ta_10090_0 இலங்கை இராணுவத்தின் 97 ஆவது மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்றி தேசிய மட்டத்திற்கான சாதனைகளை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதல் தடைவையாக பெறுமதிமிக்க விஷேட பரிசுகளான மோட்டார் சைக்கிள்கள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் விளையாட்டு காலனிகள் வழங்கி வைக்கப்பட்டன. ta_10090_1 இந்த மெய்வல்லுனர் போட்டிகளிற்கு சிமிலரி, ஹட்சின்ஷன் டெலிகொம் தனியார் நிறுவனத்தினர் முழுமையான அனுசரனைகளை வழங்கி வைத்துள்ளனர். ta_10090_2 இந்த மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான சிறந்த விளையாட்டு வீரராக இலங்கை மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த போர் வீரன் L.G தனஞ்ஜயவும், பெண்களுக்கான போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக 7 ஆவது மகளிர் படையணியைச் சேர்ந்த சாஜன் ரத்னாயக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ta_10090_3 இவர்கள் இருவருக்கும் 2 ஜமஹா இனத்தைச் சேர்ந்த 2 மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. ta_10090_4 அத்துடன் போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு பூமா இனத்தைச் சேர்ந்த விளையாட்டு காலணிகள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. ta_10090_5 இந்த போட்டிகளில் பங்கேற்றிய வீர்ர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி 27 சின்னங்களையும், 38 தங்கப் பதக்கங்களையும், 24 வெ ள்ளிப் பதக்கங்களையும், 18 வெண்கல பதக்கங்களையும் பெற்று சாதனைகளை புரிந்துள்ளனர். ta_10090_6 மகளிர் படையணியைச் சேர்ந்த போர வீராங்கனை விதுஷா லக்‌ஷானி முப்பாய்ச்சல் போட்டிகளிலும், சிறந்த ஈட்டி ஏய்தாலராக கோப்ரல் லக்சிகா அவர்கள் கலந்து கொண்டு தேசிய ரீதியிலான மட்டங்களிற்கு தேர்வாகினர். ta_10090_7 இந்த போட்டிகள் இராணுவ மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவரும், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 16 – 18 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.