id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
684537 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%28II%29 | பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) | பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) (Potassium tetraiodomercurate(II)) என்பது K2[HgI4]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அம்மோனியாவைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் நெசுலர் வினையாக்கியில் இச்சேர்மம் ஒரு தீவிர செயல்படும் முகவராகும்.
தயாரிப்பு
மெர்குரிக் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு மற்றும் அசிட்டோனில் உள்ள 2% தண்ணீரின் சூடான கரைசலில் இருந்து பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) படிகமாகிறது. செறிவூட்டப்பட்ட நீரிய கரைசலில் தயாரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியானது வெளிறிய ஆரஞ்சு நிற ஒற்றைநீரேற்றைக் K[Hg(H2O)I3] கொடுக்கும்.
பயன்பாடுகள்
பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டு(II) இதன் ஒப்புமைகளான செப்பு மற்றும் வெள்ளி உப்புகளான M2[HgI4] (இங்கு M=Cu,Ag)போன்றவற்றை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகப் பயனளிக்கிறது.
நெசுலர் வினையாக்கி
இயூலியசு நெசுலரின் (நெசுலர்) பெயரிடப்பட்ட நெசுலர் வினையாக்கியானது 2.5 மோல்/லி பொட்டாசியம் ஐதராக்சைடில் உள்ள பொட்டாசியம் டெட்ரா அயோடோமெர்குரேட்டின்(II) 0.09 மோல்/லி கரைசல் ஆகும். அம்மோனியா (NH3) முன்னிலையில் இந்த வெளிர் கரைசல் ஆழமான மஞ்சள் நிறமாக மாறும். அதிக செறிவுகளில், மில்லனின் காரத்தில் (HgO·Hg(NH2)Cl) ஒரு பழுப்பு நிற படிவு வழிப்பெறுதி உருவாகும். இதன் உடனடி பரிசோதனை உணர்திறன் மதிப்பு 2 μL இல் 0.3 μg NH3 ஆகும்.
NH4+ + 2 [HgI4](2−) + 4 OH− → HgO*Hg(NH2)I↓ + 7 I− + 3H2O
பழுப்பு நிற வீழ்படிவு முழுமையாக வகைப்படுத்தப்படவில்லை. இது HgO·Hg(NH2)I சேர்மத்திலிருந்து 3HgO·Hg(NH3)2I2 வரை மாறுபடலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
IARC Monograph: "Mercury and Mercury Compounds"
National Pollutant Inventory - Mercury and compounds fact sheet
பொட்டாசியம் சேர்மங்கள்
அயோடோ அணைவுச் சேர்மங்கள்
ஒருங்கிணைவுச் சேர்மங்கள்
பாதரச(II) சேர்மங்கள்
வேதியியல் பரிசோதனைகள் |
684538 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%86%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ (National Highway 753BB (India)), பொதுவாக தே. நெ. 753ஆஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் இரண்டாம் நிலை பாதையாகும். தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் செல்கிறது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 753ஆஆ மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நந்துர்பார், கோத்தனே, தோண்டைச்சா, பாம்னே, சில்லனே, காசுபே, சிண்ட்கேடா மற்றும் சோங்கிர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.
சந்திப்புகள்
நந்துர்பார் அருகே முனையம்
தொண்டைச்சா அருகே
சோங்கிர் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 753ஆஆ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684540 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%87%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753இ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753இ (National Highway 753C (India)) பொதுவாக தே. நெ. 753இ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் இரண்டாம் நிலை சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 753இ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் செல்கிறது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 753இ மகாராட்டிர மாநிலத்தில் ஜல்னா புறவழிச்சாலை, சிந்த்கேட் ராஜா, தசுராபித், பீபி, சுல்தான்பூர், மெக்கர், டோங்காவ்ன், கென்வாட், மாலேகாவ் ஜகாங்கீர், ஷெலு பஜார், கரஞ்சா, பிரம்காங்கேட், கெர்டா, பிம்பால்கான், வகோடா, தஷசார், தலேகான் மற்றும் புல்கான் ஆகிய நகரங்களை இணைக்கிறது.
சந்திப்புகள்
ஜல்னா அருகே முனையம்
சுல்தான்பூர் அருகே
மெக்கர் அருகே
மாலேகான் அருகே
மாலேகான் அருகே
செலு பஜார் அருகே
கரஞ்சா அருகே
கரஞ்சா அருகே
புல்கான் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 753C
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684541 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%89%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753உ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753உ, பொதுவாக தே. நெ. 753உ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 753உ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
அஜந்தா, புல்தானா, காம்கான்
சந்திப்புகள்
அஜந்தா அருகே முனையம்
புல்தானா அருகே
காம்கான் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 753E
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684542 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE | அஜந்தா | அஜந்தா (Ajanta) அல்லது அஜாந்தா என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது ஜள்காவ் மற்றும் அவுரங்காபாத்திற்கு இடையிலான சாலையில் அஜந்தா குகைகளுக்கு அருகில் உள்ளது.
புவியியல்
அஜந்தா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 586 மீட்டர் (1,923 ) உயரத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
அஜந்தா குகைகள் 1819ஆம் ஆண்டில் ஜான் சுமித் என்பவரால் இப்பகுதியில் வேட்டையாடும் போது கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்தக் கிராமம் மிகவும் பழமையானது. இது நிஜாம் ஷாஹி, முகலாயர்கள், ராஜ்புத் மற்றும் மராட்டிய உட்படப் பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்டுள்ளது. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாகாடகப் பேரரசின் கீழ் இந்தக் கிராமம் உருவானது என்றும், தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இது ஒரு புத்த வம்சமாகும் என்றும் நம்பப்படுகிறது.
1632இல் தௌலாதாபாத் கோட்டை முற்றுகையின் போது ஷாஜகான் வெற்றி பெற்ற பிறகு, முகலாயர்களுக்கு அஜந்தா ஒரு முக்கிய கிராமமாக மாறியது. இந்தப் படையெடுப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஜெய்சால்மரைச் சேர்ந்த மகாராவல் பீம் சிங்கின் மகனான ராஜ்புத் சர்தார் நாது சிங்கிற்கு அஜந்தா கிராமம், வேதல்வாடி மற்றும் ஜஞ்சலா கோட்டையை ஷாஜகான் போரில் அவரது துணிச்சலுக்காக வழங்கினார்.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம் |
684543 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%8A%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753ஊ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753ஊ (National Highway 753F (India)) பொதுவாக தே. நெ. 753ஊ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 753ஊ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
ஜல்கான், பகுர், வாகோட், பர்தாபூர், அஜந்தா, சில்லோட், புலம்ப்ரி, அவுரங்காபாத், நெவாசா, வடாலா பஹிரோபா, கோடேகான், அகமதுநகர், சிரூர், ரஞ்சன்காவ், ஷிக்ராபூர், புனே, பாட், முல்சி, தாம்ஹினி, நிஜாம்பூர், மங்காவ்ன், மஸ்லா, திகி துறைமுகம்
சந்திப்புகள்
ஜல்கான் அருகே முனையம்
மங்கான் அருகே
திக்கி துறைமுகத்திற்கு அருகில் உள்ள தே. நெ. 166இ முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 753F
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684545 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | மோர்சி சட்டமன்றத் தொகுதி | மோர்சி சட்டமன்றத் தொகுதி (Morchi assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். மோர்சி, வார்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
684548 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | சிரியா ஜனநாயகப் படைகள் | சிரியா ஜனநாயகப் படைகள் (Syrian Democratic Forces SDF), சிரியா நாட்டின் வடகிழக்கில் உள்ள குர்திஸ்தானில் வாழும் குர்தி மொழி பேசும் குர்து மக்களால் 10 அக்டோபர் 2015 முதல் இயக்கப்படும் படையாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற ஆயுதப் படையாகும். சிரிய உள்நாட்டுப் போரின் போது சிரியா ஜனநாயகப் படைகள், சிரியா அரசுக்கு எதிராகப் போராடியது.இப்படையில் பெரும்பான்மையாக குர்து மக்களும், சிறிதளவில் சிரிய அரபு மக்கள், அசிரிய சிரியாக் மொழி பேசும் மக்கள், செச்செனியர்கள் மர்றும் ஆர்மீனியர்களின் படைகளும் இடம் பெற்றுள்ளது. இதன் நோக்கம் சமயச் சார்பற்ற அரசு அமைத்தல், பழங்குடி மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகும்.
துருக்கி மற்றும் கத்தார் நாடுகள் தீவிரவாதக் குழுவினர் என்று கூறி இப்படையை தடை செய்துள்ளனர்.
இசுலாமிய அரசுப் படைகள், அல்-கைதா, சிரியா தேசியவாதிகள் மற்றும் துருக்கி ஆதரவுப் படைகள் இதன் எதிரிகள் ஆவார்.
மேற்கோள்கள்
சிரியாவின் ஆயுதக் குழுக்கள் |
684552 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | ஆர்வி சட்டமன்றத் தொகுதி | ஆர்வி சட்டமன்றத் தொகுதி (Arvi Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி வர்தா மாவட்டத்தில் உள்ள நான்கு விதான் சபா தொகுதிகளில் ஒன்றாகும். ஆர்வி, வர்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
வர்தா மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684553 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%8F%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753ஏ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753ஏ (National Highway 753H (India)) பொதுவாக தே. நெ. 753ஏ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் இரண்டாம் நிலை பாதையாகும். தேசிய நெடுஞ்சாலை 753ஏ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் இயங்குகிறது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 753ஏ சில்லோடு, போகார்தான், இரசூர்,ஜால்னா, அம்பாத், வாதிகோத்ரி நகரங்களை இணைக்கும் சாலையாக மகாராட்டிராவில் உள்ளது.
சந்திப்புகள்
சில்லோட் அருகே முனையம்
வாடிகோட்ரி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 753ஏ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684570 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88 | வெய்னிங் தவளை | சூடோரேனா வெய்னினென்சிசு (Weining frog) என்பது சீனா காணப்படும் ஒரு தவளை சிற்றினமாகும். இது சூடோரேனா எனும் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். இது வெய்னிங் தவளை அல்லது வெய்னிங் வரி-நகத் தவளை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமுள்ள புதர் நிலங்கள், மிதவெப்ப புல்வெளி மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள் |
684571 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE | புல்ச்ரானா | புல்ச்ரானா (Pulchrana) என்பது தென்கிழக்கு ஆசியா, பிலிப்பீன்சில் காணப்படும் இரணிடே குடும்ப தவளைகளின் பேரினமாகும்.
சிற்றினங்கள்
பின்வரும் சிற்றினங்கள் புல்ச்ரானா பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
புல்ச்ரானா பஞ்சரனா (லியோங் மற்றும் லிம், 2003) (லியோங் அண்ட் லிம், 2003)
புல்ச்ரானா பாராமிகா (போட்ஜெர், 1900)
புல்ச்ரானா சென்ட்ரோபெனின்சுலாரிசு (சான், பிரவுன், லிம், அஹ்மத், மற்றும் கிரிஸ்மர், 2014)
புல்ச்ரானா டெபுசுசி (வான் காம்பன், 1910)
புல்ச்ரானா பாண்டாசுடிகா ஆரிபின், காஹ்யாடி, ஸ்மார்ட், ஜான்கோவ்சுகி மற்றும் ஹாஸ், 2018
புல்ச்ரானா கிளாண்டுலோசா (பௌலெங்கர், 1882)
புல்ச்ரானா கிராண்டோகுலா (டெய்லர், 1920)
புல்ச்ரானா குட்டமணி (பிரவுன், 2015)
புல்ச்ரானா லாட்டரிமாக்குலாட்டா (பார்பர் அண்ட் நோபல், 1916)
புல்ச்ரானா மாங்கியானம் (பிரவுன் & குட்மேன், 2002)
புல்ச்ரானா மெலனோமெண்டா (டெய்லர், 1920)
புல்ச்ரானா மோய்லெண்டோர்பி (போட்ஜெர், 1893)
புல்ச்ரானா பிக்டுராட்டா (பௌலெங்கர், 1920)
புல்ச்ரானா ரவா (மாட்சுய், மும்புனி, மற்றும் அமிதி, 2012)
புல்ச்ரானா சைபெரு (திரிங், மெக்கார்த்தி, மற்றும் விட்டன், 1990)
புல்ச்ரானா சிக்னாட்டா (குந்தர், 1872)
புல்ச்ரானா சிமலிசு (குந்தர், 1873)
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள்
தவளைகள் |
684572 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE | அபவோரானா | அபவோரானா (Abavorana) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் உண்மையான தவளைகளின் பேரினமாகும். இவை மலாய் தீபகற்பம், சுமாத்திரா, போர்னியோ தீவுகளில் காணப்படுகிறது. இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் முன்பு கைலாரனா பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் 2015ஆம் ஆண்டு கைலாரனா இனவரலாற்றுத் திருத்தத்தைத் தொடர்ந்து புதிய பேரினமான அபவோரனாவாக மறு வகைப்படுத்தப்பட்டன.
சிற்றினங்கள்
இந்த பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.
அபவோரானா டெக்கோராட்டா (மொக்வார்ட், 1890)
அபவோரானா லக்டுவோசா (பீட்டர்சு, 1871)
அபவோரானா நசுகுல் குவா, அனுவார், கிரிஸ்மர், வூட், அஜீசா மற்றும் முயின், 2017
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள்
தவளைகள் |
684574 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%93%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753ஓ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753ஓ (National Highway 753J (India)) பொதுவாக தே. நெ. 753ஓ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 753ஓ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
ஜல்கான், மெகருன், சிரோலி, சம்னர், லாசுகான், பச்சோரா, பட்கான், சாலிசுகான், தம்போல், கிராபூர், நியாய்டொங்கிரி, பிம்பெர்கேட், நந்த்கான், மன்மாட்.
சந்திப்புகள்
ஜல்கான் அருகே முனையம்
மன்மாட் அருகே முனையம்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 753ஓ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684577 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20953%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 953 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 953 (National Highway 953 (India)) பொதுவாக தே. நெ. 953 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ 953 இந்தியாவின் குசராத்து, மகாராட்டிர மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
சோங்கத், சுபீர் அக்வா, சபுதாரா, வாணி, பிம்பால்கான் பசுவந்த்.
சந்திப்புகள்
சோங்கத் அருகே முனையம்
பிம்பல்காவ் பாசுவந்த் அருகே முனையம்
மேலும் காண்க
நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 953
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684580 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87 | அரிபாவ் பாகடே | அரிபாவ் கிசான்ராவ் பாகடே (Haribhau Bagade)(பிறப்பு 17 ஆகத்து 1945) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். தற்போது இராசத்தான் ஆளுநராக பணியாற்றுகிறார். மகாராட்டிராவினைச் சேர்ந்த இவர் 2014-இல் மகாராட்டிர சட்டமன்ற சபாநாயகராக இருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அரசியலில் செயல்படுகிறார்.
சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் சிட்டெபிம்பால்கான் கிராமத்தில் மராட்டிய குஜ்ஜர் குடும்பத்தில் அரிபாவ் பாகடே பிறந்தார்.
தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் ஆர்வலராகவும், உறுப்பினராகவும் இருந்த அரிபாவ் பாக்டே, மராத்வாடா பிராந்தியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அரசியல் வட்டாரங்களில் "நானா" என்று பிரபலமாக அறியப்பட்டார். 1980 வரை இவர் பாரதிய ஜனசங்கத்துடன் இருந்தார்.
1985ஆம் ஆண்டில் அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்றத்திற்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2014-ல் மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் கல்யாண் கலேயினை புலம்ப்ரி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடையச் செய்தார். மேலும் 2019 சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ஆம் ஆண்டில் மகாராட்டிரவில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைத்தபோது, இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இவர் மகாராட்டிர அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார். மேலும் இவர் மகாராட்டிர மாநிலத்தின் பாஜக கட்சியின் கிராமப்புற முகமாகக் கருதப்பட்டார்.
2024 சூலை 27 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவினால் இராசத்தான் மாநில ஆளுநராக அரிபாவ் பாகடே நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
1945 பிறப்புகள்
வாழும் நபர்கள் |
684585 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | மேற்கிந்தியத்தீவுகளின் பல்கலைக்கழகம் | மேற்கிந்தியத்தீவுகளின் பல்கலைக்கழகம் (The University of the West Indies (சுருக்கமாக:UWI), கரிபியக் கடலில் அமைந்த 18 மேற்கு இந்தியத் தீவு நாடுகளில் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் பிராந்தியப் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இது 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் 5 வளாகங்களில் ஏறத்தாழ 50,000 மாணவர்களும், 1200 பேராசிரியர்களும் உள்ளனர், இப்பல்கலைகழகத்தின் தலைமை வளாகம் ஜமைக்கா தீவின் மோனா நகரத்தில் உள்ளது இதன் பிற நான்கு வளாகங்கள் பார்படோசு, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அன்டிகுவா மற்றும் பார்படோசுவில் திறந்தவெளி பல்கலைக்கழக வளாகம் உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள நாடுகளின் பொதுநலவாயம் அல்லது பிரித்தானியவின் கடல் கடந்த பகுதிகளான கீழ்கண்ட நாடுகள் அல்லது பகுதிகளின் மாணவர்கள் மட்டும் இப்பல்கலைக்கழகத்தில் சேரத் தகுதியானவர்கள்.
தகுதி பெற்ற நாடுகள் மற்றும் பிரித்தானியாவின் தீவுகள்
அன்டிகுவாவும் பர்பியுடாவும்
அங்கியுலா
டிரினிடாட் மற்றும் டொபாகோ
ஜமைக்கா
பகாமாசு
பார்படோசு
பெலீசு
பெர்முடா
பிரித்தானிய கன்னித் தீவுகள்
கேமன் தீவுகள்
டொமினிக்கா
கிரெனடா
கயானா
ஜமைக்கா
மொன்செராட்
செயிண்ட் கிட்சும் நெவிசும்
செயிண்ட் லூசியா
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
துர்கசு கைகோசு தீவுகள்
வளாகங்கள்
மேற்கிந்தியத்தீவுகளின் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள்:
படிப்புகள்
இப்பல்கலைக்கழக வளாகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளில் கலை, சமூக அறிவியல், வணிகம், நிர்வாகம், அறிவியல், வேளாண்மை, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் ஆங்கில மொழியில் கற்றுத்தரப்படுகிறது.
இதனையும் காண்க
கரிபியக் கடல்
மேற்கிந்தியத் தீவுகள்
அடிக்குறிப்புகள்
Serves the 16 campus funding countries.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
கரிபியன் தீவுகள் |
684590 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29 | கப்பூர் (பாலக்காடு மாவட்டம்) | கப்பூர் (Kappur (Palakkad district) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரும், கிராம ஊராட்சியும் ஆகும்.
மக்கள்வகைப்பாடு
2001 ஆண்டைய இந்திய மக்கள் கொதை கணக்கெடுப்பின் படி, கப்பூரின் மக்கள் தொகை 28,349 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 11,532 என்றும், பெண்களின் எண்ணிக்கை 14,817 என்றும் உள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
பாலக்காடு மாவட்ட ஊராட்சிகள் |
684593 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | கப்பூர் | கப்பூர் (Kappur) என்பது கீழ்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
கப்பூர் ஊராட்சி (விழுப்புரம்), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி
கப்பூர் ஊராட்சி, நாகப்பட்டினம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி
கப்பூர் (பாலக்காடு மாவட்டம்), இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி |
684595 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | இராசத்தானின் துணை முதலமைச்சர்களின் பட்டியல் | இராசத்தானின் துணை முதலமைச்சர்களின் பட்டியல் (List of deputy chief ministers of Rajasthan) என்பது இராசத்தானின் துணை முதல்வராகச் செயல்பட்டவர்களின் பட்டியல் ஆகும். துணை முதலமைச்சர் இராசத்தான் மாநில அரசின் ஒரு பகுதியாக உள்ளார். துணை முதலமைச்சர் பதவி இந்திய அரசியலமைப்பில் வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லை அல்லது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், துணை முதலமைச்சர்களை நியமிப்பது அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு துணை முதலமைச்சர், அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார் என்றும், மற்ற அமைச்சர்களுடன் ஒப்பிடும்போது அதிகச் சம்பளம் அல்லது சலுகைகளைப் பெறவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
துணை முதலமைச்சர்களின் பட்டியல்
மேலும் காண்க
இராசத்தான்
இராசத்தான் சட்டப்பேரவை
மேற்கோள்கள்
இந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
இராசத்தான் சட்டப் பேரவை
ராஜஸ்தான் அரசியல்வாதிகள் |
684596 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE | அரி சங்கர் பாப்ரா | அரி சங்கர் பாப்ரா (Hari Shankar Bhabhra)(6 ஆகத்து 1928-25 சனவரி 2024) இராசத்தான் சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மார்ச் 16,1990 முதல் அக்டோபர் 5,1994 வரை (இரண்டு முறை) இராசத்தான் சட்டமன்ற சபாநாயகராகப் பதவி வகித்துள்ளார். 1985, 1990 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் சூரூ மாவட்டத்தில் உள்ள இரத்தன்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். நாகௌர் மாவட்டத்தில் உள்ள திட்வானாவில் வசிக்கும் இவர், சூரூ மாவட்டத்தின் ரத்தன்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக இருந்தார். 1994 அக்டோபர் 6 முதல் 1998 திசம்பர் 1 வரை இராசத்தானின் துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இராசத்தான் அரசில் பொருளாதாரக் கொள்கை மற்றும் சீர்திருத்தக் குழுவின் துணைத் தலைவராக பாப்ரா இருந்துள்ளார். 1978 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். பாப்ரா 25 சனவரி 2024 அன்று தனது 95 வயதில் இறந்தார்.
இளமை
அரி சங்கர் பாப்ரா ஆகத்து 6,1928 அன்று நாகௌர் மாவட்டத்தில் உள்ள திட்வானாவின் கிர்கி தார்வாஜாவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மண்ணலால் பாப்ரா மற்றும் தாயின் பெயர் மோகினி தேவி. 1941 சூலை 3 அன்று யசோதா தேவி என்பாரை மணந்தார் பாப்ரா. இந்த இணையருக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர். நாக்பூர் சட்டக் கல்லூரியில் இளங்கலை கலை மற்றும் சட்டப் பட்டமும், நாக்பூரில் உள்ள இந்தி பாஷா சங்க உயர்நிலைப் பள்ளியில் பிரபாகர் பட்டமும் பெற்றார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ராஜஸ்தான் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்
இந்தியா இ-செய்திகள்ஃ ராஜஸ்தான் புதிய ஹோட்டல் கொள்கையை அறிவிக்கிறது
இராசத்தானைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
2024 இறப்புகள்
1928 பிறப்புகள் |
684597 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D | திகா ராம் பாலிவால் | திகா ராம் பாலிவால் (Tika Ram Palival) (24 ஏப்ரல் 1909-8 பிப்ரவரி 1995) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1952 வரை இராசத்தானின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
பாலிவால் கவுர் பிராமணர் குடும்பத்தில் பண்டிட் உக்கும்சந்த் மற்றும் சுந்தரி தேவிக்கு மகனாக இராசத்தானின் மண்டாவர் கிராமத்தில் பிறந்தார். இந்தியச் சுதந்திர ஆர்வலராக இருந்த இவர், 1951 ஏப்ரல் 26 முதல் 1952 மார்ச் 2 வரை ஜெய் நாராயண் வியாசு அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். ஜெய் நாராயண் வியாசு தேர்தலில் தோல்வியடைந்ததால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இராஜசதான் சட்டமன்றத்தின் முதலமைச்சரானார். பின்னர், கிஷன்கர் இடைத்தேர்தலில் ஜெய் நாராயண் வியாசு தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் முதல்வராக 1952 நவம்பர் 1 அன்று பதவியேற்றார். எனவே திகா ராம் பாலிவால் குறுகிய காலத்திற்கு அமைச்சரவையிலிருந்து பதவி விலகி மீண்டும் சேர்ந்தார்.
இவர் 1952 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மகுவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1962ஆம் ஆண்டில், இவர் இந்தவுன் மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் காண்க
இராசத்தான் அரசு
இராசத்தான் முதலமைச்சர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
முந்தைய ராஜஸ்தானின் ஜனநாயக அரசாங்கங்கள் (இடைக்கால அரசாங்கங்கள்)
தௌசாவின் வரலாறு
3வது மக்களவை உறுப்பினர்கள்
இராஜஸ்தான் முதலமைச்சர்கள்
1995 இறப்புகள்
1909 பிறப்புகள் |
684621 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D | இந்தவுன் | இந்தவுன் (Hindaun) என்பது இந்தியாவில் இராசத்தானின் கரௌலி மாவட்டத்தில் உள்ள கரௌலி நகருக்கு அருகிலுள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இதன் மக்கள் தொகை 105690 ஆகும். மேலும் இது ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தவுனுக்கு அருகில் ஆரவல்லி மற்றும் விந்திய மலைத்தொடர்கள் உள்ளன.
வரலாறு
பண்டைய காலத்தில் இந்தவுன் மத்ஸ்ய இராஜ்ஜியத்தின் கீழ் இந்தவுன் வந்தது. மத்ஸ்ய இராஜ்ஜியத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்ட பல பண்டைய கட்டமைப்புகள் இன்னும் நகரத்தில் உள்ளன. பாரம்பரியமாகச் சில புராணக் கதைகளில் இந்த நகரம் பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்யகசிபு மற்றும் பிரகலாதரின் புராணங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. மீனாக்கள் உயர் நிர்வாக பதவிகளை வகித்தனர். நகரின் பொருளாதார மற்றும் நிதி வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்துகின்றனர். இவர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் ஆடைகள் (லெஹெங்கா லுக்டி) போன்ற வளமான கலாச்சாரமும் இவர்களுக்கே உரியது. குறிப்பிடத்தக்க மீனா குடும்பப்பெயர்கள் ஜாகர்வாட், மாண்டியா மற்றும் ஜோர்வால் ஆகும்.
பிரகலாதாவின் தந்தையான பண்டைய ஆட்சியாளர் மன்னர் இரண்யகசிபு பெயரால் இந்தவுன் என்று இந்நகர் பெயரிடப்பட்டது. இரண்யகசிபுவைக் கொன்ற இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர் கோயிலுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகலாத் குண்ட் (இப்போது பாழடைந்த நிலையில்) இரண்யகசிபு மற்றும் பிரகலாதாவைச் சுற்றியுள்ள புராணங்களுடன் இந்த நகரத்தின் தொடர்பை நிரூபிக்கிறது.
ஏப்ரல் 2018-இல், சாதி தொடர்பான வன்முறையினைக் கட்டுப்படுத்த இந்துவன் ஊரடங்கு உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டது.
அமைவிடம்
இந்துவன் இராசத்தானின் கிழக்குப் பகுதியில் (இந்தியாவின் வடமேற்கு மாநிலமான) ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த நகரம் ஜெய்ப்பூர், ஆக்ரா, ஆழ்வார், தோல்பூர், பரத்பூர் ஆகியவற்றுடன் நவீனமயமாக்கப்பட்ட சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
இந்தவுன் நகரத்தின் சராசரி உயரம் 235 மீட்டர் (771 ) ஆகும். மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரிலிருந்து இது சுமார் 150 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தொழில்துறை
இந்தவுன் நகரம் இதன் மணற்கல் தொழிலுக்குப் பெயர் பெற்றது. செங்கோட்டை, தில்லியின் அக்சரதாம் கோயில் மற்றும் அம்பேத்கர் பூங்கா ஆகியவை இந்த மணற்கற்களால் கட்டப்பட்டவை. சிலேட் தொழில் இங்கு நன்கு வேரூன்றியுள்ளது. இத்தொழில் மாநிலத்தில் முக்கியமான தொழிலாகும். இங்கு உற்பத்தியாகும் சிலேட் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிச் செய்யப்படுகிறது. மெழுகுவர்த்தி, பட்டிகள், மரப் பொம்மைகள் மற்றும் நெகிழி நீர் குழாய்கள் போன்ற பல்வேறு சிறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்துவுன் வளையல்களுக்கும் பிரபலமானது. இந்துவுனிலிருந்து 6 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள 'கேடா' தொழிற்சாலைகள் மற்றும் புகழ்பெற்ற விவசாய இயந்திரங்களின் மையமாக உள்ளது.
சுற்றுலா தலங்கள்
இந்தவுன் நகரில் பிரகலாத்குண்ட், காடு, இரண்யகசியப் கா குவா, அரண்மனை மற்றும் நர்சிங்ஜி கோயில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களாகும், அருள்மிகு மகாவிர்ஜி கோயில் சமண மதத்தின் முக்கிய யாத்திரை தலமாகும். ஜாகரின் ஜக்கர் அணை, குந்தேவா, டங்கதி, சுரோத் கோட்டை, மொராத்வாஜா நகரம், கர்மோரா மற்றும் பதம்புரா கோட்டை, திமன்கர் கோட்டை, சாகர் ஏரி, துருவ் கட்டா மற்றும் நந்த்-பவுஜாயின் கிணறு ஆகியவை நகரின் பிற பிரபலமான இடங்களாகும். நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சாமுண்டா மாதா கோயில், சீனாயத மற்றும் சாமுண்டா மாதா கோவில், நக்காஷ் கி தேவி-கோமதி தாம் (இந்தவுன் நகரத்தின் இதயக் கோயில்) மற்றும் அருகிலுள்ள புனிதக் குளம் ஜல்சென் குளம் என்று அழைக்கப்படுகிறது. இராதா-இராமன் ஜி கோயில் மற்றும் அர்தேவ் ஜி கோயில் ஆகியவையும் நகரத்திற்குள் அமைந்துள்ள பிரபலமான இடங்களாகும்.
சுற்றுலா தலங்களின் பட்டியல்
சூபி துறவி சேக் அப்துர் ரகுமான் சிஷ்டியின் தர்கா கூட கோடோலியில் உள்ளது. இந்த ஆலயத்தில் இராசத்தானின் அஜ்மீரில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய சூபி துறவி மொய்னுதீன் சிஷ்டியின் மருமகன் ஷேக் அப்துர்-ரெஹ்மான் சிசுதியின் கல்லறை உள்ளது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தற்காலிக அறிக்கைகளின்படி, 2011ஆம் ஆண்டில் இந்துவுனின் மக்கள் தொகை 105,690 ஆக இருந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 49,541 மற்றும் 56,149 ஆக உள்ளனர். இந்துவுனின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 881 ஆகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தில் மொத்தக் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 105,690 ஆகும். இவர்களில் 56,149 பேர் ஆண்கள் 49,541 பேர் பெண்கள் ஆவர். இந்துவுனின் சராசரி கல்வியறிவு விகிதம் 76.58 சதவீதமாக இருந்தது. இதில் ஆண் மற்றும் பெண் கல்வியறிவு முறையே 87.79 மற்றும் 63.94 சதவீதமாக இருந்தன.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்துவுனில் மொத்தக் குழந்தைகள் (0 முதல் 6 வயது வரை) 45,451 ஆக இருந்தனர். இதில் 25,345 சிறுவர்களும், 20,106 சிறுமிகளும் இருந்தனர். பெண் குழந்தைகளின் பாலின விகிதம் 1000 சிறுவர்களுக்கு 852 பெண்கள் என்ற அளவில் இருந்தது.
காலநிலை
கோடைக் காலத்தில் வெப்பநிலை 25 முதல் 45 பாகை செல்சியசு வரையிலும், குளிர்காலத்தில் 2 முதல் 23 பாகை செல்சியசு வரையிலும் இருக்கும். இங்கு நிலவும் காலநிலை மிகவும் இனிமையானது.
மக்கள்
ஜாங்கித்கள், மண்டையர்கள் மற்றும் குர்ஜர்கள் போன்ற பல சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் இந்தப் பிராந்தியத்திற்குக் குடிபெயர்ந்தனர்.
விவசாயம்
இப்பகுதியின் நிலம் வளமானதாக இருப்பதால், பயிர்ச் சுழற்சி ரையத்களால் தொடங்கப்படுகிறது. மத்திய விவசாயத் தளம் 220 கே. வி மின் நிலையத்திற்கு எதிரே உள்ள கியார்டா கிராமம் அமைந்துள்ளது. இங்குக் கோதுமை, சிறுதானியங்கள், மக்காச்சோளம், கடுகு, கம்பு, நிலக்கடலை, நெல்லிக்காய், எலுமிச்சை உருளைக்கிழங்கு, பருப்பு, பார்லி ஆகியவை முக்கிய பயிர்களாகும். பருவமழை, ஜாகர் டாமண்ட் கால்வாய், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை பாசன ஆதாரங்களாகும். பருவகாலக் காய்கறிகள் மற்றும் பழங்களும் விவசாயிகளால் பயிரிடப்படுகின்றன.
கல்வி
இந்த நகரம் இதன் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்குப் பிரபலமானது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பல உள்ளன. இராசத்தான் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவத் தேர்வுகளில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட முதலிடம் பெற்றவர்களாக இந்தவுன் நகரத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். கான்ச்ரோலியில் உள்ள தூய பிரான்சிசு டி விற்பனைப் பள்ளி, முந்தைய ஆண்டுகளில் இத்தேர்வுகளில் தரவரிசை பெற்று கல்வியில் சிறந்து விளங்குவதை நிரூபித்துள்ளது. இது இதன் விளையாட்டு கலாச்சாரம் மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றது.
போக்குவரத்து
சாலைகள்
தில்லி-அரியானா-இராசத்தான்-மத்தியப் பிரதேசம் மூலம் தில்லியை மோகனாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 மார்ச் 2016-இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
நகரப் போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் தொடர்ந்து நிலையம் இடையே பகிரப்பட்ட பயணிகள் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மக்கள் அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களைப் பயன்படுத்துகின்றனர்.
தொடருந்து
இந்தவுன் நகரத் தொடருந்து நிலையம், புது தில்லி-மும்பை பிரதான தொடர்ந்து பாதையில் உள்ள ஒரு நிலையமாகும். சிறி மகாபிர்ஜி, பதேக் சிங்புரா மற்றும் சிக்ரோடா மீனா ஆகியவை நகருக்கு அருகிலுள்ள பிற தொடருந்து நிலையங்களாகும்.
வானூர்தி நிலையம்
அருகிலுள்ள பெரிய வானூர்தி நிலையம் ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது நகர மையத்திலிருந்து 160 கி. மீ தொலைவில் உள்ளது. மேலும் முக்கிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு இடங்களுக்கு அவ்வப்போது சேவைகளை வழங்குகிறது.
மேலும் காண்க
கரௌலி மாவட்டம்
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
கரௌலி மாவட்டம் |
684624 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88 | ஜாக்கர் அணை | ஜாக்கர் அணை (Jaggar Dam) என்பது இந்தியாவின் இராசத்தானின் இந்தவுன் நகரத்தில் ஜாகர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மண் நிரப்பு அணை ஆகும். நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் நோக்கத்திற்காக இந்த அணை 1957-இல் முடிக்கப்பட்டது.
சுற்றுலா
ஜாக்கர் அணை இராசத்தானின் இந்தவுன் நகரத்தின் ஜாகரில் அமைந்துள்ளது. வார இறுதியில், பார்வையாளர்கள் சுற்றுப்புறத்திலும் குளிர்ந்த காற்றிலும் சுற்றுலாவுக்கு குழுக்களாக வருகிறார்கள். இது ஆரவல்லி மலைகளில் உள்ள ஒரு பொது இடம். ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் போன்ற பிரபலமான இடமாகும். இது இதன் உயரம், ஆறுகள், ஏரிகள் மற்றும் காடுகளின் தாயகமாகும். இந்த இடம் இயற்கையுடன் தொடர்புடையது. இந்த இயற்கை இடத்தை விலங்குகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதில் கோட்வா கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
கரௌலி மாவட்டம்
ராஜஸ்தான் புவியியல் |
684625 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | நக்காசு கி தேவி-கோமதி தாம் கோவில் | நக்காசு கி தேவி-கோமதி தாம் கோவில் (Nakkash Ki Devi - Gomti Dham) என்பது இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள இந்தவுன் நகரில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவிலாகும். இந்தக் கோவில் இந்தவுன் நகரத்தின் மையத்தில் உள்ளது. அருகிலுள்ள புனிதக் குளம் ஜல்சென் நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் ஜல்சென் தலாப் கரையில் அமைந்துள்ளது. நக்காசு கி தேவி துர்கா இந்து தேவி கோயில் மற்றும் கோமதி தாம் கோமதி தாசு ஜி மகாராஜின் இந்தவுன் நகரில் உள்ள மிகப்பெரிய கோவிலாகும்.
மேற்கோள்கள்
இராஜஸ்தான் இந்துக் கோயில்கள்
Coordinates on Wikidata |
684627 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 | இந்தவுன் கோட்டை | இந்தவுன் கோட்டை (Hindaun Fort) என்பது இந்திய மாநிலமான இராசத்தானின் கரௌலி மாவட்டத்தில் உள்ள இந்தவுன் பகுதியில் உள்ள ஒரு கோட்டை ஆகும். இந்தக் கோட்டை முகலாயப் பேரரசிலிருந்து இந்தவுனைச் சுற்றி ஒரு சமசுதானத்தை உருவாக்கிய ஜாட்டுகளின் தாகூர் குலத்தால் கட்டப்பட்டது.
வரலாறு
இராசத்தானின் கரௌலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தவுன் கோட்டை, இடைக்காலத்திலிருந்து குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலோபாய இருப்பிடம் காரணமாக, இது பிராந்தியக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புக்கான முக்கியமான தளமாகச் செயல்பட்டது. இந்தக் கோட்டை ஜாட்டுகளின் தாகூர் குலத்தின் ஒரு முக்கிய கோட்டையாக மாறியது. இவர்கள் இதை முகலாயர்களின் முன்னேற்றங்களுக்கு எதிராக ஒரு தற்காப்பு தளமாகப் பயன்படுத்தினர். இதன் வரலாறு முழுவதும், இந்தக் கோட்டை ஏராளமான போர்கள் மற்றும் முற்றுகைகளுக்குச் சாட்சியாக இருந்து வருகிறது. இது முகலாய விரிவாக்கத்திற்கு எதிரான பிராந்தியத்தின் எதிர்ப்பிலும், இராசத்தானின் பரந்த வரலாற்றில் அதன் கொந்தளிப்பான கடந்த காலத்திலும் தன் பங்கை எடுத்துக்காட்டுகிறது.
படங்கள்
மேற்கோள்கள்
இராஜஸ்தான் கோட்டைகள்
Coordinates on Wikidata |
684628 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | பெர்ருத்தேனேட்டு | பெர்ருத்தேனேட்டு (Perruthenate) என்பது RuO4- என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஆக்சியெதிர் மின்னயனியாகும். ருத்தேனியம் இச்சேர்மத்தில் +7 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. மிதமான ஆக்சிசனேற்ற முகவராகச் செயல்படும் இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
கார ஐதராக்சைடுடன் ருத்தேனியம் டெட்ராக்சைடைச் சேர்த்து குறைப்பதன் மூலம் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்பாக பெர்ருத்தேனேட்டு தயாரிக்கப்படுகிறது.
4 RuO4 + 4 KOH -> 4 KRuO4 + 2 H2O + O2
மேலும் குறைக்கப்படுவதைத் தவிர்க்க, குறைவின் செறிவு மற்றும் வெப்பநிலை இரண்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்:
4 KRuO4 + 4 KOH -> 4 K2RuO4 + 2 H2O + O2
குளோரின் வாயு மூலம் ருத்தேனேட்டு உப்புகளை ஆக்சிசனேற்றம் செய்வது ஒரு மாற்று தயாரிப்பு வழியாகும்.
சோடியம் புரோமேட்டுடன் நீரிய ருத்தேனியம் முக்குளோரைடைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் பெர்ருத்தேனேட்டை தளத்தில் உற்பத்தி செய்யலாம். இந்த முறை ஒரு கரும் பச்சை கரைசலை உருவாக்குகிறது. இது பொருத்தமான உப்பை விளைவிக்க பொருத்தமான நேர்மின் அயனி மூலம் துரிதப்படுத்தும்.
பண்புகள்
ருத்தேனியம் டெட்ராக்சைடின் பகுதியளவு குறைக்கப்பட்ட வழிப்பெறுதியாக பெர்ருத்தேனேட்டைக் கருதலாம். இது அயனியாகாத சேர்மத்தை விட மிகவும் இலேசான ஆக்சிசனேற்ற முகவராகும். ஆனால் ருத்தேனேட்டு இதன் குறைப்பு மூலம் பல சேர்மங்களை ஆக்சிசனேற்றும் திறன் கொண்டது.
பயன்பாடுகள்
நிரந்தரமாக மின்சுமையேற்றப்பட்ட நேர்மின் அயனிகளுடன் கூடிய பெர்ருத்தேனேட்டின் உப்புகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆல்ககால்களை முறையே ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களாக ஆக்சிசனேற்றம் செய்ய வினையாக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெர்ருத்தேனேட்டு எதிர்மின் அயனி ஆக்சிசனேற்ற முகவராக இவ்வினையில் செயல்படுகிறது. உண்மையான வினையூக்கியாக இல்லாமல், இது என்-மெத்தில்மார்போலின் என்-ஆக்சைடு போன்ற பொருத்தமான கூட்டுப்பொருளால் விரைவாக மீட்டமைக்கப்படுகிறது.
டெட்ராபுரோப்பைலமோனியம் பெர்ருத்தேனேட்டு இந்த வினையாக்கிகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சில மாற்றுகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவை அதிக ஆயுட்காலம் மற்றும் வெப்பநிலை நிலைத்தன்மையை வழங்குகின்றன. ஐசோ அமைல் டிரைபீனைல் பாசுபோனியம், மெத்தில் டிரைபாசுபோனியம் மற்றும் டெட்ராபீனைல்பாசுபோனியம் போன்றவற்றின் உப்புகள் போன்ற டிரைபீனைல்பாசுபைன் வழிப்பெறுதிகள் சில குறிப்பிடத்தக்க மாற்று பெர்ருத்தேனேட்டுகள் ஆகும்.
மேற்கோள்கள்
ருத்தேனியம் சேர்மங்கள்
ஆக்சி எதிர்மின்னயனிகள் |
684638 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE | சால்கோரானா | சால்கோரானா (Chalcorana) என்பது இரணிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளைகளின் ஒரு பேரினமாகும். இது "உண்மையான தவளைகள்" ஆகும். இவை தென்கிழக்கு ஆசியாவில், தாய்லாந்திலிருந்து மலாய் தீபகற்பம் மற்றும் சுந்தா தீவுகள் வரை காணப்படுகின்றன.
வகைப்பாட்டியல்
சால்கோரனா முதலில் இராணா துணைப்பேரினமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டில் ஆலிவர் மற்றும் சகாக்கள் இப்பேரினத்தைத் திருத்தும் வரை, இது பெரும்பாலும் அப்போதைய மாறுபட்ட பேரினமான கைலாரனாவில் சேர்க்கப்பட்டது. கைலாரனா மிகவும் குறுகியதாக வரையறுத்து, சால்கோரனாவை பேரினத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது.
விளக்கம்
சால்கோரானா சிறிய முதல் நடுத்தர அளவிலான தவளைகள் ஆகும். இவை நீண்ட தலை மற்றும் சன்ன வடிவ உடல் கொண்டவை. மேல் உதடு பொதுவாக வெள்ளை நிறத்திலிருக்கும். கை, கால்களும் உடலும் மென்மையாக உள்ளன. பல துணை உடல் சுரப்பிகள் உள்ளன. முதுகு பக்கம் சிகப்பு நிறத்தில் நுண்ணிய புள்ளிகளுடன் உள்ளது. சிறிய, வட்டமான சுரப்பிகள், நுண்முட்களுடன் காணப்படும். முதுகுப்புறப் பக்க மடிப்புகள் மெல்லியதாகவோ அல்லது மருக்களை வரிசையைக் கொண்டதாகவோ இருக்கும். சால்கோரனாவின் சிறப்புப் பண்புகளாக முதல் விரல் இரண்டாவது விரலை விட நீளமாக இல்லை. பெரிய விரல் வட்டுகளுடன் (விரல் அகலத்தை விடக் குறைந்தது இரண்டு மடங்கு) மேல் கரத்தின் நீளத்தின் 1⁄3-1⁄2 ஆக இருக்கும் 2மெல் கரச் சுரப்பி காணப்படும்.
சிற்றினங்கள்
இப்பேரினத்தில் 10 சிற்றினங்கள் உள்ளன.
உலக நீர்வாழ் உயிரினங்கள் சுமடெரானா கிராசியோவிசின் ஒத்த பெயராகக் கருதும் சால்கோரானா காம்பெனியையும் ஆம்பிபியாவெப் (AmphibiaWeb) பட்டியலிடுகிறது.
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள் |
684644 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D | ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் | ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (Organized Crime and Corruption Reporting Project (சுருக்கமாக:OCCRP) உலகின் ஆறு கண்டங்களில் ஊழியர்களைக் கொண்ட புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் உலகளாவிய வலையமைப்பு ஆகும்.i 2006ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பன்னாட்டு பன்னாட்டு அரசு-சார்பற்ற அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது.
இது உள்ளூர் ஊடகங்கள் மூலமாகவும், ஆங்கிலம் மற்றும் உருசிய மொழிகளில் மொழிகளில் வலைத்தளம் மூலமாக அதன் அறிக்கைகளை வெளியிடுகிறது. OCCRP ஐரோப்பா, ஆப்பிரிக்கா, காக்கேசியா மற்றும் நடு ஆசியாவில் உள்ள 50+ தன்னாட்சி ஊடக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதுடன், ஆதரிக்கவும் செய்கிறது. 2017ஆம் ஆண்டில் இதன் ஆலோசகர் 500 சிறந்த அரசு சாரா நிறுவனங்களின் வருடாந்திர பட்டியலில் உலகில் 69 வது இடத்தைப் பிடித்தார்.
வரலாறு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) நிறுவனத்தை ஊடகவியலாளர்களான சுல்லிவான் மற்றும் பால் ராது ஆகியோர் 2006ஆம் ஆண்டில் இந்நிறுவினம் நிறுவப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இந்நிறுவனம் . தி அஜர்பைஜான் லாண்ட்ரோமேட் என்ற செய்தி அறிக்கையை தங்களின் உலகளாவிய புலனாய்வு இதழியல் வலைத்தளத்தில் வெளியிட்டது. இதற்காக அந்த வலைதளம் குளோபல் சைனிங் லைட் விருது பெற்றது.
மார்ச் 2022ஆம் ஆண்டில் OCCRP நிறுவனம் ருசியாவில் விரும்பத்தகாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது.
பணிகள்
புலன் விசாரணைகள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்ட அமைப்பானது பல உயர்மட்ட விசாரணைகளில் ஈடுபட்டு,. கடல்சார் சேவைத் தொழில்கள், கால்பந்து சங்கங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் நடக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை அறிக்கையாக வெளியிட்டது.
மேக்னிட்ஸ்கி வழக்கு
2013இல் உருசியா வரலாற்றில் மிகப்பெரிய வரி மோசடி வழக்கான மேக்னிட்ஸ்கி வழக்கை'' விசாரித்தது. மேலும் உருசியக் கருவூலத்திலிருந்து திருடப்பட்ட நிதி இப்போது மாஸ்கோவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் மகனுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு இருந்ததை அறிக்கையாக வெளியிட்டது. மேலும் இந்த குற்றச் செயலில் ஈட்டிய பணத்தின் ஒரு பகுதியை வால் ஸ்ட்ரீட்க்கு அருகில் உள்ள உயர்தர கட்டிடத்தின் கூடிய வளாகத்தை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மோசடி நிறுவனத்திடமிருந்து $18 மில்லியன் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை எடுத்தனர்.
மேற்கோள்கள்
அரசு சார்பற்ற அமைப்புக்கள் |
684647 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D | ரித்திகா நாயக் | ரித்திகா நாயக் (Ritika Nayak) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் பணியாற்றி வருகிறார். ரித்திகா, 2022 இல் ரவி கிரண் கோலா எழுதி, வித்யா சாகர் சிந்தா இயக்கத்தில் வெளிவந்த அசோக வனம் லோ அர்சுனா கல்யாணம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடக்ககால வாழ்க்கை
ரித்திகா, மே 15,1997 இல் புது தில்லியில் பிறந்தார்.
தொழில்
ரித்திகா, 2019 இல் தனது கல்லூரி நாட்களில் பொழுதுபோக்கு உலகில் தனது பயணத்தைத் தொடங்கினார். தில்லியில் டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் சீசன் 12 மற்றும் மிஸ் திவா 2020 போன்ற குறிப்பிடத்தக்க பட்டங்களைப் பெற்று, வடிவழகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2022 இல் ரவி கிரண் கோலா எழுதி, வித்யா சாகர் சிந்தா இயக்கத்தில் வெளிவந்த அசோக வனம் லோ அர்சுனா கல்யாணம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ரித்திகா நாயக்
1997 பிறப்புகள்
வாழும் நபர்கள்
தெலுங்குத் திரைப்பட நடிகைகள் |
684652 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | இங்காங்கட் சட்டமன்றத் தொகுதி | இங்காங்கட் சட்டமன்றத் தொகுதி (Hinganghat Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில்ஒன்றாகும். இத்தொகுதியானது வார்தா மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இங்காங்கட், வார்தா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேலும் காண்க
இங்காங்கட்
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
வர்தா மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684653 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம் | சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Simpang Ampat Railway Station மலாய்: Stesen Keretapi Simpang Ampat); சீனம்: 新邦安拔火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு மாநிலத்தில் சிம்பாங் அம்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிம்பாங் அம்பாட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தின் (KTM Wast Coast Railway Line), ஈப்போ - பட்டர்வொர்த் துணைத் தடத்தில் (KTM Komuter Northern Sector Route No. 1.) உள்ளது.
- மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடியாங் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.
சிம்பாங் அம்பாட்
சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District), பத்து காவான் மக்களவை தொகுதியில் (Bukit Mertajam Federal Constituency) உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். பட்டர்வொர்த் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த நகரத்தின் வடக்கில் புக்கிட் மெர்தாஜாம் நகரம்; கிழக்கில் சூன்சாங் நகரம்; தெற்கில் சுங்கை பாக்காப் நகரம்; மேற்கில் பத்து காவான் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன. நான்கு நகரங்களுக்கு நடுவில் இந்த நகரம் அமைந்து இருப்பதால் இதற்கு சிம்பாங் அம்பாட் என பெயர் வைக்கப்பட்டது.
சிம்பாங் (Simpang) என்றால் மலாய் மொழியில் சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம்; அம்பாட் (Ampat) என்றால் எண்ணிக்கையில் நான்கு என்று பொருள்.
மேற்கோள்கள்
மேலும் காண்க
சிம்பாங் அம்பாட்
பட்டர்வொர்த்
புக்கிட் மெர்தாஜாம்
பத்து காவான்
சுங்கை பாக்காப்
வெளி இணைப்புகள்
Keretapi Tanah Melayu Official Website
மலேசியாவில் போக்குவரத்து
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
பினாங்கு மாநிலத்தின் தொடருந்து நிலையங்கள் |
684655 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | மட்டுங்கா சட்டமன்றத் தொகுதி | மட்டுங்கா சட்டமன்றத் தொகுதி (Matunga Assembly constituency) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின், சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதியாகும். 2008 எல்லை நிர்ணய மசோதாவின் மூலம் தொகுதி எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டபோது இந்த தொகுதி நீக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
1962 தேர்தல்
லீலாதர் பசு ஷா (இதேகா) 21,258 வாக்குகள்
மாதவன் (பி. எஸ். பி.) 18,707 வாக்குகள்
1972 தேர்தல்
கமலா ராமன் (இதேகா): 26,037 வாக்குகள்
நாராயண் தண்டேகர் (சுதந்திராக் கட்சி) -11,856 வாக்குகள்
1978 தேர்தல்
கோலி சோகான்சிங் ஜோத் சிங் (ஜனதா கட்சி) 41,568 வாக்குகள்
பட் பத்மா சுபா (இதேகா) -9,956 வாக்குகள்
1990 தேர்தல்
சந்திரகாந்தா கோயல் (பாஜக) 32,355 வாக்குகள்
வி. சுப்பிரமணியன் (இதேகா) -29,150 வாக்குகள்
1995 தேர்தல்
கோயல், சந்திரகாந்த வேத்பிரகாசு (பாஜக 46,443 வாக்குகள்)
உபேந்திர பி. தோசி (இதேகா) -37,613 வாக்குகள்
2004 தேர்தல்
ஜெகந்நாத் அச்சண்ணா செட்டி (இதேகா) 48,266 வாக்குகள்
பாபுபாய் பவன்ஜி (பாஜக) 43,610 வாக்குகள்
மேற்கோள்கள் |
684657 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | வர்தா சட்டமன்ற தொகுதி | வர்தா சட்டமன்ற தொகுதி (Wardha Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது வர்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.. வர்தா, வார்தா மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
684658 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | செம்பூர் சட்டமன்றத் தொகுதி | செம்பூர் சட்டமன்றத் தொகுதி (Chembur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் 288 சட்டமன்றத்தின் தொகுதிகளில் ஒன்றாகும்.
கண்ணோட்டம்
செம்பூர் (அரசியலமைப்பு எண் 173) மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டில் 252,142 வாக்காளர்கள் (ஆண்கள் 137,636, பெண்கள் 114,506) இருந்தனர்.
மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள அணுசக்தி நகர் மற்றும் மும்பை நகர மாவட்டத்தில் உள்ள தாராவி, சியான் கோலிவாடா, வடாலா மற்றும் மாகிம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக செம்பூர் உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
2019
2014
2009
மேலும் காண்க
செம்பூர்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684660 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | சாம் விடுதலை அமைப்பு | சாம் விடுதலை அமைப்பு அல்லது ஹைஅத் தஹ்ரீர் அஷ்-ஷாம், சுருக்கமாக:HTS}} என்பது சிரிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள சன்னி இசுலாமிய அரசியல், துணை இராணுவ அமைப்பாகும். இது 'லெவாண்ட் விடுதலைக்கான அமைப்பு' அல்லது லெவண்ட் விடுதலைக் குழு' எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இது 2017 சனவரி 28 அன்று பல ஆயுதப் பிரிவுகளான ஜெய்ஷ் அல்-அகுரார், அல் நுஸ்ரா முன்னணி, அன்சார் அல்-தின் முன்னணி, ஜெய்ஷ் அல்-சுன்னா, லிவா அல்-கக், நூர் அல்-தின் அல்-ஜென்கி இயக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பாக உருவாக்கப்பட்டது. அஹ்ரார் அல்-சாமின் இரண்டாவது அமீராக இருந்த ஒரு இசுலாமியப் போராளி தளபதி அபு முகமது அல்-சுலானி என்பவரின் முன்முயற்சியின் கீழ் இந்த ஒருங்கிணைப்பு செயல்முறை நடைபெற்றது.
இந்த அமைப்பு 2015ஆம் ஆண்டில் இட்லிப் நகரத்தைக் கைப்பற்றி, அதனை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பிற்கு துருக்கி உள்ளிட்ட சன்னி இசுலாம் நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்குகிறது. இந்த அமைப்பிற்கு எதிராக சியா இசுலாம் நாடுகளான இரான், லெபனான் மற்றும் உருசியா உள்ளது.
சிரிய உள்நாட்டுப் போர்
2017ஆம் ஆண்டிற்குப் பிறகு அமைதியாக இருந்த இந்த அமைப்பினர், நவம்பர் 2024 முதல் சிரியாவின் பகுதிகளைக் கைப்பற்றத் துவங்கியது. முதலில் 1 டிசம்பர் 2024ல் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றியது.பிறகு
மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகரத்தை கைப்பற்றினர்7 டிசம்பர் 2024 அன்று தலைநகர் டமாஸ்கசிற்கு தெற்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாரா'' நகரத்தைசாம் விடுதலை அமைப்பினர் கைப்பற்றினர்இப்படையினர் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கிச் சென்ற போது, சிரிய ஆட்சியாளர் பசார் அல்-அசத் நாட்டை விட்டு வெளியேறி, உருசியாவில் அடைக்கலம் அடைந்தார்.அத்துடன் சாம் விடுதலை அமைப்பினரின் உள்நாட்டுப் போர் நின்றது.
இதனையும் காண்க
அபு முகமது அல்-சுலானி
மேற்கோள்கள்
சிரியாவின் ஆயுதக் குழுக்கள்
தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை |
684665 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753எம் (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753 எம், (National Highway 753M (India)) பொதுவாக தே. நெ. 753எம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 753எம் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
சிக்காலி, தாத், மஹோரா, போகர்தன், ஹசன்பாத்-தே. நெ. 752ஏ.
சந்திப்புகள்
சிக்லி அருகே முனையம் /
அசன்பாத் அருகே முனையம்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
/
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 753 எம்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684667 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%202%3A%20%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D | புஷ்பா 2: தி ரூல் | புஷ்பா 2: தி ரூல் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழி அதிரடி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. அல்லு அர்ஜுன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.
தயாரிப்பு
இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிரோஸ்லாவ் குபா புரோஜெக் ஒளிப்பதிவையும் நவீன் நூலி படத்தொகுப்பையும் பொறுப்பேற்றுச் செய்துள்ளனர். 400–500 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பா - 2 அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுள் ஒன்றாகும்.
வரவேற்பு
புஷ்பா 2, 2024 திசம்பர் 5 அன்று வெளியாகி, முதல் மூன்று நாட்களில் 575 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளது. இது பல திரைத்துறைச் சாதனைகளைத் தகர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
2024 தெலுங்குத் திரைப்படங்கள்
இந்தியத் தெலுங்குத் திரைப்படங்கள் |
684670 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20753%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 753எல் (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 753எல் (National Highway 753L (India)) பொதுவாக தே. நெ. 753எல் எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 753எல் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிர மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
பகூர், ஜாம்னர், போட்வாட், முக்தைநகர், புர்ஹான்பூர், சாபூர் இச்சாபூர், தேச்கான்.
சந்திப்புகள்
பகூர் அருகே முனையம்
காண்ட்வா அருகே முனையம்
மேலும் காண்க
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 753எல்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684672 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%204%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 4 National Highway 4 (India)) அல்லது தே. நெ. 4, என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையாகும். இதன் நீளம் 230.7 கிமீ ஆகும். அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயரிலிருந்து திக்லிபூர் வரை செல்லும் இந்த சாலை, பெர்ராகுஞ்ச், பரதாங், கடம்தலா, ரங்கத், பில்லி கிரவுண்ட், நிம்புதேரா, மாயாபந்தர் மற்றும் திக்லிபூர் ஆகிய அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை அந்தமான் முதன்மைச் சாலை என்று அழைக்கப்படுகிறது.
1970களுக்கு முன்பு முதல் 1990களின் முற்பகுதி வரை கடல் வழியாகப் பல நாட்கள் எடுக்கும் பயணி மற்றும் பொருட்களின் போக்குவரத்தை இப்போது 10-12 மணிநேரங்களில் முடிக்க முடியும். தேசிய நெடுஞ்சாலை 4 ஆண்டு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் இயக்கம், சுகாதார வசதிகள் போன்றவற்றை அணுக உதவுகிறது.
ஜர்வா காப்பு பகுதி இடையக மண்டலம் வழியாக ஜிர்காடாங் முதல் மத்திய நீரிணை வரை இச்சாலை செல்கிறது. இங்கு ஜாரவா பூர்வீகப் பழங்குடியினருடன் பயணிகளின் தொடர்பைக் குறைக்கச் சட்டங்கள் உள்ளன. ஆயுதமேந்திய பாதுகாவலர்களுடன் கூடிய வாகனக் குழுக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இந்த நெடுஞ்சாலை தற்போது என். எச். ஐ. டி. சி. எல் கீழ் இரண்டு பெரிய பாலங்களை ₹1511.22 கோடி மதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டு கட்டுமானத்தில் உள்ளது.
முன்னதாக இந்த நெடுஞ்சாலைக்கு தே. நெ. 223 என எண் கொடுக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு மும்பை முதல் புனே வரை ஹூப்ளி முதல் பெங்களூரு முதல் சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முன்பு தே. நெ 4 என்று அழைக்கப்பட்டது. முன்பு தே. நெ. 4ஆக இருந்தது தற்பொழுது தே. நெ. 48 என மறுபெயரிடப்பட்டுள்ளது.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஓபன்ஸ்ட்ரீட்மேப்பில் என். எச். 4
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் போக்குவரத்து
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684673 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | கடோல் சட்டமன்றத் தொகுதி | காடோல் சட்டமன்றத் தொகுதி (Katol Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது. காடோல், ராம்டேக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
684674 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20105%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 105ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 105பி (National Highway 105B (India)) பொதுவாக தே. நெ. 105ஆ என்று குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 5-ன் ஒரு துணைச்சாலையாகும்.
வழித்தடம்
மோகா-பாகா புராணம்-பஜகானா
சந்திப்புகள்
பாகபுரானா அருகே
பஜகானா அருகே
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684676 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF | தேர்வு நிலை ஊராட்சி | தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு[1] அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.[2]
ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட வார்டு உறுப்பினர் என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகள் அளிக்கின்றனர்[3]. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஒரு வாக்கு அளிக்கின்றனர். |
684686 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | சூலனூர் மயில்கள் சரணாலயம் | சூலனூர் மயில்கள் சரணாலயம் (Choolannur Pea Fowl Sanctuary) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டம், சூலனூரில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் அமைந்துள்ள இடம் உள்ளூரில் மயிலாடும்பாறை என்று அறியப்படுகிறது. இதன் பொருள் "மயில்கள் நடனமாடும் பாறை" என்பதாகும். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, கேரளத்தில் உள்ள மயில்கள் சரணாலயம் இதுமட்டுமேயாகும்.
வரலாறு
அரசு ஆணை எண் G. O.(P) 24/2007/F&WLD இன் படி, சூலன்னூர் மயில்கள் சரணாலயம் 15 மே 2007 அன்று நிறுவப்பட்டது.
விளக்கம்
கேரளத்தின், பாலக்காடு மாவட்டம், சூலனூர் சிற்றூரில் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் உள்நாட்டில் மயிலாடும்பாறை என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் "மயில்கள் நடனமாடும் பாறை" என்பதாகும். இந்த பறவைகள் சரணாலயம் பீச்சி வனக் கோட்டத்தின் அதிகார வரம்பின் கீழ் வருகிறது. புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் எழுத்தாளருமான இந்துசூடனின் நினைவாக இந்த சரணாலயம் நிறுவப்பட்டது.
மயில்கள் சரணாலயம் பரப்பளவைக் கொண்டுள்ளது. மயில்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பறவை இனங்களையும் இங்கு காண இயலும். 2022 வரை, கேரளாவில் உள்ள ஒரே மயில் சரணாலயம் இதுவாகும்.
சமூகமும், பண்பாடும்
ஆண் மயில்கள் இனச்சேர்க்கை செய்வதில்லை என்றும், ஆண் மயில்களின் கண்ணீரைக் குடித்து பெண் மயில்கள் கருத்தரிக்கின்றன என்றும் இராசத்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு மயில் சரணாலயத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
மேற்கோள்கள்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள உள்ள காட்டுயிர் காப்பகங்கள்
கேரளத்தில் உள்ள காட்டுயிர் காப்பகங்கள்
Coordinates on Wikidata |
684689 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20205%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 205அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 205அ (National Highway 205A (India)),பொதுவாக தெ. நெ. 205அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாகை 205அ இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
கரார்-பானூர்-தெப்லா
சந்திப்புகள்
காராருக்கு அருகில் முனையம்
பானூர் அருகே முனையம்
தெப்லா அருகே முனையம்.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 205அ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684690 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20305%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 305 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 305, (National Highway 305 (India)) பொதுவாக தே. நெ. 305 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு கிளைச் சாலை ஆகும். தே. நெ. 305 இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
புவியியல்
தேசிய நெடுஞ்சாலை 305 இமாச்சலப் பிரதேசத்தில் அதிக உயரத்தில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில், குறிப்பாக 10,800 அடி உயரமுள்ள ஜலோரி கனவாயில், அதிக பனிப்பொழிவு காரணமாக இந்த பாதை நான்கு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த நெடுஞ்சாலை செராஜ் பள்ளத்தாக்குடன் இணைப்பை வழங்குகிறது.
வழித்தடம்
ஆட்ட-லார்ஜி-பாஞ்சர்-ஜலோரி கனவாய்-அண்ணி-லுக்ரி
சந்திப்புகள்
சைஞ்ச் அருகே தேசிய நெடுஞ்சாலை 5 (பழைய நெ. நெ. 22) உடன் முனையம்.
ஆட்டோ அருகே தேசிய நெடுஞ்சாலை 3 (பழைய தே. நெ. 21) உடன் முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684691 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20505%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 505 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 505 (National Highway 505 (India)), பொதுவாக தே. நெ. 505 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 505 இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது. தே. நெ. 505 என்பது இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மற்றும் லாகல் மற்றும் இசுபிதி மாவட்டங்களில் செல்லும் ஓர் உயரமான சாலையாகும். இது முக்கியமாக இசுபிதி பள்ளத்தாக்கில் உள்ள இசுபிதி ஆற்றின் குறுக்கே செல்கிறது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் மீ (14,930 ) உயரத்தில் குன்சும் லா கனவாய் மூடப்பட்டதால் காசாவிலிருந்து கிராம்புவுக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஆண்டுக்கு 6 முதல் 9 மாதங்கள் மூடப்படுகிறது.
கண்ணோட்டம்
தேசிய நெடுஞ்சாலை 505, மார்ச் 4, 2014 அன்று தேசிய நெடுஞ்சாலையாகப் பெயரிடப்படுவதற்கு முன்பு இமாச்சல மாநில நெடுஞ்சாலை 30 எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த நெடுஞ்சாலை இமாச்சலின் லாகால் மற்றும் இசுபிதி பள்ளத்தாக்குகளின் உயரமான குளிர் பாலைவனப் பகுதி வழியாகச் செல்கிறது. இப்பகுதியில் மிகக் குறைந்த மழைப்பொழிவு கிடைக்கிறது. நிலப்பரப்பு வறண்டதாகவும், நிலச்சரிவுகள் மற்றும் இடையூறுகளுக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது. இந்தச் சாலை சில இடங்களில் குறுகியது. மேலும் உயரமான குன்சும் கணவாயைக் கடந்து செல்வதற்கு மலைகளில் நல்ல ஓட்டுநர் திறன்கள் தேவைப்படுகின்றன.
பணப்பயிர் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் இசுபிதியில் தொலைத்தொடர்பு விரிவாக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு தே. நெ. 505 முக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நெடுஞ்சாலை சில முக்கிய புத்த மடாலயங்கள் மற்றும் பல்வேறு சுவாரஸ்யமான இடங்களுக்கு இணைப்பை வழங்குகிறது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 5-ல் கின்னௌர் மாவட்டத்தில் உள்ள காப் சங்கத்தில் தேசிய நெடுஞ்சாலை 505-ன் பாதை தொடங்குகிறது. இது கின்னௌர் வழியாக இசுபிதி பள்ளத்தாக்கைக் கடந்து லாகால் மற்றும் இசுபிதி மாவட்டமான சும்டோவில் நுழைகிறது. இது இசுபிதி பள்ளத்தாக்கு முதல் குன்சும் கணவாய் வரை தொடர்கிறது. இது சந்திர ஆற்றின் கீழே பின்தொடர்ந்து கிராம்பூவின் முனையத்திற்குச் செல்கிறது.
கின்னௌர் மாவட்டம்
கின்னௌர் மாவட்டத்தின் காப் முனையமானது, இசுபிதி பள்ளத்தாக்கிற்கு நுழையும் இடமாகும். இது சராசரியாக மீ (10,990 ) உயரத்தில் அமைந்துள்ளது. காபில் இருந்து இசுபிதி பள்ளத்தாக்கிற்கான இந்த அனைத்து வானிலை அணுகல் புள்ளி சுமார் மீ (8,500 ) உயரத்தில் உள்ளது. சண்டிகர் அல்லது சிம்லா காப் வரை பயணம் செய்வது பயணிகள் உயரத்தில் ஏற்படும் நோயைத் தவிர்ப்பதற்காக படிப்படியாகத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தே. நெ. 505 காப் சங்கத்திலிருந்து நாகோ வரை ( மீ (12,014 ) செங்குத்தாகச் செல்லும். இது இசுபிதி ஆற்றில் சாங்கோவில் இறங்குகிறது. பின்னர் சம்டோவில் லகால் மற்றும் இசுபிதி மாவட்டத்திற்குள் நுழைகிறது.
லகால் மற்றும் இசுபிதி மாவட்டம்
சும்டோவிலிருந்து, தே. நெ. 505 பெரும்பாலும் இசுபிதி ஆற்றின் குறுக்கே சுமார் 130 கிமீ (81 மைல்) லோசர் வரை செல்கிறது. ஹர்லிங் வழியாகச் சென்ற பிறகு, அடுத்த நகரம் நன்கு அறியப்பட்ட டாபோ மடாலயம் மற்றும் குகைகளைக் கொண்ட டாபோ ஆகும். இந்த நெடுஞ்சாலை சில அசாதாரணக் களிமண் தூண்கள் வழியாக இசுபிதி பள்ளத்தாக்கின் மிகப்பெரிய நகரமான காசா செல்லும் வழியில் செல்கிறது. லிங்டி அருகே, காஜாவுக்கு முன் 15 கிமீ (9.3 மைல்), ஊசி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா கிமீ (21 மைல்) சாலை அட்டார்கோ பாலத்தின் மீது கிளைகள் இசுபிதியின் வலது கரைக்குச் செல்கின்றன. லிங்க்டியின் தபோ பக்கத்தில் தன்கர் மடாலயத்திற்குச் செல்லும் சாலை உள்ளது. இந்தப் பகுதியில், ஆற்றின் படுகை மிகவும் அகலமானது, சில இடங்களில் 500 மீ (1,600 ) வரை உள்ளது. இந்த ஆறு மிகவும் குறுகியது மற்றும் பரந்த ஆற்றுப் படுகையில் பின்னல் கொண்டதாக உள்ளது.
காசாவுக்குப் பிறகு, தே. நெ. 505 ரங்க்ரிக் பாலத்தின் வழியாக இசுபிதி ஆற்றின் வலது கரையைக் கடக்கிறது. பாலத்தில், காசா-கிப்பர் சாலை இடது கரையில் கீ மடாலயம் ( கிமீ) மற்றும் கிப்பர் காட்டுயிர் காப்பகம் ( கிமீ) வரை தொடர்கிறது. தே. நெ. 505 வலது கரையில் ஒரு தட்டையான, குறுகிய பள்ளத்தாக்கு வழியாகச் செல்கிறது. இதில் இசுபிட்டி ரோவர் சுமார் மீ (980 ) ஆழத்தில் ஒரு பள்ளத்தாக்கைச் செதுக்கியுள்ளது. இந்த சாலை மீண்டும் இடது கரைக்கு கிமீ (1.9 மைல்) கியால்டோ கிராமத்திற்கு முன் செல்கிறது. இங்கே, காசா-கிப்பர் சாலை கிப்பரில் இருந்து கிமீ (14 மைல்) தொலைவில் உள்ள தே. நெ. 505 உடன் மீண்டும் இணைகிறது. மொராங் மற்றும் கான்சே கிராமங்களுக்குப் பிறகு, லோசர் கிராமத்திற்கு முன்பு பள்ளத்தாக்கு விரிவடைகிறது.
லோசருக்குப் பிறகு, தே. நெ. 505 இசுபிதியின் வலது கரை கிளை ஆறான லிச்சு ஆற்றின் வலது கரையை நோக்கிச் செல்கிறது. இந்தச் சாலை படிப்படியாக குன்சும் லா, எலிவேட் வரை ஏற்றப்பாதையாக உள்ளது (உயரம். 4, 551 மீ) கணவாயில் ஒரு கோயில் உள்ளது.
குன்சும் கணவாயிலிருந்து, நெடுஞ்சாலை செங்குத்தான முடி வளைவுகள் வழியாகச் சந்திரா ஆற்றின் இடது கரையில் உள்ள படால் கிராமத்தில் இறங்குகிறது. சந்திரா ஆற்றில் உள்ள சந்திர தால் ஏரி சுற்றுலாப் பயணிகள் மற்றும் உயரமான மலையேறுபவர்களிடையே பிரபலமாக உள்ளது. சந்திர தால் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 505இலிருந்து படாலில் இருந்து சுமார் 2.9 கிலோமீட்டர் (1. மைல்) தொலைவிலும், குன்சும் கணவாயிலிருந்து 8 கிமீ (5 மைல்) தூரத்திலும் உள்ளது.
படாலிலிருந்து, தே. நெ. 505 சந்திரா ஆற்றின் இடது கரையைப் பின்தொடர்கிறது. சில இடங்களில் ஆற்றின் படுகையில் செல்கிறது. ஏனெனில் குறுகிய பள்ளத்தாக்கின் இருபுறமும் மிகவும் செங்குத்தாக உள்ளன. இந்தப் பகுதி பெரும்பாலும் செப்பனிடப்படாதது. குளிர்கால மாதங்களில் கடந்து செல்ல முடியாதது. சோட்டா தாரா வழியாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலை, வலது கரையைக் கடக்கும் சத்ருவை அடைகிறது. இது செங்குத்தாக ஏறி, சந்திரா ஆற்றைக் கடந்து ஒரு குன்றின் உச்சியில் கிராம்பு முனையம் வரை செல்கிறது.
சந்திப்பு
|Kinnaur district
|Khab
|0.0
|0.0
|
|Southeast terminus
|-
|Lahaul and Spiti district
|Attargo Bridge
|74.6
|120.0
|Mud village, Pin Valley
|About NW of Lingti
|-
|Lahaul and Spiti district
|Gramphoo
|169.6
|273.0
|
|Northwest terminus
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684693 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சாவ்னேர் சட்டமன்றத் தொகுதி | சாவ்னேர் சட்டமன்றத் தொகுதி (Savner Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஓன்றாகும். இத்தொகுதியானது நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும்.சாவ்னேர், ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேலும் காண்க
சாவ்னேர்
குறிப்புகள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684696 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | இலித்தியம் புளோரைடு | இலித்தியம் புளோரைடு (Lithium fluoride) என்பது LiF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நிறமற்ற திடப்பொருளாகும். படிக அளவு குறையும்போது வெள்ளை நிறமாக மாறுகிறது. இதன் கட்டமைப்பு சோடியம் குளோரைடுக்கு ஒப்பானது, ஆனால் தண்ணீரில் மிகவும் குறைவாக கரையும். இலித்தியம் புளோரைடு முக்கியமாக உருகிய உப்புகளின் ஓர் அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் மற்றும் புளோரின் இரண்டும் இலேசான தனிமங்களாகவும் புளோரின் அயனி அதிக வினைத்திறன் கொண்டதாகவும் இருப்பதால், தனிமங்களிலிருந்து இலித்தியம் புளோரைடு உருவாகிறது. பெரிலியம் ஆக்சைடுக்கு அடுத்தபடியாக நிறைக்கு எதிராக உயர்ந்த அளவு ஆற்றலை இச்சேர்மம் வெளியிடுகிறது.
தயாரிப்பு
இலித்தியம் ஐதராக்சைடு அல்லது இலித்தியம் கார்பனேட்டுடன் ஐதரசன் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.
பயன்பாடுகள்
மின்கலன்களுக்கான இலித்தியம் அறுபுளோரோபாசுபேட்டு தயாரிப்பு
இலித்தியம் புளோரைடு ஐதரசன் புளோரைடுடனும் பாசுபரசு பெண்டா குளோரைடுடனும் வினைபுரிந்து இலித்தியம் அறுபுளோரோபாசுபேட்டு (Li[PF6]) உருவாகிறது. இலித்தியம் அயனி மின்கலத்தில் பயன்படும் மின்பகுளியாக இது பயன்படுத்தப்படுகிறது.
இலித்தியம் புளோரைடு மட்டும் ஐதரசன் புளோரைடை உறிஞ்சி பைபுளோரைடு உப்பை உருவாக்காது.
உருகிய உப்புகளில்
உருகிய பொட்டாசியம் பைபுளோரைடை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் புளோரின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்பகுளியில் சில சதவீதம் LiF இருக்கும்போது இந்த மின்னாற்பகுப்பு வினை மிகவும் திறமையாகத் தொடர்கிறது. கார்பன் மின்முனைகளில் Li-C-F இடைமுகத்தை உருவாக்குவதற்கு இது உதவுகிறது. FLiNaK, சோடியம் புளோரைடு மற்றும் பொட்டாசியம் புளோரைடு ஆகியவற்றுடன் LiF கலவையைக் கொண்டுள்ளது. உருகிய உப்பு அணுக்கரு உலை பரிசோதனைக்கான முதன்மைக் குளிரூட்டியாக FLiBe; 2LiF·BeF2 (66 மோல்%-LiF, 33 மோல்% - BeF2) பயன்படுகிறது.
ஒளியியல்
இலித்தியம் புளோரைடு சேர்மத்துக்கான ஆற்றல் இடைவெளியின் காரணமாக, அதன் படிகங்கள் குறுகிய அலைநீள புற ஊதா கதிர்வீச்சுக்கு வெளிப்படுவது மற்ற எந்தப் பொருளையும் விட அதிகம். எனவே வெற்றிட புற ஊதா நிறமாலைக்கான சிறப்பு ஒளியியலில் LiF பயன்படுத்தப்படுகிறது. புளோரைடு எக்சு கதிர் நிறமாலையியலில் விளிம்புநிலை படிகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கதிரியக்க் உணரி
காமா கதிர்கள், பீட்டா துகள்கள் மற்றும் நியூட்ரான்கள் (மறைமுகமாக அணுவைப் பயன்படுத்தி அயனியாக்கும் கதிர்வீச்சு வெளிப்பாட்டைப் பதிவுசெய்யும் வழிமுறையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. (என்-ஆல்ஃபா) அணுக்கரு எதிர்வினை) வெப்ப ஒளிர் டோசிமீட்டர்களில். 96% செறிவூட்டப்பட்ட 6LiF நுண்தூள் நுண்கட்டுமான குறைக்கடத்தி உணரிகளுக்கு நியூட்ரான் வினைத்திறன் பின் நிரப்பும் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.
அணுக்கரு உலை பயன்பாடு
பொதுவாக ஐசோடோப்பு இலித்தியம்-7 இல் அதிக அளவில் செறிவூட்டப்பட்ட இலித்தியம் புளோரைடு திரவ-புளோரைடு அணு உலைகளில் பயன்படுத்தப்படும் விருப்பமான புளோரைடு உப்புக் கலவையின் அடிப்படை அங்கமாக அமைகிறது. பொதுவாக இலித்தியம் புளோரைடுடன் பெரிலியம் புளோரைடை கலந்து ஒரு கார கரைப்பான் (FLiBe) உருவாகிறது. இதில் யுரேனியம் மற்றும் தோரியத்தின் புளோரைடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இலித்தியம் புளோரைடு விதிவிலக்காக வேதியியல் ரீதியாக நிலைப்புத்தன்மை கொண்டதாகும். LiF/BeF2 கலவைகள் (FLiBe) குறைந்த உருகுநிலையுடன் (360 முதல் 459 °செல்சியசு அல்லது 680 முதல் 858 °பாரங்கீட்டு வரை) அணு உலை பயன்பாட்டிற்கு பொருத்தமான புளோரைடு உப்பு சேர்க்கைகளின் சிறந்த நியூட்ரான் தன்மை பண்புகளுடன் உள்ளன. உருகிய உப்பு அணுக்கரு உலை பரிசோதனை இரண்டு குளிரூட்டும் சுற்றுகளில் இரண்டு வெவ்வேறு கலவைகளைப் பயன்படுத்துகிறது.
எதிர்மின் வாய் பயன்பாடு
இலித்தியம் புளோரைடு பலபடி ஒளியுமிழும் டையோடுகள் மற்றும் கரிம ஒளியுமிழும் டையோடுகளில் எலக்ட்ரான் உட்செலுத்தலை மேம்படுத்த ஓர் இணைப்பு அடுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. LiF அடுக்கின் தடிமன் பொதுவாக 1 நானோ மீட்டராக இருக்கும். LiF இன் மின்கடத்தா மாறிலி (அல்லது ஒப்பீட்டு அனுமதி, ε) 9.0 ஆகும்.
இயற்கைத் தோற்றம்
கிரைசைட்டு கனிமம் இயற்கையாகத் தோன்றும் இலித்தியம் புளோரைடு சேர்மமாகும். இது மிகவும் அரிதான ஒரு கனிமமாக அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
இலித்தியம் சேர்மங்கள்
புளோரைடுகள்
ஒளியியல் பொருட்கள்
படிகங்கள்
உலோக ஆலைடுகள்
பாறை உப்பு படிகக் கட்டமைப்பு |
684697 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | இங்னா சட்டமன்றத் தொகுதி | இங்னா சட்டமன்றத் தொகுதி (Hingna Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஓன்றாகும். இத்தொகுய்தியானது நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும். இது ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
684704 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D | சாய் அபயங்கர் | சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சென்னையைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளரும் நிரலாளரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தானே வெளியிட்ட "கட்சி சேர" என்கிற தனியொரு அறிமுகப் பாடலின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.
பெற்றோர்
சாய் அபயங்கர் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களான திப்பு, ஹரிணி ஆகியோரின் மகனாவார்.
இசை வாழ்க்கை
2024 சனவரி 21 அன்று, சாய் 'கட்சி சேர' என்கிற தனியொரு பாடலை வெளியிட்டார். இது சமூக ஊடகத் தளங்களில் பிரபலமடைந்தது. யூடியூபில் 135 + மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்தது. சூன் 12 அன்று, இவரது அடுத்த தனிப்பாடலான 'ஆச கூட' வெளியானது. இதற்கும் சமூக ஊடகங்களில் 150+ மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து பிரபலமானது. இதே நாளில், பாக்யராஜ் கண்ணன் இயக்க, லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்சு என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சின் நான்காவது திரைப்படமாகும். இச்செய்தியை, நவம்பர் 4ஆம் தேதி சாயின் பிறந்தநாளை முன்னிட்டு, பென்சு திரைப்படத் தயாரிப்பாளர் முறையாக அறிவித்தார்.
இசைவரிசை
தனிப்பாடல்கள்
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
2004 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்தியப் பாடகர்கள்
Articles with hCards
குறுகிய விளக்கமுடைய கட்டுரை |
684707 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | நாக்பூர் மத்திய சட்டமன்றத் தொகுதி | நாக்பூர் மத்திய சட்டமன்ற தொகுதி (Nagpur Central Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாக்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684709 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | காம்டி சட்டமன்றத் தொகுதி | காம்டி சட்டமன்றத் தொகுதி (Kamthi Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது, நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது. காம்டி, ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
684714 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D | சபினா கான் | சபினா கான் (Zabina Khan) இந்திய நாட்டினைச் சார்ந்த வடிவழகி, அழகு ராணி, நடிகை மற்றும் உதவி இயக்குநர் ஆவார். இவர் சபீன் கான் (Zabyn Khan) என்றும் அழைக்கப்படுகிறார்.
2004 ஆம் ஆண்டில் முதல் மிசு சுற்றுலா அழகி சர்வதேசம் என்ற பட்டம் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
1985 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் இசுலாமிய குடும்பத்தில் பிறந்தார்.
2004 ஆம் ஆண்டில் தனது 19 ஆவது வயதில், கிளாட்ராக்சு மேன்கன்டு மற்றும் மெகாமாடல் போட்டியில் பங்கேற்றார். மேலும் மிசு சுற்றுலா அழகி சர்வதேச முதல் பதிப்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற மிசு சுற்றுலா அழகி சர்வதேச முதல் பதிப்பில் போட்டியிட்டு இறுதியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்தப் போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
சபினா என்ற சபீன் கான் நடிகை மற்றும் உதவி இயக்குநர் ஆவார். குல்சுல் (2004 ஆம் ஆண்டு) ஏக் கசீனா ஏக் கிலாடி (2005 ஆம் ஆண்டு) பிளப் மாசுடர் (2005 ஆம் ஆண்டு) வேட்டையாடு விளையாடு (2006 ஆம் ஆண்டு) கோடவா (2007 ஆம் ஆண்டு) சகதம் (2007 ஆம் ஆண்டு) பங்கா நா லோ (2007 ஆம் ஆண்டு) ஆசிக் பனயா ஆப்னே (2007 ஆம் ஆண்டு) வில்லு (2008 ஆம் ஆண்டு) சஞ்சலம் (2011 ஆம் ஆண்டு) சிவாசி நகர் (2014 ஆம் ஆண்டு) போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆக்சன் சாக்சன் (2014 ஆம் ஆண்டு) சோலோ (2017 ஆம் ஆண்டு), நவ்ரசா (2021 ஆம் ஆண்டு) திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தற்போது பிக் டாடி கேசினோ மற்றும் சிட்ரைக் கேசினோ படங்களில் பொழுதுபோக்கு இயக்குநராக பணியாற்றியுள்ளார். கோவாவில் 2019 ஆம் ஆண்டு தனது நிகழ்ச்சியான உங்கள் திறமை நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றவர் ஆனார்.
பிக் பாசு (2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை) மற்றும் சுதந்திர விழா (2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை) பணியாற்றினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மிசு சுற்றுலா அழகி சர்வதேசம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
இந்தித் திரைப்பட நடிகைகள்
இந்தியத் திரைப்பட நடிகைகள்
1985 பிறப்புகள்
வாழும் நபர்கள் |
684718 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D | திங்க் மியூசிக் | திங்க் மியூசிக் (Think Music) என்பது தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் இந்திய இசை நிறுவனமாகும். இது தென்னிந்தியத் திரைப்பட ஒலிப்பதிவுகளில் நிபுணத்துவம் பெற்றது.
கண்ணோட்டம்
திங்க் மியூசிக் இந்தியா 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வேல் (2007) மற்றும் பையா (2010) உள்ளிட்ட முதல் 46 திரைப்பட ஒலிப்பதிவு உரிமையினை 2010-இல் சோனி மியூசிக்கிற்கு விற்றது. பிலீவ் டிஜிட்டல் நிறுவனத்தினர் நவம்பர் 2021-இல் திங்க் மியூசிக்கை நிறுவனத்தினை விலைக்கு வாங்கினர்.
திரைப்படவியல்
தமிழ்
லேசா லேசா (2003)
எதிரி (2004)
எந்திரன் (2010)
உத்தமபுத்திரன் (2010)
180 (2011)
தெய்வத்திருமகள் (2011)
குக்கூ (2014)
இன்று நேற்று நாளை (2015)
பாபநாசம் (2015)
36 வயதினிலே (2015)
வலியவன் (2015)
144 (2015)
சர்வர் சுந்தரம் (2016)
தாரை தப்பட்டை (2016)
அரண்மனை 2 (2016)
கபாலி (2016)
தெறி (2016)
மரகத நாணயம் (2017)
விக்ரம் வேதா (2017)
மீசைய முறுக்கு (2017)
சென்னை 2 சிங்கப்பூர் (2017)
ஸ்கெட்ச் (2018)
96 (2018)
இமைக்கா நொடிகள் (2018)
60 வயது மாநிறம் (2018)
சீமராஜா (2018)
நட்பே துணை (2019)
மிஸ்டர். லோக்கல் (2019)
மாறா (2021)
கர்ணன் (2021)
சிவகுமாரின் சபதம் (2021)
கதிர் (2022)
டி பிளாக் (2022)
தி லெஜண்ட் (2022)
நான் மிருகமாய் மாற (2022)
பொம்மை (2023)
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் (2023)
பிரதர் (2024)
மலையாளம்
ஓம் சாந்தி ஓஷானா (2014)
ஹிருதயம் (2022)
சவுதி வெள்ளக்கா (2022)
வாஷி (2022)
கிறிஸ்டி (2023)
நான் கதலான் (2024)
தெலுங்கு
ஏ1 எக்ஸ்பிரசு (2021)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சென்னையை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் |
684719 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | கமுந்திங் தொடருந்து நிலையம் | கமுந்திங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kamunting Railway Station மலாய்: Stesen Keretapi Kamunting); சீனம்: 甘文丁火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக் மாநிலத்தில் கமுந்திங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கமுந்திங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
இந்த நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தின் (KTM Wast Coast Railway Line), ஈப்போ - பட்டர்வொர்த் துணைத் தடத்தில் (KTM Komuter Northern Sector Route No. 1.) உள்ளது.
பொது
- மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக க்முந்திங் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. அக்டோபர் 2013-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.
கமுந்திங்
கமுந்திங் (Kamunting) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தைப்பிங் நகரத்தின் பெரும் துணைநகரமாகவும் விளங்குகிறது. ஈப்போ மாநகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. மிக அருகாமையில் இருப்பது தைப்பிங் பெருநகரம் ஆகும்.
இந்த நகரத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இருப்பதால், இதை ஒரு தொழிற்துறைப் பூங்கா என்று அழைப்பதும் உண்டு. இங்குதான் கமுந்திங் தடுப்பு மையம் உள்ளது.
ஈய உற்பத்தி
1890-ஆம் ஆண்டுகளில் கமுந்திங் ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. தைப்பிங் நகரம் ஈய உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கிய காலத்தில், அப்பகுதி வாழ் மக்கள், ஈய மூட்டைகளைச் சுமந்து செல்ல யானைகளைப் பயன்படுத்தினர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காட்டுப் பகுதியாக இருந்த கமுந்திங், தற்போது தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக இயங்கி வருகிறது. இதை தைப்பிங் பெருநகரத்தின், துணை நகரம் என்று அழைக்கிறார்கள்.
மேற்கோள்கள்
மேலும் காண்க
பாகன் செராய்
லாருட், மாத்தாங், செலாமா
புக்கிட் மெர்தாஜாம்
தைப்பிங்
கமுந்திங் தடுப்பு மையம்
வெளி இணைப்புகள்
Keretapi Tanah Melayu Official Website
மலேசியாவில் போக்குவரத்து
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
பினாங்கு மாநிலத்தின் தொடருந்து நிலையங்கள் |
684720 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20505%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 505அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 505அ (National Highway 505A (India)) பொதுவாக தே. நெ. 505அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 505அ இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
பவாரி-ரெக்காங் பியோ-கல்பா. /
சந்திப்பு
பவாரி அருகே முனையம்/
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 505ஏ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684722 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20705%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 705 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 705, (National Highway 705 (India)) பொதுவாக தே. நெ. 705 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு துணைச்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 705 இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
தியோக், கோட்காய், ஜூபல், கட்கோதி.
சந்திப்புகள்
தியோக் அருகே முனையம்
கட்கோதி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 705
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684724 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | ராம்டெக் சட்டமன்றத் தொகுதி | ராம்டெக் சட்டமன்றத் தொகுதி (Ramtek Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும். ராம்டேக், ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
684727 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%206%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 6, (National Highway 6 (India)) பொதுவாக தே. நெ. 6 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலங்களான மேகாலயா, அசாம், மிசோரம் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 6 பழைய தேசிய நெடுஞ்சாலைகளாக 40, 44, 154 மற்றும் 54 எனப் பல்வேறு எண்கள் வழங்கப்பட்டது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 6, ஜோராபட், சில்லாங், ஜோவாய், பதர்பூர், பஞ்ச்கிராம், கோலாசிப், கான்பூய், அய்சால், செலிங், லும்துய், கவ்த்லிர், துய்சென், நெய்தான், சாம்பாய் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்தியா/மியான்மர் எல்லையில் சோகாவ்தார் அருகே முடிவடைகிறது.செப்டம்பர் 2008-இல், சில்சாரின் வடமேற்கில் உள்ள நர்புக் சரணாலயத்திற்குள் மேகாலயாவின் சோனாப்பூரில் 120 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இது மேகாலயாவை மேகாலயாவின் தென்கிழக்கில் உள்ள அசாமின் பராக் பள்ளத்தாக்குடன் இணைக்கிறது.
சந்திப்புகள்
ஜோராபட் அருகே முனையம்
சில்லாங் அருகே
ஜோவாய் அருகே
கோலசிப் அருகே
அய்சால் அருகே
செலிங்க்கு அருகில்
கவுல்குல் அருகே
ஆசிய நெடுஞ்சாலைகள்
தேசிய நெடுஞ்சாலை 6-இல் ஜோராபட் முதல் சில்லாங் வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 1 மற்றும் ஆசிய நெடுஞ்சாலை 2-இன் ஒரு பகுதியாகும்.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஓபன்ஸ்ட்ரீட்மேப்பில் தே. நெ. 6
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684730 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20306%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 306அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 306அ (National Highway 306A (India)) பொதுவாக தே. நெ. 306அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 306-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 306அ இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
வைரெங்டே, சைபாய், ஜோன்முன், நியூ வெர்டெக்.
சந்திப்புகள்
வைரெங்டே அருகே முனையம்
நியூ வெர்டெக் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 306அ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684735 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF | அபு முகமது அல்-சுலானி | (இயற்பெயர்:அகமது அல்-ஷாரா (பிறப்பு: 1982), அபு ஜாபர் சேக்கிற்குப் பின் 2017ஆம் ஆண்டு முதல் சிரியா நாட்டின் போராளிகள் குழுவான சாம் விடுதலை அமைப்பின் 2வது அமீர் ஆவார். சவூதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் பிறந்த இவர் 1980களில் தனது குடும்பத்துடன் சிரியாவிற்கு குடிபெயர்ந்தார்.2016ஆம் ஆண்டில் அல் காயிதாவுடனான தொடர்புகளை துண்டிப்பதற்கு முன் அல் காயிதாவின் கிளை அமைப்பான அல் நுஸ்ரா முன்னணியின் அமீராக அபு முகமது அல்-சுலானி செயலாற்றினார்.
அல் கைதா அமைப்பிலிருந்து விலகிய சுலானி, சிரியாவில் இசுலாமிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தவதில் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டார். இவரது தலைமையிலான சாம் விடுதலை அமைப்பு அதன் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஒரு நிர்வாகத்தை நிறுவி, பொதுமக்களிடமிருந்து வரி வசூலித்தல், பொது சேவைகளை வழங்குதல் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல், தந்திரோபாயங்கள் மற்றும் எதிர்ப்பை அடக்குதல் போன்ற விமர்சனங்களை அதிருப்தியாளர்களிடம் எதிர்கொண்டார். மே 2013ல் அமெரிக்க பாதுகாப்புத் துறை, அல்-சுலானியை உலகாளவிய தீவிரவாதி என அறிவித்தது..நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இவரை பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கு $10 மில்லியன் டாலர்கள் சன்மானத் தொகை வழங்கும் என சிரியா அரசு அறிவித்தது.
27 செப்டம்பர் 2014 அன்று இசுலாமிய அரசுப் படைகளுக்கு எதிரான போரில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக கூட்டணி நாடுகளிலிருந்து எவ்வித உதவிகள் பெறுவதில்லை என அறிவித்தார்.இருப்பினும் அண்மைய ஆண்டுகளில், அவர் தன்னைப் பற்றி மிகவும் மிதமான பார்வையை முன்வைத்தார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் போரை நடத்த அவருக்கு எந்த உத்வேகமும் இல்லை என்றும், சிறுபான்மை கிறித்தவர்களை பாதுகாப்பதாக உறுதியளித்தார்.
2024ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற சிரியா உள்நாட்டுப் போரின் முடிவில், இவரது தலைமையிலான சாம் விடுதலை அமைப்பினர் சிரியாவை 54 ஆண்டுகளாக ஆண்ட பசார் அல்-அசத்த்தின் குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தனர்.
இதனையும் காண்க
சிரிய உள்நாட்டுப் போர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Abu Muhammad al-Golani
1982 பிறப்புகள்
வாழும் நபர்கள்
அராபிய மக்கள்
சிரியாவின் உள்நாட்டுப்போர் |
684738 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88 | ஜான்கோவுசிக் காட்டுச்சில்லை | ஜான்கோவுசிக் காட்டுச்சில்லை (Jankowski's bunting) அல்லது செம்பழுப்பு முதுகு காட்டுச்சில்லை (எம்பெரிசா ஜான்கோவுசிகி) என்பது எம்பெரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.
ஜான்கோவுசிக் காட்டுச்சில்லை உருசியாவின் தூர கிழக்கு, மஞ்சூரியா மற்றும் வடகிழக்கு கொரியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இங்கு அதன் இயற்கையான வாழிவிடங்கள் மிதமான புதர் நிலங்களும் புல்வெளிகளும் ஆகும். 2020ஆம் ஆண்டில் இது மங்கோலியாவில் இனப்பெருக்கம் செய்வதாகக் கண்டறியப்பட்டது. அதிக மேய்ச்சல் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வாழ்விட இழப்பு காரணமாக இந்தச் சிற்றினம் அச்சுறுத்தப்படுகிறது. இது தற்போது அருகிய நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
மார்ச் 9,1886 அன்று பிரிமோர்சுகி கிராயில் உள்ள சிடெமியில் உள்ள தனது தோட்டத்தில் ஒரு மாதிரியைச் சேகரித்த போலந்து சேகரிப்பாளர் மைக்கேல் ஜான்கோவ்சுகியின் நினைவாக இந்தப் பறவையின் பொதுப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1888ஆம் ஆண்டில் சிற்றினத்தை லாடிடுலாசு தாக்சானோவ்சுகி விவரித்தனர்.
ஜான்கோவ்சுகியின் காட்டுச்சில்லைக்குச் சீன சட்டத்தின் கீழ் மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது 2021ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெயரிடப்பட்ட இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்
காட்டுச்சில்லை |
684739 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | பண்டாரா சட்டமன்றத் தொகுதி | பண்டாரா சட்டமன்றத் தொகுதி (Bhandara Assembly constituency) என்பது மத்திய இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பண்டாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். இது பண்டாரா-கோண்டியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டப்பேரவைத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேலும் காண்க
பண்டாரா
குறிப்புகள்
மகாராட்டிர அரசியல்
பண்டாரா மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684741 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88 | வானம்பாடி காட்டுச்சில்லை | வானம்பாடி காட்டுச்சில்லை (Lark-like bunting) (எம்பெரிசா இம்பெடுவனி) என்பது தென்மேற்கு ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட எம்பெரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.
இது அங்கோலா, போட்சுவானா, லெசோதோ, நமீபியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட புதர் நிலமாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
லார்க் போன்ற பஞ்சிங்-தெற்கு ஆப்பிரிக்க பறவைகளின் அட்லஸில் இனங்கள் உரை.
தெற்கு ஆப்பிரிக்கப் பறவைகள்
காட்டுச்சில்லை |
684743 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88 | திரித்திரம் காட்டுச்சில்லை | திரித்திரம் காட்டுச்சில்லை (Tristram 's bunting) என்பது எம்பெரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இந்தச் சிற்றினம் முதன்முதலில் 1870இல் இராபர்ட் சுவின்கோவினால் விவரிக்கப்பட்டது.
இது கிழக்கு மஞ்சூரியாவிலும் உருசியாவின் தூரக் கிழக்குப் பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர் காலத்தில் மத்திய, தென் சீனப் பகுதிகளுக்கு வலசை வருகின்றன.
இது சப்பான், கொரியா, லாவோஸ், மியான்மர், உருசியா, மங்கோலியா, தைவான், தாய்லாந்து, வியட்நாம், வடகிழக்கு இந்தியாவில் தற்செயலாகக் காணப்படுகின்றன. இதன் இயற்கையான வாழ்விடம் ஊசியிலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
காட்டுச்சில்லை |
684744 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி | அர்சூனி மோர்காவ் சட்டமன்றத் தொகுதி (Arjuni Morgaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்ட மன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். அர்சூனி மோர்காவ், பண்டாரா-கோண்டியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
684751 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | சுனங்காடு | சுனங்காடு (Chunangad) என்பது இந்தியாவின், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்த ஊரில் மக்கள் தொகையில் முதன்மையாக இந்துக்களும், முசுலிம்களும், மிகக் குறைவான எண்ணிக்கையில் கிறித்தவ மக்களும் உள்ளனர். சுனாங்காட்டின், வெங்கலில் உள்ள மேனன் குடும்பம் அந்த இடத்தில் முக்கிய நிலப்பிரபுக்களாக இருந்தனர். கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முதல் பெண் தலைவரான திருமதி சுனங்காடு குஞ்சிகவம்மா சுனங்காட்டில் பிறந்தவராவார். சுனாங்காட்டில் உள்ள முக்கிய கோயில்களாக சிவன் கோயில், கொட்டேகாவு பகவதி கோயில் ஆகியவை உள்ளன.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
684752 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%207%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 7 (தெ. நெ. 7)(National Highway 7 (India)) என்பது இந்தியாவில் பாசில்காவையும் (பஞ்சாப்) மனாவையும் (உத்தராகண்டம்) இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 7 (பழைய தேசிய நெடுஞ்சாலை-58) இந்து சமய மையங்களான ரிசிகேசு, தேவ் பிரயாக், ருத்திரபிரயாகை, கர்ணபிரயாகை, சமோலி, ஜோஷி மடம், பத்ரிநாத் தேராதூன், சண்டிகர் நகரங்களை இணைக்கிறது. சிறி கேம்குந்த் சாகிபுக்கு பயணிக்கும் யாத்ரீகர்கள் ஜோசி மடம் மற்றும் பத்ரிநாத் இடையே தே. நெ. 7-இல் அமைந்துள்ள கோவிந்த்காட்டி சென்று பயணிக்கின்றனர்.
இந்த நெடுஞ்சாலை பொதுவாக குளிர் அதிகம் நிலவும் மாதங்களான திசம்பர், சனவரி, பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இமயம்லையின் மேற்பகுதிகளில் மூடப்படுகிறது. இது இந்தியா/திபெத்து எல்லை அருகே மணா கணவாய்க்குச் செல்கிறது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 7-இன் வழித்தடமானது இந்தியாவின் பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலை சுமார் 845 கிமீ (525 மைல்) நீளம் கொண்டது.
பஞ்சாப்
தேசிய நெடுஞ்சாலை 7 இந்தியா-பாக்கித்தான் எல்லையிலிருந்து தொடங்கி, பாசில்கா, அபோஹர், மலோட், கிதர்பாகா, பதிண்டா, ராம்புரா புல், பர்னாலா, சங்க்ரூர், பட்டியாலா, ராஜ்புரா, பானூர், ஜிராக்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அரியானா எல்லை வரை செல்கிறது.
அரியானா
தேசிய நெடுஞ்சாலை 7, ஜிராக்பூருக்கு அருகிலுள்ள பஞ்ச்குலாவினை அரியானா மாநிலத்தில் உள்ள சாஜத்பூர் மற்றும் நரைன்கருடன் இணைக்கிறது.
இமாச்சலப் பிரதேசம்
தேசிய நெடுஞ்சாலை 7 இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள காலா அம்பை பான்டா சாகிபுடன் நகரங்களை இணைக்கிறது.
உத்தராகண்டம்
தேசிய நெடுஞ்சாலை 7 உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள இந்தோ/திபெத் எல்லையில் தேராதூன், ரிசிகேசு, தேவபிரயாக், ருத்ராப்பிரயாக், கர்ணபிரயாக். சமோலி, பத்ரிநாத், மானா ஆகிய நகரங்களை இணைக்கிறது.
சந்திப்புகள்
பஞ்சாப்
அபோகர் அருகே
மலோட் அருகே
மலோட் அருகே
பதிண்டா அருகே
பதிண்டா அருகே
ராம்புரா பூல் அருகே
பர்னாலா அருகே
சங்க்ரூர் அருகே
ராஜ்புரா அருகே
பானூர் அருகே
ஜிராக்பூர் அருகே
அரியானா
பஞ்ச்குலா அருகே
சாஜத்பூர் அருகே
இமாச்சலப் பிரதேசம்
நகான் அருகே
பான்டா சாகிப் அருகே
பாவோண்டா சாஹிப் அருகே
உத்தராகண்டம்
கெர்பர்ட்பூர் அருகே
தேராதூன் அருகே
ரிசிகேசு அருகே
மலேதா அருகே
சிறிநகர் அருகே
ருத்ராப்பிரயாக் அருகே
கர்ணப்பிரயாக் அருகே
சமோலி அருகே
சாலை முடிவுறும் இடம் சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ள மானா கிராமத்திற்கு அருகில் உள்ளது.
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 7
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684756 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20107%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 107அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 107அ (National Highway 107A (India)) பொதுவாக தே. நெ. 107அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 107அ இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
சமோலி, கோபேஷ்வர், மண்டல் ஓகிமத், பாரம்வாரி.
சந்திப்புகள்
சமோலி அருகே முனையம்
பாரம்வாரி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 107அ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684757 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20707%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 707அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 707அ, (National Highway 707A (India)) பொதுவாக தே. நெ. 707அ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 7-ஐ தேசிய நெடுஞ்சாலை 34 உடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 707அ இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பயணிக்கிறது.
வழித்தடம்
தே. நெ. 707அ உத்தராகண்டம் மாநிலத்தில் சிறீநகருக்கு அருகிலுள்ள தியுனி, சக்ராதா, பேதியானா, முசோரி, தனௌல்டி, சம்பா, நியூ தெக்ரி, மலேத்தா நகரங்களை இணைக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 324 கிலோமீட்டர்கள் (201 மைல்) ஆகும்.
சந்திப்புகள்
தியூனி அருகே முனையம்
நியூ தெக்ரி அருகே
சிறீநகருக்கு அருகில் மலேத்தாவில்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 707A
தேசிய நெடுஞ்சாலைகளின் எண் அமைப்புகளை சீரமைத்தல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684758 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20907%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 907அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 907அ (National Highway 907A (India)) பொதுவாக தே. நெ. 907அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 907அ இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
நகான்-சரகன்-குமாரகட்டி.
சந்திப்புகள்
நகான் அருகே முனையம்
குமர்கட்டி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684760 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | மெத்தில் இலித்தியம் | மெத்தில் இலித்தியம் (Methyllithium) என்பது CH3Li என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எளிமையான கரிம இலித்தியம் சேர்மமாக இது கருதப்படுகிறது. எசு-தொகுதி கரிம உலோகச் சேர்மமான மெத்தில் இலித்தியம் கரைசல் மற்றும் திட நிலை ஆகிய இரண்டிலும் ஒலிகோமர் எனப்படும் ஒருபடி அலகுகளைக் கொண்ட பலபடி கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இந்த அதிக வினைத்திறன் கொண்ட சேர்மத்தின் ஈதர் கரைசல் கரிம தொகுப்பு மற்றும் கரிம உலோக வேதியியலில் ஒரு வினையாக்கியாகும். மெத்தில் இலித்தியம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு நீரற்ற நிலைமைகள் தேவைப்படுகின்றன, ஏனெனில் இச்சேர்மம் தண்ணீரை நோக்கி மிகவும் நாட்டமாக வினைபுரியும். ஆக்சிசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கூட MeLi உடன் பொருந்தாது. மெத்தில் இலித்தியம் பொதுவாக தயாரிக்கப்படுவதில்லை, ஆனால் பல்வேறு ஈதர்களில் ஒரு கரைசலாக வாங்கப்படுகிறது.
தயாரிப்பு
நேரடித் தயாரிப்பு முறையில் மெத்தில் புரோமைடு, டை எத்தில் ஈதரில் உள்ள இலித்தியம் தொங்கலுடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டு மெத்தில் இலித்தியம் உருவாகிறது.
2 Li + MeBr → LiMe + LiBr
இலித்தியம் புரோமைடு, மெத்தில் இலித்தியத்துடன் இணைந்து ஓர் ஒருங்கிணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது. வணிக ரீதியாக கிடைக்கும் பெரும்பாலான மெத்தில் இலித்தியம் சேர்மங்கள் இந்த ஒருங்கிணைவுச் சேர்மத்தைக் கொண்டுள்ளன. ஆலைடு இல்லாத மெத்தில் இலித்தியம் மெத்தில் குளோரைடிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இலித்தியம் குளோரைடு டை எத்தில் ஈதரில் இருந்து வீழ்படிவாகிறது, ஏனெனில் இது மெத்தில் இலித்தியத்துடன் வலுவான ஒருங்கிணைவுச் சேர்மத்தை உருவாக்கவில்லை. வடிபொருள் மிகவும் தூய மெத்திலித்தியத்தைக் கொண்டுள்ளது. மாற்றாக, வணிகரீதியாக மெத்தில் இலித்தியத்தை டையாக்சேனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் LiBr(டையாக்சேன்) உருவாகும். இதை வடிகட்டுவதன் மூலம் அகற்றலாம். ஆலைடு -இல்லாத மற்றும் LiBr-MeLi சேர்மத்தின் பயன்பாடு சில தயாரிப்பு வினைகளில் ஒரு தீர்க்கமான விளைவைக் கொண்டுள்ளது.
வினைத்திறன்
கார்பனில் உள்ள பகுதி எதிர்மறை மின்னூட்டம் காரணமாக மெத்தில் இலித்தியம் வலுவான காரமாகவும் அதிக அணுக்கரு கவர்பொருளாகவும் செயல்படுகிறது. எனவே எலக்ட்ரான் ஏற்பிகள் மற்றும் புரோட்டான் வழங்கிகளுக்கு குறிப்பாக வினையாற்றுகிறது. என்-BuLi சேர்மத்திற்கு மாறாக, MeLi அறை வெப்பநிலையில் டெட்ரா ஐதரோ பியூரானுடன் மிக மெதுவாக வினைபுரிகிறது. மேலும் ஈதரில் உள்ள கரைசல்கள் காலவரையின்றி நிலைப்புத்தன்மையுடன் இருக்கும். தண்ணீர் மற்றும் ஆல்ககால்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன. மெத்தில் இலித்தியம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான வினைகள் அறை வெப்பநிலைக்குக் கீழேயே நடத்தப்படுகின்றன. MeLi புரோட்டான் நீக்க வினைகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்றாலும், n-பியூட்டைல் இலித்தியம் இவ்வினைக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது குறைந்த விலையும் அதிக வினைத்திறனும் கொண்டதாகும்.
மெத்தில் இலித்தியம் முக்கியமாக மெத்தில் எதிர்மின் அயனியான சிந்தானின் செயற்கைச் சமமான ஒப்புமையாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கீட்டோன்கள் இரண்டு-படி வினைச் செயல்பாட்டில் மூன்றாம் நிலை ஆல்ககால்களை வழங்க வினைபுரிகின்றன:
Ph2CO + MeLi → Ph2C(Me)OLi
Ph2C(Me)OLi + H+ → Ph2C(Me)OH + Li+
உலோகம் அல்லாத அலோக ஆலைடுகள் மெத்தில் இலித்தியத்துடன் வினையில் ஈடுபட்டு மெத்தில் சேர்மங்களாக மாற்றப்படுகின்றன:
PCl3 + 3 MeLi → PMe3 + 3 LiCl
இத்தகைய எதிர்வினைகள் பொதுவாக கிரிக்கனார்டு வினையாக்கிகளைப் பயன்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் சமமான செயல்திறன் கொண்டவையாகவும் குறைந்த விலை அல்லது தளத்தில் மிகவும் எளிதாக தயாரிக்கப்படுகின்றன.
இது கார்பன் டை ஆக்சைடுடனும் வினைபுரிந்து இலித்தியம் அசிடேட்டைக் கொடுக்கிறது:
CH3Li + CO2 → CH3CO2−Li+
உலோக ஆலைடுகளுடன் MeLi வினையில் ஈடுபட்டு தாண்டல் உலோக மெத்தில் சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. கரிம தாமிரம் சேர்மங்களின் (கில்மேன் வினையாக்கி) உருவாக்கம் குறிப்பாக முக்கியமானதாகும். இதில் மிகவும் பயனுள்ளது இலித்தியம் டைமெதில்குப்ரேட் ஆகும். இந்த வினையாக்கியானது எப்பாக்சைடுகள், ஆல்க்கைல் ஆலைடுகள் மற்றும் ஆல்கைல் சல்போனேட்டுகளின் அணுக்கருநாட்ட பதிலீட்டு வினைகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மெத்தில் எதிர்மின் அயனியால் α,β-நிறைவுறா கார்பனைல் சேர்மங்களுடன் இணைந்த கூட்டு சேர் பொருள்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வேறு பல தாண்டல் உலோக மெத்தில் சேர்மங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ZrCl4 + 6 MeLi → Li2ZrMe6 + 4 LiCl
கட்டமைப்பு
இரண்டு கட்டமைப்புகள் ஒற்றை படிக எக்சுகதிர் படிகவியல் மற்றும் 6Li, 7Li மற்றும் 13C அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலையியல் மூலம் இரண்டு கட்டமைப்புகள் சரிபார்க்கப்பட்டன. நாற்பகுதி கட்டமைப்பு ஓர் உருக்குலைந்த கியூபேன் வகை கொத்து ஆகும். கார்பன் மற்றும் இலித்தியம் அணுக்கள் மாற்று மூலைகளில் உள்ளன. Li---Li பிணைப்பு தூரங்கள் 2.68 Å ஆகும். இது வாயுநிலை இருலித்தியத்தில் உள்ள Li-Li பிணைப்புடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். C-Li பிணைப்பு தூரங்கள் 2.31 Å. கார்பன் மூன்று ஐதரசன் அணுக்கள் மற்றும் மூன்று இலித்தியம் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. (MeLi)4 சேர்மத்தின் நிலையற்ற தன்மையும் ஆல்கேன்களில் அதன் கரையாத தன்மையும் கொத்துகள் மற்றும் கொத்துகளிடை வினைகள் மூலம் தொடர்புகொள்வதன் விளைவாகும். இதற்கு நேர்மாறாக, பெரிய கொத்து (மூவிணைய பியூட்டைல் இலித்தியம்)4, சேர்மத்தில் இடைக்கொத்து இடைவினைகள் கொள்ளிட விளைவுகளால் தடுக்கப்படுகின்றன. இது ஆவியாகும் மற்றும் ஆல்கேன்களில் கரையும்.
நிறக் குறியீடு: Li- ஊதா C- கருப்பு H- வெண்மை
ஆறுபகுதி இலித்தியமானது கார்பன் அணுக்களுடன் மீண்டும் மாற்று மூலைகளில் அறுகோண பட்டகங்களைக் கொண்டுள்ளது.
நிறக்குறியீடு : Li- ஊதா C- கருப்பு H- வெண்மை
திரட்டலின் அளவு கரைப்பான் மற்றும் கூட்டுசேர்க்கைகள் (இலித்தியம் புரோமைடு போன்றவை) இருப்பதைப் பொறுத்து அமைகிறது. பென்சீன் போன்ற ஐதரோகார்பன் கரைப்பான்கள் ஆறுபகுதிகள் உருவாவதை ஆதரிக்கின்றன, அதேசமயம் ஈத்தரியல் கரைப்பான்கள் நாற்பகுதிக்கு சாதகமாக இருக்கும்.
பிணைப்பு
இந்த கொத்துகள் "எலக்ட்ரான் குறைபாடு" என்று கருதப்படுகின்றன. பெரும்பாலான கரிம சேர்மங்களுக்கு மாறாக இவை எண்ம விதியைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு கார்பன் அணுவையும் சுற்றி நான்கு 2-மைய, 2-எலக்ட்ரான் பிணைப்புகளை உருவாக்க மூலக்கூறுகள் போதுமான எலக்ட்ரான்கள் இல்லை என்பது இதற்கு காரணமாகும். எக்சாமர் என்பது 30 எலக்ட்ரான் சேர்மமாகும். அதாவது 30 இணைதிறன் எலக்ட்ரான்கள் இங்குள்ளன. வலுவான C-H பிணைப்புகளுக்கு 18 எலக்ட்ரான்களை ஒதுக்கினால் 12 எலக்ட்ரான்கள் Li-C மற்றும் Li-Li பிணைப்பிற்கு எஞ்சியிருக்கும். ஆறு உலோக-உலோக பிணைப்புகளுக்கு ஆறு எலக்ட்ரான்களும் ஒரு மெத்தில்-η3 இலித்தியம் தொடர்புக்கு ஓர் எலக்ட்ரானும் பயன்படும்.
அகச்சிவப்பு நிறமாலையியல் அளவீடுகளிலிருந்து C-Li பிணைப்பின் வலிமை சுமார் 57 கிலோகலோரி/மோல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
கரிமலித்தியம் சேர்மங்கள்
மெத்திலேற்றும் முகவர்கள் |
684763 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE | சஞ்சய் மல்கோத்ரா | சஞ்சய் மல்கோத்ரா (Sanjay Malhotra) (பிறப்பு - பிப்ரவரி 14, 1968) 1990 ஆம் ஆண்டு இராசத்தான் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். தற்போது, இவர் இந்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் செயலாளராக உள்ளார். தனது முந்தைய பணியில், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் நிதிச் சேவைகள் துறையில் செயலாளர் பதவியை வகித்தார்.முன்னதாக, இவர் ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார். இதற்கு முன்பு, இராசத்தான் அரசில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கோள்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள்
வாழும் நபர்கள்
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் |
684766 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | திரோடா சட்டமன்றத் தொகுதி | திரோடா சட்டமன்றத் தொகுதி (Tirora Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது கோண்டியா மாவட்டத்தில் உள்ளது. திரோடா, பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
684780 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20907%E0%AE%8E%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 907எ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 907எ (National Highway 907G (India)), பொதுவாக தே. நெ. 907எ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 907எ இந்தியாவின் அரியானா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை-907எ அரியானாவின் ஜகத்ரி, ஜரோடா, புதேரி, பெர்தால், மஹ்மூத்பூர், சேலம்பூர் பாங்கர் மற்றும் பிலாசுபூர் ஆகிய இடங்களை இணைக்கிறது.
சந்திப்பு
ஜகாத்ரி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 907G
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684781 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20108%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 108அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 108அ, பொதுவாக தெ. நெ. 108அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியா ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 8-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 108அ இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் வழியாக செல்கிறது.
வழித்தடம்
ஜோலைபாரி-பெலோனியா-இந்தோ/வங்காளதேச எல்லை
சந்திப்புகள்
ஜோலைபாரி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 108ஏ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684783 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D | அஸ்மா அல்-அசாத் | அஸ்மா ஃபவாஸ் அல்-அசாத் (Asma Fawaz al-Assad, அரபு மொழிஃ أصماء فواز الأصدة née Akrash) (பிறப்பு 11 ஆகத்து 1975) என்பவர் சிரியாவின் முன்னாள் முதல் பெண்மணி ஆவார். சிரிய பெற்றோருக்கு இலண்டனில் பிறந்து வளர்ந்த இவர், டிசம்பர் 13,2000 அன்று சிரியாவின் அப்போதைய அரசத் தலைவராக இருந்த அல்-அசாத்தை மணந்தபோது முதல் பெண்மணி ஆனார்.
அசாத் 1996 இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதலீட்டு வங்கியில் ஒரு பணியைக் கொண்டிருந்த அவர், டிசம்பர் 2000 இல் பஷார் அல்-அசாத்தை மணந்தபோது ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பயிலத் திட்டமிட்டிருந்தார். திருமணத்தைத் தொடர்ந்து முதலீட்டு வங்கியில் தனது வேலையைத் துறந்து சிரியாவில் தங்கினார், அங்கு இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். முதல் பெண்மணியாக, சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததால் நிறுத்தப்பட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்க அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
தனது கணவருடன் சேர்ந்து, சிரியாவின் வணிகத் துறைகள், வங்கி, தொலைத்தொடர்பு, வீடு மனை விற்பனைத் தொழில் மற்றும் கடல்சார் தொழில்களின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்தும் சிரியாவின் "முக்கியப் பொருளாதார வீரர்களில்" ஒருவராக அஸ்மா கருதப்பட்டார். மார்ச் 2011 இல் தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போரின் விளைவாக, உயர் மட்ட சிரிய அரசாங்க அலுவலர்கள் தொடர்பான பொருளாதாரத் தடைகளுக்கு அசாத் உட்படுத்தப்பட்டார், இத்தடையானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இவருக்கு பொருள் மற்றும் நிதி உதவியை வழங்குவதைச் சட்டவிரோதமாக்கியதுடன், சில தயாரிப்புகளைப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்கும் திறனையும் குறைத்தது. இங்கிலாந்தில், "வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தியது உட்பட பொதுமக்களை சித்திரவதை செய்தது மற்றும் கொலை செய்ததற்குமான முறையான அணுகுமுறை" மற்றும் பயங்கரவாத செயல்களைத் தூண்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் பெருநகர காவல்துறை போர்க்குற்றப் பிரிவுக்குள் ஒரு தொடக்க நிலை விசாரணையில் இவர் ஒரு பகுதியாக இருந்தார்.
தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி
அசாத் 1975 ஆம் ஆண்டு ஆகத்து 11 ஆம் தேதி இலண்டனில் குரோம்வெல் மருத்துவமனை இருதய நிபுணரான ஃபவாஸ் அக்ராஸ் மற்றும் அவரது மனைவி சஹார் அக்ராஸ் (லண்டனில் உள்ள சிரிய தூதரகத்தில் முதல் செயலாளராக பணியாற்றிய ஓய்வுபெற்ற தூதர்) ஆகியோருக்கு அஸ்மா பிறந்தார். இவரது பெற்றோர் சுன்னி இசுலாம் மற்றும் சிரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஹோம்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர் இலண்டனின் ஆக்டனில் வளர்ந்தார், அங்கு இவர் இங்கிலாந்தின் டுவைஃபோர்டு சர்ச் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் இலண்டனில் உள்ள குயின்ஸ் கல்லூரியிலும் பயின்றார். இவர் 1996-ஆம் ஆண்டில் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியலில் முதல் தர மதிப்புறு இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
நிதிசார் தொழில்
இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, இவர் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுடன் ஹெட்ஜ் நிதி மேலாண்மைப் பிரிவில் டாய்ச் வங்கி குழுமத்தில் பொருளாதார ஆய்வாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1998 ஆம் ஆண்டில், இவர் ஜே. பி. மோர்கனின் முதலீட்டு வங்கிப் பிரிவில் சேர்ந்தார், அங்கு இவர் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருந்து நிறுவனங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவில் பணியாற்றினார். தனது "பகுப்பாய்வுச் சிந்தனை" மற்றும் "ஒரு நிறுவனத்தை நடத்துவதன் வணிகப் பக்கத்தை புரிந்துகொள்ளும் திறன்” ஆகியவற்றை இந்த வங்கியில் பணியாற்றிய அனுபவம் வழங்கியது என்று பாராட்டுகிறார்.
இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகம் படிக்கவிருந்தபோது, 2000 ஆம் ஆண்டில் டமாஸ்கஸில் உள்ள தனது அத்தை வீட்டில் விடுமுறைக்கு வந்தபோது, குடும்ப நண்பரான பஷார் அல்-அசாத்தை மீண்டும் சந்தித்தார்.
முதல் பெண்மணி
சூன் 2000 இல் அபீஸ் அல்-அசாத் இறந்த பிறகு, பஷார் ஜனாதிபதி பதவியை ஏற்றார். அஸ்மா நவம்பர் 2000 இல் சிரியாவுக்குக் குடிபெயர்ந்தார், அதே ஆண்டு டிசம்பரில் பஷாரை மணந்தார். திருமணத்திற்கு முன்னர் இவர்களின் காதல் காலம் பற்றிய ஊடக அறிக்கைகள் எதுவும் இல்லாததால் இந்தத் திருமணம் பலரை ஆச்சரியப்படுத்தியது. அஸ்மா ஐக்கிய இராச்சியத்தில் வளர்ந்திருந்ததாலும் அலவைட் பஷாரைப் போலல்லாமல் சுன்னி இசுலாமியப் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும்.பலர் இவர்களின் இணைப்பை ஒரு நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்த அரசாங்கத்தை நோக்கிய முன்னேற்றத்தின் அறிகுறியாக விளக்கினர்.
அஸ்மா திருமணத்திற்குப் பிறகு, 14 சிரிய ஆளுநரகங்களில் 13 இல் உள்ள 100 கிராமங்களுக்குச் சென்று சிரியர்களுடன் பேசி, தனது எதிர்காலக் கொள்கைகளை எங்கு வழிநடத்த வேண்டும் என்பதை அறிய சிரியா முழுவதும் பயணம் செய்தார். இவர் அரசாங்கத்தின் சேவைத்துறையின் கீழ் செயல்படும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பை உருவாக்கினார். இது சிரியாவின் வளர்ச்சிக்கான அறக்கட்டளை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உருவாக்கத்தின் காரணமாக, மிடில் ஈஸ்ட் 411 இதழின் "உலகின் மிகவும் செல்வாக்குமிக்க அரேபியர்கள்" என்ற பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றார்.
பொது வாழ்க்கை
ஊடக ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அசாத் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தினார், ஆனால், இறுதியில் அரசியல் விவகாரங்களில் தனது கணவருடன் துணை நின்றார். சிரிய அரசாங்கம் மிகவும் நவீன மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை நோக்கி செயல்படுவதைக் காட்டும் ஒரு சிக்கலான சீர்திருத்த முயற்சிகளை ஒழுங்கமைக்க ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் 18 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டது, இதன் முக்கிய பகுதி அசாத்துக்கு "ஒரு சீர்திருத்தவாதியின் ஒளிவட்டத்தை" உருவாக்க உதவியது, நாடு உள்நாட்டுப் போரில் இறங்கியதால் திட்டம் இடைநிறுத்தப்படும் வரை சிரியா மேம்பாட்டு அறக்கட்டளையில் இவர் பங்கேற்றதை எடுத்துக்காட்டுகிறது. பிறப்பால் ஒரு சுன்னி இசுலாமியர் என்ற வகையில், சிரியாவின் சுன்னி பெரும்பான்மை சிரிய அரசாங்கம் மற்றும் அரசத் தலைவரின் பார்வைக்கு அசாத்தின் முன்னணிப் பங்கு முக்கியமானதாக இருந்தது.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1975 பிறப்புகள்
அரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
சிரிய அரசியல்வாதிகள் |
684786 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20108%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 108ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 108ஆ, பொதுவாக தே. நெ. 108ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 8-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 108ஆ இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
அகர்தலா முதல் கோவாய் வரை //
சந்திப்புகள்
: அகர்தலாவுக்கு அருகில் உள்ள முனையம்
கோவாய் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 108பி
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684787 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20208%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 208அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 208அ, பொதுவாக தே. நெ. 208அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 8-இன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 208அ இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
திரிபுரா
கைலாஷகர், தர்மநகர், கடம்தலா, பிரேம்டோலா, குர்தி ஆர். சி. சி பாலம்-அசாம் எல்லை.
அசாம்
திரிபுரா எல்லை-கதல்தாலி, குக்கிடால், சந்த் கேரா.
சந்திப்புகள்
கைலாஷகர் அருகே முனையம்
குக்கிடால் அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 208ஏ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684792 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE | சுமாத்திரானா | சுமாத்திரானா (Sumaterana) என்பது பொதுவாக சுமாத்திரா அருவித் தவளைகள் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள இராணிடே குடும்பத்தில் உள்ள தவளைப் பேரினமாகும். முதன்மை அல்லது இரண்டாம் நிலை காடுகளில் காணப்படும் இத்தவளைகள் வேகமாக ஓடும் நீரோடைகளில் வாழ்கின்றன.
சிற்றினங்கள்
மூன்று சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சுமாத்திரான கிராசியோவிசு (பௌலெங்கர், 1920)
சுமாத்திரான தபுலேசென்சு ஆரிபின் மற்றும் பலர், 2018
சுமாத்திரான மொன்டானா ஆரிபின் மற்றும் பலர், 2018
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள்
தவளைகள் |
684795 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81 | ஜிம்னோபிசு | ஜிம்னோபிசு (Gymnopis) என்பது டெர்மோபிடே குடும்பத்தைச் சேர்ந்த மத்திய அமெரிக்க சிசிலியன் சிற்றினமாகும்.
சிற்றினங்கள்
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள் |
684798 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | வால்மீகி தீர்த்தக் கோயில் | ஸ்ரீ ராமர் தீர்த்தக் கோயில் அல்லது பகவான் வால்மீகி தீர்த்த ஆசிரமம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிதர்சரஸ் மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது. பகவான் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை வால்மீகி தீர்த்த ஆசிரமம் என்றும் அழைப்பர். இக்கோயிலை பல நூற்றாண்டுகளாக பல முக்கிய துறவிகள் மற்றும் முனிவர்கள் பார்வையிட்டதாக நம்பப்படுகிறது. கோயில் பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. தற்போதைய அமைப்பு 1 டிசம்பர் 2016 கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் கருவறையில் 800 கிலோ கிராம் எடை மற்றும் 8 அடி உயரம் கொண்ட வால்மீகி முனிவரின் தங்கச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வால்மீகி தீர்த்த ஆசிரம மேம்பாட்டுக் குழுவால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோவில் வளாகம் பரந்து விரிந்துள்ளது மற்றும் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சிறிய கோவில்களை உள்ளடக்கியது. இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதன்மைக் கோயில் வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன அழகிய அமைப்பாகும். கோவிலின் கட்டிடக்கலை பஞ்சாபில் பொதுவான இந்து மற்றும் இஸ்லாமிய பாணிகளை ஒருங்கிணைக்கிறது. கோவிலின் குவிமாடம் மற்றும் கோபுரங்கள் கவர்ச்சிகரமானவை மற்றும் தூரத்திலிருந்து பார்க்க முடியும்.
கோயில் வளாகத்தில் ஒரு பெரிய குளியல் கட்டம் உள்ளது. இது பக்தர்கள் புனித நீராட பயன்படுத்துகிறது. கோவிலில் உற்சாகமாக கொண்டாடப்படும் இராம நவமி போன்ற பண்டிகைகளின் போது இந்த தீர்த்தக் குளத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். நவம்பரில் நடைபெறும் கோவிலின் வருடாந்திர திருவிழாவும் ஒரு பிரபலமான நிகழ்வாகும்.
தொன்ம வரலாறு
புராணங்களின்படி, இத்தீர்த்தத் தலம் இராமரின் மகன்களான லவன் மற்றும் குசன் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. இராமாயணத்தின், இராம-இராவணப் போருக்குப் பிறகு, இராமர் தனது மனைவி சீதையுடன் அயோத்திக்குத் திரும்பியபினார். இராவணின் அசோக வனத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட காலத்தில் சீதையின் தூய்மை பற்றிய வதந்திகள் காரணமாக, கருவுற்றிருந்த சீதையை அயோத்தியை விட்டு வனவாசம் செல்லச் சொன்னார். இலட்சுமணனால் கூட்டுச் செல்லப்பட்ட சீதை, கங்கை ஆற்றின் கரையில் இருந்த வால்மீகி ஆசிரமத்திற்கு அருகில் விட்டுச் சென்றான். வால்மீகி ஆசிரமத்தில் சீதை லவன் மற்றும் குசனைப் பெற்றெடுத்தாள்.
படக்காட்சிகள்
மேற்கோள்கள்
இந்திய பஞ்சாபில் உள்ள இந்துக் கோவில்கள்
அமிர்தசரஸ் மாவட்டம் |
684804 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%2C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D | பாரம்பரியத் தெரு, அமிர்தசரஸ் | பாரம்பரியத் தெரு, அமிர்தசரஸ் (Heritage Street, Amritsar), பஞ்சாப், இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்த பழமையான தெருவாகும். இது பொற்கோயில் மற்றும் பிரிவினை அருங்காட்சியகத்திற்கு நடுவில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இத்தெருவை ஜெய்ப்பூர் நிறுவனத்தினால் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 26 அக்டோபர் 2016 அன்று திறக்கப்பட்டது. இப்பாரம்பரியத் தெரு 1.1 கிலோ மீட்டர் (0.68 மைல்) நீளம் கொண்டது.
அருகில் உள்ள சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்
அமிர்தசரஸ் பொற்கோயில்
அகால் தக்த்
ஜலியான்வாலா பாக்
பிரிவினை அருங்காட்சியகம்
மேற்கோள்கள்
அமிர்தசரஸ் மாவட்டம் |
684805 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9 | ஜகத் விக்கிரமரத்தின | ஜகத் விக்கிரமரத்தின (Jagath Wickremerathna, பிறப்பு: 23 பெப்ரவரி 1968) ஓர் இலங்கை அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2024 திசம்பர் 17 இல் நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
ஜகத் விக்கிரமரத்தின பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டமும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிருவாகப் பட்டமும் பெற்றவர்.
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள்
இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வாழும் நபர்கள்
1968 பிறப்புகள்
பொலன்னறுவை மாவட்ட நபர்கள்
சிங்கள அரசியல்வாதிகள்
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள் |
684806 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20309%E0%AE%85%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 309அ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 309அ (National Highway 309A (India)), பொதுவாக தே. நெ. 309அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள இராமேசுவர் நகரத்தை அல்மோராவுடன் இணைக்கும் ஓர் ஒற்றை வழி நெடுஞ்சாலை ஆகும். 2000ஆம் ஆண்டில் உத்தராகண்ட மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, இந்த நெடுஞ்சாலையின் அல்மோரா-பாகேசுவர் பகுதி உத்தரப் பிரதேசத்தின் மாநில நெடுஞ்சாலை 37-இன் ஒரு பகுதியாக இருந்தது. இது பாகேசுவரிலிருந்து பரேலி வரை செல்கிறது.
வரலாறு
இந்த நெடுஞ்சாலையின் அல்மோரா-பாகேசுவர் பகுதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாகாண 'அல்மோரா ஜோஷிமடம் வண்டி சாலையின்' ஒரு பகுதியாக இருந்தது. இந்த சாலை தாக்லாவுக்கு (இப்போது தகுலா) செல்லும் வழியில் செங்குத்தான இறக்கத்தைக் கொண்டிருந்தது. மேலும் ஓக் மற்றும் ரோடோடென்ட்ரான்களின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. இருப்பினும், மலைகள் தாக்லா மற்றும் பாகேசுவருக்கு இடையில் மிகச் சிறந்த சீர் காடுகளால் சூழப்பட்டிருந்தன. பின்னர் 1909ஆம் ஆண்டில், நெடுஞ்சாலையின் பல பகுதிகள் அல்மோரா கெஜெட்டரில் "மூன்றாம் நிலை உள்ளூர் சாலைகள்" என்று பதிவு செய்யப்பட்டன. இதில் 24 மைல் 'கங்கோலிகாட் முதல் தரம்கர் சாலை மற்றும் 22 மைல் 'பாகேசுவர் முதல் பெரிநாக் சாலை ஆகியவை அடங்கும்.
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை 309அ இராமேசுவரில் தொடங்கி அல்மோராவில் முடிவடைகிறது. தே. நெ. 309அ முற்றிலும் உத்தராகண்டு மாநிலத்தில் அமைந்துள்ளது. இச்சாலை பித்தோராகர், பாகேசுவர் மற்றும் அல்மோரா மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 309அ பல்வேறு மாவட்டங்களின் நகரங்களையும் இணைக்கிறது. இராமேசுவர், கங்கோலிகாட், பெரிநாக், சௌகோரி, கந்தா, பாகேசுவர், தகுலா, அல்மோரா.
சந்திப்புகள்
இராமேசுவர் அருகே முனையம்
பாகேசுவரில்
அல்மோரா அருகே முனையம்
தேசிய நெடுஞ்சாலை 309ஆ
தேசிய நெடுஞ்சாலை 309ஆ அல்லது தே. நெ. 309ஆ என அழைக்கப்படும் மாற்று நெடுஞ்சாலையும் அல்மோரா மற்றும் இராமேசுவர் நகரங்களை இணைக்கிறது. இது பாகேசுவர் வழியாக 126 கி. மீ. நீளமுள்ள பாதையில் செல்வதை விட நேரடிப் பாதையைக் கடந்து பயணத் தூரத்தை 66 கி. மீ ஆகக் குறைக்கிறது.
படங்கள்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 309ஏ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684809 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20109%E0%AE%93%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 109ஓ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 109ஓ (National Highway 109K (India)), பொதுவாக தே. நெ. 109ஓ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தில் சிம்லி நகரத்தை ஜௌல்ஜிபியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் இந்த நெடுஞ்சாலை 12 பிப்ரவரி 2021 அன்று அறிவிக்கப்பட்டது.
வழித்தடம்
இது சிம்லியில் தொடங்கி ஜௌல்ஜிபியில் முடிவடைகிறது. தெ. நெ. 109ஓ முற்றிலும் உத்தராகண்டம் மாநிலத்தில் செல்கிறது. இது சமோலி, பாகேஸ்வர், பித்தோராகர் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 109ஓ பல்வேறு மாவட்டங்களின் நகரங்களை இணைக்கிறது. சிம்லி, தராலி, க்வால்டம், பைஜ்நாத், பாகேசுவர், கப்கோட், தேஜம், முன்சியாரி, மட்கோட் மற்றும் ஜௌல்ஜிபி.
சந்திப்புகள்
சிம்லி அருகே முனையம், கர்ணபிரயாகை
பாகேசுவரில்
ஜௌல்ஜிபி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 109ஓ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684811 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20309%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 309ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 309ஆ, (National Highway 309B (India)) பொதுவாக தே. நெ. 309ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 9-இன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ. 309ஆ இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
அல்மோரா-ராமேஸ்வருக்கு அருகில் உள்ள பனார்.
சந்திப்புகள்
அல்மோரா அருகே முனையம்
இராமேசுவர் அருகே பனாரில்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் NH 309B
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684812 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20509%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 509 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 509 (தெ. நெ. 509)(National Highway 509 (India)) என்பது இந்தியா முற்றிலும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 509 ஆக்ரா மொராதாபாத் நகரங்களை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் நீளம் கிமீ (149 மைல்) உள்ளது.
வழித்தடம்
சதாபாத்
ஹத்ராஸ்
சாசுனி
அலிகார்
திபாய்
பாப்ராலா
பாஹ்ஜாய்
சந்தௌசி
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 509
மொராதாபாத் மாவட்டம்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
684814 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D | இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம் | இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம் என்பது இந்தியாவில் கூடைப்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் அமைப்பாகும். இந்தியா முழுவதும் கூடைப்பந்தாட்டத்தை மேம்படுத்துவதும் பரப்புவதும் இந்த அமைப்பின் பொறுப்பாகும். இந்தியாவின் அதிகாரப்பூர்வ அணியின் பெயர் இந்தியன் கேஜர்ஸ் ஆகும்.
வரலாறு
1934 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. 1936 இல் இந்தியத் தேசியக் கூடைப்பந்தாட்ட அணி பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணியில் இணைந்தது. 1950 இல் அந்த அணியினை நிர்வகிக்க இந்தியக் கூடைப்பந்தாட்ட சம்மேளனம் உருவானது.
முன்னாள் தலைவர்களாக குல்விந்தர் சிங் கில், கோவிந்தராஜ் கெம்பரெட்டி போன்றோர் இருந்துள்ளனர் தற்போதைய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா உள்ளார். முதல் பெண் தலைவராக பூனம் மகாஜன் பொறுப்பு வகித்தார்.
தேசிய அணிகள்
இந்தியத் தேசிய ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி
இந்தியத் தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணி
இந்தியத் தேசிய ஆடவர் 3x3 அணி
இந்தியத் தேசிய மகளிர் 3x3 அணி
18 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி
18 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணி
16 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி
16 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணி
சாதனைப் பட்டியல்
அங்கீகாரங்கள்
இந்தியக் கூடைப்பந்தாட்ட வீரர்கள் பல கேடயங்களை நாட்டிற்காகப் பெற்றுள்ளனர். 17 கூடைப்பந்தாட்ட வீரர்கள் இந்திய அரசின் அருச்சுனா விருது பெற்றுள்ளனர். வாழ்நாள் சாதனைபுரிந்ததற்காக தியான் சந்த் விருதுகளை இரு வீரர்கள் பெற்றுள்ளனர்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
ஆசியா-பேஸ்கெட்
இந்தியாவின் விளையாட்டு ஆளுமைக் குழுக்கள்
கூடைப்பந்தாட்டம் |
684819 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | கோந்தியா சட்டமன்றத் தொகுதி | கோந்தியா சட்டமன்றத் தொகுதி (Gondia Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோந்தியா தொகுதி, பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
வெளி இணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
கோந்தியா மாவட்டம்
மகாராட்டிர அரசியல்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684820 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | ஆம்காவ் சட்டமன்றத் தொகுதி | ஆம்காவ் சட்டமன்றத் தொகுதி (Amgaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு சட்டமன்றத்தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதியினருகக்காக ஒதுக்கப்பட்டுள்ளது .கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
கோந்தியா மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684824 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE | ஆதவ் அர்ஜுனா | ஆதவ் அர்ஜுனா () என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் அரைஸ் கேப்பிட்டல் என்ற நிறுவத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, 2024 டிசம்பரில் கட்சியிலிருந்து விலகினார்.
இளமைக்காலம்
இவர் 1982 ஆம் ஆண்டு 12 ஏப்ரலில் திருச்சியில் ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். இவரது ஆரம்பக் கல்வியை ஒய்.டபள்யூ.சி.ஏ விலும் பள்ளிக் கல்வியை திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளான டைய்சி மார்ட்டினை திருமணம் செய்தார்.
விளையாட்டுத்துறை
2016 ஆம் ஆண்டு வரை இவர் கூடைப்பந்தாட்ட வீரராக விளையாடி வந்தார். பின்னர் நிர்வாகத்தில் கவனம் செலுத்தி 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழில்
இவர் அரைஸ் கேப்பிட்டல் என்ற சிறுநிதி நிறுவத்தின் நிர்வாக இயக்குநராக இருந்துவருகிறார். இந்த நிறுவனத்திற்காக இவரது மாமனார், மார்ட்டின் அவரின் நிறுவனமான மார்ட்டின் ஹாப்பி ஹோம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் மூலம் 82.5 கோடி கடன் பெற்றுள்ளார். இவரின் மாமனாரான லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற வேளையில் ஆதவ் அர்ஜுனா அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
அரசியல் வாழ்க்கை
2011 முதல் 2016 வரை மு. க. ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்தார். 2016 இல் சுனில் கனுகோலுவுடன் இணைந்தும், 2021 இல் பிரசாந்த் கிஷோருடன் இணைந்தும் திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 2023 இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார். 2024 டிசம்பரில் கட்சியின் தலைமை அறிவுறுத்தலை மீறியதாகக் கட்சியை விட்டு ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2024 டிசம்பர் 14 ஆம் தேதியில் விசிகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார்.
விருதுகள்
2022 செப்டம்பரில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் நிகழ்வில் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதினைப் பெற்றார். விளையாட்டுத் துறையில் இவரது சிறந்த நிர்வாகத்திறனுக்கு விகடன் நம்பிக்கை விருது 2022 மேடையில் கௌரவிக்கப்பட்டார். கலாட்டா கிரோன் 2022 இல் விளையாட்டு ஐகான் என்ற விருதையும் பெற்றார்.
மேற்கோள்கள்
1982 பிறப்புகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசியல்வாதிகள்
கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்
வாழும் நபர்கள் |
684827 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 | தோனி, பாலக்காடு | தோனி (Dhoni, Palakkad) என்பது இந்தியாவின், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்த ஊர் பாலக்காட்டிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதுது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தோனி அருவிக்காக இந்த ஊர் அறியப்படுகிறது.
கண்ணோட்டம்
தேனிக்கு வடக்கில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. தோனி அருவி பாலக்காட்டில் இருந்து 15 கிமீ தொலைவிலும், கொல்லங்கோடு நகரத்திலிருந்து 34 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
புறநகர்ப் பகுதிகளும் கிராமங்களும்
உல்லாஸ் நகர் மற்றும் விஷ்ணு நகர்
சூர்யா நகர் மற்றும் சாந்தி நகர்
அகத்தேத்தர மற்றும் ஈ. எம். எஸ் நகர்
தானவ் தொடருந்து நிலையம் மற்றும் அதானிபரம்பா
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் |
684829 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE | இரெண்டாபியா | இரெண்டாபியா (Rentapia) என்பது பபோனிடே குடும்பத்தைச் சேர்ந்த தேரைப் பேரினம் ஆகும். இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகள் ஆகும். இவை மலாய் தீபகற்பத்தில் (தெற்கு தீபகற்ப தாய்லாந்து, போர்னியோ. சுமத்ரா உட்பட) காணப்படுகிறது. இப்பேரினம் 2016ஆம் ஆண்டில் பெடோசுடிப்களின் பலதொகுதிமரபு உயிரினத் தோற்றத்திற்குத் தீர்வு காணும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது.
சொற்பிறப்பியல்
"ஒரு சிறந்த போர் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மலேசியத் தேசிய வீரரான" புகழ்பெற்ற இபான் போர்வீரர் லிபாவ் ரென்டாப்பை இந்த பேரினப் பொதுவான பெயர் கௌரவிக்கிறது.
விளக்கம்
இரெண்டாபியா பேரினத்தில் ஒப்பீட்டளவில் பெரிய தேரைகள் உள்ளன. இப்பேரினத்தில் உள்ள பெரிய சிற்றினமாக ரெண்டாபியா கோசி உள்ளது. இதில் ஆண் தேரைகள் 80 மிமீ நீளம் வரை வளருகின்றன. பெண் தேரைகள் 105 மிமீ வரை நீளமுடையன. உட்புற மூளை முகடுகள் இல்லை. பரோட்டிட் சுரப்பிகள் பெரியதாகவும் தனித்துவமாகவும் உள்ளன. மேலும் இவை முட்டை, வட்ட அல்லது முக்கோண வடிவத்தில் இருக்கலாம். விரல்களில் அடித்தள வலைப்பின்னல் மற்றும் நுனிகள் உள்ளன. இவை தட்டையான வட்டுகளாக விரிவடைந்துள்ளன. நான்காவது கால்விரலைத் தவிர அனைத்துக் கால்விரல்களும் முழுமையாக வலைபோன்று இணைக்கப்பட்டுள்ளன. ஆண் தேரைகள் கலவித்திண்டினைக் கொண்டுள்ளன.
சூழலியல்
வயது வந்த இரெண்டாபியா முதன்மையாகத் தாவர உண்ணியாக உள்ளன. சிறிய முதல் மிதமான அளவிலான வன நீரோடைகளைச் சுற்றியுள்ள கரையோரத் தாவரங்களில் வாழ்கிறது. முட்டைகள் சிறியதாகவும், நிறமி கொண்டதாகவும், சரங்களாக இடப்படுகின்றன.
சிற்றினங்கள்
இப்பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று சிற்றினங்கள் உள்ளன. இவை:
இரெண்டாபியா எவெரெட்டி (பௌலஞ்சர், 1896)
இரெண்டாபியா பிளாவோமாகுலேட்டா சான், ஆபிரகாம் மற்றும் பத்லி-சாம், 2020
இரெண்டாபியா கோசி (பௌலெங்கர், 1892)
முன்னர் அங்கீகரிக்கப்பட்ட இரெண்டாபியா இரக்கோசா என்பது இரெ. எவெரெட்டி சிற்றினத்தினை ஒத்ததாகும்.
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள் |
684830 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | இரெண்டாபியா எவெரெட்டி | இரெண்டாபியா எவெரெட்டி (Rentapia everetti), எவெரெட்டி ஆசிய மரத்தேரை அல்லது பளிங்கு மரத்தேரை என்பது பபோனிடே குடும்பத்தில் உள்ள ஒரு தேரைச் சிற்றினம் ஆகும். இது போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. மலேசியா, புரூணை, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது.
இரெண்டாபியா எவெரெட்டி என்பது மலைப்பாங்கான தாழ் நிலத்திலும், துணை மலைப்பாங்கான, வெப்பமண்டல முதன்மை ஈரமான காடு, இரண்டாம் நிலை காடுகளிலும் காணப்படும் ஒரு தாவர உண்ணி வகைத் தேரை ஆகும். இந்தத் தேரையின் அளவு குறித்த தகவல்கள் தெரியவில்லை. சிறிய, மெதுவாக நகரும், தெளிவான, பாறையுள்ள நீரோடைகளில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
பெரிய முட்டை வடிவ பரோடோயிடு சுரப்பிகள், ஏராளமான வட்டமான மருக்கள் மற்றும் கூர்மையான முதுகுப்புற மடிப்பு உள்ளிட்ட உருவப் பண்புகளால் இரெண்டாபியா எவெரெட்டி அடையாளம் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தேரைகள்
முதுகுநாணிகள் |
684833 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | பொட்டாசியம் பெர்ரிசயனைடு | பொட்டாசியம் பெர்ரிசயனைடு (Potassium ferricyanide) என்பது K3[Fe(CN)6] என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரகாசமான சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. கட்டமைப்பில் [Fe(CN)6]3−] அயனி எண்முகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் இச்சேர்மம் கரையும். இதன் கரைசல் பச்சை-மஞ்சள் நிறத்தில் ஒளிரும் தன்மையைக் காட்டுகிறது. 1822 ஆம் ஆண்டில் இலியோபோல்ட் கிமெலின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
தயாரிப்பு
பொட்டாசியம் பெர்ரோசயனைடு கரைசலில் குளோரினைச் செலுத்துவதன் மூலம் பொட்டாசியம் பெர்ரிசியனைடு தயாரிக்கப்படுகிறது. பொட்டாசியம் பெர்ரிசியனைடு கரைசலில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.:
2 K4[Fe(CN)6] + Cl2 → 2 K3[Fe(CN)6] + 2 KCl
கட்டமைப்பு
மற்ற உலோக சயனைடுகளைப் போலவே, திண்மநிலையில் காணப்படும் பொட்டாசியம் பெர்ரிசயனைடும் ஒரு சிக்கலான பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த பலபடி எண்முகம் [Fe(CN)6]3− மையங்களைக் கொண்டுள்ளது. CN ஈந்தணைவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள K+ அயனிகள் குறுக்காக இணைக்கப்பட்டுள்ளன. திண்மம் நீரில் கரையும்போது K+---NCFe இணைப்புகள் உடைந்துவிடும்.
பயன்பாடுகள்
இரும்பு மற்றும் எஃகை கடினப்படுத்தவும், மின்முலாம் பூசுதல், கம்பளி சாயமிடுதல், ஆய்வக வினையாக்கி மற்றும் கரிம வேதியியலில் இலேசான ஆக்சிசனேற்ற முகவராகவும் பொட்டாசியம் பெர்ரிசயனைடு பயன்படுத்தப்படுகிறது.
ஒளிப்படவியல்
மூல வரைபடம், நீல அச்சுப்படிவம், புகைப்பட அச்சுக்கு நிறமளித்தல்
மூல வரைபடம் வரைதல், ஒளிப்படவியல் (நீல அச்சுப்படிவச் செயல்முறை), புகைப்பட அச்சுக்கு நிறமளித்தல் செயல்முறை ஆகிய பரவலானப் பயன்பாடுகளைக் பொட்டாசியம் பெர்ரிசியனைடு கொண்டுள்ளது. படச்சுருள் அல்லது அச்சுக்களில் அடர்த்தியைக் குறைக்க 10 கிராம்/லி செறிவில் இலேசான நிறம் நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
நிறம் நீக்கல்
பொட்டாசியம் பெர்ரிசியனைடு ஓர் ஆக்சிசனேற்ற முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. நிறம் நீக்கல்
எனப்படும் செயல்முறையின் போது நேர் மற்றும் எதிர் வண்ணங்களிலிருந்து வெள்ளியை அகற்றும். பொட்டாசியம் பெர்ரிசயனைடு நிறம் நீக்கிகள் சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாதவை. குறுகிய காலம் மட்டுமே இவை நிலைத்திருக்கும். அதிக செறிவும் அதிக அளவும் கொண்ட அமிலத்தை கலந்தால் ஐதரசன் சயனைடு வாயு வெளியிடப்படும். 1972 ஆம் ஆண்டு கோடாக் சி-41 செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெர்ரிக் எத்தில்டையமீன் டெட்ரா அசிட்டிக் அமில நிறம் நீக்கிகள் வண்ணச்செயல்முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற்ன. வண்ணக் கல்லச்சுக் கலையில் பொட்டாசியம் பெர்ரிசியனைடு வண்ணப் புள்ளிகளின் அளவைக் குறைக்கப் பயன்படுகிறது. இச்செயல் முறை புள்ளியுருச் செதுக்கல் முறை எனப்படும் கைமுறை வண்ணத் திருத்தம் ஆகும்.
பார்மர் குறைப்பான்
பொட்டாசியம் பெர்ரிசயனைடு கருப்பு-வெள்ளை ஒளிப்படக் காலத்தில் சோடியம் தயோசல்பேட்டுடன் சேர்க்கப்பட்டு மூலப்படம் அல்லது ஜெலட்டின் வெள்ளி அச்சின் அடர்த்தியைக் குறைக்க பயன்படுத்தப்பட்டது. இப்பயன்பாட்டுக்கான கலவை பார்மர் குறைப்பான் என்ற பெயரால் அறியப்பட்டது. மூலப்படத்தின் அதிக வெளிப்பாட்டு சிக்கல்களை ஈடுசெய்யவும் அச்சில் உள்ள சிறப்பம்சங்களை பிரகாசமாக்குவதற்கும் இது உதவுகிகிறது
கரிமத்தொகுப்பு வினையாக்கி
பொட்டாசியம் பெர்ரிசயனைடு கரிம வேதியியலில் ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. சார்ப்லெசு ஈரைதராக்சிலேற்ற வினையில் வினையூக்கி மீளுருவாக்கம் செய்வதற்கான ஆக்சிசனேற்றியாக இது பயன்படுகிறது.
குறிக்காட்டி மற்றும் உணரி
பெராக்சைல் குறிகாட்டி கரைசலில் உள்ள இரண்டு சேர்மங்களில் பொட்டாசியம் பெர்ரிசயனைடும் ஒன்றாகும். மற்றொரு சேர்மம் பீனாப்தலீன் ஆகும். இது Fe2+ அயனிகளின் முன்னிலையில் கரைசலை நீலமாக (பிரசியயன் நீலம்) மாற்றும். எனவே துருப்பிடித்தலுக்கு வழிவகுக்கும் உலோக ஆக்சிசனேற்றத்தைக் கண்டறிய இது பயன்படுகிறது. பிரசியன் நீலத்தின் மிகத் தீவிரமான நிறத்தின் காரணமாக, வண்ணமானியைப் பயன்படுத்தி Fe2+ அயனிகளின் மோல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியும்.
உடலியல் சோதனைகளில் பொட்டாசியம் பெர்ரிசயனைடு ஒரு கரைசலின் ஆக்சிசனேற்ற ஒடுக்க திறனை அதிகரிக்கும் வழிமுறையை வழங்குகிறது. எனவே, இது தனிமைப்படுத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியாவில் குறைக்கப்பட்ட சைட்டோக்ரோமை ஆக்சிசனேற்றம் செய்யும். பொதுவாக சோடியம் டைதயோனைட்டு இத்தகைய சோதனைகளில் குறைக்கும் வேதிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு மாதிரியின் பெர்ரிக் குறைக்கும் ஆற்றல் திறனைக் கண்டறிய பொட்டாசியம் பெர்ரிசயனைடு பயன்படுகிறது. (சாறு, இரசாயன கலவை போன்றவை). இத்தகைய அளவீடு ஒரு மாதிரியின் ஆக்சிசனேற்ற பண்புகளை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது
மின்னோட்ட அளவியல் உயிரிய உணரிகளில் பொட்டாசியம் பெர்ரிசயனைடு ஓர் அங்கமாகும். ஓர் எலக்ட்ரான் மாற்ற முகவராக குளுக்கோசு ஆக்சிடேசு நொதிக்கு ஆக்சிசன் போன்ற ஒரு நொதியின் இயற்கையான எலக்ட்ரான் மாற்ற முகவரை இது மாற்றுகிறது. நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்த வணிக ரீதியாக கிடைக்கும் இரத்த குளுக்கோசு மீட்டர்களில் இது ஒரு மூலப்பொருளாகும்.
பிற பயன்கள்
பொட்டாசியம் பெர்ரிசயனைடு பொட்டாசியம் ஐதராக்சைடு அல்லது சோடியம் ஐதராக்சைடு மற்றும் தண்ணீருடன் சேர்ந்து முரகாமியின் அரித்துருவாக்கியை உருவாக்குகிறது. கடினமாக்கப்பட்ட கார்பைடுகளில் பிணைப்பான் மற்றும் கார்பைடு கட்டங்களுக்கு இடையே உள்ள மாறுபாட்டை வழங்க உலோகவியலாளர்களால் இந்த அரித்துருவாக்கி பயன்படுத்தப்படுகிறது.
புருசியன் நீலம்
நீல அச்சில் உள்ள ஆழமான நீல நிறமியான புருசியன் நீலமானது, இரும்பு (Fe2+) அயனிகளுடன் K3[Fe(CN)6] மற்றும் பெர்ரிக் உப்புகளுடன் K4[Fe(CN)6] ஆகியவை சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.
திசுவியலில் திசுக்களில் பெர்ரசு இரும்ப்பு இருப்பதைக் கண்டறிய பொட்டாசியம் பெர்ரிசயனைடு பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் பெர்ரிசியனைடு அமிலக் கரைசலில் பெர்ரசு இரும்புடன் வினைபுரிந்து கரையாத நீல நிறமியை உருவாக்குகிறது. இது பொதுவாக தர்ன்புல் நீலம் அல்லது புருசியன் நீலம் என குறிப்பிடப்படுகிறது. பெர்ரிக்கு (Fe3+) இரும்பைக் கண்டறிய, பெர்ல்சின் புருசியன் நீலம் சாயமேற்றுதல் முறையில் பொட்டாசியம் பெர்ரோசயனைடு பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு
பொட்டாசியம் பெர்ரிசியனைடு குறைந்த நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய ஆபத்து யாதெனில் கண்கள் மற்றும் தோலுக்கு லேசான எரிச்சலூட்டுவதாகும். இருப்பினும். மிகவும் வலுவான அமில நிலைமைகளின் கீழ், சமன்பாட்டின் படி, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஐதரசன் சயனைடு வாயுவை உருவாக்குகிறது:
6 H+ + [Fe(CN)6]3− → 6 HCN + Fe3+
மேலும் காண்க
பெர்ரிசயனைடு
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
Studying redox reaction of Ferricyanide using Potentiostat Effect of different parameters using Cyclic voltammetry
வெளி இணைப்புகள்
International Chemical Safety Card 1132
National Pollutant Inventory – Cyanide compounds fact sheet
பொட்டாசியம் சேர்மங்கள்
இரும்பு(III) சேர்மங்கள்
சயனோ அணைவுச் சேர்மங்கள்
ஒளிப்படக்கலை வேதிப்பொருட்கள்
ஆக்சிசனேற்றிகள் |
684834 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D | அரேன் | அரேன் (Arain) (அரெய்ன் என்றும் அழைக்கப்படுகின்றனர்) ஒரு பெரிய பஞ்சாபி முஸ்லிம் சமூகம் ஆகும். இச்சமூகம் வலுவான அரசியல் அடையாளம் மற்றும் அமைப்பின் நிலை கொண்ட விவசாய சமூகமாக இருக்கிறது.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இவர்கள் சுமார் 1 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்தனர். முக்கியமாக கிராமப்புறத்தில் சாகுபடி செய்பவர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் என இலாகூர், ஜலந்தர், அமிர்தசரஸ் மற்றும் அம்பாலா உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் குவிந்திருந்தனர். இந்த மாவட்டங்கள் அனைத்தும் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தன. 1947 இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து, இவர்கள் இப்போது முக்கியமாக பாக்கித்தானின் மாகாணங்களான பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் ஆகிய பகுதிகளில் ஒரு சிறிய அளாவில் பரவியுள்ளனர்.
ஒரு சுய உணர்வு சமூகமான அரேன் சமூகம் 1890 களில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அமைப்பை நிறுவ பல கூட்டங்களை நடத்தின. இறுதியில், 1915 ஆம் ஆண்டில், இலாகூரில் அஞ்சுமான் ராயன்-இ-இந்த் என்ற ஒரு அமைப்பாக உருவெடுத்தது. அல்-ராய் என்ற தலைப்பில் ஒரு தேசிய சமூக செய்தித்தாளும் நிறுவப்பட்டது.
வரலாறு
தோற்றம்
வரலாற்றாசிரியரும் அரசியல் விஞ்ஞானியுமான கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட், அரபு முஸ்லிம் படைகள் ஆக்கிரமித்ததால், சிந்து மற்றும் முல்தானில் இருந்து பஞ்சாப்பிற்கு இடம்பெயர்ந்த விவசாய சமூகங்கள்தான் இவர்கள் எனவும்; இவர்கள் முதலில் இந்து மதத்தை கடைபிடித்தனர் ஆனால் பலர் பின்னர் இசுலாமுக்கு மாறினார்கள் எனவும் கூறுகிறார். இந்த சமூகம் முக்கியமாக வட இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில் அமைந்துள்ள கம்போம் மற்றும் இராஜபுத்திரர் சமூகங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறுகிறார்.
அரேன் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞானி இஷ்தியாக் அகமது, சில ஆரம்பகால அரேன் நூல்கள் சூர்யவன்ஷி இராஜ்புத்திர வம்சாவளியை குறிப்பிடுகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார். பஞ்சாப் மற்றும் அரியானாவின் பிற விவசாய சாதிகளைப் போலவே, அரேன்களும் “பல இனங்களின் கலவை” என்று அவர் நம்புகிறார்.
இடைக்காலக் காலம்
அகமதுவின் கூற்றுப்படி, முகலாயர் மற்றும் சீக்கியர்களின் ஆட்சியின்போது அரேன் சமூகத்தினர் ஆளுநர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற முக்கிய பதவிகளை வகித்தனர்.
காலனித்துவ காலம்
1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, அரேன் சமூகத்தைச் சேர்ந்த ஷா அப்துல் காதிர் லுதியான்வி என்பவர் லூதியானாவிலிருந்து தில்லியை நோக்கி ஒரு கிளர்ச்சியை வழிநடத்தினார். அங்கு அவர் கொல்லப்பட்டார். இதற்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் அரேன்களை ஒரு விசுவாசமற்ற சமூகமாக கருதினர். மேலும் அவர்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவும் மறுத்தனர். அரேன் சமூகத்தின் பரப்புரை காரணமாக, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர்கள் அதிகாரப்பூர்வமாக ஒரு “விவசாய பழங்குடி” என்று மறு வகைப்படுத்தப்பட்டது.
மக்கள்தொகை
1921 ஆம் ஆண்டில்,பஞ்சாப் மாகாணத்தின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் 9,5% அரேன்களாக இருந்தனர். இது 1901 இல் 8,3% ஆகவும், 1881 இல் 6,6% ஆகவும் இருந்தது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, இலாகூர் மாவட்டத்தின் மிகப்பெரிய சமூகமாக அரேன்கள் இருந்தனர். இது மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 40% அல்லது மொத்த 11 மில்லியனில் 4,45 மில்லியன் ஆகும். அதைத் தொடர்ந்து காஷ்மீரிகள் (30%) உள்ளனர். அரேன் பிரதாரிகள் குறிப்பாக இலாகூரின் தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகளிலும் அதன் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
பஞ்சாபி பழங்குடிகள் |
684835 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86.%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் | பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் (21 செப்டம்பர் 1901 – 23 சனவரி 1975) ஒரு இந்தியப் பத்திரிகையாளரும், தொழில்முனைவோரும், புரவலரும் ஆவார். இலங்கையில் புகழ்பெற்ற வீரகேசரி நாளிதழை நிறுவியவர்.
இளமைப் பருவம்
பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார் 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பட்டியில் பெரி.பெரியண்ணச் செட்டியார் (இ. 1927) - விசாலாட்சி ஆச்சியின் ஐந்து குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். பத்திரிகைத் துறையில் இவர் அதிக ஆர்வம் கொண்டதால் இந்தியாவில் பல பத்திரிகைகளுக்கு எழுத்தாளராக இருந்தார். 1920களின் துவக்கத்தில், இந்தியாவை விட்டு புதிய இடங்களை ஆராய வேண்டும் என்று முடிவு செய்தார், அதற்காக இவர் இலங்கை சென்றார், அங்கு இந்தியத் தொழிலாளர்களின் நிலைமைகளைப் பார்த்து, நியாயத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் ஒரு பத்திரிகையை நிறுவ முடிவு செய்தார்.
வீரகேசரி
சுப்பிரமணியம் செட்டியார் 1930 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பத்திரிகையை நிறுவினார், அதற்கு "வீரகேசரி" என பெயரிட்டார், அதன் பொருள் "வெற்றி பெற்ற சிங்கம்" என்பதாகும். இதுவே இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். இதன் முதல் பதிப்பு 1930 ஆகத்து 6 அன்று கொழும்பு மருதானையில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. செட்டியார் இந்த பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக செயல்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேல் இதை வழிநடத்தினார். சுப்பிரமணியம் செட்டியாரின் தனிச் சொத்தாக இருந்த இந்நிறுவனம், 1950களின் தொடக்கத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியது. 1948-இல் பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு, இலங்கை நாடாளுமன்றம் இலங்கை குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது. வியாபாரத்தை தொடர இலங்கை குடியுரிமையை ஏற்பதற்கு பதிலாக, இந்தியா திரும்ப முடிவு செய்து, 1965 ஆம் ஆண்டில் வீரகேசரியை விற்றுவிட்டார்.
இன்று, இந்த பத்திரிகை இலங்கையின் அனைத்து தமிழ் பேசும் மக்களாலும் மிக அதிகமாகப் படிக்கப்பட்டு பரவலாக வாசிக்கப்படும் பத்திரிகையாக உள்ளது.
வணிக விரிவாக்கம்
செட்டியார் 1950களில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சொத்துக்களை வாங்கி வணிகங்களை நிறுவினார். சிங்கப்பூரில், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வணிக நிறுவனங்களின் ஒரு பகுதியாக இருந்த "SVSP Money Lending" என்ற பெயரில் பணக்கடன் வழங்கும் தொழிலை நிறுவினார். செட்டியார் சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அசையாச் சொத்துகளிலும் முதலீடு செய்தார். மலேசியாவில் தோட்டங்களை வாங்கினார், மலாக்காவிலுள்ள கெலாங் பாத்தாவில் வீரகேசரி இரப்பர் தோட்டங்களை நிறுவினார், இது மலாக்காவின் முதல் ஆசியத் தோட்டமாகும்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகth தனது வெளிநாட்டுத் தொழில்களை நடத்தி வந்த செட்டியார், இறுதியில் இந்தியாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்தில் அவற்றை ஒருங்கிணைக்க முடிவு செய்தார். அங்கு அவர் தனது வாழ்க்கையின் பிற்பகுதியைக் கழித்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை மையமாகக் கொண்டு இந்தியப் பதிப்பகத்தை நிறுவி வீரகேசரி நாளிதழ்களை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டார். இருப்பினும், இந்த திட்டத்தை அவரால் செயல்படுத்தப்படுத்த முடியவில்லை. இறுதியில், சிவகங்கை மாவட்டம் அழகாபுரியில் கேசரி பிரதர்ஸ் & கோ என்ற வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை நிறுவினார்.
குடும்பம்
சுப்பிரமணியம் செட்டியார் முதல் மனைவி பெயர் குப்பாள் ஆச்சி, அவர்களுக்கு மூன்று குழந்தைகள். குப்பாள் ஆச்சி இளவயதிலேயே இறக்க, செட்டியார் பொன்னம்மாள் ஆச்சியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். இவர்களின் மகன் சுப. சுந்தரகேசரி, பேரன் சு. சுப்ரமணியம், கொள்ளுப்பேரன் சுந்தர் சுப்ரமணியம் என வாரிசுகள் அனைவரும் காப்பி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணியம் செட்டியார் 1975 சனவரி 23 ஆம் தேதி, 73-ஆவது அகவையில் இறந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Boon Weng Siew. "The Malaysian plantation industry, 1880–1921".
1901 பிறப்புகள்
1975 இறப்புகள்
தமிழகத் தொழிலதிபர்கள்
இந்திய ஊடகவியலாளர்கள்
இந்தியப் புரவலர்கள்
சிவகங்கை மாவட்ட நபர்கள் |
684842 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81 | கூகுள் விட்சு | கூகுள் விட்ஸ் (Google Vids) என்பது கூகுள் ஒர்க்ஸ்பேஸ் தொகுப்பின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்ட ஒரு இணைய நிகழ்படத்தினை உருவாக்கும் செயலியாகும். வேலை தொடர்பான நோக்கங்களுக்காக தகவல் தரவு நிகழ்படங்களை உருவாக்க பயனர்களுக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயன்பாடு கூகிளின் ஜெமினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்கள் கைமுறையாக அல்லது செயற்கை அறி திறன் உதவியுடன் எளிய அறிவுறுத்தல்களைப் பயன்படுத்தி நிகழ்படல்க் கதைச்சித்திரப் பலகையினை உருவாக்க உதவுகிறது. இதில் ஊடகங்களைப் பதிவேற்றுதல், படங்கள், பின்னணி இசை மற்றும் செயற்கை அறி திறனைப் பயன்படுத்தி வரிவடிவ உருவாக்கத்துடன் குரல் பரிமாற்ற அம்சம் ஆகியவை இதில் உள்ள வசதிகளாகும்.
இந்தப் பயன்பாடு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கூகுள் பணியிட ஆய்வகப் பயனர்களுடன் சோதனையில் உள்ளது, மேலும் 2024 கோடையில் ஒரு பொது பீட்டா பதிப்பினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. கூகுள் விட்ஸ் முதன்மையாக விற்பனை பயிற்சி, உள்நுழைவு நிகழ்படங்கள், விற்பனையாளர் அணுகல் மற்றும் திட்டப் புதுப்பிப்புகள் போன்ற வேலை தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக உள்ளது. இது பல்வேறு பாணிகள் மற்றும் வார்ப்புருக்கள், கூட்டு அம்சங்களை வழங்குகிறது, மேலும் தற்போது யூடியூப் ஒருங்கிணைப்பு இல்லாமல் மூன்று நிமிடங்களுக்குள் வீடியோக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
கூகுள் விட்ஸ் ஏப்ரல் 9,2024 -இல் அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கூகுள் சேவைகள் |
Subsets and Splits