|
ta_107480_0 இலங்கை இராணுவத்திலுள்ள பயிற்சி இல –10 இன் கீழ் அடிப்படை உடல் பயிற்சிகளை நிறைவு செய்த 39 பயிற்றுனர்களும், நீச்சல் பயிற்சிகளை நிறைவு செய்த 116 பேர்களுடன் பயிற்சி நிறைவு நிகழ்வு பனாகொட இராணுவ விளையாட்டு உள்ளரங்கத்தில் இடம்பெற்றது. |
|
ta_107480_1 இந்த நிகழ்விற்கு இராணுவ மாஸ்டர் போர் கருவி கிளையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க, இராணுவ உடல் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டீ.எஸ.,டீ வெலிகல அவர்கள் இணைந்திருந்தனர். |
|
ta_107480_2 முழுமையாக இந்த பயிற்சிகளை 187 படை வீரர்கள் நிறைவு செய்து வெளியேறினார்கள். |
|
ta_107480_3 இந்த பயிற்சி நிறைவு விழாவின் இறுதி அங்கமாக இராணுவத்தினரது ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை, கராட்டி மற்றும் ஜிம்னாஸ்டிக் கண்காட்சிகள் இடம்பெற்றன. |
|
ta_107480_4 இந்த நிகழ்வை பார்வையிடுவதற்காக பார்வையாளர்கள் 750 பேர் கலந்து கொண்டனர். |
|
|