|
ta_252583_0 இந்திய நிர்வாகத்திற்குபட்ட காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
|
ta_252583_1 பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சம் காரணமாக எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
ta_252583_2 இதனால் இந்திய நிர்வாகத்திற்குபட்ட காஷ்மீர் எல்லைப் பகுதியில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். |
|
ta_252583_3 இந்து ஆலயமான அமர்நாத் புனிதஸ்தலத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான அச்சம் இருப்பதாக இந்திய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. |
|
ta_252583_4 பாகிஸ்தானிலிருந்து காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் நுழைந்துள்ள பயங்கரவாதிகள் மத ஸ்தலத்தை இலக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வ தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
|
|