cheranga-uom
ta-en added
a13a3d2
ta_305922_0 நாட்டின் இளம் பரம்பரை தொடர்பில் தான் மிகுந்த பெருமிதம் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ta_305922_1 சுற்றாடலை பாதுகாத்து நாட்டை அழகுபடுத்துவதற்கு இளம் பரம்பரையினர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டிய நிலையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
ta_305922_2 இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.
ta_305922_3 இளம் சமுதாயம் மிகச்சிறந்த முன்மாதிரியினையும், குழுவாக ஒன்றிணைந்து செயற்படுவதையும், தலைமைத்துவம் வழங்குவதையும் பார்க்கும் போது நாட்டின் எதிர்காலத்திற்கு இது அடித்தளமிடுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ta_305922_4 தமது செயற்திறன்களை சமுதாயத்திற்கு நல்ல விதத்தில் பயன்படுத்தி முன்னோக்கி செல்லும் இளைஞர்கள் சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்மாதிரியாக நிற்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.