ta_106601_0 முல்லைத்தீவு மாவட்டத்தில் இளம் விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிப்பதற்கும் பிரபலப்படுத்தும் ஐந்து நாள் தொடக்க நிகழ்வானது (12) ஆம் திகதி புதன் கிழமை இரணைப்பலை பொது மைதானத்தில் இடம் பெற்றது. ta_106601_1 இத் திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினருக்கு விடுத்த வேண்டுக்கோளுக்கிணங்க 20 க்கும் அதிகமான கால்பந்து விளையாட்ட கழகம் மற்றும் விளையாட்டுக் கழகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி வளையாட்டு வீர்ர்கள் கலந்தகொண்டன. ta_106601_2 இத் திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் தலைமையின் கீழ் 68ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்ணாண்டோ அவர்களின் ஒழுங்கமைப்பில் இப் பயிற்ச்சியானது டிசம்பர் 16 ஆம் திகதி வரை இராணுவ விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் சிவில் பயிற்றுவிப்பாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. ta_106601_3 இந் நிகழ்வில இலங்கை கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான எம். ta_106601_4 வாடிவேல் மற்றும் இராணுவ கால்பந்து கூட்டமைப்பின் இராணுவப் பயிற்சியாளர்களுடன் நிலை ஏ தேசிய பயிற்சியாளர்கள் உட்பட சுமார் 100 க்கும் அதிகமான இளம் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ta_106601_5 அத்துடன் சிங்கர் (பிரைவேட்) நிறுவனம் மற்றும் மைலோ கம்பெனி லிமிடெட் வழங்கிய நிதியுதவியுடன் அனைத்து ஐந்து நாட்களில் பங்கேற்பாளர்களுக்கும் உணவு மற்றும் பானங்கள் வழங்க இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. ta_106601_6 இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 68ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்ணாண்டோ அவர்கள் கலந்து கொண்டதுடன் பயிற்ச்சியாளர்களுடன் முக்கிய அதிதிகள் கலந்து கொண்டன.