னிசு மற்றும் குதிரை சவாரி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க இருவரையும் அவர் ஊக்குவித்தார். இவர்கள் அருங்காட்சியகங்களுக்கு கலைப் படைப்புகளைச் சேர்க்கவும் நிசாம் இவர்களை ஐரோப்பியச் சுற்றுப்பயணங்களுக்கு அனுப்பினார். துருசேவ் சுல்தான், பிப்ரவரி 7,2006 அன்று இலண்டனில் காலமானார். இவர் இறக்கும் போது அவரது இரண்டு மகன்களும் இவருடன் இருந்தனர். புரூக்வுட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். நினைவு ‘மௌனத்தின் சக்தி’யை கற்பித்ததற்காகவும், ஐதராபாத்தில் பல மகப்பேறு அலகுகள், பள்ளிகள், கல்லூரிகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிறுவியதற்காகவும் துருசேவர் நினைவுகூரப்படுகிறார். மேற்கோள்கள் ஆதாரங்கள் வெளி இணைப்புகள் இந்திய அரச குடும்பப் பெண்கள் ஐதராபாத் இராச்சிய நபர்கள் 2006 இறப்புகள் 1914 பிறப்புகள் துருக்கிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
682247
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
மாண்ட்கோமரைட்டு
மாண்ட்கோமரைட்டு (Montgomeryite) என்பது Ca4MgAl4(PO4)6(OH)4·12H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பாசுபேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் உட்டா மாகாணம் பேர்பீல்டு நகரத்தில் மாண்ட்கோமரைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. மாண்ட்கோமரைட்டு மிகவும் அரிதான ஒரு கனிமமாகும். இது உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் மாண்ட்கோமரைட்டு கனிமத்தை Mgm என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது மேற்கோள்கள் பாசுப்பேட்டு கனிமங்கள்
682251
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
கலீம் உல்லா கான்
கலிமுல்லா கான் (Kaleem Ullah Khan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தோட்டக்கலை நிபுணர் ஆவார். பழம் வளர்ப்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். மாம்பழங்கள் மற்றும் பிற பழங்களை இனப்பெருக்கம் செய்வதில் இவர் செய்த சாதனைகளுக்காக அறியப்படுகிறார். ஒட்டுதல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே மரத்தில் 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மாம்பழங்களை இவர் வளர்த்ததாக அறியப்படுகிறது. இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் லக்னோ அருகிலுள்ள மாலிகாபாத்து நகரத்தில் பிறந்த கான், 7 ஆம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறி, குடும்ப விவசாயத் தொழிலுக்குச் சென்றார். ஒட்டுதல் என்ற அயல்நாட்டு பரவலாக்க நுட்பத்தைப் பயன்படுத்தி, இவர் பல புதிய மாம்பழ வகைகளை உருவாக்கியுள்ளார். அவற்றில் சில பிரபலமானவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களான சச்சின் டெண்டுல்கர், ஐசுவர்யா ராய், அகிலேசு யாதவ், சோனியா காந்தி, நரேந்திர மோடி, அமித் சா போன்றவர்களின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன. அனார்கலி, இவர் உருவாக்கிய மாம்பழ வகைகளில் இரண்டு வெவ்வேறு தோல்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு அடுக்குகள் கொண்ட பழமாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையைக் கொண்டுள்ளன. தோட்டக்கலைத் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வாழும் நபர்கள் பத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள் இந்தியர்கள் உத்தரப் பிரதேச நபர்கள்
682254
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE
மகேந்திர லால் வாத்வா
மகேந்திர லால் வாத்வா (Mahendra Lal Wadhwa) இந்திய நாட்டின் முசாபர்கர் நகரத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் 1900 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று பிறந்தார். 1988 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் டெல்லியில் இறந்தார். இவர் சுதந்திர நாட்டிற்காக இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இதன் காரணமாக பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய அரசின் சுதந்திரப் போராட்டத்திற்கான சிறந்த பங்களிப்புக்காக 1972 ஆம் ஆண்டில் இவருக்கு தாம்ரபத்ரா விருது வழங்கப்பட்டது. மேற்கோள்கள் 1988 இறப்புகள் 1900 பிறப்புகள் இந்திய செயற்பாட்டாளர்கள் நாடு வாரியாக செயற்பாட்டாளர்கள் பாகிஸ்தான் நகரங்கள் பொதுவகப்பகுப்பு விக்கித்தரவு தடப்பகுப்புகள் மறைக்கப்பட்ட பகுப்புகள் தொழில் வாரியாக இந்தியர்கள் இந்திய அரசியல் தடப்பகுப்புகள்
682255
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
டாமாய் எல்ஆர்டி நிலையம்
டாமாய் எல்ஆர்டி நிலையம் அல்லது டாமாய் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Dato' Keramat LRT Station; மலாய்: Stesen Dato' Keramat; சீனம்: 拿督克拉末) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. டத்தோ கெராமாட் வட்டாரத்தில் உள்ள டாமாய் குடியிருப்புப் பகுதியின் பெயரில் இருந்து டாமாய் எல்ஆர்டி நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் இடையே உள்ள 13 நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். பொது டாமாய் எல்ஆர்டி நிலையம், கிழக்கு கோலாலம்பூரில் உள்ள டத்தோ கெராமாட் கிராமத்தின் மையப் பகுதியில்; கிள்ளான் ஆற்றின் வடக்குக் கரையிலும், அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளது. டத்தோ கெராமாட் பகுதிக்குச் சேவை செய்யும் மூன்று கிளானா ஜெயா வழித்தட நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இதே டத்தோ கெராமாட் பகுதிக்குச் சேவை செய்யும் மற்ற இரண்டு நிலையங்கள்: டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் மற்றும் ஜெலாதெக் எல்ஆர்டி நிலையம். அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்திற்குப் பிறகு தரைக்கு மேலே உயர்த்தப்பட்ட நிலையில் கட்டப்பட்ட முதல் நிலையம் இந்த டாமாய் நிலையம் ஆகும் அமைவு இந்த நிலையம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நிலையமாகும். தொடருந்துகள் வழியாக ஏறி இறங்கும் இடம் தரையிலிருந்து மேலே உள்ளது. இந்த நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைகளுக்கான மையத் தளமும் உள்ளது. ஓர் உயரமான நிலைய அமைப்பைக் கொண்ட டாமாய் நிலையம் மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளது; அதாவது மூன்று அடுக்குத் தளங்களைக் கொண்டது. கீழ் அடுக்கில், சாலை மட்டத்தில் பயணிகளின் அணுகல் தளம் உள்ளது; மற்றும் மேல் உயர் அடுக்கு நிலைகளில் கடப்புச் சீட்டு, சிற்றுண்ண்டிச் சாலைகள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது. காட்சியகம் மேலும் காண்க கிளானா ஜெயா வழித்தடம் மலேசிய தொடருந்து போக்குவரத்து கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682256
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
முகமது சலேகு தாட்வி
முகமது சலேகு தாட்வி (Muhammad Saleh Thattvi) 17 ஆம் நூற்றாண்டில் முகலாய கைவினைஞராக இருந்தார். முகம்மது சாலிகு தாதா-வி , முகம்மது சாலி தத்தா-வி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். தடையற்ற வான கோளங்கள் மற்றும் வானியல் கோளங்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவராக இருந்தார். வான கோளம் 1659 ஆம் ஆண்டில், தாட்வி 21 செமீ விட்டம் கொண்ட வான கோளத்தை உருவாக்கினார். இந்த புகைப்படத்தில் எந்த மடிப்புகளும் காணப்படாததால், இக்கோளம் சியர் பெர்டு எனப்படும் அசலில் இருந்து நகலெடுத்தல் என்ற முறையால் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேற்கோள்கள் இந்திய இனக்குழுக்கள் சிந்து மாகாணம்
682258
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
வசீரான்
வசீரான் (Wazeeran) இந்திய நாட்டின் தவாயிப் ஆவார். இவர் நவாப் நிகர் மஹால் சாஹிபா (Nawab Nigar Mahal Sahiba) என்றும் அழைக்கப்படுகிறார். இலக்னோவின் கடைசி நவாப் ஆன வாசித் அலி சா இவரை சந்திக்க அடிக்கடி வந்தார். இவர் தனது பாதுகாவலரான அலி நக்கி கானை வசீர் (இவர் மன்னராக இருந்த போது முதலமைச்சர்) ஆக்கியதாகக் கூறப்படுகிறது. இவர் தவாய்ப் பீபி சானின் மகள் ஆவார். மேற்கோள்கள் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியா தொழில் வாரியாக இந்தியப் பெண்கள் நாடு வாரியாக ஆசிய மக்கள் தொழில் வாரியாக ஆசிய பெண்கள் நூற்றாண்டு வாரியாக இந்தியா பொதுவகப்பகுப்பு விக்கித்தரவு தடப்பகுப்புகள் அரசாட்சி முறைமைகள் மறைக்கப்பட்ட பகுப்புகள் தொழில் வாரியாக இந்தியர்கள் இந்தியப் பெண்கள் தடப்பகுப்புகள் நாடு மற்றும் துறை வாரியாகப் பெண்கள் தொழில் மற்றும் நாடு வாரியாகப் பெண்கள் இந்தியாவில் மனித உரிமைகள் இந்தியாவில் சமூகப் பிரச்சனைகள் விக்கிப்பீடியா பகுப்புகள் இந்தியாவில் மகளிர் உரிமைகள்
682259
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%87.%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
சி. சே. பொன்ராசு
சி. சே. பொன்ராசு (C. J. Ponraj) இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகர்கோவிலில் உள்ள இந்திய நிர்வாக சேவை அதிகாரி ஆவார். இவர் இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தில் பணியாற்றுகிறார். இவர் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரான கோகிமா பகுதியில் முதன்மைச் சட்டச் செயலாளராகவும், முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் சென்னை நபர்கள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மறைக்கப்பட்ட பகுப்புகள்
682262
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
மும்பையின் வரலாறு
மும்பையின் வரலாறு (History of Mumbai) கற்காலம் முதல் பழங்குடி மக்கள் மும்பையில் (பம்பாய்) வசித்து வருகின்றனர். பின்னர் கோலி மக்கள், மராத்தியர்கள் மற்றும் கொங்கணி மக்கள் மும்பையின் ஏழு தீவுகளில் குடிபெயர்ந்தனர்.கிமு 2ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 10ஆம் நூற்றாண்டுக்கும் இடையில், மும்பை தீவுகளை சாதவாகனர்கள், வாகடகர்கள், காலச்சூரிகள், கொங்கன் மௌரியர்கள், சாளுக்கியர்கள், இராட்டிரகூடர்கள் மற்றும் சிலகார வம்ச மன்னர்கள் ஆட்சி செய்தனர். 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குடியேறிகளை அழைத்து வந்த மஹிகாவதியின் மன்னர் பீமா மும்பை பகுதியில் ஒரு சிறிய இராஜ்யத்தை நிறுவினார்.. தில்லி சுல்தானகம் 1348ஆம் ஆண்டில் மும்பை தீவுகளைக் கைப்பற்றியது, பின்னர் அவை 1391 முதல் குஜராத் சுல்தானகத்திற்கு மாற்றப்பட்டது. போர்த்துகேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் நுனோ டா குன்ஹா மற்றும் குஜராத் சுல்தான் பகதூர் ஷா ஆகியோருக்கு இடையேயான ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 1534ல் மும்பை தீவுகள் போர்த்துகேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.. . 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோவா மற்றும் மும்பை மீதான மராத்திய படையெடுப்பு மற்றும் கொங்கனின் முகலாய படையெடுப்பு (1685) ஆகியவற்றால் மும்பைத் தீவுகள் பாதிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் போது, மும்பை ஒரு முக்கிய துறைமுகமாக உருவானது. மும்பை துறைமுகம் மெக்கா, பாஸ்ரா போன்ற அரேபியப் பகுதிகளுடன் கடல்சார் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர், 1853இல் மும்பை துறைமுகத்திற்கும், தானே நகரத்திற்கும் இடையில் இருப்புப்பாதை போடப்பட்டு, சரக்கு மற்றும் பயணியர் தொடருந்துகள் இயக்கப்பட்டது. 1900களின் முற்பகுதியில் இருந்து, பாலிவுட் இந்தி திரையுலகின் தளமாக மும்பை நகரம் செயல்பட்டது.மும்பை நகரம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, இந்திய விடுதலை இயக்கத்திற்கு வலுவான தளமாக மாறியது. மும்பை நகரம் 1919ல் ரௌலட் சட்டம், சத்தியாக்கிரகம் மற்றும் 1946ஆம் ஆண்டில் நடைபெற்ற ராயல் இந்தியன் நேவி கலகத்தின் மையமாக இருந்தது. 1947இல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு, பம்பாய் மாகாணத்தின் தலைநகரமாக மும்பை நகரம் விளங்கியது. பம்பாய் மகாணத்திலிருந்த சுதேச சமஸ்தானங்கள் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில், சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, பம்பாய் மாகாணத்திலிருந்து, மகாராட்டிரா மாநிலம் துவக்கப்பட்டது. புதிய மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமாக மும்பை விளங்கியது. பம்பாய் என்ற பெயரை 6 மார்ச் 1996 அன்று மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது. பெருநகர மும்பை பகுதியில் 1992-93ஆம் ஆண்டு இந்து-முஸ்லீம் கலவரங்களை எதிர் கொண்டது. 1993 மும்பை குண்டுவெடிப்புகள் விரிவான உயிர்கள் மற்றும் சொத்து சேதத்தை ஏற்படுத்தியது மும்பையை ஆண்ட இராச்சியங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகரின் கீழ் மௌரியப் பேரரசின் கீழ் மும்பையின் ஏழு தீவுகள் இணைக்கப்பட்டது.இத்தீவுகள் பௌத்தம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக மாற்றியது. கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கான்கேரி குகைகள் மற்றும் மகாகாளி குகைகளில் பௌத்த தூபிகள், விகாரைகள் மற்றும் சிற்பங்கள் எழுப்பட்டது. கிமு 185ல் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மும்பைத் தீவுகள் சாதவாகனர்களிடம் வீழ்ந்தன. சோபாரா துறைமுகம் (இன்றைய நள சோப்ரா) கிமு முதல் நூற்றாண்டில் ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது, இத்துறைமுகத்திலிருந்து உரோம் உடனான வர்த்தக தொடர்புகள் துவங்கியது.கிபி 150ல் கிரேக்க புவியியலாளர் தொலெமிக்கு மும்பை தீவுகளை, ஹெப்டனேசியா என்று பெயரிட்டார். (பண்டைய கிரேக்கம்: ஏழு தீவுகளின் கொத்து) என்று அறியப்பட்டது. கிபி 250ல் சாதவாகனர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, மேற்கு மகாராஷ்டிராவை ஆபிரர்கள் மற்றும் விதர்பாவின் வாகடகர்கள் மும்பைத் தீவுகளின் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஆபிரர்கள் கிபி 417வரை 167 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஐந்தாம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவின் காலச்சூரிகள் மும்பைத் தீவுகளை ஆட்சி செய்தனர். பின்னர் அவை ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்கனின் மௌரியர்களால் கைப்பற்றப்பட்டன.கொங்கன் மௌரியர்கள் காலச்சூரிகளின் நிலப்பிரபுக்களாக இருந்தனர். இவர்கள் ஜோகேஸ்வரி குகைகள் அமைத்தனர். கொங்கனின் மௌரியர்கள் ஆட்சியில், கிபி 520 மற்றும் 525க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோகேஸ்வரி குகைகள் நிறுவினர். கிரேக்க வணிகர் காஸ்மாஸ் இண்டிகோபிளூஸ்டெஸ் கிபி 530-550 காலத்தில் கல்யாணுக்கு (மும்பைக்கு அருகில்) விஜயம் செய்தார்.எலிபண்டா குகைகள் கிபி ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கிபி 6ஆம் நூற்றாண்டில் மும்பை பகுதிக்கு கிறித்தவம் அறிமுகமானது. ஆறாம் நூற்றாண்டில் நெஸ்டோரியன் தேவாலயம் இந்தியாவில் தோன்றியபோது, கிறிஸ்தவம் மும்பைத் தீவுகளுக்கு வந்தது.[20] கிபி 610 இல் இரண்டாம் புலிகேசியின் ஆட்சியின் கீழ் கர்நாடகாவின் பாதாமியின் சாளுக்கியர்கள் மும்பைத் தீவுகளை ஆக்கிரமித்தபோது, கொங்கனின் மௌரிய ஆட்சி முடிவுக்கு வந்தது கர்நாடகாவின் , இராட்டிரகூடர் மன்னர் தந்திதுர்கன் 749-750ல் மும்பைத் தீவுகளைக் கைப்பற்றினார். கொங்கனின் சில்கார வம்சத்தினர் 810 மற்றும் 1260 க்கு இடையில் இப்பகுதியை ஆண்டனர். இவர்கள் 10ஆம் நூற்றாண்டில் தெற்கு மும்பையில் பான்கங்கா குளம் மற்றும் வால்க்கேஷ்வரர் கோயில்கட்டினர். மற்றும் 12ஆம் நூற்றாண்டில் பான்கங்கா குளம் மற்றும் வால்கேஷ்வரர் கோயில் சில்ஹாரா ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது. பதின்மூன்று சீனக் கப்பல்கள்1292, மே - செப்டம்பர் மாதங்களில் மும்பை துறைமுகம் வழியாகச் சென்றது என இத்தாலியப் பயணி மார்கோ போலோ தனது குறிப்புகளில் கூறியுள்ளார். மன்னர் முதலாம் பீமதேவன் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மும்பைத் தீவுகள் வரை தனது இராச்சியத்தை விரிவுபடுத்தினார். மேலும் மாகிம் நகரத்தில் தனது தலைநகரை நிறுவினார்.[27] முதலாம் பீமதேவன் ஆட்சியின் போது, 1298ல் குஜராத்தின் பதான் மற்றும் சௌராஷ்டிரா பகுதி மக்களை மும்பை தீவுகளுக்கு குடியமர்த்தினார். 1318ல் மாகிம் மற்றும் சால்சேட் தீவுகளை, கல்ஜி வம்சத்தின் சுயமாக அறிவிக்கப்பட்ட மன்னர் முபாரக் கான், பிரதாபிம்பாவின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.. பிரதாபிம்பா பின்னர் 1331 வரை அவர் ஆட்சி செய்த தீவுகளை மீண்டும் கைப்பற்றினார். பின்னர், அவரது மைத்துனரான நாகர்தேவ். 1348 வரை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.. 1348 குஜராத் முஸ்லீம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மும்பைத் தீவுகள் வந்தது. இதனால் மும்பைத் தீவுகளின் மீதான இந்து ஆட்சியாளர்களின் இறையாண்மை முடிவுக்கு வந்தது. இஸ்லாமிய காலம் 1348 முதல் 1391 வரை மும்பைத் தீவுகள் குஜராத் முஸ்லிம்கள் ஆட்சியில் கீழ் இருந்தது. 1391ல் குஜராத் சுல்தானகம் நிறுவப்பட்ட பிறகு, முதலாம் முசாபர் ஷா, வடக்கு கொங்கனின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மும்பை தீவுகளின் நிர்வாகத்திற்காக, மாகிமிற்கு ஒரு ஆளுநரை நியமித்தார். முதலாம் அஹ்மத் ஷா (1411-1443) ஆட்சியின் போது, மாலிக்-உஸ்-ஷார்க் மாகிமின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிண்டாரிகள் மஹிம் தீவை குஜராத் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றி எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். பின்னர் இதை குஜராத் சுல்தானகத்தின் ராய் குதுப் என்பவரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1429-1430 இல் ராய் குதுப் இறந்தவுடன், தக்காணத்தின் பாமினி சுல்தான் முதலாம் அஹ்மத் ஷா சால்சேட் தீவு மற்றும் மாஹிமையும் கைப்பற்றினார். 1526ம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் தங்கள் தொழிற்சாலையை பஸ்சைனில் நிறுவினர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன்-போர்த்துகேயர் இடையே 25 அக்டோபர் 1535 அன்று சமாதானம் மற்றும் வர்த்தக உடன்படிக்கையின் மூலம் மும்பையின் ஏழு தீவுகள் போர்த்துகேயர்கள் வசமானது. மும்பையில் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்தது. போர்த்துகேயர் காலம் போர்த்துகேய கிழக்கிந்திய நிறுவனம் பம்பாயில் தங்கள் மத அமைப்புகளின் அடித்தளம் மற்றும் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 1534ல் முகலாயர்களால் மும்பையின் ஏழு தீவுகள் மெஸ்ட்ரே டியோகோவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது.. பம்பாயில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றான மாகிமில் உள்ள் செயின்ட் மைக்கேல் தேவாலயம் 1540 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. 1545 மற்றும் 1548க்கு இடையில் பரேல், வடலா, சியோன் மற்றும் வோர்லி, மசகான், டிராம்பே, செம்பூர், டிராம்பே, செம்பூர், எலிபெண்டா தீவு, சால்சேட் தீவு ஆகியவை போர்த்துகேய கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது. போர்த்துகீசியர்கள் உள்ளூர் மக்களுடன் கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தனர், மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வலுவாக ஆதரித்தனர். 1560 ஆம் ஆண்டில் போர்த்துகேயர்கள் உள்ளூர் கோலி, குன்பி, கும்பர் மக்களை மாகிம், வோர்லி மற்றும் பசைன் பகுதிகளில் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இந்த கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களால் போர்த்துகீசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர், இருப்பினும் அவர்கள் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துடன் சமீபத்தில் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அக்காலத்தில் பாம்பேயின் முக்கிய வர்த்தகம் தேங்காய் மற்றும் தென்னை நார் ஆகும். 1612ல் மும்பையின் உரிமைக்காக சூரத்தில் ஆங்கிலேயர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது.. 8 மே 1661 அன்று இங்கிலாந்தின் இளவரசர் இரண்டாம் சார்லஸ் மற்றும் போர்ச்சுகலின் இளவரசி கேத்தரின் ஆகியோரின் திருமண ஒப்பந்தம் மூலம் சார்லசுக்கு, கேத்தரின் குடும்பத்தினர் வழங்கிய வரதட்சணையின் ஒரு பகுதியாக மும்பை நகரம் இருந்தது. எனவே மும்பை நகரம் பிரித்தானியர் வசம் வந்தது. பிரித்தானியர் காலம் 19 மார்ச் 1662 அன்று, ஆபிரகாம் ஷிப்மேன் என்ற பிரித்தானியர் மும்பை நகரத்தின் படைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாகிம், சியோன், தாராவி மற்றும் வடலா பகுதிகள் பிரித்தானியர்களின் மும்பை நகரத்துடன் இணைக்கப்பட்டது. பம்பாய் நகரத்தைச் சுற்றி கோட்டைகள் கட்டப்பட்டது. 21 செப்டம்பர் 1668 அன்று பிரித்தானியப் பேரரசிடமிருந்து, மும்பை பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. ஜார்ஜ் ஆக்செண்டன் 23 செப்டம்பர் 1668 அன்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பம்பாயின் முதல் ஆளுநரானார். சூலை 1669ல் பம்பாயின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜெரால்டு ஆங்கியர், 1670ல் வழங்கிய பல்வேறு சலுகைகளால் பார்சிகள், கொங்கணிகள், யூதர்கள், தாவூதி போரா முஸ்லீம்கள், சூரத் மற்றும் டையூவிலிருந்து குஜராத்தி பனியாக்கள் மற்றும் சால்செட்டிலிருந்து பிராமணர்களை ஈர்த்தது. வடக்கில் டோங்ரி முதல் தெற்கில் உள்ள மென்டாம்ஸ் முனை (இன்றைய லயன் கேட் அருகில்) வரை மும்பை நகரத்தில் விரிவான கோட்டைகளையும் கட்டினார். 20 கப்பல்கள் நிறுத்துவதற்கு இடவசதியுடன் துறைமுகமும் உருவாக்கப்பட்டது. 1670ல், பார்சி தொழிலதிபர் பீம்ஜி பரிக் முதல் அச்சகத்தை பம்பாயில் இறக்குமதி செய்து நிறுவினார்..1661 மற்றும் 1675க்கு இடையில் 10,000 முதல் 60,000 வரை மக்கள் தொகையில் ஆறு மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. முகலாயப் பேரரசின் கடற்படைத் தலைவர் யாகுத் கான், அக்டோபர் 1672 இல் பம்பாயில் தரையிறங்கி, அங்குள்ள உள்ளூர் மக்களை அழித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் உடன்படிக்கை இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையே 1674ல் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் பம்பாயில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களை டச்சுக்காரர்களின் அச்சத்திலிருந்து விடுவித்தது. 1686 ஆம் ஆண்டில், நிறுவனம் அதன் முக்கிய தொழில் நிறுவனங்களை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தனது அனைத்து நிறுவனங்களின் அலுவலகங்களை மும்பைக்கு மாற்றியது. 14 பிப்ரவரி 1689 அன்று முகலாயப் படைத்தலைவர் யாகுத் கான், மசாகோன் கோட்டையை இடித்துத் தள்ளினார். முகலாயப் பேரரசின் ஆட்சியாளரான ஔரங்கசீப்பிற்கு பின் ஆங்கிலேயர்கள் பணம் செலுத்திய பிறகு, யாகுத் கான் 8 சூன் 1690 அன்று பம்பாயை காலி செய்தார். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல இந்திய மற்றும் பிரித்தானிய வணிகர்களின் வருகையை ஒட்டி பம்பாயின் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அது உப்பு, அரிசி, தந்தம், துணி, ஈயம் மற்றும் வாள் கத்திகளை, அரேபிய நகரங்களான மெக்கா மற்றும் பாஸ்ராவுடன் வர்த்தகம் செய்தது.[56] 1710ம் ஆண்டு வாக்கில், பம்பாய் கோட்டையின் கட்டுமானம் முடிவடைந்தது, இது ஐரோப்பிய கடற்கொள்ளையர்கள் மற்றும் மராட்டியர்களின் கடல் தாக்குதல்களிலிருந்து தீவுகளை பலப்படுத்தியது. 26 டிசம்பர் 1715 அன்று சார்லஸ் பூன் பம்பாயின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். வடக்கே டோங்ரியில் இருந்து தெற்கில் மென்டாம் புள்ளி வரை சுவர்களைக் கட்டினார். அவர் கடற் படையை நிறுவினார்,[56] மற்றும் செயின்ட் தாமஸ் பேராலயத்தை 1718ல் கட்டினார், இது பம்பாயில் முதல் ஆங்கிலிகன் தேவாலயமாகும். 1728ல், பம்பாயில் ஒரு மேயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது மற்றும் வொர்லியில் இருந்து பம்பாயை பிரிக்கும் சிற்றோடையில், மகாலெட்சுமி பகுதி மறுசீரமைப்பு தொடங்கப்பட்டது. கப்பல் கட்டும் தொழில் 1735ல் பம்பாயில் தொடங்கியது. மற்றும் விரைவில் அதே ஆண்டில் கடற்படை கப்பல்துறை நிறுவப்பட்டது. போர்த்துகேயர்களிடமிருந்து மராத்தியப் பேரரசின் பேஷ்வா பாஜிராவ் 1737ம் ஆண்டில் சால்சேட் தீவுகளைக் கைப்பற்றினார். 1739ஆம் ஆண்டில் வசாய் பகுதியை மராத்தியப் பேரரசு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டு கொடுத்தது.. 1748ல் மராத்தியப் படைகள், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிப் படைகளை மும்பை நகரத்தின் கோட்டைக்குள் துரத்தியடித்தனர். 1750ல் சூரத்தின் வாடியா குடும்ப உறுப்பினர் லவ்ஜி நுஸ்செர்வான்சி வாடியா என்பவர் கிழக்கிந்திய கம்பெனிக்காக மும்பை துறைமுகத்தை அமைத்தார். இதுவே ஆசியாவின் முதல் துறைமுகம் ஆகும். 18ஆம் நூற்றாண்டின் நடுவில் மும்பையில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தொழில் கலைஞர்கள் குடியேறினர். 1769ல் டோங்கிரி கோட்டை பகுதியில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 1770ல் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் அமைக்கப்பட்டது. 1782ல் சல்பாய் உடன்படிக்கைப்படி, சால்செட் தீவுகள், எலிபெண்டா தீவு, ஹோக் தீவு, கரஞ்சா பகுதிகளை மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியிடம் சென்றது.. இருப்பினும் வசாய் பகுதிகள் மராத்தியர்கள் தக்க வைத்துக் கொண்டனர். 1782ல் மும்பையின் ஏழு தீவுகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. தக்காணத்தில் 1789 - 1795களில் ஏற்பட்ட மண்டையோடு பஞ்சத்தால் மும்பை மக்களில் பலர் உணவின்றி தெருக்களில் வீழ்ந்து மடிந்தனர். மும்பை நகர வளர்ச்சி 19 நவம்பர் 1801 அன்று மும்பை பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில் நிறுவப்பட்டது. கொலாபாவின் வடக்கே உள்ள வெலிங்டன் பையர் (அப்பல்லோ பண்டர்) 1819ல் பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளி 1822 இல் நிறுவப்பட்டது.. 1824ல் பம்பாய் வறட்சியால் பாதிக்கப்பட்டது. சூலை 1832ல் மும்பை நகரத்தை ஆக்கிரமித்த பரியா நாய்களை அழிக்க கம்பெனி ஆட்சி உத்தரவின் விளைவாக பார்சி கலவரம் நடந்தது. 1833ல் ஆசியடிக் சொசைட்டியின் கிளை (டவுன் ஹால்) கட்டி முடிக்கப்பட்டது, 1835ல் எல்பிங்ஸ்டன் கல்லூரி நிறுவப்பட்டது. . மற்றும் 1836ல் பம்பாய் வர்த்தக சபை நிறுவப்பட்டது. 1838ல் கொலாபா மற்றும் லிட்டில் கொலாபா தீவுகள் சாலைகள் மூலம் பம்பாயுடன் இணைக்கப்பட்டது. அதே ஆண்டில் பம்பாய்க்கும் இலண்டனுக்கும் இடையே மாதாந்திர கப்பல் போக்குவரத்து தொடங்கியது. நகரின் மிகப் பழமையான வங்கியான பாம்பே வங்கி 1840ல் நிறுவப்பட்டது. மற்றும் பாங்க் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா 1842ல் நிறுவப்பட்டது. 1844ல் காட்டன் கிரீனில் பருத்தி சந்தை நிறுவப்பட்டது. அவாபாய் ஜம்செட்ஜி ஜீஜீபோய் மாகிம் காஸ்வேயின் கட்டுமானத்திற்கு நிதியளித்தார். மாகிமை பாந்த்ராவுடன் இணைக்கும் பணி 1845ல் நிறைவடைந்தது. 1845ல் நிறுவப்பட்ட கமர்ஷியல் பேங்க் ஆஃப் இந்தியா, மேற்கத்திய மற்றும் கிழக்கு மையக்கருத்துக்களின் கலவையுடன் கவர்ச்சியான ரூபாய் பணத் தாள்கள் வெளியிட்டது. நவம்பர் 3, 1845ல், கிராண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையை ஆளுநர் ராபர்ட் கிராண்டால் நிறுவப்பட்டது. முகமது பற்றிய கட்டுரையின் விளைவாக, அக்டோபர் 1851ல் முஸ்லிம்களுக்கும் பார்சிகளுக்கும் இடையே பம்பாயில் பெரும் கலவரம் வெடித்தது. 26 ஆகஸ்டு 1852 அன்று பிரித்தானிய இந்தியாவில் முதல் அரசியல் அமைப்பான பம்பாய் சங்கம் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு பொதுமக்களின் குறைகளை தீர்க்க பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்தும். முதல் இந்திய இருப்புப் பாதை பம்பாய் மற்றும் தானே இடையே 21 மைல் போடப்பட்டு 16 ஏப்ரல் 1853 முதல் செயல்படத் தொடங்கியது. பம்பாய், பரோடா மற்றும் மத்திய இந்திய இரயில்வே (BB&CI) ஆகியவை 1855ல் ஒன்றாக இணைக்கப்பட்டது. 7 சூலை 1854 அன்று முதல் பருத்தி நெசவு மற்றும் நூற்பாலை மத்திய மும்பையில் தொடங்கப்பட்டது. மும்பை பல்கலைக்கழகம் 1857ல் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் நவீன உயர்கல்வி நிறுவனமாகும். வணிக வங்கி, பட்டய வணிகம், ஆக்ரா மற்றும் யுனைடெட் சேவை மற்றும் மேற்கு இந்தியாவின் மத்திய வங்கி ஆகியவை கணிசமான தொழில்துறை மக்களை ஈர்க்கும் வகையில் பம்பாயில் நிறுவப்பட்டன. மேற்குலகின் பருத்திக்கான தேவையை அதிகரித்தது, இதனால் இந்தியப் பருத்தி வர்த்தகத்தில் மகத்தான அதிகரிப்புக்கு வழிவகுத்தது. விக்டோரியா கார்டன்ஸ் 1862ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பாம்பே கப்பல் மற்றும் இரும்பு நிறுவனங்கள் 1863ல் பம்பாய் வணிகர்களை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரமாக மாற்றுவதற்கு தொடங்கப்பட்டது. பம்பாய் மற்றும் அருகிலுள்ள தீவுகளுக்கு இடையே நீராவி படகுகளை பராமரிப்பதற்காக 1866ல் படகு நிறுவனம் நிறுவப்பட்டது. 1869ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் பம்பாய் கடல் வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. மும்பை மாநகராட்சி 1872ல் நிறுவப்பட்டது. பம்பாய் துறைமுக அறக்கட்டளை 1870ல் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்காக அறிவிக்கப்பட்டது. டிராம்வே சேவை 1873ல் நிறுவப்பட்டது..பாம்பே எலக்ட்ரிக் சப்ளை அண்ட் டிரான்ஸ்போர்ட் (பெஸ்ட்). 1875ல் மும்பை பங்குச் சந்தை நிறுவப்பட்டது. 1882ல் மும்பையில் மின்சார சேவை துவங்கியது மற்றும் கிரோபோர்டு சந்தை மின்சார விளக்குகளுடன் துவங்கியது. 1883ல் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் நிறுவப்பட்டது. பெப்ரவரி 1874 இல் மீண்டும் பார்சி மக்கள்-முஸ்லிம்களிடையே கலவரங்கள் வெடித்தது. இது பார்சி குடியிருப்பாளரால் வெளியிடப்பட்ட முகமது பற்றிய கட்டுரையால் ஏற்பட்டது. பாம்பே ஜிம்கானா 1875ல் உருவாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பழமையான பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை 1875ல் நிறுவப்பட்டது. 1882ல் மின்சாரம் பம்பாயை வந்தடைந்தது. பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் 1883ல் நிறுவப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு 28-31 டிசம்பர் 1885 வரை பம்பாயில் நடைபெற்றது. பம்பாய் முனிசிபல் சட்டம் 1888ல் இயற்றப்பட்டது. உலகப் புகழ் பெற்ற விக்டோரியா டெர்மினஸ் மே 1888 ல் கட்டி முடிக்கப்பட்டது.[135] 1890களில் டப்பாவாலா (மதிய உணவு விநியோகம் செய்பவர்) தொழில் முறை மும்பை நகரத்தில் தொடங்கியது. 1893 ஆகஸ்ட் 11 அன்று, பம்பாயில் ஒரு சிவன் கோவிலை முஸ்லிம்கள் தாக்கியபோது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில். 75 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 350 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் 1896ல், பம்பாய் பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டது, அங்கு இறப்பு எண்ணிக்கை வாரத்திற்கு 1,900 பேர் என மதிப்பிடப்பட்டது. இந்த நேரத்தில் 8,50,000 மக்கள் தொகையில் பாதி பேர் பம்பாயை விட்டு வெளியேறினர்.1898 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று, பிளேக் நோயை அடக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக திடீரென தீவிர கலவரம் தொடங்கியது. இந்த கலவரம் கப்பல்துறை மற்றும் இரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்தது. இது நகரத்தை சில நாட்களுக்கு முடக்கியது. 9 டிசம்பர் 1898 அன்று பம்பாய் நகர மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் 10 சனவரி 1899 அன்று வால்டெமர் ஹாஃப்கைன் மூலம் ஹாஃப்கைன் இன்ஸ்டிடியூட் உருவாக்கப்பட்டதே பிளேக் நோயைக் கட்டுப்படுத்தப்பட்டது. தாதர்-மாதுங்கா-வடாலா-சியோன் திட்டம், பம்பாயின் முதல் திட்டமிடப்பட்ட புறநகர் திட்டமாகும். மும்பை நகரின் மையத்தில் நெரிசலைக் குறைக்க 1899-1900களில் பம்பாய் நகர மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவப்பட்டது.. 1900 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளில் பிளேக் நோய் காரணமாக தொழிலாளர்கள் மும்பையை விட்டுச் சென்றதால் பருத்தி ஆலை தொழில் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கம் 1905ம் ஆண்டு வங்காளப் பிரிவினையை ஒட்டி, இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்த பொருட்களை மக்கள் வாங்க வேண்டி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மக்களால்புறக்கணிக்கப்பட்டது. 22 சூலை 1908 அன்று, பம்பாயில் சுதேசி இயக்கத்தின் முதன்மை வழக்கறிஞரான பால கங்காதர திலகர், தனது பத்திரிகையான கேசரியில் அரசுக்கு எதிராக ஆவேசமான கட்டுரைகளை எழுதிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இந்த கைது நகரம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. 1910ல் இந்திய தேசிய காங்கிரசு தலைவரான பெரோசா மேத்தா துவக்கிய பாம்பே க்ரோனிகல் செய்தி பத்திரிக்கை, இந்தியாவின் சுதந்திரம் வரை தேசிய இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. 1918 சூன் 10 அன்று பம்பாயில் முதலாம் உலகப் போரில் பிரித்தானிய இந்திய அரசு, இந்தியர்களின் உதவி வேண்டினர். 1918ம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பம்பாய் முழுவதும் பரவிய இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியது. பம்பாயில் ஜவுளித் தொழிலில் முதல் முக்கியமான வேலை நிறுத்தம் சனவரி 1919 இல் தொடங்கியது. பிப்ரவரி - ஏப்ரல் 1919ல். ரவுலட் சட்டத்தின் விளைவாக மகாத்மா காந்தியால் சத்தியாகிரகம் இயக்கம் தொடங்கப்பட்டது. இது முதலாம் உலகப் போரின் போது பொது அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு காலவரையின்றி அவசரகால நடவடிக்கைகளை நீட்டித்தது. முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம்த்தின் போது மும்பை நகர வாழ்க்கை பலமுறை பாதிக்கப்பட்டது.. இந்தியாவில் முதல் மின்சார இரயில்வே இன்ஜின்கள் 1925ல் விக்டோரியா டெர்மினஸ் முதல் குர்லா வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 1920களின் பிற்பகுதியில், ஈரானில் ஏற்பட்ட வறட்சியில் இருந்து தப்பிக்க பல பாரசீகர்கள் பம்பாய்க்கு குடிபெயர்ந்தனர். 1930களின் முற்பகுதியில், பிரித்தானிய இந்தியா அரசு உப்பு வரி விதித்ததை எதிர்த்து நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கம் பம்பாயிலும் பரவியது. 1929ல் பம்பாயில் பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால் தொழில் மற்றும் வர்த்தகத் துறைகள் 1933 முதல் 1939 முடிய முடங்கியது.. 1932 அக்டோபர் 15 அன்று தொழிலதிபரும் விமானியுமான ஜே.ஆர்.டி. டாடா கராச்சியிலிருந்து பம்பாய்க்கு விமானம் மூலம் பறந்து காட்டினார். இது பம்பாயில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு முன்னோடியாக இருந்தது. சுதந்திர இந்தியா 15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்கு பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் இருந்து 1,00,000 இந்து சமயத்தைச் சேர்ந்த சிந்தி மக்கள் அகதிகளாக மும்பையின் கல்யாண் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குடிபெயர்ந்தனர். அப்பகுதிக்கு இந்தியத் தலைமை ஆளுநர் இராஜாஜி உல்லாஸ்நகர் என்று பெயரிட்டார்.. ஏப்ரல் 1950ல், பம்பாய் புறநகர்ப் பகுதிகள் மற்றும் பம்பாய் நகரத்தின் இணைப்புடன் மும்பை மாவட்டம் நிறுவப்பட்டது.. இது 235.1 சதுர கிலோ மீட்டர் (90.77 சதுர மைல்) பரப்பளவுடன், 1951ல் 23,39,000 மக்கள் வசித்து வந்தனர். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது உருவான மகாராட்டிரா மாநிலத்தில் தலைநகராக மும்பை நகரம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 1950ல் மும்பை புறநகர் பகுதிகளை மும்பை நகரத்துடன் இணைத்து பெருநகரமும்பை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் மும்பை பரப்பளவுடன்., 1951 கணக்கெடுப்பின்படி, 23,39,000 மக்கள் தொகையுடன் கூடியதாக இருந்தது. 1960களின் முற்பகுதியில் மும்பை நகரத்தில் பார்சி மக்கள் மற்றும் மார்வாரிகள் புலம்பெயர்ந்தனர்.மும்பை நகரத்தில் பெரும்பாலான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களை இவ்விரு சமூகத்தினர் வைத்திருந்தனர், அதே நேரத்தில் அலுவலக வேலைகள் முக்கியமாக நகரத்திற்கு குடியேறிய தென்னிந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டது.பூர்வீக மராத்திய மக்களின் நலனுக்காக சிவசேனா கட்சியை 19 சூன் 1966 அன்று பால் தாக்கரேவால் நிறுவப்பட்டது. 1960களின் பிற்பகுதியில், நாரிமன் பாயிண்ட் மற்றும் கஃபே பரேட் ஆகியவை மீள்ருவாக்கம் செய்யப்பட்டது.. 1970களின் போது பம்பாய்-பிவண்டி கலவரங்கள் நடந்தது..197ல்களில், லண்டனை தளமாகக் கொண்ட ஷெப்பர்ட் என்ற வர்த்தக நிறுவனத்தால் கப்பல்களை அறிமுகப்படுத்திய பிறகு, பம்பாய்க்கும் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கும் இடையே கடலோரத் தொடர்பு அதிகரித்தது.. இந்தக் கப்பல்கள் கோவா மற்றும் மங்களூர் கத்தோலிக்கர்கள் பம்பாய்க்கு நுழைவதற்கு உதவியது. இந்தியாவின் மிகப்பெரிய ஊடாடும் அறிவியல் மையமான நேரு அறிவியல் மையம் 1972 இல் பம்பாயில் உள்ள வோர்லி பகுதியில் 1972ல் நிறுவப்பட்டது. மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) 26 சனவரி 1975 அன்று மகாராஷ்டிரா அரசாங்கத்தால் மும்பை பெருநகரப் பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு உச்ச அமைப்பாக அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 1979ல், மும்பையின் மக்கள்தொகை பரவல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு உதவுவதற்காக, தானே மாவட்டம் மற்றும் ராய்கட் மாவட்டங்கள் நிறுவப்பட்டது. சிட்கோ மூலம் நவி மும்பையை மும்பையின் சகோதரி நகரமாக நிறுவப்பட்டது. பெரு நகர மும்பை ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 18 சனவரி 1982 அன்று தொழிற்சங்கத் தலைவர் தத்தா சமந்த் என்பவர் தலைமையில் தொடங்கப்பட்டது. பம்பாயில் கிட்டத்தட்ட 2,50,000 தொழிலாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. 1984 மே 17 அன்று, பம்பாய், தானே மற்றும் பிவண்டி பகுதிகளில் உள்ள மசூதிகளின் உச்சியில் காவிக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. 278 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,118 பேர் காயமடைந்தனர். 26 மே 1989 அன்று நவா சேவாவில் நிறுவப்பட்ட ஜவஹர்லால் நேரு துறைமுகம், பம்பாய் துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்கும் மற்றும் நகரத்தின் மையத் துறைமுகமாக செயல்படும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. டிசம்பர் 1992 - ஜனவரி 93 இல், மும்பை கலவரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துகளும், முஸ்லிம்களும் கொல்லப்பட்டதால் மும்பை நகரமே முடங்கியது. 12 மார்ச் 1993 அன்று மும்பையில் 13 தொடர் வெடிகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன, இதன் விளைவாக 257 இறப்புகள் மற்றும் 700 காயங்கள் ஏற்பட்டன. இந்த தாக்குதல்கள் பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில் கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிம் மூலம் திட்டமிடப்பட்டதாக கருதப்படுகிறது. 1996ம் ஆண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவ சேனா தலைமையிலான அரசாங்கம், பம்பாய் நகரத்தை பூர்வீகமாகக் கொண்ட மராத்தி மக்கள் மும்பா தேவி நினைவாக, பம்பாய் நகரத்தின் பெயரை மும்பை என மாற்றப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் மராத்தியப் பேரரசர் மன்னர் சிவாஜியின் நினைவாக, விக்டோரியா டெர்மினஸ் இரயில் நிலையத்திற்கு, சத்திரபதி சிவாஜி தொடருந்து நிலையம் என 1996 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று மறுபெயரிடப்பட்டது. இதனையும் காண்க மண்டையோடு பஞ்சம் (1789-95) பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் 1992-93 மும்பை கலவரங்கள் 1993 மும்பை குண்டுவெடிப்புகள் மும்பையின் காலக்கோடுகள் மேற்கோள்கள் உசாத்துணை Chandavarkar, Rajnarayan. "Workers' politics and the mill districts in Bombay between the wars." Modern Asian Studies 15.3 (1981): 603-647 Online. Kooiman, Dick. "Jobbers and the emergence of trade unions in Bombay city." International Review of Social History 22.3 (1977): 313–328. online Morris, Morris David. The emergence of an industrial labor force in India: A study of the Bombay cotton mills, 1854-1947 (U of California Press, 1965). Sarkar, Aditya. Trouble at the Mill: Factory Law and the Emergence of Labour Question in Late Nineteenth-Century Bombay (Oxford UP, 2017) online review Upadhaya, Sashibushan. Existence, Identity, and Mobilization: The Cotton Millworkers of Bombay, 1890-1919 (New Delhi: Manohar, 2004). வெளி இணைப்புகள் Portuguese India History: The Northern Province: Bassein, Bombay-Mumbai, Damao, Chaul from Dutch Portuguese Colonial History Century City Time Line – Bombay from Tate A collection of pages on Mumbai's History from Time Out (Mumbai) The Mumbai Project from Hindustan Times மும்பையின் வரலாறு மும்பை மும்பை மாவட்டம்
682264
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
செங்கியரைட்டு
செங்கியரைட்டு (Sengierite) என்பது Cu2(OH)2[UO2VO4]2·6H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. தாமிரமும் யுரேனைல் வனேடேட்டும் சேர்ந்து உருவான கனிமமாகக் கருதப்படுகிறது. காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள கடங்கா மாகாணத்தில் உள்ள உலுபும்பாசி நகரத்திற்கு வடக்கே 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ள லூயிசுவிசி சுரங்கத்தில் செங்கியரைட்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 1949 ஆம் ஆண்டில் இயோகன்னசு எஃப். வேசு மற்றும் பால் எஃப். கெர் ஆகியோரால் முதலில் விவரிக்கப்பட்டது. காங்கோவில் இருந்த சுரங்க நிறுவனத்தின் இயக்குநராக இருந்த எட்கர் செங்கியர் நினைவாக இந்த கனிமத்திற்கு செங்கியரைட்டு என்று பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் செங்கியரைட்டு கனிமத்தை Sgiஎன்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் நூற்பட்டியல் Palache, P.; Berman H.; Frondel, C. (1960). "Dana's System of Mineralogy, Volume II: Halides, Nitrates, Borates, Carbonates, Sulfates, Phosphates, Arsenates, Tungstates, Molybdates, Etc. (Seventh Edition)" John Wiley and Sons, Inc., New York, pp. 1047–1048. தாமிரம்(II) கனிமங்கள் யுரேனியம்(VI) கனிமங்கள் கனிமங்கள் பாசுப்பேட்டு கனிமங்கள்
682267
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சுகார்ப்பியோனைட்டு
சுகார்ப்பியோனைட்டு (Skorpionite) என்பது Ca3Zn2(PO4)2CO3(OH)2·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். துத்தநாகம் பாசுப்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நமீபியா நாட்டின் சுகோர்ப்பியன் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் சுகார்ப்பியோனைட்டு என்று கனிமத்திற்குப் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் சுகார்ப்பியோனைட்டு கனிமத்தை Skr என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் பாசுப்பேட்டு கனிமங்கள் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
682269
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சிட்ரெங்கைட்டு
சிட்ரெங்கைட்டு (Strengite) என்பது FePO4·2H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒப்பீட்டளவில் மிகவும் அரிய பாசுப்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. 1830 -1897 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த செருமனி நாட்டு கனிமவியலாளர் யோகான் ஆகத்து சிட்ரெங்கு கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு சிட்ரெங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது. இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில், வேரிசைட்டைப் போன்ற நிறம் கொண்டுள்ளது. தண்ணீரில் ஓரளவு கரையும். குறிப்பாக குறைந்த காரகாடித்தன்மை மற்றும் குறைந்த ஆக்சிசனேற்றம் - ஒடுக்கம் திறன் உள்ள சூழ்நிலைகளில் சிட்ரெங்கைட்டின் நிறம் நிறம் பெரிக் அயனியில் இருந்து வருகிறது (Fe3+). பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிட்ரெங்கைட்டு கனிமத்தை Stg என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் பாசுப்பேட்டு கனிமங்கள் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
682274
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
அமுல்யா பட்நாயக்கு
அமுல்யா குமார் பட்நாயக் (Amulya Patnaik) இந்தியாவைச் சேர்ந்த காவல் சேவை அதிகாரி ஆவார். இவர் 21 ஆவது தில்லி காவல்துறை ஆணையராக 30 ஜனவரி 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 30 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி வரை பணியாற்றினார். கல்வி மற்றும் தொழில் ஒடிசாவைச் சேர்ந்த பட்நாயக், 1960 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று பிறந்தார். 1979 ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற இவர், 1981 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் அதே பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1985 ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசம் கோவா மிசோரம் ஒன்றியப்பிரதேசங்களின் தொகுதி இந்திய காவல் பணி அதிகாரி ஆவார். இந்திய காவல் பணி அதிகாரியாக இவரது முதல் பணி தில்லியிலுள்ள நச்சாப்கார் நகரத்தில் அமைந்தது. பாண்டிச்சேரியின் காவல் துறை கண்காணிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இவர் தில்லியின் 21 ஆவது காவல் ஆணையராக ஆனார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணியாற்றினார். அதன்பிறகு எசு. என். சிறீவசுத்தவா பதவியேற்றார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரங்களைக் கட்டுப்படுத்தாததில் இவர் வகித்த பங்கிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல், சவகர்லால் நேரு பல்கலைக்கழக கைகலப்பு, இயாமியா கைகலப்பு மற்றும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 அன்று நடந்த கார்கி கல்லூரி பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் இவரது பதவிக்காலம் விமர்சனங்கள் நிறைந்த காலமானது. 2020 ஆம் ஆண்டு சனவரியில் ஓய்வு பெறவிருந்தார் ஆனால் 2020 தில்லி சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போராட்டங்கள் காரணமாக இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்கு முன்பு, இவர் தில்லி காவல்துறையில் சிறப்பு காவல் ஆணையராக (கண்காணிப்பு மற்றும் நிர்வாகம்) பணியாற்றினார். மேற்கோள்கள் இந்திய காவல் பணி அதிகாரிகள் 1960 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்தியர்கள்
682277
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சென்னையிலுள்ள உணவகங்களின் பட்டியல்
இந்த‌ கட்டுரையானது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர உணவுவிடுதிகளைப் பட்டியலிடப்பட்டுள்ளது. சிறுக்குறிப்புகள் இந்தியாவில் புது தில்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக வெளிநாட்டினர் அதிகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சென்னை நகரம் 35,81,200 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 38,57,900 சுற்றுலாப் பயணிகளும், 2015 ஆம் ஆண்டில் 42,43,700 சுற்றுலாப் பயணிகளும் இந்த நகரத்தைப் பார்வையிட்டுள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரியத் தளங்களைப் பார்வையிடுவதர்க்கும் மற்றும் மருத்துவ சுற்றுலாப் பயணிகள், முக்கியமாக ஐக்கிய இராச்சியம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளிருந்து அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், சென்னை 31,74,500 சுற்றுலாப் பயணிகளுடன், 2010 ஆம் ஆண்டை விட 14 சதவிகிதம் அதிகரித்து, உலகளாவிய முதல் நூறு நகரங்களின் தரவரிசையில் நாற்பத்தி ஒன்று வது இடத்தைப் பிடித்தது. சென்னை 35,35,200 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்ததன் மூலம் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரங்களில் 38 வது இடத்தையும், இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாகச் சென்னைத் திகழ்கின்றது. சென்னை உலகின் மிக மலிவான விலையில் ஐந்து நட்சத்திர உணவுவிடுதி அறைகளை வழங்குகிறது. 2021 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, உலகிலேயே ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் தங்குவதற்க்காக மிகக் குறைந்த விலையில் அறைகளைக் கொடுக்கும் நகரம் இதுவாகும், மேலும் ஐந்து நட்சத்திர அறைகளுக்கு வசூலிக்கும் அடிப்படைத் தொகை 3,530 ரூபாயாக உள்ளது. இது ஐந்து நட்சத்திர உணவகங்களின் சதவீதத்தில் இது உலகில் 35வது இடத்தில் சென்னை உள்ளது. சொகுசு விடுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய உணவு விடுதிகள் சென்னைக் கட்டிடங்கள் சென்னை தங்குவிடுதிகள்
682278
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பசோகலி சட்டமன்றத் தொகுதி
பசோகலி சட்டமன்றத் தொகுதி (Basohli Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பசோகலி உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்ற தொகுதியாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் 2024 மேற்கோள்கள் கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682280
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சசுரோடா சட்டமன்றத் தொகுதி
சசுரோடா சட்டமன்றத் தொகுதி (Jasrota Assembly constituency) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநில சட்டப் பேரவையில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சசுரோடா, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2024 மேற்கோள்கள் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682281
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கிழக்கு வர்த்தமான் மக்களவைத் தொகுதி
கிழக்கு வர்த்தமான் அல்லது பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி (Bardhaman Purba Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் எண் 38. பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ளன. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக, பர்த்வான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதி மற்றும் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி ஆகியவை 2009 முதல் நீக்கப்பட்டு புதிய தொகுதிகளாக பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதியும் பர்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதியும் உருவாக்கப்பட்டன. சட்டமன்றப் பிரிவுகள் பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 38) பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முந்தைய ஆண்டுகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பர்த்வான் மக்களவைத் தொகுதியினையும் கட்வா மக்களவைத் தொகுதியினையும் பார்க்கவும். தேர்தல் முடிவுகள் 2024 2019 மேலும் காண்க மக்களவை தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
682283
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88
அழுதையாறு அணை
அழுதையாறு அணை (Azhutha Dam) என்பது இந்தியாவின் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு கிராம ஊராட்சியில் உள்ள ஆழ்தாவில் பம்பை ஆற்றின் துணை ஆறான அழுதையாற்றின் மீது கட்டப்பட்ட ஒரு சிறிய நீர் திசைதிருப்பல் அணையாகும். இந்த அணை 72 மீட்டர் (236 ) நீளமும் 14 மீட்டர் (46 ) உயரமும் கொண்ட ஒரு சிறிய பைஞ்சுதை ஈர்ப்பு அணை. இது இடுக்கி அணையின் தண்ணீரைத் திசைதிருப்பல் அணை செயல்படுகிறது. இடுக்கி நீர்மின் திட்டத்திற்கான அணையாக ஆழுதையாறு அணை கட்டப்பட்டது. 1987ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கட்டுமானம் 1991ஆம் ஆண்டில் நிறைவடைந்து அணையின் பயன்பாடு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் சூன் 1998-இல் ஓரளவு மட்டுமே நிறைவு செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு நிறைவடைந்த இந்த அணையிலிருந்து விடுவிக்கப்படும் நீர் அழுதையாற்றில் சென்று இரன்னி மற்றும் அய்ரூர் வட்டங்கள் வழியாகப் பாய்கிறது. இந்தத் திட்டம் பம்பா ஆற்றின் துணை ஆறான அழுதா ஆற்றின் 16.8389 கிமீ2 நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பி விடுகிறது. இதன் மூலம் இடுக்கி நீர்மின் திட்டத்தின் மின் திறனை 57 மெகா அலகு அதிகரிக்கிறது. விவரக்குறிப்புகள் அட்சரேகை: 9 0 33′ 50 "வ தீர்க்கரேகை: 76 0 59′30 "கி ஊராட்சி: பீர்மேடு கிராமம்: பீர்மேடு மாவட்டம்: இடுக்கி ஆற்றுப் படுகை: பம்பை ஆறு: அழுதையாறு அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு: அழுதையாறு பயன் பெறும் பகுதிகள்: இரன்னி, அய்ரூர் வட்டங்கள் அணையின் பணி நிறைவு ஆண்டு: 2007 திட்டத்தின் பெயர்: இடுக்கி நீர்மின் உற்பத்தி திட்டம் திட்டத்தின் நோக்கம்: நீர்மின்சாரம் அணை வகை: ஈர்ப்பு வகைப்பாடு: சிற்றணை அதிகபட்ச நீர் மட்டம்: 960.20 மீ முழு நீர்த்தேக்க நிலை: 956.00 மீ முழு நீர்த்தேக்க நிலைyஇல் சேமிப்பு: 0.140 Mm3 ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 13.50 மீ நீளம்: 116.30 மீ நீர்க்கசிவு: மேல்நிலைப் பிரிவு உயர் மட்டம்: 956.00 மீ அணை நீர் வெளியேற்றம்: எண் 1. வட்ட வகை, 0.75 மீ மேற்கோள்கள் இடுக்கி மாவட்ட அணைகள்
682284
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கதுவா சட்டமன்றத் தொகுதி
கதுவா சட்டமன்றத் தொகுதி (Kathua Assembly constituency) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கத்துவா, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் மேலும் காண்க கதுவா மேற்கோள்கள் கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்
682287
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சாம்சோனைட்டு
சாம்சோனைட்டு (Samsonite) என்பது Ag4MnSb2S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மாங்கனீசு ஆண்டிமனி சல்போவுப்புக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஒரு பொதுவான மெல்லிய கதிர்வீச்சுடன் ஒற்றைச்சரிவச்சுப் பட்டக அமைப்பில் இது படிகமாகிறது. உலோகக் கருப்பு முதல் எஃகு கருப்பு வரை பிளவு இல்லாமல் நொறுங்கும் தன்மையுடன் சங்குருவத்தில் காணப்படுகிறது. மெல்லிய துணுக்குகளில் பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் தோன்றும். சிவப்பு நிற கோடுகளையும் கொண்டிருக்கும். மென்மையான இக்கனிமம் மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2.5 என்ற அளவையும் ஒப்படர்த்தி 5.51 என்ற அளவையும் பெற்றுள்ளது. செருமனி நாட்டின் ஆர்சு மலைகள் பகுதியிலுள்ள சாம்சன் வெள்ளிச் சுரங்கத்தில் கண்டறியப்பட்ட காரணத்தால் 1910 ஆம் ஆண்டில் இது முதன்முதலில் சாம்சோனைட்டு என்று பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் Palache, C., H. Berman, and C. Frondel (1944) Dana's system of mineralogy, (7th edition), v. I, pp. 393–395 ஆண்டிமனி கனிமங்கள் சல்போவுப்புக் கனிமங்கள் மாங்கனீசு(II) கனிமங்கள் வெள்ளி கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் சல்பைடு கனிமங்கள்
682288
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF
அப்துல் கரீம் சவுத்தரி
அப்துல் கரீம் சவுத்தரி (Abdul Karim Chowdhury) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்க அரசாங்கத்தில் கல்வி விரிவாக்கம் மற்றும் நூலக சேவைகளுக்கான அமைச்சராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இசுலாம்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு 11 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மேற்கு வங்க பிரிவின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். சவுத்ரி வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சிலிகுரி கல்லூரியில் பட்டமும் பெற்றிருந்தார். மேற்கோள்கள் 1946 பிறப்புகள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியல்வாதிகள்
682290
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE
பங்கிம் சந்திர அசுரா
பங்கிம் சந்திர அசுரா (Bankim Chandra Hazra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் மேற்கு வங்க அரசாங்கத்தின் சுந்தரவன விவகாரத்துறை அமைச்சரும் ஆவார். சட்டமன்ற உறுப்பினரான இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் சாகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்ல். 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் இவர் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் இந்திய அரசியல்வாதிகள் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்கள்
682291
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கிராநகர் சட்டமன்றத் தொகுதி
கிராநகர் சட்டமன்றத் தொகுதி (Hiranagar Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கிராநகர், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2014 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் குல்தீப் ராசு கிராநகரில் வெற்றி பெற்றார். 2024 2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் விசய் குமார் கிராநகரில் 36737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் காண்க கத்துவா மாவட்டம் மேற்கோள்கள் கதுவா மாவட்டம் சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள்