cheranga-uom
ta-en added
a13a3d2
ta_161680_0 மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு இருவர் தேர்வாகியுள்ளார்.
ta_161680_1 மருத்துவம், இயற்பியல்,பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படுவது வழக்கம்.
ta_161680_2 அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
ta_161680_3 மெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.
ta_161680_4 நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான இவர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ta_161680_5 இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
ta_161680_6 அதனைத் தொடர்ந்து ஓக்டோபர் 3-ம் திகதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் திகதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.