id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
684295 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE | கரீம் லாலா | கரீம் லாலா (Karim Lala) (1911 – 19 பிப்ரவரி 2002), ஆப்கானித்தானின் குனர் மாகாணத்தின் செகல் மாவட்டத்தின் சமலம் கிராமத்தில் அப்துல் கரீம் சேர்கான் என்ற பெயரில் பிறந்த இவர், அறுபதுகளிலிருந்து எண்பதுகளின் ஆரம்பம் வரையிலான காலகட்டங்களில் மும்பையின் மிகப்பிரபலமான மூன்று “நிழல் உலக மாஃபியா கும்பல்களில்” ஒருவராக பிரபலமடைந்தார். ஹாஜி மசுதான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோர் மற்ற இருவர்.
பின்னணி
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, தெற்கு மும்பையின் டோங்க்ரி, நாக்பாடா, பேண்டி பஜார் மற்றும் முகமது அலி சாலை போன்ற பகுதிகளில் முஸ்லிம் பகுதிகளில் செய்ல்பட்ட "பதான் கும்பலில்" சேர்ந்த கரீம் லாலா விரைவில் கும்பலின் தலைவராக உயர்ந்தார். சட்டவிரோத சூதாட்டம் (சட்டவிரோத பணம் மீட்பு, சட்டவிரோத நில வெளியேற்றங்கள், கடத்தல், பாதுகாப்பு மோசடி (ஒப்பந்தக் கொலை) (போதைப்பொருள் மற்றும் கள்ள நாணய விநியோகம்) ஆகிய குற்றச் செயல்களில் பதான் கும்பல் ஈடுபட்டு வந்தது.
மும்பையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவந்த மற்ற இரண்டு மாஃபியாக்களான ஹாஜி மசுதான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் சேர்ந்து ஒருவருக்கொருவர் எந்த மோதலும் இல்லாமல் தங்கள் குற்றச் செயல்களை சுதந்திரமாக நடத்த முடிவு செய்து 1970களில், மும்பையை மூன்று பகுதிகளாக பிரிக்க ஒரு ஒப்பந்தத்திற்கு லாலா ஒப்புக்கொண்டார்.
பிற்கால வாழ்க்கை
எழுபதுகளின் பிற்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக, லாலா படிப்படியாக பதான் கும்பலின் தலைமைப் பொறுப்பை தனது மருமகன் சமத் கானுக்கு மாற்றினார். பின்னர் தனது விடுதி மற்றும் போக்குவரத்து வணிகத்தை நிர்வகித்தார். லாலா பல முறைகேடான வணிகங்களைக் கொண்டிருந்தாலும், இவரது சட்டப்பூர்வ வணிகத்தில் இரண்டு விடுதிகள் (அல் கரீம் விடுதி மற்றும் நியூ இந்தியா விடுதி) மற்றும் நியூ இந்தியா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற பயண ஏற்பாடு நிறுவனம் ஆகியவை அடங்கும்.
லாலா தனது மற்ற சகாக்களாகிய ஹாஜி மசுதான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் எப்போதும் நட்பாக இருந்தார். சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேவுடனும் நெருக்கமாக இருந்த லாலா, 1980 ஆம் ஆண்டில் தனது மருமகன் சமத் கான் மற்றும் அவருக்கு போட்டியாக செயல்பட்டு வந்த சபீர் இப்ராகிம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்தார்.
கரீம் லாலா வாராந்திர தர்பார் ஒன்றையும் நடத்தினார். அங்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் குறைகளை லாலாவிடம் முறையிட்டனர். மேலும் இவர் அவர்களுக்கு நிதி ரீதியாகவோ அல்லது தனது சக்தியைப் பயன்படுத்தி நீதியைப் பெறவோ உதவினார்.
இறப்பு
இவர் தனது 90வது வயதில் பிப்ரவரி 19,2002 அன்று இறந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Lala with Shiv Sena Supremo - Bal Thackeray
இந்திய முஸ்லிம்கள்
2002 இறப்புகள்
1911 பிறப்புகள்
இந்தியக் குற்றவாளிகள் |
684298 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | அமராவதி சட்டமன்றத் தொகுதி | அமராவதி சட்டமன்றத் தொகுதி (Amravati Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது அமராவதி மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
முடிவுகள்:அமராவதி
மேலும் காண்க
அமராவதி
அச்சல்பூர்
அமராவதி மாவட்டம்
மேற்கோள்கள்
அமராவதி மாவட்டம்
மகாராட்டிர அரசியல்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684299 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D | குஞ்சாக்கோ போபன் | குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban) (பிறப்பு 2 நவம்பர் 1976) ஓர் இந்திய நடிகரும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவரது ரோமியோ பாத்திரங்கள் காரணமாக இவர் “சாக்கோச்சன்” என்றும், “சாக்லேட் பாய்” என்றும் அழைக்கப்படுகிறார். மலையாளத் திரையுலகில் பணிபுரியும் இவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குஞ்சாக்கோ குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது தந்தை போபன் குஞ்சாக்கோ தயாரித்த தன்யா (1981) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
திரை வாழ்க்கை
இவர் 1997 ஆம் ஆண்டு பாசிலின் அனியாதிபிராவு என்ற காதல் திரைப்படத்தில் நடிகை சாலினிக்கு இணையாக ஒரு முன்னணி பாத்திரத்தில் அறிமுகமானார். அதுவரை அதிக வசூல் செய்த மலையாளப் படமாக இது இருந்தது. மோகன்லால் மற்றும் மம்மூட்டி நடித்த ஹரிகிருஷ்ணன்ஸ் (1998) படத்தில் இவர் ஒரு சிறு பாத்திரத்தில் தோன்றினார். இது அந்த ஆண்டின் வசூலில் சிறந்த படமாக அமைந்தது. குஞ்சாக்கோவும் சாலினியும் சேர்ந்து நட்சத்திரத்தரட்டு (1998) , நிரம் (1999) மற்றும் பிரேம் பூஜாரி (1999) ஆகிய படங்களில் மீண்டும் இணைந்தனர். நிரம் (2000) அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றானது. அதற்குள் இவர் மலையாளத் திரையுலகில் ஒரு “காதல் கதாநாயகன்” பிம்பத்தை உருவாக்கிவிட்டார். இருப்பினும், நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக (2001) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் கிராமவாசியாகவும், கஸ்தூரிமான் (2003) படத்தில் கடனில் மூழ்கிய குடும்பத்தின் மகனாகவும் நடித்திருந்தார். 2000 களின் நடுப்பகுதியில் சில தோல்விகளுக்குப் பிறகு இவரது வாழ்க்கை பின்னடைவை சந்தித்தது. 2006-ல் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு வியாபாரத்தில் இறங்கினார்.
இவர் 2009 இல் குலுமல்: தி எஸ்கேப் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் மீண்டும் நடித்து வணிக ரீதியாக வெற்றி பெற்றார். மறுபிரவேசத்திற்குப் பிறகு, குஞ்சாக்கோ தனது “சாக்லேட் பாய் ” மற்றும் “காதல் நாயகன்” என்பதை இமேஜை முற்றிலுமாக மாற்றினார். மேலும் இவர் பல்வேறு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து ஒரு நடிகராக தனது பன்முகத்தன்மையை நிரூபித்தார். மறுபிரவேசத்தில், வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்களின் மூலம் தனது நட்சத்திரத் தகுதியை உயர்த்தி, மலையாளத் திரைப்படத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டார். டிராஃபிக் (2011), ஹவ் ஓல்ட் ஆர் யூ (2014), டேக் ஆஃப் (2017), வேட்டா (2016), வைரஸ் (2019), அஞ்சாம் பத்திரா (2020), நயாட்டு (2021), படா (2022) மற்றும் நா தான் கேஸ் கொடு (2022) போன்ற விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட படங்களில் இவரது பாத்திரங்கள் பரவலாகப் பாராட்டப்பட்டன. இவர் தனது நடன திறமைக்காகவும் அறியப்படுகிறார்.
2016 ஆம் ஆண்டில், குஞ்சாக்கோ 30 வருட இடைவெளிக்குப் பிறகு உதயா ஸ்டுடியோஸ் மூலம் கொச்சவ்வா பவுலோ ஐயப்ப கோயலோ என்ற நகைச்சுவை நாடகத் திரைப்படத்தைத் தயாரித்தார்.
சொந்த வாழ்க்கை
குஞ்சாக்கோ போபன் தனது ரசிகையும் நீண்ட நாள் காதலியுமான பிரியா ஆன் சாமுவேல் என்பவரை ஏப்ரல் 2, 2005 அன்று எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏப்ரல் 16, 2019 அன்று ஈசாக் என்ற ஒரு மகன் பிறந்தார்.
பிற பணிகள்
திரைப்படங்கள் மற்றும் வணிகம் தவிர, குஞ்சாக்கோ 2014 ஆம் ஆண்டில் பிரபலங்களின் துடுப்பாட்ட சங்கத்தையும் (சி3) தொடங்கினார். இவர் சி3 அமைப்பின் தலைவராக உள்ளார்.
2015 ஆம் ஆண்டில், இவர் சார்ஜாவில் அல் பசாத் மருத்துவ மையத்தைத் திறந்தார். இது குழந்தை நடத்தை, மன இறுக்கம் மற்றும் வயது வந்தோர் மனநல மருத்துவம் ஆகியவற்றிற்கான ஒப்பீட்டளவில் குறைந்த கட்டண சுகாதார சேவையை வழங்கும் ஒரு மருத்துவ மையமாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
1976 பிறப்புகள்
ஆலப்புழை மாவட்ட நபர்கள்
கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
மலையாளத் திரைப்பட நடிகர்கள்
வாழும் நபர்கள் |
684302 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20501%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 501 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 501, (National Highway 501 (India)) பொதுவாக தே. நெ. 501 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியா தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 1 இன் ஒரு துணை சாலையாகும். தே. நெ. 501 இந்தியாவின் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தின் வழியாக செல்கிறது.
வழித்தடம்
பஞ்ச்தார்னி-சந்தன்வாரி-பஹல்காம்-படாகுட்-நைபாஸ்டி ஹர்து-கிச்ரூ-ஐஷ்முகாம்-மார்தந்த்-கானாபால்.
முக்கிய குறுக்குச் சாலைகள்
பஞ்சதர்ணி அருகே முனையம்
கானாபால் அருகே முனையம்
கட்மரா நகரியத்திற்கு அருகிலுள்ள முனையம்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 501
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684303 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20301%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 301 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 301 (National Highway 301 (India)), பொதுவாக தே. நெ. 301 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 1இன் துணை சாலையாகும். தே. நெ. 301 இந்தியாவின் இலடாக்கு ஒன்றியப் பிரதேசத்தின் வழியாக செல்கிறது.
வழித்தடம்
கார்கில்-பதும் (ஜான்சுகார்).
முக்கியச் சந்திப்பு
கார்கில் அருகே முனையம்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 301
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684306 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | கிங்சாங்கைட்டு | கிங்சாங்கைட்டு (Qingsongite) என்பது BN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். கனசதுரப் படிக வடிவத்துடன் கூடிய அரிய போரான் நைட்ரைடு கனிமமாக இது கருதப்படுகிறது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியான சானன் மாகணத்தில் உள்ள லூபுசா ஓபியோலைட்டின் குரோமைட்டு படிவுகளுக்குள் நுண் சேர்க்கையாக 2009 ஆம் ஆண்டில் இது முதலில் கண்டறியப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் பன்னாட்டு கனிமவியல் சங்கத்தால் கனிமமாக அங்கீகரிக்கப்பட்டது. சீன புவியியலாளர் கிங்சாங் ஃபாங் (1939-2010) நினைவாக கிங்சாங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது. இக்கனிமம் பூமியின் மேலடுக்கில் ஆழமாக உருவாகும் ஒரே அறியப்பட்ட போரான் கனிமமாகும். ஆசுபோர்னைட்டு (தைட்டானியம் நைட்ரைடு), கோசைட்டு, கயனைட்டு மற்றும் உருவமற்ற கார்பன் ஆகியவை இதனுடன் தொடர்புடைய கனிமங்களில் அடங்கும்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிங்சாங்கைட்டு கனிமத்தை Qsg என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
கனசதுரக் கனிமங்கள்
தாயகத் தனிமக் கனிமங்கள் |
684308 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88 | கருந்தலை நாரை | கருந்தலை நாரை (Black-headed heron-அர்டியா மெலனோசெப்பாலா-Ardea melanocephala) என்பது ஆர்டீடே என்ற நாரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது சகாரா கீழமை ஆப்பிரிக்கா மற்றும் மடகாசுகரின் பெரும்பகுதி முழுவதும் காணப்படுகிறது. இப் பறவை வலசைச் செல்வதில்லை. ஆனால் சில மேற்கு ஆப்பிரிக்கப் பறவைகள் மழைக்காலத்தில் வடக்கே நகர்கின்றன.
இனப்பெருக்கம்
கருந்தலை நாரை சிற்றினம் பொதுவாக ஈரமான பருவத்தில் மரங்கள், நாணல் படுக்கைகள் அல்லது பாறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது ஒரு பருமனான குச்சிகளால் கூடமைத்து 2 முதல் 4 முட்டைகளை இடும்.
உணவு
கருந்தலை நாரை பெரும்பாலும் ஆழமற்ற நீரில் இரையினைத் தேடும். இதன் நீண்ட, கூர்மையான அலகு மூலம் மீன் அல்லது தவளைகளை வேட்டையாடும். இது தண்ணீரிலிருந்து விலகி, பெரிய பூச்சிகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை எடுத்துச் செல்கிறது. இது தன் இரையை அடைய அசையாமல் காத்திருந்து வேட்டையாடுகிறது.
கருந்தலை நாரை 85 செ. மீ. உயரமும், 150 செ. மீ. இறக்கை நீட்டமும் கொண்ட ஒரு பெரிய பறவை ஆகும். இது சாம்பல் நாரை போலவே கிட்டத்தட்ட பெரியது. இது பொதுவாக அடர் நிறமுடையதாக இருந்தாலும் தோற்றத்தில் ஒத்திருக்கிறது. இதன் இறகுகள் மேற்பகுதியில் பெரும்பாலும் சாம்பல் நிறத்திலும், கீழே வெளிர் சாம்பல் நிறமாகவும் இருக்கும். இது ஒரு சக்திவாய்ந்த மங்கலான அலகினைக் கொண்டுள்ளது.
கருந்தலை நாரை மெதுவாகக் கழுத்தினைப் பின் நோக்கி வைத்துப் பறக்கின்றது. இவ்வாறு பறப்பது நாரை, குருகுகளின் சிறப்பியல்பாகும். மேலும் இவை கழுத்தினை நீட்டிப் பறக்கும், கொக்கு, கரண்டிவாயன்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை பறக்கும் போது அடிப்பகுதியின் வெண்ணிறம் அழகாகத் தோன்றும்.
இதனுடைய அழைப்பு ஒரு உரத்த குரலாக உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கருப்புத் தலை கொண்ட கூழாங்கற்கள்-The Atlas of Southern African Birds என்ற நூலில் உள்ள இனங்கள்தென்னாப்பிரிக்க பறவைகளின் அட்லஸ் இல் உள்ள இனங்கள் உரை
படம்
சகாரா கீழமை ஆப்பிரிக்கப் பறவைகள் |
684311 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95 | மஞ்சுள ரத்நாயக்க | மஞ்சுள ரத்நாயக்க ஓர் இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓர் ஆசிரியரான இவர் கல்வித் துறைத் தொழிற்சங்க முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வாழும் நபர்கள்
1975 பிறப்புகள் |
684313 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE | ஆர்டியா | ஆர்டியா (Ardea) என்பது ஹெரான்களின் ஒரு பேரினம் ஆகும். இந்த ஹெரான்கள் பொதுவாக அளவில் பெரியவை. இவை பொதுவாக 80-100 செமீ நீளமுடையன.
இந்த பெரிய ஹெரான்கள் ஈரநிலங்களுடன் தொடர்புடையவை. இங்கு இவை மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடுகின்றன. கிட்டத்தட்ட உலகளவில் வாழக்கூடிய இப்பேரினத்தின் பெரும்பாலான சிற்றினங்கள் மரங்களில் கூட்டமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பெரிய குச்சிகளைக் கொண்டு கூடுகளை உருவாக்குகின்றன.
பெரிய நீலம், சாம்பல் மற்றும் ஊதா ஹெரான்கள் போன்ற வட பகுதியில் சிற்றினங்கள் குளிர்காலத்தில் தெற்கே இடம்பெயரலாம். இருப்பினும் முதல் இரண்டு சிற்றினங்கள் நீர் உறையும் பகுதிகளிலிருந்து மட்டுமே வலசைப் போகின்றன.
விளக்கம்
இவை பெரிய ஈட்டி போன்ற அலகு, நீண்ட கழுத்து, கால்களைக் கொண்ட சக்திவாய்ந்த பறவைகள். இவை அசையாமல் காத்திருந்து வேட்டையாடுகின்றன அல்லது திடீரென்று தாக்கி ஆழமற்ற நீரில் வேட்டையாடுகிறது. இவை மெதுவாக நிலையாகப் பறக்கும் தன்மை கொண்டுள்ளன. இவை கழுத்தினைப் பின்னோக்கி வைத்துப் பறக்கும் தன்மையின் மூலம் நாரைகள், பூநாரை மற்றும் கரண்டிவாயன்களிலிருந்து வேறுபடுகிறது.
வகைப்பாட்டியல்
ஆர்டியா பேரினம் 1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸால் 1758ஆம் ஆண்டு தனது சிசுடமா நேச்சுராவின் பத்தாவது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பேரினத்தின் பெயர் "ஹெரான்" என்று பொருள்படும் லத்தீன் வார்த்தையான ஆர்டியாவிலிருந்து வந்தது. இந்த மாதிரி இனம் சாம்பல் நாரை (ஆர்டியா சினேரா) என்று 1840இல் ஜோர்ஜ் இராபர்ட் கிரே என்பவரால் பெயரிடப்பட்டது.
ஆர்டியாவின் சில சிற்றினங்கள் சாம்பல், பெரிய நீலம் மற்றும் கோகோய் நாரை போன்றவற்றுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையன. இவை ஒரு பெரும் சிற்றினத்தை உருவாக்குகின்றன. இருப்பினும், குறிப்பாகப் பெரிய கொக்கு, எக்ரெட்டா ஆல்பா மற்றும் காசுமரோடியசு ஆல்பசு போன்றவை பல்வேறு வகைப்பாட்டியலாளர்களில் பிற பேரினங்களில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தச் சிற்றினம் நிறத்தைத் தவிர எல்லாவற்றிலும் பெரிய ஆர்டியா நாரைகளை ஒத்திருக்கிறது. அதேசமயம் இது சிறிய வெள்ளை கொக்குகளுடன் குறைவான ஒற்றுமைகளைக் காட்டுகிறது.
சிற்றினங்கள்
இந்த பேரினத்தில் 16 சிற்றினங்கள் உள்ளன:
பல ஆர்டியா சிற்றினங்கள் துணை புதைபடிவ அல்லது புதைபடிவ எலும்புகளிலிருந்து மட்டுமே அறியப்படுகின்றன. ஆர்டியா மற்றும் எக்ரெட்டா பேரினங்களின் இடம் தற்காலிகமாக இருக்கலாம்.
பெனு ஹெரான், ஆர்டியா பென்னுடிசு (வரலாற்றுக்கு முந்தையது)
ஆர்டியா சிற்றினம். (மத்திய மியோசீன் கண்காணிப்பு சுரங்கம், அமெரிக்க ஐக்கிய நாடு).
ஆர்டியா சிற்றினம். (காதல் எலும்பு படுக்கையின் கடைசி மியோசீன், அமெரிக்க ஐக்கிய நாடு).
ஆர்டியா போல்கென்சிசு (எலும்பு பள்ளத்தாக்கின் ஆரம்பக்கால பிளியோசீன், அமெரிக்க ஐக்கிய நாடு).
ஆர்டியா கோவார்டே (புதைபடிவம்)
ஆர்டியா பெர்ப்ளெக்சா என்று விவரிக்கப்படும் எச்சங்கள் இப்போதெல்லாம் பொதுவாக ஜெரோண்டிகசு பேரினத்தின் அரிவாள் மூக்கன் அல்லது நெருங்கிய தொடர்புடைய பேரினத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. "ஆர்டியா பார்மோசா" இப்போது புரார்டியோலா "ஆர்டியா" புருன்ஹுபெரி மற்றும் ஆ. சிமுலேசு முறையே தவறாக அடையாளம் காணப்பட்ட நீர்நாய் (பாலாக்ரோகோராக்சு இன்டர்மீடியசு) மற்றும் கொளதாரி (மியோகல்லசு ஆல்டசு) ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆர்டியா லிக்னிட்டம்-இது சமீபத்திய காலத்தின் புதைபடிவம் என்று தோன்றுகிறது. இது ஒரு வகை பெரிய ஆந்தை; ஒருவேளை ஒரு யூரேசிய கழுகு-ஆந்தை (புபோ புபோ) கூட இருக்கலாம்.
மேற்கோள்கள்
பறவைப் பேரினங்கள் |
684314 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8 | வசந்த பியதிஸ்ஸ | வசந்த பியதிஸ்ஸ ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வாழும் நபர்கள் |
684315 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D | ஓசுமியம் பெண்டாகார்பனைல் | ஓசுமியம் பெண்டாகார்பனைல் (Osmium pentacarbonyl) என்பது Os(CO)5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம ஓசுமியம் சேர்மமான இச்சேர்மம் ஓசுமியத்தின் எளிமையான தனிமைப்படுத்தக்கூடிய கார்பனைல் அணைவுச் சேர்மமாகக் கருதப்படுகிறது. ஓசுமியம் பெண்டாகார்பனைல் நிறமற்ற ஆவியாகும் திரவமாகும். 280-290 பாகை செல்சியசு வெப்பநிலையில் 200 வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் மோனாக்சைடின் கீழ் திண்ம டிரை ஓசுமியம் டோடெக்காகார்பனைலைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூகம் ஓசுமியம் பெண்டாகார்பனைல் உற்பத்தி செய்யப்படுகிறது. மாறாக, 200 வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் மோனாக்சைடின் கீழ் திண்ம டிரை ருத்தேனியம் டோடெக்காகார்பனைலைச் (Ru3(CO)12) சேர்த்து 160 ° செல்சியசு வெப்பநிலையில் Ru(CO)5 ஆக மாறுகிறது. .
வினைகள்
ஓசுமியம் பெண்டாகார்பனைல் மாதிரிகளை 80 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது மீண்டும் டிரை ஓசுமியம் கொத்துக்கு மாறுகிறது. Ru(CO)5 சேர்மத்தை மீண்டும் Ru3(CO)12 சேர்மமாக மாற்றுவது அறை வெப்பநிலையில் நிகழ்கிறது. பெண்டாகார்பனைல் சேர்மத்தை குளோரினேற்றம் செய்தால் ஒரு நேர்மின் அயனி பெண்டாகார்பனைல் அணைவுச் சேர்மத்தை அளிக்கிறது:
Os(CO)5 + Cl2 → [Os(CO)5Cl]+Cl−
புற ஊதா கதிர்வீச்சின் போது, பெண்டாகார்பனைல் எக்சேன் கரைசல்கள் எத்திலீனுடன் வினைபுரிந்து மோனோ-, டை - மற்றும் டிரை என பதிலீடு செய்யப்பட்ட வழிப்பெறுதிகளைக் கொடுக்கின்றன:
Os(CO)5 + nC2H4 → Os(CO)5-n(C2H4)n + nCO (n = 1,2,3)
மேற்கோள்கள்
கார்பனைல் அணைவுச் சேர்மங்கள்
கரிம ஓசுமியம் சேர்மங்கள் |
684320 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | லிடியர்கள் | லிடியா மக்கள், அனதோலியாவின், (தற்கால துருக்கி நாட்டின்) மேற்கு பிரதேசமான லிடியாவில் வாழ்ந்த மக்கள் ஆவார். இம்மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியான அனதோலிய மொழிக் குடும்பத்தின் லிடியா மொழியைப் பேசினர். வரலாற்றாளர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களின் கூற்றுப்படி, இம்மக்கள் கிமு 2000 முதல் அனதோலியா பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்தனர். தனித்துவமான லிடியப் பண்பாடு, தென்மேற்கு அனதோலியாவில் கிமு முதல் நூற்றாண்டு வரை நீடித்தது. லிடியர்களின் தலைநகரம் சாடிஸ் நகரம் ஆகும். இது அனதோலியாவிற்கும், கிரேக்கத்திற்கும் இடையே இருட்ந்தது. லிடியர்களின் ஆட்சி கிமு 7 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 6ஆம் நூற்றாண்டு வரை மிகவும் செழித்திருந்த போது, லிடியாவிற்கு வடகிழக்கில் இருந்த ஃபிரிஜியாபகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். லிடியர்களின் நாட்டிற்கு கிழக்கில் மீடியாப் பேரரசு இருந்தது.
கிமு 546ல் பாரசீக அகாமனிசியப் பேரரசர் சைரசுவின் படைகளுடன் எக்லிப்ஸ் போரில்லிடியப் படைகள் வீழ்ச்சி கண்டதால், அத்துடன் லிடியர்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
படக்காட்சிகள்
இதனையும் காண்க
லிடியா
மீடியாப் பேரரசு
மேற்கோள்கள்
உசாத்துணை
துருக்கியின் வரலாறு
துருக்கிய மக்கள் |
684334 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81 | காவு | காவு (Kavu) என்பது தென் இந்தியாவின் கேரளத்தில் உள்ள மலபார் கடற்கரை முழுவதும் உள்ள புனித தோப்புகளுக்கு வழங்கப்படும் பாரம்பரியப் பெயராகும். கவுகள் பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கு நடனமான தெய்யத்துக்கு, குறிப்பிடத்தக்கவையாகும்.
பாம்புத் தோப்புகள்
சர்ப்பக் காவு (பொருள் பாம்புகளின் உறைவிடம்) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் பாரம்பரிய வீடுகளுக்கு அருகில் காணப்படும் இயற்கை புனித இடமாகும். இந்தத் தளங்களில் பாம்புகள் வசிப்பதாக நம்பப்படுகிறது, மேலும் இப்பகுதியில் பொதுவாக மானசா ('பாம்புகளின் தெய்வம்'), நாக ராஜா, பிற நாக தேவதைகள் போன்றவற்றிற்கான இடமாக கருதப்படுகிறது. மேலும் இங்கு நடக்கும் சிறப்பு விழாக்களின் போது காணிக்கை, சடங்குகள் போன்றவை செய்யப்படுகின்றன. இங்கு நம்பூதிரிகளில் சில பிரிவினரால் சடங்குகள் நடத்தப்படும்கின்றன. மேலும் அனைத்து சாதியினரும் சர்ப்ப காவுகளை பயபக்தியுடன் அணுகுகின்றனர். உரிய விழாக்களின்போது தவிர இப்பகுதிகளில் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஏராளமான சத்திரிய மன்னர்களைக் கொன்ற பரசுராமர், பின்னர் அரபிக்கடலில் இருந்து கேரளத்தை உருவாக்கி தான் செய்த அந்தக் கொலை பாவங்களுக்கு பரிகாரமாக, அந்த நிலத்தை "தானமாக" பிராமணர்களுக்கு (நம்பூதிரிகளுக்கு) வழங்கினார் என்று தொன்மங்கள் கூறுகின்றன. அந்த நிலம் காடுகளாலும், நச்சுப் பாம்பகளாலும் நிறைந்து காணப்பட்டது. எனவே பிராமணர்கள் அங்கே தங்க மறுத்தனர். அதனால் பரசுராமர் சிவபெருமானிடம் அதற்கு ஒரு தீர்வை வழங்குமாறு வேண்டினார். சிவன் பரசுராமனிடம் மானசா, அனந்தன், பாம்புகளின் அரசனான வாசுகி ஆகியோரை வணங்கத் தொடங்குமாறு கூறினார். பரசுராமர் அவ்வாறே செய்தார். மேலும் அவர் கேரளத்தில் பாம்பு வழிபாட்டைத் தொடங்கவும், குறிப்பாக சர்ப்பக்காவு (பாம்பு காடுகள்) என்ற பெயரில் பாம்புகளுக்கு சில காடுகளை வழங்கவும் அறிவுறுத்தினர். பரசுராமர் பின்னர் மன்னார்சாலை (ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு அருகே), வெட்டிக்கொட்டு (ஆலப்புழா மாவட்டத்தில் காயம்குளம் அருகில்) மானசா, அனந்தா, வாசுகி தேவி ஆகியோரின் சிலைகளை நிறுவி வழிபடத் தொடங்கினார். பிராமணர்களும் மானசா, அனந்தா , வாசுகி தேவி போன்றோரை வழிபட்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த நாக தெய்வங்கள் கேரளத்தை வாழ ஏற்றதாக மாற்றினர்.
சர்ப்பக் காவுகள் அதன் வளமான உயிரியல் செல்வத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் மண் மற்றும் நீர் வளத்தை பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றன. தோப்புகளை ஒட்டிய குளங்கள் மற்றும் நீரோடைகள் வற்றாத நீர் ஆதாரங்களாக உள்ளன. விலங்குகள், பறவைகள் போன்ற பல உயிர்களின் நீர் தேவைகளுக்காக, குறிப்பாக கோடையில் இவை கடைசி புகலிடமாக உள்ளன. புனித தோப்புகளிலிருந்து விழும் இலைதழைகளினால் உருவாகும் வளமான குப்பை கலவைகள் மண்ணை வளப்படுத்துகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் புனித தோப்பின் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் மறுசுழற்சி செய்யப்படுவது மட்டுமல்லாமல், அருகிலுள்ள வேளாண் அமைப்புகளுக்கும் உதவுகின்றன.
புனிதத் தோப்புகள்
காவு என்பது இந்தியாவில் உள்ள புனிதத் தோப்பின் தென்னிந்திய வடிவமாகும்.
இந்தியாவில் புனித தோப்புகள் என்பவை பல்வேறு அளவுகளில் உள்ள காடுகளின் முண்டுகளாகும். அவை சமூக ரீதியாக பாதுகாக்கப்படுகின்றன. பொதுவாக அவற்றைப் பாதுகாக்கும் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சமய நம்பிக்கையைக் கொண்டுள்ளன. இந்தக் காடுகளில் பொதுவாக வேட்டையாடுதலும், மரம் வெட்டுதலும் போன்றவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. தேன் சேகரிப்பு, சுள்ளி சேகரிப்பு போன்றவை சில நேரங்களில் அனுமதிக்கப்படுகின்றன. புனித தோப்புகள் இந்தியாவில் கூட்டாட்சி சட்டத்தின் மூலம் பாதுகாப்பைப் பெறவில்லை. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அத்தகைய தோப்புகளைப் பாதுகாக்க உள்ளூர் கிராம மக்களுடன் இணைந்து செயல்படுகின்றன. பாரம்பரியமாக, சில சமயங்களில் இன்றும் கூட, உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தோப்பைப் பாதுகாக்கின்றனர். இருப்பினும் வன விலங்கு (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2002 இன் கீழ் புனித தோப்புகளை உள்ளடக்கிய சமூகத்திற்கு சொந்தமான நிலங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய புனித தோப்புகள் சில நேரங்களில் கோயில்கள் / மடங்கள் / இடுகாடுகளுடன் தொடர்புடையவை (இதுபோல் யப்பானில் முறையே சிந்தோ மற்றும் ரியுக்யுவான் சமயம்- அடிப்படையிலான புனித தோப்புகள் உள்ளன). ஆல்பைன் புல்வெளிகள் போன்ற சமய அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பிற இயற்கை வாழ்விடங்களையும் புனித தோப்புகள் போன்றவையாக கருதலாம்.
புனித தோப்புகள் பற்றிய வரலாற்று குறிப்புகளை காளிதாசனின் விக்கிரமோவர்சியம் வரையிலான பண்டைய செவ்வியல் இலக்கியங்களில் இருந்து காணலாம்.
நம்பிக்கைகளும் நடைமுறைகளும்
பொதுவாக, இத்தகைய தோப்புகள் "முதன்மை தெய்வம்" என்ற கருத்துடன் தொடர்புடையவை. இந்த புனித தெய்வங்களில் பெரும்பாலானவை உள்ளூர் இந்து கடவுள்களுடன் தொடர்புடையவை என்றாலும், இஸ்லாமிய மற்றும் பௌத்த மரபைச் சேர்ந்த புனித தோப்புகள் மற்றும் சில சிறிய உள்ளூர் சமயங்கள் மற்றும் நாட்டுப்புற சமயங்களை அடிப்படையாகக் கொண்டவை (நாட்டுப்புற தெய்வங்கள் என்பவை அய்யனார், அம்மன் போன்றவை) என அறியப்படுகின்றன. கேரளம் மற்றும் கருநாடகத்தில் மட்டும் புனித தோப்புகளுடன் தொடர்புடைய 1000 தெய்வங்கள் உள்ளன. கருநாடகத்தின் குடகு மாவட்டத்தில் பழங்காலத்திலிருந்தே குடகுடகு மக்களின் தற்காப்பு சமூகம் ஐயப்ப வனக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 1000 தேவ காடுகளை பராமரித்து வந்தது.
இந்து பாரம்பரியம் காடுகள் தபோவனம், மகாவனம், ஸ்ரீவனம் என்ற மூன்று வகைகளாக கருதப்படுகின்றன. தபோவனம் என்பது தவத்துடன் தொடர்புடைய காடுகளாகும். அவற்றில் துறவிகளும், ரிஷிகளும் வசிப்பர். மகாவனம் என்பது பெரும் இயற்கை காடுகளைக் குறிக்கிறது. சாதாரண மனிதர்கள் இந்தக் காடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், தபோவனமும், மகாவனமும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான ஒரு சரணாலயமாக கருதப்படுகின்றன. ஸ்ரீவனம், அதாவது," செழிப்பு தெய்வத்தின் காடுகள்", அடர்ந்த காடுகள் மற்றும் தோப்புகளைக் கொண்டுள்ளதாகும். முந்தையவற்றிலிருந்து, மக்கள் காய்ந்த மரங்கள், இலைகள், வன விளைபொருட்கள், குறைந்த அளவு மரங்களை சேகரிப்பார்கள். இதனால் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பு தேவையில்லாமல் தொந்தரவு செய்யப்படாது. தோப்புகள் தான் அறுவடை செய்யக்கூடிய காடுகளகக் கருதப்பட்டன. சில நேரங்களில், மா மரங்கள் போன்ற குறிப்பிட்ட மரங்களை தோப்புகளில் நட்டு வளர்ப்பர். தோப்புகள் சமய சடங்குகள், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளுடன் தொடர்புடையவை. கிராமங்களில், பஞ்சவாடி, அல்லது காடுகளைக் குறிக்கும் ஐந்து மரங்களின் தொகுப்பு பராமரிக்கப்பட்டன. இந்த மரங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன.
இடங்கள்
புனித தோப்புகள் நாடு முழுவதும் ஆங்காங்கே பரவியுள்ளன. அவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. இராசத்தானின் தார் பாலைவனத்தில் பிஷ்னோயிகளால், பராமரிக்கப்படும் புதர்க்காடுகள் முதல் கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பொழில் காடுகள் வரை உள்ளன. குறிப்பாக வடக்கில் இமாச்சலப் பிரதேசமும் தெற்கில் கேரளமும் ஏராளமான புனித தோப்புகளைக் கொண்டுள்ளதற்கு பெயர் பெற்றவை. கருநாடகத்தின் குடகு மக்கள் மட்டும் தங்கள் பகுதியில் 1000-இக்கும் மேற்பட்ட புனித தோப்புகளை பராமரித்து வந்தனர். இராத்தானின் குஜ்ஜர் மக்கள் வேப்ப மரத்தை நட்டு கடவுள் தேவ்நாராயணனின் இருப்பிடமாக கருதி வழிபடும் தனித்துவமான நடைமுறையைக் கொண்டுள்ளனர். இதனால், ஒரு குர்ஜர் குடியிருப்பானது மனிதர்கள் வசிக்கும் புனித தோப்பு போல் தோன்றுகிறது. இதேபோல் தில்லியில் கடைசியாக எஞ்சியிருக்கும் இயற்கை காடான மங்கர் பானி அதன் அருகிலுள்ள குர்ஜர்களால் பாதுகாக்கப்படுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து 14,000 புனித தோப்புகள் பதிவாகியுள்ளன. அவை கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு மத்தியில் அரிய விலங்கினங்கள், அரிய தாவரங்கள் போன்றவற்றிற்கான வாழிடமாக செயல்படுகின்றன. புனித தோப்புகளின் மொத்த எண்ணிக்கை 100,000 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத சுமார் 1000 கி. மீ.2 நிலங்களில் புனித தோப்புகளுக்குள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, மகத்தான பல்லுயிர் வளத்தைக் கொண்ட கேரளத்தின் காவுகள் சில மிகவும் பிரபலமான தோப்புகள் ஆகும். மேலும் மேகாலயாவின் சட்ட கிண்டாங்குகள் - ஒவ்வொரு கிராமத்துடனும் தொடர்புடைய புனித தோப்புகள் (மாவ்ப்லாங் மற்றும் மௌஸ்மாய் ஆகிய இரண்டு இடங்களில்) பெரிய தோப்புகள் உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய புனித தோப்புகளில் உத்தரகாண்ட மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள கஞ்சருக்கு அருகில் உள்ள ஹரியாலி மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு அருகில் உள்ள ஷிபினில் உள்ள தேவதாரம் தோப்பு ஆகியவை அடங்கும். கருநாடகத்தின் குடகில், சுமார் 4000 கி. மீ.2 பரப்பளவிலான சிறிய பகுதியில், 1000-க்கும் மேற்பட்ட புனித தோப்புகள் இருந்தன.
அனைத்து எண்களும் சி. பி. ஆர் பதிவுகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்திய அரசின் சுற்றுச்சூழல் கல்வி மையம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட புனித தோப்புகளின் முழுமையான பட்டியலைப் பராமரிக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை இணையத்தில் உள்ளன.
பயன்கள்
பாரம்பரிய பயன்பாடுகள்: புனித தோப்புகளின் மிக முக்கியமான பாரம்பரிய பயன்பாடுகளில் ஒன்றாக, பல்வேறு ஆயுர்வேதம், சித்த மருந்துகளின் களஞ்சியமாக செயல்படுகின்றன. மற்ற பயன்பாடுகளில் பழங்கள், தேன் போன்ற வளங்களின் ஆதாரமாகவும் விளங்கின. இருப்பினும், பெரும்பாலான புனித் தோப்புகளில் மரங்களை வெட்டுவது தடைசெய்யப்பட்டது. இவை மண் அரிப்பைக் குறைக்கவும், பாலைவனமாக்கல்லைத் தடுக்க உதவுகிறது. புனிதத் தோப்புகள் பெரும்பாலும் குளங்கள் மற்றும் நீரோடைகளுடன் தொடர்புடையவை, அவை உள்ளூர் சமூகங்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. அவை சில நேரங்களில் நிலத்தடி நீர்நிலைகளை பெருக்கவும் பயன்பட்டன.
நவீன பயன்கள்: நவீன காலங்களில், பல்வேறு உயிரினங்கள் அவற்றின் வாழ்விட அழிப்பு, வேட்டையாடுதல் காரணமாக இந்தப் பகுதிகளில் தஞ்சம் அடைவதால், புனித தோப்புகள் பல்லுயிர் மையங்களாக மாறிவிட்டன. புனித தோப்புகளில் பெரும்பாலும் அண்டைப் பகுதிகளில் அழிந்துபோன தாவர, விலங்கு இனங்களின் விழிடமாக உள்ளன. இது தவிர, நகர்ப்புற நிலப்பரப்புகளில் உள்ள புனித தோப்புகள் நகரத்திற்கு "நுரையீரல்களாகவும்" செயல்படுகின்றன.
அச்சுறுத்தல்கள்
தோப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் நகரமயமாக்கல், வளங்களை அதிகப்படியாக சுரண்டுதல் (அதிகப்படியான மிகை மேய்தல் மற்றும் மிகுதியான விறகு சேகரிப்பு போன்றவை), சமய நடைமுறைகள் காரணமாக சுற்றுச்சூழல் அழிவு ஏற்படுகின்றது. தோப்புகள் பல நாட்டார் தெய்வங்களின் வசிப்பிடங்களாகக் கருதப்பட்டாலும், அண்மைக் காலங்களில் அவற்றில் பல இந்து கோயில்கள் கட்டுவதற்கு ஓரளவு அழிக்கப்பட்டுள்ளன. புனித தோப்புகளுக்கு ஏற்படும் மற்ற அச்சுறுத்தல்களில் ஆக்கிரமிப்பு உயிரினங்களான குரோமோலேனா ஓடோராட்டா, உண்ணிச்செடி , சீமைக்கருவேலம் போன்ற தாவர இனங்கள் அடங்கும்.
மரபுகள்
தோப்புகளின் தெய்வங்களுடன் தொடர்புடையவையாக ஏராளமான தனித்துவமான உள்ளூர் கலை வடிவங்களும், நாட்டுப்புற மரபுகளும் உள்ளன. தோப்புகளைப் பாதுகாக்கும் உள்ளூர் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்ட சடங்கு நடனங்கள் மற்றும் நாடகங்கள் கேரளத்தில் தெய்யம் என்றும் கருநாடகத்தில் நாகமண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும், விரிவான சடங்குகள், நாட்டார் வழக்காற்றியல், நாட்டுப்புறத் தொன்மங்கள், மரபுகள் போன்றவற்றுடன் புனித தோப்புகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.
மேற்கோள்கள்
கேரள இந்துக் கோயில்கள்
இந்தியக் காடுகள் |
684337 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2034%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 34 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 34 (National Highway 34 (India)(தே. நெ. 34) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி தாம் முதல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள லக்னடோன் வரை செல்கிறது. இது உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக செல்கிறது.
வழித்தடம்
உத்தராகண்டம்
கங்கோத்ரி தாம், பட்வாரி, உத்தரகாசி, தாராசு, தெஹ்ரி, அம்பாட்டா, ரிசிகேசு, அரித்துவார்-உத்தரப் பிரதேச எல்லை.
உத்தரப்பிரதேசம்
நஜிபாபாத், பிஜ்னோர், மீரட், மவானா, காசியாபாத், புலந்த்சகர், அலிகார், சிக்கந்திர ராவ் (ஹத்ராஸ் எட்டா, கன்னோசி, கான்பூர், அமீர்பூர், மௌதா, மகோபா-மத்தியப் பிரதேசம் எல்லை.
மத்தியப் பிரதேசம்
சத்தர்பூர், கிராபூர், பட்டியாகர், தாமோ, ஜபல்பூர், பர்கி லக்னடோன் (சியோனி).
சந்திப்புகள்
-தாரசூவில் முதல் சந்திப்பு
லக்னடோன் அருகே முனையம்
சந்திப்பு சிக்கந்திர ராவ்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 34
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684339 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2035%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 35 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 35 (National Highway 35 (India))(தே. நெ. 35) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது. ஆனால் இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
வழித்தடம்
கஜுராஹோ, தும்ரா சௌராஹா, ராகோலி, மஹோபா, கப்ராய், பண்டா, கர்வி, மவு, பிரயாக்ராஜ், மிர்சாபூர், வாரணாசி.
சந்திப்புகள்
கஜுராஹோ அருகே முனையம்.
மகோபா அருகே முனையம்.
கப்ராய் அருகே முனையம்.
பண்டா அருகே .
சித்ரகூடம் அருகே
ராய்ப்புரா அருகே
ஜமிரா அருகே
பிரயாக்ராஜ் அருகே .
வாரணாசி அருகே முனையம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 35
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684340 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2037%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 37 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 37 (National Highway 37 (India))(தே. நெ. 37) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை அசாமின் கரீம்கஞ்ச் அருகே உள்ள பதர்பூர் மற்றும் மணிப்பூரின் இம்பால் இடையே செல்கிறது.
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுக்கு இந்த நெடுஞ்சாலை பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 37
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684341 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2041%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 41 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 41 (தே. நெ. 41) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் குசராத்து மாநிலத்தில் செல்கிறது. இது சமாக்கியாலியில் தொடங்கி நாராயண் சரோவரில் முடிவடைகிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலை 290 கிமீ (180 மைல்) நீளம் கொண்டது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை-41 சமாக்கியாலி, காந்திதாம், மாண்டவி, நலியா ஆகிய நகரங்களை இணைக்கிறது. குசராத்து மாநிலத்தில் உள்ள நாராயண் சரோவரில் முடிவடைகிறது.
சந்திப்புகள்
சமகியாலி அருகே முனையம்.
பீம்சர் அருகே
காந்திதம் அருகே
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 41
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684342 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2039%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 39 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 39 (National Highway 39 (India))(தே. நெ. 39) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சார்க்கண்டு வழியாக செல்கிறது.
வழித்தடம்
சுமார் 869 கிலோ மீட்டர் நீளமுள்ள (540 மைல்) இந்த நெடுஞ்சாலை ஜான்சி, சத்தர்பூர், பன்னா, சத்னா, ரேவா, இராம்பூர் நாய்கின், சித்தி, சிங்கரௌலி, ரேனுகுட், சக்திநகர் மற்றும் சார்க்கண்டின் சில முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.
சார்க்கண்டில் 262 கி. மீ. நீளமுள்ள இந்த சாலை பிலாசுபூர் கிராமம், காட்வா, டால்டன்கஞ்சில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-139ஐ இணைக்கிறது. பின்னர் லத்தேஹார் வழியாகச் சந்த்வா தேசிய நெடுஞ்சாலை 22ஐ இணைக்கிறது.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 39
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684343 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%2043%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 43 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 43 (தே. நெ. 43)(National Highway 43 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குல்கஞ்சியிலிருந்து சத்தீசுகர் வழியாகச் சார்க்கண்டில் உள்ள சைபாசாவில் முடிவடைகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 1, 062.5 கிமீ நீளமானது. தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு தே. நெ. 6 பழைய தேசிய நெடுஞ்சாலைகளாக 78, 23 மற்றும் 33 என பல்வேறு எண்களில் அழைக்கப்பட்டது.
வழித்தடம்
மத்தியப் பிரதேசம்
குல்கஞ்ச், ராஜ்புவா அமான்கஞ்ச், பவாய், கட்னி, உமரியா, ஷாஹ்டோல், அனுப்பூர், கோட்மா
சத்தீசுகர்
மனேந்திரகர், பைகுந்த்பூர், சூரஜ்பூர், அம்பிகாபூர், பதல்காவ், ஜஷ்புர்நகர்
சார்க்கண்டு
கும்லா, பெரோ, நாக்ரி, ராஞ்சி, புண்டு, தமார், சண்டில், மணிகுல், சரைகேலா, சைபாசா
சந்திப்புகள்
குல்கஞ்ச் அருகே முனையம்.
பவாய் அருகே
காட்னி அருகே
சாக்டோல் அருகே
அம்பிகாபூர் அருகே
அம்பிகாபூர் அருகே
கும்லா அருகே
கும்லா அருகே தே. நெ. 143ஏ.
சண்டில் அருகே
சைபாசா அருகே
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஓபன்ஸ்ட்ரீட்மேப்பில் தே. நெ. 43
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684344 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28II%29%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | யூரோப்பியம்(II) சல்பைடு | யூரோப்பியம்(II) சல்பைடு (Europium(II) sulfide) என்பது EuS என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட தூளாக இது காணப்படுகிறது. யூரோப்பியம் சல்பைடில் யூரோப்பியம் +II என்ற ஆக்சிசனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. அதேசமயம் இலாந்தணைடுகள் ஒரு பொதுவான +III என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகின்றன. யூரோப்பியம்(II) சல்பைடின் கியூரி வெப்பநிலை 16.6 கெல்வின் ஆகும். இந்த வெப்பநிலைக்குக் கீழே இது ஒரு ஃபெரோ காந்த சேர்மம் போல செயல்படுகிறது, மேலும் அதற்கு மேலான வெப்பநிலையில் எளிய பாரா காந்த பண்புகளை வெளிப்படுத்துகிறது. EuS ஆனது ஆக்சிசனேற்றத்தின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் போது, காற்றில் 500 °செல்சியசு வெப்பநிலை வரை நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. மந்தவாயுச் சூழலில் இது 1470 °செல்சியசு வெப்பநிலையில் சிதைகிறது.
கட்டமைப்பு
யூரோப்பியம்(II) சல்பைடு பாறை உப்பு கட்டமைப்புடன் முகமைய கனசதுரம் (FCC) படிக அணிக்கோவையில் படிகமாகிறது. யூரோப்பியம் மற்றும் கந்தகம் இரண்டும் ஆறின் ஒருங்கிணைப்பு எண்ணுடன் எண்முக ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன. Eu-S பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.41 Å. ஆகும்.
தயாரிப்பு
தூள் செய்யப்பட்ட யூரோப்பியம்(III) ஆக்சைடு (Eu2O3) சேர்மத்துடன் ஐதரசன் சல்பைடைச் சேர்த்து (H2S) 1150 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் யூரோப்பியம்(II) சல்பைடு உருவாகிறது. வினையில் உருவான கச்சா EuS சேர்மத்திலுள்ள அதிகப்படியான கந்தகத்தை அகற்ற வெற்றிடத்தின் கீழ் 900 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி சுத்திகரிக்கப்படுகிறது.
Eu2O3 + 3 H2S → 2 EuS + 3 H2O + S
EuS கூடுதலாக யூரோப்பியம் டைகுளோரைடிலிருந்து (EuCl2) தயாரிக்கப்பட்டது. இருப்பினும், அத்தகைய பொருட்கள் குளோரைடால் மாசுபடுத்தப்படுகின்றன.
ஆராய்ச்சி
கடந்த சில தசாப்தங்களில், EuS மற்றும் இதன் ஆக்சிசன் ஒப்புமை EuO ஆகியவற்றின் தொகுப்பு, சீரொளி சாளரப் பொருட்கள், மின்காப்பு பெர்ரோ காந்தங்கள், பெர்ரோகாந்த குறைக்கடத்திகள் மற்றும் காந்தமண்டல எதிர்ப்பு, ஒளிகாந்த மற்றும் ஒளிரும் பொருட்கள் போன்ற திறன்களின் காரணமாக ஒரு புதிய ஆர்வத்தை ஈர்த்துள்ளது. குவாண்டக் கணினியியலில் குவிட்களின் உற்பத்தி தொடர்பான மச்சோரானா பெர்மியன்களின் சான்றுகளை வழங்கும் ஒரு பரிசோதனையில் EuS பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
யூரோப்பியம்(II) சேர்மங்கள்
மோனோசல்பைடுகள்
பாறை உப்பு படிகக் கட்டமைப்பு |
684345 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | தேவோசா சட்டமன்றத் தொகுதி | தேவோசா சட்டமன்றத் தொகுதி (Teosa Assembly constituency) இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். இது அமராவதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
684353 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF | சத்ய சாய் மகளிர் கல்லூரி | சத்ய சாய் மகளிர் கல்லூரி (Sathya Sai College For Women) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். இது ஜெய்ப்பூரின் ஜவகர் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரி 1974-இல் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி இராசத்தான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
இன்றைய இந்தியா
சைக்கோலெஜ்
இராசத்தானில் கல்வி |
684354 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF | மகாராணி கல்லூரி | மகாராணி கல்லூரி (Maharani College) என்பது இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். 1944ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கல்லூரி இராசத்தான் பல்கலைக்கழகத்தின் ஆறு உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது மகாராணி காயத்ரி தேவி பெயரில் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இராசத்தானில் கல்வி |
684358 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF | இராசத்தான் கல்லூரி | இராசத்தான் கல்லூரி (Rajasthan College) என்பது இராசத்தான் பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரி ஆகும். இது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு முன்னணி கலை மற்றும் சமூக அறிவியல் கல்லூரியாகும். இது 1957ஆம் ஆண்டில் "இராசத்தான் அரசு கல்லூரி" என நிறுவப்பட்டது. இது ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் ஏழு உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரியில் நுண்கலை, சமூக அறிவியல் மற்றும் மொழிகளில் இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் உள்ள விவேகானந்தர் விடுதி, பல்கலைக்கழக விடுதி, கல்லூரியுடன் தொடர்புடைய விடுதிகள் ஆகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஜெய்ப்பூரில் உள்ள கல்லூரிகள்
ராஜஸ்தான் சிறப்பு பி. எஸ். டி. சி கல்லூரி பட்டியல்
இராசத்தானில் கல்வி |
684359 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20943%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 943 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 943 (National Highway 943 (India)) பொதுவாக தே. நெ. 943 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 43இன் துணைச் சாலையாகும். தே. நெ. 943 இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
பாவாய்-சலேஹா- (ஜசோ) ஜசு-நாகோட்.
சந்திப்புகள்
பவாய் அருகே முனையம்
நாகோட் அருகே முனையம்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 943
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684362 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88 | ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை | ராஜுவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இந்திய நாட்டின் புதுச்சேரி ஒன்றியத்தின் தலைநகரான பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனை ஆகும். இது 300 ஆண்டுகாள பழமைவாய்ந்தது . 2017 ஆம் ஆண்டு 270 படுக்கை வசதியில் இருந்து 700 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது .
மேற்கோள்கள் |
684363 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | தானே சட்டமன்றத் தொகுதி | தானே சட்டமன்றத் தொகுதி (Thane Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தானே மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். தானே மும்பைக்கு அருகில் உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேலும் காண்க
தானே மக்களவை தொகுதி
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684365 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D | சஞ்சய் முகுந்த் கேல்கர் | சஞ்சய் முகுந்த் கேல்கர் (Sanjay Mukund Kelkar) ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக உறுப்பினராக உள்ளார்.
தொகுதி
சஞ்சய் முகுந்த் கேல்கர் மகாராட்டிரா தானே நகரச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வகித்த பதவிகள்
மகாராட்டிரா சட்டப்பேரவை
மேற்கோள்கள்
1956 பிறப்புகள்
வாழும் நபர்கள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் |
684368 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20156%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 156 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 156 (National Highway 156 (India)) பொதுவாக தே. நெ. 156 என குறிப்பிடப்படுகிறது. இது இராசத்தானின் நிம்பாகெரா நகரத்தை மத்தியப் பிரதேச எல்லையுடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 156
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684370 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE | நிம்பாகெரா | நிம்பாகெரா (Nimbahera) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சித்தோர்கார் நகரத்திலிருந்து 32 கி. மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரிலிருந்து கி. மீ (220 மைல்) தொலைவில் தென்மேற்கிலும் அமைந்துள்ளது. நிம்பாகோரா தொடருந்து மற்றும் சாலை இரண்டின் மூலமும் இணைக்கப்பட்டுள்ளது. இது அஜ்மீரை இரத்லாமுடன் இணைக்கும் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது.
நிம்பாகெராவில் மேவதி சமூகத்தின் கணிசமான மக்கள் தொகை உள்ளது.
புவியியல்
நிம்பாகெரா 24°37′N 74°41′E/24.62 °N 74.68 °E/ புவியியல் கூற்றில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நிம்பாகோராவின் மக்கள் தொகை 78,123 ஆகும். நிம்பாகோரா மக்கள் தொகையில் 19% பேர் 6 வயதிற்குப்பட்டவர்கள்.
பொருளாதாரம்
நிம்பாகெரா கல், கட்டுமானப் பொருளாகவும், பைஞ்சுதை உற்பத்தியில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான சுண்ணக்கல்லிற்கு பெயர் பெற்றது. இதனால் இப்பகுதி பைஞ்சுதை தொழில்களுக்கு பொருத்தமான இடமாகவும், நல்ல வேலைவாய்ப்பின் ஆதாரமாகவும் உள்ளது. நிம்பாகெராவில் ஜே. கே. பைஞ்சுதை, நிம்பாகெரா & மன்க்ரோல், வொண்டர் பைஞ்சுதை மற்றும் நுவோகோ பைஞ்சுதை ஆகிய நான்கு சிமென்ட் ஆலைகள் உள்ளன. வொண்டர் பைஞ்சுதை தனது முதல் ஆலையின் மூலம் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் பைஞ்சுதையினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
மேற்கோள்கள்
இராசத்தான் தொல்லியற்களங்கள்
Coordinates on Wikidata |
684372 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 | மொரிசியசு இரவுக் கொக்கு | மொரிசியசு இரவு கொக்கு (Mauritius night heron) என்பது மொரிசியசு நாட்டில் அழிந்துபோன இரவுக் கொக்கு சிற்றினமாகும். மேர் ஆக்ஸ் சாங்சில் காணப்படும் மண்டை ஓடு, இடுப்பு, காக்கையலகுருவெலும்பு, அரந்தி, ஆரை மற்றும் கணுக்காலனுவெலும்பு ஆகிய ஏழு துணை புதைபடிவ எலும்புகளால் மட்டுமே இது அறியப்படுகிறது. இன்று காக்கையலகுருவெலும்பு மற்றும் கணுக்காலனுவெலும்பு மட்டுமே எஞ்சியுள்ளன. இது 1893ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் நியூட்டன் மற்றும் ஹான்ஸ் கடோ ஆகியோரால் உயிரியல் ரீதியாக விவரிக்கப்பட்டது. நியூட்டன் மற்றும் கேடோ ஆகியோர் கணுக்காலனுவெலும்பு 81 முதல் 87 மிமீ வரை அளவிட்டனர். இது 1693ஆம் ஆண்டில் பிரான்சுவா லெகுவாட் என்பவரால் முதன்முதலில் குறிப்பிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இவர் இதனை பறக்கக் கூடிய பெரிய நாரை என்று விவரித்தார்.
மேற்கோள்கள்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அற்றுவிட்ட இனம் |
684373 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF | சி. எஸ். ராதாதேவி | சி. எஸ். ராதாதேவி (C. S. Radhadevi) கேரளாவைச் சேர்ந்த ஒரு பின்னணிப் பாடகியும், பின்னணி குரல் கலைஞரும், வானொலிக் கலைஞரும் மற்றும் நடிகையும் ஆவார். இராதாதேவி ஏழு தசாப்தங்களாக மலையாள வானொலி ஒலிபரப்புத் துறையில் உள்ளார். 30 வருடங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். கேரளா சங்கீத நாடக அகாதமி கூட்டுறவு, கேரள சங்கீத நாடக அகாதமி விருது, கேரள சங்கீத நாடக அகாதமியின் குருபூஜா விருது, கேரளத் திரைப்பட விமர்சகர் விருது மற்றும் மலையாளத் திரைத்துறைக்கு இவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வாழ்க்கை வரலாறு.
சி. எஸ். ராதாதேவி 1931 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரில சிவசங்கரன் பிள்ளை மற்றும் செல்லம்மாள் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே நடனம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். வைக்கம் மணி ஐயர் மற்றும் இரணியல் தங்கப்பன் இவரது முதல் குருக்கள் ஆவர். இவர் சென்னையைச் சேர்ந்த இராமநாத பாகவதரிடம் கருநாடக இசையைக் கற்றுக்கொண்டார். பின்னர் தைக்காடு இசைப் பள்ளியில் ஒரு வருடம் இசை பயின்றார்.
சொந்த வாழ்க்கை
பல்கலைக்கழக உதவி பதிவாளராக இருந்த என். நாராயணன் நாயர் என்பவரை இராதாதேவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு என். நந்தகோபன் என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.
தொழில் வாழ்க்கை
இராதாதேவி தனது 13 வயதில் டி. என். கோபிநாதன் நாயர் என்பவர் எழுதிய நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். இவரது தந்தை சிவசங்கரன் பிள்ளை ஆரம்பத்தில் இவரது நடிப்பை எதிர்த்தார். 1944 ஆம் ஆண்டில், யச்சகமோகினி மற்றும் அம்பிகாபதி (தமிழ்) ஆகிய படங்களில் குழந்தை நடிகையாக நடித்தார். இவர் யச்சகமோகினியில் நடித்தடோடல்லாமல் நடனமும் ஆடினார். 1948 ஆம் ஆண்டில், திக்குறிசி சுகுமாரன் இயக்கத்தில் ஸ்த்ரீ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். பின்னர் நடிகர் பகதூர் இயக்கிய பல்லதா பஹயான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மலையாளத் திரைப்படங்களின் ஆரம்ப நாட்களிலிருந்து இராதாதேவி பின்னணி பாடும் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திருநாயினார்குறிச்சி மாதவன் நாயர் என்பவர் இராதாதேவியை பின்னணி பாடலுக்கு அழைத்து வந்தார். 1950 ஆம் ஆண்டு நல்லதங்கா என்ற திரைப்படத்தில் கவிஞர் தட்சிணாமூர்த்தியின் பாடலுக்கு கே. ஜே. யேசுதாஸின தந்தை அகஸ்டின் ஜோசப்புடன் முதன்முதலில் பாடினார். இராதாதேவி 30 ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார்.
இராதாதேவி ஏழு தசாப்தங்களாக மலையாள வானொலி ஒலிபரப்புத் துறையில் உள்ளார். 1942 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் வானொலி நிலையத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கிய இவர், 1950 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியில் ஒரு கலைஞராக சேர்ந்தார். அனைத்திந்திய வானொலியில் பணிபுரியும் போது, இராதாதேவி பின்னணி குரல் துறையில் நுழைந்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குரல் கொடுத்துள்ளார். ஒரு பின்னணி குரல் கலைஞராக, ஜி. விஸ்வநாத் இயக்கிய வனமாலா (1951) படத்தில் ஒரு குழந்தை நடிகைக்காக இவர் முதலில் குரல் கொடுத்தார். ஒரு கதாநாயகிக்கான இவரது முதல் டப்பிங் ஞானசுந்தரி (1961) படத்தில் இருந்தது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
1983 இல், இராதாமணி கேரள சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில், இவர் கேரள சங்கீத நாடக அகாடமி கூட்டுறவு மூலம் கௌரவிக்கப்பட்டார். கேரள சங்கீத நாடக அகாதமியின் குருபூஜா விருது, கேரள திரைப்பட விமர்சகர் விருது, தாகூர் ஜெயந்தி விருது, மலையாளத் திரைப்படத் துறைக்கு சிறந்த பங்களிப்பிற்கான கேரள அரசின் திரைப்பட விருது, நாட்டியகிரிகம் விருது, டி. ஆர். சுகுமாரன் நாயர் நினைவு விருது, சுவாதித்திருநாள் சங்கீதசபா விருது, சுவரம் விருது, பாரதியகலாபீடம் சங்கீத சங்கம புரஸ்காரம் மற்றும் 60 ஆண்டுகால சேவைக்கான அகில இந்திய வானொலி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
வாழும் நபர்கள்
1931 பிறப்புகள் |
684375 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%29 | ஜெயந்தன் (இராமாயணம்) | ஜெயந்தன்,தேவர்களின் தலைவன் இந்திரன்-இந்திராணி தம்பதியரின் மகனும், ஜெயந்தியின் அண்ணனும் ஆவார்.
இராமாயணத்தில், ஜெயந்தன் காகம் வடிவம் கொண்டு சீதையை கொத்திய கதை கூறப்பட்டுள்ளது.
இராமாயணம்
காக வடிவத்தில் ஜெயந்தன்
இராமயாணத்தின் சுந்தர காண்டத்தில், இராவணனால் அசோக வனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதை, தனக்கும், இராமருக்கும் மட்டும் தெரிந்த ஒரு நிகழ்ச்சியை, இராமருக்கு தெரிவிக்குமாறு அனுமனிடம் கூறினார். 14 ஆண்டு வனவாசத்தின் போது சித்திரகூடம் காட்டில் சீதையின் மடியில் தலைவைத்து இராமன் படுத்திருந்த நேரத்தில் காகம் வடிவத்தில் வந்த ஜெயந்தன் சீதையின் மார்பைக் கொத்திக் கிழித்தான்.இதனை அறிந்த இராமர் ஜெயந்தன் மீது சக்தி வாய்ந்த பிரம்மாஸ்திரத்தை ஏவினார். தன்னை தாக்க வந்த கணை ஜெயந்தனால் தடுக்க இயலாது, இந்திரன், பிரம்மா, சிவன் முதலானவர்களிடம் சரண் அடைந்தான். அவர்கள் கணையை ஏவியவரிடமே சரணாகதி அடைந்தால் மட்டுமே உயிர் தப்புவாய் எனக்கூறினர். அவ்வாறே, ஜெயந்தன் இராமரிடம் சரணாகதி அடைந்து, வலது கண்ணை மட்டும் இழந்து, உயிர் தப்பினான். இராமருக்கு மட்டுமே தெரிந்த இந்நிகழ்ச்சியை கிஷ்கிந்தையில் இருக்கும் இராமரிடம் கூறுவாயாக எனச்சீதை அனுமனிடம் கேட்டுக் கொண்டார்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
சீதையின் செய்தி | சுந்தர காண்டம் சர்க்கம் - 67 (37)
இராமாயணக் கதைமாந்தர்கள் |
684377 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29 | ஜெயந்தி (இந்து தொன்மவியல்) | ஜெயந்தி, இந்திரன்-இந்திராணி தம்பதியரின் மகளும், ஜெயந்தனின் தங்கையும்., அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியின் மனைவியும் ஆவார். இவர்களின் ஒரே மகள் தேவயானி ஆவார்.
மேற்கோள்கள்
இந்து தொன்மவியல் மாந்தர் |
684379 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF | கைராடி | கைராடி (Kairady) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது ஆயிலூர் கிராம ஊராட்சியின் ஒரு பகுதியாகும்.
மக்கள்வகைப்பாடு
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கைராடியின் மொத்த மக்கள் தொகை 8695 ஆகும். இதில் 4248 பேர் ஆண்களும், 4447 பேர் பெண்களுமாவர்.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
684380 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 | கல்லாமலை | கல்லாமலை (Kallamala) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது அகாலி கிராம ஊராட்சியின் கீழ் உள்ளது.
மக்கள்வகைப்பாடு
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கல்லாமலை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 12,379 ஆகும். அதில் 6,030 பேர் ஆண்களும், 6,349 பெண்களும் ஆவர். ஊரில் மொத்தம் 2,861 வீடுகள் உள்ளன. 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,420 ஆக இருந்தது, அதில் 693 பேர் ஆண் பிள்ளைகளும், 727 பேர் பெண் பிள்ளைகளுமாவர். கல்லாமலையின் ஒட்டுமொத்த எழுத்தறிவு 87.7% ஆகும். அதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 91.3% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 84.3% என்றும் உள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
684383 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88 | வாகூர் அணை | வாகூர் அணை (Waghur Dam) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் கந்தாரி மற்றும் வரதிம் அருகே வாகூர் ஆற்றில் அமைந்துள்ள ஒரு மண் நிரப்பு அணையாகும்.
வாகூர் ஆறு அஜந்தா குகைகள் அருகிலுள்ள அதன் மூலத்திலிருந்து காந்தேசு பகுதி வழியாகப் பாய்கிறது. இங்குப் புகழ்பெற்ற உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இந்த பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகள் மகாராட்டிராவின் நீர்வளத் துறையால் எடுக்கப்பட்டு 1978இல் கட்டுமானம் தொடங்கியது. அணையின் முக்கிய நோக்கம் கீழ்நிலைப் பகுதியில் நீர்ப்பாசன நோக்கத்திற்காகத் தண்ணீரை வழங்குவதாகும். பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளில் கால்வாய்கள் கட்டப்பட்டன. 2006ஆம் ஆண்டில், வாகூர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சாதனை மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டது. அணையின் மீது சுமார் 40 டி. எம். சி தண்ணீர் சேர்ந்தது. 2008ஆம் ஆண்டு நிலவரப்படி, அணையின் நீர்த்தேக்கம் 8.5 டி. எம். சி சேமிப்பு திறனைக் கொண்டிருந்தது.
அணைக்குக் கூடுதலாக இருபது கசிவு வாயில்கள் திட்டமிடப்பட்டன. இதனால் சேமிப்பு திறன் ஒன்றரை டி. எம். சி அதிகரித்துள்ளது. சுமார் 500 ஆயிரம் மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், வறட்சியால் பாதிக்கப்படும் சுமார் 64,000 ஏக்கர் ( சதுர கிலோமீட்டர்) நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதும் இந்தத் திட்டமாகும்.
விவரக்குறிப்புகள்
அணையின் உயரம் 13.6 மீட்டராகும். இதன் நீளம் 690 மீட்டர். அணையின் நீர்த்தேக்க கொள்ளளவு 8.5 டி. எம்.. சி.
மேலும் காண்க
இந்தியாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
மகாராட்டிர அணைகள் |
684384 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88 | முத்துமெனிக்கே ரத்வத்தை | முத்துமெனிக்கே ரத்வத்தை ஓர் இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆவார்
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வாழும் நபர்கள்
1976 பிறப்புகள் |
684385 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D | மகாராட்டிராவிலுள்ள அணைகளும் நீர்த்தேக்கங்களும் | மகாராட்டிராவிலுள்ள அணைகளும் நீர்த்தேக்கங்களும் (List of dams and reservoirs in Maharashtra) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் சுமார் 1821 குறிப்பிடத்தக்கப் பெரிய அணைகள் சிலவற்றில் பட்டியல் ஆகும்.
மகாராட்டிராவில் உள்ள அணைகளின் விவரக்குறிப்புகள்
கீழே உள்ள அட்டவணை மகாராட்டிரா மாநிலத்தின் அணைகளை அவற்றின் விவரக்குறிப்புகளால் பட்டியலிடுகிறது. அணைகளின் மொத்த சேமிப்பு திறன் அடிப்படையில் 10,000.103 க்கும் அதிகமாக அணைகள் பட்டியலில்.
மேற்கோள்கள்
குறிப்புகள்
சகாரே, V.B.2005. "மகாராஷ்டிராவின் நீர்த்தேக்க மீன்வளம்". ஃபிஷிங் சைம்ஸ். 23(7):34-37
சகாரே, V.B.2007. நீர்த்தேக்க மீன்வளம் மற்றும் சுண்ணாம்பு, நரேந்திர பப்ளிஷிங் ஹவுஸ், தில்லி
சகாரே, V.B.2007. பயன்பாட்டு மீன்வளம். தயா பப்ளிஷிங் ஹவுஸ், டெல்லி
கொல்லாபுர்த்தூரிசத்தில் உள்ள களம்மவாடி அணை
தொழிற்சாலைச் சாலையில் உள்ள களம்மவாடி அணை
வரைபடம், இடங்கள், புள்ளிவிவர தரவு-கிழக்கில் இருந்து மேற்கே பாயும் நீரோட்டம், நாத்ஸகரிடமிருந்து பண்டாரா, பஜார் தலாவின் குளங்கள் அமைப்புக்கு வெவ்வேறு அளவுகளில் உள்ள நீர்த்தேக்கங்கள், பருவகால ஓட்ட முறைகள் மற்றும் தண்ணீரைக் கட்டுதல் மற்றும் உயர்த்துவதன் மூலம் அவை மாற்றியமைக்கப்படுகின்றன.
மகாராட்டிர அணைகள் |
684388 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9 | பிரியந்த விஜேரத்தின | பிரியந்த விஜெரத்தின ஓர் இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் ஆவார். இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வாழும் நபர்கள் |
684391 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D | ரேச்சல் அகதா கீன் | ரேச்சல் அகதா கீன் (பிறப்பு: 24 அக்டோபர் 1997), தொழில்ரீதியாக ரே என்று அறியப்படுகிறார், இவர் ஒரு ஆங்கிலப் பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார்.. பாலிடோர் ரெக்கார்டு நிறுவனதுடன் இணைந்தது முதல் இவர் பிரபலமடைந்தார். 2016களில் இவர் "பை யுவர் சைட்" மற்றும் யூ டோன்ட் நோ மீ போன்ற பாடல் ஆல்பங்களை முறையே ஜோனாஸ் ப்ளூ மற்றும் ஜாக்ஸ் ஜோன்சுடன். இணைந்து வெளியிட்டார்.
பின் பாலிடோர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய ரே தனது சொந்த ஹுயுமன் ரே சோர்சஸ் இசை நிறுவனத்தின் மூலம் My 21st Century Blues எனும் பாடல் ஆல்பத்தை 2023ல் வெளியிட்டார். 2024ஆம் ஆண்டில் இவரது பாடல் ஆல்பங்கள் ஆறு பிரிட் விருதுகளை வென்றது. 2024 இல் சிறந்த புதிய கலைஞருக்கான 3 கிராமி விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றார்..
ஆரம்பகால வாழ்க்கை
ரேச்சல் அகதா கீன் 24 அக்டோபர் 1997 அன்று இலண்டனில் ஆங்கிலேய தந்தைக்கும்-கானா-சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தார். இவரது தந்தை இசை அமைப்பாளராக இருந்த ஒரு தேவாலயத்தில் நற்செய்தி பாடல்களைப் பாடினார் கோல்ஸ்டன் திருச்சபையின் துவக்கப் பள்ளியிலும் மற்றும் உட்கோட் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். தனது 14வது வயதில் BRIT பள்ளியில் பயின்றார். கீன் தனது பதின்ம வயதின் பெரும்பகுதியை வார இறுதி நாட்களில் ஸ்டுடியோ'' அமர்வுகளில் தொழில்ரீதியாக எப்படி பாடல்களை எழுதுவது என்பதைக் கற்றுக்கொண்டார் ரேயின் தங்கையான அப்பிலின் கீனும் ஒரு பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.
மேற்கோள்கள்
1997 பிறப்புகள்
வாழும் நபர்கள்
பாடகர்கள்-பாடலாசிரியர்கள்
ஆங்கிலேயப் பாடகர்கள்
ஆங்கிலேய இசைக்கலைஞர்கள்
பாடலாசிரியர்கள்
ஆங்கிலேயப் பெண்கள் |
684395 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | வாளையார் தொடருந்து நிலையம் | வாளையார் தொடருந்து நிலையம் (Walayar railway station, நிலைய குறியீடு: WRA) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் வாளையார் என்ற ஊரில் உள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு தொடருந்து கோட்டம்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள் |
684396 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20311%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 311 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 311, பொதுவாக தே. நெ. 311 (National Highway 311 (India)) எனக் குறிப்பிடப்படுவது, இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 11இன் ஒரு துணை சாலையாகும். தே. நெ. 311 இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் செல்கிறது.
வழித்தடம்
தே. நெ. 311 இராசத்தான் மாநிலத்தில் உள்ள சிங்கானா, கேத்ரி நகர், ஜஸ்ராபூர், நாங்லி சலேடிசிங், பதிவர், சாவாசாரி மற்றும் டைட்டன்வாரா ஆகிய நகரங்களை இணைக்கிறது.
சந்திப்புகள்
சிங்கானா அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 311
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684397 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87 | சூச்சே | சூச்சே அல்லது யூச்சே (, ; ) அதிகாரப்பூர்வமாக சூச்சே கருத்தியல், வட கொரிய நாட்டு கருத்தியலும், கொரியத் தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தியலும் ஆகும். வட கொரிய மூலங்கள் இந்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் நாட்டின் நிறுவனரும் முதல் தலைவருமான கிம் இல் சுங் என்று கூறுகின்றன. கிம் இல் சுங்கின் மகன் கிம் ஜாங் இல், 1970களில் இதை ஒரு தனித்துவமிக்க கருத்தியலாக அறிவிக்கும் வரை இதை ஒரு தனித்துவமிக்க கருத்தியலாக அறிவிக்கும் வரை சூச்சே முதலில் மார்க்சியம்-லெனினிசத்தின் வகை சார்ந்த ஒரு கருத்தியலாக கருதப்பட்டது. கிம் ஜாங் இல் 1980கள் மற்றும் 1990களில் மார்க்சிசம்-லெனினிசத்தில் இருந்து கருத்தியல் இடைவெளிகளை உருவாக்கி தனது தந்தையின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதன் மூலம் சூச்சேவை மேலும் வளர்த்தார்.
சூச்சே மார்க்சியம்-லெனினிசத்தின் வரலாற்று பொருள்முதல்வாதக் கருத்துக்களை ஒருங்கிணைக்கிறது, ஆனால் தனிநபர், தேசிய அரசு மற்றும் தேசிய இறையாண்மை ஆகியவற்றையும் வலுவாக வலியுறுத்துகிறது. அரசியல், பொருளாதாரம், இராணுவ சுதந்திரம் ஆகியவற்றை அடைவதன் மூலம் ஒரு நாடு தன்னிறைவு பெற்று முன்னேறும் என்று சூச்சே கூறுகிறது. 1970களில் கிம் இல் சுங்கின் வாரிசாக கிம் ஜாங் இல் தோன்றியதால், ஒற்றைக் கருத்தியல் அமைப்பை நிறுவுவதற்கான பத்து கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, தலைவருக்கு விசுவாசம் செலுத்துவதில் சூச்சே இன்றியமையாத பகுதியாக அதிகளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சூச்சே ஒரு போலி மதம், ஒரு தேசியவாத அல்லது பாசிச சித்தாந்தம், மார்க்சியம்-லெனினிசத்திலிருந்து ஒரு பிறழ்வு என விமர்சகர்களால் பல்வேறு விதமாக விவரிக்கப்பட்டுள்ளது.
சொற்பிறப்பியல்
சூச்சே என்பது சீன-யப்பானிய சொல்லான 主體 (சின்ஜிடை:主体) என்பதிலிருந்து வந்தது, யப்பானிய வாசிப்பில் சுதாய் ஆகும். 1887 இல் இந்தச் சொல் என்ற செர்மானிய சொல்லை மொழிபெயர்க்க உருவாக்கப்பட்டது, இதற்கு செர்மான் கருத்தியலில்,"ஒரு பொருள் அல்லது சூழலை உணரும் அல்லது செயல்படும் நிறுவனம்" என்று பொருள். இந்தச் சொல்லானது நூற்றாண்டின் தொடக்கத்தில் கொரிய மொழிக்கு இடம்பெயர்ந்து இந்த அர்த்தத்தைத் தக்க வைத்துக் கொண்டது. கார்ல் மார்க்சின் எழுத்துகளின் யப்பானிய மொழிபெயர்ப்புகளில் இச்சொல் தோன்றின. மார்க்சின் வட கொரிய பதிப்புகள் சூச்சே என்ற சொல்லை 1955 ஆம் ஆண்டில் கிம் இல் சுங்கின் நூல்களில் கூறுவதற்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வட கொரியா பற்றிய சமகால அரசியல் சொற்பொழிவில், சூச்சே "சுய-சார்பு", "சுயாட்சி", "சுதந்திரம்" ஆகிய பொருளைக் கொண்டுள்ளது. தென் கொரியர்கள் வட கொரிய கருத்தியல்லை குறிப்பிடாமல் இந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர்.
மேற்கோள்கள்
வட கொரியா
அரசியல் கருத்தியல்கள் |
684399 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20701%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 701அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 701அ (National Highway 701A (India)) என்பது பொதுவாக தே. நெ. 701அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 1இன் இரண்டாம் நிலை பாதையாகும். தே. நெ. 701அ இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்கிறது.
வழித்தடம்
சம்மு காசுமீர் மாநிலத்தில் பாரமுல்லா மற்றும் குல்மார்க் நகரங்களை தே. நெ. 701அ இணைக்கிறது.
முக்கிய குறுக்குச் சாலைகள்
பாரமுல்லா அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 701A
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684402 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20102%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 102அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 102அ, பொதுவாக தே. நெ. 102ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 2-ன் ஒரு துணைச் சாலையாகும். தே. நெ. 102அ இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
தடுபி, பாவோமாட்டா, உக்ருல், பின்ச் கார்னர், கசோம் குல்லன், கம்பாங், தேங்க்னோவ்பல்.
முக்கிய குறுக்குச்சாலைகள்
ததுபி அருகே முனையம்
உக்ருல் அருகே
தேங்க்னோவ்பல் அருகே முனையம்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 102ஏ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684406 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20102%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 102ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 102ஆ, பொதுவாக தே. நெ. 102ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இது தேசிய நெடுஞ்சாலை 2இன் ஒரு துணைச் சாலையாகும். தே. நெ. 102ஆ இந்தியாவின் மணிப்பூர் மற்றும் மிசோராம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இது மணிப்பூர் அரசாங்கத்தின் வர்த்தமானி ஆணை no.46/9/80-W (Pt′) தேதியிட்ட 01.07.1985 மூலம் ஆற்றுதல் சாலை என்று அழைக்கப்படுகிறது.
வழித்தடம்
மணிப்பூர்
சுராசந்த்பூர், சிங்கட், சுவாங் தோ, முவலுநாம், சின்சால், துய்வாய் சாலை./
மிசோரம்
கவ்காவ்ன், வடகிழக்கு கவ்டுங்சோய், இந்கோபா, பாவ்ல்ராங், ஹிலியப்புய், சைச்சல், தே. நெ. 6, சைத்துவால் அருகே.
முக்கிய குறுக்குச்சாலைகள்
சுராசந்த்பூர் அருகே முனையம்
கெய்பாங் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 102பி
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684407 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D | திமிதர் பிளகோவ் | திமிதர் பிளகோவ்நிக்கோலோவ் (Dimitar Blagoev Nikolov) 14 ஜூன் 1856 - 7 மே 1924) பல்காரியாவைச் சேர்ந்த அரசியல் தலைவரும் மற்றும் தத்துவஞானியுமாவார். பல்கேரிய இடதுசாரி அரசியல் இயக்கத்தின் நிறுவனராகவும் மற்றும் பால்கனில் முதல் சமூக ஜனநாயகக் கட்சியான பல்கேரிய சமூக மக்களாட்சிக் கட்சியின் நிறுவனராகவும் இருந்தார். பிளகோவ் உருசிய மார்க்சியத்தின் ஆரம்பகால வரலாற்றில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார். பின்னர் பல்கேரிய பொதுவுடைமைக்ட் கட்சியை நிறுவி வழிநடத்தினார். பால்கன் கூட்டமைப்பை நிறுவுவதற்கான யோசனைகளின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். இவர் பொதுவாக ஒரு பல்கேரியராகவும், எப்போதாவது ஒரு ‘மாசிடோனிய சுலாவ்’ ஆகவும் அடையாளம் காணப்படுகிறார்.
போர்க்கால நடவடிக்கைகள் மற்றும் நிலைப்பாடு
இவர் தென்கிழக்கு ஐரோப்பாவில் பெரும் சக்திகளின் வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக இருந்தார். பால்கன் கூட்டாட்சி குடியரசை நம்பினார். இரண்டாம் பால்கன் போர் மற்றும் முதல் உலகப் போரில் பல்கேரியாவின் இராணுவ ஈடுபாடுகளை எதிர்த்தார். பல்கேரியாவின் தேசியச் சட்டப்பேரவையில் 1914 அக்டோபரில், மற்ற குறுகிய சோசலிசவாதிகளுடன் சேர்ந்து, போர்களுக்கு எதிராக வாக்களித்தார். முதலாம் உலகப் போரின்போது, பிளாகோவ் “போரின் ஏகாதிபத்திய தன்மையையும் இரண்டாம் அகிலத்தின் துரோகப் பாத்திரத்தையும்” அம்பலப்படுத்தினார். பிளாகோவ் உருசியாவின் அக்டோபர் புரட்சியைப் பாராட்டினார். போல்செவிக்குகளின் கருத்துக்களுக்காக பிரச்சாரம் செய்தார். இவரது தலைமையின் கீழ் சோசலிசக் கட்சி இரண்டாம் அகிலத்துடன் தன்னை முறித்துக் கொண்டது. 1917 இல் பல்கேரிய தேசிய சட்டமன்றத்தில் ஒரு உரையில், பிளாகோவ் தன்னை “மாசிடோனியன் சுலாவ்” என்று அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். 1919 இல் பல்கேரிய தேசிய சட்டமன்றத்தில் திமிதர் பிளாகோவ் படித்த நியூலி உடன்படிக்கைக்கு எதிரான பிரகடனத்தில் பல்கேரிய நிலம் மற்றும் தேசத்தின் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். பல்கேரிய சோவியத் சோசலிசக் குடியரசின் யோசனைகளை பால்கன் சோவியத்தின் ஒரு பகுதியாக ஊக்குவித்தார். சோசலிச கூட்டாட்சிக் குடியரசு, மாசிடோனியா, திரேசு மற்றும் தோப்ருஜாவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரே அரசியல் தீர்வாகவும் இந்த உரை இருந்தது.
பிற்காலமும் மரணமும்
1919இல் பிளாகோவ் சோசலிசவாதிகளை பொதுவுடைமை தேசியத்துக்குள் கொண்டுவந்தார். மேலும் அந்தக் கட்சி ‘பல்கேரிய பொதுவுடைமைக் கட்சி’ என்று தனது பெயரை மாக் கொண்டது. எனினும், இந்தக் காலகட்டத்தில் பிளாகோவ் மற்றும் ஒட்டுமொத்தக் கட்சியும் அடிப்படை கேள்விகளில் போல்செவிக் நிலைப்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது 1918ஆம் ஆண்டு விளாதயா சிப்பாய்கள் கிளர்ச்சி மற்றும் 1923ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நடந்த இராணுவப் புரட்சி ஆகியவற்றின் போது கட்சியின் கொள்கைகளை தீர்மானித்தது. தோல்வியுற்ற செப்டம்பர் எழுச்சியை எதிர்த்தும் இவர் குரல் கொடுத்தார். அந்த நேரத்தில் பல்கேரியா ஒரு புரட்சிக்கு நிலைமைகள் முதிர்ச்சியடையவில்லை என்று நம்பினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
External links
Dimitûr Blagoev, On the Macedonian Question, June 1905, in Andreja Živković and Dragan Plavšić (eds), "The Balkan Socialist Tradition and the Balkan Federation 1871-1915", "Revolutionary History", London, 2003.
Dimitûr Blagoev, The Revolution in Turkey and Social Democracy, 1908.
Dimitûr Blagoev, Political Prospects, June 1909.
Dimitûr Blagoev, The Balkan Conference and the Balkan Federation, December 1911.
1924 இறப்புகள்
1856 பிறப்புகள்
பல்கேரிய அரசியல்வாதிகள் |
684409 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF | கல்யாண்ஜி-ஆனந்த்ஜி | கல்யாண்ஜி - ஆனந்த்ஜி (Kalyanji–Anandji) இரட்டையர்களான இவர்கள் இந்திய இசையமைப்பாளர்களான இருந்தனர். கல்யாண்ஜி விர்ஜி ஷா (30 ஜூன் 1928 - 24 ஆகஸ்ட் 2000) மற்றும் இவரது சகோதரர் ஆனந்த்ஜி விர்ஜி ஷா (பிறப்பு 2 மார்ச் 1933). இருவரும் இந்தியத் திரைப்படத்துறையில் இசையமைத்தற்காக அறியப்பட்டவர்கள். பல பிரபலமான பாடல்கள் இவர்களால் இசையமைக்கப்பட்டன. எஸ். டி. பர்மன், ஹேமந்தா முகர்ஜி, மதன் மோகன், நௌசாத், சங்கர்-ஜெய்கிஷன் மற்றும் ஓ. பி. நய்யார் போன்ற பெரிய இசை இயக்குனர்கள் இந்தித் திரைப்பட இசை உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, இசை அமைப்பாளர்களாக பாலிவுட் திரைப்படத் துறைக்கு வந்தனர். 1968இல் இவர்களது சரசுவதிசந்த்ரா என்ற திரைப்படத்திகு முதல் தேசியத் திரைப்பட விருதை பெற்றனர். 1992இல் இந்திய அரசு இவர்களுக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.
டான், பைராக், சரஸ்வதிச்சந்திரா, குர்பானி, முகதர் கா சிக்கந்தர், லாவாரிஸ், திரிதேவ், சஃபர் போன்றவை இவர்களின் சிறந்த படைப்புகளில் சில. கோரா ககாஸ் படத்திற்காக 1975 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதுதை வென்றனர்.
கிஷோர் குமார், முகமது ரபி, லதா மங்கேஷ்கர்,ஆஷா போஸ்லே மற்றும் மன்னா தே உள்ளிட்ட பல பிரபல பாடர்களுக்கு இவர் பல வெற்றிப் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்களின் ஆரம்ப கட்டத்தில், முகமது ரபி இவர்களின் முதல் பாடகர் தேர்வாக இருந்தார்.
தொழில் வாழ்க்கை
கல்யாண்ஜியும் ஆனந்த்ஜியும் கச்சு மாவட்டத்தின் குந்த்ரோடி கிராமத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த ஒரு கச்சி தொழிலதிபரின் மகன்கள். ஒரு இந்திய கணவன்-மனைவி இசைக் குழுவாக இருந்த பாப்லா & காஞ்சன் இவர்களின் சகோதர் ஆவார். சகோதரர்கள் ஒரு இசை ஆசிரியரிடம் இசை கற்கத் தொடங்கினர். தங்களது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை மும்பையின் கிர்காம் பகுதியில் மராத்தி மற்றும் குஜராத்தி சமூகங்களுக்கு இடையே கழித்தனர்.
கல்யாண்ஜி ஒரு இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கிளாவியோலின் என்ற புதிய மின்னணு கருவியுடன். ஹேமந்த் குமார் இசையமைத்த நாகின் (1954) படத்தில் பயன்படுத்தப்பட்ட புகழ்பெற்ற நாகின் பீன் பாடலுக்கு இக்கருவி பயன்படுத்தப்பட்டது. பின்னர், தனது சகோதரர் ஆனந்த்ஜியுடன் இணைந்து கல்யாண்ஜி விர்ஜி அண்ட் பார்ட்டி என்ற இசைக்குழுவைத் தொடங்கினார். இது மும்பையிலும் வெளியேயும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது.
நிருபா ராய் நடித்த சாம்ராட் சந்திரகுப்தா (1958) படத்தில் இசையமைக்க இவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் பாக்ஸ் 999 போன்ற பல படங்களுக்கு இவர்கள் இசையமைததனர். ஆரம்பத்தில் கல்யாண்ஜிக்கு குதவியாக இருந்த ஆன்ந்த்ஜி , சத்தா பஜார் மற்றும் மதாரி (1959) ஆகிய படங்களில் கல்யாண்சி-ஆனந்த்ஜி இரட்டையர்களை உருவாக்க அதிகாரப்பூர்வமாக தனது சகோதரருடன் சேர்ந்தார். சாலியா (1960) அவர்களின் ஆரம்பகால பெரிய வெற்றிப் படமாகும். 1965 ஆம் ஆண்டில், இமாலே கி காட் மே மற்றும் ஜப் ஜப் பூல் கிலே ஆகிய இரண்டு படங்கள் இந்தித் திரையுலகில் நிரந்தர இசையமைப்பாளர்களாக நிலைநிறுத்தின.
கல்யாண்ஜியும் ஆனந்த்ஜியும் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். அவற்றில் 17 திரைப்படங்கள் பொன்விழா மற்றும் 39 வெள்ளி விழாக்கள் கண்டது. திலிப் குமார், அமிதாப் பச்சன், அனில் கபூர், வினோத் கண்ணா, ரேகா மற்றும் ஸ்ரீதேவி போன்ற பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களில் சிலருடன் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்காக இவர்கள் பல தொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.
தற்போது பிரபலமாக இருக்கும் மன்கர் உதாஸ், குமார் சானு, அனுராதா பாட்வால், அல்கா யாக்னிக், சாதனா சர்கம், சப்னா முகர்ஜி, உதித் நாராயண், சுனிதி சௌஹான் போன்ற பல பாடகர்கள் இவர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள். இந்தி படங்களுக்கு சுயாதீனமாக இசையமைப்பதற்கு முன்பு இலட்சுமிகாந்த்-பியாரேலால் கல்யாணஜி ஆனந்த்ஜிக்கு இசை உதவியாளராக பணியாற்றினார். கமர் ஜலாலாபாதி, ஆனந்த் பக்சி, குல்சன் பாவ்ரா, அஞ்சான், வர்மா மாலிக் மற்றும் எம். ஜி. அஷ்மத் போன்ற பாடலாசிரியர்களும் இவர்களுடன் இணைந்து பாடல்களை எழுதினர்.
இறப்பு
2000 ஆகஸ்ட் 24 அன்று, கல்யாண்ஜி இறந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Kalyanji Anandji Kalyanji Anandji's Association with Mohammed Rafi
Lyrics of Hindi Movie Songs composed by Kalyanji Anandji
Kalyanji-Anandji's Filmography (over 250 movies)
List of Hindi songs from Kalyanji-Anandji (over 500 songs)
பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் |
684410 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20102%E0%AE%87%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 102இ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 102இ (National Highway 102C (India)) பொதுவாக தே. நெ. 102இ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 102இன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ. 102இ இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் வழியாக செல்கிறது.
வழித்தடம்
பாலேல்-சந்தேல்.
முக்கிய குறுக்குக்ச்சாலை
பாலேல் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 102சி
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684411 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | தர்யாபூர் சட்டமன்றத் தொகுதி | தர்யாபூர் சட்டமன்றத் தொகுதி (Daryapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அமராவதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல்
குறிப்புகள் |
684413 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | சிகாகோ தமிழ்ச் சங்கம் | சிகாகோ தமிழ்ச் சங்கம் (Chicago Tamil Sangam) 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நிறுவப்பட்டது. இது அமெரிக்காவின் பழமையான தமிழ்ச் சங்கமாகும். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தை சிகாகோ பெருநகரப் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக வைத்திருக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, இலக்கியம், பண்பாடு, தொண்டு மற்றும் சமூக நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு சமூக இருப்பை நிறுவுவதில் சிகாகோ தமிழ்ச் சங்கம் தொடர்ந்து உந்துதல் அளித்துள்ளது.
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் மதிப்புகள், கலை மற்றும் மொழியை மேம்படுத்துவதை ஊக்குவிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தில் பங்கேற்கவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு இது ஒரு மன்றத்தையும் வழங்குகிறது.
செயல்பாடுகள்
சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் 6 முதல் 8 வரையிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.
பொங்கல் விழா
முத்தமிழ் விசா
விளையாட்டு தினம்
இளக்கிய மலை
கோடை சுற்றுலா
எப். எம். எசு. சி. அமைப்பில் சேவை தினம்
நெடுஞ்சாலைத் துப்புரவு முறையை ஏற்றுக்கொள்வது
இசை நிகழ்ச்சி
குழந்தைகள் தினம்
வியக்க வைக்கும் தமிழ் (2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்)
நிகழ்த்துக் கலைகள்
பின்வரும் கலைகளுக்கான வகுப்புகளையும் சிகாகோ தமிழ்ச் சங்கம் நடத்துகிறதுஃ
பொன் பராய்
சிலம்பம்
ஒயிலாட்டம் மற்றும் தேவரட்டம்
அமைப்பு
1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு அமெரிக்காவின் பழமையான தமிழ்ச் சங்கமாகும். இந்த அமைப்பு 2019 ஆம் ஆண்டில் பொன்விழாவைக் கொண்டாடியது. .
உலகத் தமிழ் மாநாடு
வட அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து சிகாகோ தமிழ் சங்கம் 10 ஆவது உலக தமிழ் மாநாட்டை நடத்த திட்டமிட்டது, தமிழ் ஆய்வுகள் குறித்த சர்வதேச மாநாடு-கருத்தரங்கம் 2019 ஆம் ஆண்டு சூலை 4 முதல் சூலை மாதம் 7 வரை , அமெரிக்காவின் இல்லினாய்சில் உள்ள சாம்பெர்க்கில் நடைபெற்றது.
மேற்கோள்கள்
தமிழர் பண்பாடு
தமிழ் வரலாறு |
684416 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20502%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 502அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 502அ (National Highway 502A (India)) பொதுவாக தே. நெ. 502ஏ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 2இன் துணைச் சாலையாகும். தே. நெ. 502அ மிசோராம் மாநிலத்தில் செல்லும் சாலையாகும்.
பாதை.
தேசிய நெடுஞ்சாலை 2இல் உள்ள லாங்த்லையில் தொடங்கி மியான்மர் எல்லையில் (கலாடன் சாலை) முடிவடைகிறது.
சந்திப்புகள்
: லாங்த்லை அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 502ஏ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684420 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D | தத்தா நாயக் | தத்தா நாயக் (Datta Naik) (12 டிசம்பர் 1927– 30 டிசம்பர் 1987), என். தத்தா என்றும் அழைக்கப்படும் இவர், பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் இசையமைப்பாளர் ஆவார்.
இளமை வாழ்க்கை
போர்த்துகேய இந்தியாவின் கோவாவில் பிறந்த நாயக், புகழ்பெற்ற இசை இயக்குநர் எஸ். டி. பர்மனின் உதவியாளராக பஹார், சாசா, ஏக் நாசர் (1951), ஜல் (1952), ஜீவன் ஜோதி (1953) மற்றும் அங்காரே (1954) போன்ற படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பாடலாசிரியர் சாகிர் லுதியான்வி சேர்ந்து இசையமைத்த இவரது பாடல்கள் வெற்றிகரமாகவும் இருந்தது. தத்தா நாயக் 1987 டிசம்பர் 30 அன்று இறந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
1927 பிறப்புகள்
1987 இறப்புகள்
இந்திய இசை அமைப்பாளர்கள் |
684422 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29 | சித்ரகுப்த் (இசையமைப்பாளர்) | சித்ரகுப்த் ஸ்ரீவஸ்தவா (Chitragupt Shrivastava) (16 நவம்பர் 1917 - 14 ஜனவரி 1991), சித்ரகுப்த் என்றும் அழைக்கப்படும் இவர், பாலிவுட் மற்றும் போச்புரித் திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
சொந்த வாழ்க்கை
சித்ரகுப்த் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள]] சாவ்ரேஜி என்ற கிராமத்தில் காயஸ்தர் குடும்பத்தில் பிறந்தார். இவரது மகன்களான ஆனந்த் ஸ்ரீவஸ்தவா மற்றும் மிலிந்த் ஸ்ரீவஸ்தவா ஆகிய பாலிவுட் இசை இயக்குனர்களாக உள்ளனர்.
தொழில் வாழ்க்கை
இவர் பெரும்பாலும் பாடலாசிரியர் மஜ்ரூ சுல்தான்புரியுடன் பணியாற்றினார்.
இவரது இசையில் கங்கா கி லஹ்ரேன் படத்தில் கிஷோர் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய மச்சல்டி ஹுய் ஹவா மே சாம் சாம் என்ற பாடல் வெற்றி பெற்றது. இவர் கிஷோர் குமாரை பாயல்வாலி தேக் நா என்ற அரை பாரம்பரிய பாடலையும், அகர் சன் லே கோய் நக்மா என்ற பிரபலமான பாடலையும் பாட வைத்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
1991 இறப்புகள்
1917 பிறப்புகள்
இந்திய இசை அமைப்பாளர்கள் |
684423 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | தேசிய சுயமரியாதைக் கட்சி | தேசிய சுயமரியாதைக் கட்சி (Rashtriya Swabhiman Party) என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும், இது முன்பு லோக் பரிவர்தன் கட்சி (LPP) என அறியப்பட்டது. குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் பகுஜன் சமாஜ் ஸ்வாபிமான் சங்கர்ஷ் சமிதி (BS-4) உடன் தொடர்புடையவர்கள் ஆவர். பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு முன்னணி உறுப்பினர்களான ஆர்.கே.சௌத்ரி மற்றும் உத்தரப்பிரதேச சட்டசபையின் முன்னாள் சபாநாயகரான பி. ஆர். வர்மா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
இந்திய அரசியல் கட்சிகள் |
684429 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88 | பணக் கழுதை | பணக் கழுதை (Money mule) என்பது திருட்டு அல்லது மோசடி போன்ற சட்டவிரோதமாக வாங்கிய பணத்தை மாற்றும் ஒரு நபரைக் குறிப்பதாகும். பணம் கழுதை எனப்படும் நபர் தனிப்பட்ட முறையில், தூது அஞ்சல் மூலம் அல்லது மற்றவர்கள் சார்பாக மின்னணு முறையில் நிதியை மாற்றுகின்றனர். பொதுவாக, இச்சேவைகளுக்கு ஒரு சிறிய தொகையினைப் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்துடன் இந்நபர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இவர்கள் பரிமாற்றம் செய்யும் பணம் குற்றத்தின் விளைவு என்பதை அறியாமல், முறையான வேலைவாய்ப்பு என்ற போர்வையில் பணக் கழுதைகள் பெரும்பாலும் இணையத்தில் செயல்படுகின்றனர். சட்டவிரோதமாகப் பொருட்களை மாற்றுவதற்கு இதே போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விவரங்கள்
பொதுவாக, "பணம் செயலாக்க முகவர்கள்", "பணப் பரிமாற்ற முகவர்கள்" ", உள்ளூர் செயலாக்கிகள்" மற்றும் பிற ஒத்த தலைப்புகளுக்கான வேலை விளம்பரங்களுடன் பணக் கழுதைகள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் குற்றவாளிகளின் ஆபத்தான, புலப்படும் பரிமாற்றத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். சில பணக் கழுதைகள் எதிர்ப் பாலினத்தைச் சேர்ந்த கவர்ச்சிகரமான உறுப்பினரால் நியமிக்கப்படுகின்றன. தங்களுக்குச் சிறிய தொகையைக் கழித்த பிறகு, நிதியை ஏற்றுக்கொண்டு தெரியாத மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பும்படி கேட்கப்படுகிறார்கள். சட்டப்பூர்வமான நிறுவனங்கள் இந்த வகையான பணிக்கு எசுக்ரோ சேவைகளைப் பயன்படுத்துகின்றன. இணையம் மூலம் தேர்வு செய்யப்படும் இத்தகைய பணக் கழுதைகள் பொதுவாக இணைய மோசடிகளிலிருந்து வரும் வருமானத்தை மாற்ற பயன்படுத்தப்படுகின்றனர். அதாவது மின் தூண்டிலிடல் மோசடிகள், தீப்பொருள் மோசடிகள் அல்லது மோசடிகள் இபே போன்ற ஏலத் தளங்களைப் பயன்படுத்திச் செயல்படுகின்றனர்.
பணம் அல்லது பொருட்கள் திருடப்பட்ட பிறகு, குற்றவாளி பணம் அல்லது பொருட்களை மாற்ற ஒரு பணக் கழுதையைப் பயன்படுத்துகிறார். குற்றவாளியின் உண்மையான அடையாளத்தையும் இருப்பிடத்தையும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவரிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் மறைக்கிறார். வெஸ்டர்ன் யூனியன் போன்ற உடனடி கட்டண வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், திரும்பப்பெறக்கூடிய மற்றும் கண்டுபிடிக்கக்கூடிய பரிவர்த்தனையை மாற்றமுடியாத மற்றும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக மாற்றப் பணக் கழுதையாகச் செயல்பட அனுமதிக்கின்றார்.
ஓர் அப்பாவி மூன்றாம் தரப்பினரின் வங்கி விவரங்கள் சமரசம் செய்யப்பட்டிருந்தால், அவை அவர்களுக்குத் தெரியாமல் ஒரு பணக் கழுதையால் பயன்படுத்தப்படலாம். இது சில நேரங்களில் "குயில் திருட்டு" என்று அழைக்கப்படுகிறது.
திருடப்பட்ட அல்லது சட்டவிரோதமாக வாங்கிய பொருட்களில் வர்த்தகம் செய்யும் குற்றவாளிகள் இதே போன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி பணக் கழுதைகளை ஆட்சேர்ப்பு மூலம் செய்கிறார்கள். இவர்கள் பொதிகளைப் பெறுகிறார்கள். மேலும் குற்றவாளிக்குக் கண்டுபிடிக்க முடியாத அஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்புகிறார்கள்.
2016ஆம் ஆண்டில் பிட்காயின் ஏடிஎம்கள் பிரையன் கிரெப்சால் பணத்தைத் திரட்டுவதற்கான பிரபலத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தண்டனைகள்
பணக் கழுதைகள் உடந்தையாக உள்ள நிகழ்வுகளில் குற்றவியல் வழக்கு மற்றும் நீண்ட சிறைத் தண்டனைகளை எதிர்கொள்ளும் அபாயத்திற்கு உள்ளாகின்றனர்.
வழக்குகள்
2010ஆம் ஆண்டில், கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கத்தைக் கொண்ட எஃப். பி. ஐ இணையக் குற்றத் தடுப்புப் படையினர், ஜீயஸ் பைனான்சியல் ட்ரோஜனால் எளிதாக்கப்பட்ட மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பணக் கழுதை திட்டத்தில் ஈடுபட்ட 37க்கும் மேற்பட்ட பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டினர். பணக் கழுதைகள், உண்மையான மற்றும் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, சமரசம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்பட்ட நிதியைப் பெறவும், திருடப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறவும், பின்னர் திருடப்பட்ட நிதியை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் பல வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தனர். இந்தப் பணக் கழுதைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து 3 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைத் திருடுவதற்கு இது உதவியது.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
பணம் |
684430 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D | பிரதம அமைச்சரின் விஸ்வகர்மா திட்டம் | Editing பயனர்:Sumathy1959/மணல்தொட்டி
பிரதம அமைச்சரின் விஸ்வகர்மா திட்டம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு பாரம்பரியத் தொழில் புரியும் தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி செய்பவர், படகுகள் வடிவமைப்பவர்கள், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் மற்றும் கயிறு திரிப்பவர்கள், கைநெசவுத் நெசவாளர்கள், பாரம்பரியமாக பொம்மை செய்பவர், நாவிதர், பூ மாலைகள் தொடுப்பவர்கள், சலவையாளர்கள், தையல்காரர்கள் மற்றும் மீன்பிடி வலை பின்னுபவர்கள் போன்ற 18 வகையான கலைஞர்களையும் மற்றும் கைவினைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக விஸ்வகர்மா' திட்டத்தை 17 செப்டம்பர் 2023 அன்று அறிவித்தது.
திட்டத்தின் நோக்கம்
திறன் மேம்பாடு : 5 முதல் 7 வரை நாட்கள் வரை அடிப்படைப் பயிற்சி வழங்குதல் மற்றும் 15 நாட்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மேம்பட்ட பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 உதவித்தொகை வழங்குதல்.
அங்கீகாரம் :பயிற்சி முடித்தவர்களுக்கு பிரதம அமைச்சரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் கைவினைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்குதல்.
கருவித் தொகுப்பு ஊக்கத்தொகை : கருவித் தொகுப்புகள் வாங்குவதற்கு வாங்க ஊக்கத்தொகை ரூபாய் 15,000 வழங்குதல் .
கடன் உதவி: அடிப்படைப் பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் வளர்ச்சி கடனாக 5% வட்டியில், முதல் தவணையாக 1 இலடசம் (திருப்பி செலுத்தும் காலம் 18 மாதங்கள்) இரண்டாவது தவணையாக 2 இரண்டு இலட்சம் (திருப்பி செலுத்து காலம் 30 மாதங்கள்) வழங்கப்படும். வழங்கப்படும் கடன்களுக்கு வெந்நிலை கடன் ஒப்பந்த பத்திரம் மட்டுமே போதுமானது. கடனுக்கு ஜாமீன் மற்றும் பழைய கடன் விவரம் தேவையில்லை.
சந்தைப்படுத்துவதற்கு ஆதவளித்தல்: கைவினைஞர்களுக்கு தரச் சான்றிதழ் வழங்குதல், மின்னணு-வணிக தளங்களில் விளம்பரம் மற்றும் பிற சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும்.
இத்திட்டதிற்கு தகுதியானவர்கள்
விண்ணப்பதாரர் மேற்குறித்த தொழில்களில் 18ல் ஒன்றை சொந்தமாக தொழில் செய்யும் கலைஞராகவோ அல்லது கைவினைஞராக இருத்தல் வேண்டும்.
18 வயது நிரம்பியராக இருத்தல் வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் தொழில் கலைஞர்கள் அல்லது கைவினைஞர்கள் அடிப்படையில் மாநில அல்லது மத்திய அரசுத் திட்டங்களில் கடன் பெற்றிருத்தல் கூடாது. இருப்பினும் வாங்கிய கடனை அடைத்தவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
மாநில/மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர இயலாது.
இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவர்மட்டுமே சேரமுடியும்.
இத்திட்டத்தில் சேர்க்கப்படும் தொழிற்கலைஞர்கள் & கைவினைஞர்கள்
தச்சர்
படகு செய்பவர்
இரும்பு/ கல் தொடர்பாக கலைஞர்கள்
கவசங்கள் செய்பவர்.
கொல்லர்
சுத்தி போன்ற இரும்புக் கருவிகள் செய்பவர்
பூட்டு செய்பவர்
சிற்பி
கல் உடைப்பவர்
தங்கம்/வெள்ளி நகை பொற்கொல்லர்
களிமண் சார்ந்து பானை/பொம்மை செய்பவர்
விலங்குத் தோல் சார்ந்த காலணிகள் செய்பவர்
கட்டிடக் கொத்தனார்
கூடை, பாய், துடைப்பம்/ கயிறு பின்னும் கைவினைஞர்கள்
பாரம்பரிய பொம்மைக் கைவினைஞர்கள்
நாவிதர்
பூமாலை தொடுப்பவர்கள்
சலவைத் தொழிலாளர்கள்
தையல் கலைஞர்கள்
மீன்பிடி வலை பின்னும் கைவினைஞர்கள்
மேற்கோள்கள்
இந்திய அரசுத் திட்டங்கள் |
684431 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | மேல்காட் சட்டமன்றத் தொகுதி | மேல்காட் சட்டமன்றத் தொகுதி (Melghat Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதியில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது பழங்குடியின வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்காட், அமராவதி மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
}}
மேலும் காண்க
மேல்காட்
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
அமராவதி மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684432 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20215%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 215 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 215 (தே. நெ. 215) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் நாம்சிக், சங்லாங், கோன்சா, கனுபாரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் மகாதேவ்பூர் அருகே தே. நெ. 15 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி அசாம் மாநிலத்தில் திப்ருகர் அருகே தே. நெ. 15 உடன் சந்திப்பில் முடிவடைகிறது.
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684434 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20115%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 115 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 115 (National Highway 115 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை அசாம் மாநிலத்தில் உள்ள சாய்கோகாட், குண்டில் பஜாரை இணைக்கும் டம் டுமா அருகே தே. நெ. 15-ல் அதன் சந்திப்பில் தொடங்கி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ரோயிங் அருகே தே. நெ. 13-ல் முடிவடைகிறது. இது அசாமில் 59.12 கி.மீ. அருணாச்சலப் பிரதேசத்தில் 19.50 கி.மீ. என மொத்தம்78.72 கி.மீ. நீளமுடையது.
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684435 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20315%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 315 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 315 (National Highway 315 (India))(தே. நெ. 315) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அசாமில் உள்ள மகும் மற்றும் லெகாபானியை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை அசாமின் மகும் அருகே தே. நெ. 15 உடன் அதன் சந்திப்பில் தொடங்கி அசாம் மாநிலத்தில் லெடோ, லேகாபானி, தே. நெ. அருகே லிகோக் மற்றும் இந்தியா/மியான்மர் எல்லையில் முடிவடைகிறது. இது அசாமில் 80.05 கி. மீ. அருணாச்சலப் பிரதேசத்தில் 32.49 கி. மீ. என மொத்தம் 112.54 கி. மீ. நீளமுடையது.
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684441 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%29 | தளவாய் (பதவி) | தளவாய் என்பவர் ஒரு நாட்டின் படைகளின் தலைமைப் படைத்தலைவர் ஆவார்.தென்னிந்தியாவை ஆண்ட விஜயநகரப் பேரரசின் மன்னராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னர் தளவாயாக பணியாற்றியவர் வீரநரசிம்ம ராயன் ஆவார். மைசூர் இராச்சியத்தின் தளவாயாக பதவியில் இருந்தவர்கள் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆவர்.
மகாராட்டிரம் மற்றும் கோவா பகுதிகளில் தளவாயாக பணியாற்றியவர்களின் வழித்தோன்றல்கள் தல்வி என்ற குடும்பப் பெயராக இட்டுக் கொள்வது வழக்கம்.
மேற்கோள்கள்
இந்தியாவில் பட்டங்கள் |
684443 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | குர்திஸ்தான் (சிரியா) | சிரியா நாட்டின் வடக்கில், குர்தி மொழி பேசும் குர்து மக்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதியை ரோஜாவா அல்லது மேற்கு குர்திஸ்தான் என்பர். சிரியாவின் குர்ஸ்திஸ்தான் பகுதியைச் சுற்றி துருக்கி மற்றும் ஈராக் நாட்டின் எல்லைகள் அமைந்துள்ளது..
குர்திஸ்தான் என்பது தற்கால துருக்கிய குர்திஸ்தான், ஈராக்கிய குர்திஸ்தான்), ஈரானிய குர்திஸ்தான்) , மற்றும் சிரியாவின் வடக்கு ஆகிய பகுதிகளைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
சிரியாவின் புவியியல்
குர்திஸ்தான் |
684444 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | பிரகார் சனசக்தி கட்சி | பிரகார் சனசக்தி கட்சி (Prahar Janshakti Party) (PHJSP ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். பிரகார் சனசக்தியானது 1999 இல் ஓம்பிரகாசு பாபராவ் காது என்பவரால் விவசாயிகள் மேம்பாட்டின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது.
2024 தேர்தல்
2024 இல் நடைபெற்ற மகாராட்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, பிரகார் சனசக்தி கட்சிக்கு மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இக்கட்சியானது பரிவர்தன் மகாசக்தி கூட்டணியில் இணைந்து 38 வேட்பாளர்களை போட்டியிடச் செய்தது.
மேற்கோள்கள்
1999இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
மகாராட்டிர அரசியல் கட்சிகள் |
684446 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20315%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 315அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 315அ (தே. நெ. 315அ)(National Highway 315A (India)) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கோன்சாவையும் அசாமில் உள்ள தின்சுகியாவையும் இணைக்கிறது.
வழித்தடம்
தின்சுகியா-நகர்கடியா-கூகஞ்சுரி-கோன்சா.
சந்திப்புகள்
தின்சுகியா அருகே தேசிய நெடுஞ்சாலை 15 உடன் சந்திப்பு
கொன்சா அருகே தேசிய நெடுஞ்சாலை 215 உடன் சந்திப்பு.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 315A
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684447 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20515%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 515 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 515 (தே. நெ. 515)(National Highway 515 (India)) என்பது வடகிழக்கு இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 515 தேமாஜியின் வடக்கே தேசிய நெடுஞ்சாலை 15-யின் குறுக்கே குலாஜனிலிருந்து தொடங்கி கிழக்கு மற்றும் வடகிழக்கு வழியாகச் செல்கிறது. இது 111 கிமீ (69 மைல்) தூரத்தினை அசாம் மாநில வழியாகவும், மீதமுள்ள தூரத்தினை அருணாச்சலப் பிரதேசத்திலும் கடக்கிறது.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 515
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684448 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20715%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 715 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 715 (தே. நெ. 715)(National Highway 715 (India)) இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அசாமின் தேஜ்பூர் அருகே தே. நெ. 15 உடனான சந்திப்பிலிருந்து தொடங்கி ஜான்ஜியினை இணைக்கிறது. இந்நெடுஞ்சாலை 195.10 கி.மீ. நீளமுடையது.
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684449 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80.%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | வீ. வருண்குமார் | வீ. வருண்குமார் (V. Varun Kumar) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அலுவலர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவைச் சேர்ந்தவர்.
வாழ்க்கை குறிப்பு
இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை வீரசேகரன் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். தாய் கல்பனா ஒரு குடும்பத் தலைவி ஆவார். இவரது தந்தையின் பணி நிமித்தமாக குடும்பம் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்தது. திருச்சியில் காம்பியன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த, இவர் சென்னையில் உள்ள ராகஸ் பல் மருத்துவக் கல்லூரியில் பல்மருத்துவராகப் பட்டம் பெற்றார். இந்நிலையில் காக்க காக்க திரைப்படத்தைப் பார்த்து காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்று விரும்பினார். அதனால் 2007 இல் அதற்காக தயாராகத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகள் எழுதி அகில இந்திய அளவில் மூன்றாம் இடம்பெற்று தேர்வானார். இந்திய ஆட்சிப்பணி அலுவலாராகும் வாய்ப்பு இருந்தும், இந்தியக் காவல் பணி அலுவலர் பணியை விரும்பி ஏற்று 2011 ஆண்டு பயிற்சி முடித்தார். பின்னர் உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர், சென்னை அதிதீவிரப்படையில் பணிபுரிந்தார். காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பல இடங்களில் பணிபுரிந்தார். தற்போது (2024) திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவருகிறார்.
குடும்பம்
இவர் இந்தியக் காவல் பணி அலுவலரான வந்திதா பாண்டே என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
சர்ச்சைகள்
வருண்குமாருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டுவந்தது. ஒரு கட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வருண்குமார் தி.மு.கவின் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினரைப் போல செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். 2024 திசம்பர் மாதம் சண்டிகரில் நடந்த ஐந்தாவது இ.கா.ப அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வருண்குமார் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று பேசியது சர்ச்சைகளை ஏற்படுதியது. இதனையடுத்து நடத்தை விதிகளை மீறிய வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நா.த.க.யினர் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டி.ஜி.பி) புகார் அளித்தனர்.
பதக்கங்களும் அங்கீகரித்தல்களும்
சிறப்பாகவும் துணிச்சலாகவும் பணியாற்றியதற்காக வருண்குமாருக்கு 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தமிழ்நாடு அரசு அதிகாரிகள்
இந்திய காவல் பணி அதிகாரிகள்
வாழும் நபர்கள்
திருச்சி மாவட்ட நபர்கள் |
684450 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20715%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 715அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 715அ, (National Highway 715A (India)) பொதுவாக தே. நெ. 715அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 15-இன் ஒரு துணைச்சாலை ஆகும். தே. நெ. 715அ இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜாகிரோட், புராகான் மற்றும் பாலுகான் இடையே செல்கிறது.
வழித்தடம்
தே. நெ. 715அ அசாம் மாநிலத்தில் மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஜாகிரோடில் தொடங்குகிறது. இது வடக்கு நோக்கிக் கடந்து செல்கிறது.
பாஸ்னாகாட் (மோரிகான் மாவட்டம்)
புராகான் (மோரிகான் மாவட்டம்)
பாலுகான் (தர்ரங் மாவட்டம்)
இந்த நெடுஞ்சாலை தர்ரங் மாவட்டத்தின் தல்கான் அருகே முடிவடைகிறது.
சந்திப்புகள்
ஜாகிரோடில் தேசிய நெடுஞ்சாலை 27 உடன் முனையம்.
பாலுகான் அருகே தேசிய நெடுஞ்சாலை 15 உடன் தேசிய சந்திப்பு
முக்கியத்துவம்
அசாமின் போக்குவரத்து வலையமைப்பில் தே. நெ. 715அ முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் முக்கிய இடம் காரணமாகக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும்.
பிராந்திய இணைப்பு-இந்த நெடுஞ்சாலை அசாமில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கும், வர்த்தகம், பொருட்களின் இயக்கம் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு அத்தியாவசியச் சேவைகளை அணுகுவதை எளிதாக்குகிறது. இது பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றது.
மூலோபாய முக்கியத்துவம்-இந்திய-பூட்டான் எல்லைக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 715அ மற்றும் தவாங்கிற்கு அருகில் உள்ள பகுதி, மூலோபாய ரீதியாக மதிப்புமிக்க சொத்தாக மாற்றும். இந்த நெடுஞ்சாலை எல்லைப் பகுதிக்கு அணுகலை வழங்கும். இது எல்லைப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் மற்றும் நிர்வகிக்கும் இந்தியாவின் திறனை மேம்படுத்துகிறது.
எல்லை தாண்டிய வர்த்தகம்: இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தை நெறிப்படுத்தவும், அண்டை நாட்டுடனான இணைப்பை மேம்படுத்தவும் இந்த நெடுஞ்சாலைக்கு வாய்ப்பு உள்ளது.
சுற்றுலாத் திறன்: முறையான வளர்ச்சியின் மூலம், தேசிய நெடுஞ்சாலை 715அ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சுற்றுலாவை ஈர்க்கும் வகையில், இதன் இயற்கை அழகை மேம்படுத்தும் வகையில், எல்லைக்கு அருகாமையில் உள்ளதால், உள்ளூர் பொருளாதாரங்கள் ஊக்குவிக்கப்படும்.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 715அ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684461 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | சித்தூர், பாலக்காடு | சித்தூர் (Chittur, Palakkad) என்பது இந்தியாவின், கேரளாத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது நல்லெப்பில்லி கிராம ஊராட்சிக்கு உட்பட்டது.
மக்கள்வகைப்பாடு
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்தூரின் மக்கள் தொகை 5,244 ஆகும். அதில் ஆண்கள் 2,540 பேரும், பெண்கள் 2,704 பேரும் உள்ளனர்.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
684462 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20153%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 153 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 153 (தே. நெ. 153)(National Highway 153 (India)) என்பது முன்னர் தே. நெ. 216 என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ. 153 இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
பாதை.
சராய்பாலி, சாரங்கர், என். எச்.-49, ராய்கர்.
சந்திப்புகள்
சராய்பாலி அருகே முனையம்
ராய்கர் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 153
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684463 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20153%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 153ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 153ஆ (National Highway 153B (India)) பொதுவாக தே. நெ. 153ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 153ஆ, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
சரபால்-நக்தீதுல்-ரெட்ஹாகோல்-பௌடா.
சந்திப்புகள்
சரபால் அருகே முனையம்
ரெட்கோகோல் அருகே
பவுடாவுக்கு அருகில் உள்ள முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 153B
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684464 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353 (தே. நெ. 353)(National Highway 353 (India)) என்பது கோராயை கரியாருடன் இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு உந்துவண்டி சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 353 இந்தியாவின் சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
கோரை அருகே தே. நெ. 53, மகாசமுந்த், பாக்பகாரா, நுவாபாடா, கரியார் அருகே தே. நெ. 59.
சந்திப்புகள்
கோராய் மகாசமுந்து அருகே முனையம்
கரியார் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஒரிசாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684466 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353ஆ அல்லது தே. நெ. 353ஆ என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும். இது இந்தியாவின் மகாராட்டிரா மற்றும் தெலங்காணா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
மகாராட்டிரம்
ஆசுதி, கோண்ட்பிம்ப்ரி, ராஜுரா, பாமவாடா, கட்சந்தூர், வன்சடி, கோர்பானா-தெலுங்கானா எல்லை.
தெலங்காணா
மகாராட்டிரா எல்லை-பேலா, ஜைனாத், ஆதிலாபாத்.
சந்திப்புகள்
ஆசுதி அருகே முனையம்
இராஜுரா
ஆதிலாபாத் அருகே முனையம்
திட்ட வளர்ச்சி
இராஜுராவிலிருந்து மகாராட்டிரா எல்லை வரையிலான 566 கி. மீ. நீளமுள்ள பகுதி, ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 353B
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684467 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%28III%29%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | இரும்பு(III) பாசுப்பேட்டு | இரும்பு(III) பாசுப்பேட்டு (Iron(III) phosphate) என்பது FePO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்ரிக் பாசுப்பேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. நீரற்ற இரும்பு(III) பாசுப்பேட்டு சேர்மத்திற்கு நான்கு வெவ்வெறு உருவங்களும் கூடுதலாக இரும்பு(III) பாசுப்பேட்டு இருநீரேற்றுக்கு (FePO4·(H2O)2 இரண்டு உருவங்களும் உள்ளன. இந்த பொருட்கள் மின்கலன்களில் சாத்தியமான எதிர்மின்வாய் பொருட்களாக அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன.
கட்டமைப்பு
இரும்பு(III) பாசுப்பேட்டு சேர்மம் பொதுவாக α-குவார்ட்சு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இதன் அடிப்படையில் இக்கட்டமைப்பில் நான்முகி Fe(III) மற்றும் பாசுப்பேட் தளங்கள் உள்ளன. இதனால் P மற்றும் Fe ஆகியவை நான்முக மூலக்கூறு வடிவவியலைக் கொண்டுள்ளன. உயர் அழுத்தங்களில், எண்முக Fe மையங்களுடன் மிகவும் அடர்த்தியான கட்டமைப்பிற்கு ஒரு கட்ட மாற்றம் ஏற்படுகிறது. இரண்டு செஞ்சாய்சதுர கட்டமைப்புகளும் ஓர் ஒற்றைச்சரிவச்சு கட்டமைப்பும் அறியப்படுகின்றன. இருநீரேற்றின் இரண்டு உருவங்களில் Fe மையம் இரண்டு பரசுபர சிசு நீர் ஈந்தணைவிகளுடன் எண்முகமாக உள்ளது.
பயன்கள்
இரும்பு(III) பாசுப்பேட்டு எஃகு மற்றும் உலோக உற்பத்தி செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் உலோக மேற்பரப்பில் பிணைக்கப்படும் போது, இரும்பு பாசுப்பேட்டு உலோகத்தின் மேலும் ஆக்சிசனேற்றத்தைத் தடுக்கிறது. இதன் இருப்பு தில்லி இரும்புத் தூணின் அரிப்பு எதிர்ப்பிற்கு ஓரளவு காரணமாகும்.
இரும்பு(III) பாசுப்பேட்டு பூச்சுகள் பொதுவாக சாயங்கள் அல்லது தூள் பூச்சு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இது இரும்பு அல்லது எஃகு அடி மூலக்கூறில் ஒட்டுதலை அதிகரிக்கவும், அரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது. அடுத்தடுத்த பூச்சு செயல்முறைகளில் இது முன்கூட்டியே தோல்வியை ஏற்படுத்தும்.
இலித்தியம் இரும்பு பாசுப்பேட்டு சேர்மத்தை தயாரிக்க இரும்பு(III) பாசுப்பேட்டு பயன்படுகிறது. இது இலித்தியம் இரும்பு பாசுப்பேட்டு மின்கலங்களில் உள்ள எதிர்மிவாயை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
பூச்சிக் கொல்லி
கரிம வேளாண்மையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட சில மெல்லுடலி கொல்லிகளில் இரும்பு பாசுப்பேட்டும் ஒன்றாகும். பூச்சிக்கொல்லி மாத்திரைகளில் இரும்பு பாசுப்பேட்டும் ஈடிடிஏ எனப்படும் எத்திலீன் டையமீன் டெட்ரா அசிட்டிக் அமிலம் போன்ற இடுக்கும் முகவியும் சேர்ந்திருக்கும்.
கனிமம்
சிட்ரெங்கைட்டு என்பது நீரேறிய இரும்பு(III) பாசுப்பேட்டின் கனிம வடிவமாகும்.
சட்ட அங்கீகாரம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இரும்பு(III) பாசுப்பேட்டு ஓர் உணவு சேர்க்கையாக அனுமதிக்கப்படவில்லை. 2007 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 2002/46/ஈசி உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலிலிருந்து இது திரும்பப் பெறப்பட்டது.
மேலும் காண்க
இரும்பு(II) பாசுபேட்டு
இலித்தியம் இரும்பு பாஸ்பேட் மின்கலம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பாசுபேட்டுகள்
இரும்பு(III) சேர்மங்கள் |
684472 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29 | ரோசன் (இசையமைப்பாளர்) | ரோசன் லால் நாக்ரத் (Roshan Lal Nagrath) (14 ஜூலை 1917 - 16 நவம்பர் 1967), பொதுவாக ரோசன் என்று அறியப்படும் இவர், ஒரு இந்திய எஸ்ராஜ் (தில்ரூபாவின் நவீன மாறுபாடு) இசைக் கலைஞரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். நடிகரும் மற்றும் திரைப்பட இயக்குநர் ராகேஷ் ரோஷன் இவரது மகனாவார். மேலும் இசை அமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் மற்றும் கிருத்திக் ரோஷன் ஆகிய இருவருக்கும் தந்தைவழி தாத்தா ஆவார்.
இளமை வாழ்க்கை
ரோசன் 1917 ஜூலை 14 அன்று பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் (இப்போது பாக்கித்தானில் உள்ளது) குஜ்ரன்வாலா நகரத்தில் ஒரு பஞ்சாபி சரஸ்வத் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே இசைப் பயிற்சிகளைத் தொடங்கிய ரோசன், பின்னர் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் இருக்கும் பண்டிட் ஸ்ரீகிருஷ்ணா நாராயண் ரத்தன்சங்கர் நிறுவிய மாரிஸ் கல்லூரியில் (நிறுவனத்தின் முதல்வர்) கீழும் பயின்றார். மைகாரின் புகழ்பெற்ற சரோத் இசைக்கலைஞரான அலாவுதீன் கானின் வழிகாட்டுதலின் கீழ் ரோசன் ஒரு திறமையான சரோத் இசைக் கலைஞரானார். 1940 ஆம் ஆண்டில், புது தில்லி, அனைத்திந்திய வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்/இசைக் கலைஞராகவும் இருந்த கவாஜா குர்சித் அன்வர், ரோசனை தான் இசைக்கும் கருவியான எஸ்ராஜில் பயிற்சி அளித்து நிலையத்தின் பணியாளர் கலைஞராக நியமித்தார். பின்னர், மும்பையில் ஒரு இசையமைப்பாளார் ஆவதற்காக 1948 இல் வானொலியின் பணியை கைவிட்டார்.
தொழில் வாழ்க்கை
1948 ஆம் ஆண்டில், பாலிவுட் திரைப்பட இசை இயக்குனராக மும்பை வந்த ரோசன், சிங்கார் (1949) படத்தில் இசையமைப்பாளர் கவாஜா குர்சித் அன்வாரின் உதவியாளராக சேர்ந்தார். பின்னர், தயாரிப்பாளர்-இயக்குநர் கிதார் சர்மா தனது நேகி அவுர் பாடி திரைப்படத்தில் இசையமைக்கும் பணியை ரோசனுக்கு வழங்கினார். இந்தப் படம் தோல்வியடைந்தாலும், தனது அடுத்த படத்தில் கிதார் சர்மா இவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கினார். பாவ்ரே நைன் (1950) படத்தின் மூலம் ரோசன் இந்தித் திரைப்படயுலகின் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக மாறினார்.
1950களின் முற்பகுதியில், பாடகர்களான முகமது ரபி, முகேஷ் மற்றும் தலத் மஹ்மூத் ஆகியோருடன் ரோசன் பணியாற்றினார். 1950களில் தொடங்கி மல்ஹார் (1951), ஷிஷம் மற்றும் அன்ஹோனி (1952) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இந்த நேரத்தில், மீரா பஜன் பாடலுக்கும் இசையமைத்தார். பின்னர்,நௌபஹார் (1952) திரைப்படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய "எயிரி மைன் தோ பிரேம் திவானி மேரா தர்த் நா ஜானே கோயி" என்ற வெற்றி பாடலுக்கும் இசையமைத்தார்.
இவர் ஒருபோதும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்திய திரைப்படத் துறையில் பாடலாசிரியர்களான இந்திவார் மற்றும் ஆனந்த் பக்சி ஆகியோருக்கு முதல் வாய்ப்புகளை இவர் வழங்கினார்.
இறப்பு
ரோசன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாள்பட்ட இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். 1967 நவம்பர் 16 அன்று தனது 50 வயதில் இதய அடைப்பு காரணமாக இறந்தார்.
தாஜ்மஹால் படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான பிலிம்பேர் விருது(1963)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
1967 இறப்புகள்
1917 பிறப்புகள்
இந்திய இசை அமைப்பாளர்கள் |
684479 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%E0%AE%87%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353இ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353இ (National Highway 353C (India)) பொதுவாக தே. நெ. 353இ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைசாலையாகும். இது இந்தியாவின் மகாராட்டிரா மற்றும் தெலங்காணா மாநிலங்கள் வழியாக செல்கிறது.
வழித்தடம்
மகாராட்டிரம்
சகோலி, லக்கண்டூர், வாத்சா, ஆர்மோரி, கட்சிரோலி, சமோர்சி, ஆஷ்டி, அல்லாபள்ளி, சிரோஞ்சா-தெலங்காணா.//
தெலங்காணா
மகாராட்டிரா-பார்கல், ஆத்மாகுர்./
சந்திப்புகள்
சகோலிஅருகே முனையம
தேசைகஞ்ச் அருகே
ஆர்மோரி அருகே
கட்சிரோலி அருகே
ஆஷ்திஅருகே
அல்லாபள்ளி அருகே
சிரோன்ச்சா அருகே
ஆத்மாகுர் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
குறிப்புகள்
தே. நெ. 194அ-க்கான முதல் அறிவிப்பில், சிரோஞ்சா முதல் ஆத்மகூர் வரையிலான பாதை தே. நெ. 363 எனப் பெயரிடப்பட்டது. இது சாகோலியிலிருந்து நீட்டிக்கப்பட்ட பாதையுடன் தெ. நெ. 353இ என மாற்றப்பட்டுள்ளது./
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH-353C
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684480 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%28%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29 | குலாம் முகமது (இசையமைப்பாளர்) | குலாம் முகமது (Ghulam Mohammed) (1903 - 17 மார்ச் 1968) பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் ஷேர் (1949), பர்தேஸ் (1950),மிர்சா காலிப்(1954),ஷாமா (1961) மற்றும் பாகீசா(1972) போன்ற இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக குறிப்பிடத்தக்கவர்.
மிர்சா காலிப் (1954) படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதினைப் பெற்றார். திரைப்பட தயாரிப்பாளர் கமல் அம்ரோஹி மற்றும் முன்னணி நடிகை மீனா குமாரி ஆகியோருக்கு இடையேயான திருமண மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இவரது பாகீசா படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு, இறுதியாக குலாம் முகமதுவின் மரணத்திற்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
குலாம் முகமது இராசத்தானின் பிகானேரில் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை நபி பக்ச் ஒரு திறமையான கைம்முரசு இணை இசைக்கலைஞர் ஆவார்.
தனது ஆறு வயதில் பஞ்சாபில் உள்ள நியூ ஆல்பர்ட் தியேட்டரிகல் என்ற நாடக நிறுவனத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பிகானேரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டர் என்ற நாடக நிறுவனத்தில் பணியாற்றினார். இறுதியில் மாதத்திற்கு 25 ரூபாய்க்கு ஒப்பந்தக் கலைஞராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக நிறுவனம் மூடப்பட்டது.
1924இல் மும்பைக்கு வந்த குலாம் முகம்மது, அங்கு எட்டு ஆண்டுகள் போராடி, 1932இல் சரோஜ் மூவிடோனின் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் "ராஜா பர்தாரி" படத்தில் கைம்முரசு இசைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
முதலில் இசையமைப்பாளர் நௌசாத்திடம் உதவியாளராக சேர்ந்த இவர் பின்னர் மூத்த திரைப்பட இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸுடனும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். 'டைகர் குயின்' (1947 சுயாதீனமாக இசையமைக்க ஆரம்பித்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார். 1955 ஆம் ஆண்டு மிர்சா காலிப் படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
பாகீசா (1972) வெளியிடப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 17,1968 அன்று அவர் இறந்தார்.உண்மையில், அவரது வழிகாட்டியும் நெருங்கிய நண்பருமான மூத்த திரைப்பட இசையமைப்பாளர் நௌசாத், இவரது மரணத்திற்குப் பிறகு, பாகீசா திரைப்படத்தில் இசையமைக்கும் பணியை முடித்தார்.
விருதுகளும் அங்கீகாரமும்
1955: படத்திற்காக இசையமைப்புக்கான தேசிய திரைப்பட விருது (1954)
எச். எம். வி. சரிகம தங்க வட்டு விருது 1972
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
குலாம் முகமதுவின் பாடல்கள்
தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்
1968 இறப்புகள்
1903 பிறப்புகள்
இந்திய இசை அமைப்பாளர்கள் |
684489 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%E0%AE%88%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353ஈ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353ஈ, (National Highway 353D (India))பொதுவாக தே. நெ. 353ஈ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 353ஈ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 353ஈ மகாராட்டிரா மாநிலத்தில் நாக்பூர், உம்ரேத், பிவாபூர், நாக்பீர், பிரம்மபுரி மற்றும் ஆர்மோரி ஆகிய இடங்களை இணைக்கிறது.
சந்திப்புகள்
நாக்பூர் அருகே முனையம்
உம்ரேத் அருகே
உம்ரேத் அருகே
நிலாஜ் அருகே
பிரம்ஹாபுரி அருகே
ஆர்மோரி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 753D
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684490 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | அப்துர் ரசித் கர்தார் | அப்துர் ரசித் கர்தார் (Abdur Rashid Kardar) (1904-1989) ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். பித்தானிய இந்தியாவில் (இப்போதைய பாக்கித்தானில் உள்ளது) இலாகூரில் உள்ள பாடி கேட் பகுதியில் திரைப்படத் துறையை நிறுவிய பெருமைக்குரியவர்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
கர்தார் இலாகூரில் உள்ள பாடி கேட் பகுதியில் புகழ்பெற்ற அரெய்ன் செயில்தார் குடும்பத்தில் பிறந்தார். பாக்கித்தானியத் துடுப்பாட்ட அணியின் முதல் தலைவர் அப்துல் ஹாபிஸ் காதர் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
கர்தார் ஒரு கலை அறிஞராகவும், வனப்பெழுத்து கலைஞராகவும் வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்புகளுக்கு சுவரொட்டிகளை தயாரிக்கவும், 1920 களின் முற்பகுதியில் செய்தித்தாள்களுக்கு எழுதவும் தொடங்கினார். இவரது பணி பெரும்பாலும் பிரித்தானிய இந்தியாவைச் சுற்றியுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களைச் சந்திக்க வழிவகுத்தது.
1928 ஆம் ஆண்டில், தி டாட்டர்ஸ் ஆஃப் டுடே என்ற முதல் ஊமைத் திரைப்படம் இலாகூரில் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் நகரத்தில் ஒன்பது திரைப்பட நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இலாகூரில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் ஹாலிவுட் அல்லது இலண்டனில் தயாரிக்கப்பட்டதைத் தவிர மும்பை அல்லது கொல்லத்தாவில் தயாரிக்கப்பட்டன. தி டாட்டர்ஸ் ஆஃப் டுடே வடமேற்கு ரயில்வே முன்னாள் அதிகாரியான ஜி. கே. மேத்தாவின் தயாரிப்பில் சங்கரதேவ் ஆர்யா என்பவரின் இயக்கத்தில் வெளியானது. மேத்தா இலண்டனில் இருந்து புகைப்பட கருவியை இறக்குமதி செய்தார். இந்தத் திட்டத்தில் உதவி இயக்குனராக தனக்கு உதவுமாறு அவர் கர்தாரிடம் கேட்டுக்கொண்டார். இறுதியில் ஒரு நடிகராக தனது படத்தில் கர்தாருக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். கர்தாரின் நண்பரும் சக எழுத்தாளருமான முகமது இஸ்மாயில், இந்த திரைப்படத்தின் தயாரிப்பில் கர்தாருடன் சேர்ந்தார்.
திரைப்படத் துறைக்கு அடித்தளம் அமைத்தல்
1928 ஆம் ஆண்டில், கர்தார் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவரும் தங்கள் உடமைகளை விற்று, இலாகூரில் திரைப்படத் துறைக்கு அடித்தளமாக இருந்த யுனைடெட் பிளேயர்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினர். 1930 ஆம் ஆண்டில் இவர்கள் தங்களது நிறுவனத்தின் கீழ் முதல் ஊமைத் திரைப்படத்தைத் தயாரித்தனர்.
ஹுஸ்ன் கா டாகு என்கிற மிஸ்டீரியஸ் ஈகிள் என்ற திரைப்படத்தின் மூலம் கர்தார் இயக்குனராக அறிமுகமானார். குல்சார் பேகம் என்பவருக்கு இணையாக கர்தார் ஆண் கதாநாயகனாகவும், இஸ்மாயில் துணை வேடத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தில் அமெரிக்க நடிகரான ஐரிஸ் கிராஃபோர்டு என்பவரும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் மிதமான வெற்றியையேப் பெற்றது. ஆனால் முக்கியமாக இலாகூரை ஒரு செயல்படும் திரைப்படத் துறையாக நிலைநிறுத்தியது.
கர்தார் புரொடக்ஷன்ஸ் அமைத்தல்
கர்தார் 1930 இல் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்து கிழக்கிந்திய திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் அவர்களுக்காக சுமார் ஏழு படங்களை உருவாக்கினார். 1937இல் நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவர் மும்பைக்கு குடிபெயர்ந்து பாக்பன் என்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். இதில் கோஹர் தங்கப் பதக்கத்தை வென்ற நடிகை பிம்லா குமாரி, பி. நந்த்ரேகர் மற்றும் சித்தாரா தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, 1937 ஆம் ஆண்டின் இறுதியில் ரஞ்சித் மூவிடோன் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களுக்காக மூன்று படங்களை இயக்கினார். இங்கிருந்து அவர் சிர்கோ புரொடக்டசன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்றார்., ஆனால் ஓராண்டு கழித்து, 1939 ஆம் ஆண்டில், சிர்கோ புரோடக்டசன்ஸ் லிமிட்டெட் கலைக்கப்பட்டபோது, கர்தார் நிறுவனத்தை வாங்கி, கர்தார் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 1940 முதல் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். அந்த நாட்களில் சிறந்த வசதிகளுடன் கூடிய அரங்கங்களில்ல் ஒன்றாக கர்தார் ஸ்டுடியோஸ் இருந்தது. மேலும் குளிரூட்டப்பட்ட ஒப்பனை அறைகளைக் கொண்ட முதல் இடமாகவும் இருந்தது.
பிற்கால ஆண்டுகள்
1946 ஆம் ஆண்டில், கர்தார் கே. எல். சைகல் மற்றும் இசையமைப்பாளர் நௌசாத் ஆகியோருடன் சேர்ந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஷாஜஹான் என்ற படத்தை தயாரித்தார். இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன.
நௌசாத், மச்ரூக் சுல்தான்புரி, சுரையா மற்றும் பாக்கித்தானியத் திரைப்படத்துறையின் நிறுவனர்களில் ஒருவரான நசீர் அகமது கான் போன்ற பல கலைஞர்களை இந்தித் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். கர்தாரின் துலாரி (1949) படத்தில் இடம்பெற்ற சுஹானி ராத் தால் சுகி என்ற பாடல் மூலம் பாடகர் முகமது ரபி தனது முதல் வெற்றியை இவரது திரைப்படத்தின் மூலம் பெற்றார். புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதற்காக இவர் கர்தார்-கொலினோஸ் போட்டியையும் தொடங்கினார். இந்த போட்டியின் மூலம் இவர் சந்த் உசுமானி மற்றும் மகேந்திர கபூர் ஆகியோரைக் கண்டுபிடித்து தொழில்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.
குடும்பமும் இறப்பும்
கர்தார் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி அக்தர் சுல்தானா தனது கணவர் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு 1988 இல் இறந்தார். இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி தயாரிப்பாளர்-இயக்குனரின் மனைவி சர்தாரின் சகோதரி பகர் இவரது இரண்டாவது மனைவி ஆவார். மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் வசித்து வந்த கர்தார், தனது 85 வயதில், 1989 நவம்பர் 22 அன்று, காலமானார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
1989 இறப்புகள்
1904 பிறப்புகள் |
684491 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | போபிதோரா காட்டுயிர் காப்பகம் | போபிதோரா காட்டுயிர் காப்பகம் (Pobitora Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் வட கரையில் மரிகாவன் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகமாகும். இது காட்டுயிர் காப்பகமாக 1987 ஆம் ஆண்டு 38.85 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இக்காப்பகப் புல்வெளி, ஈர நிலம் இந்திய மூக்குக்கொம்பனின் வாழிடமாக உள்ளது. அதிக அளவிலான இந்திய மூக்குக்கொம்பன் இங்கு வாழ்கின்றது.
பல்லுயிர்ப் பன்முகத்தன்மை
போபிதோரா காட்டுயிர் காப்பகத்தின் புல்வெளி குறைந்தது 15 புல் இனங்களைக் கொண்டுள்ளன. இதில் சைனோடன் டாக்டிலோன், விப் புல் (கெமார்த்ரியா கம்ப்ரெசா) வெட்டிவேர் (கிரைசோபோகன் ஜிசானியோயிட்சு) இரவணன் புல் (சாக்காரம் ராவெனா) ப்ராக்மிட்சு கார்கா, தெற்கு வெட்டுப்புல் (லீர்சியா கெக்சாண்ட்ரா) மற்றும் சமிக்கைப் புல் (ப்ராச்சியாரியா சூடோஇன்டெர்ரப்டா) ஆகியவை அடங்கும். இந்தப் புல்வெளிகள் இந்தியக் காண்டாமிருகங்களுக்கு வாழ்விடத்தையும் உணவு வளத்தையும் வழங்குகின்றன. இங்கு அதிக எண்ணிக்கையில் இவை உள்ளன. இக்காட்டுயிர் காப்பகத்தில் காணப்படும் பிற பாலூட்டிகள் பொன்னிறக் குள்ளநரி, காட்டுப்பன்றி மற்றும் காட்டு நீர் எருமை ஆகும். கேளையாடு, இந்தியச் சிறுத்தை மற்றும் செம்முகக் குரங்கு ஆகியவை மலைப்பகுதிகளில் முதன்மையாக வாழ்கின்றன. இது ஒரு முக்கியமான பறவைகள் வாழும் பகுதி ஆகும். சுமார் 2000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பல்வேறு ஊர்வனவற்றின் இருப்பிடமாகவும் இது உள்ளது.
அமைவிடம்
போபிதோரா சரணாலயம், பிரிக்கப்படாத நாகோன் மற்றும் இன்றைய மோரிகான் மாவட்டத்தில் உள்ள மாயாங்கில் பிரம்மபுத்திரா மற்றும் கலாங் ஆறுகளால் உருவாக்கப்பட்ட நிலப்பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. இது நாகோன் நகரத்திலிருந்து 83 கிமீ தொலைவிலும், மோரிகான் நகரத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தட்பவெப்பம்
போபிதோரா காட்டுயிர் காப்பகத்தில் மிதமான காலநிலை நிலவுகின்றது. மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. இங்கு 70 முதல் 90 சதவீதம் மழை பெய்யும். இருப்பினும், குளிர்காலத்தில் இயற்கையாகவே மழையளவு குறைந்து காணபப்டும். பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 90 பாகை செல்சியசு ஆகும்.
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பொபிடோராவிலிருந்து மானஸ் தேசியப் பூங்காவிற்கு காண்டாமிருக இடமாற்றங்கள் குறித்த புகைப்படக் கட்டுரை
Coordinates on Wikidata
அசாமிலுள்ள காட்டுயிர்க் காப்பகங்கள் |
684492 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | அசல்பூர் சட்டமன்ற தொகுதி | அசல்பூர் சட்டமன்றத் தொகுதி (Achalpur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். இது அமராவதி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேலும் காண்க
அச்சல்பூர்
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
அமராவதி மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684494 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%E0%AE%89%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353உ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353உ (National Highway 353E (India)), பொதுவாக தே. நெ. 353உ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ. 353உ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
உம்ரேத், பிசி, சிமூர், ஆனந்த்வான், வரோரா.
சந்திப்புகள்
உம்ரேத் அருகே முனையம்
வாரோரா அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 353E
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684496 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%E0%AE%90%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353ஐ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353ஐ, (National Highway 353I (India)) பொதுவாக தே. 353ஐ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைப் பாதையாகும். தேசிய நெடுஞ்சாலை 353ஐ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
வாடி அருகே தே. நெ. 46
கிங்னா,
ஜாம்தா,
சம்ருதி மகாமார்க்,
வெளி வட்டச் சாலை,
கும்கான்,
சலைதபா,
புடிபோரி எம்ஐடிசி,
டக்கல்காட்,
காப்ரி மோரேஷ்வர்,
அசோலா,
சிந்தி ரயில்வேயில் உலர் துறைமுகம்,
பாவ்நார்,
சுரபாரதி,
அலெசூர்,
கட்காவ்,
பெட்ரி,
தே. தொ. கழகம்,
ஜே.ஐ.டி. கல்லூரி
சந்திப்புகள்
வாடி அருகே முனையம்
பாவ்நார் அருகே தேசிய நெடுஞ்சாலை முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 353I
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684497 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%E0%AE%92%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353ஒ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353ஒ, (National Highway 353J (India)) பொதுவாக தே. நெ. 353ஒ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் நான்கு வழி நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 353ஓ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாக செல்கிறது.
வழித்தடம்
பெட்ரி (நாக்பூர் வெளி வட்ட சாலை) கட்டோல், கல்மேஷ்வர், ஜலால்கேடா, வாரூட், மோர்சி சந்தூர் பஜார், அச்சல்பூர், பரத்வடா.
சந்திப்புகள்
நாக்பூர் வெளி வட்டச் சாலை, பெட்ரி அருகே உள்ள முனையம்
பரத்வடா அருகே என். எச். 548சி முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 353ஒ]
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684498 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் | துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அல்லது சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது.. சிதிலமடைந்த இக்கோயில் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதால், யுனெஸ்கோவின் 2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதுக்கு தேர்வாகியது. சிவபெருமானுக்கு அமைக்கப்பட்ட இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், துக்காச்சி ஊராட்சியில் உள்ள கூகூர் கிராமத்தில் பாயும் அரசலாறு கரையில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு கிழக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயிலை தென் திருக்காளத்தியப்பர் கோயில் என்றும் அழைப்பர்.
வரலாறு
இக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனால் (ஆட்சிக் காலம்:1001-1044) நிறுவப்பட்டது. விக்கிரம சோழன் (ஆட்சிக் காலம் 1118-1135) தோல் நிறமி இழத்தல் நோயால் அவதியுற்ற போது, துக்காச்சி ஆபத்சகாயஸ்வரர் கோயிலில் 48 நாட்கள் தங்கியிருந்து சிவபெருமானை வேண்டியதால் நோயிலிருந்து மீண்டான். இதனால் இக்கோயில் வளாகத்தை விரிவுபடுத்தினார்.
கோயில் அமைப்பு
சோழர் காலக் கட்டிடக்கலையில் அமைந்த இக்கோயிலின் மூலவர் பெயர் ஆபத்சகாயஸ்வரர், அம்பாள் பெயர் துர்கை எனும் சௌந்திரநாயகி. இக்கோயிலில் சரபேஸ்வரர், வராகி, ஜேஸ்டா தேவி, சப்தகன்னியர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், மற்றும் குபேரன் ஆகியோரின் தெய்வத் திருமேனிகள் இக்கோயிலில் உள்ளது. வடக்கு நோக்கிய சந்திரசேகரருக்கு சிறு தனிச்சன்னதி உண்டு. இக்கோயில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் 7 பிரகாரங்கள் கொண்டிருந்த இக்கோயிலில், தற்போது 3 பிரகாரங்கள் மட்டுமே உள்ளது.
கும்பகோணக் கோயில்களில் மூன்று சரபேஸ்வரர் சன்னதிகள் உள்ளது. அதில் முதலாவது சரபேஸ்வரர் சன்னதி இக்கோயிலில் நிறுவப்பட்டதாகும்.ஐராவதேசுவரர் கோயில் விமானம் போன்றே இக்கோயில் விமானம் அமைந்துள்ளது.
மறு சீரமைப்பு
தமிழ்நாடு அரசின் ஆலோசனையின்படி, இக்கோயிலின் தொன்மை மாறாது 2015ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பணி துவங்கியது. சீரமைப்பு பணி முடிந்து 2023ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோயில் பழைமை மாறாது சீரமைப்பு செய்தபடியால் இக்கோயிலுக்கு யுனேஸ்கோவின் பண்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
சோழர் கட்டிடக்கலை
சோழர்கள் கட்டிய சிவன் கோயில்கள் |
684502 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 | கொளுக்குமலை | கொளுக்குமலை, தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சியில் அமைந்துள்ள மலைக்கிராமம் ஆகும். இது போடிக்கு வடமேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணி அருகே அமைந்துள்ளது எனிலும் நேரடி சாலை வசதி இல்லை. மூணார் அல்லது சூரியநெல்லி வழியாக கொளுக்குமலைக்கு சாலை வசதி உள்ளது.
கொளுக்குமலை கடல்மட்டத்திலிருந்து 7130 அடி உயரத்தில் உள்ளது. இங்கு தேயிலை அதிகம் விளைகிறது. இதனருகே கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் சூரியநெல்லி (6.6 கிலோ மீட்டர்) மற்றும் மூணார் (32 கிலோ மீட்டர்) நகரங்கள் உள்ளது.
போக்குவரத்து வசதிகள்
போடியிலிருந்து கொளுக்குமலைக்கு நேரடிப் பேருந்து வசதிகள் இல்லை. எனவே போடி நகரத்திலிருந்து போடி மெட்டு வரை பேருந்து மூலம் சென்று, அங்கிருந்து கேரளாவின் சூரியநெல்லிக்குச் சென்ற பின், ஜீப்கள் மூலம் கொளுக்குமலை செல்லலாம்.
மேற்கோள்கள்
தேனி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் |
684510 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0 | பத்மசிறி பண்டார | பத்மசிறி பண்டார (Pathmasiri Bandara, පද්මසිරි බණ්ඩාර; பிறப்பு: 8 திசம்பர் 1966) ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓர் ஆசிரியரான இவர் ஒரு தொழிற்சங்க ஆர்வலர் ஆவார்.
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1966 பிறப்புகள்
தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள்
மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
சிங்கள அரசியல்வாதிகள்
பொலன்னறுவை மாவட்ட நபர்கள் |
684511 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20353%E0%AE%93%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 353ஓ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 353ஓ (National Highway 353K (India)) பொதுவாக தே. நெ. 353ஓ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலை ஆகும். தே. நெ. 353ஓ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
நந்தகாவ்ன் பெத், சிர்கேட், மோர்சி, வாரூத்.
சந்திப்புகள்
நந்தகான் பெத் அருகே
மோர்சி அருகே முனையம்
வார்டு அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 353ஓ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684512 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D | செம்பழுப்பு மார்பு வன ஈப்பிடிப்பான் | செம்பழுப்பு மார்பு வன ஈப்பிடிப்பான் (சையோர்னிசு ஒலிவாசியசு-Cyornis olivaceus) என்பது பழைய உலக பறக்கும் பறக்கும் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நிலக் காடுகள் ஆகும்.
இந்த சிற்றினம் முன்பு ரைனோமியாசு என்ற பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2010-ல் மூலக்கூறு இனவரலாற்று ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சையோர்னிசு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ADW இல் உள்ள படம் Wayback Machine இல் காப்பகப்படுத்தப்பட்ட 2004-05-18
மலேசியப் பறவைகள்
ஈ-பிடிப்பான்கள் |
684513 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | ஆந்திரப் பிரதேச ஆறுகளின் பட்டியல் | ஆந்திரப் பிரதேச ஆறுகளின் பட்டியல் (List of rivers of Andhra Pradesh) என்பது கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் பெரிய ஆறுகளான பெண்ணாறு, கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆறு, துங்கபத்திரை ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளாகும். மேலும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் நீளம் குறைவாகவும், பருவ காலங்களில் மட்டும் பாயும் ஆறுகளாக உள்ளது.
பட்டியல்
கிருஷ்ணா ஆறு
கோதாவரி
பெண்ணாறு,
துங்கபத்திரை ஆறு
வம்சதாரா ஆறு
வேதவதி ஆறு
சுவர்ணமுகி ஆறு
சித்ராவதி ஆறு
சாகிலேறு
செய்யாறு
குண்டாறு
மால்தேவி ஆறு
பாபாக்னி ஆறு
மகேந்திரதனயா ஆறு
நாகவள்ளி ஆறு
சைலேரு ஆறு
ஆரணி ஆறு
சம்பாவதி ஆறு
கோசுதானி ஆறு
யெர்ரகலுவா ஆறு
பாலாறு
பத்ரா ஆறு
கொரிங்கா ஆறு
கொனசீமா
கோசுதானி ஆறு
இதனையும் காண்க
இந்திய ஆறுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
ஆந்திர ஆறுகள் |
684515 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D | நீலமுக ஈப்பிடிப்பான் | நீலமுக ஈப்பிடிப்பான் (Blue-fronted flycatcher-யூமியாசு கோவெளி) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியா மட்டுமே உரியதாகும். இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
ஈ-பிடிப்பான்கள்
யூமியாஸ் |
684516 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE | தைவான் ஒளிர் நீல்தாவா | தைவான் ஒளிர் நீல்தாவா (Taiwan vivid niltava-நீல்தாவா விபிதா) அல்லது சின்ன ஒளிர் நீல்தாவா) என்பது மியூசிகாபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1864ஆம் ஆண்டில் இராபர்ட் சுவின்கோவினால் விவரிக்கப்பட்டது. இது தைவானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. ஆசிய முதன்மை நிலத்தில் காணப்படும் சீனாவின் ஒளிர் நீல்தாவா (நீ. ஓட்டேசி′) முன்னர் இதன் துணையினமாகக் கருதப்பட்டது. இது பெரிய அளவில் உள்ளது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
தைவான் ஒளிர் நீல்தாவா என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தின் நடுத்தர அளவிலான (16 செமீ) பறவை ஆகும். இதன் தலை, முதுகு, வால் மற்றும் சிறிய இறக்கை மறைப்புகளில் ஆழமான ஊதா நீல நிறத்தையும், அடிப்பகுதியில் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தையும் கொண்டுள்ளது. இதன் தொண்டை, முகம், இறக்கைகள் மற்றும் கருவிழிகள் கால்கள் மற்றும் அலகு போன்ற கருப்பு நிறத்தில் காணப்படும். பெண் பறவை ஒட்டுமொத்தமாக ஆலிவ் பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதி நிறம் குறைவாகவும் சாம்பல்-பழுப்பு தலை, கழுத்துடன் காணப்படும். இதன் குடும்பத்தின் பல சிற்றினங்களைப் போலவே, சிறிய நீல்தாவாவும் அலகின் அடிப்பகுதியில் தனித்துவமான முட்களைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தைவான் பறவைகள் |
684519 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D | மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் | மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் 8,374 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தேயிலைத் தோட்டம் ஆகும். மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு மற்றும் குதிரை வெட்டி ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்களும், தேயிலை தொழிற்சாலைகளும் உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்தனர்..
தமிழ்நாடு அரசு 8,374 ஏக்கர் இத்தேயிலைத் தோட்டத்தை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் விரிவாக்கத்திற்கு பாதுகாக்கப்பட்ட காப்புக் காடாக மாற்றி அரசாணை வெளியிட்டதாலும், 28 பிப்ரவரி 2018 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தேயிலைத் தோட்டத்தை பம்பாய்-பர்மா டிரேடிங் கம்பெனி நிர்வாகம், 1929ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாண அரசிடமிருந்து 99 ஆண்டுகால குத்தகைக்கு பெற்று, தேயிலைத் தோட்டம் பயிரிட்டு, தேயிலை தொழிற்சாலைகள் மூலம் பதப்படுத்தப்பட்ட தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. இத்தேயிலைத் தோட்டத்தில் நான்கு தலைமுறை மக்கள் தோட்ட வேலை செய்து வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தின் குத்தகை காலம் பிப்ரவரி 2028ஆம் ஆண்டுடன் முடிகிறது. தற்போது இத்தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 700 பேர் உள்ளனர்.
இந்நிலையில் 19 செப்டம்பர் 2018 அன்று 8,374 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் விரிவாக்கத்திற்கு பாதுகாக்கப்பட்ட காப்புக் காடாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனால் பிப்ரவரி 2028 உடன் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம் மூடி வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தேயிலைத் தோட்ட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாஞ்சோலைத் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் எதிர்காலம் கேள்விக்குரியதாக உள்ளது. மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று உறைவிடம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து போராடுகின்றனர்.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்தக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து தீர்ப்பு வழங்கியது.மேலும் புலம் பெயர உள்ள 700 மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசுக்கு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவைகள் பின்வருமாறு:
இடம்பெயர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிதியுதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு இலவசமாக பட்டா வழங்குதல் மற்றும் "கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் தனி நபர் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல்.
தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திறன் பயிற்சி வழங்குதல்.
திறன் பயிற்சியை முடித்த தொழிலாளர்களுக்கு தனியார் துறையில் பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்தல்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அவர்கள் விரும்பும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கும் மற்றும் அரசு விடுதிகளில் தங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு முகாம்களை நடத்தி அவர்கள் குடியேற விரும்பும் முகவரிகளுக்கு குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்கள் "கவனமாகச் செயல்படுத்தப்படுவதை" உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.
மேற்கோள்கள்
தேயிலைத் தோட்டங்கள் |
684530 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81 | சூரியோடு | சூரியோடு (Chooriyode) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது மண்ணார்க்காடு வட்டத்துக்கு உட்பட்டது. இது மாவட்ட தலைமையகமான பாலக்காட்டின் வடகிழக்கே 35 கி. மீ. தொலைவில், கோழிக்கோடு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 213 (NH-213) மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு (50 மில்லியன் ஆண்டுகளின் அறுபடாத பரிணாம வரலாற்றைக் கொண்ட வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடு) சூரியோடில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.
போக்குவரத்து
கேரளத்தின் மண்ணார்காட்டில் இருந்து சூரியக்கோடு 7 கி. மீ. தொலைவில் உள்ளது. சிறு நகரமான தச்சம்பாறை மற்றும் சிரக்கல் பாடி, கஞ்சிரபுழா அணை, பூங்கா ஆகியவை சூரியோடு சந்திப்பில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ளன.
ஊரைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள்
மாநில அளவிலான பள்ளி மாணவர் நடன இயக்குநர்- அப்பு மேஷ்
குடிமைப் பொறியாளர் கட்டடக் கலைஞர் - நௌஷாத் கே
சமயங்கள்
இங்கு பெரும்பாலும் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ சமயத்தவர்கள் இருக்கின்றனர்.
ஆறு
இங்கு பாயும் சூரியோடு ஆறு பாரதப்புழாவின் துணை ஆறாகும். கேரளத்தில் மேற்கே பாயும் ஆறுகளில் மிகப்பெரிய துணை ஆறான சூரியோடு ஆற்றின் மீன்களின் பன்முகத்தன்மை பற்றிய விரிவான ஆய்வில், சூரியோடு ஆற்றானது மீன் இனங்கள் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டது. இதில் 117 இனங்கள் இருப்பது பதிவு செய்ப்பட்டது. அதில் மூன்று இனங்கள் இந்த ஆற்றுக்கேச் சொந்தமான அகணிய உயிரி ஆகும்.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
684532 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D | பழுப்பு மார்பு வன ஈப்பிடிப்பான் | பழுப்பு மார்பு வன ஈப்பிடிப்பான் (Brown-chested jungle flycatcher)(சையோர்னிசு புருனேட்டசு) என்பது பழைய உலக பறக்கும் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது தென் சீனாவில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் மலாய் தீபகற்பத்தில் வாழக்கூடியது. இதன் இயற்கையான வாழிவிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகளும் மிதவெப்ப அல்லது வெப்ப மண்டலம் சதுப்புநிலக் காடுகளும் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
இந்த சிற்றினம் முன்பு ரைனோமையாசு என்ற பேரினத்தில் வைக்கப்பட்டது, ஆனால் 2010 மூலக்கூறு இனவரலாற்று ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சையோர்னிசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
BirdLife Species உண்மைகள் தாள்.
தென் சீனப் பறவைகள்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்
ஈ-பிடிப்பான்கள் |
684533 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753, பொதுவாக தே. நெ. 753 என்று குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் மகாராட்டிராவில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இது சவ்னர், தும்சர், திரோரா, கோந்தியா, அர்ஜுனி மோர்காவ் மற்றும் பிற கிராமங்களான கோரேகான், கோந்தியா, சடக் அர்ஜுனி மற்றும் முக்கியமான தேசியப் பூங்காக்களில் ஒன்றான, இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமா நவேகான் தேசியப் பூங்காவினை இணைக்கும் வகையில் செல்கிறது.
வழித்தடம்
தே. நெ. 753 மகாராட்டிர மாநிலத்தில் அர்ஜுனி மோர்காவ், நவேகான் தேசியப் பூங்கா, கோம்மாரா, கோரேகான், கோந்தியா, திரோரா, தும்சர், ராம்டெக் மற்றும் சவ்னர் ஆகிய இடங்களை இணைக்கிறது.
சந்திப்புகள்
மன்சார் அருகே
சாவ்னர் அருகே
கோமர அருகில்
ராம்டெக் அருகே
கோண்டியா அருகே
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 753
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684534 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753அ (National Highway 753A (India)) பொதுவாக தே. நெ. 753அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச் சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 753அ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
மல்காபூர், புல்தானா, சிக்லி, தியுல்காவ் ராஜா, ஜல்னா, அவுரங்காபாத்
சந்திப்புகள்
மல்காபூர் அருகே முனையம்
புல்தானா அருகே
சிக்லி அருகே
தியுல்காவ் ராஜா அருகே
ஜல்னா அருகே
ஜல்னா அருகே
ஜல்னா அருகே
அவுரங்காபாத் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 753A
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684535 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753ஆ (National Highway 753B (India))(அங்கலேசுவர்-புர்கான்பூர் நெடுஞ்சாலையின் ஒரு பாதை) பொதுவாக தே. நெ. 753ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ. 753ஆ இந்தியாவின் மகாராட்டிர, குசராத்து மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
செவாலி, நிசாம்பூர், சட்வேல், நந்துர்பார், தலோடா, அக்கல்குவா, கபர், சக்பாரா, டெடியாபாடா, நேத்ரங் /
சந்திப்புகள்
செவாலி அருகே முனையம் /
நேத்ரங்கிற்கு அருகில் உள்ள முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 753
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
Subsets and Splits