|
ta_107084_0 ‘ஹார்திக ரடக்’ எனும் தொனிப் பொருளின் கீழ் வடக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 5000 தென்னங் கன்றுகள் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள பொது மக்களுக்கு (2) ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கப்பட்டன. |
|
ta_107084_1 இந்த நிகழ்ச்சி திட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 14 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கான புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று பிரதேசத்தைச் சேர்ந்த 147 குடும்பத்தினருக்கு இந்த தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டன. |
|
ta_107084_2 இந்த நிகழ்வில் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ, புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைபற்று பிரதேச செயலாளர்கள், படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். |
|
|