|
ta_123927_0 இராணுவத்தில் அவயங்களை இழந்த விஷேட தேவையுடைய படையினர்களினால் முன் வைக்கப்பட்ட கண்காட்சி கொழும்பு ஹோல்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள J.D.A பெரேரா கலை மண்டபத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி ஆரம்பமானது. |
|
ta_123927_1 இந்த கண்காட்சியானது ‘உத்தானவீரயா’ எனும் தொணிப் பொருளின் கீழ் நாட்டிற்காக அவயங்களை தியாகம் செய்த விஷேட தேவையுடைய படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. |
|
ta_123927_2 இந்த கண்காட்சி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்கு பிரதம அதிதியாக இராணுவ பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். |
|
ta_123927_3 இந்த கண்காட்சிகள் இராணுவ நிறவேற்று பணிப்பாளர் நாயகம் மற்றும் புணர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் முழுமையாக ஒழுங்கு செய்யப்பட்டன. |
|
ta_123927_4 இந்த கண்காட்சிகளின் ஊடாக ஆக்கத்திறன்கள், கலைச் சித்திரங்கள் மற்றும் கைவேலைப்பாடு நிர்மானிப்பு பொருட்கள் பார்வையாளர்களுக்காக முன் வைக்கப்பட்டிருந்தன. |
|
ta_123927_5 இம் மாதம் (13) ஆம் திகதி காலை 8 மணிக்கு இந்த கண்காட்சிகள் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்படும். |
|
ta_123927_6 ரணவிருசெவன மத்திய நிலையம், அபிமங்சள 1, 2, 3 நிலையங்கள், அத்திடியவில் அமைந்துள்ள ‘மிஹிந்து செத் மெதுரு’ நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் படையினரின் பங்களிப்புடன் இந்த கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. |
|
ta_123927_7 இந்த கண்காட்சிகளில் 34 மரவேலைப்பாடுகள், 172 வர்ண ஓவியங்கள், 203 கைவினைப்பொருட்கள், 15 சிற்பங்கள் மற்றும் 23 வெவ்வேறான கண்காட்சிகளை பார்வையாளர்களின் பாவனைகளுக்காக முன் வைக்கப்பட்டன. |
|
ta_123927_8 இந்த கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் மேலும் காலாட்படையணி பணிப்பாளர் நாயகம், இராணுவ சமிக்ஞை பிரதானி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், புணர்வாழ்வு பணிப்பாளர், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |
|
|