|
ta_473287_0 எதிர்வரும் திங்கள் கிழமை அதாவது 7ம் திகதி கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளும் மூடப்படும். |
|
ta_473287_1 ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு ஏற்றுக்கொள்வதை முன்னிட்டே இத்தீர்மானம் எட்டப்பட்டது. |
|
ta_473287_2 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினத்தில் கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பொரளை, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பிரிவுகளுக்குரிய சகல பாடசாலைகளும் ஸ்ரீ ஜயவர்தனபுற வலயத்திற்குட்ட ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி, ஹேவா விதாரன கல்லூரி மற்றும் ஹேவா விதாரன மாதிரி கனிஷ்ட பாடசாலை என்பன மூடப்படும். |
|
ta_473287_3 இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜகிரிய சரண மாவத்த உள்ளிட்ட ஒருசில வீதிகள் மூடப்படும். |
|
ta_473287_4 தமது வேட்பாளர்களுடன் தேர்தல்கள் செயலகத்திற்கு வருகை தருகின்ற கட்சி செயற்பாட்டாளர்களுக்கு என வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு ராஜகிரிய முச்சந்தி மற்றும் அண்டிய பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் ஆகும். |
|
|