{"Header": ["\nதிஸ்ஸ கரலியத்த பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்"], "Time": ["\n02 Apr, 2015\t", "| 11:46 am ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/02/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b8-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88/", "Content": "புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டபோது, திஸ்ஸ கரலியத்தவிற்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தாமை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக, தாம் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக திஸ்ஸ கரலியத்த மேலும் தெரிவித்துள்ளார்."} |