|
ta_104459_0 மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 49ஆவது ஆரம்ப ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வானது இப் படையினரால் கடந்த புதன் கிழமை (01) கண்டிப் பேராதெனியவில் உள்ள இலங்கை மின்சார சபையில் இடம் பெற்றது. |
|
ta_104459_1 மேலும் பேராதெனிய இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கினங்க மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் வழிகாட்டலில் படையினரின் பங்களிப்போடு இந் நிகழ்வு இடம் பெற்றது. |
|
ta_104459_2 அத்துடன் 11ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் டி ஜெ நானயக்கார அவர்களின் கண்காணிப்பின் கீழ் 37 படையினரால் இரத்ததானம் வழங்கப்பட்டது. |
|
|