cheranga-uom
ta-en added
a13a3d2
ta_474681_0 அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் மேலும் 2 ஆயிரம் படையினரை பணியில் அமர்த்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
ta_474681_1 இதற்கான நடவடிக்கைகளை பெண்டகன் எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ta_474681_2 இதற்கமைய எல்லைப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
ta_474681_3 பாதுகாப்பு காவலரண்களுடாக கண்காணிப்பு பணிகளில் படையினர் ஈடுபடவுள்ளனர்.
ta_474681_4 சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் புகலிட கோரிக்கையாளர்கள் நுழைவதை தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.