Dataset Viewer
Auto-converted to Parquet
எண்
int64
1
91
தமிழ் எழுத்து
stringlengths
1
2
தமிழ் வாக்கியம்
stringlengths
22
43
Tamil Meaning
stringlengths
28
162
English Translation
stringlengths
26
166
Transliteration
stringlengths
23
42
1
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறியக்கூடிய தெய்வம்.
Mother and Father are the first known gods.
Annaiyum pithavum munnari theivam
2
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் நல்லது.
It's good to visit the temple for worship.
Aalayam tholuvathu saalavum nandru
3
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
இல்வாழ்க்கை வாழ்வதைவிட மிகச் சிறந்த அறம் வேறொன்றுமில்லை.
There is no greater virtue than leading a righteous family life.
Ilaram alathu nalaramandru
4
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
பிறருக்கு உதவாத கருமி சேர்த்துவைத்திருக்கும் செல்வத்தை தீயவர்கள் அபகரித்துக் கொள்வர்.
Those who do not help others will have their hoarded wealth taken away by the wicked.
Eeyar thettai theeyar kolvar
5
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
உணவை அளவோடு உட்கொள்ளுதல் பெண்களுக்கு அழகு சேர்க்கும்.
Eating in moderation enhances a woman's beauty.
Undi surunguthal pendirkku azhagu
6
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊரில் உள்ள அனைவரையும் நாம் பகைத்துக்கொள்ள நேரிட்டால் அடியோடு அழிந்து போவோம்.
If we make enemies of everyone in the town, we will face complete destruction.
Oorudan pagaikkin verudan kedum
7
எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்
எண்கள் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கண, இலக்கியங்களும் கண்களைப்போல முக்கியமானவை; நமது அறிவுக்கண்களாக விளங்குபவை.
Numbers in mathematics and letters in grammar and literature are as important as our eyes; they serve as the eyes of our knowledge.
Ennum ezhuthum kan ena thagum
8
ஏவா மக்கள் மூவா மருந்து
ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளாமலே குறிப்பறிந்து வேண்டியவற்றைச் செய்யும் நன்மக்கள்பேறு அமிருதம் போன்றதாகும்.
The greatness of noble people lies in understanding and fulfilling needs without being asked are like nectar.
Aeva makkal moova marunthu
9
ஐயம் புகினும் செய்வன செய்
பிச்சை எடுக்க நேரிட்டாலும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்
Even if one has to resort to begging, one must still fulfill one's duties
Aiyam puhinum seivana sei
10
ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
எல்லாம்வல்ல ஒருவனாகிய இறைவன் திருவடியைப் பற்றி, அந்த இறைவனை உன் அகத்திலே அதாவது உள்ளத்திலே இருத்திக்கொள்.
Hold on to the feet of the Almighty, who is all-powerful, and keep Him in your heart, says Avvaiyar.
Oruvanaippatri or agathu iru
11
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
வேதம் ஓதுகின்ற உயர்ந்த கடமையைச் செய்கின்ற வேதியர்களுக்கு அவ்விதம் ஓதுவதைவிட வேதம் உரைத்துள்ள அறஒழுக்கத்தைக் கடைபிடித்துச் செயலாற்றுவது கூடுதல் நன்மை தருவதாகும்.
For Vedic scholars who perform the noble duty of reciting the Vedas, following the righteous path prescribed by the Vedas is even more beneficial than mere recitation
Oadhalin nandre vethiyarkku ozhukkam
12
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
பொறாமைப்பட்டுப் பேசுவது ஆக்கத்திற்கு அழிவை ஏற்படுத்திவிடும்.
Speaking out of jealousy leads to destruction rather than growth.
Auviyam pesudhal aakkaththirku azhivu
13
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
அஃகம் என்றால் தானியம், காசு என்றால் பணம். இவை இரண்டையும் சிக்கனமாக இருந்து சேமிக்க வேண்டும்.
Grains and money should be saved through frugality.
Aghgamum kaasum sikkeneth thedu
14
கற்புஎனப் படுவது சொல்திறம் பாமை
கற்பு எனப்படுவது சொல்லில் இருந்து பிறழாமல் நடத்தல் ஆகும்.
Chastity is defined as unwavering commitment to one’s words and actions
Karpu enna paduvathu sol thiram paamai
15
கா
காவல் தானே பாவையர்க்கு அழகு
பாதுகாப்போடு இருத்தல் பெண்களுக்கு அழகு சேர்ப்பதாகும். அதாவது நன்மை தரக் கூடியதாகும்.
Staying safe adds to a woman's beauty and brings goodness.
Kaaval thane paavaiyarkku azhaku
16
கி
கிட்டா தாயின் வெட்டென மற
ஒரு பொருள் அல்லது விஷயம் நமக்குக் கிடைக்காது என்ற பட்சத்தில் அதனை உடனடியாக அப்படியே மறந்துபோய் விட வேண்டும்.
If something is unattainable, one should immediately forget about it
Kittathaayin vettena mara
17
கீ
கீழோர் ஆயினும் தாழ உரை
ஒருவர் நம்மைவிட ஏதேனும் ஒருவகையில் கீழ்நிலையில் இருப்பவர் என்ற போதிலும் அவர் போன்றோரிடமும் மென்மையாகப் பேசு.
Even if someone is in a lower position than us in any way, we should always speak kindly to them
Keezhor aayinum thaazha urai
18
கு
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
பிறரது குற்றங்களையே பெரிதுபடுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால் சுற்றத்தார் என நமக்கு யாருமே இருக்க மாட்டார்கள்.
If we focus only on others' faults, we will have no relatives or friends
Kutram paarkkil suttram illai
19
கூ
கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்
ஆயுதபலம் இருக்கின்ற போதிலும் ஆணவப் பேச்சு பேசாதே, அழிவைத் தேடிக் கொள்ளாதே.
Even if one has physical strength and weapons, one should not speak arrogantly, as it invites destruction.
Koor ambu aayinum veeriyam peasel
20
கெ
கெடுவது செய்யின் விடுவது கருமம்
யாராவது ஒருவர் நமக்கு கெடுதல் செய்தால் அதை மன்னித்து விட்டுவிடுதல் நற்செயல் என்று பொதுவாக இதற்குப் பொருள் கொள்ளப்படுகிறது.
If someone does us harm, forgiving them is considered a noble act.
Keduvathu seiyin viduvathu karumam
21
கே
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
பொருளை இழந்த காலத்தில் மனந்தளராமல் உறுதியுடனிருப்பது மீட்டும் செல்வத்தை உண்டாக்கும்.
In times of loss, staying strong without losing hope will lead to regaining wealth.
Keettil urudhi koottum udaimai
22
கை
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
கையிலிருக்கிற திரவியத்தைப் பார்க்கிலும் கல்வியே உண்மைப் பொருளாகும்
True wealth lies in education rather than material possessions.
Kaipporul thannil meipporul kalvi
23
கொ
கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
ஒருவனுக்கு அரசன் அறிமுகமாயிருப்பது அவனுக்கு ஆபத்தில் உதவியாகும். (உற்றவிடத்து என்பது உற்றிடத்து என விகாரப்பட்டது.)
A king knowing a person can be beneficial in times of danger.
Kotdravan arithal uttra udhavi
24
கோ
கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
காட்டுத் தீயால் காடு அழியும் கோள், குறளையால் உறவு அழியும்
A forest is destroyed by wildfire, just as a single harsh word can ruin relationships.
Koal sevik kuralai kaatdrudan neruppu
25
கௌ
கௌவை சொல்லின் எவ்வெவர்க்கும் பகை
எவரையும் பழித்துப் பேசிக் கொண்டே இருப்பவன் அனைவருக்கும் பகையாளி ஆவான்
One who constantly speaks ill of others will eventually become an enemy to all.
Kauvai sollin yevvarukum pagai
26
சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை
ஒரு பரம்பரையின் வழித்தோன்றல்களுக்கு எது அழகென்றால் தங்களுக்குள் சண்டை செய்யாமைதான்
The true beauty of a lineage lies in its descendants living in harmony without conflicts among themselves.
Sandhathikku azhagu vandhi seiyaamai
27
சா
சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
தம் பிள்ளைகள் சான்றோர் எனப் புகழும் வகையில் வாழ்வது அவர்களைப் பெற்றெடுத்த தாய்க்குப் பெருமை தருவதாகும்.
A mother takes great pride in raising children who grow up to be wise and virtuous.
Saandroor enkai eendrorku azhaku
28
சி
சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
இறை நினைப்பில் திளைத்திருப்பது தவத்துக்கு அழகாகும்
Being immersed in thoughts of the divine is the essence of true penance.
Sivaththaip penil thavaththirkku azhagu
29
சீ
சீரைத் தேடின் ஏரைத் தேடு
நன்மை வேண்டும் எனில் உழவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு
If you seek prosperity, give importance to agriculture.
Seeraith thedin yeraith thedu
30
சு
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
சுற்றத்தார் என்பதற்கு அழகு எத்தகைய நிலையிலும் ஒன்றுகூடி இருத்தலே
True kinship lies in staying united under all circumstances.
Suttrathirku azhagu soozha irutthal
31
சூ
சூதும் வாதும் வேதனை செய்யும்
வஞ்சமும் வீண்பிடிவாதமும் வேதனை தரக்கூடியவை என எச்சரிக்கிறார் ஔவையார்.
Deceit and stubborn arguments only bring suffering.
Soodhum vaadhum vethanai seiyum
32
செ
செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
நாம் செய்ய வேண்டிய தவத்தை மறந்தால் துன்பம் நம்மை ஆட்கொள்ளும்.
If we forget our duties, hardships will overtake us.
Seithavam maranthal kaiththvam aalum
33
சே
சேமம் புகினும் யாமத்து உறங்கு
பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டாலும், நள்ளிரவு நேரத்தில் நிம்மதியாக உறங்க வேண்டும்.
Even in times when one must live cautiously, one should still be able to sleep peacefully at midnight
Semam puginum yaamaththu uranku
34
சை
சைஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
இழிவவென்னும் எண்ணம் விலகி இருக்குமானால், வறியவர்க்கு உணவளித்துவிட்டு உண்
If one lets go of feelings of inferiority, one should first feed the poor before eating
Sai oththu irundhal aiyam ittu unn
35
சொ
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
முயற்சி உடையவர்கள் பொருளைப் பெறுவர்.
Those who persevere will attain wealth.
Sokkar enbavar aththam perubavar
36
சோ
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
சோம்பலால் முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் வாழ்க்கையில் மிகத் துயரங்களுக்கு ஆளாகி அழுது புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
Those who remain idle and make no effort will face great misery in life and lament their fate
Soombar enbavar thembith thirivar
37
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தந்தையின் சொல்லை மதித்து நடப்பதைவிட மிகச் சிறந்த மந்திரம் வேறு எதுவும் இல்லை
There is no greater mantra than respecting and following a father's words.
Thanthai sol mikka mandhiram illai
38
தா
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
தாயை விடச் சிறந்த கடவுள் வாழும் ஆலயம் வேறு எதுவும் இல்லை
There is no temple holier than a mother.
Thaayir sirantha oru koyilum illai
39
தி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கடல் கடந்து சென்றாவது செல்வத்தைத் தேடு
Cross the sea's to seek wealth
Thirai kadal oodiyum thiraviyam thedu
40
தீ
தீராக் கோபம் போராய் முடியும்
கோபத்தைத் தணிக்காமல் வளர்த்துக்கொண்டே இருந்தால் அது பெரிய போரில் போய்த்தான் முடியும்.
If anger is not controlled and is continuously nurtured, it will eventually lead to a great war.
Theerak kobam poraai mudiyum
41
து
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
நுண்ணுணர்வு இல்லாத பெண்கள் தங்கள் மடியிலே நெருப்பை வைத்துக் கொண்டிருப்பதைப் போல அவதிப்பட நேரிடும்.
Women who lack wisdom will suffer as if they are holding fire in their own laps.
Thudiyaap pendir madiyil neruppu
42
தூ
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்
பெண்களைத் தூற்றுதல் அழிவை உருவாக்கிவிடும்.
Speaking ill of women brings destruction.
Thottrum pendir koottru ena thagum
43
தெ
தெய்வம் சீறின் கைதவம் மாளும்
தெய்வம் சீற்றம் கொண்டால் வஞ்சனைக்கு முடிவு கட்டப்படும்.
When the divine becomes wrathful, deception will come to an end.
Dheivam seerin kaithavam maalum
44
தே
தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
வாழ்வின் நிறைவாகிய இறையைத் தேடாது இந்த வாழ்வை அழிக்கின் பல பிறவிகளை எடுத்துத் துன்புறும் பாடு அதாவது அல்லலாக நம் வாழ்க்கை முடியும்.
If one wastes this life without seeking the ultimate truth of the divine, they will suffer through many future births, enduring endless misery.
Thedaathu azhikkin paadai mudiyum
45
தை
தையும் மாசியும் வையகத்து உறங்கு
பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.
During the cold months of Thai and Maasi, one should sleep in a house that is thatched with palm leaves.
Thaiyum maasiyum vai agattu urangu
46
தொ
தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
பிறரை எதிர்பார்த்து அவர்களை வணங்கியும் தொழுதும் உண்ணக்கூடிய நிலையைவிட தானே கடுமையாக உழைத்து உண்பதே இனிமைதரக் கூடியது.
Instead of relying on others and serving them to earn a living, it is far more fulfilling to work hard and earn one's own livelihood.
Thozuthu un suvaiyin uzhutu un inidhu
47
தோ
தோழ னோடும் ஏழைமை பேசேல்
நெருங்கிய நண்பர்களோடும்கூட அறியாமையோடு பேசாதே.
Do not speak thoughtlessly, even with close friends.
Thoozhanodum ezhaimai peseal
48
நல்இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்
நல்லிணக்கம் இல்லாத நிலைமை துன்பங்களை ஏற்படுத்தும்.
A lack of harmony leads to suffering.
Nal inakkam allathu allal paduttum
49
நா
நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
நாடு முழுவதுமே வாழ்வதற்குரிய செழிப்போடும் பாதுகாப்போடும் இருந்தால் அந்நாட்டுக்குக் கேடு ஒன்றும் இல்லை.
A nation that thrives with prosperity and security will never face destruction.
Naadenggum vaazha keedendrum illai
50
நி
நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை
நிலைத்து நிற்பதற்கு, சொன்ன சொல்லில் இருந்து மாறாத வாய்மை ஒழுக்கத்தைக் கற்க வேண்டும்.
To stand firm in life, one must cultivate integrity and remain true to their word.
Nirkak kattral sol thirambaamai
51
நீ
நீரகம் பொருந்திய ஊரகத்திரு
நீர்நிலை நன்கு அமைந்துள்ள ஊரிலே குடியிரு.
Settle in a place where water sources are well-established.
Neeragam porundhiya ooragathu iru
52
நு
நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
மிகச் சிறிய செயலாக இருந்தாலும்கூட அதுபற்றி முழுமையாக ஆராய்ந்து பார்த்த பிறகே அச்செயலில் இறங்க வேண்டும்.
No matter how small a task may seem, analyze it thoroughly before undertaking it.
Nunniya karumamum ennithuni
53
நூ
நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
நல்ல நூல்கள் கூறும் நெறிமுறைகளைத் தெரிந்துகொண்டு அவை கூறும் ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்.
Learn the moral guidelines provided in good books and live by the principles they teach.
Nool murai therinthu seelaththu ozhuku
54
நெ
நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை
தனக்குத் தெரியாமலேயே எவர் ஒருவருக்கும் நாம் வஞ்சனை செய்துவிட முடியாது, மனசாட்சி சுடும்.
We can never deceive anyone without our own knowledge; our conscience will always remind us.
Betrayal olithu oru vanjagam illai
55
நே
நேரா நோன்பு சீர் ஆகாது
மனம் ஒன்றி மேற்கொள்ளப்படாத விரதம் சிறப்புடையதாக அமையாது.
A vow that is not undertaken with full dedication of the mind will not be meaningful.
Nera nonbu seer aagathu
56
நை
நைபவர் எனினும் நொய்ய உரையேல்
பலவீனமானவரைக் கூட இளக்காரமாகப் பேசாதே.
Do not mock even the weak, for even the gentle can become fierce when provoked.
Naibavar eninum noiya uraiyel
57
நொ
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
மென்மையானவரும் சுட்டுப் பொசுக்கும் திண்மையுடையவராக மாறுவர்.
Even the gentle can become tough and unyielding when provoked.
Noiyavar enbavar veiyavar aavar
58
நோ
நோன்பென் பதுவே கொன்றுதின் னாமை
பிற உயிரைக் கொன்று தின்பதைத் தவிர்ப்பதே சிறந்த விரதம்.
The best form of fasting is to abstain from consuming the flesh of other living beings.
Noonbu enbathu kondru thinnamai
59
பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்
ஒருவருக்கு ஏற்படும் விளைவைக் கொண்டே அவரது நற்செயல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
A person's goodness can be understood by the outcomes of their actions.
Panniya payirir punniyam teriyum
60
பா
பாலோடு ஆயினும் காலம்அறிந்து உண்
பால் பாயச விருந்தாக இருந்தாலும் சாப்பிடுவதற்குரிய காலம் அறிந்து உணவருந்த வேண்டும்.
Even if a grand feast of milk pudding is served, one must eat only at the right time.
Palodu aayinum kaalam arindu un
61
பி
பிறன்மனை புகாமை அறம்எனத் தகும்
பிறர் குடும்பத்துக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தாமல் இருத்தல் மிகச் சிறந்த அறமாக மதிக்கத் தகுந்ததாகும்.
The greatest virtue is to avoid interfering in others' family matters and causing confusion.
Piranmanai pugaamai aram ena thagum
62
பீ
பீரம் பேணில் பாரம் தாங்கும்
வலிமையைப் பேணினால்தான் சுமையைத் தாங்க முடியும்.
Only by maintaining strength can one bear burdens.
Peram penil param thaangum
63
பு
புலையும் கொலையும் களவும் தவிர்
பொய் சொல்லுதல், கொலை செய்தல், களவாடுதல் ஆகிய தீய செயல்களைத் தவிர்.
Avoid evil deeds such as lying, murder, and theft.
Pulaiyum kolaiyum kalavum thavir
64
பூ
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
கொடியவர்களிடம் நல்லொழுக்கங்கள் இருக்காது.
The wicked have no sense of morality.
Poriyorkku illai seriya ozhukkam
65
பெ
பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்
மெய்ஞானம் பெற்றவர்களுக்கு தமக்கு வேண்டியவர் என்ற தனித்த விருப்பமும், பிறரை வெறுக்கின்ற கோபமும் இருக்காது.
Those who have attained true wisdom do not have selfish desires or hatred toward others.
Perorkku illai setramum sinamum
66
பே
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
சூதுவாது இல்லாமல் இருப்பது பெண்களுக்குச் சிறந்த அணிகலன் போன்றதாகும் .
Avoiding gambling is the best ornament for a woman.
Pethaimai enpadu madarkku anikalam
67
பை
பையச் சென்றால் வையம் தாங்கும்
நிதானமாக நடந்து கொண்டால் இந்த உலகம் நம்மைத் தாங்கும்.
If one moves forward with patience and composure, the world will support them.
Paiyach sendral vaiyam thaangum
68
பொ
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
தீயவை என்று கருதுவதற்கு இடமுள்ள அனைத்தையும் தவிர்த்துவிட வேண்டும்.
One must avoid anything that is considered evil.
Pollangu enpavai ellam thavir
69
போ
போனகம் என்பது தான்உழந்து உண்டல்
உணவு என்பது தன்னுழைப்பில் கிடைப்பதை உண்ணுவதையே குறிக்கும்.
Food should be earned through one’s own hard work.
Ponakam enpadu thaan uzhandu undal
70
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
உண்பது அருமருந்து என்னும் அமுதமாக இருந்தாலும்கூட உற்றார், உறவினர், சுற்றத்தோடு உண்பதே மேல்.
Even if the food is as precious as divine nectar, it is better to eat it with family, relatives, and friends.
Marunde aayinum virundodu un
71
மா
மாரி அல்லது காரியம் இல்லை
மழையில்லாவிட்டால் உலகில் எந்த காரியமும் நடக்காது.
Without rain, nothing in the world can function.
Maari alladhu kaariyam illai
72
மி
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
மின்னலுக்குப் பின்னால் மழை பொழிவது உறுதி, முயற்சிக்குப் பின்னால் வெற்றி நிச்சயம்
Just as lightning is followed by rain, success is certain to follow hard work.
Minnuk ellam pinnukku mazai
73
மீ
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
செலுத்துவதற்கான தலைவன் இல்லாத கப்பல் கடலில் இயங்காது.
A ship cannot sail without a captain.
Mekaman illaa marakkalam oodathu
74
மு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முதலில் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கான பலன்களே அதற்குரிய விளைவுகளாக நம்மைப் பின்னர் வந்தடைகின்றன .
The good and bad deeds we perform will eventually return to us as their consequences.
Murpagal seiyin pirpagal vilaiyum
75
மூ
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
பெரியோர் சொல்லி வைத்துள்ள வார்த்தைகள் அமிர்தம்போல இனிமையும் நன்மையும் தருபவை.
The words of the wise are as sweet and beneficial as nectar.
Mootthor sol vaarthai amirtham
76
மெ
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மெத்தென ஆக்கியதில் படுத்தல் நிம்மதியான உறக்கத்துக்குச் சிறந்தது.
Sleeping on a well-made bed ensures peaceful rest.
Metthaiyil paduthal niththiraikku azhagu
77
மே
மேழிச் செல்வம் கோழை படாது
கலப்பையைப் பிடித்து உழவால் உருவாக்கப்படும் செல்வம் ஒருபோதும் குறைபட்டுப் போய் விடாது.
Wealth earned through farming will never diminish.
Mezich selvam kozai padaadhu
78
மை
மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
பொய்மையால் மயக்கும் விழிகளைக் கொண்ட விலைமாதர் வீட்டுப் பக்கம் செல்லாமல் அகன்று, நல்லொழுக்கத்துடன் வாழ்.
Stay away from the houses of deceitful women with seductive eyes and live a virtuous life.
Mai vizhiyaar tham manai agandru ozhugu
79
மொ
மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
சான்றோர் கூறும் அறிவுரைகளை ஒருவர் கேளாமல் மறுத்தால் அவர் ஆற்றுகின்ற செயல் அழிய நேரிடும்.
If one ignores the advice of wise people, their efforts will go to waste.
Mozhivadu marukkin azhivadu karumam
80
மோ
மோனம் என்பது ஞான வரம்பு
மௌன நிலையே ஞானத்தின் உச்சம்.
Silence is the peak of wisdom.
Monam enpadu gnana varambu
81
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துஉண்
செல்வ வளமை மிகுதியாக உடையவனாக இருந்தாலும், தகுந்த அளவை அறிந்துகொண்டு அதற்கேற்ப செலவழித்து அனுபவிக்க வேண்டும்.
Even if one possesses great wealth, they should spend and enjoy it wisely, knowing their limits.
Valavan aayinum alavarinthu azhiththu un
82
வா
வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
வானம் பொழியும் மழையின் அளவு குறைந்து போனால், அதன் தொடர் விளைவாக தான தருமங்கள் உள்ளிட்ட நற்செயல்களும் குறைந்து போய்விடும்.
If the rain from the sky decreases, charitable acts and virtuous deeds will also decline as a result.
Vaanam surungin thanam surungum
83
வி
விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
விருந்தினரை உபசரித்து அறியாத இல்லத்தாருக்குத் தேவையான ஒழுக்கம் இருக்காது.
A home that does not welcome guests lacks the discipline needed for hospitality.
Virundhu ilorkku illai porundhiya ozhukkam
84
வீ
வீரன் கேண்மை கூர் அம்பாகும்
வீரனுடன் நட்புக் கொண்டிருப்பது கூர்மையான அம்பை கையில் வைத்திருப்பதற்கு ஒப்பாகும்.
Befriending a warrior is like holding a sharp arrow in your hand.
Veeran kenmai koor ambagum
85
வு
உரவோர் என்கை இரவாது இருத்தல்
வலிமை உடையவர் என்பதற்கு அடையாளம், யாரிடமும் போய் யாசகம் கேட்காமல் இருத்தலே ஆகும்.
True strength is demonstrated by the ability to live without depending on others.
Uravoor enkai iravaadhu iruththal
86
வூ
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
Enthusiastic effort is the key to progress.
Ookkam udaimai aakaththirku azhagu
87
வெ
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
தூய்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு வஞ்சகத்தனமான எண்ணம் இருக்காது என்கிறார் ஔவையார்.
Those with a pure heart will never harbor deceitful thoughts.
Vellaikku illai kallach chinthai
88
வே
வேந்தன் சீறீன் ஆம் துணை இல்லை
அனைத்து அதிகாரமும் வல்லமையும் உடையவன் சீற்றம் கொண்டால், அதிலிருந்து காப்பாற்றுவதற்கு யாரும் துணைவர மாட்டார்கள்.
If an all-powerful ruler becomes angry, no one will be able to protect people from the consequences.
Vendan seerin aam thunai illai
89
வை
வைகல் தோறும் தெய்வம் தொழு
தினந்தோறும் காலையில் தெய்வத்தை வணங்கு.
Worship God every morning.
Vaikal thorum theivam thozhu
90
ஒத்த இடத்து நித்திரை கொள்
நமக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய இடத்தில் படுத்து உறங்க வேண்டும்.
Sleep only in a place that is suitable and comfortable for you.
Oththa idathu niththirai kol
91
ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
ஓதுதல் இல்லாதவர்களுக்கு நல்லுணர்வும் ஒழுக்கமும் இருக்காது.
Those who do not read and learn will lack both wisdom and discipline.
Odhadhavarkku illai unarvodu ozhukkam
YAML Metadata Warning: empty or missing yaml metadata in repo card (https://huggingface.co/docs/hub/datasets-cards)

Kondrai Vendhan Dataset

Dataset Description

The Kondrai Vendhan dataset contains verses from the Tamil literary work Kondrai Vendhan. This dataset is useful for Tamil Natural Language Processing (NLP) tasks, linguistic analysis, education, and AI-powered literary studies.

Dataset Structure

The dataset is provided in Excel (.xlsx) format and contains the following columns:

Column Name Description
எண் (Number) The verse number in the text.
தமிழ் எழுத்து (Tamil Letter) The first letter of the verse.
தமிழ் வாக்கியம் (Tamil Sentence) The full verse in Tamil.
Tamil Meaning The Tamil explanation or meaning of the verse.
English Translation The English translation of the verse.
Transliteration The phonetic representation of the Tamil verse in Latin script.

Usage

Loading the Dataset in Python

Using Pandas

import pandas as pd

# Load the dataset
df = pd.read_excel("Kondrai-Vendhan.xlsx")

# Display first few rows
print(df.head())

Using Hugging Face Datasets (if converted to CSV)

from datasets import load_dataset

dataset = load_dataset("Abbirami/Kondrai-Vendhan")
df = dataset.to_pandas()
print(df.head())

Potential Applications

  • Tamil NLP: Text classification, sentiment analysis, summarization, and translation.
  • Educational Purposes: Learning Tamil literature, pronunciation, and meaning.
  • AI and Machine Learning: Fine-tuning Tamil language models.

License

Please check the licensing terms before commercial use.

Contributions & Feedback

For contributions, suggestions, or issues, feel free to open an issue in the repository or contact me.

Downloads last month
59