id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
682292 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D | சங்கர் சென் | சங்கர் சென் (Sankar Sen) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். மின் பொறியாளராகவும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய பொதுவுடமைக் கட்சி அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார். இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க அரசின் மின்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
வாழ்க்கை வரலாறு.
இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த இவர்,வங்காள பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் துறையின் பேராசிரியராகவும் இருந்தார்.
1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டம் டம் தொகுதியில் இருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டில் மீண்டும் டம் டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க அரசாங்கத்தின் மின்சார அமைச்சராகவும் பணியாற்றினார்.
சென் தனது 92 ஆவது வயதில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
2020 இறப்புகள்
1920கள் பிறப்புகள்
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதிகள் |
682295 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | குல்பதன் பேகம் | குல்பதன் பேகம் (Gulbadan Begum) (1523-7 பிப்ரவரி 1603) ஒரு முகலாய இளவரசியும் மற்றும் முகலாயப் பேரரசை நிறுவிய பேரரசர் பாபுரின் மகளும் ஆவார்.
தனது ஒன்றுவிட்ட சகோதரரும் பாபுரின் வாரிசுமான பேரரசர் நசிருதீன் உமாயூனின் வாழ்க்கைக் குறிப்பான உமாயூன்-நாமா என்ற புத்தகத்தின் ஆசிரியராக இவர் நன்கு அறியப்படுகிறார். இது உமாயூனின் மகனும் பேரரசராகிய அக்பரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்டது.
வாழ்க்கை
குல்பதன் பேகத்தின் எட்டாவது வயதில் (1530) இவரது தந்தை பாபுர் இறந்துபோனார். இவரை இவரது மூத்த ஒன்றுவிட்ட சகோதரர் உமாயூன் வளர்த்தார். மொகுலிசுதானிலிருந்த துர்பன் கானேட்டைச் சேர்ந்த கிசர் கவாஜா கானை தனது பதினேழாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.
இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை காபுலில் கழித்தார். 1557 ஆம் ஆண்டில், ஆக்ராவிலுள்ள ஏகாதிபத்திய குடும்பத்தில் சேர அக்பரால் அழைக்கப்பட்டார். குர்பதன் ஏகாதிபத்திய குடும்பத்தில் பெரும் செல்வாக்கையும் மரியாதையையும் கொண்டிருந்தார். மேலும் அக்பராலும் அவரது தாயார் அமீதா பானு பேகத்தாலும் மிகவும் நேசிக்கப்பட்டார். அபுல் ஃபசல் தனது அக்பர்நாமா எனும் நூல் முழுவதிலும் குல்பதன் பேகம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்படைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்று விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
குல்பதன் பேகம் பல அரச பெண்களுடன் சேர்ந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1582 இல் வீடு திரும்பினார். குல்பதன் பேகம் 1603 இல் இறந்தார்.
பெயர் காரணம்
குல்பதன் பேகம் என்ற பெயருக்கு பாரம்பரிய பாரசீக மொழியில் "பூ போன்ற உடல்" அல்லது "ரோஜா உடல்" என்று பொருள்.
உமாயூன் நாமா எழுதுதல்
இவரது கதைசொல்லும் திறன்களை அறிந்திருந்த அக்பர் தனது தந்தை உமாயூனின் கதையை விவரிக்க குல்பதன் பேகத்தைக் கேட்டுக்கொண்டார். முகலாயர்கள் தங்கள் சொந்த ஆட்சியை ஆவணப்படுத்த எழுத்தாளர்களை ஈடுபடுத்துவது வழக்கமாக இருந்தது. குல்பதன் பேகம் இப்பணியை ஏற்றுக்கொண்டு உமாயூன் நாமாவைத் தயாரித்தார்.
நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்கள் பயன்படுத்தும் அறிவாற்றல் மொழி இல்லாமல், குல்பாதன் எளிய பாரசீக மொழியில் எழுதினார். இவரது தந்தை பாபர் அதே பாணியில் பாபர்-நாமாவை எழுதியிருந்தார். மேலும் இவர் தனது நினைவுகளிலிருந்து குறிப்புகளை எடுத்து எழுதினார். தனது சமகால எழுத்தாளர்கள் சிலரைப் போலல்லாமல், குல்பதன் அலங்காரம் ஏதுமில்ல்லாமல் எழுதினார். இந்த ஆவணம் உமாயூனின் ஆட்சியின் சோதனைகள் மற்றும் இன்னல்களை விவரிப்பது மட்டுமல்லாமல், முகலாயப் பெண்களின் அந்தப்புர வாழ்க்கையின் ஒரு பார்வையையும் நமக்குத் தருகிறது. 16 ஆம் நூற்றாண்டில் முகலாய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுதிய ஒரே எழுத்து இதுதான்.
குல்பதன் உமாயூன்-நாமாவை பாரசீக மொழியில் எழுதாமல் தனது சொந்த மொழியான துருக்கிய மொழியில் எழுதியதாகவும், இன்று கிடைக்கும் புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பு என்றும் ஒரு கருத்து உள்ளது.
குல்பதன் பாரசீக மற்றும் துருக்கிய மொழிகளில் சரளமாக பேசும் கவிஞராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது கவிதைகள் எதுவும் தற்போது கிடைக்கப்பெறவிவில்லை. இருப்பினும், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபார் தனது வசனத் தொகுப்பில் இவர் எழுதிய இரண்டு வசனங்களையும், ஒரு கசீதாவையும், மிர் தாகி மீரின் சில குறிப்புகளையும் குறிப்பிடுகிறார்.
வரலாற்றின் பெரும்பகுதிக்கு, குல்பதன் பேகமின் கையெழுத்துப் பிரதி தெளிவற்ற நிலையில் இருந்தது. சமகால இலக்கியங்களில் மற்ற முகலாய எழுத்தாளர்கள், குறிப்பாக அக்பரின் ஆட்சியை விவரித்த எழுத்தாளர்கள் பற்றி இது பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், குல்பதன் பேகத்தைப் பற்றிய அதிகம் அறியப்படாத விவரம் வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாகும். இது முகலாய அரண்மனை அந்தப்புரத்திற்குள் இருந்து ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.
பிற்கால வாழ்க்கை
இவருக்கு 70 வயதாக இருந்தபோது, இவரது பேரனான முகமது-யார் என்ற பெயருடன் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் தனது கடைசி காலத்தில் அவமானத்துடன் அரசவையை விட்டு வெளியேறினார். உமாயூனின் மனைவி அமீதா பானு பேகத்துடன் சேர்ந்து நகைகளையும், பரிசுகளையும் அக்பரிடமிருந்து பெற்றார்.
இவரது தொண்டுப் பணிகள் பெரிய அளவில் இருந்தன. மேலும் ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் உதவுவதன் மூலம் கடவுளைப் பிரியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இறப்பு
1603 பிப்ரவரியில், 80 வயதில் இறந்தார்.
பிரபலமான கலாச்சாரத்தில்
சல்மான் ருஷ்டி எழுதிய தி என்சாண்ட்ரெஸ் ஆஃப் புளோரன்ஸ் (2008) என்ற புதினத்தில் குல்பதன் பேகம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக உள்ளார்.
ஜோதா அக்பர் என்ற தொலைக்காட்சித் தொடரில் குல்பதன் பேகம் கதாபாத்திரத்தில் சிரத்தா சிங் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
Humayun-Nama : The History of Humayun by Gul-Badan Begam. Translated by Annette S. Beveridge. New Delhi, Goodword, 2001, .
Rebecca Ruth Gould "How Gulbadan Remembered: The Book of Humāyūn as an Act of Representation," Early Modern Women: An Interdisciplinary Journal, Vol. 6, pp. 121–127, 2011
Three Memoirs of Homayun. Volume One: Humáyunnáma and Tadhkiratu’l-wáqíát; Volume Two: Táríkh-i Humáyún, translated from the Persian by Wheeler Thackston. Bibliotheca Iranica/Intellectual Traditions Series, Hossein Ziai, Editor-in-Chief. Bilingual Edition, No. 11 (15 March 2009)
வெளி இணைப்புகள்
Complete text of Humayun Nama
Selections from The Humayun Nama by Gulbadan Begam
தைமூரிய அரசமரபு
1603 இறப்புகள்
இந்திய அரச குடும்பப் பெண்கள்
முகலாய அரச குடும்பத்தினர்
இந்திய முஸ்லிம்கள் |
682298 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | சாலிகா பானு பேகம் | சாலிகா பானு பேகம் (Saliha Banu Begum) (இறப்பு 10 ஜூன் 1620) முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின்ர் தலைமை மனைவியாக இருந்தார். 1620 ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை தனது கணவரின் ஆட்சிக் காலத்தில் இவர் பாட்சா பேகமாக இருந்தார்.
குடும்பம்
சாலிகா பானு பேகம் ஜஹாங்கீரால் ஆதரிக்கப்பட்ட அஸிம் என்பவரின் மகளாவார்.ref></ref> இவருக்கு அப்துர் ரகீம் என்ற ஒரு சகோதரன் இருந்தார்.
திருமணம்
ஜஹாங்கீர் தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் 1608 இல் இவரை மணந்தார். இதன் விளைவாக, அவரது சகோதரர் அப்துர் ரகீமின் நிலை பெரிதும் முன்னேறியது. ரகீமுக்கு ‘தர்பியாத் கான்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் இவர் இறையாண்மை கொண்ட பெண்மணியாக முகலாயப் பேரரசின் மனைவியாகவே இருந்துள்ளார். இவர் 1620 இல் இறந்தபோது, இந்த பட்டம் ஜஹாங்கிரின் இருபதாவது (கடைசி) மனைவியுமான நூர் சகானுக்கு வழங்கப்பட்டது. நூர் சகானுக்கு ஒரே சக்திவாய்ந்த போட்டியாளராக இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், நூர் சகான் ஒரு வலிமையான போட்டியாளராக இருந்தார். மேலும், அரசாங்க விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியான வில்லியம்ஸ் ஹாக்கின்ஸ், ஜஹாங்கிரின் தலைமை மனைவிகளில் ஒருவராக இவரைக் குறிப்பிட்டுள்ளார்.
சாலிகா பானு பேகம் இந்தி மொழி கவிதைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்று கூறப்படுகிறது.
இறப்பு
சாலிகா பானு பேகம் 1620 ஜூன் 10 புதன்கிழமை இறந்தார். இவரது இழப்பால் ஜஹாங்கீர் மிகவும் துயரமடைந்தார். இவரது மரணம் குறித்து ஜோதிடர் ராய் என்பவர் முன்னரே தன்னிடம் அறிவித்ததாக ஜஹாங்கீர் குறிப்பிட்டார். மேலும், அவரது தீர்க்கதரிசனத்தின் துல்லியத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
இதனையும் காண்க
பாட்சா பேகம்
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
1620 இறப்புகள்
முகலாய அரச குடும்பத்தினர்
இந்திய அரச குடும்பப் பெண்கள்
இந்திய முஸ்லிம்கள் |
682299 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF | ராஜ்குமார் பெரியசாமி | இராஜ்குமார் பெரியசாமி (ஆங்கிலம் :Rajkumar Periasamy) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் ஆவார்.
தொழில் வாழ்க்கை
ஆம் ஆண்டு கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த அமரன் என்ற திரைப்படத்தை இராச்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கினார். இத்திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படமானது இந்திய இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.
திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
வாழும் நபர்கள் |
682300 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | இலண்டன் மகாலட்சுமி கோயில் | இலண்டன் மகாலட்சுமி கோயில் என்பது ஐக்கிய இராச்சியத்தின், இலண்டன் பெருநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் இலட்சுமி கோயில் ஆகும்.
விபரங்கள்
இக்கோயில் மகாலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் ஆகும். 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலின் கும்பாபிசேகம் 1990ஆம் வருடம் நடைபெற்றது.
இலண்டனில் உள்ள இலட்சுமி நாராயண டிரஸ்ட் மூலம் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ சிற்பக்கலாமணி முத்தையா ஸ்தபதி மேற்பார்வையில் இக்கோயிலின் இராச கோபுரம் மற்றும் இதர அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 6.85 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மகாலட்சுமி கோயில் அமைந்துள்ளது.
இதர தெய்வங்கள்
ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத சீனிவாசர், சகஸ்ரமகாலிங்கேசுவரர், காயத்ரி, சனீசுவரர், இராச மகா கணபதி, வள்ளி மற்றும் தெய்வானை சமேத அறுபடை முருகன், சுதர்சனர், யோகநரசிம்மர் மற்றும் அனுமன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இலண்டனில் உள்ள இந்துக் கோயில்கள்
இலண்டன்
இலண்டனில் உள்ள கட்டிடங்கள் |
682301 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | தீயலைட்டு | தீயலைட்டு (Teallite) என்பது PbSnS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். வெள்ளீயமும் ஈயமும் சேர்ந்து இந்த சல்பைடு கனிமம் உருவாகிறது. நிலத்தடி பாறையின் அடுக்குகளுக்கு இடையே நீர் வெப்ப திரவத்திலிருந்து படிந்த தாதுக்களின் அடுக்கில் இது தோன்றுகிறது. சிலசமயங்களில் வெள்ளீயத்தின் தாதுவாகவும் வெட்டியெடுக்கப்படுகிறது. தீயலைட்டு கனிமம் மென்மையான வெள்ளி கலந்த சாம்பல்நிற மைக்கா போன்ற தட்டுகளாக நேர்ச்சாய்சதுர படிக அமைப்பில் உருவாகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1.5 முதல் 2 என்ற அளவும் ஒப்படர்த்தி 6.4 என்ற அளவையும் வெளிப்படுத்துகிறது.
தீயலைட்டு கனிமம் முதன்முதலில் 1904 ஆம் ஆண்டில் பொலிவியாவில் உள்ள சாண்டா ரோசா, அண்டெக்வேராவில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியப் புவியியலாளர் இயெத்ரோ இயசுடினியன் ஆரிசு தீயல் (1849-1924) நினைவாக தீயலைட்டு என்று பெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தீயலைட்டு கனிமத்தை Tel என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஈயக் கனிமங்கள்
வெள்ளீயக் கனிமங்கள்
சல்பைடு கனிமங்கள்
நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
கனிமங்கள் |
682304 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D | நிம்மி ராமானுஜம் | நிர்மலா (நிம்மி ) ராமானுஜம் (Nirmala (Nimmi) Ramanujam) ஒரு கல்வியாளரும், கண்டுபிடிப்பாளரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார்.
பின்னணி
புற்றுநோய் பரிசோதனை, நோயறிதல் மற்றும் சிகிச்சை தொடர்பான பெண்களின் ஆரோக்கியத்திற்கான உலகளவில் அணுகக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கியதற்காக இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவர் ராபர்ட் டபிள்யூ. கார் பொறியியல் பேராசிரியராகவும், டியூக் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் மருந்தியல் மற்றும் உலகளாவிய சுகாதார பேராசிரியராகவும் உள்ளார். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயனுள்ள ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூக வெளிப்புற நடவடிக்கைகளை ஊக்குவிக்க 2013 ஆம் ஆண்டில் உலகளாவிய மகளிர் சுகாதார தொழில்நுட்பங்களுக்கான மையத்தை (ஜி. டபிள்யூ. எச். டி) நிறுவினார்.
விருதுகள்
2023 ஆம் ஆண்டில், உயிர் மருத்துவ பொறியியல் துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் தொழில்நுட்ப கள விருதை வென்றார். 2019 ஆம் ஆண்டில், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தில் பெண்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக சமூக தாக்க அபி விருதைப் பெற்றார். 2017 ஆம் ஆண்டில் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மையத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்காக இவர் கல்லா ஹெல்த் நிறுவனத்தை நிறுவினார். மேலும், கருப்பை வாய்ப் புற்றுநோய், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பொறியியல் வடிவமைப்புக் கல்வியில் முறையே தொலைநோக்கு தாக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல முன்முயற்சிகளையும் கூட்டமைப்பையும் உருவாக்கியுள்ளார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
புற்றுநோய் ஆய்வாளர்கள் |
682306 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | மெனெகினைட்டு | மெனெகினைட்டு (Meneghinite) என்பது CuPb13 Sb7S24. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.
நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகமாகும் மெனெகினைட்டு மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2+1⁄2 என்ற அளவும் ஒப்படர்த்தி 6.36 என்ற அளவையும் வெளிப்படுத்துகிறது. {010} இல் சரிபிளவும் சங்குருவமும் கொண்டு கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உலோகப் பளபளப்புடன் படிகமாகிறது.
1852 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டின் உலூக்கா மாகாணத்தில் மெனெகினைட்டு கண்டறியப்பட்டது. பிசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் கியூசெப் கியோவானி அண்டோனியோ மெனெகினி நினைவாக கனிமத்திற்கு மெனெகினைட்டு என்று பெயரிடப்பட்டது. போட்டினோ சுரங்கத்தில் இவர் கனிமத்தைக் கண்டுபிடித்தார்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெனெகினைட்டு கனிமத்தை Meg என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
சல்போவுப்புக் கனிமங்கள்
ஈயக் கனிமங்கள்
தாமிரம்(I) கனிமங்கள்
ஆண்டிமனி கனிமங்கள்
நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
சல்பைடு கனிமங்கள்
கனிமங்கள் |
682307 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE | சூர்ய குமாரி சிரேஸ்தா | சூர்யா குமாரி ஸ்ரேஸ்தா' (Surya Kumari Shrestha) நேபாள அரசியல்வாதி ஆவார். நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) கட்சியைச், சேர்ந்த இவர் தற்போது நேபாளத்தின் 2 வது கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 2022 நேபாளப் பொதுத் தேர்தலில் இவர் பழங்குடி மக்கள் பிரிவில் இருந்து விகிதாசார பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
நேபாள அரசியல்வாதிகள் |
682308 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%87 | நியூசு டுடே | நியூசு டுடே (ஆங்கிலம் :News Today) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து வெளியிடப்படும் ஆங்கில மொழி மாலை செய்தித்தாள் ஆகும். இது 1982 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து தினமும் மாலையில் வெளியிடப்படுகிறது.
மேற்கோள்கள்
இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்
தமிழக நாளிதழ்கள் |
682310 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D | கவ்லா பிந்த் அல் அஸ்வர் | கவ்லா பின்த் அல் அஸ்வர் (Khawla bint al-Azwar; இறப்பு கி.பி.639 ) ராசிதீன் கலீபாவின் படையில் பணிபுரிந்த ஒரு அரபு முஸ்லிம் போர் வீராங்கனையாவார். முஸ்லிம்களின் சிரியப் போரில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் தனது சகோதரர் திராருடன் இணைந்து போராடினார். இவர் வரலாற்றில் மிகச் சிறந்த பெண் வீரர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார். மேலும் இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மதுவின் தோழியாக இருந்தார்.
ஏழாம் நூற்றாண்டில் பானு அசாத் பழங்குடியினத் தலைவர்களில் ஒருவரான அஸ்வார் அல் அசாதியின் மகளாகப் பிறந்தார். பைசாந்தியப் பேரரசிற்கு எதிராக 636 ஆம் ஆண்டில் நடைபெற்ற யர்மூக் போர் உட்பட பல போர்களில் தனது சகோதரர் திராருடன் இணைந்து போரிட்டார். போரின் 4 வது நாளில் அவர் பைசாந்திய இராணுவத்திற்கு எதிராக ஒரு பெண்கள் குழுவை வழிநடத்தி அதன் தலைமைத் தளபதியைத் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
வெளி ஆதாரங்கள்
Islamic Thinkers
Siddiqi
Al Shindagah
USA Today
"Women in power 500-750" from Guide2womenleaders.com
நபித்தோழியர் |
682311 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | பிசுனா சட்டமன்றத் தொகுதி | பிசுனா சட்டமன்றத் தொகுதி (Bishnah Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பிசுனா, சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2014
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கமல் வர்மா, பிசுனா தொகுதியில் வெற்றி பெற்றார்.
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் ராசீவ் குமார் 53435 வாக்குகள் பெற்று பிசுனா தொகுதியில் வெற்றி பெற்றார்.
2024
மேற்கோள்கள்
ஜம்மு மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682312 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | குலுக்கல்லூர் தொடருந்து நிலையம் | குலுக்கல்லூர் தொடருந்து நிலையம் (Kulukkallur railway station) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில், பட்டாம்பிக்கு அருகில் உள்ள குலுக்கல்லூர் என்ற சிற்றூரில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேயின் ஷோரனூர்-மங்களூர் பாதையில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் நிறுத்தப்படும் தொடருந்துகள் இந்த ஊரை நிலம்பூர், ஷொர்ணூர், அங்காடிபுரம் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றது.
ஷோரனூர்-நிலம்பூர் தொடருந்து பாதை
நீலம்பூர்-ஷோரனூர் தொடருந்து பாதை என்பது கேரளா மாநிலத்தில், தென்னக இரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு கிளைப் பாதையாகும். மேலும் இது இந்தியாவின் அகலப் பாதைகளில் ஒன்றாகும். இது ஷோரனூர் சந்திப்பில் இருந்து (பாலக்காடு மாவட்டம்) நிலம்பூர் தொடருந்து நிலையம் வரை (மலப்புறம் மாவட்டம்) 66 கிலோமீட்டர்கள் (41 மைல்) நீளம் கொண்ட ஒற்றை வழிப் பாதையாகும். இந்த நிலையம் கோழிக்கோடு–உதகமண்டலம் நெடுஞ்சாலையில் நிலம்பூர் நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த வழித்தடத்தில் ஷோரனூர்–நிலம்பூர் சாலை பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்
Coordinates on Wikidata |
682313 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D | விஜய் ஆனந்த் | விஜய் ஆனந்த் (Vijay Anand, இறப்பு:6 பெப்பிரவரி 2024) தென்னிந்திய திரைப்படங்களில், முக்கியமாக கன்னடம் தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றிய இந்திய இசையமைப்பாளராவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
விஜய் ஆனந்த் அமலி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். விஜய் ஆனந்த் 2023 திசம்பர் மாதம் முதல் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில் 2024 பெப்ரவரி 6 அன்று சென்னையில் தனது 71 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
கன்னடத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
இருபதாம் நூற்றாண்டு பிறப்புகள்
2024 இறப்புகள் |
682315 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் | அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம் அல்லது அம்பாங் பார்க் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Ampang Park LRT Station; மலாய்: Stesen Ampang Park; சீனம்: 安邦购物中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
இந்த எல்ஆர்டி நிலையம், அம்பாங் சாலையின் கிளானா ஜெயா வழித்தடத்தில் கடைசி நிலத்தடி நிலையமாகும். இதன் பின்னர் இந்தத் தடம் மீண்டும் தரைக்கு மேலே செல்கிறது.
பொது
இந்த நிலையம் சிட்டி வங்கியின் (Citibank) மலேசியத் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது. அத்துடன் அமெரிக்க தூதரகம், சிங்கப்பூர் உயர் ஆணையம், கனடிய உயர் ஆணையம் மற்றும் பிரித்தானிய உயர் ஆணையம் ஆகியவை இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. துன் ரசாக் சாலைப் பகுதியில் உள்ள இந்த இடம் 'தூதரக வளாகம்' என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் மற்றும் ஒரு நிலையம் உள்ளது. அந்த நிலையம் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
அமைவு
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரை இயங்கும் புத்ரா எல்ஆர்டி அமைப்பின் (PUTRA LRT System) இரண்டாம் கட்டமாக இந்த நிலையம் 1 சூன் 1999 அன்று திறக்கப்பட்டது.
அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலத்தடி நிலையத்தின் வெளிப்புற கட்டிட வடிவமைப்பு நியூபார்மேசன் (NEUformation) எனும் கட்டிடக்கலை நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டது. நிலையத்தின் வடிவம், சாய்ந்த வரிசைக் கண்ணாடி மேற்பரப்புகளின் அமைப்பில் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதன் நுழைவாயில் தரை மட்டத்தில் உள்ளது. அதே வேளையில் பயணச் சீட்டுப் பகுதியும்; மற்றும் அதன் தளங்களும் நிலத்தடியில் உள்ளன.
அம்பாங் பார்க் வணிக வளாகம்
மலேசியாவின் முதல் வணிக வளாகமான அம்பாங் பார்க் வணிக வளாகத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன.
அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
நுழைவாயில்கள்
காட்சியகம்
மேலும் காண்க
கிளானா ஜெயா வழித்தடம்
மலேசிய தொடருந்து போக்குவரத்து
கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Ampang Park LRT station - mrt.com.my
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கிளானா ஜெயா வழித்தடம் |
682317 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF | சரண்யா சசி | சரண்யா சசி (Saranya Sasi) (1986 - 9 ஆகஸ்ட் 2021) மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். நடிகை சீமா ஜி. நாயருடன் நல்ல உறவை பேணி வந்தார்.
இளமை வாழ்க்கை
சரண்யா தனது 6 முதல் 8 ஆம் வகுப்பை கண்ணூர், ஜவகர் நவோதயா வித்யாலயாவில் முடித்தார். பின்னர், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
2006 ஆம் ஆண்டில் பாலச்சந்திர மேனன் இயக்கிய சூரியோதயம் என்ற தொடர் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இது தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. மலையாளத்தில் சாக்கோ ரந்தமான் (2006) மற்றும் தமிழில் பச்சை என்கிற காத்து (2012) ஆகிய படங்களில் அறிமுகமானார். தனது தொழில் வாழ்க்கையில், சோட்டா மும்பை (2007) அலி பாய் (2007) தலப்பாவு (2008) பாம்பே மார்ச் 12 (2011) அன்னமரியா காளிபிலானு (2016) போன்ற மலையாள படங்களில் நடித்தார். சுவாமி அய்யப்பன், கூட்டுக்காரி, இரகசியம், ஹரிச்சந்தனம் (ஏசியாநெட்) அவகாசிகள், மல்காமர் மற்றும் கருதமுத்து போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார்.
சொந்த வாழ்க்கை
சரண்யா நவம்பர் 2014 இல் பினு சேவியர் என்பவரை மணந்தார். ஆனால் பின்னர் இவர்கள் விவாகரத்து செய்தனர்.
நோயும் மரணமும்
2012 ஆம் ஆண்டில், சரண்யாவிற்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக நடிப்புலகிலிருந்து விலகினார். மே 2021 இல், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது இவரது உடல்நிலையை மேலும், மோசமாக்கியது.
சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2021 ஆகஸ்ட் 9 அன்று ம் காலமானார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழ்த் திரைப்பட நடிகைகள்
தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள்
தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
மலையாளத் திரைப்பட நடிகைகள்
கண்ணூர் மாவட்ட நபர்கள்
இந்தியத் திரைப்பட நடிகைகள்
இந்திய நடிகைகள்
2021 இறப்புகள்
1986 பிறப்புகள் |
682319 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE | அனுமோலு ராமகிருஷ்ணா | அனுமோலு ராமகிருஷ்ணா (Anumolu Ramakrishna)(1939-2013) ஓர் இந்திய குடிசார் பொறியாளரும், பெருநிறுவன நிர்வாகியும் ஆவார். 2013 புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோவில் துணை நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்திய கட்டுமானத் துறையில் முன்தகைப்புக் காங்கிறீற்று , முறையில் உற்பத்தியை அதிகரிக்க உதவினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2014 ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் இவருக்கு பத்ம பூசண் விருதை இந்திய அரசு வழங்கியது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் வாசிக்க
கிருஷ்ணா மாவட்ட நபர்கள்
2013 இறப்புகள்
1939 பிறப்புகள் |
682321 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88%202 | உருமி தடுப்பணை 2 | உருமி தடுப்பணை 2 (Urumi 2 Weir) என்பது இந்தியாவின் கேரளம் மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தின் திருவம்பாடி கிராமத்தில் பொய்ங்கால்புழாவின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சிறிய தடுப்பணையாகும். உருமி தடுப்பணை 1 மின் நிலையத்திற்குக் கீழே பொய்ங்கால்புழா ஆற்றின் குறுக்கே இந்த நீர்மின் நிலையம் கட்டப்பட்டு உருமி தடுப்பணை 2 மின் நிலையத்திற்குத் தண்ணீரைத் திருப்பி விடப்பயன்படுகிறது. இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 50 கி. மீ. தொலைவில் திருவம்பாடியில் அமைந்துள்ளது. இந்நீர்த்தேக்கத்திலிருந்து நீரானது 470 மீட்டர் நீளமுள்ள மின் கால்வாய் வழியாக மின் நிலையத்திற்குச் செலுத்தப்படுகிறது. அணைக்கு அருகிலுள்ள உருமி நீர்வீழ்ச்சி நீர்மின் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது.
விவரக்குறிப்புகள்
அட்சரேகை: 11 0 22'22 "வ
தீர்க்கரேகை: 76 0 3'30.4 "கி
ஊராட்சி: திருவம்பாடி
கிராமம்: திருவம்பாடி
மாவட்டம்: கோழிக்கோடு
ஆற்றுப் படுகை: சாலியாறு
ஆறு: பொய்ங்கால்புழா
அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு
நீர் வெளியேறும் வட்டம்: தாமரைச்சேரி
திட்டப் பணி நிறைவு: 2004
திட்டத்தின் பெயர்: உருமி நிலை IIதிட்டத்தின் நோக்கம்: நீர் மின்சாரம் உற்பத்தி
திட்டத்தின் நிறுவப்பட்ட திறன்: 3 x 0.8 மெகாவாட்
அணையின் அம்சங்கள்
அணையின் வகை: நீர் மாற்றம்
வகைப்பாடு: தடுப்பணை
அதிகபட்ச நீர் மட்டம்: 107.1 மீ
முழு நீர்த்தேக்க நிலை: 107.1 மீ
நீர் சேமிப்பு: திசைதிருப்பல் மட்டுமே
ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 5.6 மீ
நீளம்: 25 மீ
நீர்க்கசிவு: இல்லை
உயரம்: 107.1 மீ
மேற்கோள்கள்
Coordinates on Wikidata |
682322 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சுசேத்கர் சட்டமன்றத் தொகுதி | சுசேத்கர் சட்டமன்றத் தொகுதி (Suchetgarh Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சுசேத்கர், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
2014
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சாம் லால் சவுத்ரி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2024
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் காரு ராம் 39302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
மேலும் காண்க
ஜம்மு
மேற்கோள்கள்
ஜம்மு மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682326 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | நூராகைட்டு | நூராகைட்டு (Nuragheite) என்பது Th(MoO4)2·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இயற்கையாகத் தோன்றும் அரிய தோரியம் மாலிப்டேட்டு உப்பாக இது கருதப்படுகிறது. இத்தாலி நாட்டின் சர்தினியா தீவின் கேக்லியரி நகரத்தில் சரோச்சுப் பகுதியிலுள்ள சூ சீனார்கியூவில் நூராகைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு தோரியம் மாலிப்டேட்டான இச்னுசைட்டும் இதே பகுதியிலேயே கண்டறியப்பட்டது. இது ஒரு முந்நீரேற்றாகும்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் நூராகைட்டு கனிமத்தை Nur என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது
தோற்றம்
நூராகைட்டு என்பது மாலிப்டினம்-பிசுமத் கனிமமயமாக்கலின் ஒரு பகுதியாகும். இச்னுசைட்டு, மசுகோவிட்டு மற்றும் செனோடைம்-(Y) ஆகிய கனிமங்களுடன் இணைந்து நூராகைட்டு காணப்படுகிறது.
தூய்மை
வேதியியல் ரீதியாக நூரகைட்டு தூய்மையான கனிமமாகும்.
கட்டமைப்பு
நூராகைட்டின் படிக அமைப்பு மாலிப்டினத்தை மையப்படுத்திய நான்முகியும் தோரியத்தை மையப்படுத்திய 100 அடுக்கு பன்முகமும் கொண்டுள்ளது. இது இச்னுசைட்டு கனிமத்தைப் போலவே உள்ளது.
மேற்கோள்கள்
தோரியம் கனிமங்கள்
மாலிப்டேட்டு கனிமங்கள்
கனிமங்கள்
ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் |
682328 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF | நடாலியா மொராரி | நடாலியா மொராரி (Natalia Morari) (பிறப்பு - ஜனவரி 12,1984) ஒரு மல்தோவா நாட்டு இதழியலாளர் ஆவார். இவர் தனது புலனாய்வுப் பணி மற்றும் அரசியல் பேச்சு நிகழ்ச்சிகளுக்காக அறியப்படுகிறார்.
வாழ்க்கை வரலாறு
மொராரி மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசின், சோவியத் ஒன்றியத்தின் (இப்போது மல்தோவா) ஹின்செஸ்டியில் சனவரி 12,1984 அன்று கிரிகோர் மொராரி மற்றும் ரைசா குயு ஆகியோருக்குப் பிறந்தார். இவர் சிசினாவில் உள்ள கௌடேமஸ் கோட்பாட்டு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், மேலும் 2002 முதல் 2007 வரை மாஸ்கோ மாநில பல்கலைக்கழகமான "மிஹெயில் லோமோனோசோவ்" இல் தனது படிப்பைத் தொடர்ந்தார், அங்கு இவருக்கு இரண்டு உதவித்தொகை வழங்கப்பட்டது. தனது படிப்பின் போது, உருசிய வெளியீடான "நோவோ வ்ரெமியா" (தி நியூ டைம்ஸ்) இல் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார்.
உருசியாவில் இருந்து வெளியேற்றம்
நோவோ விரெமியாவில் ஒரு பத்திரிகையாளராக இருந்தபோது, மொராரி, மல்தோவா குடியுரிமையைக் கொண்டிருந்தார், இவரது பத்திரிக்கை விசாரணைகள் காரணமாக உருசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார், இது கிரெம்ளின் தலைமையை தொந்தரவு செய்தது.
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பரிவாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்குகள் குறித்து மொராரி எழுதினார். டிசம்பர் 10,2007 அன்று, "கிரெம்ளினின் கருப்புப் பணம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார், உருசியாவில் உள்ள அனைத்து குறிப்பிடத்தக்க கட்சிகளையும் அதிகாரிகளைச் சார்ந்து வைத்திருக்க நிதிகளைச் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை விவரிக்கிறார். டிசம்பர் 16 அன்று, இசுரேலுக்கு ஒரு வார கால பயணத்திலிருந்து திரும்பியபோது, எஃப். எஸ். பி முடிவின் அடிப்படையில் டொமோடடோவோ விமான நிலையத்தில் உருசியாவிற்குள் நுழைய இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் உருசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் எதிர்ப்பைத் தூண்டியது. இதன் விளைவாக, மொராரி சிசினோவுக்கு பறக்க வேண்டியிருந்தது. மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உடனேயே இவர் உருசியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார், அதை ஏப்ரல் 2008 இல் பெறவிருந்தார்.
சனவரி 17,2008 அன்று, மல்தோவா குடியரசில் உள்ள உருசியத் தூதரகத்தில், மொராரிக்கு உருசியக் கூட்டமைப்பிலிருந்து நுழைவது மற்றும் வெளியேறுவது குறித்த கூட்டாட்சி சட்டத்தின் புள்ளி 1, பிரிவு 27 க்கு இணங்க "மாநில பாதுகாப்பு காரணங்களுக்காக" உருசியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது."
மார்ச் 2008 இல், மொராரி மல்தோவா காவல்துறையில் தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறி புகார் அளித்தார். ஆகத்து 21,2008 அன்று, "உருசியக் கூட்டமைப்பின் அரசியலமைப்பு ஒழுங்கை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கான அழைப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" ஆகியவற்றின் அடிப்படையில் இவருக்கு உருசியக் குடியுரிமை மறுக்கப்பட்டது. ஆகத்து 2008 இல், எகோ மோஸ்கோவிஸ் (மாஸ்கோவின் எகோ) வானொலி நிலையம், மொராரி தனது நுழைவைத் தடை செய்ததற்காக உருசிய அரசு மீது ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாக அறிவித்தது.
மார்ச் 2012 இல் இவருக்கான நுழைவுத் தடை நீக்கப்பட்டது, எவ்கேனியா அல்பாட்ஸ், மற்ற தலைமை ஆசிரியர்களான திமீத்திரி முராத்தொவ் (நோவயா கெஜெட்டா மற்றும் அலெக்ஸி வெனெடிக்டோவ் (மாஸ்கோவின் எகோ) ஆகியோர் தனிப்பட்ட முறையில் அரசுத் தலைவர் திமீத்திரி மெட்வெடேவை இதில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
குடிமைப்பணி மற்றும் அரசியல் செயல்பாடு
2008 முதல் 2009 வரை, மொராரி "திங்க் மல்தோவா" என்ற சங்கத்தை வழிநடத்தினார். நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து ஏப்ரல் 2009 இல் சிசினோவில் நடந்த போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இவர் மற்ற இளம் ஆர்வலர்களுடன் இணைந்து இருந்தார். மல்தோவா குடியரசின் பொதுவுடைமைக் கட்சி (பி. சி. ஆர். எம்.) பெரும்பான்மையைப் பெற்றதைக் கண்ட தேர்தல் முடிவுகள் குறித்த இளைஞர்களின் அதிருப்தியால் இந்த ஆர்ப்பாட்டங்கள் உந்தப்பட்டன. ஏப்ரல் 7 இல் ஆர்ப்பாட்டங்கள் இறுதியில் வெகுஜனக் கலவரங்களாக தீவிரமடைந்தன.
போராட்டங்களைத் தொடர்ந்து, மொராரி கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் ஐந்து மாதங்களுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டார். சூலை 2009 இல் தொடக்க கால நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, ஐரோப்பிய சார்பு ஆளும் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த பின்னர், புதிய அட்டர்னி ஜெனரல் வெகுஜனக் கலவரங்களை ஏற்பாடு செய்வது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட்டார்.
அக்டோபர் 6, 2015 அன்று, மொராரி விளாட் பிளாஹோட்னியுக், விளாட் ஃபிலாட் மற்றும் மிஹாய் கிம்பு ஆகியோருக்கு ஒரு திறந்த கடிதத்தின் வழியாக அறைகூவல் விடுத்திருந்தார். அதில் அவர்கள் ஆட்சியில் இருந்ததால், "கடந்த 24 ஆண்டுகளில் நாடு மிக மோசமாக ஆளப்பட்டுள்ளது" என்றும் நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்துவதாகவும் கூறியிருந்தார்.
2016 ஆம் ஆண்டில், மொராரி இரண்டாவது திறந்த கடிதத்தின் வழியாக விளாட் பிளாஹோட்னியூக் என்பவரின் பெயரில் ஒரு அறைகூவலை விடுத்தார். அதில் அவர் மக்களுக்கு முதன்மை அச்சுறுத்தல் என்று குற்றம் சாட்டினார். "நிழல்களிலிருந்து, ஆம். இரகசியமாக, மல்தோவாவின் சட்டபூர்வமான ஆட்சியாளராக மாற விரும்பிய நீங்கள் இனி ஒருபோதும் அவ்வாறு ஆக மாட்டீர்கள்” என்று மொராரி அந்த நேரத்தில் எழுதினார்.
2018 முதல் 2019 வரை, ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்கள் மற்றும் கையாளுதல்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இன்டிபென்டென்ட் பிரஸ் அசோசியேஷன் (ஏபிஐ) ஏற்பாடு செய்த "பொய்யை நிறுத்து!" பிரச்சாரத்தின் தூதராக மொராரி இருந்தார். இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 30 நகரங்களில் தவறான தகவல் மற்றும் அரசியல் கையாளுதல் நுட்பங்கள் குறித்து குடிமக்களுக்கு இவர் தெரிவித்தார்.
சூலை 18,2024 அன்று, மொராரி மல்தோவாக் குடியரசின் அரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு சுயாதீன வேட்பாளராக தன்னை அறிவித்தார்.
இதழியல் தொழில் வாழ்க்கை
உருசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, மொராரி பப்ளிகா டிவி என்ற தொலைக்காட்சிக் குழுவில் சேர்ந்தார்.
2010 முதல் 2013 வரை, இவர் பப்ளிகா தொலைக்காட்சியில் "ஃபேப்ரிகா" என்ற அரசியல் பகுப்பாய்வு நிகழ்ச்சியை நடத்தினார்.
2013 ஆம் ஆண்டில், இவர் டிவி 7 அ்லைவரிசையில் தனது சொந்த நிகழ்ச்சியான "பொலிடிகா" வைத் தொடங்கினார், இது குறிப்பிடத்தக்க பார்வையாளர்களைப் பெற்றது.
மார்ச் 2015 முதல், இவர் TV7 இல் அரசியல் நேர்காணல் வடிவ நிகழ்ச்சியான "INTERPOL" ஐ நிர்வகித்து வருகிறார். கூடுதலாக, மொராரி 2016 முதல் 2019 வரையிலான உள்ளூர் மற்றும் அதிபர் தேர்தல்களை உருவகப்படுத்திய "கேண்டிடாட்" நிகழ்ச்சியின் ஆசிரியராகவும் மதிப்பீட்டாளராகவும் இருந்தார்.
ஜூன் 2017 இல், மொராரி முன்னாள் டிவி 7 மற்றும் மாற்று பொது ஊடகச் சங்கத்தை அடிப்படையாகக் கொண்ட டிவி 8 என்ற தொலைக்காட்சி நிலையத்தைத் தொடங்கினார், அங்கு இவர் இயக்குநர்கள் குழுவின் நிறுவநர் மற்றும் தலைவராக உள்ளார். இந்தத் திட்டம் மல்தோவாவுக்கு முன்னோடியில்லாத வகையில் இருந்தது, வெளி நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்ட ஒரு இலவச தொலைக்காட்சி என்ற கருத்தை உருவாக்கியது. டிவி8 இல், மொராரி தனது நிகழ்ச்சியான "பொலிடிகா நடாலியே மொராரி" ஐ நடுநிலையாக நடத்தினார், இது செப்டம்பர் 2021 வரை ஒளிபரப்பப்பட்டது.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
2014 ஆம் ஆண்டில், சுதந்திர இதழியல் மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஆண்டின் பத்திரிகையாளர்கள்-2014" காலாவின் 20 வது பதிப்பில் மொராரி ஆண்டின் தொலைக்காட்சி பத்திரிகையாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2018 ஆம் ஆண்டில் இவர் “பாவெல் செரெமெட்” பன்னாட்டு விருதினை தனது டிவி தொலைக்காட்சியை மேம்பாடடையச் செய்வதற்காக மேற்கொண்ட முயற்சிககு்காகப் பெற்றார். இந்த விருதானது ஜார்ஜியாவின் திபிலிசி கிழக்கத்திய குடிமைச் சமூக அமைப்பின் பங்குதாரரால் வழங்கப்பட்டது.
சூலை 2020 இல், ஜனநாயக விழுமியங்களை ஊக்குவிப்பதற்காக பிராகாவை தளமாகக் கொண்ட பீப்பிள் இன் நீட் என்ற அமைப்பிலிருந்து "ஸ்டோரீஸ் ஆஃப் இன்சிஸ்டிக்ஸ்" விருதை மொராரி வென்றார்.
டிவி 7 இல் "பொலிடிகா" மற்றும் "இன்டர்போல்" நிகழ்ச்சிகளை வழிநடத்தும் நேரத்தில், மொராரி டிசம்பர் 17,2015 அன்று சுயாதீன பத்திரிகை மையம் மற்றும் பத்திரிகை சுதந்திரக் குழு ஏற்பாடு செய்த 21 வது வருடாந்திர பிரஸ் கிளப் காலாவில் "நேர்காணல்" பிரிவில் விருதினைப் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
2011 ஆம் ஆண்டில், மொராரி தி நியூ டைம்ஸின் சக ஊழியரான உருசியப் பத்திரிகையாளர் இலியா பரபனோவை மணந்தார். பின்னர், இவர்கள் 2019-ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். அந்த நேரத்தில் மொராரி பணிபுரிந்த டிவி 7 (இப்போது டிவி 8) இன் நிறுவநரும் அரசியல்வாதியும் தொழில்முனைவோருமான சிரில் லூசின்ஷியுடன் இவருக்கு உறவு இருந்தது.
ஏப்ரல் 2021 இல், மொராரி ரெம் என்ற மகனைப் பெற்றெடுத்தார். அதே ஆண்டு செப்டம்பரில், ரெமின் தந்தை தொழிலதிபர் வீசெஸ்லாவ் பிளாட்டன் என்று மொராரி வெளிப்படுத்தினார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1984 பிறப்புகள் |
682330 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | பையிக்லைட்டு | பையிக்லைட்டு (Biehlite) என்பது [(Sb,As)O]2MoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மாலிப்டினத்தைக் கொண்டுள்ள ஆண்டிமனி ஆர்சனிக் கனிமமான இது மிகவும் அரியதொரு கனிமமாகும். நமீபியா நாட்டின் திசுமெப்பு நகரத்தில் பைக்லைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பையிக்லைட்டு கனிமத்தை Bhl என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
ஆண்டிமனி கனிமங்கள்
ஆர்சனிக் கனிமங்கள்
மாலிப்டேட்டு கனிமங்கள்
ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
கனிமங்கள்
ஆக்சைடு கனிமங்கள் |
682333 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 | சங்கரோத்து | சங்கரோத்து (Changaroth) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.
மக்கள்தொகை
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சங்கரோத்து கிராமத்தின் மக்கள் தொகை 15760 ஆகும், இதில் 7805 ஆண்கள் மற்றும் 7955 பெண்கள் இருந்தனர்
போக்குவரத்து
கொயிலாண்டி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் சங்கரோத்து கிராமம் இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையங்கள் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகியவையாகும். அருகிலுள்ள இரயில் நிலையம் கொயியண்டியில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 66 கொயிலாண்டி வழியாகச் செல்கிறது. வடக்கத்திய பகுதி மங்களூர், கோவா மற்றும் மும்பையை இணைக்கிறது. தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. குட்டியாடி வழியாக செல்லும் கிழக்கு தேசிய நெடுஞ்சாலை 54 மானந்தவாடி, மைசூர் மற்றும் பெங்களூரை இணைக்கிறது.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் |
682334 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D | தேவேந்தர் சிங் | தேவேந்தர் சிங் (Devender Singh) சமகால இந்திய ஓவியர் ஆவார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை.
தேவேந்தர் சிங் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று பஞ்சாபின் அமிர்தசரசு நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை சேவாக் சிங்கும் நன்கு அறியப்பட்ட கலைஞராக இருந்தார்.
கல்வி மற்றும் பயிற்சி
தேவேந்தர் சிங் மும்பை, லூதியானா மற்றும் சண்டிகரில் முறையான கல்வியைப் பெற்றார்.
ஓவியம் வரைதல்
தேவேந்தர் சிங்கின் நன்கு அறியப்பட்ட ஓவியங்களில் பாரா மகா குறித்து தயாரிக்கப்பட்ட தொடர்களும் அடங்கும். மிகவும் பிரபலமான அமர் சித்ரா கதா என்ற படக்கதை புத்தகத்திற்காக வரையப்பட்ட விளக்கப்படங்களுடன் சிங் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது சீக்கிய வரலாற்று ஓவியங்கள் உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
Sikh-Heritage.co.uk
சீக்கிய வரலாற்றைக் கொண்டு துலக்குங்கள்-நோனிகா சிங், தி ட்ரிப்யூன்
சீக்கிய வரலாற்றுக்கு வடிவம் கொடுக்கும் கை, ரதி ஏ.மேனன், இந்தியன் எக்ஸ்பிரஸ்
தேவேந்தர் சிங்கின் ஃபுல்சம் கேன்வாஸ்கள், சுமீத் அரோரா
தி ட்ரிப்யூன்
வாழும் நபர்கள்
1947 பிறப்புகள்
ஓவியர்கள்
இந்திய ஓவியர்கள்
பஞ்சாப் நபர்கள்
பஞ்சாபிக் கலைஞர்கள் |
682339 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D | ஈசநாட்டு கள்ளர் | ஈசநாட்டுக்கள்ளர் (Esanattu Kallar) அல்லது ஈசங்க நாட்டுக்கள்ளர் எனப்படுவோர் தமிழகத்தில் உள்ள கள்ளர் சமூகத்தின் கிளைப்பிரிவுகளில் உள்ள ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்களும் தேவர் அல்லது முக்குலத்தோர்களின் ஒரு பிரிவினர் ஆவர்.
தமிழகத்தில் உள்ள கள்ளர் இனத்தவர்களுள், அவரவரின் வேறுபட்ட இடங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக உள்ளனர். அதில் ஈசநாட்டுக்கள்ளர், பிறமலைக்கள்ளர், கிளைவழி கள்ளர்கள், நாட்டார்கள்ளர் அல்லது அம்பலக்கள்ளர் மற்றும் கள்ளர் குலத் தொண்டைமான் என்பன முக்கிய பிரிவுகளாகும்.
சொற்பிறப்பு
எட்கர் தர்ஸ்டன் அவர்களின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்ற நூலில், 1891 கணக்கெடுப்பின்படி கள்ளர்களின் உட்பிரிவுகள் எண்ணிக்கையில் மிகப் பலவாகப் பதியப்பட்டுள்ளன. அதில் விசங்குநாடு கள்ளர் என்பது ஈசங்க நாடக மருவி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1874 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சாணார் குல மரபு என்ற நூலில் ஈந்து விருகூடித்துக்கு ஈச்ச விருகூடிம் என நூல்களில்ப் பெயர். ஈந்து மரத்தில் இருந்து மதுவிறக்கி குடிப்பதால் ஈந்த நாட்டு கள்ளர் மருவி ஈசநாட்டு கள்ளர் ஆனதாக ஈசநாட்டு கள்ளரை பற்றி குறிப்பிடுகிறார்.
வரலாறு
ஈசங்க நாட்டுக் கள்ளர்கள் சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக்கொள்கின்றனர் என்று கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை நூலில் குறிப்பிடுகிறார்.
இவர்கள் குலத்தில் ஆதிகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய தனக்காரர்கள் தலைவராவர். ஆண் குழந்தைகளுக்கு மதிப்பு அதிகம். தேவர், வாண்டையார், சேதுராயர், மழவராயர், காளிங்கராயர், சோழகர், களத்தில்வென்றார், பல்லவராயர், தொண்டைமான், நாட்டார், பழுவேட்டரையர், சோழங்கதேவர், அதிகமான், ஈழத்தரையர், கொல்லத்தரையர், கடாரங்கொண்டார்,விஜயதேவர், மண்ணையார், மாளுசுத்தியார், முதலியார், வன்னியர், வல்லத்தரையர், போன்ற பட்டங்கள் பல நூறுகள் உள்ளது. ஆண்களுக்கு அவர்கள் சொந்தப் பட்டங்களில் திருமணம் நடத்துவதில்லை. மற்ற பட்டங்களில் சேர்ந்தவர்களில் பெண் எடுப்பர். திருமணத்தில் குலத்தலைவன் சொற்படி நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக இவர்கள் சைவ மற்றும் வைணவ சம்பிரதாயம் உடையவர்கள். எனவே அதிகப்படியாகப் பிற சமூகத்துடன் தொடர்பு கொள்வதில்லை. இவர்களில் பெண்கள் காதணி மற்றும் பல அணிகள் அதிகம் அணிகின்றனர். காது வளர்த்தல் என்ற ஒரு முறையில் காதில் நீண்ட துவாரம் செய்து அவற்றில் வளையம் போன்ற ஒரு பகுதி தோளைத் தொடும் அளவுக்குப் போடுவர்.
தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் கி.பி. 1917 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்ற ஆய்வு நூலில், ஈசங்க நாட்டுக் கள்ளர்கள் பற்றி பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் வாழ்கின்றனர். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவதுண்டு என்கிறார்.
"சோழன்" என்ற பட்டம் ஈசங்க நாட்டுக் கள்ளர்களில் ஒரு பிரிவினரால் இன்னும் சுமக்கப்படுகிறது. எனவே, அந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரின் உண்மையான பெயர் வீர என்றால், அவரது முழுப் பெயர் வீர சோழன். அந்த குலத்தை சேர்ந்தவர்களை தஞ்சை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் சிற்றரசர்களாக புதுக்கோட்டை தொண்டைமான், அறந்தாங்கி தொண்டைமான் மற்றும் புதுக்கோட்டை பல்லவராயர் மன்னர்கள் இருந்தனர்.
ஈசநாட்டு கள்ளர் பிரிவு ஜமீன்கள்
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்த ஈசநாட்டு கள்ளர் மரபினரின் ஜமீன்கள்
பாப்பா நாடு சமீன் - விஜயதேவர்,
கந்தர்வகோட்டை ஜமீன் - அச்சுதப்பண்டாரத்தார்,
பாளையவனம் ஜமீன் - வணங்கமுடிப் பண்டாரத்தார்,
சிங்கவனம் ஜமீன் - மெய்க்கன் கோபாலர்,
புனல்வாசல் ஜமீன் - மழவராய பண்டாரத்தார்,
நெடுவாசல் ஜமீன் பன்றிகொண்டார்,
பாதரங்கோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
கல்லாகோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
சில்லத்தூர் ஜமீன் - பணிபூண்டார்,
மதுக்கூர் ஜமீன் - கோபாலர்,
சேந்தங்குடி ஜமீன் - வணங்காமுடி வகுவடையார்,
அய்யம்பேட்டை சாவடி ஜமீன் - நாயக்கர்,
உக்கடை ஜமீன் - தேவர்,
பூண்டி ஜமீன் - வாண்டையார்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
பாப்பா நாடு ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் சாமினாத விஜயத்தேவர்.
உக்கடை ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர்.
பாலையவனம் ஜமீன் வணங்கமுடி பண்டாரத்தார் .
கந்தர்வக்கோட்டை ஜமீன் அச்சுதப்பண்டாரத்தார்.
பூண்டி ஸ்ரீ ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார்.
பெருங்கமருத்துத பல்லவராயர், புதுக்கோட்டை சமஸ்தானம் அரசப் பிரதிநிதி.
ஸ்ரீமான் பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர், தேவஸ்தான ஸ்தாபகர் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில், பர்மா
அய்யம்பேட்டை சாவடி ஜமீன் கிருஷ்ணசாமி நாயக்கர்
மதுக்கூர் ஜமீன் ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
க. முத்துசாமி வல்லத்தரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
கோபால்சாமி தென்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
ஆர். சுவாமிநாத மேற்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
நடராஜன் குமராண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
வைரக்கண்ணு மாளுசுத்தியார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
பட்டுராசு களப்பாடியார், தொழிற்சங்கப் போராட்டவாதி.
ரத்னசாமி காளிங்கராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
ஏ. தியாகராஜன் காடுவெட்டியார் , தமிழக அரசியல்வாதி.
சோமசுந்தர் காடவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மாதூரார், தொழிற்சங்கப் போராட்டவாதி.
சி. நாராயணன் வாணதிராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
ச. சாமிவேலு நரங்கியர், முன்னாள் மலேசிய இந்திய காங்கிரசு தலைவர், ஊராட்சி வீடமைப்புத் துறை மற்றும் பொதுப்பணி அமைச்சராக இருந்தவர்.
ராமசாமி ஓந்திரியர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
திருச்சி பிரேமானந்தா மழவராயர், ஆன்மீக குரு மற்றும் பிரேமானந்தா மடம் நிறுவியவர்.
சிவாஜி கணேசன் மன்றாயர், திரைப்பட நடிகர்.
ஆர். முத்துராமன் ஓந்திரியர் , திரைப்பட நடிகர்
பிரபு மன்றாயர், திரைப்பட நடிகர்
கார்த்திக் ஓந்திரியர் , திரைப்பட நடிகர்
மனோரமா கிளாக்குடையார், திரைப்பட நடிகை.
சினேகன் கொடும்புரார் , பாடலாசிரியர்.
பசுபதி ஆர்சுத்தியார் , திரைப்பட நடிகர்
காசிநாதன் பாஸ்கரன் சிட்டாச்சியார் , இந்திய கபடி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர்.
தர்மராஜ் சேரலாதன்சோழகர் , இந்திய கபடி வீரர் மற்றும் 2016 இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினர்.
ப. அனுராதா உத்தமுண்டார் , தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை.
கேப்டன் பவித்ரா சேதுராயர், தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன்.
சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.
இரா. தமிழ்ச்செல்வன், மராட்டிய அரசியல்வாதி.
ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான், தமிழக அரசியல்வாதி
வி. இராமையா சேப்பிளார் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் பொதுப்பணித்துறை, உணவுத்துறை அமைச்சர்
மன்னை நாராயணசாமி ஓந்திரையர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சர்.
எஸ். டி. சோமசுந்தரம் கோபாலர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்.
டி. என். அனந்தநாயகி வாண்டையார் , இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்.
ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் முன்னாள் கால்நடைவள, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர்
வி. கே. சசிகலா சாளுவர், தமிழக அரசியல்வாதி மற்றும் அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர்.
டி. டி. வி. தினகரன் முனையதரையர், அஇஅதிமுக முன்னாள் பொருளாளரும் மற்றும் அம்முக நிறுவனர்
ஸ்ரீதர் வாண்டையார், தலைவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
ஜீவன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சர்.
அன்பில் பி. தர்மலிங்கம் நாட்டார் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் அமைச்சர்.
எல். கணேசன் கண்டபிள்ளை , தமிழக அரசியல்வாதி மற்றும் மொழிப்போர் தியாகி.
தா. வீராசாமி அதிகைமான் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னால் உணவுத்துறை, வணிகவரித்துறை அமைச்சர்.
எஸ். எஸ். பழனிமாணிக்கம் வன்னியர் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்.
சி. விஜயபாஸ்கர் மழவராயர் , தமிழக அரசியல்வாதி மற்றும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர்.
ஆர். காமராஜ் காளிங்கராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் உணவுத்துறை அமைச்சர்.
ஆர். வைத்திலிங்கம் சேதுராயர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தொழில்துறை, வனம், சுற்றுச்சூழல் வீட்டுவசதி மற்றும ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சர்.
அழகு. திருநாவுக்கரசு சேண்டபிரியர் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்.
துரை. விஜய ரகுநாத பல்லவராயர், தமிழக அரசியல்வாதி.
நா. சுந்தர்ராஜ் சேப்ளார், தமிழக அரசியல்வாதி.
துரை சந்திரசேகரன் பாண்டுரார், தமிழக அரசியல்வாதி.
ஜி. முருகையா சேதுரார், தமிழக அரசியல்வாதி.
கோவிந்தராசு கலிங்கராயர், தமிழக அரசியல்வாதி.
கே. என். சேகரன் கார்கொண்டார் , தமிழக அரசியல்வாதி
கி. அய்யாறு வாண்டையார், தமிழக அரசியல்வாதி
அன்பில் பெரியசாமி நாட்டார், தமிழக அரசியல்வாதி
செந்தில் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.
அன்பில் பொய்யாமொழி நாட்டார், தமிழக அரசியல்வாதி.
மேற்கோள்கள்
சாதிகள்
கள்ளர்
முக்குலத்தோர் |
682344 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | முதலமட தொடருந்து நிலையம் | முதலமட தொடருந்து நிலையம் (நிலைய குறியீடு: MMDA, Muthalamada railway station) என்பது தென்னக இரயில்வே மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு என். எஸ். ஜி -6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டம் முதலமட சிற்றூரில் அமைந்துள்ளது. இது பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடதில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கேரள மாநிலத்தின் பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கிளைப் பாதையில் அமைந்துள்ளது.
வரலாறு
பாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகரத்திற்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது. இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையின் பிரிவானது மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றபட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன. 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்த பாதை அங்கீகரிக்கப்பட்டது.
தொடருந்துகள்
முதலமட தொடருந்து நிலையம் வழியாக தற்போது இயங்கிவரும் தொடருந்து சேவைகள் பின்வருமாறு:-
அஞ்சல் / விரைவு வண்டிகள்
56731-பாலக்காடு சந்திப்பிலிருந்து (PGT) திருச்செந்தூருக்கு (TCN)
56732-திருச்செந்தூர் (TCN) முதல் பாலக்காடு சந்திப்பு (PGT) வரை
மேற்கோள்கள்
பாலக்காடு தொடருந்து கோட்டம்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள் |
682345 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D | காரு இராம் பகத் | காரு ராம் பகத் (Gharu Ram Bhagat) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். பகத் சம்மு மாவட்டத்தில் உள்ள ரன்பீர் சிங்புரா சட்டமன்றத் தொகுதியின் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக 2008லிருந்து பணியாற்றினார். இவர் 2016 வரை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருந்தார். 2016இல், இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். ஆகத்து 30,2022 அன்று, குலாம் நபி ஆசாத் ஆதரவாகக் காங்கிரசிலிருந்து விலகினார். பின்னர் மீண்டும் பாஜகவில் சேர்ந்து 2024 சட்டமன்றத் தேர்தலில் சுசேத்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள் |
682346 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | இரண்பீர் சிங் போரா சம்மு தெற்கு சட்டமன்றத் தொகுதி | இரண்பீர் சிங் போரா சம்மு தெற்கு சட்டமன்றத் தொகுதி (Ranbir Singh Pora–Jammu South Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இரண்பீர் சிங் போரா, சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
2014
2024
மேலும் காண்க
இரண்பீர் சிங் போரா
மேற்கோள்கள்
ஜம்மு மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682348 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | தாவ்சோனைட்டு | {{Infobox mineral
| name = தாவ்சோனைட்டுDawsonite
| category = கார்பனேட்டு கனிமம்
| image = Dawsonite-165134.jpg
| imagesize = 260px
| caption = கனடாவின் கியூபெக்கில் கிடைத்த தாவ்சோனைட்டு
| formula = NaAlCO3(OH)2
| IMAsymbol = Dws
| molweight = 144.00 கி/மோல்
| strunz = 5.BB.10
| dana = 16a.03.08.01
| system = நேர்ச்சாய்சதுரப் படிகங்கள்
| class = இரு பட்டகம் (mmm) H-M symbol: (2/m 2/m 2/m)
| symmetry = Imam
| color = வெண்மை
| habit = ஆரம் அல்லது தகடு
| twinning =
| cleavage = சரிபிளவு {110} இல்
| fracture = சமமற்றது
| mohs = 3
| luster = பளபளக்கும்
| refractive = nα = 1.466nβ = 1.542nγ = 1.596
| opticalprop =
| birefringence = δ = 0.130
| 2V = 77°
| pleochroism =
| streak = வெண்மை
| gravity = 2.436
| density =
| melt =
| fusibility =
| diagnostic =
| solubility =
| diaphaneity = ஒளிபுகும்
| other =
| references =
}}
தாவ்சோனைட்டு (Dawsonite'') என்பது NaAlCO3(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியம் அலுமினியம் கார்பனேட்டு ஐதராக்சைடு ஆகியவற்றால் ஆன ஒரு கனிமமாகும். நேர்ச்சாய்சதுரக் கட்டமைப்பில் இது படிகமாகிறது. இது தாதுவுக்காக வெட்டப்படவில்லை. 1874 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரீல் தீவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக வளாகத்தில் ரெட்பாத் அருங்காட்சியகத்தின் கட்டுமானத்தின் போது பெல்ட்சுபாரைக் கொண்டிருந்த ஒருபாறையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. புவியியலாளர் சர் இயான் வில்லியம் தாவ்சன் (1820-1899) நினைவாக தாவ்சோனைட்டு எனப் பெயரிடப்பட்டது.
இந்த வகை கனிமம் ரெட்பாத் அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பாதுகாக்கப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தாவ்சோனைட்டு கனிமத்தை Dws என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
சோடியம் கனிமங்கள்
அலுமினியம் கனிமங்கள்
கார்பனேட்டு கனிமங்கள்
கனிமங்கள்
நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
ஒளிரும் கனிமங்கள் |
682351 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | பாகூ சட்டமன்றத் தொகுதி | பாகூ சட்டமன்றத் தொகுதி (Bahu Assembly constituency) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பாகூ, சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
ரியாசி மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682354 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சம்மு வடக்கு சட்டமன்றத் தொகுதி | சம்மு வடக்கு சட்டமன்றத் தொகுதி (Jammu North Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சம்மு வடக்கு சம்மு மக்களவைத் தொகுதிக்கு ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
2024 தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
ஜம்மு மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682355 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF | இராணி ரத்னமாலா தேவி | இராணி ரத்னமாலா தேவி (Rani Ratnamala Devi) இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார். ரத்னமாலா தேவி பாரதிய சனதா கட்சி உறுப்பினராக இயஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள சந்திரபூர் தொகுதியில் போட்டியிட்டு மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
பாரதிய சனதா கட்சியிலிருந்து விலகிய 12 பாரதிய சனதா சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இவர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை தவிர்ப்பதற்காக சத்தீசுகர் விகாசு கட்சி என்ற பின்னொட்டு 'கட்சி' என்ற பெயரை உருவாக்கி மறுநாள் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
மேற்கோள்கள்
சத்தீசுகர் அரசியல்வாதிகள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள் |
682356 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF | மதுர்கதி | மதுர்கதி (Madurkathi) அல்லது மதுர் , மதுர் கோட்டிர் அல்லது மதுர்கதி என்றழைக்கப்படும் இது ஒருவகை பாய் ஆகும். மதுர்கதி எனும் நாணலில் இருந்து தயாரிக்கும் பாய்கள் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டது. மேலும் அப்பகுதியிலுள்ள கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. பாய்கள் முக்கியமாக மகிசிய சாதியைச் சேர்ந்த நெசவாளர்களாலும், முக்கியமாக பெண்களாலும் நெய்யப்படுகின்றன. இந்தக் குடிசைத் தொழில் கிராமத்தின் குடும்ப வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
வங்காள மொழியில் மதுர் என்ற சொல் தரை பாய்களுக்கு ஒரு பொதுவான சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட வகை நாணலில் இருந்து நெய்யப்பட்ட பாய்களைக் குறிக்கிறது. கிராமப்புற வங்காளத்தின் சமூக கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக பாய்கள் உள்ளன. மேலும் மதுர்கதி பாய்கள் படுக்கவும், உட்காரவும் பயன்படுத்தப்படுகின்றன. பாய்கள் வெப்பம் கடத்தாதவை மற்றும் வியர்வையை உறிஞ்சும். அவை மேற்கு வங்காளத்தின் சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலைக்கு அத்தியாவசிய வீட்டு பொருளாக அமைகின்றன. இந்த பாய்கள் மத நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வரலாறு
இந்தியாவில் பாய்-நெசவு சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது. அதர்வண வேதம், சதபத பிராமணம் மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட பண்டைய இலக்கியங்களில் இதைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. அதன் வரலாற்று முக்கியத்துவம் இந்திய நாட்டுப்புறக் கதைகளிலும் பிரதிபலிக்கிறது. அதில் புனிதர்களுக்கு புல் பாய்கள் வழங்கப்படும் கதைகள் சொல்லப்படுகின்றன.
இடைக்கால காலத்தின் பதிவுகள் வங்காளப் பகுதியில் சாதாரண மற்றும் சிறந்த தரமான பாய்கள் தயாரிக்கப்பட்ட பாய்கள் நெசவு பற்றிய முதல் தகவல்களை வழங்குகின்றன.
அங்கீகாரம்
மார்ச் 28,2018 அன்று,புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது..
மேற்கோள்கள்
மேற்கு வங்காளம் |
682359 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | பிசுமத்தைடு | பிசுமத்தைடு (Bismuthide) என்பது Bi3− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அயனியாகும்.
பிசுமத்தைடுகள் அதிக நேர்மின்னூட்டம் கொண்ட தனிமங்களைக் கொண்ட பிசுமத்தின் சேர்மங்கள் ஆகும். இவை பகுதியளவு உலோகம் மற்றும் பகுதியளவு அயனிப் பிணைப்புகளைக் கொண்ட இடை உலோக கலவைகளாக உள்ளன. பெரும்பாலான பிசுமத்தைடுகள் திறமையான பொதித்தல் ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றன. இதனால் அடர்த்தி நிரம்பிய கட்டமைப்புகளாக மாறுகின்றன. இப்பண்பு உலோகங்களிடை சேர்மங்களின் சிறப்பியல்பு ஆகும்.
ஓல்மியம் பிசுமத்தைடு, டிசிப்ரோசியம் பிசுமத்தைடு, நியோடிமியம் பிசுமத்தைடு, பிரசியோடைமியம் பிசுமத்தைடு ஆகியன பிசுமத்தைடு சேர்மங்களூக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
மேற்கோள்கள்
பிசுமத்
பிசுமத்தைடுகள்
கனிம வேதியியல் சேர்மங்கள் |
682362 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | ஆண்டிமோணைடு | ஆண்டிமோணைடு (Antimonide) என்பது Sb3− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அயனியாகும். சிடிப்னைடு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.
ஆண்டிமோணைடுகள் அதிக நேர்மின்னூட்டம் கொண்ட தனிமங்களைக் கொண்ட ஆண்டிமனியின் சேர்மங்கள் ஆகும். கார உலோகங்கள் அல்லது பிற முறைகளால் ஆண்டிமனியைக் குறைப்பது பல்வேறு வகையான கார உலோக ஆண்டிமோணைகளுக்கு வழிவகுக்கிறது. Li3Sb}}, Na3Sb ஆகிய சேர்மங்களில் உள்ள Sb3− ஓர் அறியப்பட்ட ஆண்டிமோணைடு அயனியாகும். Cs4Sb2 சேர்மத்தில் Sb24−, SrSb3 சேர்மத்தில் உள்ளது போன்ற Sb68− தனித்தனியான ஆண்டிமனி சங்கிலிகள், NaSb, RbSb சேர்மங்களில் உள்ளது போன்ற (Sb−)n எல்லையற்ற சுருள்கள், , போன்ற சமதள நான்கு உறுப்பு வளையங்கள், Cs3Sb சேர்மத்திலுள்ள கூடுகள், BaSb3 சேர்மத்திலுள்ள வலை வடிவ அனைத்தும் ஆண்டிமோணைடு அயனிகளாகும்.
சில ஆண்டிமோணைடுகள் குறைக்கடத்திகள் ஆகும். எ.கா. இண்டியம் ஆண்டிமோணைடு போன்ற போரான் குழுவைச் சேர்ந்த சேர்மங்கள். ஆண்டிமோணைடு அயனி ஒரு குறைக்கும் முகவராக இருப்பதால் பல ஆண்டிமோணைடுகள் வெப்பமடையும் போது ஆக்சிசனோடு சேர்ந்து எரியும் அல்லது சிதைந்துவிடும்.
மேலும் காண்க
ஆண்டிமோணைடு கனிமம்
மேற்கோள்கள்
ஆண்டிமோணைடு கனிமங்கள்
எதிர்மின் அயனிகள்
கனிம வேதியியல் சேர்மங்கள் |
682363 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | சிதல் பட்டி | சிதல்பட்டி (Shital Pati) அல்லது சிடல் பதி, சிட்டல் பதி மற்றும் அதி (சில்ஹெட் கோட்டம்) என்றும் அழைக்கப்படும் ஒரு வகை பாய் ஆகும். குளிர்ச்சியாக உணரும் வகையில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது முர்தா தாவரங்களிலிருந்து (மராந்தாசியே) தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக வங்காளதேசத்திலும் இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அலங்கார வடிவமைப்பு கொண்ட பாய்கள் நாக்சி பட்டி என்றும் அழைக்கப்படுகின்றன.
தயாரிப்பு
சிதல் பட்டி கரும்பு அல்லது முர்தா செடிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் முஸ்தக், பட்டிப்பட்டா, பட்டிப்பெட் மற்றும் பைதாரா என்று அழைக்கப்படுகிறது. சில்ஹெட், சுனாம்கஞ்ச், பரிசால், தங்கைல், கொமிலா, நவகாளி, பெனி மற்றும் சிட்டகொங் ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றி இந்த முர்தா செடிகள் வளர்கிறது. முர்தா செடிகளால் செய்யப்பட்ட நாக்சி பட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் மற்றும் நவகாளி மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில், மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு கூச் பெகர் மாவட்டத்தில் சிதல் பட்டி தயாரிக்கப்படுகிறது. கூச் பெகரில் உள்ள பகுதிகளில், சாகரேசுவர், குகுமாரி மற்றும் பஷ்னதங்கா ஆகியவை முக்கியமான மையங்களாகும்.
அங்கீகாரம்
யுனெஸ்கோ சில்ஹெட்டின் பாரம்பரிய சிதல் பட்டி நெசவுக் கலையை அங்கீகரித்து, மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் சேர்த்துள்ளது.
இதனையும் காண்க
நாக்சி காந்தா, துணியிலிருந்து தயாரிக்கப்படும் அலங்கார மெத்தைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Shital pati of Assam
Shital pati in Bangladesh
வங்காளதேசப் பண்பாடு
கைவினைப் பொருள்கள் |
682364 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%28III%29 | பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III) | பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III) (Potassium tetrachloroiodate(III)) என்பது KICl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இதன் ஒற்றைநீரேற்றுச் சேர்மம் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் P21/n என்ற இடக்குழுவில் மஞ்சள் நிறத்தில் படிகங்களாக உள்ளது.
தயாரிப்பு
அயோடின், பொட்டாசியம் குளோரேட்டு மற்றும் 6 மோல்/லி ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலில் கரைக்கப்பட்ட 1.5 மோல்/லி பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்து ஒடுக்குதல் வினை, வடிகட்டுதல், வெற்றிட உலர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III) சேர்மத்தைப் பெறலாம். இடற்கான வினை::
2 KClO3 + I2 <-> 2 KIO3 + Cl2
KIO3 + 6 HCl <-> KICl4 + Cl2 + 3 H2O
மேற்கோள்கள்
பொட்டாசியம் சேர்மங்கள்
அயோடின் சேர்மங்கள்
குளோரின்(I) சேர்மங்கள்
கனிம வேதியியல் சேர்மங்கள் |
682366 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | மார் சட்டமன்றத் தொகுதி | மார் சட்டமன்றத் தொகுதி (Marh Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். மார், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2014
2024
மேலும் காண்க
ஜம்மு
மேற்கோள்கள்
ஜம்மு மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682367 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%28II%29%20%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | கோபால்ட்டு(II) அசைடு | கோபால்ட்டு(II) அசைடு (Cobalt(II) azide) என்பது Co(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைகோபால்ட்டு ஆக்டாகார்பனைலுடன் அயோடின் அசைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து கோபால்ட்டு(II) அசைடு தயாரிக்கப்படுகிறது.
Co2(CO)8 + 4IN3 → 2Co(N3)2 + 8CO + 2I2
இயற்பியல் பண்புகள்
கோபால்ட்(II) அசைடின் நீரிய கரைசல்கள் கரிம கரைப்பான்களுடன் சேர்க்கப்படும் போது இளஞ்சிவப்பு-ஊதாவிலிருந்து நீல நிறத்திற்கு மாறுகிறது. பெரும்பாலான அசைடுகளைப் போலவே, இதுவும் வெடிக்கும் தன்மை கொண்டதாகும்.
மேற்கோள்கள்
கோபால்ட் சேர்மங்கள்
அசைடுகள்
கனிம வேதியியல் சேர்மங்கள் |
682370 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE | தோக்ரா | தோக்ரா (Dhokra) ( டோக்ரா என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இரும்பு அல்லாத மெழுகு வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு வார்ப்பு ஆகும். இந்த வகையான வார்ப்பு இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது. இக்கலை இன்றும் பயன்பாட்டில் உள்ளது. மொகெஞ்சதாரோவில் கிடைத்த நடன மங்கை சிலை தொலைந்து போன மெழுகு கலைப் பொருட்களில் மிகவும் பழமையானது. பழமையான எளிமை, நாட்டுப்புற உருவங்கள் மற்றும் வலிமையான வடிவம் காரணமாக தோக்ரா கைவினைஞர்களின் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக தேவை உள்ளது. தோக்ரா குதிரைகள், யானைகள், மயில்கள், ஆந்தைகள், மதம் சம்பந்தமான உருவங்கள்ள், அளவிடும் கலசங்கள் மற்றும் விளக்கு கலசங்கள் போன்றவை மிகவும் பாராட்டப்படுகின்றன. சீனா, எகிப்து, மலேசியா, நைஜீரியா, நடு அமெரிக்கா போன்ற இடங்களிலும் தாமிர அடிப்படையிலான இவ்வகை மெழுகு நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
தோக்ரா கலையானது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் தாமர் பழங்குடியினர் பாரம்பரியமாக தயாரிக்கிறார்கள். அவர்களின் இழந்த மெழுகு வார்ப்பு நுட்பம் அவர்களின் பழங்குடியினப் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர்கள் சார்க்கண்டிலிருந்து மேற்கு வங்காளம் வரை பரவியுள்ளனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் தோக்ராக்கள் தெற்கே தமிழ்நாடு வரை மற்றும் வடக்கே ராஜஸ்தான் வரை பயணம் செய்தனர்.
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Ancient Metal Casting Art of Dhokra at Dwariapur, West Bengal With Subtitles at YouTube
Lost Wax Process or Dhokra Art of Bastar at YouTube
Dhokra Art | A rare Bronze age craft | Bastar Art & Handicraft | The Tribal Hermit at YouTube
பஸ்தர் மாவட்டம்
மேற்கு வங்கத்தின் பண்பாடு
வங்காளப் பண்பாடு |
682371 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88 | பாங்குரா குதிரை | பாங்குரா குதிரை (Bankura horse) என்பது சுடுமண்ணால் செய்யப்படும் ஒரு வகை குதிரை ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பாங்குரா மாவட்டத்திலுள்ள பஞ்சமுரா கிராமத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது “அதன் நேர்த்தியான நிலைப்பாடு மற்றும் அடிப்படை மதிப்புகளின் தனித்துவமான சுருக்கத்திற்காக” பாராட்டப்பட்டது. முதலில் கிராமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இது, இப்போது உலகெங்கிலும் உள்ள ஓவியக் கண்காட்சிகளில் இந்திய நாட்டுப்புறக் கலையின் அடையாளங்களாக அலங்கரிக்கிறது. இது அகில இந்திய கைவினைப் பொருட்களின் சின்னமாகத் திகழ்கிறது.
பாரம்பரியம்
இந்தியாவில், சுடுமண்ணால் உருவங்கள் உருவாக்கப்படும் மரபுகள் ஆரம்ப காலத்திலிருந்தே காணப்படுகின்றன. பல இந்திய கிராமங்களின் புறநகரில் ஒரு அரச மரம் இருக்கும். அதன் கீழ் சுடுமண்னால் செய்யப்பட்ட ஒரு விலங்கு உருவங்கள் இருக்கும். கிராம மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடையாளங்களாக அவை உள்ளன. நவீன உலக சந்தையின் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கிராமப்புற குயவர் பெரும்பாலும் பாரம்பரிய கிராமப்புற கருத்தாக்கத்தங்களை நகர்ப்புற சுவைகளுடன் இணைத்து சுடுமண் கலையின் துண்டுகளைக் காட்டுகிறார்.
பஞ்ச்முரா, ராஜாகிராம், சோனாமுகி மற்றும் அமீர்பூர் ஆகிய இடங்களில் சுடுமண் குதிரைகள் மற்றும் யானைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு இடமும் அதன் சொந்த உள்ளூர் பாணியைக் கொண்டுள்ளது. பஞ்ச்முரா பாணி மட்பாண்டங்கள் நான்கு வகைகளிலும் மிகச்சிறந்ததாக கருதப்படுகின்றன.
புவியியல் குறியீடு
பாங்குரா குதிரை மேற்கு வங்காளத்தின் புவியியல் சார்ந்த குறியீடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 28 மார்ச் 2018 அன்று ‘பாங்குரா பஞ்ச்முரா சுடுமண் கைவினைப்பொருள்’ என்று பெயரிடப்பட்டது.
பாங்குரா குதிரை காட்சியகம்
மேற்கோள்கள்
மேற்கு வங்கத்தின் பண்பாடு |
682374 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81 | நாகூர் சாகுல் அமீது | நாகூர் சாகுல் அமீது (Nagore Shahul Hamid) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆன்மீக துறவியும், இசுலாமிய போதகரும் காதிரிய்யா என்ற இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த இஸ்லாமிய அறிஞரான அப்துல் காதிர் அல்-ஜிலானியின் 13வது தலைமுறை வழித்தோன்றலும் ஆவார். இவரது இளைப்பாறும் இடம் இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகூரில் நாகூர் தர்கா என்ற பெயரில் அமைந்துள்ளது.
இளமை வாழ்க்கை
உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள மாணிக்பூரில் சையத் ஹசன் குத்துஸ் பாபா காதிரி மற்றும் பீபி பாத்திமா ஆகியோருக்கு சாகுல் அமீது பாதுஷா காத்ரி பிறந்தார். முகமது கௌஸின் வழிகாட்டுதலின் கீழ் குவாலியரில் இசுலாமியக் கல்வியைப் பெற்றார். மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ள மாலைத்தீவு, இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்குச் சென்றார். ஒரு எளிய மற்றும் புனிதமான வாழ்க்கையை நடத்தினார். ஆனால் இவரை பின்பற்றுபவர்கள் இவருக்கு நாகூர் ஆண்டவர் என்ற பெயரைக் கொடுத்து நிறைய அற்புதங்களைச் செய்ததாக நம்புகிறார்கள். இவர் மீரா சாஹிப் என்றும் அழைக்கப்பட்டார்.
தர்காக்கள்
பினாங்கு (மலேசியா ) மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இவரது நினைவாக கட்டப்பட்ட பிற தர்க்காக்களும் உள்ளன. சிங்கப்பூர் தர்கா கி. பி. 1827 மற்றும் 1830 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள சுலியாவில் உள்ள மஸ்ஜித் ஜேம் மற்றும் பினாங்கில் உள்ள கேரமத் தாதா கோயா ஆகியவற்றுடன் மேற்கூறிய ஆலயங்கள் நாகூர் தர்காவின் பாணியால் ஈர்க்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
கூடுதல் ஆதாரங்கள்
.
.
.
.
.
.
.
இசுலாமிய மெய்யியலாளர்கள்
சூபி அறிஞர்கள் |
682376 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | மும்பையின் காலக்கோடுகள் | மும்பையின் காலக்கோடுகள் (Time lines of Mumbai), மும்பையின் வரலாறு கிமு 600 ஆண்டுகள் முதல் அறியப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டு வரை
கிமு 600 – மராத்திய மொழி பேசும் கோலி மக்கள் மற்றும் அக்ரி மக்களின் குடியிருப்புகள் முதன்முதலில் மும்பையில் காணப்பட்டது.
கிமு 300 –மௌரியப் பேரரசின் ஆட்சிப் பகுதியில் இருந்தது.
கிபி 900 – சிலகார வம்ச ஆட்சியில் மும்பை இருந்தது.
1343 – குஜராத் சுல்தானகத்தின் பகுதியாக இருந்தது.
1431 –ஹாஜி அலி தர்கா நிறுவப்பட்டது.
1508 - போர்த்துகேய இந்தியாவின் ஆளுநர் பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா மும்பை துறைமுகத்தை அடைந்தார்..
1534 – மும்பை பகுதி போர்த்துகேயர்க்ளுக்கு விட்டு கொடுக்கப்பட்டது.
1661 – போர்த்துகேய இளவரசி கேத்தரின்--இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு திருமணத்தை முன்னிட்டு வரதட்சணையாக மும்பை பகுதியை பிரித்தானியப் பேரரசுக்கு வழங்கப்பட்டது.
1668/1669 – இரண்டாம் சார்லசிடமிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மும்பையின் ஏழு தீவுகளைக் குத்தகையாக எடுத்துக் கொண்டது.
1670 – பார்சி வணிகர் பீம்ஜீ பரீக் அச்சு இயந்திரத்தை இறக்குமதி செய்து நிறுவினார்.
1672 – பார்சி மக்களின் அமைதியின் கோபுரம் மற்றும் நெருப்புக் கோவில் முதன்முதலில் நிறுவப்பட்டது.
1675 – மும்பையின் மக்கள் தொகை 60,000 இருந்து 1661ல் 1,00,000 ஆக உயர்ந்தது.
1675 –போரி பந்தரில் மும்பா தேவி கோவில் நிறுவப்பட்டது.
1709 – தனியார் பார்சி நெருப்புக் கோவில் நிறுவப்பட்டது.
1735 - மும்பையில் பிரபாதேவி கோயில் நிறுவப்பட்டது.
1735 –வாடியா மற்றும் டங்கன் நிறுவனத்தினர் கப்பல் கட்டும் நிறுவனத்தை துவக்கினர்.
1750 –ஆசியா முதல் கப்பல் கட்டும் தளம் மும்பையில் துவக்கப்பட்டது.
1777 – ருஸ்தம் கெரஸ்ப்ஜெரே என்பவர் முதல் செய்தித் தாள் வெளியிடப்பட்டார்.
19ஆம் நூற்றான்டு
1801 – பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில் நிறுவப்பட்டது.
1803 – மும்பையில் நெருப்பு பிடித்தது.
19 சூன் 1810 – எச் எம் எஸ் மிந்தேன் போர்க்கப்பல் மும்பையில் கட்டப்பட்டது.
1822 – குஜராத்தி மொழியில் பம்பாய் சமாச்சார் எனும் நாளிதழ் வெளியிடப்பட்டது.
1838 – முதல் வணிக இதழான மும்பை டைம்ஸ் வெளியானது.
1845 – பெரிய மருத்துவக் கல்லூரி மற்றும் ஜாம்செட்ஜி-ஜீஜீபாய் குழும மருத்துவமனைகள் நிறுவப்பட்டது.
1846 –சால்சேட் தீவு-மாகிம் இணைப்புச் சாலை போடப்பட்டது.
16 ஏப்ரல் 1853 – மும்பை-தானே இடையே, முதல் இருப்புப்பாதை போடப்பட்டு, தொடருந்து சேவைகள் தொடங்கியது.
1854 – முதல் பருத்தி ஆலை நிறுவப்பட்டது.
1857 – மும்பை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1858 – இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீன பட்டய வங்கியின் மும்பை கிளை திறக்கப்பட்டது.
1864 – பரோடா மற்றும் மத்திய இரயில்வேக்கள் மும்பை வரை சேவைகள் தொடங்கியது.
1870 – மும்பை துறைமுக அறக்கட்டளை அமைக்கப்பட்டது..
1874 – மும்பை துறைமுகப் பகுதியில் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி நிறுவப்பட்டது.
1885 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி நிறுவப்பட்டது.
1887 – விக்டோரியா தொழில்நுட்ப மையம் (1887–1997) நிறுவப்பட்டது.
1888 – பெருநகரமும்பை மாநகராட்சி நிறுவப்பட்டது.
1893 – இந்து-முஸ்லீம் கலவரங்கள் தொடங்கியது.
1896 –கொள்ளைநோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
1897 – பார்ஸ்டெர் கிராம்டன் கிரீவ்ஸ் என்பவர் பெட்ரோலில் ஓடும் வாகனத்தை இந்தியத் துணை கண்டத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
1899 – மும்பையில் கொள்ளைநோய் பரவியது.
20ஆம் நூற்றாண்டு
1900 – மேற்கு இரயில்வே சார்பில் மும்பையிலிருந்து பல திசைகளில் 45 இரயில்கள் இயக்கப்பட்டது.
1911 – இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் இராணி மேரி மும்பை நகரத்திற்கு இந்தியாவின் நுழைவாயில் வழியாக வருகை புரிந்தனர்.
1912 – மன்னர் ஜார்ஜ் ஆங்கிலப் பள்ளி தாதரில் நிறுவப்பட்டது.
1913 – வணிகக் கல்விக்கான சிடென்கம் கல்லூரி நிறுவப்பட்டது.
12 சனவரி 1915 – மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மும்பை வழியாக வந்தடைந்தார்.
22 சனவரி 1926 –சேட் கோர்தன்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் எட்வர்டு நினைவு மருத்துவமனை துவக்கப்பட்டது.
15 சூலை 1926 – இந்தியாவில் முதல் மோட்டார் பேருந்துகள் மும்பையில் இயக்கப்பட்டது.
1928 – முதல் மின்சார இரயில் சர்ச்கேட்- போரிவலி வரை இயக்கப்பட்டது.
1930 – மும்பை கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டது.
15 அக்டோபர் 1932 – ஜெ. ர. தா. டாட்டா, கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியாக மும்பை வரை விமானம் ஓட்டி வந்தார். இதுவே இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு வித்திட்டது.
1 அக்டோபர் 1933 – வேதியியல் தொழில் நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டது.
1934 –காங்கிரசு சோசலிசக் கட்சி நிறுவப்பட்டது.
1940 – நிலச் சீரமைப்பு செய்து நாரிமன் பாயிண்ட் பகுதி உருவாக்கப்பட்டது.
8 ஆகஸ்டு 1942 –மும்பையில் கூடிய காங்கிரசு மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது..
14 ஏப்ரல் 1944 – மும்பை துறைமுகத்தில் வெடித்த குண்டுகளால் பலர் கொல்லப்பட்டனர்
21 நவம்பர் 1955 - சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி & துப்பாக்கிச் சூட்டில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
1958 – இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை தொடங்கப்பட்டது.
1 மே 1960 – புதிய மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகராக மும்பை அறிவிக்கப்பட்டது.
31 மார்ச் 1964 – போரி பந்தர் முதல் தாதர் வரை இயக்கப்பட்ட டிராம் சேவைகள் நிறுத்தப்பட்டது.
சனவரி,1982 – தத்தா சமந்த் தலைமையில் பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
டிசம்பர் 1992 – சனவரி 1993 –இந்து-முஸ்லீம்களிடையே ஏற்பட்ட மும்பை கலவரங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1993 – 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – பம்பாயின் பெயர் மும்பை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
2002 – பந்த்நகர்-காட்கோபர் அருகே பேருந்து குண்டு வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்..
2003
27 சனவரி –காட்கோபர் அருகே பேருந்து குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டர்..
13 மார்ச் –மும்பை தொடருந்து குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
28 சூலை –காட்கோபர் பேருந்தில் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
25 ஆகஸ்டு – இந்திய நுழைவாயில் மற்றும் சாவேரி பஜார் அருகே இரண்டு கார்களில் இருந்த குண்டுகள் வெடித்ததில் 54 பேர் கொல்லப்பட்டனர்.
2006
11 சூலை – தொடர் வண்டியில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
2008 – 2008 மும்பாய் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர்.
2009 – பாந்த்ரா-வொர்லி இணைப்பு கடல் பாலம் துவக்கப்பட்டது.
2011 – மும்பை குண்டு வெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2014
செப்டம்பர் – சிவ சேனாவின் சினேகா அம்பேத்கார் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..
1 பிப்ரவரி – மும்பை மோனோரயில் சேவை துவக்கப்பட்டது.
8 சூலை – மும்பை மெட்ரோ சேவை துவக்கப்பட்டது.
2021
18 சூலை – மும்பை நிலச்சரிவினால் வீடுகள் இடிந்து 32 பேர் கொல்லப்பட்டனர்.
2023-24
பாந்த்ரா-வொர்லி இணைப்பு கடல் பாலத்துடன் இணைப்பதற்கான கடற்கரை சாலைகள் நிறுவப்பட்டது.
மும்பை-நவி மும்பையை இணைக்கும் 21.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அடல் சேது கடல் பாலம் 12 சனவரி அன்று துவக்கப்பட்டது.
இதனையும் காண்க
மும்பையின் வரலாறு
மும்பையின் புவியியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Timeline of Mumbai
Blasts hit Mumbai commuter trains
மும்பையின் வரலாறு
மும்பை |
682382 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | அக்னூர் சட்டமன்றத் தொகுதி | அக்னூர் சட்டமன்றத் தொகுதி (Akhnoor Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். அக்னூர், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2014
2024
மேலும் காண்க
அக்னூர்
மேற்கோள்கள்
ஜம்மு மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682384 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81 | குர்சித் அகமது | குர்சித் அகமது (Khurshied Ahmed) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். மாகோரில் பள்ளிக் கல்வியினை முடித்த குர்சித் அகமது, லுதியானாவில் உள்ள ஏஎம்ஐசியில் இளநிலை தொழில்நுட்பக் கல்வியினை முடித்துள்ளார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் குலாப்கர் சட்டமன்றத் தொகுதியில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
மேலும் காண்க
2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தல்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை
மேற்கோள்கள்
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029
வாழும் நபர்கள் |
682388 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 | கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து | {
"type": "ExternalData",
"service": "geoline",
"ids": "Q1431592",
"properties": {
"stroke": "#800080",
"stroke-width": 6
}
}
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத் தொடருந்து (ஆங்கிலம்; மலாய்: KLIA Ekspres; சீனம்: '吉隆坡机场快线) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் சேவை செய்யும் விரைவுத் தொடருந்துச் சேவை ஆகும்.
இது கோலாலம்பூரின் முக்கியத் தொடருந்து நிலையமான கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கேஎல்ஐஏ T1 (KLIA T1) மற்றும் கேஎல்ஐஏ T2 (KLIA T2) நிலையங்களுக்குச் சேவை செய்கிறது.
இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை பயணம் செய்யும் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துகள் (KLIA Ekspres), மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளன. மேலும் கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவையின் அதே வழித்தடங்களையும் பகிர்ந்து கொள்கின்றன.
பொது
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து சேவையின் நட்புச் சேவையான கேஎல்ஐஏ போக்குவரத்து சேவை (KLIA Transit) அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நின்று செல்லும் சேவையை வழங்குகிறது. அதே வேளையில் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres); கோலாலம்பூர் சென்ட்ரல் மற்றும் கேஎல்ஐஏ T1 மற்றும் கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு மட்டும் இடைவிடாத நேரடிச் சேவையில் ஈடுபடுகிறது.
இந்த வழித்தடம், கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் (Klang Valley Integrated Transit System) ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு என குறியீடும் ஊதா நிறத்தில் உள்ளது. இந்த வழித்தடம் விரைவுத் தொடருந்து இணைப்பு (Express Rail Link Sdn. Bhd) (ERL) மூலம் இயக்கப்படுகிறது.
முதல் விபத்து
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres), கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கேஎல்ஐஏ T1; கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு இடையில் எல்லா நாட்களிலும் தினசரி 05:00 முதல் நள்ளிரவு 00:00 வரை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் செல்கின்றன.
24 ஆகஸ்டு 2010 அன்று, கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இரு கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துகள் மோதிக் கொண்டன. அதுவே கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துச் சேவையின் முதல் விபத்து ஆகும். அந்த விபத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்.
கேஎல்ஐஏ
கேஎல்ஐஏ (KLIA) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport) சுருக்கமாகும். கேஎல்ஐஏ, மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். மேலும் தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கேஎல்ஐஏ (KLIA) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த வானூர்தி நிலையம் அறியப் படுகின்றது. இந்த வானூர்தி நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.
அதிவிரைவு தொடருந்துச் சேவை
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அதிவிரைவு தொடருந்துச் சேவையின் வழி, இந்தப் பன்னாட்டு நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பன்னாட்டு நிலையம் 27 சூன், 1998-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப் படுகின்றன.
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
கேஎல்ஐஏ போக்குவரத்து
கோலாலம்பூர் மோனோரெயில்
காஜாங் வழித்தடம்
கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
சா ஆலாம் வழித்தடம்
புத்ராஜெயா வழித்தடம்
எம்ஆர்டி சுற்று வழித்தடம்
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
வழித்தடம்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து நிலையங்கள்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres) நிலையங்களின் விவரங்கள்:
பயணிகள்
19 செப்டம்பர் 2005 அன்று, 10 மில்லியன் பயணிகள் பயணித்ததை விரைவுத் தொடருந்து இணைப்பு நிறுவனம் கொண்டாடியது. 10 மில்லியன் பயணியான எமிலியா ரோசுனைடா என்பவர் கோலாலம்பூரில் இருந்து நியூயார்க் நகரம் வரை சென்று வர வணிக வகுப்பு பயணத்திற்கான பரிசைப் பெற்றார்.
12 டிசம்பர் 2007 அன்று, 20 மில்லியன் பயணியான சொக்கலிங்கம் என்பவர் கோலாலம்பூரில் இருந்து துபாய் வரை சென்று வருவற்கான பரிசைப் பெற்றார்.
காட்சியகம்
மேலும் காண்க
கோலாலம்பூர் சென்ட்ரல்
கேஎல்ஐஏ போக்குவரத்து
பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
கிளானா ஜெயா வழித்தடம்
பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
அம்பாங் வழித்தடம்
செரி பெட்டாலிங் வழித்தடம்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
KLIA Ekspres – official website
KLIA Express - Fastest Airport Transfer in Kuala Lumpur
மலேசியாவில் போக்குவரத்து
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
விரைவுத் தொடருந்து இணைப்பு
மலேசியாவில் தொடருந்து போக்குவரத்து |
682389 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | பாசுபரசு ஈராக்சைடு | பாசுபரசு ஈராக்சைடு (Phosphorus dioxide) என்பது PO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இயங்குறுப்பான இது பாசுபரசின் வாயுநிலை ஆக்சைடாகும். பாசுபரசு மற்றும் பாசுபீனின் ஒளிரும் வேதியியல் தன்மையில் பாசுபரசு ஈராக்சைடு பங்கு வகிக்கிறது. பாசுப்பேட்டுகளை அதிக வெப்பநிலைக்கு சூடாக்கும்போது இச்சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அடி நிலையில் மூலக்கூறு நைட்ரசன் டை ஆக்சைடு போல இது வளைந்திருக்கும். ஆனால் கிளர் நிலையில் நேர்கோட்டு அமைப்பில் உள்ளது.
மேற்கோள்கள்
தனி உறுப்புகள்
கனிமவேதியியல் பாசுபரசு சேர்மங்கள்
ஆக்சைடுகள் |
682390 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 | மையா சந்து | மையா சந்து (Maia Sandu) ( (பிறப்பு 24 மே 1972) என்பவர் மல்தோவாவின் அரசியல்வாதியும் 2020 திசம்பர் 24 ஆம் நாளிலிருந்து மல்தோவாவின் அரசுத்தலைவராகவும் இருப்பவர் ஆவார். செயல் மற்றும் கூட்டொருமைக் கட்சியியின் நிறுவநரும் முன்னாள் தலைவரும் ஆவார். மேலும், இவர் 8 சூன் 2019 முதல் 14 நவம்பர் 2019 வரை மல்தோவாவின் முதன்மை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார். இவரின் அரசு 2019 நவம்பர் 14 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாட்டெடுப்பில் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. 2012 முதல் 2015 வரை இவர் மல்தோவாவின் கல்வி அமைச்சராகவும் 2014 முதல் 2015 வரையிலும் மீண்டும் 2019 முதலாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.
2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற மல்தோவாவின் அரசுத் தலைவர் தேர்தலில் சந்து ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றார். மல்தோவாவின் முதல் பெண் அரசுத் தலைவரான சந்து, மல்தோவா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்திற்கு இவர் வலிமையான ஆதரவுக் கருத்து உள்ளவர் ஆவார். இவர் உக்ரைனின் மீதான உருசியாவின் படையெடுப்பை எதிர்த்தும் விமர்சித்தும் வந்துள்ளார். இவர் படிப்படியாக மல்தோவா உருசியாவின் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். உருசியா-உக்ரைன் உடனான கருத்து வேறுபாட்டில் அடிக்கடி உக்ரைனுக்காக தனது வருத்தத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். சந்து தனது அரசியல் மேடையில் ஊழல் எதிர்ப்பு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தாராளவாதத்தை தனது அரசியல் மேடைகளின் மையக் கருத்தாக்கினார். பெப்ரவரி 2023-இல், உருசியா மல்தோவா அரசைக் கவிழ்க்க மேற்கொண்ட இரகசிய சதித்திட்டங்களை இவர் வெளியியட்டார். மேலும், இவர் தம்முடைய நாட்டின் மீதான உருசிய ஆதிக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
2024 மல்தோவா குடியரசுத் தலைவர் தேர்தலில் சந்து மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடக்க கால வாழ்க்கை மற்று் தொழில் வாழ்க்கை
சந்து 1972 மே 24 அன்று மல்தோவாவின்எஸ். எஸ். ஆரின் ஃபெலெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ரிஸிபெனி கம்யூனில் பிறந்தார். இவரது பெற்றோர் கிரிகோரி மற்றும் எமிலியா சந்து, முறையே ஒரு மருத்துவர் மற்றும் ஆசிரியர் ஆவர். இவர் 1988 முதல் 1994 வரை, மல்தேவாவாவில் மல்தோவாவின் பொருளாதார ஆய்வுகள் அகாதமியில் (ஏஎஸ்இஎம்) நிர்வாகவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றார். 1995 முதல் 1998 வரை, இவர் சீகிசினோவில் உள்ள பொது நிர்வாக அகாதமியில் (AAP) சர்வதேச உறவுகளில் தேர்ச்சி பெற்றார். 2010 ஆம் ஆண்டில், இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எஃப் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்ன்மெண்டில் பட்டம் பெற்றார். 2010 முதல் 2012 வரை, சந்து உலக வங்கி நிர்வாக இயக்குநரின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
2012 முதல் 2015 முடிய உள்ள காலத்தில் சந்து மல்தோவாவின் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு சூலை 23 ஆம் நாள் லிபரல் டெமாக்ரடிக் கட்சியால் நடாலியா கெர்மேன் மற்றும் சிரில் கபூரிசி ஆகியோருக்கு அடுத்து முதன்மை அமைச்சருக்கான வேட்பாளராகக் கருதப்பட்டார்.
புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பிய சார்பு கூட்டணியால் முன்மொழியப்பட்ட ஒரு நாள் கழித்து, மல்தோவா தேசிய வங்கித் தலைவர் டோரின் டிராகுவானு மற்றும் அரசு வழக்கறிஞர் கொர்னேலியு குரின் ஆகியோரை அவர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளாக சந்து அமைத்தார். இறுதியில், மல்தோவா அதிபரால் சந்துவிற்குப் பதிலாக வலேரியு ஸ்ட்ரெலே நியமிக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில், சந்து மல்தோவிய அரசுத் தலைவர் தேர்தலில் ஐரோப்பிய சார்பு வேட்பாளராக இருந்தார். இவர் 2016 அரசுத் தலைவர் தேர்தலில் ஐரோப்பிய சார்பு பிபிடிஏ மற்றும் பிஏஎஸ் கட்சிகளின் இணை வேட்பாளராக இருந்தார். ஐரோப்பிய ஒன்றிய செயற்களத்தில் ஓடிக்கொண்டிருந்த இரண்டு வேட்பாளர்களில் தேர்தல் வரையிலும் பங்கேற்ற இரண்டில் ஒரு ஐரோப்பிய சார்பு வேட்பாளராக இவர் இருந்தார். சந்து, களத்தில் போட்டியிட்ட ஒரே ஒரு பெண்மணியாய் நிறைய பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முன்னாள் மல்தோவாவின் அரசுத் தலைவர் விளாடிமிர் வோரோனெின் பொது மேடைகளில் இவரை குடும்பத்தின் மதிப்புகளுக்குத் துரோகம் இழைத்தவர் என்றும், மல்தோவாவின் தேசிய அவமானமும் பாவமும் என்றும் குறிப்பிட்டுத் தாக்கிப் பேசினார். ஒரு பேட்டியில் இவர் இந்த அவமதிப்புகளைப் புறந்தள்ளிப் பின்வருமாறு பதிலளித்தார். தான் ஒரு போதும் தனித்த (திருமணமாகாத) பெண்ணாக வாழ்வதை அவமானமாகக் கருதவில்லை என்றும் ஒரு வேளை பெண்ணாப் பிறப்பதே பாவம் என்கின்றனரோ என்னவே என்றார். சந்து இதற்கடுத்த போட்டிகளில் உருசிய ஆதரவு வேட்பாளர் இகார் டோடான் என்பவரிடம் 48% ஓட்டுகளுக்கு 52% ஓட்டுகள் என்ற இடைவெளியில் தோற்றார்.
டிசம்பர் 2022 நிலவரப்படி, மல்தோவாவில் மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக 26% வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். இகோர் டோடான் 19% உடன் பின்தங்கியிருந்தார். பொதுக் கருத்து நிதியத்தால் நடத்தப்பட்ட 2019 ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், சந்து இரண்டாவது நம்பகமான அரசியல் ஆளுமையாக, 24% வாக்குகளைப் பெற்றார், இகோர் டோடனை நெருக்கமாகப் பின்தொடர்ந்தார், இந்தக் கருத்துக் கணிப்பில் இகோர் 26% வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் அந்த ஆண்டு பழைய கருத்துக்கணிப்புகள் அவரை ஆறாவது இடத்தில் வைத்திருந்தன.
பிரதம அமைச்சராக
2019 நாடாளுமன்றத் தேர்தலில், சந்துவின் பிஏஎஸ், அதன் கூட்டாளியான ஆண்ட்ரி நாஸ்டேஸ் தலைமையிலான பிபிடிஏ உடன் இணைந்து, மல்தோவா நாடாளுமன்றத்தில் 101 இடங்களில் 26 இடங்களைப் பெற்று, ஏசிஎம் தேர்தல் தொகுதியை உருவாக்கியது. சூன் 8,2019 அன்று, சந்து பிஎஸ்ஆர்எம் உடன் கூட்டணி அரசாங்கத்தில் மல்தோவாவவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், மல்தோவாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் இந்தப் பதவிக்கு அவரது தேர்வு அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், மல்தோவாவில் குடியரசின் அரசாங்கத்தை நியமித்ததாகவும் அறிவித்தது, இது 2019 அரசியலமைப்பு நெருக்கடியைத் தூண்டியது. இருப்பினும், 15 சூன் 2019 அன்று, அரசியலமைப்பு நீதிமன்றம் அதன் முந்தைய முடிவுகளைத் திருத்தி ரத்து செய்தது, சந்து அமைச்சரவை அரசியலமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டதாக அறிவித்தது.
அடுத்த நாள், உள்ளூர் பேரணிகளில் கலந்து கொள்வதை குடிமக்களை ஊக்கப்படுத்தாமல், பொது ஒழுங்கை மீட்டெடுக்க அவர் அழைப்பு விடுத்தார். சூன் 2019 இல், முன்னாள் பிரதமர் பிலிப் உருசிய அரசாங்க அதிகாரிகளின் அலுவல்பூர்வ வருகைகளுக்கு விதித்த தடையை நீக்கினார். வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் நேர்காணலில், அமெரிக்காவின் கருவூலம் விளாட் பிளாஹோட்னியூக்கை மேக்னிட்ஸ்கி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரும் தனது விருப்பத்தை அவர் அறிவித்தார். ஆகஸ்ட் மாதம், வழக்கமான விடுதலை தினத்திற்கு பதிலாக ஆகஸ்ட் 23 ஐ ஸ்ராலினிசம் மற்றும் நாசிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐரோப்பிய நினைவு தினமாக அறிவிக்கும் வரைவு ஆணையைத் தயாரிக்குமாறு சந்து அரசு அதிபரிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆணையை அவரது கூட்டணி பங்காளியான பி. எஸ். ஆர். எம் எதிர்த்தது, மல்தோவாவின் தலைவரும் முன்னாள் பி. எஸ், ஆர். எம் தலைவருமான இகோர் டோடான், சந்துவின் முன்மொழிவை நிராகரித்து, பழைய பாணியில் நாளைக் கொண்டாடுவதாக அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய சார்புநிலை கொண்டிருந்த சந்துவின் தலைமையின் கீழ், மல்தோவா ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து 2019 நவம்பர் 12 அன்று சந்து பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய அரசாங்கம் அமைக்கும் வரை அவர் அந்த அலுவலகத்தின் பராமரிப்பாளராக இருந்தார். இருப்பினும், உருசிய சார்பு இகோர் டோடனுக்கு எதிராக ஒரு மகத்தான தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மீண்டும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய சார்பாளராக 24 டிசம்பர் 2020 அன்று சந்து மாநில அரசுத் தலைவராகப் பதவியேற்றார், சந்துவின் தலைமையின் கீழ், மால்டோவா மீண்டும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பை நோக்கி முன்னேறும் நிலையில் உள்ளது.
2020இல் குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரம்
சந்து 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கான தான் போட்டியிடப் போவதை சூலை 18 அன்று அறிவித்தார், இரண்டாவது சுற்றில் ஐரோப்பிய சார்பு வேட்பாளர்கள் இல்லாத ஆபத்து இல்லாததால் ஒரு கூட்டு ஐரோப்பிய சார்பு வேட்பாளர் தேவையில்லை என்று அறிவித்தார். சந்து அக்டோபர் 2,2020 அன்று தனது பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார், ருமேனிய மற்றும் ரஷ்ய மொழிகளில் இரண்டு உரைகளை நடத்தினார், ஊழல் மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடுவதாகவும், குற்றவியல் நீதி அமைப்பை சீர்திருத்துவதாகவும் உறுதியளித்தார், அதே நேரத்தில் அரசுத் தலைவர் டோடான் வேண்டுமென்றே பிந்தையவருக்கு இடையூறு விளைவித்ததாக குற்றமும் சாட்டினார். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாததால், சந்து மற்றும் டோடான் இடையேயான மற்றொரு போட்டி நவம்பர் 15 அன்று நடைபெற்றது, இதில் சந்து மக்கள் வாக்குகளில் 57.75% உடன் வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தலைவர்களும், உக்ரைனின் அதிபர்கள் வோவலோதிமிர் செலேன்சுக்கி, கஜகஸ்தான் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், அஜர்பைஜானின் இல்ஹாம் அலியேவ், மற்றும் ருமேனியா கிளாஸ் இயோஹானிஸ் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது செய்தியாளர் கூட்டத்தில், மல்தோவா தனது தலைமையின் கீழ் "வெளியுறவுக் கொள்கையில் உண்மையான சமநிலையைப் பாதுகாக்கும், மல்தோவாவின் தேசிய நலன்களால் வழிநடத்தப்பட்டு, ருமேனியா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள், உருசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் ஒரு நடைமுறை உரையாடலைக் கொண்டிருப்போம்" என்று அறிவித்தார்.
அரசுத் தலைவராக (2020–தற்போது வரை)
சந்து 2020 டிசம்பர் 24 அன்று குடியரசின் அரண்மனையில் பதவியேற்றார். விழாவின் போது, அவர் தனது கருத்துக்களின் முடிவில் உருசிய, உக்ரேனிய, ககாஸ் மற்றும் பல்கேரிய மொழிகளில் பேசி தேசிய ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அரண்மனைக்கு வெளியே "மையா சந்து மற்றும் மக்கள்!" மற்றும் "மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்!" போன்ற முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். இந்த விழாவுக்குப் பிறகு, அவர் ஜமாளிகையில் டோடானை சந்தித்தார், ஒரு விழாவில் டோடான் அதிகாரப்பூர்வமாக அவருக்கு அதிகாரத்தை மாற்றினார். அன்று, அவர் இடைக்கால பிரதமர் அயோன் சிக்குவை சந்தித்தார்.
சந்து 2024 மல்தோவாவின் அரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார், அங்கு அவர் முதல் சுற்றில் 42% வாக்குகளைப் பெற்றார். அவர் நவம்பர் 3 அன்று முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெனரல் அலெக்ஸாண்டர் ஸ்டோயனோக்லோ ஒரு தேர்தலில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1972 பிறப்புகள் |
682391 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D | வண்டித்தாவளம் | வண்டித்தாவளம் (Vandithavalam) என்பது இந்தியாவின், கேரளாத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இது பெருமாட்டி கீராம ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றாகும்.
வண்டித்தாவளம் முந்தைய கொச்சின் இராச்சியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். ஆனால் கேரள மாநில உருவாக்கப்பட்டப் பிறகு பாலக்காடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.
வண்டித்தாவளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வண்டித்தாவளம் ஊரானது பாரதபுழா ஆற்றினால் வளம் பெற்ற வேளாண் நிலங்களைக் கொண்டுள்ளது.
வண்டித்தாவலம் பாலக்காட்டுக் கணவாயில் அமைந்துள்ளது. இதனால் வரலாற்று ரீதியாக அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் நாடுகளிலிருந்து போக்குவரத்து தொடர்பில் உள்ளது. வண்டித்தாவளம் பயணிகள் ஓய்வெடுக்கும் இடமாக விளங்கியது, இதனால் இது வண்டித்தாவளம் என்ற பெயர் பெற்றது. இது வண்டி + தாவளம் ஆகிய சொற்களின் சேர்க்கையாகும் தாவளம் என்பது மலையாளத்திலும், தமிழிலும் தங்குமிடம் என்பது பொருளாகும்.
வண்டித்தாவளம் பாலக்காட்டிலிருந்து 17 கி. மீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 30 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வண்டித்தாவளத்தின் மக்கள் தொகை 12,160 ஆகும். அதில் ஆண்கள் 6,006 பேரும், பெண்கள் 6,154 பேரும் உள்ளனர்.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் |
682393 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF | மியான் மெகர் அலி | மியான் மெகர் அலி (Mian Mehar Ali) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். சம்மு காசிமீரில் கங்கானை இருப்பிடமாகக் கொண்ட மியான் மெகர் அலி இந்திரா காந்தி திறந்தநிலை தேசியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் கங்கன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேலும் காண்க
2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தல்
சம்மு காசுமீர் சட்டப்பேரவை
மேற்கோள்கள்
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029
வாழும் நபர்கள் |
682394 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சம்ப் சட்டமன்றத் தொகுதி | சாம்ப் சட்டமன்றத் தொகுதி (Chhamb Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சம்ப், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
ஜம்மு மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682396 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 | அகளி மலை | அகளி மலை (அட்டப்பாடி மலை) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பழங்குடி ஊரும், மலை வாழிடமும் ஆகும். இது மல்லேஸ்வரன் முகட்டின் அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் எல்லையில் அட்டப்பாடி வனச் சரகத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
682398 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF | மல்லேஸ்வரன் முடி | மல்லேஸ்வரன் முடி (മല്ലേശ്വരന് മുടി) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பழங்குடி வட்டத்தில், அட்டப்பாடி வனச்சரகத்தில் உள்ள ஒரு உயர்ந்த மலை முகடாகும். இந்த முகடு 1,664 மீட்டர் உயரம் கொண்டது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில், அகளி மலைகளில் அமைந்துள்ளது.
மல்லேஸ்வரன் கோயிலில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த சிகரத்தை பழங்குடியினர் மிகுந்த பக்தியுடன் பெரிய சிவ லிங்கமாக கருதி வழிபடுகின்றனர்.
மேற்கோள்கள்
கேரள மலைகள்
பாலக்காடு மாவட்டம் |
682399 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D | நிசாம் உதின் பட் | நிசாம் உதின் பட் (Nizam Uddin Bhat) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சம்மு காசுமீர் சட்டப் பேரவைக்கு அக்டோபர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பந்திபோரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.
மேலும் காண்க
2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தல்
சம்மு காசுமீர் சட்டப்பேரவை
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029 |
682400 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF | சொளகத் உசேன் காநி | சொளகத் உசேன் காநி (Showkat Hussain Ganie) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர் ஆவார். காநி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் அக்டோபர் 2024-ல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜைனாபோரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் காண்க
2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தல்
சம்மு காசுமீர் சட்டப்பேரவை
மேற்கோள்கள்
சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029
வாழும் நபர்கள் |
682401 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | அகளி, பாலக்காடு | அகளி (Agali, Palakkad) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும் இது அகளி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர்.
அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
அகளி ஊருக்கு அருகில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா உள்ளதால் இங்கிருந்து பூங்காவுக்கு விரைவில் செல்லமுடியும். அதற்கு வசதியாக அகளி ஊரில் மூன்று தங்கும் விடுதிகளும், பல குடில்களும் உள்ளன. ஏனெனில் இந்த ஊர் பூங்காவிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால், அமைதிப் பள்ளத்தாக்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது.
மக்கள்வகைப்பாடு
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அகளி கிராமத்தின் மக்கள் தொகை 22,327 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 11,239 என்றும், பெண்களின் எண்ணிக்கை 11,088 என்றும் உள்ளது. இப்பகுதி 76 கி. மீ.2 பரப்பளவில் பரவியுள்ளது. ஈரில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,346 ஆகும், அதில் 1,195 பேர் ஆண் பிள்ளைகளாகவும், 1,151 பேர் பெண் பிள்ளைகளாகவும் உள்ளனர். அகளி கிராமத்தின் எழுத்தறிவு 79.9% ஆகும். இது கேரளத்தின் சராசரி எழுத்தறிவான 94% ஐ விட குறைவாகும். ஊரில் எழுத்தறிவு பெற்றவர்களில் ஆண் 84.2% என்றும், பெண்கள் 75.5% என்றும் உள்ளனர்.
அகளி கிராம ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 34,941 ஆகும். ஊராட்சியின் பரப்பளவு 153 கி. மீ.2 உள்ளது. ஊராட்சியின் மக்கள் தொகையில் ஆண்கள் 17,393 பேரும், பெண்கள் 17,548 பேரும் உள்ளனர். ஊராட்சி எல்லையில் 8,695 குடும்பங்கள் வாழ்கின்றன. அகளி ஊராட்சியில் அகளி, கல்லாமலை என இரண்டு வருவாய் கிராமங்களுக்கு மேல் உள்ளன. ஊராட்சியில் 0-6 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 3,786 ஆகும். அகளி கிராம ஊராட்சியின் மொத்த கல்வியறிவு 82.7% ஆகும்.
போக்குவரத்து
கேரளத்தின் மண்ணார்க்காட்டில் இருந்து அகளி 38 கி. மீ. தொலைவில் உள்ளது. தமிழக எல்லையில் உள்ள ஆனக்கட்டி என்ற சிறிய நகரம் அகளியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனைக்கட்டியிலிருந்து பேருந்துகள் ஆனைக்கட்டி-மன்னார்காடு சாலை வழியாக அகலிக்கு வரும் தொலைவு 18 கி.மீ ஆகும்.
அட்டப்பாடியில் அனைத்து நிறுத்தங்களிலும் போக்குவரத்துக்கான QR குறியீடுகள் உள்ளன. இந்த திட்டத்தை மக்கள் ராஜா புரொடக்சன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது..
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
682403 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%28I%29%20%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | தாமிரம்(I) அசைடு | தாமிரம்(I) அசைடு (Copper(I) azide) என்பது CuN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரம் நேர்மின் அயனியும் ()அசைடு எதிர்மின் அயனியும் () சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
பண்புகள்
குறைந்த சுற்றுச்சூழல் செலவைக் கொண்ட முறைகளைப் பயன்படுத்தி அதிக ஆற்றல் கொண்ட பொருட்களைத் தயாரிப்பதில் தாமிரம்(I) அசைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்புகள் நைட்ரசன் அதிகமுள்ள மற்றும் ஆக்சிசன் இல்லாத அமைப்புகளைப் பயன்படுத்தி முடிக்கப்பட்டன. பெரும்பாலான அசைடுகளைப் போலவே தாமிரம்(I) அசைடும் வெடிக்கும் தன்மை கொண்டது.
தாமிரம்(I) அசைடு, தாமிரம்(I) வினையூக்கியாக செயல்படும் அசைடு-ஆல்க்கைன் வளையக்கூட்டு வினைகளில் வினையூக்கம் செய்யப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
செப்பு சேர்மங்கள்
அசைடுகள்
கனிம வேதியியல் சேர்மங்கள் |
682406 | https://ta.wikipedia.org/wiki/%28%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%29%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | (தெர்பிரிடின்)ருத்தேனியம் முக்குளோரைடு | (தெர்பிரிடின்)ருத்தேனியம் முக்குளோரைடு ((Terpyridine)ruthenium trichloride) என்பது C15H11Cl3N3Ru என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். RuCl3(தெர்பி) என்று சுருக்கமாகவும் இவ்வாய்ப்பாட்டை எழுதலாம். வாய்ப்பாட்டிலுள்ள தெர்பி என்பது தெர்பிரிடினைக் குறிக்கிறது. பழுப்பு நிறத்துடன் பாரா காந்தப்பண்பு கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது. ருத்தேனியத்தின் மற்ற அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு இச்சேர்மம் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. முக்கியமாக குளோரைடு ஈந்தணைவிகளை மாற்றுவதன் மூலம் பிற அணைவுகளைத் தயாரிக்கமுடியும். (தெர்பிரிடின்)ருத்தேனியம் முக்குளோரைடு எண்முக வடிவவியலைக் கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைவுச் சேர்மம் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது. எத்தனாலில் கரைக்கப்பட்ட ருத்தேனியம் முக்குளோரைடுடன் தெர்பிரிடைனைக் கலந்து, மீள் நிலைமைகளுக்கு சூடாக்குவதன் மூலம் இது தயாரிக்கப்பட்டது. பிற்கால செயற்கை தயாரிப்பு முறையில் தெர்பிரிடினின் இருமெத்தில்பார்மமைடு கரைசலுடன் ருத்தேனியம் முக்குளோரைடைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் இதேபோன்ற அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.
மேற்கோள்கள்
குளோரோ ஒருங்கிணைவுச் சேர்மங்கள்
பிரிடின் ஒருங்கிணைவுச் சேர்மங்கள்
ருத்தேனியம்(III) சேர்மங்கள் |
682411 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88 | மேல் மூழியாறு அணை | மேல் மூழியாறு அணை (Upper Moozhiyar Dam) என்பது இந்தியாவின் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சீதத்தோடு கிராமத்தில் மூழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு மண் அணை ஆகும். இந்த அணை சபரிகிரி விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. இந்த ஆறு கக்கி நீர்த்தேக்கத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு கட்டுக்கரை அணையாகும். சபரிகிரி நீர்மின் திட்டம் (340 மெகாவாட்) கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பம்பை ஆற்றின் துணை ஆறான மூழியாறு ஆற்றின் மேல் பகுதிகளை ஒரு சுரங்கப்பாதை வழியாகக் கக்கி-அனதோடு நீர்த்தேக்கத்திற்கு நீரைத் திருப்பி விடுவதற்காக இந்த அணை கட்டப்பட்டது. சேமிப்பகத்தின் உபரியான நீர் பாறை மேல் வெட்டப்பட்ட கசிவுப்பாதையின் வழியே செல்கிறது. இது மூழியாறு ஆற்றுக்குச் செல்கிறது. இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை மற்றும் கார்த்திகப்பள்ளி ஆகிய வட்டங்கள் வழியாக நீர் பாய்கிறது. இதன் அருகிலுள்ள நகரம் வண்டிப் பெரியாறு ஆகும் .
விவரக்குறிப்புகள்
அட்சரேகை: 9°17′′00′′வ
தீர்க்கரேகை: 77°08′00′′கி
ஊராட்சி: சீதத்தோடு
கிராமம்: சீதத்தோடு
மாவட்டம்: பத்தனம்திட்டா
ஆற்றுப் படுகை: பம்பை
ஆறு: மூழியாறு
அணையிலிருந்து நீர் செல்லுமிடம்: மூழியாறு
அணை அம்சங்கள்
அணையின் வகை: மண்
வகைப்பாடு: நடுத்தர உயரம்
அதிகபட்ச நீர்மட்டம்: EL 985.00 மீ
முழு நிலை: EL 983.00 மீ
அதிகபட்ச நீர் சேமிப்பு: 0.035 மிமீ 3
ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்:
நீளம்:
நீர்க்கசிவு பாதை: தட்டையானது, கட்டற்றது
நிறைவு ஆண்டு: 1979
முகடு[ நம்பமுடியாத ஆதாரம்? ] நிலை: 983.00 மீ
திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம்
திட்டத்தின் நோக்கம்: நீர் மின்சாரம்
திட்டத்தின் நிறுவப்பட்ட திறன்: 340 மெகாவாட்
மேற்கோள்கள்
கேரள அணைகள் |
682412 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | மும்பை அடல் பாலம் | அடல் சேது அல்லது மும்பை துறைமுக இணைப்புப் பாலம் (Mumbai Trans Harbour Link) இதனை அதிகாரப்பூர்வமாக அடல் பிகாரி வாச்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் சேது என அழைப்பர். முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இந்த கடல் பாலத்திற்கு அடல் சேது எனப்பெயரிடப்பட்டுள்ளது. 21.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கடல் பாலம் மும்பை மற்றும் நவி மும்பையை 20 நிமிடங்களில் இணைக்கிறது. அடல் பாலம் ஆறு வரிசைகளில் வண்டி செல்ல முடியும். ஒவ்வொரு திசைக்கும் 3 வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மீது நிறுவப்பட்ட கடல் பாலமான அடல் சேது விரைவுப் பாலத்தை 24 ஏப்ரல்2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.இது உலகின் 12வது நீளமான கடல் பாலம் ஆகும்.
இப்பாலம் தெற்கு மும்பையில் உள்ள சேவ்ரி பகுதியில் தொடங்கி, எலிபெண்டா தீவுக்கு வடக்கே தானே கடற்கழியைக் கடந்து நவி மும்பையின் ஊரண் தாலுகாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் அருகே சிர்லே பகுதியில் முடிகிறது. அடல் பாலம், கிழக்கில் மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையையும், மேற்கில் மும்பை கடற்கரை சாலையையும் இணைக்கிறது. அவசரகால வழிகளுடன், 6 வரிசைகள் கொண்ட இக்கடல் பாலம் 27 மீட்டர் அகலம் கொண்டது.
இதன் மொத்த திட்டச் செலவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் வழியாக ஒரு நாளைக்கு 70,000 வாகனங்கள் செல்கிறது. ஏப்ரல் 2018ல் இப்பாலத்தின் பணி துவக்கப்பட்டது.
இதனையும் காண்க
மும்பை பெருநகரப் பகுதி
மேற்கோள்கள்
மும்பை |
682422 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 | கேஎல்ஐஏ போக்குவரத்து | {
"type": "ExternalData",
"service": "geoline",
"ids": "Q6151888",
"properties": {
"stroke": "#139593",
"stroke-width": 6
}
}
கேஎல்ஐஏ போக்குவரத்து அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய கேஎல்ஐஏ போக்குவரத்து (ஆங்கிலம்; மலாய்: KLIA Transit; சீனம்: 吉隆坡机场支线) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் சேவை செய்யும் கொமுட்டர் தொடருந்துச் சேவை ஆகும்.
இது கோலாலம்பூரின் முக்கியத் தொடருந்து நிலையமான கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கேஎல்ஐஏ T1 (KLIA T1) மற்றும் கேஎல்ஐஏ T2 (KLIA T2) நிலையங்களுக்குச் சேவை செய்கிறது.
இந்த கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவை, கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துச் சேவையின் அதே வழித்தடங்களையும் பகிர்ந்து கொள்கின்றது. இந்த வழித்தடம் விரைவுத் தொடருந்து இணைப்பு (Express Rail Link Sdn. Bhd) (ERL) மூலம் இயக்கப்படுகிறது.
பொது
இந்த கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவை (KLIA Transit) அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நின்று செல்லும் சேவையை வழங்குகிறது. அதே வேளையில், இதன் நட்புச் சேவையான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres) சேவை; கோலாலம்பூர் சென்ட்ரல் மற்றும் கேஎல்ஐஏ T1; கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு மட்டும் நேரடிச் சேவையில் ஈடுபடுகிறது.
இந்த வழித்தடம், கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் (Klang Valley Integrated Transit System) ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு என குறியீடும் நீல பச்சை நிறத்தில் உள்ளது.
24 ஆகஸ்டு 2010 அன்று, கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இரு கேஎல்ஐஏ தொடருந்துகள் மோதிக் கொண்டன. அதுவே கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவையின் முதல் விபத்து ஆகும். அந்த விபத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்.
கேஎல்ஐஏ
கேஎல்ஐஏ (KLIA) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport) சுருக்கமாகும். கேஎல்ஐஏ, மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். மேலும் தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கேஎல்ஐஏ (KLIA) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த வானூர்தி நிலையம் அறியப் படுகின்றது. இந்த வானூர்தி நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.
அதிவிரைவு தொடருந்துச் சேவை
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அதிவிரைவு தொடருந்துச் சேவையின் வழி, இந்தப் பன்னாட்டு நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பன்னாட்டு நிலையம் 27 சூன், 1998-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப் படுகின்றன.
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
கேஎல்ஐஏ போக்குவரத்து
கோலாலம்பூர் மோனோரெயில்
காஜாங் வழித்தடம்
கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
சா ஆலாம் வழித்தடம்
புத்ராஜெயா வழித்தடம்
எம்ஆர்டி சுற்று வழித்தடம்
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
வழித்தடம்
கேஎல்ஐஏ போக்குவரத்து தொடருந்து நிலையங்கள்
கேஎல்ஐஏ போக்குவரத்து தொடருந்து (KLIA Transit) வழித்தடத்தில் 6 நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களின் விவரங்கள்:
பயணிகள்
காட்சியகம்
மேலும் காண்க
கோலாலம்பூர் சென்ட்ரல்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
கிளானா ஜெயா வழித்தடம்
பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
அம்பாங் வழித்தடம்
செரி பெட்டாலிங் வழித்தடம்
மேற்சான்றுகள்
வழித்தட வரைபடங்க்ள்
Route search - Interactive transport guide of Kuala Lumpur public transport system
Route Map from malaysiaexpat.com
Route Map from ktmb.com.my
Route Map from prasarana.com.my
Route Map from stesensentral.com
வெளி இணைப்புகள்
KLIA Ekspres – official website
The KLIA Transit at the official KLIA Ekspres website.
மலேசியாவில் போக்குவரத்து
விரைவுத் தொடருந்து இணைப்பு
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
மலேசியாவில் தொடருந்து போக்குவரத்து |
682423 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | திருவிதாங்கூர் இல்லம் | திருவிதாங்கூர் இல்லம் (Travancore House) இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள திருவிதாங்கூர் மகாராசாவின் முன்னாள் இல்லமாகும். திருவிதாங்கூர் அரண்மனை என்றும் இது அழைக்கப்படுகிறது. கத்தூரிபா காந்தி சாலையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.
வரலாறு.
திருவிதாங்கூர் இல்லம் 1930 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிடக்கலை அமைப்பு ஓர் எளிய பட்டாம்பூச்சி பங்களா ஆகும். புது தில்லியில் உள்ள பெரிய இளவரச இல்லங்களுக்கு இவ்வில்லம் அசாதாரணமானது ஆகும்.
இந்த கட்டிடம் புது தில்லி நகராட்சி மன்றத்தால் பாரம்பரிய கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய கட்டிடத்தை கலாச்சார வளாகமாக மாற்றுவதே கேரள அரசின் முயற்சியாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருவிதாங்கூர் மாளிகையில் ஒரு கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது கேரளா இல்லத்தின் ஆதரவின் கீழ் நடத்தப்படுகிறது. அங்கு பல அலுவலகங்கள் உள்ளன.
மேலும் காண்க
கொச்சின் இல்லம்
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
http://www.delhievents.com/2009/11/travancore-palace.html
திருவிதாங்கூர் இல்லத்தின் படம்
திருவிதாங்கூர் நாடு
தில்லியில் உள்ள கட்டிடங்கள் |
682427 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | ரசௌரி சட்டமன்றத் தொகுதி | ரசௌரி சட்டமன்றத் தொகுதி (Rajouri Assembly constituency) இந்தியா சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். ரசௌரி, அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
2014
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் கமர் உசைன் 26,954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சவுத்ரி தாலிப் உசேன் 24,464 வாக்குகளும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் சபீர் அகமது கான் 24,296 வாக்குகளும், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மிர்சா அப்துல் ரசித் 4,888 வாக்குகளும் பெற்றனர்.
2024
2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இப்த்கார் அகமது 28923 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் காண்க
ரசௌரி
மேற்கோள்கள்
ராஜவுரி மாவட்டம்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682428 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | புதல் சட்டமன்றத் தொகுதி | புதல் சட்டமன்றத் தொகுதி (Budhal Assembly constituency) என்பது இந்தியாவின் வடமாநிலமான சம்மு காசுமீரின் சம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும்.புதல், அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவைத் இக்பால் 42043 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682429 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | மெந்தர் சட்டமன்றத் தொகுதி | மெந்தர் சட்டமன்றத் தொகுதி (Mendhar Assembly constituency) என்பது இந்தியா வடமாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். மெந்தர் , அனந்த்நாக்-ரசௌரி தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
2014
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவேத் அகமது ராணா 31,186 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது மரூப் கான் 22,161 வாக்குகளும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் முர்தாசா அகமது கான் 7,255 வாக்குகளும், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சுல்பிகார் உசேன் கான் 1,472 வாக்குகளும் பெற்றனர்.
2024
2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவேத் அகமது ராணா 32176 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
பூஞ்ச் மாவட்டம், இந்தியா
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682430 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | பூஞ்ச் கவேலி சட்டமன்றத் தொகுதி | பூஞ்ச் கவேலி சட்டமன்றத் தொகுதி (Poonch Haveli Assembly constituency) என்பது இந்தியா வடமாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பூஞ்ச் கவேலி,அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
2014
2014 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் சா முகமது தந்த்ரே 19,488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஐசாசு அகமது சான் 15,976 வாக்குகளும் , சுயேச்சை வேட்பாளர் சவுத்ரி அப்துல் கானி 15,110 வாக்குகளும், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் பிரதீப் சர்மா 11,292 வாக்குகளும் பெற்றனர்.
2024
2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அசாசு அகமது சான் 41807 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மேற்கோள்கள்
பூஞ்ச் மாவட்டம், இந்தியா
சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகள் |
682435 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | தமிழ்நாடு இல்லம் | தமிழ்நாடு இல்லம் (Tamil Nadu House) என்பது புது தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் மாளிகை ஆகும். தமிழ்நாடு மாளிகையில் வைகை-தமிழ்நாடு இல்லம், பொதிகை-தமிழ்நாடு இல்லம் என இரண்டு வளாகங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் வணிக மையம், உடற்பயிற்சி மையம், விளையாட்டரங்கம் போன்றவை உள்ளன. வைகை தமிழ்நாடு இல்லத்தில் 49 அறைகளும், பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் 73 அறைகளும் உள்ளன.
முதல் வளாகமான வைகை-தமிழ்நாடு இல்லம் 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது முதலில் 'மெட்ராஸ் ஹவுஸ்'என்று அழைக்கப்பட்டது. இது சாணக்கியபுரியில், கௌடில்ய மார்க்கில் எண்.6 இல் அமைந்துள்ளது. இது சுமார் 1.757 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள கட்டடங்களாக குஜராத் பவன், அருணாச்சல பவன் ஆகியவை உள்ளன.
இரண்டாவது வளாகமான தொதிகை-தமிழ்நாடு இல்லம் சாணக்யபுரி, திகேந்திரஜித் மார்க்கில் எண்.9 இல் உள்ளது. இது 2004, செப்டம்பர், 16 அன்று திறக்கப்பட்டது. இது சுமார் 1.966 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அருகிலுள்ள கட்டடங்களாக உத்தரகாண்ட் சதன், என்.இ. சி ஹவுஸ், திரிபுரா பவன் போன்றவை உள்ளன.
இந்த இல்ல ஆணையர்கள் புது தில்லியில் தமிழ்நாடு அரசை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் தமிழ்நாடு மாளிகையை நிர்வகிக்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழ்நாடு அரசு
தில்லியில் உள்ள மாநில அரசு இல்லங்கள் |
682437 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88 | குள்ளாறு அணை | குள்ளாறு அணை (Kullar Dam) என்பது இந்தியாவின் கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சீதத்தோடு கிராமத்தில் உள்ள குள்ளாறு ஆற்றினை இணைக்கும் ஒரு சிறிய, பக்கவாட்டு அணையாகும். சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டப்பட்டது. அணையிலிருந்து வெளியேறும் நீர் பம்பை ஆற்றுக்குத் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகப்பள்ளி வட்டங்கள் வழியாகப் பாய்கிறது.
இந்த அணை 24 மீட்டர் (79 அடி) உயரமும் 94 மீட்டர் (308 அடி) நீளமும் கொண்ட பைஞ்சுனை ஈர்ப்பு அணையாகும். இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 1990ஆம் ஆண்டில் நிறைவடைந்தன.
விவரக்குறிப்புகள்
ஊராட்சி: சீதத்தோடு
ஆற்றுப் படுகை: பம்பை
அணையிலிருந்து நீர் விடுப்பு: பம்பை
திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம்
வகைப்பாடு: நடுத்தர அணை
அதிகபட்ச நீர் மட்டம்: 1139.2 மீ
முழு நீர்த்தேக்க நிலை: 1136.9 மீ
முழு நீர்த்தேக்க நிலையில் சேமிப்பு: 2.78 Mm3
சிகர மட்டம்: 1136.90 மீ
நீர் வெளியேற்றம்: 1, வட்ட வகை, 60 செ.மீ. விட்டம்
மின் உற்பத்தி
சபரிகிரி நீர்மின் திட்டம் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட 6 விசையாழிகளைப் பயன்படுத்தி 300 மெகாவாட்டை உற்பத்தி செய்கிறது. ஆண்டு உற்பத்தி 1338 மெகா அலகு ஆகும். இந்தத் திட்டம் கேரள மாநிலத்தின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இந்த இயந்திரம் நவம்பர் 26,1967 அன்று இயக்கிவைக்கப்பட்டது. தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதன் மூலம், 2009ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தியானது 300 மெகாவாட்டிலிருந்து 340 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.
வெளி இணைப்புகள்
சபரிகிரி தொலைத் திரைப்படம் திட்டம்
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
கேரள அணைகள் |
682439 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | பிலிடோர் தற்காப்பு | பிலிடோர் தற்காப்பு அல்லது பிலிடோரின் தற்காப்பு என்பது கீழ்வரும் நகர்வுகளுடன் ஆரம்பிக்கும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் ஆகும்.
1. e4 e5
2. Nf3 d6
இந்தத் திறப்பு ஆட்டம் ஆனது 18ஆம் நூற்றாண்டின் சதுரங்க வீரனான பிலிடோரினால் கறுப்பின் இரண்டாவது நகர்வான 2...Nc6 இற்குப் பதிலாக 2. ..... d6 ஐப் பரிந்துரை செய்தார். இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை முக்கிய தடுப்பாட்டமாக இருந்தாலும் இக்காலத்தில் பிரபல்யமான சதுரங்கவீரர்கள் எவரும் பாவிப்பதில்லை. என்றாலும் இது நன்கு பாவிக்கப்படாத திறப்பு ஆட்டம் என்பதால் குறைவாகவே பகுப்பாய்வு செய்யப்பாட்டிருக்கும் என நம்புவதால் சிந்திக்க நேரம் குறைவான விரைவு சதுரங்க ஆட்டத்திலும் பொழுதுபோக்காக சதுரங்கம் விளையாடுபவர்களாலும் இன்றளவும் பாவிக்கப்படுகின்றது.
1 e4 e5
2 Nf3 d6
3 d4 Nf6
4 Nc3 Nbd7
3ஆவது நகர்வு கீழ்வருமாறும் அமையலாம்.இவ்வாறு தொடரும் ஆட்டம் லேகல் பொறி ஆகும்.
3 Bc4 Bg4
மேற்கோள்கள்
சதுரங்கத் திறப்புகள் |
682442 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | டெட்ராபுரோப்பைல் வெள்ளீயம் | டெட்ராபுரோப்பைல் வெள்ளீயம் (Tetrapropyltin) என்பது (CH3CH2CH2)4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிமவெள்ளீயச் சேர்மமான இது ஒரு நச்சுத்தன்மையுடன் கூடிய நிறமற்ற எண்ணெய் திரவமாகும். வலிமையான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் வினைபுரிகிறது. தோல், கண்கள் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவற்றில் எரிச்சலூட்டுகிறது. நீண்ட கால விளைவுகளை நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடன் செயல்படுகிறது. தோல் வழியாக உறிஞ்சப்பட்டும் உடலில் நச்சு விளைவுகளை ஏற்படுத்தும். இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு தயாரிப்பின் போது டெட்ராபுரோப்பைல் வெள்ளீயம் ஓர் இடைநிலையாகும்.
மேற்கோள்கள்
கரிமவெள்ளீய சேர்மங்கள் |
682443 | https://ta.wikipedia.org/wiki/1%2C2%2C4%2C5-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B-3-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D | 1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன் | 1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன் (1,2,4,5-Tetrachloro-3-nitrobenzene) என்பது HC6Cl4NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். தெக்கனாசீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்றொரு மாற்றியம் 1,2,4,5-டெட்ராகுளோரோ-5-நைட்ரோபென்சீன் என்பதாகும்.
அணு காந்த அதிர்வு மூலம் அளவு பகுப்பாய்வுக்கான தரநிலையாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன் ஒரு பூஞ்சைக் கொல்லியாகும். உலர்ந்த அழுகல் மற்றும் சேமிப்பின் போது உருளைக்கிழங்கு முளைப்பதைத் தடுக்கப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
பூஞ்சைக் கொல்லிகள்
கரிமச் சேர்மங்கள் |
682446 | https://ta.wikipedia.org/wiki/4-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D | 4-பீனைல்பீனால் | 4-பீனைல்பீனால் (4-Phenylphenol) என்பது C12H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பைபீனைல்-4-ஆல் மற்றும் 4-ஐதராக்சிபைபீனால் என்ற பெயர்களாலும் இந்த கரிமச் சேர்மம் அறியப்படுகிறது.
தயாரிப்பு
கார்பன் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டு கலந்த கலவையை 10% பலேடியம் முன்னிலையில் 4-ஐயோடோபீனாலுடன் பீனைல்போரோனிக் அமிலத்தைச் சேர்த்து சுசூகி பிணைப்பு வினையை நடைபெறச் செய்து 4-பீனைல்பீனாலைப் பெறலாம்.
பண்புகள்
4-பீனைல்பீனால் தீப்பற்றி எரியக்கூடியதாகும். பற்றவைக்க இது கடினமானது, வெண்மை, செதில் போன்ற கெட்டியான திண்மமாக உள்ளது. பீனால் போன்ற வாசனையுடன், நீரில் சிறிது கரையும்.
மேற்கோள்கள்
பைபீனைல்கள்
கரிமச் சேர்மங்கள்
4-ஐதராக்சிபீனைல் சேர்மங்கள் |
682448 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D | அர்ச்சனா பட்நாயக் | அர்ச்சனா பட்நாயக் என்பவர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண்மணி ஆவார். 2026ஆம் வருடம் நடக்கவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பு அவருக்குக் கிடைக்க இருக்கிறது.
இவர் ஒடிசாவைச் சேர்ந்தவர். 2002ஆம் ஆண்டின் இந்திய ஆட்சிப் பணி தொகுதியில் இடம் பெற்று பயிற்சியை முடித்தவர்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள் |
682451 | https://ta.wikipedia.org/wiki/4-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D | 4-பீனைல்மெத்தேன் டையால் | 4-பீனைல்மெத்தேன் டையால் (Phenylmethanediol) என்பது C7H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிமச் சேர்மமான இது பென்சால்டிகைடின் நீரேற்றாகவும் ஓரிடத்த டையாலாவும் அறியப்படுகிறது. ஓரிடத்த என்பதன் பொருள் ஐதராக்சில் வேதி வினைக்குழுக்கள் ஒரே கார்பன் அணுவுடன் பிணைந்திருப்பதைக் குறிக்கிறது. தொலுயீன், பென்சால்டிகைடு மற்றும் பென்சாயிக்கு அமிலத்தின் குறைப்பு போன்ற சில இரசாயன வினைகளில் இது ஒரு குறுகிய கால இடைநிலை ஆகும்.
மேற்கோள்கள்
பென்சைல் சேர்மங்கள்
கரிமச் சேர்மங்கள் |
682455 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | தயோகார்பனிலைடு | தயோகார்பனிலைடு (Thiocarbanilide) என்பது C6H5NH)2CS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிம வேதியியல் சேர்மமான இது தயோயூரியாவின் வழிப்பெறுதியாக வெண்மை நிறத்துடன் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. அனிலினுடன் கார்பன் டை சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயோகார்பனிலைடு தயாரிக்கப்படுகிறது.
பயன்கள்
தயோகார்பனிலைடு பொதுவாக இரப்பர் கந்தகமூட்டலுக்கான முடுக்கியாகவும், பாலி வினைல் குளோரைடு மற்றும் பாலிவினைலிடின்குளோரைடுகளின் நிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கந்தகமூட்டல் முடுக்கியாக இதன் பயன்பாடு பிஎப் குட்ரிச்சு நிறுவன வேதியியலாளர் சியார்ச்சு ஓன்சுலேகர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
நச்சு
தயோகார்பனிலைடு சேர்மத்தின் எலிகளுக்கான உயிர்க்கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 50 மில்லி கிராம் ஆகும்.
மேற்கோள்கள்
தயோயூரியாக்கள்
கரிமச் சேர்மங்கள் |
682457 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D | மொய்ராங் சாய் | மொய்ராங் சாய் (Moirang Sai) என்பது கம்பா தோய்பியின் கதையை விவரிக்கும் ஒரு பாரம்பரிய மணிப்புரி இசை நிகழ்த்து கலை வடிவமாகும். நிகழ்ச்சி 120 மணி நேரத்திற்கும் அதிகமாக நடத்தபடுகிறது.
1950கள் மற்றும் 1980களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், மொய்ராங் சாய் சமூகக் கூட்டங்கள் மற்றும் திருமணங்களில் பொழுதுபோக்குக்காக பிரபலமாக நிகழ்த்தப்பட்டது. பாரம்பரிய மணிப்புரி பாடகர் இமா லங்காதேல் தோய்னு கலை வடிவத்தின் நவீன கால முன்னோடியாகவும் கருதப்படுகிறார். அவர் கலை வடிவத்தை ஒரு நாடகப் பெண்ணின் இசை நிகழ்ச்சியாக உருவாக்கினார். தூய மெய்டேய் ஜகோய் நடனம் மற்றும் பாடும் வகைகளைக் கொண்டிருந்தார். 1960 களில் இருந்து 1990 களில் வரை ஒரு கலைஞராக அவர் புகழ் பெற்றார்.
Articles containing Meitei-language text
ஆபத்து
1990கள் மற்றும் 2000களில், மேற்கத்திய ராக் இசையின் அதிகரித்துவரும் புகழ் மற்றும் பார்வையாளர்களிடையே பிரதான இந்தி மற்றும் பெங்காலி இசையின் காரணமாக மொய்ராங் சாய் உண்மையிலேயே ஆபத்தில் இருந்தது. மேலும், மக்கள் தங்கள் ஆர்வத்தை பாரம்பரிய கலை வடிவங்களிலிருந்து நேரடி நாட்டுப்புற நாடகத்தின் நவீன கலைகளுக்கு மாற்றத் தொடங்கினர். 2000களின் பிற்பகுதியில், 2 அல்லது 3 கலைஞர்கள் மட்டுமே அப்போது கலையை தீவிரமாக நிகழ்த்திக் கொண்டிருந்தனர். பின்னர், கலை வடிவத்தின் மறுமலர்ச்சி குறித்து பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்து போனது.
புத்துயிர்
2010 களில், இமா தொய்னு என்ற பாடகர் ஒரு சில மாணவர்களை அழிந்துவரும் இக்கலை வடிவத்தைக் கற்றுக்கொள்ளச் செய்தார். அதிர்ஷ்டவசமாக, கலைஞர்களின் ஒரு சிறிய குழு கிட்டத்தட்ட அழிந்துபோன மொய்ராங் சாய் கலை வடிவத்தை மொத்த அழிவிலிருந்து காப்பாற்ற மீண்டும் கற்றுக்கொள்கிறது. சமீபத்தில், பாரம்பரிய மணிப்புரி நாட்டுப்புற பாடகரும் "இலாய்கு" கலைஞருமான மங்கா மயங்க்லம்பம் என்பவரின் கடின உழைப்பின் காரணமாக மொய்ராங் சாய் சிறப்பாக புத்துயிர் பெற்று வருகிறாது. மங்கா கிட்டத்தட்ட அழிந்துபோன கலை வடிவத்தை தற்போதைய இளைஞர்களிடையே மீண்டும் பிரபலப்படுத்துகிறார்.
அக்டோபர் 4,2020 அன்று, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், நொங்போக் இங்கூபா கலாச்சார அகாதமி, எய்ரிபோக் டாப் சிங்தா ஒயினம்தோங் லெய்ராக், யெயிரிபோக் டாப் லாய் சமூக மண்டபத்தில் 'மொய்ராங்க சாய்' பாரம்பரிய கலையைப் பாதுகாக்கவும் பிரபலப்படுத்தவும் 'மொய்ராங் சாய்' குறித்த ஒரு பட்டறை மற்றும் தயாரிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/stories-in-a-song-mangka-mayanglambam-5013301/ |
682461 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88 | கடல்சார் பட்டு பாதை | கடல்சார் பட்டுப் பாதை (Maritime Silk Road) என்பது தென்கிழக்காசியா, கிழக்காசியா, கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், அறபுத் தீபகற்பம், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதையின் கடல்சார் பகுதியாகும். இது கி.மு 2ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. கடல்சார் பட்டுப் பாதை முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆசுத்திரோனீசிய மாலுமிகளால் நிறுவப்பட்டு இயக்கப்பட்டது. அவர்கள் நீண்ட தூர கடலில் செல்லும் அடுக்கு-இழுவை வர்த்தகக் கப்பல்களில் பயணம் செய்தனர். அரபிக்கடல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பாரசீக மற்றும் அராபிய வர்த்தகர்களின் தோவ்களாலும் மற்றும் தெற்காசியாவிலுள்ள தமிழ் வணிகர்களாலும் இந்த பாதை பயன்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் சீனா தங்கள் சொந்த வர்த்தகக் கப்பல்களைக் கட்டத் தொடங்கியது. பிற்காலத்தில், கிபி 10 முதல் 15 ஆம் நூற்றாண்டுகள் வரை இப்பாதைகளைப் பின்பற்றியது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பழைய ஆசுத்திரோனீசிய ஜேட் கடல்சார் வர்த்தகத் தொடர்புகள், அத்துடன் தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியா இடையிலான கடல்சார் மசாலா வர்த்தகத் தொடர்புகளின் அடிச்சுவடுகளையும், அரேபிய கடலில் உள்ள மேற்கு ஆசிய கடல்சார் வர்த்தகத் தொடர்புகளையும் பின்பற்றியது.
கடல்சார் பட்டுப்பாதை என்ற சொல் ஒரு நவீன பெயர். இது நிலப்பரப்பு பட்டுப் பாதையுடன் ஒத்திருகிறது. இந்தோ-மேற்கு பசிபிக் (தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல்) வழியாக செல்லும் பண்டைய கடல்சார் பாதைகள் அதன் மிக நீண்ட வரலாற்றின் பெரும்பகுதிக்கு குறிப்பிட்ட பெயரைக் கொண்டிருக்கவில்லை. நவீன பெயர் இருந்தபோதிலும், கடல்சார் பட்டுப்பாதை பட்டு அல்லது ஆசிய ஏற்றுமதிகள் மட்டுமல்ல, மிகவும் பரந்த பிராந்தியத்தில் பல்வேறு வகையான பொருட்களின் பரிமாற்றங்களை உள்ளடக்கி இருந்தது.
மே 2017 இல், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இலண்டனில் ஒரு கூட்டத்தை நடத்தி, "கடல்சார் பட்டுப் பாதையை" ஒரு புதிய யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைப்பதற்கான முன்மொழிவு குறித்து விவாதித்தனர்.
அரசியல்மயமாக்கல்
பண்டைய கடல்சார் பட்டுச் சாலை குறித்த கல்வி ஆராய்ச்சி நவீன நாடுகளால் அரசியல் காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டு புராணமாக மாற்றப்பட்டுள்ளது. சீனா, குறிப்பாக, 2015 இல் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்தபோது சீ சின்பிங்கால் முன்மொழியப்பட்ட அதன் பட்டை ஒன்று பாதை ஒன்று முன்முயற்சிக்காக கடல்சார் பட்டுப் பாதையின் புராணப் படத்தைப் பயன்படுத்துகிறது. தென்கிழக்கு ஆசியாவின் துறைமுக நகரங்களுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையிலான பழைய வர்த்தக பாதைகளை மீண்டும் இணைக்க சீனா முயற்சிக்கிறது. மேலும் சீன மாலுமிகள் இந்த பாதையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக தவறாக கருதுகிறது.
2014 இல் தொடங்கப்பட்ட மௌசம் திட்டத்துடன் கடல்சார் பட்டுப் பாதையையும் இந்தியா புராணமாக்கியுள்ளது, இது இந்தியப் பெருங்கடலில் உள்ள சுற்றியுள்ள நாடுகளுடன் பழைய வர்த்தக தொடர்புகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறது. இந்தியாவும் கடல்சார் பட்டுப்பாதையில் ஒரு முக்கிய பங்கை வகிப்பதாக சித்தரிக்கிறது. மேலும் அதன் வர்த்தக தொடர்புகளையும் கலாச்சார பரவலையும் அகண்ட இந்தியா என்ற பாவையின் கீழ் "இந்திய காலனித்துவம்" என்று சித்தரிக்கிறது.
மேற்கோள்கள்
வணிகப் பாதைகள்
பட்டுப் பாதை
சீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் |
682462 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88 | ஆனக்கரை | ஆனக்கரை (Anakkara) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின், பட்டாம்பி வட்டத்தில் உள்ள ஒரு கிராமமும், கிராம ஊராட்சியும் ஆகும். இது பாரதப்புழா ஆற்றின் (நிலா, பொன்னானி ஆறு, அல்லது குட்டிப்புரம் ஆறு) தெற்குக் கரையில் அமைந்துள்ளது. குட்டிப்புரம் நகருக்கு தெற்கே சுமார் 8 கி.மீ தொலைவில் ஆனக்கரை அமைந்துள்ளது. இது 16 ஜூன் 1969 வரை பொன்னணி வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனக்கரையின் எல்லை கிராம ஊராட்சிகளாக திருப்பூர் வட்டத்தின், குட்டிப்புரம் மற்றும் இரிம்பிளியம், பொன்னணி வட்டத்தின், தவனூர், காலடி, வட்டம்குளம், பட்டாம்பி வட்டத்தின், பருத்தூர் மற்றும் பட்டிதாரா ஆகியவை உள்ளன.
மக்கள்வகைப்பாடு
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆனக்கரையின் மொத்த மக்கள் தொகை 22,601 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 10,701 என்றும், பெண்களின் எண்ணிக்கை 11,900 என்றும் உள்ளது.
புறநகர்ப் பகுதிகளும் கிராமங்களும்
மேலழியம்
கும்பிடி (ம) உம்மத்தூர்
பன்னியூர் (ம) நய்யூர்
பெரும்பலம்
முந்திரக்கோடு (ம) டயட் சாலை
மன்னியம் பெரம்பலம்
கூடலூர் (ம) மலமல்காவு
முக்கியமான அடையாளங்கள்
பன்னியூர் வராகமூர்த்தி கோயில்
ஆனக்கரை சிவன் கோயில்
கோடலில் வாமனமூர்த்தி கோயில் (ம) பகவதி கோயில் - பெரும்பலம்
டி.ஐ.ஈ.டி ஆய்வகப் பள்ளி (1992 இல் சுவாமி நாதா வித்யாலயாவின் ஊக்குவிப்பதன் மூலம்) https://www.dietpalakkad.org
ஜி. எச். எஸ் பள்ளி, ஆனக்கரை
ஏ.டபிள்யூ.எச் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆனக்கரை
ஜி.டி.ஜே.பி பள்ளி கும்பிடி
ஆனக்கரை வடக்கத் தரவாடு (கேப்டன் லட்சுமியின் வீடு)
கோவிந்தகிருஷ்ண ஸ்மரக வாயனசாலா
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
682465 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20T1%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | கேஎல்ஐஏ T1 நிலையம் | கேஎல்ஐஏ T1 நிலையம் அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய விரைவுத் தொடருந்து இணைப்பு நிலையம் 1 (ஆங்கிலம்: KLIA T1 ERL Station (KLIA); மலாய்: Stesen ERL KLIA; Stesen ERL Kuala Lumpur International Airport) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (இஆர்எல்) (Express Rail Link) (ERL) நிலையமாகும்.
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையக் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கேஎல்ஐஏ T1 நிலையத்திற்கு, விரைவுத் தொடருந்து இணைப்பின் இரண்டு வழித்தடங்களான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres); மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து (KLIA Transit) எனும் வழித்தடங்களின் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.
பொது
1998-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஒரு முதன்மை வானூர்தி முனையம் (Terminal) உள்ளது. அந்த வானூர்தி முனையத்தில் ஒரு தொடருந்து நிலையமும் உள்ளது. அதற்குப் பெயர்தான் 'கேஎல்ஐஏ T1 நிலையம்'.
சிப்பாங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் தொடருந்து நிலையம் முன்பு கேஎல்ஐஏ நிலையம் என்று அழைக்கப்பட்டது. தற்போது 'கேஎல்ஐஏ T1 நிலையம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த வானூர்தி தொடருந்து நிலையம்தான் முதன்முதலில் கட்டப்பட்டது. தற்போது இந்த வானூர்தி முனையத்திற்கு வழங்கப்படும் சேவைக்கு இஆர்எல் சேவை (Express Rail Link) (ERL) எனப் பெயர் வழங்கப்பட்டு உள்ளது.
கேஎல்ஐஏ 1 நிலையம்
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் கட்டும் போதே முதல் இஆர்எல் சேவை தொடருந்து நிலையத்தையும் கட்டிவிட்டார்கள். அதன் அப்போதைய பெயர் கேஎல்ஐஏ 1 நிலையம். தற்போது கேஎல்ஐஏ T1 நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2014 மே 2-ஆம் தேதி மலிவுவிலை வானூர்திச் சேவைகளுக்காக (Low Cost Carrier Terminal) (LCCT) ரிங்கிட் 4 பில்லியன் செலவில், அசல் வானூர்தி நிலையத்திற்கு 2 கிமீ அப்பால் இரண்டாவது வானூர்தி முனையம் கட்டப்பட்டது. அந்த முனையத்திற்காக மற்றும் ஒரு புதிய தொடருந்து நிலையமும் கட்டப்பட்டது. அந்த நிலையத்தின் தற்போதைய பெயர் கேஎல்ஐஏ T2 நிலையம் (KLIA T2) ஆகும்.
தடங்கள்
கேஎல்ஐஏ T1 நிலையம்; மற்றும் கேஎல்ஐஏ T2 நிலையம் ஆகிய இரு நிலையங்களையும் இணைப்பதற்கு இரண்டு தொடருந்து தடங்கள் உள்ளன. தடம் ஏ (Platform A); மற்றும் தடம் பி (Platform B) என பெயர் வழங்கப்பட்டு உள்ளது. தடம் ஏ என்பதை கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து பயன்படுத்துகிறது. தடம் பி என்பதை கேஎல்ஐஏ போக்குவரத்து பயன்படுத்துகிறது.
காட்சியகம்
மேலும் காண்க
கேஎல்ஐஏ T2 நிலையம்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
கேஎல்ஐஏ போக்குவரத்து
மலேசிய தொடருந்து போக்குவரத்து
கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
விரைவுத் தொடருந்து இணைப்பு |
682466 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | அகலேகா தீவுகள் | அகலேகா தீவுகள் (Agaléga (), , இந்தியப் பெருங்கடலில் அமைந்த மொரிசியஸ் நாட்டின் பகுதியாக உள்ளது. அகலேகா இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டுள்ளது. இது மொரிசியசிற்கு வடக்கே தொலைவில் உள்ளது.செயிண்ட் பிராண்டன் தீவைப்போல், அகலகா தீவும் மொரிசியஸ் பிரதமர் அலுவலகத்தின் வெளித் தீவுகளின் மேம்பாட்டு குழுமத்தின் கீழ் செயல்படுகிறது.
2022ல் இத்தீவின் மக்கள் தொகை 330 ஆகும்.இங்குள்ள மக்கள் கிரியோல் மொழியைப் பேசுகின்றனர். அகலகா தீவு பரப்பளவு கொண்டது. இதன் வடக்கு தீவு நீளமும் மற்றும் அகலமும் கொண்டது. இதன் தெற்கு தீவு நீளம் மற்றும் அகலம் கொண்டது. அகலேகாவின்வடக்கு தீவில் விமான ஓடுதளம்]மற்றும் தீவின் தலைமையிடமான விங்ட்-சின்க் நகரம் உள்ளது.அகலேகா தீவுகள் மீன்பிடி தொழில், தேங்காய் தொடர்பான தொழிற்சாலைகள் மற்றும் வண்ணப் பல்லி இனங்களுக்குபெயர் பெற்றது.
அகலேகா தீவுகளின் மேம்பாடு
அகலேகாவின் வடக்கு தீவில் 3,000 மீட்டர் நீளத்திற்கு வானூர்தி ஓடு தளம் மற்றும் செயிண்ட் ஜேம்ஸ் படகுத் தளம் அமைக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் 29 பிப்ரவரி 2024 அன்று ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டனர்.
தட்ப வெப்பம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Government of Mauritius - Agalega
மொரிசியசு |
682467 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D | மௌசம் திட்டம் | மௌசம் திட்டம் (Project Mausam) என்பது இந்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் , இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளை இணைக்கும் ஒரு கலாச்சாரத் திட்டமாகும். "மௌசம்" என்ற சொல் "வானிலை" அல்லது "பருவம்" என்று பொருள்படும். இது அரபு வார்த்தையான மாவ்சிம் உள்ளிட்ட பிராந்திய பேச்சுவழக்குகளிலிருந்து பெறப்பட்டது. இது படகுகள் பாதுகாப்பாக பயணம் செய்யக்கூடிய பருவத்தைக் குறிக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் எல்லையை ஒட்டியுள்ள 39 நாடுகளுடன் கடல்சார் கலாச்சாரத் தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கம். வரலாற்று மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, கலாச்சார மற்றும் மதத் தொடர்புகளின் பன்முகத்தன்மையை பதிவு செய்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மௌசம் திட்டத்திற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளது. முதலாவது நாடுகளுக்கு இடையிலான தேசியக் கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வது, இரண்டாவது நாடுகளுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை மீண்டும் உருவாக்குவது.
குறிக்கோள்கள்
இந்தத் திட்டம் அதன் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நான்கு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, நாடுகளுடனான தொலைந்துபோன தொடர்புகளை புதுப்பிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகள் பல நூற்றாண்டுகளாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் இந்தியப் பெருங்கடல் உலகில் உள்ள நாடுகளின் பொதுவான பொருளாதார உறவுகள் மற்றும் கலாச்சார மதிப்புகளை ஆவணப்படுத்தவும் கொண்டாடவும், சமகால நெறிமுறைகள் மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பால், இந்தியப் பெருங்கடலின் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும், எதிர்கால ஒத்துழைப்புக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கவும் முயல்கிறது.
முன்னேற்றமும் சாதனையும்
2014 ஆம் ஆண்டில், இமான்சு பிரபா ரேயின் “இந்தியப் பெருங்கடல் முழுவதும் கடல்சார் கலாச்சார நிலப்பரப்புகள்” என்ற நூல் வெளியிடப்பட்டது. ஒரே ஆண்டில் இத்திட்டம் பற்றிய பத்தொன்பது கலந்துரையாடல்கள் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்டன. அக்டோபர் முதல் நவம்பர் 2014 வரை இந்தியாவில் நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் "இந்தியாவில் ஆப்பிரிக்கர்கள்: ஒரு மறுகண்டுபிடிப்பு" என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாட்டுடன் ஒரு கண்காட்சியும் நடைபெற்றது. கேரள சுற்றுலாத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையால் கொச்சியில் கடல்சார் வர்த்தக வழிகள் பற்றிய தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Mausam/Mawsim: Maritime Routes and Cultural Landscapes. Concept Note. Ministry of Culture, Government of India
இந்திய அமைச்சகம் |
682469 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20T2%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | கேஎல்ஐஏ T2 நிலையம் | கேஎல்ஐஏ T2 நிலையம் அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய போக்குவரத்து நிலையம் 2 (ஆங்கிலம்: KLIA T2 ERL Station (KLIA); மலாய்: Stesen ERL KLIA2) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (இஆர்எல்) (ERL) நிலையமாகும்.
முன்பு கேஎல்ஐஏ 2 என அறியப்பட்ட இந்த நிலையம், 2014 மே 2-ஆம் தேதி செயல்படத் தொடங்கியது. கேட்வே@கேஎல்ஐஏ2 (Gateway@klia2 Complex) வளாகத்தின் இரண்டாவது தளத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம், இஆர்எல் சேவையின் இரண்டு வழித்தடங்களான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து மூலம் சேவை செய்யப்படுகிறது.
பொது
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையக் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கேஎல்ஐஏ T1 நிலையத்திற்கு, விரைவுத் தொடருந்து இணைப்பின் இரண்டு வழித்தடங்களான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres); மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து (KLIA Transit) எனும் வழித்தடங்களின் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.
1998-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஒரு முதன்மை வானூர்தி முனையம் (Terminal) உள்ளது. அந்த வானூர்தி முனையத்தில் ஒரு தொடருந்து நிலையமும் உள்ளது. அதற்குப் பெயர் கேஎல்ஐஏ T1 நிலையம்.
கேஎல்ஐஏ நிலையம்
சிப்பாங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் தொடருந்து நிலையம் முன்பு கேஎல்ஐஏ நிலையம் என்று அழைக்கப்பட்டது. தற்போது 'கேஎல்ஐஏ T1 நிலையம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த வானூர்தி தொடருந்து நிலையம்தான் முதன்முதலில் கட்டப்பட்டது. தற்போது இந்த வானூர்தி முனையத்திற்கு வழங்கப்படும் சேவைக்கு இஆர்எல் சேவை (Express Rail Link) (ERL) எனப் பெயர் வழங்கப்பட்டு உள்ளது.
கேஎல்ஐஏ 1 நிலையம்
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் கட்டும் போதே முதல் இஆர்எல் சேவை தொடருந்து நிலையத்தையும் கட்டிவிட்டார்கள். அதன் அப்போதைய பெயர் கேஎல்ஐஏ 1 நிலையம். தற்போது கேஎல்ஐஏ T1 நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2014 மே 1-ஆம் தேதி மலிவுவிலை வானூர்திச் சேவைகளுக்காக (Low Cost Carrier Terminal) (LCCT) ரிங்கிட் 4 பில்லியன் செலவில், அசல் வானூர்தி நிலையத்திற்கு 2 கிமீ அப்பால் இரண்டாவது வானூர்தி முனையம் கட்டப்பட்டது. அந்த முனையத்திற்காக மற்றும் ஒரு புதிய தொடருந்து நிலையமும் கட்டப்பட்டது. அந்த நிலையத்தின் தற்போதைய பெயர் கேஎல்ஐஏ T2 நிலையம் (KLIA T2) ஆகும்.
தடங்கள்
கேஎல்ஐஏ T1 நிலையம் மற்றும் கேஎல்ஐஏ T2 நிலையம் ஆகிய இரு நிலையங்களையும் இணைப்பதற்கு இரண்டு தொடருந்து தடங்கள் உள்ளன. தடம் ஏ (Platform A); மற்றும் தடம் பி (Platform B) என பெயர் வழங்கப்பட்டு உள்ளது. தடம் ஏ என்பதை கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து பயன்படுத்துகிறது. தடம் பி என்பதை கேஎல்ஐஏ போக்குவரத்து பயன்படுத்துகிறது.
காட்சியகம்
மேலும் காண்க
கேஎல்ஐஏ T1 நிலையம்
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
கேஎல்ஐஏ போக்குவரத்து
மலேசிய தொடருந்து போக்குவரத்து
கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
KLIA2 ERL Station | klia2.com.my
KLIA Ekspres now serving KLIA2
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
விரைவுத் தொடருந்து இணைப்பு |
682470 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88 | மகாலெட்சுமி கோயில், மும்பை | மகாலெட்சுமி கோயில் (Mahalaxmi Temple), இந்து சமயத்தின் பெண் தெய்வமான இலக்குமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலை தெற்கு மும்பையில் உள்ள பூலாபாய் தேசாய் மார்க், மகாலெட்சுமி மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1831ல் தாக்ஜி தாதாஜி என்பவரால் நிறுவப்பட்டது. இக்கோயிலை மகாலெட்சுமி கோயில் அறக்கட்டளையினர் நிர்வாகம் செய்கின்றனர். இக்கோயிலில் உப-தெய்வங்களான மகாகாளி, சரசுவதி சன்னதிகள் உள்ளது. இக்கோயிலின் முக்கிய நாட்கள் லட்சுமி பூஜை, நவராத்திரி, தீபாவளி, குடீ பாடவா ஆகும்.
இதனையும் காண்க
மும்பையின் வரலாறு
மும்பையின் காலக்கோடுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Official website
மும்பையின் வழிபாட்டுத தலங்கள் |
682475 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | தரவாடு | தரவாடு, என்றும் உச்சரிக்கப்படுகிறது தறவாடு (), என்பது கேரளத்தில் உள்ள உயர்குடி நாயர் குடும்பங்களின் பரம்பரை வீட்டைக் குறிக்கும் ஒரு மலையாளச் சொல்லாகும். இது நாயர் இந்துக்கள் மற்றும் நாயர் முஸ்லிம்களிடையே பொதுவான ஒன்றாக உள்ளது. இது பொதுவாக மாநிலத்தில் நடைமுறையில் உள்ள மருமக்கதாயத்தின் கீழ் தாய்வழி கூட்டுக் குடும்பத்தினரின் பொதுவான வசிப்பிடமாக இருந்தது. ஜெர்மன் மொழியியலாளர் ஹெர்மன் குண்டர்ட், 1872 இல் வெளியிடப்பட்ட தனது மலையாள—ஆங்கில அகராதியில், தறவாடு என்பதை," நில உரிமையாளர்கள் மற்றும் மன்னர்களின் பரம்பரை குடியிருப்பு", மேலும்,"ஒரு வீடு, முக்கியமாக பிரபுக்களின் வீடு" என்று வரையறுத்துள்ளார். இது பாரம்பரியமாக ஜென்மிமாரின் வசிப்பிடமாக இருந்தது. ஆனால் தாரவாடு என்ற சொல்லின் தற்கால பயன்பாடு கேரளத்தில் உள்ள அனைத்து சமூக வர்க்கங்களுக்கும் சமய மக்களுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இதன் ஒரு நீட்சியாக, இந்தச் சொல் வீட்டை மட்டுமல்லாமல், அந்த வீட்டைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டுக் குடும்பத்தையும் குறிப்பதாக உள்ளது. தரவாடின் தலைவர்கள்-பொதுவாக குடும்பத்தின் மூத்த ஆண் காரணவர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இளைய உறுப்பினர்கள் ஆனந்த்ரவான்கள் என அழைக்கப்பட்டனர்.
கட்டடக்கலை
தரவாடு என்ற பாரம்பரியத்திலுருந்து பிரிக்க முடியாததாக, வரலாற்று ரீதியாக, கேரளத்தின் தனித்துவமான நாலுகெட்டு வீட்டுப் கட்டடக்கலை பாரம்பரியம் உள்ளது. ஒரு உன்னதமான நாலுகெட்டு தரவாடு நான்கு கூடங்களுடன் கட்டப்படும், ஒவ்வொன்றும் ஒரு வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படும். மேலும் ஒரு நடுமுற்றத்தைக் கொண்டிருக்கும். செல்வம் மிக்க, மிகவும் பிரபலமான தரவாடுகள் எட்டுகெட்டு, இரண்டு நடுமுற்றங்களுடன், அல்லது பதினாறுகெட்டு, பதினாறு கூடங்கள் கொண்ட நான்கு நடுமுற்றங்கள் கொண்டிருக்கும். மேலும் அரச குடும்பங்கள் இதேபோன்ற தரவரிசை கொண்ட தரவாடுகள் போன்ற வீடுகளை பாதுகாப்பு வசதிகளுடன் கொண்டிருப்பார்கள். அரிதாக, பன்னிரண்டு கூடங்கள் கொண்டதாக பன்னிரண்டுகேட்டு கட்டப்பட்டுள்ளன. மூன்று முற்றங்களுடன், 32 கூடங்கள் கொண்ட முப்பதிரண்டுகெட்டு அமைக்கப்பட்டதற்கான பதிவு உள்ளது. இருப்பினும் அது கட்டப்பட்டு விரைவிலேயே தீயினால் அழிந்தது.
மேற்கோள்கள்
கேரளப் பண்பாடு
கேரளச் சமூகம் |
682479 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | விரைவுத் தொடருந்து இணைப்பு | விரைவுத் தொடருந்து இணைப்பு அல்லது விரைவுத் தொடருந்து இணைப்பு நிறுவனம் (ஆங்கிலம்; Express Rail Link; Express; (ERL) மலாய்: Express Rail Link; Express Rail Link Sdn Bhd சீனம்: 吉隆坡机场快铁) என்பது மலேசியா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஒரு வானூர்தி நிலையத் தொடருந்துச் சேவையை நடத்திவரும் ஒரு மலேசிய நிறுவனம் ஆகும்.
இந்தத் தொடர்பு இணைப்பு 57 கி.மீ. நீளம் கொண்டது; மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தையும் இணைக்கின்றது.
பொது
விரைவுத் தொடருந்து இணைப்பு நிறுவனம், இரண்டு வெவ்வேறு தொடருந்துச் சேவைகளை வழங்குகிறது:
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres), கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு நேரடிச் சேவை; 14 ஏப்ரல் 2002 அன்று தொடங்கப்பட்டது.
கேஎல்ஐஏ போக்குவரத்து (KLIA Transit), கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு இடையே மூன்று கூடுதல் நிறுத்தங்களைக் கொண்ட ஒரு பயணிகள் தொடருந்துச் சேவை; 20 சூன் 2002 அன்று தொடங்கப்பட்டது.
30 ஆண்டுகாலச் சலுகை
25 ஆகஸ்டு 1997-இல், வானூர்தி நிலையத் தொடருந்துச் சேவை செயல்பாடுகளுக்கு நிதியளிக்க, கட்டமைக்க, பராமரிக்க மற்றும் சேவை செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த இந்த விரைவுத் தொடருந்து இணைப்பு நிறுவனத்திற்கு, மலேசிய அரசாங்கம் 30 ஆண்டுகாலச் சலுகையை வழங்கியது.
மே 1997-இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தது.
தொடருந்துகளின் எண்ணிக்கை
மேலும் காண்க
கேஎல்ஐஏ போக்குவரத்து
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
கேஎல்ஐஏ T1 நிலையம்
கேஎல்ஐஏ T2 நிலையம்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
KLIA Ekspres
Kuala Lumpur's airport in the city opens for business Railway Gazette International May 2002
மலேசியாவில் போக்குவரத்து
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
விரைவுத் தொடருந்து இணைப்பு
மலேசியாவில் தொடருந்து போக்குவரத்து |
682482 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D | காரணவர் | காரணவர் அல்லது காரணவன் அல்லது கரணவ (Karanavar or Karanavan or Karanava), என்பவர் மலையாளி, துளு, குடகு, நாஞ்சில் நாட்டு சமூகத்தில் குடும்பத் தலைவரான ஆணைக் குறிக்க அல்லது ஒரு பட்டமாகப் பயன்படுத்தப்படுகிறது.
காரணவர் என்பது கேரளத்தின் செங்கனூர், புத்தனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில உயர்குடி நாயர் குடும்பங்களில் வழங்கப்படும் பட்டப்பெயராகும். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் புத்தனூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் கிளைகளாகும்.
இந்தப் பட்டம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர்வால் வழங்கப்பட்டதாக செவிவழிக்கதை நிலவுகிறது. அவர் புதிதாக உருவாக்கிய திருவிதாங்கூர் இராச்சியத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மருமகன் ராம வர்மாவும் (பின்னர் தர்ம ராஜா), மார்த்தாண்ட வர்மரின் சகோதரியும் வட்டபரம்பில் வலியதன் பாதுகாப்பின் கீழ் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சக்தி வாய்ந்த நாயர் பிரபுக்கள், வேணாட்டின் எட்டுவீட்டில் பிள்ளைமார் போன்றோரால் தாக்கப்பட்டனர். அதில் மார்த்தாண்ட வர்மரின் மைத்துனரும் பிற போராளிகளும் உயிரிழந்தனர். மன்னரின் சகோதரி, அட்டிங்கல் ராணியும், அவரது மகனும் தப்பித்து வயல்கள் வழியாக ஓடினர். அப்போது ("புத்தனூர் பாதம்"), அங்கு அவர்கள் வயலில் வேளாண் பணிகளைச் செய்து கொண்டிருந்த ஒரு உயர்குடி நாயர் குடும்பத்தை எதிர்கொண்டனர். அவர்கள் அந்த மனிதரை "காரணவர்" என்று அழைத்து உவி கேட்டனர். அவர் அவர்களை எட்டுவீட்டில் நாயர்களிடமிருந்து காப்பாற்றி தன் தரவாட்டில் மறைத்து வைத்து, அவர்களைப் பாதுகாத்து, அருகிலிருந்த அரசனின் கூட்டாளியான ஆறுவீட்டில் மாடம்பிமாருக்குத் தகவல் தெரிவித்தார். மார்த்தாண்ட வர்மாவின் கூட்டாளியாக இருந்த வஞ்சிப்புழ தம்புரான் என்று அழைக்கப்படும் வக்கவஞ்சிப்புழா மத்தோமுக்கு அவர் தகவல் தெரிவித்தார். பின்னர் மார்த்தாண்ட வர்மர் தங்களுக்கு உதவிய அந்த நாயருக்கு செல்வத்தையும், அவர் மகாராஜாவானபோது "காரணவர்" என்ற பரம்பரைப் பெயரையும் வழங்கினார்.
கேரளம்
தாய்வழிக் கூட்டுக் குடும்பங்களின் தலைவராக இருக்கும் மூத்த தாய்மாமன் அல்லது தறவாடு காரணவர் என்று அழைக்கப்பட்டார். ஒரு குடும்பத்தில் காரணவரின் அதிகாரம் ஐயத்திற்கு அப்பாற்பட்டது. மருமகத்தாய அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகும், இந்தச் சொல் அதிகாரம் மற்றும் வயதானவரைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா அவர்கள் அட்டிங்கல் ராணியைக் காப்பாற்றியதால் ஒரு உயர்குடி நாயர் குடும்பத்திற்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.
'காரணவர்' என்ற மரியாதைக்குரிய பெயரானது பகவதி கோயில்களின் தலைவருக்குப் பயன்படுத்தப்படுகிறது. பழைய காலத்தில், ' கோயில் தம்புரான் (அ நம்பூதிரி ஆட்சியாளர்) அவரை பரிந்துரைப்பார்.
மேற்கோள்கள்
நாயர்
கன்னடச் சமூகங்கள்
கேரளச் சமூகம் |
682489 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D | காலிகோ ஜாக் | ஜான் ராக்காம் (John Rackham) (18 நவம்பர் 1720 இல் தூக்கிலிடப்பட்டார்), பொதுவாக காலிகோ ஜாக் என்று அழைக்கப்படும் இவன், 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பகாமாசு மற்றும் கியூபாவில் செயல்பட்ட ஒரு ஆங்கில கடல் கொள்ளைத் தலைவன் ஆவான். இவனது புனைப்பெயர் இவன் அணிந்திருந்த காலிகோ ஆடையிலிருந்து பெறப்பட்டது. அதே நேரத்தில் ஜாக் என்பது "ஜான்" என்பதற்கான புனைப்பெயர்.
ராக்கம் கடற்கொள்ளையர்களின் பொற்காலத்தின் முடிவில் தீவிரமாக இருந்தான். மேரி ரீட் மற்றும் ஆன் போனி ஆகிய இரண்டு பெண் குழு உறுப்பினர்களுடன் கொள்ளையில் ஈடுப்பட்டதற்காக மிகவும் நினைவுகூரப்படுகிறான்.
கொள்ளைத் தொழில்
ராக்கம், சார்லஸ் வேன் என்ற கொள்ளையனை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தானே தலைவனாகி பின்னர் லீவர்டு தீவுகள், ஜமைக்கா கால்வாய் மற்றும் விண்ட்வார்ட் கடல் பாதையில் கொள்ளையில் ஈடுபட்டான். 1719இல் மன்னிக்கப்பட்ட இவன் நியூ பிராவிடன்ஸுக்கு குடிபெயர்ந்தான். அங்கு ஆன் போனியைச் சந்தித்தான். இவர்களுடன் மேரி ரீடும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் பிற கொள்ளையர்கள் நடுவே ஆண் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். 22 ஆகஸ்ட் 1720 அன்று, மூவரும் நாசாவுவில் உள்ள துறைமுகத்திலிருந்து வில்லியம் என்ற ஆயுதமேந்திய சுலூப்பைத் திருடினர்.
கைதும் சிறையும்
அக்டோபர் 1720 இல், ஜமைக்காவின் ஆளுநரான நிக்கோலஸ் லாவ்ஸின் ஆணையின் கீழ் ஜொனாதன் பார்னெட் தலைமையிலான ஒரு குழு மூலம் ராக்காமும் அவனது குழுவினரும் தாக்கப்பட்டனர். ராக்காமின் பெரும்பாலான கடற்கொள்ளையர்கள் குடிபோதையில் இருந்ததால் அவர்களால் எதிர்ப்பை வெளிபடுத்த முடியவில்லை. அவர்கள் பிடிக்கப்பட்டு ஜமைக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு ஆளுநர் லாவ்ஸ் தீர்ப்பளித்தார்.
மேரி ரீட் மற்றும் ஆன் இருவரும் " தாங்கள் கருவுற்றிருந்ததால்" மன்னிப்பைக் கோரினர். நீதிமன்றம் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை மரணதண்டனையை நிறுத்திவைத்தது. பிரசவத்தின்போது ஏற்பட்ட காய்ச்சலால் மேரி ரீட் சிறையிலேயே இறந்தார்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Nelson, James L. (2004) A Short Life and A Merry One. Ithaca NY: McBooks.
The entire trial transcript is available in the book The Pirate Trial of Anne Bonny and Mary Read by Tamara J. Eastman and Constance Bond
Johnson, Captain Charles, A General History of the Pyrates|A General History of the Pyrates: From their first rise and settlement in the island of Providence, to the present time. London: T. Warner. First published in 1724, with the second volume published 1728, both later attributed to Daniel Defoe. Note that the General History's details of the capture of the merchant ship Neptune by Charles Vane in September 1718 conflict with the court records of both Charles Vane and Robert Deal, his quartermaster.
The Tryals of Captain John Rackam and Other Pirates, 1721, by Robert Baldwin, in The Colonial Office Records in The Public Records Office at Kew, (ref: CO 137/14f.9). This details the trials of Jack Rackam, Mary Read, Anne Bonny, and Charles Vane.
1720 இறப்புகள்
கடற் கொள்ளையர்கள்
கடற்படை வரலாறு |
682506 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F | முதலமட | முதலமட (Muthalamada) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது ஒரு உள்ளாட்சி அமைப்பாகும், இதில் முதலமட-I மற்றும் முதலமட-II ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. மாம்பழம் அதிகம் விளையும் பகுதிகளில் முதலாமடை ஊராட்சியும் ஒன்றாகும். இங்கு நிலவும் காலநிலையும், மண் வளமும் மாம்பழ விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வட மாநிலங்களுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அருகிலுள்ள தொடருந்து நிலையம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சந்திப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள முதலமட தொடருந்து நிலையம் ஆகும். பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் இந்த ஊராட்சியில் உள்ளது. அது கன்னிமாரா தேக்கு மரம் மற்றும் வனவிலங்குகளை பார்வையிடுவதற்கு பிரபலமானது.
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
682508 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88 | வைரிப்பாறை தடுப்பணை | வைரிப்பாறை தடுப்பணை (Viripara Weir) என்பது இந்தியாவில் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மாங்குளம் கிராமத்தில் பூயாங்குட்டி ஆற்றின் துணை ஆறான மேல் கல்லாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு திசைதிருப்பல் தடுப்பணை ஆகும். இந்த அணையிலிருந்து மேனாச்சேரி ஆற்றுக்கு நீர் தேவிக்குளம் வட்டம் வழியாகப் பாய்கிறது. நேரியமங்கலம் நீர்மின் திட்டத்தின் மேம்பாட்டுத் திட்டமாக வைரிப்பாறை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பூயான்குட்டி ஆற்றின் துணை ஆறான மேல் கல்லாறு, வைரிப்பாறையில் ஒரு குறுகிய திசைதிருப்பல் சுரங்கப்பாதையுடன் குறைந்த திசைதிருப்பப்பட்ட நீர்த்தேக்கம் மூலம் கள்ளாறுகுட்டி நீர்த்தேக்கத்திற்குத் திருப்பி விடப்படுகிறது.
விவரக்குறிப்புகள்
அட்சரேகை: 90° 58' 48" வ
தீர்க்கரேகை: 77° 00' 05" கி
ஊராட்சி: மாங்குளம்
கிராமம்: மாங்குளம்
மாவட்டம்: இடுக்கி
ஆற்றுப் படுகை-பெரியார்
ஆறு: மேல் கல்லாறு
அணையிலிருந்து நீர் விடுப்பு: மேனாச்சேரி
அணையின் வகை: கொத்து
வகைப்பாடு: தடுப்பணை
முழு நீர்த்தேக்க நிலை: 1141.59 மீ
அதிகபட்ச நீர் மட்டம்:
திசைதிருப்பலில் மட்டுமே சேமிப்பு:
ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 4.57மீ
நீளம்:
ஆற்று நீர் வெளியேறும் வட்டம்: தேவிகுளம்
நீர்க்கசிவு: வழிந்தோடும் வகை
நிறைவுற்ற ஆண்டு: 1961
உயர மட்டம்: 1141.59 மீ
திட்டத்தின் பெயர்: நேரியமங்கலம் நீர்மின் திட்டம்
ஆற்று வெளியேற்றம்: இல்லை
திட்டத்தின் நோக்கம்: நீர்மின்
சுற்றுலா
அணைக்கட்டு ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாகும். மேலும் வைரிபாறை அருவி மற்றும் நட்சத்திரகுத்து aருவி என்று அழைக்கப்படும் இரண்டு நீர்வீழ்ச்சிகள் இப்பகுதியில் உள்ளன.
மேற்கோள்கள்
இடுக்கி மாவட்ட அணைகள் |
682509 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28La%29 | பாரிசைட்டு-(La) | பாரிசைட்டு-(La) (Parisite-(La)) என்பது CaLa2(CO3)33F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் அடென்சியோ மற்றும் பிரேசிலின் பாகியா மாநிலத்தில் உள்ள முலா கிளெய்ம் பகுதியிலுள்ள சக ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கனிமமாகும்.
பாரிசைட்டு-(La) என்பது பாரிசைட்டு-(Ce) கனிமத்தின் இலாந்தனம் ஒப்புமையாகும். இது பாரிசைட்டு-(Ce) கனிமத்தின் அதே அமைப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இலந்தனத்திற்குப் பதிலாக சீரியம் உள்ளது. பாரிசைட்டு-(La) வேதியியல் ரீதியாக சின்கிசைட்டு-(La) உடன் ஒத்திருக்கிறது.
பாரிசைட்டு-(La) வகைக் கனிமம் பிரேசிலில் உள்ள மினாசு கெரைசு மாகாணத்தில் உள்ள ஓரோ பிரிட்டோ நகரில் அமைந்துள்ள எசுகோலா டி மினாசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டசுக்கன் நகர அரிசோனா பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பாரிசைட்டு(La) கனிமத்தை Pst-La என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
கார்பனேட்டு கனிமங்கள்
ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
இலந்தனம் கனிமங்கள் |
682512 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D | எட்வர்ட் லியர் | எட்வர்ட் லியர் (Edward Lear) (12 மே 1812 - 29 ஜனவரி 1888) ஓர் ஆங்கிலக் கலைஞரும், ஓவியரும், இசைக்கலைஞரும், எழுத்தாளரும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர் கவிதை மற்றும் உரைநடைகளில் இலக்கிய முட்டாள்தனம் மற்றும் குறிப்பாக இவரது லிமரிக் வகைகளுக்காக பெரும்பாலும் அறியப்படுகிறார்.
ஒரு கலைஞராக இவரது முக்கியப் பணிகள் மூன்று வகைகளாக இருந்தன: பறவைகள் மற்றும் விலங்குகளின் விளக்கப்படங்களை தனது பயணங்களின் போது வண்ண வரைபடங்களை உருவாக்கினார். குறிப்பாக ஆல்பிரட் டென்னிசன் கவிதைகளின் விளக்கப்படங்கள்.
ஒரு எழுத்தாளராக, இவர் தனது பிரபலமான முட்டாள்தனமான கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், தாவரவியல் வரைபடங்கள், சமையல் குறிப்புகள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார். டென்னிசனின் கவிதைகளின் பன்னிரண்டு இசை அமைப்புகளை இவர் இயற்றி வெளியிட்டார்.
லியரின் சில ஓவியங்கள்
மேற்கோள்கள்
External links
Edward Lear and his 9,000 Drawings
Edward Lear and his Studio Practice
Edward Lear and Crete
Edward Lear and Mount Athos
1888 இறப்புகள்
1812 பிறப்புகள் |
682514 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D | சபா ஆசாத் | சபா ஆசாத் (Saba Azad) (பிறப்பு சபா சிங் கிரேவால், 1 நவம்பர் 1985) ஓர் இந்திய நடிகையும், நாடக இயக்குநரும் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார். இவர் மும்பையை தளமாகக் கொண்ட மேட்பாய்/மிங்க் என்ற இசைக்குழுவில் ஒருவராவார். தில் கபடி (2008) எனும் இந்திப்படத்தில் ராகா என்ற பாத்திரத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பாலிவுட்டில் அறிமுகமானார். முஜ்சே பிராண்ட்ஷிப் கரோகே (2011) காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்துள்ளார். 2016 ஒய்-ஃபிலிஸின் லேடீஸ் ரூம் என்ற வலைத்தொடரில் டிங்கோவாகவும் நடித்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்தி தொலைக்காட்சி நடிகைகள்
இந்தித் திரைப்பட நடிகைகள்
இந்திய தொலைக்காட்சி நடிகைகள்
இந்தியத் திரைப்பட நடிகைகள்
1985 பிறப்புகள்
வாழும் நபர்கள் |
682516 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 | இடப்பள்ளி ராகவன் பிள்ளை | இடப்பள்ளி ராகவன் பிள்ளை (Edappally Raghavan Pillai) (30 மே 1909-4 ஜூலை 1936) மலையாளக் கவிஞரும், சங்கம்புழா கிருட்டிண பிள்ளையின் நெருங்கிய நண்பருமாவார். இந்த நண்பர்கள் இடப்பள்ளி கவிஞர்கள் அல்லது இடப்பள்ளியின் இரட்டையர்கள் என்று குறிப்பிடப்பட்டனர். இரண்டு கவிஞர்களும் காதல் கவிதைகளின் நிபுணர்களாக இருந்தனர். இவர்கள் மலையாளக் கவிதைகளின் செல்லி மற்றும் கீட்ஸ் என பலரால் கருதப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
எஸ். குப்தன் நாயர் Changampuzha, Sahitya Akademi (2001). ,
வெளி இணைப்புகள்
மலையாளக் கவிஞர்கள்
1936 இறப்புகள்
1909 பிறப்புகள்
ஊர் பெயரால் அறியப்படும் மக்கள் |
682517 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D | பிபின் சந்திரன் | பிபின் சந்திரன் (Bipin Chandran) கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். டாடி கூல் என்ற இவரது முதல் படம் 2009 இல் வெளியானது.
சொந்த வாழ்க்கை
பிபின் சந்திரன் இந்தியாவின் கேரளாவின் பொன்குன்னத்தில் பிறந்தார். சங்கனாச்சேரி செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, சிறந்த இயக்குநருக்கான கேரள மாநில திரைப்பட விருது வென்ற மார்ட்டின் பிராக்கட்டைச் சந்தித்தார். பிபின் முதுகலை படிப்புக்காக எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பயின்றார்.
தொழில் வாழ்க்கை
ஒரு எழுத்தாளரான பிபின் மம்மூட்டியை ஒரு நடிகராக, நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளாக குறிக்கும் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பான மம்மூமுட்டி கழ்ச்சாயம் வயநாயும் என்ற புத்தகத்தை எழுதினார். சமீபத்தில் மலையாளத் திரைப்படங்களின் வழிபாட்டு உரையாடல்களைப் பற்றி விவாதிக்கும் ஓர்மாயுண்டோ ஈ முகம் என்ற தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஐராட்டாச்சங்கு இவரது மற்றொரு புத்தகமாகும்.
ம்திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதும் பிபின், கோமாளி மேல்கை நெடுன்ன காலம் மற்றும் மடம்பில்லியில் மனோரோகி ஆகிய இரண்டு கட்டுரைகளுக்காக சிறந்த திரைப்படக் கட்டுரைகளுக்கான 2019 கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வாழும் நபர்கள்
மலையாள எழுத்தாளர்கள்
மலையாள நபர்கள்
கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
கோட்டயம் மாவட்ட நபர்கள் |
682519 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF | பிபின் சந்திர ஜோஷி | தளபதி பிபின் சந்திர ஜோஷி, (Bipin Chandra Joshi) பரம் விசிட்ட சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், (5 டிசம்பர் 1935 – 19 நவம்பர் 1994) இந்திய இராணுவத்தின் 17வது இராணுவத் தளபதி ஆவார். இவர் பதவியில் இருந்தபோதே இறந்தார்.
இளமை வாழ்க்கை
ஜோஷி, குமாவோனி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பிரிக்கப்படாத உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதல் ராணுவத் தலைவராக இருந்தார்
இறப்பு
ஜோஷி 1995 இல் ஓய்வு பெறவிருந்தார். ஆனால், 18 நவம்பர் 1994 அன்று புது தில்லியிலுள்ள இராணுவ மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார். இவரது அகால மரணம் இராணுவத் தலைமைப் பதவிக்கான முழு வரிசையையும் மாற்றியது. இது பொதுவாக மூத்தவர்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதன் விளைவாக, லெப்டினன்ட் ஜெனரல் சங்கர் ராய்சௌத்ரி தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்று 17 வது ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
கௌரவம்
உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள பிதௌரகட் எனுமிடத்தில் இவரது நினைவாக இராணுவப் பொது பள்ளி ஒன்று 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Book titled Man, culture, and society in the Kumaun Himalayas: General B. C. Joshi commemoration volume () - includes brief articles on General B. C. Joshi
https://www.nytimes.com/1994/11/19/obituaries/gen-bipin-chandra-joshi-indian-army-chief-59.html
http://www.timescontent.com/tss/showcase/preview-buy/29780/News/General-Bipin-Chandra-Joshi.html
1994 இறப்புகள்
1935 பிறப்புகள்
இந்தியப் படைத்துறையினர் |
682521 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF | சங்கர் ராய்சௌத்ரி | தளபதி சங்கர் ராய் சவுத்ரி (Shankar Roychowdhury) இந்தியத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியாவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
சங்கர் ராய்சௌத்ரி இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில், வங்காள கயஸ்தா குடும்பத்தில், 1937 செப்டம்பர் 6 அன்று பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரிப் பள்ளியிலும், பின்னர் முசோரி உள்ள வின்பெர்க் ஆலன் பள்ளி, முசோரி இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கல்லூரி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் 1953 ஆம் ஆண்டில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் கூட்டு சேவைப் பிரிவில் சேர்ந்தார்.
இராணுவப் பணி
சங்கர் ராய்சவுத்ரி இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடத்தில் பட்டம் பெற்ற பிறகு, ஜூன் 9,1957 அன்று இந்திய ராணுவ கவசப் படையில் நியமிக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டு சாம்ப்-ஜௌரியன் பிரிவிலும், 1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின் போது ஜெசோர் மற்றும் குல்னாவிலும் பின்னர், இந்தியா-பாகிஸ்தான் போரிலும் பங்கேற்றார். 1974 முதல் 1976 வரை லான்சர்கள், டிசம்பர் 1980 முதல் ஜூலை 1983 வரை ஒரு சுயாதீன கவச படைப்பிரிவு மற்றும் மே 1988 முதல் மே 1990 வரை ஒரு கவச பிரிவு ஆகியவற்றிற்கு தலைமை தாங்கினார். பின்னர் இவர் 1991 முதல் 1992 வரை சம்மு காசுமீரில் 16 கார்ப்ஸ் தலைவராக இருந்தார்.
கௌரவம்
இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான பரம் விசிட்ட சேவா பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு முன்னோடியான பிபின் சந்திர ஜோஷியின் அகால மரணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 22,1994 அன்று இந்திய இராணுவத்தின் 18 வது இராணுவத் தளபதியாக பொறுப்பை ஏற்றார். 40 ஆண்டுகள் இராணுவ சேவையில் இருந்த இவர், 1997 செப்டம்பர் 30 அன்று இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சங்கர் ராய்சௌத்ரி மாநிலங்களவை உறுப்பினரானார். 2008 ஜனவரி 21 முதல் இந்திய உலோகம் மற்றும் ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இவரது சுயசரிதை அதிகாரப்பூர்வமாக அமைதி என்ற தலைப்பில் 2002 இல் பெங்குயின் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Maoists are also our fellow Indians: General Shankar Roychowdhury, IBN Live, 29 May 2013.
Ex Indian Army chief talks about Indo-Bangla ties, ஹிந்துஸ்தான் டைம்ஸ், 16 March 2013.
Former Army chief Shankar Roychowdhury backs General VK Singh in age row, தி எகனாமிக் டைம்ஸ், 22 January 2012.
வங்காள மக்கள்
வாழும் நபர்கள்
1937 பிறப்புகள்
இந்தியப் படைத்துறையினர்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
682522 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81 | உம்ன்கோட் ஆறு | உம்ன்கோட் ஆறு (Umngot River), தொளகி ஆறு அல்லது வா உம்ன்கோத் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான மேகாலயாவில் மேற்கு ஜைண்டியா மலை மாவட்டத்தில் உள்ள ஜைண்டியா மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள தொளகி என்ற சிறிய நகரத்தின் வழியாக பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த நகரம் ஒப்பீட்டளவில் பரபரப்பாகக் காணப்படும். இது இந்தியாவிற்கும் வங்களாதேசத்திற்கும் இடையிலான வர்த்தக நகராகச் செயல்படுகிறது. இந்த ஆறு அதன் தூய்மை மற்றும் வெளிப்படையான நீர் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றது. இது ஒரு புலப்படும் ஆற்றுப் படுகையினைக் கொண்டுள்ளது.
சூழல்
இந்தியாவின் தூய்மையான ஆறுகளில் ஒன்றான உம்ன்கோட், உள்ளூர் மீனவர்களுக்கு ஒரு முக்கியமான மீன்பிடி இடமாகும். இந்த ஆறு இந்தியா-வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. மேலும் ஆற்றின் வெண்மைப் பகுதி, மின்னோட்டத்தின் உயர்வால் ஏற்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லையைக் குறிக்கிறது.
ஒரு தொங்கு பாலம், தாவ்கி பாலம், உம்கோட் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது 1932இல் கட்டப்பட்டது. மேலும் இது ஒரு சுற்றுலா ஆர்வமுள்ள இடமாகும்.
திட்டங்கள்
ஏப்ரல் 2021இல், மின்சாரப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, ஆற்றின் மீது அணை கட்ட மேகாலயா அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டம் முன்மொழியப்பட்ட 210 மெகாவாட் உம்ன்கோட் நீர்மின் திட்டமாகும். இது உள்ளூர் கிராமவாசிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பையும் பெற்றது. இதன் கட்டுமானம் சுற்றுலாவைச் சீர்குலைக்கும் என்று அஞ்சினர். இறுதியில் இத்திட்டம் கைவிடப்பட்டது .
மேற்கோள்கள்
மேகாலயாவில் உள்ள ஆறுகள் |
682528 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%2C%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | அம்மாபேட்டை, சேலம் | அம்மாபேட்டை (Ammapet) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதி ஆகும்.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 313.28 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சேலத்தில் அம்மாபேட்டை அமைந்துள்ளது.
சமயம்
இந்துக் கோயில்கள்
அம்மாபேட்டையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில் மற்றும் மதுரை வீரன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.
மேற்கோள்கள்
சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் |
682542 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D | கே. செல்வராஜ் | கோவை செல்வராஜ் என்கிற கே. செல்வராஜ் (இறப்பு: 8. நவம்பர். 2024) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தி.மு.கவின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக இருந்தார்.
செல்வராஜ் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் ஆர். எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர். முதலில் அ.தி.மு.கவில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய செல்வராஜ், 1984 இல் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் காங்கிரசின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினராக மாறி, அதிமுகவின் ஆதரவாளராக செயல்பட்டார். 2006 இல் சேவாதள அமைப்பின் தலைவராக இருந்தார். காங்கிரசு-திமுக கூட்டணியை விமர்சித்த காரணத்தால் 2015 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் செல்வராஜ் அ.தி.மு.கவில் இணைந்தார். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த செல்வராஜ், அதிமுகவை விட்டு வெளியேறி 2022 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அதன்பிறகு தி.மு.கவின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக இருந்தார்.
குடும்பம்
செல்வராஜுக்கு கமலாமணி என்ற மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். திருப்பதியில் இவரது மூன்றாவது மகனின் திருமணத்தை முடித்துவிட்டு ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 2024 நவம்பர் 8 அன்று தன் 66 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
2024 இறப்புகள்
கோவை மக்கள்
திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள் |
682545 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | திருத்தணி தொடருந்து நிலையம் | திருத்தணி தொடருந்து நிலையம் (நிலையத்தின் குறியீடுஃ TRT) ஆனது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.
விளக்கம்
இது ஹவுரா-சென்னை பிரதான வழித்தடத்தின் கூடுர்-சென்னை பிரிவில் அமைந்துள்ளது மற்றும் சென்னை புறநகர் பகுதியின் மேற்கு வடக்கு வழித்தடத்தில் ஒரு பகுதியாகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சென்னை கோட்டத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. இது என். எஸ். ஜி-4 நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (வருடாந்திர வருவாய் 100 முதல் 200 மில்லியன் ரூபாய் வரை மற்றும் 2 முதல் 5 மில்லியன் பயணிகள் கையாளப்படுகிறார்கள்).
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருத்தணி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
தமிழ்நாட்டுத் தொடருந்து நிலையங்கள்
சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்
சென்னை தொடருந்து கோட்டம் |
Subsets and Splits