cheranga-uom
ta-en added
a13a3d2
ta_316401_0 காலம்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்ஷாவின் பூதவுடல் இன்றையதினம் நாட்டிற்கு எடுத்து வரப்படவுள்ளது.
ta_316401_1 பாராளுமன்ற கட்டத்தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர் பூதவுடல் கொடக்கவெல்ல மஸ்இம்புல பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துசெல்லப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ta_316401_2 இறுதி சடங்கு இடம்பெறும் தினம் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.
ta_316401_3 சிங்கப்பூரில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரது ரஞ்சித் சொய்ஷா காலமானார்.
ta_316401_4 உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயதாகும்.
ta_316401_5 கடந்த 2010 ம் ஆண்டு ரக்குவானை தேர்தல் தொகுதியின் ஊடாக முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
ta_316401_6 2015 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரஞ்சித் சொய்ஷா அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
ta_316401_7 2015 ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அமைப்பாளராக ரஞ்சித் சொய்ஷா செயற்பட்டுவந்தார்.
ta_316401_8 கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக ரஞ்சித் த சொய்ஷா அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.