|
ta_340379_0 சட்டவிரோதமாக ஐந்து யானை குட்டிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த சமரபுலிகே நிராஜ் ரொஷான் எனும் அலி ரொஷான் உள்ளிட்ட எட்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். |
|
ta_340379_1 இதற்கான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்தது. |
|
ta_340379_2 அலி ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 25 ஆயிரம் ரூபா வீத ரொக்க பிணையிலும் 50 இலட்சம் ரூபா வீத இரண்டு சரீர பிணைகளிலும் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். |
|
ta_340379_3 பிரதிவாதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்காமையினால் பிணை வழங்கப்பட்டதாக மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு தெரிவித்தது. |
|
ta_340379_4 இவவ்வழக்கை எதிர்வரும் 30ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டது. |
|
|